சுறா – சுடச்சுட விமர்சனம்
இளைய தளபதி விஜய் இன் 50ஆவது திரைப்படமான சுறா உத்தியோகபூர்வமாக இன்று வெளியாகின்றது. ஆனாலும் இலங்கையில் நேற்றிரவு சிறப்புக்காட்சிகள் ஹவுஸ்புள்ளாக திரையிடப்பட்டது.
முருகன் சினி ஆட்ஸ் தயாரிப்பில் சங்கிலி முருகன் தயாரித்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாநிதி மாறன் வாங்கியது எல்லோருக்கும் தெரிந்தவிடயம் தான். படத்தில் விஜய், தமன்னாவுடன் வடிவேல், புதுமுகம் தேவ் கில், ரியாஸ்கான், மதன்பாப், பருத்திவீரன் சுஜாதா, இளவரசு, ஸ்ரீமன் மற்றும் நட்புக்காக ராதாரவி உள்ளிட்ட நட்சத்திர கூட்டம் நடித்துள்ளது. ஓளிப்பதிவு ஏகாம்பரம், இசை மணிசர்மா, கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கியிருக்கின்றார் எஸ்.பி.ராஜ்குமார்.
படத்தோட கதை என்ன?
‘யாழ்நகர்’ என்ற கடற்கரையோரக் மீனவ கிராமம் (எதற்காக இந்தப் பேர்?) மிகவும் கஸ்டப்பட்ட மீனவக்குடும்பங்கள் வாழும் பகுதி. அம்மக்களில் ஒருவராக விஜய். கடலுக்கு சென்ற மீனவர்கள் காலனிலை மாற்றம் காரணமாக ஒருவாரம் கரை திரும்பவில்லை. கரையோர பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதலில், அவர்கள் அனைவரும் ஒரு தீவில் பாதுகாப்பாக ஒதுங்கியிருப்பது தெரியவர அவர்கள் காப்பாற்றி கரை சேர்க்கப்படுகின்றார்கள். ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்... ஹீரோ விஜய் கடலில் நீச்சலடித்து கரைசேர்கின்றார். அறிமுகப்பாடலுடன் படம் தொடங்குகின்றது.
கிராமத்து ஒவ்வொரு வீடுகளின் பிள்ளையாகவும் திகழும் விஜய், அவர்களின் கஸ்டங்களைப் போக்கிய பின்பே திருமணம் செய்வது என்ற ஐடியாவில் இருக்கின்றார். (அது ஒரு வசனத்தோட சரி). இந்தவேளை ஹீரோயின் அறிமுகம். தன் நாய்க்குட்டி இறந்ததற்காக கடலிலுள் தற்கொலை செய்யவரும் தமன்னாவை விஜய் காப்பாற்றுகின்றார். அதன் பின் விஜயின் நல்ல குணங்களை பார்த்து காதலிக்கின்றார். ஆடல், பாடல் கொண்டாட்டம் ஒருபுறம்.
அவ்வூர் மந்திரியான தேவ் கில், ஏழை மீனவர்களின் குடியிருப்பை வளைத்துப் போடப்பார்க்கின்றார். மக்கள் விஜய் பின்னால் எனத் தெரிந்ததும். விஜய் எதற்கும் உடன்படப்போவதில்லை என்ற காரணத்தினால் தீர்த்துக் கட்ட முடிவெடுக்கின்றார். அதன் பிறகு அடிதடி, வெட்டுக் கொத்து தான்... முடிவில் மந்திரியின் கதி என்ன? விஜயை எல்லாமாக நம்பியிருக்கும் மக்களின் கதியென்ன? தமன்னாவுடன் சேர்ந்தாரா என்பதே மீதிக்கதை. வெள்ளித்திரையில் ஆர்வமிருப்பவர்கள் மீதியைப் பாருங்கள்.
விஜய் ஒட்டுமொத்தமாக கதைத்தேர்வில் எங்கள் எல்லோரையும் ஏமாற்றி விட்டார். அந்த பெருமையெல்லாம் விஜய் கூட ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்டிருக்கு எஸ்.ஏ.சியையே சாரும். எஸ்.ஏ.சி சார், உங்க கிட்ட ஒரு கேள்வி... விஜயை பாதாளத்தில தள்ளி விழுத்துறெண்ட முடிவோட களமிறங்கியிருந்தால் நீங்க செய்யுறது சரி! இல்லாட்டி கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க பிளீஸ். அல்லது ஏதாவது குளம், குட்டையா விழுந்து சாவுங்க. ஓடியோ ரிலீஸ் மேடையில இயக்குனர், உங்க கிட்ட தான் கதை சொல்லி ஓகே பண்ணினவர் எண்டு பெருமையா சொன்னார். அந்த நாதாரி வேலை செய்தது நீங்க தானா?
