4,726 views
Skip to first unread message

Braille Acl

unread,
May 27, 2015, 1:41:32 AM5/27/15
to Braille Acl News, Braille ACL, brailleacl


--
Spend your quality time with volunteers on Sundays from 2pm to 5pm at Anna Centenary Library, Chennai 


Thanks.
 
With best regards,
 
Braille Section Team
Anna Centenary Library
Chennai
Dinamani template-original (2).html

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 2:17:44 AM5/30/15
to brail...@googlegroups.com
காட்டாற்று வெள்ளம்
8
விவரங்கள்
எழுத்தாளர்: இரா.காமராசு
தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம்
பிரிவு: உங்கள் நூலகம் - மே 2015
C வெளியிடப்பட்டது: 27 மே 2015
எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு கம்யூனிஸ்டாக வாழ்வைத் தொடங்கியவர். தம் வாழ்நாள் முழுவதும்
நெஞ்சம் நிறைந்த மனிதநேயத்தோடு வாழ்ந்து ஒரு மானிடனாகக் காலமானார். ஜெய காந்தன் தமிழ்
முற்போக்கு மரபின் முன்னத்தி ஏர். எளிமையும், உண்மையும்தான் அழகு என்பதைத் தனது எழுத்தின்
மூலம் நிரூபித்தவர். அவரின் சிறுகதைகளும், குறுநாவல்களும், நாவல்களும் சமூக
ஒடுக்குதல்களுக்கும், ஒதுக்குதல்களுக்கும் உள்ளான விளிம்புநிலை மனிதர்களை மையப்
படுத்தின. மனித உணர்வுகளையும், மனித உறவு களையும் தன் வசீகர எழுத்தால் வாழ்க்கைச்
சித்திரங்களாக மாற்றிக் காட்டியவர். அவர் எழுத்து, பேச்சு, பத்திரிகைப் பணி, திரைப்பட
முயற்சி எல்லாமே புழங்கிய திசையில் போகாமல் புதிய பாதையை உண்டு பண்ணியவை. நடை,
உடை, பாவனை எல்லாவற்றிலும் தனக்கென கம்பீரமானதொரு தோற்றத்தை உருவாக்கியவர். எதற்கும்
சமரசம் செய்து கொள்ளாத சமரன். தமிழ் உரைநடையில் ஜெயகாந்தனின் பாணி தனித்துவம் மிக்கது.
புதுமையானது.
jayakanthan 416
ஜெயகாந்தன் முறையாகக் கல்வி பயிலாதவர். ஆனால் ஆழமாக வாழ்க்கையைக் கற்றவர். அவர் சொல்வது
மாதிரி அச்சுக் கோர்க்கும் போது தலை கீழாக எழுத்துக்களைப் பழகிச் சரியாகத் தமிழைக்
கற்றவர், சித்தரியத்தில் தேர்ந்தவர், வள்ளலாரிடம் நெருக்கமுண்டு. கம்பனில் மூழ்கியவர்,
ருஷ்யப் பேரிலக்கியங்களில் பரிச்சயமிக்கவர், ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் அவருக்கு
ஆற்றலிருந்தது. பாரதியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர். தான் கற்றவற்றைத் தன்னில் உரசி உரசி
தனித் துவங்களைப் பெற்றவர் அவர்.
இளம் ஜெயகாந்தன் கம்யூன் வாழ்வில் வளர்ந் தவர். அவரின் ஆளுமை உருவாக்கத்தில் எல்லை யில்லாத
உலக அன்பை விதைத்த ஜீவாவுக்கும், போர்க்குணமிக்க கலக வித்தை ஊன்றிய பால னுக்கும், இந்திய
அறவியல் மரபை மார்க்சியத்தில் இனம் காட்டிய ஆர்.கே.கண்ணன், எஸ்.இராம கிருஷ்ணனுக்கும்
முக்கியப் பங்குண்டு.
தமிழ்ச் சூழலில் எழுத்தாளனுக்கும், எழுத் துக்கும் உரிய மதிப்பைப் பெற்றுத் தந்தவர் ஜெய
காந்தன். தன் வாழ்நாளில் தன் அர்ப்பணிப்பு மிக்க கலாபூர்வமான எழுத்துப் பங்களிப்புக்காக
உயரிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர். காந்தியத்திலும், மார்க்சியத்திலும்
ஆழ்ந்த ஈடு பாடும், நம்பிக்கையும் கொண்டவர். ஏழை, எளிய சாமானிய மக்களின் மீது பேரன்பும்
கரிசனமுமே அவரின் எழுத்தை வெற்றி பெறச் செய்தன. மக்கள் இயக்கத்தின்பாலும், மக்களின்பாலும்
அவர் கொண்ட பற்றுறுதியும் நம்பிக்கையும் எதிர்கால எழுத்தாளர்களும், கலைஞர்களும் பின்பற்றத்
தக்கவை.
ஜெயகாந்தனின் எழுத்து அதுவரை கண்டு கொள்ளப்படாத மக்கள் திரளை அவர்களின் எல்லாவித
அழுக்குகளோடும் அழகுகளோடும் முதல் முறையாக இலக்கியமாக வார்த்தெடுத்தது. நகர,
பெருநகர உதிரிப் பாட்டாளிகள், கைவிடப் பட்டவர்கள், காயப்பட்டவர்கள் ஆகியோரை அவரது
பேனாமுனை தழுவிக் கொண்டது. தாங்களும் மனிதர்கள்தான். வாழப்பிறந்தவர்கள் தான். எங்களுக்கும்
வாழ்க்கை உண்டு என அவர் களுக்கு உணர்த்தியது மட்டுமல்ல; குடிமைச் சமூகத்துக்கு இவர்கள்
குறித்த கரிசனத்தையும் ஜெயகாந்தனது இலக்கியப் படைப்புகள் உரு வாக்கியது எனலாம்.
ஜெயகாந்தன் தமிழ்ச் சமூகம் உணர்ச்சி கரமான நிலைகளை உருவாக்கி வைத்திருந்த ஆண் - பெண்
உறவு குறித்த மிக இயல்பான மீறல்களை தன் எழுத்துக்கள் வழியே உருவாக்கிக் காட்டினார்.
காதல், திருமணம், கற்பு, குடும்பம் ஆகியன பற்றிய மிகக் கூர்மையான விமர்சனங்கள் அவரிடம்
இருந்தன. ஆணோ, பெண்ணோ தற்சார் போடு இருக்க வேண்டியதை வலியுறுத்தின அவர் எழுத்துக்கள்.
குறிப்பாக பெண் வாழ்வை நம்பிக்கை களால் நிரப்பிக் காட்டியவை அவரது இலக்கி யங்கள். ஒரு
வகையில் தமிழில் பெண்ணிய எழுச்சிக்கு ஜே.கேவும் ஒரு உந்துசக்திதான்.
அரசியலில், சமூகம் சார்ந்த கருத்துக்களில் அவர் மனசுக்குப் பட்டதை வெளிப்படையாகக்
கூறினார். இதில் மாறுபாடுகள் இருக்கலாம். பல விதங்களில் காந்தியையும், மார்க்சையும்
ஒருவரில் ஒருவரை இணைப்பது அவரின் அவாவாக இருந்தது. மார்க்சியத்தை இந்த மண்ணிலிருந்தும்
கட்ட மைக்க அவர் முயன்றார்.
ஜெயகாந்தன் காட்டாற்று வெள்ளமென தமிழ் இலக்கிய பெருநிலத்தை வளப்படுத்தியவர். அவர்
தீவிரமாக எழுதியவை சுமார் இருபத்தைந் தாண்டுகள். அதுதான் அவரின் சாதனைக் காலம்.
ஏறக்குறைய இறுதி முப்பதாண்டுகள் அவர் தீராதப் பேச்சிலேயே கழித்தார். தமிழ்ச் சூழலில்
ஒழுக்க மதிப்பீடுகளைக் கடந்து அவரது ‘சபை’ அங்கீகரிக்கப்பட்டது. காரணம் அவர் உருவாக்கி
யிருந்த ‘எழுத்தாளன்’ என்கிற பாவனை. அவர் இறுதிவரை எழுத்தாளன், கலைஞன் என்கிற
கர்வத்தையும், கம்பீரத்தையும் இழக்கவில்லை. தமிழ்ச் சூழலில் சினிமா நடிகர்களுக்கு இணையாக
நாயக பாவங்களுடன் கூடிய பிம்பங்களை உரு வாக்கி, கட்டிக்காத்தவர் ஜெ.கே.தான். அவர்
விடுதலையின், போராட்டத்தின், கம்பீரத்தின் குறியீடு.
ஜெயகாந்தன் தன்னை உருவாக்கிய கம் யூனிஸ்ட் கட்சியை என்றும் விட்டுக் கொடுத்த தில்லை. உலகப்
பார்வையையும், சமூகப் பார்வை யையும் கம்யூன் வாழ்விலிருந்தே அவர் பெற்றார். “அச்சுக்கலை,
எழுத்துக்கலை, பத்திரிகைக் கலை யாவற்றையும் பயிற்றுவித்த கலாசாலை கம்யூனிஸ்ட் கட்சி
தான்... அகர முதல எழுத்தெல்லாம் நான் கற்றது ஜனசக்தி பிரஸ்ஸில் அச்சுக் கோக்கும் கம்போஸிங்
கேஸ்களில்தான்” என்று பிரகடனம் செய்தவர் அவர். நான் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாமல்
இருக்கலாம். ஆனால் நான் ஒரு போதும் கம்யூனிஸ்ட் எதிரியாக மாட்டேன் ((You can call me
a non-communist, But I can never be an anti - communist)) என்பார். இதனை
எத்தனை முரண்பாடுகள் நேர்ந்தபோதும் இறுதிவரைக் காப்பாற்றினார்.
ஜெயகாந்தன் எதையும் பார்த்து, கேட்டு, கற்பனை செய்து எழுதியவரல்லர். எழுத்தாளர்
பலருக்கும் வாய்க்காதது அவருக்கு அமைந்தது. மிக நெருக்கடியான, தனித்துவிடப்பட்ட வாழ்க்
கையை இளம் வயதிலேயே அவர் வாழவேண்டி நேர்ந்தது. “எனது அக்கால நண்பர்கள் அனை வரும்
தொழிலாளர்களே. ஓட்டல் தொழி லாளிகள், முடிதிருத்துகிறவர்கள், மரம் அறுப்ப வர்கள்,
சர்க்கார் ஆபீஸ் குமாஸ்தாக்கள், ப்யூன்கள், கான்ஸ்டபிள்கள், கேரளத்தைச் சேர்ந்த செருப்புத்
தைக்கும் தொழிலாளிகள் ஆகியோர். இவர்களில் சிலரே அரசியலில் நாட்டம் உடை யோராயிருந்தனர்.
இவர்களில் நானே வயதில் இளையவன்” என்பார் அவர். தானே தொழி லாளியாக வாழ்ந்ததும்
தொழிலாளர் பலரோடு வாழ்ந்ததும்தான் அவரின் கதைக் களனாகப் பின்னாளில் அமைந்தன. தோழர் இஸ்மத்
பாட்ஷா, கவிஞர் தமிழ் ஒளி, எழுத்தாளர் விந்தன், பத்திரிகையாளர் விஜய பாஸ்கரன் போன்றோரின்
அறிமுகமும் நெருக்கமும் இவரை அச்சகம், பதிப்பு, பத்திரிகை, எழுத்து என்றச் சூழலுக்குள்
அமைந்திற்று எனலாம். ஜனசக்தி, பிரசண்ட விகடன், சமரன், சக்தி, சரஸ்வதி, மனிதன், சாந்தி,
சாட்டை, ஜெயபேரிகை, ஜெயக்கொடி, ஞானரதம், கல்பனா, நவசக்தி உள்ளிட்ட பல இதழ்களில்
ஜே.கேவின் பங்களிப்பு இருந்தது. ஆனந்த விகடன் தொடங்கி வெகுஜன இதழ்களின் பிரவேசம்
அடுத்து நிகழ்ந்தது. இடம் மாறியது, இதழ்கள் மாறியது, கடைசி வரை ஜே.கே. மாறவில்லை.
யாரும் அவருக்கு முதலாளி இல்லை. தன் கருத்துக்கு, மனதுக்கு ஒத்தவர்களோடு அவர்கள்
ஒப்பும்வரை இருந்தார்.
ஜெயகாந்தனின் முதல் கதை ‘பிச்சைக்காரன்’, (1950) பா.சொக்கலிங்கம் நடத்திய ‘சௌபாக்கியம்’
இதழில் வெளிவந்தது. முதல் தொகுப்பு 1954 ஏப்ரல் மாதம் ‘ஆணும் பெண்ணும்’ என்ற தலைப் பில்
கிட்டு பதிப்பகம் வெளியீடாக வந்தது.
ஜே.கே. தன் ஆரம்ப எழுத்துக்களை அவ்வளவாகக் கொண்டாடவில்லை. தன் கணக்கிலும் வரவு
வைக்கவில்லை. 1957இல் ‘வாழ்க்கை அழைக் கிறது’ நாவலில் தொடங்கி 1986இல் ‘ஜயஜய சங்கர’
நாவல் வரை அவரின் எழுத்துப் பயணம் நெடியது. சுமார் முப்பது ஆண்டுகள் ஜெய காந்தன்
யுகமாக அமைந்தது. கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல், திரைப்படம் என்று படைப்
பிலக்கியங்கள் ஒருபுறம். அவரின் அ-புனைவு எழுத்துகள் படைப்புகளுக்கு இணையான கவனத்தைப்
பெற்றன. நினைத்துப் பார்க்கிறேன், மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன், அரசியல் அனுபவங்கள்,
கலை உலக அனுபவங்கள்,
ஆன்மீக அனுபவங்கள், பத்திரிகை அனுபவங்கள், பேட்டிகள், முன்னுரைகள், சபை நடுவே... போன்ற
அனைத்தும் விடுதலைக்குப் பின்னான தமிழ் நாட்டின் சமூகப் பண்பாட்டு வரலாற்றுக் களஞ்சியப்
பகுதிகள் எனலாம். இவையாவும் அவரின் உரை யாடல்களின் நீட்சியாக அமைந்தவை. ஒருவித
எள்ளலும், துள்ளலும் அவரிடம் உண்டு. தருக்க அடிப்படையிலான- விவாதங்கள் - வினா- விடை
கள் என்பதாக அமைந்த அவரின் உரைநடை தமிழுக்குப் புதிது. தமிழ் உரைநடையைச் செறிவும்,
நுட்பமும், அழகும் கூடிவரச் செய்ததில் ஜெயகாந்தனுக்குப் பெரும் பங்குண்டு.
ஜே.கே. முற்போக்கு முகாமிலிருந்து தன் எழுத்தைத் தொடங்கினார். அவரின் உச்ச எழுத் துக்கள்
யதார்த்தத்தை, சமூக யதார்த்தத்தைப் பிரதிபலித்தன. நவீனத்துவ சாயலுடன் பின் னாளையப்
படைப்புகள் ஒருவித லட்சியவாத மாகச் சுருங்கியதும் உண்டு. அவர் கோட்பாடு களைப் பற்றிக்
கவலைப்பட்டதில்லை. ‘சூத்திரங் களுக்குள் (கோட்பாடுகளுக்குள்) எழுதுவதானால் நீ பண்டிதனாகப்
போ. படைப்பு வேறு’ எனத் தனக்கே உரிய பாணியில் பேசினார். ஆனால் இலக்கி யத்தின் சமூகப்
பங்களிப்பை மறுத்தாரில்லை. சோவியத் உள்ளிட்ட உலகப் படைப்புகள் வழியே படைப்பின்
தாக்குறவுகளை அறிந்தவராகவே இருந்தார்.
“இலக்கியமும் சமூகமும் நெருங்கிய சம்பந்த முடையவை. இலக்கியம் என்பது சமூக வாழ்க் கையின்
சாசனம் என்று நினைக்கிறேன். அது வாழ்க்கையை, வளர்ச்சியை, மேன்மையைப் பிரதி பலிக்கும்.
அந்த மேன்மையை அழுத்திக் காண் பிப்பதற்காகச் சில எதிர்மறை விஷயங்களை
அது தொட்டுச் செல்லும். எதிர்மறையான ஒரு போக்குக்கு இலக்கியம் உதவிகரமாக அமையாது.
மனிதரின் மேன்மையையும் வளர்ச்சியையும் பிரதி பலிப்பதும், அழுத்தம் கொடுப்பதுமே இலக்கி
யத்தின் நோக்கம் என்ற கொள்கையைச் சார்ந் தவன் நான்” என்று மிகச் சரியாகவே இலக்கி யத்தின்
செல்வாக்கை அவர் குறிப்பிடுவார்.
மேலும், “என்னை முதலாளித்துவம் பயன் படுத்திக் கொண்டதாகச் சிலர் நினைக்கிறார்கள். அது
தவறு, நான்தான் முதலாளித்துவத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். அந்தக் குதிரையில் ஏறி, அது
ஓய்ந்து போகும் வரை சவாரி செய்து அடக்கி அதன் முழங்கால்களை உடைத்தவன் நான்” எனத் தன்
பணியை மதிப்பிடுவார். ஜே.கே. இறுதிவரை எழுத்தாளனின் சார்பு நிலையை வலியுறுத்தி
வந்தார். நல்ல இலக்கியம் எது? எழுத்தாளன் யார் என்கிற கேள்விக்கு விடை யளிக்கும்
போதெல்லாம் இதனை வலியுறுத்து வார். “எழுத்தாளனுக்கு Social Consciousness வேண்டும்.
எதைப் பற்றி எழுதுகிறோம் என்ற பிரக்ஞை வேண்டுமல்லவா? அதுதான் சமுதாயப் பிரக்ஞை. நீங்கள்
எழுதுவதை உங்கள் காலத்துக்குப் பிறகும் இந்தச் சமுதாயம் காப்பாற்றி, படிக்கப் போகிறது.
அதற்கு ஏற்ப நாம் எழுதப் போகிறோம் என்ற நினைப்புதான் இந்த Consciousness.
அதுதான் நல்ல இலக்கியத்துக்கு அடையாளம். சமூகம் எக்கேடு கெட்டால் என்ன என்று எழுதுகிற
கலைஞனை சமூகம் மிதிக்கும். அவனைப் பற்றி சமூகத்துக்கு என்ன கவலை? சமுதாயப் பிரக்ஞை
இல்லாத இலக்கியமே கிடையாது.” என்று சற்றுக் கடினமாகவே வலியுறுத்திப் பேசுவார்.
ஜெயகாந்தன் தன்னைச் சுற்றிப் பல புதிர் களை அனுமதித்தார். அவரின் நடத்தை, எதிர் வினை,
சீற்றம் ஆகியன குறித்து ஏராளம் கதைகள் உண்டு. அவற்றை அவர் ரசிக்கவும் செய்தார். மடம்
என்றும் சபை என்றும் சுட்டப்பட்ட அவருக்கான நண்பர்கள் ‘உவப்பத் தலை கூடுதல்’ தனித்த ஒன்று.
அச்சபையில் அவரே தலைவர், நாயகர். அவரை உள்ளும் புறமும் உள்வாங்கிய நட்புச் சுற்றம்
அவருக்கும் வாய்ந்தது. இராமன் இருக்குமிடம் அயோத்தி என்பது மாதிரி அவர் இருக்கும்
இடத்துக்கு சபை நகரும். பயணங்களில், கூட்டத்திற்குச் செல்லுமிடங்களில் சபை முளைக்கும்.
புது இடம், சூழல்... எக்கவலையுமின்றி ஜே.கே. யின் வீட்டு மாடி போல போகிற இடங்கள்
ஆகிப்போகும். தீராதப் பேச்சு, அவரின் கட்டற்றச் சிந்தனைகள் அரங்கேறும் இடம் அது. கிரேக்க
ஞானிகள், தமிழ்ச் சித்தர்கள், இஸ்லாமிய சூஃபிக்கள் போல ஜே.கே.யை இச்சபை உருவாக்கிற்று.
ஜே.கே. சமரசமற்று கருத்துரிமையைப் போற்றி யவர். தமிழ்ச் சூழலில் பல அதிர்ச்சிகரமான
விவாதங்களை அச்சமின்றி நடத்தியவர். வெகுஜன முன் வைப்புகளுக்கு எதிரான சண்டமாருதமென
முழங்கியவர். அவர் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல பேச்சிலும் எழுத்திலும் தன் தரப்பு
நியாயங்களை அடுக்குவார். வள்ளலாரிடத்தும், சித்தர்களிடத்தும் அவருக்குத் தாக்கம் இருந்தது.
