ராமர் போற்றிய(!?) சீதை

0 views
Skip to first unread message

Tholkappiyan Vembian

unread,
Feb 21, 2024, 9:10:31 AMFeb 21
to freeians


சீதை பெயர் கொண்ட சிங்கம் குறித்த என் பதிவுக்கு எதிர் வினையாக, 'அந்த சிங்கத்துக்கு உங்கம்மா பேரை வெச்சி அக்பர் கூட அனுப்பு' என்றெல்லாம் கமெண்ட்டுகள் வருகின்றன. வேறு சிலர், வெவ்வேறு ஆளுமைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு 'அவன் கூட அனுப்பு', 'இவன் கூட அனுப்பு' என்று யார் யாரிடம் என் அம்மாவை அனுப்ப வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.
அதைப் படிக்கும் போது எனக்கு ஒன்று தோன்றியது. ஆச்சரியமாக, ராமாயணத்தில் ராமரும் இதையே செய்கிறார். 
தன் மனைவியான சீதையிடமே இதை செய்கிறார். யுத்தம் முடிந்து சீதை மீட்கப்பட்டு விட்ட பின்னர், முதன் முறையாக சீதையிடம் ராமர் பேசுகிறார். 'என் கௌரவத்தைக் காப்பாற்றவே உன்னை மீட்டெடுத்தேன்,' என்கிறார். 'நீ வேற்று ஆண் வீட்டில் பல மாதங்கள் இருந்து விட்ட படியால் உன்னை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. உன்னைப் பார்க்கவே கண் கூசுகிறது,' என்கிறார். 'பெரும் மாண்புக்குரிய வம்சத்தில் இருந்து வந்த எந்த ஆணும் உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டான்,' என்கிறார். 
அப்படியானால் சீதைக்கு என்னதான் வழி? இப்படியெல்லாம் சொல்லி விட்டு, 'நீ வேறு யாரையாவது பார்த்துக் கொள்,' என்று ராமர் பரிந்துரைக்கிறார். அவன் கூடப் போ, இவன் கூடப் போ, என்றெல்லாம் சொல்கிறார். 
யார் யார் என்றும் அவரே குறிப்பிடுகிறார். லட்சுமணன், பரதன், சத்ருக்னன், பரதன், என்றெல்லாம் பட்டியல் போகிறது. கடைசியில், 'ஏன், விபீஷணன் எனும் அரக்கனிடம் கூடப் போகலாம்,' என்கிறார். (இந்த வரியைப் படிக்கையில் 'ஏன் இவர்கள் எல்லாம் மாண்புக்குரிய வம்சத்தவர் இல்லையா?' என்ற கேள்வி என்னுள் எழுந்தது.) 
இவற்றைக் கேட்ட சீதை பெரும் துக்கத்திலும் அவமானத்திலும் வீழ்கிறாள். ஒரு அரக்கனின் பிடியில் இத்தனை காலம் இருந்தது பத்தாது என்று கடவுளாக வழிபட்ட தன் கணவனே இப்படியெல்லாம் பேசியது அவளை மன அழுத்தத்தில் ஆழ்த்துகிறது. இதெல்லாம் நடந்த பின்னர்தான் தன் கற்பை நிரூபிக்க அக்னிப் பிரவேசம் செய்ய முடிவெடுக்கிறாள். 

அதாவது இவர்கள் இப்போது மாய்ந்து மாய்ந்து காப்பாற்ற முனையும் சீதையின் மாண்பை ஸ்ரீராமரே சல்லி சல்லியாக உடைத்திருக்கிறார். 
சீதையை எந்த அளவுக்கு அவமதிக்க முடியுமோ அந்த அளவு அவமதிப்பை ராமரே முன்நின்று நடத்தி இருக்கிறார். 

