மின்னம்பலம்

281 views
Skip to first unread message

dhivi mohan

unread,
May 15, 2018, 3:05:40 AM5/15/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்!
பவளப் பாறைகள் (Coral Reefs). கடலின் பல்லுயிர் ஆதாரம் இந்த பவளப்
பாறைகள். நேற்று இதே பகுதியில் சதுப்பு நிலம் பற்றிப் பார்த்தோம் அல்லவா?
சதுப்பு நிலங்களைவிடப் பல மடங்கு ஆற்றல் கொண்டுள்ளவை பவளப் பாறைகள்.
பூமிக்கு மழைக்காடுகள் என்றால், கடலுக்குப் பவளப் பாறைகள். அப்படி ஓர்
உயிர்ச் சூழலைத் தன்னகத்தே உருவாக்கி வைத்திருக்கும் வாழ்வியில்
கிடங்குகள் அவை.
பல்வேறு வண்ணங்களில் செழித்திருந்த கடலின் இதயம், இன்று வெளுத்துப் போய்
வெறும் எலும்புகளாகத் துருத்திக்கொண்டு நிற்கிறது. இதை Coral bleaching
என்பர். இதற்கு முக்கியமான காரணம், உலகில் பசுங்குடில் வாயுக்கள்
(Greenhouse Gases) அதிகமாகி விட்டதுதான். ஏனெனில், இந்த பசுங்குடில்
வாயுக்களால் உருவாகும் வெப்பத்தைக் கடல்களும் பெருங்கடல்களும் உறிஞ்சத்
தொடங்கிவிட்டன. இதனால் நீரின் வெப்பம் எப்போதும் இல்லாத அளவுக்கு
உயர்ந்திருக்கிறது. இத்தகைய வெப்பத்தில் பவளப் பாறைகளால் தாக்குப்
பிடிக்க முடியாது.
பவளப் பாறைகள் சூழ்ந்த சுற்றத்தில் அவை 500 மேற்பட்ட மீன் இனங்களின்
வாழ்வாதாரமாக இருக்கிறது. இனங்களின் எண்ணிக்கை மட்டும் 500 என்றால்,
ஒட்டுமொத்த மீன்களின் எண்ணிக்கையைக் கற்பனை செய்து பாருங்கள்! இவை பவளப்
பாறைகளால்தான் வாழ்கின்றன என்பது உண்மைதான். ஆனால், இவை இல்லை என்றால்
பவளப் பாறைகளால் வாழ முடியாது என்பதும் உண்மை. இதுதான் இயற்கையின் சாரம்.
பகிர்ந்து வாழ்தல் எனும் சூழலியல் பண்பு.
Extensive fishing எனும் வர்த்தக ரீதியான அதீத மீன் பிடிப்பால் பல்வேறு
மீன் இனங்கள் அழிந்துவருகின்றன. அவற்றுடன் சேர்த்து பவளப் பாறைகளும்
அழிந்துவருகின்றன.
இவ்வாறான அழிவிலிருந்து காப்பதற்கான முயற்சிகளை அரசு
மேற்கொள்ளாவிட்டாலும், மேலும் அழிவுக்கு வழிவகுக்காமலாவது இருக்க
வேண்டுமல்லவா? மன்னார் வளைகுடா பற்றி நீங்கள் கண்டிப்பாக
கேள்விப்பட்டிருப்பீர்கள். அரிய வகை உயிரினங்களின் தாய்நிலம். இந்த
உயிரினங்கள்தான் ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களைச்
சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரம். இவர்களையும் இவர்கள் சார்ந்துள்ள
மீன்வளத்தையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்க் கோளக்
காப்பக அறக்கட்டளையை மூடுவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டுவருவதாகச்
சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் காப்பகத்துக்கு என்று ஒரு சிறப்பு உண்டு. தென்கிழக்கு ஆசியாவில்
நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க் கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது.
உலகப் புகழ்பெற்ற இக்காப்பகத்தைக் காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டுமே தவிர,
இவற்றைக் கைவிட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்பது புவியில் வாழும்
உயிர்களுக்குச் செய்யும் துரோகம்.
நரேஷ்

dhivi sha

unread,
May 19, 2018, 2:33:42 AM5/19/18
to Valluvan Paarvai, inaiathendral

dhivi sha

unread,
May 19, 2018, 2:35:02 AM5/19/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: எடுக்க ஒரு நியாயம், கொடுக்க ஒரு நியாயமா?
ஜெ.ஜெயரஞ்சன்
இந்திய ஒன்றியத்தில் உலகின் பிற நாடுகளைப் போலவே நேரடி வரிகளும் மறைமுக
வரிகளும் வசூலிக்கப்படுகின்றன. மூன்று விதமான அமைப்புகள் இந்த வரி
வசூலில் ஈடுபட உரிமை பெற்றுள்ளன. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு
இயங்கும் ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
என்பனவையே அவை. யார் எந்த வரியை விதிக்கலாம் என்பதை நமது அரசியல்
அமைப்புச் சட்டம் தெளிவாகப் பிரித்தளித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் விதித்து வசூலிக்கும் வரிகளின் அளவு மிகவும்
சொற்பமே. எனவே அதை நாம் ஆராய்ந்து பார்க்கப் போவதில்லை. ஒன்றிய, மாநில
அரசுகளின் வரி முயற்சியை மட்டுமே நாம் இப்போது ஆய்வுக்கு உட்படுத்துவோம்.
இந்த இரு அரசுகளும் தங்களது வரி வருவாயின் பெரும் பகுதியை வரி
செலுத்துபவரின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ற வகையில் விதித்துப்
பெறுவதில்லை. நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒரே அளவில் வரி செலுத்தும்
திறன் பெற்றிருப்பதில்லை. ஒரு குடிமகனிடம் உள்ள செல்வம் மற்றும் அவரது
வருவாயைப் பொறுத்து அவரது வரி செலுத்தும் திறன் மாறுபடும்.
சுருங்கச்சொன்னால் பணக்காரர்களின் வரி செலுத்தும் திறன் கூடுதல்,
ஏழைகளின் வரி செலுத்தும் திறன் குறைவு.
அரசின் வரி வருவாய் வரி செலுத்தும் திறன் அதிகம் படைத்த
பணக்காரர்களிடமிருந்து பெறுவதுதானே நியாயம்? ஆனால், அரசுகள் தங்களது
வருவாயின் பெரும் பகுதியை வரி செலுத்தும் திறன் குறைவாகப் பெற்றுள்ள
ஏழைகளிடமிருந்தே பெறுகின்றன. அரசுகளின் வரி வருவாயில் ஏறத்தாழ 70
விழுக்காடு மறைமுக வரி என்பது ஒருவரின் வரி செலுத்தும் திறனைக் கணக்கில்
கொள்ளாது. மாறாக யாரெல்லாம் அதன் வலைக்குள் செல்கிறார்களோ அவர்களின்
தகுதியைப் பாராது அவர்களிடமிருந்து பெறப்படும் வரியே மறைமுக வரியாகும்.
எடுத்துக்காட்டாக நாள் ஒன்றுக்கு சில பல லட்சங்களை ஈட்டுபவர் (மூத்த
அரசியல்வாதிகளின் முகங்கள் உங்களின் நினைவுக்கு வரலாம்) தனது ஆடம்பரக்
காருக்கு பெட்ரோல் வாங்கும்போது அவர் அரசுகளுக்கு ஒரு லிட்டருக்குச்
செலுத்தும் வரி ரூ.40 என வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் ரூ.12,000 மாதச்
சம்பளம் பெறும் அவரது ஓட்டுநர் தனது இரு சக்கர வாகனத்துக்கு வாங்கும் ஒரு
லிட்டர் பெட்ரோலுக்கு அவர் அரசுகளுக்குச் செலுத்தும் வரி அதே ரூ.40 தான்.
நமது நாட்டில் குபேரர்கள் அதிகமா அல்லது குசேலர்கள் அதிகமா? அரசுகள்
தாங்கள் பெறும் வரியில் 70 விழுக்காடு வரியைக் குசேலர்கள் அதிக பாரம்
சுமந்து (அவரது செலுத்தும் திறனைக் கணக்கில் கொள்ளாமல்
விதிக்கப்படுவதால்) செலுத்தும் மறைமுக வரியிலிருந்து பெறுகின்றன. அதாவது
ஏழைகள், சாமானியர்கள் பெருவாரியாக செலுத்தும் வரியே அரசின் பெரிய வரி
வருவாய். செல்வந்தர்கள் மீது விதிக்கப்படும் நேரடி வரி விதிப்பின் மூலம்
கிட்டும் வருவாயை மிகவும் சொற்ப அளவிலேயே வைத்துள்ளன. ஆக, வரி
விதிப்பின்போது அரசுகள் கடைப்பிடிக்கும் நியாயம் என்பது ஏழைகளிடமிருந்து
அதிகம் பெற்று செல்வந்தர்களிடம் சேர்ப்பது (அவர்களிடமிருந்து குறைவாக
வரியைப் பெறுவதன் மூலம்) எடுப்பது ஏழைகளிடமிருந்து என்பதுதான் மறைமுக
வரிக் கொள்கையின் தாரக மந்திரம்.
இவ்வாறு பெறப்படும் வரி வருவாய் ஒன்றிய அரசிடம் குவியும். ஏனெனில்,
ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டிருக்கும் வரி அதிகாரங்கள் அத்தகையவை. மாறாக
மாநில அரசுகளுக்குப் பொறுப்புகள் அதிகம். அதற்கேற்ற வரி வழிவகைகள் இல்லை.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு அமைக்கப்படுவதே நிதிக் குழு.
தற்போது அமைக்கப்பட்டிருப்பது 15ஆவது நிதிக் குழு. இந்த நிதிக் குழுவின்
பணி வரன்முறை (ToR) பல சச்சரவுகளை ஏற்படுத்தியுள்ளது (Links).
குறிப்பாகத் தென்மாநிலங்களின் குரல் ஓங்கி ஒலிப்பது 2011ஆம் ஆண்டு
மக்கள்தொகையின் அடிப்படையில் ஒதுக்கீட்டைச் செய்யுமாறு நிதிக் குழுவுக்கு
ஒன்றிய அரசு பணித்துள்ளமையை எதிர்த்தே.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டால் மக்கள்தொகையை
வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ள தென்மாநிலங்கள் பெருமளவில் நிதிப் பங்கை
இழக்க வேண்டி வரும். ஏற்கெனவே 14ஆவது நிதிக் குழு ஒரு சிறிய அளவில்
2011ஆம் ஆண்டு மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு நிதி ஒதுக்கீட்டை முடிவு
செய்ததால் தென்மாநிலங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தன. இப்போது முழுவதுமாக
2011ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் ஒதுக்கீடு என்றால் பெரும்
இழப்பு நிச்சயம். இதைத்தான் தென்மாநிலங்கள் அநீதி என்கின்றன.
இதற்கு எதிராகக் கருத்துள்ளவர்கள் என்ன வாதத்தை முன்வைக்கின்றனர்?
வரியைப் பங்கிட்டுக் கொள்ளும்போது நியாயமாகப் பங்கிட வேண்டும். ஒவ்வொரு
மாநிலத்தின் நிதித் தேவையையும் அந்தத் தேவையை நிறைவு செய்யும் வண்ணம்
அதற்கு நிதி ஆதாரங்கள் இருக்கின்றனவா எனத் தீர ஆராய்ந்த பின்னர் நிதி
ஒதுக்கப்பட வேண்டும். நிதித் தேவையைக் கணக்கிடுவதற்கு அம்மாநில
மக்கள்தொகையைக் கவனத்தில் கொண்டதால்தான் அம்மாநிலத்தின் நிதித் தேவையை
நம்மால் கணக்கிட முடியும். நிதி திரட்டும் திறனைக் கணக்கிட அவர்களது
பொருளாதார உற்பத்தியைக் கணக்கில் கொள்ள வேண்டும். இவை இரண்டும்தான் ஒரு
மாநிலத்தின் நிதித் தேவையை வரையறுக்கும். இதனால்தான் வளர்ந்த
மாநிலங்களாகவும், மக்கள்தொகை குறைந்த மாநிலங்களாகவும் இருந்தால் அத்தகைய
மாநிலங்கள் நிதிப் பகிர்வில் இழப்பைச் சந்திக்கும். அது மட்டுமல்ல;
அவர்கள் ஒன்றியத்திற்குக் கூடுதலான வரி வருவாயை அளித்துக் குறைவான
பங்கைப் பெறுவார்கள். இது கூட்டாட்சியில் நியாயமே. வஞ்சிக்கப்படுகிறோம்
என்று கூக்குரலிடுவது தேவையற்றது. இதுதான் நிதிப் பகிர்வு முறையை
ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் வாதம்.
அதாவது செல்வச்செழிப்புள்ள வளர்ந்த மாநிலங்களிடமிருந்து கூடுதல் நிதியைப்
பெற்று வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஏழை மாநிலங்களுக்குப்
பகிர்ந்தளிக்கும் முறைதான் நியாயம் என வாதிடுகின்றனர். நிதியைப்
பகிர்ந்தளிக்கும்போது இந்த நியாயம் பேசுவோர் நிதியைப் பெறும்போது (வரி
வருவாய்) ஏன் இந்த நியாயம் பேசுவதில்லை?
ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு வரியை மறைமுக வரியாகப் பெறும் அரசுகள்
இந்த நியாயப்படி பார்த்தால் தங்கள் வரி வருவாயை முழுவதுமாக நேரடி வரியின்
மூலமே பெற வேண்டும். ஆனால், ஏழைகளைக் கசக்கிப் பிழிந்துதான் அரசுகள்
தங்களது பெரும்பாலான வரி வருவாயைப் பெற்று வடமாநிலங்கள் ஏழைகள் எனப்
பெரும்பங்கு நிதியை அவர்களுக்கு வழங்குவது என்ன நியாயம்? மேலும், வளர்ந்த
மாநிலங்கள் செயல்படுத்திவரும் அம்மாநில ஏழைகளுக்கான நலத் திட்டங்களை
ஒடுக்குவது (போதுமான நிதியை ஒதுக்காமல்) ஒன்றியத்தின் துரோகமல்லவா?
ஆக, அரசுகள் நிதியைப் பெற ஒரு நியாயத்தையும் நிதியைப் பகிர்ந்துகொள்ள
வேறு ஒரு நியாயத்தையும் கொண்டுள்ளன என்பது தெளிவு.
கட்டுரையாளர் குறிப்பு:
ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில்
முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ)
உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக
சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக
ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய
ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.

dhivi sha

unread,
May 19, 2018, 10:17:25 PM5/19/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: நீதிமன்றத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு!
ரவிக்குமார்
காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று பிறப்பித்துள்ள
உத்தரவோடு பல ஆண்டுகளாக நடந்துவந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு
வந்திருக்கிறது. ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ (Cauvery Management
Authority) என்ற அமைப்பை உருவாக்கப்போவதாக உச்ச நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்ட பதினான்கு பக்க வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு
கூறியிருந்தது. அதை அப்படியே உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. “பருவ
மழை தொடங்குவதற்கு முன்பாக இந்த வரைவுத் திட்டத்தை மத்திய அரசு,
அரசிதழில் வெளியிட்டு நடைமுறைப்படுத்தும் என நம்புகிறோம்” என்று உச்ச
நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு நீதி கிடைத்துவிட்டதா?
கர்நாடக அரசியல் குழப்பங்களே போதும் போதும் என்கிற அளவுக்கு செய்திகளைத்
தந்துகொண்டிருக்கும் நிலையில் இதுவரை தமிழ்நாட்டின் உயிராதாரப்
பிரச்சினையாக வர்ணிக்கப்பட்டுவந்த காவிரிப் பிரச்சினையை ஊடகங்கள்
கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டுக்கு வெற்றி எனத் தமிழக அமைச்சர் சொன்னதையே
அவை வழிமொழிந்து தமது கடமையை முடித்துக்கொண்டன. விவசாய சங்கங்களின்
தலைவர்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பார்ப்பதற்கு முன்பே அதை
வரவேற்றுக் கருத்து தெரிவித்துவிட்டனர். அரசியல் கட்சிகளும் இதுவரை
பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது
“காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் தமிழக மக்களும், விவசாயிகளும்
எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது” என்று சட்டத் துறை
அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ள கருத்து உண்மைதானோ என்ற சந்தேகம்
நமக்கு எழுகிறது.
கர்நாடக, கேரள அரசுகளின் ஆட்சேபனைகள்
உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று வழங்கியுள்ள 28 பக்கங்கள் கொண்ட
இறுதித் தீர்ப்பில், மத்திய அரசு சமர்ப்பித்த வரைவுத் திட்டத்தை அப்படியே
எவ்விதத் திருத்தமும் இன்றி ஏற்றுக்கொண்டு வெளியிட்டுள்ளது. கடந்த 17ஆம்
தேதி மத்திய அரசால் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தம்
செய்யப்பட்ட வரைவுத் திட்டத்தில் எந்தெந்த மாநிலங்கள், என்னென்ன
கருத்துகளைக் கூறின என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில்
விவரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்
ஷியாம் திவான், கேரளாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா
ஆகியோர், “மத்திய அரசு சமர்ப்பித்துள்ள வரைவுத் திட்டம், மாநில
உரிமைகளில் தலையிடுகிறது, தண்ணீரைச் சேமிப்பது, பயன்படுத்துவது ஆகியவை
மாநில அதிகாரம் சம்பந்தப்பட்டவை. அரசியலமைப்புச் சட்டத்தின் 7ஆவது
அட்டவணையில் 2ஆவது பட்டியலில் 17ஆவது அம்சமாக அந்த அதிகாரம்
குறிப்பிடப்பட்டுள்ளது” என்று வாதாடினார்கள் என உச்ச நீதிமன்றம் பதிவு
செய்துள்ளது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அந்த ஆட்சேபனைகளை
மறுத்தார். “வரைவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அந்த அம்சங்கள்
இந்தத் திட்டத்தை சுமுகமாகச் செயல்படுத்துவதற்காகத்தானே ஒழிய வேறல்ல”
என்று அவர் கூறினார். “நடுவர் மன்றத்தால் முன்வைக்கப்பட்டு, உச்ச
நீதிமன்றத்தால் திருத்தம் செய்யப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள
அளவு தண்ணீரை நான்கு மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இந்தத்
திட்டத்தின் நோக்கம்” என்று அவர் கூறினார்.
எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காத தமிழ்நாடு
புதுச்சேரி மாநிலத்துக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எஸ்.நம்பியார்,
“இந்த வரைவுத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஆணையம், இந்தத்
திட்டத்தை செயல்படுத்தக்கூடிய முழுமையான அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்க
வேண்டும் என்று வலியுறுத்தினார்” என்பதைப் பதிவு செய்துள்ள உச்ச
நீதிமன்றம், “திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தின் மீது தமிழக அரசின்
சார்பில் எந்தவொரு ஆட்சேபனையோ, ஆலோசனையோ தெரிவிக்கப்படவில்லை” என்றும்
கூறியுள்ளது.
“தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என்று கூறிய தமிழகத் தரப்பு வழக்கறிஞர் நபாடே, தமிழ்நாட்டில் தற்போது
தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தத் திட்டத்தைச் சரியாக
நடைமுறைப்படுத்தினால்தான் அதைத் தீர்க்க முடியும் என்று மட்டுமே
தெரிவித்ததாக உச்ச நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு
நான்கு மாநிலங்களின் வாதங்களையும் கேட்ட பிறகு கர்நாடகா, கேரளா ஆகிய
மாநிலங்கள் எழுப்பிய ஆட்சேபனைகளில் எவ்விதப் பொருளும் இல்லை என்ற
முடிவுக்குத் தாம் வந்ததாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த
வரைவுத் திட்டம் எவ்விதத்திலும் மாநில அதிகாரத்தில் தலையிடுவதாக
அர்த்தமாகாது. நடுவர் மன்றத்தால் முன்வைக்கப்பட்டு, நீதிமன்றத்தால்
திருத்தம் செய்யப்பட்ட செயல் திட்டத்தைச் சுமுகமாகவும், சிறப்பாகவும்
நடைமுறைப்படுத்துவதற்கே வழி வகுக்கும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது
(பக்கம்: 23 - 24). வரைவுத் திட்டத்தின் பிரிவு 9 உட்பிரிவு(1) மற்றும்
(4) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவை தேவையற்றவை என கர்நாடகாவும் கேரளாவும்
ஆட்சேபம் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அந்த
ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டது.
ஆட்சேபனைகளை எழுப்புவதன் மூலம் இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு
மாநில அரசுகள் மறைமுகமாக வலியுறுத்துவதைத் தம்மால் ஏற்க முடியாது என்று
திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட உச்ச நீதிமன்றம், உருவாக்கப்பட இருக்கும்
ஆணையம் அப்போது எழும்பும் பிரச்சினைகளைக் கையாள வேண்டும் என்றும், நீர்ப்
பற்றாக்குறைச் சூழல் ஏற்பட்டால் அதை எப்படிக் கையாள்வது என்று முடிவு
செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கைவிடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
மத்திய அரசு போதுமான விளக்கங்களைக் கொடுத்துவிட்டதால், அதற்கு எதிராகத்
தமிழக அரசால் தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கைவிடப்படுகிறது
எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இறுதியாக, மத்திய அரசின் சார்பில் இந்தச் செயல் திட்டம் சட்டப்படி
நடைமுறைப்படுத்தப்படும் என்று வழங்கப்பட்டிருக்கும் உத்தரவாதத்தை
ஏற்றுக்கொண்டு இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகக்
கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள
மத்திய அரசின் வரைவுத் திட்டம் எதிர்வரும் மழைக்காலத்துக்கு முன்பாகவே
அரசிதழில் வெளியிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் எனத் தாம் நம்புவதாகக்
கூறியுள்ளது.
அலுப்படைந்துவிட்டதா உச்ச நீதிமன்றம்?
வரைவுத் திட்டத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று நம்பிக்கை மட்டுமே
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் தனது கடமை முடிந்துவிட்டதாக
அது கருதுவதுபோல் தெரிகிறது. இதற்கு மேல் இந்த வழக்கை ஊன்றி கவனித்துத்
தீர்ப்பு வழங்கும் பொறுமையை உச்ச நீதிமன்றம் இழந்துவிட்டதோ, காவிரி
விவகாரத்தில் அலுப்படைந்துவிட்டதோ என நாம் எண்ணும்விதமாகவே 18.05.2018
அன்று அது வழங்கிய தீர்ப்பு உள்ளது.
மத்திய அரசால் உருவாக்கப்படும் ஆணையம் முழுமையான அதிகாரம் கொண்ட
சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எங்கும்
வலியுறுத்தவில்லை. மத்திய அரசின் வரைவுத் திட்டத்திலும் அப்படி எதுவும்
குறிப்பிடப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்துக்காக வாதாடிய மூத்த
வழக்கறிஞர் நம்பியாரின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுப்
பாராட்டியுள்ளது. “இந்த ஆணையம் எந்திர கதியாக உத்தரவுகளைப்
பிறப்பிக்கின்ற ஒரு அமைப்பாக இருக்கக் கூடாது. மாறாக, நடுவர் மன்றமும்,
உச்ச நீதிமன்றமும் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும்
முழுமையான அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும்” என்று அவர்
கூறியதைப் பதிவு செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், “இதைத் தவிர நாங்கள்
சொல்வதற்கு வேறு ஏதும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது. அவரது
நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் வழிமொழிவதாக இதற்குப் பொருள் கூறலாம்
என்றாலும், அதை ஏனோ வெளிப்படையாக அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் பதிவு
செய்யவில்லை.
திரிசங்கு நிலையில் தமிழ்நாடு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய ஆறுதலைத்
தந்திருப்பது போலவும், குறுவை சாகுபடிக்கே தண்ணீர் வந்துவிடும் என்பதைப்
போலவும் இங்கே ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது. இந்தத் தீர்ப்போடு
நீதிமன்றம் சார்ந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆனால்,
நாடாளுமன்றம் சார்ந்த நடவடிக்கைகள் இனிமேல்தான் தொடங்கப்பட வேண்டும்.
மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் தாவா சட்டத்தின் பிரிவு 6 (7)இன்படி
மத்திய அரசால் உருவாக்கப்படும் திட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். அங்கே ஏதேனும் திருத்தங்கள்
செய்யப்பட்டால் அதையும் அதில் உள்ளடக்கிக் கொள்ள வேண்டும் என்று உள்ளது.
எனவே, இந்த வரைவுத் திட்டத்தை அப்படியே அரசிதழில் வெளியிட்டுவிட
முடியாது. அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து
சட்டமாக்கியதற்குப் பிறகே அரசிதழில் வெளியிட முடியும்.
நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தால் அதில் இந்தத்
திட்டத்தைத் தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும், கூட்டத் தொடர்
நடைபெறவில்லை என்றால், அடுத்து எப்போது நடக்கிறதோ, அப்போது அதில் வைத்து
ஒப்புதல் பெற வேண்டும் எனவும் மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் தாவா
சட்டத்தின் பிரிவு 6 (A ) (7) கூறுகிறது.
சில வாரங்களுக்கு முன்புதான் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவுக்கு
வந்தது. அடுத்து மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட
வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல்
செய்யப்பட்டிருப்பதால், கடந்த கூட்டத் தொடர் முழுவதையுமே நடக்கவிடாமல்
செய்துவிட்டார்கள். அதற்கு அதிமுக உறுப்பினர்கள், பாஜகவால்
பயன்படுத்தப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால்
முன்வைக்கப்பட்டன. மழைக்காலக் கூட்டத் தொடரிலும் அதைப் போலவே எந்தவொரு
விவாதமும் நடக்காமல் பாஜக பார்த்துக்கொள்ளும் என்றே கருதப்படுகிறது.
ஏனென்றால், விவாதம் நடைபெற்றால் முதல் விஷயமாக நம்பிக்கையில்லாத்
தீர்மானத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நாடாளுமன்ற விதி. அதற்கு
பாஜக சம்மதிக்குமா என்று தெரியவில்லை.
எனவே, காவிரி நதி நீர் ஆணைய மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
வைத்து ஒப்புதல் பெறுவதென்பது உடனடியாக நடைபெறக்கூடிய ஒன்று அல்ல. அதற்கு
ஓராண்டுகூட ஆகலாம். அதற்குள் இப்போதுள்ள பாஜக ஆட்சி முடிவுக்கு
வந்துவிடலாம். இதனால், உச்ச நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாமல்,
ஆணையமும் அமைக்கப்படாமல் ஒரு திரிசங்கு நிலைக்குத் தமிழகம்
தள்ளப்பட்டிருக்கிறது.
சட்டத்தில் உள்ள முரண்பாடு
இந்த இடத்தில் மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டத்தின்
பிரிவுகளுக்கு இடையேயுள்ள முரண்பாடு ஒன்றையும் நாம் கவனத்தில் கொள்ள
வேண்டியிருக்கிறது. அந்த முரண்பாடு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்
தீர்ப்பில் அப்போதே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. (நடுவர் மன்ற இறுதித்
தீர்ப்பு தொகுதி 5, பக்கம் 220-221) “மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்
தாவா திருத்தச் சட்டம் 2002 பிரிவு 6 (2)இல், ‘நடுவர் மன்றத்தின் இறுதித்
தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டால் உச்ச நீதிமன்றத்தின்
இறுதி உத்தரவுக்குச் சமமான அதிகாரத்தைப் பெறுகிறது” என்று
கூறப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் பிரிவு 6 (A) (7) ”இறுதித் தீர்ப்பின்
அடிப்படையில் உருவாக்கப்படும் செயல் திட்டம் நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் வைக்கப்பட்டு அதில், திருத்தங்கள் ஏதும் செய்யப்பட்டால்
அதையும் உள்ளடக்கி அதன் பின்னர் நடைமுறைக்கு வரும்” எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது. “உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு
(Decree) இணையான ஓர் ஆணையை நாடாளுமன்றத்தில் வைத்துத் திருத்தம்
செய்யலாம் என்று சொல்வது முரண்பாடாக உள்ளது” என நடுவர் மன்றம் அப்போதே
கூறியிருந்தது. இதைத் தற்போது நடைபெற்ற உச்ச நீதிமன்ற வழக்கு
வாதத்தின்போது யாருமே சுட்டிக்காட்டவில்லை. அதனால், இந்த முரண்பாடு
இன்னும் களையப்படாமலேயே இருக்கிறது.
18.05.2018 அன்று அளித்துள்ள தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு என்றும், இந்த
வரைவுத் திட்டத்தை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் உச்ச
நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், நதி நீர் தாவா சட்டம் 6(A) (7)இல்
உள்ளபடி இந்த வரைவுத் திட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
வைக்கப்பட்டாக வேண்டும். அப்படி வைக்கப்படாமல் நேரடியாகவே அரசிதழில்
வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூற முடியாது. ஏனென்றால், அது
நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் தலையிடுவதாகிவிடும்.
நீதிமன்றத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு
இந்தச் சட்ட முரண்பாடு இருப்பதால் தமிழ்நாட்டுக்குக் காவிரித் தண்ணீர்
உடனடியாகக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
இந்த வரைவுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலன்றி காவிரி மேலாண்மை
ஆணையத்தையும் உருவாக்க முடியாது. இதெல்லாம் தமிழக அரசின் தரப்பில் ஆஜரான
வழக்கறிஞருக்குத் தெரியுமோ, தெரியாதோ. ஆனால், மத்திய அரசுக்கும், அதன்
சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கும் நன்றாகவே
தெரியும். அதனால்தான் அவர்கள் எப்படியாவது உச்ச நீதிமன்றத்தில் இந்த
வழக்கை முடித்துக்கொண்டால் போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
காவிரிப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.
இப்போது அது, மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து நாடாளுமன்றத்தின் வாசலில்
காத்து நிற்கிறது. மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு
நியாயம் செய்யுமா என்பதை இனிமேல்தான் நாம் பார்க்க வேண்டும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: முனைவர் ரவிக்குமார் அரசியல், கலை,
இலக்கிய விமர்சகர். மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர். முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். இவரைத்
தொடர்புகொள்ள: adhe...@gmail.com)

dhivi sha

unread,
May 28, 2018, 12:37:08 PM5/28/18
to Valluvan Paarvai, inaiathendral
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்!
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று (மே
28) வெளியிட்டது. இதையடுத்து உடனடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி
ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு நோய்களும்,
சுவாசப் பிரச்னையும் ஏற்படுவதாகவும் அதனால் ஆலையை நிரந்தரமாக மூட
வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகத்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்
துறையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்டோர்
பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக
மூட அரசாணை வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து
வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம்,
ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று
செய்தியாளர்களிடத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து உடனடியாக
விமானம் மூலம் பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். இதற்குப் பிறகு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர்
தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்வர்
பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி
ராஜேந்திரன் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதன்பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச்
மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதனைப் புதுப்பிக்க
விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஏற்கெனவே
விதித்திருந்த மாசு கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி
செய்யப்படவில்லை என்பதால், 9.4.2018 அன்று, அவ்விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஆலை இயங்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
"24.5.2018 அன்று முதல், ஆலைக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல்
சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத
காரணத்தினால், தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை
நிரந்தரமாக மூடக்கோரி வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்
குழுவினர் இன்று (28.5.2018), தலைமைச் செயலகத்தில் எங்களைச் சந்தித்து
ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்குமாறு வைத்த கோரிக்கையும்,
தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளும், தமிழ்நாடு அரசால் கவனமாக பரிசீலனை
செய்யப்பட்டது" என்று கூறியுள்ள முதலமைச்சர், "மக்கள் நலன் ஒன்றையே
குறிக்கோளாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருவதனால், பொதுமக்களின்
உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலையை
நிரந்தரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணைகளை இன்று (28.5.2018)
வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு விரைந்த தூத்துக்குடி ஆட்சியர்
சந்தீப் நந்தூரி, ஆலையின் கேட்டுக்கு சீல் வைத்து தமிழக அரசின்
அரசாணையையும் அங்கு ஒட்டினார். இதனையடுத்து காவல் துறையினர் அங்கு
அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Palaniappan kandasamy

unread,
May 29, 2018, 1:51:01 AM5/29/18
to brail...@googlegroups.com
ஆலைக்கு சீல்வைத்த்து இப்போது; இவ்வளவு காலதாமதம் ஏன்? மக்கள் எதிர்ப்பு, மானில மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி மருப்பு எல்லாம் இருக்கும்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த்தாக சொல்கிறார்களே எப்படி? போராட்டங்கள்குரித்து மருசிந்தனை வேண்டும். எதிர்ப்பைக்காட்ட சாலை மரியல் உண்ணாவிருதம் போன்றவற்றை விட்டுவிட்டு ப்ரச்சனைக்குரிய இடத்தை ஆக்கிரமித்து ஆர்பாட்டம் நடத்துவது சரியென தோன்றுகிறது. அங்கிங்கெல்லாம் செல்வதை விடுத்து நேராக ஸ்டெர்லைட் ஆலைக்கே சென்று முற்றுகையிட்டிருக்கலாம்.அந்நிலையில் ஆலை எப்படி இயங்கும்? தானாக வழிக்குவருவார்கள். நம் பெருந்தலைகளுக்கு எதையும் அரசிலாக்கிப்பார்த்தால்தான் ஆனந்தம். இனிவரும் போராட்டங்களிலாவது நேராக ப்ரச்சனைக்குரிய இடத்துக்கே செல்வோம். இன்னொன்று, அவ்வாலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் நிலை? விவகாரம் முற்றியபின் விசாரணை குழு அமைப்பதைவிட விழிப்போடிருந்து ப்ரச்சனைகளை முளையிலேயே களையவேண்டும். செய்வார்களா? வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
கந்த பழனியப்பன் கோவை 4.
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


---
This email has been checked for viruses by Avast antivirus software.
https://www.avast.com/antivirus

dhivi sha

unread,
May 30, 2018, 4:00:49 AM5/30/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
சமீப காலமாகக் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது. ஆனால்,
இந்த விழிப்புணர்வு என்பது கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்
விழிப்புணர்வு அல்ல. நம் நாட்டில் கல்வி என்பது எவ்வளவு மோசமாக
இருக்கிறது என்பதை உணர்வது மற்றும் கல்வியில் மாற்றத்தைச் செயல்படுத்தும்
நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனும் விழிப்புணர்வு.
தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் சமீபத்திய செயல்பாடுகள், இந்தப்
புரிதலை இப்போதுதான் தொட்டிருக்கின்றன. ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து
இன்றுவரை மாறாமல் இருக்கும் பாடத்திட்டத்தை மாற்றுவது, பாடங்களை
மாணவர்களுக்கு ஒரு நண்பன்போல போதிக்குமாறு உருவாக்குவது, காட்சி வழி
கற்றலின் மூலம் அதிகப் படங்களைப் பயன்படுத்திப் பாடங்களை உருவாக்குவது என
மாற்றத்தை நோக்கி முதல் அடி வைத்திருக்கிறது தமிழகப் பள்ளிக் கல்வித்
துறை.
இந்த நேரத்தில் கல்வி குறித்து நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் ஓர்
உத்தரவு, எல்லாத் தளங்களிலும் இந்த விழிப்புணர்வு பரவிவருகிறது
என்பதற்கான சான்றாக இருக்கிறது. பொதுவாகவே வீட்டுப் பாடம் என்ற பெயரில்
மாணவர்களுக்கு எக்கச்சக்க பாடங்கள் கொடுக்கப்படும். அதுவும் சிபிஎஸ்இ
பள்ளிகளில் இந்தச் சுமை எக்குத்தப்பாக இருக்கும். மாணவர்களுக்கு அறிவு
வழங்குகிறோம் என்று எண்ணற்ற பாடங்களை நடத்தித் திணறவைப்பார்கள். இந்த இரு
வகையான தொல்லைகளிலிருந்தும் விடுதலை அளிக்குமாறு இருக்கிறது அந்த
நீதிமன்ற உத்தரவு.
சென்னை உயர் நீதிமன்றத்தில் புருஷோத்தமன் என்பவர் தொடர்ந்த வழக்கின்
தீர்ப்பை நீதிபதி கிருபாகரன் வெளியிட்டார். அதில் “மெட்ரிக்குலேஷன்
மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் 1, 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள்
கொடுக்கக் கூடாது. மீறி வீட்டுப் பாடம் கொடுக்கும் பள்ளிகளின் அங்கீகாரம்
ரத்து செய்யப்படும். 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை சுற்றுச்சூழல்
பாடத்திட்டத்தைச் சேர்க்க வேண்டும்” எனும் நிபந்தனைகள் இருந்தன. மேலும்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி பாடங்களை
மட்டுமே பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்றும்,
பாடத்திட்டங்களை அமைக்கும்போது கவுன்சில் விதிகள் பின்பற்றப்பட வேண்டும்
என்றும் நீதிபதி கூறியிருந்தார்.
இது கொண்டாடப்பட வேண்டிய சிறப்புமிக்க உத்தரவு.
- நரேஷ்
Sஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
சமீப காலமாகக் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது. ஆனால்,
இந்த விழிப்புணர்வு என்பது கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்
விழிப்புணர்வு அல்ல. நம் நாட்டில் கல்வி என்பது எவ்வளவு மோசமாக
இருக்கிறது என்பதை உணர்வது மற்றும் கல்வியில் மாற்றத்தைச் செயல்படுத்தும்
நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனும் விழிப்புணர்வு.
தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் சமீபத்திய செயல்பாடுகள், இந்தப்
புரிதலை இப்போதுதான் தொட்டிருக்கின்றன. ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து
இன்றுவரை மாறாமல் இருக்கும் பாடத்திட்டத்தை மாற்றுவது, பாடங்களை
மாணவர்களுக்கு ஒரு நண்பன்போல போதிக்குமாறு உருவாக்குவது, காட்சி வழி
கற்றலின் மூலம் அதிகப் படங்களைப் பயன்படுத்திப் பாடங்களை உருவாக்குவது என
மாற்றத்தை நோக்கி முதல் அடி வைத்திருக்கிறது தமிழகப் பள்ளிக் கல்வித்
துறை.
இந்த நேரத்தில் கல்வி குறித்து நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் ஓர்
உத்தரவு, எல்லாத் தளங்களிலும் இந்த விழிப்புணர்வு பரவிவருகிறது
என்பதற்கான சான்றாக இருக்கிறது. பொதுவாகவே வீட்டுப் பாடம் என்ற பெயரில்
மாணவர்களுக்கு எக்கச்சக்க பாடங்கள் கொடுக்கப்படும். அதுவும் சிபிஎஸ்இ
பள்ளிகளில் இந்தச் சுமை எக்குத்தப்பாக இருக்கும். மாணவர்களுக்கு அறிவு
வழங்குகிறோம் என்று எண்ணற்ற பாடங்களை நடத்தித் திணறவைப்பார்கள். இந்த இரு
வகையான தொல்லைகளிலிருந்தும் விடுதலை அளிக்குமாறு இருக்கிறது அந்த
நீதிமன்ற உத்தரவு.
சென்னை உயர் நீதிமன்றத்தில் புருஷோத்தமன் என்பவர் தொடர்ந்த வழக்கின்
தீர்ப்பை நீதிபதி கிருபாகரன் வெளியிட்டார். அதில் “மெட்ரிக்குலேஷன்
மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் 1, 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள்
கொடுக்கக் கூடாது. மீறி வீட்டுப் பாடம் கொடுக்கும் பள்ளிகளின் அங்கீகாரம்
ரத்து செய்யப்படும். 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை சுற்றுச்சூழல்
பாடத்திட்டத்தைச் சேர்க்க வேண்டும்” எனும் நிபந்தனைகள் இருந்தன. மேலும்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி பாடங்களை
மட்டுமே பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்றும்,
பாடத்திட்டங்களை அமைக்கும்போது கவுன்சில் விதிகள் பின்பற்றப்பட வேண்டும்
என்றும் நீதிபதி கூறியிருந்தார்.
இது கொண்டாடப்பட வேண்டிய சிறப்புமிக்க உத்தரவு.
- நரேஷ்

dhivi sha

unread,
May 30, 2018, 4:07:44 AM5/30/18
to Valluvan Paarvai, inaiathendral
சதுப்பு நிலங்களைச் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலச் சீரமைப்புப் பணிகள் காலநிலை
மாற்றத்திற்கான தேசிய தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் 2023ஆம் ஆண்டு
வரையில் ரூ.165.68 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன என வனத்துறை
அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கரணையில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில், வாழ்வாதார முன்னேற்றம்,
பாதுகாப்பு, ஆராய்ச்சி, கண்காணிப்பு, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு
ஆகிய சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளதாகச் சட்டப்பேரவையில் நேற்று
(மே 29) அறிவித்தார்.
நேற்று நடந்த வனத்துறை மானியக் கோரிக்கைக்கான விவாதங்களுக்குப் பதிலளித்த அமைச்சர்,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் சதுப்பு நிலமாக இருக்கும்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணிக்க பள்ளிக்கரணையில் சதுப்பு நிலப்
பாதுகாப்பு ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 690.65 ஹெக்டர்
பரப்பளவு நிலங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்தார்.
மாநில அரசு ரூ.22.46 கோடியில் 7000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 70 லட்சம்
மரக்கன்றுகள் நடத் திட்டுமிட்டுள்ளது. இது குறித்து பேசிய அவர்,
கிராமப்புற மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மூலம் சுமார் 63
லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

dhivi sha

unread,
May 30, 2018, 10:24:13 AM5/30/18
to Valluvan Paarvai, inaiathendral
பதினோராம் வகுப்பு ரிசல்ட்!
இன்று (மே 30) வெளியான பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.3 சதவிகித
மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்
தேர்வு நடப்பது போல பதினோராம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும்
என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு பதினோராம்
வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 16ஆம் தேதி
வரை நடந்தது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 7070
மேல்நிலைப் பள்ளிகளின் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ,மாணவிகள்
எழுதினர். 1753 தனித் தேர்வர்களும் எழுதினர்.
மேலும், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும்
புழல் சிறைகளில் இருந்து 62 ஆண் கைதிகள் தேர்வெழுதினர்.
இன்று பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அதில்,
மாணவிகள் 94.6 சதவிகிதமும், மாணவர்கள் 87.4 சதவிகிதமும் தேர்ச்சி
அடைந்துள்ளனர். மாணவிகள் மாணவர்களை விட 7.2 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி
பெற்றுள்ளனர். பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 83.9
சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 36 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு 500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வை எழுதிய 2,724 அரசுப் பள்ளிகளில் 188 அரசுப் பள்ளிகள் 100
சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைகைதிகளில் 45 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய 2729 மாற்றுத்திறனாளிகளில் 2450 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பொதுத் தேர்வில் 97.3 சதவிகிதம் பெற்று மாநில அளவில் ஈரோடு மாவட்டம்
முதலிடம் பிடித்துள்ளது. 96.4 சதவிகிதம் பெற்று திருப்பூர் இரண்டாம்
இடத்தையும், 96.2 சதவிகிதம் பெற்று கோவை மூன்றாம் இடத்தையும்
பிடித்துள்ளன. 95.70 சதவிகிதம் பெற்று விருதுநகர் நான்காம் இடத்தைப்
பிடித்துள்ளது.
பாட வாரியாக
இயற்பியல்: 93%
வேதியியல்: 92.7%
கணிதம்: 95.2%
உயிரியல்: 96.9%
தாவரவியல்: 89.3%
விலங்கியல்: 91. 8%
வணிகவியல்: 93.7%
கணினி அறிவியல்: 95.3%
கணக்கு பதிவியல்: 93.8%
பொருளாதாரம்: 92.59%
புவியியல்: 96.45%
வரலாறு: 87.40%
மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.
ஜூன் 4ஆம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது தேர்வு
எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும்
www.dge.tn.nic.in இணைய தளத்தில் இருந்தும் மதிப்பெண் பட்டியலை
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த மதிப்பெண் பட்டியல்களில் அந்தந்த
பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர்
கையெழுத்து இருந்தால் மட்டுமே செல்லும்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஜூன் 1, 2, 4ஆம்
தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு
துணைத் தேர்வு ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

dhivi sha

unread,
May 31, 2018, 10:21:03 PM5/31/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்?
இத்தனை நாட்களாகச் சமூக வலைதளங்களை அரசு மறைமுகமாகக் கண்காணித்து வந்தது.
இனிமேல் வெளிப்படையாகவும் கண்காணிக்கப் போகிறது. இன்னும் சரியாகச் சொல்ல
வேண்டுமானால், சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தக் கட்டுபாட்டுக்கு அவர்கள்
தெரிவிக்கும் காரணம்தான். நாட்டில் தேச பக்தியை அதிகப்படுத்தவும் சமூக
வலைதளங்கள் மூலமாக வதந்திகள் பரவி வருவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை
எடுக்கப்படுகிறது என்று காரணம் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், இந்த நடவடிக்கைகள்
யாவற்றையும் செயல்படுத்தத் தனியார் நிறுவனங்களையே அரசு உதவிக்கு
அழைத்திருக்கிறது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின்
கண்காணிப்பில் இந்த நிறுவனம் செயல்படும் என முலாம் பூசப்பட்டிருக்கிறது.
இவை யாவும் தவறான செய்திகளை மக்களிடம் கொண்டுசெல்வதைத் தடுக்கும்
நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே இதற்காகவே ஒரு சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்ததும்,
எதிர்ப்பு காரணமாக அந்தத் திட்டத்தைக் கைவிட்டதும் வரலாறு. தற்போது அதை
மறைமுகமாகச் செயல்படுத்தப் போகின்றனர்.
இனி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராகவும்,
‘தேச பக்தி’க்கு எதிராகவும், ‘வதந்தி’களாகவும் இருக்கும் பதிவுகள்
பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்று அரசு நம்பிக்கை
தெரிவித்திருக்கிறது.
இதனால் கருத்து சுதந்திரம் கேலிக்கூத்தாகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர்.
- நரேஷ்

Palaniappan kandasamy

unread,
Jun 1, 2018, 11:13:38 AM6/1/18
to brail...@googlegroups.com
வதந்திகளைத்தானே பரப்பக்கூடாது, உண்மைகளை பரப்பலாமே; அரசு கண்காணிக்கலாம் கட்டுப்படுத்தமுடியுமா என தெரியவில்லை. சமூகவலை தளங்களை துஷ்ப்ரையோகம் செய்தால் என்ன செய்வது? நமது ஒழுங்கீனத்தால் நாமே நம் சுதந்திரங்களையும் வசதிகளையும் இழந்துவிடுகிறோம். அந்தரங்கம் அபாயமானது; வெளிப்படை வீரியமானது. பகிர்வுக்கு நன்றி. வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
கந்த பழனியப்பன் கோவை 4.

-----Original Message-----
From: brail...@googlegroups.com [mailto:brail...@googlegroups.com] On Behalf Of dhivi sha
Sent: 01 ஜூன் 2018 07:51
To: Valluvan Paarvai
Cc: inaiathendral
Subject: [Braille Acl] மின்னம்பலம்

dhivi sha

unread,
Jun 1, 2018, 10:56:08 PM6/1/18
to Valluvan Paarvai, inaiathendral
இளையராஜா 75: அவர் ஒருவர்தான்!
செழியன்
இன்று (ஜூன் 2) இளையராஜாவின் பிறந்த தினம்
நேற்று முற்பகலில் இளையராஜாவின் பாடலை நானும் சிபியும்
கேட்டுக்கொண்டிருந்தோம். மூன்றாம் பிறை படத்தின் துவக்கப் பாடல். இசை
மாணவனான சிபி என்னைப் பார்த்துப் புன்னகைத்து, “அவருக்கு மட்டும்
எப்படிப்பா இப்படியெல்லாம் தோணுது? எனக்கு அவரு கம்போஸிங் கத்துக்
குடுப்பாரா?” என்று கேட்டான். “கம்போஸிங் கத்துக் குடுக்க முடியாது. நீயே
அவரு பாட்டுல இருந்து கத்துக்க வேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டு இளைய
நிலா பாடலின் பல்லவிக்குப் பிறகு வரும் கிட்டார் இசையை ஒலிக்கவிட்டு “இதை
வாசிச்சுப் பாரு” என்றேன். கிட்டாரில் விரல்கள் அங்கும் இங்கும் தாவி
அரைமணி நேரப் பயிற்சிக்குப் பிறகு அந்த இசையை வாசித்துவிட்டுப் புருவத்தை
உயர்த்தித் தலையை அசைத்தான்.
கல்லூரி நாட்களில் சிவகங்கை பூச்சொரிதல் விழாவுக்கு ஆர்கெஸ்ட்ரா
நடக்கும். அதில் ஒருமுறை ப்ரியா படத்தின் டார்லிங் டார்லிங் பாடலின்
துவக்க இசையை இசைக் கலைஞர்கள் வாசித்துவிட்டுப் புருவத்தை உயர்த்தித்
தலையை அசைப்பதைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு பாடல் அடிப்படையாக ஒரு ட்யூன் வழியாகத்தான் இயங்குகிறது. இதை நம்
வசதிக்காக ராகம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அந்த ஒரு ட்யூனின்
ஆதாரத்திலிருந்து வேறு வேறு வகையான இசையை வேறு வேறான இசைக் கருவிகளைக்
கொண்டு பாடலுக்குள் இளையராஜா நிகழ்த்துகிற அற்புதம்தான் ஆச்சரியமானது.
Change over என்று சொல்லப்படும் குறிப்பிட்ட கதிக்குள் மாறிக்கொண்டே
இருக்கும் இந்த இசைத் துணுக்குகளை மட்டும் நாம் கவனித்துப் பார்த்தால்
அதுவே அலாதியான அனுபவமாக இருக்கும்.
இசையின் பகுதியாகவே இருக்கும் ராஜா
குழந்தைகளிடம் க்ரீம் பிஸ்கட்டுகளைக் கொடுத்தால் அவர்கள் பிஸ்கட்டைப்
பிரித்து எடுத்து முதலில் க்ரீமைத்தான் தின்பார்கள். அதுபோல அவரது எந்தப்
பாடலைக் கேட்டாலும் எனக்குப் பாடலின் இடையில் இருக்கும் இசைதான்
(Interlude, prelude) முதல் ஆர்வம் (Interlude என்பது பாடலின் முதல்
சரணத்துக்கும் இரண்டாவது சரணத்துக்கும் இடையில் வருகிற இணைப்பு இசை.
Prelude என்பது பாடலின் துவக்க இசை). மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன்
என்று கீதையில் கண்ணன் சொல்வது போல இளையராஜா பாடலின் இசைப் பகுதியாகவே
இருக்கிறார். அவரது இசையை ரசிகராகவோ அல்லது மாணவனாகவோ அணுகுகிற
யாருக்கும் அந்த பிரமிப்பு தவிர்க்க முடியாதது. காரணம், அந்த இசைச்
சேர்க்கையில் வரும் அற்புதமான இசை மாற்றங்கள்.
இளையராஜாவுக்கு முந்தைய திரைப்பட இசையமைப்பாளர்கள் ஒரு பாடலின் ராகத்தில்
அது தரும் பாவங்களில் அற்புதமான பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள்.
அந்தப் பாடல்களில் பெரும்பாலானவை நம் இந்திய இசை மரபு வழி வருபவை. இந்திய
இசை மரபு என்பது குரலை முதன்மைப்படுத்தி இயங்குகிறது. ஒரு பாடகர்
பாடுவார். அவர் பாடும் ராகத்தின் தன்மைக்கேற்ப பல்லவியிலிருந்து அடுத்த
சரணத்துக்கு இணைப்பை ஏற்படுத்தும் இசையாகவே அது இருக்கும்.
இது கச்சேரியில் ஒருவர் பாடும்போது அவரது ஆலாபனைகளையே வயலின் அல்லது
வீணையில் திரும்ப இசைக்கும் மரபிலிருந்து வருகிறது. பாடுபவரின் குரலுக்கு
இடையில் இணைப்புபோல இந்த இசைதான் இருக்கும். இதையே பக்க வாத்தியம் என்று
சொல்கிறோம். இந்தப் பக்க வாத்திய மரபின் தொழில்நுட்பம் சார்ந்த
தொடர்ச்சியாகவே திரைப்பாடல்கள் பெரிதும் இருந்தன. இதனால் பெரும்பாலான
பழைய பாடல்களின் interlude என்பது இரண்டு பல்லவிகளுக்கும் இடையில் ஒரே
இசைதான் திரும்பத் திரும்ப இசைக்கப்படும்.
பழைய தமிழ்த் திரையிசைப் பாடல்களில் அதன் இசைச் சேர்ப்புக்காகப் பெரிதும்
புகழப்படுகிற இரண்டு பழைய பாடல்களைக் கேட்டால் (துள்ளுவதோ இளமை -
குடியிருந்த கோயில், பட்டத்து ராணி - சிவந்த மண்) Interlude என்பதில்
இருக்கும் வித்தியாசத்தை உணர முடியும். Interlude என்பதை விரைவில்
கடந்துவிட்டுக் குரலுக்கு மாறுவதைக் கவனிக்க முடியும்.
ஆனால், இளையராஜா மேற்கத்திய இசையின் மீதிருக்கும் ஆளுமையினால் இந்த
interlude, மற்றும் prelude என்பவற்றை அழகான கவிதைகளைப் போலத் தன்
பாடல்களின் இடையில் கையாளுகிறார். அதிலும் சிறப்பு என்னவென்றால் ஒரு
குறிப்பிட்ட கால இடைவெளியில் இசைக் கருவிகளின் வழியாகக் கோர்வைகளை
மாற்றிக்கொண்டே இருக்கிறார். இந்தச் சேர்க்கைகள் அபூர்வமானவை. இதனைப்
புரிந்துகொள்ள ‘தளபதி’ படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’
என்னும் பாடலை எடுத்துக்கொள்ளலாம்.
இசைக் கருவிகள் என்னும் கதாபாத்திரம்
திரைக்கதையின் நுட்பங்கள் பற்றிப் படிக்கும்போது அதில் fore shadow
என்றொரு பதம் வருகிறது. அதாவது கதையின் பின்னால் வரும் கதாபாத்திரத்தை
அல்லது அதன் குணாதிசயத்தைக் கதையின் தொடக்கத்திலேயே கோடிட்டுக்
காட்டுவது. திரைக்கதையின் இந்த யுக்தியை வைத்துக்கொண்டு இந்தப் பாடலில்
இசையைப் பார்க்கலாம். ஒரு தேர்ந்த இசையமைப்பாளருக்குத் தன் பாடலில்
இருக்கும் இசைக் கருவிகள் ஒரு கதாபாத்திரம்போல.
திரை இசை என்பது மேற்கத்திய இசை வடிவம் போல தன்னிச்சையானது அல்ல. நமது
இசையோ அல்லது பாடலோ ஒரு காட்சியின் மீதுதான் இசைக்கப்படுகிறது. இவ்வாறு
இசைக்கப்படும்போது கதையில் அதுவரை நீங்கள் பார்த்த கதாபாத்திரத்தின்
தன்மையை மீறி இசை இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அது படத்தின்
மனநிலைக்குப் பொருந்தாது. எனவே பாட்டில் இருக்கும் இசை கதாபாத்திரத்தின்
தன்மைக்கு மட்டுமல்ல கதையின் தன்மைக்கும் இசைந்ததாக இருக்க வேண்டும்.
பாடல் என்பது இந்தியத் திரைப்பட மரபில் மட்டுமே இருப்பதால் இதற்கு எந்த
மேற்கத்திய மாதிரிகளும் இல்லை. எனவேதான் எந்த முன்மாதிரிகளும் இல்லாமல்
இளையராஜா உருவாக்கும் இசைச் சித்திரங்கள் பிரமிக்க வைக்கின்றன. இவை
இந்திய இசை மரபில் புதிய வடிவங்கள். புதிய கோர்வைகள்.
பிரமிக்கவைக்கும் அதிசயம்
‘சுந்தரி’ பாடலை ஒருமுறை கேளுங்கள். இந்த ஏழு நிமிடப் பாடல் காட்சி
மாதிரிகள் எதுவும் இல்லாமல் கற்பனையில் முழுக்கப் புனையப்பட்டு பிறகுதான்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மனதில் வைத்துக் கேளுங்கள். ஒரு ஏழு
நிமிடப் பாடல் காட்சிக்கான soundscape ஐ முழுக்கக் கற்பனையில்
உருவாக்குவது என்பது சாதாரண வேலை இல்லை. உதாரணத்துக்கு Dunkrik என்ற
படத்துக்குக் கரு இசை (theme music) உருவாக்கப்படுகிறது என்றால் அங்கே
காட்சிகளுக்கான மாதிரிகள் நிச்சயம் வரையப்பட்டிருக்கும். வரையப்பட்ட
படங்கள் ஒரு திரைப்படம்போல இயங்குவதற்கான தொழில்நுட்பத்தில் இந்தக்
காட்சி திரையில் எவ்வளவு நேரம் வரும், எங்கே காட்சி மாறும் என்கிற
குறிப்புகள் நிச்சயம் இருக்கும். ஆனால், நம் திரைப்படங்களில் ஒரு காதல்
பாடல் போர்ப் பின்னணியில் நடக்கிறது என்பதைக் கடந்து குறிப்புகள் எதுவும்
இருந்திருக்கும் சாத்தியங்கள் இல்லை.
முன்பு சொன்ன fore shadow என்கிற யுக்தியை மனதில் வைத்துக்கொண்டு இந்தப்
பாடலின் பல்லவியில் வரும் புல்லாங்குழல் பாடல் முழுக்கச் செய்கிற
வேலையைக் கவனியுங்கள். பாடல் எப்படித் துவங்குகிறது? போரும் காதலும்
அகமும் புறமும் எப்படி இணைகிறது? எந்த இசைக் கருவிகள் இணைத்து
வைக்கின்றன? அந்த மாற்றம் இயல்பாக எப்படி நிகழ்கிறது? மேற்கத்திய இசையும்
இந்திய இசையும் இணைகிற (fusion) இடங்களைக் கவனியுங்கள். இந்தப் பாடலின்
முழு இசையையும் காட்சி வழியே மனதில் முதலில் இயற்றி, ஒரு மனிதர் தன்
கற்பனையின் வழியே அதை ஸ்வரங்களாகக் காகிதத்தில் எழுதினார் என்பதைக்
கற்பனை செய்து பாருங்கள்.
இதுபோல அவரது இசைக்கோர்வைகள் உருவாக்கும் நிலக்காட்சிகள் குறித்து,
கற்பனை வெளிகள் குறித்து நம்மிடம் அதிகம் பதிவுகள் இல்லை. அவர்
பாடலுக்குள் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. பரிசோதனைகள் இருக்கின்றன. அது
குறித்த எந்த ஆய்வுகளும் நம்மிடம் இல்லை. முதன்முதல் தஞ்சாவூர் கோயிலைப்
பார்க்கும்போது, தாஜ்மகாலைப் பார்க்கும்போது இது மனித உழைப்பா, இது
சாத்தியமா என்று பிரமிக்கத் தோன்றும். அப்படி நுணுகிக் கேட்கிற யாரையும்
பிரமிக்க வைக்கிறவர் இளையராஜா.
விழித்திருக்கும் பின்னிரவாக அது இருக்க வேண்டும். நெடுஞ்சாலைப் பயணமாக
இருக்க வேண்டும். அகாலமான அந்தப் பொழுதின் அமைதியில், இருளின் தனிமையில்
அவர் இசை உங்களுடன் இருக்க வேண்டும். அதுதான் தருணம். அப்படிக் கேட்கிற
வாய்ப்பு நிகழ்ந்தால் உங்கள் கடந்த காலம் ஒரு மவுனத் திரைப்படம் போல
உங்கள் மனதில் ஓடத் துவங்கும்.
மேற்கத்திய இசை மரபில் ஒரு மேற்கோள் இருக்கிறது. ஆயிரம் இளவரசர்கள்
பிறந்திருக்கலாம். இனியும் பிறக்கலாம். ஆனால், ஒரே ஒரு பீத்தோவன்தான்.
அதுபோல நமக்கும் ஒரு ஒரே இளையராஜாதான்.