கம்பனை ரசித்து விவாதிப்பார். ஒருவித ஆன்ம தேடலுக்கு இலக்கானதும் உண்டு.
இலக்கியத்தில், சமூக விசயங்களில் தீவிரமான சார்பு நிலையை மேற்கொண்டார். நெருக்கடி,
நிலை, திராவிட இயக்கம், ஈழம், சங்கர மடம், பின்னாளில் உலக மயம் (அமெரிக்கா), சமஸ்
கிருதம் போன்றவற்றில் அவரின் நிலைப்பாடுகள் விமர்சனத்துக்கு உரியன.
ஓர் எழுத்தாளர் தீவிர எழுத்தில் இருந்து ஒதுங்கிப் பல்லாண்டுகள் கழித்தும் தனது இருப்பை
நிலைநாட்டிக் கொண்டது என்பது ஜே.கே.வுக்கே பொருந்தும். ஜெயகாந்தனால் நேரடியாக ஒரு
படைப்புப் பரம்பரை உருவாகா விட்டாலும் அவரின் தாக்கத்தால் எழுத வந்த வர்கள் பலர். தீவிர
வாசகர்களானவர்கள் பலர். குறிப்பாகப் பெண்களை, நடுத்தர வர்க்கத்தை பழைய வரலாற்றுக் கற்பனைக்
கதைகளில் இருந்து மீட்டு, நடப்பு வாழ்க்கைச் சாளரங்களைத் திறந்து காட்டியவர் ஜே.கே. எனலாம்.
ஜே.கே. வாழ்க்கையைக் கொண்டாடியவர். எதன் பொருட்டும் தற்கொலைகள் கூடாது என
வலியுறுத்தியவர். நம்பிக்கை, வாழ்க்கை மீதான தீராப்பற்று ஆகியவற்றைத் தன் படைப்புகளில்
விதைத்தவர். வாழ்க்கை என்பது தட்டையானது அல்ல. அது ஒரு கலைடாஸ்கோப் என்று மெய்ப்பித்தவர்.
புயல், சிங்கம், சிறுத்தை, யானை, புரட்சி முதலான பெயருக்கு முன்பின் ஒட்டுக் களை
கடுமையாக விமர்சித்தவர். இந்த எல்லா அடைமொழிகளுக்கும் பொருந்தக் கூடியவர் ஜே.கே.
“நேசிக்கத் தெரிந்தவர்கள் நேசிக்க வேண்டும். பதிலுக்கு நேசம் கிடைக்காது. அது
கிடைத்தாலும் நெடுநாள் ஒட்டாது. ஆனாலும் நாம் நேசிக்க வேண்டும். நேசிக்க முடியாதவர்கள்
பற்றியும், நேசத்தை மறந்தவர்கள் பற்றியும் யோசிக்க வேண்டும். யாரும் நம்மை நேசிக்கவில்லையே
என்று வருந்த வேண்டாம். நேசிக்கக் கற்க வேண்டும். நேசிக்கக் கற்பிக்கவும் வேண்டும். இதுவே
வாழ்க்கை எனக்குத் தந்த படிப்பினை” என்ற ஜே.கேயின் வார்த்தைகளை வாழ்க்கை யாக்குவோம்!
“நாளை என்பது மெய்யல்லவோ- அதில்
நாமிருப்பதொரு பொய்யல்லவோ- எனில்
மீளவும் பிறப்பது அரிதரிது- மண்
மீது நம் சந்ததி மிகப்பெரிது”
என ஒரு கவிதையில் ஜே.கே. எழுதுவார். மீளப் பிறப்பது அரிதுதான். ஆனால் ஜெயகாந்தனின்
சந்ததி மிகப்பெரிது. இங்கும்... எங்கும்... அது வியாபிக்கும்!

--
--
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
இவன்
கெ. குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை மாநிலக் கல்லூரி தன்னாட்சி சென்னை-5.


அலைபேசி எண் – 9444218357.
kaviku...@gmail.com

--
--
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
இவன்
கெ. குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை மாநிலக் கல்லூரி தன்னாட்சி சென்னை-5.


அலைபேசி எண் – 9444218357.
kaviku...@gmail.com

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 2:26:28 AM5/30/15
to brail...@googlegroups.com
ஜெயகாந்தனும் ஆளுமைச் சிதைவும்
8
விவரங்கள்
எழுத்தாளர்: எஸ்.தோதாத்ரி
தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம்
பிரிவு: உங்கள் நூலகம் - மே 2015
C வெளியிடப்பட்டது: 27 மே 2015
மாக்சிம் கார்க்கி ‘ஆளுமைச் சிதைவு’ என்ற நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். (Gorky on
Literature - 71) இதன் சாராம்சமான கருத்து பூர்ஷ்வா சமுதாயத்தின் வளர்ச்சியானது
மனிதனை தனிநபராக்கி அவனது ஆளுமையைச் சிதைப் பதற்கான புறச்சூழலை உருவாக்கி
விடுகிறது என்பதாகும். பண்டைய இலக்கியங்களில், சமுதாய மானது கூட்டு உணர்வினைக்
கொண்டிருந்ததால், இலக்கிய கதாபாத்திரங்கள் ஒருமித்த ஆளுமை உள்ளவர்களாக இருந்தனர்.
இதிகாச கதாபாத்தி ரங்கள் இத்தகையவர்கள். ஆனால் பழைய அமைப்பு தகர்ந்து அப்பட்டமான தனிநபர்
வாதம் உருவாகும் பொழுது, இலக்கியத்திலும் ஒருமித்த கதாபாத்திரங்கள் படைக்கப்படுவது
குறைகிறது. துண்டு துக்காணியான நிகழ்ச்சிகளே இலக்கி யத்தின் கருப்பொருளாக அமைந்து
விடுகிறது. மேலும் கலைஞன் சமுதாயத்துடன் ஒன்றுபடும் பொழுது ஒருமித்த ஆளுமை உள்ள
பாத்திரங்கள் தோன்றுகின்றன. கலைஞன் சமுதாயத்தினை விட்டு விலகும் பொழுது மன விகாரங்கள்
பொருந்திய கதாபாத்திரங்கள், சூன்ய நிலையில் உள்ள, இலக்கற்ற, புதிர்வாதம் நிரம்பிய, கனவு
உலகத்தில் மிதக்கக்கூடிய கதை மாந்தர்கள் படைக்கப்படுகின்றனர். கார்க்கி அடுத்தபடியாகக்
கூறுவது உழைக்கும் மக்கள் (பாட்டாளிகள்) சார்பாக கலைஞன் நிற்கும் பொழுது ஒருமித்த கதை
மாந்தர்களையே படைக்கிறான் என்பதாகும். இவை அனைத்தும் கலைஞன் வாழும் காலச் சூழலால்
தீர்மானிக்கப்படுகின்றன. இந்தச் சூழலை உள்வாங்கி, எதிர்வினை புரியும் பொழுது உள்ள
நிலைகளைப் பொறுத்து பல்வேறு வகையான கலை வடிவங்கள் தோன்றுகின்றன.
jayakanthan 385
ஜெயகாந்தன் தமிழ் இலக்கிய உலகில் அடி யெடுத்து வைத்த பொழுது, சமுதாய ரீதியாக
முதலாளித்துவ அமைப்பு வலுப்பெற்று, நில உடைமை அமைப்பு தகர்ந்து, புதிய அமைப்புடன்
சமரசம் செய்து கொண்டிருந்த காலம் ஆகும். விடுதலைப் போராட்ட காலத்தின் வேகம் தணிந்து,
திட்டமிட்ட பொருளாதாரம் என்ற முறையில் இந்தியா அடியெடுத்து வைத்திருந்த காலம்.
முற்றிலு மாக அழிவு பெறாத நிலஉடைமை சமுதாயம், அதன் மதிப்புகள், புதிய பூர்ஷ்வா
அமைப்புடன் கலந்து, ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்திக் கொண் டிருந்த காலம் அது.
இக்காலகட்டத்தில் ஜெய காந்தன் படைப்புலகில் பிரவேசிக்கும் பொழுது, அரசியல் ரீதியாக பொது
உடைமை இயக்கம் வலுவாக இருந்தது. காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தது. திராவிடர் இயக்கம்
சமுதாய ரீதியில் இயங்கிக் கொண்டிருந்தது. ஜெயகாந்தன் பொது உடைமை இயக்கத்துடன்தான்
ஆரம்பத்தில் தொடர்பு கொண்டவராக இருந்தார். ஆனால் தன்னை அதில் முழுமையாக
ஈடுபடுத்திக்கொண்ட தில்லை. இருப்பினும் அவரை உருவாக்கியதில் ஜீவா, ஆர்.கே.கண்ணன்,
எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு. இவர் களுடன் ஆன நெருங்கிய பழக்கம்
ஜெயகாந்தனுக்கு இடதுசாரி சிந்தனையை அளித்தது எனலாம். அவர் பிற்காலத்தில் தான் எதிலும்
சாராதவன் என்று அந்நியப்பட்டுக் கூறினாலும் உண்மையில் ஆரம்பகாலத்தில் அவர் பொதுஉடைமைச்
சிந்தனை வயப்பட்டவராகவே இருந்தார் என்பதுதான் உண்மை. ஜீவா அவர்கள் கலை இலக்கியப் பெரு
மன்றம் ஆரம்பித்த பொழுது தற்கால இலக்கியச் சூழலில் ஜெயகாந்தன் இடம் பெற்றிருந்தார்.
இந்தக் காலகட்டத்தில் உள்ள முரண்பாடுகள், பொதுவான முரண்பாடான பாட்டாளி முதலாளி
முரண்பாடு, உழைக்கும் விவசாயி பண்ணையார் முரண்பாடு என்ற வகையிலான அடிப்படை முரண்
பாடு தொடர்ந்து இருந்தது. இவற்றின் வெளிப் பாடாக இந்திய சமுதாயம் முதலாளித்துவப்
பாதையில் செல்ல வேண்டுமா, சோஷலிசப் பாதையில் செல்ல வேண்டுமா என்ற முரண்பாடும்
இருந்தது. முதலாளித்துவக் கட்சியான காங்கிரஸிற்கு உள்ளேயே இந்த முரண்பாடு இருந்தது.
இடது சாரிகள் பாராளுமன்ற சனநாயகத்தினை ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்த முரண்பாடுகள்
மத்திய தர வர்க்கத்தில் - (குட்டி பூர்ஷ்வாக்கள்) பெரும் குழப்பத்தினையும்
ஏற்படுத்தியிருந்தது. இந்தக் குழப்பத்தின் பிரதிபலிப்பினை ஜெயகாந்தனது படைப்புகளில்
காணலாம். இதனை அவரது படைப்புகளின் மூலம் காண முயற்சிப்போம்.
ஜெயகாந்தன் ஆரம்பத்தில் விந்தனின் ‘மனிதன்’ என்ற பத்திரிகையிலும் பின்னர் ஆனந்த விகடனிலும்
எழுதினார். விந்தனின் பத்திரிகையில் அவர் எழுதிய கதைகள் அனைத்திலும் வசதியற்ற ஏழை
மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றியே எழுதினார். ‘பொறுக்கி’ என்ற சிறுகதையில் ஒரு
ஆப்பக்காரியின் தறுதலை மகனால் ஏற்படும் தொல்லைகள் பற்றி எழுதுகிறார் ‘வேலை கொடுத் தவன்’
என்ற கதையில் ஒரு பிச்சைக்காரியின் தன்மான உணர்வை விவரிக்கிறார். ‘ரிக்ஷாக்கார பாலன்’
என்ற கதையில் ரிக்ஷாக்காரனின் நாணய மான நடத்தை பற்றிக் கூறுகிறார். ‘டிரெடில்’ என்ற
கதை ஒரு அச்சகத் தொழிலாளி சுரண்டப்படு வதை, அவன் ஆண்மை இழந்து நிற்பதன் மூலம்
எடுத்துக்காட்டுகிறார். இக்கதைகள் அனைத்தும் கீழ் மத்தியதர வர்க்கம், மத்தியதர வர்க்கம் ஆகிய
வற்றின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன.
இந்தக் கதைகள் ஜெயகாந்தனது மனித நேயத் திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. ‘ஒரு பிடி
சோறு’, ‘இனிப்பும் கரிப்பும்’ என்ற தொகுப்பு களில் உள்ள கதைகள் அனைத்தும் இத்தகையவை.
ஆனால் அவர் நாவல் உலகில் அடியெடுத்து வைக்கும் பொழுது இந்த நிலை மாறிவிடுகிறது.
‘யாருக்காக அழுதான்’ என்ற குறுநாவல், ‘வாழ்க்கை அழைக் கிறது’ என்ற நாவல் ஆகியவற்றில்
இந்த மனித நேயத்தின் நீட்சியைக் காணலாம். ‘வாழ்க்கை அழைக்கிறது’ என்ற நாவலில் இடம் பெறும்
ராஜாவும், தங்கமும் அநாதைகள். தங்கத்தைப் பல இன்னல்களில் இருந்து காப்பாற்றி அவளை மணந்து
கொள்கிறான். அடக்குமுறைக்கு எதிரி யாக ராஜா விளங்குவதை ஆசிரியர் சித்தரிக்கிறார்.
அவன் போராட்டம் எல்லாம் தனிநபர் போராட்டம் தான். சாரங்கன், ரஸியா போன்ற கதை மாந்தர்கள்
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். இந்த நாவலில் சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் நடத்தும்
போலி வாழ்வையும் ஆசிரியர் சித்தரிக் கிறார். இந்த நாவலில் ஜெயகாந்தனின் சமூக நோக்கில்
தென்படும் ஏழை எளியவர்கள் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளனர். ‘உன்னைப் போல் ஒருவன்’ சென்னை
நகரத்து சேரி வாழ்வை மிக நுணுக்கமாகச் சித்தரிக்கும் நாவல். தங்கத்தின் வாழ்க்கைச் சூழலை
மிக நுட்பமாகச் சித்தரிக் கிறார்.
“தங்கம் வெகு நாட்களுக்குப் பிறகு இன்று தான் தலைவாரிப் பின்னிக் கொள்ள வேண்டும் என்று
ஆசைப்பட்டாள்.”
“பகலெல்லாம் சுண்ணாம்பிலும், சிமெண்ட் கலவையிலும் நின்று உடம்பெல்லாம் அவற்றைப் பூசிக்
கொண்ட பின் வேலையிலிருந்து வீடு திரும்பக் கொஞ்சம் தாமதமாகிவிட்டால் உடம்பு கழுவிக்
கொள்வதே கஷ்டம்.”
அடிநிலையில் உள்ள இம்மக்களது வாழ்வை ஜெயகாந்தன் யதார்த்தபூர்வமாகவே இங்கு
சித்தரிக்கிறார். அவரது “யாருக்காக அழுதான்” என்ற நாவல் ஒரு அடிமட்டத் தொழிலாளியைப்
பற்றியது. அவன்தான் திருட்டு முழி ஜோசப் என் பவன். வேண்டுமென்றே தான் இந்தப் பாத்திரத்
தினை ஒரு அப்பாவியாகப் படைத்துள்ளார். சுரண்டல் மிகுந்த அமைப்பில் திசை தெரியாமல்
தவிக்கும் தொழிலாளியாக திருட்டு முழி ஜோசப் உள்ளான். ஜோசப்புடன் வேலை செய்யும் மற்றொரு
தொழிலாளி முத்து அவனது முதலாளியைப் பார்த்துக் கூறுவது உழைக்கும் வர்க்கத்தின் உணர்வை
வெளிப்படுத்துவதாக உள்ளது.
“மொதலாளி ஒலகத்திலேயே ஒரே ஒரு திருட்டு முழி ஜோசப்பு தான் உண்டு. எல்லாத்
தொழிலாளியும் ஆண்டவனே, ஆண்டவனேன்னு ஸ்தோத்திரம் பண்ணிக்கிட்டு அவன் மாதிரி இருந் துட்டா
உங்களைப் பிடிக்க முடியுமா?”
இக்கதை மாந்தர்கள் ஜெயகாந்தன் பொது உடைமை இயக்கத்திலிருந்து விலகாமல் இருந்த
காலகட்டத்தில் எழுதப்பட்டவை. ஆனால், அவர் பொதுஉடைமை இயக்கத்தில் இருந்து விலகிய
காலத்தில் அவரது கருத்தியலிலும் மாறுதல் தோன்றுகிறது. இக்கட்டத்தில் அவர் ஆனந்த விகடனில்
எழுத ஆரம்பிக்கிறார். இது முதலாளித் துவப் பத்திரிகைதான். ஆனால், ஜெயகாந்தன்
படைப்புகளை வெளியிட்டது பாராட்டுதலுக் குரியது ஆகும். இருப்பினும் இத்தகைய முறையில்
இடதுசாரி முகாமிலிருந்து வலதுசாரி முகாமிற்கு ஜெயகாந்தன் போன்றவர்கள் சென்றபிறகு,
அவர் களது படைப்பில் குணாம்ச மாறுதல் ஏற்பட்ட தற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு
செல்லாமல் இருந்த கு.சின்னப்பபாரதி, டி.செல்வ ராஜ் போன்றவர்கள் தங்களது உலகக் கண்ணோட்டத்
தினை மாற்றாமல், உழைக்கும் வர்க்கத்தின் சார் பாகவே இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் ஜெயகாந்தன் இயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பின்னர் தன்னை ஒரு சுதந்திர
எழுத்தாளனாக வரித்துக்கொண்டு, பல நாவல்களை எழுதினார். இந்தப் பிந்திய காலப் படைப்புகள்
இருவேறு போக்குகள் உள்ளவை யாக உள்ளன. ஒன்று, ஒருமித்த ஆளுமை உள்ள ஜோசப், தங்கம்
போன்றவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அகவயப்படுத்தப்பட்ட கதை மாந்தர் களைப் படைக்கிறார்.
இரண்டு, பொருள் முதல் வாத நிலைப்பாட்டிலிருந்து கருத்து முதல்வாத நிலைப்பாட்டிற்குச்
செல்கிறார்.
முதலாவதற்கு இரு உதாரணங்கள் தரலாம். ‘ரிஷி மூலம்’ என்ற குறுநாவல். இது தாய்ச் சிக்கலை
அடிப்படையாகக் கொண்ட நாவல். இதன் கதா நாயகன் ராஜாராமன் தன் தாயை ஆடையின்றிப் பார்த்து
விடுகிறான். அவனுக்கு அப்பொழுது சிறுவயது. இது அவனது மனதில் ஆழமாகப் படிந்து,
தாயுடன் உறவு கொள்ளும் ஒரு கற் பனையைத் தோற்றுவிக்கிறது. பித்துப் பிடித்தவன் போல்
அலைகிறான். காசி செல்கிறான். ஒரு மனநோயாளியாக இறக்கிறான்.
இரண்டாவது “கோகிலா என்ன செய்து விட்டாள்” என்பதன் அனந்தராமன். இவன் பிளவுண்ட மனிதன்.
அவனால் அவனது வாழ்வு அர்த்தமற்றதாக ஏன் ஆகிவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள
முடியவில்லை. அவன் பல கூறு களாக இருப்பதாக உணர்கிறான். அவனே அதைச் சுட்டிக்காட்டுகிறான்.
“நான் புறத்தே ஒரு மனிதன். அகத்தே ஒரு மனிதன். ஆபீசில் ஒரு மனிதன், எனது வாசகர்
களுக்கு ஒரு மனிதன், என் வாழ்க்கையில் ஒரு மனிதன், என் மனைவிக்கு ஒரு மனிதன்... ஓ
எத்தனை கூறுகளாகிப் போனேன்.”
வெங்கு மாமா என்ற வக்கீல் ஒரு சாடிஸ்ட். மனைவியை பெல்ட்டால் அடிப்பதில் இன்பம் காண்பவர்.
அலங்கார வில்லியம்மாளின் மூத்தமகன் ஆண்மை இழந்தவன்.
‘சமூகம் என்பது நாலு பேர்’ என்ற நாவலில் புராதனத்துவம் பேசுகிறார்.
“மரியாதைப் பண்புகளை ஆடைகளைக் களைத்து வைப்பது மாதிரி அவிழ்த்தெறிந்து விட்டுப்
பறவைகள் மாதிரி வனவிலங்குகள் மாதிரி, காட்டுமிராண்டிகள் மாதிரி, உடலாலும், மன
தாலும் சுதந்திரமான நிர்வாணிகள் ஆகிவிடுவதில் இப்படி ஒரு ஆன்மீக விடுதலையா?”
