//சமூக பிரச்னைகளை குறித்து புரிதல் இருக்கணும்.. கோபம் இருக்கணும்.. அப்போதுமட்டுமே உறுதி வரும்.. ஊழல், லஞ்சம், சாதீ, மதவெறி, அடிமைத்தனம், இளக்காரம், விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கை , பெண்ணடிமைத்தனம், குடி , ஊடகம் , அடிப்படை வசதி இல்லாமை , ஏற்றத்தாழ்வு, மனிதத்தனமையற்ற செயல் போன்ற எதை குறித்தவது வருந்தியிருக்கணும்.., பாதிக்கப்பட்டிருக்கணும்..
//சமூக பிரச்னைகளை குறித்து புரிதல் இருக்கணும்.. கோபம் இருக்கணும்.. அப்போதுமட்டுமே உறுதி வரும்.. ஊழல், லஞ்சம், சாதீ, மதவெறி, அடிமைத்தனம், இளக்காரம், விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கை , பெண்ணடிமைத்தனம், குடி , ஊடகம் , அடிப்படை வசதி இல்லாமை , ஏற்றத்தாழ்வு, மனிதத்தனமையற்ற செயல் போன்ற எதை குறித்தவது வருந்தியிருக்கணும்.., பாதிக்கப்பட்டிருக்கணும்..
மேலே சொன்ன இரண்டு விசயங்களை தவிர கட்டுரை மிக அருமையாக உள்ளது... இதை உடனடியாக பதியலாம்..
உண்மைதான் நீளமாக இருந்தால் சலிப்பு வரும்...ரத்ன சுருக்கமாக இருந்தால் நல்லதுதான்.....
2011/5/7 Malarbala <bala.sil...@gmail.com>உண்மைதான் நீளமாக இருந்தால் சலிப்பு வரும்...ரத்ன சுருக்கமாக இருந்தால் நல்லதுதான்.....
மேலும் நம்மைப்போன்ற நோக்கமுடைய நட்புகள் இருந்தால் முதலில் குழுமத்தில் அவரைப்பற்றிய தகவல் பகிர்ந்துவிட்டு இணைக்கலாமா.?..
நன்றி மலர்பாலா..
நிறைய நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் இருப்பது ஒரு பலம்.. மற்றொன்று ஒரு சிலருக்கு அலுவல் வேலைப்பழு இருக்கும்போது மற்ற சிலர் பங்களிக்க இயலும்..
( இன்று சின்னவருக்கு பிறந்த நாள் தினம் வீட்டில் சிம்பிளா அவன் நட்புகளோடு கொண்டாடுவதால் கொஞ்சம் சமையல் வேலை இருக்கு,... அப்புறம் வருகிறேன்.. அல்லது நாளை. நன்றி )
எழுச்சியுடன் .,
--
சாந்தி
http://punnagaithesam.blogspot.com/ =============================
"If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader." ~ John Quincy Adams
2011/5/7 jmms <jmms...@gmail.com>
2011/5/7 Malarbala <bala.sil...@gmail.com>உண்மைதான் நீளமாக இருந்தால் சலிப்பு வரும்...ரத்ன சுருக்கமாக இருந்தால் நல்லதுதான்.....
மேலும் நம்மைப்போன்ற நோக்கமுடைய நட்புகள் இருந்தால் முதலில் குழுமத்தில் அவரைப்பற்றிய தகவல் பகிர்ந்துவிட்டு இணைக்கலாமா.?..
நன்றி மலர்பாலா..அறிமுகம் நிச்சயம் தேவைஉங்களைத்தவிற மற்ற நண்பர்கள் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாதுநல்லதுசின்னவருக்கு வாழ்த்து சொல்லிடுங்க.....
நட்புகளே ,
மேலே கூறப்பட்டது அனைத்தும் நட்புகளின் ஆர்வத்தையும் முயற்சியையும் காட்டி மகிழ்ச்சியளிக்கிறது .
முதலில் சாந்தி அக்கா சொல்லும் , கொஞ்சம் நகசிவையாக இருக்கலாமா என்ற கருத்துக்கு வரு கின்றேன் ,
எனக்கு வழிகாட்டியாக நான் எடுத்துகொள்ளும் முதல் மனிதர் எனது இயற்பியல் ஆசிரியர் , காரணம் ஒன்று அவர் நகைச்சுவையாக பேசுவார் , மற்றொன்று நிறைய ஆச்சர்ய படவைக்கும் தகவல்கள் அவர் பேச்சில் இருக்கும் .
