|
| |||
|
29 03 2015 ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு குருத்தோலைப் பவனி
முன்னுரை: குருத்து ஒலை பவனியிலே பங்கேற்று இறைவனை புகழ வந்துள்ள அன்பர்களே, வருக! இறையருள் பெறுக! என வாழ்த்துகின்றோம். மகிமையோடும், மாட்சிமையோடும் பவனி வரும் காட்சி. கழுதைக்கு மேல் அமர்த்தப்பட்டவர் தாவீதின் மகன் என்று சொல்லி ஓசான்னா ஓசான்னா! என்று வாழ்த்து சொல்லி, இலைதளைகளை பரப்பி, மன்னர் இவர் வாழ்த்தப் பெறுவாராக என அழைத்து செல்லப்படுகின்றார். இதனை தியானிக்கும் விதத்தில், இன்று நாமும் ஒரு பவனியை எடுக்க முன்வந்துள்ளோம். நம்முடைய பவனியில் ஆர்ப்பாட்டம், கூத்து, அமர்க்களம் போன்றவை கிடையாது. ஆடம்பரம் உண்டு, ஆர்ப்பரிப்பு உண்டு, ஆராதனை உண்டு. நம்முடைய ஆண்டவர் மகிமைக்ககுரியவர். மாட்சி நிறைந்தவர். மகத்துவமானவர் என்பதனை நாமும் உணர்ந்து, பிறரும் உணரச் செய்ய எடுக்கும் பவனியிது. பங்கேற்போம். பாடித் துதிப்போம். பயனுள்ளதாக்குவோம். இரண்டாம் ஆண்டு பொது முன்னுரை இன்று குருத்து ஞாயிறைக் கொண்டாடுகிறோம். புனித வாரத்தின் தொடக்கமாகவும், நுழைவு வாயிலாகவும் குருத்து ஞாயிறு அமைகின்றது. தாவீதின் மகனுக்கு ஓசான்னா முழக்ககங்களோடும், ஒலிவ கிளைகளை கைகளிலே ஏந்திய வண்ணமாய் எபிரேயர் எருசலேமிற்குள் வீரப்பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் பயணம், தான் இயேசு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும், மீட்பின் முதல் படியாகவும் அமைகிறது. ஈராயிரம் ஆண்டுகளாய் விடுதலைக்காய், வாழ்வின் விடியலுக்காய் ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையும், புத்துயிரையும் கொடுப்பதாகவும் அமைகிறது. அத்தகைய நாளை நினைவு கூறும் இன்று நாமும் குருத்தோலைகளை உயர்த்தி கொண்டு பவனியில் பங்கெடுக்க இருக்கிறன்றோம். பட்டங்களையும், பதவிகளையும் எதிர்பார்த்து இயேசுவின் பின் சென்றால் அவரின் பயணத்தில் நிச்சயம் நமக்கு இடமிருக்காது. இயேசுவைப்போல நாமும் தன்னலப் போர்வையை தகர்த்தும், ஆணவத்தை அழித்தும் இயேசுவின் பின் பயணிப்போம். அப்போது இப்புனித வாரம் நம்மை புனிதர்களாக நிச்சயம் மாற்றும் என்ற மனநிலையோடு இத்திருவழிபாட்டில் பங்கெடுப்போம். இத்திருப்பவனியின் வழியாக இயேசுவோடு கல்வாரிக்குப் பயணமாவோம். குருத்தோலை பவனி முன்னுரை - I இப்போது நாம் குருத்தோலை பவனியைத் தொடங்குகிறோம். பவனி என்றால் மக்கள் குதூகலமாக கூடி சாலைகளிலே திரண்டு செல்ல, அரசனோ அல்லது அதிகாரியோ அல்லது விழா நாயகனோ பவனியின் இறுதியிலே ஆரவாரமாக அழைத்து வரப்படுவர். ஆனால் நாம் இப்போது பங்கெடுக்கப்போகின்ற பவனியானது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. தாவீதின் மகன் என்று போற்றப்பட்ட இயேசு, பவனியின் முன்னால் வழிநடக்க உலகம் அனைத்தையுமே தனக்குப் பின்னால் இழுத்துக்கொண்டும் இயக்கிக்கொண்டும் எருசலேம் நோக்கி முனைந்து விரைகிறார். எனவே குருவானவர் நம் எல்லோரையும் அழைத்தவராக, பாஸ்கா கொண்டாட இழுத்துச் செல்பவராக பவனியின் முன்னால் செல்ல, நாம் அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து, பாடல்களைப் பாடிக்கொண்டும், இயேசுவைப் புகழ்ந்துகொண்டும், அவரது எருசலேம் நுழைவில் பங்கு பெறவும், அங்கு அவரது இறப்பு, உயிர்ப்பு என்ற பாஸ்கா கொண்டாடவும் புறப்பட்டு செல்வோம். குருத்தோலை பவனி முன்னுரை – II ஆடம்பரத்தோடு உலா வரும் அரசர்கள் மத்தியில் கழுதையை தனது கல்வாரிப் பயணத்தின் சிம்மானசனமாக்கி, எளிமையை தன் வாழ்வின் உயர்ந்த இலட்சியமாய் கொண்டு, ஓசான்னா கீதம் முழங்க ஒலிவக்கிளையை கையில் ஏந்தியவர்களாக மக்கள் தொடர உலகை மீட்க வந்த இயேசு, எருசலேம் நகரம் நோக்கி உன்னரத பயணம் மேற்கொள்கின்றார். ஆம், இன்று புனித வாரத்தின் முதல் நாள் குருத்து ஞாயிறு. தாவீது குலத்தில் முன்னறிவிக்கப்பட்டு பிறந்த இயேசு, மனித குலம் மீட்புபெற, துன்பத்தை தனது தந்தையின் விருப்பத்தின் படி ஏற்று வெற்றி வீரராய் எருசலேம் நகருக்குள் நுழைகிறார். இது வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல நாம் வாழ்வு பெற இயேசு வாழ்வை இழக்க தயாராகும் இலட்சியப்பயணம். எனவே அன்பு சகோதரமே குருத்தோலைகளை கையில் ஏந்தியவர்களாய் இப்பவனியில் பங்கு பெறும் நாம் கவலைகளை கண்டு கண்ணீர் வடிக்காமல், தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் சோகமான சுமைகளை பிறர் நலன் கருதி ஏற்ற இயேசுவின் மனநிலை இந்தப் புனித வாரம் முழுவதும் நம்மில் இருக்க வரம் வேண்டியவர்களாக இப்பவனியில் பங்கேற்போம். இறைவனின் அருளை நிறைவாய்ப் பெற்றுக் கொள்வோம்.
