முகநூல் பதிவு.
மண்டியிடாத மானம் என்பது... -----------------------------------------------------------------------
திருச்சி மாவட்டம், பெரியாரியலுக்கு மட்டுமல்ல, பெரியாருக்கும் அதுதான் தலை நகரம், பெரியார் மாளிகை என்பது, போர் மறவர்களைத் தயாரிக் கும் பாடி வீடு அது.
இங்குதான் பெரியாரின் கருத்துக் கள் மனிதர்களை தீயாய்ப் பற்றியது, அப்படி கருத்துத் தீப்பிடித்த ஒரு மனிதன்தான் மலைக்கோட்டை மாரிமுத்து.
பார்ப்பனர் கையில் சாப்பிடுவதையே கவுரவ குறைச்சலாக நினைக்கும், பெரியாரால் ஒண்ணரைப் பார்ப்பனர் கள் என்று வர்னிக்கப்பட்ட பிள்ளை மார் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் இந்த மாரிமுத்து,
இவரது குடும்பமே சேர்ந்து மலைக் கோட்டை எதிரில் பெரிய ஓட்டல் கடை நடத்தி வந்தார்கள் பணத்திற்கு பஞ்சம் இல்லாத செல்வ செழிப்பான குடும்பம்.
அப்படியான குடும்பத்தைச் சேர்ந்த மாரிமுத்து தினமும் மாலை நேரங்களில் பெரியார் மாளிகைக்கு வருவதும், பெரியாரை சந்திப்பதும், அவர் பேச்சை கூர்ந்து கவனிப்பது மாக இருந்தார்,
பிறகு கூட்டங்களுக்கு வருவதும், கூட்டங்களை ஒழுங்கு செய்வதுமாக கொஞ்சம், கொஞ்சமாக தன்னை பெரியாரிய பிரச்சாரப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.
அடுத்தடுத்து நடந்த கூட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு கருப்புச் சட்டையோடு வர ஆரம்பித்து விட்டார்.
வாலிப பருவம், பெரிய குடும்பம், மதிப்பு வாய்ந்த ஜாதி, பணப் பிரச்சனை இல்லாத சுய தொழில் என இருந்தவரிடத்தில் ஏற்பட்ட கருத்து மாற்றம் குடும்பத்தில் குழப்பத்திற்கு வழி வகுத்தது.
பள்ளன், பறையன் கட்சியில் உனக் கென்ன வேலை என்று அவர் தந்தை, மாரிமுத்துவை அடித்துவிடுகிறார்.
ஜாதியின் கொடுமையை சமூகத்தில் மட்டுமல்ல தன் குடும்பத்திலும் கண்ட மாரிமுத்து,
கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதோடு அதேப்பகுதியில் சுயமாக ஒரு ஓட்டலையும் தொடங்கி நடத்தினார்.
பெரியாரின் தீவிரமாக கொள்கை வயப்பட்ட மாரிமுத்து, பக்கத்துத் தெருவைச் சேர்ந்த, பள்ளர் ஜாதிப் பெண்ணை காதலித்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன உறவினர்கள், மொத்தமாக மாரிமுத்துவை சமூக விளக்கம் செய்தார்கள்.
கணவன் மனைவி இருவருமாக சேர்ந்து அந்த ஓட்டலை நடத்திக் கொண்டு, பெரியாரின் கொள்கை வழியில் வாழ்ந்து கொண்டும் வந்தார்கள்.
எங்கெல்லாம் பெரியாரின் கூட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து போவார்கள்.
தன் மனைவி நிகழ்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் அழைத்துச் சென்று பெரியாரியல் என்பது முற்றிலும் வேறான ஒரு வாழ்க்கை முறை என்பதை புரிய வைத்ததோடு அவரையும் கொள்கை வாதியாக மாற்றினார்.
அவர் மனைவியும் ஒரு மாற்று பண்பாட்டு வாழ்வியல் தளத்திற்கு தயார் படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து இருவரும் இனைந்தே எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டனர்.