இதில் மற்ற நம்பர்கள் கூறுவது போல் நகைச்சுவையாய் சேர்ப்பது நாம் சொல்லவரும் விஷயத்தின் வலிமையை குறைக்கும் ஆனால் அதை சேர்க்காவிட்டாலும் , படிப்பவர் ஆச்சர்ய படவைக்கும் தகவல்களை , அதுவும் தெரிந்த விஷயத்தை பற்றி தெரியாத தகவல்கள் ,இணைத்தால் இன்னும் ஈர்ப்பை ஏற்படுத்தும் படிப்பதற்கு , அதை நாம் எடுதுக்கொல்லாமா ? முடிந்தால் முதல் பதிவில் , அல்லது இனி வரும் பதிவுகளில் இணைக்கலாமா ? .
நட்புடன்
சௌந்தர்
சாந்தி அக்கா அனுப்பிய முதல் பதிவுக் கட்டுரையின் டிராப்ட் வெர்சன் படித்தேன்... அருமையாக இருந்தது... நட்புகள் நினைத்ததுபோல் சிறிய மாற்றம் இன்னும் மெருகூட்டம் என எண்ணுகிறேன்...
முதலில் சிறிதாக ஆரம்பித்து இறுதியில் ஒரு எழுச்சியோடு, வாசிக்கும் நண்பர்கள் "நானும் இதே கருத்தில் தான் உள்ளேன்.. இதற்காகத்தான் காத்திருக்கிறேன்... உடனே சேருகிறேன்... கை கோர்ப்போம்... மாற்றம் காண்போம்" என என்று சொல்லும் அளவுக்கு முடிக்க வேண்டும் என நினைக்கிறேன்... அதற்கு, பிரச்சினைகளை இன்னும் அதிகமாக அல்லது விளக்கமாக போடலாம்... நட்புகள் என்ன கருதுகிறீர்கள்?
சாந்தி அக்கா குழந்தைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிரவும்.
நானும் ஏற்கனவே எண்ணினேன், நம் நட்புகள் பற்றி அறிந்து கொள்வது சிறந்த தொடக்கமாக இருக்கும்.என்னைப் பற்றி:என் பிளாக் முகவரி: snabakvinod.blogspot.com.
நான் ஒரு கணிணி பொறியாளர், வேலை மதுரை ஹனிவெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஊர் நெல்லை மாவட்டம், பள்ளிப் படிப்பு சொந்த ஊரில், பொறியியல் படிப்பு சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரியில்...
சமுதாயப் பார்வை மற்றும் ஆன்மீக சிந்தனையுடையவன், இளைஞர்கள் அனைவரையும் இணைத்து சமுதாய சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும் என தொலைநோக்கு எண்ணத்தோடு இத்தளத்தில் எழுச்சியோடு ஈடுபட்டுள்ளேன்...
வினோத் சொல்வதுபோல் அந்த கருத்துக்கள் இன்னும் வலிமை சேர்க்கும் ,போடலாம் .
"சாந்தி அக்கா குழந்தைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ."
என்னைப் பற்றி:நான் பிறந்து வளர்ந்தது கோவையில் . கோவையில் மும்பையை தலைமையாக கொண்ட ஒரு தனியார் பங்கு வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றுகின்றேன் .
நம்மை சுற்றி மட்டும் இன்றி உலகத்தில் நாம் கேள்வி படும் , பார்க்கும் அனைத்து பொது தவறுகள் , மற்றும் தனிமனித வாழ்கையில் நடக்கும் கசப்பான செயல்கள் , இப்படி அனைத்து தவறுகளுக்கும் , சுயஒழுக்கம் தவறுவதே கரணம் என் நினைக்கிறன் , இதை களைய ஒற்றுமையான விழிபுணர்வும் மக்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சிக்கும் ஒருவன் .நல்ல மகிழ்ச்சியான மற்றும் அமைதியான உலகமும் , வாழ்கையும் அனைவருக்கும் கிடைக்க முயற்சிப்பவன் .
என்னைப் பற்றி:நான் பிறந்து வளர்ந்தது நத்தம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில்..கல்லூரி முடித்துவிட்டு சென்னையில் சிலகாலம் பின்பு ஆந்திராவின் விசாகபட்டினத்தில் மற்றும் குஜராத்தின் ஜாம்நகரில் சிலகாலம் பணியாற்றினேன்.தற்போது ஒரு இத்தாலி நிறுவனத்தில் ஷார்ஜா கிளையில் பொறியாளராக பணியாற்றுகிறேன்...எங்கு அடக்குமுறை நடந்தாலும் எதிர்ப்பவன்...இயற்கையை அதிகம் நேசிப்பவன்......சாதி, மதம், இனம், மொழி மற்றும் நாடு கடந்து மனிதனை நேசிப்பவன்...
