பேரழகும்-அபார-அறிவும்-இரண்டும்-இனைந்து-ஒருவர்-இருக்க-முடியுமா-1

1 view
Skip to first unread message

Tholkappiyan Vembian

unread,
Feb 15, 2024, 2:16:50 AMFeb 15
to freeians

ஹாலிவுட்டில் Snowwhite, Catwoman போன்ற முகங்களை பார்த்திருக்கிறீர்களா? மிக அழகாக இருக்கும். இந்த Snowwhite முகம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெரியுமா?

ஹெடி லாமர், Hedy Lamarr என்ற அஸ்திரியா நாட்டைச் சேர்ந்த, ஒரு ஹாலிவுட் நடிகை, முகம் தான் 1940களில் அழகான ஒரு பெண்ணின் முகம். நாற்பதுகளின் ஏஞ்சலினா ஜோலி தான் ஹெடி லாமர்!

இவர் வெறும் அழகு பொம்மையாக ஒரு நடிகையாக இருந்தால் சத்தியமாக நான் இந்த பதிலை எழுதி இருக்க மாட்டேன்.

இவர் இன்றைய நவீன விஞ்ஞானம் ஆன வயர்லெஸ் புளூடூத் Wi-fi போன்ற எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஒரு அற்புதமான விஞ்ஞான கண்டுபிடிப்பை கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானி யும் அவார்!

1933 Esctasy என்ற படத்தில் நடித்த அவர், 1937 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் WW2 நடக்கும்போது 1940 களில் பிரிட்டன் சென்றடைந்தார்.

உலகப் புகழ்பெற்ற எம்ஜிஎம் என்னும் Metro Goldwyn மேயர், அவர்களால், உலக அழகி என்ற பெயர்தான் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார்!

1942 இல் இருந்து, பல ஹாலிவுட் படங்களில் நடித்து வெற்றி வாகை சூடினார்.

சினிமா ஷூட்டிங் இடையில், விஞ்ஞானம் பற்றி எழுதி ஆராய்ச்சி செய்த ஒரு மாமேதை இவர். இவர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்ந்த ஒரு அம்பி, அந்நியன், Remo, பொம்பளை ரெமோ!

இவர் ஆறு திருமணம் செய்து கொண்டதை எழுதிய பத்திரிக்கைகள், விஞ்ஞானி என்பதை மட்டும் அமெரிக்க பத்திரிக்கைகளில் எழுதவே இல்லை!

அவர் கண்டுபிடித்தது, Frequency Hopping என்ற அற்புத எலக்ட்ரானிக் சிக்னல் சாகசம்.

சுருக்கமாக விளக்குகிறேன். ஒரே அலைவரிசையில் நான் சிக்னல் அனுப்பினால், அதை எளிதில் Jammer வைத்து தடுத்து விடலாம். இவர் அர்ணாயில் என்று இன்னொரு விஞ்ஞானியுடன் சேர்ந்து, பல அலைவரிசைகளில் குதிக்கும், ஒரு சிக்னலை கண்டுபிடித்தார். இதன் மூலம் உங்கள் சிக்னலை யாராலும் தடுக்க முடியாது.

போர்க் காலங்களில் இது ஒரு வரப்பிரசாதம். கம்பிகள் இல்லாத மின்னணு செய்தியை தொலைதூரம் அனுப்ப பயன்படும்.

ஆனால் ஏனோ அமெரிக்க navy இதை, அங்கீகரிக்கவில்லை. ஆனால் ஐம்பது வருடம் கழித்து, எலக்ட்ரானிக் பெடரேஷன் அழைப்பு இவரது கண்டுபிடிப்பு உண்மையிலேயே சிறந்த கண்டுபிடிப்பு என்று பாராட்டி கவுரவித்தது.

1977ல் விருது வாங்கியவர், 2000 ஆண்டு காலமானார். ஒருவரின் சாதனை, ,பெண்ணென்றால் அதுவும் நடிகை என்றால் உதாசீனப் படுத்துவது ஆண்களுக்கு வாடிக்கை. இதுதான் ஹெடி வாழ்க்கையிலும் நடந்தது!

இளமையில் நம்மூர் ஜெயலலிதா, போலவே நடிகை என்று அவமானப்படுத்தப்பட்டார்! ஜெயலலிதா புடவையை பிடித்து இழுத்த மாதிரி, இவர் Skirt டை பிடித்து, சிலர் இழுக்கவில்லை, என்பதே ஆறுதல்! பெண்கள் என்றாலே ஆண்கள், அவர்களின் அழகை பாராட்டி மதிக்கும் அளவுக்கு அவர்கள் அறிவை மதிப்பதில்லை என்பதே உண்மை!

6.7ஆ பார்வைகள்
217 ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்
6 பகிர்வுகளைப் பார்வையிடுக
1 பதிலில் 1
Kaps Vembian இன் தற்குறிப்பு போட்டோ

Maruthuvanpadi Srinivasan Venkatraghavan இன் தற்குறிப்பு போட்டோ

தரமான பதிவு.தாங்கள் " கோரா " வின் அணிகலன் என்றால் மிகையாகாது. நன்றி.

S.Rajesh இன் தற்குறிப்பு போட்டோ
S.Rajesh இன் தற்குறிப்பு போட்டோ

மிக்க நன்றி. தங்கள் ஆதரவை நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்!

சரவணன் இன் தற்குறிப்பு போட்டோ

அதே போல் நடிகை Anne Hathaway-இக்கும் அறிவியல் ஈடுபாடு உண்டு என கேள்வி பட்டு இருக்கின்றென். அதனால் தான் Interstellar படத்தில் மிகவும் விருப்ப பட்டு நடித்தாராம்.

S.Rajesh இன் தற்குறிப்பு போட்டோ
ரமேஷ் இன் தற்குறிப்பு போட்டோ

S.Rajesh இன் தற்குறிப்பு போட்டோ
கேள்வியைக் காண்க
எழுத்தாளரைப் பற்றி
S.Rajesh இன் தற்குறிப்பு போட்டோ
கற்றதும் பெற்றதும்
6.9மி உள்ளடக்கப் பார்வைகள்இந்த மாதம் 166.8ஆ
2 களங்களில் செயல்படுகிறார்
அக்டோபர் 2014 அன்று சேர்ந்தார்

Reply all
Reply to author
Forward
0 new messages