Refutation of Annonymous Leaflet against Zahran Moulavi

27 views
Skip to first unread message

DHARUL ATHAR

unread,
Jul 15, 2009, 9:29:11 AM7/15/09
to google group
 
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே!
 

மிக அண்மையில் எமது அமைப்பின் பிரச்சாரகர் மெளலவி ஸஹ்றான்(மஸ்ஊதி)அவர்களை விமர்சித்து மிக அண்மையில் எமது அமைப்பின் பிரச்சாரகர் மெளலவி ஸஹ்றான்(மஸ்ஊதி)அவர்களை விமர்சித்து மொட்டைத் துண்டுப்பிர‌சுர‌ம் ஒன்று வெளியிட‌ப்ப‌ட்டிருந்த‌தை அன்ப‌ர்க‌ள் அறிந்திருக்க‌லாம்.

 

அரசினர் ஆசிரியர் கலாசாலையில் என்ன நடை பெற்றது? குத்து விளக்கேற்றியது யார்? குத்து விளக்கிற்காக எழும்பி நின்றது யார்? என்ற விபரங்களை தெளிவாக அறியாத சிலர் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக‌ வீணான அவதூறுகளைப் பரப்பி அதில் இன்பம் காண்கின்றனர்.

 
இந்த அவதூறைப் பரப்பும் பணியில் காத்தான்குடியைச் சேர்ந்த இரு தஃவா அமப்புக்கள் அதிக பங்காற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது பற்றிய விபரத்தை மெளலவி ஸஹ்றான்(மஸ்ஊதி) அவர்களே மிக விரைவில் ஓடியோவாக தெளிவுபடுத்தவுள்ளார்கள்.
 
இந்த மொட்டைத் துண்டுப் பிரசுரத்திற்கு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையைச் சேர்ந்த முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்கள் அமைப்பு வெளியிட்ட மறுப்புப் பிரசுரம் இங்கே பதிப்பிக்கப்படுகின்றது.
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ
O ye who believe! if a wicked person comes to you with any news, ascertain the truth, lest ye harm people unwittingly, and afterwards become full of repentance for what ye have done
 
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்¢ (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்¢ பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். .[quran 49:6]

அல்லாஹ் போதுமானவன்!
 
--------------------------------------------
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் தாபகர் தின விழாவும், அல்ஹாபிழ் மௌலவி M.C.M ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்களும்.

கடந்த 03.07.2009ம் திகதியிடப்பட்டு 'தாருல் அதரினால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்' எனும் தலைப்பில் காத்தான்குடியில் வெளியிடப்பட்ட மொட்டைத் துண்டுப் பிரசுரத்திற்கு பதிலளிக்குமுகமாக இத்துண்டுப் பிரசுரம் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முஸ்லிம் மஜ்லிஸினால் வெளியிடப்படுகின்றது.

எங்களது கலாசாலையில் இவ்வருடம்தான் 60க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் முதற் தடவையாக ஆசிரியர் பயிற்சி பெற்று வருகின்றோம். இதில் கனிசமான மாணவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இக்கல்லூரியில் ஓர் முஸ்லிம் மஜ்லிஸை அமைக்கும் அனுமதியை எங்கள் அதிபர் வழங்கினார். இதற்காக அதிபருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய மார்க்கப்பிரச்சார அமைப்புக்களின் கருத்து முரண்பாடுகள் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஸஹ்றான் மௌலவியைப் பற்றியும் அவரது அறிவு மற்றும் பேச்சாற்றல் பற்றியும் பல வழிகளில் அறிந்திருந்தோம். அதனால் எமது அதிபரின் இன நல்லிணக்க சிந்தனையால் இம்முறை கட்டாயம் நல்லொதொரு மௌலவியையும் அழைக்க எம்மிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாங்கள் ஸஹ்றான் மொளலவியை ஆசியுரை எனும் தலைப்பில் இஸ்லாமிய மார்க்கத்தில் கல்விக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மற்றும் கல்வியியலாளர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் போன்ற விடயங்கள் பற்றி சொற்பொழிவாற்ற அழைத்திருந்தோம். இதற்கேற்ப மௌலவி அவர்கள் சிறந்ததொரு சொற்பொழிவை ஆற்றிச்சென்றார்கள். மேற்குறித்த மொட்டைத் துண்டுப் பிரசுரத்திற்கு பதிலளிக்க வேண்டுமாயின் நிகழ்வின் ஆரம்ப கலாசார நிகழ்வுகள் தொடக்கம் கூறவேண்டியுள்ளது. 

1. பிரதான வாசலிலிருந்து மதப்பெரியார்களுக்கும், பிரமுகர்களுக்கும் மாலை அணிவித்து இசைக் கருவிகள்  வாசித்து அழைத்து வரப்பட்ட போது ஸஹ்றான் மௌலவி அவர்கள் இதில் தாங்கள் கலந்து கொள்ள முடியாது எனக்கூறி வாகான தரிப்பிடத்தில் நின்றதைக் கண்ட எமது கலாசாலை உத்தியோகத்தர்கள் மௌலவி அவர்கள் கவனிக்கப்பட்டு கௌரவிக்கப்படவில்லை என மனவேதனையடைந்தனர்.