என்னைப் பற்றி:
என்னைப் பற்றி,
என்னுடைய முழுப்பெயர்: பால் அருள் ஸ்டீபன்.
செந்த ஊர்: கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி.
படித்தது டிப்ளமோ மெக்கானிக்கல், இப்போது பி.சி.ஏ படித்துக்கொண்டிருக்கிறேன்... (எப்ப முடியுனு கேட்க கூடாது.. :))))...)
சில வருடங்கள் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்ச்சாலையில் வேலை(சுமார் நான்கு வருடம்)
அடுத்தது SAP மெட்டிரியல் சைடு தாவினேன்.. இந்த பீல்டில் ஒரு இடத்தில் நிலையாக இருக்க முடியாது, பல இடங்களுக்கு சுற்ற வேண்டும்( நிறைய இடங்கள் சுற்றியாச்சி... கோவா, மத்திய பிரதேஷ், குஜராத், ஹைதிராபாத், பெங்களூர், சவுதி அரேபியா.... இப்போது மஸ்கட்)
இவ்வாறு ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருப்பதால் தான் நாடோடி என்று பெயர் வைத்து பிளாக்கில் எழுத தொடங்கினேன்..
சிறு வயதிலேயே மேடைகளில் பேசும் திறமை எனக்கு உண்டு, பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.. பல விவாதங்களிலும் கலந்தகொண்ட அனுபவம் உண்டு... வேலையில் சேர்ந்த பின்பு இது முற்றிலும் தடைப்பட்டது... :)
எந்தவொரு விசயத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புபவன்.. (இதனால் பலரின் வெறுப்புக்களை சம்பாதித்தவன்)..
உங்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பதில் எனக்கு ரெம்ப மகிழ்ச்சி...
என்னுடைய வலைத்தளத்தின் முகவரி: http://nadodiyinparvaiyil.blogspot.com/
ஓரளவு நம் அனைவரையும் பற்றி அறிந்துகொண்டோம்.. நாம் எல்லாருமே கஷ்டப்பட்டே வாழ்க்கையில் முன்னேறியவர்கள்..
முதல் கட்டுரை போடுமுன் சில தகவல்களை லிங்கோடு பதியலாம் . ஆக நம் எழுச்சியை பார்க்க வருபவர்கள் கண்ணில் நல்ல பல விஷயங்கள் படணும்..
உதாரணமாக திரு.சகாயம் பற்றிய லிங். மதுரை கிருஷ்ணன் , திருச்சி செந்தில்குமார் , வெளிச்சம் ஷெரின் இவர்களை பற்றி
இது ஒரு ஊக்கி..
அடுத்ததாக நாம் 6 பேரும் எழுச்சியின் தூண்கள்.. வெளி உலகிற்கு ஒருபோதும் தெரியாது..
யார் கேட்டாலும் நாம் முதல் வெற்றி களப்பணியில் நடத்தும்வரை சொல்லக்கூடாது.. ஒரு வைராக்கியம் போல.. ( அடிச்சு கூட கேட்பாங்க .. அப்ப கூட சொல்லாதீங்க..:) )
யார் இந்த எழுச்சி என்பது ரகசியமாகவே இருக்கணும்.. அதுவே மிகப்பெரிய பலம்..
அடுத்து எழுச்சிக்கான ஒரு லோகோ .. உழைப்பாளிகள் சிலை மாதிரி , உலகை மாற்றுவது போல .. ஏதாகிலும்.. ஆனால் ஊக்கம் தருவதாய்..அதுக்கு தனி இழை ஆரம்பித்து லோகோக்களை போட்டு தேர்ந்தெடுப்போம்..
எனக்கு தோணும் சிந்தனையெல்லாம் இங்கே சொல்லிக்கொண்டிருக்கேன்.. தேவையானதை மட்டும் எடுத்துக்கலாம்..
மேன்மேலும் சேர விரும்பும் நபர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் , நம்பிக்கையானவர்கள் என்றால் மட்டுமே எழுச்சி குழுமத்தில் இணைப்போம்.. இல்லை எழுச்சி வலைப்பூவில் தொடரட்டும்..
