யாம் பெற்ற இன்பம் என் நண்பர்களும் பெறட்டும் ........

53 views
Skip to first unread message

godwin sobhan raj

unread,
Nov 27, 2010, 11:04:48 AM11/27/10
to csi_be_2007batch


-

காதல்


'காதல்' இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும். சொல்ல இயலாத பல உணர்வுகளை மனதில் எழுதிச் செல்லும் இந்த் ஒற்றை வார்த்தை.
அதிலும் துணை உடன்இருந்துவிட்டாலோ சொர்க்கம் தான். எத்தனை கஷ்டங்கள், வேதனைகள் இருப்பினும் அத்தனையும் தூசு போல் ஆகிவிடும்.உண்மையான ஆத்மார்த்தமான காதல் எதையும் எதிர்பார்க்காது, அன்பைக் கூட.
நீ அன்பு காட்டாவிட்டால் என்ன? நான் அன்பு காட்டுகிறேன், அக்கறை காட்டுகிறேன், காதலிக்கிறேன் இப்படித்தான் சொல்லும் அந்த பிரதிபலன் பார்க்காத காதல் உள்ளம். என் கண்ணின் இமைகளில் வைத்துத் தாங்கிக் கொள்வேனடி(டா) இவ்வாறாக உருக வைக்கும் காதல்.
ஆனால், தற்போதைய காதல்'கள்' (ஒரு சில காதல் தவிர்த்து) இப்படித்தான் உள்ளனவா? காதல் மாதம், மயிலிறகு மாதம் எல்லாம் சரிதான். காதல் காதலாக இருக்கிறதா இப்போது??காதலின் அடிப்படையே பிறழ்ந்து போயிருக்கும் இக்காலத்தில் எங்கு போய்காதலைத் தேடுவது? கடற்கரையிலா? இல்லை பூங்காக்களிலா? அங்கெல்லாம் போனால் காதல் கிடைக்காது.........
போதாக்குறைக்கு இந்தமீடியாக்கள் வேறு. உங்க காதலன்/காதலிக்கு என்ன பரிசு தரப்போறீங்கன்னு 'கொஞ்சும் தமிழ்'ல தொ(ல்)லைபேசுவாங்க. அப்புறம் இந்தக் கலர் உடைஅணியுங்க, இப்படி பேசுங்க உங்க 'அவங்க' கிட்டன்னு இலவசமா அறிவுரை வேறகிடைக்கும்.
அணியும் உடைகளின் நிறத்தில் தானா காதல் வாழ்கிறது. அப்படி என்றால், அதேகலரில் வருஷம் பூராவும் போட்டுட்டு இருக்கலாமே. ஏதோ அந்த ஒருநாள் மட்டும்தான் காதலை தூக்கி நிறுத்தப் போவதாகப் பேசிக்கொள்வார்கள் எல்லாரும்.
'எங்கு காணினும் காதலடா' என்று கையில் ஒரு ரோஜாப்பூவை தூக்கிக் கொண்டு (அது ஏங்க ரோஜா? ஏன் வேற பூ கொடுத்தா ஒத்துக்க மாட்டாங்களா) தனக்கான ஜோடியைத் தேடிக் கிளம்பிடுவார்கள் பையன்களும் பொண்ணுங்களும்.
கேட்டால் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தத்தான் இப்படி என்பார்கள். அந்த அன்பை ஒவ்வொரு நிமிஷமும் வெளிப்படுத்தணும். அதுக்குன்னு ஒரு தனிநாள் தேவை இல்லையே. அந்தநாளில் காதல்ங்கற பேர்ல செய்யும் அட்டகாசங்கள் இருக்கிறதே......... தாங்காது.
பார்ப்பவர்களிடம், பேசுபவர்களிடம் எல்லாம் காதல் வராது. அது யாராவது ஒருத்தர் மேலதான் வரும். அவங்க ஏத்துக்கிட்டாலும் சரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி. அந்த அன்பு, பாசம், நேசம், காதல் எல்லாம் அப்படியேதான் இருக்கும்.
இந்த நிமிஷம் கோபப்பட்டு அடுத்த நிமிடம் மெழுகாய் உருகிக் கரைவது தான்காதல். காத‌ல‌ர்க‌ள் சேர்ந்திருந்தாலும் ச‌ரி, பிரிந்தாலும் ச‌ரி.உண்மைக்காத‌ல் என்றும் உயிர்ப்புட‌ன் இருக்கும். காத‌லும் தாய்மையும்ஒன்றுதான். அடித்தாலும் அணைத்துக் கொள்ளும்.