இதில் இருத்தலியம் கலந்திருப்பதைக் காண முடிகிறது. இந்த இருத்தலியம் ‘ஒரு வீடு, ஒரு
மனிதன், ஒரு உலகம்’ என்ற நாவலில் அதிகமாக இடம் பெறுகிறது. அதில் பேபி என்ற நிர்வாணப்
பைத்தியக்காரி வருகிறாள். இது சமுதாயக் கட்டுக் களைப் புறக்கணிப்பதன் ஒரு குறியீடு
ஆகும். இதில் வரும் ஹென்றி, நகர நாகரீகத்தினை வெறுப் பவன். ஹென்றியும், அவனது நண்பன்
தேவ ராஜனும், ஆடையில்லாமல் ஆற்றில் குதித்து ‘சோப்பெங்கப்பா” என்று விளையாடுகிறார்கள்,
இது தன் இருப்பை மட்டும் பேசும் நிகழ்ச்சியாகும்.
ஜெயகாந்தனது சமுதாயப் பார்வை சுதந்திர சிந்தனையாளன் என்ற நிலைக்கு மாறிய பிறகு அவர்
வேறு ஒரு கருத்தியலையும் கையாளுகிறார். சநாதன மதத்தினையும், புதிய சக்திகளையும்
ஒன்றிணைத்து ஒரு சித்திரத்தினை முன் வைக் கிறார் ‘ஜய ஜய சங்கர’ என்ற நாவல் இதற்கு
எடுத்துக்காட்டு. அவரது “சுதந்திரச் சிந்தனை’ என்ற கட்டுரையில் பின்வரும் பகுதி உள்ளது.
“நவீன இந்தியன் தனது கலாச்சார வேர்களை அறுத்துக் கொண்டவன் அல்ல. நவீன யுகத்தில்
பொருள்முதல்வாதக் கருத்துக்களும், நவீன உற் பத்தி முறை வாழ்க்கையும், அவனால் அப்படியே
அங்கீகரிக்கப்படவேண்டியது காலத்தின் விதி. அதே பொழுதில் இன்றைய நவீன ஐரோப்பா விலும்
நமது புராதன இந்தியாவிலும் மனித வாழ்க் கைக்கு அடிப்படையான மனிதநேயமெனும் ஆன்மீகம்
ஐரோப்பாவிலிருந்து ஏற்படுகின்ற புதிய வேதங்களிலிருந்தும், அந்த வேதங்களை அடிப்
படையாகக் கொண்ட புதிய சமூக வாழ்க்கை களிலிருந்தும் தரிசனம் தருவதை ஒரு இந்தியன்
புரிந்துகொள்வான். கம்யூனிஸ்ட் அறிக்கை நவீன மனித குலத்திற்கு ஐரோப்பா வழங்கிய புதிய
வேதம். கிறிஸ்துவ மார்க்கம் போலவோ, இஸ்லாமிய மார்க்கம் போலவோ அல்லாமல் ஹிந்து மதத்துக்கு
இணையான ஆனால் மிகவும் இளமை பொருந்திய செயல் திறனுடைய ஐரோப்பாவின் புதிய மதமாக
முகிழ்த்ததே கம்யூனிசம். கம்யூனிசம் தான் ஹிந்து மதம் போல தனிமனித நலன்களை உள்ளடக்கிய
சமூகம் சார்ந்த ஒரு வாழ்க்கை நெறியாகும்” (சுதந்திரச் சிந்தனை பக்.157). காரல் மார்க்சை
ஆன்மீகவாதி என்று கூறுகிறார் (சுதந்திரச் சிந்தனை பக். 155). இது ஒரு கலவைப் பார்வை
(eclectic) எனலாம். இந்தப் பார்வையின் விளைவு அவர் எழுதிய ‘ஹரஹரசங்கர’ என்ற
குறுநாவல். இது காஞ்சி சங்கராச்சாரியர் செயலை நியாயப் படுத்தி எழுதிய நாவல்.
சமுதாயப் பார்வையுடன் ஒன்றிய ஜெய காந்தன் ஒருமித்த ஆளுமையுள்ள கதாபாத்திரங் களைப்
படைத்தார். அதிலிருந்து விலகி பூர்ஷ்வாப் பார்வைக்கு வரும் பொழுது சமுதாய விமர்சனம்
இருந்தாலும் பிளவுண்ட ஆளுமையை விரிவாகக் காட்டினார். இங்கு கார்க்கி கூறியதை நினைவு
கூறலாம். “நமது அறிவாளிகளின் தனிநபர் வாதம் நரம்புத் தளர்ச்சி நிலையில் உள்ள ஒரு
மரத்துப் போன கட்டத்திற்கு அவர்களை இட்டுச் செல் கிறது.
...இந்தத் தனிநபர் வாதத்தின் கருத்தியலாளர் களிடையே இந்தக் குழப்பத்தினைக் காணலாம்.
புதிர்வாதிகள், அராஜகவாதிகள், மெர்ஷ்கோவ்ஸ்கி அல்லது ஸ்வென்ட்ஸ்டிஸ்கி வகைக் கிருத்த வர்கள்
ஆகிய எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்களிடையே இந்தக் குழப்பத்தினைக் காணலாம்.” (Mazim
Gorky in Literature)..
ஆதாரம்: ஜெயகாந்தன் ஒரு விமர்சனம், எஸ்.தோதாத்ரி, 1976.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 2:30:56 AM5/30/15
to brail...@googlegroups.com
சித்தாள்கள் இப்போது சினிமாவிற்குப் போவதில்லை
8
விவரங்கள்
எழுத்தாளர்: குருசாமி மயில்வாகனன்
தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம்
பிரிவு: உங்கள் நூலகம் - மே 2015
C வெளியிடப்பட்டது: 26 மே 2015
ஜே.கேயின் எழுத்து:
புதிய பாணியில் ஜே.கேயின் சிறுகதைகள் அமைந் திருந்தன. அதை எப்படிச் சொல்லலாம்?
புதுமைப் பித்தனின் பாத்திரங்களெல்லாம் அவர்களை யாரோ இடுப்பில் கயிற்றைக் கட்டி இழுத்துக்
கொண்டிருப்பது போல உலவும். அவ்வப்போது அக்கயிற்றைப் பிடித்து இழுப்பது
புதுமைப்பித்தன்தான் என்பது நாமறிந்ததே. ஆனால், ஜேகேயின் பாத்திரங்கள் அப்படிக் கயிறேதும்
கட்டப்படாதவர்களாகவே இருப்பார்கள். புதுமையான முடிவுகள் எடுப்பார்கள்; புதுமையான
விசயங்களைப் பேசுவார்கள். அப்பாத்திரங்களுக்கு முன்புறமாக கையில் கம்பை வைத்துக்கொண்டு
ஜேகே நிற்கிறாரோ எனவும் தோன்றும். ஜேகே சிறுகதைகளில் ஒரு தனிக் கட்டமைப்பு உண்டு.
உருவம் பற்றிய அக்கறை ஜேகேயிடம் எப்போதும் இருந்ததில்லை. உள்ளடக்கமே உருவத்தைத்
தீர்மானிக்கிறது என்பதை உறுதியாக நம்பியவர் அவர். அவர் நம்பிக்கை பொய்யானதல்ல.
பாத்திரங்களை வார்ப்பதில் ஜேகேயின் சிமெண்ட் ஒரு தனி பிராண்ட்.
ஜேகேயின் பேச்சு:
jayakanthan 315
மிகவும் பரபரப்பை உண்டாக்கக்கூடிய அளவில் அவர் பேசுவார் எனக் கேள்விப்பட்டதுண்டு.
சிவகங்கை கல்லூரியில்கூட தகராறுகள் நடந்ததாக அறிகிறேன். பேராசிரியர் நா.தர்மராஜன்
இது பற்றி விரிவாகக் கூறமுடியும். இரண்டுமுறை ஜேகேயுடனான உரையாடலை வேடிக்கைப்
பார்த்திருக்கிறேன். நேரம் ஆக ஆக, உரையாடலின் போக்குப் போவதை நேரில்தான் காணவேண்டும்.
இறுக்கத்தோடு நூல்பிடித்தமாதிரி ஜேகே பேசிக்கொண்டுபோவார். மற்றவர்களில் சிலர் நூலறுந்த
பட்டம் போல சகல திசைகளிலும் பறப்பார்கள். நூல் அறுந்ததற்கான காரணம் கலந்து கொண்டவர்கள்
மட்டுமே அறிவர்.
ஜேகேயின் உருவம்:
இளம் வயதில் மீசை மழித்த தோற்றம். பின்னர் நீண்ட கிருதா மீசையுடன் இணைந்திருக்கும்.
முழுக்கை சட்டை இன் செய்யப்பட்டு பெல்ட் போட்டிருப்பார். பல சமயங்களில் அப்பெல்ட் உருவப்படும்
சூழ்நிலை உருவாகும் எனவும் அறிந்திருக்கிறேன். வயதான பிறகு பெரும்பாலும்
வேட்டியிலேயே அதிகமாகக் காணப்பட்டார்.
ஜே.கே.யின் பழக்கம்:
பேசும்போது ஜேகே நன்றாகச் சிரிப்பார். அவர் கஞ்சா பிடிப்பதையும் மது அருந்துவதையும்
ஒரே சமயத்தில் செய்வார். நானறிந்த வரையில் இரண்டையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தும்
பழக்கமுள்ளவர்கள் இல்லை. அந்தமாதிரியான நேரங்களில் அவர் நன்றாக வாய்விட்டு குலுங்கக்
குலுங்கச் சிரிப்பார். இரண்டு வேதபானங்களும் அவரை மகாமுனிவனாக்கியிருந்தன. இப்படியான
தாங்கும் உடல் அவருக்கு இவ்வளவு நாள் அமைந்திருந்தது ஆச்சரியமான விசயம்தான். இரண்டின்
அளவிற்கும் காலத்திற்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொண்டதோடு அதைத் தாண்டாமல் கடைசிவரைக்
கடைப்பிடித்தும் வந்திருக்கிறார் ஜே.கே.
ஜேகேயின் சினிமா:
ஜேகேயின் சினிமா, ஜேகேயின் சினிமா மட்டுமே. அதற்கு முன்வழிகாட்டலும் இல்லை.
பின்தொடர்ச்சியும் இல்லை. ‘என்னைப் போல் ஒருவன்’தமிழ் சினிமா ஆர்வலர்கள் அனைவரும்
பார்க்கவேண்டிய முக்கியமான படம். தயாரித்து, இயக்கி, தியேட்டரை வாடகைக்குப் பிடித்துத்
தானே டிக்கெட்டும் கொடுத்து - ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்களைப்
படித்துப்பாருங்கள், அலுப்புத்தராத நூல் அது. கீழே வைக்க முடியாது. அது ஒரு தினுசு.
மக்கள் சினிமாவைக் கைவிட்டபோது அவரும் சினிமாவைக் கைவிட்டார்.
நண்பர் செல்லமணி ஒரு தகவலை நினை வூட்டினார். ஜேகேயின் ‘சினிமாவிற்குப்போன
சித்தாளு’நாவல் வெளிவந்து ஒரே பரபரப்பு. அந்நாவலில் குறிப்பிடப்படும் நடிகர்
எம்.ஜி.ஆர்தான் என்பது ஊரறிந்த விசயம். திரையுலகின் தெய்வமாக அவரை அனைவரும்
மாற்றிக்கொண்டிருந்தபோது இப்படி யரு நாவல் வந்தது, அதுவும் ஜேகேயிடம் இருந்து வந்தது,
கேட்கவா வேண்டும். ஒருநாள் எம்ஜிஆரின் உண்மை விசுவாசிகளில் சிலர் ஜேகேயிடம்
வருகிறார்கள். வந்து, ‘உங்களை அவர் பார்க்கவேண்டும் என்கிறார்’என்கிறார்கள். உடனே ஜேகே
என்ன சொன்னார் தெரியுமா? ‘ரொம்ப மகிழ்ச்சி, எப்போது வேண்டு மானாலும் வரச்சொல்லுங்கள்’.
கூப்பிட்டவருக்கு எப்படியிருந்திருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னால் சூப்பர் ஸ்டார்
எனப்படும் ஒருவரை தமிழ் எழுத் தாளர்கள் பஜனை பாடினார்கள், சுந்தரராமசாமி உட்பட. உடனே
அதைக் கண்டித்து ஒரு கடிதமே எழுதியிருந்தார் ஜேகே.
ஜேகேயின் நினைவு
சிவகங்கை பொதிகை கலை இலக்கிய வட்டத்தின் கூட்டத்திற்காக ஜேகேயை அழைத்திருந்தோம். அச்
சமயம் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்தவரைப் போய் நேரில் சந்தித்து (அவர் இலக்கிய
ஆர்வலர் எனக் கேள்விப்பட்டிருந்தபடியால்) நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கக் கோரினோம். அவரும்
சந்தோசமாக ஏற்றுக்கொண்டார். அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள் அச்சிட்டோம். நகரெங்கும்
சுவரெழுத்து ஒரு இடத்தில் மட்டும் 100க்கு 10 என்ற அளவில் நீண்ட சுவரெழுத்து ஜேகேயின்
படத்தோடு வரைந்திருந்தோம். நண்பர் சரவணக்குமார் இலக்கியமேதை என்று விளம்பரங்களில்
ஜேகேவுக்குப் பட்டம் கொடுத்திருந்தார். அப்போதிருந்த ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில்
கூட்டம். சுமார் 200பேருக்கு மேலிருக்கும். மண்டபம் நிரம்பி வெளியில் ஆட்கள் நின்றிருந்தார்கள்.
பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி ஜேகே அவர்களுக்குப் பரிசுகளெல்லாம்
வழங்கினார். ஜெயகாந்தன் எனும் பெயரின் மீதிருந்த ஈர்ப்பு அது. கடைசி நேரத்தில் கலெக்டர்
விழாவிற்கு வரவில்லை. உளவுத்துறை எதையோ உளறி வைத்ததாகப் பின்னர் அறிந்தோம். இந்த
நிகழ்ச்சியில் அவர் கலந்திருந்தால் அது அவருக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமாக
இருந்திருக்கும். பிறகு தோழர் சந்திரகாந்தனைத் தலைமை தாங்கச்சொல்லி நடத்தினோம். இத்தகைய
நினைவுகள் இப்போது வருவதற்கு தோழர் சந்திரகாந்தன் தான் முழுக் காரணமாகும். அவர்தான்
ஜேகேயை சிவகங்கைக்கு அழைத்துவந்தார். அன்று இரவு நடந்த உரையாடலின் போது கவிஞர்
மீராவும் பேராசிரியர் தர்மராஜனும் இடையில் வந்து போனார்கள்.
சில நேரங்களில் சில மரணங்கள்...!
ஜெயகாந்தனுக்கு அஞ்சலி!
என சிவகங்கை பொதிகை கலை இலக்கிய வட்டம் சுவரொட்டி அடித்து ஒட்டியிருந்தது.
ஜேகே இன்று இல்லை.
இப்போது சித்தாள்கள்தான் சினிமாவிற்குப் போவதில்லையே!
பிறகு ஜேகே மட்டும் எப்படி இருப்பார்?

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 2:36:32 AM5/30/15
to brail...@googlegroups.com
பாரதி என்ற தாய்ப்பாலைக் குடித்த ஞானச் செறுக்கர் ஜெயகாந்தன்
8
விவரங்கள்
எழுத்தாளர்: சிற்பி
தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம்
பிரிவு: உங்கள் நூலகம் - மே 2015
C வெளியிடப்பட்டது: 26 மே 2015
பாரதி என்ற தாய்ப்பாலைக் குடித்த ஞானச் செறுக்கர் ஜெயகாந்தன். அத்துடன் பொது வுடைமை
இயக்கத்தைச் சார்ந்த ஜீவா, ஆர்.கே. கண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், கே.பாலதண்டா யுதம் ஆகிய
நால்வரையும் தனது மார்க்சிய குரு மார்களாகக் கொண்டவர் ஜெயகாந்தன். இவர் களால் தட்டிக்
கொடுக்கப்பட்டு வளர்ந்தவர். நிகரற்ற அவரது பேராளுமையில் பிறந்ததுதான் அவரின் கம்பீரம்,
அவர் மீசையை முறுக்குவதோ, அவரது விரிந்த தலைமுடியோ அவரது கம்பீரத்தின் அடையாளமல்ல!
jayakanthan 402
அவரது உற்ற நண்பர் கே.எஸ். கூறுவதைப் போல அவரது அறிவு ஞானமே அவரது அறிவு
கம்பீரத்திற்குக் காரணம். நான் முதன் முதலில் அவரைச் சந்தித்தது திருவல்லிக்கேணி
ஒய்.ஆர்.கே. சர்மா வீட்டு மொட்டை மாடியில்தான். புகை நடுவே நடுநாயகனாக வீற்றிருந்த
ஜெயகாந்தனிடம் ‘முத்துக்களும் கிளிஞ்சல்களும்’என்ற எனது நூலுக்கு முன்னுரை எழுதக்
கேட்டுக் கொண் டேன். அவ்வாறே சில நாட்களுக்குள் அவரது முன்னுரை அந்த நூலுக்கு எழுதி
அனுப்பியிருந் தார். அதற்குப் பிறகு எண்ணற்ற முறைகளில் அவருடன் உரையாடியுள்ளேன்.
ஏராளமான நிகழ்ச்சிகளில் அவருடன் பங்கு கொண்டுள்ளேன்.
அருடைய எழுத்தைப் போல, பேச்சைப் போல அவர் தனது நண்பர் குழாமுடன் நடத்திய உரையாடல்கள்
அற்புதமானவை. கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீசைப் போல, ஆங்கில இலக்கிய மேதை சாமுவேல்
ஜான்சனைப் போல புதிய புதிய சிந்தனைக் கீற்றுக்களை, தத்துவ முத்துக்களை
வெளிப்படுத்துவார். “பேசப்பேசத் தான் என்னையே எனக்குப் புரிகிறது”என்பார். தனது
படைப்பாளு மையை தனது பேச்சின் மூலமாக உருவாக்கிக் கொண்டார்.
தமிழ் இலக்கியத்தில், பாரதியின் எழுத்துக்கள் மீது, அபாரமான அபிமானம் கொண்டிருந்தார்.
அவரைக் கவர்ந்த மற்றொரு மாகவிஞன் கம்பன்.
“சக்கரத்தை யெடுப்பதொரு கணம்
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்
இக்கணத்தில் இடைக்கணமொன் றுண்டோ?
இதனுள்ளே பகை மாய்த்திட வல்லான்காண்!”
“வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்”
என்ற பாரதியின் ‘கண்ணன் - என் அரசன்’என்ற பாடலில் வரும் வரிகளை உரக்கப் பாடுவார் ஜே.கே.
“எனது எழுத்து ஒரு தனிமனிதனின் எழுத் தல்ல. எனக்கு முன்னால் தொடங்கி, எனக்குப்
பின்னாலும் தொடரும் ஒரு பெருங்காவியத்தின் இடைக்கால நாயகன் நான்”என்பார்.
“பின்னிலேன் முன்னிலேன் எந்தைப் பெருமானே
பொன்னிலே தோன்றியது
ஓர் பொற்கலனே போல்கிறேன்”
என்ற கம்பனின் இரணியன் வதை படலத்தில் வருகின்ற வரிகளைப் போன்றதே ஜெயகாந்தனின் எழுத்தாளுமை.
இத்தகைய விசாலமான, விரிந்த பார்வையில் தான் அவருடைய ‘பாரீசுக்குப் போ’நாவல்
படைக்கப்பட்டிருக்கிறது. பாரீசிலிருந்து திரும்பி யுள்ள சாரங்கன் மேற்கத்தியப்
பண்பாட்டையும் அவரது தந்தை இறுக்கமான இந்தியப் பண் பாட்டையும் பற்றி நிற்க,
இருவருக்கிடையேயான உரையாடலை, இரண்டு பண்பாடுகளின் மோத லாகச் சித்தரிக்கிறார்.
இரண்டையும் நிராகரிக் காமல் இரண்டிலும் உள்ள நல்ல அம்சங்களை உள்வாங்கியவர்களாக நாம் இருக்க
வேண்டு மென்பதே அவருடைய பார்வை.