dhivi sha

unread,
Jun 1, 2018, 11:03:38 PM6/1/18
to Valluvan Paarvai, inaiathendral
அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம்!
அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம்!
தமிழ்நாட்டு அரசின் பலத்த சட்டப்போராட்டம், தமிழக கட்சிகள், மக்களின்
கடுமையான போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து நேற்று
(ஜூன் 1 ) அரசிதழில் வெளியிட்டது.
இது தமிழகத்தின் காவிரி வரலாற்றில் முக்கியமான கட்டமாக
பார்க்கப்படுகிறது. இதுபற்றி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக
முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
“இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும்
அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த
மாபெரும் வெற்றியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும், சட்டப் போராட்டத்தினாலும்
மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை
மத்திய அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டு செயலாக்கத்திற்கு
வந்தது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் கொண்டு
வந்ததுதான் தன்னுடைய 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில், தான் செய்த
சாதனைகளில் முதன்மையானதாக கருதுவதாகவும், தான் பல ஆண்டுகள் பொது வாழ்வில்
இருந்து கஷ்டப்பட்டதற்கு இந்த வெற்றிதான் தனக்கு முழு நிறைவைத்
தந்திருக்கிறது என்றும் ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மனம்
நெகிழ்ந்து பேசினார். இதை நினைவுகூர்ந்துள்ள முதல்வர்,
“உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த சிவில் மேல்முறையீட்டு வழக்குகள்
விசாரிக்கப்பட்டு 16.2.2018 அன்று இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த
தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதி ஆணை மற்றும் அதனை
மாற்றியமைத்த உச்சநீதிமன்றத்தின் 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட
தீர்ப்பின்படி ஒரு செயலாக்க திட்டத்தை மத்திய அரசு 6 வார காலத்திற்குள்
அமைக்க வேண்டுமெனவும், காலக்கெடு ஏதும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும்
குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நான் பிரதமரிடம் நேரிலும் மற்றும் கடிதங்கள்
வாயிலாகவும் இவ்வமைப்புகளை உடனே அமைக்க வலியுறுத்தினேன். பாராளுமன்ற
கூட்டத்தொடர் 5.3.2018 அன்று தொடங்கி 6.4.2018 வரை நடைபெற்றது.
இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள்
செயலாக்க திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கக் கோரி தொடர்ந்து
வலியுறுத்தியதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் 22 நாட்களுக்கு
ஒத்திவைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடு முடிவடையும் நிலை இருந்தபோது,
29.3.2018 அன்று மூத்த அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர்,
தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருடன் தமிழ்நாட்டின்
சார்பில் எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கை குறித்து நான் விரிவாக
விவாதித்தேன்.
அக்கூட்டத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மத்திய அரசின் மீது
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என
முடிவெடுக்கப்பட்டு, 31.3.2018 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மத்திய
அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசும் கால அவகாசம் கேட்டு ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
செய்தது. உச்ச நீதிமன்றம் 14.5.2018 அன்று, மத்திய நீர்வள ஆதாரம், நதி
மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர் ஒரு வரைவுத்
திட்டத்துடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி,
14.5.2018 அன்று, மத்திய அரசின் நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும்
கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர், உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி,
மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு திட்டத்தினை தாக்கல் செய்தார். எனது
அறிவுரையின் பேரில், 16.5.2018 அன்று தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடிய
மூத்த வழக்கறிஞர்கள் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில், குறிப்பிட்டபடி
அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி
நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக அமைத்து
செயல்படுத்த வேண்டும் என தகுந்த ஆதாரங்களுடன் கடுமையாக வாதிட்டனர்.
இதனை அடுத்து, 18.5.2018 அன்று மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய
வரைவு திட்டத்தின் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில்,
மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய வரைவு திட்டம், நடுவர் மன்ற இறுதி
ஆணை, கட்டளைகள்படியும், அதனை திருத்தியமைத்து வழங்கிய உச்சநீதிமன்ற
தீர்ப்பின்படியும் உள்ளது எனவும், 1956-ம் ஆண்டைய பன்மாநில நதிநீர்த்
தாவா சட்டப்பிரிவு 6 ஏ 4 ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, காவிரி நீர் மேலாண்மை
ஆணையத்தின் தலைமையிடம் டெல்லியிலும், காவிரி நீர் முறைப்படுத்தும்
குழுவின் தலைமையிடம் பெங்களுரூவிலும் செயல்படும் எனவும் இத்திட்டத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழு
ஆகிய அமைப்புகளை அமைத்து, மத்திய அரசிதழில் வெளியிட்டு பருவ மழைக்காலம்
தொடங்குவதற்கு முன்னர் செயலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டி, பிரதமருக்கும்,
மத்திய நீர்வளத்துறை மந்திரிக்கும் 26.5.2018 அன்று என்னால் கடிதங்கள்
அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசு பல தொடர்
நடவடிக்கைகள் எடுத்ததன் வாயிலாக இன்று (நேற்று) காவிரி நீர் மேலாண்மை
ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் மத்திய
அரசால் அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில்
வெளியிடப்பட்ட பிறகு, அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஜெயலலிதா மற்றும்
அவர் வழியில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும் மற்றும் சட்ட
போராட்டங்களாலும், உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை சற்று
மாற்றியமைத்து 16.2.2018 அன்று பிறப்பித்த தீர்ப்பினை செயல்படுத்துவதற்கு
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு
ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைத்து அதனை மத்திய அரசிதழில் 1.6.2018
அன்று வெளியிட்டது, ஜெயலலிதா வழியில் நடைபெறும் தமிழ்நாடு அரசிற்கும்,
விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
இந்த உத்தரவுகளினால், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் விவசாயப்
பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதையும்
இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது மகிழ்ச்சியையும், நன்றியையும்
தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். .

dhivi sha

unread,
Jun 3, 2018, 4:09:51 AM6/3/18
to Valluvan Paarvai, inaiathendral
கருணாநிதி — 95: உலக வர்த்தகப் போக்கின் திசையை மாற்றிய உள்ளூர்த் தலைவன்!
தனியன்
இந்தியாவில் இருக்கும் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு
மாநிலக் கட்சியின் தலைவர். பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். கல்லூரிப்
பட்டம் பெறாதவர். சொந்தத் தாய்மொழியைத் தாண்டி ஆங்கிலத்தில் பெரும்
புலமையெல்லாம் இல்லாதவர். குடிப் பெருமையோ, குலப் பெருமையோ, செல்வந்தப்
பின்னணியோ எதுவும் இல்லாத சாமானியன். ஆண்ட சாதி பின்புலம் கொண்டவரல்ல;
எண்ணிக்கையில் அதிகமானவர்களைக் கொண்ட சாதியைச் சேர்ந்தவரும் அல்ல. .
அப்படிப்பட்ட ஒருவர் மாநில அளவில் ஆட்சிக்கு வரலாம். அதிகம் போனால்
இந்திய அளவில் தற்காலிகமாகச் சிறு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், உலக
அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? அதுவும் வெவ்வேறு காலங்களில்
வெவ்வேறு வகைகளில் உலகை ஆண்ட மேற்குலக செல்வந்த நாடுகள் ஒன்றுகூடி
உருவாக்கித் தலைமையேற்று நடத்தும் சர்வதேச வர்த்தகத்தின் போக்கை
இந்தியாவின் ஒரு மாநிலக் கட்சியின் தலைவர் திசைமாற்ற முடியுமா?
முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர் திமுக தலைவர்
மு.கருணாநிதி. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவர். பதின்மூன்றாவது
முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர். அவரது பொதுவாழ்வின் வயது 80.
அவர் திமுக தலைவர் பதவிக்கு வந்து அடுத்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள்
நிறைவடைகின்றன. இந்தக் காலகட்டத்தில் அவரால் அவரது ஆட்சியால் அவர்
தீட்டிய திட்டங்களால் நேரடியாகப் பலனடையாத தனி நபரோ, குடும்பமோ, ஊரோ,
ஜாதியோ, மதமோ, பாலினமோ தமிழ்நாட்டளவில் இல்லை என்று தைரியமாகக் கூற
முடியும். அந்த அளவுக்குச் சுதந்திர இந்தியாவின் தமிழ்நாட்டின்
நிர்மாணகர்த்தர்களில் அவர் முதன்மையானவர். முழுமையானவரும்கூட. அவர் தொடாத
துறை இல்லை. செய்யாத சாதனை இல்லை.
இந்திய அரசியலில் பங்களிப்பு
தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் அவரது பங்களிப்பு மிகப்
பெரியது. ஏறக்குறைய ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளாக அவர் இந்திய அரசியலில்
நேரடியாகப் பங்காற்றிவருகிறார். இந்திய அளவில் இந்திரா காந்தி, மொரார்ஜி
தேசாய், வி.பி.சிங், தேவேகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங்
என ஏழு பிரதமர்கள் ஆட்சிக்கு வர உதவியவர் அவர்; நேரடி காரணமாக இருந்தவர்.
அதில் ஐந்து பிரதமர்களின் ஆட்சிகளில் அவர் கட்சி நேரடியாகக் கூட்டணி
ஆட்சியில் பங்கும் வகித்தது. மொத்தமாக 18 ஆண்டுகள் அவரது கட்சி மத்தியில்
ஆட்சியில் பங்குபெற்றது. அதன் பயன்கள் தமிழ்நாட்டின் டைடல்
பார்க்குகளாகவும் நாற்சக்கரச் சாலைகளாகவும் தொழில் முன்னேற்றமாகவும்,
தமிழுக்கான செம்மொழி அங்கீகாரமாகவும், கடல்சார் பல்கலைக்கழகமாகவும்,
மத்தியப் பல்கலைக்கழகமாகவும் இன்னும் பலவாறாக இன்றைய தமிழ்நாட்டுக்கு
பலனளித்துக் கொண்டிருக்கிறது. எதிர்கால தமிழ் சந்ததிகளுக்கும்
கண்டிப்பாகப் பலனளிக்கும். ஏனெனில் அவரது பல திட்டங்கள் தொலைநோக்கோடு
தீட்டப்பட்டவை.
உலக அளவிலான தாக்கம்
இப்படியான ஒரு தருணத்தில், அதாவது கருணாநிதியின் திமுக இந்திய ஒன்றிய
அரசில் பங்குபெற்றிருந்த ஒரு ஆட்சிக் காலத்தில் திமுகவின் சார்பில்
இந்திய தொழில் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் மூலம்தான் திமுக
என்கிற இந்தியாவின் ஒரு மாநிலக் கட்சி, உலக வர்த்தக நடைமுறைகளையே மாற்றி
அமைத்து வரலாறு படைத்தது.
2001ஆம் ஆண்டு தோஹாவில் நடந்த மாநாட்டில் உலக வர்த்தக சபையின்
நிர்ணயிக்கும் சக்திகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வழக்கம்போலத்
தமக்குச் சாதகமாக முடிவெடுத்தன. வளரும் நாடுகள், மற்றும் வறிய
நாடுகளுக்கு எதிரான வர்த்தகத் தீர்மானங்களை முன் மொழிந்தன. மொத்தம் 142
நாடுகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் பிராந்தியக் கட்சியான
திமுகவைச் சேர்ந்த முரசொலி மாறன் தான் ஒற்றை ஆள் முட்டுக்கட்டையாக
எதிர்த்து நின்றார். உலக வர்த்தக சபையின் தீர்மானங்கள் இந்தியா போன்ற
வளரும் நாடுகள் மற்றும் வறிய நாடுகளின் நலன்களுக்கு எதிராக இருப்பதால்
அவற்றை ஏற்க முடியாது என்று மறுத்தார்.
இந்தியா உள்ளிட்ட 130க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் சார்பான ஒற்றைக்
குரலாக அவர் குரல் ஒலித்தது. ஒருவார காலப் பேச்சுவார்த்தைகளும் முடிந்து
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவையும் தாண்டி மேலும் ஒரு நாள்
பேச்சுவார்த்தைகள் நீண்டன. இறுதியில் இந்தியா உள்ளிட்ட 130க்கும்
மேற்பட்ட நாடுகளின் வர்த்தக நலன்கள் ஏற்கப்பட்டன. திமுகவைச் சேர்ந்த
முரசொலி மாறனை அந்த மாநாட்டுக்கு வந்திருந்த 130க்கும் மேற்பட்ட நாட்டுப்
பிரதிநிதிகளும் பாராட்டி மகிழ்ந்தனர். இந்தியா திரும்பியதும் இந்திய
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடித் தீர்மானம்
நிறைவேற்றிப் பாராட்டியது.
ஆனால், இந்த அத்தனை பாராட்டுகளும் திமுக தலைவர் கருணாநிதிக்கே உரியது.
அவர் காட்டிய வழியில், அவர் கற்றுக்கொடுத்த அரசியல் பயிற்சியே தனக்குச்
சர்வதேச அரங்கில் பேரம் பேசும் வல்லமையைக் கொடுத்தது என்றார் முரசொலி
மாறன். திமுகவின் இந்த இமாலய சாதனை மிக முக்கியமானது. மாநிலக் கட்சியான
திமுகவின் இந்த உலகளாவிய பங்களிப்பு, 130 நாடுகளைச் சேர்ந்த பல நூறு கோடி
மக்கள் நலனைப் பாதுகாத்த, மேற்குலக நாடுகளின் சுரண்டலை தடுத்து நிறுத்திய
உலக சாதனை எப்படி சாத்தியமானது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதற்கான மூல விதை 1999 ஆண்டு நடப்பட்டது. அந்த ஆண்டுதான் திமுகவும்
பாஜகவும் முதல் முறையாக நேரடித் தேர்தல் கூட்டணி அமைத்தன. இன்றுவரை
எந்தக் கூட்டணி திமுக அமைத்த அரசியல் கூட்டணிகளிலேயே மோசமான கூட்டணி,
சந்தப்பவாதக் கூட்டணி, மதவாதக் கூட்டணி என்று மதச்சார்பற்ற அரசியல்
கட்சிகளால், அவற்றின் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறதோ அதே
சர்ச்சைக்குரிய கூட்டணிதான் திமுக என்கிற இந்திய மாநில கட்சி உலகின்
போக்கையே மாற்றியமைத்த சாதனையை செய்யக் காரணமாக இருந்தது.
கூட்டணி அமைந்த பின்னணி
அந்தக் கூட்டணி அமைந்த பின்னணியை நினைவுபடுத்திக்கொள்வது அவசியம்.
1998ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளித்த அதிமுக தலைவி
ஜெயலலிதா திமுக ஆட்சியைக் கலைக்காவிட்டால் பாஜக ஆட்சியைத் தான் கலைப்பேன்
என்று மிரட்டுகிறார். வாஜ்பாய் அதற்கு உடன்பட மறுக்கவும் ஜெயலலிதா
வாஜ்பாய் ஆட்சியைக் கலைக்கிறார். திமுக ஆட்சியைக் கலைக்க மறுத்ததால்
ஆட்சியைப் பறி கொடுத்த வாஜ்பாய்க்கு ஆதரவளிக்க திமுக முடிவு செய்கிறது.
ஆனால் ஆர்எஸ்எஸ் என்பதும் திராவிடர் இயக்கம் என்பதும் ஜன்மப் பகையாளிகள்.
ஆரம்பம் முதலே எதிரெதிர் துருவங்கள். அதுவரை நேரடியாகக் கூட்டணி
அமைத்ததில்லை. எனவே திமுக பாஜக இடையிலான உறவு எத்தகையதாக இருக்க வேண்டும்
என்கிற கேள்வி எழுகிறது.
திமுகவுக்குள் இருக்கும் கொள்கைத் தூய்மைவாதம் பேசும் தரப்பார் திமுக
வெளியில் இருந்து ஆதரிக்கலாம் என்கிறார்கள். 1996 முதல் 1998 வரையிலான
ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவளித்ததைப்போல
திமுகவும் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிக்கலாம்
என்கிறார்கள். ஆனால், திமுக தலைவரான மு.கருணாநிதியோ வாஜ்பாய் ஆட்சியில்
நேரடியாகப் பங்கேற்பதே தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் கூடுதலாக நன்மை
செய்யும் என்று முடிவெடுத்தார்.
அதற்குக் காரணம் இருந்தது. 1996ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியில்
இடதுசாரிகளும் இணைந்து ஆட்சியமைக்க வேண்டுமெனக் கருணாநிதி விரும்பினார்.
அத்தோடு அப்போதைய மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை இந்தியப்
பிரதமராக்க கருணாநிதி உள்ளிட்ட ஐக்கிய முன்னணி தலைவர்கள் முயன்றனர்.
மேற்கு வங்கத்தில் கூட்டணி ஆட்சியைத் திறமையாக நடத்திய முன் அனுபவம்
மிக்க ஜோதிபாசுவால் மத்தியிலும் கூட்டணி ஆட்சியைத் திறமையாக
முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று அவர் நம்பினார். கோரினார். ஆனால்,
இடதுசாரிகள் அதற்கு இணங்கவில்லை. விளைவு இரண்டே ஆண்டுகளில் அந்த ஆட்சி
கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. அதற்கு மாறாக இடதுசாரிகள் மட்டும்
கொஞ்சம் நெகிழ்வுத்தன்மை காட்டிக் கொள்கைத் தூய்மைவாதம் பேசாமல்
ஜோதிபாசுவைப் பிரதமராக்க உடன்பட்டிருந்தால் இந்திய அரசியலின் திசையே
ஒருவேளை மாறியிருக்கலாம். யாருக்குத் தெரியும்?
எனவே இடதுசாரிகளைப் போலக் கொள்கைத் தூய்மைவாதம் பேசுவதன் மூலம்
நாட்டுக்கு நிலையான ஆட்சியையும் தர முடியாது நாம் நினைக்கும் நல்ல
திட்டங்களை நிறைவேற்றவும் முடியாது என்பதைக் கணக்கில் எடுத்ததனால்தான்
கருணாநிதி, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் திமுக அங்கம் வகிக்கும் என்கிற
முடிவெடுத்தார். அதே சமயம் பாஜக தனது மதவாத கொள்கைகளை பாபர் மசூதி ராமர்
கோவில் விவகாரம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை நிறைவேற்றக் கூடாது
என்று தெளிவான நிபந்தனைகளை விதித்து அவை ஏற்கப்பட்ட பின் ஆட்சிக்கான
குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே திமுக
வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்தது. அந்த ஏற்பாடு
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நிலையான ஆட்சியைத் தந்தது. தமிழ்நாட்டுக்கும்
ஏராளமான நன்மைகளைச் செய்தது. அதன் உச்சமாகவே உலக வர்த்தகத்தின்
ஒட்டுமொத்த போக்கையே மாற்றியமைத்தது.
அந்த உலக சாதனைக்கு மூல காரணமாக அமைந்தது கருணாநிதியின் ஆக்கபூர்வமான
அணுகுமுறை. முடிவெடுக்கும் பாங்கு. திராவிடர் இயக்கக் கொள்கைகளை இறுதிவரை
கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் பெரியாரைப் பின்பற்றும் கொள்கைவாதியாக
கருணாநிதி இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் அதை வைத்துத்
தன் கொள்கைகளை நிறைவேற்றி மக்களுக்கான நன்மைகளைச் செய்வதிலும் அவர்
அண்ணாவின் வழியைக் கடைப்பிடிப்பவர். தனக்குக் கிடைக்கும் எந்த ஒரு
வாய்ப்பையும் அது சிறியதுதானே என்கிற அலட்சியமோ அல்லது தன் கொள்கைத்
தூய்மைவாதத்துக்கு அந்த வாய்ப்பு கெட்ட பெயரைக் கொடுக்கும் என்கிற
தயக்கமோ இல்லாமல் தனக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் அவர்
எப்போதும் முழுமையாகப் பயன்படுத்தியவர்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அவரளவுக்குப் பொதுவாழ்வில்
அவமானங்களைத் தொடர்ச்சியாக சந்தித்த வேறொரு தலைவர் தமிழ்நாட்டில்
மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருக்க மாட்டார்கள். ஐந்து முறை
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து ஆட்சி செய்த பின்னும் அவரது சாதியை
வைத்து அவர் தொடர்ந்து பொதுமேடைகளில் அவமதிக்கப்பட்டார். இன்றும்
படுகிறார். ஆனால், அதற்கு அவ்வப்போது அவர் கோபப்பட்டு மறுமொழி சொன்னாலும்
தன்னை அவமதித்தவர்கள் மேல் அவர் தனிப்பட்ட வன்மமோ, குரோதமோ
பாராட்டியதில்லை.
கருவின் குற்றம் என்கிற கவிதை எழுதிய நாஞ்சில் மனோகரன் முதல் வைகோ,
காடுவெட்டி குரு போன்று தன்ன தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சித்த
பலரையும் அவர் அப்படித்தான் எதிர்கொண்டார். யார் மீதான வன்மத்தையும் அவர்
நெஞ்சில் சுமந்து திரிந்ததில்லை. மாறாக ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம்
என்பதில் மட்டுமே அவர் தனது சிந்தனை, செயல், ஆற்றல் அனைத்தையும்
செலவிட்டார். தனக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையுமே முழுமையாகப்
பயன்படுத்த வேண்டும்; எதையும் கைநழுவவிடக் கூடாது என்பதில் அவர்
உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார்.
அதனால்தான் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் அவர் அமரும் வாய்ப்பு
கிடைத்தபோதெல்லாம் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகள் ஒவ்வொன்றாக
உருப்பெற்றன. சென்னை அண்ணா மேம்பாலம் முதல் பேருந்து போக்குவரத்து
அரசுடைமை ஆனது வரை; விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் முதல் மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், இரண்டு ஏக்கர் இலவச நிலம் வரை, முஸ்லிம்கள்,
அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வரை எல்லாமே அவர் ஆட்சியில்
சாத்தியமானது.
மத்திய ஆட்சியில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பு வந்தபோது வங்கிகளை
தேசியமயமாக்கியது முதல் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான மண்டல்
கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கம் செய்தது வரை பலதையும் செய்ய அவர்
தூண்டுகோலாய் இருந்தார். அதன் நீட்சியே தோஹாவில் திமுகவைச் சேர்ந்த
மத்திய அமைச்சர் மாறனின் சாதனையும் அமைந்தது.
கருணாநிதிக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் ஆட்ட உவமையைச் சொல்வதானால்
தனக்கு நோ பால் போட்டாலும் அதில் சிக்சர் அடிக்க முயலும் திறமையான
ஆட்டக்காரர் இந்த திருக்குவளைக்காரர். ஒருவகையில் அவர் ஓர் அபூர்வப்
பிறவியும்கூட. இல்லாவிட்டால் இத்தனை சாதனைகளை ஒரே பிறப்பில் அவரால்
தன்னந்தனியனாகச் சாதித்திருக்க முடியுமா?

dhivi sha

unread,
Jun 5, 2018, 11:34:25 AM6/5/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
ஜப்பானில் ஆராய்ச்சி எனும் பெயரில் வணிகத்துக்காகத் திமிங்கலங்களைக்
கொன்று குவித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சென்ற ஒரு வருடத்தில்,
ஜப்பானில் ’ஆராய்ச்சிக்காக’ என்று மட்டும் 333 மின்க் (Minke) வகை
திமிங்கலங்கள் கொல்லப்பட்டுள்ளன.
ஆராய்ச்சிக்காகத்தான் 333 திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா?
எந்த ஆராய்ச்சிக்கு இவ்வளவு உயிர்கள் தேவைப்பட்டன?
ஆராய்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற வணிகச் சுரண்டலா?
ஒவ்வொரு வருடமும் அன்டார்டிக் கடலின் சுற்றுச்சூழலை ஆராய்வதற்காகவும்,
அதன் அமைப்பு மற்றும் இயக்கத்தைக் கண்டறியவும் ஜப்பானைச் சேர்ந்த கப்பல்
மாலுமிகள் தெற்கு பெருங்கடலில் உயிரியல் மாதிரிகள் எடுக்கச் செல்வார்கள்.
இந்த முறையும் அப்படி ஆய்வுக்காக உயிரியல் மாதிரிகள் எடுக்கச்
சென்றபோதுதான் நடந்தது இந்தக் கொடூரம்.
உயிரியல் மாதிரிகள் எடுக்கிறோம் என்ற பெயரில், அந்தக் கடல் பகுதியில்
இருந்த 333 மின்க் (Minke) வகை திமிங்கலங்களைக் கொன்றழித்திருக்கின்றனர்.
இதுகுறித்து, சர்வதேசத் திமிங்கலங்களுக்கான அமைப்பைச் சேர்ந்த அறிவியல்
குழுவினர் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையின்படி கடந்த ஒரு
வருட காலத்தில் மட்டும், அதாவது 2017-2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட
காலத்தில் மட்டும், 333 திமிங்கலங்கள் கொல்லப்பட்டுள்ளன. அவற்றுள்,
* 122 திமிங்கலங்கள் கர்ப்பமாக உள்ள பெண் திமிங்கலங்கள்
* 114 திமிங்கலங்கள் இன்னும் முதிர்ச்சி அடையாத இளம் திமிங்கலங்கள்.
இப்படி ஆராய்ச்சி என்ற பெயரில் கொல்லப்படும் இந்தத் திமிங்கலங்கள்
கறிக்காகச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. இதில் கவனத்தில் எடுத்துக்கொள்ள
வேண்டிய மற்றொரு செய்தி என்னவென்றால், இந்த ’மின்க்’ வகை திமிங்கலங்களில்
மொத்தமாகப் பெண்களின் எண்ணிக்கையே 128 தான். வெறும் சந்தை லாபத்துக்காக
மட்டுமே நடந்த இந்தக் கொடூரச் செயலால் அந்த இனமே அழியும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளது. சந்தை லாபத்துக்காக மட்டுமே அடுத்த 12 வருடங்களில்
குறைந்தது சுமார் 4,000 திமிங்கலங்களை ஜப்பான் கொல்லக்கூடும் என ‘சிட்னி
மார்னிங் ஹெரால்ட்’ (Sydney Morning Herald) நாளிதழ் கூறுகிறது.
கொன்றுதான் ஆராய வேண்டுமா?
திமிங்கலங்களைக் கொன்றதை நியாயப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், “ஒரு
திமிங்கலத்தின் வயதை வெறுமனே அந்தத் திமிங்கலத்தைப் பார்த்து மட்டுமே
கண்டறிய முடியாது. அதனைக் கொன்றால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்” என்று
கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் கூறுவதை உலகிலுள்ள பல ஆராய்ச்சியாளர்கள்
மறுக்கின்றனர். ஒரு திமிங்கலத்தின் வயதை அதன் உடல் அளவைக் கொண்டே எளிதாக
அறிந்துகொள்ளலாம் என்கிறார்கள். ஏற்கெனவே வயது தெரிந்த ஒரு
திமிங்கலத்தின் உடல் அளவை மற்ற திமிங்கலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து
அதன் வயதைத் தெரிந்துகொள்ளலாம் எனக் கூறுகிறார்கள். அறிவியல்
ஆராய்ச்சிக்காக ஒரு திமிங்கலத்தைக் கொல்ல வேண்டும் என்ற நிலை வந்தால்,
அது பலமுறை தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
ஒரு திமிங்கலத்தைக் கொல்லாமல் அதை ஆராய வழி இருக்கிறதா என்று கேட்கப்பட்ட
கேள்விக்கு, “ஒரு திமிங்கலத்தைப் பற்றி ஆராய, அதைக் கொல்வதைத் தவிர்த்து
பல வழிகள் உள்ளன என்பது அறிவியலில் நிரூபிக்கப்பட்ட ஒன்று” எனக்
கூறுகிறார் பிரபல கடல் பாதுகாப்பு உயிரியலாளர் லெ கெர்பர். (Leah Gerber)
இப்படிப் பல வழிகள் இருக்கையில், ஆராய்ச்சி என்ற பெயரில் சந்தை
லாபத்துக்காக இவ்வளவு திமிங்கலங்கள் கொல்லப்பட்டுள்ளன, கொல்லப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. அது மட்டுமில்லாமல் அந்த இனமே அழியும் நிலைக்குத்
தள்ளப்பட்டிருகிறது.
ஜப்பானில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளில் கடல் வளங்கள் அளவுக்கு
அதிகமாகச் சுரண்டப்படுகின்றன. நிலத்தின் வளங்களை மீட்டெடுப்பதற்குக்கூட
நமக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது. கடலின் வளம் மனித சக்திக்கு
அப்பாற்பட்டது. அந்த வளங்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் நம்மால்
இயலவில்லை என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.
சுற்றுச்சூழலில் எப்போதெல்லாம் ஒரு இனம் அழிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம்
அந்தச் சுற்றுச்சூழலில் ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்படுகிறது என்பது
வரலாறு நமக்குத் தரும் சான்று. அப்படி ஏற்படும் மாற்றம் நிச்சயமாக நல்ல
மாற்றமாக இருக்காது என்பது அது நமக்குத் தரும் பாடம்.
-

dhivi sha

unread,
Jun 5, 2018, 11:41:22 AM6/5/18
to Valluvan Paarvai, inaiathendral
ஸ்டெர்லைட் கட்டடங்கள் தகர்க்கப்பட வேண்டும்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கள ஆய்வு செய்து
இடைக்கால அறிக்கை வெளியிட்டுள்ள நீதிபதி அரிபரந்தாமன் தலைமையிலான
உயர்மட்ட உண்மை அறியும் குழு, ‘ஸ்டெர்லைட் கட்டடங்கள் தகர்க்கப்பட்டு ஆலை
இருந்த இடம் வெறுமையாக்கப்பட வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான
போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13
பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அதிர்ச்சிக்குரிய இந்தச்
சம்பவத்துக்குப் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை செய்ய அரசின் சார்பில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற
நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, நேற்று
முதல் விசாரணையும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் அத்துமீறல்கள் ஆகியவை
குறித்து ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் மற்றும்
மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோல்சே பட்டேல் தலைமையில்
ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் டிஜிபிக்கள், மூத்த வழக்கறிஞர்கள், மனித
உரிமைகள் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் கொண்ட உயர்மட்ட உண்மை அறியும்
குழு தூத்துக்குடியில் கள ஆய்வு மேற்கொண்டது. நகரின் பல்வேறு
பகுதிகளுக்கும் சென்ற இக்குழு பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாகச்
சந்தித்து வாக்குமூலங்களையும் வாங்கியுள்ளது.
இந்த தகவல்களை வைத்து இக்குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையின்
குறிப்பிடத்தக்க அம்சங்கள் பின்வருமாறு...
* மாவட்ட நிர்வாகம் போராடுகின்ற அனைத்துத் தரப்பையும் அமைதிப்
பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இது போராட்டக்காரர்களைப் பிரித்தாளும்
யுக்தியாகவும் சூழ்ச்சியாகவும் தெரிகிறது.
* மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிடுவதற்குப்
பதிலாக சிறிய அளவில் உள்ள எஸ்விஎஸ் மைதானத்தில் கவனஈர்ப்பு போராட்டம்
நடத்த அனுமதி கொடுத்தது, பெருந்திரளாக வந்த லட்சக்கணக்கான மக்களைக்
கணக்கில் எடுத்துக் கொள்ளாததைக் காட்டுகிறது.
மேலும் தடை உத்தரவு அமலில் இருக்கும்போது அதை மீறி அங்கு எப்படி கூட
முடியும்? இந்த இடத்தில் கூடும் அறிவிப்புகூட எல்லா மக்களையும்
சென்றடையவில்லை. இதுவும் நிர்வாகத்தின் தெளிவற்ற தன்மையையும்,
குறைபாட்டையும் தெளிவாகக் காட்டுகிறது.
* 1973ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை தொகுப்புச் சட்டத்தின்படி 144 தடை
உத்தரவு என்பது, காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்
மட்டும் எதிர்பார்க்கப்படும் வன்முறை, ஆபத்து ஆகிய காரணங்களுக்காக
விதிக்கப்பட வேண்டும். மேலும் 2018 மே 18ஆம் தேதி தரப்பட்ட சென்னை உயர்
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தடை உத்தரவு அமல்படுத்தும் பகுதியில்
சூழ்நிலையை அறிவதற்காக ஒன்பது வருவாய்த் துறை அலுவலர்களை நிர்வாக
நடுவர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், ஒரு வட்டாட்சியர் கூட நிர்வாக
நடுவராக நியமிக்கப்படவில்லை என்பது துணை வட்டாட்சியரின் முதல் தகவல்
அறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
* சம்பவம் நடந்த மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர்,
தாசில்தார் ஆகியோர் மாவட்டத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
* 144 தடை உத்தரவு மக்களுக்குச் சென்றடையுமாறு மாவட்ட ஆட்சியர்
கொடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே 144 தடை உத்தரவு
போடப்பட்டதில் எவ்வித விதிமுறையும் கடைப்பிடிக்கப்படவில்லை என்று பொது
விசாரணைக் குழு தெரிவிக்கிறது.
* மே 23ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் அதிகளவில் காவல் துறையினர்
நிறுத்தப்பட்டனர். இதுவே மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கியது. அன்றைய
தினம் மருத்துவமனை முன்பு கூடிய மக்களைக் காவல் துறையினர்
விரட்டியடித்தனர். இதனால் நாலாப்புறமும் சிதறி ஓடிய மக்கள் அருகிலுள்ள
பகுதிகளில் தஞ்சமடைந்தனர். மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும்
உறவினர்களும் கூட காவல் துறையால் தாக்கப்பட்டனர். குறிப்பாக கறுப்புச்
சட்டை அணிந்தவர்களும் கழுத்தில் சிலுவை அணிந்தவர்களும் தாக்கப்பட்டனர்.
* காளியப்பன் கொலை செய்யப்பட்ட அண்ணா நகரில் அதிகளவில் காவல் துறையினர்
நிறுத்தப்பட்டனர். வீடுகளில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி,
மக்களை அடித்து இளைஞர்களை சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்து
சிறையிலடைத்தனர். அவர்களுக்குத் தண்ணீர், உணவு தராமல்
துன்புறுத்தியுள்ளனர். இதனால் மக்கள் பயத்திலும் விரக்தியிலும் வாழ்ந்து
வந்தனர்.
* ஸ்டெர்லைட் போராட்டத்தில் தன்னிச்சையாகப் பெருந்திரளாக மக்கள்
கூடுவதற்குக் காரணம் அந்த ஆலைக் கழிவுகளால் தூத்துக்குடி மக்களுக்கு
ஏற்பட்ட பெருவாரியான புற்றுநோய், மூச்சுத் திணறல், தோல் வியாதிகளே ஆகும்.
* சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி ரூபாய் அபராதம்
உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. இதன் பிறகும் ஆலை இயங்கியது மக்கள்
நல்வாழ்வை விட பண வியாபாரமும், பணப் பரிமாற்றமுமே அரசுக்கு
முக்கியமானதென்று தெரிகிறது.
* காவல் துறையின் கொடூரமான தாக்குதலால் பிரின்ஸ்டன் என்பவர் போல பலர்
மாற்றுத்திறனாளியாக மாற்றப்பட்டனர். பலர் உளவியல் நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது விசாரணைக் குழு அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில்,
‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஸ்டெர்லைட் கட்டடங்கள்
தகர்க்கப்பட்டு ஆலை இருந்த இடங்கள் இடம் வெறுமையாக்கப்பட வேண்டும், காவல்
துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் தமிழக
அரசால் நிறுவப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவர்களைக்
கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட இறப்புகளுக்கும் காயங்களுக்கும்
அதன்பிறகு நடந்த தொடர் தேடலுக்கும் கைதுக்கும் துன்புறுத்தலுக்கும்
காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடரும் காவல்
துறையின் அச்சுறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட்டு மக்களின் பாதுகாப்பை
உறுதிபடுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பொது விசாரணையின் முழு அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில்
வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

dhivi sha

unread,
Jun 5, 2018, 11:45:03 AM6/5/18
to Valluvan Paarvai, inaiathendral
சுற்றுச்சூழல்: அறிய வேண்டிய அரிய தகவல்கள்!
தினப் பெட்டகம் – 10 (05.06.2018): இன்று சுற்றுச்சூழல் தினம்
இயற்கையும் சுற்றுச்சூழலும் நம் தேவைகளுக்கு அனைத்தையும்
வைத்திருக்கின்றன. ஆனால், நம் பேராசையால் அவற்றை அழிக்கிறோம்.
இருப்பதையும் நாசம் செய்யும் வேலையைத்தான் நாம்
பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்று உலக சுற்றுச்சூழல் தினம்.
சுற்றுச்சூழலைப் பற்றி சில தகவல்கள்:
ஒவ்வோர் ஆண்டும் கடலில் கொட்டப்படும் எண்ணெயின் அளவு 5 மில்லியன் டன்.
ஒரு கண்ணாடி பாட்டில் மக்குவதற்கு 4,000 ஆண்டுகள் ஆகின்றன. பிளாஸ்டிக்
பாட்டிலுக்கு 450 ஆண்டுகள்.
ஒவ்வொரு நொடியும் 100 ஏக்கர் மழைக் காடுகள் வெட்டப்படுகின்றன.
நாம் பயன்படுத்தி வெளியில் தூக்கிவீசும் பிளாஸ்டிக் குப்பைகள்,
ஆண்டுதோறும் ஒரு மில்லியன் கடல் வாழ் உயிரிகளைக் கொல்கிறது.
உலகம் முழுவதிலும் காடுகளில் உள்ள 50,000 உயிரினங்கள் (Species) ஒவ்வோர்
ஆண்டும் அழிகின்றன. அதாவது, ஒரு நாளைக்குக் குறைந்தது 137 இனம்.
உலகத்திலேயே மிகவும் பழைமையான மரங்களின் வயது 4,600 ஆண்டுகள்.
மாசுபாடுதான் நமது மிகப் பெரிய சவால். இது ஒரு வருடத்துக்கு 100
மில்லியன் மக்களைப் பாதிக்கிறது.
இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலுள்ள 40% குழந்தைகளின் வளர்ச்சிக்
குறைபாட்டுக்குச் சுத்தமில்லாத தண்ணீரும் உணவுப் பற்றாக்குறையும்தான்
காரணம்.
நாம் வாங்கும் பண்டங்களை உறையிலிடுவதற்கான பொருள்கள் (Packaging
materials) குப்பைகளில் 35 சதவிகிதத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
உலகத்திலுள்ள நீரின் அளவு மாறுபட்டதே கிடையாது. அனைத்தும் தண்ணீர்
சுழற்சியில் சீராகிறது. மக்கள்தொகைப் பெருக்கம்தான் நீர்ப்
பற்றாக்குறைக்கான காரணம்.
இனியாவது சிந்தித்துச் செயல்படுவோம்.
- ஆஸிஃபா

dhivi sha

unread,
Jun 5, 2018, 9:44:42 PM6/5/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்...?
1.2 பில்லியன் குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். லண்டனைச்
சேர்ந்த ‘சேவ் தி சில்ரன்’ (Save the Children) அமைப்பு கூறும்
அதிர்ச்சித் தகவல் இது!
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகில் உள்ள குழந்தைகளில் 1.2
பில்லியன் (120 கோடி) குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
அவர்கள் வறுமை, போர் அல்லது பெண் குழந்தை வன்புணர்வு ஆகிய ஆபத்துகளால்
பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளது.
1.2 பில்லியன் குழந்தைகள் எண்ணிக்கை என்பது உலகக் குழந்தைகள்
எண்ணிக்கையில் பாதி அளவு. இதில் 153 மில்லியன் குழந்தைகள் இந்த மூன்று
ஆபத்துகளாலும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர் என்று அந்த அமைப்பு
தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஒரு பில்லியன் குழந்தைகள்
வறுமையாலும், 240 மில்லியன் குழந்தைகள் போரினாலும், 575 மில்லியன் பெண்
குழந்தைகள் வன்புணர்வு ஆகிய காரணங்களாலும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
“அவர்கள் யார், அவர்கள் எந்த இடத்தில் வசிக்கின்றனர் என்பதனாலேயே, இந்தக்
குழந்தைகளின் குழந்தைப் பருவம் மற்றும் வருங்காலம் இன்று ஆபத்தில்
உள்ளது” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த அமைப்பு நடத்திய ஆய்வின்படி, 175 நாடுகளில், 95 நாடுகள் தங்கள்
நிலையை உயர்த்திக்கொண்டுள்ளன. ஆனால், 40 நாடுகள் மிகவும் அபாயகரமான
நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. குழந்தைகளின் உயிரிழப்பு, சத்துக்
குறைபாடு, கல்வி, குழந்தைத் திருமணம் ஆகிய அனைத்தையும் கணக்கில்கொண்டு
நாடுகள் தரம் பிரிக்கப்பட்டன. அந்தப் பட்டியலில் சிங்கப்பூர், ஸ்லொவேனியா
நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. கடைசி 10 இடங்களில் 8 நாடுகள் மேற்கு
மற்றும் மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகள்.
இவர்கள் இந்த ஆபத்தில் இருக்க அவர்கள் காரணமில்லை. அவர்கள் வறுமையில்
இருக்கிறார்கள். அவர்கள் போர் நடக்கின்ற பகுதிகளில் வசிக்கிறார்கள்.
அவர்கள் பெண் குழந்தைகளாகப் பிறந்திருக்கிறார்கள். இவைதான், இவை
மட்டும்தான் காரணம்.
சிரிப்பு எனும் மாயாஜாலம் செய்து நம் கவலைகளைப் போக்கும் அந்தக்
குழந்தைகள் இப்போது ஆபத்தில் இருக்கிறார்கள். இரண்டில் ஒரு குழந்தை
அப்படியான ஆபத்தில் இருக்கிறது. அந்த ஒரு குழந்தை உங்களுக்கு மிக
அருகில்கூட இருக்கலாம். இப்போது யார் மாயாஜாலம் செய்து அந்தக் குழந்தைகளை
ஆபத்திலிருந்து காக்கப் போகிறார்கள்?
- நரேஷ்

dhivi sha

unread,
Jun 6, 2018, 11:56:01 AM6/6/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: வெற்றுக் காகிதங்கள் என்ன செய்யும்?
தா.பிரகாஷ்
சுற்றுச்சூழல் தினங்களும் நமது செயல்பாடுகளும்
சின்னச் சின்ன மனிதர்கள் – தமது
சின்னச் சின்ன செயல்களின் மூலம்
சின்னச் சின்ன மாற்றங்களை விளைவித்தால்
உலகமே மாறும் ஒரு நாள்
எங்கோ படித்த இந்தக் கவிதை மனதில் அழியாமல் தங்கிவிட்டது. எழுதியவரின்
பெயர்கூட நினைவில் இல்லாவிட்டாலும் கவிதையும் அதன் பொருளும்
நினைவிலிருந்து நீங்கவில்லை. காரணம், அது சொல்லும் செய்தி.
சிறிய வயதில் நானும் என் பாட்டியும் வயல்களுக்கு நண்டு பிடிக்கச்
செல்வோம். “டேய் எல்லா நண்டையும் பிடிச்சி உள்ள போடாதே, நண்டு ஓட்டைத்
திறந்து பார், பொம்பளை நண்டா இருந்தா அதுல குஞ்சுகள் இருக்கும். அந்த
நண்டுகளைப் பிடிக்காதே. அப்படியே விட்டுடு. பிடிச்சா பாவம்டா” என்பார்.
இந்தச் சூழல் சார்ந்த அறிவு என்பது எளிய மனிதர்களிடம் இயல்பாகக்
காணப்பட்ட குணாம்சம். இப்படி உலகம் முழுவதும் இருக்கின்ற இனக்
குழுக்களுக்கு இயற்கை சார்ந்த அறிவு இருக்கத்தான் செய்தது.
மனிதர்களுக்கு இருந்த இந்த அறிவும் அறமும் எங்கே அறுபட்டது என்றால் உலகம்
முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த ஒழுங்குபடுத்தப்படாத
பொருளாதார முதலீட்டால் ஏற்பட்ட நிகழ்வு எனலாம்.
உலகச் சுற்றுச்சூழல் தினம்
ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் தினமாக 1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின்
பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது, அன்று தொடங்கி இன்று வரை பல்வேறு
கருப்பொருள்களின் கீழ் அதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறது. இந்த
ஆண்டு ‘நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத்
தடுப்போம்’ என்ற தலைப்பை அறிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை
இவ்விஷயத்தில் ஒரு சம்பிரதாயமான நிறுவனமாகவே கடந்த நாற்பதாண்டுகளாக
இயங்கிவருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் சுற்றுச்சூழலை
அழிக்கக்கூடிய நிறுவனங்களின் நிதி உதவியுடன்தான் அது இயங்கிவருகிறது. உலக
அளவில் நடந்த சூழலியல் போராட்டங்களுக்கு ஆதரவாக ஐநா எத்தனை முறை ஆதரவுக்
கரம் நீட்டியிருக்கிறது என்பதுதான் நம்முடைய கேள்வி.
திமிங்கலத்தின் வயிற்றில் 8 கிலோ நெகிழி
சில தினங்களுக்கு முன்பாக தாய்லாந்து அருகில் திமிங்கலம் ஒன்று கரை
ஒதுங்கியது, அந்த திமிங்கலத்தின் வயிற்றில் 80 நெகிழி உறைகள் இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 8 கிலோ நெகிழி உறைகளை உண்டதாலேயே அந்தத்
திமிங்கலம் இறந்திருக்கிறது. நெகிழியின் தன்மையைப் பற்றியும், அது
ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் முழுமையாக உணராதவர்களாகவே நாம்
இருக்கிறோம். இது ஏதோ சாதாரணமாக நடந்த நிகழ்வு கிடையாது. நாம் அனைவரும்
நுகர்வு கலாச்சாரத்துக்கு அடிமையானவர்களாக மாற்றப்பட்டதன் பேராசைகளால்
நடந்துகொண்டிருக்கும் கொடூரம்.
நகரங்களின் தெருக்களில் பேப்பர்களையும் நெகிழிக் கழிவுகளையும் தின்று
சுற்றித் திரியும் மாடுகளைப் பற்றியோ அல்லது கோயில் யானைகளைப் பற்றியோ
நாம் கவலை கொண்டது கிடையாது,
பல்லுயிர் வாழ்க்கைக்குத் தீங்கு ஏற்படுத்துபவர்களாக மனிதர்கள்
இருப்பதாலேயே உலகிலிருந்து பல உயிரினங்கள் இன்று காணாமல் போயுள்ளன.
நெகிழியின் ஆயுள் காலம்
உறை, தாள் முதலான நெகிழிப் பொருள்களின் பயன்பாடு தற்காலிகமானது. ஆனால்,
அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அநேகமாக மாற்ற முடியாதவை. கடலில்
மிதக்கும் 90 சதவிகிதக் கழிவுகள் நெகிழிப் பொருட்களே. நெகிழி 20ஆம்
நூற்றாண்டு அறிவியல் உலகத்தின் ஒரு கண்டுபிடிப்பு. பிளாஸ்டிக் பொருட்கள்
உடையாமலும் ஈரம்படாமலும் எடை குறைவாகவும் மின்கசிவு ஏற்படாமலும்
இருப்பதால் அவற்றைப் பயன்படுத்துவதில் தவறென்ன என நினைக்கலாம். நெகிழி
தயாரிக்கப் பயன்படும் Benzine vinyl chloride போன்ற வேதிப் பொருட்கள்
புற்றுநோய்க்குக் காரணமாகின்றன. நெகிழி உருவாக்கப் பயன்படும் பல்வேறு
வேதிப்பொருட்கள் பலவிதமான தீங்குகளை விளைவிப்பது பற்றி உலகின் பல நாடுகள்
நிரூபித்திருக்கின்றன.
நெகிழிக் குப்பைகள் உருவாகும் வேகம் மலைக்க வைக்கிறது. உதாரணமாக,
சென்னையில் ஒரு நாளில் உருவாகும் நெகிழிப் பொருட்கள் 1,86,000 கிலோ.
இதில் வெறும் 7% மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இது ஒரு
நகரத்தில் மட்டும்தான். உலகம் முழுவதும் இருக்கின்ற நகரங்களில்
உருவாகின்ற நெகிழியின் கதை என்ன என்பதை நீங்களே கணக்குப்
போட்டுக்கொள்ளுங்கள். இப்படி உலகம் முழுவதும் உருவாகின்ற பிளாஸ்டிக்குகள்
வளி மண்டத்திலும் கடலிலும்தான் கொட்டப்படுகின்றன. இவற்றின் காரணமாகவே
அந்தத் திமிங்கலம் இறந்திருக்கிறது என்பது நாம் கவனத்தில் கொள்ள
வேண்டியதாகும்.
சாதாரண நெகிழிப் பைகளில் தொடங்கி டயர், தண்ணீர் பாட்டில்கள் வரை நெகிழிப்
பயன்பாட்டின் பட்டியல் நீளும். நெகிழிப் பொருட்கள் மண்ணில்
மக்கிப்போவதற்கு அதனதன் கனத்திற்கு ஏற்றாற்போல் 400, 500 ஆண்டுகளுக்கு
மேல்கூட ஆகலாம். மண்ணோடு கலக்கும் நெகிழிப் பொருட்கள் சுற்றுச்சூழலில்
மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. அதன் விளைவாக ஓசோன்
படலத்தில் ஓட்டை, நீர்வளம் குறைதல், நிலம் சூடாதல் மற்றும் வேதியியல்
பொருட்களால் நஞ்சாதல், காற்று மாசடைதல் போன்றவை நிகழ்கின்றன. நம்
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவுகின்ற நிலம், நீர், காற்று
போன்றவை பாதிப்புக்குள்ளாகி வருவதால் நாம் நெருக்கடியான சூழலில்
சிக்கிக்கொண்டு திணறுகிறோம். இயற்கையின் வளங்ளைப் பல்வேறு வகைகளில்
சுரண்டுகிறோம்.
சுற்றுச்சூழல் என்பது இரு வேறு பரிணாமங்களைக் கொண்டது. ஒன்று
மனிதர்களுக்கானது; இன்னொன்று காட்டுயிர்களுக்கானது. ஆனால், நடைமுறையில்
இயற்கையின் வளங்கள் அனைத்தும் தமக்கானது என்றே மனிதர்கள் கருதுவதாகத்
தோன்றுகிறது. இந்தச் சிந்தனை நூற்றாண்டு காலமாக நம்ப
வைக்கப்பட்டுவருகிறது. அதனாலேயே வனங்களும் மலைகளும் கடல் வளங்களும்
தண்ணீரும் இன்ன பிற இயற்கைச் செல்வங்களும் மனிதர்களுக்காகவே
படைக்கப்பட்டது என்று நாம் எண்ணுகிறோம். மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கிற
இந்தச் சிந்தனை நுகர்வு கலாச்சாரத்திலிருந்து வருவது. இந்தக் கலாச்சாரம்
என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று. அதற்காக உலக முதலாளிகளால் பல
கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு வருகிறது.
இயற்கையும் அரசும் கார்ப்பரேட்டுகளும்
உலக அளவில் சுற்றுச்சூழலைக் காப்பதற்காகப் போராட்டம் நடத்தியவர்கள்
உழைக்கும் மக்கள் என்பதை சிப்கோ அந்தோலன், சிக்கோ மென்டஸ், வாங்கரி
மாத்தாயின் இயக்கம், நர்மதா நதிப் பாதுகாப்பு இயக்கம் போன்றவற்றின்
போராட்டங்கள் நிரூபித்திருக்கின்றன. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் அரசு
நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் போராளிகள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்தக் கொலைகளுக்குப் பின்னால் அரசுகள் மட்டுமின்றி அதே நேரத்தில்
அரசுகளாலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களும் இருக்கின்றன எனச்
சுற்றுச்சூழல் போராளிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனுடைய தொடர்ச்சியாகவே
தூத்துக்குடி சம்பவத்தையும் பார்க்க வேண்டும் என்னும் பார்வையும்
அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலைக் காப்பது என்பது ஏதோ மரம் நடுவது, தண்ணீர் ஊற்றுவது
என்பது கிடையாது, முதலாளித்துவ அரசுகளால் கொண்டுவரப்படும் கட்டற்ற மூலதன
முதலீடுதான் உலகம் முழுவதும் பல நாசகர வேலைகளைச் செய்துவருகிறது. இந்த
நாசகர வேலைகள் ஆப்பிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசிய
நாடுகள் ஆகிய பல நாடுகளில் நடக்கின்றன. ஆகவே, சுற்றுச்சூழலைக்
காப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது என்னவெனில், அரசுகளின் பொருளாதாரத்
திட்டங்களை மாற்ற முற்படுவதும், சுய சார்புடைய நிலைத்த பொருளாதார நிலையை
உண்டாக்குவதுமேயாகும். அதுவே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்.
“பொம்பளை நண்டா இருந்தா அதில குஞ்சுகள் இருக்கும், அந்த நண்டுகளை
பிடிக்காதே, அப்படியே விட்டுடு” என்று சொன்ன அந்தப் பாட்டியின் அக்கறையை
மீட்டெடுக்க வேண்டும். கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள கவிதை சொல்வதைப்
போல, “சின்னச் சின்ன மாற்றங்களை” தனிநபர்களால் செய்ய முடியும். பெரிய
மாற்றங்களை அரசுகளும் சர்வதேச அமைப்புகளும்தான் செய்ய முடியும். ஆனால்,
இந்தச் சின்னச் சின்ன மாற்றங்கள்தான் அத்தகைய மாற்றங்களுக்கான தூண்டுதலாக
அமையும். இன்று அரசுகளும் பேரமைப்புகளும் செய்யும் சூழல் பிரகடனங்கள்
வெற்றுக் காகிதத்தின் சாரமற்ற செய்திகளாக இருக்கலாம். ஆனால், நம்மால்
இயன்ற “சின்னச் சின்ன மாற்றங்களை விளைவித்தால் உலகமே மாறும் ஒரு நாள்”
என்னும் நம்பிக்கையோடு செயலாற்றுவோம்.

