தங்க வளையல் தொடர்பான பிஜே அவர்களது ஆய்வுக்கு பதில் தொடர் :03

15 views
Skip to first unread message

DHARUL ATHAR

unread,
Dec 5, 2009, 11:14:33 AM12/5/09
to kkdi group
பிஜே அவர்களது ஆய்வுக்கு பதில்  தொடர் :03

அன்புச் சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைகும் (வஹ்)

தங்க வளையல் தொடர்பாக பிஜே அவர்களால் வெளியிடப்பட்ட இரு தொடர்களுக்கும் எவ்வாறான பின்னனியில் பிஜே அவர்கள் குறித்த ஆய்வை !! வெளியிட்டார்கள் என்பதை எமது முதல் தொடரிலும் அந்த ஆய்வின் இரு தொடர்களில் முதல் தொடரில் வைக்கப் பட்டிருந்த தவறான வாதங்களுக்கான தக்க பதில்களை எமது இரண்டாவது தொடரிலும் வெளியிட்டோம்.

தற்போது அவரது இரண்டாவது ஆய்வில் வைக்கப் பட்டிருக்கும் வாதங்கள் தொடர்பான எமது பதிலை பதிவு செய்து கொள்கிறோம்.

அவரது ஆய்வின்!! இரண்டாவது தொடர் பின்வருமாறு ஆரம்பிக்கிறது.

பெண்கள் தங்க நகை அணியலாமா_2

“பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று கூறுவோர் பொதுவாக பலவீனமான ஹதீஸ்களையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கலந்து ஆதாரமாக எடுத்து வைப்பது வழக்கம். ஆனால் இலங்கையில் இப்பிரச்சனையைக் கிளப்பியவர்கள் இரண்டு ஹதீஸ்களை மட்டுமே எடுத்து வைத்துள்ளனர். அந்த இரண்டு ஹதீஸ்களில் ஒரு ஹதீஸைப் பற்றி சென்ற தொடரில் விளக்கியுள்ளோம். அந்த ஹதீஸ் தங்கத்தை அணிவது பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை என்பதால் அது இவர்களின் வாதத்துக்கு ஆதாரமாகாது என்பதைத் தெளிவுபடுத்தினோம்.”

தங்க நகை அணியக் கூடாது என்று கூறும் நாம் இரண்டு ஹதீஸ்களை மட்டுமே எடுத்து வைக்கவில்லை என்பதையும் இவர்கள்தான் நாம் கூறிய ஹதீஸ்களில் இரண்டு ஹதீஸ்களை மாத்திரம் எடுத்து வைத்து ஆய்வைத் தொடக்கியிருக்கிறார்கள் என்பதையும் நாம் எமது சென்ற தொடரில் விளக்கியுள்ளோம்.அதன் காரணமாகவே இலங்கையில் இப்பிரச்சனையைக் கிளப்பிய!! ஸஹ்றான் என்ற சந்தர்ப்பவாதி “மூன்று நபிமொழிகளை முன்னிருத்தியே இக்கருத்தைக் கூறியிருக்கிறேன் “ என இவர்களுக்கு மறுப்பெழுதிய போது, இவர்கள் கொடுத்த விளக்கத்தில்!! அதை இவர்கள் கண்டு கொள்ளவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

அத்துடன் இரு ஹதீஸ்களில் ஒன்றை இவர்கள் விளக்க முற்பட்ட போது இவர்கள் வைத்த தவறான வாதங்களைத் தெளிவு படுத்தி எமது வாதங்களுடன் எவ்வாறு குறித்த ஹதீஸ் தொடர்புபடுகிறது என்பதையும் விளக்கியிருந்தோம்.

மேலும் ஆய்வாளார்!!   தொடர்ந்து பின்வருமாறு எழுதுகிறார்.

“அடுத்ததாக அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

حدثنا عبد الله بن مسلمة حدثنا عبد العزيز يعني ابن محمد عن أسيد بن أبي أسيد البراد عن نافع بن عياش عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال  من أحب أن يحلق حبيبه حلقة من نار فليحلقه حلقة من ذهب ومن أحب أن يطوق حبيبه طوقا من نار فليطوقه طوقا من ذهب ومن أحب أي يحلق حبيبه سوارا من نار فليسوره سوارا من ذهب ولكن عليكم بالفضة فالعبوا بها  رواه أبو دود في سننه,وأحمد في مسنده

(உங்களில்)யார்தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்குஅணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)

இது தான் அவர்கள் எடுத்துக் காட்டும் இரண்டாவது ஹதீஸாகும்.

மேற்கண்ட ஹதீஸுக்கு அவர்கள் செய்துள்ள அர்த்ததைத் தான் நாம் அப்படியே மேலே வெளியிட்டுள்ளோம்.”

என நாம் தங்க வளையல் கூடாது என்று கூறுவதற்கான ஆதாரமாகக் குறிப்பிடும் ஒரு ஹதீஸையும் அதற்கு ஸஹ்றான் என்பவர் வழங்கிய தமிழாக்கத்தையும் அப்படியே வெளியிட்டிருக்கிறார்கள்

பின்பு “முதல் ஹதீஸில் தங்கள் கைச் சரக்கைச் சேர்த்து எப்படி வாதிட்டார்களோ அது போல் இந்த ஹதீஸிலும் தாங்கள் என்ன வாதிடுகிறார்களோ அதற்கு ஏற்றவாறு ஹதீஸை வளைத்திருக்கிறார்கள்.” எனக் குறிப்பிடுகிறார்

முதல் ஹதீஸில் ஸஹ்றான் என்பவரால் சேர்க்கப் பட்ட கைச்சரக்குகள் எவை என்பதையும் அவரது கைச்சரக்கை இவர்கள் தங்களது தவறான வாதத்திற்கு எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதையும் கைச்சரக்குகள் கழையப்பட்ட பின்பு கூட அந்த ஹதீஸ் நாம் கூறும் கருத்தை எவ்வாறு உறுதி செய்கிறது என்பதையும் முந்தைய தொடரிலேயே விளக்கி விட்டோம்.

எனவே இந்த ஹதீஸை எமது வாதத்திற்கு ஏற்றவாறு வளைத்ததாகக் கூறுகிறாரே அது என்ன என்பதை இப்போது நோக்குவோம்.

அடுத்து பின்வருமாறு தொடர்ந்து எழுதிக் கொண்டே போகிறார்

“அதாவது அடிக்கோடிட்ட இடங்களில் பெண்பாலாகக் குறிப்பிட்டுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக அடைப்புக் குறிக்குள் (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) என்று கூறி தங்களின் கருத்தைத் திணித்துள்ளனர்.

நேசிக்கின்றவளுக்கு என்று மொழி பெயர்த்த இடத்தில் அரபு முலத்தில் ஹபீப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹபீப், ரஹீம், ரஷீத், அலீம் என்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள சொற்கள் ஆண்பாலாகவும் பயன்படுத்தப்படும். பெண்பாலாகவும் பயன்படுத்தப்படும் என்று காரணம் கூறி இதன் காரணமாக தாங்கள் பெண்பாலாக அர்த்தம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதை அப்படியே தருகிறோம்

மேற்படி நபிமொழியில் ஹபீப் எனும் அறபு வார்த்தை நேசிக்கப்படும் ஆண் அல்லது சிறுவர்களைத் தான் குறிக்கும் என வாதிடுவது தவறானதாகும். காரணம் ஃபயீல் எனும் அமைப்பில் அமைந்திருக்கும் பெயர்ச்சொல் மாதிரிகள் ஆண்,பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே அறபு இலக்கணத்தில் பயன்படுத்தப்படும்.

பொதுவாக ஹபீப் என்ற வார்த்தைக்கு நேசத்திற்குரிய ஆண் என்று மாத்திரம் அர்த்தம் இருந்தால் உங்கள் வாதப்படி அது நியாயமானதாகும். ஆனால் அறபு மொழி விதியின் பிரகாரம் இவ்வாறான வார்த்தைகளுக்கு நேசத்திற்குரிய ஆண் என்றும் மொழி பெயர்க்கலாம் நேசத்திற்குரிய பெண் என்றும் மொழி பெயர்க்கலாம் இரண்டு அர்த்தங்களை கொண்டிருக்கும் போது அது நேசத்திற்குரிய பெண் என்பதைத் தான் குறிக்கின்றது என்று நாம் கூறுவதற்கு பிரதானமாக இரண்டு காரணிகளைக் கூற முடியும்.

என்று தாங்கள் செய்த அர்த்தத்தை நியாயப்படுத்துகிறார்கள்”

இறுதியில் ” இவர்களின் இந்த வாதம் அரபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்கியதால் ஏற்பட்டதாகும்.” எனக் கூறி முடிக்கிறார்.

இந்த இடத்தில் “அறபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்குதல்” என ஒரு குற்றச் சாட்டு வைக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக சற்று விரிவாகவே விளக்க வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படுகிறது.

முந்தைய ஹதீஸை விளக்கும் போது “அப்பெண்ணின் கையை நபி (ஸல்) அவர்கள் அடிக்கலானார்கள்” (فجعل رسول الله يضرب يدها) என நிகழ்காலத் தொடர்வினையில் ( أفعال الشروع) மொழிபெயக்க வேண்டிய இடத்தில் “கையைத் தட்டிவிட்டார்கள்” என இறந்தகால வினையில் தவறாக செய்யப்பட்டிருந்த மொழிபெயர்ப்பை, இவர்களது  ”இலக்கண அறிவை”!! ஒரு புறம் வைத்துவிட்டு, இந்த வாக்கியத்தை வைத்து வாதங்கள் எழுப்பியிருந்ததன் மூலம் யார் அரைகுறை இலக்க அறிவுடன் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அடுத்து இவர்கள் கொடுத்திருக்கும் இலக்கண விளக்கத்தை!! அப்படியே தருகிறோம்.

இது பற்றி அரபு இலக்கணம் கூறுவது என்ன?

ஹபீப் என்பது போன்ற வடிவில் இல்லாத மற்ற அமைப்புடைய சொற்களுடன் பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கூற வேண்டும். உதாரணமாக ஆலிம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். தமிழில் அறிஞன் என்று பொருள் கொண்டாலும் அரபியில் அவ்வாறு கூற முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி சொல்லமைப்பைப் பயன் படுத்த வேண்டும் ஆண் ஆலிம் என்றும் பெண் ஆலிமா என்றும் கூற வேண்டும்

ஹபீப் என்ற சொல் அமைப்பு மட்டும் இதில் இருந்து வேறுபட்டதாகும். இது போன்ற வடிவமைப்பில் உள்ள சொற்களுடன் பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் அதற்கேற்ப ஹபீபா என்று பெண்பாலாக இச்சொல்லை மாற்ற வேண்டியதில்லை. ஆணுக்கும் பயன் படுத்தும் ஹபீப் என்ற சொல்லையே பெண்ணுக்கும் கூறலாம்.

அதாவது ஆண் ஹபீப், பெண் ஹபீப் என்று கூறலாம்.

ஆனால் பெண்ணைக் குறிக்கும் வார்த்தையைச்சேர்க்காமல் வெறும் ஹபீப் என்று மட்டும் கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிக்கிறோமா என்ற குழப்ப்ம் ஏற்படும். இது போன்ற இடங்களில் நாம் பெண்ணைத் தான் குறிக்கிறோம் என்றால ஹபீபா என்று பெண்பாலாக மாற்றித் தான் பயன்படுத்த் வேண்டும்.

நான் எனது ஹபீபை (நேசரை) பார்த்தேன் என்று கூறினால் இதில் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை. இதற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம். பெண் ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் ஹபீப் எனும் சொல் ஆண்பால் வடிவில் இருந்தாலும் அதைப் பெண்பாலாகக் கருத வேண்டும். இது தான் அரபு இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

أوضح المسالك إلى ألفية ابن مالك – ( / 0)

والثاني: فعيل بمعنى مفعول6، نحو: رجل جريحامرأة جريح وشذ  :ملحقة جديدة: فإن كان فعيل بمعنى فاعل، لحقته التاء1، نحو : امرة رحيمة ،وظريفة فإن قلت : مررت بقتيلة بني فلان بني فلان خشية الإلتباس، لأنك لم تذكر الموصوف.

ஒரு கதீல் (கொல்லப்பட்டவன் கொல்லப்பட்டவள்) ஐ நான் கடந்து சென்றேன் என்று கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்று கூறப்படாததால் கேட்பவருக்கு குழப்பம் ஏற்படும். பெண்ணைக் குறிப்பது தான் நமது நோக்கம் என்றால் கதீல் என்று கூறாமல் கதீலா என்று பெண்பாலாக மாற்றிக் கூற வேண்டும்

حاشية العلامة الصبان على شرح الشيخ الأشموني: على ألفية الإمام ابن مالك – (4 / 135)

ومن فعيل بمعنى مفعول كقتيل بمعى مقتول وجريح بمعنى مجروح إن تبع موصوفه غالباً التاء تمتنع فيقال: رجل قتيل وجريح،وامرأة قتيل وجريح. والإحتراز بقوله : كقتيل من فعيل بمعنى فاعل نحو: رحيم وظريف، فإنه تلحقه التاء فتقول:امرأة رحيمة وظريفة، وبقوله:إن تبع موصوفه من أن يستعمل استعمال الأسماء غير جار على موصوف ظاهر ولا منوي لدليل فإنه تلحقه التاء نحو :رأيت قتيلاً وقتيلة،فراراً من اللبس. ولو قال:ومن فعيل كقتيل إن عرف موصوفه غالباً التاء تنخذف لكان أجود،ليدخل في كلامه نحو:رأيت قتيلاً من النساء،فإنه مما يخذف يخذف فيه التاء للعلم بموصوفه، ولهذا قال في شرح الكافية:فإن قصدت الوصفية وعلم الموصوف جرد من التاء. وأشار بقوله غالباً إلى أنه قد تلحقه تاء الفرق حملاً على الذي بمعنى فاعل، كقول العرب:صفة ذميمة، وخصلة حميدة، كما حمل الذي بمعنى فاعل عليه في التجرد نحو ( إن رحمت الله قريب) (الأعراف:56)، (قل من يحيي العظام وهي رميم) (يس:(78

இந்த இலக்கண விளக்கத்தில் நிறைந்து காணப்படும் தவறுகளை ஒவ்வொன்றாக அலசுவோம்.

முதலில், “ஹபீப் என்பது போன்ற வடிவில் இல்லாத மற்ற அமைப்புடைய சொற்களுடன் பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கூற வேண்டும்” என்ற இவர்களது கருத்து தவறாகும். காரணம் இவர்கள் மேற்கோள் காட்டியுள்ள நூலிலேயே அதே பாடத்திலேயே ஹபீப் என்பது போன்ற வடிவில் உள்ள சொற்கள் மாத்திரமல்ல ஏனைய فعول மற்றும் مفعال மற்றும் مفعيل மற்றும் مفعل என்ற வடிவில் உள்ள சொற்கட்டமைப்புகளுக்குங் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகக் கூற வேண்டியதில்லை என தெளிவுபடுத்தப்பட்டிருப்பது வெறுமனே அறபு மென் பொருளில் இருந்து மூல நூலாசிரியரின் கூற்று எது விரிவுரையாளரின் கூற்று எது என்று வித்தியாசப்படுத்தாமல்      (ومِن فَعِيلٍ) بمعنى مفعول (كَقَتِيْلٍ) بمعنى مقتول وجريح….

மென் பொருளில் காணப்படும் எழுத்துப் பிழைகளைக் கூட களையாமல்     !!رجل جريحامرأة அப்படியே “வெட்டி,ஒட்டி”யிருக்கும் இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.!!

அவ்வாறே அடுத்த பந்தியின் ஆரம்பத்தில்  மீண்டும் அதே தவறை “ஹபீப் என்ற சொல் அமைப்பு மட்டும் இதில் இருந்து வேறுபட்டதாகும்” என எழுதியுள்ளார்!!.

அடுத்து எமது தலைப்புடன் சம்மந்தப்பட்ட இலக்கண விதியை பின்வருமாறு எழுதியுள்ளார்.

“ஆனால் பெண்ணைக் குறிக்கும் வார்த்தையைச்சேர்க்காமல் வெறும் ஹபீப் என்று மட்டும் கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிக்கிறோமா என்ற குழப்பம் ஏற்படும். இது போன்ற இடங்களில் நாம் பெண்ணைத் தான் குறிக்கிறோம் என்றால ஹபீபா என்று பெண்பாலாக மாற்றித் தான் பயன்படுத்த வேண்டும்.

நான் எனது ஹபீபை (நேசரை) பார்த்தேன் என்று கூறினால் இதில் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை. இதற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம். பெண் ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் ஹபீப் எனும் சொல் ஆண்பால் வடிவில் இருந்தாலும் அதைப் பெண்பாலாகக் கருத வேண்டும். இது தான் அரபு இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளது.”

இந்த இடத்தில் இவர்களிடம் காணப்படும் இலக்கண தடுமாற்றத்தைப் பாருங்கள்.

“நான் எனது ஹபீபை (நேசரை) பார்த்தேன் என்று கூறினால் இதில் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை. இதற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம்.”

“வெறும் ஹபீப் என்று மட்டும் கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிக்கிறோமா என்ற குழப்பம் ஏற்படும்.”

முதலில் எனது ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் அது ஆணை மாத்திரம் குறிக்கும் எனக் குறிப்பிட்டவர் அதற்கு முந்தைய வரிகளில்  எனது ஹபீபைப் பார்ர்த்தேன் எனக் குறிப்பிட்டால் ஆணைக் குறிப்பிடுகிறோமா அல்லது பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்ற குழப்பம் ஏற்படும் எனவும்  எழுதி தனக்குத்தானே முரண்பட்டுக் கொள்வதைப் பார்க்கிறோம்.

எனவே, இவர்கள் தவறாக விளங்கியுள்ளது போல் வெறுமனே ஹபீப் என்ற என்ற சொல் ஆணை மாத்திரம் தான் குறிக்கும் என்றிருந்தால் நான் ஹபீபை பார்த்தேன் எனக் கூறும் போது ஆணைக் குறிப்பிடுகிறோமா அல்லது பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்று எவ்வாறு குழப்பம் ஏற்படும். எனவே இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஏற்கனவே ஒரு ஆணையோ பெண்ணையோ குறிப்பிடாமல் ஹபீப் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அது ஆணை மட்டும்தான் குறிக்கும் என்ற இவர்களது இலக்க விளக்கம்!! தவறு என்று நிரூபணமாவதுடன் ஹபீப் எனும் பதம் குறித்த ஆணையோ பெண்ணையோ குறிப்பிடாமல் வெறுமனே பயன்படுத்தும் போது ஆண், பெண் இருவரையும் உள்ளடக்கும் என்பதும் தெளிவாகப் புரிகிறது.

எனவே இவர்கள் குறிப்பிட்டது போல்  இலக்கண விதிப்படி  ஹபீப் என்ற வார்த்தைக்கு ஆண் என்ற கருத்து மாத்திரம் தான் இருக்கும் என்றிருந்தால் “ஆணைக் குறிக்குமா பெண்ணைக் குறிக்குமா என்று குழப்பம் ஏற்படும்” என்ற பேச்சுக்கே இடம் கிடையாதல்லவா?!

அடுத்து இவர்கள் மேற்கோள் காட்டியுள்ள, அரைகுறயாக மொழி பெயர்த்துள்ள இலக்கண விதியில் இவர்கள் மொழிபெயர்க்காமல் விட்டு விட்ட சில வரிகளையும் நாம் மொழிபெயர்க்கிறோம்

1.ولو قال : ومن فعيل كقتيل إن عرف موصوفه غالباً التاء تنخذف لكان أجود

(விரிவுரையாளர் கூறுகிறார் ) :‍ “(மூல நூலாசிரியர்) பஈல் எனும் அமைப்பில் கொல்லப்பட்டவர் என்பது போன்று செயற்பாட்டு பெயரில் (ஹபீப் என்பது போல்) இடம் பெறும் சொற்களின் மூலம் நாடப்படுவது ஆணா பெண்ணா என்பது அறியப்பட்டால் இறுதியில் இடம் பெறும் “தா” التاء நீங்கிவிடும் என்று கூறியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.

2.இதன் காரனமாகவே மூல நூலாசிரியர் தனது “ஷறஹுல் காபியா” எனும் நூலில் “வர்னையை நோக்காகக் கொண்டு வர்ணிக்கப்படுபவர் யார் என்று அறியப்பட்டால் இறுதியில் இடம் பெறும் “தா” நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.

எனவே மேற்படி இலக்கண விதிகளின் சுருக்கத்தை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

1. ஹபீப் எனும் பதம் ஏற்கனவே ஆணையோ பெண்ணையோ குறிப்பிடாமல் பயன் படுத்தப்பட்டால் அது ஆணையும் பெண்ணையும் குறிக்கும்.

2.ஹபீப் எனும் வார்த்தை மூலம் ஆணைக் குறிப்பிடுகிறோமா அல்லது பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்பது (ஏதோ ஒரு வகையில்) அறியப்பட்டாலும் “ஹபீபா என “தா” சேர்க்காமல் ஹபீப் என்றே குறிப்பிட வேண்டும்.

மேற்படி இரு இலக்கண விதிகளை பின்வரும் இரு முறைகளிலும் நிரூபிக்க முடியும் .

1.அறபு இலக்கண விதிகளுக்குக் கூட அடிப்படையாக அமைந்த ஜாஹிலிய்யாக் கால கவிதைகளில் மிகச் சிறந்த கவிதையாகக் கொள்ளப்படும் “உம்ற உல் கைஸ்” (أمرأ القيس) எனும் கவிஞனின் ” கிஃபா நப்கி”(قفا نبك) எனும் கவிதையை எடுத்துக் கொள்வோம்.

குறித்த கவிதையில் ஜாஹிலிய்யாக் கால கவிஞன் தனது காதலி “உனைஸா” பற்றியும் அவளுடன் தான் நடாத்திய காதல் லீலைகள், காமக் களியாட்டங்கள் பற்றியும் விரிவாக வர்ணிக்கிறான்.

மேற்படி கவிவரிகளை பின்வருமாறு ஆரம்பிக்கிறான்

قفا نبك من ذكرى حبيـب ومنـزلِ *** بسقط اللوى بين الدخـول وحومـلِ

மேற்படி கவி வரியில் ஏற்கனவே பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் பயன்படுத்தப் படாமல் காதலியைக் குறிக்க(தான் நேசிக்கும் பெண்ணைக் குறிக்க) ஹபீப்” எனும் வார்த்தையே பயன்படுத்தப் பட்டுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகவே விளங்குகிறது.

2.அவ்வாறே இலக்கிய வாதிகளாலும், வரலாற்றாசிரியர்களாலும் குறிப்பிடப்படும் ஹஸ்ஸான் பின் தாபித் (ரழி) அவர்களது பிரபல்யமான கவி வரிகள்:

منع النوم بالعشاء الهموم***وخيال إذا تغور النجوم

من حبيب أصاب قلبك منه***سقم فهو داخل مكتوم

மேற்படி கவி வரிகளில் இடம் பெறும் “ஹபீப்” எனும் வார்த்தை நேசித்த பெண்ணையே குறிக்கிறது என்பதை மேற்படி கவிதைக்கு விரிவுரை எழுதிய “அப்துர் ரஹ்மான் அல் பர்கூகி” என்பவர் “يريد حبيبته التي يشب بها”  கவிஞர் “தான் நேசித்த பெண்ணையே நாடுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஆக அறபு இலக்கணத்தையும் அரைகுறையாக புரிந்து கொண்டு அறபு இலக்கிய அறிவுமில்லாமல் ஹபீப் எனும் பதம் ஆணை மாத்திரம் தான் குறிக்கும் என்ற இவர்களது அடிப்படை வாதமே தவறு என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

அத்துடன் மேலதிகமாக பலநூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் இந்த ஹதீஸ் ஆணை மட்டும் குறிக்கிறதா அல்லது பெண்களைக் குறிக்கிறதா என்பதை எம்மையும் பிஜே அவர்களையும், அவரது ஆய்வாளர்களையும் விட அறபு மொழியில் நன்கு தேர்ச்சியும் புலமையும் பெற்ற அறிஞர் பெருமக்கள் குறித்த ஹதீஸை எவ்வாறு விளங்கினார்கள் என்பதை வைத்தும் இவர்களது வாதம் தவறு என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை வாசகர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். நாம் இங்கு குறிப்பிட விரும்புவது அறிஞர்களுடைய சட்டம் சம்பந்தமான கூற்றுகளை அல்ல. மாறாக அறபு மொழி சம்பந்தப் பட்ட ஒரு சொல்லை பிஜே அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல் அவர்களும் அரைகுறையாக இலக்கத்தை விளங்கியிருந்தார்களா அல்லது அறபு இலக்கத்தை பிஜே அவர்களை விடவும் நன்கு விளங்கியிருந்தார்களா என்பதைக் காட்டுவதற்காகவே, குறித்த ஹதீஸை அறிஞர்கள் ஆணுக்குரியதாக விளங்கினார்களா அல்லது பெண்ணுக்குரியதாக விளங்கினார்களா என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

1. குறித்த ஹதீஸ் இடம் பெறும் கிரந்தங்களில் ஒன்றான ஸுனன் அபீ தாவுத் எனும் கிரந்தத்தில் இந்த ஹதீஸை இமாம் அபூதாவுத் அவர்கள் باب ما جاء في الذهب للنساءபெண்கள் தங்கம் அணிவது தொடர்பாக இடம் பெற்ற ஹதீஸ்கள்”  என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்கள்.

2. குறித்த ஹதீஸ் இடம் பெறும் மற்றுமொரு கிரந்தமான ஸுனன் அல் பைஹகி அல்குப்றா எனும் கிரந்தத்தின் ஆசிரியர் இமாம் பைஹகி அவர்கள் இந்த ஹதீஸையும் பெண்கள் தங்கம் அணிவது கூடாது என வலியுறுத்தும் சில ஹதீஸ்களையும் باب سياق أخبار تدل على تحريم التحلي بالذهب  “தங்கம் அணிவது கூடாது என்பதைக் காட்டும் ஹதீஸ்கள்” என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்கள்.

3. குறித்த ஹதீஸ் இடம் பெறும் ஸுனன் அபீதாவுத் கிரந்தத்தின் முக்கிய விரிவுரை நூலான “ஔனுல் மஃபூத்” கிரந்தத்தின் ஆசிரியர் முஹம்மத் ஷம்ஸுல் ஹக் அல் அளீம் ஆபாதி அவர்கள் இந்த ஹதீஸின் ஹபீப் எனும் வார்த்தையை விளக்கும் போது,

حبيبه ) أي محبوبه من زوجة أو ولد أو غيرهما ) “அதாவது தனது நேசத்துக் குரிய  னைவி பிள்ளை பேண்றவர்களுக்கு……. என விள‌க்கமளித்துள்ளதையும் பார்க்கிறோம்.

4.குறித்த ஹதீஸுக்கு விள‌க்கமளிக்கும் போது பிரபல்ய அறபு மொழிப் பண்டிதர் முஹம்மத் அல் அமீன் அஷ்ஷின்கீதி (ரஹ்) அவர்கள் தனது அழ்வாஉல் பயான் எனும் அல்குர் ஆன் விரிவுரையில் ( 2\ 355, 356 ) “சிலர் இந்த ஹதீஸில் ஹபீப் எனும் வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளதால் இது ஆணையே குறிக்கிறது, பெண்ணைக் குறிக்குமென்றால் ஹபீபா என இடம்பெற்றிருக்க வேண்டும் எனக் கூறுவது தவறு என்றும் ஹபீப் எனும் வார்த்தை அறபு மொழியில் பெண்ணைக் குறிக்க பரவலாக பயன்படுத்தப் படும் என்பதை ஹஸ்ஸான் பின் தாபித் (ரழி) அவர்களது கவி வரிகளையும் குதையிர் அஸ்ஸா (كثير عزة)  எனும் கவிஞனின் வரிகளையும் ஆதாரம் காட்டி விளக்கியுள்ளதையும் காண்கிறோம்.

இவ்வாறு குறித்த ஹதீஸில் இடம் பெறும் ஹபீப் எனும் பதம் ஆணை மாத்திரம் குறிக்கவில்லை என்பதை வலுப்படுத்தும் அறிஞர்கள், மொழியியளாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவது யார் அரைகுறை இலக்கண அறிவுடன் ஆய்வில் இறங்கியுள்ளார்கள் என்பதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

அத்துடன் ஏற்கனவே குறித்த ஹபீப் எனும் பதம் ஆணுக்கு மட்டுமே பிரயோகிக்கப் படும் என்ற வாதம் வரலாற்றில் எடுத்துவைக்கப்பட்டு அதற்கு தக்க மறுப்பும் வைக்கப் பட்டிருக்கிறதே அதையே நாம் மீண்டும் எந்தவித கூடுதல் விளக்கமோ மறுப்புக்கு மறுப்போ இன்றி அப்படியே வரிக்கு வரி எடுத்து வைக்கிறோமே என்ற கவனம் இல்லாமல் அல்லது இலங்கையில் இருப்பவர்கள் இதையெல்லாம் எங்கே பார்த்திருக்கப் போகிறார்கள் என்ற என்ற மெத்தனப் போக்கில் இந்த வாதத்தை இவர்கள் எடுத்து வைத்திருப்பது வேடிக்கையானது.

அத்துடன் குறித்த ஹதீஸ் பெண்களைத்தான் குறிக்கிறது என்பதை அறபு சமுதாய ஆண்கள்  குறிப்பாக நபித்தோழர் சமூக ஆண்கள் இந்த ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் மாலை, காப்பு ஆகிய ஆபரனங்களை அணியும் வழக்கம் இருந்த்ததில்லை என்பதையும் ஆபரணங்கள் அணியும் வழக்கு அன்றிருந்த பெண்களிடம்தான் இருந்தது என்பதையும் அத்தியாயம் அஸ்ஸுஹ்ருஃப் (அலங்காரம்) பதினெட்டாம் வசனமான,

( أومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين) “ஆபரணங்களில் வளர்க்கப்படும், வழக்கை தெளிவாக எடுத்துரைக்கவும் முடியாத பெண்களையா (அவர்கள் அல்லாஹ்வுக்கென ஆக்குகிறார்கள்)” என்ற வசனம் உறுதி செய்கிறது.

எனவே மேற்படி இலக்கண மற்றும் இலக்கிய சான்றுகளுடன் நோக்கும் போது கீழ் வரும் இவர்களது வார்த்தைகளுக்கு எந்த வித பெறுமானமும் கிடையாது.

“இந்த ஹதீஸில் ஹபீப் என்ற சொல் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படாமல் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பயன்படுத்தப்பட்டால் பெண் என்று அர்த்தம் செய்ய இலக்கணத்தில் இடமில்லை. ஆண் என்ற ஒரு பொருள் மட்டுமே இந்த இடத்தில் கொடுக்க முடியும்.

இதன் படி இந்த ஹதீஸின் பொருள் இது தான்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன வளையத்தை ஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன வளையத்தை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன மாலையை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன மாலையை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அவனுக்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்

நூல் : அபூதாவுத் (3698)

மேலும் இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் ஆண்பாலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.”

அடுத்து இன்னுமொரு இலக்கண ரீதியான தவறான ஒரு விளக்கத்தையும் தொடர்ந்து எழுதுகிறார்கள்.

“அவனுக்கு என்று மொழியாக்கம் செய்த இடங்கள் அனைத்திலும் ஹா என்ற பெண்பால் பயன்படுத்தப்படாமல் ஹுஎன்ற (அவனுக்கு) ஆண்பால் பயன்படுத்தப்பட்ட்டுள்ளது.”

அதாவது இந்த இடத்தில் அவளுக்கு என பெண்பால் பிரதிப் பெயர்ச் சொல்லுக்கு அறபியில் பயன்படுத்தும் “ஹா” பயன்படுத்தப் படாமல் அவனுக்கு என்பதைக் குறிக்கும் “ஹூ” என்பது பயன்படுத்தப் பட்டுள்ளதால் இந்த ஹதீஸ் ஆணையே குறிக்கிறது என்பது இவர்களது (தவறான) விளக்கமாகும்!!.

காரணம் அறபு மொழியில் ஒரு சொல்லின் கருத்தைக் கவனத்திற் கொண்டு அதன் பிரதிப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்துவதும் அல்லது அந்த சொல்லின் கட்டமைப்பைக் கவனத்திற் கொண்டும் அதன் பிரதிப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்துவதும் சர்வ சாதாரணமாகும்.

உதாரணமாக, ஸூறா யூஸுபின் وجاءت سيارة فأرسلوا واردهم  என்ற பத்தொன்பதாவது வசனத்தை எடுத்துக் கொண்டால் “ஒரு பிரயாணக் கூட்டம் வந்தது என  சொல்லின் கட்டமைப்பைக் கருத்திற் கொண்டு அஃறினையாக (அறபு மொழியில் பெண்பால் ஒருமையில்) பயன் படுத்திய அல்லாஹ் அதே தொடரில் “அவர்கள் தங்களது தண்ணீர் பிடித்துவருபவரை அனுப்பினார்கள்” என  அந்த சொல் குறிக்கும் கருத்தைக் கவனத்திற் கொண்டு “ஆண்பால் பன்மையில்” பயன் படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம்.

எனவே குறித்த இடத்தில் இலக்கண ரீதியாக ஹபீப் எனும் பதத்தின் மூலம் நாடப்படுவது பெண் என்பதால் “ஹா” என பெண்பால் பிரதிப் பெயர்ச் சொல்லையும் பயன்படுத்த முடியும் அல்லது ஹபீப் என்ற பதத்தின் சொற் கட்டமைப்பைக் கருத்திற் கொண்டு “ஹூ ” எனப் பயன் படுத்தவும் முடியும் என்பதால் இது ஆணைத்தான் குறிக்கிறது என வாதிடுவதற்கு இதில் எந்த முகாந்திரமும் கிடையாது என்பதுதான் இலக்கண உண்மையாகும்.

அடுத்து ஆய்வாளர்!! “அது போல் உங்களுக்கு என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் ஆணைக் குறிக்கும் “கும்” என்ற் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணைக் குறிக்கும் “குன்ன” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

பயன்படுத்துங்கள் என்ற சொல் அமைப்பும் ஆண்பால் முன்னிலை பன்மையாகத் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த ஹதீஸ் பெண்கள் பற்றியே பேசவில்லை.” என வாதிட முற்படுவதும் தவறாகும்.

காரணம் இந்த ஹதீஸ்  பெண்களுக்கு தங்க நகையை வழங்குபவர்கள், அன்பளிப்பு செய்பவர்கள், அணிவித்து விடுபவர்கள் ஆண்கள் என்பதைக் கருத்திற் கொண்டு கூறப்பட்டதாகும் என்ற விபரம் ஹதீஸிலேயே தெளிவாக உள்ளதால் ஆண் பால் முன்னிலைப் பண்மையைக் குறிக்கும் பிரதிப் பெயர்ச் சொல்லான “கும்” அறபி வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது.

அத்துடன் பயன்படுத்துங்கள் என்ற சொல் அமைப்பே  ஹதீஸில் இடம் பெறவில்லை என்பதுடன் عليكم என்ற வார்த்தையில்தொக்கி நிற்கும் ஏவல் பயன் படுத்துங்கள் (அணியுங்கள் ) என்பதல்ல அணிவியுங்கள் என்பதே என்ற விபரத்தையும் ஹதீஸின் ஆரம்பவரிகளான  “அணிவிக்கட்டும்” என்ற பதம் உணர்த்துகிறது.

அடுத்து ஆய்வாளர் இன்னுமொரு தவறான வாதத்தை முன்வைத்து அந்த தவறான வாதத்தால் ஏற்படும் சிந்தனைச் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்வதையும் பார்க்கிறோம்.

“எனவே இந்த ஹதீஸ் பெண்கள் பற்றியே பேசவில்லை. ஆண்கள் தங்க  நகை அணியக் கூடாது; வெள்ளி நகை அணியலாம் என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை.”

மேற்படி ஹதீஸ் பெண்கள் தங்க நகை அணிவது பற்றித்தான் பேசுகிறது என்பதை தக்க சான்றுகளுடன் ஏலவே நிரூபித்து விட்டோம்.

ஆனால் இல்லை இந்த ஹதீஸ் பெண்கள் தங்க நகை அணிவது பற்றிப் பேசவில்லை என தவறாக வாதிட முற்பட்டவர் கூறும் முடிவைப் பாருங்கள்.

“ஆண்கள தங்க  நகை அணியக் கூடாது; வெள்ளி நகை அணியலாம் என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை.” என்ற வார்த்தையின் படி ஆண்கள்  ஹதீஸில் கூறப்பட்ட வெள்ளி நகைகளான காப்பு!!, மாலை!!! மற்றும் வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்கள் செய்து) விளையாடுங்கள் என்ற வழிகாட்டலும் ஆண்களையே குறிக்கிறது என்ற இவர்களது ஆய்வின் முடிவின் படி கொலுசு!!, காதணி  என்பதெல்லாம் ஆண்கள் அணிந்து திருநங்கைகள் போல் திரியலாம் என்பதுதான் இவர்களது ஆய்வின்!!!?  சுருக்கம்.

இவர்களது தடுமாற்றங்களுக்கு அளேவே இல்லை என்பது போல் அடுத்த வரியும் அமைந்திருப்பதைப் பாருங்கள்

“ஆண்கள் தஙக நகை அணிவதற்கு அனுமதிக்கும் பல ஹதீஸ்கள் உள்ளன.  அதைத் தான் இந்த ஹதீஸும் சொல்கிறது.”

இந்த வரிகள் மூலம் ஆய்வாளர்!!  என்ன சொல்ல வருகிறார்? ஆண்கள் காப்பு, மாலை போன்ற வெள்ளி நகை மாத்திரமல்ல. தங்க நகைகளும் அணிந்து கொள்ளலாம் என்று சொல்லவருகிறாரா?! அல்லது  தாருல் அதரிலிருந்து அதன் பிரச்சாரகர்கள் தற்போது ராஜினாமா செய்துவிட்டார்கள், எனவே இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி மறுப்பு என்ற பெயரில் எதாவது ஒண்றை வெளியிட்டால் யாரும் பதிலளிக்கமாட்டார்கள் என்ற (அசட்டு) தைரியத்தில் அவசர அவசரமாக மறுப்பை வெளியிட்டதனால் “வெள்ளி நகை” என இடம் பெற வேண்டிய இடத்தில் தங்க நகை என தவறுதலாக எழுதப்பட்டுவிட்டதா என்பதை ஆய்வாளர்தான் விளக்க!!  வேண்டும்.

முதல் பந்தியிலே “ஆண்கள் தங்க நகை அணிவதற்கு அனுமதிக்கும் பல ஹதீஸ்கள் உள்ளன” என எழுதியவர் அடுத்த பந்தியிலே என்ன எழுதுகிறார் என்பதைப் பாருங்கள்

“(ஆண்கள் தஙக நகை அணியக் கூடாது என்ற ஹதீஸ் சரியானது என்று இவர்களே குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே எடுத்துக் காட்ட அவசியம் இல்லை.)”!!

இவ்வாறு தாங்களும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்ப முயற்சிக்கும் பணிக்குத்தான் இவர்கள் அகராதியில் “குழப்பங்ளை தெளிவு படுத்துதல்” என்று அர்த்தமோ!!.

தொடர்ந்தும் ஆய்வாளர்!! பின்வருமாறு எழுதுகிறார்

“அரபு இலக்கனத்துக்கு மாற்றமாக் பொருள் செய்து விட்டு அதை இன்னொரு வகையிலும் இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

அது ஆணைத் தான் குறிக்கின்றது என்றால் ஆண்களுக்கு தங்கம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டு விட்டதன் பின்னால் அழ்ழாஹ்வின் துதர் மீண்டும் அதனைக் கூறினால் அவ்வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றது.

இதுவும் அறியாமையின் காரணமாக எடுத்து வைக்கப்படும் வாதமாகும்.

தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று ஒரு தடவை கூறி விட்டதால் இன்னொரு தடவை அதைக் கூறுவது அர்த்தமற்றது என்று சொல்வார்களா? ஒரு விஷயம் ஐம்பதுக்கு மேற்பட்ட வார்த்தைகளில் ஹதீஸ்களில் கூறப்ப்ட்டுள்ளன. 49 தடவை கூறியது அர்த்தமற்றது என்பார்களா? ஒரு வாக்கியத்தில் ஒரு நேரத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படும் போது இரண்டு அர்த்தத்துக்கு இடம் இருந்தால் அவ்வாறு கூறுவதில் அர்த்தம் இருக்கும்.

இவர்கள் கூறுவது போல் பொருள் கொள்ள இலக்கணத்தில் இடமில்லை. மேலும் தங்கத்தை அனுமதிக்கும் மற்ற ஹதீஸ்கள் இந்த் ஹதீஸின் ஒரு பகுதி அல்ல. எனவே இவர்கள் கூறும் இந்தக் காரணமும் அர்த்தமற்றதாகும்.

அடுத்து இன்னொரு காரணத்தையும் முன் வைக்கிறார்கள்”

மேற்படி வாதம் முழுவது ஹபீப் எனும் பதத்திற்கு ஆண் என்ற அர்த்தம் மட்டுமே உள்ளது என்ற பிழையான அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ளதால் அந்த அடிப்படை தவறு என நாம் ஏலவே விளக்கியுள்ளதால் இதற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

எனினும் இதில்  சட்டக் கலை பற்றிய ஒரு பிழையான அடிப்படையை இவர்கள் இங்கு “மேலும் தங்கத்தை அனுமதிக்கும் மற்ற ஹதீஸ்கள் இந்த ஹதீஸின் ஒரு பகுதி அல்ல” என்ற வார்த்தை மூலம் தங்கத்தின் வடிவங்களை தடை செய்யும் ஹதீஸ் தங்கத்தை அனுமதிக்கும் ஹதீஸின் ஒரு பகுதியாக இருந்தால்தான் ஏற்க முடியும் என்று இவர்கள் எழுதியிருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

அடுத்து ஆய்வாளர் நாம் எடுத்து வைத்த ஹபீபா என பெண்பால் சொற்கட்டமைப்பில் இடம் பெற்ற அறிவிப்பின் அறிவிப்பாளர்களில் ஒருவரான “அப்துர் ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார்” என்பவர் பற்றி நாம் குறிப்பிட்டிருந்த விபரங்களை அப்படியே எழுதிய பின் ஹதீஸ்கலை தொடர்பான தனது அறியாமையை பின்வருமாறு எழுதியுள்ளார்.

“இது போன்ற தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் என்பது இந்த ஹதீஸை மேற்கோளாகக் காட்டும் இவர்களுக்கே தெரிகிறது. இதனால் தான் இதை முதன்மை ஆதாரமாகக் காட்டாமல் வலுப்படுத்தும் துணை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.”

ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையின் உறுதியில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஹதீஸ்கள் அனைத்தும் அதன் உறுதியில் ஒரே அளவு சமனாகக் காணப்படாது என்பதும் சில ஹதீஸ்கள் மிக மிக உறுதியான அறிவிப்பாளர் வரிசையுடனும் சில ஹதீஸ்கள் அதை விட சற்று பலத்தில் குறைந்த ஆனால் ஏற்றுக் கொள்ளத் தக்க தரத்தில் இருக்கும் என்பதும் ஹதீஸ் கலையில் யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உன்மையாகும்.

மேலும் “இது போன்ற தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் என்பது இந்த ஹதீஸை மேற்கோளாகக் காட்டும் இவர்களுக்கே தெரிகிறது.” என்பது இவர்களின் மித மிஞ்சிய கற்பனையாகும்.

ஏனெனில் நாம் இதை பலவீனம் என்று குறிப்பிடவில்லை. மாறாக “அந்த அறிவிப்பையும் (உங்களைப் போன்ற) சிலர் பலவீனப்படுத்த முயற்சிக்கலாம்” என்றே குறிப்பிட்டுள்ளோம்.

அடுத்து நாம் இந்த அறிவிப்பை முதல் ஆதாரமாகக் காட்டாமல் இதை வலுப்படுத்தும் துணை ஆதாரமாகக் குறிப்பிட்டதன் நோக்கம் இதை விடவும் உறுதியில் பலம் கூடிய ஹதீஸ் இருப்பதால் வாதங்களை முன்வைப்பவர் முதலில் தனது மிகப் பலமான ஆதாரத்தையே வைக்க வேண்டும் என்ற ஒரு எளிய நடைமுறைக்காகவே. இதைப் புரிந்து கொள்ளாத இவர் தொடர்ந்தும் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“இவர்கள் கூறுகிற படி இந்த அறிவிப்பாளர் ஓரளவு நம்பிக்கையாளர் என்று வைத்துக் கொண்டாலும் இந்த அறிவிப்பு பலவீனமானது என்பது உறுதியாகிவிடும்.”

அதாவது ஆய்வாளரின்!! பார்வையில் இந்த அறிவிப்பில் இடம் பெறும் “அப்துர் ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார் ” என்பவர் ஓரளவுக்கும் நம்பிக்கையாளர் அல்ல என்பதை “இவர்கள் கூறுகிற படி இந்த அறிவிப்பாளர் ஓரளவு நம்பிக்கையாளர் என்று வைத்துக் கொண்டாலும்……… என்ற கூற்றிலிருந்து எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

உன்மையில் இந்த இடத்தில் குறித்த அறிவிப்பாளரான “அப்துர் ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார் “ என்பவர் இமாம் புஹாரி அவர்களின் ஸஹீஹுல் புஹாரியின் அறிவிப்பாளர்களில் ஒருவராவார். இவர் அறிவிக்கும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் புஹாரியில் மாத்திரமே இடம்பெறுவதைப் பார்க்கிறோம். ஏன் அதில் சில ஹதீஸ்களை இவர்களே தங்களது பேச்சுகளிலும் எழுத்துகளிலும் பயன் படுத்தியுள்ளார்கள்.எனவே ஆழம் தெரியாமல் காலை விட்ட இவர்கள் குறித்த அறிவிப்பாளர் பலவீனமானவர்தான் என்பதை திட்டவட்டமாக அறிவிக்கட்டும். அப்போது இது பற்றி மேலதிகமாக நாம் விரிவாக விளக்குவோம். குறித்த விடயம் நேரடியாகவே எமது தலைப்புடன் சம்பந்தப் படாததால் இந்த இடத்தில் இந்த அளவுடன் மட்டும் சுருக்கிக் கொள்கிறோம்.

அடுத்து ஆய்வாளர்!! இவ்வாறு கூறுகிறார்

“ஏனெனில் இவரை விட நம்பகமானவர் அறிவிக்கும் அறிவிப்பில் ஹபீப் என்று ஆனணக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் மட்டும் பெண்ணைக் குறிக்கும் ஹபீபா எனற் சொல்லைக் கூறுகிறார். எனவே நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக இவர் அறிவித்திருக்கும் போது இவரது அறிவிப்பு நிற்காது.”

மேற்படி வாதமும் தவறானது. காரம் இவரைவிட நம்பகமானவர் அறிவிக்கும் ஹபீப் எனும் வார்த்தையே பெண்களைக் குறிக்கும் என்பதை நாம் நிரூபித்துவிட்டதால் இந்த அறிவிப்பும் அதே கருத்தை வலியுறுத்துவதால் இரண்டு அறிவுப்புகளுக்குமிடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது என்பதே உண்மையாகும்.

அடுத்து “எனவே பெண்கள் தங்க நகை அணியலாம் என்பதற்குத் தெளிவான அனுமதி அளிக்கும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அதைத் தடை செய்யும் வகையில் ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை.” என்ற இவரது கூற்றுக்கும் எந்தவித அர்த்தமுமில்லை. நாம் தங்க வளையல் நகை பெண்கள் அணியக்கூடாது என்பதற்கு ஆதாரமாக எடுத்து வைத்த ஹதீஸ்ளுக்கு இவர்கள் அளித்த விளக்கங்கள்தான் தவறு என்பதால் பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற பொதுவான ஹதீஸை வளையல் நகை கூடாது என்ற குறிப்பான ஹதீஸுடன் சேர்த்தே அமுல்ப‌டுத்த வேண்டும் என்பது தான் உன்மையும் யதார்த்தமுமாகும்.

பின்பு

“அடுத்து இன்னொரு தத்துவத்தையும் இவர்கள் கூறுகிறார்கள்.

எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் அறியாத, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்த ஒரு விடயம்தான் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் காப்பு, மாலை உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமாகும். மாறாக, வளையல் அல்லாத தங்க நகைகளை தாரளமாக அணிந்து கொள்ளலாம்.

என்பது இவர்களின் அந்தத் தத்துவமாகும்.”

என எழுதிய ஆய்வாளர்!! பின்வருமாறு வரட்டுத் தத்துவம் ஒன்றையும் கூறுகிறார்.

“எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். தங்கம் என்பது ஒரு உலோகத்தின் பெயரே தவிர ஒரு வடிவத்தின் பெயர் அல்ல அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இதிலிருந்து நமக்கு விளங்குகிறது.”

அதாவது, ஏதோ அறிவுபூர்வமான வாதம் ஒன்றை முன்வைப்பது போல் தங்கம் பெண்களுக்கு ஹலால் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்ற வரட்டுத் தத்துவம்தான் அது.

இந்த வாதத்தின் அபத்தத்தை அறிய பின்வரும் நபிமொழியைக் கவனியுங்கள்

صحيح مسلم    [ جزء 3 -  صفحة 1634 [

وحدثني زيد بن يزيد أبو معن الرقاشي حدثنا أبو عاصم عن عثمان ( يعني ابن مرة ) حدثنا عبدالله بن عبدالرحمن عن خالته أم سلمة قالت :قال رسول الله صلى الله عليه وسلم : من شرب في إناء من ذهب أو فضة فإنما يجرجر في بطنه نارا من جهنم

“யார் தங்க, வெள்ளிப் பாத்திரத்தில் அருந்துகிறாரோ அவர் நரக நெருப்பை தனது வயிற்றில் வார்த்துக் கொள்கிறார்.

அறிவிப்பாளர்: உம்மு ஸலமா(ரழி)

ஆதாரம்     : ஸஹீஹ் முஸ்லிம்

ஆக பெண்களுக்கு தங்கம் அனுமதி என்பதால் அது எந்த வடிவில் இருந்தாலும் பிரச்சனையில்லை என்று கூறும் இவர்கள் பெண்களுக்கு தங்க வெள்ளிப்பாத்திரங்களை உபயோகிப்பதற்கும் அனுமதிப்பார்களா அல்லது அந்த ஹதீஸ் பொதுவானது இந்த ஹதீஸ்  பாத்திர வடிவங்களைப் பற்றி குறிப்பானது எனக் கூறி பாத்திர வடிவங்கள் கூடாது என்று கூறப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எனவே குழப்பங்களை தெளிவுபடுத்துகிறோம் என்ற பேரில் ஹதீஸின் போதனைகளுக்கெதிராக மனோ இச்சைப் படி வாதம் எழுப்புபவர்கள் முஃதஸிலா வகையறாக்களை விட சமுதாயத்துக்கு ஆபத்தானவர்கள் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஆனால் எம்மைப் பொறுத்தவரை அனைத்தும் நபி(ஸல்) அவர்களது ஹதீஸ்கள்தான், வழிகாட்டல்தான் என்ற அடிப்படையில் பொதுவாக இடம் பெற்றுள்ள பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப் பட்டுள்ளது என்ற ஹதீஸை ஏற்றுக்கொள்வதுடன், முன்னர் குறிப்பிட்ட பாத்திர வடிவ ஹதீஸை வைத்து பெண்களுக்கு தங்கம் பாத்திர வடிவில் இருந்தால் கூடாது என்றுதான் அது தொடர்பான குறிப்பான ஹதீஸ் இடம் பெற்றிருப்பதால் கூறுகிறோம். அப்படித்தான் சகல அறிஞர்களும் இயக்க, மத்ஹபு வேறுபாடுகளுக்கும் அப்பால் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இதே முறையில் விளங்க வேண்டிய, அமுல் படுத்த வேண்டிய வளையல் நகை ஹதீஸ்களுக்கு மாத்திரம்  தவறான விளக்கங்கள் கொடுக்க முற்பட்டு தடுமாறுகிறார்கள்.

ஆக இவர்களது இரண்டாவது தொடரின் அடிப்படை வாதமான  “ஹபீப்” என்ற பதத்திற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம் என்ற வாதத்தின் பலவீனத்தை இவர்களே உணர்ந்ததன் காரனமாக புதிதாக இரண்டு ஹதீஸ்களை எடுத்து வைத்துள்ளார்கள்.

அவை,

“யமன் நாட்டைச் சார்ந்த பெண்மனி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வட்ட வடிவமானவை. வட்ட வடிவத்தில் தங்கம் அணிவது கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வட்டமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

பெண்கள் வட்ட வடிவத்தில் தங்கம் அணியக் கூடாதென்றால் வட்ட வடிவத்தில் இருந்த தங்க மோதிரத்தை தனது பேத்திக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்துக் கொடுத்திருப்பது தங்கம் முழுவதும் பெண்களுக்கு ஹலால் தான். இதில் வடிவம் ஒரு பிரச்சனையில்லை என்பதையே காட்டுகிறது.”

இங்கு இவர்கள் குறிப்பிட்டுள்ள முதலாவது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை என்ன, எந்த கிரந்த்ததில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்கள் இல்லாமல் இவர்கள் வெறுமனே குறிப்பிட்டுள்ளதால் நாமும் அவை பற்றிய விரிவான விளக்கத்துக்குள் நுழையாமல் இரு ஹதீஸ்களுக்கும் சேர்த்தே ஒரு பொதுவான விளக்கத்தை அளிக்கிறோம்.

மேற்படி இரு ஹதீஸ்களும் கூறுவதன் சுருக்கம் “நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தங்க வளையல் நகைகளை அணிந்துள்ளார்கள்” என்பதுதான்.

மேற்படி நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் தங்க நகைகள் அணிந்துள்ளார்கள் என்ற செய்தி “தங்கத்தை வைத்திருப்பதே கூடாது” என்று இவர்கள் தங்களது முதல் தொடரிலே எடுத்துவைத்த (தவறான) வாதத்துடன் முரண் படுகிறதே என்று இவர்களிடம் நாம் கேட்டால் “இது தடை நீக்கப் பட்டதற்கு பிந்தைய காலத்துக் குரியது” என்ற பதிலைத்தான் சொல்வார்கள்.

அதே போல் தான் நாமும் மேற்படி ஹதீஸ்கள் பெண்களுக்கு தங்கம் பொதுவாக அனுமதிக்கப் பட்டிருந்த, வளையல் நகை தடை செய்யப்படுவதற்கு முன்னுள்ள காலத்துக்குரியது என்று கூறுகிறோம்.

இது தொடர்பாக மேலதிக வாதங்களை முன்வைத்தால் சட்டக் கலையில் இரு ஆதாரங்கள் முரண்படும் போது எவ்வாறு அணுக வேண்டும் என்ற தலைப்பில் விரிவாக விளக்குவோம் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

அடுத்து இவர்கள் கூறும் “மேலும் வடிவம் தான் பிரச்சனை என்றால் முதல் தொடரில் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தங்க மாலையை வேறு வடிவமாக மாற்றுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது மகளுக்குக் கூறி இருப்பார்கள்.”

“இவர்கள் கூறுகின்ற இவ்விளக்கத்தைக் கவனிக்கும் போது இது அறிவற்ற வாதம் என்பதை உணரலாம். வட்ட வடிவத்தில் உள்ள தங்கம் கூடாது. மற்ற வடிவத்தில் உள்ள தங்கம் கூடும் என்று கூறினால் தங்கம் ஆகுமானது தான். வடிவம் ஆகுமானதல்ல என்ற கருத்து வருகிறது. எனவே வடிவம் தான் இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது.”

“தங்கத்தில் இவர்கள் தடை செய்கின்ற வடிவம் வெள்ளியில் இருந்தால் அதை இவர்கள் அனுமதிக்கிறார்கள். தடை செய்வதில்லை. இந்தத் தடுமாற்றம் ஹலால் ஹராம் சம்பந்தமான விஷயத்தில் வந்திருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.”

என்ற கூற்றுகளுக்குக்கு எமது இரண்டாம் தொடரிலேயே தக்க பதில் எழுதியுள்ளோம்.

அத்துடன் தங்கம் கூடும் என்றால் அதன் அனைத்து வடிவமும் கூடுமாக இருக்க வேண்டும் என்ற இவர்களது வரட்டுத் தத்துவத்திற்கும் தங்கத்தின் பாத்திர வடிவம் பற்றிய ஹதீஸைக் குறிப்பிட்டு ஏலவே பதில் சொல்லிவிட்டோம்.

எனவே, இத்தகைய தடுமாற்றங்கள் இவர்களுக்கு ஹறாம் ஹலால் விடயத்தில் அதுவும் ஒரு நிலைப்பாடு தொடர்பாக ஆய்வு செய்த வேளையில் இடம் பெற்றுள்ளது எமக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது.

எனவே இறுதியாகவும், உறுதியாகவும் வாசகர்களுக்கு இரு விடயங்களை சுட்டிக்காட்டி முடித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

முதலாவது நாம் எழுதிய மறுப்புக்கு பிஜே அவர்கள் தங்கவளையல் நவ்பருக்கு மறுப்பு என்ற தலைப்பில் பதிலளித்துள்ளார்கள். இப்பொழுது அவர்கள் முதலில் வெளியிட்ட இரு ஆய்வுத் தொடர்களுக்கும் மறுப்பெழுதும் தருணம் என்பதால் அதை தனியாக நாம் அலச உள்ளோம். எனவே அதில் காணப்படும் தவறுகளை, பதில் சொல்லாமல் விட்டு விட்ட அம்சங்களை, பதில் என்ற பேரில் மழுப்பியுள்ள விடயங்களை முடியுமான வரை விரைவில் வாசகர்கள் கவனத்திற்கு கொண்டுவருவோம்.

இரண்டாவது, எமது முதல் தொடரில் நாகரிகமாக கண்ணியமாக எழுதிய நாம் பிஜே அவர்களது மறுப்பில் காணப்பட்ட அநாகரிகமான , இரண்டாம் தர எழுத்து நடையை கவனத்திற் கொண்டே பிந்தைய இரு தொடர்களிலும் அவரது பாணியிலேயே பதில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால்தான்  இவ்வாறு எழுத வேண்டி ஏற்பட்டுவிட்டது. இது பற்றி எமது இரண்டாம் தொடரில் பிஜே அவர்களுக்கும் சுட்டிக்காட்டியுள்ளோம். அத்துடன் ஒரு சுமுகமான எழுத்தாடலுக்கும் கருத்தாடலுக்கும் இம்முறை ஆரோக்கியமானதல்ல என்பதையும் இதனால் அடையப்படும் விளைவுகள் மிகக் குறைவே என்பதையும் நாம் நன்கறிவோம். எனவே எமது வேண்டு கோளை ஏற்று பிஜே அவர்கள் அவரது எழுத்து நடையை மாற்றிக் கொண்டால் நாமும் நாகரிகமாக எழுதுவோம். அவர் இதே பாணியில் தொடர்ந்து எழுதினால் நாமும் அவரது பாணியிலேயே பதில் சொல்வோம் என்பதை வேதனையுடன் அறியத்தருகிறோம்.

இப்படிக்கு,

மௌலவி எம் ஐ எம் நௌபர் (காஷிபி),

பிரச்சாரகர்,

தாருல் அதர் அத்த அவிய்யா,

காத்தான் குடி,

இலங்கை.

மொபைல்:00974 3283253

மின்னஞ்ஞல்: nowf...@hotmail.com.

skype ID nowfer78

(எஸ் எம் எஸ் மூலம் நேரத்தை உறுதி செய்தபின் உரையாடலுக்கு வரலாம்)

 
DHARUL ATHAR ADH DHAVIYYA,
(மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன் அஸ்ஸுன்னாஹ் அடிப்படையிலான பிரச்சார அமைப்பு)
P.O.BOX 19,
KAPPAL ALIM LANE,
NEW KATTAN KUDY 02
PHONE: 065-2247900
WEB: www.dharulathar.com
Email: dharu...@yahoo.com



Reply all
Reply to author
Forward
0 new messages