உண்மையிலேயே நீங்கள் காதலர்களா?




ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும், நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும், ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோ, காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல.

நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும், அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.

சரி காதலன் செய்ய வேண்டியது...
உங்களுக்கு முதல் முன்னுரிமை அளித்திருப்பது.
உங்களை அவரது குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பது.
எதிர்காலத் திட்டங்களை வகுத்து வைத்திருப்பது.
எந்த ஒரு காரியத்தையும் உங்களை வைத்துக் கொண்டு செய்வது.
அவரது ரகசியங்களையும், எதிர்கால கனவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது.
உங்களது தோழிகளை கவருவதில் ஆர்வம் காட்டுதல்.
உங்களை பணி அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க முயற்சி
எடுப்பது.
எதிர்பாராத விதமாக பரிசுகளை அனுப்புதல்.
உங்களது ஒவ்வொரு செயலுக்கும் பாராட்டு மழை பொழிவதும்.
காதலி செய்ய வேண்டியது....
தான் செலவிட்ட மறக்கமுடியாத நாட்களையும், நிகழ்ச்சிகளையும் உங்களிடம் பரிமாறிக் கொள்வது.
ஒரு நாள் முழுவதும் நடந்த சிறு சிறு விஷயங்களை ஒன்று விடாமல் உங்களிடம் ஒப்பிப்பது.
உங்களுடனான வாழ்க்கை, குழந்தை, திருமணம், முதுமை, பயணம் போன்றவற்றைப் பற்றி அடிக்கடி பேசுதல்.
உங்களை அடிக்கடி கோபப்படுத்துதல்.
உங்கள் அம்மாவிடம் தொலைபேசியில் அதிக நேரம் பேசுதல்.
உங்களது செயல்களைப் பற்றிய கடுமையான விமர்சனம் தெரிவிப்பது.
உங்களுடன் வெளியே செல்ல ஏதாவது ஒரு காரணம் தேடுவது.
உங்களது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களைப் பற்றியை கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவது.
உங்களை அடிக்கடி அதிர்ச்சிக்குள்ளாக்குதல் போன்றவை.

இதெல்லாம் ஒரு வரைமுறைதான். இதையெல்லாம் தாண்டியும் பல காதல்கள் வாழ்ந்து சரித்திரம் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஒன்றாகவும் உங்கள் காதல் இருக்கலாம்.

காதலிக்கும் முன் பல முறை யோசியுங்கள். ஆனால் காதலித்த பின்பு வேறு எதையும் யோசிக்காதீர்கள் நேசிப்பதைத் தவிர.

அவன் என்னை காதலிக்கிறானா?


நீங்கள் ஒருவனை காதலிக்கிறீர்கள். ஆனால் அதே சமயம் அவனிடம் சென்று "ஐ லவ் யூ" சொன்னால் எங்கே உங்கள் மூக்கு உடைந்து விடுமோ என்று பயமாக உள்ளதா?அவன் உங்களை காதலிக்கிறானா என்று கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்.
அவன் உங்களை காதலிக்கிறான் என்றால் :
காரணமே இல்லாமல் தினமும் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வான்.
அவன் அம்மாவின் பிறந்த நாள் பரிசை தேர்ந்தெடுக்க உங்களை அழைத்துச் செல்வான்.
நாள் முழுவதும் செய்ததை ஒன்றுவிடாமல் உங்களிடம் சொல்வான்.
அவன் உபயோகிக்கும் சென்ட், "ஆஃப்டர் ஷேவ்" ஆகியவை உங்களுக்கு பிடித்துள்ளதா என்று கேட்பான்.
ஒரே கதையை பத்து முறை சொன்னாலும் கவனத்துடன் குறிக்கிடாமல் கேட்பான். ( கேட்பது போலாவது நடிப்பான். )
உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டுத் தெரிந்து கொள்வான்.
நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை விட உங்களோடு இருக்க விரும்புவான்.
நீங்கள் கேட்காமலேயே அவன் அடித்த லூட்டிகளை உங்களிடம் சொல்வான்.
நீங்கள் ஐஸ்வர்யா ராய்க்கு குறைந்தவர் இல்லை என்பதைப் போல் உங்களைப் புகழ்வான்.
எளிதில் அவனை புண்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ உங்களால் முடியும்.
மேலே உள்ளவற்றில் ஏழுக்கு மேல் பொருந்தினால் தைரியமாக "ஐ லவ் யூ" சொல்லலாம்.
சுமார் நான்கு பொருந்தினால் காத்திருக்கவும்.
ஒன்றோ இரண்டோ பொருந்தினால் அவனை மறப்பதே நல்லது!