பெண்கள் பற்றி எழுதும் போது ஜெயகாந்தன் ஒரு தாயாக மாறிவிடுவார். பெண்களுக்கு ஒரு வகை
புனிதத்தைக் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு அவர்களை இழிவுபடுத்துவதை அவரது பாத்தி ரங்கள்
மூலம் சாடுவார். கம்சலை, அகிலா போன்ற பாத்திரப்படைப்புகள் மூலம் தனது பெண்ணுரிமை
சார்ந்த கருத்துக்களைப் பேசுவார்.
“இழிவான உண்மையைவிட, என்னுடைய உன்னதமான பொய் மேலானது”என்று அவரது கதாபாத்திரம்
முழங்கும். ‘யுகசக்தி’யில் வரும் கௌரி பாட்டியின் மூலம் பழைய பண்பாடுகளை மதிப்பதோடு,
புதிய பண்பாடுகளுக்கு வரவேற்புக் கூறுவார். கோவில், சேரி இரண்டிலும் புனிதம் உண்டு.
‘கற்பு’என்பதை பெண்களின் சுயநிர்ணய உரிமை என்பார் ஜெயகாந்தன், சுந்தர காண் டத்தில்
பெண்ணியத்தின் குரலாக ஒலிப்பார்.
தமிழ்நாட்டின் பெருமை பற்றி அவரைப் போல சிறப்பாக எடுத்துக் கூறியவர்கள் இருக்க
முடியாது. “ராமாயணத்தை, கம்பனைப் போல் படைத்தவர்கள் உண்டா? சிகாகோவிற்கு விவே
கானந்தரை அனுப்பியது நமது தமிழ்நாடுதானே. அன்னியனை எதிர்த்து கப்பலோட்டியது டாடாவா.
நமது வ.உ.சி.தானே. பாரிஸ்டர் காந்தியை சாமானிய இந்தியனாக அரையாடை உடுக்கச் செய்தது
நமது மதுரைதானே”என்று தமிழ் நாட்டின், தமிழின் பெருமையை சிலாகித்துச் சொல்வார் ஜெயகாந்தன்.
ரஷ்யாவுக்கு சென்றிருந்தபோது அங்கே தன்னுடன் தமிழில் உரையாடக்கூட ஆளில்லை என்ற போது,
தங்கியிருந்த அறையின் குளிய லறையில் கண்ணாடி முன் நின்றுகொண்டு தமிழில் பேசி, தனது
தமிழ்ப்பசியை ஆற்றிக் கொண்டதாகக் கூறினார் ஜே.கே.
அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட வில்லை என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். அவருக்கு
அப்படி அரசு மரியாதை செய்யாம லிருப்பதே அவருக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.
அப்படி அரசு மரியாதை செலுத்தப் பட்டிருந்தால், ஜெயகாந்தனின் சாம்பல் அணுக்கள் கூட அதை,
நிராகரித்திருக்கும். ஜேகேவின் எழுத்து தான் அவரது ஆன்மா. அது அமரத்துவம் வாய்ந்தது.
அது என்றும் தமிழ் நெஞ்சங்களில் வீற்றிருக்கும்.
(கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெற்ற ஜெயகாந்தன் நினைவஞ்சலியில் கவிஞர்
சிற்பி பாலசுப்ரமணியனின் உரை.)
நன்றி: ஜனசக்தி

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 6:54:13 AM5/30/15
to brail...@googlegroups.com
அஞ்சலி
8
விவரங்கள்
எழுத்தாளர்: வீ.அரசு
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: ஆகஸ்ட்09
C வெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009
2009ஆம் ஆண்டில் மிகப்பலரை நாம் இழந்துவிட்டோம். அவர்களைப் பற்றிய குறிப்புகளைப் பதிவு
செய்வது நமது கடமை.
ஈழப்போராளிகள்-மக்கள்
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் சிங்களப் பேரின இராணுவ அரசு, இனவிடுதலைப் போராட்டத்தில்
ஈடுபட்ட போராளி களையும் ஆயிரக்கணக்கான (இதுவரை எண்ணிக்கை வெளியிடப் படவில்லை)
அப்பாவிப் பொதுமக்களையும் கொன்று குவித்தது. இவர்கள்அனைவருக்கும் எங்களது அஞ்சலி.
நாடகக் கலைஞர்கள்
அகஸ்தோ போவால் (1931-2009), ஹபீப் தன்வீர் (1923-2009) ஆகிய இரு அரங்க ஆளுமைகள்
மறைந்துவிட்டார்கள். பிரேசில் நாட்டுக் கலைஞரான அகஸ்தோ போவால், உலகத்தில் ‘கலக அரங்கம்’
குறித்து அறிமுகப்படுத்தியவர். “மனித குலத்தை ஒன்றிணைக்கும் கனவைத் தேடவேண்டும்; மனித
குலத்தை ஒரே மாதிரியான மக்கள் கூட்டமாக்க அல்ல’’ என்ற கருத்தாக்கத்தில் செயல்பட்ட அரசியல்
போராளி. அரசியல் போராட்டத்திற் கான ஆயுதமாக அரங்கை கையில் எடுத்தவர். ஹபீப் தன்வீர்,
இந்திய நாடகக்கலைஞர்களுள் குறிப்பிடத்தக்க ஆளுமை. இப்ரகாம் அல்காசி, கரந்த், உத்பல்தத் என்ற
இந்திய நாடக ஆளுமைகள் வரிசையில் வருபவர். பல்வேறு அரசியல் போராட் டங்களில் பங்கு
கொண்டவர். சாதாரண கிராம மக்களோடு இணைந்து அரங்கத்தில் செயல்பட்டவர். இவரது ‘சரண்தாஸ்
சோர்’ நாடகம் 1972இல் உருவாக்கப்பட்டது. இன்றும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
ஓவியக்கலைஞர்
ஓவியக்கலைஞர் ஏ.பி. சந்தானராஜை (1932-2009) இந்த ஆண்டு இழந்துவிட்டோம். சென்னையில்
உள்ள ஓவியக் கல்லூரி உலக அளவில் அறியப்பட காரணமாக இருந்த, டி.பி.ராய் சௌத்ரி,
கே.சி.எஸ். பனிக்கர் வரிசையில் ஓவியர் சந்தானராஜ் அவர்களும் இணைந்துகொள்கிறார். இன்று
தமிழகத்தில் செயல்படும் ஓவியக் கலைஞர்கள் அனைவருக்கும் ஏதோவொரு வகையில் உந்துதலைத் தந்த
கலைஞர். ஓவியர் ஆதிமூலத்திற்குப் பின்பு சந்தானராஜ் இழப்பும் உண்மையில் ஈடுசெய்ய முடியாத
இழப்பு.
இசைக்கலைஞர்கள்
மைக்கேல் ஜாக்சன் (1958-2009) டி.கே. பட்டம்மாள் (1919-2009) கங்குபாய் ஹங்கல்
(1913-2009) ஆகிய மூன்று அரிய இசைக்கலைஞர்களை நாம் இழந்துவிட்டோம். மைக்கேல் ஜாக்சன்
ஒரு தொன்மம். உலகத்தைக் கலக்கிய கலைஞன். மந்திர சக்தியால் மக்களை ஈர்த்தவன்.
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவே தனது இசையை வெளிப்படுத்தியவன். உலகத்தில் நடக்கும்
போர்களை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒடுக்கப்படும் ஆப்பிரிக்க நாடுகளின்
மக்களுக்காகக் குரல் கொடுத்தவன். எலிசபெத் டைலர், மர்லின் மன்றோ, சார்லி சாப்ளின்
வரிசையில் வாழ்ந்த கலைஞன் மைக்கேல். தமிழக இசை வரலாற்றின் புள்ளிகளுள் ஒருவர்
டி.கே.பட்டம்மாள். தமிழகத்தில் கலை வடிவங்கள் யாரால் காப்பாற்றப்பட்டது? அச்சமூகம் எப்படி
அழிக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கான கடைசிச் சான்று. கங்குபாய் ஒடுக்கப்பட்ட
சமூகத்திலிருந்து உருவாகி, இந்துஸ் தானி இசை உலகில், நிகரில்லாத கலைஞராக வாழ்ந்தவர்.
கவிஞர்கள்
கமலாதாஸ் (1934-2009), இ.முருகையன்(1935-2009), சுகந்தி சுப்பிரமணியன்
(1967-2009) ஆகிய கவிஞர்கள் மறைந்துவிட் டார்கள். கேரளாவில் வாழ்ந்த மாதவிக்குட்டியான
கமலாதாஸ் உலகம் அறிந்த கவிஞர். மலையாளக் கவிதை, சிறுகதை ஆகியவற் றில் தன்னை
வெளிப்படுத்தினார். ஆங்கிலத்தில் இவர் கவிதை களை எழுதினார். பெண் ஒடுக்குமுறைகள்
அனைத்தையும் எதிர்கொண்ட கலைஞர். ஈழநாட்டின் மூத்தத் தலைமுறைக் கவிஞர் இ. முருகையன்.
நெடும்பாட்டு, பா நாடகம், தனிக்கவிதை என்று இவரது ஆக்கங்களை மதிப்பிடுகிறார்கள்.
நீலவாணன், மஹாகவி, இ-.முருகையன் என்ற வரிசை ஈழக் கவிதை வரலாற்றைச் சொல்லும். சொற்களில்
மென்மையான உணர்வையும் கடலின் ஆழத்தையும் கொண்டது சுகந்தி அவர்களின் கவிதை.
எழுத்தாளர்கள்
கிருத்திகா (1916-2009), ராஜமார்த்தாண்டன் (1948-2009) நீண்ட காலம் வாழ்ந்த கிருத்திகா
பாட்டி, தமிழ் எழுத்துலகில் தனக்கெனத் தனி அடையாளத்தைக் கொண்டவர். காப்பியப் பாத்திரங்களை
நவீன பாத்திரங்களாகக் கட்டமைக்கும் புனைவை அவர் செய்துவந்தார். குழந்தைகள் மீது ஈடுபாடு
கொண்டு, அவர்களுக்கும் எழுதினார். ராஜமார்த்தாண்டன், சமகாலத்தில் வாழும் பல
பத்திரிகைகாரர்களுக்கும் நண்பர். சென்னை தினமணி பத்திரிகையில் வேலை பார்த்தபோது,
பலமுறை உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆத்மார்த்தமான உயிரி அவர். தமிழ்நாட்டுச் சூழல்,
எப்படியெல்லாம் இப்படி யான மனிதர்களை வாழச் செய்யும் என்பதற்குஅடையாளம். ராஜமார்த்தாண்டன்
மறைவுகுறித்து தமிழில் வெளிவரும் அனைத்து இதழ்களிலும் எழுதினார்கள். அவர்களோடு
நாங்களும் சேர்ந்துகொள்கிறோம்.
தமிழறிஞர்கள்
வ.அய்.சுப்பிரமணியன் (1926-2009), கமில் சுவலபில் (1927-2009), மு.கு. ஜகந்நாத
ராஜா (1933-2009), திருமுருகன் (1929-2009) ஆகிய தமிழறிஞர்களை இழந்தோம்.
தமிழ்ச்சூழலில் ஆய்வு நிறுவனங்கள் இன்று செயல்படுகிறது என்றால் அது வ.அய். சு. அவர்களின்
கொடை. பிரித்தானியர்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும்
முறையியலை அடிப்படையாகக் கொண்டு தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டவர் இவர்.
திராவிடவியல் என்பது இந்தியவியலுள் எப்படிச் செயல்படுகிறது? என்பதை உணர்வுப் பூர்வமாக
அறிந்துகொண்டவர். அதற்காக என்ன செய்யலாம்? என்று திட்டமிட்டு தனது வாழ்வை அர்ப்பணித்தவர்.
நிறுவன உருவாக்கமும் செயல்பாடுமே ஒரு சமூகத்தின் முகத்தை மாற்றும் கருவியாகச் செயல்பட
வல்லது. தமிழ்ச்சமூகம் அந்த வகையில் இந்த மனிதருக்கு என்றும் கடன் பட்டுள்ளது.
பேரா. வ.அய்.சு.வின் கனவை உலகளவில் நனவாக்கியவர் பேராசிரியர் கமில் சுவலபில்.
திராவிடவியல் உலகளவில் அங்கீகாரம் பெற இவரது ஆய்வுகள் கட்டியம் கூறுகின்றன. கிழக்கு
ஐரோப்பாவில் செயல்பட்ட பல்வேறு அரசியல் செயல்பாடுகளுள் தன்னை ஒரு இடதுசாரியாக
அடையாளப் படுத்திக்கொண்டவர். தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்து
தமிழ்மொழியை-தமிழகப் பண்பாட்டு வரலாற்றை ஐரோப்பிய மொழிகளில் பதிவுசெய்த பெருமகன்.
தமிழியல் ஆய்வில் இவரோடு இணைத்துச்சொல்லத்தக்க ஐரோப்பிய-அமெரிக்க ஆய்வாளர்கள் யார்? என்ற
கேள்வியை எழுப்பினால் விடை அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அந்தப் பெருமைக்கும்
சாதனைக்கும் உரிய பேராசிரியர் கமில் சுவலபில். எல்லீஸ், கால்டுவெல், எமனோ, பர்ரோ
வரிசையில் இவரும் திராவிட இயலுக்குச் செய்த பங்களிப்பு ஆழமானது.
பன்மொழிப்புலவர் மு.கு. ஜகந்நாத ராஜா இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்தார். தெலுங்கு,
தமிழ், கன்னடம், மலையாளம், பிராகிருதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சி
உடையவர். தமிழின் செவ்விலக்கிய மரபுகளைச் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிசார்ந்த
கண்ணோட்டங்களில் தொடர்ந்து உரையாடலுக்கு உட்படுத்தியவர். தமிழ் வளங்களைத் தெலுங்கு
மொழிக்கு மிகுதியாகக்கொண்டு சென்றவர். அது அவரது தாய்மொழியும் கூட. ‘காதா சப்த
சதி’, ‘வஜ்ஜாலக்கம்’, ‘ஆமுக்த மால்யதா’, ‘தீக நியாயம்’ ஆகிய பிற நூல்களைத் தமிழில்
கொண்டுவந்த பெருமகன். ‘மணிமேகலை மன்றம்’ என்ற அமைப்பின் மூலம் பௌத்த மரபுகளை
தமிழ்ச்சமூகத்தில் தேடியவர்.
பெரியவர் திருமுருகன், பாவாணர் மரபில் தமிழியல் வளத்தைப் பெருக்கியவர். பள்ளி
ஆசிரியராக இருந்துகொண்டே தமது புலமையால் தமிழிசை, தமிழ் யாப்பு ஆகிய துறைகளில்
அரிய பங்களிப்புச் செய்தவர். தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளை இசையோடு இணைந்த மரபாக
இனங்கண்டு, தமது வாழ்வுப்பயணத்தை அதற்கென மேற்கொண்டவர். தமிழிசை வரலாறு என்றும் இவரை
நினைவுகொள்ளும்.
பதிப்பாளர்
லட்சுமி கிருஷ்ணமூர்த்தி(1925-2009) தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் என்றும் இடம்பெறுவார்.
தமிழ் நூல் வெளியீட்டு வரலாற்றில் ‘வாசகர் வட்டம்’ என்பது இவரது அடையாளம். வளர்ச்சி பெற்ற
ஆங்கில நூல் வெளியீடுகளைப் போல தமிழிலும் வெளியிட முடியும் என்பதை
நிரூபித்துக்காட்டியவர். இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் நூல் வெளியீடு புதிய புதிய
பரிமாணங்களில் செயல்பட எத்தனிக்கிறது. இவ்வகையான வளர்ச்சியற்ற சூழலிலும் அன்றைக்குக்
கிடைத்த வாய்ப்பைக் கொண்டு ஆகக் கூடிய அளவில் மிக வளமான நூல் வெளியீடு என்பதைச்
சாத்தியமாக்கியவர். இவரது செயல்பாட்டில் இவரது கணவர் பங்களிப்பையும் இணைத்துக்கொள்ள
வேண்டும். ‘வாசகர் வட்டம்’ எனும் அடையாளத்திற்குரிய இந்த மனுஷியை தமிழ்ப்பதிப்புலகம்
நினைவில்கொள்ளும்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 7:02:10 AM5/30/15
to brail...@googlegroups.com
ஸ்டாலின் ராஜாங்கம் நூல்கள் - தலித்
வரலாறு: மீள்கட்டமைப்பு-தற்சார்பு
8
விவரங்கள்
எழுத்தாளர்: ஜ.சிவகுமார்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: ஆகஸ்ட்09
C வெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009
வளர்ந்து வரும் தலித்திய ஆய்வாளர்களுள் முக்கியமானவராக அடையாளப்படுத்தப்படும் ஸ்டாலின்
ராஜாங்கம், கடந்த காலத்தில் தமிழ்ச்சமூகத்தில் செயல்பட்ட தலித் ஆளுமைகள் மற்றும்
போராட்டங்களிலிருந்து வரலாற்றைக் கட்டமைப்பதனை அவசியமானதாகக் கருதுகிறார்; அத்தகைய
முயற்சிகளிலும் ஈடுபடுகிறார். இவரது நூல்களுள் ‘தீண்டப் படாத நூல்கள்’ (டிச. 2007),
‘வஞ்சி நகரம் கந்தன்’ (மே 2008), ‘வரலாற்றை மொழிதல்’ (ஆக. 2008) ஆகிய மூன்றும்
தொடர்ச்சி யான தேடல் மற்றும் கள ஆய்வினூடாகத் தலித் அறிவு மரபின், ஆளுமைகளின் வரலாற்றை
மீட்டுருவாக்கம் செய்கிறது.
இவ்வரலாற்றைக் கட்டமைப்பதற்கான தரவுகளைச் சேக ரிக்க இவர் மேற்கொண்ட முயற்சி
மதிக்கத்தக்கது. பத்தொன்ப தாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டு களில்
ஒடுக்கப்பட்டோர் சார்பாக வெளிவந்த இதழ்களையும் நூல்களையும் குறுவெளியீடுகளையும் அக்காலப்
பின்னணியோடு ஆவணப்படுத்துகிறார். தமிழ்ச் சமூகம் அச்சுக் கருவியினூடாகத் தனது இலக்கிய
மூலத்தையும் சாதி மூலத்தையும் தேடிக் கொண்டிருந்த காலத்தில் ஒடுக்கப்பட்டோர் சார்ந்து மேலெ
ழுந்த குரலை அரசியல் அர்த்தத்தோடு பதிவு செய்கிறார். அறி வார்ந்த தளத்தில் மட்டுமல்லாமல்,
ஒடுக்கப்பட்டோருக்காகச் சமூகத் தளத்தில் நின்று களப்பணி ஆற்றிய ஆளுமைகளையும் அவர்களது
செயல்பாடுகளையும் பதிவுசெய்துள்ளார். இப்பதிவுகள் ஆவணங்களாக மட்டுமல்லாமல்
தலித்துகளுக்கு உளவியல் ரீதியான போராட்ட பலத்தையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சு ஊடகத்தினை ஒடுக்கப்பட்டோர் அரசியலுக்காகப் பயன்படுத்திய ஆளுமைகளைப் பதிவுசெய்யும்
இவரது நூலில் ஐந்து ஆவணங்கள் மட்டுமே பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. குறிப்பாக வ.கீதா,
எஸ்.வி. ராஜதுரை ஆகியோர் ஆதிதிராவிடன் இதழைக் ‘கற்பனையான பத்திரிகை’ எனக் கூறியதனை
மறுக்கும்பொழுது, அவ்விதழின் முகப்புப் பக்கத்தையாவது பின்னிணைப்பில் தருவது அவசியம்.
அல்லது சிக்கலுக்குரிய பகுதியை அவ்விதழிலிருந்து மின்னணுவாக்கம் செய்து தரவேண்டும்.
மறுபதிப்பிலாவது ஸ்டாலின் இதனைக் கவனத்தில் கொள்வது அவசியம்.