இரண்டாம் ஆண்டு ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! +மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-10 இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களைஅனுப்பி, ``உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், `ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டால், `இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்' எனச் சொல்லுங்கள்'' என்றார். அவர்கள் சென்று ஒரு வீட்டு வாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில், அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், ``என்ன செய்கிறீர்கள்? கழுதைக்குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?'' என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும் வேறு சிலர் வயல்வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், ``ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர். இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
அல்லது
ஆண்டவர் பெயரால் வருபவர் போற்றப்பெறுக! +யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 12-16 அக்காலத்தில் பாஸ்கா திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், ``ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். ``மகளே சீயோன், அஞ்சாதே! இதோ! உன் அரசர் வருகிறார்; கழுதைக் குட்டியின்மேல், ஏறி வருகிறார்'' என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார். அந்நேரத்தில் அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்துகொள்ளவில்லை. அவரைப் பற்றி மறைநூலில் எழுதப் பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது. இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
திருப்பலி இந்த ஞாயிற்றுக்கிழமையில் தரப்பட்ட மூன்று வாசகங்களையும் வாசிப்பது நலம். ஆனால் ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு முக்கியமானதால், அதை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. திருக்கூட்டத்தின் நிலைக்கு ஏற்றபடி, நற்செய்திக்கு முன் வரும் வாசகங்களில், ஒரு வாசகத்தை மட்டும் வாசிக்கலாம். அல்லது, தேவையானால் இரு வாசகங்களையும் விட்டுவிடலாம். மேலும் தேவையானால், திருப்பாடுகளின் குறுகிய வாசகத்தைப் பயன்படுத்தலாம். மேற்கூறியவை மக்களோடு சேர்ந்து நிறைவேற்றப்படும் திருப்பலிக்கே பொருந்தும்.
திருப்பலி முன்னுரை: அன்பிற்குரியவர்களே! தவக்காலத்தின் இறுதி வாரத்திற்குள்ளாக நுழைந்துள்ளோம். புனித வாரம் என்று இதனை அழைத்தாலும், இந்த வாரத்தில் இறைவனது பாடுகளையே தியானிக்க இருப்பதால், இதனை பாடுகளின் வாரம் என்றும் அழைக்கின்றோம். ஓசான்னா! ஓசான்னா என்று ஆர்ப்பரித்து அழைத்துச் செல்லும் கூட்டமே தனக்கு எதிரியாக மாறப் போகின்றது என்பது தான் வேதனையிலே கொடுமையானதாக இருந்திருக்க வேண்டும். உண்டவன் இரண்டகமாக போய் விடுவான். அற்புதங்களை பெற்றவர்கள் பார்த்தவர்கள், ஓழிக கோஷமிடுவார்கள் என்ற வேதனைத் தான் கொடுமையானது. இதனை எல்லாம் தாங்கிக் கொள்ளும் மனவுறுதி பெற்றரானால், அது மனித சக்தியால் அல்ல, மாறாக, வியர்வைகள் இரத்தமாக வெளிப்பட செபித்த செப வேளையே அவருக்கு இத்தகைய மனஉறுதியையும், மனதைரியத்தையும் பெற்றுத் தந்தது என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. நம்முடைய வாழ்விலும் சந்திக்கும் அவமானங்கள், போராட்டங்கள், வேதனைகளில் நாம் தனித்து விடப்படுவதில்லை என்பதனை உணர்ந்து, செபத்தில் ஆழ்ந்தால், விடுதலை உண்டு. வாழ்வு பெற்றிட முடியும் என்பதனை உணர்ந்தவர்களாக பங்கேற்று பலியை ஓப்புக் கொடுப்போம். முதல் வாசக முன்னுரை (எசாயா 50, 4-7) அநீதிகளும், அராஜகங்களும், சுயநலமும் நிறைந்த உலகத்தினை எதிர்த்து போராடுகிறபோது, பல துன்பங்களும் அவமானங்களும், ஏற்படும். பலர் இகழ்வார்கள், ஆனால் தாழ்ச்சியோடும், துணிவோடும் அவைகளை எதிர்த்துப் போராட ஆண்டவர் இயேசு நமக்கு துணையாயிருக்கிறார். அவரை நாடுங்கள் அவர் நம்மை எல்லாச் சூழ்நிலையிலும் வழிநடத்துவார் என்று எசாயாவின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். (OR) துன்புறும் ஊழியனாக இயேசுவைக் குறித்து எசாயா இறைவாக்கினர் முன்னறிவித்ததை இன்றைய முதல் வாசகம் நமக்குத் தருகிறது. நம்முடைய துன்ப நேரத்தில் வலிமைமிக்க போர் வீரனைப்போல் நம் கடவுள் கூடவே இருந்து நம்மை இழிநிலைகளிலிருந்து விடுவிப்பார் என்ற எண்ணத்தை உள்ளத்தின் ஆழத்தில் பதித்தவர்களாய் வாசகத்திற்கு நமது உள்ளத்தை திறந்து வைப்போம்.