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்




லவ்வுக்குப் புதுசா? இந்த எட்டு கட்டளைகளைக் கடைபிடித்தால் நீங்கள் காதலில் கிங் / குவீன்!

காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!
பார்ட்டி காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்.

காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!
காதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது? இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது!

காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே!
சினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு பர்சை காலி பண்ணி பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது - இது போன்ற கெட்ட பழக்கங்கள் காதலுக்கு எதிரி!நீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை குறைந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது.காதலிக்கு ஏதாவது வாங்கித் தந்தே ஆகவேண்டுமா? இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். அதில் தப்பில்லை. அதற்கான விதிமுறைகளுக்கு
7-ஆம் கட்டளையைப் பாருங்கள்!

காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்!
காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம்! உங்கள் காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால் சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போடாதீர்கள்.

காதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்!
உங்கள் காதலுக்குப் பிரச்னை என்று ஒன்று வந்தால் அப்போது நண்பர்களைப் போல் யாரும் உதவ மாட்டார்கள். உங்களுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் சமாதானப் புறாக்களாக இருப்பார்கள். முக்கியமான ஒரு விஷயம். உங்கள் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பொறாமைப்படாதீர்கள்.

உங்கள் காதலனுக்கு நண்பிகள் இருந்தால் வயிற்றெரிச்சல் படாதீர்கள்! நம்பிக்கை காதலின் அஸ்திவாரம். பொறாமையால் நீங்கள் பல விஷயங்களை இழந்துவிடுவீர்கள்.

அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!
காதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ஜான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள்.

விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!
"ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும். காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது.

காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்!
ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள்.காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம். ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது - இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.

ஆண்களை கவர பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை



கண்டதும் காதல், காணாமல் காதல், இப்படி பல வித்தியாசமான காதல் அனுபவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். கேக்குறதுக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருந்தாலும், அதை அனுபவிக்கிறவங்களை தான் முழுமையா உணர முடியும்.

இந்த உணர்தலுக்கு முக்கிய காரணம் கவர்தல். இந்த "கவர்தல்" தான் காதலுக்கே ஆரம்ப நிலை. அதனால, ஆண்களை கவர, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ரகசியங்கள் என்னென்ன என்று நீங்க தெரிஞ்சுக்கலாம்.

* நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது, உங்களுடைய உடல் நிறத்துக்கு எத்த மாதிரியான காஸ்ட்யூம்சை தேர்ந்தெடுத்து அணிஞ்சுக்கங்க... அதிலும் குறிப்பா, பிங்க் கலர், எல்லா ஆண்களையும் கவரக்கூடிய நிறம். இந்த பிங்க் ஷேட்ஸ் இருக்குற மாதிரியான உடைகள் எல்லாருடைய உடல் நிறத்திற்கும் பொருந்தும்.

*நிகழ்ச்சி நடக்குற இடத்துக்கு போனதும், எங்கையாவது, ஓரமா இடம் இருக்குதான்னு தேடி பார்த்து போய் உட்காராமல், அந்த நிகழ்ச்சி நடக்கிற இடத்தோட நடுவுல போய், உங்களுக்கு அறிமுகமானவங்க கிட்ட சகஜமா சிரிச்சு பேசுங்க.