2. இதனைத் தொடர்ந்து தாபகர் நல்லையாவின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நிரலில் ஸஹ்றான் மௌலவி அவர்களின் பெயர் இருந்தும் இதில் தான் கலந்து கொள்ள முடியாது என தவிர்த்துக் கொண்டார்.

3. மதப்பெரியார்களையும் அதிதிகளையும் வரவேற்கும் வைபவத்தில் பன்னீர் தெளித்து சந்தன, குங்குமப்பொட்டு வைத்து பெண்கள் வரவேற்றபோது அதில் பங்கேற்காத ஸஹ்றான் மௌலவி பிரதான மண்டபத்தினுள் நுழைய முற்பட்ட போது  கலாசாலையின் ஆண் உத்தியோகத்தர் ஒருவர் நிகழ்ச்சியின் இலட்சினை ஒன்றினை மௌலவி அவர்களின் ஆடையில் குத்திவிட்டார். (இதில் ஒரு பெண்மனி மௌலவி அவர்களின் ஆடையில் இலட்சனையை குத்திவிட்டார் என்பது வீண் அபாண்டமாகும்)

4. இதனைத் தொடர்ந்து மண்டபத்தினுள் குத்துவிளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கையில்; மௌலவி அவர்கள் மண்டபத்தினுள் நுழைந்த போது அவருக்கு முன்பு மண்டபத்தினுல் சென்ற மதப்பெரியார்கள், அதிதிகள் மாணவர்கள் உற்பட அனைவரும் தத்தமது இருக்கைகளின் முன் நின்றவாறே காணப்பட்டனர். இதற்காகவே மௌலவி அவர்களும் தமது இருக்கையின் முன் நின்றார்கள். இதில் வீண் அபாண்டம் சுமத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட மொட்டைத் துண்டுப்பிரசுரத்தில் இடப்பட்டுள்ள 1ம், 2ம் 4ம் புகைப்படங்கள் சித்தரிக்கின்றன. ஏற்கனவே மௌலவி அவர்கள் எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க குத்து விளக்கேற்றவுமில்லை, அதற்காக அவரது பெயர் அழைக்கப்படவுமில்லை.

5. குறித்த தினத்தில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வானது குறித்த மொட்டை பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டவாறு ஜனன விழா அல்ல. மாறாக தாபகர் தினம் எனும் விழாவே நடைபெற்றது. எனினும் இதில் நடைபெற்ற இசையுடன் கூடிய நடன நிகழ்வு ஆரம்பமாகும் வேளையில் ஸஹ்றான் மௌலவி அவர்கள் மண்டபத்திலிருந்து வெளியேறியதையும் நாம் நன்கறிவோம்.

6. எமது கலாசாலையானது பெரும்பாண்மையாக இந்து சமய மாணவர்களையே கொண்டுள்ள காரணத்தால் அங்குள்ள கேட்போர் கூட அரங்கும் இந்து மத கலாசாரத்தை தழுவியதாகவே அமைக்கப்பட்டு இருக்கிறது. இம்மேடையிலேயே குறிப்பிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. இம்மேடையில் மௌலவி ஸஹ்றான் அவர்கள் உரையாற்றியது குற்றம் என எவ்வகையிலும் எம்மால் அறியமுடியவில்லை. (இதனையே மொட்டைத் துண்டுப்பிரசுரத்தில் உள்ள 3வது புகைப்படம் சுட்டிக்காட்டுகிறது)

அன்பார்ந்த பொதுமக்களே! ஸஹ்றான் மௌலவி அவர்களை நாங்கள் எமது கலாசாலைக்கு அழைத்ததன் பிரதான நோக்கம் எம்மோடுள்ள மாற்றுமத சகோதரர்களின் காதில் எமது இஸ்லாமிய சிந்தனைகளும், தகவல்களும் கல்வி தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாடுகளும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டுமென்பதே அன்றி வேறில்லை. எனினும், இவ்வாறான மொட்டைத்துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருப்பதானது இக்கல்லூரியில் பயிலும் இந்து மாணவர்களின் மத்தியில் இஸ்லாம் பற்றிய பின்னடைவான சிந்தனையை தோற்றுவித்துள்ளதுடன், முஸ்லீம்களாகிய எமக்கு மிகப்பெரும் தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
முஸ்லிம் மஜ்லிஸ், அரசினர் ஆசிரியர் கலாசாலை, மட்டக்களப்பு.
11.07.2009


Zahran Moulavi at Training College

 
DHARUL ATHAR ADH DHAVIYYA,
(மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன் அஸ்ஸுன்னாஹ் அடிப்படையிலான பிரச்சார அமைப்பு)
P.O.BOX 19,
KAPPAL ALIM LANE,
NEW KATTAN KUDY 02
PHONE: 065-2247900
WEB: www.dharulathar.com
Email: dharu...@yahoo.com


Reply all
Reply to author
Forward
0 new messages