Palaniappan kandasamy

unread,
Jun 7, 2018, 10:34:28 AM6/7/18
to brail...@googlegroups.com
ப்ரச்சனைகளை அடுக்கிக்கொண்டேபோவது கவலையை தரலாமேதவிர தீர்வை தராது. குப்பைபொருக்க ஒரு கூட்டம் இருக்கவே இருக்கிறது; அவர்களிடம் நூரு ப்ளாஸ்ட்டிக் குப்பைப்பொருட்கள் கொடுத்தால் ஒரு ரூபாய் தருவோம் என விளம்பரப்படுத்துங்கள் அப்புரம் பாருங்கள். சேகரித்த ப்ளாஸ்ட்டிக்கை உருக்கி, சுருக்கி இருக்கி நிலையாக இருக்கவேண்டிய கட்டுமான பொருள்கள் இருப்புப்பாதையடியில் போடப்படும் ஸ்லீப்பர் கட்டைகள் சாலை அமைக்க சரள் கற்கள், slab கள் செங்கற்கள் முதலியன தயாரிக்கப்பயன்படுத்தினால் மரத்தின் பயன்பயன்பாடு, கருங்கற்கள் பயன்பாடு இரும்பு பொருள்கள் பயன்பாடு குரையும். இப்படி மாற்றியோசித்தால் செயல்பட்டால் ப்ரச்சனைகள் தீரும். வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
கந்த பழனியப்பன் கோவை 4.

-----Original Message-----
From: brail...@googlegroups.com [mailto:brail...@googlegroups.com] On Behalf Of dhivi sha
Sent: 06 ஜூன் 2018 21:26
To: Valluvan Paarvai
Cc: inaiathendral
Subject: [Braille Acl] மின்னம்பலம்

dhivi sha

unread,
Jun 7, 2018, 12:19:04 PM6/7/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
ஆரல்வாய்மொழி முதல் அறுகாணி வரை எல்லைத் தெய்வமாகக் கன்னியாகுமரி
மாவட்டத்தைக் காத்துவருகிறது மேற்குத் தொடர்ச்சி மலை. கேரளாவின்
விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சார்பில் அமைக்கப்படும் வர்த்தக துறைமுகப்
பணிக்காக இம்மலையை வெட்டி எடுத்துப் பாறாங்கற்களை அனுப்பத்
திட்டமிடப்பட்டுள்ளது.
ஏன் தமிழக எல்லையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து
பாறாங்கற்களை வெட்டி எடுக்கின்றனர்?
துறைமுகக் கட்டுமானப் பணிக்காக இயற்கையைச் சுரண்டிக் கனிம வளங்களை
எடுக்கக் கூடாது எனக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே,
தமிழகத்திலிருந்து எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிக்காகப் பாறாங்கற்களை மிதவைக் கப்பல்களில் விழிஞ்ஞம்
துறைமுகத்துக்குத் தேங்காய்ப்பட்டணம் துறைமுகம் வழியாகக் கொண்டுசெல்லத்
திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கன்னியாகுமரியில் 40க்கு மேற்பட்ட கல் குவாரிகள் அமைந்துள்ளன.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பாறைகள்
அளவுக்கு மீறி உடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. கன்னியாகுமரி
மாவட்டத்தைச் செழிப்பாக்கும் ஆறுகளையும் இதர நீர் ஆதாரங்களையும், இயற்கை
வளத்தையும் இம்மலைத்தொடர்தான் தருகிறது.
இந்த மலைகளைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடாமல் மேலும் அழிக்கும்
நடவடிக்கைக்குத் துணைபோவது அம்மக்களுக்கும் மண்ணுக்கும் செய்யும் பச்சைத்
துரோகம்!

dhivi sha

unread,
Jun 7, 2018, 10:34:05 PM6/7/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
நீட் விஷயத்தில் இவ்வளவு வெளிப்படையான புறக்கணிப்பு அரசியல் நடக்கும்
என்று நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில்,
அரசியலுக்கும் மாணவர்களின் கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,
அரசியலுக்காக மாணவர்கள் பலிகடா ஆக்கப்பட மாட்டார்கள் என்று
நினைத்துக்கொண்டிருந்தோம். அரசியல் என்று வந்துவிட்டால் பச்சிளம்
குழந்தைகூட விதிவிலக்கல்ல என்று உணர்த்தியிருக்கிறது நீட் தேர்வு
முடிவுகள்.
நீட் தேர்வு முடிவுகளில் நிகழும் மரணங்கள் நாளொரு வண்ணம் பொழுதொரு
மேனியாகத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தமிழகத்தைத் தாண்டி டெல்லி,
ஹைதராபாத் என்று எல்லா மாநிலங்களிலும் நீட் தோல்வியினால் மாணவர்கள்
தற்கொலை செய்துகொண்ட செய்திகள் வலம்வந்து கொண்டேதான் இருக்கின்றன.
மற்ற மாநிலங்களில் நடக்கும் தற்கொலைகளுக்கும், தமிழகத்தில் நடக்கும்
தற்கொலைகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற மாநிலங்களில் நீட்
தேர்வுக்காகத் தயாரான மாணவர்களுக்கு இருந்த வசதி, நிச்சயமாகத் தமிழக
மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. ‘சமம்’ எனும் பெயரால் நடத்தப்பட்ட நீட்
எனும் தேர்வின் சமநிலை தவறியதே தமிழகத்தின் தொடர் மரணங்களுக்குக் காரணம்.
10ஆம் வகுப்பு படித்தும், ஆங்கிலத்தில் தங்கள் பெயரைக்கூட எழுதத் தெரியாத
தற்குறிகள் நிறைந்த மாநிலம் குஜராத் என்பது அரசாங்கத்தால்
அங்கீகரிக்கப்பட்ட செய்தி. அங்கே நடத்தப்படும் தேர்வுகளில் ‘ஈ அடித்தான்
காப்பி’ என்பார்களே, அதைவிட மோசமாக காப்பியடித்த மாணவர்கள்
மாட்டியதெல்லாம் நாடே அறிந்து வெறுத்த வரலாறு.
அப்படிப்பட்ட மாநிலம் நீட் தேர்வில் முன்னணி வகிப்பது, இந்தியாவிலேயே
தமிழக மாணவர்களுக்கு மட்டும் மற்ற வடமாவட்டங்களில் தேர்வு மையம்
அமைத்தது, தேர்வு முடிவுகளை ஒரு நாள் முன்பே அறிவித்தது என இன்னும் பல
தொடர் நிகழ்வுகள் ‘நீட்’ எனும் பெயரில் வெளிப்படையாக நடந்த அரசியலைப்
பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றன.
தேர்வு முடிகள் வெளிவரும் முன்பே நீட் மரணங்கள் தொடங்கிவிட்டன. கஸ்தூரி
மகாலிங்கத்தின் தகப்பனார் கிருஷ்ணசாமியின் மரணமும், ஐஸ்வர்யாவின்
தகப்பனார் கண்ணனின் மரணமும் நம்மை வந்தடைந்த செய்தி. இந்த இரு
மாணவர்களும் முறையே 84 மதிப்பெண்களும், 92 மதிப்பெண்களும் பெற்று
தோல்வியடைந்துள்ளனர். தந்தையையும் இழந்து வருங்காலத்தையும் இழந்து
தவிக்கிறார்கள்.
- நரேஷ்

dhivi sha

unread,
Jun 8, 2018, 12:18:42 PM6/8/18
to Valluvan Paarvai, inaiathendral
32 மாவட்டங்களில் ஐஏஎஸ் அகாடமி!
தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் இலவச ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும் என
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்றைய சட்டசபை கூட்டத்தின்போது, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்
சுப்பிரமணியன் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தபோது, இன்னும் ஒரு மாத
காலத்திற்குள் தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி
அமைக்கப்பட்டு, அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி வழங்கப்படும் என்றார்.
மேலும், நூலகங்களைப் பராமரிக்க தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; அதற்கான
பணிகளும் நடைபெற்றுவருகின்றன என்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதிகளில் நூலகங்கள் அமைக்க நூல்களை
வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், எத்தனை நூல்கள்
வழங்கினாலும் அதனைப் பெற்றுக்கொண்டு, நூலகங்களில் வைப்பதற்கென தனியாக
குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அப்போது எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் பகுதியில்
நூலகங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன; அதனைச்
சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினார்.
உள்ளாட்சித் துறையிடமிருந்து உரிய நிதி பெற்று, பராமரிப்பு இன்றி உள்ள
நூலகங்கள் சீரமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

dhivi sha

unread,
Jun 8, 2018, 10:22:03 PM6/8/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
தமிழக அரசின் பிளாஸ்டிக்குக்கு எதிரான தடைக்குத் தடை விதிக்க வலியுறுத்தல்!
இது உதாசீனப்படுத்த முடியாத கவனிக்கப்பட வேண்டிய குரல். தமிழகத்தில்
பிளாஸ்டிக் பொருட்கள் வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை செய்யப்படும்
என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி
அறிவித்தார்.
இந்த உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதால், அதன்
தயாரிப்பில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான சிறு, குறு தொழில் முனைவோர்
கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று காரணம் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, குஜராத் மாநிலத்தில் வதோதரா, அகமதாபாத்,
ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களில் பிளாஸ்டிக் உபயோகத்திற்குத் தடை
விதிக்கப்பட்டபோது, இதனால் 2 ஆயிரம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள்
மூடப்படும் என்றும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் வேலையிழப்பார்கள் என்றும்
குஜராத் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்தது.
தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை அதிகமானது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு
விதிக்கப்படும் தடையால் நேரடியாக 2 லட்சம் பேரும், மறைமுகமாக 3
லட்சத்திற்கு அதிகமானோரும் வேலையிழக்க நேரிடும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவைக் கொண்டாடும் அதே நேரத்தில் இதனால் ஏற்படும் வேலை
இழப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். கடந்த திமுக ஆட்சியின்போது
திருப்பூர் சாயப் பட்டறைகள் மூடும் உத்தரவை எதிர்த்தும் இது போன்ற
குரல்கள் ஒலித்தன. ஆனாலும், அவை மூடப்பட்டன. அவர்களுக்குப் போதிய
அவகாசமும், மறு வேலைவாய்ப்பும் வழங்கப்படாததால் பல மோசமான விளைவுகளைத்
தொழிலாளர்கள் சந்தித்தனர்.
ஆனால், இந்த பிளாஸ்டிக் தடையைப் பொறுத்தவரை உரிய அவகாசம்
கொடுக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால்,
மறுவேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டால் இன்னும் சிறப்பு.
அந்தத் தொழிலாளர்களின் குரலுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அதே
சமயத்தில், நடைமுறை உண்மைகளையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தத் தடையால் அவர்கள் வேலையை மட்டும்தான் இழப்பார்கள். இந்தத் தடை
இல்லாவிட்டால், பல ஜீவன்கள் தங்கள் உயிரையே இழப்பார்கள்.
மாற்றுத் தொழிலைத் தேடுவது சாத்தியம்தான். ஆனால், மாற்று உயிர் என்பது சாத்தியமல்ல!
- நரேஷ்

Aravind R

unread,
Jun 8, 2018, 11:00:16 PM6/8/18
to brail...@googlegroups.com
nice infos. continue your good work.
> --
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "Brailleacl" group.
> To post to this group, send email to brail...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> brailleacl+...@googlegroups.com
>
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "Brailleacl" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to brailleacl+...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--
nothing is difficult unless you make it appear so.

r. aravind,

Assistant manager
Department of sales
bank of baroda specialised mortgage store, Chennai.
mobile no: +91 9940369593, 9710945613.
email id : aravi...@yahoo.com, aravind.a...@gmail.com.

dhivi sha

unread,
Jun 9, 2018, 6:16:42 AM6/9/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: கவலை பற்றி இனி கவலை வேண்டாம்!
எல்டன் கோம்ஸ்
மனித மூளை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதில் ஊக்கம்
அளிக்கும் வகையில் விஞ்ஞானிகள் மூளையில் ஹிப்போகேமஸ் பகுதியில் கவலை
அணுக்களைக் கண்டறிந்துள்ளனர். கவலை தொடர்பான உணர்வுகளை இந்த அணுக்கள்
கட்டுப்படுத்துவதையும் இவற்றை ஒளிக்கதிர்கள் மூலம் இயக்கலாம் என்றும்
விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கவலை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இது நல்ல செய்தி.
இந்த அணுக்களைக் கட்டுப்படுத்தி, கவலை சார்ந்த குறைபாடுகளைத் தீர்க்க
கூடிய மருந்துகளை உருவாக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவும் எனக்
கருதப்படுகிறது.
சான்பிரான்சிஸ்கோவின், கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவால்
மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு நியூரான் எனும் இதழில் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வில், எலிகளின் மூளையின் லைவ் இமேஜிங் கொண்டு சோதனை
மேற்கொள்ளப்பட்டது. உயரமான இடம் அல்லது பரந்த மைதானத்தில் எலி
விடப்பட்டபோது, ஹிப்போகேமஸில் உள்ள நியூரான்கள் அதிக அளவில்
எதிர்வினையாற்றியது இந்தச் சோதனையில் கண்டறியப்பட்டது. மூளையின் இந்தப்
பகுதி எலிகளில், தீவிர கவலையை உண்டாக்குவதாக அறியப்படுகிறது.
கவலையை உருவாக்கும் உணர்ச்சித் தகவல்கள் மூளையின் எந்தப் பகுதியில்
உள்ளீடு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய விரும்பியதாக கலிபோர்னியா
பல்கலைக்கழக நியூரோ விஞ்ஞானியான மேஸன் கெயர்பெக், சயின்ஸ் அலெர்ட்
இதழிடம் தெரிவித்தார்.
ஆய்வில் நடந்தவை
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக் குழு கால்ஷியம் இமேஜிங் எனும்
நுட்பத்தைப் பயன்படுத்தியது. எலிகளின் மூளையில் சின்னஞ்சிறிய
மைக்ராஸ்கோப்கள் பொருத்தப்பட்டன. வழக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட
வளையில் எலிகள் உலா வந்தபோது அவற்றின் ஹிப்போகேமஸில் அணுக்களின்
செயல்பாடு கவனிக்கப்பட்டன. எலிகளில் கவலை உண்டாக்கும் திறந்தவெளியும்
உயரமான இடங்களுக்குச் செல்லும் வகையில் வளையும் அமைக்கப்பட்டிருந்தன.
திறந்த வெளியை எலிகள் அடைந்தபோது ஹிப்போகேமஸின் ஒரு பகுதியான சி.ஏ-1இல்
அணுக்கள் தீவிரமானதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். எலிகள் எந்த அளவு
கவலையாகத் தோன்றினவோ அதற்கு ஏற்ப நியூரான் செயல்பாடு தீவிரமாக அமைந்ததாக
‘சயின்ஸ் அலர்ட்’ இதழ் தெரிவிக்கிறது.
இந்த அணுக்களின் விளைவை, உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பகுதியான மூளையின்
ஹிப்போகேமஸில் விஞ்ஞானிகள் உணர்ந்தனர். இந்த அணுக்கள், ஹிப்போகேமஸில்
உள்ள அணுக்களுடன் தொடர்புகொண்டு, ஆபத்தான நிலை குறித்த செய்தியை
எலிக்குத் தெரிவிக்கிறது.
மனிதர்களிடம் இதே வகையான செயல்முறை இருப்பதால், இந்தக் கவலை அணுக்கள்
மனித மூளையிலும் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த ஆய்வில் பங்கேற்ற மூத்த விஞ்ஞானியான ரெனே ஹென், இவை ஏன் கவலை
அணுக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன என விளக்கியுள்ளார். “மிகவும்
அச்சமளிக்கக்கூடிய சூழலில் இருக்கும்போது மட்டும் இந்த அணுக்கள்
செயல்படக்கூடியவை என்பதால் இவற்றைக் கவலை அணுக்கள் என்கிறோம்” என்கிறார்.
கவலை அணுக்கள் ஹிப்போகேமஸ் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்துப்
புதிய சிகிச்சை முறைகள் சாத்தியமாகலாம். “ஹிப்போகேமஸில் இந்த அணுக்கள்
இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதற்கு முன் அறிந்திராத சிகிச்சை
முறைகளுக்கான வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன” என்கிறார் வகேலஸ் காலேஜ்
ஆஃப் சர்ஜன் அண்ட் பிசிஸியன்ஸ் என்னும் அமைப்பின் ஜெஸிகா ஜிம்மென்ஸ்.
இந்தக் கண்டுபிடிப்பு கவலை நோய்களை நன்றாகப் புரிந்துகொள்ளவும் உதவும்
எனக் கருதப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன?
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, 38 மில்லியன் இந்தியர்கள் கவலை
சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.5 சதவிகித இந்தியர்கள்
வல்லுநர்களின் உதவி தேவைப்படும் அளவிலான சாதாரண அல்லது தீவிர மனநலக்
கோளாறால் அவதிப்படுகின்றனர். அண்மையில் காவலர் ஒருவர் மன அழுத்தம்
காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய
நிலையில், இத்தகைய குறைபாடுகளுக்குத் தீர்வு காண்பது முக்கியமாகிறது.
கவலை சார்ந்த நோய்கள் மற்றும் மனநலக் குறைபாடுகள் இந்தியாவில்
எதிர்மறையாகப் பார்க்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். உளவியல்
குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உதவி கோர அல்லது இது பற்றி
வெளிப்படையாகப் பேசக்கூடத் தயங்குகின்றனர். சிகிச்சை
அளிக்கப்படாவிட்டால், மனநலக் குறைபாடு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தலாம்.
பரிவு உள்ள சமூகம் மற்றும் தனிநபர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்துள்ள
சமூகம் பல உயிர்களைக் காப்பாற்றக்கூடியது.
விஞ்ஞானிகள் இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத உறுப்பாக மூளை
இருக்கிறது. எனவே, மனித மூளை தொடர்பான எந்தத் தகவலும், உளவியல்
நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மட்டும் அல்ல, மற்ற முக்கிய இயக்கங்களைக்
கண்காணிக்கவும் உதவியாக இருக்கும்.
நன்றி: கியூரியஸ்.காம்
தமிழில்: சைபர்சிம்மன்

dhivi sha

unread,
Jun 10, 2018, 9:59:50 PM6/10/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
தென்பெண்ணை ஆறு கூறும் செய்தி!
காவிரி தண்ணீர் வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களைப் பார்த்து,
“இருக்கும் நீரை எல்லாம் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? காவிரி
வேண்டும் என்று கேட்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?” எனும்
கேள்வி எழுப்பப்படும். அந்தக் கேள்விக்கான விடையாக, “காவிரி எங்கள்
உரிமை” என்று மட்டும்தான் சொல்லப்படுகிறது. உண்மையிலேயே நாம் காவிரியைக்
கேட்கத் தகுதியுடையவர்கள்தானா?
பெய்யும் மழை நீரைச் சேகரிக்க வழிகள் ஏதும் இல்லாமல் வீணாகிறது என்று
அரசாங்கத்திற்குப் பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் பல யோசனைகள் சொன்னதையும்,
கோவையின் நீராதாரங்கள் சேமிக்கப்படாமல் அவை கேரளாவிற்கும் கடலிற்கும்
சென்று சேருகின்றன என்பதையும் பல்வேறு ஆதாரங்களுடன் இந்தப் பகுதியில்
பார்த்தோம். அவை வெறும் உதாரணங்கள்தான் என்பதுபோல அமைந்திருக்கிறது
மற்றுமொரு செய்தி.
காவிரி மட்டுமல்ல; தென்பெண்ணையும் கர்நாடகத்தை அடுத்துதான் தமிழகத்தை
வந்தடைகிறது. ஐந்து கிளை நதிகளைக் கொண்ட ஆறு இது. தமிழகத்தில்
கிருஷ்ணகிரியில் தொடங்கி கடலூர் தாழங்குடி பகுதியில் கடலில் கலக்கிறது.
ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும், இந்த ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரைத்
தடுத்துப் பாசனம் செய்யும் வசதிகள் போதிய அளவு இல்லாமல், கிட்டத்தட்ட ஏழு
டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஆற்றில் நிரம்பி வந்த நீரைத்
தேக்க வழியில்லாமல் சுமார் 32 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாகக்
கலந்தது. தற்போதைய மழை நாட்களிலும் இந்த அவலம் நீடிக்கிறது. கிருஷ்ணகிரி
தொடங்கி கடலூர் வரை இருக்கும் ஆறு மாவட்டங்களின் பல்வேறு ஊர்களும்
தென்பெண்ணை ஆற்றுப் பாசனத்தை நம்பிதான் உள்ளன. முறையான தடுப்பணைகள்
இல்லாமல், வரும் நீரைக் கடலுக்கு வார்த்துவிட்டு, நீருக்காக அண்டை
மாநிலத்திடம் மீண்டும் கைகட்டி நிற்பதை என்னவென்று சொல்வது?
-

dhivi sha

unread,
Jun 11, 2018, 10:03:04 AM6/11/18
to Valluvan Paarvai, inaiathendral
சேது ராமலிங்கம்
விவசாயிகள் வாழத் தகுதியில்லாத நாடாக மாறிவருகிறது இந்தியா. வாழ முடியாத
விவசாயிகளின் தற்கொலைகள்கூட ஆவணப்படுத்தப்படுவதில்லை.
கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகளின் தற்கொலைகளுக்குக் கணக்கே
எடுக்கப்படவில்லை என மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிர்வுகளை ஏற்படுத்தாத தற்கொலைகள்
கடந்த முப்பது ஆண்டுகளாகவே இந்திய விவசாயம் கடுமையான நெருக்கடிகளைச்
சந்தித்துவருகிறது. இதனால் மகாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், தமிழ்நாடு
உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கதையாகி
வருகின்றன.
ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் மே மாதத்தில் மட்டும் ஆறு
விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விவசாய உற்பத்திப்
பொருட்களுக்கான விலை வீழ்ச்சி அடைந்ததுதான் இதற்குக் காரணம் எனக்
கூறப்படுகிறது. ஆனால், விவசாயிகளின் இந்தத் தற்கொலைகள் எந்த
அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. விதர்பாவி்ல் தொடங்கிய தற்கொலைகள்
முடிவில்லாமல் நீடிக்கிறது. அது ஆவணப்படுத்தப்படாத அளவுக்கு அலட்சியப்
போக்கும் வளர்ந்து வருகிறது மிகவும் வேதனைக்குரிய ஒன்று.
இதுதொடர்பாக தேசியக் குற்ற ஆவணப் பதிவு அமைப்புக்கு நாடு முழுவதும்
நடைபெறுகிற விவசாயிகளின் தற்கொலைகளைப் பதிவு செய்யும் பணி
அளிக்கப்பட்டது. அந்த அமைப்பு இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும்
தற்கொலைகள் என்ற தலைப்பில் அதன் ஆண்டறிக்கையில் பதிவு செய்து
வெளியிட்டுவந்தது. 2015இல் இருந்து விவசாயிகள் தற்கொலைகள் தொடர்பான
விவரங்கள் தனியே தொகுக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
தற்கொலைகள் ஏன்?
இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகள் ஒரு தீவிர பிரச்சினைக்குரியதாகவே
இருந்து வருகின்றன. பல ஆண்டுகளாகவே ஒவ்வொரு விவசாயிகளின் தற்கொலையும்
நேரடியாகவோ அல்லது மறைமுகவோ விவசாய நெருக்கடி, பயிர்களின் தோல்வி,
திரும்பித்தராத கடன்கள், சந்தையில் பயிர்களின் விலை வீழ்ச்சி
ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தித்தான் பார்க்கப்பட்டு வருகிறது.
விவசாயத்துடன் தொடர்புபடுத்தப்படாத தற்கொலைகள் விவசாயிகளின்
தற்கொலைகளாகவே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
2016இல் குற்றப்பதிவு அமைப்பானது அதன் ஆண்டறிக்கையில் விவசாயிகளின்
தற்கொலைகளுக்கான நோக்கங்களுக்கென தனி அத்தியாயங்களை உருவாக்கியது. அதில்,
விவசாயம் தொடர்பான பிரச்சினைகளாக (மொத்த தற்கொலைகளில் 19.5 சதவிகிதம்)
திவாலாவது, கடன் சுமை (மொத்த தற்கொலைகளில் 38.7 சதவிகிதம்) வறுமை,
குடும்பப் பிரச்சினைகள், நோய்கள் மற்றும் திருமணம் தொடர்பான பிரச்சினைகள்
ஆகியவற்றினால் தற்கொலை செய்துகொள்வதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2015இல் தேசியக் குற்ற ஆவணப் பதிவு அமைப்பின் தகவலின்படி 8,007
விவசாயிகளின் 4,595 விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள் நடந்துள்ளன.
அதற்கு முந்தைய ஆண்டான 2014இல் 5,650 விவசாயிகளும் 6,710 விவசாயத்
தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
முகமற்றவர்களின் தற்கொலைகள்
இதற்குப் பின்னர் விவசாயிகளின் தற்கொலைகள் பதிவு செய்யப்படவேயில்லை.
தற்கொலைகள் பற்றி அரசிடம் எந்த ஆவணமும் இல்லை. 2016 மற்றும் 2017ஆம்
ஆண்டுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் பெருமளவில் நடந்தன. அந்தப்
போராட்டங்களில் சில விவசாயிகள் உயிரிழந்தனர். அவற்றைப் பற்றி எந்தத்
தகவலும் பதிவு செய்யப்படவில்லை.
2016இல் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த தகவல்கள் தொகுக்கப்படவில்லை என
அதே ஆண்டில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வில் மத்திய அரசின் உள் துறை
ஒப்புக்கொண்டது. இரண்டு நாட்கள் கழித்து, ‘தேசியக் குற்ற ஆவணப் பதிவு
அமைப்பின் தற்காலிக அறிக்கை 2016’இல் 6,351 விவசாயிகளும் 5,019 விவசாயத்
தொழிலாளர்களும் தற்கொலை செய்துகொண்டனர் என்று கூறியது. அந்த அறிக்கையில்
விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களுக்குத் தனி அத்தியாயமும் இல்லை.
தேசிய விவசாயிகளின் தற்கொலைகள் ஏன் பதிவு செய்யப்படவில்லை என்ற
கேள்விக்கு மாநில அரசுகள் அந்த விவரங்களைத் தரவில்லை என்று தேசியக் குற்ற
ஆவணப் பதிவு அமைப்பு பதில் கூறியுள்ளது.
நகரங்களின் மனசாட்சி
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் தற்கொலைகள் தொடர்ந்துகொண்டே
இருக்கின்றன. இந்தத் தற்கொலைகள் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தொடர்ந்து
நடந்துகொண்டே இருப்பது நகரங்களின் மனசாட்சியையோ அல்லது அவற்றின்
இயக்கத்தையோ பாதிப்பதில்லை. அரசும் கண்டுகொள்ளவில்லை. பிரதமருக்கோ
விவசாயிகளிடம் பேசவே நேரமில்லை.
பெரும்பாலான விவசாயிகள் வெளி உலகமே தெரியாத அப்பாவிகளாக உள்ளனர்.
விவசாயிகளுக்கு விவசாயத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது. அவர்களுடைய ஒரே
உலகமான விவசாயம் அழியும்போது அவர்களும் தங்களைத்தானே
அழித்துக்கொள்கிறார்கள். விவசாயிகள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான
செலவுக் கணக்காக மாறி விட்டார்களா? உலகமயமாக்கலின் போக்கில் அவர்கள்
செலவழிக்கப்பட வேண்டியவர்களா? இதுவும் கடந்து போகக்கூடிய எண்ணிக்கை
கணக்கு மட்டும்தானா?
*

dhivi sha

unread,
Jun 11, 2018, 9:39:50 PM6/11/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
தூய்மை இந்தியாவை நோக்கிய பயணம்
கரூர் மாநகராட்சி முன்னெடுத்த, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு
போடப்பட்ட சாலைகள், இந்தியாவிலேயே முதல் முயற்சியாகப் பாராட்டப்பட்டது.
குப்பை மேலாண்மையில் இது முதல் மைல் கல்லாகப் பார்க்கப்பட்டது. தற்போது
கும்பகோணம் நகராட்சியும் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
23 ஆண்டுகளாகக் கிட்டத்தட்ட 25 ஏக்கர் பரப்பளவில் கும்பகோணம்
நகராட்சியின் குப்பைகள் கொட்டப்பட்டுவந்தன. இதில் 10 ஏக்கர் பரப்பளவில்
மலைபோலக் குவிந்திருந்த 2 லட்சம் டன் குப்பைகள், வெறும் மூன்று
ஆண்டுகளில் மறு சுழற்சிக்கு அனுப்பப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றுள் மட்கும் மண் மற்றும் குப்பைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு விவசாய
நிலங்களுக்கு உரமாக வழங்கப்பட்டன. மட்காத பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக்
பாட்டில்கள், பிற பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் ஃபாயில், ரப்பர், டயர்
இரும்பு போன்ற பொருட்கள் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டன. தேங்காய்
சிரட்டைகள், மரத்துகள்கள், சாக்குகள் மற்றும் இன்ன பிற பொருட்கள்
எரிபொருள் தேவைக்காக ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டன.
இந்தத் தரம் பிரிக்கும் பணிகள் யாவும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுதான்
செய்யப்பட்டன. மறுசுழற்சி செய்யப்படும் குப்பைகளுக்கென மிகப் பெரிய சந்தை
உள்ளது. திருச்சியிலும் தனியார் நிறுவன ஒப்பந்தத்துடன்தான் குப்பை
பிரித்தாளும் பணிகள் நடைபெறுகின்றன. வேலையில்லாத இளைஞர்கள் பலரும் இந்த
‘வேஸ்ட் மேனேஜ்மெண்ட்’ என்பதைத் தங்கள் தொழிலாக
ஆக்கிக்கொண்டுவருகின்றனர்.
இந்த நகராட்சியில் சாத்தியமானது, எல்லா மாநகராட்சிகளிலும் மாநிலங்களிலும்
நடந்தால் உண்மையான தூய்மை இந்தியாவை நோக்கிய பயணமாக அது அமையும்.
- நரேஷ்

dhivi sha

unread,
Jun 11, 2018, 9:47:09 PM6/11/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்!
சேது ராமலிங்கம்
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின (ஜூன் 12) கட்டுரை
ஒவ்வொரு நாளும் காலையில் கதவைத் திறந்தால் நாளிதழ்களும் பால்
பாக்கெட்டுகளும் வந்து விழுகின்றன.
தெருவோரத்திலிருக்கும் சேட்டன் டீக்கடைக்குச் சென்றாலும், அண்ணாச்சிக்
கடைக்குச் சென்றாலும் உங்களை வரவேற்பது யாராவது ஒரு சிறுவனாக இருப்பான்.
உணவகத்தில் நீங்கள் சாப்பிட்ட பின்னர் இலையை எடுப்பது ஒரு சிறுமியாக
இருப்பாள்.
உங்கள் டூவீலர் பஞ்சரானாலும், பழுதானாலும் முதலில் அதைக் கவனிப்பது
பிஞ்சுக் கரங்களாகத்தான் இருக்கும்.
இப்படி உங்களின் நாட்களை அழகாக நகர்த்திக்கொண்டு தங்களின் நாட்களை
அழித்துக்கொண்டிருப்பது குழந்தைத் தொழிலாளர்கள்தான்.
அதிகபட்சமாக நாள்தோறும் நீங்கள் அவர்களை எதிர்கொள்வது சில
மணித்துளிகள்தான். ஆனால், அவர்களோ மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் ஒரே
வேலையை எந்த அலுப்புமின்றி செய்துகொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு 8 மணி நேரப் பணி என்றும் இருந்ததில்லை. கடை திறந்ததிலிருந்து
மூடும்வரை, ஓய்வின்றி உழைக்க வேண்டும். மிகக் குறைவான கூலியே
அளிக்கப்படும்.
இப்படி எந்தச் சட்ட விதிகளிலும் அடங்காத கொடூரமான சுரண்டல் முறைதான்
குழந்தைத் தொழிலாளர் முறை.
சிதைக்கப்படும் ஆளுமை
குழந்தைத் தொழிலாளர் முறை குழந்தைத் தன்மையை அழிப்பது மட்டுமின்றி
அவர்களைக் கல்வி கற்க விடாமல் தடுத்து, அவர்களின் எதிர்காலத்தைச்
சூறையாடிவிடுகிறது. கல்வி இன்றி, சத்துணவின்றி, விளையாட்டின்றி, அன்போ,
பாசமோ இன்றி எந்நேரமும் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுத்தப்படும் ஒரு
குழந்தையின் ஆளுமை எப்படி ஆரோக்கியமானதாக வளர முடியும்? ஈவு இரக்கமின்றி
இளங்குருத்திலேயே மனித வாழ்வை நசுக்குவதுதான் குழந்தைத் தொழிலாளர் முறை.
விவசாயச் சமூகத்தில் பண்ணைகளின் விவசாய வேலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள்
ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள். பின்னர், தொழிற்புரட்சி தொடங்கியதிலிருந்து
பன்மடங்கான வேலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
குழந்தைகள் செய்யும் வேலைகள்
தீப்பெட்டிக் குச்சிகளை அடுக்குவதிலிருந்து கணிப்பொறியின் சிப்புகளை
அடுக்குவது வரை, பல்வேறு வேதியப் பொருட்களையும் சாயங்களையும் அளவோடு
லாகவமாகக் கலப்பது, முறுக்கு பிழிவது, பூந்தியைச் சிதறாமல் இனிப்புகளின்
மீது தூவிவிடுவது, சிறு வெடிகளில் கந்தகத்தையும் வெடி மருந்துகளையும்
வீணாக்காமல் நிரப்புவது, சிறு பேட்டரிகளை அடுக்குவது, அவற்றின்
கழிவுகளிலிருந்து பொருட்களைப் பிரித்தெடுப்பது, நெய்த பஞ்சு இழைகளைக்
கோனில் சுற்றுவது போன்ற நுட்பமான வேலைகளுக்கு நளினமான மென்மையான சிறிய
விரல்கள் வேண்டும். அதற்குக் குழந்தைகள்தான் தேவைப்பட்டார்கள்.
ஒரே வேலையைப் பல மணி நேரம் செய்யவைப்பது, அவர்களுக்கு அலுப்புத்தட்டாமல்
இருக்க சினிமா பாடல்கள், ஜோக்குகளை ஒலிபரப்பச் செய்வது (தங்களுக்கிடையே
பேசி அரட்டை அடிப்பதைத் தடுத்து, பேசாமல் அவர்களை வேலை செய்ய வைக்கும்
நோக்கமும் இதில் இருக்கிறது) அவர்களுக்குப் பிடித்த இனிப்புத்
தின்பண்டங்களைக் கொடுப்பது போன்றவற்றின் மூலம் 10இலிருந்து 12 மணிநேரம்
வரை வேலை வாங்குவது வழக்கம். குழந்தைகளைத் தொழிலாளர்களாக
அமர்த்தினால்தான் இதெல்லாம் சாத்தியம் என்பதைக் கண்டுகொண்டது முதலாளியம்.
தனது லாப வெறிக்குக் குழந்தைகளைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டது.
குழந்தைகளின் குழந்தைப் பருவத்தையும் மகிழ்ச்சியையும் கல்வியையும்
எதிர்காலத்தையும் சிதைக்கும் இந்த அமைப்பு முறை இனியும் தொடர்கிறது.
இந்தியாவின் நிலை
ஐநாவின் யுனிசெஃப் அமைப்பின் ஆய்வுப்படி உலகம் முழுவதும் 250 மில்லியன்
குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியாவில் 2011 மக்கள்தொகைக்
கணக்கெடுப்பின்படி 33 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில்
80 விழுக்காட்டினர் தலித் குழந்தைகள். 20 விழுக்காட்டினர்
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள். இவர்கள் சாதி சார்ந்த
பாரம்பரியத் தொழில்களில்தான் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகமான (8,96,301) குழந்தைத்
தொழிலாளர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து பிகார் (4,51,590), ஆந்திரா
(4,04,851), ராஜஸ்தான் (2,52,338), தமிழகம் (1,51,431) ஆகிய மாநிலங்களில்
அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் கேரளாவில் குழந்தைத்
தொழிலாளர்களில் 83 விழுக்காடு அடிப்படைக் கல்வியறிவு பெற்றவர்கள்.
தமிழகத்தில் 81.3 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்களும் கல்வியறிவு
பெற்றவர்களே.
உலக அளவில் அபாயகரமான தொழில்களில் மட்டுமின்றி பாலியல் தொழில்களிலும்
அதிகமாகக் குழந்தைகளே ஈடுபடுத்தப்படுகின்றனர். உலக அளவில் ஒவ்வோர்
ஆண்டும் 20 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக விற்கப்படுகின்றனர்.
ஐநாவின் உடன்பாடு
குழந்தைத் தொழிலாளர்களின் பிரச்சினையை உணர்ந்த ஐநா குழந்தைகளின் உரிமைகள்
உடன்பாட்டில் (Convention on Child Rights -- CRC) இதை ஒழிப்பதை முக்கிய
அம்சமாகக் கொண்டது. இந்தியா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு முழுமையாக
நடைமுறைப்படுத்துவதாக ஏற்புறுதி (Ratification) செய்யவில்லை. குழந்தையின்
வயது விஷயத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக விதிவிலக்கு
பெற்றுக்கொண்டது. அதாவது ஐநாவின் ‘சிஆர்சி’யின்படி குழந்தையின் வயது
என்பது 0-18 வரை வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தையின் வயது
0-14 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இது எந்த அறிவியல் அடிப்படையும் அற்றது.
இங்கிருந்தே பிரச்சினை தொடங்குகிறது.
இந்தியாவின் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டமும் 14
வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தக் கூடாது என்று
கூறியுள்ளது. திருமணச் சட்டம் நீங்கலாக அனைத்துச் சட்டங்களும் 14-18 வயது
வரை உள்ளவர்களை குழந்தைகளாகக் கருதுவதில்லை. அவர்களை வயது வந்தவர்களாகவே
கருதுகின்றன. ஆனால், சொத்துரிமையில் மட்டும் 21 வயதைத்தான்
சொத்துரிமைக்கான வயதாகச் சட்டம் அங்கீகரிக்கிறது.
குலத்தொழில் முறைக்குத் திரும்புகிறதா?
தற்போது இந்தியாவின் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம்
திருத்தப்பட்டு, 14 வயதிற்குட்பட்டவர்கள் குடும்பம் சார்ந்த
தொழில்களிலும் பொழுதுபோக்குத் தொழில்களிலும் (சர்க்கஸ் போன்றவை நீங்கலாக)
ஈடுபடலாம் என்று திருத்தப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் அபாயகரமான
தொழில்கள் 83ஆகப் பட்டியலிடப்பட்டிருந்தன. அவை குறைக்கப்பட்டன.
குழந்தைகளைப் படிக்கவிடாமல் தடுத்து அவர்களைக் குடும்பத் தொழில் என்ற
பெயரில் குலத் தொழிலுக்கு கொண்டுவரக்கூடிய சாத்தியத்தைக்
கொண்டிருப்பதுதான் திருத்தப்பட்ட சட்டத்தில் உள்ள அபாயம். இது வருணாசிரம
முறையை நிலைநிறுத்துவதற்கான முயற்சி என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
குழந்தைகள் இனி படிக்கவே முடியாத நிலையை இந்தத் திருத்தம்
ஏற்படுத்திவிடும் என்றும் அஞ்சப்படுகிறது.
குழந்தைகளின் பணியை ஆதாரமாகக் கொண்ட துறைகளும் தொழில்களும் குழந்தைமையைச்
சிதைத்து அவர்கள் எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிடக்கூடியவை. ஒரு
சில குழந்தைகளுக்கு மட்டும் குழந்தைப் பருவமும் கல்வி வாய்ப்பும் இதன்
மூலம் மறுக்கப்படுகின்றன. இது சமத்துவத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.
குழந்தைகளின் எதிர்காலம் பாழாவது என்பது ஒரு நாட்டின் எதிர்காலத்தைப்
பாழடிப்பதுதான் என்பதைப் புரிந்துகொண்டு அதைத் தவிர்க்கும் வகையில்
அரசுகளும் தொழில் துறையும் பெற்றோரும் செயல்பட வேண்டும்.

dhivi sha

unread,
Jun 11, 2018, 9:55:06 PM6/11/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: அழியும் பனையால் அழியும் பயன்கள்!
கேத்தரீன் கிலான்
அப்போது நேரம் சரியாக 6 மணி இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தின்
நரசிங்கனூரில் இருந்தோம். இடுப்பில் ஒரு வார் கட்டி பனை மரத்தில் ஒருவர்
ஏறிக் கொண்டிருந்தார். இந்த வாரைப் பயன்படுத்தி மிக விரைவாக மரத்தின்
மேற்பகுதியை அவர் அடைந்துவிட்டார். அவருடைய பெயர் பாண்டியன் தேவசகாயம்.
அவருக்கு வயது 38. முந்தைய முறை மரத்தில் ஏறிக் கட்டியிருந்த பானைக்குள்
இருக்கும் பனங்குருத்தை மீண்டும் சீவி பானைக்குள் வைத்தார். இந்தக்
குருத்திலிருந்து பால் வடிய ஒரு நாளைக்கு மூன்று முறை இவ்வாறு மரத்தில்
ஏறிச் சீவி விட வேண்டும்.
ஒரு கோப்பை கள்ளுடன் நம்மிடம் அவரது வாழ்க்கையைப் பற்றிப் பேசத்
தொடங்கினார். நம்மாழ்வாரின் வானகம் சூழலியல் அறக்கட்டளையில் இயற்கை
விவசாயம் குறித்து இவர் பயிற்சி பெற்றுள்ளார். இதற்கு முன்பிருந்தே பனை
மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். "எங்களது குடும்பத்தினர் தலைமுறை
தலைமுறையாக மரம் ஏறும் தொழில் செய்து வந்தனர். என்னுடைய தந்தை என்னை
இத்தொழில் செய்ய வேண்டாம் என்று கூறினார். இந்தத் தொழில் மிகவும்
கடுமையானது என்பதால் அவர் வேண்டாமென்றார். ஆனால், மரம் ஏறும் தொழில்
என்னை ஈர்த்துவிட்டது" என்கிறார் தேவசகாயம்.
தூத்துக்குடியில் உள்ள பண்டாரவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெனித்.
இவருக்கு வயது 21. இவரும் இதே கடுமையான தொழிலில்தான் ஈடுபட்டு வருகிறார்.
"பனைமரம் எனக்கான பாதையை உருவாக்கி என்னை அதில் இணைத்துள்ளது. நான்
இதிலிருந்து வெளியேற மாட்டேன். இத்தொழிலில் இருந்தால் யாரும் எளிதில்
பெண் கூடத் தர மாட்டார்கள்" என்கிறார் அவர்.
காவல் துறையின் கெடுபிடிகள் மரம் ஏறுபவர்களுக்கு இருந்துகொண்டே
இருக்கிறது. இதனால் மரம் ஏறுபவர்களின் எண்ணிக்கையும், மரங்களின்
எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தமிழ்நாடு பனை பொருட்கள் உற்பத்தி
மேம்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி தமிழ்நாட்டில் 5.1 கோடி பனை
மரங்கள் உள்ளன. ஆனால், இப்போது லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு
செங்கல் சூளைகளுக்கும், ஆலைகளுக்கும் அறுத்து அனுப்பப்படுகின்றன. மரம்
ஒன்றின் விலை மிகவும் குறைவாக 100 ரூபாய் அளவில் கூட விற்கப்படுகிறது
என்கிறார் தேவசகாயம்.
பனை உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டால் பனை மரம் ஏறும்
தொழிலாளர்களின் வாழ்வும் சிறக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது
நயம்பாடி கிராமம். இந்தக் கிராமத்தில் இரண்டு பனைத் தோட்டங்கள் உள்ளன.
இந்தத் தோட்டங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன. இந்த
மரங்கள் யாவும் கிராமத்தின் பொது நிலங்களில் உள்ளன. "முப்பது
வருடங்களுக்கு முன்பு பனை மரங்களைக் குத்தகைக்கு விடுவர். இதில் மரம்
ஏறுபவர்கள் பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்வர்" என்கிறார் ஓய்வு
பெற்ற தலைமை ஆசிரியர் ஜி.கிருஷ்ணன்.
கிராம கவுன்சிலின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மரத்தைக் கூட வெட்ட இயலாது.
ஆனால், அது பனை மரத்துக்கு மட்டும் பொருத்தமற்றதாகி விட்டது. மக்கள்
இப்போது மெதுவாகப் பனை மரங்களை வெட்டத் தொடங்கிவிட்டனர். "முன்பெல்லாம்
எங்கள் கிராமத்தில் பனை மரங்கள் நிறைந்திருந்தன. ஆனால், இப்போது அதற்கான
தடயம் கூட இல்லை" என்கிறார் கிருஷ்ணன்.
"பனை மரங்கள் யாவும் விளைநிலங்களைச் சுற்றி வேலிகள் போல சூழ்ந்திருந்தன.
அப்போதெல்லாம் நான் அதன்மீது எந்தக் கவனத்தையும் செலுத்தவில்லை"
என்கிறார் தேவசகாயம். ஆனால் அதற்குப் பின்னர் வெள்ளம் மற்றும் வறட்சியால்
தொடர்ந்து இவர் பயிர்களை இழந்துள்ளார். பிறகு சிதம்பரத்தில் நடந்த பனை
மரம் குறித்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதற்குப் பிறகு நண்பரின்
உதவியுடன் தனது வயலில் பனை மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கினார். இப்போது
இந்தப் பனை மரங்களில் பானங்கள், பனை வெல்லம், பொம்மைகள் மற்றும்
பென்சில்கள் தயாரிப்பில் இவர் ஈடுபட்டு வருகிறார். "கடுமையான
காலநிலைகளிலும் பனை மரங்கள் தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டதாக
இருப்பதால் மாற்று வருவாய்க்கான மூலதனமாகப் பனை மரம் இருக்கிறது"
என்கிறார் தேவசகாயம்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு
வயது 43. இவர் சூழலியல் செயற்பாட்டாளராகவும் உள்ளார். பனை மரம் வளர்ப்பு
குறித்தும், பனை மரத்தின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கும்
பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார். பனை மரத் தயாரிப்பு பொருட்களின் நன்மைகளை
விளக்குவதுதான் பனை மரத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழி என்றும் அவர்
கூறுகிறார். "முன்பெல்லாம் வெள்ளைச் சர்க்கரை பயன்பாடு மிகவும்
குறைவாகத்தான் இருந்துள்ளது. பனை வெல்லத்தைத்தான் அதிகம் பயன்படுத்தி
வந்துள்ளனர். வெள்ளை சர்க்கரைதான், சர்க்கரை நோய்க்கு முக்கியக் காரணமாக
உள்ளது" என்று கூறும் தண்டபாணி சர்க்கரை நோயாளிகள் பனை வெல்லத்தை
மீண்டும் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார்.
மேலும் இவர் கூறுகையில், ”பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் நீரா பானம்
ஊட்டச்சத்து மிக்க பானம். நீரா பானம், வெல்லம் குறித்து பள்ளி பாடத்
திட்டங்களில் இணைத்தும், ஆவணப்படங்கள் உருவாக்கியும், நட்சத்திரங்கள்
மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியையும் நாம் செய்ய வேண்டியுள்ளது"
என்கிறார்.
கள் இறக்கத் தமிழ்நாடு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென்றும்
தண்டபாணி அரசுக்குக் கோரிக்கை வைக்கிறார். கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள
தடையை நீக்கினால் பனை மரம் ஏறுபவர்கள் பொருளாதார ரீதியாகப் பயனடைவார்கள்
என்றும் இவர் கூறுகிறார். "சிகரெட்டுகள், மதுபானங்கள் விற்க எந்தத்
தடையும் இல்லை. ஆனால், கள் இறக்க மட்டும் எதற்கு ஒழுங்குமுறை விதிகள்?
கள் எங்களுடைய உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதி" என்கிறார் தண்டபாணி.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.சத்யா. இவருக்கு வயது 63. இவர்
கிராமப்புற வேலைகளுக்கான மேம்பாட்டுச் சங்கத்தின் இயக்குநராக உள்ளார்.
இது ஒரு தனியார் தொண்டு நிறுவனமாகும். இவரும் தண்டபாணியுடைய
கோரிக்கையுடன் இசைகிறார். "பனைமரக் கள்ளில் வெறும் 4.1 விழுக்காடுதான்
ஆல்கஹால் உள்ளது. ஆனால், அரசு நடத்தும் மதுபானக் கடைகளில் விற்கப்படும்
மது வகைகளில் 48.5 விழுக்காடு ஆல்கஹால் கலந்துள்ளது" என்கிறார் இவர்.
பனை மர ஊழியர்கள் சங்கத்தின் கூட்டம் ஒன்று ஏப்ரல் மாதத்தில்
ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கான அனுமதி பல்வேறு
நிபந்தனைகளுடன்தான் அரசால் அளிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாகப் பனை
மரங்கள் வெட்டப்பட்டு விற்கப்படுவதைத் தடை செய்ய வேண்டுமெனவும், நீர்
ஆதாரங்கள் உள்ள பகுதிகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் பனை மரங்களை
அதிகமாக நட்டு வளர்க்க வேண்டுமெனவும் இவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அதுமட்டுமின்றி 60 வயதுக்கு மேற்பட்ட பனை மர ஊழியர்களுக்கு ஓய்வூதியம்
அளிக்க வேண்டுமெனவும், பனை மர ஊழியர்களை அங்கீகரிக்க வேண்டுமெனவும்
கோரிக்கை வைத்துள்ளனர்.
பனை மரம் ஏறுபவர்களும், சூழலியல் ஆர்வலர்களும் பனை மரங்களைப் பாதுகாக்க
வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ரகுநாத பூபதி என்ற இளைய தலைமுறை
பொறியாளர் ஒருவர் ’பனைகள் கோடி’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை மரங்களை நடுவதுதான் எங்கள் இலக்கு என்றும்
அவர் கூறுகிறார்.
இவர் மேலும் கூறுகையில், "மரங்கள் நடுவதை ஒரு சமூகத் தொண்டின்
தொடக்கமாகத்தான் செய்து வருகிறோம். கடினமான கால நிலைகளைத் தாங்கும்
மரமாகப் பனை மரம் உள்ளது. பனைகள் கோடி அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள்
கடந்த ஓர் ஆண்டில் சில லட்சம் மரக் கன்றுகளை தமிழ்நாட்டின் எட்டு
மாவட்டங்களில் நட்டுள்ளனர். மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் நீர்
நிலைகளுக்கு அருகில் இந்த மரக் கன்றுகளை நட்டுள்ளோம்" என்கிறார் அவர்.
மீண்டும் காடுகளை உருவாக்குவதற்குப் பனை மரங்களை நாடுவதுதான் சிறந்த
முயற்சி என்று கூறுகிறார் நரசிம்மன். இவர் ஓய்வு பெற்ற தாவரவியல்
பேராசிரியர். "வறட்சியை எதிர்கொள்ளும் மரமாகப் பனை மரம் உள்ளது.
முன்னோர்கள் ஏரிக் கரைகளிலும், வயல்வெளிகளை ஒட்டியும் பனை மரங்களை நட்டு
வளர்த்தனர். இதன்மூலம் மண் அரிப்பைத் தடுத்தனர். சூறாவளிகளிலும் தாங்கி
நிற்கும் மரமாகப் பனை மரங்கள் இருந்தன" என்கிறார் நரசிம்மன்.
"பனை மரத்தின் எல்லாப் பொருட்களும் பயனுடையதுதான். பனை மரத்தின்
வேரிலிருந்து இலைகள் வரை உள்ள பொருட்களைக் கொண்டு 80க்கும் மேற்பட்ட
உணவுப் பொருட்களைத் தயார் செய்யலாம். நூற்றுக்கணக்கான கைவினைப்
பொருட்களைத் தயார் செய்யலாம். பிளாஸ்டிக்குக்கு நிலையான மாற்றாகப் பனை
பொருட்கள் இருக்கும்" என்கிறார் பூபதி. முகநூல் மூலம் பனை பொருட்களின்
பயன்களை ஊக்குவித்து, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில்
சென்னையில் பனை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் சாமிநாதன்.
இவர் இதற்காக ’செம்மை என்ற தன்னார்வ அமைப்பையும் செயல்படுத்தி வருகிறார்.
'கருப்பட்டி காய்ச்சுவோம்' என்ற புதுமையான முழக்கத்தை முன்வைத்து
நகரங்களை நோக்கி இதன் விற்பனையையும், சந்தையும் நகர்த்தி வருகிறார் இவர்.
இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் கருப்பட்டி உள்ளிட்ட பனை
பொருட்கள் விற்பனையில் இளைஞர்களைச் சாமிநாதன் ஊக்குவித்து வருகிறார்.
"கோவாவில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பிறகு பனை பொருட்களின் பயன்பாடு
அங்கு அதிகரித்திருக்கிறது. நாங்களும் இங்கு கோயில்களில் பிளாஸ்டிக்
கூடைகளுக்குப் பதிலாக பனை பொருட்களால் செய்யப்பட்ட கூடைகள் பயன்பாட்டைக்
கொண்டுவர முயற்சித்து வருகிறோம்" என்கிறார் சாமிநாதன்.
அண்டை மாநிலங்களான கேரளாவிலும், ஆந்திராவிலும் சட்டப் பூர்வமாக கள் இறக்க
அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற வருவாயை உயர்த்தப்
பயன்படுகிறது என்கிறார் சத்யா. இங்கு அண்டை கிராமங்களில் கள் இறக்கக்
காவல் துறை ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வாரம் ஒன்றுக்குக் கேட்கிறது
என்கிறார் தண்டபாணி. "கம்போடியாவைப் போல நாம் பனை மரத்தை முழுவதுமாக
பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் நாம் தொழில் துறை பொருளாதாரத்தை
மட்டும்தான் பார்க்கிறோமே தவிர, கிராமப்புற பொருளாதாரத்தை
பார்ப்பதேயில்லை" என்கிறார் நரசிம்மன்.
பனை மரப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக இதுவரை 150 பேருக்கு
பயிற்சியளித்துள்ளார் கணபதி. பேருந்து ஓட்டுநர்களுக்கான இருக்கைகள், தரை
சுத்தம் செய்யும் பிரஷ்கள், கைத்தடிகள் போன்றவற்றை இவர் தயாரித்து
வருகிறார். அண்மைக்காலமாக இயற்கை உணவுப் பொருட்களுக்குத் தேவை அதிகரித்து
வருகிறது. நாங்கள் ஒரு கிலோ பனை வெல்லத்தைக் கிலோ ஒன்றுக்கு 340
ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம் என்று கணபதி கூறுகிறார்.
ஒருவேளை அரசாங்கம் பனை வெல்ல உணவுகளைப் பள்ளி மதிய உணவுத் திட்டத்தில்
சேர்த்தால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதோடு, இத்துறைக்கும்
பயனளிக்கும் என்கிறார் முருகேசன். இவரும் பனை மரம் ஏறும் தொழில் செய்து
வருகிறார். இவருடன் இணைந்து மரம் ஏறும் சண்முகம் கூறுகையில், "அரசாங்கம்
பொது விநியோகத் திட்டத்தில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைச்
சேர்த்தால் எங்களுக்குப் பயனளிப்பதோடு கிராமப்புற வருவாயும் உயரும்"
என்கிறார்.
நன்றி: வில்லேஜ் ஸ்கொயர்
தமிழில்: பிரகாசு

Palaniappan kandasamy

unread,
Jun 12, 2018, 10:41:56 AM6/12/18
to brail...@googlegroups.com
ப்ரச்சனைகளை சொல்லுவதாலோ புள்ளிவிவரங்களை எடுத்துரைப்பதாலோ குழந்தை தொழிலாளர் முறளையை ஒழிக்கமுடியாநு என்பது வெள்ளிடைமலை. சில ஆண்டுகளுக்குமுன் குழந்தை தொழிலாளர்களை கொண்டு நெய்யப்பட்ட காஷ்மீர் கம்பல ஆடைகளை வாங்குவதில்லையென மேலைநாடுகள் புரக்கணித்த்தாக கேள்விப்பட்டேன். குழந்தை தொழிலாளர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொருள்களை வாங்குவதில்லையென முதிவெடுத்து செயல்படுத்தும் துணிவிருக்கிறதா நம்மிடம்? குழந்தைகளை வேலைக்கனுப்பும் பெற்றோரையும் குழந்தைகளை பணியமர்த்தும் முதலாளிகளையும் தண்டிக்கவேண்டும் யாரால் எப்போது முடியுமோ அப்போது குழந்தை தொழிலாளர் முறை முடிவுக்குவரும். பகிர்வுக்கு நன்றி. வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
கந்த பழனியப்பன் கோவை 4.

