தாழையார் நூல்கள் குறித்த கருத்தரங்கு

24 views
Skip to first unread message

Chandra Sekaran

unread,
May 21, 2024, 12:57:03 PMMay 21
to Digital Tamil Studies
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழும நிறுவனங்கள் இணைந்து நடத்தும்  உலக முத்தமிழ்க் கூட்டமைப்பின்

ஒருங்கிணைப்பில்

தாழையார் நூல்கள்  குறித்த கருத்தரங்கு

 நாள்: 13/07/2024

         
தலைப்பு:

தமிழ்மாமணி தாழையாரின் இரு கவிதை நூல்களின் இலக்கியத்திறன்
(எண்ணமே ஏற்றம் தரும், எரிதழல் கொண்டு வா)

நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் இணைய இணைப்பு
https://archive.org/details/enname-erram-tarum/page/n11/mode/2up
https://archive.org/details/yerithalal-kondu-va./page/n1/mode/2up


அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.


தலைப்புகள்:  

o   தாழையார் கவிதைகளில்  மாண்பு நிறை வாழ்வு

o  தாழையார் கவிதைகள்  வழி அறியலாகும் பண்டைத்தமிழரின் அறிவு சார் வெளிப்பாடு

o   தாழையார் கவிதைகள்  புலப்படுத்தும் அறம்

o   தாழையார் கவிதைகள்  உணர்த்தும் தமிழர் நெறி

o   தாழையார் கவிதைகள் காட்டும் தலைமை மாண்புகள்

o   தாழையார் கவிதைகள்  பேசும் பெருவாழ்வு

o   தாழையார் கவிதைகளில்  செந்தமிழர் வாழ்வியல்

o   தாழையார் கவிதைகள்  காட்டும் தமிழரின் உளவியல் நோக்கு

o   தாழையார் கவிதைகள்  உணர்த்தும் தகைசால் வாழ்வு

o   தாழையார் கவிதைகள்  கட்டமைத்த மனிதவள மேம்பாடும்    ஆளுமைத்திறன்களும்

o   தாழையார் கவிதைகளில் கிராமப்புற நிகழ்கலைகளும் மாற்றங்களும்

o   தாழையார் கவிதைகளில்  கவிதையின்  வளர்ச்சிப் போக்குகள்

o  தாழையார் கவிதைகளில் சமூகவியல் அணுகுமுறை


இத்தலைப்புகள் மட்டுமின்றி மாநாட்டு மையப்பொருண்மையான  “தாழையாரின் இரு கவிதை நூல்களின் இலக்கியத்திறன்” என்னும் தலைப்புடன் தொடர்புடைய பிற தலைப்புகளிலும் கட்டுரைகள் அமையலாம்.

கட்டுரைகளை worldtamilco...@gmail.com என்ற       மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

கட்டுரையாளர்களின் கனிவான கவனத்திற்கு :

v அனைத்துத்துறைகளைச் சார்ந்த பல்கலைக்கழகம்/கல்லூரி/பள்ளிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகிய அனைவரிடமிருந்தும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
 
v ஆய்வுக்கட்டுரைகளைச் சொற்கோப்பில்  (word document)  A4 தாளில் 1.15 இடைவெளியுடன் ஏரியல் யூனிகோட்   (Arial Unicode) எழுத்துருவில் 6 பக்கங்களுக்கு மிகாமல் கணினிவழித் தட்டச்சு செய்து   worldtamilco...@gmail.com  என்ற மின்ன்ஞ்சல் முகவரிக்கு 20.06.2024 ஆம்  தேதிக்குள் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

v ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவர்களின் சொந்த முயற்சியில் உருவானதாகவும், புதிய மற்றும் அசல் கண்டெடுப்புகளாகவும் இருத்தல் வேண்டும். ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுமுறைப்படி அமைவதுடன், அடிக்குறிப்புகள் மற்றும் துணைநூற்பட்டியல் ஆகியவற்றுடன் இடம் பெறுதல் முக்கியமாகும்.
 
v ஆய்வு முறைமையுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் மட்டுமே நூலாக்கம் பெறும், தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் ஆய்வுக்கோவையில் இடம்பெறும். கருத்தரங்கக் கட்டணம் இல்லை.  

 

v வெளிநாடு வாழ் ஆய்வாளர்கள் இணைய வாயிலாகவும் மாநாட்டில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வசதிகள் உருவாக்கித் தரப்படும்.

 v தேர்வு செய்யப்பட்டும் கட்டுரைகள் ISBN எண்ணுடன் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு பதிப்பாக வெளியிடப்படும்.
 
v கட்டுரையாளர்களுக்கு மாநாட்டில் பங்கேற்றமைக்கான/ ஆய்வுத்தாள் சமர்ப்பித்தமைக்கான சான்றிதழ் மற்றும்  சிறப்பு விருதுகள் அனைவருக்கும்  வழங்கப்படும்.

மாநாட்டுப் புரவலர்
தமிழ்மாமணி முனைவர் தாழை இரா. உதயநேசன்
(நிறுவனர்/தலைவர் - அமெரிக்கா முத்தமிழ்க் கூட்டமைப்பு
நிறுவனர் - அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள்)                                                                          🙏🙏🙏🙏தொடர்புக்கு :
முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் - 9283275782
முனைவர் ஜோ.சம்பத்குமார் - 9976025731
செல்வி எம்.மேரிமுத்து - 9159698466


11.jpeg
22.jpeg
Reply all
Reply to author
Forward
0 new messages