* பேசும் போது, உங்க எதிர்பக்கம் நின்னுகிட்டு பேசுறவங்களுடைய கண்களை நேரா பார்த்து பேசுங்க. அப்படி பேசும் போது, உங்களுடைய உடல்மொழி (Body Language)-யும், கவனத்துல வைச்சுக்கங்க.

*சுவர் மேலே சாய்ந்துக்கிட்டு பேசுறது, டேபிள் மேலே உட்காருவது, பேசும் போது வாயில ஏதாவது போட்டு மென்னுகிட்டே இருக்கிறது, நகம் கடிக்கறது, இந்த மாதிரியான செய்கைகள் உங்க கிட்ட இருக்கும் போது நீங்கள் ஆண்களை கவர முடியாம போறதுக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கு.

*அதே சமயத்துல உங்களுக்கு அறிமுகமாகிற நண்பர்கள் கிட்ட உங்களைப் பற்றியே ரொம்ப பெருமையான பேசிக்கறதும், சரியான அணுகுமுறை இல்லைங்க.

* அந்த நிகழ்ச்சியில உங்களுக்கு புதுசா, அறிமுகமாகிற ஆண் நண்பர்கள் கிட்ட, உங்களுடைய பழைய காதல் வாழ்க்கையை பத்தியோ அல்லது காதலரைப் பத்தியோ பேசாதீங்க. இது தான் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம். ரெண்டு பேரும் ஒவ்வொருத்தரை பத்தி, நல்லா பேசி, மனசு அளவுல புரிஞ்சுக்கீட்டீங்க என்ற சூழ்நிலை வரும்போது நீங்க அவர் கிட்ட இந்த விஷயங்களை பகிர்ந்துக்கலாம்.

*நீங்க ஏதாவது நிகழ்ச்சிக்கோ அல்லது வெளி இடங்களுக்கு செல்லும் போதோ, உங்க மனசுக்கு பிடிச்ச நபரை நீங்க சந்திக்க நேரிட்டால், இந்த விஷயங்களை மறக்காம, பின்பற்ற, பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.


காதலியை கவர சில வழிகள்




* எப்பொழுதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் பெண்கள்.

* ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் "நெய்ல் பாலிஷ்"-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.

* காதலுக்கு உண்மையான சாவி எதுன்னா? அது உங்க காதலியைப் பத்தி நீங்க தெரிஞ்சு வைச்சுக்கறது தான். அதனால் வாழ்க்கையை பொருத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? அப்படின்னு முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க...

* உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைங்க. அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது "டேட்டிங்" போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.

* ஏன்னா சில பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க தங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க. அதனால எந்த நேரத்திலும் அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்துகிட்டு உங்க காதலியை முழுமையாக தெரிஞ்ச்சு வைச்சுக்கங்க.

* தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல, அப்படின்னா... அவங்க ரொம்பவே "டல்" ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. பொறுமையா காதுல வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்ச வைச்சு அதை செயல்படுத்துறதுக்கு தொடங்குங்க.

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்


* சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.
* தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.
* சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.
* காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...
* ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...
* நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.
* எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...
* மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.

