Fwd: திரு மன்னன் குமார் மிஸ்ராவின் இரட்டை நிலை - தமிழக வழக்குரைஞர்கள் சஸ்பென்ஷன்

3 views
Skip to first unread message

Soco Trust

unread,
Jul 28, 2016, 7:06:16 AM7/28/16
to agm...@rediffmail.com, ajmal...@rediffmail.com, alag...@yahoo.com.sg, Albert Fernando, am_b...@rediffmail.com, amalados p j, amar....@actionaid.org, amudhan rp, an...@pwtn.org, andré Costa, angu...@yahoo.co.in, Anna Durai, Annamalai, ared...@gmail.com, Ariaravelan.k, Arivoli Muthukumarasamy, Arogyaagam Arogyaagam, arput...@yahoo.com, aspr...@pwtn.org, bharathis...@yahoo.com, bsaj...@yahoo.co.in, C.R. Selvakumar, catalys...@eth.net, ceha...@vsnl.com, chai...@nic.in, che...@pwtn.org, Christ Raj, coll...@tn.nic.in, community radio, cpep...@yahoo.co.in, cp...@rediffmail.com, cr....@nic.in, cre...@gmail.com, cree...@gmail.com, cr...@rediffmail.com, cws...@gmail.com, Dalit Murasu, d...@pwtn.org, Devaki Jain, dg...@yahoo.com, dorai raj, drops...@rediffmail.com, drspuda...@yahoo.com, eastc...@gmail.com, Editor, keetru.com, educati...@yahoo.in, Emmanuel Akilan, Esther Aman, fazi...@yahoo.co.in, Francis Xavier, francis...@gmail.com, freefair...@googlegroups.com, GANA KURINJI SHANMUGASUNDARAM, gandhia...@ymail.com, Geeta Ramaseshan, geet...@yahoo.com, ggan...@pwtn.org, giri...@ciil.stpmy.soft.net, gmathi...@yahoo.co.in, gnamm...@yahoo.co.in, gn...@cwsy.org, god...@hotmail.com, Gomathy Sankaranarayanan, Govindasamy Thirunavukkarasu, green...@yahoo.com, Harappa Tamilan, haripar...@gmail.com, Haritha Sarma, Harsh Jaitli, Haseena Thameez, hco...@tn.nic.in, hea...@hotmail.com, help...@pwtn.org, Henri Tiphagne, hi...@hivos-india.org, HOPE Puducherry, hrln chennai, ICCWTN, ic...@vsnl.com, indian network federation, Inimai Dhanasekaran, Irfan Asgharali, janasa...@yahoo.co.in, Jeevanantham Janasakthi, jeevika free, jesuret...@rediffmail.com, Jeya Kumar, jeyaseelan gopalakrishnan, jgnan...@gmail.com, Jinnah Advocate, John Coren, John Coren, Jonathan N.Gnanadason, mahaboob athiff, makassociates ajmal, Meyyammai Arumugam, Mohan Bhavani, Mukkavilli Bharat Kumar, Ramesh Rao, S.Sathia Chandran Advocate, Syed Ahamed, Syed Ahamed

---------- Forwarded message ----------
From: Hari Paranthaman <haripar...@gmail.com>
Date: 2016-07-24 23:40 GMT+05:30
Subject: திரு மன்னன் குமார் மிஸ்ராவின் இரட்டை நிலை - தமிழக வழக்குரைஞர்கள் சஸ்பென்ஷன்
To: Soco Trust <socot...@gmail.com>


உச்சநீதிமன்றம் R.K. ஆனந்த் வழக்கில் வழங்கிய தீர்ப்பு பற்றி...
------------------------------------------------------------------------------

உச்சநீதிமன்றம் R.K. ஆனந்த் வழக்கில் வழங்கிய தீர்ப்பு பற்றி, இன்று தமிழகத்தில் வழக்குரைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது. எனவே அத்தீர்ப்பினைப்பற்றி பரிசீலிப்பது அவசியம். காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் வழக்குரைஞர்களின் தற்காலிக பணி நீக்கத்தையும், உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ள புதிய விதிகளையும் அத்தீர்ப்பின் அடிப்படையில் பரிசீலிக்கலாம். 

