அறிவியல் ஆயிரம்பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு
பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்வு, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இது உலகை அழிக்கும் வகையில் அச்சுறுத்தி வருகிறது. ஆனால் அது வெப்பத்தால் ஏற்படும் வறட்சியால் இன்றி, கடும் குளிரால் இருக்கலாம் என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. பூமியில் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு தொடர்ந்து அதிகரித்து, அதன் காரணமாக அதிகளவில் வெப்பநிலை உயர்வை அடைந்தால் ஒரு பனி யுகத்திற்குள் நுழையலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்: வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
உலகின் பெரும்பாலான நாடுகளிலும் இந்தியர்கள் வாழ்கின்றனர். பல துறைகளில் சாதனையாளர்களாக உள்ளனர். நாட்டின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்.ஆர்.ஐ.,) பங்கு முக்கியமானது. வெளிநாடு வாழ் இந்தியர்களையும் இணைக்க வேண்டும் என்ற நோக்கில் 2003ல் ஜன. 9, வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக மத்திய அரசு அறிவித்தது. காந்தியடிகள் தென் ஆப்ரிக்காவில் இருந்து 1915 ஜன. 9ல் மும்பை வந்தார். பின் இந்திய சுதந்திர போராட்டத்தில் இணைந்து கொண்டார். இத்தினத்தை நினைவுபடுத்தும் விதமாக இந்நாள் தேர்வு செய்யப்பட்டது.