இன்றைக்கு 'குடி'மக்கள் மது அருந்தினால்தான் அரசே செயல்படும் நிலை... டார்கட் வைத்து டாஸ்மாக்கில் வியாபார சாதனை செய்கிறார்கள்...
இது ஒருபுறம் இருக்க ஒரு ஆஸ்பத்திரியோ பள்ளியோ இல்லாத ஊரில் கூட டாஸ்மாக் மதுக்கடை இருக்கும் அவலம் உள்ளது... இதில் பெரிதும் அவதிப்படுவது அடித்தட்டு மக்கள் தான்...
இந்தியாவிலுள்ள ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 1992ஆம் ஆண்டு பெண்கள்
தலைமையில் நடத்தப்பட்ட மது ஒழிப்பு இயக்கத்திற்குப்பின் ஆந்திராவில்
அனைத்து விதமான மது விற்பனையும், மது அருந்துதலும் மிகப்பெரிய குற்றமாகக்
கருதப்படுகிறது. முன்னதாக ஆந்திர அரசாங்கம் வருணவாகினி (Flood of liquor)
என்ற திட்டத்தை மேற்கொண்டிருந்தது. இத்திட்டத்தினால் அராக் (arrack)
எனப்படும் பட்டைச் சாராயம் கிராமப்புறங்களில் அதிகமாக விற்பனை
செய்யப்பட்டு இருந்தது. வருணவாகினி திட்டத்தால் ஆந்திர அரசாங்கத்திற்கு
உற்பத்தி வரியிலிருந்து கிடைத்த வருமானம், ஆந்திர மாநிலத்தின் வருடாந்திர
(1991/92) வரவு செலவுப் பட்டியலின் பத்து சதவிகிதமாகும். அரசியல்
கட்சிகளுக்கும் மது தொழிற்சாலைகளிலிருந்து இலைமறை காய்மறையாக பணம்
பட்டுவாடா செய்யப்பட்டது. மது விலக்கினை ஆதரிக்கும் அரசாங்கத்தின்
புத்திசாலித்தனமும் செயல்பாடுகளும் கேள்விக்குறியாக இருக்கும்
சமயத்தில்,பெண்களின் போராட்டங்களின் அரசியல் தாக்கம் மிகவும்
குறைவே.
பட்டைச் சாராயத்தைத் தம் கிராமங்களிலிருந்து ஒழிக்கப் பெண்கள் தனித்தனிக்
குழுக்களாகச் செயல்பட ஆரம்பித்தபோது ஆந்திராவில் மது ஒழிப்புப் போராட்டம்
துவங்கியது. பின் ஆந்திரப் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினர்.
ஏனெனில். அரசாங்கத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டு, அரசு சாரா
தொண்டுநிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்த எழுத்தறிவுப் பயிற்சியில்
பயிற்றுவிப்பவர்கள் மது அருந்தும் கணவர்களால் பெண்கள் படும் துன்பத்தைக்
கதைகளாக்கி மக்களிடம் கொண்டு சென்றனர். மதுவிற்கு அப்பெண்கள் அதிக
எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் குடிநீருக்காகப் பல மைல் தூரம்
நடக்கவேண்டிய தொலைதூர கிராமங்களில் கூட மலிவான சாராயம் புத்தம் புதிய
பாக்கெட்டுகளில் மிகவும் சுலபமாகக் கிடைப்பது பெண்களிடையே மிகுந்த
எதிர்ப்பினை உருவாக்கியது. ஆண்கள் தாம் வேலை செய்து ஈட்டிய கூலி
அனைத்தையும், மது அருந்துவதற்காகச் செலவு செய்வதும், மது அருந்திவிட்டு
மனைவியரைக் கொடுமைப்படுத்துவதும், சிறுமைப்படுத்துவதும் பெண்களை மிகுந்த
சினத்துக்குள்ளாக்கியது. குடிப்பவர்களை விட மது தயாரிப்பவர்களையும்,
விற்பவர்களையும் நோக்கியே அப்பெண்களது போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பல
ஆண்களின் அமைதியான ஆதரவு அப்பெண்களுக்குக் கிடைத்தது. அவரவர்
கிராமங்களுக்குள்ளேயே பெண்கள் தமது எதிர்ப்பினை, போராட்டத்தை நடத்திக்
கொண்ட போதும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் ஆதரவு அவர்களுக்குப்
பெருமளவு கிடைத்தது.
தற்போது, இப்போராட்டம், கிராமப்புற ஏழைப் பெண்களிடம் மட்டுமின்றி,
நடுத்தர, நகரப் பெண்களிடமும், காந்திய எண்ணங்களுக்கு ஆதரவளிக்கும்
முழுமையான மது விலக்கினை விரும்பும் ஆண்களிடமும் சென்றடைந்துள்ளது.
மாநிலம் தழுவிய மது ஒழிப்பின் விளைவுகளை கிராமப்புறப் பெண்களால்
எதிர்க்கொள்ள முடியுமா என்ற வினா எழுந்தாலும், அரசியல் சக்தியின் ஆதார
மூலத்தை இப்பெண்கள் அசைத்துவிட்டார்கள் என்பதில் ஐயமில்லை.
மது அருந்துவதை 21 நாட்களில் நிறுத்தலாம் |
இன்றைக்கு 'குடி'மக்கள் மது அருந்தினால்தான் அரசே செயல்படும் நிலை... டார்கட் வைத்து டாஸ்மாக்கில் வியாபார சாதனை செய்கிறார்கள்...