-----Original Message-----
From: brail...@googlegroups.com [mailto:brail...@googlegroups.com] On Behalf Of dhivi sha
Sent: 12 ஜூன் 2018 07:17
To: Valluvan Paarvai
Cc: inaiathendral
Subject: [Braille Acl] மின்னம்பலம்

--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


dhivi sha

unread,
Jun 12, 2018, 9:41:53 PM6/12/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
நீர் மேலாண்மையில் தடுமாறும் தமிழகம்!
குப்பை மேலாண்மையில் தமிழகம் முன்னுதாரணமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது
என்று நேற்று பார்த்தோம். ஆனால், நீர் மேலாண்மையைப் பொறுத்தவரை தமிழகம்
மிகவும் தடுமாறுகிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. மத்திய
நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ள கணிப்புகள் அதற்கான ஆதாரமாக உள்ளன.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கண்காணிப்புக் கிணறுகள் அமைத்து நிலத்தடி
நீர்மட்டம் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தது மத்திய நிலத்தடி நீர்மட்ட
வாரியம். சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் ஆய்வறிக்கையில், நிலத்தடி நீரை
அதிகமாக உறிஞ்சும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடம் பிடித்திருக்கிறது.
தமிழகத்திற்கு அடுத்து பஞ்சாப்பும் ஆந்திராவும் முறையே 2ஆவது, 3ஆவது
இடங்களைப் பிடித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள 526 கண்காணிப்புக்
கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. அதைக் கடந்த
ஆண்டுகளின் ஆய்வறிக்கைகளோடு ஒப்பிட்டுப் பார்த்ததில், தமிழகத்தில் உள்ள
87 சதவிகிதக் கண்காணிப்புக் கிணறுகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது
தெரியவந்துள்ளது.
நிலத்தடி நீர் குறைந்துவரும் விகிதம் அதிகமாகிக்கொண்டுவருவதும்
தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பகுதியினர்
விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நிலத்தடி நீரை நம்பியுள்ள நிலையில்,
இந்தச் செய்தி நாம் எவ்வளவு ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதைப் படம்
போட்டுக் காட்டியுள்ளது.
- நரேஷ்

dhivi sha

unread,
Jun 12, 2018, 9:45:08 PM6/12/18
to Valluvan Paarvai, inaiathendral
நைட்ரஜன் பற்றி அறிவோமா?
தினப் பெட்டகம் – 10 (13.06.2018)
ஆக்ஸிஜன் பற்றிக் கடந்த மாதம் பார்த்தோம். இப்போது ஆக்ஸிஜன் போலவே
முக்கியமான மற்றொரு தனிமமான நைட்ரஜன் பற்றிப் பார்க்கலாம்.
1. சாதாரணமான சூழலில் நைட்ரஜன் வாயுவிற்கு நிறம், மணம், சுவை கிடையாது.
2. நாம் சுவாசிக்கும் காற்றில் 78% நைட்ரஜன் உள்ளது.
3. உலகில் உள்ள அனைத்து உயிரிகளின் உடலிலும் நைட்ரஜன் இருக்கிறது.
DNAவின் மூலக்கூறு நைட்ரஜன்தான்.
4. சனிக் கோளின் (Saturn) மிகப் பெரிய நிலவான ‘டைட்டான்’ 98% நைட்ரஜனால்
ஆனது. நம் சூரியக் குடும்பத்தில் இருக்கும் அடர்த்தியான சூழல் கொண்ட ஒரே
நிலவு அதுதான்.
5. பூமியில் 78% நைட்ரஜனும், செவ்வாயில் 2.6% நைட்ரஜனும் இருக்கிறது.
6. நைட்ரஸ் ஆக்ஸைட் சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் பசுமை இல்ல வாயு. இது
கரியமில வாயுவைவிட 300 மடங்கு அதிகம் மாசுபடுத்தக்கூடியது.
7. பிரபஞ்சத்திலேயே அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் ஏழாவது இடத்தில்
நைட்ரஜன் இருக்கிறது.
8. நைட்ரஜனை ஐஸ்கட்டி போல உறைந்துபோக வைத்துவிடலாம். உறைந்து போன
நைட்ரஜன் பனியைப் போல இருக்கும்.
9. நம் உடலில் 3% நைட்ரஜன் இருக்கிறது.
10. ஸ்டீல் தயாரிப்பில் முக்கியமான பங்கு நைட்ரஜனுக்கு இருக்கிறது.
- ஆஸிஃபா

dhivi sha

unread,
Jun 13, 2018, 11:33:29 AM6/13/18
to Valluvan Paarvai, inaiathendral
உலகின் அதிவேக கணினி!
உலகின் வேகமான கணினியைக் கொண்ட நாடு என்ற பெருமை தற்போது அமெரிக்காவுக்கு
கிடைத்துள்ளது. கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பில்
முன்னணி நிறுவனங்களான ஐபிஎம் மற்றும் என்விடியா இணைந்து இந்த அதிவேக
சூப்பர் கணினியை வடிவமைத்துள்ளது.
`சம்மிட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் கணினியை அமெரிக்க ஆற்றல்
துறையின் கீழ் (US Department of Energy) இயங்கிவரும் Oak Ridge National
Laboratory நிறுவனம் கடந்த வெள்ளியன்று (ஜூன் 8) வெளியிட்டுள்ளது.
ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கின்னி ரோமெட்டி சிஎன்பிசி
ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "எங்களது மிகப்பெரும் சாதனையில் இதுவும்
ஒன்று. உலகின் மிக விரைவான மற்றும் புத்திசாலியான சூப்பர் கணினி
இதுவாகும். இதனை உருவாக்க நான்கு ஆண்டு காலம் ஆயிற்று. அமெரிக்காவின்
முந்தைய அதிவேக கணினியான டைட்டனை விட எட்டு மடங்கு அதிக திறன் கொண்டது
இந்த சம்மிட்" என்று கூறியுள்ளார்.
இந்த சூப்பர் கணினி, 37ஆயிரம் பிராசசர்களைக் கொண்டு
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைக் குளிர்விக்க ஒரு நிமிடத்திற்கு 4000 கலூன்
அளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது. இந்திய அளவீடுகளின் படி சுமார் 15
ஆயிரம் லிட்டர்கள். மேலும் இது ஒரு நொடிக்கு 200 குவாட்ரில்லியன்
கணக்கீடுகளைச் செய்யும் திறன் வாய்ந்தது. (குவாட்ரில்லியன் என்றால் என்ன
என்பதைக் கூகுளில் தேடித் பார்த்தல் சற்று தலைசுற்றியது. 200ஐ தொடந்து 15
பூஜ்யங்கள் கொண்ட இலக்கம்.)
ஒரு நொடிக்கு ஒரு கணக்கீட்டை செய்யும் மனிதன், சம்மிட்டின் ஒரு நொடி
வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் அவர் குறைந்தது ஆறு பில்லியன்
வருடங்கள் உயிர்வாழ வேண்டும். இது சீனாவின் முந்தைய அதிவேக கணினியின்
வேகத்தை விட இரண்டு மடங்கு வேகமாகும். இந்தக் கணினியின் சர்வர்களின்
(servers house) அளவு இரண்டு டென்னிஸ் கோர்ட்டின் அளவிற்குச் சமமானது.
குறிப்பு: சூப்பர் கணினிகள் தொடர்ச்சியாகப் பல மாற்றங்கள் மற்றும்
மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் அதிவேக சூப்பர் கணினியைக்
கொண்ட நாடு என்ற பெருமை எப்பொழுதும் ஒரு நாட்டிடம் மட்டும் இருப்பதில்லை.
முன்னதாக உலகத்தின் அதிவேக கணினியை வைத்திருந்த பெருமை சீனாவிடம் ஐந்து
ஆண்டுகள் இருந்தது. இந்நிலையில் தற்போது சம்மிட்டின் வரவை அடுத்து சீனாவை
பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா அந்த பெருமையைப் பெற்றுள்ளது.

dhivi sha

unread,
Jun 13, 2018, 9:43:58 PM6/13/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
வழிகாட்டும் ஈரோடு விவசாயிகள்!
நீர் மேலாண்மையில் தமிழக அரசு எவ்வளவு தடுமாற்றத்துடன் இருக்கிறது என்பதை
நேற்று பார்த்தோம். ஆனால், தமிழக மக்களுக்கு நீர் மேலாண்மையில் உள்ள
தெளிவும், அதற்கான அவர்களின் செயல்களையும் தொடர்ந்து கவனப்படுத்தி
வருகிறோம். அவர்களின் செயல்களைச் செய்தியாக்கி அந்த வரிசையில் மிகப்
பெரிய செயல்பாட்டை முன்னெடுத்திருக்கிறது ஈரோடு மாவட்டம்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கிளாம்பாடி, பாம்பகவுண்டன் பாளையம்
ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளது. இந்தக் கிராமங்களை சுற்றியுள்ள விவசாய
நிலங்கள், மழை இல்லாததனால் கடந்த காலங்களில் கடுமையான வறட்சியைச்
சந்தித்தது. விவசாய நிலங்கள் நீரின்றிக் காய்ந்தன. இந்த நிலையில், இந்த
வருடம் பருவ மழை தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எனினும், மழை நீரைச் சேமிக்கும் வழிமுறைகள் இல்லாததால், மழை பெய்தும்
பயனில்லாத நிலை இருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் அந்தப் பகுதி விவசாயிகள் அரசை எதிர்பார்த்துக்
கைகட்டி நிற்காமல், தங்கள் நிலங்களைத் தானமாக அளித்து நீர் சேமிப்புக்
குளம் ஒன்றை அமைத்துக்கொண்டுள்ளனர். இதற்காக 42 விவசாயிகள் தங்களுக்குச்
சொந்தமான 5 சென்டு முதல் 30 சென்டு வரையிலான 1.7 ஏக்கர் நிலத்தைத் தானமாக
வழங்க முன்வந்துள்ளனர். அந்த நிலத்தின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய்.
தன்னார்வுத் தொண்டமைப்பு ஒன்றின் உதவியுடன் அங்கே குளம் தோண்டப்பட்டு
வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் அரசு செயல்படவில்லை எனும் செய்திகளையே
தொடர்ந்து சந்திக்க நேர்கையில், அரசை எதிர்பாராத விவசாயிகளின் இந்தத்
தற்சார்பான நடவடிக்கை நிச்சயமாகக் கவனப்படுத்தப்பட வேண்டிய செய்தி,
ஆவணம்.

dhivi sha

unread,
Jun 13, 2018, 9:54:31 PM6/13/18
to Valluvan Paarvai, inaiathendral
ர.ரஞ்சிதா
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்படும்
இதயம், அதற்காகக் காத்திருக்கும் இந்திய நோயாளிகளுக்கு வழங்கப்படாமல்,
வெளிநாட்டினருக்குப் பொருத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளதாக மத்திய
சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு (2017) தமிழகத்தில் நடைபெற்ற மொத்த இதய மாற்று அறுவை
சிகிச்சையில் 25 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர் என்று
கண்டறியப்பட்டுள்ளது. இதே ஆண்டில் 33 சதவிகித வெளிநாட்டினருக்கு
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும்
சமீபத்தில் நடைபெற்ற 4 இதய மாற்று அறுவை சிகிச்சையில், 3
வெளிநாட்டினருக்கு இதயம் பொருத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டில் 55 இந்தியர்களுக்கு இதய மாற்று அறுவை
சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதே ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேருக்கு
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 2016ஆம்
ஆண்டு 86 இந்தியர்களுக்கும், 23 வெளிநாட்டினருக்கும் இதயம்
பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு 91 இந்தியர்களுக்கும், 31 வெளிநாட்டவருக்கும் இதய
மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நடப்பாண்டில் (2018) மே மாதம் வரை
50 இந்தியர்களுக்கும், 10 வெளிநாட்டினருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை
நடந்துள்ளது. சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 4 இதய மாற்று அறுவை
சிகிச்சையில் 3 வெளிநாட்டவருக்கு இதயம் பொருத்தப்பட்டது.
இந்தத் தகவல்களை உறுப்பு மாற்று - திசு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய
அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் விமல் பண்டாரி கூறியுள்ளதாகச் சமூக
சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரவீந்திரநாத்
தெரிவிக்கிறார்.
சட்டமும் நடைமுறையும்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை உறுப்பு மாற்று அறுவை
சிகிச்சைக்காக 5,310 இந்தியர்களும், 53 வெளிநாட்டினரும் காத்திருப்போர்
பட்டியலில் உள்ளனர். விதிமுறைகளின்படி, உடலுறுப்பு தானத்தில்
இந்தியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இரண்டாவதாக வெளிநாடுவாழ்
இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இவர்கள் இருவரும்
இல்லாதபட்சத்தில் மட்டுமே வெளிநாட்டினருக்கு உறுப்பு தானம்
வழங்கிடவேண்டும்.
ஆனால், இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்று தேசிய உறுப்பு மாற்று
அமைப்பின் இயக்குநர் விமல் பண்டாரி கூறியுள்ளார். இந்தியர்களின் இதயம்,
இந்தியர்களுக்குப் பொருந்தாதது வருத்தம் அளிப்பதாகவும், காத்திருப்புப்
பட்டியலில் உள்ள இந்திய ஏழை நோயாளிகளுக்குச் செல்ல வேண்டிய உறுப்புகள்
முறைகேடாக வெளிநாட்டவர்களுக்குப் பொருத்தப்படுவது வருத்தமளிப்பதாகவும்
அவர் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
உடலுறுப்பு தானத்தில் முறைகேடு நடப்பதாக வெளிவந்த தகவல்
அதிர்ச்சியளிப்பதாகத் தமிழகத்தில் முதன்முதலில் உடலுறுப்பு தானம் செய்த
ஹிதேந்திரனின் தந்தை மருத்துவர் அசோகன் கூறுகிறார். "சமீபகாலமாக அதிக
வெளிநாட்டினருக்கு உறுப்புகள் பொருத்தப்படுவதற்குக் காரணம் தனியார்
மருத்துவமனைகள். அவர்கள் லாப நோக்கத்தோடு செயல்படுகிறார்களே தவிர,
சேவையாகச் செய்யவில்லை. தமிழ்நாடு அரசு ஒரு விசாரணைக் குழு அமைத்து,
சமீபகாலமாக வெளிநாட்டினருக்குக் கொடுக்கும் உறுப்பு தானம் குறித்து ஆடிட்
செய்ய வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலையில் உறுப்புகள்
வழங்கப்பட்டன என்பது தெரியும்" என்கிறார் அசோகன்.
"விதிகளை மீறி வெளிநாட்டினருக்கு உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளதால்,
உள்ளூர் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளனவா, எவரேனும்
உறுப்பு வழங்கப்படாததால் இறந்துள்ளனரா என்பது குறித்து விசாரணை
மேற்கொண்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று முன்னாள் மத்திய
சுகாதாரத் துறை அமைச்சரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச்
செயலாளருமான மருத்துவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மருத்துவச் சுற்றுலாவை ஊக்கப்படுத்துவது, மருத்துவச் சேவையையே தொழிலாக
மாற்றுவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் மருத்துவமனைகளை
ஊக்கப்படுத்துவது, மருத்துவம் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டுவது போன்ற
மத்திய அரசின் கொள்கைகளே இம்முறைகேடுகளுக்கு அடிப்படைக் காரணம். மத்திய
அரசின் தவறான கொள்கைகள் மூலம் ஏழை இந்தியர்களின் உறுப்புகளை, பணக்கார
வெளிநாட்டினர் பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கடும்
கண்டனத்திற்குரியது என்கிறார் மருத்துவர் இரவீந்திரநாத். உரிய
சட்டங்களைக் கொண்டுவந்து வெளிநாட்டு நோயாளிகள் இந்தியர்களின்
உறுப்புகளைப் பெறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று கூறும் அவர்,
மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு, தமிழக அரசின் உறுப்பு
மாற்று அறுவை சிகிச்சை அமைப்பைக் குறை கூறுவது நியாயமல்ல என்றும்
கூறுகிறார்.
தவறான முறையில் மூளைச் சாவு
சமீபகாலமாகத் தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில்
செயல்பட்டுவரும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் சிலவற்றில் உடலுறுப்பு தான
முறைகேடுகள் நடந்துவருகின்றன என்று ஹிதேந்திரனின் தந்தை அசோகன்
கூறுகிறார். “தீவிர சிகிச்சை மேற்கொண்ட பிறகும் ஒருவர் மூளைச்சாவு
அடைந்தால் அவரது உறுப்புகள் தானம் செய்யப்படுவது முறையானது. ஆனால், தவறான
வழியில் மூளைச்சாவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு மருத்துவர்கள் கையில்
இருக்கிறது. இப்படியும் சில மருத்துவமனைகளில் நடக்கிறது. இதனால் உறுப்பு
தானத்துக்கு முன்வரும் போக்கு குறைந்துவருகிறது" என்கிறார் வேதனையுடன்.
கடந்த மாதத்தில் சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணிகண்டனின் உடலுறுப்புகள் உறவினர்களின்
ஒப்புதல் இல்லாமல் திருடப்பட்டதாக கேரள முதல்வர், தமிழக முதல்வருக்குக்
கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில், முதல்கட்டமாக மருத்துவமனை
நிர்வாகத்திடம் மருத்துவப் பணிகள் இயக்குநர் இன்பசேகரன் தலைமையிலான
விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டது. உறவினர்களின் ஒப்புதலோடுதான்
உறுப்புகள் எடுக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மணிகண்டனின் உறவினர்களிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த
விசாரணையின் முடிவில்தான் விசாரணைக் குழு தரும் அறிக்கையை வைத்து
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.
உடலுறுப்பு திருட்டு குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், உறுப்பு
தானத்தைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் ட்ரான்ஸ்டன் அமைப்பின்
உறுப்பினர் செயலர் பதவியிலிருந்து மருத்துவர் பாலாஜி சமீபத்தில்
விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தியர்கள் யாரும் காத்திருப்போர் பட்டியலில்
இல்லை என்பதைத் தனியார் மருத்துவமனைகள் உறுதி செய்த பின்னரே
வெளிநாட்டினருக்கு உறுப்புகள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டதாக பாலாஜி
கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற உயர் மட்ட
அதிகாரிகளின் கூட்டத்தில், உடலுறுப்பு முறைகேடுகளைத் தடுக்க தமிழக அரசு
விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
“தமிழக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் முன்னாள்
ஒருங்கிணைப்பாளரும், ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணருமான
ஜோ.அமலோற்பவநாதன், உறுப்பு தான திட்டத்தில் இருக்கும்போது உடலுறுப்பு
தானம் வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையான முறையிலும் நடைபெற்றுவந்தது.
அவர் அந்தப் பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்ற பின், டாக்டர் பாலாஜியை
அரசு நியமித்தது. ஏற்கனவே பாலாஜி மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன.
தமிழர்கள் செய்துவரும் இந்த மகத்தான செயல் தொடர வேண்டுமென்றால், தவறு
செய்யும் கார்ப்பரேட் மருத்துவமனைகளைக் கண்டறிந்து, அவர்களின்மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக உடலுறுப்பு மாற்றுத் திட்டத்தில்
ஜோ.அமலோற்பவநாதனைப் போன்று நேர்மையான ஒருவரை நியமிக்க வேண்டும்" என்று
அசோகன் கூறுகிறார்.
“0.1% தவறு நடக்கக்கூட வாய்ப்பில்லை”
"உடலுறுப்பு மாற்று விவகாரத்தில், மற்ற மாநிலங்களைவிடத் தமிழகம் 10
சதவிகிதம் சிறப்பாகச் செயல்படுகிறது. அரசு மருத்துவமனையில் ஒருவர்
உயிரிழந்தால், முதலில் அவரது உடலுறுப்புகள் அரசு மருத்துவமனைக்குக்
கொண்டு செல்லப்படும். உறுப்பு மாற்றுத் தேவைக்கேற்ப மாவட்டம், மாநிலம்
மற்றும் தேசிய அளவில் என எடுத்துக்கொண்டு செல்லப்படும். இந்தியாவில் உள்ள
அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்குப்
பொருந்தவில்லை என்றால்தான், வெளிநாட்டினருக்குப் பொருத்தப்படும். இவை
அனைத்தும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுவதால் தமிழ்நாடு உறுப்பு
மாற்றுக் கழகத்தில், 0.1% தவறு நடக்கக்கூட வாய்ப்பில்லை" என சுகாதாரத்
துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஆன்லைனில் பதிவு செய்து
காத்திருப்போருக்கு, விதிமுறைகளுக்கு உட்பட்டு, வெளிப்படைத் தன்மையுடன்
முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது என்றும் அவர் கூறினார்.
“உடலுறுப்பு தானத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறுவதில் உள்ள
புள்ளிவிவரங்கள் தவறாக உள்ளன. உரிய விதிமுறைகளின்படிதான் உறுப்புகள்
வழங்கப்படுகின்றன. இந்தியர்கள் யாருக்கும் உறுப்பு பொருத்த முடியாத நிலை
இருந்தால் மட்டுமே வெளிநாட்டவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
நடைபெறும். நடப்பாண்டில் மே மாதம் வரை 50 இந்தியர்களுக்கும், 10
வெளிநாட்டினருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்றும்
5,310 இந்தியர்களும், 53 வெளிநாட்டினரும் காத்திருப்போர் பட்டியலில்
உள்ளனர் என்றும் கூறும் புள்ளிவிவரமே தவறு. இந்தியர்கள் 150 பேர்தான்
இந்தக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். மீதி உள்ளவர்கள் கிட்னி
மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர்.
இந்தியர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் உறுப்புகள் வீணாகக் கூடாது
என்பதால் வெளிநாட்டினருக்கு முறைப்படி உறுப்புகள் வழங்கப்பட்டன" என்று
தமிழகச் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
“உடலுறுப்பு முறைகேட்டிற்குத் தமிழக சுகாதாரத் துறையே காரணம். தனியார்
கார்ப்பரேட் மருத்துவமனைகளும், தமிழக சுகாதாரத் துறையும் இணைந்தே
இம்முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. எனவே, இம்முறைகேடு குறித்து சிபிஐ
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்த மருத்துவமனைகள் மீது
அங்கீகாரத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறும்
இரவீந்திரநாத், “தமிழகத்தில் நடைபெற்ற இம்முறைகேட்டைக் காரணம் காட்டி,
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளைப் பெற்று வழங்கும்
அதிகாரத்தைத் தமிழக அரசிடமிருந்து பறிக்க மத்திய அரசு முயல்கிறது. இது
மருத்துவச் சேவை வழங்குவதில் மாநில அரசின் அதிகாரத்தை, உரிமையைப்
பறிக்கும் செயலாகும்” என்றும் கூறுகிறார்.
"உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது; பிற
மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூட்டைப் பூச்சியைக் காரணம் காட்டி வீட்டைக் கொளுத்தும் செயலை மத்திய
அரசு செய்யக் கூடாது" என்கிறார் அவர்.
உடலுறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் தொடர்ந்து மூன்றாவது
முறையாக முதலிடத்தில் உள்ளது. தானம் செய்யும் மக்கள், மருத்துவர்களின்
செயல்பாடுகள் ஆகியவையே இதற்குக் காரணம். இந்நிலையில் உறுப்பு மாற்று
சிகிச்சைகளில் நடக்கும் முறைகேடுகளைக் களைய நடவடிக்கை எடுத்து இந்தச்
சேவை மேலும் சிறப்பாக நடக்கவே மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும். குறிப்பாகத் தனியார் மருத்துவமனைகள் மீது முன்வைக்கப்படும்
குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு கண்காணிக்க வேண்டும்.
வெளிநாட்டவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக
உரிய சட்டங்களை வகுக்க வேண்டும். அப்போதுதான் ஹிதேந்திரன்களின்
தியாகங்கள் அர்த்தமுள்ளவையாக அமையும்.

mohan alagar

unread,
Jun 14, 2018, 12:16:40 PM6/14/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: நலிந்துவரும் அரக்கு சாகுபடி!
ஜி.சிங்
(தமிழ்நாட்டில் நகைத் தொழில் உள்ளிட்டப் பல்வேறு தொழில்களுக்கு அரக்குப்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரக்கு எங்கிருந்து உற்பத்தியாகிறது,
எப்படி உற்பத்தியாகிறது என்று பலர் அறிந்திருக்க மாட்டோம். இதுகுறித்த
ஒரு கட்டுரையைக் காண்போம்.)
அரக்கு உற்பத்தி என்பது இந்தியாவில் நீண்ட காலமாக நடந்துவரும் ஒரு
தொழிலாகும். பல ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தத்
தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதுகுறித்த சிறு தொகுப்பைக்
காண்போம்.
ஹரிதாஸ் ரவி இப்போதெல்லாம் கவலையோடுதான் உள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு
முன்பு சிரமத்தோடு அரக்கு உற்பத்தி செய்வதை விட்டு வெளியேறினார். இவர்
மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மாவட்டத்தின் சாரிடா கிராமத்தில்
அரக்குப் பூச்சி வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். இந்தக் கிராமம் மேற்கு
வங்கத் தலைநகரான கொல்கத்தாவிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அரக்குக் குச்சிகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டுதான்
இவர் தனது மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்தார்.
ஒருகட்டத்தில் அரக்குக் குச்சிகளின் விலை சரியத் தொடங்கியதால் போதிய
வருவாய் கிடைக்காமல் தடுமாற்றம் ஏற்பட்டது. அறுபது வயது நிரம்பிய இவர்
தற்போது கிராமத்தில் ஒரு சிறிய மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்தக் கிராமத்தில் இவர்களுடைய மூதாதையர்கள் காலத்திலிருந்தே அரக்கு
உற்பத்தி நடந்து வருகிறது. முந்தைய காலத்தில் அரக்கு உற்பத்தி மூலம் நல்ல
வருவாயும் கிடைத்துள்ளது. "சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல வருவாய்
கிடைத்தது. ஆனால், இப்போது இல்லை. என் வீட்டில் அடுப்பு எரிய வேண்டுமே,
அதனால்தான் சிறியதாக ஒரு மளிகைக் கடை வைத்துக் கொண்டேன்" என்று
வேதனையாகக் கூறுகிறார் ராய்.
விலைச் சரிவு மட்டுமே இதற்குக் காரணமில்லை. காலநிலை மாற்றமும் இந்தத்
தொழிலை விட்டு வெளியேறுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார் ராய். "கடந்த
ஆண்டில் அரக்கு உற்பத்தி குறைந்துவிட்டது. பருவ மாற்றங்களால் அரக்கு
உற்பத்தி செய்வதற்கான சூழல் இந்த மாவட்டத்தில் குறைந்து வருகிறது. நீண்ட
காலத்திற்கு இந்தச் சூழ்நிலைகளைக் கொண்டு இங்கு அரக்கு உற்பத்தி செய்வது
இயலாமல் போய்விடும். வேகமாக வெப்பநிலை மாறி வருகிறது. தீங்கு விளைவிக்கக்
கூடிய பூச்சிக்கொல்லிகளாலும் இதன் உற்பத்தி பாதிக்கும்" என்கிறார் ராய்.
ஒருகாலத்தில் புருலியா மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக அரக்கு
உற்பத்தி இருந்துள்ளது என்பது அவர் கூறுவதிலிருந்தே தெரிகிறது. 2012ஆம்
ஆண்டில் ஒரு கிலோ அரக்கு 1,000 ரூபாயாக இருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டில்
கிலோ 100 ரூபாயாகச் சரிந்துவிட்டது. இதனால் இடைத்தரகர்கள் தலையீட்டைக்
குறைக்க வேண்டுமென்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்குக் கோரிக்கை
வைக்கின்றனர். 1950ஆம் ஆண்டில் அரக்கு உற்பத்தி ஆண்டுக்கு 42,000 டன்களாக
இருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டில் 17,000 டன்களாகச் சுருங்கிவிட்டது. இதே
காலகட்டத்தில் ஏற்றுமதியும் 29,000 டன்களிலிருந்து 6,600 டன்களாகக்
குறைந்துவிட்டது.
அரக்கு உற்பத்திக்கு இந்தியாவில் நீண்டகால வரலாறு உண்டு. நாட்டின் மொத்த
அரக்கு உற்பத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் சரிபாதி அளவுக்கு
உற்பத்தியாகிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா,
மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் எஞ்சிய பாதி அரக்கு
உற்பத்தியாகிறது. உற்பத்தி செய்யப்பட்ட அரக்கைச் செயலாக்கம் செய்யும்
பணிகளில் மேற்கு வங்கம் முன்னிலை வகிக்கிறது. 44 விழுக்காடு அரக்குப்
பொருட்கள் மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 183
அரக்குப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இதில் சரிபாதி
புருலியாவில்தான் உள்ளது.
அரக்கு என்பதை ஆங்கிலத்தில் லேக் என்று அழைப்பார்கள். இது லக்சா என்ற
சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது. பண்டைய காலம் தொட்டே அரக்கின்
பயன்பாடும் இருந்துகொண்டே வருகிறது. 16ஆம் நூற்றாண்டில் அய்ன்-அய்-அக்பரி
திரைகளுக்கு அரக்கு பூசியுள்ளார் என்று வரலாறுகள் கூறுகின்றன. அதேபோல
கிரேக்கத்திலும், ரோமனிலும் கூட அரக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
1900களில் அரக்கு உற்பத்தியை மேம்படுத்தப் பிரிட்டிஷ் அரசாங்கம்
பழங்குடியின மக்களை ஊக்குவித்தது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிர்சாபூரிலிருந்து புருலியாவுக்கு
குடியேறி அரக்கு தயாரிப்பு ஆலைகளைத் தொடங்கினர். பல்ராம்பூர் மற்றும்
ஜால்தாவில் ஆலைகளின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்தது. அரக்கு சாகுபடி
செய்பவர்கள் பெரும்பாலும் பழங்குடியினராகத்தான் இருந்தனர். இப்போதும் கூட
அரக்கு சாகுபடி செய்பவர்களில் பழங்குடியினர்தான் மிக அதிகம். உலகில்
தாய்லாந்துக்கு அடுத்து அரக்கு உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக
இந்தியா விளங்குகிறது. மேற்கு வங்கத்தின் புருலியா, பங்குரா, மித்னாபூர்,
மர்சிதாபத் மற்றும் மால்டா ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டும் 115 ஆலைகள்
வரை உள்ளன. இதில் புருலியாவில் உள்ள பல்ராம்பூரில் மட்டும் 100
யூனிட்டுகள் வரை உள்ளன. இங்கு ஆண்டொன்றுக்கு 6,600 டன் அளவிலான அரக்கு
தயாரிக்கப்படுகிறது. இங்கு மட்டும் 20,000 பேர் இதைச் சார்ந்து வர்த்தகம்
செய்கின்றனர்.
அரக்குப் பூச்சிகள் மரக் கிளைகளில் ஒட்டி முட்டைகள் இடுகின்றன. இந்த
முட்டைகள் அரக்குப் பூச்சிகளை உருவாக்குகின்றன. இவ்வாறு பல்வேறு அரக்குப்
பூச்சிகள் இணைந்து அரக்கு உற்பத்தியாகிறது. இது பெரும்பாலும் கும்பாதிரி,
பலா, இலந்தை உள்ளிட்ட மரங்களில்தான் உற்பத்தியாகிறது. மரக்கிளையிலிருந்து
அரக்கு எடுக்கப்பட்ட பூச்சிகள் மற்றும் மாசுகள் அகற்றப்பட்டு சுத்தம்
செய்யப்படுகிறது.
மின் கருவிகள், வளையல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பிலும் அரக்கு
பயன்படுகிறது. அதுமட்டுமின்றி பாரம்பரிய நாட்டுப்புற மருந்துகள், நகைகள்
தயாரிப்பிற்கும் அரக்கு பயன்படுகிறது. ஆனாலும் இத்தொழிலை ஊக்குவிக்க
அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரக்கு தயாரிப்பு ஆலைகளும் கூட
இப்போது இத்தொழிலில் மகிழ்வோடு ஈடுபடவில்லை. பல்ராம்பூரைச் சேர்ந்த
ரஞ்சித் மஜ்ஹி என்ற ஆலை உரிமையாளர் கூறுகையில், "உற்பத்திச் செலவுகளும்,
ஊழியர்களுக்கான ஊதியமும் அதிகரித்து வருகிறது. இதனால் லாபம்
குறைந்துகொண்டே வருகிறது. எங்களுக்கு உதவ உரிய முயற்சிகளை அரசு எடுக்க
வேண்டும். அரக்குக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும்"
என்கிறார்.
அரக்கு உற்பத்தியாளர்களுக்கு வங்கிகளும் கடன் அளிக்க மறுக்கின்றன. உரிய
நேரத்தில் அவர்களால் திருப்பிச் செலுத்த இயலாததே இதற்குக் காரணமென்றும்
அவர் கூறுகிறார். அதேபோல காடுகள் அழிப்பு பெருமளவில் மேற்கு வங்கத்தில்
அரங்கேறுவதால் அரக்கு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள் கிடைப்பதில்
தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள
வர்த்தகர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்து இயங்க வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது.
மூலப்பொருள் கிடைப்பதில் உள்நாட்டுச் சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களைச்
சந்தித்துக் கொண்டிருப்பதால் ஏற்றுமதியும் தடுமாறி வருவதாக அனுப்
அகர்வால் என்ற ஏற்றுமதியாளர் கூறுகிறார். இவர் அரக்கு ஏற்றுமதி
கமிட்டியிலும், வனப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலிலும்
உறுப்பினராக உள்ளார். மேற்கு வங்க அரசு இத்துறையை ஊக்குவிக்கும் வகையில்
ரூ.4 கோடியில் சிறப்பு நோக்கு வாகனங்களை உருவாக்கத் திட்டமிட்டது.
"பொதுவான வசதிகளுடன் கூடிய மையம் ஒன்றை பல்ராம்பூரில் அமைக்கவும்
திட்டமிட்டது.
இவ்வாறு ஒட்டுமொத்த புருலியா மாவட்டத்தின் அரக்கு உற்பத்தி
மேம்பாட்டுக்குத் திட்டம் வகுத்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர
உற்பத்தியாளர்கள் ஆலைகள் அமைக்கவும், இயந்திரங்கள் வாங்கவும் உதவ
முடிவெடுத்துள்ளது. மேலும், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப உதவிகள் மற்றும்
சந்தைப்படுத்துவதற்கான உதவிகள் ஆகியவற்றை அளிக்கவும் நடவடிக்கை
எடுக்கிறது" என்று கூறுகிறார் ராஜீவ் சின்ஹா. இவர் மேற்கு வங்க
மாநிலத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கூடுதல்
தலைமைச் செயலாளராக உள்ளார்.
மேற்கு வங்க அரசு தனது ஆண்டு விற்றுமுதலை 270 கோடி ரூபாயிலிருந்து 400
கோடி ரூபாயாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்றுமதியைப்
பொறுத்தவரையில் தற்போது 80 கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம்
நடைபெறுகிறது. இதை 200 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் இலக்கு
நிர்ணயித்துள்ளது. அரக்குப் பொருட்களைப் பொறுத்தவரையில் 2016-17ஆம்
நிதியாண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதியாகியுள்ளது. இதில்
புருலியாவிலிருந்து மட்டும் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள்
ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
தாங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் புதிய சந்தை வாய்ப்புகளை
ஆராய்ந்து வருகிறோம் என்கிறார் தீபக் பங்கா என்ற ஏற்றுமதியாளர். இவர்
மேலும் கூறுகையில், "செயற்கை பிசின்கள் வரத்து அதிகரித்துள்ளதால் அரக்கு
விற்பனை கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு
உள்ளாகியுள்ளது. செயற்கை பிசின்களைப் போலல்லாமல் சுற்றுச் சூழலைப்
பாதுகாக்கும் ஒன்றாக இருப்பது மட்டுமின்றி அப்பகுதியைச் சார்ந்துள்ள
விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைப் பாதுகாக்கும் ஒன்றாகவும் அரக்கு
உள்ளது" என்கிறார்.

mohan alagar

unread,
Jun 14, 2018, 9:42:59 PM6/14/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
ஒரே தேவைக்கு இரண்டு சாலைகள். மத்திய அரசுக்கு ஒன்று. மாநில அரசுக்கு
ஒன்று. ஆச்சரியம் ஏன்னவென்றால், இரண்டும் சாலைகளும் போடப்படுவது ஒரே
காரணத்திற்காகத்தான். தேசிய நெடுஞ்சாலைகளை இணைப்பது. ஆனால், அவற்றின்
விளைவுகள் வெவ்வேறானவை.
NH 44 - திண்டுக்கல்லிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய
நெடுஞ்சாலை. NH 45B - திருச்சியிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும்
தேசிய நெடுஞ்சாலை. மதுரை வழியாகச் செல்லும் இந்த இரு நெஞ்சாலைகளையும்
இணைத்து ரிங் ரோட் அமைத்தால், ஒரு நெடுஞ்சாலையிலிருந்து இன்னொரு
நெடுஞ்சாலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகளின் தூரமும் நேரமும் குறையும்
என்று சொல்லப்பட்டது. இதனால் மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலும்
குறையும். எனவே, இந்த ரிங் ரோட் திட்டத்திற்காக 10 கோடி ரூபாய் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டு, 32 கிலோமீட்டருக்கு இந்த நான்கு வழிச் சாலையை
அமைக்கும் வேலைகளைக் கடந்த மார்ச் மாதமே தமிழக அரசு தொடங்கிவிட்டது.
இதற்காகக் கிட்டத்தட்ட 54 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தவும் மாநில அரசு
திட்டமிட்டிருந்தது.
ஆனால், இதே காரணத்திற்காக கிட்டத்தட்ட 526 ஏக்கர் நிலப்பரப்பைக்
கையகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இந்தத் திட்டத்திற்காக
700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பு
வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இரு நெடுஞ்சாலைகளை இணைக்க மாநில அரசின்
திட்டமே போதுமானது. ஆனால், மத்திய அரசும் இதில் செயல்பட்டுவருகிறது.
வழக்கம்போல அரசு அதிகாரிகளும், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏற்ப
இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
526 ஏக்கர் என்பது எத்தனை விவசாயிகளின் வாழ்வாதாரம். எத்தனை
உயிரினங்களின் இருப்பிடம். எத்தனை பேரின் நில உரிமை. இழப்பீட்டுத்
தொகைகளால் இவற்றை ஈடுகட்டிவிட முடியுமா?
- நரேஷ்

mohan alagar

unread,
Jun 14, 2018, 9:47:08 PM6/14/18
to Valluvan Paarvai, inaiathendral
தினப் பெட்டகம் – 10 (15.06.2018)
நம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு பாட்டியோ, தாத்தாவோ கண்டிப்பாக
இருப்பார்கள் அல்லது இருந்திருப்பார்கள். பலர் வீடுகளில் பெற்றோர்
முதுமைக்குள் காலடி எடுத்து வைத்திருப்பார்கள். அவர்களில் கணிசமானோர்
எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், வீடுகளில் அவர்களை முன்வைத்து நடக்கும்
பிரச்சினைகள், அவர்களிடம் போடப்படும் சண்டைகள். இன்று உலக மூத்த
குடிமக்கள் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம். முதியோர் வன்கொடுமை
ஆகியவை குறித்த சில தகவல்கள்:
1. கொடுமை செய்யப்படும் பெரியவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 30%
முன்பாகவே இறப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
2. 2014ஆம் ஆண்டின் ஆய்வுகளின்படி, இந்தியாவில் 50% முதியவர்கள் கொடுமை
செய்யப்படுகிறார்கள். இவர்களில் 77% பேர் தங்கள் குடும்பத்துடன்
வசிக்கிறார்கள். ஆண்களில் 48% பேர்; பெண்களில் 52% பேர்
பாதிக்கப்படுகிறார்கள்.
3. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 41ஆவது ஷரத்தின்படி, ஆதரவற்ற
முதியோர்களைக் கவனிப்பது மற்றும் பராமரிப்பது அரசின் கடமையாகும்.
2007இல் மத்திய அரசு, பெற்றோர், மூத்த குடிமக்கள் நலம் மற்றும்
பராமரிப்புச் சட்டத்தை நிறுவியது. ஒவ்வொரு மாவட்டத்திலும்,
முதியோர்களுக்கான மருத்துவ வசதிகளும், உயிர் மற்றும் சொத்துக்கான
பாதுகாப்பு வழங்கவும் இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. தமிழகத்தில்,
முதியவர்களின் பராமரிப்பு வழக்கை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ.
விசாரித்து 90 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியவர்களைப்
பராமரிப்பதாகக் கூறி, அவர்களுடைய சொத்துகளை ஏமாற்றிப் பெற்ற பிறகு,
அவர்களைப் பராமரிக்காமல் போனால் அந்தச் சொத்துரிமையை ரத்து செய்ய
முடியும். அந்தச் சொத்துகளை முதியோர்களிடமே மீண்டும் கொடுக்க இந்தச்
சட்டத்தில் இடம் இருக்கிறது. முதியவர்களைக் கவனிக்காமல் இருப்பவர்கள்
மீது வழக்கு பதியவும், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கவும்
முடியும். முதியவர்களைக் காப்பாற்ற வேண்டியது மாவட்ட ஆட்சியர், சமூக
நலத்துறை அலுவலர், ஆர்.டி.ஓ. ஆகியோரின் பொறுப்பு. ஆனால், இந்தச் சட்டம்
குறித்த விழிப்புணர்வு நம்மிடம் அதிகம் இல்லை.
4. கொடுமை செய்யும் பெரும்பான்மையானவர்கள் நடுத்தர வருமானமுள்ள 18 முதல்
34 வயதுகளில் இருப்பவர்கள்தாம்.
5. உலகளாவிய அளவில் 60 வயதிற்கும் அதிகமான மக்களின் எண்ணிக்கை, 2015இல்
900 மில்லியனில் இருந்து 2050இல் 2 பில்லியனாக உயரப் போவதாகக்
கூறப்படுகிறது.
6. முதியவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளில் முக்கியமான மூன்று: தவறாகப்
பேசுவது (verbal abuse) - 41%; மரியாதைக் குறைவு (disrespect) - 33%;
புறக்கணிப்பு (neglect) - 29%.
7. இந்த வன்கொடுமைகள் உறவினர்கள் மத்தியில் 32.5%; நண்பர்கள் மத்தியில்
21%; நம் அருகில் வசிப்பவர்கள் மத்தியில் 20% நடக்கிறது.
8. இளைஞர்களிடம் அவர்கள் அறிந்தவரையில் முதியவர்கள் எதிர்கொள்ளும்
உச்சபட்சக் கொடுமை பற்றிக் கேட்கையில் 72.4% பேர் முதியவர்களிடம் தவறான
வார்த்தைகள் பேசப்படுவதாகவும், மோசமாக நடப்பதாகவும் கூறுகின்றனர்;
மேலும், 43.1% பேர் அமைதியான முறையில் உணர்வு ரீதியாகத்
தாக்கப்படுவதாகவும், தனிமைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
9. முதியவர்களிடம் இது போன்ற கொடுமைக்கான காரணங்கள் குறித்து
விசாரிக்கும்போது, உணர்வு ரீதியான பிணைப்பு (46%); பொருளாதாரச் சார்பு
(45%); ‘மாறிவரும் நெறிமுறைகள்’ (38%) ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
10. நாம் சந்திக்கும் 10இல் ஒரு முதியவர் ஏதோ ஒரு வகையில் கொடுமை செய்யப்படுகிறார்.
- ஆஸிஃபா

mohan alagar

unread,
Jun 16, 2018, 10:14:38 AM6/16/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: அழிந்து வரும் படகு கட்டுமானத் தொழில்!
குர்விந்தர் சிங்
மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள பாலகார்க்கில் ஷேக்
காசிம் என்பவர் ஒருகாலத்தில் படகு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்.
ஆனால், அப்போது படகு கட்டுமானத்திற்கு எந்த வகையான மரக்கட்டைகளைப்
பயன்படுத்தினார் என்பதை ஷேக் மறந்துவிட்டார். மரக்கட்டைகளைப்
பயன்படுத்திப் படகுகளை உற்பத்தி செய்ததையும், அவை பல ஆண்டுகளாக ஆறுகளில்
பயணித்ததையும் மட்டுமே அவர் நினைவில் கொண்டுள்ளார். படகு
உற்பத்தியாளராகத் தனது ஐந்து குழந்தைகளையும் வளர்க்கப் போதுமான பணத்தை
ஷேக் ஈட்டியுள்ளார்.
தற்போது ஷேக் காசிமுக்கு 60 வயதாகிறது. தனது குடும்பத்துக்கு ஒரு நாள்
உணவை ஏற்பாடு செய்வதற்குக்கூட இப்போது ஷேக் சிரமப்படுகிறார். அவர்
பேசுகையில், “நான் வேலை செய்யவில்லை என்றால் என்னுடைய குடும்பம் பசியால்
உயிரிழக்கக் கூடும். ஓய்வு எடுப்பதற்கான சவுகரிய நிலையில் நான் இல்லை.
ஒரு நாளுக்கு 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை கடினமாக உழைக்கிறேன்.
இருப்பினும், அவ்வப்போது நான் வெறும் வயிற்றோடுதான் தூங்கச் செல்கிறேன்.
படகு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள என்னைப் போன்றவர்கள் இருண்ட எதிர்காலத்தை
நோக்கியுள்ளோம்” என்று கூறுகிறார்.
காசிமுக்கு ஈரல் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் முழுமையாக
ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால்,
அவர்களின் அறிவுரைகளுக்கு ஷேக் கவனம் செலுத்துவதில்லை. காசிமைப் போல
பாலகார்க்கில் நூற்றுக்கணக்கான படகு உற்பத்தியாளர்கள் உள்ளனர். அவர்களும்
இதே இக்கட்டான சூழ்நிலையில்தான் உள்ளனர். நூற்றாண்டுகள் பழைமையான படகு
உற்பத்தித் தொழில் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. அரசின் அண்மைக்
குறுக்கீட்டினால், நிலைமை மாறும் என்று படகு தயாரிப்பாளர்கள்
நம்பிக்கையில் உள்ளனர்.
கொல்கத்தாவின் மவுலானா அபுல் அசாத் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த படகு
ஆராய்ச்சியாளரான ஸ்வரூப் பட்டாச்சார்யா பேசுகையில், “சில நூற்றாண்டுகளாக
பாலகார்க் பகுதியில் படகு தயாரிப்புத் தொழில் விருத்தியடைந்து வந்தது.
பாலகார்க்கிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சப்தகிராம்
துறைமுகம் பண்டைக்காலத்திலும், இடைக்காலத்திலும் செழிப்பாக இருந்துள்ளது.
நங்கூரமிடப்பட்ட கப்பல்களில் பழுதுபார்க்கப்பட வேண்டுமென்றால்,
பாலகார்க்கிலிருந்து பணியாளர்கள் சென்று பழுதுபார்த்துள்ளனர். இத்தொழில்
லாபகரமாக இருந்ததால், மெல்ல மெல்ல அவர்கள் படகு தயாரிப்புக் கலையைக்
கற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது” என்று கூறினார்.
பல தலைமுறைகளாகப் படகு தயாரிப்புத் தொழில் பின்பற்றப்பட்டு வந்துள்ளதால்,
ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்த படகு உற்பத்தியாளர்கள் நற்பெயரைப்
பெற்றுள்ளனர். தாஸ் போட் பில்டர்ஸ் நிறுவனம் கடந்த நாற்பது
ஆண்டுகளுக்கும் மேலாகப் படகு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஷேக் அர்ஜிசுல் ஹக் பேசுகையில்,
“முன்பெல்லாம், ஒரு மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து படகுகளை நான்
விற்பனை செய்து வந்தேன். இப்போது ஒரு மாதத்துக்கு ஒரு படகைக் கூட விற்க
முடிவதில்லை” என்று கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஷேக் காசிமின் மகனான நாசிம் (35 வயது) ஒரு
படகை அற்ப விலையாக 20,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். படகு
உற்பத்தியாளர்கள் தொழிலில் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றனர். சாலைப்
போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் மேம்பட்ட பிறகு படகுப்
போக்குவரத்துக்கான மோகம் குறைந்தது. இதற்குப் பிறகு படகு
உற்பத்தியாளர்களின் தொழில் மந்தமாகத் தொடங்கியது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் படகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கெஸ்டோ
சர்கார் (40 வயது) பேசுகையில், “அரசு பாலங்களை அமைத்துள்ளதும்,
போக்குவரத்து மேம்பட்டுள்ளது என்பதும் உண்மைதான். ஆனால், வேறு
காரணங்களும் உள்ளன” என்று கூறினார்.
பாலகார்க்கில் பல ஆண்டுகளாகப் படகு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நேமய்
சந்த் பாரிக்கின் மகளான சுப்ரியா பாரிக் பேசுகையில், “தேவைக்
குறைந்துள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால், தொழிலாளர்
தட்டுப்பாடும் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. படகு தயாரிப்புக் கலையை
ஒருவர் கற்றுக்கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரமும், அவர் பெறும் ஊதியமும்
தொழில் சரிவுக்குப் பங்களிக்கிறது” என்று கூறினார்.
இக்கிராமத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் மாற்றுத் தொழில்களைத் தேடி
நகர்ந்துவிட்டனர். ஒரு காலத்தில் இந்தக் கிராமத்தில் 3,000க்கும் அதிகமான
படகு தயாரிப்பாளர்கள் இருந்தனர். ஆனால், இப்போது வெறும் 800 படகு
தயாரிப்பாளர்கள் மட்டுமே உள்ளனர். படகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 25
ஆலைகளில் இவர்கள் பணிபுரிகின்றனர். படகு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த
குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் பணம் ஈட்ட வேறு மாநிலங்களைத் தேடிச்
சென்றுவிட்டனர்.
இளம் படகு உற்பத்தியாளரான ஷேக் கோக்கன் பேசுகையில், “என்னுடைய சில
நண்பர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். ஆனால், எனக்கு
மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளதால் என்னால் அவ்வாறு செல்ல முடியாது”
என்று கூறினார்.
நாசிம் ஒரு படகை 20,000 ரூபாய்க்கு விற்றபோது அவருக்கு இழப்பு ஏற்பட்டது.
அவர் பேசுகையில், “படகு தயாரிப்பதற்குப் பணம் ஏற்பாடு செய்ய, என்
குடும்பத்தின் நகைகளை அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொழில் செய்ய
எங்களுக்குப் பணம் வேண்டும். ஆனால் வங்கிகள் எங்களுக்குக் கடன்
வழங்குவதில்லை. எங்களால் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாதென்று
வங்கிகள் அஞ்சுகின்றன” என்று கூறினார். அடுத்த விற்பனை லாபகரமானதாக
இருக்குமென்ற நம்பிக்கையிலேயே இவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.
ஷேக் கோக்கனின் மனைவி தையல் தொழில் செய்வதால் அவரால் தனது குடும்பத்தை
நடத்த முடிகிறது. அவர் பேசுகையில், “ஒவ்வொரு நாளும், படகு உற்பத்தியை
மட்டும் நம்பிப் பிழைப்பது கடினமாகி வருகிறது” என்று கூறினார்.
படகு உற்பத்தியைச் சிறு தொழிலாகச் செய்பவர்களின் நிலை மிகக்
கடினமாகத்தான் உள்ளது. பெரியளவில் படகு உற்பத்தியில்
ஈடுபட்டுள்ளவர்களும்கூட நல்ல நிலையில் இல்லை. “பருவமழைக் காலம் எங்களது
தொழிலுக்கு நல்ல சீசன். ஏனெனில், வெள்ளம் தாக்கப்பட்ட பகுதிகளில்
படகுகளுக்கு அதிகமான தேவை இருக்கும். மீட்புப் பணிகளுக்காக அரசும் கூட
படகுகளை வாங்கும்” என்று பாரிக் கூறினார்.
கொல்கத்தாவின் மிதக்கும் சந்தைக்காக மரப் படகுகளை வாங்குவதற்கு கொல்கத்தா
மாநில அரசு ஆர்டர்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் படகு உற்பத்தித் தொழில்
புத்துயிர் பெறும் என்று படகு தயாரிப்பாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
அரசின் திட்டத்தின் கீழ் தாஸ் போட் பில்டர்ஸ் நிறுவனத்துக்கு ஏராளமான
ஆர்டர்கள் வந்துள்ளன. இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஷேக் அர்ஜிசுல் ஹக்
பேசுகையில், “சிறு படகு உற்பத்தியாளர்கள் குறித்து நானும் வருத்தத்தில்
உள்ளேன். படகுக்கான தேவை சரிந்துள்ளதால் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை
இழந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும். ஏனெனில்,
அவர்கள்தான் பாலகார்க்கின் பெருமை” என்று கூறினார்.
நன்றி: வில்லேஜ் ஸ்கொயர்
தமிழில்: அ.விக்னேஷ்

mohan alagar

unread,
Jun 16, 2018, 10:04:31 PM6/16/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
அழுக்கு நீருக்கு அதிக வரி!
மக்கள்மீது சிறிதும் அக்கறை இல்லாமல்தான் அரசு செயல்படுகிறது என்பதற்கு
மற்றுமொரு சான்றாக வறண்டு நிற்கிறது ஈரோடு மாவட்டம்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2,700 ஏக்கர் பரப்பில் சிப்காட்
அமைந்துள்ளது. இதில் 250க்கும் அதிகமான ஆலைகள் இயங்கிவருகின்றன. இந்த
ஆலைகளிலிருந்து வெளிவரும் பல ஆயிரம் டன் ரசாயனக் கழிவுகள் மண்ணில்
புதைக்கப்பட்டதாகச் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள் புகார்
தெரிவித்துள்ளனர். அத்துடன், ஆலையின் கழிவுகளால் 10 கிமீ சுற்றளவுக்கு
நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமங்களைச் சுற்றியுள்ள
பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் வண்ணத்தைப் பார்த்தாலே
பாதிப்பு தெரியும்.
வெட்டுக்காட்டு வலசு, எழுதிங்கள்பட்டி, குட்டப்பாளையம், செங்குளம்,
கூத்தம்பாளையம், ஓடைக்காட்டூர், பெரிய வேட்டுவபாளையம் உள்ளிட்ட
கிராமங்களில் நிலத்தடி நீர் எந்த அளவுக்குப் பாதிப்படைந்திருக்கிறது
என்றால், இக்கிராமங்களில் இருக்கும் கால்நடைகள் இந்நீரைக் குடிக்க
மறுக்கின்றன. கால்நடைகளுக்கான குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைமையில்தான்
இக்கிராம மக்கள் உள்ளனர்.
மக்களுக்கான சுத்தமான குடிநீரை விநியோகம் செய்யாத ஈரோடு மாநகராட்சி,
குடிநீருக்கான வரியைத் திடீரென உயர்த்தியுள்ளது. மாசடைந்த நீர்தான்
வருகிறது, வாரம் ஒருமுறைதான் குடிநீர் வருகிறது ஆகிய எந்தப் புகாருக்கும்
பதிலளிக்கவில்லை. ஆனால், இந்தக் குடிநீர் வரியைக் கட்ட மறுத்தால், ஒரு
ரூபாய்க்கு 30 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என்று மட்டும்
அறிவித்துள்ளது.