அவர் மனைவியும் அனைத்து ஜாதிய உறவுமுறைகளில் இருந்து முற்றாக தன்னைத் துண்டித்துக் கொண்டார்.
இந்த சமயத்தில்தான் பெரியார் அவர்கள் இந்திய அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தை அறிவித்தார்.
சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மாரிமுத்துவிற்கு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது.
தண்டனைக் காலத்தை முழுமையாக அனுபவித்து விட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார்...
அவரது மனைவியை அடித்து விரட்டி விட்டு, அவரது உறவினர்கள் ஓட்டலை பங்கு போட்டுக் கொண்டார் கள்.
பாவம் அவர் மனைவி என்ன செய்வார். சுயமரியாதையோடு வாழ வேண்டுமே தனியாக ஒரு தள்ளு வண்டிக் கடை போட்டு வியாபாரம் செய்து பிழைத்து வந்தார்.
நீண்ட நாள் இருவரும் தள்ளுவண்டி வியாபாரம் செய்துக் கொண்டே இயக்க பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நேரத்தில்தான் தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரை படத்தை கொழுத்தும் போராட்டத்தை அறிவிக் கிறார் தந்தை பெரியார்!
மீன்டும் மாரிமுத்து நான்கு மாதம் சிறை தண்டனை பெற்றார். நான்கு மாதம் சிறை தண்டனை முடித்து வெளியே வந்ததும், தள்ளு வண்டிக் கடை சைக்கிளில் சுக்கு மல்லி டீ விற்பவராக மாறிப் போனார்.
இன்று அவருக்கு 85 வயதிற்கு மேல் இருக்கும். சைக்கிளை தள்ள வயது இடம் கொடுக்கவில்லை.
தற்போது திருச்சி, பாலக்கரை பகுதியில் உள்ள அண்ட கொண்டான் பகுதியில் வசித்து வருகிறார் மாரிமுத்து. அவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா தோழர்களே..?
இன்றய அரசியல்வாதிகளை உங்கள் மனக் கண்ணில் நிறுத்தி மாரிமுத்து வின் வாழ்க்கையைப் பாருங்கள்.
மனிதனை மனிதனாக நடத்தப் பட வேண்டும் என்கின்ற ஒரே காரணத் திற்காக ஜாதி, மதத்தை ஒழிக்க பெரியாரியல் வாழ்வை முழுமையாக ஏற்று,
தன் உற்றார் உறவினர்களை மட்டு மல்ல, தனது பாரம்பரிய சொத்துக் களையும் உதரிவிட்டு, பல்வேறு ஏச்சிக்கும், பேச்சிக்கும் ஆளாகி, சமூக புரக்கனிப்புக்கும் உள்ளாகி,
பெரும் தனவந்த பிள்ளைமார் குடும்பத்தில் பிறந்த மாரிமுத்து, மூட நம்பிக்கையற்ற, பெரியாரியல் வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக!
தன் இறுதிகாலத்தில் கூட சுயமாக உழைத்து வாழவேண்டும் என்கின்ற வைராக்கியத்துடன்...
தனது தள்ளாத வயதிலும் கழிவரையை சுத்தம் செய்து, தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் மானத் தமிழன் மாரிமுத்து.
இந்த செய்தி குமுதம் ரிப்போர்ட்டரில் கட்டுரையாக வந்தது, இதைக் கண்டு இறக்கப்பட்ட, S.VEE.சேகர் மூண்று லட்ச ரூபாய் நன் கொடையாக தர முன்வந்தார்.
ஆனால் அந்த சுயமரியாதைச் சூரியன், கழிப்பறை கழுவிவரும் வருமாணமே எங்கள் இருவருக்கும் போதுமானதாக இருக்கிறது என்று கூறி, அந்தப்பணத்தை வாங்க மறுத்து விட்டார்.
இதற்குப் பெயர்தான்டா நாயே மண்டியிடாத மானம் என்பது...
#dravidiansyndicate #dravida_model #tholarkalam #DMKITWING #TVKparty #MKStalinCM #seemanspeech #periyar #NewsUpdate #TNAssembly