பாலம் கட்டு...சுவரை உடை....

7 views
Skip to first unread message

Er.S.Sivakumar

unread,
Aug 12, 2012, 3:56:23 AM8/12/12
to btakum...@googlegroups.com
பாலம் கட்டு...சுவரை உடை....
 
நாம் விரும்புகிற மாதிரிதான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? - யோசித்து பாருங்கள்!
 
நம் விருப்பப்படி வாழ்க்கையை வாழ விடாமல் செய்வது யார்?  நமது எதிரிகளா அல்லது விரோதிகளா? இருவரும் இல்லை! நமது INHIBITIONS! நம் இஷ்டப்படி நம்மை வாழவிடாமல் தடுப்பது இதுதான்.
 
ஞாபகத்தில் இருந்து அழித்துவிட்ட ஏதோ சின்ன தகராறுக்காக பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தையே இல்லாமல் இருக்கும் அண்ணன்-தம்பிகள்...அப்பா - பிள்ளைகள்... ஒரே ஆபீஸில் வேலை செய்பவர்கள் INHIBITION என்ற சீனப் பெருஞ்சுவரால் இப்படி எத்தனை பேர் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கிறார்கள்!
 
நாம் ஒருவருடன் உறவு ஏற்படுத்திக்கொள்ள  பாலம் தான் கட்டிக்கொள்ள வேண்டும்.  தவிர பிரிப்பதற்கான சுவர் எழுப்பிக் கொள்ளக்கூடாது.
 
பாட வேண்டும், டான்ஸ் ஆட வேண்டும் என்று பலருக்கு விருப்பம் இருக்கும்... ஆனால், பிறர் என்ன நினைப்பார்களோ... சொல்வார்களோ...  என்று பயந்து நம்மில் பலர் நாம் விரும்பும் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள்கூட செய்வதில்லை!
 
LOOKING GOOD, FEELING GOOD   என இரண்டு விஷயங்கள் இருக்கின்றன! பிறர்  கண்களுக்கு நன்றாக தெரிய வேண்டும் (looking good) என்பதற்காக நமது சந்தோஷத்தையே (feeling good)  பின்னுக்கு தள்ளிக் காலால் மிதித்துக் கொண்டிருக்கிறோம்.
 
INHIBITIONS என்ற இந்த சின்ன தடைகளை உடைத்துக் கொண்டு நாம் சுதந்திரம் அடைவது எப்போது?
 
கோபி- 14 வயது சிறுவன்.  அப்பா ஆசை பட்டமாதிரி வகுப்பில் இவனால் மார்க் எடுக்க முடியவில்லை!   இறுதி தேர்வில் தோல்வியடைந்து விட்டான்.
 
"தண்ட சோறு, உருப்படாத முண்டம்! ஒழிந்து போடா! என் கண் முன் நிற்காதே! என்று கோபியை திட்டிவிடுகிறார் அப்பா.   அவ்வளவுதான் அப்பாவுக்கும் மகனுக்கும் நடுவே ஒரு பெரிய இரும்பு திரை விழுகிறது.
 
பல ஆண்டுகளுக்கு பிறகு, பிளஸ் டூவுக்கு படிக்கும் தன பிள்ளையிடம் அவன் பக்கத்தில் உட்கார்ந்து முன் போல் இயல்பாக பேசமுடியவில்லை.   அரட்டை அடிக்க முடியவில்லை.   இந்த மாயத் திரையை நினைத்து அப்பா வருந்துகிறார்.
 
ஒரு நாள் ஆபீஸில் இருந்து வீடு வரும் போது, நேராக கோபியிடம் வந்து, " என் ஆபீஸில் வேலை செய்யும் ஒருவர், தன அன்பின் அடையாளமாக எனக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைப் பரிசளித்து, " இந்த உலகிலேயே மிகவும் நேசிக்கும் ஒருவருக்கு நீங்கள் பரிசாக கொடுங்கள்" என்று சொன்னார்.    உலகத்திலேயே நான் அதிகம் நேசிக்கும் நபர் நீதானே கோபி!   அதனால் இதை உன்னிடம் கொடுக்கிறேன். வாங்கிக் கொள்"  என்று சொல்லி அந்த நூலை கொடுத்தார்.    பல வருடம் தன்னிடம் முகம் கொடுத்து பேசாதிருந்த தன அப்பாவின் இந்த வார்த்தைகளையும்  செய்கையும் கண்டு கோபி இதயம் விம்மி புடைக்க ஆனந்தத்தில் அழ ஆரம்பித்து விட்டான்.
 
" அப்பா ! என் மீது உங்களுக்கு அன்பே இல்லை என்று இத்தனை காலம் நினைத்திருந்தேன். உங்களுக்கு நான் பாரமாக இருக்கிறேனோ என்று கூட பல சமயம் நான் நினைத்ததுண்டு. உண்மையில், இன்று இரவு நான் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்ள இருந்தேன்". அதற்கு மேல் கோபியை அவர் பேச விடவில்லை.தன மகனை மார்போடு அனைத்துக் கொண்டு கண்ணேர் விட..... அந்த கண்ணீர் துளியில் இடையே இருந்த பெரும் சுவர் கரைந்து விட்டது.
 
நீங்களும், உங்கள் தாயை, தந்தையை, பிள்ளைகளை, கணவனை, மனைவியை நெஞ்சார நேசிக்கிறீர்களா? அனால், எப்போதோ விழுந்த இரும்பு திரையின் காரணமாக நீங்கள் அவர்களை நேசிப்பதையும் அவர்களிடம் அன்பு வைத்திருப்பதையும் தெரிவிக்காமல் இருகிறீர்களா? உங்களின் INHIBITION ஐ இந்த நிமிடமே உடைத்தெறிந்து விட்டு அவர்களிடம் சென்று உங்களின் அன்பை உடனே தெரிவியுங்கள்...



Reply all
Reply to author
Forward
0 new messages