முதல் வாசகம் நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7 நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 22: 7-8. 16-17ய. 18-19. 22-23 (பல்லவி: 1ய) பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? 7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 8 `ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். பல்லவி 16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். 17ய என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். பல்லவி 18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். 19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி 22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி இரண்டாம் வாசக முன்னுரை (பிலி 2, 6-11) இயேசு இறைமகன் எல்லாவற்றின் மேலும் அதிகாரமும், வல்லமையும் இருந்தாலும் அன்புகருதி, அமைதி கருதி, சமாதானம் கருதி தன்னையே வெறுமையாக்கினார். தாழ்த்திக்கொண்டார். தாழ்ச்சி என்பது வீழ்ச்சி அல்ல. ஆனால் அவரை அனைத்திற்கும் மேலாக உயர்த்தினார். நாமும் நமக்கு அறிவுத்திறமை, ஆள்திறமை, பணம் பதவி இருந்தாலும் பணிவோடு பிறர் வாழ்வு முன்னேற முயற்சி செய்யும்போது கடவுள் நம்மை மேன்மைப்படுத்துவார், என்று கூறும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம். (OR) இறைமகன் இயேசு தன் தந்தையின் மீது கொண்ட அன்பினாலும், கீழப்படிதலினாலும் மானுடல் ஏற்கும் அளவுக்கு தம்மையே வெறுமையாக்கி தாழ்த்தி கொண்டதால் இறைவன் அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தினார் என்பதை கூறும் இவ்வாசகத்தை கேட்போம்.
இரண்டாம் வாசகம் கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11 கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம் பிலி 2: 8-9 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
இரண்டாம் ஆண்டு ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு, எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும். (காண்க: திருப்பலிப் புத்தகம், பக்கம் 103, எண் 22)
மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 14: 1-15: 47 பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக்கொண்டிருந்தனர்; ஆயினும், `விழாவின்போது வேண்டாம்; ஒருவேளை மக்களிடையே கலகம் ஏற்படக் கூடும்' என்று நினைத்தனர். இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, ``இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே,'' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண்மீதும் சீறி எழுந்தனர். இயேசு அவர்களிடம், ``அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினார். பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக் கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ``நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ``நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், `` `நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.'' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு, ``என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக ``நானோ? நானோ?'' என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ``அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்'' என்றார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ``இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்'' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், ``இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள். இயேசு அவர்களிடம், ``நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், `ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்'' என்றார். பேதுரு அவரிடம், ``எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்'' என்றார். இயேசு அவரிடம், ``இன்றிரவில் சேவல் இரு முறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்'' என்றார். அவரோ, ``நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்'' என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள். பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ``நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்'' என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், ``எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்'' என்று அவர்களிடம் கூறினார். சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். ``அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்'' என்று கூறினார். அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ``சீமோனே, உறங்கிக்கொண்டா இருக்கிறாய்? ஒரு மணி நேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்'' என்றார். அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, ``இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்'' என்று கூறினார். இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ``நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு. அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டுபோங்கள்'' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ``ரபி'' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். அருகில் நின்றுகொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, ``கள்வனைப் பிடிக்க வருவதுபோல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக்கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும்'' என்றார். அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக்கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் துணியை விட்டுவிட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார். அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்றுகூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம்வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்துகொண்டிருந்தார். தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. பலர் அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து, ``மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்'' என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை. அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, ``இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூறமாட்டாயா?'' என்று இயேசுவைக் கேட்டார். ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு, ``போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?'' என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, ``நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள்'' என்றார். தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, ``இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?'' என்று கேட்க, அவர்கள் அனைவரும், ``இவன் சாகவேண்டியவன்'' என்று தீர்மானித்தார்கள். பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, ``இறைவாக்கினனே, யார் எனச் சொல்'' என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர். அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப்பெண் ஒருவர் வந்து, பேதுரு குளிர்காய்ந்துகொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, ``நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே'' என்றார். அவரோ, ``நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை'' என்று மறுதலித்து, வெளிமுற்றத்திற்குச் சென்றார். அப்பொழுது சேவல் கூவிற்று. அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழஇருந்தவர்களிடம், ``இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான்'' என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், ``உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன்'' என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, ``நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது'' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, ``சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்'' என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவுகூர்ந்து மனம் உடைந்து அழுதார். பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று, பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்க அவர், ``அவ்வாறு நீர் சொல்கிறீர்'' என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, ``நீ பதில் ஒன்றும் சொல்லமாட்டாயா? உன்மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!'' என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான். விழாவின்போது மக்கள் கேட்டுக்கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது. அதற்குப் பிலாத்து, ``யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?'' என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, ``அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான், அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும்'' என்று மீண்டும் கத்தினார்கள். அதற்குப் பிலாத்து. ``இவன் செய்த குற்றம் என்ன?'' என்று கேட்க, அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும்'' என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான். பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டுபோய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள்முடி பின்னி அவருக்குச் சூட்டி, ``யூதரின் அரசே வாழ்க!'' என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர்; அவரை ஏளனம் செய்தபின் செந்நிற ஆடையைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர். அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படை வீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் `மண்டை ஓட்டு இடம்' எனப் பொருள்படும் `கொல்கொதா'வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அங்கே அவருக்கு வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க ``யூதரின் அரசன்'' என்று அவர்கள் எழுதி வைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். இவ்வாறு `கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்' என்ற மறைநூல் வாக்கு நிறைவேறிற்று. அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ``ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்'' என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, ``பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை'' என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். அவர்கள், ``இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்'' என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ``எலோயி, எலோயி, லெமா சபக்தானி?'' என்று உரக்கக் கத்தினார். ``என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?'' என்பது அதற்குப் பொருள். சூழ நின்றுகொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ``இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்'' என்றனர். அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, ``பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்'' என்றார். இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். ( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். ) அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ``இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்'' என்றார். பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்தபோது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள். அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறு பல பெண்களும் அங்கே இருந்தார்கள். இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வு நாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ``அவன் இதற்குள் இறந்துவிட்டானா?'' என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அல்லது குறுகிய வாசகம்
மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 15: 1-39 கெத்சமனித் தோட்டத்திலிருந்து இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். இரவு முழுவதும் இயேசு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று, பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்க அவர், ``அவ்வாறு நீர் சொல்கிறீர்'' என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, ``நீ பதில் ஒன்றும் சொல்லமாட்டாயா? உன்மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!'' என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான். விழாவின்போது மக்கள் கேட்டுக்கொள்ளும் ஒரு கைதியை அவர் களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது. அதற்குப் பிலாத்து, ``யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?'' என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, ``அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான், அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும்'' என்று மீண்டும் கத்தினார்கள். அதற்குப் பிலாத்து. ``இவன் செய்த குற்றம் என்ன?'' என்று கேட்க, அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும்'' என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான். பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டுபோய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள்முடி பின்னி அவருக்குச் சூட்டி, ``யூதரின் அரசே வாழ்க!'' என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர்; அவரை ஏளனம் செய்தபின் செந்நிற ஆடையைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர். அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படை வீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் `மண்டை ஓட்டு இடம்' எனப்பொருள்படும் `கொல்கொதா''வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க ``யூதரின் அரசன்'' என்று அவர்கள் எழுதி வைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். இவ்வாறு `கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்' என்ற மறைநூல் வாக்கு நிறைவேறிற்று. அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ``ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்'' என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, ``பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை'' என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். அவர்கள், ``இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்'' என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ``எலோயி, எலோயி, லெமா சபக்தானி?'' என்று உரக்கக் கத்தினார். ``என் இறைவா, என் இறைவா. ஏன் என்னைக் கைவிட்டீர்?'' என்பது அதற்குப் பொருள். சூழ நின்றுகொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ``இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்'' என்றனர். அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்துக்கொண்டே, ``பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்'' என்றார். இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். ( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். ) அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ``இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்'' என்றார்.
சிந்தனை புனித வாரத்திற்குள் அடியெடுத்து வைக்கும் புனிதமான நேரமிது. துன்புறும் ஊழியனின் மனவுறுதி, பாடுகளை சந்திப்பதற்கான மனதுணிவு, இன்னல்கள் மத்தியிலும் இடைவிடாத இறைவேண்டல் இவையே வெளிப்படுத்தப்படும் விழுமியங்கள். மனிதனாக இருந்தவருக்கு இது சாத்தியமானது என்றால் நமக்கும் சாத்தியமானதே. இதனை உணர்த்தவே அவர் மனுவுருவானார். பாடுகளையும், அவமானத்தையும், துன்பத்தையும், துயரத்தையும் ஏற்றுக் கொண்டார். மனவுறுதி, மனதுணிவு, இறைவேண்டல் இவை இன்று நமதாகும் போது நம்மாலும் வாழ்வில் போராட முடியும். இதனை இந்த பாடுகளின் வாரத்தில் கேட்டு மன்றாட இறைவனின் மனநிலையோடு பங்கேற்போம். பயன்பெறுவோம்.
"THE DONKEY" - G K Chesterton
"When fishes flew and forests walked And figs grew upon thorn, Some moment when the moon was blood Then surely I was born.
With monstrous head and sickening cry And ears like errant wings, The devil’s walking parody On all four-footed things.
The tattered outlaw of the earth, Of ancient crooked will; Starve, scourge, deride me: I am dumb, I keep my secret still.
Fools! For I also had my hour; One far fierce hour and sweet: There was a shout about my ears, And palms before my feet."