mohan alagar

unread,
Jun 17, 2018, 3:43:36 AM6/17/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: தந்தை தாயுமாகும் தருணம்!
பெருந்தேவி
அழாதே, குழந்தையே
அழாதே, என் செல்லமே
என்னுடைய இந்த முத்தங்களால் உன் கண்ணீரை அகற்றுகிறேன்
பெரும் பசி கொண்ட மேகங்களின் வெற்றி நீடிக்காது
அவற்றால் ஆகாயத்தை நீடித்து ஆட்கொள்ள இயலாது,
நட்சத்திரங்களை அவை விழுங்குவதோ மாயத் தோற்றத்தில்தான்,
வியாழன் எழும்பும், பொறுமையாக இரு, இன்னொரு இரவில் மீண்டும் பாரேன்,
கார்த்திகைக் கூட்டம் எழும்பும்
நித்யமானவை அவை, பொன்னும் வெள்ளியுமான எல்லா நட்சத்திரங்களும் மீண்டும் ஒளிரும்,
மகத்தான நட்சத்திரங்களும் சிறியவையும் மீண்டும் மின்னும், அவை தாங்கிக்கொள்வன,
பரந்த, அழிவில்லாத சூரியன்களும், நீடித்துத் தாங்கக்கூடிய, விசாரத்தோடான
நிலவுகளும் மீண்டும் பிரகாசிக்கப் போகின்றன.
- வால்ட் விட்மன்
‘இரவில் கடற்கரையில்’ என்ற தலைப்பிலான வால்ட் விட்மனின் புகழ்பெற்ற
கவிதையை வாசிக்கும்போதெல்லாம் மனம் உருகும். ஒரு பெண் குழந்தையும்
தந்தையும் கடற்கரையில் நின்று வானத்தை நோக்குவதுதான் கவிதையின் காட்சி.
இலையுதிர்காலத்தில் கிழக்குத் திசையில் ஆகாயத்தை உன்னித்துப்
பார்க்கும்போதே வியாழன் ’புதைமேகங்களால்’ மூடப்படுகிறது. கார்த்திகை
நட்சத்திரங்களும் அதன் பிடியில். குழந்தை அதைக் கண்டு மௌனமாக அழுகிறாள்.
அவள் தந்தை அவளுக்கு ஆறுதல் கூறும் வகையில் அமைந்த கவிதையில் சில வரிகளை
மேலே தந்திருக்கிறேன்.
சிறுமியிடம் அவள் தந்தையின் வார்த்தைகள் ஆறுதலை மட்டுமல்ல;
நம்பிக்கையையும் தருவன. நம்பிக்கை வார்த்தைகளை யாரும் தந்துவிட முடியும்
என்றாலும் அவை தந்தையிடமிருந்தோ தாயிடமிருந்தோ வரும்போது அவற்றின்
பெறுமதியே வேறுதான். இத்தகைய வார்த்தைகளை என் தந்தையிடம் நான் பல
தருணங்களில் பெற்றிருக்கிறேன்.
தாங்கிக்கொள்ளும் தன்மை
ஆனால் வால்ட் விட்மனின் கவிதை போன்ற நட்சத்திரங்களோடான ஒரு தனித்த
அனுபவம் எனக்குண்டு. பெசன்ட் நகரில் எங்கள் வீட்டின் மொட்டை மாடியில்
நட்சத்திரங்களைப் பார்த்தபடி நான் எடுத்த ஒரு முக்கியமான முடிவை என்
அப்பாவிடம் கூறினேன். என் வாழ்க்கையையே திசை திருப்பிய முடிவு அது.
பரிச்சயமில்லாத, வழிகாட்டுதல் இல்லாத பாதையில் ஏழெட்டு வருடங்கள் நான்
பயணிக்கத் துணிந்து எடுத்த முடிவு. என் அரசாங்க வேலையிலிருந்து ராஜினாமா
செய்ய முடிவு செய்த அந்த இரவு என் அப்பாவிடம் பேசியபோது சில
நட்சத்திரங்கள் வானிலிருந்து அதைச் செவியுற்றிருக்கலாம்.
ஓய்வுபெற்றுவிட்ட, எழுபத்து நான்கு வயதான, ஒரு மத்திய வர்க்கத் தந்தைக்கே
இருக்கக்கூடிய அச்சம் அவருக்கு இருந்திருக்கும். பதினாறு வருடங்களுக்கு
முன்பு பெண்ணுக்குத் திருமணம் என்பது இப்போதைய நாட்களைவிட இன்னும்
இன்றியமையாததாகக் கருதப்பட்ட காலம். அவரைப் பொறுத்தவரை,
மணம்புரிந்துகொள்ளாத எனக்கு என் அரசாங்க வேலைதான் என் வாழ்க்கைக்கு
இருந்த ஒரே பிடிமானம். அலுவலகத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. எனக்கோ
இரண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் முனைவர் படிப்புக்கு இடம்
கிடைத்திருந்தது. பிரச்சினைகளை ஆற அமர முடித்துவிட்டு போய்ச் சேருகிற
அளவுக்குப் பொறுமை இல்லை. விடுமுறை கிட்டவில்லை. கடுமையான கடன் சுமைகள்
வேறு.
அந்த நேரத்தில்தான் அந்த உரையாடல் நடந்தது. என் தந்தை சில வாக்கியங்கள்
கூறினார்: “உன் விருப்பம் அம்மா, தைரியமாக இரு! இதையும்
தாங்கிக்கொள்வோம்.”
அதன் பின், முனைவர் பட்டப் படிப்பின்போது, பல முறை சொல்லியிருக்கிறார்:
“எந்தக் கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொள்ள வேண்டும், தாங்கிக்கொள்வோம்.”
வால்ட் விட்மனின் கவிதையில் வருகிற அதே வினைச்சொல்தான், அப்பா அடிக்கடி
பயன்படுத்தியதும்: “தாங்கிக்கொள்ளுதல்.”
விட்மன் கவிதையில், இந்தப் பத்தியில் ‘புதைக்கின்ற மேகக்கூட்டங்க’ளைப்
பார்த்தபடி தந்தை தன் குழந்தைக்குச் சிலவற்றை விளக்குகிறார்: முதலில்,
மேகங்களுக்குள் நட்சத்திரங்களும் கோள்களும் துணைக்கோள்களும் காணாமல்
போகுதல் என்பது ஓர் இயற்கை நியதி, ஆனால் அதிலிருந்து, எல்லாமே மீண்டு
வருகின்றன, வெள்ளியாலானவை, பொன்னாலானவை, மகத்தானவை, சிறியவை.
வேறுபாடில்லாமல்.
இரண்டாவதாக, இயற்கையில் காணப்படும் இந்த மறைதல் குழப்பமும் மாயத்
தோற்றமும் பின்னர் மீண்டு வருதலும் பிரகாசித்தலும், மனித வாழ்க்கையில்
நேரும் இடர்ப்பாடுகளுக்கும் மீட்சிகளுக்கும் உருவகமாகக்கூடியவை.
இயற்கைக்கு, பிரபஞ்சத்துக்கு முன்னால் நாம் எவ்வளவு சிறியவர்கள்,
பிரபஞ்சத்தின் மாபெரும் பொருட்களுக்கே இந்தக் கதி என்றால் நம்
போன்றவர்கள் எம்மாத்திரம் என்பதையும் கவிதை எடுத்துக்காட்டுகிறது.
மூன்றாவதாக, தாங்கிக்கொள்ளும் தன்மை முதன்மைப்படுத்திக் கூறப்படுகிறது.
மேகங்களின் தற்காலிக வெற்றி இந்தத் தன்மைக்கு முன் ஒன்றுமேயில்லை என.
இந்த மகத்தான குணநலத்தை இயற்கையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்
என்பது கவிதையின் அடிநாதமான செய்தி.
இந்தக் கவிதையில் வரும் தந்தையைப் போல என் அப்பா “தாங்கிக் கொள்ளுதல்”
என்பதை இயற்கையைச் சுட்டி விரித்தெல்லாம் பேசவில்லை. ஆனால்,
தாங்கிக்கொள்வோம் என்று அப்பா கூறியபோது, பன்மையை அழுத்திக் கூறிய
அவ்வார்த்தைகளால் நானே பூமிபோல் மாறியதைப் போன்ற உணர்வு, நிலத்தின்
சகிப்புத்தன்மையோடான திடத்தைப் பெற்றது போன்ற சமாதானம்.
விட்மனின் கவிதை வீட்டைத் தாண்டிய வெளியொன்றில் நடக்கிறது. பிரபஞ்சத்தோடு
நேரடித் தொடர்பில் இருக்கும் புறவெளி. இந்த உரையாடலே வீட்டைப்
பின்னணியாகக் கொண்டிருந்தால் ஒருவேளை தாய்க்கும் மகளுக்குமாக
இருந்திருக்குமோ, என்னவோ! ஆனால் வீட்டைத் தாண்டிய வெளியில், குழந்தைகளை
வழிநடத்தும் பொறுப்பு காலம்காலமாக ஆணுக்கு, தந்தைக்குத்
தரப்பட்டிருக்கிறது. பாலினப் பாகுபாட்டின் தடத்தைப் பற்றி, பிறழாது
நடைபோடுகிறது விட்மனின் கவிதை.
தந்தையின் இரண்டு முகங்கள்
என் தந்தையைப் பொறுத்தவரை, தொடக்கத்திலிருந்தே, வீட்டைத் தாண்டிய
வெளியில், என் பள்ளியிலிருந்து, என் அரசாங்கப் பணிவரையிலும் அனைத்தையும்
தேர்ந்தெடுத்தது என் தந்தை. அவர் அலுவலகப் பணியிடத்தை மையமாகக்கொண்டுதான்
எங்கள் குடும்பம் இயங்கியது. முன்கோபக்காரராக இருந்தவர் அவர். ஆனால்,
காலப்போக்கில் என் அம்மா மறைந்த பின், குறிப்பாக நான் சந்தித்த இரண்டாவது
விபத்துக்குப் பின், “ஆண் சுபாவங்கள்” என்று
கட்டமைக்கப்பட்டிருக்கப்பட்டவை அவரிடம் சிறிது சிறிதாக மறைந்தன.
இவ்விடத்தில் ஓர் ஆண் தன் மனைவியிடம் காட்டும் முகத்துக்கும்
குழந்தைகளிடம் காட்டும் முகத்துக்குமான வேறுபாட்டைக் குறிப்பிடுவது
அவசியம். பொதுவாக, இணக்கமில்லாத மணவுறவில், மனைவியிடம் வன்மத்தைக்
காட்டுகிற ஆண்கூட, குழந்தையென்று வருகிறபோது நெகிழ்ச்சி கொள்ளுதல்
நடக்கிறது. அதிலும், பெண் குழந்தைகளிடம் இந்த நெகிழ்ச்சி
பரிமளிக்கும்போது, அதன் அடர்த்திப் பரிமாணமே வேறு! (பொதுவாக என்று நான்
சொல்லும்போது விதிவிலக்குகளும் உண்டு என்ற உள்ளிடைப் பொருளோடு சேர்த்தே
இதை வாசிக்கவும்.)
ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கும் “அப்போது அது வேறாக இருந்தது”
(”வருவதற்கு முன்பிருந்த வெயில்,” எதிர் வெளியீடு) ஆணின் / தந்தையில்
இந்த இரண்டு முகங்களை அருகருகே வைத்துக்காட்டும் நல்லதொரு சிறுகதை.
மனைவியை இழந்த நிலையில், தன் மகள் கணவனிடமிருந்து வன்முறையைச்
சந்திக்கிறாள் எனத் தெரிந்துகொள்கிறார் தந்தை. ”கன்றிப்போன அவள்
முகத்தைப் பார்த்து” மனமுடைந்து, பிறகு அவளைத் தேற்றி அவளது கணவனின்
ஊர்வரை கொண்டுவிடும் தந்தைக்கு தான் தன் மனைவிக்குச் செய்த கொடுமைகள்
நினைவுக்கு வருகின்றன. தன் மனைவியை அவர் அடித்துத் துவைத்திருக்கிறார்,
”மலட்டுத் தேவடியா” என்று வசைபாடியிருக்கிறார். ஆமாம், அப்போது அது
வேறாகத்தான் இருந்தது. ஆனால் இந்தக் கதையில் வருகிற தந்தையும் தன்
மகளிடம், ‘தாங்கிக்கொள்ள’ அறிவுறுத்துகிறார்: “பொறுமையா இருக்கறது
எப்பவுமே கொறையாவாது.” தன் மகளை விட்டுவிட்டு, மாமனார் ஊருக்குச் சென்று
மென்மையாக உறவு பாராட்டிவிட்டு வருகிறார்.
வால்ட் விட்மனின் கவிதையில் வருகிற தந்தையைப் போலத்தான் பெரும்பாலும்
தந்தைகள் தத்தம் மகள்களிடம் பொறுமையோடிருக்க, தாங்கிக்கொள்ளச்
சொல்கிறார்கள், கற்றுத்தருகிறார்கள். குடும்பமானாலும் சரி, கல்வி, வேலை
என வெளியுலகமானாலும் சரி. மேலும், விட்மனின் கவிதையிலாகட்டும், என்
வாழ்க்கையில் ஆகட்டும், கார்ல் மார்க்ஸின் சிறுகதையில் ஆகட்டும்,
தந்தைக்கும் மகளுக்குமான உரையாடல் நடக்கும்போது, மனைவி அல்லது தாய்
காட்சியில் இல்லை, அல்லது காட்சியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறாள்.
அவள் இடம் அங்கே வெற்றிடம்.
பாலின குணமாற்றம்
பொறுமையை, தாங்கிக்கொள்ளலைத் தன் மகளுக்குப் போதிக்கும் ஆண், அதைப்
போதிக்கும்போதே “பெண் இயல்பாகப்’ பண்பாட்டில் முன்மொழியப்பட்டிருப்பதை
சுவீகரித்துக்கொள்கிறான் என்று எனக்குத் தோன்றுகிறது. அதுவும், மனைவியின்
இருப்புகூட இல்லாதபோது. அதே நேரத்தில் மனைவி உடனிருக்கும்போது, ஆண்
இத்தகைய குணங்களை உள்ளீர்த்துக்கொள்வதோ, வெளிக்காட்டிக்கொள்வதோ
அபூர்வமாகவே இருக்கிறது.
சிவனுடைய “தாயுமானவன்” என்ற காரணப் பெயரின் விசேடத்தன்மையும் அது
தனித்துக் கொண்டாடப்படுவதும்கூட தந்தை தாயாக மாறும் ‘பாலின குணமாற்றம்’
அபூர்வமாக இருப்பதால்தானே! ஆனால் இந்தக் குணமாற்றங்கள் குறிஞ்சிப்
பூக்களாக இல்லாமல் சாதாரண நிகழ்வுகளாகும்போது, ஒவ்வொரு மனிதருக்கும்
இரண்டு தாய்கள் பிறப்பிலிருந்தே கிடைத்துவிடுவார்கள். எப்பேர்ப்பட்ட
அதிர்ஷ்டம் அது!

mohan alagar

unread,
Jun 17, 2018, 10:05:39 AM6/17/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: பெண்களின் பொருளாதாரத்தை முடக்கும் பாலியல் வன்முறைகள்!
அர்ச்சனா சவுத்ரி, சரிதா ராய், திவானி பண்ட்யா
புது டெல்லியில் மார்க்கெட்டிங் துறையில் நிர்வாகியாகப் பணிபுரிபவர்
கியாத்தி மல்ஹோத்ரா. இவர் கைகளில் இரண்டு பொருட்கள் இல்லாமல் வெளியில்
செல்வதே இல்லை. ஒன்று எலெக்ட்ரிக் ஷாக் கருவி. மற்றொன்று மிளகு
தெளிப்பான் (பெப்பர் ஸ்பிரே).
இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த 10 ஆண்டுகளில் 80
விழுக்காடு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெரு நகரங்கள் முதல்
சிறு நகரங்கள் வரை பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல்
வன்முறைகளினால் படுகொலைகளும் அதிகரித்திருக்கின்றன. பொதுப்
போக்குவரத்தில் பெண்களுக்கு இருக்கிற பாதுகாப்பற்ற சூழல், நடந்து
செல்கையில் விசிலடித்து அழைப்பது, இரவுநேர பயணங்கள் மற்றும் தாக்குதல்கள்
இவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மல்ஹோத்ராவுக்கு ஒரு கார்
அவசியமாகிவிட்டது. அதற்கு ஓர் ஓட்டுநர். இதனால் இவருடைய மாதாந்திர
ஊதியத்தில் இதற்கென்று ஒரு பெரும் பகுதியைச் செலவிட நேர்ந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்
நிர்வாகியாகப் பணிபுரிபவர் வித்யா லக்ஷ்மன். இவர் தனது வீட்டிற்கு ஒரு
குறிப்பிட்ட தொகை செலுத்தி பட்டாலியன் (பாதுகாப்பு வீரர்) ஒருவரைப்
பாதுகாப்புக்காக நிறுத்தியுள்ளார். இதுபோக வீட்டின் முன்பு
கேமராக்களையும் பொருத்தியுள்ளார். இவ்வளவும் தனது குழந்தைகளின்
பாதுகாப்புக்காக செய்துள்ளார். டெல்லியில் வங்கியில் பணிபுரிந்து
கொண்டிருந்த சஜ்னா நாயர் தனது வேலையை விட்டுவிட்ட பிறகு இதுவரையில் 2
லட்சம் டாலர்கள் வரையில் இழந்துள்ளார். வேலைக்குச் செல்வதால் தனது மகளின்
பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இவர் தனது
வேலையை விட்டுள்ளார்.
அண்மையில், மிகக் கொடூரமான முறையில் வன்புணரப்பட்டு,
சித்ரவதைக்குள்ளாகப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர்
மாநிலத்தின் 11 வயது பெண் குழந்தையையும், உத்தரப் பிரதேசத்தில் பாலியல்
வன்புணர்வு செய்யப்பட்டு 16 வயது பெண் குழந்தை படுகொலை செய்யப்பட்டதையும்
மறந்திருக்க மாட்டோம். இவை இரண்டும் பெண் குழந்தைகளை இந்தியா எவ்வாறு
நடத்துகிறது என்பதை என்ற கேள்வியை உலுக்குவதாய் இருந்தது. சட்ட
வல்லுநர்கள் இத்தகைய குற்றங்களுக்குத் தண்டனையைக் கடுமையாக்க
வேண்டுமென்று கூறி வருகின்றனர். ஆனால், நாம் கண்ட நேர்காணல்களின் மூலம்
இதுபோன்றக் குற்றங்களுக்குப் பின்னால் பொருளாதார விளைவுகளின் தாக்கம்
அதிகரித்திருக்கிறது என்பது மட்டும் நமக்குப் புரிகிறது. பல பெண்கள்
தங்களுடைய பாதுகாப்பு, தங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பு காரணங்களுக்கான
அதிக ஊதியம் கிடைத்து வந்த வேலையை விட்டு நின்று விட்டனர். குறைந்த
ஊதியம் கிடைத்தாலும் பரவாயில்லை எனக் குறைந்த ஊதியம் கிடைக்கும்
பாதுகாப்பான நிறுவனங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
2004ஆம் ஆண்டிலிருந்து எட்டு ஆண்டுகளில் இரண்டு கோடிப் பெண்கள்
இந்தியாவில் தங்கள் வேலையை விட்டுச் சென்றுள்ளனர் என்று உலக வங்கியின்
மதிப்பீடு ஒன்று கூறுகிறது. இது லண்டன், நியூயார்க் மற்றும் பாரிஸ்
உள்ளிட்ட நகரங்களில் வாழும் மக்கள்தொகைக்கு இணையானது.
"என்னுடைய குழந்தையை தனியாக விட்டுச் செல்லுமளவுக்கு பாதுகாப்பான இடம்
ஒன்று கூட இல்லை" என்று கவலையோடு கூறுகிறார் இந்து பண்டாரி. ஒரு லாபகரமான
நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் தனது குழந்தையின் பாதுகாப்புக்காக
அந்தப் பணியை விட்டுவிட்டார். "ஒரு குழந்தையின் மீது பாலியல் வன்முறை
நிகழ்த்தப்பட்டால், அதை என்னுடைய குழந்தையின் நிலையிலிருந்துதான்
எண்ணுவேன்" என்கிறார் அவர்.
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவில் இயங்கும்
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள்தான் பெண்களை வேலைக்கு
அமர்த்தும் முடிவையும் இங்கு தீர்மானிக்கின்றன. அதற்கேற்றவாறு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதாக எண்ணி அந்நிய
முதலீடுகளைக் குவித்துக்கொண்டு இருக்கிறார் மோடி. பெண்களுக்கு எதிரான
வன்முறைகளையும், பாலியல் தாக்குதல்களையும் எவ்வாறு, எவ்வளவு காட்டலாம்
என்பதை ஒட்டுமொத்த இந்தியா காட்டிக் கொண்டிருக்கிறது.
அதிகரித்து வரும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு, அவர்களுக்கான சமத்துவம்
போன்ற காரணங்களால் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி
மதிப்பு 770 பில்லியன் டாலர்களாக உயருமென்று மெக்கின்சே என்ற சர்வதேச
நிறுவனம் கூறுகிறது. இப்போது 27 விழுக்காடு பெண்கள் மட்டுமே வேலைவாய்ப்பு
பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை என்பது வளர்ந்து வரும் மற்ற நாடுகள்
மற்றும் ஜி-20 நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவாகும். சவூதி
அரேபியாவுடன் சற்று தேறலாம் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம் என்று
இந்தியா ஸ்பென்ட் கூறுகிறது.
"ஒருவேளை பாதுகாப்பான சமூக சூழலை உருவாக்கிக் கொடுத்தால் கூடுதலான
பெண்கள் துணிந்து வெளியில் வேலைக்குச் செல்வார்கள்" என்கிறார் அஞ்சலி
வெர்மா. இவர் மும்பையில் உள்ள பிலிப் கேபிடலில் பொருளாதாரவியலாளராக
உள்ளார். "கடந்த 10 ஆண்டுகளாக ஒட்டுமொத்த நுகர்வு, சேமிப்பு, பொருளாதார
வளர்ச்சி ஆகியன அதிகரித்து வருகிறது" என்கிறார் கிரிஜா போர்க்கர். இவர்
பிரவுன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவில் முனைவர் பட்டத்திற்கான
மாணவர். இவர் நடத்திய ஆய்வு, டெல்லிப் பல்கலைக்கழகத்தில் படிக்கிற
4,000க்கும் அதிகமான பெண்கள் வீதிகளில் நடந்து செல்லும்போது நடக்கிற
பலவிதமான தொந்தரவுகள் உள்ளிட்டவற்றிலிருந்து தப்பிக்கவும், பாதுகாப்பான
பயணங்களை மேற்கொள்ளவும் கூடுதலாகச் செலவிடுகின்றனர் என்கிறது. ஆண்களைக்
காட்டிலும் பெண்கள் 300 டாலர்கள் வரை கூடுதலாக செலவிடுகின்றனர் என்கிறது
இவரது ஆய்வு. "நகரமயமாதல் அதிகரிக்க அதிகரிக்கப் பெண்களுடைய பாதுகாப்பை
அதிகரிக்கவும் சிறந்தக் கொள்கைகள் வகுக்க வேண்டியத் தேவை
அதிகரித்துள்ளது" என்கிறார் போர்க்கெர்.
இந்தியாவில் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே பலவற்றில் முன்னுரிமை
அளிக்கப்படுகிறது. பெண்களைக் காட்டிலும் 3.7 கோடி ஆண்கள் கூடுதலாக
உள்ளனர். இந்தியாவில் மூன்றில் இருவர் இன்னமும் கிராமங்களில்தான்
வாழ்கின்றனர். இந்தக் கிராமங்கள் இன்னமும் நிலப்பிரபுத்துவத்தையும்,
சாதியையும், பாலினப் பாகுபாட்டையும் பெருமளவில் கையாண்டு
கொண்டிருக்கின்றன. இதனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து
முறையான வழக்குகள்கூட இங்கு பதியப்படுவதில்லை. குற்றவாளிகள் பெரும்பாலும்
தண்டிக்கப்படுவதே இல்லை. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின்
நிலைமை இதில் மிகவும் மோசமான ஒன்றாகவே உள்ளது.
2007ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பெண்களுக்கு
எதிரான குற்றங்கள் 83 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்று அரசு
அறிக்கைகளே கூறுகின்றன. மணிக்கு 39 குற்றங்கள் இந்த நாட்டில் பெண்களுக்கு
எதிராக நடைபெறுகிறது. சட்ட வல்லுநர்களும், மேலும் சிலரும் பெண்
குழந்தைகளை வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டுமென்று
அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மரண தண்டனை பெண் குழந்தைகளை
வன்புணர்வு செய்பவர்களை அச்சுறுத்திக் கட்டுப்படுத்தும் என்பது அவர்களது
கருத்து. இன்று பல்வேறு தொழில் நிறுவனங்கள் வேலைக்கு வரும் பெண்களுக்கு
மட்டும் தனியாக வாகனங்கள் வைத்து அழைத்து வருவதும், அழைத்துச் சென்று
விடுவதும் செய்து வருகிறது. இருப்பினும் இவையெல்லாம் பெண்கள் மீதான
குற்றங்களைக் கட்டுப்படுத்த போதவில்லை என்பதுதான் யதார்த்தம்.
"வளர்ந்த பொருளாதார நாடுகளில் சமூகக் கட்டமைப்புகள், சிறந்த போக்குவரத்து
உள்கட்டமைப்புகள் மற்றும் சிறந்த காப்பக வசதிகள் உள்ளன" என்கிறார் நந்தா
மஜூம்தார். இவர் சட்ட அமைப்புக்கான அறிவுசார் மூலதனம் மற்றும் துறைசார்
மேம்பாட்டு நிறுவனமான நிஷித் தேசாய் அசோசியேட்ஸ் நிறுவனத்தின்
தலைவராகவுள்ளார். சஜ்னா நாயர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருவாய்
ஈட்டி வருகிறார். இப்போது இவர் பொது உறவுகள் சார்ந்த வணிகத்தில் இயங்கி
வருகிறார்.
டெல்லியைச் சேர்ந்த 25 வயது பெண் ஜெபா பாலியல் வன்புணர்வுக்கு
உள்ளாக்கப்பட்ட பிறகு, இவரை நர்சிங் பள்ளிக்குச் செல்ல குடும்ப ஆண்
உறுப்பினர்கள் மறுத்து விட்டனர். "இதுவே நான் ஆணாக இருந்திருந்தால்
முற்றிலுமாக மாறுபட்டு இருந்திருப்பேன்" என்கிறார் அவர். டெல்லியின்
கிழக்குப் புறநகரான நொய்டாவில் இருப்பவர் இந்து பண்டாரி. இவருக்கு வயது
39. இவர் 10 ஆண்டுகளுக்கும் மேல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில்
பணிபுரிந்துள்ளார். இவர் தனது மூன்று வயதில் வீட்டில் பணிபுரிந்த ஆண்
ஒருவரிடம் அத்துமீறலை எதிர்கொண்டார். ஆறு வயதில் தனது தந்தையுடன்
பணிபுரியும் சக ஊழியர் ஒருவரிடம் அத்துமீறலை எதிர்கொண்டார். "என்னுடைய
போக்குவரத்துப் பயணங்களில் பொதுப் போக்குவரத்தும் ஒரு பங்கு வகிக்கிறது.
பெண்களுக்காகத் தனி அறைகள் பொதுப் போக்குவரத்தில் இங்கு இல்லை. ஒருமுறை
பயணம் செல்லும்போது ஒருவர் உரசிச் சென்ற மோசமான அனுபவம் நேர்ந்தது.
அதிலிருந்து முழுதாக மீண்டுவர மூன்று மாதங்கள் ஆனது. பணம் செலவிட்டு
சுதந்திரமாகச் செல்லும் முறைகளுக்கு என்னை மாற்றிக்கொண்டேன்" என்கிறார்
அவர்.
மல்ஹோத்ராவுக்கு வாகன ஓட்டுநருக்கு ஊதியம், பெட்ரோல் செலவு ஆகியவையே பாதி
ஊதியத்தை முழுங்கி விடுவதாகவும் வருத்தப்படுகிறார். நொய்டாவில் இருக்கும்
40 வயது பெண்மணி மோனிகா கோஷ். இந்த அமைப்பு முறையே பெண்களுக்கு குறைவான
வாய்ப்புகளைத்தான் அளிக்கிறது என்கிறார் அவர். மேலும், "வேலைகளும்,
பாதுகாப்பகங்களும், பாதுகாப்பான பயணங்களும் பெண்களுக்கு அவசியமானது.
இப்போது நான் வீட்டுக்குள்ளேயே வேலை செய்கிறேன். மாதம் 12,000 ரூபாய்
கிடைக்கிறது. இதுவே வெளியில் சென்று முழுநேரம் வேலை செய்தாலோ அல்லது இரவு
எட்டு மணி வரை வேலை செய்தால் கூட எனக்கு 20,000 ரூபாய் கிடைக்கலாம்.
நொய்டாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்துக்கு பேருந்துகளே
இல்லை என்பதுதான் பிரச்சினை. இதனால் கிராமங்கள் பெண்களுக்கு ஒரு
வேலியிட்டுள்ளன. இங்கு பெண்கள் பயணிப்பதும் பாதுகாப்பாக இருக்காது"
என்கிறார் அவர்.
நன்றி: புளூம்பெர்க்

mohan alagar

unread,
Jun 17, 2018, 10:00:13 PM6/17/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணந்தூர், தேவிரள்ளி, குடிமேனள்ளி போன்ற
கிராமங்களில் சிறுபான்மை விவசாயிகளின் நிலங்களை ஊடறுத்து உயர்
மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இதற்காக வழக்கம்போல விவசாய நிலங்களை அபகரிக்கும் பணியும்
தொடங்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், மொத்தமாக
விவசாய நிலங்கள் என்றில்லாமல், இங்கே இருக்கும் சிறு குறு விவசாய
நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது அரசு.
தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் சிறு குறு நிலங்களையும் இந்தத்
திட்டத்திற்காக இழக்க வேண்டியிருக்கும் என்பதால் அந்த நிலங்களைச் சேர்ந்த
விவசாயிகளும் அவர்களுக்கு உறுதுணையாகக் கிராம மக்களும் போராட்டத்தில்
ஈடுபட்டு வருகிறார்கள்.
காவலர்களின் தொடர் வருகையால் சந்தேகமடைந்த மக்கள், நிலம்
அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தத்தமது நிலங்களிலேயே பெண்கள்,
குழந்தைகளோடு வந்து தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைக் கலைப்பதற்காக, ஆயிரக்கணக்கான காவல்
துறையினரும், ஆயுதப் படையினரும் இறக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களின்
நிலங்களைக் காக்க அமைதியாகத் தங்கள் நிலங்களில் முகாமிட்டிருக்கும்
மக்களை, பெண்கள், குழந்தைகள் என்று பாரபட்சம் பார்க்காமல்
விரட்டியடிக்கின்றனர் காவலர்கள்.
சொந்த நிலத்தில் அமர்ந்திருக்கக்கூட உரிமை மறுக்கப்படும் அம்மக்களின்
நிலம் மீதான உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டம் வெற்றி அடைய வேண்டும்.
விவசாய நிலங்களை விடுத்து, வேறு நிலங்களில் வழி அமைக்கும் திட்ட
வரைவுக்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்.
- நரேஷ்

Palaniappan kandasamy

unread,
Jun 18, 2018, 1:04:41 AM6/18/18
to brail...@googlegroups.com
ஊருக்கு இளைத்தவன் யார்? பிள்ளையாரு கோவில் ஆண்டிதானே. பகிர்வுக்கு நன்றி, வாழ்க. உயருந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
கந்த பழனியப்பன் கோவை 4.

-----Original Message-----
From: brail...@googlegroups.com [mailto:brail...@googlegroups.com] On Behalf Of mohan alagar
Sent: 17 ஜூன் 2018 07:35
To: Valluvan Paarvai
Cc: inaiathendral
Subject: [Braille Acl] மின்னம்பலம்

Palaniappan kandasamy

unread,
Jun 18, 2018, 2:01:31 AM6/18/18
to brail...@googlegroups.com
வ்வளவு நாளைக்குத்தான் இதையே சொல்லீட்டிருக்கப்போரீங்க? ஏன் ஒரு பெண்ணால் அமில பல்பும் பெப்பர் ஸ்ப்ரேவும் எடுத்துச்செல்ல முடியாதா? மகளிர் இன்னும் தங்களை சூழலுக்கேற்ப update, upgrade செய்துகொள்ளவில்லை. சிறியரக துப்பாக்கிக்கூட வாங்கிவைத்துக்கொள்ளலாம். அமரிக்கப்பெண் ஒருத்தி தன்னை ரேப் செய்யவந்த ஒருவனை சுட்டுக்கொன்றதாக படித்திருக்கிறேன். வன்கொடுமையாளர்கள் பல சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்டவர்களாக வருகின்றன பெண்களும் அவ்வாரு கூட்டமாக செல்ல்லாம். தாங்கள் பயன்படுத்தும் கார்களுக்கு பெண்களையே சாரதிகளாக வைத்துக்கொள்ளலாம். ஆபட்டு ஏர்ப்பட்டதும் மற்றவர்களை கவனம் திருப்பி அழைக்க தனிப்பட்ட விசில்கள் வைத்துக்கொள்ளலாம். எப்போதும் அபாயத்தை எதிர்நோக்கி பதற்றப்படாமல் துணிவுடன் சமயோசிதமாக செயல்பட பயிற்சிபெற்றுக்கொள்ளலாம். கராத்தே ஜூடோ போன்ற தற்காப்பு பயிற்சிகள் பெற்று பயன்படுத்தலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. புலம்பலை விடுங்கள். பகிர்வுக்கு நன்றி. வாழ்க, உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
கந்த பழனியப்பன் கோவை 4.

-----Original Message-----
From: brail...@googlegroups.com [mailto:brail...@googlegroups.com] On Behalf Of mohan alagar
Sent: 17 ஜூன் 2018 19:36
To: Valluvan Paarvai
Cc: inaiathendral
Subject: [Braille Acl] மின்னம்பலம்

Palaniappan kandasamy

unread,
Jun 18, 2018, 2:19:16 AM6/18/18
to brail...@googlegroups.com
ஏன் தனியாக போராடுகிறார்கள்? தாங்கள் பொன்னான வாக்குகளை அளித்து பெருவாரி வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்த சட்டமன்ற நாடாளுமன்ற உள்ளாட்சி உறுப்பினர்களை சட்டையை பிடித்து இழுத்துவந்து சேர்ந்து போராடவேண்டியதுதானே? பகிர்வுக்கு நன்றி, வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
கந்த பழனியப்பன் கோவை 4.

-----Original Message-----
From: brail...@googlegroups.com [mailto:brail...@googlegroups.com] On Behalf Of mohan alagar
Sent: 18 ஜூன் 2018 07:30
To: Valluvan Paarvai
Cc: inaiathendral
Subject: [Braille Acl] மின்னம்பலம்

mohan alagar

unread,
Jun 18, 2018, 10:09:22 AM6/18/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: கட்டுப்படுத்துபவர்களைக் கையாள்வது எப்படி?
நித்யா ராமதாஸ்
பணி வாழ்க்கை குறித்த தொடர் - 2
நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தாலும், அலுவலகத்தில் உடன் பணி
புரிபவர்கள் அவ்வப்போது தரும் தொந்தரவுகள் நம்மைப் பாதிக்கும். அதுவே
நாளடைவில் அதிகாரம் செய்து அழுத்தி வைக்கும் குணமாக மாறும்போது உங்களது
மொத்த அலுவலக வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகும். எல்லாப்
பணியிடங்களிலும் இதுபோல கண்ட்ரோல் செய்யும் குணம் கொண்ட நபர்கள் இருக்கவே
செய்கின்றனர். சில நுணுக்கங்களை மட்டுமே கொண்டு, அவர்களை உங்களுடைய
கவனத்தில் வைக்காமல் இருக்கலாம்.
கருத்துகளை நேரடியாக வெளிப்படுத்துங்கள்
நீங்கள் சரியான விதிகளைப் பின்பற்றி வேலைகளைத் திறம்படச் செய்தாலும், இதை
இப்படிச் செய்யலாமே, இந்த முறையை ஃபாலோ செய் என்பது போன்ற தேவையில்லாத
கட்டளைகளை உங்கள் மீது திணித்துத் திக்குமுக்காடச் செய்வார்கள். அவர்கள்
செய்யும் வேலையில் நீங்கள் குறுக்கிடாமல் இருந்தாலும், மற்றவர்களை
அதிகாரம் செய்யும் குணம் இருப்பதால், அனுமதியின்றித் தலையிடுவது
அவர்களின் வாடிக்கையாகவே இருக்கும். தொடர்ந்து உங்களுக்குக் கட்டளைகளை
இடுவதால், தேவையில்லாத, கூடுதல் பளுவைத் தருகிறார்கள். வேலையில் மட்டுமே
சிந்தனையையும் கவனத்தையும் செலுத்த வேண்டிய உங்களுக்கு இந்தக் கட்டளைகள்
தேவையில்லாத நெருக்கடியை மட்டுமே தருகின்றன.
அவர்களை அவர்கள் பாணியில் அணுகுவதே சரி என்று நினைத்து அதட்டும் தொனியில்
பதில்களைத் தருவதோ, வீண் வாக்குவாதம் எதுக்கு என்ற எண்ணத்தில் பேசாமல்
பொறுத்துக்கொள்வதோ சரியான தீர்வாக இருக்காது என்பதே கார்ப்பரேட்
வல்லுநர்களின் கருத்து.
அவர்கள் தரும் கட்டளைகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை மிகவும்
எளிமையாகவும், தைரியமாகவும் சொல்லுவதே சரியான முறை. “உங்களது யோசனைக்கு
நன்றி. ஆனால், எனது முறைதான் எனக்குச் சரி”, “இந்த வேலை என்னுடையது. நானே
செய்கிறேன். தேவையென்றால் உதவி கேட்பேன்'' என்பது போன்ற பதில்களை
அவர்களுக்கு அளிப்பதன் மூலம், உங்களிடம் அடுத்த கட்டளையைத் தரச் சற்று
சிந்திப்பார்கள். நேரடியாகப் பதில் அளித்து உங்களை நிலைநாட்டிக்கொள்வதால்
அலுவலக வாழ்க்கையில் எந்தவொரு நெருக்கடியும் ஏற்படாது. இது போன்ற
தைரியமான அணுகுமுறை உங்களுக்கு அலுவலக வட்டாரத்தில் நல்ல மதிப்பையும்
தரும்.
வாக்குவாதம் வேண்டாம்
நீங்கள் செய்யும் வேலையில் கட்டளைகளை மட்டும் தராமல், உங்களுடைய அன்றாட
நேரத்தைப் பற்றித் தேவையில்லாத விதத்தில் கருத்து சொல்லும் குணமும்,
கலந்துரையாடலில் உங்களது யோசனைகளை வேண்டுமென்றே மட்டம் தட்டிப் பேசும்
குணமும் இவர்களிடம் காணப்படும். பாஸிவ் அக்ரஷன் (Passive Aggression)
என்ற மிகவும் மென்மையான குரல் மற்றும் குணங்களை வெளிப்படுத்தி, அதே
நேரத்தில் சூசகமாக உங்களை அழுத்திவைக்கும் குணங்கள் இவை. ஒருகட்டத்துக்கு
மேல், அவர்களுடைய கண்ட்ரோல் செய்யும் வாடிக்கைகள் அழுத்தம் மட்டுமல்லாது
கோபத்தையும் சேர்த்து வரவழைக்கும்.
கோபம் ஏற்படுவது மிகவும் சாதாரணம்தான் என்றாலும், அலுவலக
வட்டாரத்திற்குள் உங்களுடைய கோபமே உங்கள் எதிரியாக மாறுவதற்கு
வாய்ப்புகள் அதிகம். இதற்குச் சரியான தீர்வு, அவர்களிடம் பேசாமலும்,
கண்டுகொள்ளாமல் இருப்பது. ஒன்று அல்லது இரண்டு முறை உங்களுடைய
அசெளகரியத்தை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து அவர்கள் அதே முறையில்
உங்களிடம் நடந்துகொண்டால், அதன்பின் அவர்கள் இருப்பதையே கண்டுகொள்ளாமல்
விட்டுவிடுவது நல்லது. உங்களுடைய கருத்தையும், எதிர்ப்பையும்
நிலைநாட்டும் விதமாக வாக்குவாதம், கோபமான இ-மெயில் போன்ற செயல்கள்
உங்களுக்கு ‘பிளாக் மார்க்’காக மாறிவிடும்.
பகிர்வது நல்லது
ஒரு நபர் அல்லது ஒரு குழுவே சேர்ந்து கண்ட்ரோல் செய்தாலும், உங்கள்
பக்கம் இருக்கும் எண்ணிக்கை அதிகமாக இருப்பது உங்களுக்குக் கூடுதல் பலமே.
இந்தச் சமயத்தில்தான் அலுவலக நட்புகள் கைகொடுக்கின்றன. உங்களுடைய குழு
அல்லது மற்ற குழுவில் இருக்கும் நண்பர்களிடம் உங்களுடைய உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ளுங்கள். நேரடியாக அவர்களிடம் பதிலளிக்க இயலாவிட்டாலும்,
நண்பர்களின் ஆதரவு உங்களது மன உளைச்சலைப் பெருமளவில் குறைக்கவல்லது.
உங்கள் பக்கம் இருக்கும் எண்ணிக்கை மற்றவர்களுக்கு ஆபத்தாகவும்
இருக்கலாம். இதனால், உங்களுக்குத் தொந்தரவுகளையும் தர மாட்டார்கள்.
உயரதிகாரிகளிடமும் பகிரலாம்
பொதுவாக, அலுவலகத்தில் நாம் சந்திக்கும் வேலை மற்றும் மன ரீதியான
சிக்கல்களை நாமே சரி செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே
மேலோங்கியிருக்கும். ஆனால், சில சந்தர்ப்பத்தில் உயர் அதிகாரிகளிடம்
சென்று பகிர்ந்துகொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை. சிலர் தாங்கள்
வைத்ததுதான் சட்டம் என்று உங்களை அழுத்தி, தங்கள் வேலையையும் சேர்த்து
உங்கள் மீது திணிக்கவும் செய்வர். மற்ற யாரிடமும், குறிப்பாக
உயரதிகாரிகளிடம் நீங்கள் சொல்ல முடியாது என்ற எண்ணத்தில் உங்களிடம்
செயல்படுவார்கள். உயரதிகாரிகளிடம் உங்களுடைய குணம் மற்றும் வேலை தன்மை
மூலம் ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளுதல் இந்த இடத்தில் அவசியமாகிறது.
உங்களை மட்டம் தட்டிச் செயல்படும் நபர்களுக்கு, உண்மையான அதிகாரி யார்
என்பதை அவ்வப்போது சுட்டிக்காட்டுவது சரியானதே. உங்களுக்கு ஏற்படும் மன
உளைச்சலையும், உங்களை அவர்கள் நடத்தும் விதத்தைப் பற்றியும் மனிதவளத்
துறையினர் அல்லது உங்களுடைய மேலாளரிடம் சென்று பகிருங்கள். குறை கூறும்
விதமாக இல்லாமல், உங்களுடைய உணர்வுகளையும் அசெளகரியத்தை மட்டுமே
பகிர்ந்துகொள்ளுங்கள். சிலருக்கு இந்த நடவடிக்கை மிகவும் பாதிப்புகளை
ஏற்படுத்துமோ என்ற கேள்வியை எழுப்பச் செய்யும். ஆனால், உயரதிகாரிகளிடம்
பகிர்ந்துகொள்வதால், உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களைப் போல
அலுவலகத்தில் மற்றவர்கள் படும் சிரமத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்ததுபோல
இருக்கும்.
மின்னஞ்சல் முகவரி: feed...@minnambalam.com
உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கவில்லையா?
பலா பற்றிய தகவல் சுளைகள்!
தினப் பெட்டகம் – 10 (18.06.2018)
பலாப்பழம் என்று சொன்னாலே நாசியில் மணமும் நாவில் சுவையும் ஊறுகின்றன
இல்லையா? கடையநல்லூர் - தென்காசி நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசை என்று
ஒரு பகுதி இருக்கிறது. அங்கு முழுவதும் பலாப்பழ வியாபாரம்தான். அந்த
இடத்தைக் கடக்கும்போதே வாசனை ஆளைத் தூக்கும். பலாப்பழ சீசனில் கேட்கவே
வேண்டாம். இனிமை மட்டுமே நிரம்பிய பலாப்பழத்தைப் பற்றிய இனிப்பான
வாசனையான தகவல் சுளைகள்:
1. ஒரு வருடத்தில், சராசரியாக ஒரு மரத்தில் 250 பழங்கள்வரை பழுக்கும்.
2. ஒரு பலாப்பழத்தில் ஏறத்தாழ 100 முதல் 500 விதைகள்வரை இருக்கும்.
3. பலாப்பழத்தின் தனித்துவமே அதன் சுவையும் மணமும்தான். மாம்பழம்,
வாழைப்பழம், பப்பாளிப் பழங்களின் சுவைகளின் கலவையாக பலாப்பழத்தின் சுவை
வர்ணிக்கப்படுகிறது.
4. பலாப்பழத்தின் தாவரவியல் பெயர் ஆர்ட்டோக்கார்ப்பஸ் ஹெட்டெரோஃபைலஸ்
(Artocarpus heterophyllus).
5. மரத்தில் காய்க்கும் பழங்களிலேயே மிகப் பெரிதாக வளரக்கூடியது
பலாப்பழம். 3 அடி உயரம், 18 அங்குலம் அகலம் வரை வளரலாம்; 25 கிலோ எடை வரை
ஒரு பழம் பழுக்கலாம்.6. பெரும்பான்மையான பலாப்பழங்கள் மரத்தின்
நடுப்பகுதியிலோ, வலுவான கிளைகளிலோ மட்டுமே காய்க்கும். சில வேளைகளில்,
வேர்களிலும் பலாப்பழம் உருவாவது உண்டு. அப்போது, நிலத்தைப்
பெயர்த்துக்கொண்டு வெளியில் வளருமாம்.
7. பலாப்பழத்தில் 80% தண்ணீர்ச் சத்து உள்ளது.
8. பலாப்பழத்திலேயே மிக மிகச் சுவையானது தேன் பலா. இலங்கைப் பகுதியில்
பெரும்பாலும் இவ்வகை கிடைக்கும்.
9. பலாமரத்தின் வேர் மருத்துவக் குணமுடையது. காய்ச்சல், ஆஸ்துமா, வயிறு
தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வாக இதைக் கொடுப்பார்கள்.
10. அனைத்துப் பாகங்களும் பயன்படும் மரங்கள் வெகுசிலதான். அவ்வகையில் பலா
மரமும் ஒன்று. காய் வகை சமையலுக்கு; பழம் சாப்பிடுவதற்கு; இலை ஆடு
மாடுகளுக்கு; தண்டுப்பகுதி மரப் பொருட்கள் தயாரிக்கச் சிறந்தவை, பூஞ்சை
உருவாகாத மரம்; வேர் மருந்திற்கு.
- ஆஸிஃபா

mohan alagar

unread,
Jun 18, 2018, 9:48:38 PM6/18/18
to Valluvan Paarvai, inaiathendral
இரண்டு பதிவுகள்ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
தண்ணீருக்கான தீர்வு யார் கையில்?
இதுநாள்வரை விஞ்ஞானிகளும் சூழலியல்வாதிகளும்
எச்சரித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது அரசாங்கமே எச்சரிக்கிறது.
அரசாங்கமே எச்சரிக்கிறது என்றால், யாரை எச்சரிக்கிறது? செயல்பட வேண்டியது
யார்? நிதி ஆயோக்கின் சமீபத்திய எச்சரிக்கை நமக்கு எதை உணர்த்துகிறது?
இந்தியாவில் ஒரு நிலையான வளர்ச்சி கொண்டுவர வேண்டும் என்ற ஒரு
நோக்கத்தோடு இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதுதான் நிதி ஆயோக்.
சமீபத்தில் இந்த அமைப்பு இந்தியா முழுவதும் ஆய்வு மேற்கோண்டு ஓர்
அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை புதிதாக எதையும் கூறவில்லை.
அனைவரும் பல காலமாகக் கூறும் ஒரு பாதிப்பைத்தான் அதிகாரபூர்வமாக உறுதி
செய்துள்ளது.
“இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருகிறது. சென்னை, டெல்லி,
மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய 21 நகரங்களில், வரும் 2020ஆம்
ஆண்டிற்குள் நிலத்தடி நீர் என்ற ஒன்று இல்லாமலேயே போய்விடும்” என்பதுதான்
அந்த அறிக்கை சொல்லும் செய்தி. அதுவும் பெங்களூருவிற்குத்
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நிலைமைதான். 2030ஆம் ஆண்டிற்குள்
முழுவதுமாகவே தண்ணீர் இல்லாத நிலமாக பெங்களூரு மாறிவிடும். 2020ஆம்
ஆண்டில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட 21 நகரங்களில்
நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும். இதனால், சுமார் 10 கோடிப் பேர்
பாதிக்கப்படுவார்கள்.
பெங்களூரு மட்டுமின்றி டெல்லி, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களும்
மோசமான தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நகரங்களில்
2020ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் மட்டம் மறைந்துவிடும்.
இது வருங்காலத்துக்கான கணிப்பு. இன்றைய நிலைமைக்கு, இந்தியா முழுவதிலும்
60 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையுடன் வாழ்ந்துவருகிறார்கள்.
தண்ணீர் கிடைக்காமல் வருடத்திற்கு 2 லட்சம் பேர்
இறந்துகொண்டிருக்கிறார்கள்.
இதைவிட அதிர்ச்சியான ஒரு நிகழ்வு, தண்ணீர் இல்லாமையின் விளைவால்
நிகழவிருக்கிறது. இந்தியாவில் நமது மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரில் 70
சதவிகிதம் மிக மோசமாக மாசடைந்துள்ளது. மீதம் இருக்கும் நீரில், 40
சதவிகிதம் பயன்படுத்த தகுதி இல்லாத நீராக உள்ளது. அதாவது, குடிப்பதற்குத்
தண்ணீர் இல்லாத வருங்காலத்தின் முன்னோட்டம் இது. இந்நிலையில், உணவு
உற்பத்திக்குத் தேவையான நீர் என்பது சாத்தியமில்லாதது. தண்ணீர்
பிரச்சினையால் நாட்டின் உணவு தானிய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும்.
எனவே, நீர் இன்மை என்பது உணவு பற்றாக்குறைக்கான முதல் அடி.
வழக்கமாக மக்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் அதற்கு அரசாங்கம்
தீர்வுகளைக் கூறும். பாதிப்புகளுக்குத் தீர்வை முன்வைத்துச் செயல்பட
வேண்டிய அரசாங்க அமைப்புகளே அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு அமைதியாக
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் நிலையான வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தோடு
உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பே, பிரச்சினைக்கான தீர்வைக் கூறாமல்,
பிரச்சினையை விவரித்து மக்களை எச்சரித்துக்கொண்டிருக்கிறது.
அப்படியானால், பிரச்சினைக்கான தீர்வைத் தரப்போவது யார்? தீர்வை நோக்கிச்
செயல்படப் போவது யார்?
விமர்சிக்கப்படும் இந்திரா காந்தியின் திட்டம்!
வங்கிகளைத் தேசியமயமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முன்னாள்
பிரதமர் இந்திரா காந்தியின் இத்திட்டத்தை ஆய்வு செய்ய சிறப்புக் குழு
ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஆலோசனை அமைப்பு ஒன்று பிரதமர் மோடிக்குக்
கடிதம் அனுப்பியுள்ளது.
பப்ளிக் பாலிசி ரிசர்ச் சென்டர் என்ற பாஜக ஆதரவு ஆலோசனை அமைப்பின்
இயக்குநரான சுமித் பாசின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள
கடிதத்தில், “1969ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால்
நடைமுறைப்படுத்தப்பட்ட வங்கிகளைத் தேசியமயமாக்கும் திட்டத்தையும், அதைத்
தொடர்ந்து வங்கித் துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ஆய்வு
செய்வதற்குச் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று நான்
வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தத் திட்டம் ஏன் செயல்படுத்தப்பட்டது என்றே
தெரியவில்லை. அது சரியான நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டிருந்தால் வங்கித்
துறையில் இவ்வளவு நெருக்கடிகள் ஏற்பட்டது ஏன்?” என்று
கேள்வியெழுப்பியுள்ளார்.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு வாராக் கடன் பிரச்சினை மிகப்பெரிய
பேரழிவாக உருவாகியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும்
கணக்கில் கொள்ளப்பட வேண்டும் எனவும் இந்தக் கடிதத்தில் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக காங்கிரஸ் கட்சி தனது
அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும், பொருளாதாரத்தையும் பெருக்கிக்
கொண்டதாகவும் இந்த அமைப்பு குற்றம்சாட்டுகிறது. தற்போதைய மோடி அரசானது
வங்கிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சி செய்து வருவதாகவும், ஜன்
தன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் சுமித்
பாசின் கூறியுள்ளார்.
-