எடுக்குறாங்களாம் கண்டறியாத படம், இதிலும் பார்க்க ஒரு பெட்டிக் கடை போட்டு புழைச்சுகுங்க. உங்களாள அவமானமெல்லாம் உங்களை நம்பியிருக்கிற எங்களைப் போல ரசிகர்களுக்கு தான். உங்க கல்லா நிறைஞ்சிடும். பாடு பட்டு பாக்கிறவன் கதி? 50ஆவது படமெண்டு கொஞ்சமாவது யோசிச்சனீங்களா? படத்தில சரக்கில்லாமல் என்ன முகஸ்துதிக்கு என்ன மண்ணாங்கட்டியை எழுதுறது.
நீங்க செய்து வைச்சிருக்கிற இந்த நாச வேலையால படத்தில இருக்கிற பிளஸ் எதையும் நான் எழுதப்போறதில்லை. படம் சன் டிவி ல ஹிட். நூறாவது நாள் போஸ்டரை இப்பவே அடிச்சு வைச்சிடுங்க. சன் டி.வியோட சேர்றவன் எல்லாரும் நாசம் தான். நித்தியானந்தாவையே ஓட்டினவங்களுக்கு இதை ஓட்டத் தெரியாதா? சரி! நாளைக்கு படத்தை பார்த்திட்டு ஆளாலுக்கு வறுத்தெடுங்க. நானும் புட்டு சாப்பிட வாறன்.
சுறா – வேட்டைக்காரன் எவ்ளோ தேவல....
வெளியூர்காரனின் குமுறலை படிக்க இங்கே சொடுக்குங்கள். (கவனிக்க : விமர்சனமல்ல)
சுறா செத்துபோச்சு..வெளியூர்க்காரன்
ஒரு டிக்கெட் பத்து வெள்ளி..நான் என் பிரெண்ட்ஸ் பத்து பேர என் செலவுல என் இளைய தளபதியோட அம்பதாவது படம்னு குஷில டிக்கெட் எடுத்து கூட்டிட்டு போனேன்...மொத்தம் நூறு வெள்ளி..ஊரு காசுக்கு கிட்டத்தட்ட மூவாயரத்து ஐநூறு ரூவாய்...நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசு...ஊர்ல ரெண்டு குடும்பம் வயறு நெறைய ஒரு மாசம் புல்லா சாப்டலாம்...அட நான் என் காசு போனத கூட பெருசா நெனைக்கல...ஆனா விஜய் மேல இவ்ளோ நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வெச்சு படத்துக்கு ஆர்வமா வந்த ஒரு நேர்மையான ரசிகனா விஜய்கிட்டயும் இந்த படத்தோட டைரேக்டர்கிட்டையும் சில கேள்விகள் கேக்கணும்... !
விஜய் சார்..இந்த படத்துக்கு கதை கேக்கும்போது மூளைய மண்டைல வெச்சிருன்தீங்கலா இல்ல சுருட்டி சூ...துல வெச்சிருந்தீங்களா..உங்கள நம்பி நான் குடுத்த காசுக்கு நீங்க எனக்கு திரும்பி குடுத்து என்ன தெரியுமா..ஒத்த தலைவலியும், டேய் இவன் விஜய் ரசிகன்டானு சுத்தி இருகவங்ககிட்ட அவமானமும்தான்...இப்ப சொல்றேன்..வெளியூர்க்காரன் இன்னியோட விஜய் ரசிகர் மன்றதுலேர்ந்து ராஜினாமா பண்றேன்...உங்க சங்காத்தமே வேணாம் எனக்கு...எக்கேடோ கெட்டு போங்க..நீங்கல்லாம் திருந்த வாய்ப்பே இல்ல...!
டைரெக்டர் திரு ராஜ்குமார் சார்...நீங்க மனுசனா சார்...இளைய தளபதியோட அம்பதாவது படம்..என்னை மாதிரி விஜய் ரசிகன்லாம் இந்த படத்த எவ்ளோ எதிர்பார்த்து வெயிட் பண்ணிருபாங்கன்னு உங்களுக்கு தெரியுமா... என்ன சார் படத்த எடுக்க சொன்ன மயிர புடுங்கி வெச்சிருக்கீங்க...உனக்கு சினிமா எடுக்க வருதுன்னு எந்த நாய் சொன்னான் உங்ககிட்ட...ஏன் இப்டி படம் எடுத்து படம் பார்க்க வர்றவன் தாலிய அறுக்கறீங்க...தயவு செஞ்சு போயிருங்க...உங்களோட இன்னொரு படத்த தமிழ் சினிமா ரசிகர்கள் தாங்க மாட்டாங்க...மறுபடியும் சொல்றேன்...நீங்க சூடு சொரணை உள்ள மனுசனா இருந்தா சினிமா இண்டஸ்ட்ரிய விட்ருங்க...!