1990களில் உருப்பெற்ற தலித் அரசியல் எழுச்சியை அம்பேத்கர் நூற்றாண்டு நிகழ்வோடு மட்டுமே
இணைத்துப் பார்க்காமல், மேலை நாடுகளிலிருந்து பெற்ற புதிய சிந்தனைகள் -குறிப்பாக
விளிம்புநிலைக் கருத்தாடல்கள்-அறிவுலகத்தில் தலித்திய அரசியலுக்குச் சாதகமான சூழலை
உருவாக்கியதாக இவர் மதிப்பிடுகிறார். அதேபோல் காந்தியின் அரிசன சேவையை
விமர்சிக்கும்பொழுது அத்தகைய நெருக்கடியைத் தோற்றுவித்த தலித் இயக்கங்கள், தலைவர்கள்
பற்றியும் இணைத்து அணுகவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். தலித் அல்லாதவர் களும்,
தலித்துகளும் சுகாதாரம் குறித்துப் பேசுவதில் உள்ள வேறுபாட்டினை நுட்பமாகப்
பதிவுசெய்கிறார். இவ்வாறு தலித்திய ஆய்வாளர்கள் மதிப்பிடாத சில புள்ளிகளை மிக
நேர்த்தியான மொழியில் தர்க்கபூர்வமாக விவாதிக்கிறார்.
இவரது ‘சனநாயகமற்ற சனநாயகம்’ (ஜன. 2007), ‘ஆரிய உதடும் உனது திராவிட உதடும்
உனது’ (ஜன. 2008) ஆகிய இரு நூல்களும் அரசியல், சமூக, ஊடக வெளிகளில் நுட்பமாக
வினைபுரியும்-சில சமயங்களில் வெளிப்படையாகவே செயல் படும்-சாதிய அதிகாரத்தின் மீதான
விமர்சனமாக அமைகின் றன. சமீப காலங்களில் ‘மாற்றுப்படம்’ எனும் மாயையோடு கிராமியச்
சூழலை உள்வாங்கிக்கொண்டு ‘யதார்த்தமாக’ உருவாக்கப்படும் திரைப்படங்களிலுள்ள உள்ளார்ந்த
சாதியத் தன்மைகளை வெளிப்படுத்துகிறார். இருபத்தோறாம் நூற்றாண் டின் மின்மயக் கருவிகளைப்
பயன்படுத்தி, தலித் எழுத்துகள் அச்சு வடிவத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய வாசகர்களி
டமாவது சென்று சேர்கின்றன. அதேசமயம் பெரும் மூலதனத் தையும் வெகுசன நுகர்வையும்
எதிர்பார்க்கும் சினிமா, தலித்து களையும் அவர்களின் பிரச்சினைகளையும் மையப்படுத்துவ
தில்லை. தலித் இலக்கியம், தலித் அரசியல் போல தலித் சினிமா எனும் தனித்த போக்கு
உருவாகவில்லை. இவ்வாறு முதலாளித் துவமும் வெகுசன மனோபாவமும் கவனத்தில் கொள்ளாத
கூறுகளைக் குறும்படங்களே காட்சிப்படுத்துகின்றன. இந்நூலில் ‘தீக்கொழுந்து’ குறும்படம்
குறித்து ஸ்டாலின் விமரிசனம் செய்துள்ளார். ‘ஒரு பிரச்சினையில் வர்க்கம் மட்டுமே மையமாக
இருக்குமா?’ (2008; ப. 83) எனும் கேள்வியை எழுப்புகிறார். ஆனால் பல இடங்களில் சாதி
மட்டுமே பிரச்சினைகளுக்குக் காரணம் எனக் குறுக்கிப் பார்க்கிறார் என்பதையும் விளங்கிக்
கொள்ள முடிகிறது.
தமிழ்ச் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டு கால இடைவெளிக்குள் நிகழ்ந்துள்ள அரசியல், சமூக,
பொருளாதார, பண்பாட்டு மாற்றங்கள் எவ்வாறு சாதியமைப்பையோ அது தரும் அதிகாரத்தையோ
பாதிக்காத வகையில் நிகழ்ந்துள்ளன என்பதை விவாதிக்கிறார். தேசிய இயக்கத்தில் பார்ப்பன
ஆதிக்கத்தை எதிர்த்த திராவிட இயக்கம், தலித்துகள் தவிர்த்த பார்ப்பனரல்லாதார் அதிகாரத்துடன்
செயல்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் தேர்தல் ஜனநாயகம் வட்டாரத் தில்
பெரும்பான்மையாக வாழும் சமூகங்களுக்கே சாதகமாக இருப்பதனைச் சரியாகவே
மதிப்பிடுகிறார். (ஆனால் பார்ப்பன, வெள்ளாள ஆதிக்கத்திலிருந்து அடுத்த நிலையினர்
அதிகாரம் பெற்றனர் என்பதும் உண்மை.) அதேசமயம் தலித்துகளுக்குள் ளும் பெரும்பான்மை
வாதமும், ‘தமிழ்த் தேசிய உணர்வின்’ அடிப்படையில் ஒதுக்குதலும் நிகழ்வதை மௌனப்படுத்து
கிறார். சில இடங்களில், அடர்த்தியாக வாழ்பவர், பறையர் பூமி, பூர்வ பௌத்தர் என்று
பெருமைப்படவும் செய்கிறார். பறையர்களுக்குள்ளும் வள்ளுவர் சமூகம் குறித்த பெருமித
உணர்வோடு எழுதுகிறார். அயோத்திதாசர் (2007; ப. 41) மற்றும் கே.ஆர். நாராயணன் (2008;
ப. 83) குறித்த அறிமுகத்தில் இதனை உணரமுடிகிறது.
தமிழ்ப் பௌத்தம் பேசிய அயோத்திதாசர் (1845-1914) ‘இலக்கியப் பனுவல்கள் யாவற்றையும் பௌத்த
பொருள் படுத்துவதிலும் தலித்மயமாக்குவதிலும் கவனம்’ கொண்டவராக ஸ்டாலின்
மதிப்பிடுகிறார். ஆனால் இவர் சக்கிலியர் மற்றும் பெண்கள் குறித்து கொண்டிருந்த கருத்துகளை
விமர்சிக்கவோ வெளிப்படுத்தவோ இல்லை. இவ்வாறு ஸ்டாலின் அயோத்தி தாசரைச் சுற்றி ஒளிவட்டம்
கட்ட முனைகிறாரோ எனும் ஐயம் எழுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அயோத்தி தாசரைத்
திராவிட இயக்கம் இருட்டடிப்பு செய்துவிட்டதாக வும், அயோத்திதாசர் முன்னோடியற்றவராகவும்
குறிப்பிடுவ தனைப் புரிந்துகொள்ள முடிகிறது. பார்ப்பனியத்தால் ஏமாற்றப்பட்டவர்களாக,
ஒடுக்கப்பட்டவர்களாக அயோத்திதாசர் யாரை (மட்டும்) அடையாளப்படுத்தினார் என்பது முக்கியம்.
“தலித்துகளிடையே தாசர் இரண்டு பிரிவுகளைச் செய்வதைச் சுட்ட வேண்டும். தாழ்ந்த சாதி,
தாழ்த்தப்பட்ட சாதி என ஒரு பாகுபாட்டைச் செய்தார். குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர்
ஆகியோர் தாங்களாகவே தாழ்ந்த சாதிகள் என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றில்
பிறரால் வஞ்சகமாகத் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் எழுதினார் (ராஜ்கௌதமன், 2004; ப. 87).
மேலும் அயோத்திதாசர் பறையர்களைக் குறவர், வில்லியர், தோட்டி, சக்கிலியரோடு சேர்த்து
பஞ்சமர் எனப் பெயரிட்டதைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் ராஜ்கௌதமன் குறிப்பிடுகிறார்.
தமிழ் + பௌத்த அடையாளங்களின் மூலம் அயோத்திதாசர் அருந்ததியர் களையும் பள்ளர்களையும்
நீக்கிவிடுகிறார். அவர் எடுத்துக் கொண்ட பிரதிகள் கூட இந்த விலக்கலுக்கும் தமிழ் பௌத்த
அடையாளத்துக்கும் பொருந்திவரக் கூடியனவே. இப்பின்புலத்தில் தான், நவீன சிந்தனை மரபுகளை
உள்வாங்கி இந்துத்துவ, பார்ப்பனிய அதிகாரத்தைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொண்ட இந்து
சுயக்கியான சங்கம் (1878), தத்துவ விசாரிணி, தத்துவ விவேசினி ஆகிய இதழ்களும் அதில்
பங்காற்றியவர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர் (பார்க்க: வீ. அரசு, கவிதாசரண், ஆக.
2007-பிப். 2008, பக் 43-47).
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லட்சுமி நரசு (1860-1934), க. அயோத்திதாசர், ம.
சிங்காரவேலர் (1860-1946) ஆகியோர் தத்தம் கொள்கை சார்ந்து பௌத்தத்தை முன்னெடுத்தோராக
உள்ளனர். லட்சுமி நரசு தத்துவ விவேசினி குழுவோடு தொடர்புகொண்டிருந்தவர். அயோத்திதாசர்
இவரோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். திராவிட இயக்கம் அயோத்திதாசரைப்
பின்பற்றியதா அல்லது இந்து சுயக்கியான சங்கச் செயல்பாடு களைப் பின்பற்றியதா என்பதற்கு
இந்து சுயக்கியான சங்கம்-லட்சுமி நரசு-அயோத்திதாசர் எனும் உறவின் முழுமையான புரிதல்
நமக்கு அவசியம். இதன் மூலமே அச்சு ஊடக வருகைக்குப் பின்னர் நவீன தன்மைகளை உள்வாங்கி,
தமிழ்ச் சூழலில் சாதிபேதமற்றக் கருத்தாக்கத்தையும் பௌத்த மதத்தையும் யார் முன்னெடுத்தனர்,
எதன்பொருட்டு முன்னெடுத்தனர் என்பது விளங்கும்.
தமிழ்த் தேசிய, தமிழ் பௌத்த அடிப்படையில் மட்டுமல்லா மல் வேறு பல இடங்களிலும்
அருந்ததியர்களை ஸ்டாலின் புறக்கணிக்கிறார். தலித் வரலாற்றைக் கட்டமைக்கும் ஸ்டாலின்
மறந்தும்கூட ஒரு அருந்ததியர் பெயரையோ நாவிதர் (மருத்துவர்) பெயரையோ சுட்டவில்லை.
சைவசமயம் சார்ந்த சகஜானந்த சுவாமிகளைப் பற்றி விரிவாக எழுதுகிறார்; ஆனால் திராவிட
இயக்கக் கருத்தியலோடு செயல்பட்ட எல்.சி. குருசாமியின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை.
தவிரவும் 1921ஆம் ஆண்டு, சென்னை பின்னி ஆலை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒட்டியெழுந்த
கலவரத்தில், தாழ்த்தப்பட்டோ ருக்கு ஆதரவாக நின்ற எல்.சி. குருசாமி, எச்.எம். ஜெகநாதன்
ஆகியோரைக் குறிப்பிடாமல் எம்.சி. ராஜாவை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றார். இங்கு
எல்.சி. குருசாமியின் சில செயல்பாடுகளைக் குறிப்பிடுவது அவசியம்.
- எல்.சி. குருசாமி தந்தை பெரியாரைப் போல, மக்களைத் திரட்டி திருவாங்கூர் ஆலய
நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர்.
- பத்து ஆண்டுகள் (1920-1930) சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.
- 1927ஆம் ஆண்டு சைமன் குழுவில் தாழ்த்தப்பட்ட மக்களுக் கான வாக்குரிமை பற்றிய தன்
அறிக்கையை சமர்ப்பித்தவர்.
- தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதியாக லண்டன் சட்டமேதை மாநாட்டில் கலந்து கொண்டவர்.
- சென்னை அருந்ததியர் சங்கக் கிளைகளுள்ள இடங்களில் எல்லாம் பாடசாலைகள் அமைத்தவர்.
- 1920களிலேயே சக்கிலியர்களுக்கான (சாக்கியா உ சக்கிலியர்) பௌத்த மூலத்தை
அடையாளப்படுத்தியவர். (‘அருந்ததியர் இயக்க வரலாறு’ நூலில் பரவிக்கிடந்த செய்திகள்
தொகுத்துத் தரப்பட்டுள்ளன.)
இன்றும் புத்தமித்திரன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் சக்கிலி யர்கள் பூர்வ பௌத்தர்களே என்பதற்கான
தர்க்க பூர்வமான விளக்கங்களை முன்வைக்கின்றனர். ஆனால் ஸ்டாலின் இவை அனைத்தையும்
ஒதுக்கிவிட்டே தலித் வரலாற்றைக் கட்டமைக் கிறார். இவர் தலித், ஆதிதிராவிடர்,
ஒடுக்கப்பட்டோர் என யாரை (மட்டும்) அடையாளப்படுத்துகிறார் என்பது மிகவும் சிக்கல் நிறைந்தது.
டி.பி. சின்னசாமி (1904-1981) எனும் தலித் ஆளுமையின் செயல்பாடுகளைப் பற்றி
குறிப்பிடும்போது ‘குருமன்ஸ் என்ற மலைச்சாதியினர் பெயரால் குரும்பர் என்னும் சாதி
இந்துக்கள்’ சலுகைகள் பெற்று வந்ததற்கு தடையாணை பெற்றார் என்பதை முக்கியப்படுத்துகிறார்.
- ‘குருமன்ஸ்’ எனும் பெயரில் பழங்குடி இனம் எதுவும் இல்லை. குருபா, குருபர்,
குரும்பர் எனப் பலவாறு உச்சரிக்கப்படும் பெயர்களின் பொதுவான ஆங்கிலச் சொல் லாகவே
‘குருமன்ஸ்’ என்பதை ஆங்கிலேயர் பயன்படுத்தினர்.
- எட்கர் தர்ஸ்டன் முதல் பக்தவச்சல பாரதி வரைக்குமான மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள்
வடஆற்காடு மற்றும் பிற பகுதியிலுள்ள குரும்பர்களை பழங்குடிகளாகவே வரையறை செய்துள்ளனர்.
- குரும்பர்களுக்கு கவுண்டர் பட்டம் இருப்பதனாலேயே அவர்கள் சாதி இந்துக்கள்
ஆகிவிடுவார்களா? அப்படி யானால் பிள்ளை பட்டமுடைய யாதவர்களும் பறையர் களும்
வேளாளர்களா? தமிழ்ச் சமூகத்தில் பட்டம் என்பதும் சாதி என்பதும் வெவ்வேறானவை. ஒரு
சாதிக்கு பல பட்டங்களும், ஒரே பட்டம் பல சாதிகளுக்கும் தமிழ்நாட்டில் இன்றும் வழங்கப்படுகிறது.
- இன்று குரும்பர்கள் வசிக்கும் பஞ்சாயத்து பகுதிகள் சில (வேறு பழங்குடியினர் இல்லாத
போதும்) பழங்குடி யினருக்கான தனித்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. குரும்பர்களுக்கு
எதிராக டி.பி. சின்னசாமி பெற்ற தடையாணையால் எவரும் பழங்குடிச் சான்றிதழ் பெற்று
போட்டியிடுவது கூட சிரமமாக உள்ளது.
இவ்வாறு தலித்துகளுக்குள்ளேயே ஒரு பிரிவினர் பாதிக்கப் படும் வகையில் செயல்பட்ட தலித்
ஆளுமைகள் குறித்து எவ்வித விமர்சனமுமின்றி ஸ்டாலின் ராஜாங்கம் தலித் வரலாற்றைக்
கட்டமைப்பது ஏன் எனும் கேள்வி எழுகிறது.
தலித்துகள் தங்களுக்குள்ளான உள்முரண்பாடுகளை அறிவார்ந்த தளத்திலும் அரசியல் தளத்திலும்
விவாதத்துக் குட்படுத்தி, மேல்-கீழ் வித்தியாசங்களைப் புறந்தள்ளி ஒத்திசைவோடு
இயங்கவேண்டியது அவசியம். இல்லாவிடில் பார்ப்பனர் பயன்படுத்திய ‘இந்து’ அடையாளத்தைப் போல,
உயர்சாதி முதலாளிகள் பயன்படுத்திய ‘பார்ப்பனரல்லாதார்’ அடையாளத்தைப் போல ‘தலித்’
அடையாளமும் கேள்விக்குட் படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்படும்.
துணை நூற்பட்டியல்
1. இளங்கோவன், எழில்., அருந்ததியர் இயக்க வரலாறு, கலகம் வெளியீடு, சென்னை, முதல்
பதிப்பு: மே 2008.
2. ராஜ்கௌதமன், க., அயோத்திதாசர் ஆய்வுகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்,
முதல்பதிப்பு: நவம்பர் 2004.
ஸ்டாலின் ராஜாங்கம் நூல்கள்
3. சனநாயகமற்ற சனநாயகம், கவின் நண்பர்கள் வெளியீடு, விருதுநகர், முதல்பதிப்பு : ஜனவரி
2007.
4. ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது, தென்திசை பதிப்பகம், சென்னை, முதல்
பதிப்பு : ஜனவரி 2007.
5. தீண்டப்படாத நூல்கள், ஆழிப் பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு : டிசம்பர் 2007.
6. தீரா தியாகம் : வஞ்சிநகரம் கந்தன், வணங்காமுடி பதிப்பகம், மதுரை, முதல் பதிப்பு :
மே 2008.
7. வரலாற்றை மொழிதல், ஒரு பைசாத் தமிழன் வெளியீடு, திருவண்ணாமலை, முதல் பதிப்பு :
ஆகஸ்ட் 2008.
8. கவிதாசரண் இதழ், ஆக. 2007-பிப். 2008.
- ஜ.சிவக்குமார்
(சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 7:05:31 AM5/30/15
to brail...@googlegroups.com
இன்றைய தமிழ் உரைநடை வாசிப்பிற்கான நூல்
8
விவரங்கள்
எழுத்தாளர்: பாவல் ஹான்ஸ்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: ஆகஸ்ட்09
C வெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009
பா.ரா. சுப்பரமணியன் (தொகு.) இன்றைய தமிழ் உரைநடை வாசிப்பு நூல் குறிப்புகள்,
மொழிபெயர்ப்பு, சொல்லடைவுகளுடன். சென்னை: மொழி, 2008. பக். xii+383. ரூ. 550.
மதிப்புரை: பாவல் ஹான்ஸ், கீழ்த்திசை அறிவியல் நிறுவனம்: பராக், ஆர்கிவ் ஓரியன்டாலினி,
தொகுதி 76, 2008.
தமிழ் மொழிபெயர்ப்பு: இராம. சுந்தரம், தஞ்சாவூர்.
தமிழில் தேர்ச்சிபெற்றுள்ள (பிற மொழி) மாணவர்களின் மொழித்திறனை மேலும் வளர்க்க உதவும்
மொழிப் பயிற்சி நூல்கள் குறைவாகவே உள்ளன. மொழி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இப்புதிய
பயிற்சி நூல் அந்தக் குறையைப் போக்குகிறது. இந்த நூலின் தொகுப்பாசிரியர் பா.ரா.
சுப்பரமணியன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீண்ட காலம் தமிழ் கற்பித்த
பட்டறிவு உடையவர். அதனால் மாணவர்களின் தேவைகளை நன்கு அறிந்து, அதற்கேற்ப, முன்பே
வெளிவந்துள்ள பயிற்சி நூல்களின் குறைகள் இந்நூலில் நிகழாவண்ணம் நூலைத் தந்துள்ளார். தமிழ்
இலக்கணக் கட்டமைப்பு குறித்துப் போதிய புலமை பெற்றுள்ள மாணவர்கள் அதனை மேலும்
வளப்படுத்திக்கொள்ளத் துணைபுரியும் நோக்கில் இந்த நூல் அமைந்திருக்கிறது. இன்றைய இலக்கியத்
தமிழை மையப்படுத்தி அமைந்துள்ள போதிலும் பேச்சுத் தமிழ்க் கூறுகளையும் (இடையிடையே)
ஓரளவு கொண்டுள்ளது.
ஏற்கனவே வெளிவந்த வாசிப்பு நூல்களில் கிலேட்டன் (1948), பரமசிவம் லிண்ட்ஹோம் (1980),
சண்முகம் பிள்ளை (1975) ஆகியோரின் நூல்கள் தொடக்கநிலை, இடைநிலை மாணவர்களை மனதில்
கொண்டு பல்வேறு தரத்தில் உருவாக்கப்பட்டவை யாகும். 1905இல் வெளியான போப்பின் பல
படிநிலைகளை உடைய நூல், இன்றைய மாணவர்களுக்குப் பயன்படக் கூடியதாக இல்லை. பயன்மிகு பல
தகவல்களைத் தரும் ஷிஃப்மனின் (1971) நூல் பேச்சுத் தமிழைத்தான் முதன்மைப் படுத்துகிறது.
