எல்லாமே நல்லதுக்குத்தான் (நன்றாகவே) நடக்குது என்றால் அர்ச்சுனன் வில்லைப் போட்டு விட்டுப் போரிட மறுப்பதும் நல்லதுக்குத்தானே என்று கேட்கலாமே? கீதையின் சாரம் (என்று பரப்பப்படுவதே) கீதைக்கு முரணாக உள்ளது!
பகவத் கீதையின் சாரம் என்று சொல்வதே கீதையில் இல்லை என்றும் அது குண்டலகேசியில் உள்ள ஒரு பாட்டிலிருந்து (சாரத்தின் ஒரு பகுதி) எடுக்கப்பட்டது என்று கரு.ஆறுமுகத்தமிழன் ஒரு சொற்பொழிவில் குறிப்பிடுகிறார்.
கீதை நன்மை / தீமை என்பதை நுட்பமாகக் கையாண்டுள்ளது என்று கீழ்க்கண்ட இணையதளப் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.
| | Does the Bhagavad-gita teach that everything that happens is good? | The... |
|
|
Nowhere does the Gita say that everything happens is good. Its teaching is that everything that happens can be for good – provided we make good choices in responding to it.
கீதையில் சரியாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதன் சாரம் என்று பரப்பப்படுவது கொச்சையாகவும் பச்சை ஏமாற்று வேலையாகவும் (நடப்பதை எதிர்க்காமல் ஏற்றுக் கொள் என்ற பொருளில்) உள்ளது.
எனவே வருண(அ)தர்மக் கொடுமை (சாதிப் பிரிவுகள்), தீண்டாமை, பெண்ணடிமைத்தனம்... போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதும் கீதை வழிப் பட்ட செயல்களே.