மக்களே இவ்ளோ நாள் விஜயோட எல்லா படங்களுக்கும் சப்ப கட்டு கட்னதுகாகவும் விஜய்காக வக்காலத்து வாங்கி உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கு நின்னதுகாகவும் வெளியூர்க்காரன் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுகறான்...என்ன மன்னிச்சிருங்க...!
என்னது படம் எப்டி இருக்கா..சுறா கதையை தியாகராஜா பாகவதர்கிட்ட போய் சொல்லிருந்தா அவரு வேணாம்ப்ப இது ரொம்ப பழைய கதைன்னு சொல்லிருபாறு..ஆனா,விஜய்னா பெரிய மயிருல்ல..அதான் எடுத்து நடிசிருகாப்ள...போங்க..போய் பார்த்து நாசமா போங்க...!
நொந்து போன மனதுடன்...!
தமிழ்ப்பதிவுலகில் சுறா படத்திற்கு இதுதான் முதல் விமர்சனம் .
இரவு எட்டு மணிக்கு சென்னையில் கொளுத்திய வெயிலையும் துச்சமென மதித்து, வில்லு, குருவியென நான் பட்ட கொடுமைகளை ஒரு கையால் ஒதுக்கி வைத்து, “ஒரு தடவ கைய வச்சிட்ட அப்புறம் உன்னால யோசிக்கவே முடியாது” என்ற டிரெய்லர் பன்ச் வசனத்தை வசதியாக மறந்துவிட்டு சுறாவைக் காண சூறாவளியாக கிளம்பினேன்.
சட்டை பட்டனை போடாமல் திறந்த மார்போடு அதே திருமலை விஜய். ஆனால் இதுவரை போடாத கலர்களில் இருக்கின்றன அவர் அணியும் சட்டைகள். படத்தின் இரண்டாம் வித்தியாசம் அவரின் வீடு. கடற்கரையோரம் இருக்கிறது. இதுவரை எந்த விஜய் படத்திலும் இப்படி இருந்ததில்லை. அந்த குப்பத்தில் ஒரு போட்டி. யார் கடலின் நடுவே சென்று நிறைய மீன் பிடித்து வருகிறார்கள் என்ற போட்டி. வழக்கமாய் ரன்னிங் ரேஸ், கார் ரேஸ் என்றுதான் இருக்கும். ஆனால் இதில் வித்தியாசமாய் கடலில் ஒரு போட்டி. வழக்கம் போல் விஜய்தான் ஜெயிக்கிறார். ஜெயித்தவுடன் பாடல்.
வெற்றிக் கொடியேத்து..வீசும் நம்ம காத்து.
வழக்கமாக பாடல் முடிந்தவுடன் காமெடியன் வருவார். அதிலும் வித்தியாசம். முதலில் தமன்னாவை காட்டுகிறார்கள். அதன் பின்னே வடிவேலு வருகிறார். 50வது படமென்பதால் ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டுமென்ற விஜயின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக் கொண்டு கதை செய்த இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அடுத்தடுத்த காட்சிகளில் இருவருக்கும் முட்டலும் மோதலுமாய் திரைக்கதை பயணிக்கிறது. நடுவில் குப்பத்தில் திருவிழா வருகிறது. சீரியல் பல்பு சகிதம் அடுத்த குத்திற்கு முக்கால் பேண்ட்டுடன் வருகிறார் விஜய்.
வங்க கடல் எல்லை. நான் சிங்கம் பெத்த பிள்ளை
வழக்கம் போல முழுப் பேண்ட் போடாதது, மார்க்கெட் போன நடிகையை ஆட வைக்காதது போன்றவை இந்தப் பாடலில் வித்தியாசமானவை. பாடல் முடிந்தவுடன் குப்பம் பற்றி எரிகிறது. துடித்து எழும் விஜய் சண்டை போடுகிறார். யார் இதற்கு காரணம் என்பதை யோசிக்கிறார். பின் அடுத்த நாள் தமன்னாவை சந்தித்து ரொமான்ஸ் செய்கிறார். முதலில் விஜய்க்கு காதல் வர உடனே ஃப்ளைட் பிடித்து நியிசிலாந்து சென்றுவிடுகிறார். பின்னாலே தமன்னாவும் தன்னைப் பற்றித்தான் பாடப்போகிறார் என்ற ஏக்கத்தோடு ஓடுகிறார். பாவம் அவர். விஜயின் பாடல் அவரை ஏமாற்றிவிடுகிறது.ஆம்
நான் நடந்தா அதிரடி..என் பேச்சு சரவெடி
என அங்கும் தன்னைப் பற்றியே பாடுகிறார் தளபதி. ஏமாற்றத்துடன் திரும்பும் தமன்னாவின் அப்பா, விஜயின் குப்பத்தை கோபுரமாக்க திட்டமிடுகிறார். அந்த இடத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலும், பீச் ரிசார்ட்டும் கட்ட ஏற்பாடு செய்கிறார். அவர்தான் குடிசைகளை எரித்தவர் என்பது தெரியவர அவரின் வீட்டிற்கு சென்று அவரை அடித்துவிடுகிறார். அடித்ததோடு இல்லாமல் பன்ச் வசனமும் பேசிவிட கொதிக்கிறார் வில்லன்.
