சராசரியான மனித மூளையின் எடை 1500 கிராம் ஆகும்.
மூளையின் அளவு என்று பார்க்கையில் பெண்களின் மூளை 1130 கிராம் ,ஆண்களின்
மூளை 1260 கிராம் எடை உள்ளதாக இயற்கை வடிவமைத்து உள்ளது.
மேலும் ஆண்களின் தலை பகுதி பெண்களின் தலை பகுதியினை விட இரண்டு மடங்கு
பெரிதானதாக அமைந்துள்ளது.
மேலே குறிப்பிட்ட செய்திகளை காணுகையில் உடனே பெண்களின் மூளையினை விட
ஆண்களின் மூளையானது சிறப்புடையதாக இருக்கக்கூடுமென்று சிலருக்கு
தோன்றும், அவ்வாறு எண்ணுவது தவறாகும்.
இந்த வேறுபாடுகளின் காரணத்தினை அறிவியல் பூர்வமாக நாம் காண வேண்டும்,
உணர்வு பூர்வமாக அல்ல.
ஆண்களின் உடல் பகுதி பெண்களின் உடல்பகுதியினைவிட பெரிதாக இருப்பதால்
அதிகமான நரம்பணுக்களை ஆண்களின் மூளை பெற்றுள்ளது.
மேலும் மரபணுக்களின் அமைப்பு, இயக்குநீர்களின் தன்மை மற்றும்
சுற்றுப்புரசூழலின் தாக்கம் ஆகியன இவ்வகையான வேறுபாட்டிற்கு காரணமாக
அமைந்துள்ளது.