சொற்குவை திட்டத்தின் API

75 views
Skip to first unread message

M.Mauran

unread,
Oct 13, 2021, 6:25:56 AM10/13/21
to freetamilcomputing
வணக்கம்.

தமிழக அரசின் சொற்குவை திட்டத்தின் வலைத்தளம் பயன் மிக்கதாயுள்ளது. எதிர்காலத்தில் தமிழ்ச் சொற்களை தேடிப் பெறும் முதன்மைத் தளமாக இது மாறக்கூடும்.

இத்தளத்தில் சொற்களை தேடுவதற்கான API பொதுப் பயன்பாட்டுக்கு உரியதா? என்ன உரிமத்தின் கீழ் அது வெளியிடப்பட்டுள்ளது. மொழிசார்ந்த மென்பொருட்களை உருவாக்குவோ இந்த API இனை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்/வழிகாட்டல்கள் உள்ளனவா?

தோழமையுடன்,

மு. மயூரன்

--
மு. மயூரன் | එම්. මයූරන් | M. Mauran
+94772307807

நீச்சல் காரன்

unread,
Oct 13, 2021, 6:32:50 AM10/13/21
to ThamiZha! - Free Tamil Computing(FTC)
வணக்கம்,
சொற்குவை தளத்திற்கு API உள்ளது. ஆனால் பொதுப் பயன்பாட்டிற்கு வழங்கவில்லை. இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை முயல்வதாக அறிகிறேன். வெளியிடும்வரை காத்திருப்போம்.


அன்புடன்,
நீச்சல்காரன்

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilcomput...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilcomputing/CAOuWy9vCEu7YRkdDuFroEp4A%2BBwK7hT8%2B%3Dk7uQKNqSPneZe0nw%40mail.gmail.com.

M.Mauran

unread,
Oct 13, 2021, 6:40:09 AM10/13/21
to freetamilcomputing
நன்றி நீச்சல்காரன்.
பொதுப்பயன்பாட்டுக்கு வருமானால் பெரும் நன்மை விளையும்.


--
மு. மயூரன் | එම්. මයූරන් | M. Mauran
+94772307807


புத., 13 அக்., 2021, பிற்பகல் 4:02 அன்று, நீச்சல் காரன் <neecha...@gmail.com> எழுதியது:

நீச்சல் காரன்

unread,
Jan 1, 2022, 3:57:25 AM1/1/22
to ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
வணக்கம்,
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் குறிப்பிட்டது போலச் சொற்குவை சொற்களை விக்சனரியில் ஏற்றும் பொருட்டு, படைப்பாக்கப் பொது உரிமத்தில் வெளியிட்டுள்ளனர்.  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்திற்கு நன்றி.

இதில் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, த.இ.க.வின்  கலைச் சொல் பேரகராதி, ஆட்சிச் சொல் அகராதி, கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் சொல் அகராதி ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

சொற்குவை தரவுகளை யாரேனும் Web scraping செய்து அளிக்க ஆர்வமிருந்தால் முயலலாம்.  உரிய ஆக்குநர்சுட்டுடன் பொதுத் தரவாக அளித்தால் பெரும் பயனாக இருக்கும்.

அன்புடன்,
நீச்சல்காரன்


--
அன்புடன்,
நீச்சல்காரன்

Muthu A

unread,
Jan 1, 2022, 5:00:35 PM1/1/22
to நீச்சல் காரன், ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
வணக்கம் நீச்சல்காரன்;
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அருமையான தகவல்.

நல்ல செய்தி; சொற்பிறப்பியல் பேரகரமுதலி என்பதும் அதன் செயல்முறைகளும் பலருக்கும் அனுக முடிவதில் ஒரு பெரிய மொழி வளரச்சியடையும் என்று எண்ணத்தோன்றுகிறது.

சொற்குவை நிறுவனம் ஏன் அனைத்து வெளியீடுகளும் ஏன் PDF அல்லது படங்களாக வெளியிடப்படுகிறது? சாதாரன ஒரு பட்டியலாக கொடுத்தால் ஏன் இது எடுபடாதா என்ற ஒரு கேள்வி மனதில் எழுகிறது; தலையை சுத்தி மூக்கை தொடுவதில் நம் அரசு நிறுவனங்களுக்கு ஒரு அதீத இன்பம் போல் இருக்கிறது.

வேற்று இடங்களில் http://kalaichotkovai.blogspot.com/ போன்ற இடங்களில் 75,000 சொற்கள்/சொற்றொடர்களை தமிழாக்கம் செய்த அயலக தமிழர்களும் இங்கு உண்டு என்பதில் வேடிக்கையாக இருக்கிறது.

