உயிரணுக்களுக்கு இடையே செய்திகளை பரிமாற்ற பயன்படும் cytokines எனப்படும் சமிக்ஞைகள் காரணமாக பல உடலியங்கள் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் அறிவோம், அவற்றுள் உளவியல் சார்ந்த உடலியங்கியல் [Psychophysiology] என்னும் துறையுடன் தொடர்புடைய முக்கியமான உளவியல் வேறுபாடு எண்ண ?
பதில்: மன அழுத்தம்
விளக்கம் :
உயிரணுக்களுக்கு இடையே செய்திகளை பரிமாற்ற பயன்படும் cytokines எனப்படும் சமிக்ஞைகள் பயன்படுகின்றன, அவற்றினை பல சமயங்களில் மருத்துவர்கள் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த பயன்படுத்துவது வழக்கம். ஆனால் துரடிர்ஷ்டவிதமாக சில சமயங்களில் அவற்றினை ஏற்ற நோயாளிகளின் மனநிலையில் மாறுதல்களை உளவியல் நிபுணர்கள் கண்டுள்ளனர்.
நோய் எதிர்ப்பு செயல்பாட்டினை முன்னேற்ற பயன்படுத்திய ஒருவகை சிகிச்சை முறை இவ்வாறு எதிர்பாராத விளைவை ஏன் ஏற்படுத்துகிறது ? என அறிஞர்கள் ஆய்ந்த பொழுது, பல உண்மைகளை தெரிய வந்தன.
மனித மூளை மண்டலமும் [ Nervous System ] , மனித இரத்த மண்டலமும் [ Blood System ] வெவ்வேறாக காணப்பட்டாலும் , அவை இரண்டிற்கும் இடையே நிறைய மர்ம முடிசுகள் உள்ளன என்பது இன்றைய அறிவியல் நமக்கு கற்றுத்தரும் பாடம்.
Melanoma , ஈரல் அழற்சி [ Hepatitis ] , AIDS , போன்ற நோய்களில் வைத்திய முறையாக ,உயிரணுக்களுக்கு இடையே செய்திகளை பரிமாற்ற பயன்படும் cytokines எனப்படும் சமிக்ஞைகள் பயன்படுகின்றன.
மனதளவில் ஏற்படும் மாறுதல்களை நாம் கவனமாக காணவேண்டும் அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது, உளவியல் மாறுதல்கள் அதிகமாக உள்ள நிலையில் பல நோயாளிகள் உச்சமாக தற்கொலை செய்துள்ள செய்திகளும் உள்ளன.