mohan alagar

unread,
Jun 18, 2018, 9:57:42 PM6/18/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: உண்டியல் குலுக்கும் கௌரவம்!
அ.குமரேசன்
மக்கள் ஒற்றுமைக்கு மதவெறிக் கும்பல்கள் விடுக்கும் அச்சுறுத்தலைக்
கண்டித்துச் சிறப்பு மாநாடு ஒன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்வேறு
கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில்,
இதில் அக்கறை உள்ள தொழில்முனைவோர், வணிகர்கள், உயரதிகாரிகள்,
மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடமிருந்து மாநாட்டுச் செலவுக்கு
நிதி திரட்டுவது என்று திட்டமிடப்பட்டது. அவர்களோடு தொடர்புள்ளவர்கள்,
தனிப்பட்ட முறையிலோ, குழுவாகவோ சென்று அவர்களைச் சந்தித்துப் பேசி
நிதியுதவி கோரிப் பெற முன்வந்தனர்.
அப்படியும் பட்ஜெட் இடிக்கும்போல இருந்தது. ஓரிருவர் தங்களது சொந்தப்
பணத்தைக் கொடுக்க முன்வந்தார்கள். எல்லோருமே சொந்தப் பணத்தைக்
கொடுப்பதும் நிகழ்ச்சியை நடத்துவதும் எளிது. ஆனால், அப்படிச் செய்யக்
கூடாது என்று முடிவெடுத்தோம். சொந்தப் பணம் கொடுப்பதை ஏற்றால், அப்படிப்
பணம் கொடுத்தவர்கள் பிற்காலத்தில் தாங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள்
கேட்க வேண்டும் என்ற மனநிலைக்கு உள்ளாவார்கள், அது ஆரோக்கியமானதல்ல.
குறிப்பாகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தலைவர்களோ, உறுப்பினர்களோ எந்த ஒரு
நிகழ்ச்சியையும் தங்கள் சொந்தப் பணத்தில் நடத்துவதற்கு அனுமதியில்லை.
மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில், மாநாட்டு நிகழ்ச்சி நிரலை எவ்வகையிலும்
குறைப்பதற்கு யாருக்கும் மனம் வரவில்லை. அப்படியானால் பட்ஜெட்டில்
விழுகிற பள்ளத்தை எப்படி நிரப்புவது?
உண்டியல் வழி
“ஏன் மக்களிடமே செல்வோமே? நமது இயக்கத்தின் செய்தியை எழுதிய பதாகைகளோடு,
சாலையோரங்களிலும் தெருமுனைகளிலும் மக்கள் கூடுகிற இடங்களில் நின்று
உண்டியல் குலுக்குவோமே…” என்றேன் நான்.
“என்ன தோழரே, கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியாக மாத்திடலாம்னு
பார்க்கறீங்களா” என்று ஒருவர் கேட்டார். எல்லோருடனும் நானும் சேர்ந்து
சிரித்தேன். சிரித்து முடித்த பிறகு இவ்வாறு சொன்னேன்: “மக்களுக்கான ஓர்
இயக்கத்திற்காக மக்களிடமிருந்தே நிதி திரட்டுவதில் என்ன தவறு இருக்கிறது?
அத்தோடு நாம் நடத்தப்போகிற மாநாட்டுக்கான விளம்பரமாகவும் அது அமையுமே?
மக்களிடமிருந்து வெறும் ஆயிரம் ரூபாய்தான் வசூலிக்க முடிகிறது, அல்லது
சும்மா நூறு ரூபாய் மட்டுமே வருகிறது, ஏன் ஒரே ஒரு ரூபாய்தான்
கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அது மரியாதையான தொகை. மக்கள்
அளிக்கும் தொகை. எல்லோரும் வர வேண்டியதில்லை, விருப்பமும் வாய்ப்பும்
உள்ளவர்கள் மட்டும் உண்டியல் குலுக்கலுக்கு வந்தால் போதும்.”
இந்த ஆலோசனை ஏற்கப்பட்டது. உண்டியல் வசூலுக்கான தேதியும் இடங்களும்
முடிவு செய்யப்பட்டன. கிண்டலாகக் கேட்டாரே ஒருவர், அவர்தான் மிக
ஆர்வத்துடன் பங்கேற்றார். அறிவிப்புப் பதாகையின் கீழ் நின்றபடி ஒருவர்
இயக்கத்தின் நோக்கம் பற்றி உரத்த குரலில் எடுத்துரைத்தபடி, அதற்கு
நிதியளித்து ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தார்.
பரிகாசத்துடன் பார்த்துக் கடந்தவர்களும் இருந்தார்கள், கையிலிருந்த காசை
உண்டியல்களில் போட்டுவிட்டுக் கடந்தவர்களும் இருந்தார்கள். உண்டியல்களில்
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் முதல் 100 ரூபாய்,
200 ரூபாய்த் தாள்கள் வரையில் விழுந்தன. உண்டியல்களோடு பட்ஜெட் பள்ளமும்
நிரம்பியது.
ஆலோசனைக் கூட்டத்தில் திட்டமிட்டபடி மாநாடு நடந்து முடிந்த பிறகு, அது
பற்றிய ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் நிகழ்ச்சியின் சிறப்புகள்,
ஏற்பட்ட சில குறைபாடுகள் பற்றிய கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. மொத்த
நிதி வரவு, செலவு பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. செலவு போக
எஞ்சியிருக்கும் சிறு தொகையை, அடுத்த நிகழ்ச்சிக்கான முன்தொகையாக வரவு
வைத்துக்கொள்ளத் தீர்மானித்தோம். உண்டியல் வசூல் பற்றி எல்லோருமே
பரவசத்தோடு பரிமாறினார்கள். பணம் வந்தது என்பதை விட மக்களைச் சந்திக்க
முடிந்ததும், அவர்கள் வெறும் “தர்ம உபகாரம்” என்பதாக இல்லாமல், மாநாட்டு
நோக்கத்துடனான ஒருமைப்பாட்டுடன் காசு போட்டதும் மறக்க முடியாத
அனுபவமாகிவிட்டதைப் பலரும் குறிப்பிட்டனர்.
பண்பாட்டு இயக்கம்
ஒரு கூட்டு முயற்சி என்பதால் அவர்களுக்கு இது புதிய அனுபவமாக அமைந்தது.
கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் இது இயல்பானது. வழக்கமானது.
பழகிப்போனது. பொதுக்கூட்டம், கருத்தரங்கம், மாநாடு என அவ்வப்போது ஏற்பாடு
செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்காக மட்டுமல்லாமல், முழுநேர ஊழியர்களுக்கான
வாழ்க்கைச் செலவு, மருத்துவச் செலவு உள்ளிட்ட நோக்கங்களுக்காக
ஆண்டுதோறும் கட்சி வளர்ச்சி நிதி திரட்டுவதற்கென்றே ஓர் இயக்கம்
அறிவிக்கப்படும். அதில் கட்சியின் மாநில/மாவட்டத் தலைவர்கள், கிளை
உறுப்பினர்கள் என்ற வேறுபாடு பாராமல், பாலினப் பாகுபாடு இல்லாமல்
பங்கேற்பார்கள். தெருத் தெருவாக உண்டியல், துண்டு, பிளாஸ்டிக் வாளி என்று
ஏந்திக்கொண்டு வருவார்கள். அவசரத் தேவைகளுக்கு நண்பர்களிடம் கைமாற்றுக்
கேட்பதற்குக்கூடத் தயங்குகிற கௌரவமிகு நடுத்தர வர்க்கக்
குடும்பங்களிலிருந்து வந்து கட்சியில் இணைந்தவர்கள், கூச்சமே இல்லாமல்
தெருமுனையில் உண்டியல் பிடித்தபடி, அவ்வழியாக வருவோரிடம் “அம்மா நிதி
தாங்க”, “அய்யா காசு போடுங்க” என்று கேட்பதைக் காணலாம். நேரடியாக நிதி
வழங்குவதைக் காட்டிலும் பல மடங்கு பெருமிதத்திற்கு உரியது உண்டியல் வசூல்
இயக்கத்தில் பங்கேற்பது.
இயக்கத்தில் செயல்படுவோரின் தொடர்பு வட்டங்கள் விரிவடைந்துள்ள நிலையில்,
இயக்கத்திற்கு வெளியே வசதியான நிலையில் உள்ளோரும் நிதியுதவி செய்திடத்
தயாராக உள்ள வளர்ச்சிப் போக்கில், இவ்வாறு மக்களை நேரடியாகச் சந்தித்து
அவர்களிடம் எடுத்துரைத்து நிதி பெறுகிற பண்பாடு அரிமானம் கண்டிருக்கிறதோ
என்ற எண்ணம்கூட சில நேரங்களில் தோன்றுவதுண்டு. நிறைய பணம் கையாளப்படும்
சூழலில், சிலரால் அது கையாடப்படும் ஒழுக்க மீறலுக்கும்
வாய்ப்பிருக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்க உறுப்பினர்கள் எங்கோ
வெற்றிடத்திலிருந்து தனிக் கலவைப் பொருட்களால் வார்க்கப்பட்டவர்கள்
அல்லவே? இந்தச் சமுதாயத்திலிருந்து, உடன் வாழும் சக
மனிதர்களிடையேயிருந்து வந்தவர்கள்தானே?
ஆகவே, பணத்தில் கைவைத்து ஊழல் சகதியில் கால் வைக்கிற கேடுகள் ஆங்காங்கே
நடப்பதுண்டுதான். ஆனால், மற்ற பல கட்சிகளில் இந்தக் கேடு ஒரு தகுதியாகவே
ஏற்கப்பட்டிருக்க, இதைத் தட்டிக் கேட்கிறவர்கள் மிகுதியாக இருக்கிற,
அவர்களின் குரல் வலுவாக ஒலிக்கிற தளமாக இருக்கிறது கம்யூனிஸ்ட் இயக்கம்.
இத்தகைய நிதிக் கையாடல் குற்றங்களுக்காக, செல்வாக்கைப் பயன்படுத்தி பெரிய
முதலாளிகளிடமிருந்து பணப்பெட்டி பெற்ற இழிவுக்காக, எவ்வளவு பெரிய
இடத்தில் இருந்தவர்களானாலும் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு,
கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் உண்டு. இதற்கென்றே கட்சியில்
கட்டுப்பாட்டுக் குழு ஒன்று ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
ஊழல் தூசுப் புயலிலிருந்து இயக்கத்தைக் காக்கும் பாதுகாப்புக் கவசமாகத்
திகழ்வது தட்டிக் கேட்போர் குரலும் விசாரணை ஏற்பாடும்தான்.
இன்றைய முறைவாசல் இவர்கள்?
ஆகவே தான் கம்யூனிஸ்ட்டுகளை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு
“உண்டியல் குலுக்கிகள்” என்று யாராவது சொல்கிறபோது, அவர்கள் “ஆமாம்
அதற்கென்ன இப்போது?” என்பது போல் தோள்களைக் குலுக்கிக்கொண்டு அடுத்த
பணியில் ஈடுபடுகிறார்கள். இந்த வார்த்தைகளை முன்பு காங்கிரஸ்காரர்கள்
வீசியிருக்கிறார்கள். திமுகவினர் வீசியிருக்கிறார்கள். அதிமுகவினர்
வீசியிருக்கிறார்கள். இந்த வார்த்தைகளை வீசிடும் முறைவாசல் இப்போது பாஜக
தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் வந்திருக்கிறது போல. முகநூல் உள்ளிட்ட
சமூக ஊடகங்களில் கம்யூனிஸ்ட்டுகள் வைக்கிற வாதங்களுக்கு நேரடியாகப் பதில்
சொல்வதற்கு மாறாக, பாஜகவினரோ, அவர்களின் வழிகாட்டிகளான ஆர்எஸ்எஸ் ஆட்களோ
பயன்படுத்துகிற சொல்லாடல் “உண்டியல் குலுக்கி” என்பதுதான். ஆம்,
கம்யூனிஸ்ட்டுகள உண்டியல் குலுக்கிகள்தான், அதிலே என்ன சிறுமை? அவர்கள்
உண்டியல் திருடர்கள் அல்ல. அதுதான் பெருமை.
அண்மையில் கோயம்புத்தூரில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியினர் தொடரும்
போராட்டங்கள் பற்றிய ஒரு வட்ட மேசை விவாதத்தை நடத்தினர். பாஜக உள்ளிட்ட
சங்கப் பரிவாரத்தினரால் ரகளையில் முடிக்கப்பட்ட, அந்த விவாதத்தின்போது,
பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதே பதத்தைத்தான் வீசினார். உண்டியல்
குலுக்கி ஏழைகளைச் சுரண்டுகிறார்கள் என்றார் அவர். மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அந்த வார்த்தை
தங்களுக்குப் பெருமையளிப்பதுதான் என்றார். ஏழைகளுக்காகப் போராடுகிற கட்சி
அவர்களிடமே நிதி கோருகிறது. பாஜக போல் கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெற்று
அவர்களுக்குச் சேவகம் செய்வதில்லை என்றும் கூறினார். தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர்களான வேதாந்தா குழுமத்திடமிருந்து பாஜக
பெருந்தொகை நிதி பெற்றிருக்கிற செய்தி ஆதாரத்தைச் சொன்னார். இதையெல்லாம்
பொறுத்துக்கொள்ள முடியாத, பதிலளிக்க முடியாத நிலையில் இருந்தவர்கள்,
இயக்குநர் அமீர், கோவையில் முன்பு நடந்த கலவரத்தை ஒப்பிட்டுப் பேசியதைத்
தொடர்ந்து, ரகளையைக் கிளப்பிவிட்டதன் மூலம் நழுவினார்கள்.
முன்பு ‘தந்தி டிவி’ தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில், பாஜக உள்ளிட்ட
பெரிய கட்சிகள் கார்ப்பரேட்டுகளிடமிருந்து நிதி பெறுவதையும், டாட்டா
நிறுவனம் தானாக அனுப்பிய காசோலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
திருப்பி அனுப்பியதையும் குறிப்பிட்டேன். பாஜக அல்லாத, ஆர்எஸ்எஸ் அல்லாத
‘சமூக ஆர்வலர்’ ஒருவர், “ஆனால் நீங்கள்தான் மக்களிடமும் தொழிலாளிகளிடமும்
உண்டியல் குலுக்கி நிதி வசூல் செய்கிறீர்களே” என்றார். அந்த விமர்சனத்தை
வழிமொழிந்த தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே, “அவர்கள் கார்ப்பரேட்டுகளிடம்
நிதி பெறுவது தவறு என்றால், கம்யூனிஸ்ட்டுகள் மக்களிடம் நிதி திரட்டுவது
மட்டும் சரியா” என்று கேட்டார். ”கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறுகிறவர்கள்
கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக சேவை செய்வார்கள், மக்களிடம் நிதி
பெறுகிறவர்கள் மக்கள் நலன்களுக்காக நிற்பார்கள்” என்றேன்.
சொந்தப் பணமும் மற்றவர்கள் பணமும்
இன்று சொந்தப் பணத்தில் கட்சி நடத்துகிறவர்கள் இருக்கிறார்கள்.
குறிப்பாக, திரைப்படத்தில் நடித்துக் கிடைத்த செல்வாக்கோடு அரசியலில்
புகுந்துள்ளவர்கள் சொந்தப் பணத்தில்தான் (குறிப்பிட்ட காலம் வரையிலாவது)
கட்சி நடத்துகிறார்கள். ஏற்கெனவே அரசியலுக்கு வந்தவர்கள், அண்மையில்
வந்தவர்கள், இப்போது வரப்போகிறவர்கள் யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.
அவர்களில் பலரும் தங்களுடைய கட்சிக்காகச் செலவு செய்யும் பணத்தை
இயக்கத்திற்கான அர்ப்பணிப்பு என்பதா, ஆதாய அறுவடைக்கான முதலீடு என்பதா?
ஓர் அவசரச் சூழலில், உடனடித் தேவை அடிப்படையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர்
சிலர் தங்கள் கைப்பணத்தைச் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அப்போது
அவர்கள் செலவிட்ட தொகை அவர்களிடமிருந்து பெறப்பட்ட கடனாக வரவு
வைக்கப்பட்டு, பின்னர் திருப்பித் தரப்படும்.
சொல்லப்போனால் இப்படி சொந்தப் பணத்தைச் செலவிடுவது ஏற்கெனவே “சிஸ்டம்
சரியாக இல்லை” என்ற நிலைமை அப்படியே தொடர்வதற்குத்தான் வழி செய்யும்.
தன்னை யாரும் – கட்சியில் இருப்போர் உட்பட – தட்டிக்கேட்க முடியாது என்று
செயல்பட இட்டுச் செல்லும். போட்ட பணத்தை மீட்க வேண்டும் என்ற புத்தி
தலைதூக்கி ஊழல் பாதையில் கைப்பிடித்துக் கூட்டிச் செல்லும்.
மற்றவர்களிடமிருந்து நிதி பெற்று இயங்குவதுதான் அவர்களுக்குப் பதில்
சொல்லக் கடமைப்பட்டிருக்கிற உறுதிப்பாட்டிற்கு வழிவகுக்கும். ஒரு
கட்சியோ, கட்சிக்காரரோ பதில் சொல்லியாக வேண்டிய அந்த மற்றவர்கள் யார்?
கட்சிகளுக்குக் கொடுப்பதற்கென்றே நிதி ஒதுக்கீடு செய்கிற
கார்ப்பரேட்டுகளா, கரத்தாலும் கருத்தாலும் உழைக்கிற மக்களா?
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர்,
அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம்
வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை
மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர்
இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில்
ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: theekat...@gmail.com.

mohan alagar

unread,
Jun 19, 2018, 11:18:51 AM6/19/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: குழந்தைகளின் கல்வி யாருடைய கனவு?
டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்
சிறப்புத் தொடர்: உங்கள் மனசு
தங்களது தோள்களின் மீதேறி குழந்தைகள் இந்த உலகத்தைப் பார்க்க
வேண்டுமென்றே பெற்றோர் விரும்புவர். காலம்காலமாகத் தொடர்ந்துவரும் இந்த
வழக்கம், டிஜிட்டல் உலகில் துரித கதியை எட்டியிருப்பதில் ஆச்சரியமில்லை.
கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தங்களது
மரபணு நீட்சிகளையே நம்புகின்றனர். அதில் அவர்களுக்கு விருப்பமிருக்கிறதா,
இல்லையா என்றறியப் பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதில்லை.
இதன் விளைவு, இரு தலைமுறைக்கிடையேயான மனக் கசப்புடன் நின்றுவிடுவதில்லை.
சில நேரங்களில் பெற்றோர்களின் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் அளவுக்கு
நிலைமை கைமீறிப் போகிறது. அப்படியோர் உதாரணமாகத்தான் எங்களிடம்
அழைத்துவரப்பட்டார் நவீன் பலராமன். அவரது தாய் ரங்கநாயகி, அவரை
அழைத்துவந்திருந்தார். அருகிலிருந்தபோதும் அவர் தாயின் முகத்தைப்
பார்க்கவோ, பேசவோ இல்லை. வேறு திசையிலேயே பார்த்துக்கொண்டிருந்தார்.
அவரது தந்தை இந்திரஜித்தும் அவர்களோடு இணைந்துகொண்டார்.
ஆந்திராவிலுள்ள பிரபல பள்ளியொன்றில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார்
நவீன் பலராமன். படிப்பில் சுத்தமாக ஆர்வமில்லை என்பது அவர் மீது பெற்றோர்
சொன்ன புகார்களில் முதன்மையானது. “அதிகப்படியாகக் கோபப்படுகிறார்: தாயை
அடிக்கிறார்; சகோதரியைத் தாக்குகிறார்; அதிக நேரம் செல்போனில்
செலவிடுகிறார்; அதில் ஆபாசப் படங்கள் பார்க்கிறார் ” என்று அவர்களது
புகார்ப் பட்டியல் நீண்டது.
இந்திரஜித் - ரங்கநாயகி தம்பதியர் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் என்பது
அவர்களது நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிந்தது. தாங்கள் பட்ட கஷ்டத்தைத்
தங்களது குழந்தை அனுபவிக்கக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர்.
நவீன் பற்றிய பேச்சைத் தொடங்கியபோதே, அவர்கள் இதனை வெளிப்படையாகக்
குறிப்பிட்டனர். “எங்களைப் போல இவன் வாழக் கூடாது” என்ற வார்த்தைகளைச்
சுற்றியே அவர்களது பேச்சு அமைந்திருந்தது.
போட்டி நிரம்பிய உலகில் தங்களது மகன் வெற்றி பெற்று நவீன வாழ்க்கை
வாழவும், முன்னேற்றப் பாதையில் முதலாவதாக இடம்பெறவும் வேண்டுமென்பதே
அவர்களது ஆசை. இதற்கு நேர்மாறாக, நவீன் படிப்பில் மந்தமானவராக இருந்தார்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இந்தக் குறைபாட்டைக்
கண்டுபிடித்ததாகவும், ஆனால் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே இதற்கான
அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இவர் படிக்கும் பள்ளியில், இவர்களது மகள் தீபிகா பன்னிரண்டாம் வகுப்பு
படித்துவந்தார். அவர், பள்ளியில் எல்லா ஆசிரியர்களிடமும் நற்பெயர்
பெற்றிருந்தார். விளையாட்டு, திறன் போட்டிகள் என எல்லாவற்றிலும்
முதன்மையானவராக இருந்தார். முக்கியமாக, பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும்
மாணவராக இருந்தார். அவர் மருத்துவக் கல்வி பயில்வார் என்பதில் உறுதியாக
இருந்த இந்திரஜித்தும் ரங்கநாயகியும், நவீன் அப்படியொரு நிலையை
உருவாக்குவானா என்பதில் ஐயம் கொண்டார்கள். வீட்டுக்குள்ளேயே ஒப்பீடு
வந்தது. நவீன் மீதான நம்பிக்கைக் குலைவுக்கு இது முக்கியமான காரணம்.
நவீன் பலராமன் என்ற பெயரே பழைமையும் புதுமையும் கலந்த ஒரு பெயர்.
பழைமையின் பெருமைகளைச் சுமந்துகொண்டு, புதுமைகளைத் தங்கள் வாரிசு படைக்க
வேண்டுமென்ற ஆசையில் அந்தப் பெயரைச் சூட்டியதாகத் தெரிவித்தனர் அவரது
பெற்றோர். அவர்களது விருப்பத்துக்கு மாறான சிறு நகர்வைக்கூட, நவீனிடம்
அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது வெளிப்படையாகப் புரிந்தது.
பால்யகால வசந்தம்
பத்தாம் வகுப்பில் படிப்பில் சுத்தமாக ஆர்வம்காட்டாமல் இருந்துவந்த
நவீன், சிறு வயதில் மிகவும் ஆர்வமாகப் பள்ளிப் பாடங்களைப் படித்தவர்
என்பது முரணான ஆச்சரியம். தமிழகத்தின் மிகப் பெரிய நகரமொன்றில் பெற்றோர்
வசித்துவந்ததால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிண்டர் கார்டன்
கல்வியைப் பயின்றார் நவீன். அவரது கல்விச் செயல்பாட்டில் எந்த குறைபாடும்
இல்லை. எல்லோரிடமும் பெருமையாகச் சொல்லும் அளவுக்கு, நவீன் கற்றலில்
ஈடுபாடு கொண்டிருந்தார்.
அவர் முதலாம் வகுப்பு செல்லும்போது, இந்திரஜித்துக்கு நைஜீரியாவில் அதிக
சம்பளத்துடன் வேலை கிடைத்தது. மனைவி, குழந்தைகளுடன் அங்கு இடம்பெயரும்
வாய்ப்பும் கிடைத்தது. இதனால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு
வரை, நவீன் நைஜீரியாவில் பயின்றார். அங்குள்ள மொழி, கலாச்சாரம்
ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த நவீன்,
மிகவும் அறிவாற்றலுடன் இருப்பதாக ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
அங்கு, தினமும் மதியம் வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். இதனால்,
விளையாட்டும் களிப்புமாக அவரது வாழ்க்கை மிகவும் சுதந்திரமாகக் கழிந்தது.
ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் அவர் மீது எந்தக் குறையும் இல்லை என்ற
நிலையே தொடர்ந்தது. ஒருநாள், இந்திரஜித் வேலை செய்த நிறுவனம் திவால்
ஆகவே, அவர் இந்தியா திரும்ப வேண்டிய நிலைமை உருவானது.
எல்கேஜி பயின்ற அதே பள்ளியில் மீண்டும் சேர்ந்தார் நவீன் பலராமன். ஆனால்,
நைஜீரியப் பள்ளியில் கிடைத்த எந்த அனுபவத்தையும், அங்கு அவரால்
மீட்டெடுக்க முடியவில்லை. சிறந்த மாணவர் என்று பெயர்பெற்ற நவீன், இந்தியா
வந்த இரண்டே ஆண்டுகளில் மோசமானவர் என்று பள்ளியில் அழைக்கப்படலானார்.
படிப்பே வாழ்க்கையென நினைத்த அவரது பெற்றோர்களுக்கு, இதனால் தலையே
வெடிக்கும் அளவுக்குப் பதற்றம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், நவீன்
தந்தைக்கும் இந்தியாவில் சரியான வேலை கிடைக்கவில்லை.
கல்வியும் கனவுகளும்!
பட்டதாரியாக இருந்தும் நாங்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதே நவீன்
பெற்றோரின் கவலையாக இருந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அவரது
மதிப்பெண் குறைந்துவந்தது. இதனால், நவீன் பலராமனை ஆந்திராவிலுள்ள பிரபல
உண்டு உறைவிடப் பள்ளியொன்றில் சேர்க்க முடிவு செய்தனர் இந்திரஜித்தும்
ரங்கநாயகியும். அந்தப் பள்ளியில் படித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள்
ஐஐடி, பிட்ஸ் பிலானி போன்ற கல்வி நிறுவனங்களில் இன்ஜினீயரிங்
படித்துவருகிறார்கள் என்பதே இதன் பின்னிருந்த காரணம். நீட், ஐஐடி
உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, அந்தப் பள்ளியில் ஆறாம்
வகுப்பிலிருந்தே பயிற்சியளிக்கப்படுகிறது என்பது மற்றுமொரு காரணம்.
தங்கள் மகனும் ஐஐடியில் படித்து, வெளிநாட்டில் வேலை பெற்று, வாழ்க்கையில்
லட்சம் லட்சமாகச் சம்பாதிக்க வேண்டுமென்பதே அவர்களது லட்சியம். அந்தப்
பள்ளியில் தினமும் பணி நேரத்தில் 80 சதவிகிதம் போட்டித் தேர்வுகளுக்கான
பாடங்களும், 20 சதவிகிதம் மட்டுமே வழக்கமான பள்ளிப் பாடங்களும்
சொல்லித்தரப்பட்டன. தினமும் குறைந்தது ஐந்து தேர்வுகளாவது நடக்கும்.
ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை கிடையாது. திரும்பத் திரும்ப தேர்வுகள்
நடத்தப்பட்டு, மாணவர்களின் கல்வியறிவு உயர்த்தப்படும். உடனுக்குடன்
மதிப்பெண் அறிவிக்கப்பட்டு, மீண்டும் தேர்வு வைக்கப்பட்டு, அவர்களது
திறன் மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் தகவல்களைக்
கேள்விப்பட்டதுமே, தீபிகாவையும் நவீனையும் அங்கு சேர்க்க முடிவு
செய்தனர்.
இதற்கு தீபிகா ஒப்புக்கொண்டாலும், நவீனால் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள
முடியவில்லை. ஆந்திராவிலுள்ள அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கிய பிறகு,
இந்த மனக் குமுறல் அதிகமாகிப்போனது. அங்கு மாணவர்களுக்குக் கல்வி
சொல்லித்தரும் முறையில் நவீனுக்குச் சிறிதும் விருப்பமில்லை. ஏழாம்
வகுப்பு படிக்கும்போது, அவர் மெதுமெதுவாக வகுப்பறைகளில் சின்னச் சின்னப்
பிரச்சினைகளில் ஈடுபடத் தொடங்கினார். சக மாணவர்களுடன் சரியான நட்புறவு
பேணவில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் தனது பையைத்
தொலைத்தார். அது எவ்வாறு தொலைந்து போனது என்றுகூட அவரால் சொல்ல
இயலவில்லை. இதுவே, அவருக்குப் படிப்பில் சுத்தமாக நாட்டமில்லை என்பதை
வெளிப்படையாக்கியது.
இந்தக் காலகட்டத்தில், நவீன் தந்தை இந்திரஜித்துக்கு மீண்டும் ஒரு
வெளிநாட்டில் வேலை கிடைத்தது. அங்கு குடும்பத்தினருடன் சென்று வசிக்கும்
வசதி கிடைக்காததால், அவர் மட்டும் தனியாகச் சென்றார். ஊரிலிருந்த சொந்த
வீட்டில் தாய் ரங்கநாயகி வசித்துவந்தார். அவர், உள்ளூரிலுள்ள அரசுப்
பள்ளியொன்றில் ஆசிரியராக வேலை பார்த்தார். அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி
செய்தாலும், நவீனையும் தீபிகாவையும் மட்டும் ஆந்திராவிலுள்ள பிரபல
பள்ளியொன்றில் படிக்க வைக்க அனுப்பியிருந்தார். இது சுவையான முரண் தான்.
குறைந்துபோன படிப்பார்வம்
ஹாஸ்டல் வாழ்க்கை சுத்தமாக நவீனுக்குப் பிடிக்கவில்லை. இதனால், படிப்பின்
மீதான ஆர்வம் மெதுவாகக் குறைந்தது. ஊரிலிருந்து தாய் ரங்கநாயகி போனில்
பேசுவதைக் கேட்டுவந்தவன், இரண்டு ஆண்டுகளில் முழுவதுமாக மாறிப்போனான்.
அம்மா போனில் பேசினாலும், நேரில் சந்திக்க வந்தாலும் கோபப்படத்
தொடங்கினான். தனது கஷ்டங்களுக்கு எல்லாம் தாயே காரணம் என்று நம்பினான்.
இந்த நிலை தொடர்ந்தால், விரைவில் மனநலம் பாதிக்கப்படுவானோ என்ற பயந்தார்
ரங்கநாயகி. இதுபற்றி, இந்திரஜித்துக்குத் தகவல் தெரிவித்தார். அதன்
பிறகே, அவர்கள் இருவரும் மைண்ட் ஸோன் மருத்துவமனைக்கு நவீனை அழைத்து
வந்திருந்தனர்.
திசை மாறிய தாக்கம்!
நவீன் சகோதரி தீபிகாவுக்கு புதிய பள்ளியும் அங்குள்ள பாடத்திட்ட
முறைகளும் வெறுப்பை ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறான ஒரு நிலையில்
இருந்தார் நவீன். படிப்பின் மீதான வெறுப்பு, நவீனின் குணாதிசயத்தில் வேறு
வகையில் தாக்கத்தை உண்டாக்கியது. பொருட்களை உடைப்பது, ஆட்களை அடிப்பது,
அதிக ஆத்திரம், மற்றவர்களுடன் இசைந்து செயல்படாதது, படித்து முன்னேற
வேண்டுமென்ற எண்ணம் இல்லாமலிருப்பது, சக மனிதர்களிடம் வெறுப்பு
பாராட்டுவது என்று நவீன் மாறினார்.
நவீன், தீபிகாவின் படிப்புச் செலவுக்காக மட்டும், ஆண்டுக்குப் பத்து லட்ச
ரூபாய் செலவு செய்தனர் அவர்களது பெற்றோர். ஒரு நடுத்தரக் குடும்பத்தைப்
பொறுத்தவரை, இது மிகவும் அதிகப்படியான செலவுதான். அரேபியப் பாலைவனத்தில்
பணியாற்றும் தந்தை இந்திரஜித்தும், உள்ளூர் பள்ளியில் பாடமெடுக்கும்
ரங்கநாயகியும், தங்களது குழந்தைகளை நினைத்தே ஒரு நாளின் பெரும்பாலான
நேரத்தைச் செலவிட்டுவந்தனர். அதற்கான பலன் இதுவா என்பதே அவர்களது கேள்வி.
நவீன் நிலைக்கு வருத்தம் தெரிவித்த ரங்கநாயகி, தனது வேலையை ராஜினாமா
செய்யப்போவதாகச் சொன்னார். பள்ளியின் அருகே வீடு பிடித்து, நவீன் பத்தாம்
வகுப்பு முடிக்கும்வரை அங்கேயே தங்க போவதாகத் தெரிவித்தார். இது, இன்னும்
மோசமான நிலைக்கு நவீனை உள்ளாக்கும் என்று அவர் உணரவே இல்லை.
(நவீனின் பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? அவரை எப்படி இயல்பு நிலைக்குக்
கொண்டுவருவது? அவர் பெற்றோர்களிடத்தில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ன?
நாளை...)
எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்
கட்டுரையாளர்கள்:
டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக்
கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம்
பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில்
புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல
சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச்
சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை
எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.
டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக்
கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை
குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச
அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார்.
குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர்
திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.
S

mohan alagar

unread,
Jun 19, 2018, 9:46:02 PM6/19/18
to Valluvan Paarvai, inaiathendral
இரண்டு பதிவுகள் ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
அபாய கட்டத்தில் பெங்களூரு ஏரிகள்!
பெங்களூரு. அனைத்து வகைகளிலும் இயற்கையைச் சீரழித்துவரும் நகரம். அதன்
விளைவுகளால் பாதிக்கப்படப்போகும் முதல் நகரமும் அதுதான். காவிரி நீரைத்
தமிழகத்துக்குத் தர மறுத்தமைக்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று,
பெங்களூரு மாநகராட்சிக்குத் தண்ணீர் வேண்டும் என்பது. ஏனெனில்,
பெங்களூரில் நன்னீருக்கான எந்த ஆதாரமும் இல்லை. இருக்கும் நீர்நிலைகளை
எந்த அளவுக்குச் சாக்கடை ஆக்க முடியுமோ அந்த அளவுக்கு மோசமாக்கி
வைத்திருக்கிறார்கள் அம்மக்கள்.
தற்போது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை,
அதற்கான சான்றாக இருக்கிறது. பெங்களூருவில் உள்ள பெள்ளாந்தூர் ஏரி உலக
அளவில் பிரசித்தி பெற்றது. ஓர் ஏரியை இவ்வளவு மாசடைந்ததாக மாற்ற முடியுமா
என்று உலகமே வியக்கும் அளவுக்கு அசுத்தப்படுத்தியிருக்கிறார்கள்
பெங்களூரு மக்கள். தற்போது ஏரியின் ஒரு மில்லி லிட்டர் நீர்கூடச்
சுத்தமாக இல்லை என்கிறது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்.
எண்ணற்ற கழிவுகள் கலக்கப்படுவதால் நுரை பொங்குவது, தீப்பிடிப்பது என்று
எப்படியும் வருடத்திற்கு ஒரு முறையாவது இந்த ஏரி செய்திகளில் இடம்பெறும்.
ஏரியில் பிடித்த நெருப்பை அணைக்க 5,000 ராணுவ வீரர்கள் இரண்டு
நாட்களுக்கும் மேலாகப் போராடியதெல்லாம் வரலாறு!
பெள்ளாந்தூர் ஏரி மட்டுமல்ல, படகுச் சவாரிக்குப் பெயர்பெற்ற அல்சூர்
ஏரியும் மாசடைந்துகொண்டிருகிறது. முன்னதாக பெள்ளந்தூர் ஏரியில் கலந்த
கழிவு நீரில், பாஸ்பரஸ் மற்றும் கனிம ரசாயனங்கள் அதிக அளவில் இருந்ததால்
ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் உயிரிழந்தன. அல்சூர் ஏரியிலும்
மீன்கள் செத்து மிதந்தன.
எவ்வளவு அழிவுகள் நடந்தாலும், இதை நீங்கள் வாசிக்கும் இந்த நொடி
வரைக்கும் இந்த நீர்நிலைகள் அளவில்லாத கழிவுகள் கொட்டப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. மாசுக் கட்டுபாட்டு வாரியங்களும் மக்களும்
மாறாவிட்டால், மீன்களை அடுத்து, சுற்றுச்சூழலை அடுத்து மனிதர்கள்
பலிகடாவாக்கப்படுவார்கள்!
- நரேஷ்
கேக் வெட்டிய கருணாநிதி
திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று (ஜூன் 19) சிஐடி காலனியிலுள்ள தனது
இல்லத்துக்குச் சென்றார். அங்கே ராஜாத்தி அம்மாளின் பிறந்த நாளை கேக்
வெட்டிக் கொண்டாடினார்.
முதுமையின் காரணமாக ஓய்வெடுத்து வரும், திமுக தலைவர் கருணாநிதியின்
உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர்
மாதம் முதல் முரசொலி பவள விழா அரங்கம், அண்ணா அறிவாலயம், சிஐடி காலனி
இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகிறார். அவருக்குப்
புத்துணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மு.க.தமிழரசுவின் பேரனை அழைத்து வந்து
அவருடன் விளையாடவும் வைக்கின்றனர். கடந்த 3ஆம் தேதி கருணாநிதியின் பிறந்த
நாள் திமுகவினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில், கோபாலபுரம்
இல்லத்தில் தொண்டர்களையும் சந்தித்தார். சில தினங்களுக்கு முன்பு தனது
மகன் மு.க.தமிழரசு இல்லத்துக்குச் சென்ற கருணாநிதி, மறுநாள் காலையில்
கோபாலபுரம் இல்லத்திற்குத் திரும்பினார்.
நேற்று (ஜூன் 19) கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்குப்
பிறந்த நாள் என்பதால் திமுகவில் இருந்தும், வெளியில் இருந்தும் பலர் அவரை
நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை
கருணாநிதி தனது கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சிஐடி காலனி
வீட்டுக்குச் சென்றார். ராஜாத்தி அம்மாள் கருணாநிதிக்கு மாலை அணிவித்து
வரவேற்றார். பின் ராஜாத்தி அம்மாளின் பிறந்த நாளை ஒட்டி கேக்
கொண்டுவரப்பட்டது.
கருணாநிதியின் காதருகே சென்று ராஜாத்தி அம்மாள், ‘இன்னிக்கு எனக்கு
பிறந்த நாள் கேக் வெட்டுங்க’ என்று கூறினார். அப்போது கருணாநிதி மெல்ல
சிரித்தபடி, ‘எனக்கா?’ என்று லேசாகக் கேட்டார். உடனே சிரித்த ராஜாத்தி
அம்மாள், “உங்களுக்கு ஜூன் 3 ஆம் தேதி பிறந்தநாள். இப்பதானே
கொண்டாடினோம். இன்னிக்கு ஜூன் 19 எனக்குப் பிறந்த நாள்’’ என்று சொல்ல,
சிரித்தபடியே மெல்ல கேக்கை வெட்டினார் கருணாநிதி.
எப்போதாவது ஒருமுறை மட்டுமே கோபாலபுரத்திலிருந்து வெளியில் சென்று வந்த
திமுக தலைவர் கருணாநிதி, தற்போது தொடர்ந்து கோபாலபுரத்திலிருந்து வெளியே
பல இடங்களுக்குச் சென்று வருவது திமுகவினரிடையே உற்சாகத்தை
ஏற்படுத்தியுள்ளது.

mohan alagar

unread,
Jun 20, 2018, 12:32:36 PM6/20/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புப் பத்தி: விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?
முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
(மெய்யறு அரசியல் (Post-Truth politics) குறித்தும் இங்கிலாந்து நாட்டு
அரசியல் குறித்தும் மின்னம்பலத்தில் தொடர்கள் எழுதிவந்த முரளி
சண்முகவேலனின் புதிய பத்தி இது. புதன்கிழமைதோறும் வரும் இந்தத் தொடரில்
உலகின் பல்வேறு பகுதிகளிலும் அடித்தட்டு மக்களை, ஆளும் வர்க்கத்தினர்
எவ்வாறு தங்கள் நலனுக்காக நசுக்கி ஒடுக்குகிறார்கள் என்பதைப் பற்றி
அலசுகிறார். இந்த அலசல் லண்டனில் தொடங்கி, பல இடங்களில் பயணப்பட்டு,
தூத்துக்குடியில் முடிவுறும். “விவாதிக்கப்படும் பொருளின் அனைத்துத்
தரப்புக்களையும் குறிப்பாக பொதுப் புத்தியைத் தாண்டி சாமானியர்களின் நலன்
குறித்த பார்வைகளை கவனப்படுத்துவதாக இத்தொடர் இருக்கும்” என்கிறார்
முரளி. – ஆசிரியர்)
1948. பிரிட்டனின் காலனிய ஆதிக்கத்தில் கரிபீய நாடுகள் இருந்து வந்த காலம்.
பிரிட்டனின் காமன் வெல்த் நாடுகள் – அதாவது பிரிட்டனின்
ஏகாதிபத்தியத்துக்குள் இருந்த நாடுகளில் உள்ள குடிமக்கள் யாவரும்,
ஏகாதிபத்தியத்தின் குடி உடமைகள். எனவே, காமன்வெல்த் நாடுகளில்
இருந்தவர்கள் அனைவரும் பிரிட்டனின் குடிமக்களும் ஆவர். பிரிட்டனில்
1948ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிரிட்டனின் நாட்டுரிமைச் சட்டத்தின் -
Nationality Act, 1948 நான்காம் பிரிவு சொல்வதும் அதுவே. அந்தக்
காலகட்டத்தில் கரிபீயத் தீவுகள் எல்லாம் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ்
இருந்தன.
கரிபீயத் தீவுகளில் ஒன்றான ட்ரினிடாடிலிருந்து புறப்பட்ட எம்பையர்
விண்ட்ரஷ் என்றொரு கப்பல் ஜூன் மாதம் 22 அன்று லண்டனிலிருந்து 43 கிலோ
மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டில்பரி கப்பல்துறைக்கு 492 பேருடன் வந்தது
. அதில் வந்த அனைவரும் நாட்டுரிமைச் சட்டத்தின்படி பிரிட்டனின்
பிரஜைகளாகவே கருதப்பட்டனர். இதற்குப் பின்னர் 1948, 1949, 1956, 1962
ஆகிய ஆண்டுகளில் கரிபீயத் தீவுகளிலிருந்து பலர் பிரிட்டனுக்கு உழைக்க
வந்தனர். இவர்களைக் கப்பலில் வலிய ஏற்றி பிரிட்டனுக்கு அழைத்துச்
செல்லும் முடிவினை எடுக்கக் காரணம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட
உயிர்ச் சேதத்தினால் வந்த ஆள் தேவையும், தொழிற்சாலை, மருத்துவம், சேவை
நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டிய தேவையுமாகும்.
வரலாற்றுத் திரிபுகள்
ஆனால், கரிபீயக் கறுப்பர்கள் வேலை தேடிப் பிழைக்க வந்தவர்கள்; வந்த
இடத்தில் எந்த வேலையையும் செய்து ‘நம் தாய் நாட்டின்’ செல்வத்தையும்
முன்னேற்ற வந்தனர் என்பதே பிபிசி, கார்டியன், டைம்ஸ், டெலிகிராஃப் போன்ற
ஊடகங்கள், காலனிய வரலாற்று ஆவணங்கள் ஆகியவை தொடர்ந்து சொல்லிவந்த விவரணை.
இது முதல் திரிபு. கரிபீயக் கறுப்பர்கள் உள்ளே அனுமதிக்கப்படக் காரணம்
வீழும் பொருளாதாரத்திலிருந்து பிரிட்டனைக் காப்பாற்றுவதே ஆகும்.
நவீன பிரிட்டனின் பன்மைக் கலாச்சார வரலாற்றை எழுதும்போது வெள்ளை
பிரிட்டனுடன் கறுப்பர்கள் ஒன்றுபட்டதன் குறியீடாக விண்ட்ரஷ் நிகழ்வு
செதுக்கப்படுகிறது. இது இரண்டாவது திரிபு. ரோமர்களின் காலத்திலிருந்தே
கறுப்பர்கள் பிரிட்டனில் வசித்துவருவதாக இப்போது ஆய்வாளர்கள்
கூறிவருகின்றனர். ஒரு முக்கியமான உதாரணத்தை மட்டும் இங்கு
குறிப்பிடுகிறேன்.
இக்னேஷியன் சாஞ்ச்சோ (1729 – 1780), பிரிட்டனில் முதல் முதலாக வாக்களித்த
ஒரு கறுப்பர். அடிமைக் கப்பலில் பிறந்த சாஞ்ச்சோ, கோமகன் / கோமகள்
மாண்டேகுக்கு அடிமை வேலை செய்ய நேர்ந்தது. சாஞ்ச்சோவின் அறிவுத் திறனை
மெச்சிய மாண்டேகு குடும்பத்தினர் அவர் படிக்க, இசைக்க, எனப் பல்வேறு
திறன்களை வளர்த்துக்கொள்ள உறுதுணையாய் இருந்தனர். சாஞ்ச்சோ பின்னாளில்
இசைக் கோர்வையாளராகவும் நடிகராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
பிரிட்டனின் கறுப்பின இலக்கியத்தின் முன்னோடி சாஞ்ச்சோ என்றால் அது
மிகையாகது.
சாஞ்ச்சோவின் வரலாற்றை இங்கு குறிப்பிடக் காரணம், பிரிட்டனில் உள்ள
கறுப்பின வாழ்க்கை வரலாற்றின் ஆரம்பம் காலனியத்தின் கரிசனையாகவும்
ஏகாதிபத்தியத்தின் உதவியாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ்
பதி (British Pathé), பிபிசி போன்ற பிரிட்டனின் வரலாறுகளைப் பதிவு
செய்யும் ஊடகங்கள் மிகக் கவனமாக, திட்டமிட்டே இதைப் பதிவு செய்துள்ளன
எனக் கூறலாம்.
பிரிட்டனில் அடிமை விற்பனை புழக்கத்தில் இருந்தபோது, கறுப்பின அடிமைகள்
தப்பித்து ஓடுவது சாதாரணமானதொரு நிகழ்வு. அச்சமயங்களில், கறுப்பர்களைப்
பற்றி உள்ளூர் பத்திரிகைகளில் ‘பிடித்து ஒப்படைத்தால் பரிசு’ போன்ற
விளம்பரங்கள் Runaway slaves என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்து
வெளிவந்துள்ளன. ஆனால், கறுப்பின மக்களின் வரவு என்னவோ பிரிட்டனில்
காலனியக் கருணையிலிருந்தே தொடங்குகிறது எனக் காலனிய வரலாறு
திரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான மாற்று விவரணை அவ்வப்போது வெளிவரத்
தொடங்கினாலும் காலனியத்தின் பரிவே கறுப்பர்களின் இருப்புக்குக் காரணம்
என்பது பிரிட்டனின் பொதுப்புத்தியில் இன்றளவும் இருந்துவருகிறது. இதை
எதிர்த்து ஆதாரத்துடன் விவாதித்தால் வெறுப்புப் பேச்சும் மிரட்டலுமே
மிஞ்சும்.
நிற்க. மீண்டும் 1948க்குச் செல்வோம்.
பிரிட்டனில் கரீபியக் கறுப்பர்களின் நிலை
வந்திறங்கிய 492 பேரும் நற்குடி மக்கள் என உள்ளூர் ட்ரினிடாட் நீதிபதி
நடத்தைச் சான்றிதழ் வழங்கியிருந்தார். வந்திறங்கிய ட்ரினிடாடியர்களோ
சொர்க்க பூமிக்குள் காலெடுத்து வைத்ததாக உணர்ந்தனர் என்று ஆவணங்கள்
சொல்கின்றன. ஆனால் அக்கனவு அதிக காலம் நிலைத்திருக்கவில்லை.
டில்பரியிலிருந்து வாட்டர்லூ (லண்டனின் உள்ள ஒரு ரயில் நிலையம்)
வந்தவுடன் உண்மை நிலவரம் தெரிய ஆரம்பிக்கிறது.
வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். பார்களின் வெளியே ‘ஐரிஷ், கறுப்பர்,
நாய் ஆகியவைகளுக்கு அனுமதி இல்லை’ என்ற தட்டி வரவேற்கிறது. தனியாக நடந்து
போனால் கல், குப்பை (மாடி வீட்டு ஜன்னலில் இருந்து), கூட்டமாக வந்து
சிறுவர்கள் தாக்குவது எல்லாம் சகஜமாக இருக்கிறது. இந்தக்
காலகட்டத்தில்தான் யாரும் அதிகம் வாழாத அபாயகரமான கிழக்கு லண்டனில்
கறுப்பர்கள் அதிகளவில் குடியேறினர். இன்றும் கிழக்கு லண்டனில் அவர்கள்
அதிகமான எண்ணிக்கையில் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
இதை நான் இங்குப் பதிவிட முக்கியமான காரணம், பிரிட்டனில் உள்ள சில சோஷலிச
தாராளவாதிகளேகூட கரிபீயக் கறுப்பர்கள் காலனியப் பரிவினால் ‘சொர்க்க
பூமிக்கு’ அழைத்து வரப்பட்டனர் என்ற ஒரு பிரமையின் மேல்தான்
கறுப்பர்களுக்கான ஆதரவு அரசியலை முன்வைக்கின்றனர். அதாவது சுய இனப்
பெருமையைக் கலக்காது மாற்றினத்தாருக்கெனத் தனி மதிப்பு, சுய மரியாதை
கிடையாது என்கிறார்கள். அது தவறு. வந்த நாள் முதல் இந்த நாள் வரை அவர்கள்
தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்க வைக்க பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது
என்பதே உண்மையாகும்.
1948இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கரீபிய ஆள் இறக்குமதி 1971வரை தொடர்கிறது.
இதற்கிடையில் கரிபீய நாடுகள் விடுதலை பெற இங்குள்ளவர்கள் தொடர்ந்து
பிரிட்டனில் வாழலாம் என 1971இல் குடியேறல் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால்
அதை நடைமுறைப்படுத்த உள்துறை அமைச்சகம் முன்வரவில்லை. அமைச்சகத்திடம்
1948முதல் 1971 வரை வந்திறங்கிய கரிபீயக் கறுப்பர்கள் பற்றிய எந்தத்
தரவும் உள்துறை அமைச்சகத்திடம் இல்லை எனப் பின்னர் சொல்லப்பட்டது. அதே
சமயத்தில் ட்ரினிடாடிலிருந்து வந்த கறுப்பர்களோ தங்களது வாழ்க்கையை
பிரிட்டனில் தொடங்கி வாழ்ந்தது மட்டுமல்லாமல் புதிய தலைமுறைகளும்
தோன்றியாகிவிட்டது. இவர்களில் பலரும் அரசாங்க வேலையில் (மருத்துவச் சேவை,
கல்வி நிலையங்கள் போன்றவை) பணிபுரிகின்றனர்; வரி கட்டிவருகின்றனர்;
தேர்தலில் வாக்களித்தும்வருகின்றனர். ஆனால் இவர்களில் பலரும் சொந்த
நாட்டுக்குத் திரும்பப் போகாததாலும், மற்ற வகையான பிரயாணத் தேவை
இல்லாததாலும் பாஸ்போர்ட், குடியுரிமை அத்தாட்சி என எதையும் தேடிப் பெறத்
தேவையில்லாது இருந்தனர்.
அப்படி இருந்த ஒருவர்தான் எல்வல்டோ ரோமியோ.
63 வயதான எல்வல்டோ ரோமியோவுக்கு ஒரு நாள் பிரிட்டனின் உள்துறை
அமைச்சகத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. பிரிட்டனில் கள்ளத்தனமாகத்
தங்கியிருப்பதாகவும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் அதில்
எழுதியிருந்தது. விண்ட்ரஷ் குழப்பம் பெரிதாக ஆனதால், அவரது நாடு கடத்தல்
ஒத்தி வைக்கப்பட்டு ‘மறுபரிசீலனை’ செய்யப்படுவதாக அரசாங்கம்
சொல்லியிருக்கிறது.
61 வயதான பாவ்லெட் வில்சன் கதையோ இன்னும் மோசம். 50 வருடமாக பிரிட்டனில்
வாழ்ந்துவரும் இப்பெண்மணி கள்ளத்தனமாகத் தங்கியுள்ளார் என்று
குற்றம்சாட்டப்பட்டு பிரிட்டனின் மிக மோசமான சிறைகளில் ஒன்றான
யார்ல்ஸ்வுட் கள்ளக் குடிபுகல் சிறையில் அடைக்கப்பட்டார். கடைசி
நேரத்தில் அவரது தொகுதி எம்.பி.யின் முயற்சியால் வெளியிலெடுக்கப்பட்டார்.
இதற்கெல்லாம் காரணம் பிரிட்டனின் தற்போதைய பிரதமர் தெரஸா 2012ஆம் ஆண்டு
கொண்டுவந்த ஒரு சட்டத் திருத்தம். அத்திருத்தத்தின்படி வீடு வாடகைக்கு
விடுபவர்கள், தேசிய மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஆகியோர் தங்கள்
வாடிக்கையாளர்களிடம் குடியுரிமைப் பத்திரம் கேட்டு வாங்கி அவர்கள் சட்ட
ரீதியான குடிமக்கள்தானா என்று உறுதிப்படுத்த வேண்டும். இது அவர்களின்
பொறுப்பே. தவறினால் அவர்கள் தண்டச் செலவு (மிக அதிகம்) கட்ட வேண்டும்
என்ற ஒரு விதியைக் கொண்டுவந்தார். இந்த விதி வந்த பிறகு அதுவரை
நிம்மதியாக வாழ்ந்துவந்த விண்ட்ரஷ் மக்களுக்குப் பிரச்சினை ஆரம்பமானது.
ஏனெனில் அவர்களுக்கான ஆவணங்களை அளிக்காதது உள்துறை அமைச்சகத்தின் கோளாறு.
ஆனால் பயனை அனுபவிப்பதோ சாமானியக் கறுப்பர்கள்.
ஏதோ வெள்ளை இன வலதுசாரி அரசியல்வாதிகள் மட்டும்தான் இப்படி நிறவெறியும்
காலனியப் பெருமையும் பேசுகிறார்கள் என நினைக்க வேண்டாம். ஆக்ஸ்ஃபோர்ட்,
கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் உள்ள பழம்பெரும் கல்விமான்களும் இதற்கு
விதிவிலக்கல்ல. ஊடகங்களோ கள்ளத்தனமாகக் குடியேறியவர்களைக் காவல் துறை
பிடிப்பதை ரியாலிட்டி டிவி ஷோ பாணியில் சுவாரசியமாக சீரியலாகக்
காட்டுகின்றன. வரும் வாரங்களில் இதைப் பற்றி பார்க்கலாம்.
*
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன், ஊடக மானுடவியலாளர். லண்டனில்
உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும்
தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)