இதுவரை எறா. இனிமேல் சுறா என இடைவேளை விடுகிறார்கள். இடைவேளை விட்ட நேரம் கேட்டின் அருகில் சின்ன இடைவெளி விட்டிருந்தாலும் ஓடி வந்திருப்பேன். மூடிவிட்டார்கள். நானும் மூடிக் கொண்டு மீதி படத்தை காண சென்றேன். சற்று தாமதமாகிவிட்டது. அதற்குள் குப்பத்து விஜய் கோட்சூட்டுடன் நடந்துக் கொண்டிருந்தார்.
தமிழன் வீரத்தமிழன்.. தலைமை தாங்கும் ஒருவன்
என்று பாடிக் கொண்டிருந்தார் யாரோ. என்னடா.. தண்ணியடிச்சிட்டு திரிஞ்சவன் தண்ணி பாக்கெட் வாங்குற கேப்புல தலைவன் ஆயிட்டானா என்ற சந்தேகத்துடன் அமர்ந்தேன்.பாடல் முடிந்தவுடன் தமன்னா அவரைத் தேடி வந்தார். அவரைத் தெரியாது என்று சொல்லிவிடுகிறார் தலைவர். அழுதுக்கொண்டே செல்லும் தமன்னாவை பார்த்து “இதுதான் அவ கண்ணுல இருந்து வரும் கடைசி துளி கண்ணீர்” என்கிறார் விஜய். இது தமன்னா காதில் விழுந்துவிட உடனே பாடல்
சிறகடிக்கும் நிலவு. கரம்பிடித்தது என்னை
பாடல் முடிவதற்கும் ரிசார்ட் கட்ட வில்லனுக்கு அப்ரூவல் கிடைப்பதற்கும் சரியாக பொருந்திவிட சீறுகிறார் விஜய் வில்லனை நோக்கி. மீண்டும் சண்டை. மீண்டும் ஒரு பாடல். இந்த முறை
தஞ்சாவூர் ஜில்லாக்காரி கச்சேரிக்கு வாயேண்டி
அதன் பின் க்ளைமேக்ஸில் வில்லன் குழுவை பந்தாடிய பின் சுபம் போட்டார்கள்.
இனிமேல் விஜய் என்னதான் வித்தியாசமாய் நடித்தாலும் நான் என் முடிவை மாற்றிக் கொள்ளபோவதில்லை. வேட்டைக்காரன், வில்லு போன்ற முன்பழமைத்துவ காவியத்தை பார்த்துவிட்டு இனி விஜய் படமே பார்க்கக்கூடாது என்று எடுத்த அதே முடிவை இன்றும் எடுத்தேன். இனிமேல் விஜய் படம் கே டிவியில் கூட பார்க்கப்போவதில்லை.
__________________________________________________ _________
டிஸ்கி: வெள்ளிக்கிழமை இளையதளபதியின் 50வது படம் சுறா வெளியாகிறது. பதிவர்கள் ஒரே நாளில் 3000 ஹிட்ஸ் அடிக்க இதைவிட்டால் வேறு வழியில்லை. எப்படியும் வெளிநாட்டு பதிவர்கள் 1000 ரூபாய் கொடுத்து பார்த்துவிட்டும், வியாழன் இரவும், இந்தியவாழ் பதிவர்கள் விடுமுறைப் போட்டு பகல்காட்சி பார்த்த பின்னும் விமர்சனம் (?) எழுத போகிறார்கள். பாவம் எதற்கு அவர்களுக்கு சிரமம் என்று படத்தில் வரப்போகும் காட்சிகளை பதிவாக தந்திருக்கிறேன். தலைப்பு மட்டும் அவரவர் திறமைக்கேற்ப வைத்து 3000, 4000 ஹிட்ஸ் அடிக்க வாழ்த்துகள். தலைப்பு கூட வைக்க தெரியாத விமர்சகர்களுக்கு சில ஐடியாக்கள்
சுறா - இம்சை அரசனின் வறுத்த புறா
சுறா - காஞ்சு போன கருவாடு
சுறா - ஒரு முன்,பின்,நடு,சைடு நவீன காவியம்
சுறா – விதியின் சதி
சுறா - திருந்தாத விஜய்
சுறா : தமிழ் சினிமாவின் அசிங்கம்