சில மாதத்துக்கப்புரம் , பிரிவுகள் வாரியாக கருத்தாடல் செய்யும்படி போரமில் ஏற்படுத்தலாம்.. அதாவது அரசியல் , சாதி, பெண், மதம் என..( உதாரணம் - http://www.thaivisa.com/forum/ . ஆனால் இது வலைப்பூவில் செய்ய முடியாது டொமைன் வாங்கணும் னு நினைக்கிறேன்.. யோசிப்போம்.அவசரமில்லை..)
முக்கியமா , இது மதசார்பற்ற குழுமம்.. மதம் வந்தாலே பல பிரச்னை , பிரிவினை வந்துவிடும்..ஆக இதை கொஞ்சமாதம் ஒத்திப்போடலாம்..
இரண்டாவது கட்டுரை மலர்பாலா சொன்னதுபோல மது ஒழிப்பு பற்றி போடலாம்..( தகவல் சேகரிக்கிறேன்)
கோபி சொன்ன உணவு உதவி பற்றியதுக்கும் தனி இழை ஆரம்பித்து கருத்துகள் பகிர்வோம்..
சாந்தி
http://punnagaithesam.blogspot.com/ =============================
"If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader." ~ John Quincy Adams
எந்தவொரு விசயத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புபவன்.. (இதனால் பலரின் வெறுப்புக்களை சம்பாதித்தவன்)..
நட்புடன்,
ஸ்டீபன்
சிரிப்பா அடக்க முடியல பக்கத்து அறையில் இருந்த சக ஊழியர்கள் என் அறையை நோக்கி விரைந்தார்கள்...பாஸ் இது உங்க மடலா? நான் விநோத்னு நெனச்சுட்டேன்.....
நட்புகளே ,
அருமையான கட்டுரை , அக்காவிற்கு பாராடுதல்கள் .
இதில் நீக்குவதர்ற்கு ஒன்றும் இல்லை ,
இத்துடன் என் மனதில் தோன்றிய ஒரே ஒரு வரி சேர்த்துக்கொள்ளலாமா ?
அது
" நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழும்போது நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும் "
தத்துவம் மாதிரி தான் இருக்கு , ஆனால் இதை படிக்கும் போது நாமும் எதாவது செய்ய வேண்டும் என்றம் தோன்றும் என்று நினைக்கிறன் ,
நன்றி
சௌந்தர்
2011/5/6 jmms <jmms...@gmail.com>
நாம் என்ன செய்யலாம்.?
இனிய இணைய நட்புகளுக்கு வணக்கம்..
மனிதனாக வாழ்பவர் அனைவருக்குமே தான் வாழ பிறரும் வாழணும் என்ற அடிப்படை எண்ணம் நிச்சயமாக இருக்கும்..
முதலில் தான் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை குறித்து பொருள் தேடுதலை ஆரம்பிக்கிறான்..
பொருள் தேடிவிட்டால் மட்டும் போதுமா?. நிம்மதி கிடைக்குமா?..இது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது..
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள், சூழல்கள் , அதற்கென தன்னை தயார்படுத்திக்கொள்கிறான்.
அதே போல் எந்த நாட்டுக்கு சென்றாலும் தன் வேறான தாய் நாட்டைபற்றி கவலை கொள்ளாமல் இல்லை..
தன்னை சுற்றியுள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக இருப்பதே நமக்கும் நல்லது என்ற ஒரு சுயநல எண்ணம் கூட இருக்கலாம்..
இருக்கட்டும்.. தவறில்லை.. அப்படியாவது என்னென்ன பிரச்னையில் தன் நாடு சிக்கித்தவிக்குது , எப்படியெல்லாம் சீர்படுத்தலாம் என எண்ண
ஆரம்பிக்கிறான்..தன்னால் முடிந்த பங்களிப்பை செய்ய துடிக்கிறான்..இத்தகைய எண்ணம் வராதவர்களை விரல் விட்டு எண்ணிடலாம்..
என்ன வித்யாசம் என்றால் ஒரு சிலருக்கு அவர்கள் வாழும் சூழலால் வெகு சீக்கிரம் சமூக ஆர்வம் வந்துவிடும். சிலருக்கு அனுபவத்தால் ..
பலருக்கு வாழ்க்கையில் ஒரு திருப்தி வந்ததும் நாமும் நம் சமூகத்துக்கு ஏதாகிலும் செய்யணும் , அதுவே நிறைவு என்ற போதில் வரலாம்..
ஆனால் வரும்..
எகிப்தில் மிகப்பெரிய புரட்சி சமீபத்தில் வந்தமைக்கு இணையம் ஒரு முக்கிய காரணி என்பது மகிழ்வான செய்தி..
