தவறான தமிழ் வார்த்தையை கண்டறிவது எப்படி?

66 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Mar 2, 2018, 8:35:08 AM3/2/18
to gbin...@yahoogroups.com, freetamil...@googlegroups.com
தமிழ் விக்கி மூலத்தில் சுமார் 2000 மின்னூல்கள் திருத்தம் செய்யக் காத்துள்ளன.

அவற்றில் எழுத்துணரியின் பிழையால் பல தவறான தமிழ்ச்சொற்கள் உள்ளன.

உதாரணம் -
ஒடுவாராக
வானெளி
எல்லாடிருக்கும்
வீணுக்கப்
போகிருர்களோ?


இவற்றில் பிழை உள்ளது தெரிகிறது. ஆனால் அவற்றை பிழை என்று எப்படிக் கண்டறிவது?
தமிழ்ச் சொற்களுக்கான விதிகள் உள்ளனவா?

அவ்வாறான விதிகள் இருப்பின், அவற்றின் மூலம் விக்கியில் உள்ள தவறான
சொற்களை எளிதில் கண்டறிய இயலும்.

விதிகள் இருப்பின் பகிர்க.

நன்றி

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com

Suganthan V

unread,
Mar 2, 2018, 11:35:05 AM3/2/18
to freetamil...@googlegroups.com, gbin...@yahoogroups.com
நீங்கள் குறிப்பிட்ட இச்சொற்களை விதிகளின் மூலம் கண்டறிய முடியாது. தரவுத்தளங்களில் சேமித்து வைத்துள்ள சரியான சொற்களுக்குள் இவை இல்லை என்று கண்டறிவதுனூடாகவே இவற்றைப் பிழையான சொற்களாக அடையாளப்படுத்தலாம். ஆனால் தொல்காப்பியத்தில் உள்ள சில விதிகளைக் கொண்டு பிழையான வேறுசில சொற்களை அடையாளம் காணலாம்.

அவ்வாறாள விதிகளில் சில
1) ஒரு சொல்லில் முதலெழுத்தாக வரக்கூடிய சொற்கள்
2) இரண்டு தனியான ஒற்றெழுத்துக்களுக்கு மேல் தொடர்ந்து வராது (மூன்றாவது எழுத்து உயிர்மெய்யெழுத்தாக அமைகையில் அந்த உயிர்மெய்யிலுள்ள மெய்யெழுத்துடன் சேர்ந்து மூன்று ஒற்றெழுத்துகள் தொடர்ந்து வரலாம்).
3) இவ்வாறு வரும் ஒற்றெழுத்துக்கள் எவையெனவும் விதிகள் தொல்காப்பியத்தில் உள்ளன.

என்னுடைய ஒரு கட்டுரையிலிருந்து சிறுபகுதி
==========================================

கணினித்தமிழ்ப்பயனர்கள் எதிர்நோக்குகின்ற மற்றுமோர் பிரச்சனை, தமிழில் தட்டச்சுச்செய்யப்பட்ட கோப்பினிலுள்ள எழுத்துப்பிழைகளையும் இலக்கணப்பிழைகளையும் திருத்துவதாகும். சில தனிநபர்களும் குழுக்களும் தமிழில் சில சொல்திருத்திகளை (Spell Checker) உருவாக்கியிருந்தாலும், அவை போதிய வினைத்திறனற்றவையாகவே இருக்கின்றன. அதற்கு அவர்கள் ஆங்கிலமொழியிலுள்ள சொல்திருத்தியை ஒத்ததாக தமிழ்ச்சொல்திருத்தியை உருவாக்க முற்பட்டமையே காரணமாகும். சொல்திருத்தியானது முதலில் பிழையான சொற்களை அடையாளங்காணக்கூடியதாய் இருக்கவேண்டும். பின்னர் தனது தரவுத்தளத்தினுள் (Database) சேமித்துவைக்கப்பட்டிருக்கும் சொற்களுடன் சரிபார்க்கவேண்டும். வினைத்திறனுடைய தூயதமிழ்ச்சொல்திருத்தியை உருவாக்குவதற்கான விதிகள் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தில் மிகத்தெளிவாக வரையறைசெய்யப்பட்டிருக்கின்றன.