இறைமக்களின் வேண்டல் 1. எந்நாளும் எங்களை வழிநடத்தும் அன்பு தெய்வமே! திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் ஆசீர்வதியும், அவர்கள் ஆற்றும் பணி வாழ்வில் சந்திக்கும் துன்ப துயரங்கள் மற்றும் இடையூறுகள் போன்றவைகளில் உடன் இருந்து அவர்களை காத்து வழிநடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2. பாராளும் பரமனே எம் இறைவா! நாட்டிற்காகவும் நாட்டை ஆளுகின்ற தலைவர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். அவர்களை நிறைவாய் ஆசீர்வதியும். அவர்கள் தன்னலத்தோடு வாழாமல், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், நாடு வளமும், நலமும் பெற அவர்கள் உழைக்கவும், அவர்களுக்கு நல்மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. துன்பமில்லாமல் இன்பம் இல்லை சிலுவையில்லாமல் சிம்மாசனம் இல்லை என்பதை உணர்த்திய எம் இயேசுவே! எங்களுக்கு வரும் துன்பத் துயரங்களை தாங்கிக்கொள்ளவும், பிறர் வாழ்வில் உள்ள சுமைகளை பகிர்ந்து, கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும் நல் மனதைத் தந்தருள இறைவா உம்மை வேண்டுகிறோம். 4. கருணையின் தெய்வமே இறைவா! உம்முடைய பாடுகளின் புனித வாரத்தில் பயணிக்கும் நாங்கள் உம்முடைய பாடுகளின் மாண்பை உணர்ந்து பிழைகளை அகற்றி, நேர்மையான வாழ்வை வாழத் தேவையான அருளைத் தர இறைவா உம்மிடம் வேண்டுகிறோம். 29 மார்ச்சு 2015 ஆண்டவரின் பாடுகளின் குருத்து ஞாயிறு மறையுரை 1: ஹலோ! நான்தாங்க கழுத பேசுறேன்! நான்தான் கழுதை பேசுகிறேன். என்ன சிரிப்பாயிருக்கா? யாராவது ஏதாவது தவறு செய்தால் அவரை‘கழுதை’ என வசை பாடுகிறீர்கள். அவமானத்தின் சின்னமாக, இரண்டாநதர வேலை செய்கிற விலங்காக என்னைப் பயன்படுத்துகிறீர்கள். ஆம் நான் உங்கள் பார்வைக்கு அவமானம்தான்: பழிச்சொல்தான்: அழுக்குகளைச் சுமப்பவன்தான். ஆனால் மீட்பு வரலாற்றில் எனக்கும் பெரிய பங்கு இருக்கத்தான் செய்கிறது. நான் விவிலியத்தில் மூன்று இடங்களில் வருகிறேன். எண்ணிக்கை நூல் 22 வது பிரிவில் வாசிப்பீர்கள். மோவாபு மன்னன் பாலாக்கு பெத்தோரைச் சார்ந்த பிலயாம் என்ற இறைவாக்கினரை இஸ்ராயேல் மக்களை ச ப p ப ; ப த ற ; க h க அழைத்துவர ச ; சொன்னவுடன், இஸ்ராயேல் மக்களை சபிப்பதற்காக பிலயாம் பயணம் செய்தது என்மேல்தான். வுழியில் ஆண்டவரின் தூதர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு பாதை விலகி ஓடி (எண் 22:23), பிலயாம் என்னை எத்தனைமுறை அடித்தாலும் பொறுத்துக் கொண்டு கடவுளின் திட்டம் நிறைவேற ஒத்துழைத்தேன். இரண்டாவதாக நீங்கள் அதிகம் பலம் வாய்ந்த நீதித்தலைவர் என்று புகழ்கின்ற சிம்சோன் ஆயிரம் பெலிஸ்தியரைக் கொன்றது எனது பச்சைத் தாடை எலும்பை வைத்துத்தான்(நீதி;த்தலைவர்கள் 15:15). மேலும் “மகள் சீயோனிடம் சொல்லுங்கள், இதோ உன் அரசர் உன்னிடம் வருக pறார் : அவர் எள pமையுள்ளவர் : கழுதைய p ன ; மேல் ஏற p வருக pறார் ” என்று செக்கரியா இறைவாக்கினர் முன்னறிவித்து நீதியின் அரசரை எருசலேம் நகருக்குள் அழைத்து வ ந ; த து ம ; ந h ன ; த h ன ; . எ ன ; ன h ல ; இ i ற த ; த p ட ; ட த ; த p ற ; கு இ வ ; வ ள வு பயனென்றால், இறைச்சாயலில் இருக்கும் உங்களால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும். நீங்கள் ஒவ்வொரு பொழுதும் குதிரை வருமா என்று பார்க்கிறீர்கள். குதிரையில் அலெக்ஸாண்டர் வந்தார். அவர் இரத்தத்தையும், கண்ணீரையும் கொண்டு வந்தார். தன்னையே உலகத்தை வென்றவன் என்று தானே அழைத்துக் கொண்டார். நான் சுமந்து வருபவரோ ‘அமைதியின் அரசர்;.’ இவர் கொண்டு வருவதெல்லாம் அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை. பல நேரங்களில் நீங்கள் புலம்புவதை நான் கேட்கின்றேன். ‘ஐயோ, என்னை யாரும் கவனிப்பதில்லையே. நான் யாருக்கும் தேவைப்படுவதில்லையே. என் பெற்றோர்க்கு நான் தேவையில்லை. என் பிள்ளைகளுக்கு நான் தேவையில்லை. என் சமுதாயத்திற்கு நான் தேவையில்லை என்று விரக்தியி ல ; பேசுகின்றீர்கள். இந்த உலகத்திற்கே ந Pங்கள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஆண்டவருக்குத் தேவை. ஆகையால், இன்று உங்களை யாராவது கழுதை என்று அழைத்தால் கவலைப்படாதீர்கள். வருத்தப்படாதீர்கள். உங்களுக்கும் மீட்புத் திட்டத்தில் பங்கு உண்டு. உங்கள் மீதும் அமைதியின் அரசர் பயணம் செய்வார். நீங்கள் ஆண்டவருக்குத் தேவை. ஆமென்! மறையுரை 2: புதுசா ஒரு அரசர்! இன்றைய ந h ள ; இரண்டு பெரு ந p க ழ்வுகளை ஒ ன ; ற h க n க h ண ; ட h டு க p ன ; ற து ~ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஆரவாரத்தோடு எருசலேம் நகருக்குள் நுழையும் குருத்து ஞாயிறு: ஆண்டவரின் பாடுகள் மற்றும் இறப்பைச் சுட்டிக்காட்டும் பாடுகளின் ஞாயிறு. இரண்டையும் இன்றைய நற்செய்தி வாசகம் படம்பிடித்துக் காட்டுகிறது. இரண்டிற்கும் பொதுவாக இருப்பது என்னவென்றால் ‘இயேசு ஓர் அரசர்’. இன்றைய முதல் வாசகம் அவரை ஒரு துன்புறும் அரசராகவும், இரண்டாம் வாசகம் மக்களுக்காக உயிரைக் கொடுப்பவராகவும் முன்வைக்கின்றது. ஸ்பெயின் நாட்டில் அரசர்கள் ஆண்ட சமயம் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு கிராமத்து மக்களைச் சந்திக்க அரசர் வருகிறார் என்ற செய்தி வருகிறது. கிராமத்து மக்களுக்கு ஆச்சர்யம். ஆயிரம் வருடங்களுக்குப் பின் அரசர் ஒருவர் நம் கிராமத்திற்கு வருகிறார். நம்மிடம் உள்ளதில் சிறந்தவற்றை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஊர்கூடி திட்டமிடுகின்றனர். அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் திராட்சை ரசம் செய்யக் கூடியவர்கள். ஆகையால் ஊர் நடுவில் ஒரு பெரிய பானையை வைப்போம். அந்தப் பானையில் நாம் அனைவரும் செய்த திராட்சை ரசத்தைக் கொண்டு வந்து ஊற்றுவோம். அரசர் இதுவரை தான் பருகியிராத சுவையான திராட்சை ரசத்தைப் பருகட்டும் என்று சொல்கின்றனர். பானையும் வைத்தாயிற்று. பானையின் உச்சிக்குச் செல்ல ஒரு ஏணியும் வைத்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக அந்தப் பானையில் ஊற்றுகின்றனர். அரசர் வரும் நாளும் வந்தது. மகிழ்ச்சியுடன் அரசரைப் பானையை நோக்கி அழைத்துச் செல்கின்றனர். ஒரு டம்ளரைக் கட்டி பானையினுள் நுழைத்து அரசருக்குக் குடிக்கக் கொடுக்கின்றனர். குடித்தவுடன் அரசரது முகத்தில் ஏமாற்றம்: ‘என்ன தண்ணியா?’ என்கின்றார். எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர். ஆம். என்ன நடந்தது என்றால், ‘இவ்வளவு பெரிய பானையில் திராட்சை ரசத்திற்குப் பதிலாக கொஞ்சம் தண்ணீர் ஊற்றினால் தெரிந்துவிடவா போகிறது’ என நினைத்து எல்லோரும் தண்ணீரையே ஊற்றியிருக்கின்றனர். தங்களிடமிருந்தில் சிறப்பானதை அரசனுக்குக் கொடுக்க அவர்களுக்கு மனம் வரவில்லை. இதோ! இன்று ஒரு அரசர் எருசலேம் நோக்கிப் பயணமாக வருகின்றார். தன்னிடம் சிறப்பாக இருக்கும் தன் உயிரையே மக்களுக்காகத் தர வருகின்றார் அவர். அவருக்கு மக்கள் எதைக் கொடுத்தார்கள்? ஆண்டவரின் குருத்தோலைப் பவனி அவரின் வாழ்வில் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு அவரது சமகாலத்தவரின் வாழ்விலும் முக்கியமாக இருக்கிறது. ஆண்டவரின் எருசலேம் வருகை அவருக்கு ஒரு முடிவை அறிவித்தாலும், மக்களின் வாழ்வில் அது ஒரு புதிய தொடக்கத்தை விதைக்கிறது. இறைவாக்கினர்கள் இயேசுவைக் குறித்து எழுதியவை நிறைவேறத் தொடங்குகின்றன. ‘வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள். தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள். மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்’ (திபா 24:7) என்று திருப்பாடல் ஆசிரியர் முன்மொழிய இன்று எருசலேம் நகரமே எழுந்து நிற்கின்றது இயேசுவை வரவேற்க. இந்த அரசனுக்கு அன்று மக்கள் என்ன கொடுத்தார்கள்? இன்று நாம் என்ன கொடுக்க வேண்டும்? 1. தங்களில் சிறந்ததைக் கொடுக்கின்றனர். ஸ்பெயின் நாட்டு மக்களைப் போல அல்லாமல், இயேசுவின் சமகாலத்தவர், அவரால் நலம் பெற்றோர், எளியோர், வறியோர், இறையரசை எதிர்பார்த்துக் காத்திருந்தோர் தங்களிடமிருந்தவைகளில் முதன்மையானவைகளை இறைவனுக்குக் கொடுக்கின்றனர்: யாருமே ஏறியிராத கழுதை, குருத்தோலைகள் மற்றும் ஆடைகள். கழுதை அமைதியின் சின்னம். தாவீதின் அரசரும் அப்சலோமுடன் உடன்படிக்கை செய்யச் செல்லும்போது கழுதையின் மேலே அமர்ந்து செல்கின்றார். குதிரைகள் இரத்தத்தையும், கண்ணீரையும் கொண்டு வருக p ன ; ற ன . ஆனால் கழுதை அமைதியையே கொண்டு வருக p ன ; ற து . இந்தக ; கழுதைக்கும் இறைத்திட்டத்தில் பங்கு இருக்கின்றது. அது இயேசுவுக்காகவே காத்திருக்கின்றது. இன்று நாம் யாருக்காகக் காத்திருக்கிறோம்? யாராவது நம்மை அவிழ்க்க வருவார்களே என்ற தயார்நிலையில் இருக்கின்றோமா? குருத்தோலைகள் குறிப்பவை என்ன? புத்துயிர். தென்னை மற்றும் வாழை மரங்களில் பார்த்திருப்போம். குருத்தைக் கவனமாகப் பாதுகாப்பார்கள். குருத்து புதிய உயிரைக் கொண்டிருக்கிறது. குருத்து வருகிறது என்றால் அங்கே உயிர் இருக்கிறது என்று அர்த்தம். குருத்து தராத மரம் ‘மலட்டு’ மரம் என்றே அழைக்கப்படும். குருத்தோலைகள் புத்துயிரை அடையாளப்படுத்துகின்றன. இயேசுவின் பிரசன்னம் புத்துயிரைக் கொண்டுவருகின்றது. ஆடைகள் பாவ நிலையைக் குறிப்பிடுகின்றன. பாவத்தால் வந்த ஆடை பாவம் போக்க வந்த இயேசுவின் முன் விரிக்கப்படுகின்றது. மேலும் ஆடைகள் விரித்து அதன் மேல் நடந்து வருதல் ஒருவரின் மேன்மையைக் குறிப்பிடுகின்றது. சிவப்புக் கம்பள வரவேற்பு என்றும், இரத்தினக் கம்பள நடை என்றும் நாம் இதையே குறிப்பிடுகிறோம். எந்த நம்பிக்கையோடு இஸ்ராயேல் மக்கள் தங்கள் ஆடைகளை விரித்திருப்பார்கள்? இன்று இயேசு நம் முன் வருகிறார் என்றால் நம்மால் ஆடைகளை அவருக்காக விரிக்கும் துணிச்சல் வருமா? 2. ஓசான்னா. ‘தாவீதின் மகனுக்கு ஓசான்னா. ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசீர் பெற்றவர். உன்னதங்களில் ஓசான்னா’ என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்புகின்றனர் மக்கள். இந்த ஓசான்னா இன்னும் கொஞ்ச நாட்களில் ‘சிலுவையில் அறையும்’ என்று மாறிவிடும் என்பதும் எதார்த்தம். ‘ஓசான்னா!’ என்பது ஒருவகையான செபம். திபா 118:25-26 என்ற திருப்பாடல்தான் யூத மக்களின் ஹலேல் திருப்பாடலில் இறுதியானது. ஹலேல் வகைத் திருப்பாடல்கள் அரசர்கள் திருப்பொழிவு செய்யும் போது பாடப்படும். ‘தாவீதின் வழி வரும் அரசர் இவரே’ என்று இயேசுவைத் தாங்களாகவே அரசராகத் திருப்பொழிவு செய்கின்றனர் மக்கள். வாடகைக் கழுதையில் வந்த இறுதி நம்பிக்கை தங்களுக்கு மீட்பைக் கொண்டுவரும் என நம்பினர். ‘ஓசான்னா’ என்றால் ‘எங்களை மீட்டுக்கொள்ளும், காப்பாற்றும்’ என்றும் பொருள் கொள்ளலாம். இன்று நாம் திருப்பலியிலும் ஓசான்னா பாடுகிறோம். இறைவனின் மீட்பை நாம் நம் வாழ்வில் உணர்ந்திருக்கின்றோமா? இன்று எருசலேம் கூட்டத்தில் நாம் நின்றால் ஓசான்னா பாடுவோமோ? ஓசான்னா பாடுவதற்கு நம்மிடம் தடையாய் இருப்பவை எவை? ‘நான் என்ற ஆணவம்’ – எனக்கு எல்லாம் தெரியும், என்னால் எல்லாம் முடியும், நானே என்னைப் பார்த்துக்கொள்வேன் என்று நினைப்பவர்கள் ஓசான்னா பாட முடியாது. ஆகையால் தான் பவனியைப் பார்த்த பரிசேயரும், மறைநூல் அறிஞரும் மக்களைக் கடிந்து கொள்கின்றனர். ‘பயம்’ இருப்பவர்களும் ‘ஓசான்னா’ பாட முடியாது. ‘அன்பு இருக்கும் இடத்தில் பயம் இருக்காது. பயம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது’ என்பார் அகுஸ்தினார். இறைவனின் அன்பை அனுபவிப்பவர்களே அவரிடம் தஞ்சம் புக முடியும். அடுத்ததாக, சந்தேகம் இருக்கும் இடத்தில் ஓசான்னாவிற்கு இடமில்லை. சந்தேகமற்ற நிலையே நம்பிக்கை. 