பல்வேறு நோக்கங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பட்நாயக், அரங்கன், திருமலை (1974)
ஆகியோரின் நூல் மேலோட்டமான நிலையில் அமைந்திருப்ப தால் மாணவர்களின் தேவைகளை நிறைவு
செய்வதாக இல்லை. ஆஷர், - இராதா கிருஷ்ணன் (1971) ஆகிய இருவரும் தயாரித்த நூல்
பயனுள்ளது என்றாலும் அதிலும் சில குறைகள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது, உரைநடைப்
பகுதியில் (tமீஜ்t) காணப்படும் சிக்கலான பகுதிகளை நன்கு விளக்காமல் அதற்கான
மொழிபெயர்ப்பை மட்டுமே அடிக்குறிப்பில் தந்திருப்பது. பல இடங்களில் மொழிபெயர்ப்பும்
விடுபட்டுள்ளது. பேச்சுத் தமிழில் உள்ள பெரும்பாலான பகுதிகள் கவனத்தில்
எடுத்துக்கொள்ளப்படவில்லை. பேச்சுத் தமிழில் பயிற்சி இல்லாத மாணவர்களுக்கு அவற்றைப்
புரிந்துகொள்வதில் சிக்கலையும் உண்டுபண்ணுகின்றன. மேலும் அதில் உரைநடைப் பகுதிகள்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படாததால் ஆசிரியர் உதவியின்றி அவற்றைப் புரிந்துகொள்வது
கடினமாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
‘மொழி’ வெளியிட்டுள்ள இந்த நூல் மேலே கூறப்பட்டுள்ள குறைகளை எல்லாம் நீக்கியுள்ளது.
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் நன்கு அறிமுகமான எழுத்தாளர்களால் எழுதப் பட்டுள்ள
இருபத்து மூன்று உரைநடைப் பகுதிகளை இந்த வாசிப்பு நூல் கொண்டுள்ளது. மாணவர்களின்
தேவைகளைக் கருத்தில்கொண்டு நூலிற்கான பனுவல்கள் தேர்வுசெய்யப் பட்டுக் கற்பதற்கு ஏற்ற
வகையில் படிப்படியாக ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன. ஒரு நாட்டுப்புறக் கதையோடு இந்த நூல்
தொடங்குகிறது. அதை அடுத்து ஒரு சிறுகதையும் தொடர்ந்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய
மற்றொரு நாட்டுப்புறக் கதையும் வருகின்றன. நீண்ட, கடினமான உரைநடைப் பகுதிகள்
அடுத்தடுத்துத் தரப்பட்டுள்ளன. வெவ்வேறு மொழி நடையில் அமைந்துள்ள படைப் பிலக்கியங்கள்
மட்டுமல்லாமல் எட்டுப் பொது உரைநடைகளையும் இந்நூல் கொண்டுள்ளது. ஒரேயரு சிறுகதை
இலங்கைத் தமிழில் உள்ளது. இவற்றின் மூலம் மாணவர்கள் இன்றைய பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப்
பற்றி அறிந்துகொள்ள முடியும். ஒன்றிரண்டு சிறுகதைகளில் இடம் பெற்றுள்ள உரையாடல்களில்
காணப் படும் பேச்சு மொழியைத் தவிரப் பேச்சுமொழியிலேயே அமைந்த பனுவல்கள் இல்லை.
இந்த நூல், உரைநடைப் பகுதிகளில் உள்ள கடினமான பகுதிகளை உரிய இடத்தில் குறிப்புகள்
மூலம் மிகக் கவனமாக விளக்குகிறது. இலக்கணக் கூறுகள், மரபுத்தொடர்கள், பண்பாடு தொடர்பான
சிறப்புச் சொற்கள் ஆகியவையும் விளக்கப் பட்டுள்ளன. பெயர்த்தொடர்களை அதிகமாகக் கொண்டுள்ள
வாக்கியங்கள், எழுவாய் இடம்பெறாத வாக்கியங்கள் போன்ற கடினமான வாக்கியங்களையும் கவனத்தில்
எடுத்து உரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. துணைவினைகள், இரட்டைக் கிளவிகள், சொல்லுருபுகள்
ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. துணைவினைகளின் பொதுப் பொருளை
விளக்குவதோடு நின்றுவிடாமல் அதன் குறிப்புப் பொருளையும், அவை பயன்படுத்தப்படும் மொழிச்
சூழலைக்கொண்டு விளக்கியிருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமிழ் இலக்கணத்தின் இந்தச்
சிறப்புப் பகுதியை மாணவர்கள் புரிந்துகொள்ள இந்த விளக்கங்கள் உதவுகின்றன. தமிழ்மொழி
நுட்பங்களை விளக்குவது இந்த நூலின் மற்றொரு சிறப்பாகும். இது மற்ற நூல்களில் காணப்படாத
ஒன்று. சான்றாக, தொழிற்பெயர்களின் வழக்கு இரண்டினைக் காட்டலாம். (1) அது+ஆக+இரு
(வருவதாக இரு): இது ஒருவரது உள்ளக் கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுகிறது; (2)
அது+ஆவது (அவனாவது வருவதாவது): வினைச்சொல் உணர்த்தும் செயலைக் குறித்து ஒருவரது
ஐயத்தைக் கூறுவது இது.
உரையாடல்களில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான பேச்சு வடிவங்கள் விளக்கப்படுவதோடு,
அவற்றிற்கு நிகரான இலக்கிய வடிவங்களும் தரப்பட்டுள்ளன. பனுவல்களில் இடம்பெற்றிருக்கும்
ஆங்கிலச் சொற்களும் அடிக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அனைத்துப் பனுவல்களும் தக்கவர்
களைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள் ளன. இம்மொழிபெயர்ப்புகள் மூலத்திற்கு
நெருக்கமாக இருப்ப தால் புரியாத பகுதிகளை ஆசிரியர் உதவியின்றிப் புரிந்து கொள்ளக்
கூடியதாகவும் உள்ளன. மாணவர்கள் தங்களது புரிதிறனின் தன்மையை மொழி பெயர்ப்புகள்
வழியாகச் சரிபார்த்துக்கொள்ள முடியும். உரைநடைப் பகுதிகளில் உள்ள சொற்களுக்கான
சொல்லடைவும் (glossary) இடம்பெற்றுள்ளது. சொற்களின் பொருள் அவை இடம்பெற்றிருக்கும்
முறைக்கேற்பத் தரப்பட்டுள்ளன. கதை, கட்டுரை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் நடை பற்றியும்
தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நூலைப் பொருத்தமட்டில் ஒருசில குறைகளே உள்ளன. மாணவர்களுக்கு வழிகாட்டக்கூடிய பிற
வாசிப்பு நூல்கள், இலக்கணங்கள், அகராதிகள் அடங்கிய நோக்கு நூற்பட்டியல் இல்லாதது குறிப்பட
வேண்டிய குறையாக உள்ளது. இரண்டே இரண்டு சொற்கள் மட்டும் உரிய விளக்கம் பெறாமல்
விட்டுப்போயின. இலங்கைத் தமிழ் வேறுபடும் இடங்கள் ஒரு கதையின் அடிக்குறிப்பில்
தெளிவுறுத்தப் பட்டிருப்பினும், அவை சில வழக்குகளை மட்டும் காட்டுவதாக உள்ளன. (கதை
ஒரு பக்க அளவில் இருப்பதால்) போதிய அளவு விளக்கிச் சொல்ல இடம் இல்லாமல், மிகச்
சுருக்கமாக அமைந் துள்ளது. விரிவான ஒரு கதை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.
மொழியுடனும் இலக்கியத்துடனும் நெருக்கத்தை உண்டு பண்ணவும் அவை குறித்த அறிவை
வளர்த்துக்கொள்ளவும் இந்த நூல் பெரிதும் உதவுகிறது. கற்றுத்தரும் ஆசிரியர்களும் இந்த நூலை
மேனிலைத் தமிழ்க் கல்விக்கு (Advanced course) ஒரு துணை நூலாகப்
பயன்படுத்திக்கொள்ளலாம். இலங்கைத் தமிழுக்கான விளக்கத்தோடு சேர்த்துப் படிக்கத்தக்க விதத்தில்
தமிழின் பல்வேறு கிளைமொழிகளில் எழுதப்பட்டுள்ள இன்றைய படைப்புகளைக் கொண்ட ஒரு நூலை
மொழி ஆய்வுக் குழு அடுத்தபடியாக வெளியிடும் என நம்புவோமாக.
References:
1. Asher, R.E. and Radhakrishnan R., A Tamil Prose Reader: selections
from contemporary
Tamil prose with notes and glossary. Cambridge University Press,
Cambridge, 1971.
2. Clayton, A.C., Graded Tamil Reader. Madras, 1948.
3. Paramasivam, K. and Lindholm J., A Basic Tamil Reader and Grammar, 3
vols. (and cassettes). Tamil Language Study Association, 1980.
4. Pattanayak, D.P., Rangan, K. and Thirumalai, M.S., Advanced Tamil
Reader, 2 vols.
5. Central Institute of Indian Languages, Mysore, 1974.
6. Pope, G.U., A Tamil Prose Reader. Asian Educational Services, New
Delhi, 1905.
7. Shanmugam Pillai, M., Tamil Reader for Beginners. Muthu Pathipakam,
Madurai, 1975.
8. Schiffman, Harold, Reader for Advanced Spoken Tamil, 2 vols.
U.S. Dept. of Health,
Education and Welfare, Institute of International Studies, 1971.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 7:10:20 AM5/30/15
to brail...@googlegroups.com
பரஸ்பர பிரதியாக்கம் இரட்டைகள் -
இன்மைகள்
8
விவரங்கள்
எழுத்தாளர்: எஸ்.சண்முகம்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: ஆகஸ்ட்09
C வெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009
நூல் விமர்சனம்: வார்சாவில் ஒரு கடவுள்
“உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் தங்கள் சைன்னியர்களிடம் நாளையிலிருந்து ஆயுதங்களைத்
தொடக்கூடாது இசைக்கச்சேரி நடத்துவதே உங்கள் வேலை என்று சொல்வது எப்படிப்பட்ட ஆச்சரியமான
விஷயம்?’’ என்றாள் அன்னா.
கார்ல் மார்க்ஸில் இப்படி ஒரு கனவு இருக்கிறது என்றான் பியோத்தர்.’’
வ.ஒ.க. ப. 265.
1
இங்கு மேலே குறிப்பிட்டுள்ள அன்னா, பியோத்தரின் உரையாடலில் வெளிப்படும் காரல் மார்க்சின்
மற்றொரு கனவு இசையென தெரிவிக்கும் நாவலிலும் நாவல் வாசிக்கும் சமூகங்கள் பெருகக்
கோரும் பின் நவீனத்துவ கோட்பாட்டிலும் இப்படியான உட்கிடையன்று இருப்பதும் ஒரு பொருத்தப்
பாடு எனலாம். தமிழவன் நன்கு அறியப்பட்ட விமர்சனக் கோட்பாட்டாளர்; அவரது விமர்சனக்
கோட்பாடுகள் பெற்ற வாசிப்பின் தீவிரத்தால் நவீன விமர்சன மரபில் மிகப்பெரிய அறிதல்
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதேபோல் அவரது நான்காவது நாவலாக வெளிவரும் ‘வார்சாவில் ஒரு
கடவுள்’ என்ற நாவலும் ஒரு கோட்பாட்டு நூலாக வாசிக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.
பொதுவாக நாம் ஒரு நாவலை வாசித்து முடித்துவிட்டு அதில் மொழியப்பட்டுள்ள கதையாடலின்
நீட்சியாக கதையின் முழுமையை உள்வாங்கும் மனப்பழக்கம் கொண்டு இயங்கியுள்ளோம். ஆனால், நவீன
புனைகதையென்பது அப்படியரு ஏகத்துவ வாசிப்பை மறுப்பதோடு புனைகதைப் பிரதியின் பல
விளிம்புகளையும் பிரதியுடலைக் கட்டமைக்கும் கூறுகளையும் வாசித்து அதன் ஒவ்வொரு இழையின்
மூலமாக நாவலை பல பன்மைகளின் சேர்க்கையாகவும் காண்பது ஏகத்துவ வாசிப்பிற்கு எதிரான
மாற்றுத் தந்திரம்.
இம்மாற்றுத் தந்திரத்தின் ஒரு பகுதியாகத்தான், இந்நாவல் சந்திரனால் பேட்டிபோல்
அளிக்கப்பட்டு, அது பிரதியாக்கம் செய்யப்பட்டு, அன்னாவால் போலிஷ் பத்திரிகையில்
வருகிறது. மேலும் நாவலின் பல பகுதிகள் ஃபேக்ஸ் செய்திகளாகவும் மின்னஞ்சல் வடிவத்திலும்
சந்திரனால் வாசிக்கப்பட்டு கேட்கிறோம். வார்சா பகுதியை சந்திரனே சொல்லிச் செல்கிறார்.
இதில் மிக முக்கியமான பிரதியாக்க உத்தியாக வெளிப்படுவது சந்திரனும் அஸ்வினியும்
பகிர்ந்து கொள்ளும் ‘கனவு வெளி’ எனலாம். இந்தப் பகிர்வின் சூட்சுமத்தை விளக்குமுகமாக
இவர் பயன்படுத்தும் ஒரு பிரதியியல் தந்திரம்தான் பரஸ்பர பிரதியாக்கம். இந்த இருவரின் ஒரே
கண கனவை விளக்கும் வரிகளாக,
“யாரோ ஒரு எழுத்தாளன் மேற்கோள் தான் நினைவுக்கு வந்தது. பரிச்சயமில்லாத அவரது மேற்கோள்
எனக்கு மிகவும் பிடித்துப் போனது. தண்ணீருக்குள் போன தண்ணீர் போல எனது கனவு மங்கவும்
உருகவும் ஆரம்பித்தது’’ (ப. 228) “தண்ணீருக்குள் தண்ணீர் செல்வது கனவு என்பதால்... (ப. 229)
இந்த யாரோ ஒரு எழுத்தாளன் போர்ஹெஸ். இவரது The Library of Babel என்ற கதையில் உள்ள
நூலகம் பற்றிய கதையாடல் இந்நாவலில் பக்கம் 228இல் “கனவில் ஒரு பெரிய நூலகம் வந்தது’’
என்ற பகுதியில் பரஸ்பர பிரதியாக்கம் பெறுகிறது.
இவ்வாறு இந்நாவலில் பயின்றுவரும் பல்வேறு நுட்பமான கூறுகளோடு பரஸ்பர பிரதியாக்கம்
இயைந்துள்ளன. சந்திரனின் வம்சம் இடம்பெயர்ந்து வந்தது பர்மாவில் வான்சூயி என்யு மிலானயிர்
என்ற கிராமத்தைச் சேர்ந்தவள். அவளை பாலியல் பலாத்காரம் செய்யவரும் பிரிட்டிஷ் கர்னல்
ஜான்சென் வைட் ஹெட்டின் ஆண்குறியை கடித்து அகற்றும் கீழறுப்புச் செயலைப் பற்றி வரும்
குறிப்பில் பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்புக் குழுவுடன் வான் சூயிக்கு இருந்த
தொடர்பினால்தான், இத்தூண்டுதல் பெற்றதாக கூறும் பகுதியில்,
“அந்த பிரிட்டிஷ்காரனை ஆண்குறியற்றவனாக ஆக்கும்படி தூண்டியவர்கள் என்று எங்கோ நான்
படித்திருக்கிறேன். அவன் ஆண்குறி நீக்கப்பட்டது போல் ஒரு வெள்ளைக்காரனைக் காதலித்ததற்காக
வீட்டிலுள்ளவர்களால் கைவெட்டப்பட்ட ஒரு இளம் இந்தியப் பெண் பற்றிய கதை ஒன்றை ருட்யாட்
கிப்ளிங் எழுதியிருக்கிறார்’’ (ப. 53) என்று வருகிறது. இது இந்நாவலில் பெருமளவு
வியாபித்திருக்கும் அங்கஹீனம் எனப்படும் ‘உறுப்பின்மை’யை ஒரு பிரதியாக்க உத்தியாக
புரிந்துகொள்ள உதவுகிறது. இதுவும் ஒருவகையான ‘Absence of the Prefevee’ என்று
கூறப்படும் கருதுகோளோடு ஒப்புமையுடையதாகிறது. இந்த ‘உறுப்பின்மை’ பற்றி கட்டுரையில்
வரும் பக்கங்களில் விரிவாக வாசிக்கலாம்.
இந்நாவலின் கட்டமைப்பிற்குப் பெரிதும் உதவும் இரட்டைகள் என்பவை உடலியல் ரீதியான இரட்டைப்
பிறவியென்னும் அல்லாத பிரதியியல் சாத்தியம்தான் இலக்கிய இரட்டை. இவை நாவல்
பிரதியெங்கும் விரவியிருக்கின்றன. அவை நேரடியாகவும் சற்று பூடகமாகவும் சில
இன்மைகளிலும் சஞ்சரிக்கின்றன. இந்த இரட்டைத் தன்மையை இனங்காணும் விதமாக நாவலில் வரும்
மற்றொரு பரஸ்பர பிரதிதான் R.L.Stevensonனின் ‘ஜெக்கில் மற்றும் ஹைட்’.
“இலக்கியங்களில் இரட்டைகள்; ஒரு விதத்தில் எழுத்தாளர் ஸ்டிவன்சனின் ஜெக்கில் மற்றும் ஹைட்
பாத்திரங்கள் வேறுபாடுகள் அழிக்கப்பட்ட, ஜெக்கில் மற்றும் ஹைட் பாத்திரம் இருக்கக்கூடாது
என்ற விதி ஏதும் இருக்கத் தேவையில்லை தானே! (ப. 196).
ஆக ஜெக்கில் ஹைட் பாத்திரங்களின் வேறுபாடுகள் அழிக்கப்பட்ட பாத்திரங்கள் வார்சா நாவலில்
உலவுகின்றன. இதன் வெளிப்பாடாகத்தான் தமிழவனின் முன்னுரையில் “நாவல்களையோ நாவலையோ
பார்த்து எழுதுவதுதான் ஒரு புதிய நாவல் என்பது என் பழைய கோட்பாடு’’ என்கிறார்.
இதுதான் இந்நாவலின் பிரதியியல் சூத்திரம். இன்னும் சில இடங்களில் வரும் பரஸ்பர பிரதிக்
குறிப்புகளைக் கீழே தருகிறேன். லியோன் ஆவியாக தோன்றுவதற்கு சற்று முன்பு சந்திரன்
Alain Danelionவின் while the god play 91 பக்கம் வாசிக்கும் தருணத்தில்தான் லியோன்
தோன்றி மஞ்சள் நிறமாக பேசுகிறான். ராஜேஷ் அன்பழகன் என்ற இரட்டையின் மறைதலில் கண்ணாடியை
உடைத்து பறந்து போகும் இடத்தில் கிடக்கும் இறக்கைகள் மார்குவஸின் Innocent
Errendinaவில் வரும் இறக்கை சம்பந்தமான கதையாடலை நினைவுப்படுத்துகின்றன. பிறிதொரு
இடத்தில் மனநோய் ஆலோசகரிடத்தில் பேசும் பியோத்தர் சொல்லும் ஆல்பர் காம்யூவின் ‘அந்நியன்’,
டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ ஆகியவை இந்நாவலின் பிரதியில் பருண்மையாக
வெளிப்பட்டிருக்கும் பரஸ்பர பிரதியாக்க சாத்தியப் பாடுகளின் திறவுகோல்கள்.
2
நவீன நாவல் எழுத்தென்பது ‘தன்’ என்பதற்கும் எழுதப்படும் பிரதிக்கும் இடையே ஏற்படும்
ஒருவகை erasune என்று கொள்ளலாம். ‘தன்’ என்ற நிலை மொழியாக்கப்படும்போது இடைப்பட்ட
மொழிவெளியில் சுய அழிப்பிற்கும் மறு ஒப்பனைக்கும் ஆட்பட விழைகிறது. இதன்
மாற்றுதிசையின் மறுவெளிப்பாடே ‘இரட்டை’ என்கிற மொழிப் பிறப்பு. அத்தகைய இரட்டைகள்
ஒருவகையில் காண விழைந்தால் மொழி உயிரிகள். இத்தகைய இரட்டைகள் நாவல் இலக்கியத்
துவக்ககாலப் பிரதிகளான லாரன் ஸ்டெர்னின் Thiltrem shardy ரபலாவின் Garantwa and
Pantagruel, செர்வாண்டாஸின் Don Quixote, லேடி முராசாகியின் The tale of Gens
ஆகியவைகளில் ஏற்படும் ‘தன்’ என்பதின் எரேசரில் எழுதப்பட்ட புத்தகத்தின் எதிர் புத்தகம்
இரட்டையின் உள் வடிவமாக நாவல் பிரதிக்குள்ளேயே பருண்மைப்பட்டிருக்கிறது. இவ்வாறு
நாவலாக்க கொடி மரபுடன் பின்னிப் பிணைந்துள்ள இரட்டைகள் வெளிப்படை யாகவும் புலப்படா
தன்மையுடனும் இன்மையுடனும் பயின்றுள்ளன.