mohan alagar

unread,
Jun 20, 2018, 9:50:05 PM6/20/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
ஒரு நாட்டில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் ஏற்றுமதி மற்றும்
இறக்குமதி விகிதத்தில் உள்ள வித்தியாசங்களே வர்த்தகப் பற்றாக்குறை
எனப்படும். தற்போது இந்திய நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 14.62
பில்லியன். இந்திய மதிப்பில் சொன்னால், ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய்.
கடந்த ஆண்டின் வர்த்தகப் பற்றாக்குறை 13.84 பில்லியன் டாலர்களாக
இருந்தது.
இதன் அர்த்தம் என்னவென்றால், நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக
இருக்கிறது என்பதுதான். ‘மேக் இன் இந்தியா’ எனும் ‘லட்சியம்’தான் இந்திய
வளர்ச்சியின் சக்கரம் என்று மத்திய அரசு அறிவித்து நான்கு ஆண்டுகள்
ஆகியும் இன்னும் இந்தியாவில் போதிய அளவு எதையும் ’மேக்’ செய்யவில்லை.
இந்த வர்த்தகப் பற்றாக்குறை உயர்வுக்குக் காரணம், சர்வதேச சந்தியில்
கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததுதான் என்று மத்திய அரசு சப்பைக்கட்டுக்
கட்டுகிறது. வெறும் கச்சா எண்ணெய் இறக்குமதியால் பில்லியன் டாலர்
கணக்கில் பற்றாக்குறை வருமா எனும் கேள்விக்கு, இந்தியாவில் கச்சா
எண்ணெயின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. ஆகையால், 50 சதவிகித அளவுக்கு
அதிகமான எண்ணெய் இறக்குமதி நடந்ததே காரணம் என்கிறது. ஆனால், டிஜிட்டல்
இந்தியாவில் வாழ்பவர்களுக்கு உண்மை தெரியும்!
- நரேஷ்
ரஹ்மானுக்கு சிக்கிம் அரசு அளித்த கௌரவம்!
சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
நியமிக்கப்பட்டுள்ளார்.
சிக்கிம் மாநில அரசு திட்டங்களின் சாதனைகளை இந்திய அளவிலும் உலகளவிலும்
ரஹ்மான் பரப்புவார் என அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஏ.கே.ஸ்ரீவஸ்டவா
வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிக்கிம் மாநிலத்திற்கான விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்ட
செய்தியை அறிக்கை மூலம் வெளிப்படுத்திய அவர், “சிக்கிம் இயற்கை எழில்
சூழ்ந்த மாநிலம். கடந்த இருபதாண்டுகளாகச் சூழல் சுற்றுலாவில் உலகளவில்
பிரபலமாகி வருகிறது. இயற்கை விவசாயத்தில் நாட்டிலேயே சிறந்து விளங்கும்
மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டில் சிக்கிம் மாநிலத்திற்கான சுற்றுலா மற்றும்
வர்த்தகத் தூதராக ரஹ்மான் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது, “சிக்கிம்
பார்ப்பதற்கு மட்டும் அழகான மாநிலம் அல்ல; கலாச்சாரத்திலும் அழகான
மாநிலம்” எனத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது
அம்மாநிலத்திற்கான விளம்பரத் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

mohan alagar

unread,
Jun 20, 2018, 9:57:35 PM6/20/18
to Valluvan Paarvai, inaiathendral
சிறப்புக் கட்டுரை: யோகம் என்பது என்ன?
ஆனந்தன்
ஜூன் 21: உலக யோகா தினம்
ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஜூன்
மாதத்தில் ‘யோகா ஜுரம்’ அதிகரித்து வருகிறது. பலவிதமான யோகா
பயிற்சிகளுக்கான விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் அவை குறித்த பேச்சுகள்,
ஊடகங்களில் யோகா குறித்த கட்டுரைகள் ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில்
பயிலப்பட்டுவரும் யோகக் கலை சர்வதேச அங்கீகாரத்தின் மூலமாகக் கூடுதல்
கவனம் பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இத்தகைய தினங்களின்
நோக்கமே குறிப்பிட்ட விஷயம் குறித்த கவனத்தையும் விழிப்புணர்வையும்
கூட்டுவதுதானே.
ஆனால், யோகா குறித்த விழிப்புணர்வைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, யோகா
என்னும் சொல்லை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம், எப்படிப்
பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றிப் பேச வேண்டும். யோகாசனங்கள் என்று
சொல்லப்படும் பயிற்சிகளையே பலரும் யோகா என்ற பெயரில்
குறிப்பிட்டுவருகிறார்கள். “யோகா செய்கிறேன்” என்று பலரும் சொல்வது
இந்தப் பயிற்சிகளையே.
யோகா என்பதற்கும் யோகாசனம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. யோகா அல்லது
யோகம் என்பது ஒரு சித்தாந்தம். மெய்காண் வழிமுறை. பல்வேறு பயிற்சிகளையும்
கண்ணோட்டங்களையும் உள்ளடக்கிய விரிவான சித்தாந்தம். மிகுதியும் ஆன்மிகம்
சார்ந்ததாக இருந்தாலும் அன்றாட வாழ்வியலுடனும் தொடர்பு கொண்டது. யோகாசனம்
என்பது அதன் மிகச் சிறிய பகுதி.
கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம், பக்தி யோகம் என்று
கேள்விப்பட்டிருப்போம். யோகக்காரன், யோகமான ஜாதகம் என்னும் வழக்குகளையும்
கேள்விப்பட்டிருப்போம். ஊருக்கு உழைப்பது யோகம் என்னும் பாரதியின்
வரியையும் அறிந்திருப்போம். இப்படிப் பலவிதமாகப் புழங்கும் இந்தச்
சொல்லின் பொருள் என்ன? தத்துவம் என்ன?
‘யோக:’ என்பது சமஸ்கிருதச் சொல். இதன் வேர்ச் சொல். யுஜ். யுஜ் என்றால்
இணைதல். இணைதல் என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அம்சங்கள் இருக்க வேண்டும்.
இங்கே மனிதன், தெய்வம் ஆகிய இரண்டு அம்சங்கள் குறிப்புணர்த்தப்படுகின்றன.
மனிதன் தெய்வத்தோடு இணைதலே யோகம் எனப்படுகிறது. ஜீவாத்மா, பரமாத்மா இணைவு
என்றும் இதைப் புரிந்துகொள்ளலாம். மனித வாழ்வு இறை நிலையை அடைவது என்றும்
விளக்கமளிக்கலாம். எல்லைக்குட்பட்ட வாழ்வு, அந்த எல்லைகளைத் தாண்டி,
எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்துடன் உறவாடுதல் என்றும் கூறலாம்.
இணைவு அல்லது இணைதல் என்பதுதான் யோகத்தின் அடிப்படை.
இந்த இணைப்புக்கான வழிகள் பலவாக இந்திய ஆன்மிக மரபில்
சொல்லப்பட்டிருக்கிறது. செயல், பக்தி, ஞானம் ஆகியவற்றின் மூலம் இந்த
இணைவு சாத்தியம் என்று சொல்லப்படுகிறது. ராஜ யோகம் என்று சொல்லப்படும்
யோகமானது அன்றாட வாழ்க்கை, ஸ்தூல உடல், உடலின் உள்ளுறுப்புகள், மனம்,
அறிவு, ஆழ்மனம் ஆகிய அனைத்தையும் சீர்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த
இணைவைச் சாத்தியப்படுத்த முடியும் என்று சொல்கிறது.
வாழ்வின் பல்வேறு கூறுகளையும் தொட்டு விரியும் இந்தத் தத்துவத்தை
முன்வைத்தவர் பதஞ்சலி முனிவர். இவர் எழுதிய யோக சூத்திரம் என்னும் நூலில்
இதற்கான விளக்கங்கள் இருக்கின்றன. இந்த நூலுக்கு விவேகானந்தர், பாரதியார்
ஆகியோர் உரை எழுதியிருக்கிறார்கள். தியானம் உள்பட இன்று நாம் காணும்
பல்வேறு ஆன்மிகப் பயிற்சிகளும் இதை அடிப்படையாகக் கொண்டே
உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பதஞ்சலி முனிவர் யோகம் என்றால் என்ன என்பதை முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறார்.
“யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத:”
பொருள்: சித்தத்தின் விருத்தியை (வளர்ச்சியை) அடக்குதல் யோகம்.
சித்தம் என்றால் என்ன? விருத்தி என்றால் என்ன? அதை அடக்குவது எப்படி?
இப்படிப் பல கேள்விகள் எழலாம். யோக சூத்திரத்தில் ஒவ்வொரு வரியும்
இப்படித்தான் இருக்கும். அதனால்தான் அது சூத்திரம் எனப்படுகிறது.
சித்தம் என்பது மனமா, அறிவா, ஆழ்மனமா என்பதையெல்லாம் அறிய இந்திய
ஆன்மிகத் தத்துவங்களை விரிவாகக் கற்க வேண்டும். இப்போதைக்குச் சித்தம்
என்றால் எண்ணங்கள் குவிந்து கிடக்கும், ஊற்றெடுக்கும் மனம் என்று
வைத்துக்கொள்ளலாம். (இது எளிமையான புரிதல்தான். உண்மையில் சித்தம் என்பது
மனதுக்கும் அப்பாற்பட்டது என்று சொல்லப்படுகிறது.)
மனதின் தன்மையே அது அடுக்கடுக்காக, அலையலையாக எண்ணங்களை
உருவாக்கிக்கொண்டே இருப்பதுதான். தொடர்ந்து சலனமடையும் குளத்தில்
உருவாகும் அலைகளைப் போல மனம் சதா எண்ண அலைகளை உருவாக்கிக்கொண்டே
இருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய, தொடர்பற்ற பல்வேறு எண்ணங்களின்
ஓட்டம் இடையறாமல் நடந்துகொண்டே இருக்கிறது. இந்த ஓட்டத்தை நிறுத்தி மனக்
குளத்தைச் சலனமற்றதாக்குவதே யோகம் என்று இதை எளிமையாகப்
புரிந்துகொள்ளலாம். இது மிகவும் எளிமையான விளக்கம்தான் என்பதை
மறந்துவிடக் கூடாது.
இதை எப்படிச் சாதிப்பது? பதஞ்சலி முனிவர் அதையும் விளக்குகிறார்.
யம, நியம, ஆசன, ப்ரணாயாம ப்ரத்யாஹார
தாரண த்யான சமாதயோ
என்கிறார்.
யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி
என்னும் எட்டு அங்கங்களைக் கொண்ட பயிற்சிகள் தேவை என்கிறார்.
இந்த எட்டு அங்கங்கள்தான் அஷ்டாங்க யோகம் (அஷ்ட - எட்டு) என்றும் வழங்கப்படுகின்றன.
யமம் என்பது மன அடக்கத்துடன் கூடிய ஒழுக்கத்தைக் குறிக்கும்.
நியமம் என்பது உடல் தூய்மையையும் இறை வழிபாட்டையும் குறிக்கும்.
ஆசன என்பது உடற் பயிற்சி.
பிரணாயாமம் என்பது சுவாசப் பயிற்சி.
பிரத்தியாஹாரம் என்பது புலன்களை அடக்கும் பயிற்சி.
தாரணை என்பது மனதை ஒரே பொருளில் நிலைநிறுத்தும் பயிற்சி.
தியானம் என்பது எண்ணங்களைக் கடந்து போகச் செய்யும் பயிற்சி.
சமாதி என்பது தன்னை இழந்து இறை நிலையோடு கலக்கும் நிலை.
இந்த எட்டு அங்கங்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. உதாரணமாக, யமம் என்பது
மோட்சம் அடைவதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர் (சாதகர்)
செய்ய வேண்டிய கடமைகள். அஹிம்சை, சத்தியம், கள்ளாமை, பிரம்மச்சரியம்,
இரக்கம், ஜபம், பொறுமை, திடம், மிதமான உணவு, பரிசுத்தம் ஆகிய பத்தும்
யமம் என்பதில் அடங்கும்.
இப்படி எட்டுப் பிரிவுகளுக்குள்ளும் பல உட்பிரிவுகள் உள்ளன. ஆசனம்
என்பதற்குள் பல்வேறு உடற்பயிற்சிகள் வருகின்றன. பிராணாயாமம் என்பது
மூச்சுப் பயிற்சி.
எல்லைக்குட்பட்ட வாழ்வைத் தாண்டிச் செல்வது என்பது அந்த வாழ்வின் கூறுகளை
நம் வசப்படுத்தினாலன்றிச் சாத்தியமில்லை. எனவே, உடல், மனம், மூச்சு,
அன்றாட வாழ்வின் நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் ஒழுங்குபடுத்திப்
பண்படுத்த வேண்டும் என்கிறது யோக சாஸ்திரம்.
இந்த எட்டு அங்கங்களில் ஒன்றுதான் ஆசனம். இதை யோகாசனம் என்று
சொல்வார்கள். இதில் ஆசனத்தை விட்டுவிட்டு யோகா என்று மட்டும் நாம்
பொதுவாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
யோகத்தில் ஆசனத்தின் இடம் எது?
யோகம் என்பது சலனமற்ற நிலை. சமநிலை. பேரமைதி. யோகத்தின் இலக்கு
பரம்பொருளுடன் இரண்டறக் கலத்தல். யோகப் பயிற்சியின் ஒரு பகுதியான
ஆசனத்தின் இலக்கு உடலைப் பண்படுத்துதல். மூச்சுப் பயிற்சியின் இலக்கு
உடலின் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துதல். இவை இரண்டும்
யோகம் என்னும் லட்சியத்துக்கான பயிற்சிகள்.
இந்த ஆசனங்களை உரிய முறையில் சரியான மூச்சுப் பயிற்சியுடன் (பிராணாயாமம்)
இணைத்துச் செய்தால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் மனமும் ஆரோக்கியமாகும்.
பதற்றங்கள், ஆரவாரங்கள், மனக் கொந்தளிப்புகள் குறையும். உடலியக்கம், ரத்த
ஓட்டம், உள் உறுப்புகளின் செயல்பாடு ஆகியவை ஆரோக்கியமான முறையில்
நடைபெறும். இது அனுபவபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும்
நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஆசனங்களுக்கும் மதத்துக்கும் தொடர்பு இல்லை. ஆசனங்களுக்கும்
ஆத்திகத்துக்கும்கூடத் தொடர்பு இல்லை என்று சொல்லலாம். ஆசனங்களை
இறைமையின் மீது நம்பிக்கை வைத்தும் செய்யலாம், நம்பிக்கை வைக்காமலும்
செய்யலாம்.
நம்முடைய வாழ்க்கை முறை, அன்றாடச் செயல்பாடுகள் ஆகியவற்றில் பலவும் உடல்
/ மன நலத்துக்கு முரணானவையாகவே இருக்கின்றன. உதாரணமாக, நமது உணவு முறை.
நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், நாம் உட்காரும் முறை,
நடக்கும் / நிற்கும் முறை, பணிச்சூழலில் ஏற்படும் மன அழுத்தம், குறுகிய
கெடுவுக்குள் அதிக வேலையை முடிக்க வேண்டிய நிர்பந்தம் எனப் பலவற்றைச்
சொல்லலாம். இத்தகைய அன்றாட வாழ்வின் போக்கில் நாம் பயணித்துக்கொண்டே
இருந்தால் உடலும் மனமும் விரைவில் பாதிக்கப்படும். இப்போதெல்லாம்
பலருக்கு இள வயதிலேயே முதுகுவலி, ரத்த அழுத்தம், மனச் சோர்வு,
தூக்கமின்மை போன்ற பல கோளாறுகள் வருகின்றன. ஆசனங்களும் பிராணாயாமமும் நம்
அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறினால் வாழ்க்கை முறை சார்ந்த இந்தச்
சிக்கல்களைப் போக்கலாம்.
யோகா என்பது ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமான இலக்கு. ஆசனம் என்பது அன்றாட
வாழ்வில் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு வழிமுறை.
உரிய ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு ஆசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும்
தினமும் செய்து வந்தால் நம் உடல்நலம் மெருகேறுவதை உணரலாம். ஏற்கெனவே
பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் அதற்கான சிகிச்சைகளோடு உரிய
ஆசனங்களையும் மூச்சுப் பயிற்சிகளையும் செய்து வந்தால் அந்தப்
பிரச்சினைகள் விரைவில் குணமாகும்.
ஆசனங்கள் மூலம் முதுகுவலி, உடல் பருமன், ஜீரணப் பிரச்சினைகள், சுவாசக்
கோளாறுகள், தூக்கமின்மை, பசியின்மை ஆகிய பிரச்சினைகளைத்
தீர்த்துக்கொண்டவர்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். மூட்டுவலி,
முதுகுவலி, கழுத்துவலி முதலானவற்றைக் குணமாக்குவதற்கான ஆசனப் பயிற்சிகள்
உள்ளன. மேலும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஆசனங்களும் உள்ளன.
இவற்றை சிகிச்சை யோகாசனங்கள் (Therapeutic yoga) என்று சொல்வார்கள்.
உடலில் பிரச்சினை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆசனங்கள் செய்வது நல்லது.
இந்தப் பயிற்சி நமது வாழ்வின் தரத்தை மேம்படுத்தி, அதன் மதிப்பைக்
கூட்டும். நமது உடலின் சாத்தியங்களுக்கான எல்லைகளை விரிவுபடுத்தும்.
ஆசனம் செய்யும்போது மன ஒருமைப்பாட்டையும் கொண்டுவர முடிந்தால் அதற்கும்
பலன்கள் கிட்டும். உடலியக்கம், மூச்சின் பயணம், மனதின் அசைவுகள்
ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆசனங்களைச் செய்தால் அதன் மூலம் யோக சாஸ்திரம்
சொல்லும் யோக நிலையை எட்டுவதற்கான பயிற்சிகளுக்குத் தயாராகலாம்.
முன்பே சொன்னதுபோல, உரிய ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டு பயிற்சி செய்வதன்
மூலம் நம் வாழ்வைக் கணிசமாக மேம்படுத்திக் கொள்ளலாம்.
உலக யோகா தினமான இன்று அதற்கான வாழ்த்துகளையும் யோகா குறித்த
செய்தியகளையும் பரிமாறிக்கொள்வதுடன், நமது அன்றாட வாழ்வில்
ஆசனங்களுக்கும் இடமளிக்க நாம் உறுதி ஏற்கலாம். அப்படிச் செய்தால், நமது
உடல் / மன ஆரோக்கியம் அடுத்த உலக யோகா தினத்துக்குள் கணிசமாக மேம்படுவதை
உணரலாம்.

mohan alagar

unread,
Jun 22, 2018, 10:08:42 PM6/22/18
to Valluvan Paarvai, inaiathendral
இரண்டு பதிவுகள் ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..!?
மலம் அள்ளும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
‘மஞ்சள்’ , ‘கக்கூஸ்’ போன்ற திரை நாடகங்கள், ஆவணப்படங்கள் எல்லாம் கடந்த
ஆண்டு வெளிவந்து சாமானியர்களின் மனதை உலுக்கியவை. கையால் மலம் அள்ளும்
தொழிலாளர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்திய இந்தப் படங்களின் தாக்கம்
பெரிதும் உணரப்பட்டது.
டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா திட்டங்கள் வந்த பிறகு, கையால் மலம்
அள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் தூய்மையான பாரதம்
படைக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், நிதர்சனம் என்ன தெரியுமா?
கடந்த சில ஆண்டுகள் வரை இந்தியாவில் 12,742 ஆக இருந்த மலம் அள்ளும்
தொழிலாளர்களின் எண்ணிக்கை பாஜக ஆட்சியில் நான்கு மடங்கு
அதிகரித்திருக்கிறது. சமீபத்திய ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவில்
தற்போது 53, 236 தொழிலாளர்கள் மலம் அள்ளும் தொழிலில்
ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள் இருக்கின்றன. இந்த ஆய்வில் மலம்
அள்ளுபவர்கள், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்பவர்கள், கழிவறை சுத்தம்
செய்பவர்கள் என அனைவரும் அடக்கம். 18 மாநிலங்களைச் சேர்ந்த 170
மாவட்டங்களில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை இது.
எனில், இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களிலும் ஆய்வு செய்யப்பட்டால்,
இந்த எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்!
இந்த ஆய்வு முடிவுகளின்படி நாட்டிலேயே பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்
ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அதிகமான மனிதர்கள் மலம் அள்ளும்
கொடுமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அதுவும், துப்புரவுத்
தொழிலாளர்கள் எனும் பெயரில் அரசு அங்கீகாரம் பெற்ற, கையால் கழிவுகளை
அள்ளும் தொழிலாளர்கள் இன்னும் தெருக்களில் சுற்றிவந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்.
- நரேஷ் கழிப்பறை காகிதத்தில் திருமண ஆடை!
நியூயார்க்கில், கழிப்பறை காகிதத்தால் வடிவமைக்கப்பட்ட திருமண ஆடையானது,
ஆடைப் போட்டியில் இந்தியப் பண மதிப்பில் 6 லட்சத்து 78 ஆயிரத்து 433
ரூபாயை வென்றுள்ளது.
கழிவறை காகிதம் என்றாலே முகம் சுழிக்கும் பலருக்கும் இந்தச் செய்தி
ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சேஸபீக்கின் 14ஆவது ஆண்டு கழிப்பறைக்
காகிதத்தில் வடிவமைக்கப்பட்ட திருமண ஆடைப் போட்டியில், ராய் க்ரூஸ் என்ற
ஆடை வடிவமைப்பாளர் தயாரித்த கழிப்பறை காகித ஆடையானது 6 லட்சத்து 78
ஆயிரத்து 433 ரூபாயை வென்றிருக்கிறது.
இந்த ஆடையை முழுவதுமாக செய்து முடிப்பதற்குக் கழிப்பறை காகிதம் 28
ரோல்கள் தேவைப்பட்டிருக்கிறது. மேலும் பசை, டேப், ஊசி மற்றும் நூல் போன்ற
பொருட்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
51 வயதுடைய ராய் க்ரூஸ் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். 5
வருடங்களாகப் போட்டியில் கலந்துகொண்ட இவர், இந்த வருடம் வெற்றியாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஆடை வடிவமைப்பு குறித்து ராய் க்ரூஸ் கூறுகையில், “நான் இந்த ஆடையை
வடிவமைக்கும்போது மிகவும் நிதானமாகவும், கவனமாகவும் இருந்தேன். ஆடையை
(கவுன்) வடிவமைக்க சோளம், உலர் மலர்கள் மற்றும் கழிவறை காகிதம் 28
ரோல்களைப் பயன்படுத்தி, இரண்டு மாடி நீளம் கொண்ட ஆடையை மல்லிகை வால் போல்
வடிவமைத்தேன்” என்றார்.

mohan alagar

unread,
Jun 23, 2018, 9:57:58 AM6/23/18
to Valluvan Paarvai, inaiathendral
இந்திய நீதித்துறை மீண்டும் பொலிவு பெறும்: செலமேஸ்வர் பேட்டி
ஜூன் 22ஆம் தேதியோடு அதிகாரபூர்வமாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான
செலமேஸ்வர், அதன் பின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து
பேசியிருக்கிறார். அண்மையில் உத்தராகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி
கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக்க மத்திய அரசு மறுத்தது
ஏற்றுக்கொள்ளவே முடியாத செயல் என்று தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்
செலமேஸ்வர்.
நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே
டெல்லியில் இதுவரை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பைக் காலி செய்து
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் செலமேஸ்வர், தி பிரிண்ட்
ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகளைக் காண்போம்.
“உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் கொலீஜியம் அமைப்பால்
ஒருமனதாக உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
மத்திய அரசு நான்கு மாதங்கள் கழித்து அந்த பரிந்துரையை திருப்பி
அனுப்பியது. கொலீஜியம் மீண்டும் கூடி கே.எம்.ஜோசப்பை மீண்டும் உச்ச
நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்துவதற்கு முடிவு செய்தது.
அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக விரைவில் பதவியேற்க வேண்டும் என்று நான்
விரும்புகிறேன். எனது இந்த குரல் ஓயாது. இதற்காக நான் மீண்டும் மீண்டும்
குரல் எழுப்பிக்கொண்டே இருப்பேன்” என்று வற்புறுத்தியிருக்கிறார்
செலமேஸ்வர்.
“மே 11ஆம் தேதி கொலீஜியம் கூடியது. ஆனால் இதுவரை அந்த முடிவு மத்திய
அரசுக்கு தெரியப்படுத்தப்படவில்லையே ஏன்?’’ என்ற கேள்விக்குப்
பதிலளித்தவர், “இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. இந்த விஷயத்தில் நான்
தலைமை நீதிபதிக்கு மே 15ஆம் தேதி எழுதிய கடிதத்தில் என் கருத்துகளை
தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். 8 முதல் 9 பக்கங்கள் கொண்ட எனது
கடிதத்தில் கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவது குறித்து மத்திய
அரசின் மறுப்பு உறுதியானதாக இல்லை என்பதைத் தெளிவான காரணங்களோடு
விளக்கியிருக்கிறேன். கே.எம்.ஜோசப்பை மத்திய அரசு ஏன் மறுக்கிறது என்று
எனக்கு புரியவில்லை. ஆனால் மத்திய அரசு சொன்ன காரணங்கள் அனைத்தும் ஏற்கவே
முடியாதவை’’ என்ற செலமேஸ்வர், அந்தக் கடிதத்தில் உள்ள விவரங்களை வெளியிட
மறுத்துவிட்டார்.
மேலும், “கொலீஜியம் ஒருமனதாக மீண்டும் முடிவு செய்ததை தலைமை நீதிபதி
தீபக் மிஸ்ரா விரைவில் மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்”
என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்த அந்த ஜனவரி 12
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு பற்றியும்
பேசியிருக்கிறார்.
“அப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த ஏன் முடிவெடுத்தோம் என்று
சொல்ல விரும்பவில்லை. ஆனால் அந்த பத்திரிகையாளர் சந்திப்புக்காக நான்
துளியும் வருத்தப்படவில்லை’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார் செலமேஸ்வர்.
“இந்திய நீதித்துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று
நினைக்கிறீர்கள்?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டபோது சிரிக்கிறார். பின்,
“இந்த கேள்விக்குப் பதிலாக எனது சட்டக் கல்லூரி நாட்களில் நடந்த ஒரு
சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். நான் சட்டக் கல்லூரியில் படித்த காலம்
நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டிருந்தது. ஓர் இளைஞனாக, அதுவும்
சட்டக் கல்லூரி மாணவனாக, நான் அப்போது நாட்டைப் பற்றி பெரிதும்
கவலைப்பட்டேன். அப்போது அரசியல் அமைப்புச் சட்டம் போதித்த சட்டப்
பேராசிரியர் கோபால கிருஷ்ண சாஸ்திரி அவர்களிடம் போய் எனது கவலையைச்
சொன்னேன். அப்போது அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
பின் சொன்னார், ‘இளைஞனே... கவலைப்படாதே! இந்த நாட்கள் கடினமான
நாட்கள்தான் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் ஹிட்லர் இல்லாத
காலகட்டங்களும் வரலாற்றில் இருந்திருக்கிறது. நான் ஹிட்லர் இறந்த பிறகு
வெகு காலம் கழித்துப் பிறந்தேன். ஆனால் ஹிட்லர் போன்றதொரு மனிதரைப்
பார்க்காத தலைமுறையில்தான் ஹிட்லர் பிறந்தார். எனவே கவலைப்பட வேண்டாம்.
வரலாறு மாறும். எதுவும் நிரந்தரமில்லை. இப்போது சில இடையூறு சக்திகள்
இருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல’ என்று சொன்னார் எனது
பேராசிரியர். அதையே இப்போதும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். வரலாறு
மாறும். இந்திய நீதித்துறை மீண்டும் பொலிவு பெறும். ஆனால், தானாகவே
மாறும் என்று நீங்கள் சும்மா இருந்தால் மாறாது’’ என்று
முடித்திருக்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி செலமேஸ்வர்.
S

mohan alagar

unread,
Jun 24, 2018, 5:50:35 AM6/24/18
to Valluvan Paarvai, inaiathendral
இந்தியர்கள் தங்களிடம் இருக்கும் பொக்கிஷத்தை உணரவில்லை!
சிறப்பு நேர்காணல்: ஷெல்டன் போலாக்
சந்திப்பு: சீமா சவுத்ரி
(ஷெல்டன் போலாக் இரண்டாண்டுகளுக்கு முன்பு மூர்த்தி இந்தியச் செவ்வியல்
இலக்கியங்களுக்கான நூலகத்தின் (Murthy Classical Library of India/MCLI)
பொது எடிட்டராகப் பணியேற்றார்; அதன் ஒரு பகுதியாக செவ்வியல் நூல்களைப்
பல்வேறு இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யும் பணியை மேற்கொண்டபோது அவர்
வில்லனாகச் சித்தரிக்கப்பட்டதன் அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும்
விடுபடவில்லை. இன்போசிஸ் கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரான என்.ஆர்.
நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு
$5.2 மில்லியன் கொடையளித்து இந்த நூலகத்தை நிறுவினார்.
அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் தெற்கு
ஆசிய ஆராய்ச்சிகளுக்கான பேராசிரியராக இருக்கும் அரவிந்த் ரகுநாதன்,
“போலாக் என்ன சொன்னாலும் சிலர் வசைபாட ஆரம்பித்துவிடுவார்கள். அன்னியர்
நமது கலாச்சாரத்தைத் திருடுகிறார், உள்ளே புகுந்து குழப்புகிறார்
என்றெல்லாம் சொல்வார்கள். இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றிப் பேச இவர் யார்
என்று அவர்கள் கேள்வி கேட்பார்கள்" எனக் கூறுகிறார்.
இதனாலெல்லாம் போலாக் இந்தியாவிற்கு வரத் தயங்குவதில்லை என்றாலும்,
கிரேக்க அல்லது லத்தீன் அறிஞர்கள் கிரீஸ் நாட்டிலோ இத்தாலியிலோ எப்படி
நடத்தப்படுவார்களோ அப்படி இங்கு தான் நடத்தப்பட வேண்டுமென அவர்
எதிர்பார்க்கிறார். அசோகா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து
கொள்வதற்காக போலாக் அண்மையில் இந்தியா வந்திருந்தார். அப்போது அவரோடு
உரையாடியபோது இந்தியச் செவ்வியல் நூல்கள் மதிப்பற்ற சொத்துக்கள் என்றும்
அவை ஏன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் விளக்கினார். உரையாடலின்
சுருக்கமான பதிவு இது.)
இரண்டாண்டுகளுக்கு முன்பு சில இந்தியர்கள் MCLI இல் உங்களுடைய பணி
குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்களே...
ஒரு நபரிடம் ஒரு புதையல் இருக்கிறது. யாரோ ஒருவர் வந்து இந்தப் புதையலைப்
பார் என்று சொல்லும்வரை அவர் அந்தப் புதையலில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால்
அப்போதுதான் தன்னிடம் ஒரு புதையல் இருப்பதாக அந்த நபர் உணருகிறார்.
செவ்வியல் ஆராய்ச்சிகள் குறித்து இந்தியாவில் இன்று இருக்கும் நிலைமை
கண்டு நான் அதிர்ந்துபோகிறேன். அதை எவரேனும் சுட்டிக்காட்டினால் அவர்
மீது கனல் கக்கும் கோபத்தைக் காட்டுவதைப் பார்த்து ஆச்சரியமடைகிறேன்.
நான் இதனால் வாயடைத்துப்போயுள்ளேன்.
நான் சூழ்நிலையைத் தவறாகச் சித்தரிக்கிறேனோ என சில நேரங்களில் எனக்கே
சந்தேகம் வருகிறது. செவ்விலக்கியங்களில் பரந்த அளவில் நடைபெறும்
ஆக்கங்கள் பற்றியும் அவை குறித்து ஆழ்ந்த அறிவு நிலவுவதும் எனக்கு
ஒருவேளை தெரியாமல் இருக்கிறதா? இப்பிரச்சினைகள் சிலவற்றைப் பற்றி நான்
எழுதியுள்ளேன். சிலரோடு கலந்தாலோசித்துள்ளேன். கன்னடம் செம்மொழியாக
அறிவிக்கப்பட்டபோது, அனைவரும் அதனைச் செம்மொழி என அறிவிக்க
விரும்புகின்றனர் என்றும் ஆனால், எவருமே அதைப் படிக்க விரும்பவில்லை
எனவும் நான் ஒரு கட்டுரை எழுதினேன். உண்மையில் பிரச்சினை இதுதான்.
நீங்கள் ஒரு செம்மொழியைச் சாக விட்டுவிடுவீர்களென்றால் அது செம்மொழியா
இல்லையா என்பது குறித்து யாருக்குக் கவலை?
உலகின் மிகவும் புகழ்பெற்ற இலக்கிய வரலாற்றைக் கொண்ட இந்த மகத்தான
கலாச்சாரத்தை மிகவும் தொலைவிலிருந்து பார்க்கையில் ஒரு வறண்ட பாலையாக
இவ்வெளி காட்சியளிக்கிறது. நான் அதைச் சுட்டிக்காட்டினால் என்னைச்
சாடுகிறார்கள். பெரும் எண்ணிக்கையில் விற்பதற்கான புத்தகங்களாக அல்லாமல்
கற்பதற்கான புத்தகங்களை வெளியிடும்போது நான் வசைபாடலுக்குள்ளாகிறேன்.
எனது நோக்கம் இளம் வயதினரை இப்புத்தகங்கள் சென்றுசேர வேண்டும்.
இப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தின் இடது புறத்தில் செம்மொழியின் மூலப்
பிரதியும் வலப்புறத்தில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளன.
ஒரு கன்னட இளைஞர் இதிலுள்ள தன்னுடைய தாய்மொழியைத் தன்னால் ஏன் படிக்க
முடியவில்லை என வியக்க வேண்டும். இதைப் பற்றித்தான் எனது கவலை. இதற்காக
ஏன் இவ்வளவு வெறுப்பு?
இப்போது அரபு இலக்கியங்களின் புதியதோர் நூலகத் தொகுப்பு ஆங்கிலேயர்
ஒருவரால் எடிட் செய்யப்பட்டு நியூ யார்க் பல்கலைக்கழக அச்சகத்தால்
வெளியிடப்படுகிறது. புதிய சீன மொழி மானுடவியல் நூலகத் தொகுப்பு ஒன்று
சீனரல்லாத ஒருவரால் ஹார்வர்டில் எடிட் செய்யப்படுகிறது. எந்தப்
பிரச்சினையும் இல்லை. பிரச்சினைகள் இந்தியாவில் மட்டும்தான்.
இந்தியர்கள் வேறு எவருக்குமே கிடைக்காத அறிவுக்கு வாரிசுகள். பருவநிலை
மாற்றம் போன்ற பெரும் சவால்களுக்குத் தீர்வு காண இது பயன்படுத்தப்படலாம்
என அசோகா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் நீங்கள் பேசினீர்களே?
கடந்த காலத்தைச் சேர்ந்த ஏதோ ஒன்று நம்மை இங்குவரை கொண்டுவந்து
விட்டுள்ளதால்தான் நாம் நாமாக இருக்கிறோம். இந்தியர்களின் கடந்த காலமானது
கேள்வி, கற்பனை, நாகரிகம், சுதந்திரமான திறந்த மனநிலை, பன்முகத்தன்மை,
விடுதலை ஆகிய சிறப்புப் பண்புகளைக் கொண்டது. பருவநிலை மாற்றம் போன்ற
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த விழுமியங்களும் திறன்களும் தேவை.
இந்தியர்கள் அனைவராலும் பழைய தமிழ், வங்காள, சமஸ்கிருத மொழிகளைப் படிக்க
முடியாமல் இருக்கலாம். இம்மொழிகளில்தான் இந்த விழுமியங்கள் பொதிந்துள்ளன.
இந்த விழுமியங்கள் பொதிந்துள்ள நாகரிகத்தின் குழந்தைகள் இவர்கள். நான்
எப்படி கிழக்கு ஐரோப்பிய யூத நாகரிகத்தின் குழந்தையோ அதைப் போல். இந்த
நாகரிகம் எனக்கு வலு சேர்க்கிறதல்லவா?
முற்றிலும் தனிச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் இந்தியாவின் கடந்த
காலத்தில் நிகழ்ந்துள்ளதை நான் படித்து ஆராய்ந்து அறிந்துள்ளேன். அந்தப்
பட்டமளிப்பு விழா அரங்கிலிருந்த இளைஞர்கள் அறிவுக்கு மதிப்பளிக்கும்
ஆழ்ந்த பாரம்பரியத்தைத் தங்கள் மரபணுக்களில் கொண்டிருந்தனர். நான் கல்வி
கற்பித்த இந்திய மாணவர்கள் அனைவருமே அதை வெளிப்படுத்தியுள்ளனர்.
சூத்திரங்களை (code) எழுதுவதில் மிகச் சிறந்தவர்களாக ஏன் இந்தியர்கள்
இருக்கிறார்கள்? இதற்கான முழு பதிலை என்னால் கொடுக்க இயலாது. ஆனால்
தலைமுறை தலைமுறையாக வந்துள்ள இலக்கணக் கல்வியே அதற்குக் காரணமாக
இருக்கும் என நான் பலமுறை சிந்தித்ததுண்டு. இவர்களுக்கு சம்ஸ்கிருத
இலக்கணம் பெரும்பாலும் தெரியாதிருக்கலாம். ஆனால் தாம் செய்பவற்றை எவ்வாறு
இவர்களால் செவ்வனே செய்ய முடிகிறது? ஏனெனில் அவர்கள் பகுப்பாய்வுரீதியான,
அதிலும் அநேகமாக இலக்கணரீதியான சிந்தனையின்பால் ஒரு மரியாதையை
மரபுரிமையாக உள்வாங்கியுள்ளனர். அந்த 2500 ஆண்டு பாரம்பரியம், உணர்வு
நிலையில் செய்யப்பட்ட அத்தகைய முதலீடு, சுவடு தெரியாமல் மறைவதில்லை.
பன்முகத்தன்மையை, திறந்த மனம் கொண்ட கலாச்சாரத்தை, தணிக்கை செய்யத்
துவங்குவார்களேயானால் மக்களிடத்தில் அதன் விளைவு என்னவாக அமையும்?
பன்முகத்தன்மையை மதிக்கும் நீண்ட பாரம்பரியம் இந்தியாவில்
இருந்துவந்துள்ளது என நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின் தேசியவாதம்
தழைக்கும் தருணங்களில் அது பலவீனமடைந்துள்ளது. இம்மண்ணில்
பன்முகத்தன்மைக்கும் திறந்த மனப்பான்மைக்கும் ஒரு நீண்ட பாரம்பரியம்
உள்ளது என்பதற்கான வரலாற்றுச் சான்று மிகவும் தெளிவாக உள்ளது.
சுதந்திரமான ஆராய்ச்சிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான 2500 ஆண்டுகாலப்
பாரம்பரியத்தை இதற்கு நேரெதிரான 50 அல்லது 100 ஆண்டுகால எதிர் மனப்பான்மை
நசுக்கிவிட முடியுமா? எனக்குத் தெரியவில்லை!
அரசுகள் வரும், போகும். அமெரிக்காவின் தற்போதைய மக்கள் விரோத டிரம்ப்
அரசு நிரந்தரமா என்ன? இவையெல்லாம் நிலையானவையல்ல. நிலைமைகள் மாறும்.
இந்தியத் தொழில்ட்பக் கழகத்திலும் (IIT) ஒரு பாடமாகவும் பள்ளிகளில்
கட்டாய மூன்றாவது மொழியாகவும் சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்துவது பற்றி
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது நம்மை ஆங்கிலத்தைக் கடந்து
பார்க்கவைக்காதா?
இது ஒரு கடினமான கேள்வி. சென்ற ஆண்டு பாரிசில் நான் ஒரு மாநாட்டில்
கலந்துகொண்டேன். அங்கு பிரெஞ்சு மொழி பேசியவர்கள் மிக மிகச் சிறு
எண்ணிக்கையிலான நபர்களுடன் மட்டுமே அம்மொழியில் பேசிக்கொண்டிருந்தனர்.
நீங்கள் அந்தக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசவில்லையெனில் நீங்கள்
பேசுவதை யாரும் கேட்க மாட்டார்கள். ஒரு வகையில் ஆங்கில ஏகாதிபத்தியம்
உலகில் நிலவுகிறது. அது கவலையளிக்கிறது. ஆனால் அதை அங்கீகரித்து அதோடு
சகவாழ்வு வாழ்வது முக்கியமாகும். விஞ்ஞானிகள் ஆங்கிலத்தை ஒருபோதும் கைவிட
மாட்டார்கள். எனவே ஆங்கிலத்தின் மேலாதிக்கம் மாற்றப்பட முடியாததாக
இருக்கலாம். ஆனால் பிராந்திய மொழி பேசுபவர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக
இருக்க வேண்டும் என்றோ அல்லது குடிமக்கள் என்ற தகுதிகூட இல்லாதவர்களாக
இருக்க வேண்டும் என்றோ இதற்குப் பொருளா?
நான் ஒரே மொழி புழங்கும் உலகில் வாழ்கிறேன். இந்தியா பல மொழிகளை
உள்ளடக்கிய ஒரு நாடு. மக்களுடைய அன்றாட வாழ்வில் பேசப்படும் மொழிகள்,
அவர்களுடைய வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கும் மொழிகள், அறிஞர்களுடைய
மொழியாகவும் இலக்கியத்தின் மொழியாகவும் இருப்பதற்கு 21ஆம் நூற்றாண்டில்
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? இது உள்ளூர் அரசாங்கங்கள் சிந்திக்க
வேண்டிய விஷயம்.
ஐஐடிகளில் சமஸ்கிருதம் ஒரு தேர்வு மொழியாக அறிமுகப்படுத்தப்படுவது
குறித்துக் கூக்குரல் எழுந்தது எனக்குத் தெரியும். ஆனால், இன்று
இந்தியாவில் சமஸ்கிருதக் கல்வியின் நிலைமை என்ன? கடந்த சில ஆண்டுகளில்
பலர் என்னிடம் வந்து நாங்கள் பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருதம்
படித்துள்ளோம், ஆனால் உண்மையில் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லை எனக்
கூறியுள்ளனர். இங்கு எதோ கோளாறு நிலவுவதால் சமஸ்கிருத மொழியைப்
பரப்புவதில் எத்தனை கோடி மனித மணிநேரங்கள் இழக்கப்படுகின்றன என்பதை
நீங்கள் அறிவீர்களா? நான் யாரையும் குறை கூறவில்லை. ஆனால் சமஸ்கிருத
மொழியைக் கற்றுக்கொடுக்க சிறந்த வழிகளைக் கண்டறிய உலகெங்கிலுமுள்ள
சமஸ்கிருத அறிஞர்கள் இந்திய அறிஞர்களோடு சேர்ந்து கூட்டு முயற்சி
மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
எங்களுடைய மொழிகளிலும் எங்கள் இலக்கியத்திலும் மாணவர்களிடையே மீண்டும்
ஆர்வத்தைக் கொண்டுவர நாங்கள் என்ன செய்யலாம்?
எஞ்சியிருக்கும் சில உண்மையான அறிஞர்களை ஒருசேர இணைத்து அவர்களது
திறைமைகளை இளைய தலைமுறைகளுக்குக் கையளிக்க, ஒரு புதிய பாரம்பரியத்தை
வளர்த்தெடுக்க, ஒரு சரியான ஆராய்ச்சிக் கழகம் உதவ முடியும் என நான்
நினைக்கிறேன். இளைஞர்கள் இந்த ஆராய்ச்சிக் கழகத்தில் பயின்று வெளியே
வரும்போது நல்ல இடங்களைச் சென்றடையும் வண்ணம் அவர்களுக்கான வாய்ப்புகளும்
இருக்க வேண்டும். அவர்களுக்கு வேலைகளுக்கான, வாழ்க்கைத் தேவைகளை
ஈட்டுவதற்கான உத்தரவாதத்தை நீங்கள் அளிக்க வேண்டும். இந்த மொழிகளையும்
பிரதிகளையும் படித்துவிட்டு அவர்கள் யாகம் செய்துகொண்டிருக்க முடியாது.
இந்த அரிய ஆற்றல்களுடன் வெளிவரும் இளைஞர்கள் கல்வி நிறுவனங்களைச்
சென்றடைந்து தங்கள் திறமைகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க நீங்கள் ஒரு
அமைப்புமுறையை ஏற்படுத்த வேண்டும். கோடி கோடியாகப் பணத்தை வைத்துக்கொண்டு
தேசிய சமஸ்கிருத நிறுவனம் (Rashtriya Sanskrit Sansthan) என்ன செய்கிறது
என்று நீங்கள் கேட்கலாம். எனக்குத் தெரியாது. நீங்கள்தான் சொல்ல
வேண்டும்.
ஒவ்வொரு இளைஞரும் செம்மொழி ஒன்றை நான்காண்டுகள் பயில வேண்டும். அது எந்த
மொழி என்பது ஒரு பொருட்டே அல்ல. அது ஒரு யோகம். மிகவும் சக்தி வாய்ந்த
யோகம். அது பகுப்பாய்வுச் சிந்தனைக்கான பாடப்பிரிவு. லிபரல் கலைகளைக்
கற்பது சிந்திக்கவும் எழுதவும் பேசவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும்
ஒருவகை சுதந்திரமான ஆக்கத்திறனை வளர்த்துக்கொள்ளவும் மாணவர்களுக்கு
வலிமையை அளிக்கிறது.
செவ்வியல் இலக்கியப் பிரதிகளை அயல்நாட்டவர் மொழிபெயர்ப்பது சிலருக்குப்
பிரச்சினையாக இருக்கிறது. எப்படியாகிலும் அந்நியர்களுக்கு அதற்கான சரியான
திறன் இருக்க முடியாதல்லவா...?
நான் மத நம்பிக்கை கொண்டவனல்ல என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது
உண்மைதான். இந்தச் செவ்வியல் பிரதிகளைப் பற்றி, அவற்றின் ஆன்மிகப்
பண்புகளைப் பற்றி நான் அறியாதவன். குறைந்தது அனுபவரீதியில் ஒன்றும்
அறியாதவன் என்று தற்கால இளைஞர்களின் மனங்களிலும் நெஞ்சங்களிலும் ஒரு
கருத்து நிலவுகிறது. அதுவும் உண்மைதான். ஆனால், இங்குப் பிரச்சினை
அதுவல்ல. இந்திய இலக்கியம் வேறு எந்த இலக்கியத்தையும் போலவே செழுமையானது,
விரிந்தது, பரந்தது. ஆழ்ந்த பக்தி நிறைந்த பிரதிகளும் உள்ளன. விமர்சகர்
என்ற முறையில் நான் இந்தப் பிரதிகளை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும்
செய்யலாம். ஆனால் மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் இருப்பதிலேயே சிறந்த
மொழிபெயர்ப்புகளை நாம் கொடுக்க வேண்டும். எந்த அரசியல் செயல்திட்டமும்
கலக்காத மொழிபெயர்ப்பாக அது இருக்க வேண்டும். இதுதான் எங்கள் நோக்கம்.
இந்தியச் செவ்வியல் பிரதி ஒன்றை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு
மூலத்தன்மை வாய்ந்த, வரலாற்றுக்கு நியாயம் செய்கிற மொழியாக்கமாகக்
கொடுக்கவே முயற்சித்துவருகிறோம். MCLI புத்தகத்தில் மூலப் பிரதி இடது
பக்கமிருக்கிறது. வலது பக்கத்திலிருக்கும் மொழியாக்கத்தில் எங்கேனும்
அரசியலுக்கு அதை ஆட்படுத்தியிருக்கிறோமா எனக் காட்டுங்கள் பார்ப்போம்.
கலாச்சார மொழியாக்கமா அல்லது கலாச்சாரத்தையே மொழிபெயர்ப்பதா? MCLIஇன்
பணியை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?
நாங்கள் பிரதிகளை மொழியாக்கம் செய்கிறோம். மதரீதியிலும் சொல்லாற்றல்
ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் எந்த அளவுக்குக் கச்சிதமாக முடியுமோ அந்த
அளவுக்குக் கச்சிதமாகச் செய்கிறோம். நாங்கள் இந்தியச் செவ்விலக்கியங்களை
மதிக்கத்தக்க ஆங்கிலப் பதிப்புகளாக மாற்றிக்கொடுக்க முயற்சிக்கிறோம்.
நாங்கள் இந்தக் கலாச்சாரத்தையே வேறு எவருக்கேனும் மாற்றிக்கொடுக்கிறோமா?
ஆம். கலாச்சாரம் இந்த பிரதிகளில் உட்பொதிந்திருக்கும் பட்சத்தில்
அதையும்தான் நாங்கள் மொழிமாற்றிக் கொடுக்கிறோம் என நான் நினைக்கிறேன்.
மக்கள் அந்த மொழியாக்கங்களைப் படிக்க விரும்பவில்லை என்றால்
இருக்கட்டுமே. புத்தகத்தின் இடது பக்கத்திலுள்ள மூல வரிகளைப் படிக்கலாம்.
மூலப் படைப்பை ஆங்கிலத்தில் படிக்க அவர்களுக்கு உதவி தேவையென்றால்
அதற்குத்தான் நங்கள் உள்ளோம். அது (உள்ளூர் கலாச்சாரம் மீது) மேலாதிக்கம்
செலுத்துவதற்கோ அல்லது அதை ஆளவோ, அவற்றின் மீது எதையாவது திணிக்கவோ
அல்லது அவற்றிலிருந்து எதையாவது திருடவோ செய்யப்படும் முயற்சியல்ல. இது,
இந்திய மக்களுக்குச் சொந்தமான, நாங்களும் நேசிக்கின்ற, பிரதிகளை
அவர்களுக்கே திருப்பித் தரும் முயற்சி மட்டுமே.
நன்றி: லைவ் மின்ட்
தமிழில்: பா.சிவராமன்

mohan alagar

unread,
Jun 24, 2018, 5:57:53 AM6/24/18
to Valluvan Paarvai, inaiathendral
இரண்டு பதிவுகள்ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..!?
யார் சொல்வது சரி?
“எந்தத் திட்டம் வந்தாலும் எதிர்க்கிறார்கள் சமூக விரோதிகள்!” என்று
சிலர் கொதிக்கிறார்கள். ஆனால், எந்தத் திட்டம் வந்தாலும் அது
சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கும் திட்டமாகவே இருக்கிறது என்பது
சுற்றுச்சூழல் வல்லுநர்களின் வாதம். சாமானிய மக்களும் இதைப் பற்றிப்
பேசுகிறார்கள்.
இதில் எது உண்மை?
சுற்றுச்சூழல் சீர்கேட்டில் ஆசிய அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக
ENVIRONMENTAL JUSTICE ATLAS என்ற அமைப்பின் ஆய்வுப் பட்டியல்
தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளின்
எண்ணிக்கை 271. இரண்டாம் இடம் பிடித்திருக்கும் சீனாவுடன் ஒப்பிட்டால்,
இந்த எண்ணிக்கையின் தீவிரம் உங்களுக்குப் புரியும். இந்தியாவைவிட மூன்று
மடங்கு பெரிய நாடான சீனா 76 சுற்றுச்சூழல் பிரச்சினைகளுடன் இரண்டாம்
இடத்தில் உள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேட்டை விளைவிக்கும் எந்தத்
திட்டத்திற்கும் அனுமதி அளிக்காத பூடான் நாடு, இந்த பட்டியலில் கடைசி
இடத்தை பிடித்துள்ளது.
இப்போது சொல்லுங்கள், யார் சொல்வது சரி?
சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கண்காணிக்க வேண்டியதும் அதற்கு எதிரான
திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும் அரசுடைய வேலை. அதற்குத்தான்
சுற்றுச்சூழல் அமைச்சகம், பசுமைத் தீர்பாயம் என்று பல்வேறு துறைகள்
உள்ளன. ஆனால், அரசுகளே முன்னின்று நடத்தும் திட்டங்களால் நசுக்கப்படும்
இயற்கையைக் காப்பதற்காகச் சாமானியர்கள் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது.
சில சமயங்களில் உயிரையும் கொடுக்க வேண்டியிருக்கிறது.
இப்போது சொல்லுங்கள், யார் சமூக விரோதிகள்?.
- நரேஷ்
விவசாயிகளுக்கு வாட்ஸ் அப் குழு!
வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு
காணும் வகையில் விவசாயிகளுக்கென தனியாக வாட்ஸ் அப் குழுவை அம்மாவட்ட
ஆட்சியர் தொடங்கியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு
கூட்டம் நேற்று(ஜூன் 23) மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில்
நடைபெற்றது. அப்போது, விவசாயிகளின் குறைகளைத் தெரிவிக்கவும், அதற்கு
உடனடியாகத் தீர்வு காணும் வகையில் வேலூர் FARMERS GROUP என்ற வாட்ஸ் அப்
குழுவை ஆட்சியர் தொடங்கிவைத்தார். அதில், மாவட்டம் முழுவதுமுள்ள
விவசாயிகள் இணைக்கப்படுவார்கள். அவர்களின் தேவை, சந்தேகங்கள் மற்றும்
குறைகளைக் கேட்டறிந்து,அதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்வோம். இந்த குழுவில், தோட்டக்கலைத் துறை,விவசாயத் துறை,
கால்நடைத் துறை என அனைத்துத் துறை அதிகாரிகளும் இணைக்கப்படுவார்கள்.
இதில், வானிலை குறித்த தகவலும் தெரிவிக்கப்படும். இதனால், விவசாயிகள்
அதி்காரிகளைத் தேடி செல்ல வேண்டாம். அவர்களுக்கு அலைச்சல் குறைவது
மட்டுமில்லாமல், குறைகளை நேரடியாகக் ஆட்சியரிடமே தெரிவிப்பதால், தீர்வு
கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
இந்த வாட்ஸ் அப் குழு விவசாயிகள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

