Fwd: By - Perfect ECE Fwd: அரசு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் 748 விரிவுரையாளர், பேராசிரியர்கள் நியமனம் : போட்டித் தேர்வு ஜூலையில் அறிவிப்பு

0 views
Skip to first unread message

Krithika N

unread,
Jul 7, 2014, 10:01:26 AM7/7/14
to embeddeds...@googlegroups.com

அரசு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் 748 விரிவுரையாளர்,
பேராசிரியர்கள் நியமனம்: போட்டித் தேர்வு ஜூலையில் அறிவிப்பு


அரசு பாலிடெக்னிக், அரசு பொறி யியல் கல்லூரிகளில் விரைவில் 748
விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான
போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

தமிழகத்தில் 10 அரசு பொறி யியல் கல்லூரிகள், 40 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகள்
உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களும்,
பாலிடெக்னிக்கில் விரிவுரையா ளர் பணியிடங்களும் நேரடியாக நிரப்பப்படுகின்றன.
இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.

இந்த ஆண்டு அரசு பாலிடெக் னிக்கில் 605 விரிவுரையாளர்கள், அரசு பொறியியல்
கல்லூரிகளில் 143 உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள் ளது.
இதையடுத்து, இப்பணியி டங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்கள் பட்டியல்
ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 748 விரிவுரையாளர்கள்,
உதவி பேராசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படு வார்கள்.
இதற்கான அறிவிப்பை ஜூலையில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர்
தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித் தார்.

*பொறியியல் அல்லாத 220 பணியிடம்*

பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி
ஆங்கிலம், கணிதம், இயற்பி யல், வேதியியல் உள்ளிட்ட பொறியி யல் அல்லாத பாட
ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். அந்த வகையில், பொறியியல் அல்லாத
பாடப்பிரிவு இடங்கள் பாலி டெக்னிக்கில் 200-ம், பொறியியல் கல்லூரிகளில் 20-ம்
இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*கல்வித் தகுதி, வயது வரம்பு*

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியைப் பொருத்தவரையில், பொறியியல்
பாடப்பிரிவுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டம் வேண்டும். பொறி
யியல் அல்லாத பிரிவுகளுக்கு முதல் வகுப்பு முதுநிலை பட்டம் தேவை.

பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு பொறியியல் பிரிவுக்கு பி.இ.
அல்லது எம்.இ. படிப்பில் ஏதே னும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடப்பிரிவு களுக்கு சம்பந்தப்பட்ட
பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலை பட்டம் அவசியம்.



--
Thanks and Regards

R.Mathiazhagan
8973623967

--
You received this message because you are subscribed to the Google Groups "PerfectECE" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to perfectece+...@googlegroups.com.
To post to this group, send email to perfe...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/perfectece.
For more options, visit https://groups.google.com/d/optout.


Reply all
Reply to author
Forward
0 new messages