மேற்சொன்ன தீர்ப்பைப்பற்றி பரிசீலிப்பதற்குமுன், யார் இந்த R.K. ஆனந்த் என்ற சிறு விபரத்தை தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும். 

திரு R.K. ஆனந்த் அவர்கள் டெல்லியில் மிக பிரபலமான மூத்த வழக்குரைஞர் (senior advocate). மூன்று இந்திய பிரதமர்கள் அவருக்கு கட்சிக்காரர்கள் (clients). அவர்களின்வ ழக்குகளை நடத்தி வெற்றி  பெற்றவர்.

திருமதி இந்திரா காந்தி பிரதமராக இருக்கையில், அவரது மகன் திரு சஞ்சய் காந்தி 1980-ல் விமான விபத்தில் இறந்தார். அவரின் மனைவி திருமதி மேனகா காந்தி, நீதிமன்றம் மூலமாக திரு சஞ்சய் காந்தியின் உயிலின் அடிப்படையில் சொத்து உரிமை கோரினார். அதை எதிர்த்து திருமதி இந்திரா காந்திக்காக டெல்லி உயர்நீதிமன்றம் வரை வெற்றிகரமாக வழக்காடியவர் வழக்குரைஞர் திரு R.K. ஆனந்த். 

திருமதி இந்திரா காந்திக்கு உயில் எழுதிய வழக்குரைஞரும் அவரே. 

திருமதி இந்திரா காந்தி அவர்கள் 1984ல் பிரதமராக இருந்தபொழுது கொல்லப்பட்டார். திரு ராஜிவ் காந்தி பிரதமர் ஆனார். அந்த உயிலின் அடிப்படையில் திரு ராஜிவ் காந்திக்காக வழக்கு நடத்தியவரும் திரு R.K. ஆனந்த் அவர்களே.

அடுத்து, பிரதமர் திரு நரசிம்ம ராவ் மூன்று ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டபோது, அவருக்கு விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடத்தி வெற்றி பெற்று தந்தவரும் திரு R.K. ஆனந்த் அவர்களே. 

திருமதி இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து, சீக்கியர்கள் மேல் நடந்த வன்முறை தாக்குதல் பற்றி அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா விசாரணை கமிஷன் முன் மைய அரசுக்கான வழக்குரைஞரும் இவரே.

மேற்சொன்ன விவரங்கள், திரு R.K. ஆனந்த் பிரபல மூத்த வழக்குரைஞராக இருந்தவர் ஏன்பதை தெளிவாக்கும்.

பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் தலைவர் 
-----------------------------------------------------

மேலும், அவர் டில்லி பார் கவுன்சில் உறுப்பினராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக [1972-1998] இருந்தார். இருமுறை அதன் தலைவராகவும் (chairman) இருந்தார். 

அரசியல் செல்வாக்கு 
--------------------------

அவர் மிகுந்த அரசியல் செல்வாக்கும் உடையவர். மார்ச் 2000-ல் ராஜ்யசபாவிற்கு ஜார்கன்ட் மாநிலத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். 

2004-ல் நடந்த பொது தேர்தலில் டில்லி தெற்கு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோற்றார். 

மீண்டும் 2014-ல் நடந்த பொது தேர்தலில் பாரிதாபாத் பாராளுமன்ற தொகுதியில் இந்திய தேசிய லோக்தளத்தின் வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். 

சமீபத்தில் 2016 ஜூனில் நடந்த ராஜ்யசபா தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஹரியானா மாநிலத்தில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் கலக சட்டமன்ற உறுப்பினர்கள் (Rebel MLAs) அவருக்கு வாக்கு அளிக்காததால் தோற்றுப்போனார்.  

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 
----------------------------------

டில்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, மேற்சொன்ன திரு R.K. ஆனந்த் பேரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. அவர் அதை மறுத்து வழக்காடினார். அவர் கடுமையான குற்றம் புரிந்தார் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்தது. அவருக்கு தண்டனையும் அளித்தது. அதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவானது என்றும், அதிக தண்டனையை ஏன் வழங்கக்கூடாது என்று காரணம் காட்டுமாறு அறிவிப்பு அளித்தது. ஆனால் அதிக தண்டனை அளிக்கப்படவில்லை.