 

ஓரெழுத்தாலான சொற்கள் பின்வருமாறு வரையறைசெய்யப்பட்டிருக்கிறது.

 

நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி.

 

நெட்டெழுத்துகள் மாத்திரமே ஓரெழுத்தாலான சொற்களாக அமையும் எனப்படுகிறது.

 

குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே.

 

குற்றெழுத்துகள் ஓரெழுத்தாலான நிறைவானசொற்களாக அமையாது (உயிர்மெய்க்குற்றெழுத்துகளான து, நொ என்பன விதிவிலக்காக இருக்கின்றன).

 

மேலும் பின்வரும் நூற்பாக்கள் மூலம் எப்படியான சந்தர்ப்பங்களில் இரண்டு ஒற்றெழுத்துகள் அடுத்தடுத்து வரலாமெனவும் கூறப்படுகிறது.

 

, , என்னும் மூன்றும் முன் ஒற்ற,

, , , , , , , ஈர் ஒற்று ஆகும்.

 

அவற்றுள்,

ரகார, ழகாரம் குற்றொற்று ஆகா.

 

உதாரணம்: மகிழ்ச்சி

 

சொற்களில் முதலில் வரக்கூடிய எழுத்துகள் யாவும் எழுத்ததிகாரத்தின் ஐம்பத்தொன்பதாவது நூற்பாவிலிருந்து அறுபத்தெட்டாவது நூற்பாவரை, அவை எவ்வாறான சந்தர்ப்பங்களில் வருமெனச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறே சொற்களின் இறுதியில் வரக்கூடிய எழுத்துகள் பற்றிய விபரங்கள் அறுபத்தொன்பதிலிருந்து எண்பத்திரண்டுவரையான பதின்னான்கு நூற்பாக்களில் தரப்பட்டிருக்கின்றன.

 

மேலும் தொடர்ந்துவரும் இருசொற்கள், எவ்வாறு எவ்வகையான புணர்ச்சிவிதிகட்கு உட்படுமெனவும் எழுத்ததிகார நூற்பாக்களில் வகுத்துச் சொல்லப்பட்டிருப்பதால், புணர்த்தியெழுதப்படும் சொற்களைத் தரவுதளத்தினுள் சேமிக்கவேண்டியதேவை இல்லாமல் போய்விடுகிறது. மேலும் சொல்லதிகாரத்தில், குறிப்பாக வேற்றுமையியலில் சொல்லப்பட்டிருக்கும் நூற்பாக்களில், சொற்கள் ஏற்கும் உருபுகள் வரையறை செய்யப்பட்டிருப்பதால், உருபுகளேற்றசொற்களையும் தரவுதளத்தினுள் சேமிக்கவேண்டியதில்லை. அவன் என்கின்ற சொல்லை மட்டும் சேமித்துவிட்டு அந்தச்சொல் ஏற்கும் உருபுகளான, அவனை, அவனால், அவனொடு, அவனுக்கு, அவனின், அவனது போன்ற சொற்களையும் சரிபார்த்துக்கொள்ளலாம். இவற்றால் தமிழ்ச்சொல்திருத்தியின் தரவுதளத்தினை சிறியதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் அமைத்துக்கொள்ளலாம்.

 

தமிழில் இலக்கணத்திருத்தியொன்றினை உருவாக்குவதற்குத் தேவையான தகவல்கள் மற்றும் விதிமுறைகளும் தொல்காப்பியத்தின் இரண்டாம் அதிகாரமான சொல்லதிகாரத்தில் காணப்படுகின்றன. உயர்திணை அஃறிணை என்கின்ற இருதிணைகளைப்பற்றியும் அவற்றிலுள்ள ஐந்து பால்களையும்பற்றிக் கூறுகின்ற தொல்காப்பியம், அவற்றைப் பிரித்தறியும் முறைபற்றி சொல்லதிகாரத்தின் ஐந்திலிருந்து ஒன்பதுவரையிலான நூற்பாக்களில் விபரிக்கின்றது.

 

இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய

ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்

தோற்றம்தாமே வினையொடு வருமே.”

 

(ன், ள், ர், , மார், து, று, டு, , , )

 

வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்,

பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்,

மயங்கல் கூடா தம் மரபினவே.