வார்சா நாவலிலுள்ள இரட்டைகள் குறித்து விவாதிக்கலாம். நேரடியான இரட்டைகளாகத் தென்படும்
அன்பழகன் ராஜேஷ் என்ற இரட்டைப் பற்றி, நாவல் பகுதியானது அஸ்வினி பிரதாப்பின்
என்கௌன்டருக்காக தன் தந்தையை சுட்டுப் பழிவாங்கிய பின்பு சிறைத் தண்டனை
அநுபவித்துவிட்டு, ஆதிவாசிகளின் நிலமீட்பு போராட்டத்தில் உயிர்நீத்த தன் காதலன் பிரதாப்
செயலாற்றிய மலை பிரதேசத்திற்கு செல்கிறாள். அங்கு ராஜேஷ் என்ற இளைஞனுடன் அவள் பழக
நேரிடுகிறது. அவன் ஒரு மரக்கட்டுமான அரண்மனையைக் காண்பிக்கிறான். அங்கு ஒரு
குறிப்பிட்ட எல்லையைக் கடக்க அஸ்வினி எத்தனிக்கும்போது ஆதிவாசிகளின் பறையலியும் குலவைச்
சத்தமும் கேட்க, ராஜேஷ் சொல்கிறான்; குறிப்பிட்ட எல்லைக்குள் அந்நியர் பிரவேசித்தால்
ஆதிவாசிகள் நம்மை கொன்று விடுவார்கள் என்று மீண்டும் லாட்ஜிற்கு வந்து அடுத்தநாள் காலை
பார்க்கும்போது அறையின் மேற்புற கண்ணாடியை உடைத்துக் கொண்டு பறந்து விடுகிறான். சில
இறகுகள் மட்டுமே அங்கு காணப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு தினசரியை கண்ணுற்ற
அஸ்வினி அதில், “அன்பழகன் காணாமல் போன செய்தியும், புகைப்படமும் வந்திருந்தன. அந்தப்
புகைப்படம் நான் பின்லே ஹொட்டலில் தங்கியிருந்தபோது சந்தித்த சாட்சாத் ராஜேஷின்
புகைப்படம்’’ (பக். 408-409) விஜயாவின் தற்கொலைக்குக் காரணமான அன்பழகன் இரண்டு ஆண்டுகள்
எம்.பி.யாக இருந்தபின் ஆதிவாசிப் பகுதியில் வாங்கிய தோட்டத்தில் நிலத்தகராறு
நீடித்ததாகவும் அது சம்பந்தமாக அவர் அங்கு சென்றதாகவும் நாவல் கூறுகிறது.
நாவலின் இறுதியில் அமலாவை சந்திக்கும் சந்திரனுக்கு எங்கு தேடியும் வார்சாவின் ஷாப்பிங்
காம்ப்ளெக்ஸில் கிடைக்காத வாஷ்பேசின் அமலாவின் வீட்டில் தென்படுகிறது. அப்போதும் அமலாவுடன்
கனவில் ஏற்படும் உடலுறவின் இன்மை அனுபவம், இனி விஜயாவிடம் பெறவியலாத ஒன்றை அமலாவிடம்
பெற இயலும் வேட்கையின் சரடு எனலாம். ‘உடல் உறுப்பின்மை’ தொடர்ந்து நாவலின் பல இடங்களில்
பல்வேறு விதமான சொல்லாடல் களங்களை அமைத்துத் தருவதைப் பார்க்க முடிகிறது. சந்திரன் தன்
மனைவியின் தற்கொலை சம்பவத்தை அறிந்து ஊருக்கு செல்லும் இடத்தில், எதிர்பாராதவிதமாய்
நேரும் அமலாவின் சந்திப்பில் குறிக்கப்பெறும் “வலதுகாலில் பெருவிரல் இல்லாததைக்
கவனித்தேன்’’ (ப. 211) என்பதிலிருந்து சந்திரன் அமலா இடையே ஒரு பாலியல் வேட்கைக்கான
கதையாடல் கட்டப்படுகிறது. அவளது விரலின்மையை பார்க்கும் சந்திரனுக்கு அமலா, “என் இந்த
விரலில்லாத அங்கஹீனத்தை பார்க்கக்கூடாது நீங்கள்’’ என்றாள். “அப்படி யாராவது பார்க்கும்போது
என்னை யாரோ அம்மணமாக்கிப் பார்ப்பதாகப்படும் எனக்கு’’ (ப. 213)
“ஆனால் சந்திரன் தொடர்ந்து அதை உற்றுப் பார்க்க பார்க்க ஒரு கட்டத்தில் அமலா இயைந்து
சொல்கிறாள். “இனி நீங்கள் என் காலின் விரலில்லா அங்கஹீனத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்
பார்க்கலாம்’’ (ப. 215) எனக் கூறும் அமலாவின் பாலியல் எழுச்சியைக் குறிக்கும் குறியீடாக
செயல்படுவதை அவள் சந்திரனுக்கு மறுபடியும் சொல்லும் போது, “என் விரலில்லாக் கால்களை
நீங்கள் பார்த்ததுபோல் உலகில் யாரும் பார்க்கமுடியாது. அன்று என் அங்கஹீனத்திற்கு ஒரு
பூரணத்துவம் கொடுத்து விட்டீர்கள் என்று நான் இத்தனை ஆண்டுகளாய் மனப் பூர்வமாக நம்பி
வாழ்ந்து வந்தேன். என் துபாய் நண்பனிடம் எத்தனை தடவை, நீங்கள் என் விரலில்லாக் கால்களைப்
பார்த்த விதத்தைப் பற்றிச் சொல்லி சொல்லி அவனைக் காம உணர்வு அடைய வைத்திருக்கிறேன்’’ (ப.
333). காம உணர்வைக் கிளப்ப அமலாவின் விரலின்மையை பருண்மைப்படுத்தலின் மூலம்
பிரதியாக்குகிறது. இதேபோல் நாவலில் வரும் பிற உறுப்பின்மைகளைப் பார்ப்போம். சிவநேசம்
இடது கையில் இரண்டு விரல்கள் மட்டுமே இருத்தல் அந்த விரலின் மாயத்தன்மை பற்றிய இடத்தில்
சிவநேசம்,
“அதோ தெரிகிறதா வானத்தில் வெள்ளையாக, வெள்ளி நிறத்தில் ஒரு சூரியகாந்திப் பூ...
அப்போதுதான் அவரது இடதுகையின் இரண்டு கைவிரல்கள் எனக்கு சுட்டிவிட்டு மின்னல்போல்
மறைந்துவிட்டன என்ற உண்மை புரிந்தது. ஒருவேளை அந்த இரண்டு விரல்களும் உற்பத்தி செய்ததோ
இந்தக் காட்சி’’ (ப. 296)
இதைத் தொடர்ந்து மாக்தா சொல்லும் கனவில் வரும் “என் கனவுகளில் அடிக்கடி லியோனையும்
ஒற்றைப் ஃபெடல் உள்ள சைக்கிள்களையும் பார்க்கிறேன்’’ என்பதும் (ப. 193) ஒரு விநோதமான
இன்மையைக் குறிக்கிறது. தொடர்ந்து பிறரின் உறுப்பின்மையை கவனித்துவரும் சந்திரனுக்கும்
உறுப்பிழுக்கு அனுபவம் நேருகிறது. திடீரென்று கனவு போல தோன்றும் ஒரு காட்சியில்
மரணத்தை குறிப்பீடு செய்யும், “சிவநேசம் ஒரு க்ஷணத்தில் தோன்றிக் கையைத் துண்டித்த
அபூர்வமான காட்சியும் நான் வார்ஸாவுக்கு வந்த அன்று மூர்ச்சை கெட்டு விழுந்ததும்
ஞாபகத்துக்கு வந்தன’’ (ப. 266).
3
சந்திரனின் தாய்க்கு ‘தீ’ பற்றிய அதீத அறிதல் ஆற்றலும் தந்தைக்கு தண்ணீரைக் கண்டறியும்
ஆற்றலும் இருந்ததால் சந்திரன் தன்னை நெருப்பாலும் தண்ணீராலும் ஆன கலவை யென்கிறான்.
எதிரெதிர் பண்புகளைக் கொண்டவன் என்பதில் பரஸ்பர ஒருங்கிணைவு பண்புள்ளவனாக ஒருவகை
Yin-Yang என்ற கீழை தாவோயிய தன்மையுடையனாகவும் நாம் வாசிக்கலாம். அதன் முக்கியப்
பண்புகளான ஆண் பெண் என்ற தனிநிலை கரைந்த ஒரு ரசவாத நிலையை தாவோ மொழிகிறது. ஆண்
பண்பும் பெண் பண்பும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்து பாலுக்கப்பால் கடந்து செல்லும் உயிரி
நிலையென்பதை உரைக்கிறது. இதன் கூறுகள் வார்சா நாவலில் பல இடங்களில் வெவ்வேறு விதமாக
விகசித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. தனக்கு ஒரு வாரிசு உருவாக குகையன்றிற்குள்
அழைத்துச் செல்லும் விஜயா ஒரு பச்சிலைச் சாற்றைத் தந்து, தன் பையிலிருக்கும் இரண்டு
பழங்களில் ஒன்றை அவளும் ஒன்றை சந்திரனும் சாப்பிட ஒரு பாலியல் தலைகீழ் மாற்றம்
நிகழுகிறது. “விஜயாவைத் திரும்பிப் பார்த்தேன். ஒரு அரசனின் கிரீடத்தோடு நின்று
கொண்டிருந்தாள். என்னை அழைத்தாள். திடீரென்று நான் அவளுடைய ஆடைகள் அணிந்து காணப்பட்டேன்.
அவள் ஆணாகவும் நான் பெண்ணாகவும் மாறிப் போயிருந்தோம் (ப. 143). ஆண்பாலியல் தன்மை
கொண்டவளாய் சந்திரனை புணர்ந்தாள். அப்போது உடலியலே ஒருவித உருமாற்ற மடைந்ததாக
கதையாடல் புனைகிறது.
பின்பு ஒரு கட்டத்தில் “அவள் அணிந்திருந்த அரச கிரீடம் ஒருமூலையில் சற்று நேரத்தில் போய்
விழுந்தது. நான் அணிந்திருந்த அரசியின் கிரீடம் இன்னொரு மூலையில் விழுந்தது’’ என
முடிகின்றது. ஒரு குறிப்பிட்ட காலப் புள்ளியில் பிரதிக்குள் கதையாடல் மொழி இருவரையும்
சுய பாலியல் எதிரிடையாக மாற்றும் மாயம் நிகழ்கிறது. இதை ஒருவகையான பாலின
உருமாற்றம் எனலாம். மேலும் பல நூதனமான பாலின குறிப்பீடுகள் இப்பிரதியில்
விரவியிருக்கின்றன. கதையாடலின் பல இடங்களில் சந்திரன் பெண்களை சித்திரிக்கும்போது
அதிகமாக ‘பிருஷ்டபாகம்’ என்ற குறிப்பிட்ட அங்கத்தை அதிகபட்சமாக மீண்டும் மீண்டும் அழுத்தம்
பெறும் படியாக கையாளுகிறான். எங்கிருந்து இந்த ‘பாலியல் அங்க குறி’ கிளைக்கிறது
என்றால் சந்திரனின் பதிமூன்றாம் வயதில் தன் உறவினர் வீட்டிற்கு செல்லும் இடத்தில் சந்திக்கும்
ஒரு விநோதமான பெண் போன்றவளுடன் ஏற்படும் பரிமாற்றம் அவள் இவனுக்கு ஊற்றுகளைப் பற்றி
நிறைய சொல்கிறான். அதில் ஒருநாள் திடீரென்று ‘சிவப்பு நிற ஊற்று’ ஒன்றைக் காண்பிப்பதாக
கூறுகிறாள்.
இதற்கிடையில் ஒருநாள் அவளுடன் நடந்து கொண்டே பேசும் சந்திரன் திடீரென ஒரு சூறாவளிக்
காற்றை எதிர்கொள்கிறான். அப்போது முன்னே நடந்து போகும் அப்பெண்ணின் ஆடை பறந்து மேல்
கிளம்ப, “அவளது வாளிப்பான பிருஷ்டபாகம் எந்த உள்ளாடைகளும் இல்லாமல் வெறுமனே இருந்ததை
அன்று முழுதும் மறக்க முடியவில்லை.’’ (ப. 322) சற்று சுதாரித்த பெண் “இவனால் தான்
இந்தச் சூறாவளி’’ (ப. 323) என்கிறாள். இவனது பெண் அங்கத்தை காணும் வேட்கை தான்
சூறாவளியென எண்ணத் தோன்றுகிறது. பிறகொரு நாள் சிவப்பு ஊற்றை காட்டும் அப்பெண், “நானும்
அந்த உயரமான பெண்ணும் குனிந்து பார்த்த அந்த நேரத்தில், சூரியன் நடுவானில் வந்திருந்ததால்
அதிக ஆழமில்லாத அந்தக் கிணறு போன்ற ஒடுகலான பள்ளத்தில் சூரிய ஒலியில் சிவப்பு நீர்
கட்டி நிற்பது தெரிந்தது. அது மாயமான ஒரு காட்சியாக எனக்கு பட்டது’’
ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கும் சந்திரனின் “அரைக்கால் சட்டையின் வழி அவளது கையைப்
போட்டு நீண்ட விரல்களால் என் உறுப்பை உடும்புப்பிடிபோல் பிடித்துக் கொண்டு இருந்தாள்’’
(பக். 327-28). இவ்வாறு அப்பெண்ணின் காம வேட்கையும் பதிமூன்று வயது சந்திரனுள் பாலியல்
உணர்வும் விழிப்பு நிகழுகிறது. இதனால்தான் என்னவோ சந்திரன் மூன்று முறை ‘அக்கா’ என்று
அழைத்ததை அவள் கோபத்துடன் மறுத்தாள்.
பியோத்தரின் பாட்டி காசா போஸ்னான் என்ற போலந்தின் முக்கிய நகரத்தில் வாழ்ந்துவந்தாள். அந்த
இடம் நாஜி ஜெர்மானியர்களின் கைவசமிருந்தது. ஜெர்மானிய அதிகாரி கொன்ராட் குருண்டஸிடம்
மொழிபெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்தார். “அவள் கம்யூனிஸ்டுகளைக் கூட உடலை விற்று
வாழ்பவர்களே நாசிசத்தின் எதிரியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கையுடையவள்’’
(ப. 346). காசாவின் தோழி ஒருத்தி பாலியல் தொழில் செய்து வருபவள் அவள் ஒரு
விசித்திரமான மனிதனுடன் உடலுறவு கொள்ள நேரிடுகிறது. அதில் அவள் பாலியலுக்கும்
நாசிசத்திற்கும் உள்ள ஒரு நுண்ணிய அரூப இழைத்தொடரை அறிகிறாள். அவளது கதையாடல், “அந்த
ஆணும் பெண்ணும் அல்லாதவள் போல் தோன்றிய மனிதன்.... அவன் முதன் முதலாக என்னைத் தொட்டதும்
‘ஏதோ’ ஒரு ஆடோ, மாடோ உடம்பில் உரசிக் கொண்டு போவதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது.
போகப்போக அந்த மனிதன் மாட்டின் உடலையும் மனிதனின் மனத்தையும் கொண்டவன் என்ற எண்ணம்
தோன்றியதை.... அவன் வழக்கமான பாலியல் முறைகளைவிட வழக்கமல்லாத முறைகளையே அதிகம்
விரும்பியவன் போல முதலில் நடந்து கொணடான். அது புதிதல்ல. அதிகமும் ஜெர்மன்
ஆக்கிரமிப்பிற்குப் பிறகு என்னிடம் வருபவர்களின் குணம் மாறியிருப்பதைக் கவனித்தேன்.’’
“ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதொன்பது செப்டம்பருக்கு முந்திய ஐரோப்பியர்கள் வேறு,
அதற்கு பிந்திய ஐரோப்பியர்கள் வேறு. சில ஆண்கள் அது அதற்கான உறுப்புகளைத் திடீரென்று
மறந்து ஒவ்வொரு உறுப்பையும் வேறுவிதமாக பயன்படுத்துவதில் இன்பம் காண்பார்கள்’’ (ப.
355). இவ்வாறு பாலியல் நாசிசத்தின் அலகுகளோடு ஒப்புமைப்படுத்திக் காட்டும் கதையாடலில்
வரும் அந்த பாலியல் தொழிலாளி ஜெர்மானிய ஸோல்ஜர்களால் கைகுண்டு (கிரனெட்) ஒன்று வெடிக்க
வைத்து உடலின் கீழ்பகுதி சிதறி சாகிறாள்.
4
கும்மாங்குத்துவான இளைஞன் சிவநேசம் நாவல் பிரதியின் மிக முக்கியமான கதையாடல்களைக்
கொண்டு வருகிறார். கள்ளத்தனமாக நாடுவிட்டு நாடு போகும் சிவநேசம் பிழைப்பைத் தேடி
செல்கிறார். அவர் பல நாட்டு எல்லைகளைக் கடந்து போகும் பயணம் மிகவும்
குறிப்பிடத்தகுந்தது. அவர் அந்த மரணத்தின் எல்லையை நாட்டின் எல்லையோடு கடக்கும் அபூர்வ
பயணமாக நாவல் சொல்லிச் செல்கிறது. மரணம் அவருள் ஏற்படுத்தும், “பயம் வயிற்றில் தான்
பரவும். சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்தாள். மணி இந்தியாவில் இப்போது ஒன்பது.
இங்கு இன்னொன்று என்பது போன்ற விவரங்களை மாமா சொல்லி அனுப்பியிருந்தான். திடீரென்று ஒரு
உணர்ச்சி அடி வயிற்றைப் பீடித்தது. பின்பு அது மெதுவாகப் பரவ ஆரம்பித்தது’’.
‘அப்போதுதான் முதன் முதலில் கடவுளின் குரலைக் கேட்டான். கும்மாங்குத்து.’
இவ்வாறு கும்மாங்குத்து இன்மையான கடவுள் பருண்மைப்படுவதை ஏறக்குறைய ஆறு தடவை கடவுள்
அவனிடம் பேசுகிறார். குறிப்பாக இப்பயணத்தின் போது பனி ஆற்றில் உள்வாங்கி சாகும் சக
பயணி பின் மின்சாரம் பாய்ச்சி லாரியின் பெட்டியில் கருகிச் சாகும் மற்றொரு சக பயணியின்
மரணமும் அந்த பெட்டிக்குள் பூட்டப்பட்டு நாட்டின் எல்லைத் தாண்டும் பயணம் ‘சவப்பெட்டி’ போன்ற
ஒரு குறியீட்டை மனக்கண் முன்பு நிறுத்துகிறது. இதிலிருந்து ஜெர்மெனியை அடையும்
கும்மாங்குத்து. நீதிமன்றத்தில் நீதிபதியிடம் கடவுள் என்னுடன் பேசுகிறார் என்று தன்னை நம்ப
வேண்டும் என்றும் கூறி கிறித்துவ மத பூஜாரிகள் போன்ற தொழிலைச் செய்யும் குலத்தில்
பிறந்தவன் என்று தன்னை அறிவிக்க, நீதிபதி நீ பார்ப்பனனா? என்று கேட்க ‘ஆம்’ என்று
மொழிபெயர்ப்பாளர் சொல்லச் சொல்கிறார். ‘ஆம்’ என்ற கும்மாங்குத்துவுக்கு நீதிபதி அவனது
குலக்குறியான பூணூலை பார்க்க ஆசைப்பட கும்மாங்குத்து பூணூலைக் காட்டுகிறான்.
நீதிபதியிடம் இந்தப் பூணூலால் சலுகை ஏதும் கிடைக்குமென்ற தன் எண்ணம் பொய்த்துப் போகிறது.