அவர் செய்த கடும் குற்றம் என்ன? அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன? உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்த தீர்ப்பு என்ன? அவர் அவமதிப்பு வழக்கிலும், மேல்முறையீட்டு வழக்கிலும் நடந்துகொண்ட முறை என்ன? போன்ற விவரங்களை விரிவாக பார்ப்போம். தற்சமயம் தமிழகத்தில் வழக்குரைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அத்தீர்ப்பின் வெளிச்சத்தில் பரிசீலிப்போம். 

உயர் பதவிகளில் உள்ளவர்களும், இருந்தவர்களும், செல்வமும் செல்வாக்கும் உள்ளவர்களும் கடும் குற்றம் புரிந்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இது எனது கருத்து. ஆனால் செல்வமும் செல்வாக்கும் உள்ளவர்கள் தண்டிக்கப்படுகிறார்களா?

சாட்சியை விலை கொடுத்து வாங்கிய R.K. ஆனந்த் 
---------------------------------------------------------------------------------------

10-1-1999 அன்று டில்லியில் பெரும் செல்வந்தரின் மகன் சஞ்சீவ் நந்தா அவரது BMW காரை கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் ஓட்டி விபத்தை நிகழ்த்தினார். அதில் 6 பேர் உயிர் இழந்தனர். 6 பேரில் மூவர் காவல்துறையினர். விபத்தை நிகழ்த்தியபின் நிற்காமல் (hit and run) சென்றுவிட்டார். அவர் காரை ஓட்டியபொழுது மதுவும் அருந்தி இருந்தார் என்பது காவல் துறையின் வழக்கு. குற்றவியல் நீதி மன்றத்தில் வழக்கு ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.

குற்றவியல் நீதி மன்றத்தில், சஞ்சீவ் நந்தாவின் வழக்குரைஞர் R.K. ஆனந்த். அரசுத்தரப்பு வழக்குரைஞர் (public prosecutor) I.U. கான்.

இந்நிலையில், வழக்கின் நேரடி சாட்சியான சுனில் குல்கர்னியுடன் மேற்சொன்ன R.K. ஆனந்த் மற்றும் I.U. கான் சந்தித்து, சாட்சியை பெரும் தொகை கொடுத்து வாங்குவது என்ற நிகழ்ச்சியை NDTV தொலைக்காட்சி 30-5-2007 அன்று ஒளிபரப்பியது. இது டில்லியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. 

NDTV இப்படி ஒரு முறைகேட்டை ஒளிபரப்பாமல் இருந்திருந்தால் இது வெளி உலகத்தின் மற்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கே வந்திருக்காது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
------------------------------------------------- 

இந்நிலையில் டில்லி உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து மூத்த வழக்குரைஞர் R.K. ஆனந்த் மற்றும் இருவர் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது . 
 
இதை எதிர் கொண்ட R.K. ஆனந்த் அவர்கள், பல இடைக்கால மனுக்களை தாக்கல் செய்தார். அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த விவரங்களுக்குள் நான் செல்லவில்லை. 

அவர் எழுப்பிய ஒரு முதல் நிலை எழு வினா (preliminary issue) பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவர், NDTV-தான் குற்றவியல் விசாரணையில் தலையிடும் வகையில் ஒளிபரப்பு செய்தது என்றும், எனவே அதன் பேரில் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று ஆட்சேபனையை எழுப்பினார். அந்த ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்தது. 

R.K. ஆனந்திற்கு வழங்கப்பட்ட தண்டனை 
-------------------------------------------------------------------------

அவர் சாட்சியை விலை பேசியதன் மூலம், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட்டு நீதிமன்ற மாட்சிமையினை குலைத்து அவமதிப்பு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதாக 21-8-2008ல் டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அவருக்கு கீழ் கண்ட தண்டனைகளை விதித்தது. 

