நண்பர்களே வணக்கம்,
தாமத உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...
வேலைப்பழு, வர இறுதிநாட்கள் சொந்த ஊர்ப்பயணம் காரணமாக சில தினங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை...
மூன்று சிந்தனைகள் தோன்றியது... செயல் வடிவம் கொடுக்க நண்பர்கள் உதவ வேண்டும்... உங்கள் கருத்துக்களை பகிருங்கள். இன்று வேலை முடிந்து சாயங்காலம் மீண்டும் தொடர்பு கொள்கிறேன்...
முதலில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். எழுச்சி குழுமத்தின், சமூக மாற்றத்திற்கான சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் முகவுரையை எழுதும் நேரத்தில் இருக்கிறோம்...
முதலாவது எழுச்சி பற்றிய முதல் பதிவை பிளாக்கில் பதிவது. (உழைப்பாளர் தினமாகிய நேற்றே போடலாம் நண்பர்கள் சிலர் ஆசைப்பட்டோம், முடியவில்லை, எனக்கு மனதில் இதைப்பற்றி சில எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன, நண்பர்களின் எண்ணங்களை பகிருங்கள், நானும் பகிர்கிறேன் இந்த இழையில்....)
இரண்டாவது எழுச்சி பற்றிய சிறு குறிப்பு தயாரிக்க வேண்டும் (ஏற்கனவே நாம் பேசிக்கொண்டதை நண்பர் சௌந்தர் தொகுத்துள்ளார், ஏற்கனவே எழுச்சி குழுமத்திற்கு பகிர்ந்துள்ளேன்)... பிளாக் ப்ரோபைல் பக்கத்தில் போட வேண்டும்...
மூன்றாவது... நண்பர்கள் அனைவரும் ஓரே நேரத்தில் தொடர்பு கொண்டு பேசுவது அல்லது சாட் செய்வது எப்படி? (குழு மெயில் இழையைத் தவிர....) நம்மைப்பற்றி எல்லோரும் அறிந்து வைத்துள்ளோமா? அது தேவையா? தேவை என்றால் அறிவது எப்படி? புதிதாக ஒரு நபர் இதே சிந்தனையோடு இருந்தால் எப்படி அவரை இணைப்பது...?
நன்றி,
எஸ்.வி.