 

என்கின்ற அடுத்தவிரு நூற்பாக்களினால் பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்குமான தொடர்பு வரையறுக்கப்படுகிறது. இவ்வாறே சொல்லதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஏனைய நூற்பாக்களிலும் சொற்றொடர்களின் இலக்கணவமைப்பு வரையறை செய்யப்பட்டிருப்பதால் தமிழிலொரு வினைத்திறன்மிக்க இலக்கணத்திருத்தியினை உருவாக்குவது தொல்காப்பியத்தினை நன்கு கற்றவொரு கணினிப்புலமையாளருக்கு எளிதானதாகவிருக்கும்.

============================================

நான் பங்களிக்க விரும்பும் சொற்பிழைதிருத்தியின் எண்ணக்கரு:



Regards,
V.Suganthan

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomputing+unsub...@googlegroups.com.
To post to this group, send email to freetamilcomputing@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/freetamilcomputing.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Mar 2, 2018, 10:51:13 PM3/2/18
to ThamiZha! - Free Tamil Computing(FTC), உத்தமம்


2 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:32 அன்று, Suganthan V <vsuga...@gmail.com> எழுதியது:

நீங்கள் குறிப்பிட்ட இச்சொற்களை விதிகளின் மூலம் கண்டறிய முடியாது. தரவுத்தளங்களில் சேமித்து வைத்துள்ள சரியான சொற்களுக்குள் இவை இல்லை என்று கண்டறிவதுனூடாகவே இவற்றைப் பிழையான சொற்களாக அடையாளப்படுத்தலாம்.


ஆங்கில மொழியிலும் இந்த முறைதான் இருக்கும் என கருதுகிறேன். தட்டச்சும்போது பரிந்துரைச்சொற்கள் (ட் ராப் டவுன் பெட்டி) எப்படி உருவாகுதோ அதைப்பயன்படுத்தலாம்.
 
ஆனால் தொல்காப்பியத்தில் உள்ள சில விதிகளைக் கொண்டு பிழையான வேறுசில சொற்களை அடையாளம் காணலாம்.

அவ்வாறாள விதிகளில் சில
1) ஒரு சொல்லில் முதலெழுத்தாக வரக்கூடிய சொற்கள்
2) இரண்டு தனியான ஒற்றெழுத்துக்களுக்கு மேல் தொடர்ந்து வராது (மூன்றாவது எழுத்து உயிர்மெய்யெழுத்தாக அமைகையில் அந்த உயிர்மெய்யிலுள்ள மெய்யெழுத்துடன் சேர்ந்து மூன்று ஒற்றெழுத்துகள் தொடர்ந்து வரலாம்).
3) இவ்வாறு வரும் ஒற்றெழுத்துக்கள் எவையெனவும் விதிகள் தொல்காப்பியத்தில் உள்ளன.

ணகரத்தின் பின் டகரமும் (கண்டு), நகரத்தின் பின் தகரமும் ( பந்து)  னகரத்தின் பின் றகரமும் (கன்று)  தான் வரும். 

Sriram Sundaram

unread,
Mar 2, 2018, 10:51:13 PM3/2/18
to freetamil...@googlegroups.com
Nice!


Regards,
V.Suganthan

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomputing+unsubscribe@googlegroups.com.

To post to this group, send email to freetamilcomputing@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/freetamilcomputing.
For more options, visit https://groups.google.com/d/optout.

Muthu A

unread,
Mar 2, 2018, 10:58:58 PM3/2/18
to ThamiZha! - Free Tamil Computing(FTC)
வணக்கம் சீனி,
உங்கள் உதாரணங்களில் சில பிழைகள் மயங்கொலி சொற்களு விதிபடி ஓப்பன்-தமிழ்
சொல்திருத்தியில் கண்டரிந்து, மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும்.

இது மற்ற பிழைகளை எவ்வகையில் திருத்தும் என்று
முயற்சித்துப்பார்த்தால்தான் தெரியும்.

நன்றி.

Muthu Aiyer

unread,
Mar 4, 2018, 11:52:26 PM3/4/18
to freetamil...@googlegroups.com
​என்போன்ற தமிழ் ஆர்வலர்க்கு போற்றத்தகு ஒரு மென்பொருளிது. அருமை. முத்து ஐயர்​

--
Reply all
Reply to author
Forward
0 new messages