ஆக நமக்கு கிடைத்துள்ள இந்த இணைய வசதி மூலம் நேர்மறையாக நாம் எப்படி நம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரலாம்.?..
ஏற்கனவே பல பதிவர்கள் சமூக பார்வையோடு மிக நல்ல பதிவுகளை , பல தகவல்கள் சேகரித்து நமக்கு தருகிறார்கள்தான்.
அவர்களுக்கு எம் பாராட்டுகள்..
இதே போல இன்னும் அதிகமான கட்டுரைகளௌம் கருத்துகள், விவாதங்கள் வருமானால் , அவை எல்லா மக்களையும் சென்றடையுமானால் நிச்சயம் நம்மால் , நாம் நினைக்கும் மாற்றம் கொண்டுவரமுடியும்..
சமூகத்தில் முக்கியமா பயமுறுத்தும் பிரச்னைகள் எவை எவை என பட்டியலிடுவோம்.. அவை தீர்ப்பதற்கான வழிமுறைகள் , வேர்களை களைவது எப்படி , என அலசுவோம்..
நன்றாக தெரியும் , அனைவருக்கும் இதில் செலவழிக்க நேரம் இருப்பதில்லை..
இணையத்துக்கு வருவதே மனம் லேசாக இருக்கத்தான்.. இதில் ஏன் இந்த வேலையெல்லாம் என நினைப்பவர்கள் உண்டு.. தவறேயில்லை.. அவசரமுமில்லை.. கட்டாயமுமில்லை.. நிதானமாக உங்கள் விருப்பப்படி மகிழ்ச்சியாக இருந்துகொண்டு அலுத்து சலித்த பின் முடிந்தால் பங்கெடுத்தால் போதும்.. சமூக ஆரவ்ம் என்பது ஒருபோதும் கட்டாயப்படுத்தி வரவைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்..
சமூக பிரச்னைகளை குறித்து புரிதல் இருக்கணும்.. கோபம் இருக்கணும்.. அப்போதுமட்டுமே உறுதி வரும்.. ஊழல், லஞ்சம், சாதீ, மதவெறி, அடிமைத்தனம், இளக்காரம், விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கை , பெண்ணடிமைத்தனம், குடி , ஊடகம் , அடிப்படை வசதி இல்லாமை , ஏற்றத்தாழ்வு, மனிதத்தனமையற்ற செயல் போன்ற எதை குறித்தவது வருந்தியிருக்கணும்.., பாதிக்கப்பட்டிருக்கணும்..
அப்போது மட்டுமே எழுச்சியோடு மாற்றம் கொண்டு வர எண்ணவே முடியும்..
இங்கே இணைந்திருக்கும் நண்பர்கள் சிலர் , எல்லாவிதத்திலும் ஒத்த எண்ணமுடையவர்கள் அல்லர்.. பல்வேறு கருத்துகள் கொண்டவர்களே..
ஆனால் ஒரே ஒற்றுமை ஒரே கொள்கையாக சமூக மாற்றம் கொண்டு வர விரும்பும் எழுச்சியாளர்கள்..
நீங்களும் இதே எழுச்சியுடைவரென்றால் கை கொடுங்கள் இச்சமூக மாற்றத்துக்கு சிறு துளியாக..
எழுச்சியுடைவர் எவருக்கும் எவ்வித லாபமுமில்லை இங்கே.. சொல்லப்போனால் நஷ்டம் மட்டுமே.. ஆம். நேர விரயம், மன உளைச்சல் , தகவல் சேகரிக்கும் உழைப்பு , போன்றவை.. ஆனால் நிச்சயம் மன நிம்மதி இருக்கும்.. அது உறுதி..
இனி என்னென்ன செய்யலாம் என சக நட்புகளான உங்களிடம் எம் கோரிக்கையை வைக்கிறோம்..
கேட்க ஆவலுடன்..
நண்பர்களே...
அருமை!!!! முதல் பதிவை வெளியிடலாம்..
//ஊழல், லஞ்சம், சாதீ, மதவெறி, அடிமைத்தனம், இளக்காரம், விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கை, பெண்ணடிமைத்தனம், குடி, ஊடகம், அடிப்படை வசதி இல்லாமை, ஏற்றத்தாழ்வு, மனிதத்தனமையற்ற செயல் போன்ற எதை குறித்தாவது வருந்தியிருக்கணும்... பாதிக்கப்பட்டிருக்கணும்...