எனவே, சீதைக்காக அக்பர் மீது கோபம் கொள்ள முனையும் இந்துத்துவர்கள், இப்படியெல்லாம் சீதையை அவமதித்த ராமர் மீது எப்படியெல்லாம் பாயப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். 
உங்கள் ரெஃபரென்ஸ்சுக்காக ராமாயண வரிகளை கீழே கொடுத்திருக்கிறேன். - ஸ்ரீதர் சுப்ரமணியம் 
Valmiki Ramayana Book VI: Yuddha Kanda - Book of War 
Chapter - 115 ========================================= यत्कर्तव्यं मनुष्येण धर्षणां प्रतिमार्जता | तत्कृतं रावणं हत्वा मयेदं मानकाङ्क्क्षिणा || 
6-115-13 
"I, wanting for an honour, have done this particular act, which ought to be done by a man, in killing Ravana and thus wiping away the insult meted out to me." 
 निर्जिता जीवलोकस्य तपसा भावितात्मना | अगस्त्येन दुराधर्षा मुनिना दक्षिणेव दिक् || 6-115-14 
"You have been won by me, whose mind stands purified by asceticism as the southern quarter, which was difficult to be approached by the world of mortals, was conquered by the Sage Agastya."
 विदितश्चास्तु भद्रं ते योऽयं रणपरिश्रमः | सुतीर्णः सुहृदां वीर्यान्न त्वदर्थं मया कृतः || 6-115-15 रक्षता तु मया वृत्तमपवादम् च सर्वतः | प्रख्यातस्यात्मवंशस्य न्यङ्गं च परिमार्जता || 6-115-16 
 "Let it be known to you that this endeavor in the shape of war, which has been successful carried through, due to the strength of my friends was not undertaken for your sake. Let there be prosperity to you! This was done by me in order to keep up my good conduct and to wipe off the evil-speaking from all sides as well as the insinuation on my own illustrious dynasty."
 प्राप्तचारित्रसंदेह मम प्रतिमुखे स्थिता | दीपो नेत्रातुरस्येव प्रतिकूलासि मे दृढम् || 6-115-17 "You, with a suspicion arisen on your character, standing in front of me, are extremely disagreeable to me, even as a light to one, who is suffering from a poor eye-sight."
 तद्गच्छ त्वानुजानेऽद्य यथेष्टं जनकात्मजे | एता दश दिशो भद्रे कार्यमस्ति न मे त्वया || 6-115-18 "O Seetha! That is why, I am permitting you now. Go wherever you like. All these ten directions are open to you, my dear lady! There is no work to be done to me, by you."
 कः पुमांस्तु कुले जातह् स्त्रियं परगृहोषिताम् | तेजस्वी पुनरादद्यात् सुहृल्लेख्येन चेतसा || 6-115-19 
 "Which noble man, born in an illustrious race, will take back a woman who lived in another's abode, with an eager mind?" 
 रावणाङ्कपरिक्लिष्टां दृष्टां दुष्टेन चक्षुषा | कथं त्वां पुनरादद्यां कुलं व्यपदिशन् महत् || 6-115-20 "While mentioning greatly about my lineage, how can I accept again, you who were harassed in Ravana's lap (while being borne away by him) and who were seen (by him) with evil looks?" 
 तदर्थं निर्जिता मे त्वं यशः प्रत्याहृतं मया | नास्थ् मे त्वय्यभिष्वङ्गो यथेष्टं गम्यतामितः || 6-115-21 "You were won by me with that end in view (viz. the retrieval of my lost honour). The honour has been restored by me. For me, there is no intense attachment in you. You may go wherever you like from here." 
 तदद्य व्याहृतं भद्रे मयैतत् कृतबुद्धिना | लक्ष्मणे वाथ भरते कुरु बुद्धिं यथासुखम् || 6-115-22 "O gracious lady! Therefore, this has been spoken by me today, with a resolved mind. Set you mind on Lakshmana or Bharata, as per your ease."
 शत्रुघ्ने वाथ सुग्रीवे राक्षसे वा विभीषणे | निवेशय मनः सीते यथा वा सुखमात्मनः || 6-115-23 "O Seetha! Otherwise, set your mind either on Shatrughna or on Sugreeva or on Vibhishana the demon; or according to your own comfort."
Translate post

Reply all
Reply to author
Forward
0 new messages