தமிழ்மாமணி தாழையாரின் படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம்

7 views
Skip to first unread message

Chandra Sekaran

unread,
Jul 15, 2024, 8:21:25 AM (7 days ago) Jul 15
to Digital Tamil Studies

WhatsApp Image 2024-07-14 at 10.45.04 PM.jpeg


அயலகத் தமிழறிஞர் தமிழ்மாமணி தாழையாரின் படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம்

 

 

சென்னை வேப்பேரி சால்வேஷன் ஆர்மி சென்டர் அரங்கில்... அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு இணைந்து ...அயலகத் தமிழறிஞர் தமிழ்மாமணி தாழையாரின் படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வை முன்னெடுத்தன.

 

கவிஞர் திருமதி பெங்களூர் உஷா வரதராஜன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

WhatsApp Image 2024-07-14 at 10.44.17 PM.jpeg

 

திருநின்றவூர் செல்வி பமீலா வரவேற்பு நடனமாடினார். சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவின் ஒளிகூட்டி வைத்தனர். நிகழ்வுக்குக் கவிமாமணி ஆரூர்தமிழ்நாடன் அவர்கள் தலைமை தாங்கினார். முனைவர் ஆதிராமுல்லை முன்னிலை வகித்தார். முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் , அழகிய வரவேற்புரை ஆற்றினார்.  

 

அயலகத்தமிழறிஞர் முனைவர் தாழை இரா.உதயநேசன் படைத்த "எண்ணமே ஏற்றம் தரும்" - "எரிதழல் கொண்டு வா" ஆகிய நூல்கள் குறித்த ஆய்வுக்கோவை மற்றும் சுருக்குப்பை - ஆறு பேராசிரியர்களின் கட்டுரைத் தொகுப்பு, தாழையாரின் 9 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களவெளியிட்டு , தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையர்  திரு.பி.கிருஷ்ணமூர்த்தி ஐ.ஓ.எப்.எஸ்.

கருத்தரங்கச் சிறப்புரையையும், சென்னை மாநிலக் கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு அரசு கல்லூரிக்கல்வி இயக்குநரக மண்டல இணை இயக்குநருமான முனைவர் இரா.இராமன் கருத்தரங்கப் பேருரையும் வழங்கினர்.

 

அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை ஆலோசகர் கவிஞர் அமுதா தமிழ் நாடன்  முனைவர் அருட்திரு பிலிப் சுதாகர் ஆகியோர் சிறப்பான வாழ்த்துரைத்தனர்.

 

திருமதி கலையரசி உதயநேசன் ஆய்வுக்கோவை முதவ்படியைப் பெற்றுக் கொண்டார். மொழிபெயர்ப்பு நூல்களை விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். ஒரு நூலை நானும் பெற்றுக் கொண்டேன்.

WhatsApp Image 2024-07-14 at 10.45.11 PM.jpeg

 

சுவையான நண்பகல் விருந்துக்குப் பிறகு "மனிதரைப் பாடு மனமே!" தலைப்பில் நடைபெற்ற செவிவிருந்து சிறப்புக் கவியரங்கிற்கு திரைப்பட இயக்குநர் கவிஞர் யார் கண்ணன் இனிய தலைமை ஏற்றார். உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு துணைத் தலைவர் கவிஞர் அமுதபாரதி, கவிஞர் ஜலாலுதீன் முன்னிலையில் தமிழ்நாடு முழுவதுமிருந்து கவிஞர்கள் கவிதை பாடினார்கள்.

 

விழா நிறைவு நிகழ்வு உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு பொதுச்செயலாளர்

முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் தலைமையில் , அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை நிர்வாகி கவித்திலகம் வெற்றிப்பேரொளி, உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் உமாபாரதி முன்னிலையில் நடைபெற்றது

 

உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு இணைச் செயலாளர் முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் அறிமுக உரை ஆற்றினார்.

 

கதா விருதாளர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், திருப்பூர், உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கம் தலைவர் கவிஞர் மெய்ஞானி பிரபாகர பாபு, அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை கல்விக் குழுத் தலைவர் முனைவர் ஜோ. சம்பத்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை நிறுவனத் தலைவர் முனைவர் தாழை இரா.உதயநேசன் ஏற்புரையும் கருத்தரங்க நிறைவுரையும் ஆற்றினார்.

 

இவ்வுரையில் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் வரும் 2025 சனவரி 18&19 இருநாள் மாநாடு திண்டுக்கல்லிலும், 2025 சனவரி 31& பிப்ரவரி 01 மலேசியாவிலும் நடைபெறவிருக்கும் இனிய அறிவிப்பைத் தந்து , இவ்விரு மாநாடுகளிலும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்ற அன்பழைப்பை விடுத்தார்.

 

அமெரிக்க முத்தமிழ் சிறுவர் பேரவை நிர்வாக இயக்குநர் முனைவர் சா.விஜயகுமாரி நிகழ்வுகளைச் செம்மையுற தொகுத்தளித்தார்.

 

அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை நிர்வாகி கவிஞர் ரமணி மாடசாமி ராஜா நன்றியுரைத்தார்.

 

நாடடுப்பண்ணுடன் கருத்தரங்கம் இனிது நிறைவுற்றது

 

Reply all
Reply to author
Forward
0 new messages