காதலர்களாகவே வாழ்வோம்


காதல் என்பது... நாம் பார்த்து பழகிய ஒரு நபர் நமக்கு ஏற்றவர், அவரது குணம், நடவடிக்கை, பழக்க வழக்கங்கள் நமக்கு பிடித்து அவர் இல்லாத வாழ்க்கை வெறுமை என்பதை உணர்ந்து அவரை நேசிக்கும் அந்த நொடியில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
காதல் பிறந்தாகிவிட்டது. அப்புறம் என்ன நமக்கு நாமே பேசி, அவரைப் பற்றியே சதா சிந்தித்து, நண்பர்களிடம் அவரைப் பற்றி மட்டுமேப் பேசி, அவரது சிந்தனையில் இருந்து விலகியிருந்த நாட்களை வாழாத நாட்களில் சேர்ப்பது வரையிலான படும் அவஸ்தை இருக்கிறதே...
அவ்வளவு அருமையானதாகும்.நமக்கிருக்கும் இதே சிந்தனை அந்தப் பக்கத்தில் இருந்தாலும் சரி... இல்லாததுபோல் நடித்தாலும் சரி.... நமது காதல் பாடல் இனிமையாக காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் எந்த அலைவரிசை மாற்றினாலும்.
பின்னர் ஒருநாள் நமக்கே அசாதாரண துணிச்சல் வந்து நமது விருப்பத்தை தெரிவித்து அங்கு சில நாட்களில் தவிப்பில் விட்டு பின்னர் சம்மதத்தை சொல்லி நம்மைத் தொலைத்த நாள் இருக்கிறதே அந்த நாள்தான் நமது மறுஜென்மத்தின் பிறந்த நாளாகவே கருதப்படும்.அன்றில் இருந்து ஆரம்பமாகிறது நமது காதல் லீலைகள்.
ஒருவருக்கொருவர் பிடித்தவற்றைப் பேசித் தீர்க்க போதாத நாளில் ஊர் சுற்றுவதும், நண்பர்களுடன் அறிமுக அரட்டையும் முடிந்து ஒரு வழியாக நமது அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு வர ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம்.
பின்னர்தான் ஆரம்பிக்கிறது பிரச்சினை, பணி நிமித்தமாக நேரம் தவறுதல், குடும்ப பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் என வெடிக்கிறது எரிமலை.இந்த எரிமலை குழம்புகளில் சிக்கி சாம்பலான எத்தனையோ காதல் ஜோடிகளும் உண்டு.
இத்தனையும் தாண்டி நின்று போராடி காதல் வாழ்க்கையில் வெற்றி பெற்று திருமண பந்தத்திற்குள் நுழைந்தால் அங்கும் புயல், சூறாவளி என்று சீற்றங்களை சந்திக்க வேண்டி வரும்.காதலிக்கும்போது நாம் ரசித்து ரசித்து ஓய்ந்தவை எல்லாம் தற்போது சகித்துக் கொள்ளக் கூட முடியாதவைகளாக உருமாறும்.
இவையெல்லாம் எல்லோர் வாழ்விலும் நடப்பவையே...இதைத் தவிர்க்க... நாம் காதலிக்கும் நபரை நமக்கேற்றவராக மாற்றும் எண்ணத்தை கைவிட்டு, அவரை அவராகவே நாம் காதலிக்கும் வகையில் நாம்தான் மாற வேண்டும்.அவரது சொந்தங்களையும், பந்தங்களையும் தன்னுடையதாக நினைக்க வேண்டும் என்பதெல்லாம் கூட வேண்டாம், நம்முடையதாக நினைத்தாலே போதும்.
காதலிக்கும்போதே நமது இயல்பான குணங்களை வெளிப்படுத்தி, இயல்பான முறையில் பழகுதல் நல்லது. எந்தச் செயலை செய்யும் முன்பும் பரஸ்பரம் மனம்விட்டுப் பேசிக் கொள்வதும், மற்றவர் அவரது கருத்தை வெளிப்படையாக வெளியிடுவதும் நமது காதலின் நீண்ட ஆயுளுக்கு நல்லது.
எந்த ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதனை தாங்களாகவே சரி செய்து கொள்ளும் பக்குவம் வேண்டும். 3வது நபரின் தலையீடு எப்போதும் சரிபடாது.அவர் நமக்கானவர்... அவர் செய்யும் எந்த தவறையும் திருத்திக் கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு, அதனை மன்னிக்கும் கடமை நமக்கும் நிச்சயம் உண்டு என்று நினைத்துப் பாருங்களேன். பிரச்சினையே இல்லை.நண்பர்களுக்குள் மன்னிக்கவும், நன்றி கூறவும் வாய்ப்பில்லை என்பதுபோல் காதலர்களும் அவர் செய்தது தவறு என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நாம் செய்தது தவறு என்று ஒற்றுமை உணர்வை ஓங்க விடுங்கள்.
போதும் நீங்கள் தான் அடுத்த வரலாறு படைக்கும் காதலர்களாக இருப்பீர்கள்.எப்போதும் நாம் காதலித்துக் கொண்டேதான் இருக்கிறோம். அதுபோல் காதலர்களாகவே வாழ்ந்து காட்டுவோம்.

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்




பிறரை இகழ்வது : - மற்றவர்களின் தோற்றத்தை இகழ்வதையும், அவர்களைத் தங்களை விட அறிவில் குறைந்தவர்கள் என நினைப்பதையும் ஆண்கள் வெறுக்கின்றனர். அதுவும் மற்ற பெண்களைப் பற்றி பெண்கள் அதிகமாகப் பேசுவார்கள். இதற்குக் காரணம் மற்றவர்கள் தனக்கு போட்டியாக வந்து விடக் கூடாதே என்கின்ற எண்ணம் தான்.

அறிவுரை : மற்றவர்களின் அறிவுரையை யாரும் கேட்டுக் கொள்வதில்லை. ஆண்கள்- பெண்களிடமிருந்து அறிவுரை கிடைத்தாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை.

செலவு : சில பெண்கள் , தன் பாய் பிரண்ட் மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் , தான் திருப்பி செலவு செய்யக் கூடாது என நினைக்கின்றனர். தன்னை மட்டும் செலவு செய்ய வற்புறுத்தும் பெண்களை இக்காலத்து ஆண்கள் விரும்புவதில்லை. விட்டு விலகச் செய்வார்கள்.

நம்பிக்கையின்மை : - உங்கள் பாய் பிரண்ட், உங்கள் தோழியுடன் பழகுவதை தவறாக நினைக்க வேண்டாம். அவர் மீது வைக்கும் நம்பிக்கை உங்களை அவரிடம் உயர்வாக காண்பிக்கும்.

விவாதம் : சில பெண்கள் தன் பாய் பிரண்டிடம் எதற்கெடுத்தாலும் வாதம் புரிவார்கள்(தாங்கள் சொல்வதே சரி என்பார்கள் ) இது கூட ஆண்களுக்கு கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை.

தன்னம்பிக்கையின்மை : - அவர்களோடு இருக்கும் சமயத்தில் எனக்கு எப்பொழுதும் பிரச்சினைதான் எனக்கு நிம்மதியில்லை. பாதுகாப்பில்லை என உளறிக் கொட்டுவதை நிறுத்தவும். தன்னம்பிக்கை மிகுந்த பெண்களைத் தான் ஆண்கள் அதிகம் விரும்புவார்கள்.

குப்பைகள் : - எப்பொழுது பார்த்தாலும் பழைய குப்பைகளை கிளறிக் கொண்டு இருந்தாலும், கடந்து போன விஷயங்களைப் பேசினாலும் ( காதல் உட்பட ) இப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ள ஒரு தடவை மட்டும் பழைய விஷயங்களைச் சொல்வது நல்லது. மீண்டும், மீண்டும் பழைய குப்பையைக் கிளறினால் அதே குப்பையில் உங்கள் காதலும் மூழ்கிவிடும்.

வெட்டிப் பேச்சு :- மற்றவர்களின் ஆடை, யாரெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்களைப் பற்றி ஏதேனும்"கமெண்ட்" (விமர்சனம்) தனக்கு மிகவும் பிடித்த நாயகனைப் பற்றி சதா பேச்சு என்று மட்டும் இருந்தால் உங்கள் பாய் ஃபிரண்ட் சீரியஸ் ஆன விஷயம் எதுவும் இவளிடம் இல்லையா? என உங்களிடமிருந்து அவர் ஓடக் கூடும்.

நேரம் தவறாமை : - காத்திருப்பது என்பது எல்லோருக்கும் வெறுப்பு ஏற்றக் கூடிய விஷயம். ஓரளவு தான் யாரும் தாக்குப் பிடிப்பார்கள். அதுவும் விட உங்கள் மீதுள்ள பிரியத்தால் மட்டுமே காத்திருப்பார்கள். அதிகமாகப் போனால் வெறுக்க ஆரம்பிப்பார்கள்.

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்




1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.

2. நிம்மதியாக உறங்கலாம்.

3. மிஸ்ட் கோல்களை இட்டு கவலைப்படவேண்டாம்.

4. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை இட்டு கவலைதேவையில்லை.

5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.

6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.

7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.

8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.

9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.

10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.

போனஸ் :நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.


-





--
Regards
Godwin Sobhan Raj

Reply all
Reply to author
Forward
0 new messages