அனைவருக்கும் வணக்கம்,
செய்யறிவின் கட்டமைப்பு வலையரங்குத் தொடரின் ஐந்தாவது அமர்வு
Embeddings & Language Models என்ற தலைப்பில் அமையும்.
இந்த அமர்வில் கணினியில் உரை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது என்பதை, அடிப்படை நுட்பங்களான n-grams மற்றும் bag-of-words முறைகளிலிருந்து நவீன word embeddings வரை ஆராய்வோம். Word embeddings ஒரு சொல்லின் பல பண்புகளையும்,
பொருட்களையும், அந்தச் சொல்லின் பிற சொற்களுடனான தொடர்புகளையும் எவ்வாறு உட்பொதிவு செய்கின்றன என்பதைப் பார்ப்போம். மேலும், RNNs, LSTMs மற்றும் Transformer போன்ற நவீன நரம்பியல் வலைப்பிணையக் கட்டமைப்புகள் மொழிபெயர்ப்பு போன்ற சிக்கலான இயற்கை மொழி செயலாக்கப் பணிகளை
எவ்வாறு மேற்கொள்கின்றன, பெரிய மொழி மாதிரிகளை உருவாக்க எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும் காண்போம்.
நிகழ்வின் இறுதியில், மாணவர்களுக்கான அலுவல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிலரங்குத் தொடர் தொடர்பான மிகச் சுருக்கமான
இந்த survey ஐ பூர்த்தி செய்து, இவற்றை மேலும் செழுமையாக்க உதவுங்கள்.
தொடர்புடைய வளங்கள்:
நன்றி,
Vanakkam All,
Join us for the fifth session in the webinar series The Architecture of Artificial Intelligence, where we’ll take an in-depth look at
Embeddings and Language Models.
This session covers the evolution of text representation in computing, from foundational techniques such as n-grams and bag-of-words to advanced word embeddings. We will examine how word embeddings encode a word's meanings, properties, and its relationships
to other words. Further, the webinar will outline how neural network architectures, including RNNs, LSTMs, and modern transformer mechanisms, handle complex natural language use cases and power modern language models.
Thank you.