எனது கனிவான வேண்டுகோள் எனில் இந்த சொல் பட்டியலை ஒருங்குறியில் csv அல்லது பொது உரை வடிவில் CC-by-SA NC என்று கூட வெளியிட்டால் வீன்வேலை செய்வதில் நமது சிறிய சமுகம் முன்னேரும்.

நன்றி,
-முத்து

சனி, 1 ஜன., 2022, முற்பகல் 12:57 அன்று, நீச்சல் காரன் <neecha...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "தஇக - கணித்தமிழ் வளர்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tva_kanitamil_val...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tva_kanitamil_valarchi/CACir7OqQkwd%3Dm5u%2B9X8XH1VP_DJq-4jQ_PXVgeFFUqSWbaCR7Q%40mail.gmail.com.

த-உழவன்

unread,
Jan 1, 2022, 9:37:47 PM1/1/22
to ThamiZha! - Free Tamil Computing(FTC)
நன்றி, முத்து. மிகத்தெளிவான வழிகாட்டல்களைத் தந்தமைக்கு மகிழ்கிறேன். சொற்குவைத் திட்டத்தினரும் சிறிய சமூகமென்றே எண்ணுகிறேன். இதற்குரிய நிதிநிலையும் அறிவிக்கப்படவில்லை. தமிழ் விக்சனரியில் சொற்குவை திட்டம் குறித்து நடந்தவைகளை இங்கு சுருக்கமாகக் கூற விரும்புகிறேன்.  1 திசம்பர் 2021 அன்று முதல்  பகுப்பு:சொற்குவை https://ta.wiktionary.org/s/8134    இதுவரை ஏறத்தாழ 5000 சொற்களை ஏற்றியுள்ளனர். தொடர்ந்து பல பொருத்தமற்ற சொற்களை ஏற்றியமையால் பதிவேற்றிய பயனரை 12 திசம்பர் 2021 அன்று ஒருமாதம் காலம் தடைசெய்து விளக்கம் கேட்டேன். பயனர் பேச்சு:KarefoIndia
https://ta.wiktionary.org/s/852c அவர்கள் அரசு ஆவணமாக ஒன்றினைக் காட்டி தடைநீக்கக் கோரினர். பிறகு விக்கி நண்பர்கள் இதற்குரிய திட்டபக்கத்தினை தொடங்கி உரையாடியதால் மேற்கூறிய அறிவிப்பு அத்தளத்தில் வந்துள்ளது. https://sorkuvai.com/disclaimer/   இப்பொழுது  கலந்துரையாடல் பகுதியில் , முன்பு பதிவேற்றிய 5000 சொற்களை நீக்கலாம் என்கின்றனர். ஏற்கனவே விக்சனரி திட்டம் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஓரிரு நணபர்களை வைத்து தடுமாறி முன்னேறி கொண்டிருக்கிறது. மறுபடியும் முதல் இருந்தா! இனியாவது நல்ல தொடக்கம் அமைய,  விக்சனரி பேச்சு:சொற்குவைச் சொற்கள் பதிவேற்றத் திட்டம் https://ta.wiktionary.org/s/852s  என்ற பக்கத்தில் தொடர்ந்து அனைவரும் தங்களது எண்ணங்களைத் தெரிவித்து, இத்திட்டம் சிறக்க அழைக்கிறேன். https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Wikipedia_Free_Content_Advocacy இதுபோல ஆவணங்களை அரசிடம் பெற்றுத்தந்தால், அது விக்கியருக்கும் விக்கிமீடிய அறக்கட்டளையிடமிருந்து நிதி பெற்று வளர்க்க சட்டவழிகளைத் திறக்கும். தளஅறிவிப்பு என்பது எப்பொழுதும் நிரந்தரமல்ல என்பது எனது 13 ஆண்டுகள் விக்கி அனுபவம். தரமே நிரந்தரம் !
ஞாயிறு, 2 ஜனவரி, 2022அன்று முற்பகல் 3:30:35 UTC+5:30 மணிக்கு ezhi...@gmail.com எழுதியது:

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 15, 2022, 8:54:33 AM1/15/22
to Muthu A, நீச்சல் காரன், ThamiZha! - Free Tamil Computing(FTC), தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
சொற்குவையில் நான் வெளியிடும் நூல்களில் உள்ள கலைச்சொற்களும் இடம் பெறுகின்றன.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages