Dear Friends,
“The Family that Prays Together, Stays Together.”
We invite you all to join our GIFT-Prayer tomorrow, Palm Sunday 29th at 8:00 p.m.
We prepare to enter the Holy Week in which we celebrate all of the events leading up to Christ’s Passion, Death and Resurrection. And in doing so we recall how by His death He has transformed our death from a curse into the door of eternal life. May our participation in these events help us to deepen our faith, to strengthen our relationships and to broaden our vision.
“We always carry in our body the death of Jesus, so that the life of Jesus may also be made visible in our bodies.” 2 Corinthians 4:10
Have a Blessed and Fruitful Holy Week
Conf. Call No.: 712-775-7200
Access Code: 181053#
********************************
செபமாலை
விசுவாச அறிக்கை: அனைவரும் சேர்ந்து செபித்தல்
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். புனிதர்களுடைய சமூக உறவை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.
கிறித்து கற்பித்த செபம்.
மங்கள வார்த்தை செபம். –மூன்று முறை Mrs. Jennifer Perianayagam Family
திரித்துவப் புகழ்.
துயர மறைபொருள்கள்
1. இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக!
Mrs. Pushpa Kennedy Family
2. இயேசு கற்றூணில் கடடுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக!
Mrs. Nirmala Joseph Family
3. இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒறுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக!
Mrs. Anne Peter Family
4. இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக!
Mrs. Jeritta Rajkumar Family
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக!
Mrs. Regina Savarimuthu Family
செபமாலையின் இறுதி செபம் (அதிதூதரான புனித மிக்கேலே). Mrs. Jennifer Perianayagam Family
3. தேவ துதிகள்: Mrs. Anita Johan Family
பதிலுரை: ஆண்டவரே உம்மை போற்றுகிறோம், வாழ்த்துகிறோம்.
4. ஆராதனைப் பாடல்: Mrs. Sumathi Paul Family
5. இறை வார்த்தை: Mrs. Shalani Francis Family
புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 12-16
அக்காலத்தில் பாஸ்கா திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், ``ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். ``மகளே சீயோன், அஞ்சாதே! இதோ! உன் அரசர் வருகிறார்; கழுதைக் குட்டியின்மேல், ஏறி வருகிறார்'' என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார்.
–இது ஆண்டவரின் அருள்வாக்கு.
இறை சிந்தனை: Fr. Antony Raj
GIFT Prayer: Selvi: Jemima Sammanasu
God our loving Father,
Every good thing comes from you.
We praise and thank you for all your blessings, / especially for the gift of Faith. We gratefully remember those who have inspired us / and passed on to us the living heritage of their Faith.
Lord, we ask you to open our eyes / that we may value and appreciate all people, / recognizing what we have in common / rather than focusing on what our differences might be.
Grant that, as we cherish the value of our own cultural heritage, / we may embrace the goodness we find in other cultures. Inspire us to distinguish between what is important and what is not.
Lord, open our minds and hearts / that we may continue to Grow In Faith Together in Prayer / and always be people of good will who bring life and joy to others. –Amen.
இறுதி ஆசிர்