1) டில்லி உயர் நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும் 4 மாதங்களுக்கு அவர் வழக்குரைஞர் தொழில் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அவர் மற்ற வழக்குரைஞர் வேலைகளை - 'consultations, advises, conferences, opinion etc' - செய்யலாம். 

2) மூத்த வழக்குரைஞர் பதவி பறிக்கப்பட்டது. 

3) ரூபாய் 2000 (இரண்டாயிரம்) அபராதம் விதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் R.K. ஆனந்தின் மேல் முறையீடு
------------------------------------------------------------------------------------------

இந்த உத்தரவினை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் .

மேல் முறையீட்டை 29-7-2009ல் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்று கூறி, அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு அறிவிப்பு அனுப்பியது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்ய (amicus curiae) இரு வழக்குரைஞர்களை நியமித்தது. அவர்கள், மூத்த வழக்குரைஞர்கள் திரு கோபால் சுப்ரமணியம் மற்றும் திரு நாகேஸ்வர ராவ் (இவர் தற்சமயம் உச்ச நீதிமன்ற நீதிபதி). 

டில்லி உயர் நீதிமன்றத்தில் R.K. ஆனந்தின் நடத்தை 
-----------------------------------------------------------------------------------------

மேற்சொன்ன தீர்ப்பில் அவர் உயர் நீதிமன்றத்தில் நடந்த முறை பற்றி கீழ் கண்டவாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

"Having regard to the misdeeds of which R.K. Anand has been found guilty, the punishment given to him by the High Court can only be regarded as nominal. We feel that the leniency shown by the High Court in meting out the punishment was quite misplaced. And the view is greatly reinforced if one looks at the cotemnor's conduct before the High Court. As we shall see presently, before the High Court the contemnor took a defiant stand and constantly tried to obstruct the proceedings."

பின்னர், கீழ் கண்ட தலைப்பு கொடுத்து சில பத்திகளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

"THE DIVERSIONARY & INTIMIDATORY TACTICS IN THE PROCEEDING" 

அதற்குப்பின்னர், "REQUEST FOR RECUSAL" என்ற தலைப்பிட்டு சில பத்திகளை (பத்தி 156 முதல் 165 வரை) தீர்ப்பில் எழுதியுள்ளது. அந்த பத்திகளின் சுருக்கம் கீழ் வருமாறு: 

அவரது  வழக்கை  விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இருவர் அமர்வின் மூத்த நீதிபதி விசாரிக்கக்கூடாது என்றும், அவரது வழக்கில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் R.K. ஆனந்த் மனு போட்டார். அமர்வுக்கு தலைமைதாங்கிய அந்த நீதிபதியின் மேல் கடும் குற்றச்சாட்டுகளை கூறினார். அவரது மனு நீதிபதியை மிரட்டுவதாக  இருந்தது. அந்த மனு, தலைமை தாங்கிய மூத்த நீதிபதியால்  நிராகரிக்கப்பட்டது. நீதிபதியின் பேரில் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், மற்றொரு நீதிபதி மனுவின் பேரில் எந்த உத்தரவும் போடவில்லை. பின்னர் அமர்வில் எந்த பங்கும் வகிக்க மறுத்துவிட்டார். இதை பயன்படுத்திக்கொண்டு மேற்சொன்ன உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று R.K. ஆனந்த் மனு போட்டார். தலைமை நீதிபதி, அமர்வின் இளைய நீதிபதியை மாற்றி மற்றொரு இளைய நீதிபதியை கொண்ட அமர்வை ஏற்படுத்தினார். பழைய அமர்வே மறுபரிசீலனை மனுவை விசாரிக்க வேண்டும் என்று R.K. ஆனந்த்  தரப்பில் வாதிடப்பட்டது. புதிய அமர்வு மறுபரிசீலனை மனுவை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை அமர்வின் சார்பில் புதியதாக நியமிக்கப்பட்ட இளைய நீதிபதி எழுதினார். அதற்குப்பின் அந்த வழக்கின் முக்கிய உத்தரவுகள் அனைத்தயும் இளைய நீதிபதியே எழுதினார். 

இறுதியில் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் 29-7-2009ல் தள்ளுபடி செய்கையில், R.K. ஆனந்திற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்றும், அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது என்பதற்கும், 4 மாதங்களுக்கும் மேலாக நீண்ட காலத்திற்கு வழக்குரைஞர் தொழிலில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்கும் அவர் விளக்கம் அளிக்க கோரியது.

R.K. ஆனந்திற்கு அதிக தண்டனை அளிக்கப்பட்டதா?
--------------------------------------------------------------------------------------------

13-1-2010ல் அவர் உச்ச நீதிமன்றத்தில் அவரது விளக்கத்தை அளித்தார். அதில், அவர் மன்னிப்பு கோரியும், நடவடிக்கையை கைவிடுமாறும் கோரினார். அந்த விளக்கத்தை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த தவறுக்கு அவர் வருந்தியதாக தெரியவில்லை என்றது. 

இதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியவுடன், 4-5-2011ல் கூடுதல் ஆணை உறுதியுரை (additional affidavit) தாக்கல் செய்தார். அதில் உச்ச நீதிமன்றம் 29-7-2009ல்  தீர்ப்பில் கூறிய அனைத்தையும் ஒப்புக்கொள்வதாகவும், முந்தைய விளக்கத்தில் கூறிய ஆட்சேபகரமான பகுதியை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

பின்னர், 24-9-2012ல் மேலும் ஒரு ஆணை உறுதியுரை (affidavit) தாக்கல் செய்தார். அதில் அவர் இந்திய பார் கவுன்சிலுக்கு 21 லட்சம் நன்கொடை அளிக்க ஒப்புக்கொள்வதாகவும், ஒரு ஆண்டுக்கு டில்லி இலவச சட்ட மையத்தில் ஏழைகளுக்காக வழக்கு நடத்த ஒப்புக்கொள்வதாகவும், இந்த ஒரு ஆண்டில் வழக்குரைஞர் கட்டணம் எதுவும் வசூலிக்கமாட்டேன் என்றும் கூறி இருந்தார்.

அவர் செய்த கடும் குற்றத்திற்கு சிறை தண்டனைதான் சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தனது கருத்தை பதிவு செய்தாலும், அதிக தண்டனை  வழங்கவில்லை. 

அவருக்கு 69 வயது ஆவதாகவும், அவர் 2007 முதல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருவதாகவும், அவரது மனைவி உடல் நலம் இல்லாமல் இருப்பதாகவும், 21 லட்சம் பார் கவுன்சிலுக்கு நன்கொடை அளிப்பதையும், ஓர் ஆண்டு இலவச சட்ட உதவி மைய வழக்குகளை நடத்த ஒப்புக்கொள்வதையும் அதிக தண்டனை வழங்காததற்கு காரணங்களாக அடுக்கியது. 

இறுதியில், 21-11-2012ல் உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து தீர்ப்பு கூறியது.

R.K. ஆனந்திற்கு 21 லட்சம் நன்கொடை என்பது ஒரு பொருட்டே அல்ல. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் அவர் பின்புலம் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். அவர் 21 கோடி கொடுத்தால் சிறை தண்டனையில் இருந்துவிடுபடலாம் என்றால் அதையும் கொடுக்கும் வசதி படைத்தவர். ஆனால், சாதாரண வழக்குரைஞர்கள் என்ன செய்வது? இப்படி ஒரு பெரும்தொகையை நன்கொடையாக கொடுத்து தண்டனையில் இருந்து சுலபமாக தப்பிக்க இயலுமா?

விசாரணைக்குப்பின் தண்டனை என்பதற்கு மாறாக, விசாரணையை நிலுவையில் வைத்தே பல மாதங்கள் தமிழக வழக்குரைஞர்களை தொழிலில் இருந்து நீக்கம் செய்யலாமா? 
6 மாதங்களுக்கும் மேலாக சுமார் 9 மாதங்கள் வரையில் கூட வழக்குரைஞர் தொழிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட தமிழக வழக்குரைஞர்கள் செய்த தவறுகள் R.K. ஆனந்த் செய்த தவறுகளைவிட கூடுதலானதா? 