mohan alagar

unread,
Jun 24, 2018, 10:28:30 AM6/24/18
to Valluvan Paarvai, inaiathendral
இரண்டு பதிவுகள் தூய்மை நகரம்: திருச்சி 13ஆவது இடம், சென்னை 100ஆவது இடம்!
மத்திய அரசு வெளியிட்டுள்ள தூய்மை நகரங்கள் பட்டியலில், திருச்சி மாநகர்
13ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில், தமிழகத்தின் தலைநகரான
சென்னைக்கு 100ஆவது இடம் கிடைத்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் தூய்மையான நகரங்கள்
பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில்,
இந்தாண்டுக்கான(2018) தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய நகர்ப்புற
வளர்ச்சி அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்கள் பட்டியலில்
3,707 புள்ளிகள் பெற்று மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம்
முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அதே மாநிலத்தின் தலைநகரான போபால்
இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. சண்டிகர் மூன்றாம் இடத்தையும்,
நாட்டின் தலைநகரான டெல்லி நான்காம் இடத்திலும் உள்ளன.
கடந்த ஆண்டு(2017) ஆறாவது இடத்தில் இருந்த திருச்சி மாநகர், நடப்பாண்டில்
3,351 புள்ளிகள் பெற்று 13ஆவது இடத்தில் இருக்கிறது. கோவை மாநகராட்சி
3,291 புள்ளிகள் பெற்று 16ஆவது இடத்திலும், ஈரோடு மாநகராட்சி 2,857
புள்ளிகள் பெற்று 51ஆவது இடத்திலும் இருக்கிறது.
மேலும் மாநில அளவிலான பட்டியலில் ஜார்கண்ட் முதலிடத்தைப் பிடித்த
நிலையில், தமிழகம் 13ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 235ஆவது இடத்தில்
இருந்த தமிழகத்தின் தலைநகரான சென்னை, நடப்பாண்டில் 2,586 புள்ளிகள்
பெற்று 100ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தூய்மை நகரங்களில் மதுரை மாநகர் 123ஆவது இடத்திலும், திண்டுக்கல் 124
இடத்திலும், புதுக்கோட்டை 167ஆவது இடத்திலும் உள்ளன. மேலும் இந்தப்
பட்டியலில், புதுச்சேரி நகரம் 343ஆவது இடத்தில் உள்ளது.
சிறப்புக் கட்டுரை: உறவென்பது குழந்தைப் பேறுக்கு மட்டும்தானா?
டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்
சிறப்புத் தொடர்: உங்கள் மனசு
குழந்தை என்பது நிச்சயம் பேறுதான். ஆனால், ஆண் – பெண் உறவென்பது நிச்சயம்
குழந்தை பெறுவதற்கான வழி மட்டுமல்ல. உணவு, உடை, உறைவிடம் போல, இல்லற
உறவென்பது ஒரு உயிரின் அடிப்படைத் தேவை. கிழிந்த ஆடை அணிந்தவரையோ, வசிக்க
இடமில்லாதவரையோ, உண்ணாமல் பட்டினி கிடப்பவரையோ, நாம் எப்படி
நோக்குகிறோம்? செக்ஸ் இல்லாத தினசரி வாழ்க்கையை வாழ்ந்துவரும் ஒருவரையும்
நாம் அப்படித்தான் பார்க்கிறோமா? இதற்கான பதில் தெரியாததால்தான்
நம்மிடையே வாழும் பலர் தங்களது செக்ஸ் பிரச்சினைகளை வெளிப்படையாகப்
பேசுவதில்லை. மீறிப் பேசினாலும், முன்னர் கிடைத்த மரியாதையை அவர்கள்
திரும்பப் பெறுவதில்லை. இதனாலேயே தங்களது துன்பத்தை யாரிடமும் பகிராமல்
மனதுக்குள் புதைக்கின்றனர். அது, மிகப்பூதாகரமான மனநலம் மற்றும் உடல்நலம்
சிதைக்கும் பிரச்சினையாகப் பின்னாளில் மாறுகிறது.
இப்படியொரு பயம்தான் சத்யேந்திரனையும் வாட்டியது. மைண்ட் ஸோன்
மருத்துவமனைக்கு அவரை அழைத்துவந்தது. மருத்துவமனையில் நோயாளிகள்
எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர் வரிசையில் நீண்ட நேரம்
காத்திருந்தார். ஆனாலும், அவர் மருத்துவ ஆலோசனை பெறுவதில் உறுதியாக
இருந்தார். உணவு உண்ணச் சென்றபோதும், உடனடியாகத் தனது இருக்கைக்குத்
திரும்பிவிட்டார். அவர் இதைச் சொன்னபோதே, அவர் எத்தகைய மன வலியைக்
கொண்டிருந்தார் என்பதை உணர முடிந்தது.
பிரச்சினை இருக்கா, இல்லியா?
ஆலோசனை பெற வந்தவர், சிறிது நேரம் மவுனமாக இருந்தார். அதன் பின், தனது
பிரச்சினை என்னவென்பதைப் பேசத் தொடங்கினார். “எனக்கு செக்ஸ் பிரச்சினை
இருக்கா, இல்லியான்னு உறுதிப்படுத்தணும்” என்பது அவரது வேண்டுகோள்.
இன்றைய இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது ஆண்கள் பலருக்கு இந்தச் சந்தேகம்
உண்டு. ஆனால், இந்த ஒற்றைப் பிரச்சினையின் பின்னணியில் ஒவ்வொருவருக்கும்
வெவ்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.
சத்யேந்திரன் பிரச்சினை என்னவென்று, அவரிடம் உடனடியாகக் கேட்கவில்லை.
எதனால் இந்த சந்தேகம் வந்தது என்றதும், தனது உறவினர்கள் இவ்வாறு
கேட்பதாகக் கூறினார். நெருங்கிய உறவினர்களா என்றதும், மெதுவாகத் தனது
வாழ்க்கையைக் கூறத் தொடங்கினார்.
சத்யேந்திரன், நாற்பது வயதை நெருங்கும் ஒரு நபர். சாதாரண, நடுத்தர
வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் சத்யேந்திரன். எல்லோரிடமும் நன்றாகப்
பழகுபவர் என்றாலும், கேள்வி கேட்டால் மட்டுமே பதிலளிக்கும் குணமுடையவர்.
இதனால், இவரது நெருங்கிய நட்பு வட்டம் என்பது மிகச் சிறியது. அவர்களில்
சிலர், இப்போது வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
இவரது பெற்றோருக்கு இரண்டு குழந்தைகள். தமக்கைக்கு நெடுநாட்களுக்கு
முன்பே திருமணமாகிவிட்டது. மிகத் தாமதமாகத்தான் திருமணம் செய்துகொண்டார்
சத்யேந்திரன். நன்றாகப் படிப்பது, நல்ல வேலையில் சேருவது, கைநிறைய
சம்பாதிப்பது, அதனை மிகச் சரியாக முதலீடு செய்வது என்று அவர் பல
நோக்கங்களைக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம். பெங்களூருவில் வேலை
பார்த்து, தனியாக வீடு மற்றும் ஒரு கார் வாங்கினார். ஓரளவு செட்டில்
ஆகிவிட்டோம் என்ற நம்பிக்கை வந்த பின்னர், சத்யேந்திரன் திருமணத்திற்கு
ஒப்புக்கொண்டார். அதற்குள் அவருக்கு 30 வயதைத் தாண்டியிருந்தது.
திருமணம் நடந்துமுடிந்து முதலிரவின்போதுதான் அவர் தன் மனைவியுடன்
பேசினார். அப்போதே, மனைவியின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருப்பதாக
உணர்ந்தார். ஆனால், மனைவி மனநலமற்றவராக இருப்பார் என்று அவர் சிறிதும்
சிந்திக்கவில்லை. சில நாட்களிலேயே, மனைவியின் மனநிலை அவருக்குத்
தெரியவந்தது. தன்னால் மனைவியின் குறைபாட்டைச் சரிசெய்ய முடியாது
என்றறிந்தபோது, அவர் விவாகரத்தை நாடினார். இருவரும் பிரிந்தனர்.
இடைப்பட்ட காலகட்டத்தில், மனைவியுடனான தாம்பத்திய வாழ்க்கையில்
சத்யேந்திரனுக்கு எந்த அதிருப்தியும் இல்லை.
புதிய உறவின் தொடக்கம்
விவாகரத்துக்குப் பிறகு, தொடர்ந்து தனது அன்றாட வேலைகளைச் செய்துவந்தார்.
ஆனால், அவரது பெற்றோர்கள் மிகவும் மனம் வருத்தப்பட்டனர். தாங்கள்
பார்த்து நடத்திவைத்த கல்யாணம் இப்படியாகிவிட்டதே என்று குமுறினர்.
வாழ்க்கைத் துணை இல்லாமல் தொடர்ந்து வாழ்வதா என்று, சத்யேந்திரனை
இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர். சில ஆண்டுகளுக்கு
அவர்களின் வற்புறுத்தல் தொடர்ந்தது. ஒருகட்டத்தில், வேறு வழியில்லாமல்
அவர்களின் பேச்சைக் கேட்பதாக ஒப்புக்கொண்டார் சத்யேந்திரன். ஆனால்,
தன்னைப் போலவே விவாகரத்தான ஒரு பெண்தான் மனைவியாக வர வேண்டுமென்று
வேண்டுகோள் வைத்தார்.
திருமணமாகாத இளம் பெண்களைத் தேடினால், வயது வித்தியாசம் பெரிய
பிரச்சினையாகத் தெரியும் என்று அவர் கருதியதே இதற்குக் காரணம். தன்
வயதுடைய பெண் என்றால், இன்னும் நலமாக இருக்கும் என்று நினைத்தார்.
கிட்டத்தட்ட நாற்பது வயதை நெருங்கும் சத்யேந்திரனுக்கு, அவர்
எதிர்பார்த்த மாதிரியே ஒரு வரன் அமைந்தது. பெரிய கார்ப்பரேட்
நிறுவனத்தில் வேலை செய்த மோகினியைச் சந்தித்தார். அவரிடம் பேசினார்.
இந்தத் திருமணத்தை வெற்றிகரமானதாக்க வேண்டுமென்று விரும்பினார்
சத்யேந்திரன். மோகினியும் அதே மனநிலையில் இருந்தார். தொடர்ந்து
பேசியதில், மோகினிக்கும் தனக்குமான உறவு நிலைக்குமென்று நம்பினார்
சத்யேந்திரன். அதன் பின்னரே மிகவும் எளிமையான முறையில் இருவரது திருமணம்
நடந்தது.
திருமணம் எளிமையாக நடந்து முடிந்தாலும், தொடர்ந்து இருவரையும் சந்திக்க
உறவினர்களும் நண்பர்களும் வந்தவாறு இருந்தனர். பெற்றோர் வெளியூரில்
வசித்ததால், பெங்களூருவில் இருந்த தனது வீட்டை விட்டுவிட்டு மோகினியின்
வீட்டுக்கு இடம்பெயர்ந்தார் சத்யேந்திரன். அவரது வீடு நகரின்
மையப்பகுதியில் இருந்தது.
ஒட்டாத உறவு
திருமணமாகிப் பல நாட்களான பின்னரும் இருவருக்கும் படுக்கையறையில்
நெருக்கம் அதிகமாகவில்லை. அவருக்கு செக்ஸ் வாழ்க்கையில் தற்போது
விருப்பமில்லை என்று நினைத்தார் சத்யேந்திரன். அவராக விருப்பப்படும்வரை,
தான் அவசரப்பட வேண்டாமென்று பொறுத்துக்கொண்டார்.
இரண்டாவது மாதம் பிறந்தபோது, நிலைமை முற்றிலுமாக மாறிப்போனது. ஓரளவு
நெருக்கம் ஏற்பட்டாலும், உறவில் மோகினி பெரிதாக ஈடுபாடு காட்டததைப் போல
உணர்ந்தார் சத்யேந்திரன். அவரிடம் அதுபற்றிக் கேட்பதற்கும், அவருக்குக்
கஷ்டமாக இருந்தது. அதிகாலையில் படுக்கையறையை விட்டு வெளியே வந்தால்,
அங்கே இன்னொரு துன்பம் காத்திருப்பது வழக்கமானது. படுக்கையறையின் வெளியே,
மோகினியின் தந்தை காத்திருந்தார்.
ஓரிரு வாரம் கழித்து, மோகினியின் தந்தை அடுத்த கட்டத்துக்குச் சென்றார்.
“என்ன மாப்ளே எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?” என்று கேட்கத் தொடங்கினார்.
மாமனார் கேட்பது நன்றாகப் புரிந்தாலும், அவர் நேரடியாக இப்படிப் பேசியது
சத்யேந்திரனுக்கு அதிர்ச்சியை வரவழைத்தது.
தெலுங்குப் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளை அவர் கண்டதுண்டு. ஆனால்,
அது நகைச்சுவையாகவும் கவர்ச்சியானதாகவும் அமைந்திருக்கும். அதுபோன்ற
அனுபவத்தைத் தானே சுயமாக உணருவோம் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை.
மோகினியிடம் கேட்டபோது, தனது தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாகச்
சொன்னார். விரைவில் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதே
அவரது விருப்பம் என்றும், அதற்காகவே தான் இரண்டாவது திருமணத்துக்கு
ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அந்த நாள் முதல், தனது பதிலால்
மாமனார் இதயம் நொறுங்கிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கத் தொடங்கினார்.
ஆனாலும், வலிய விதி அவரை விடவில்லை.
தொடரும் சங்கடம்
தினமும் படுக்கையறைக்குள் நுழையும்போது ‘பெஸ்ட் ஆஃப் லக்’ சொல்ல
ஆரம்பித்தார் மோகினியின் தந்தை. அடுத்த நாள் காலையில் வெளியே வரும்போது
“சக்ஸஸா’ என்று கேட்பதில் இந்தச் செயல்பாடு முடியும். மோகினி வெளியே
வந்து உதட்டைப் பிதுக்கினால் போதும்; அன்று முழுவதும் சோபாவை விட்டு
எழுந்திரிக்காமல் அப்படியே அவர் சிலையாக அமர்ந்திருப்பார். ஒரு சில
மாதங்களுக்குப் பிறகு, அவரது செயல்பாடுகளில் அடுத்த மாற்றம்.
“எப்போதான் பேரப்பிள்ளைய பெத்துக்கொடுக்கப் போறீங்க” என்று கேட்கத்
தொடங்கினார் மோகினியின் தந்தை. அதற்கேற்றாற்போல, பாதாமும் பிஸ்தாவும்
கலந்து சத்யேந்திரனிடம் கொடுத்தார் மோகினியின் தாய். இதைச் சாப்பிட்டால்
களைப்பே ஏற்படாது என்று கூறினார். அப்போதுதான் ஒரு வித்தியாசமான
குடும்பத்தில் தான் வாழ்ந்துகொண்டிருப்பதாக உணர்ந்தார் சத்யேந்திரன்.
சத்யேந்திரனின் இந்தச் சங்கடம் எதை நோக்கி அவரைக் கொண்டுசென்றது?
தன்னுடைய சிக்கலிலிருந்து அவர் எப்படி வெளியே வந்தார்?
(நாளை…)
எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்
கட்டுரையாளர்கள்:
டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக்
கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம்
பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில்
புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல
சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச்
சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை
எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.
டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக்
கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை
குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச
அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார்.
குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர்
திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.

mohan alagar

unread,
Jun 24, 2018, 9:54:38 PM6/24/18
to Valluvan Paarvai, inaiathendral
இரண்டு பதிவுகள் ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
நிதிப் பற்றாக்குறையால் திவாலாகும் தமிழகம்!
புறநகர் விமான நிலையங்கள், சாலை விரிவாக்கங்கள், புதிய பாலங்களுக்கான
திட்டங்கள், மதுரை நெடுஞ்சாலை விரிவாக்கம், சேலம் விமான விரிவாக்கம்,
எட்டு வழி பசுமைச் சாலை என்று ஏகத்திற்குத் திட்டங்களை அள்ளி
வீசியிருக்கிறது தமிழக அரசு. ஆனால், இந்தத் திட்டங்களைச்
செயல்படுத்துவதற்கான நிதி தமிழகத்திடம் இருக்கிறதா? இந்தத் திட்டங்களின்
உண்மையான பலன் என்ன?
தமிழக அரசிடம் நிதி இல்லை. ஆனால் நிதிப் பற்றாக்குறை எக்கச்சக்கமாக
இருக்கிறது. தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.40,530 கோடியாக உள்ளதாக
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில்
நிதிப் பற்றாக்குறை அதிகம் கொண்ட மாநிலங்களில் மூன்றாம் இடத்தில் உள்ளது
தமிழகம். இந்த நிதிப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளாமல், மேலும் மேலும் நிதிப் பற்றாக்குறையை உண்டாக்குவதற்கான
திட்டங்களை மட்டுமே அறிவித்துக்கொண்டிருப்பதன் பின்னணி என்ன?
அதிமுக ஆட்சி எவ்வளவு மோசமாக நிர்வாகம் செய்கிறது என்பதை நிதிப்
பற்றாக்குறை அளவீடுகளை வைத்து நாம் புரிந்துகொள்ள முடியும். 2012-13ஆம்
ஆண்டில் ரூ.1,760 கோடி ரூபாய் உபரி நிதி இருந்தது. இந்த உபரி நிதிக்
கணக்கிலிருந்து, தற்போது 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையாக
உயர்த்தப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டே ரூ.1,790 கோடி பற்றாக்குறையாக
மாறியது. 2014-15ஆம் ஆண்டு நிதியாண்டில் 258 சதவிகிதமும், 2015-16ஆம்
ஆண்டில் 48 சதவிகிதமும், 2016-17ஆம் ஆண்டில் 67 சதவிகிதமும் பற்றாக்குறை
அதிகரித்துள்ளது.
இவ்வளவு பற்றாக்குறை இருந்தும் தொடர்ந்து தேவையில்லாத திட்டங்களைச்
செயல்படுத்தியே தீருவேன் என்று இந்த அரசு செயல்படுவதற்கான காரணம் என்ன
என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல!
- நரேஷ்
மோடியின் செல்வாக்கு: ஆய்வும் கள நிலவரமும்!
பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது என
ஆய்வு முடிவுகள் கூறும் நிலையில், கள நிலவரமும் அதை நிரூபிக்கும்
வகையிலேயே உள்ளன.
லோக்நிடி - சிஎஸ்டிஎஸ் - ஏபிபி செய்திகள் இணைந்து இந்தியாவின் 19
மாநிலங்களில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தின. இதன் முடிவுகள் கடந்த மே
24ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய
ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி மீண்டும் மத்தியில் அமையக் கூடாது எனப்
பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மோடி அரசின் செயல்பாடுகள் திருப்தி
அளிக்கவில்லை என இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்தில் 75 சதவிகிதம்
பேர் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினர் இடையே பாஜக வெறுப்பு அதிகமாக உள்ளதுபோல், கணிசமான
இந்துக்கள் இடையேயும் பாஜக எதிர்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 12
மாதங்களில் பாஜகவின் செல்வாக்கு என்பது 7 சதவிகிதம் அளவுக்குக்
குறைந்துள்ளது. அதே நேரத்தில் ராகுல் காந்தியின் செல்வாக்கு என்பது
அதிகரித்துள்ளது. இருவரையும் விரும்புபவர்களின் எண்ணிக்கை 43 சதவிகிதமாக
இருந்தாலும் மோடியை விரும்பாதவர்களின் எண்ணிக்கை என்பது 36 சதவிகிதமாக
உள்ளது. ராகுலைப் பொறுத்தவரை இது 32 சதவிகிதமாக குறைந்து காணப்படுகிறது.
குறிப்பாக நடுத்தர வயதுள்ள மற்றும் முதியோர்கள் பலர் ராகுலுக்கு
விருப்பம் தெரிவித்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற
பின்னர், 15 மாநிலங்களில் 10 மக்களவை தொகுதிகளுக்கும் 21 சட்டப்பேரவை
தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள்
சர்வே ஆய்வு முடிவுகளை உறுதி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளன.
ஆய்வில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 37 சதவிகித வாக்குகளைப்
பெற்றிருந்தது. கள நிலவரத்தை எடுத்துக்கொண்டால் குஜராத் தேர்தலுக்குப்
பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் 36 சதவிகித வாக்குகளை பாஜக
பெற்றுள்ளது தெரிய வருகிறது.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 31 சதவிகித வாக்குகளை சர்வே ஆய்வில்
பெற்றிருந்தன. தேர்தல்களில் இந்த எண்ணிக்கை என்பது 32 சதவிகிதமாக உள்ளது.
இதேபோல், பகுஜன் சமாஜ்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆய்வில் 10
சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இடைத் தேர்தலில் இந்த
எண்ணிக்கை என்பது 13.3 சதவிகிதமாக உள்ளது.
ஆய்வு முடிவுகள்-1
ஆய்வு முடிவுகள்-2
ஆய்வு முடிவுகள்-3
ஆய்வு முடிவுகள்-4
ஆய்வு முடிவுகள்-5
ஆய்வு முடிவுகள்-6
ஆய்வு முடிவுகள்-7
ஆய்வு முடிவுகள்-8

mohan alagar

unread,
Jun 24, 2018, 10:02:13 PM6/24/18
to Valluvan Paarvai, inaiathendral
இரண்டு பதிவுகள் இனி விவசாயிகளே மின் உற்பத்தி செய்யலாம்!
இனி விவசாயிகளால் சூரியசக்தி (சோலார்) மின்சாரத்தை உற்பத்தி செய்யவும்,
விற்பனை செய்யவும் முடியும்.
இனி குஜராத் மாநில விவசாயிகளால் சோலார் மின்சக்தியை உற்பத்தி செய்து
பயன்படுத்தவும், உபரி மின்சாரத்தை அரசு மின் உற்பத்தி நிறுவனங்களிடம்
விற்பனை செய்யவும் முடியும். ஜூன் 23ஆம் தேதியன்று குஜராத் மாநில
முதலமைச்சரான விஜய் ரூபானி சூர்யசக்தி கிசான் யோஜனா (SKY) என்ற திட்டத்தை
அறிவித்தார். இத்திட்டத்தின்படி, வேளாண் மற்றும் நீர்ப்பாசன தேவைகளுக்காக
விவசாயிகளால் சோலார் மின்சக்தியை உற்பத்தி செய்துகொள்ள முடியும். உபரியான
மின்சாரத்தை இத்திட்டத்தின் கீழ் ஒரு யூனிட் 7 ரூபாய்க்கு அரசு மின்
உற்பத்தி நிறுவனங்களிடம் விவசாயிகளால் விற்பனை செய்ய முடியும்.
முதற்கட்டமாக, 33 மாவட்டங்களில் 137 மின்னூட்டிகளை (Electric Feeders)
அமைத்து 12,400 விவசாயிகளை இத்திட்டத்தின் வளையத்துக்குள் கொண்டுவர அரசு
திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான செலவு 870 கோடி ரூபாயாக
மதிப்பிடப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கை கூறுகிறது. நீர் பம்புகள் வாயிலாக
நீர்ப் பாசனம் செய்வதற்குத் தேவையான 1,42,000 குதிரைத் திறனை உற்பத்தி
செய்ய 177 மெகா வாட் சோலார் மின்சக்தி தேவைப்படுகிறது. இதுகுறித்து
குஜராத் மின்சக்தித் துறை அமைச்சரான சுரப் பட்டேல் பேசுகையில், “2022
ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பிரதமர் மோடியின்
வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான திட்டமாக சூர்யசக்தி கிசான் யோஜனா
இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், சோலார் மின் உற்பத்தித்
திட்டத்தை அமைப்பதற்கான மொத்த செலவுகளில் 5 விழுக்காட்டை மட்டும் செலவு
செய்ய வேண்டியிருக்கும். மத்திய அரசும், மாநில அரசும் 60 விழுக்காட்டை
மானியமாக வழங்கவுள்ளன. மீதமுள்ள 35 விழுக்காடு விவசாயிகளுக்குக் கடனாக
வழங்கப்படும். இதற்கான வட்டித் தொகையை மாநில அரசே செலுத்தும். கடனைத்
திருப்பிச் செலுத்துவதற்கு ஏழு ஆண்டுகள் கால அவகாசம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கவுதமன் கைது: நடந்ததை விவரிக்கும் மனைவி!
அரசுக்கு எதிராகப் போராடுபவர்களைக் குறிவைத்துக் கைது செய்துவரும் காவல்
துறையினர், இயக்குநர் கவுதமனை வலுக்கட்டாயமாக அவரது வீட்டுக்குள்
புகுந்து கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல்
போட்டிக்கு எதிராகப் போராடியது தொடர்பாக கவுதமன் மீது திருவல்லிக்கேணி
போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில்
இரண்டு கொலை முயற்சி வழக்குகள், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல்
தடுத்தல், சட்டவிரோதமாகக் கூடுதல் உள்ளிட்ட பிரிவுகள் அடக்கம்.
இதன்பேரில் சென்னை சூளைமேட்டில் உள்ள கவுதமன் வீட்டுக்குச் சென்ற
15க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று (ஜூன் 24) அவரை வலுக்கட்டாயமாகக் கைது
செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவரது மனைவி மல்லிகா அளித்துள்ள
பேட்டியில், “அவர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கைது
செய்தார்கள். அடுத்த வாய் சாப்பாடு எடுத்து வைப்பதற்குள் அழைத்துச்
சென்றார்கள். 'நான் என்ன தீவிரவாதியா, எதுக்காக இப்படி நின்று
பார்க்கிறீர்கள்?' என்று இவர் கேட்டார். 'இல்லை சார் நீங்க சாப்பிட்டு
வாங்க' என்று சொன்னாலும், போலீஸார் சுற்றி நிற்கும்போது அவரால் சாப்பிட
முடியவில்லை. அதனால் உடனே எழுந்து கை கழுவி விட்டு, 'என்ன விசாரிக்கணும்'
என்று கேட்டார். 'கீழே வாங்க சார். உங்களோடு பேச வேண்டும்' என்று
அழைத்துச் சென்றவர்கள், அப்படியே அவரை கூட்டிச் சென்றனர். எங்கு கூட்டிச்
செல்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என எந்த ஒரு தகவலும் அவர்கள்
சொல்லவில்லை” என உருக்கமாகக் கூறினார்.
கைது செய்த கவுதமனை திருவல்லிக்கேணிக்கு அழைத்துச் செல்லாமல் ரகசிய
இடத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். இந்நிலையில், இயக்குநர்
கவுதமனுக்கு ஜூலை 6 வரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை
எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே,சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய நடிகர்
மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர்கள் வளர்மதி, பியூஸ் மனூஷ் மற்றும்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் போன்றோர் கைது
செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

mohan alagar

unread,
Jun 25, 2018, 10:03:22 PM6/25/18
to Valluvan Paarvai, inaiathendral
இரண்டு பதிவுகள் ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?
நொய்யலின் மீது இன்னொரு தாக்குதல்!
கோவையில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் அறிவியல்
கண்காட்சியில் நொய்யல் ஆற்றைக் காப்பதற்கான திட்டங்கள் என்ற தலைப்பில்
ஓர் அறிக்கையைக் காண நேரிட்டது. இதுகுறித்து ஆராய்ச்சி செய்த குழு
ஒன்றின் அறிக்கை இது.
அவர்கள் முன்வைத்தது ஒரே தீர்வைதான். நாணல்! ஆம், நாணல் புற்களின்
எண்ணிக்கையை உயர்த்தினாலே, அந்த ஆற்றின் உயிர்ச்சூழல் மாறும் என்றும்
அதனால் உருவாகும் நுண்ணுயிரிகள், கொட்டப்பட்ட கழிவுகளைச் செறிக்கும்
திறன் பெற்றவையாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கையை முன்வைத்திருந்தனர்.
ஆனால், நாணல்கூட வியாபார வெறிக் கண்களின் கொக்கிகளிலிருந்து தப்பவில்லை.
சென்னைக்குக் கூவம் என்றால், கொங்கு மண்டலத்திற்கு நொய்யல். எந்தக்
காலத்திலும் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருந்த நதியின் இன்றைய நிலைமை,
கசக்கித் தூக்கிய எறியப்பட்ட துண்டுக் காகிதத்தைப் போல உள்ளது. சாயப்
பட்டறை ஆலைகள், மணல் கொள்ளை, அயல் தாவரங்கள், ஆக்கிரமிப்புகள் என்று
முற்றிலும் சீரழிக்கப்பட்ட நொய்யல் ஆற்றின் புண்களில் மேலும் ஒரு வேல்
பாய்ச்சப்பட்டிருக்கிறது.
மணல் கொள்ளை மட்டுமே நடந்துகொண்டிருந்த ஆற்றில், தற்போது நாணல் கொள்ளை
நடந்துகொண்டிருக்கிறது. நொய்யல் மற்றும் அந்தக் கிளை நீர்நிலைகளில்
வளர்ந்துள்ள நாணல் புற்கள் அதிகமாக வெட்டப்பட்டு, மரச் சாமான்கள் மற்றும்
அது சார்ந்த பொருட்கள் தயாரிப்புக்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
லாரிகளில் ஆற்று மணலைத் திருடிவருவதைப் போல, லாரிகளில் நாணல் தண்டுகளை
வெட்டிக் கடத்துகின்றனர்.
நீர்நிலைகளின் வளத்தைச் சுரண்டுவதற்கு அளவே இல்லையா?
- நரேஷ்
மனதின் பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அவசியம்!
அன்றாட வாழ்வில் எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்,
ஆண்டுக்கு ஒருமுறையாவது காய்ச்சல், தலைவலி என்று ஏதேனும் உபாதைகள்
நம்மைப் பாதிக்கிறது. அல்லது அதுபற்றிய உணர்வை நாம் பெறாத வகையில்
உடலானது அதனைச் சந்திக்கிறது. எதிர்பாராத சில விபத்துகளின்போது, நாம்
காயப்படுவது தொடர்கிறது. ஆனால், உடல் தொடர்பான கோளாறுகளுக்கு உடனடியாகச்
சிகிச்சை பெறத் தயாராக இருக்கும் நம்மில் பலர், மனதின் பிரச்சினைகளைக்
கவனத்தில் கொள்வதில்லை.
வருத்தம், துன்பம், மன உளைச்சல் எல்லாம் வரும், போகும் என்று சிலர்
அலட்சியப்படுத்துகின்றனர். இன்னும் சிலரோ இதெல்லாம் ஒரு பிரச்சினைதானா,
இதனை யாரிடம் சென்று கேட்பது என்று பல கேள்விகளுக்குப் பதில் தெரியாமலே
விட்டுவிடுகின்றனர். சில நேரங்களில் பிரச்சினையின் வீரியம் அதிகமாகி,
மனநல மருத்துவரைச் சந்திக்கும் தீர்வை யாராவது முன்வைத்தாலும்,
பெரும்பாலானவர்கள் அதனை ஏற்பதில்லை. காரணம், தன் மீது மனநலம்
சரியில்லாதவர் என்ற முத்திரை விழுந்துவிடுமோ என்ற பயம். குறிப்பாக,
நடுத்தரக் குடும்பத்தினரிடம் இந்த சிந்தனை அளவுக்கு அதிகமாக உள்ளது.
சாதாரணமாக ஒரு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறச் செல்லும்போது, நம்மை
தீவிர நோயாளி என்று யாரும் சொல்வதில்லை. குணப்படுத்தவே முடியாத ஒரு
நோய்க்கு ஆளானதாக நினைப்பதில்லை. உடலைப் பொறுத்தவரை நிலைமை இவ்வாறு
இருக்க, உள்ளத்துக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?
அதனால் பயம், பதற்றம், தயக்கம் என எந்தவொரு ஒவ்வாத உணர்வையும் அதீதமாக
உணர்ந்தால், உடனடியாக உளவியல் சிகிச்சையை நாடுங்கள். பல மனப்
பிரச்சினைகளுக்கு மாத்திரைகளை விட, மனதைச் சீராக்கும் ஆலோசனைகளே மருந்து.
தினசரி வாழ்வில் நீங்கள் சந்திக்கும் மன அழுத்தங்களில் இருந்து
விடுபட்டு, உங்களது இயல்பை மீட்டெடுக்க உதவுகிறது மைண்ட் ஸோன்
மருத்துவமனை. வாழ்வில் நீங்கள் தவிர்க்க வேண்டியவற்றை உதறிவிட்டு,
கைக்கொள்ள வேண்டியவற்றை அடையாளம் காட்டும் மன வலிமையைத் தருகிறது.
மேலும் விவரங்களுக்கு:
மைண்ட் ஸோன்
நம்பர் 58/2, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை – 600020
இமெயில்: mailmi...@gmail.com
அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

mohan alagar

unread,
Jun 26, 2018, 9:42:34 PM6/26/18
to Valluvan Paarvai, inaiathendral
2 பதிவுகள் ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..!?
ஆட்சியரிடம் மாணவர்கள் அளித்த மனு!
புதிய பாடத்திட்டம், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த மாதாந்திரத் தேர்வு
முறை, கல்வி முறை மாற்றம் என்று என்னதான் பல முலாம்கள் பூசினாலும்,
அரசின் அலட்சியத்தையும் ஊழலையும் வெளிக்கொண்டுவர பள்ளிச் சிறுவர்களின்
வெள்ளைக் காகிதம் போதும்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்ற
குறைதீர் கூட்டத்திற்குப் பள்ளி சீருடையில் சில சிறுவர்கள் வந்தனர்.
சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்தனரோ என்று விசாரிக்கப்பட்டபோது,
ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததாகக் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த
அதிகாரிகள், அந்த மனுவை வாங்கி ஆட்சியரிடம் கொடுத்தார்கள்.
அதில் இப்படி எழுதியிருந்தது: “நாங்கள் உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில்
படித்து வருகிறோம். மத்திய அரசின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ்
அந்தப் பள்ளியில் 2011ஆம் ஆண்டு சேர்ந்து அதே பள்ளியில் தொடர்ந்து
படித்து வருகிறோம். எங்கள் பள்ளிக்குப் புதிய முதல்வர்
பொறுப்பேற்றுள்ளார். மத்திய அரசிடமிருந்து எங்களுக்கான கல்விக் கட்டணம்
வரவில்லை என்பதால், இனிமேல் பள்ளிக்கு வரக் கூடாது என்று கூறிவிட்டார்.
இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வருகிறோம். கல்விக்
கட்டணம் வராததால் எங்களை வெயிலில் நிற்குமாறு கூறியும் அவதூறு
வார்த்தைகளைப் பேசியும் தண்டிக்கிறார். பள்ளிக் கட்டணம் செலுத்த
முடியாவிட்டால் மாடு மேய்க்கச் செல்லுங்கள், கடை கடையாக ஏறி இறங்கி
முறுக்கு விற்கச் செல்லுங்கள். இங்கு வராதீர்கள் என்கிறார்” என்று
இருந்தது.
தலைமை ஆசிரியரின் பேச்சும் நடத்தையும் கண்டிக்கத்தக்கவைதான். ஆனால்,
மாணவர்கள் மனு கொடுத்திருக்க வேண்டியது தலைமை ஆசிரியருக்கு எதிராக அல்ல.
அவர்களுக்கான பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தாமல் விட்ட மத்திய அரசை
எதிர்த்து.
அரசை நம்பாமல் தாங்களே கட்டணத்தைக் கட்டிப் படிக்கும் முடிவுக்கும் அந்த
மாணவர்கள் வந்தார்கள். ஆனால், அதுவும் முடியாமல் போனது. அது ஏன் என்று
அந்த மனுவிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“நாங்கள் கட்டணத்தைச் செலுத்துவதாகக் கூறிவிட்டோம். ஆனால், அரசு
நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகம் கட்டணம் கேட்கிறார்கள். எனவே
அவர்கள் மீிது நடவடிக்கை எடுங்கள்”.
அவர்களின் மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உடனடியாக இது குறித்து
விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
இனி அமைச்சர்களும் கூட மோடியை சந்திக்க முடியாது!
மக்களின் தலைவர் என்று பாஜகவினரால் போற்றப்படும் பிரதமர் மோடியை அவரது
அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் கூட தேவையில்லாமல் நெருங்க முடியாத
அளவுக்கு, மோடியின் பாதுகாப்பு நடைமுறைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.
பிரதமர் மோடியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை நேற்று மத்திய உள்துறை
அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்தப் புதிய நெறிமுறைகளின்படி மத்திய
அமைச்சர்கள் கூட பிரதமரைப் பார்க்க வேண்டும் என்றால் பிரதமரின்
பாதுகாப்புப் படையான எஸ்பிஜியின் அனுமதி பெற்ற பிறகே பார்க்க முடியும்.
அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கைது செய்யப்பட்ட
மாவோயிஸ்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் ராஜீவ் காந்தியைப் போல
மோடியைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பதாகத் தகவல்கள்
வெளியாகின. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் பிரதமர் மோடியின்
பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்தது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமரின் பாதுகாப்பு பற்றி தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள் துறை செயலாளர் ராஜீவ் கவுபா,
உளவுத் துறை இயக்குநர் ராஜீவ் ஜெயின் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை
நடத்தினார். பாதுகாப்புப் படையான (Special Protection Group)
எஸ்பிஜியிடம் இருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டன.
இந்த ஆலோசனையின்போது, “பிரதமர் மோடி வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலின்
போது பாஜகவின் முக்கிய சொத்தாகக் கருதப்படுபவர். அதேநேரம் அவரது
உயிருக்குப் பலரும் குறிவைத்துள்ளனர். எனவே, மோடி வரும் தேர்தலில்
பெரும்பாலும் சாலை வழியாகச் செல்லும் ஊர்வலம், பேரணிகளைத்
தவிர்த்துவிடுவது நல்லது. பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலந்துகொண்டால்
மோடியின் பாதுகாப்பை உறுதி செய்ய இயலும்’’ என்று பரிந்துரைத்துள்ளன
மத்திய பாதுகாப்பு அமைப்புகள்.
இதற்கிடையில் சிபிடி எனப்படும் பிரதமருக்கான ‘நெருங்கிய பாதுகாப்புக்
குழு’ (Close Protection Team) பிரதமருக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகள்
மற்றும் விதிகளை வகுத்துத் தந்திருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
இதன்படி பிரதமர் நரேந்திரமோடியை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்குக் கூட
இனி கடும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது. பிரதமரைச்
சந்திக்க வேண்டும் எனில் அதற்கான முழு விவரங்களுடன் எஸ்பிஜி படைப்
பிரிவுக்கு விண்ணப்பித்து அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே பிரதமரைச்
சந்திக்க முடியும். மத்திய அமைச்சர்களுக்கும், முக்கிய அதிகாரிகளுக்கும்
கூட இந்த விதிமுறை பொருந்தும் என்கிறார்கள்.
அண்மையில் மேற்கு வங்காளத்துக்குப் பிரதமர் சென்றிருந்தபோது ஆறு அடுக்கு
பாதுகாப்பைத் தாண்டியும் ஒருவர் பிரதமரின் காலில் கை வைத்தார் என்று
தகவல்கள் வெளியாகின. இனி இதுபோன்ற குறைபாடுகள் நிகழக் கூடாது என்றும்
பிரதமரைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று
முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம்,
மேற்குவங்காளம் ஆகிய நக்சலைட்டுகள் நடமாட்டமுள்ள மாநிலங்களின் காவல் துறை
தலைமைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஓர் உத்தரவு
போயிருக்கிறது. இம்மாநிலங்களுக்குப் பிரதமர் வரும்போது கூடுதல்
பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று
கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே, பிரதமரைச் சந்திக்க முடியவில்லை எனக் கேரள முதல்வர் பினராயி
விஜயன் போன்றோரே வெளிப்படையாகச் சொல்லியிருக்கும் நிலையில், பாதுகாப்பு
என்ற பெயரில் பிரதமரின் அரசியல் மற்றும் அரசு ரீதியான செயல்பாடுகள்
மேலும் சுருக்கப்படுமா என்பது பற்றியும் தேசிய அரசியலில் விவாதம்
எழுந்திருக்கிறது.

mohan alagar

unread,
Jun 27, 2018, 9:49:54 PM6/27/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..!?
பாஜக ஆட்சியில் ‘முன்னேற்றம்’!
வளர்ச்சியைத் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும் பாஜகவின் ஆட்சியில்,
இந்தியா முன்னேறியுள்ளது. முதலிடத்தில் உள்ளது. ஆம், பெண்களுக்குப்
பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு
முன்னேறியுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு, அதாவது பாஜக ஆட்சிக்கு
முன்பு, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காம்
இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தைச் சேர்ந்த தாம்சன் ராய்ட்டர்ஸ் என்னும் தொண்டு நிறுவனத்தின்
சார்பில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பெண்களுக்கு ஆபத்து நிறைந்த
நாடுகள் பற்றிய கருத்துக்கணிப்பை நடத்த உலகம் முழுவதும் உள்ள 550
வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் குழு 193
நாடுகளில் தனது கருத்துக்கணிப்பை நடத்தியது. சுகாதாரம், ஆண் - பெண்
பாகுபாடு, பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள்
கடத்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட
கருத்துக்கணிப்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக வாக்குகள் பதிவாகின. எனவே,
உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கே முதலிடம்
என தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இந்த ஆய்வு முடிவுகள் தவறு என்றும், உண்மைத்தன்மையற்றது என்றும் தேசிய
மகளிர் ஆணையமும் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு
அமைச்சகமும் கருத்து தெரிவித்துள்ளன. பாஜகவைச் சேர்ந்தவர்களும் இந்த
ஆய்வைத் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இதே குழு 2013ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்
முடிவுகளை காங்கிரஸை விமர்சிக்க மோடி அப்போது பயன்படுத்திக்கொண்டார்.
அப்போது இந்த ஆய்வில் இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில்
நான்காவது இடத்தில் இருந்தது. பிரதமர் பதவிக்கான பந்தயத்தில்
இறங்கியிருந்த மோடி, இந்த அமைப்பின் ஆய்வைக் குறிப்பிட்டு ட்வீட்
செய்திருந்தார்.
தன்னுடைய ஆட்சிக்கு முன்பு பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில்
நான்காம் இடத்திலிருந்த இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது பற்றி
மோடி இன்னமும் கருத்து எதுவும் சொல்லவில்லை.
- நரேஷ்
சுற்றுச்சூழலின் சொர்க்கம்!
தினப் பெட்டகம் – 10 (28.06.2018)
உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் கரியமில வாயுவை அதிகமாக வெளியிடுகின்றன.
ஆனால், ஒரு நாட்டில் மட்டும் கரியமில வாயு வெளியாகவேயில்லை. அந்த நாடு:
பூட்டான். பூட்டான் பற்றிய தகவல்கள்:
1. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக அரசியல் ஒழுங்குமுறைகள் விதித்த
முதல் நாடு பூட்டான். நாட்டில் 60% நிலப்பரப்பு எப்போதுமே காடாகத்தான்
இருக்க வேண்டும் என்பது சட்டம்.
2. பூட்டான் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் வயது 14க்கும் குறைவு.
3. உலகிலேயே புகையிலையை முற்றிலுமாக தடை செய்திருக்கும் ஒரே நாடு பூட்டான்.
4. உலகிலேயே ஏறப்படாத உயரமான மலை பூட்டானில் இருக்கிறது: Gangkhar
Puensum; உயரம் 24,840 அடி.
5. அருகிவரும் பறவையான black-necked crane என்பது அந்நாட்டில்
புனிதமானது. அதை யாராவது கொன்றால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை
விதிக்கப்படும்.
6. உலகில் கடைசியாகத் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய நாடுகளில்
பூட்டானும் ஒன்று. 19 ஆண்டுகளுக்கு முன்புதான் தொலைக்காட்சி அறிமுகம்
செய்யப்பட்டது.
7. 1999ஆம் ஆண்டிலேயே பிளாஸ்டிக் பைகள் பூட்டானில் தடை செய்யப்பட்டுவிட்டன.
8. ஐநா சபை 1974ஆம் ஆண்டில்தான் பூட்டானை ஒரு நாடாக அங்கீகரித்தது.
9. டிராஃபிக் சிக்னல் இல்லாத ஒரே தலைநகரம், திம்பு. பூட்டானின் தலைநகரம்.
10. பூட்டானின் அதிகாரபூர்வமான மொழி Dzongka.
- ஆஸிஃபா

mohan alagar

unread,
Jun 28, 2018, 9:43:30 PM6/28/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..!?
இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்திருப்பதைப் பற்றி இந்தப்
பகுதியில் விவாதித்திருந்தோம். அதில் இந்தியாவின் பொருளாதாரத்தில்
ஏற்படப்போகும் மாற்றத்தைப் பற்றியும் முன்பே கணித்து வெளியிடப்பட்ட
செய்தி, தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வரலாறு காணாத அளவில் இந்திய
ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.
இதற்குக் காரணம் மோசமான உள்நாட்டுப் பொருளாதாரம்தான். பணமதிப்பழிப்பு,
ஜிஎஸ்டி, கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள், மேக் இன் இந்தியா என்று
இந்த பாஜக அரசு முன்வைத்த எல்லாத் திட்டங்களும் இந்தியா பொருளாதாரத்தை
முன்னேற்றுவதற்கு என்று கூறித்தான் அரங்கேற்றப்பட்டன. ஆனால், இவற்றின்
விளைவு என்ன என்பதை இந்திய ரூபாயின் வீழ்ச்சி காட்டிவிட்டது.
2016ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்
மதிப்பு 68.73 ரூபாயாக இருந்தது. இந்த அளவுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாகக்
குறைந்தபட்ச அளவாக இருந்தது. இன்று அதைவிடக் குறைந்து 68.89 ரூபாய்க்கு
வந்துள்ளது. நேற்று, 68.61 ரூபாயாக இருந்த நிலையில், 37 காசுகள் குறைந்து
68.69 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், இந்த வீழ்ச்சி
நிச்சயமாக 70 ரூபாயைத் தாண்டும்.
அதையும் டிஜிட்டல் இந்தியா வழியாகப் பார்க்கத்தான் போகிறோம்.
- நரேஷ்
ஸ்டெர்லைட்: வைகோவுக்கு தமிழக அரசு கடிதம்!
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது என்று தமிழக அரசின் சுற்றுச்
சூழல் பொறியாளரிடம் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்குக் கடிதம்
அனுப்பப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தமிழக அரசு கொள்கை முடிவு
எடுக்க வேண்டும் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்னை
உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து கடந்த மே 2ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு
வாரியத்திலும் புகார் அளித்திருந்தார்.
இதற்குப் பிறகு மே 22ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான
போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 13 பேர் சுட்டுக்
கொல்லப்பட்டனர். இதனால் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, தமிழக அரசு
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அறிவித்து சீல் வைத்தது.
இது தொடர்பாக ஏற்கெனவே வைகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும்
நிலையில், தூத்துக்குடி மாவட்டச் சுற்றுப்புறச்சூழல் பொறியாளர்
லிவிங்ஸ்டன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஜூன் 15ஆம்
தேதி எழுதியுள்ள கடிதத்தின் நகலை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு
அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், “ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தினர், தங்களது
உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி அளித்து இருந்த விண்ணப்பத்தைத் தமிழ்நாடு
மாசு கட்டுப்பாட்டு வாரியம், 9.4.2018 அன்று ஏற்க மறுத்ததுடன், ஆலையை
இயக்கக் கூடாது என 12.04.2018 அன்று ஆணை பிறப்பித்தது. அதைச்
செயல்படுத்துவதற்கான நடைமுறைகளையும், மின் இணைப்பைத் துண்டித்தும்,
23.05.2018 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 24.05.2018 அன்று,
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக அரசு ஆணை
பிறப்பிக்கப்பட்டு, அதன்படி, 28.05.2018 அன்று ஆலைக்கு சீல்
வைக்கப்பட்டது’’ என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

mohan alagar

unread,
Jun 29, 2018, 9:55:31 PM6/29/18
to Valluvan Paarvai, inaiathendral
ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..!?
முடங்கவைத்த உயிர் பயம்
கற்பி! ஒன்றுசேர்! புரட்சி செய்!
இந்த வரிசையில் ‘கற்பி’ எனும் சொல்லை முதன்மைப்படுத்தியதற்குக் காரணம்
இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க மிகச்
சிறந்த ஆயுதம் கல்வி. கல்வி மற்றும் உரிமைகளில் சமநிலையைக்
கொண்டுவந்துவிட்டால், சாதி ஒழியும். சிறுபான்மையினருக்கு நாம் கொடுக்க
வேண்டியதெல்லாம் கல்வி மட்டுமே.
இதுதான் சாதி எனும் கட்டமைப்பை எதிர்த்த அனைத்துத் தலைவர்களின் அடிப்படை
நோக்கமாக இருந்தது. அம்பேத்கர் முதல் பெரியார் வரை இந்தக் கல்வியைக்
கொடுப்பதற்காகத்தான் பல முயற்சிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்து
வகுத்தளித்தனர். ஆனால், அந்தக் கல்வியும் அம்மக்களுக்குக் கிடைக்கவிடாமல்
சுவர் செய்திருக்கிறது சாதி வெறி.
கச்சநத்தம்! சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சாதி வெறிக்காக மூன்று
உயிர்களைக் குடித்து மேலும் பலரை ஊனமாக்கிய ஊர். இந்தப் படுகொலைக்குப்
பிறகு ஆவாரங்காடு, மாரநாடு, கச்சநத்தம் ஆகிய கிராமங்களிலும் அதன்
சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருக்கிறார்கள்.
கச்சநத்தத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. கச்சநத்தம்,
மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும்
மாணவர்கள் இந்தப் பள்ளியில் பயின்றுகொண்டிருந்தனர். இப்படுகொலைக்குப்
பிறகு, இப்பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக்
குறைந்துவிட்டது. 20 மாணவர்கள் வரை படித்துக்கொண்டிருந்த பள்ளி இப்போது
வெறிச்சோடிக் கிடக்கிறது. பாதுகாப்புக் கருதி கச்சந்தம் பகுதி மக்கள்
தங்கள் பிள்ளைகளைப் பக்கத்து நகரத்துப் பள்ளிகளுக்கு அனுப்பி
வருகிறார்கள். அனுப்ப முடியாதவர்கள் வீட்டிலேயே வைத்திருக்கிறார்கள்.
படிப்பைவிட உயிர் முக்கியம் என்று முடங்கவைத்துவிட்டது சாதி வெறி.
- நரேஷ்
நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆண்டர்சன்
நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆண்டர்சன்
நம்மில் வாழ்க்கையை எதற்காகவோ வாழ்கின்றனர். வாழ்க்கையை உணர்ந்து ரசித்து
வாழ்வதில்லை. அதிலும் நோய் வந்துவிட்டால் முழுமையாக நம்பிக்கை இழந்து
விடுகின்றனர். அவர்கள் எல்லாவற்றிலும் ஆர்வமற்றவர்களாக எந்திரமாக
வாழ்கின்றனர். எதையோ இழந்தது போன்று பறிகொடுத்தது போன்று வாழ்கின்றனர்.
நோய் வந்தால் ஏன் நம்பிக்கை இழக்க வேண்டும் என்ற கேள்வி எழுவதில்லை.
நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கையாக உருவானதுதான் ஆண்டர்சன்
டயாக்னாஸ்டிக்ஸ்.
மார்பகத்தில் சிறிய கட்டி வந்தால் பயப்பட வேண்டாம். ஆண்டர்சனில் உள்ள
மாமோகிராம் என்ற அதிநவீன கருவி உங்கள் பயத்தை போக்கிவிடும். உங்களுக்கு
என்ன நோய் என்பதைக் கண்டறிந்து கொள்ளலாம். நீங்கள் புரிந்து கொள்ளும்படி
எங்களது மருத்துவ நிபுணர்கள் விளக்கி விடுவார்கள்.தேவையில்லாத அச்சமும்
நம்பிக்கையின்மை’யும் நீங்கி தெளிவும் புத்துணர்வும் பெறுவீர்கள்.
இந்த உலகம் மிகப்பெரியது. பல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் அருமையான
மனிதர்களையும் கொண்டது. உலகத்தில் உள்ள அதிசயங்களை நீங்கள் அனுபவிக்க
வேண்டாமா? புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம்.
அதற்காக கவலையோ அச்சமோ வேண்டாம். நம்பிக்கையுடன் இருங்கள் மனம் தளர்ந்து
விடாதீர்கள். ஆண்டர்சன் உங்களுக்கு பக்க பலமாக இருக்கிறது.
நோயற்ற வாழ்வு மகிழ்ச்சியான நிறைவான வாழ்வு. இதை அடைவது சுலபம். அதை
தெளிவுபடுத்திக்கொள்ளும்பட்சத்தில். நோய்க்காக உங்களைக் குழப்பிக்கொள்ள
வேண்டாம். பதற்றமடைய வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். என்றென்றும்
பக்கபலமாக.
புற்று நோய் குறித்து பொதுவாக பரப்பப்படும் அறிவுப்பூர்வமற்ற
கருத்துக்களை நம்ப வேண்டாம். எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் எங்களைக்
கேளுங்கள். உங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொண்டு உங்கள்
சந்தோஷங்களைக் கண்டறிந்து வாழ்க்கையை அனுபவியுங்கள் ..
நமது சந்திப்பை ஞாயிறு தொடர்வோம்….
விளம்பர பகுதி

Palaniappan kandasamy

unread,
Jun 30, 2018, 9:00:01 AM6/30/18
to brail...@googlegroups.com
கல்வியால் சாதி வேற்றுமை ஒழியும் என்பது ஒரு மாயையாக தோன்றுகிறது. அம்பேத்கார் படிக்காத படிப்பா? அவரால் கல்லூரியில்கூட ஆசிரியர் பணியாற்றமுடியவில்லை. இப்போதும் கற்றவர்களிடையே வேற்றுமை நீங்கியதாக தெரியவில்லை; அண்மைகால ஊடக செய்திகள் இதை கோடிட்டுக்காட்டுகின்றன. முன்னேற்றம் ஒருவேளை வேற்றுமையை குரைக்கலாம். Flat system சாதி வேற்றுமையை ஓரளவு குறைக்கலாம். விண்ணப்ப படிவங்களில் சாதியை கேட்காமலும் கூறாமலும் இருந்தாலே சாதிவேற்றுமை கணிசமாக குரையுமென நினைக்கிறேன். ஒரு விஷயம் ஒழியவேண்டியது சாதியா சாதி ஏற்றதாழ்வா? என்னை பொருத்தவரை ஏற்றதாழ்வுதான் என நினைக்கிறேன். பகுத்தறிவால் மனிதநேயத்தால் அனைவரையும் நண்பர்களாக மதிப்போம். உரவுகளைவிட நட்பில் சாதிவேற்றுமை அதிகம் பார்க்கப்படுவதில்லை. நட்பை வளர்ப்போம். பகிர்வுக்கு நன்றி. வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
கந்த பழனியப்பன் கோவை 4.

-----Original Message-----
From: brail...@googlegroups.com [mailto:brail...@googlegroups.com] On Behalf Of mohan alagar
Sent: 30 ஜூன் 2018 07:25
To: Valluvan Paarvai
Cc: inaiathendral
Subject: [Braille Acl] மின்னம்பலம்

Reply all
Reply to author
Forward
0 new messages