3. முதற்தர மகிழ்ச்சி. இயேசு கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியபோது அந்த இரசத்திற்கு பந்தி மேற் பார்வையாளர் அளித்த அடைமொழி 'முதற்தரமான" என்பதுதான். இயேசுவின் பவனியில் பங்கேற்றவர்கள் முகத்தில் இருந்ததும் இந்த மகிழ்ச்சிதான். இவர்களின் கண்கள் பார்த்தது இயேசுவை மட்டும்தான். மற்றவர்கள் பார்ப்பார்களே! நம்மை; கேலிசெய்வார்களே! என்று யாரைப் பற்றியும் அவர்கள் கவலைப்படவேயில்லை. நம் வாழ்வில் இயேசுமட்டும் மையமாக வைக்கும் முதற்தர மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கிறோமா? அந்த மக்களுக்கு தெரிந்ததெல்லாம் இயேசு என்றால் நம்பிக்கை என்பது மட்டும்தான். நம் வாழ்விலும் நமக்குத் தெரிந்த ஒரே நம்பிக்கை இயேசுதான் என்றால் நாமும் நம் ஆடைகளை விரிப்போம். அவர் பவனி வரட்டும்! மறையுரை 3: வாடகைக் கழுதையில் வந்த இறுதி நம்பிக்கை! கிரேக்க உரோமை வரலாற்றில் பவனிகள் ஏராளம் இருந்தன. வெற்றி பெற்ற அரசன் தன் அரண்மனை திரும்பும்போதும், போருக்கு அரசன் புறப்பட்டுச் செல்லும்போதும் நடைபெற்ற பவனிகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டன. அத்தகைய பவனிகளில் முக்கியமாக இருந்தவவை: 1) மக்கள் திரள், 2) வெற்றிப் பாடல்கள், 3) அடையாளங்கள் (மரக்கிளைகள், தோரணங்கள்) மற்றும் 4) அரசனின் வாகனம் (பொதுவாக, குதிரை). இயேசுவின் காலத்தவர்க்கு பவனிகள் புதிதல்ல என்றாலும், இயேசுவின் எருசலேம் நகரப் பவனி சற்று புதிதாகவே இருக்கின்றது. 1) இயேசுவை வரவேற்கும் மக்கள் திரள். இவர்கள் யார்? உரோமைப் படைவீரர்களோ அல்லது ஆளும் வர்க்கத்தினரோ அல்லர். மாறாக, அவரைச் சுற்றியிருந்தவர்கள், அவரால் பிணிநீங்கியவர்கள், அவரின் போதனையைக் கேட்டவர்கள், அவர் பலுகச் செய்த அப்பங்களை உண்டவர்கள், அலகையிலிருந்து விடுதலை பெற்றவர்கள், பார்வை பெற்றவர்கள், மீனவர்கள், வரிதண்டுபவர்கள், பாவிகள், ஆடுமேய்ப்பவர்கள், பெண்கள், குழந்தைகள். 2) பாடப்பட்ட பாடல்கள் ஹலேல் (குலவைச் சத்தம் போன்று) என்று சொல்லப்பட்ட பாடல்கள் (எகா. ஓசான்னா!). 3) அடையாளங்கள் (ஒலிவக் கிளைகள், ஆடைகள்). 4) அவரது வாகனம் (குதிரையல்ல, கழுதை: எளிமை, அமைதியின் அடையாளம்). இயேசுவின் பவனி சற்று வித்தியாசமாகவே இருந்தது. இந்தப் பவனி ஒரு வரலாற்று நிகழ்வாக இருந்ததைக் காட்டிலும் ஒரு இறையியல் நிகழ்வாகவே இருந்திருக்கின்றது. இந்த நிகழ்வில் பல பழைய ஏற்பாட்டு இறைவாக்குகள் நிறைவேறுகின்றன: 1) இடம்: ஒலிவ மலை (செக் 14:4). 2) தயாரிப்பு: கழுதை (தொநூ 49:10-11). 3) பவனி: வெற்றி ஆரவாரம,; அமைதியின் அரசர், சாலமோன் (செக் 9:9-10. 1அர 1:33-37. 2அர 9:13). 4) பாடல்கள்: அரசவைப் பாடல்கள் (திபா 118:26). 5) பரிசேயர்களின் முணுமுணுப்பு (அபகூக் 2:11). இந்தப் பவனி இயேசுவின் வாழ்விலும் நம் வாழ்விலும் ஏற்படுத்தும் தாக்கங்கள்: 1. இப்பவனி ஒரு வாழ்வியல் உருவகம். இயேசு நடத்திக் காட்டிய ஒரு உவமை. இயேசுவின் அனைத்து உவமைகளிலும் கடைசியில் ஒரு முடிச்சு இருக்கும். பவனி என்ற இந்த உவமையில் வரும் முடிச்சு: வாடகைக் கழுதை. அரசர், தாவீதின் மகன், உமது அரசு வருக என்று குரல்கள் எழும்பினாலும் இந்த அரசர் வந்தது ஒரு வாடகைக் கழுதையில். இறுதிவரை தனக்கென்று ஒன்றையும் வைத்துக்கொள்ளாத ஒரு அரசன். 2. பவனியில் பங்கேற்றவர்களின் எண்ண ஓட்டம் என்ன? உரோமைப் பிடியிலிருந்து தங்களை இயேசு விடுவிப்பார் என்று நினைத்தார்களோ அல்லது சிதறுண்ட யூதர்களை ஒருங்கிணைப்பார் என நினைத்தார்களோ அல்லது இவர் விண்ணரசை நிறுவ வந்தவர் என நினைத்தார்களா? இது யாரும் ஒருங்கிணைத்த பவனி அல்ல. தானாக ஒருங்கிணைந்த பவனி. இன்று நாம் எண்ணற்ற பவனிகளைப் பார்க்கின்றோம். என்னை யோசிக்க வைக்கும் ஒரு பவனி: ஒவ்வொரு குடியரசு தினம் அன்றும் புதுடெல்லியில் நடைபெறும் ஆயுதங்களின் அணிவகுப்பு பவனி. இது ஒரு வகையில் நம் பெருமையைக் காட்டுவதாக இருந்தாலும், மற்றொரு வகையில் நம் பயத்தையும், வன்மத்தையும் காட்டுவதாக இருக்கின்றது. இயேசுவின் ஆயுதம் கழுதை - அமைதி. குதிரையில் வந்த அரசர்கள் கண்ணீரையும், செந்நீரையுமே கொணர்ந்தனர். இந்த அமைதியின் அரசர் இரக்கத்தையும், அன்பையும் மட்டுமே கொணர்ந்தார். 3. வழியில் விரிக்கப்பட்ட ஆடைகள். இயேசு பிறந்தபோது வானதூதர்கள் இடையர்களுக்குச் சொன்ன அடையாளம் ஆடைதான் (லூக் 2:12). இன்று எருசலேம் நுழையும்போதும் விரிக்கப்படுவது ஆடைகள்தாம். தொடக்கநூலில் ஆடை என்பது பாவத்தின் விளைவாக வரும் அடையாளமாக இருக்கின்றது. இயேசு மனித இயல்பில் முழுமையாகப் பங்கெடுத்ததை இந்த ஆடை சுட்டிக்காட்டுகிறது. 4. 'இது ஆண்டவருக்குத் தேவை." கழுதையைப் பற்றிச் சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை. வாழ்வில் நாம் காணும் அனைத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கின்றது. நாம் எதிர்கொள்ளும் அனைத்து நபர்களுமே நம்மில் ஏதோ மாற்றத்தை விட்டுச் செல்கின்றனர். மற்றவர்களுக்கு நாம் வேண்டாப் பொருளாக, தீண்டா நபராக இருந்தாலும் நாம் ஆண்டவருக்குத் தேவையாகவே இருக்கின்றோம். ஆகையால் கவலை வேண்டாம். வாழ்க்கையில் ஒன்மே நடப்பதில்லை. தொடும் அனைத்தும் தோல்வியாகவே சுடுகின்றது எனப் புலம்பினாலும் காத்திருப்போம் இக்கழுதைபோல. நம்மை அவிழ்த்து வர அவர் ஆள் அனுப்புவார். நாமும் நம் கால் மண்ணில்படாமல் நடந்து செல்வோம். 5. இயேசுவின் அரசு ஒரு மாற்று அரசு. இங்கே செருக்கு சிதறடிக்கப்படும். வலியோர் அரியணையினின்று தூக்கி எறியப்படுவர். தாழ்நிலையில் இருப்பவர் உயர்த்தப்படுவர். பசித்தோர் நலன்களால் நிரப்பப்படுவர். செல்வர் வெறுங்கையராய் நிற்பர். அடிமைப்பட்டோர் விடுதலை பெறுவர். நாம் இந்த அரசின் கொள்கைகளை ஏற்கத் தயாரா? நன்றி: மறைத்திரு இயேசு கருணாநிதி, உரோமை
Don't be anxious about what you have, but about what you are. Pope Saint Gregory the Great (540-604)
![]() REV. FR. AMIRTHA RAJ SUNDAR J PARISH PRIEST R C CHURCH ILAYARASANENDAL - 627713 00 91 944 314 0660 | |||
|
|