R.K. ஆனந்த் வழக்கில், டில்லி உயர்நீதிமன்றம் வழக்குரைஞர் சட்டம் பிரிவு 34ன் கீழ் விதி ஏதும் செய்யவில்லை. எனவே, R.K. ஆனந்த் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையாக சஸ்பென்ஷன் அல்லது வழக்குரைஞர் பதிவில் இருந்து  நீக்கம்  என்ற தண்டனையை அளிக்க முடியாது என்று வாதிடப்பட்டது. அந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் உதவி செய்ய நியமித்த இரு மூத்த வழக்குரைஞர்களும் ஆதரித்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னர் வழங்கிய தீர்ப்பில் [Supreme Court Bar Asssociation vs Union of India - 1998 (2) SCR 795] சஸ்பென்ஷன் மற்றும் பதிவில் இருந்து நீக்கம் என்பதை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையாக அளிக்க முடியாது என்று கூறி இருப்பதை தீர்ப்பின் பத்தி 138ல் கீழ் கண்டவாறு பதிவு செய்துள்ளது.              
"Suspending the license to practice of any professional like a lawyer, doctor, chartered accountant etc. when such a professional is found guilty of committing contempt of court, for any specified period, is not recognised or accepted punishment which a court of record either under the common law or under the statutory law can impose on a contemnor in addition to any of the recognised punishments."
                      
இந்த சூழலில், உச்ச நீதிமன்றம் அனைத்து  உயர் நீதிமன்றங்களையும் வழக்குரைஞர் சட்டம் பிரிவு 34ன் கீழ் விதிகளை உண்டாக்கச் சொன்னது.

சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வழக்குரைஞர் சட்டம் பிரிவு 34ன் கீழ் விதிகளை வகுத்துள்ளது. அதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்படும் நபரை, அவர் நீதிமன்றத்தில் வழக்காடுவதில் இருந்து விலக்கி வைக்க (debar) வகை செய்துள்ளது.

எனவே இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய புதிய விதிகள் தேவையற்றது. இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை உண்டாக்குவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் R.K. ஆனந்த் வழக்கைத்தான் சுட்டிக்காட்டுகிறது. ஏற்கெனவே உரிய விதிகள் இருப்பதால் இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை திரும்பபெறவேண்டும் என்பது என் கருத்து.
                     
பார்கவுன்சிலும் ஒழுங்கு நடவடிக்கையை ஒட்டி நடை பெரும் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே சஸ்பென்ஷனோ அல்லது பதிவு நீக்கமோ செய்யலாமே ஒழிய, விசாரணை நிலுவையில் இருக்கும்பொழுது செய்ய முடியாது. இதை இந்திய பார் கவுன்சிலின் தலைவரான திரு மன்னன் குமார் மிஸ்ரா அவர்களே பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறை சம்மந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆணை உறுதி உரையில் குறிப்பிட்டுள்ளார். எனவேதான் நான் ஓய்வு பெற்றபொழுது ஆற்றிய உரையில், பார்கவுன்சில் சஸ்பென்ஷனை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றேன். 

மேலும், R.K. ஆனந்த் வழக்கில், உச்ச நீதிமன்றம், நிரூபிக்கப்பட்ட குற்றசாட்டின் அடிப்படையிலேயே, பார்கவுன்சில் சஸ்பென்ஷன் செய்ய இயலும் என்றது. இத்தீர்ப்பின் பத்தி 138ல் கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

"The suspension of advocate from practice and his removal from the state roll of advocates are both punishments specifically provided for under the Advocates Act, 1961, for proven professional misconduct of an advocate........... This court therefore in its jurisdiction under Article 129 can not take over the jurisdiction of the Disciplinary Committee of the Bar Council of the State or the Bar Council of India to punish an advocate by suspending his license, which punishment can only be imposed after finding of professional misconduct is recorded in the manner prescribed under the Advocates Act and the Rules framed thereunder."
               
மேலும் பத்தி 136ல், நீதிமன்றத்திற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் திரு நாகேஸ்வர ராவ் (இப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி ) அவர்களின் வாதத்தை உச்ச நீதிமன்றம் கீழ் கண்டவாறு பதிவு செய்துள்ளது.

