அன்பு தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
நாளை முதலாவதாக சென்னை வட்டார பகுதியில் முதல் கட்ட களப்பணி ஐ துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொட்டிவாக்கதில் உள்ள ஒரு இயற்கை தானியம் காய்கறி அங்காடியை நேர்க்காணல் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
தாங்களும் தங்களை சுற்றி உள்ள வட்டார பகுதிகளில் இது போன்ற களப்பணியை துவங்குமாறு கேட்டுகொள்கிறோம், தங்களுக்கு ஓய்வு கிடைக்குநேரங்களில் அந்த நேரத்தை இதற்கு செலவு செய்ய வேண்டுகிறோம்.
பின்வரும் இடங்களுக்கு நேரில் குழுவாகவோ தனி நபராகவோ நேரில் சென்று நேர்காணல் மூலமாக தகவல் சேகரிக்க வேண்டுகிறோம்.
இயற்கை வேளாண் தோட்டம்
இயற்கை வேளாண் விற்பனை அங்காடி
இயற்கை வேளாண் பயிற்சி மையம்
இயற்கை வேளாண் பண்ணை
வேளாண் கல்லூரி மற்றும் பல்கலை கழகம்
நம்ம ஊர் பகுதி விவசாய்கள்
சேகரித்த தகவல்களை ஒரு கோப்புக்குள் வரையறுத்து அனைவருடைய பார்வைக்கும் பரிசிலனைக்கும் தெரியபடுத்த வேண்டும்.
இந்த வேலைகளை முடிந்த வரை வேகமாக துவங்கி வருகின்ற தை மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.
இந்த வேலைகளுக்கு இணையாகவே வைப்பக கணக்கு தொடங்கல் மற்றும் நிறுவன துவக்கம் & பதிப்பு இவைகளுக்கு தேவையான வேலைகளை துரிதப்படுத்தி விரைவில் முடிக்கவேண்டும். இந்த வேலைக்கு பாபு மற்றும் பாரத்பியனுக்கு துணையாக இன்னும் சிலரை பணியமர்த்துவது குறித்து மொழியுடன் ஆலோசித்து இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்.
மற்றவர்கள் அனைவரும் நேர்காணல், களப்பணி இல் செயல்பட வேண்டுகிறோம்.
இது போன்ற நிகழ்வின் தங்களுடைய வரவு செலவுகளை ஒரு கோப்புகளா சேமித்து வைக்கவும். கணக்கு பராமரிப்பு மற்றும் தணிக்கை குழு ஒன்று மிகவிரைவில் துவங்கப்படும். அவர்களிடம் அதை நீங்கள் ஒப்புவிக்கவேண்டும்.
தகவல் சேகரிப்பு துறையும் ஒன்று உருவாக்கப்படும் அந்த துறையிடம் தங்களுடைய நேர்காணல் மற்றும் களப்பணி இன் தகவல்களை சரியான கோப்புகளுடன் ஒப்புவிக்கவேண்டும்.
இன்னும் சில துறைகள் மற்றும் அதன் பணி நமது தேவைக்கும் பணி விரைவிற்கும் ஏற்றவாறு உருவாக்கப்படும், அதை பொருப்பேற்று நடத்துபவர்கள் குறித்தும் தெரிவிக்கப்படும்.
பெங்களுரு வாசிகளுக்கு களப்பணி மற்றும் நேர்காணல் சாத்தியபடாத பட்சத்தில் உங்களை வைப்பக கணக்கு துவங்குதல் மற்றும் நிறுவன பதிப்பு வேளைகளில் தற்காலிகமாக பணியாற்ற வேண்டுகிறோம்.
அடுத்த வரா இறுதிக்குள் அனைத்து துறை மட்டும் அதன் தலைமை பற்றி தெரிவிக்கபடும்.
நிர்வாக வளர்ச்சி மற்றும் தலைமை என்றொன்று இந்த எல்லா வேலைகளையும் கண்காணிக்கும் அதற்கும் ஒரு துறை ஏற்பாடு செய்யப்படும். (அது நாம் அனைவருமே).
ஒன்று பட்டாள் உண்டு வாழ்வு.