"Appearance in Court is the dominant, if not the sole content of a lawyer's practice. Since, the authority to grant license to a law graduate to practice as an advocate vests exclusively in a State Bar Council, the power to revoke the license or to suspend it for a specified term also vests in the same body. Further, the revocation or suspension of license of an advocate has not only civil but also penal consequences; hence the relevant statutory provisions in regard to imposition of punishment must be strictly followed. Punishment by way of suspension of the license of an advocate can only be imposed by the Bar Council, the competent statutory body, after the charge is established against the advocate concerned...."

எனவே, பார் கவுன்சிலுக்கு விசாரணையை நிலுவையில் வைத்து சஸ்பென்ஷன் செய்யும் அதிகாரம் இல்லை.

பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வன்முறை செய்த வழக்கறிஞர்களை விசாரணை இல்லாமல் சஸ்பென்ஷன் செய்ய மாட்டேன் என்று கூறும் திரு மன்னன் குமார் மிஸ்ரா, தமிழக வழக்குரைஞர்கள் மேல் மட்டும் சீறி பாய்வதேன்? சமீபத்தில், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், கல்கத்தாவிலும் வழக்குரைஞர்கள் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்திய பொழுது, அவர் இன்றுவரை மவுனமாக இருப்பது ஏன்? தமிழகத்தில் மட்டும் வேறுபட்ட நிலைப்பாட்டை அவர் கொள்வதற்கு காரணம் என்ன? 
      
கடுமையான குற்றம் இழைத்த R.K. ஆனந்திற்கு சிறை தண்டனை இல்லை. அவர் மிகவும் கண்டிக்க தக்க வகையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இழைத்தார். ஆனால் தமிழகத்தில் வழக்குரைஞர்கள் நிலை என்ன? 

உயர் நீதிமன்றத்தின் முதலாம் அமர்வு முன், தமிழில் வாதாட வகை செய்ய வேண்டும் என்று அமைதியான முறையில் பதாகையை தூக்கிப்பிடித்தாலும், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவது தான். ஆனால் அந்த அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏதும் தொடரவில்லை. ஆனால் அவர்கள் சுமார் ஒரு மாதம் சிறையில் இருந்தனர். அவர்களை சுமார் 7 மாதம் சஸ்பென்ஷனில் வைத்தது பார் கவுன்சில்; அதையே தண்டனையாகவும் அளித்தது. 

அதேபோல, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடந்த நீதிமன்றத்தில் விசாரணையை பார்க்க செல்ல அனுமதிக்க வேண்டும் என்றதற்காக, பல வழக்குரைஞர்களை பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்தது. அவர்களில் சிலரின் சஸ்பெஷன் 9 மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் தொடர்கிறது. 

CISF சம்மந்தப்பட்ட வழக்கிலும், பல வழக்குரைஞர்கள் பார் கவுன்சிலால் விசாரணை இன்றி பல மாதங்கள் சஸ்பென்ஷனில் வைக்கப்பட்டனர். 

இந்நிலையில் இந்த இறுதி பகுதியை வெளியிடும் நேரத்தில், இன்று 105 தமிழக வழக்குரைஞர் தலைவர்களை இந்திய பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்துள்ளதாக Times of India செய்தி தெரிவிக்கிறது. இதை திரு மன்னன் குமார் மிஸ்ரா உறுதி செய்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது. 

திரு மன்னன் குமார் மிஸ்ரா தமிழ்நாட்டு வழக்குரைஞர்களை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏனோ? இதற்க்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள் என்பதை தமிழக வழக்குரைஞர்கள் அறிவார்கள். இவர்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான பாடத்தையும் கற்பிப்பார்கள்.

உயர் நீதிமன்றம் புதிய விதிகளை உடனே திரும்ப பெறவேண்டும்; பார் கவுன்சில் அனைத்து சஸ்பென்ஷன்களையும் உடனே ரத்து செய்ய வேண்டும். இதுவே நிரந்தர அமைதிக்கான தீர்வாக இருக்கும். 



Reply all
Reply to author
Forward
0 new messages