இது இந்தியா என்ற இட பரிமாணத்தை தகர்க்கும் முகமாக காட்சி பொருள்போல் பூணூலைப் பார்த்த
நீதிபதி தன் வழக்கமான தீர்ப்பைத் தருகிறார். குலக்குறி அ-அதிகாரவயப்படுகிறது.
கும்மாங்குத்துவுக்கு க்ஷயரோக வியாதிக்காக ஜெர்மனி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
அங்கு அவர் சந்திக்கும் ஒரு இரவு நேர நர்ஸின் தாயன்பு போன்ற அரவணைப்பைப் பெறுகிறான்.
அந்த நர்ஸ் ஆஷ்விஸின் காஸ் அறையில் யூதர்களைக் கொன்றபோது அங்கு நர்ஸாக வேலைபார்த்தவர்
என்பது அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருப்பினும் கும்மாங்குத்து மனதில், “கொலையும்,
உயிரைப் பாதுகாப்பதும் ஒரே மனித மூலத்திலிருந்து எப்படி தோன்ற முடியும்?’’ (ப. 298)
என்ற தன் ஐயத்தை போக்கும் விதமான அனுபவம் அவனுக்கு ஏற்படுகிறது. “அந்த இரவுகளில்
பிச்சைக்காரனைப் போல் ஜெயில் ஆஸ்பத்திரியில் கிடந்த என் தலையைக் கோதிவிட்டுப் போன கைகளை
எனக்குத் தெரியும். எந்தக் குற்ற உணர்வும் இல்லாத கைகள் அவை.
இந்த உணர்வு நிலையோடு ஒப்புமை கொண்ட மற்றொரு பகுதி, சந்திரனின் தாய் குழந்தையாக
பர்மாவில் காப்பாற்றும் தென்னிந்தியரின் ‘அன்பு’. “சரித்திரம், மரபணு, வம்சம், ரத்தம்...
இப்படி இப்படி... சொல்லி இரண்டாம் உலக யுத்தத்திற்கு இடப்பட்ட அத்தனை தத்துவ ரீதியான
அடிப்படைகளையும் தென்னிந்தியாவில் ஒரு மனிதர், மனித அன்பால் உந்தப்பட்டு ஒரு குழந்தை
பரிதாபமாக சாகக் கூடாது என்ற ஒரே எண்ணத்தில் உதறி எறிந்திருக்கிறார்’’. இவ்வாறு இந்த
இருவேறு இனத்தவரின் ‘மனித அன்பு’தான் இந்நாவலின் வெளியைக் கட்டமைக்கிறது. இதில் வரும்
கும்மாங்குத்து என்கிற சிவநேசம் ஐரோப்பியர்களை எந்த முன் நிபந்தனையுமின்றி தன் சீடர்களாக
ஏற்றுக் கொள்கிறார். இதில் ஒரு கீழைத்தேய மானுட விழுமியம் அடிநாதமாக இழையோடுவதை
இப்பிரதியில் காண முடியும். இதைத்தான் நாவலின் 419ஆம் பக்கத்தில் “அதுதான் மனித உறவு
பற்றிய ஒரு புதிய தரிசனம்” என்கிறது. இந்தக் கருத்தை மாற்றுவடிவில் மனநல
மருத்துவரிடம் தன் கனவை விவரிக்கும் பியோத்தர், “என் சிநேகிதி யுத்த ஆயுதங்களுக்குப்
பதிலாக ஒவ்வொரு நாடும் பூக்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தால் எவ்வளவு அழகிய இடமாக
உலகம் மாறும்’’ என்பதும் ஐரோப்பியர்களின் நாசிச சொல்லாடலிலிருந்து விடுபட எத்தனிக்கும்
கீழை பின்நவீனத்துவ கதையாடலாக கொள்ளலாமா? சிவநேசத்தை தன் குருவாக வரித்துக் கொள்கிறார்
லியோனின் தங்கை லிபியா. இந்த நிகழ்வின் மூலம் லியோன் என்னவாக ஆகவேண்டும் என்று
நினைத்தாரோ அதுவாகவே காட்சியளிக்கிறார் சிவநேசம்.
லியோனின் கதையாடல் இந்நாவலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. தான் சார்ந்த கத்தோலிக்க மத
குருக்களை தயாரிக்கும் குருமடத்தில் மதகுரு பயிற்சிக்கு செல்பவன் அங்கு ஒரு புதிய
ஆதியாகமத்தை, அதாவது வழக்கில் உள்ள ஆதியாகமத்திற்கு எதிர் ஆதியாகமம் ஒன்றை எழுத
முற்படுகிறான் அதைப் பற்றி லிடியா, “அண்ணன் ஆதியாகம்போல் இன்னொரு சாத்தானின் ஆதியாகமம்
ஒன்றை எழுத முயற்சி எடுத்தது கண்டுபிடிக்கப் பட்டது’’ (ப. 94) “எப்படியோ கடவுளைவிட
சாத்தான்தான் மிகுந்த சக்தியும், சிருஷ்டிக் குணமும் கொண்டவன் என்று வாதிட ஒரு கூட்டம்
போலிஷ் இளைஞர்களை என் அண்ணன் உருவாக்கிவிட்டான்’’ (ப. 94) என்று கூறும் லிடியா இத்தகைய
சொல்லாடலைக் கட்டுவதற்கு அவனுக்கு பின்புலமாக செயல்பட தூண்டிய மூலப்பிரதியாக “அண்ணன்
நீட்சேயின் சிந்தனை களையும் ஸ்டாலினிச ஆட்சியின் அரசியல் சமூகக் கூறுகளையும்
குருமடங்களில் காணப்படும் பாலியல் அடக்குமுறைகளையும் இணைத்து உருவாக்கிய உருவகம்தான்
சாத்தான் வழிபாடு’’.
இதிலிருந்து துவங்கும் லியோனின் கீழை ஞானத் தேட்டம் அவனை தந்திர யோகத்தில் ஈடுபாடு
கொண்டவனாக மாற்றுகிறது. அடக்கப்பட்ட ஐரோப்பிய பாலியலை விடுவிக்க, “மீண்டும் அதை
வெளிப்படுத்த, இயல்பாக மாற்ற, இந்தத் தந்திரயோகம் கூறும் ஸ்கலிதம் வெளிப்படாத செக்ஸ் செயல்
ஒரு தீர்வாக முடியுமா?’’ என யோசித்திருக்கிறான். இந்திய தத்துவத்தைப் பற்றிய நிறைய
புத்தகங்கள், ஆவணங்கள், தாந்தரீக தகடுகள் ஆகியவைகளை சேகரித்து வைத்துள்ளான். அதில்
‘சூலம்’ ஒன்று உள்ளது. தன் புறச்சமய தேடலின் குறிப்பீடாக அதைக் கொண்டிருந்தான் என
வாசிக்கலாம். ஒரு கார்விபத்தில் இறந்துபோகிறான் லியோன். லியோன் ஆக நினைத்தது நீட்சேயின்
மீ மனிதனா? என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. இதன் மற்றொரு வடிவமாக சிவநேசத்தை
லிடியா அங்கீகரிக்கிறாள். “அந்த சூப்பர் மானின் பெயர் சிவநேசம்’’ (ப.421) லியோனுக்கு
நிழல் கிடையாது அதற்கு அர்த்தம் சொல்லும் லிடியாவின் தோழி அவனுக்கு பின் தொடர சீடர்கள்
இல்லை என்பதாக கூறுவதை இங்கு இணைத்து பார்க்கலாம்.
5
பல விநோதமான கூறுகளில் ஒன்று ஒரு மாணவி தன் பேராசிரியருக்கு கொம்புகள் இருக்கிறதா?
என்று கேட்க திடுக்கிட்டு போகிறார். தனக்கு கொம்புகள் உள்ளது என்ற நினைவுடன் வாழ்ந்து
வருகிறார். இதனை எதார்த்தத்திற் கும் தொன்மத்திற்கும் இடையே வேறுபாடற்ற பின் நவீனத்துவ
சூழலைப்பற்றி சொல்லும்போது நாவலை ஆதிவாசியின் மனநினைவின் நீட்சியாக இக்கொம்புகளை
குறிவயப்படுத்து கிறது. வார்சாவை விட்டு கிளம்புமுன் சந்திரனிடம் வீடு பேசத்
துவங்குகிறது. அங்கு தன் மனைவி விஜயாவின் தற்கொலை மரணத்தின் போது கடிகாரம் காணாமல்
போகிறது. அதை அவளது அம்மா குறிப்பிடுகிறார். அந்த கடிகாரம் மீண்டும் வார்சாவின் வீட்டில்
கிடைக்கிறது. அப்போது சந்திரனின் மனவோட்டத்தில் “ஒருவேளை என் வீட்டில் இருந்த பழைய
கடிகாரம் காணாமல் போனதும் என் மனைவி விஜயா தன்னை அழித்துக் கொண்டதும் ஏதோ ஒன்று
இன்னொன்றோடு பின்னிப் பிணைந்தது என்ற எண்ணம் என்மனதில் தோன்றியது’’ (ப. 393). என்று
நினைக்க “அப்போது பார்த்து வீடு பேசியது’’ அதன் தொடர்ச்சியாக, “வீட்டின் உள்ளிருந்து ஒரு
சதுரமான பொருள் வெளிப்பட்டது. அது வேறு ஒன்றுமல்ல. என்னுடைய வீட்டில் தொங்கிய அதே
பழைய கடிகாரம். மெதுவாக ஏதோ சொல்லியது. எனக்கு கேட்கவில்லை’’ (ப. 393). “வயதாகிப்
போனது, கோழிக் குஞ்சு’’ என்றது கடிகாரம் (ப. 393)
சிறுவயதில் அம்மணமாக திரிந்த சிறுவன் சந்திரனை கிராமத்தார் அழைத்த பெயர். இவ்வாறு தன்
பர்மிய நினைவுகளை கடிகாரம் வீட்டுடன் பகிர்ந்து கொள்கிறது. வீட்டிற்கும் கடிகாரத்திற்கும்
இடையே நடக்கும் உரையாடலின் இடையே மாட்டிக் கொள்கிறான். இதை அவன், “நான் காலத்துக்கும்
இடத்துக்கும் இடையில் அகப்பட்டவன் போல் வீட்டிற்கும் பழைய கடிகாரத்திற்கும் நடுவில்
நடக்கலானேன்’’ என்கிறார். சந்திரனின் பயணமே காலத்திற்கும் இடத்திற்கும் இடையே நடக்கும்
கதையாடலின் இரண்டகம்தான். இந்த இரண்டகத்தை சற்று நீட்சிப்படுத்தும் இடம்தான் அஃறிணைப்
பொருள்களுக்கும் உயர்திணைப் பொருளான சந்திரனுக்கும் இடையே கிளைத்துவரும் கதையாடல்
மொழி. அதன் இணைவுப் புள்ளிதான், “எதிர்காலத்தில் புரட்சி அஃறிணைப் பொருள்களுக்கும்
உயர்திணைப் பொருள்களுக்கும் சம உடைமை வேண்டும் என்பதே’’ (ப. 397)
இவ்வாறு ஒரு ‘அ-மனித மைய’ கதையாடல் நாவலின் இறுதியில் வருவது நாவல் பற்றிய சில
முன் அனுமானங்களை தகர்ப்பதாக உருக்கொள்கிறது. பொதுவாக இந்நாவலின் அறை விகித எதார்த்த
மொழிநடையைக் கொண்டிருந் தாலும் வழக்கமாக எதார்த்தவாத தகவலில் கையாளப்படும் ‘மனித மைய
சித்திரிப்புமுறை; இந்நாவலில் அஃறிணைப் பொருள்கள் உயர்திணைப் பொருள்கள் உடலியல் பருண்மை
எல்லை கடந்த ஆவியாக இதில் புதிய இணைவை ஏற்படுத்தும் ‘வெள்ளை நிற யோகி’ லியோனின்
கூட்டோடு புதிய பரிமாணத்தை கதையாடல் அடைகிறது. “அப்போது நாங்கள் மூவரும்
எதிர்பார்க்காத ஒருயோகி, செய்போர்டில் உள்ள சோல்ஜர் வடிவில் எங்கள் முன் திடீரென்று
தோன்றினான். வீட்டை விட சற்று உயரம். ஆனால் பழைய கடிகாரத்தைவிட குள்ளம். அவன் எங்களைப்
போலவே தரையில் ஒலி எழாமல் நடந்தபடி இருந்தான். குரல் மட்டும் இரும்புச் சாமான்கள் ஒன்றை
ஒன்று தட்டும்போது ஏற்படும் ஒலிபோல் கேட்டது (ப.401).
இப்படி வந்த யோகியின் தாய் இறந்திருந்த தருணம் அது. ஒருவேளை தன் தாயின் மரணத்தை காண
வந்தானோ எனத் தோன்றுகிறது. தன்னை ‘லியோன்’ என்று வெள்ளைக்கார யோகி அறிமுகப்படுத்திக்
கொள்கிறான். இந்த உரையாடல் பயணம் தொடருகிறது. இதற்கிடையில் ஒரு கட்டத்தில் “எங்களுக்கு
குளோபலைசேஷன் பற்றித் தெரியும்’’ என்கிறது வீடு. சந்திரன், “குளோபலை சேஷன் என்றால் என்ன
தெரியுமா?’’ (ப. 391) என்று கேட்க அது சொல்கிறது, “உங்கள் மொழியில் என்ன பொருளோ
தெரியாது. எங்கள் மொழியில் உலகமெல்லாம் இருக்கும் வீடுகள் தங்களுக்குள் பேசுவதே
குளோபலைசேஷன்’’ (ப. 391). என்று சொல்லிக் கொண்டே நடை தொடருகிறது. ஒரு கம்ப்யூட்டரை
பற்றி யோகியிடம் பேசும் சந்திரனுக்கு யோகி நீங்கள் ஞான மார்க்கத்தை விட்டு கம்யூட்டர் என்ற
தொழில் நுட்பத்திற்கு திரும்பியது பிடிக்கவில்லை என்கிறான். மறுபடியும் வந்த இடத்திற்கு
திரும்பலாம் என்று நினைக்கும்போதே “யோகியும், வீடும், கடிகாரமும் தட்தட்டென்று பெரிய
சாலையின் குறுக்கே பாய்ந்தன. இடது பக்கத்திலிருந்து வந்த கார் கொஞ்சம் தயங்கி மீண்டும்
சீறிப்பாய்ந்தது. மூன்று உயிர்கள் காரில் அடித்து தள்ளப்பட்டன. எந்த ஓசையும் இல்லாமல் மூன்று
ஜீவன்கள் காரில் சிக்கி மூன்று இடங்களில் கொஞ்சம் கொஞ்சம் இரத்தத் திட்டு ஏற்பட்டிருந்தது.
கார் போன பிறகு தெரு விளக்கில் நன்கு தெரிந்தது வீடும் யோகியும் ஓரிடத்திலும் கடிகாரம்
கொஞ்ச தூரத்திலும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன’’ (ப. 403) என்ற சம்பவம் நடந்தேறியது.
இதில் வெள்ளை யோகி ஏற்கனவே கார் விபத்தில் இறந்தவன் மீண்டும் இக்கதைப் பிரதியில் அஃறிணைப்
பொருட்களோடு உயிர்ப்புற்று மீண்டும் தன் பழைய விதியை சந்திக்கிறான். இந்நாவலில் வரும்
இப்பகுதி அஃறிணைகளின் சொல்லாடலை கதைக்களத்திற்குள் எழுதும் பிரதிச் செயல்பாடு பின் -
நவீனத்துவ நுண்ணிய கதையாடல் என்பதற்கு அழுத்தம் தருவதாக அமைகிறது. நவீனத்துவத்திற்கு
சற்றே அப்பால் இயங்கும் அஃறிணை- உயர்திணை சொல்லாடல் களம் பெருங்கதையாடல் என்பதை கீழறுப்பு
செய்யும் புதிய பிரதியியல் நுட்பமாக ரஸலில் செயல்படு கிறது. இந்நாவலை நாம் வாசித்த
முறையை பிரதிபலிக்கும் முகமாக நாவலில் வரும் சில வரிகளைக் காணலாம்.
“இன்று நாம் பேசுவது எல்லாம் ஃபிரிவலஸ், ஓரமானவை, மார்ஜினல், முக்கியமற்றவை,
விளையாட்டு என்று நினைத்தேன்.’’ (ப. 252) என்ற வரிகளில் வரும் பதங்கள் ஃபிரிவலஸ் /
ஓரமானவை / மார்ஜினல் / முக்கியமற்றவை / விளையாட்டு என்று நாவலின் பிரதியியல்
புள்ளியிலிருந்து துவங்கி நாவலை வாசிக்கும் முயற்சியே பின் நவீனத்துவ நாவல் வாசிப்பு.
சந்திரன் வார்சாவை விட்டு கிளம்புவதற்கு முன்பு சிவநேசம் அவனுக்குச் சொல்லும் வார்த்தைகள்,
‘நடுவில் புகுந்து எதுவும் செய்யாதிங்க’. இந்த வார்த்தை அவனை அமலாவின் மும்பை
சந்திப்பின் முன்பும் பின்பும் தொடர்கிறது. இதன் உள்ளார்ந்த உள்ளீடாய் வரும் வரிகளுடன் இந்த
நாவல் வாசிப்பை முடிக்கிறேன். பியோத்தரின் எச்சில்கள் தீம் என்பதில் வரும்.
“குழாயிலிருந்து விழும் நீருக்கடியில் தெரியும் அமைதி’’ வட்டத்தில் நீங்கள் சேர்ந்து
கொள்கிறீர்கள்.
- எஸ்.சண்முகம்
(கட்டுரையாளர் தமிழ்ச்சூழலில் 1980கள் முதல் செயல்படும் திறனாய்வாளரும்
மொழிபெயர்ப்பாளரும் கவிஞரும் ஆவார்)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 7:18:55 AM5/30/15
to brail...@googlegroups.com
தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல்கள்
8
விவரங்கள்
எழுத்தாளர்: சேவியர் எஸ்.தனிநாயகம்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: ஆகஸ்ட்09
C வெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009
பதினாறாம் நூற்றாண்டளவில் இந்தியா மற்றும் இலங்கைக்குள் நுழைந்த ஐரோப்பிய பாதிரியார்கள்
மேற்கொண்ட கல்வித் திட்டங்களின் ஒரு பகுதியாகக் கல்விக் கூடங்களைத் தோற்றுவித்தலும்
அச்சுக்கருவியை அறிமுகம் செய்வதுமாக அமைந்தன. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சிஸ்
சேவியர் போன்ற பல முன்னணி பாதிரியார்கள் பாரிஸ், கோயம்பிரா, சலமான்கா, ரோம் ஆகிய
நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். ஐரோப்பாவில் ஏற்பட்ட
மறுமலர்ச்சியின் காரணமாக கல்வியில் உயிர்ப்பு பெற்ற நாடுகளிலிருந்தும் பாதிரியார்கள்
வந்தடைந்தனர். ஆகையால் அவர்கள் அக்காலக்கட்டத்தில் நடைமுறையில் இருந்த கல்விமுறைகளையும்
நுணுக்கங்களையும் இங்கு அறிமுகப்படுத்தினார்கள். உதாரணமாக, பள்ளிக்கூடங்களை மதம்
சார்ந்தும் சார்பற்றும் நிறுவி கற்பித்தல், ஆசிரியர்களைத் தேர்வு செய்து பயிற்சியளித்தல்,
கிறித்தவ ஆசிரியர்களுக்கும், பயிற்றுநர்களுக்கும் பொருளாதார உதவி வழங்குதல் மற்றும்
தமிழை நன்கு பேசவும் எழுதவும் புலமைப் பெற்றிருந்தவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல்
ஆகியவை ஆகும்.
அயல்நாட்டின் முன்னோடி கல்வியாளர்களுள் ஒருவரான ஹென்றிக் ஹென்றிக்ஸ் (1520-1600)
என்பவர்தான் தமிழ் மொழியை அறிவியல் முறையில் படிக்கும் முறையை முதலில்
தோற்றுவித்தவராகவும் தமிழில் ஏராளமாக எழுதியவராகவும் 1560க்கு முன்பாகவே மன்னார்
அல்லது புன்னைக்காயலில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று
முன்மொழிந்தவராகவும் அறியப்படுகிறார்.1 கிறித்துவ சபையினர், இத்தகைய முன்னோடியின்
சிந்தனை களையும் அவர் கல்வி வளர்ச்சிக்குச் சொன்ன வழிமுறைகளையும் எல்லைகளாகக் கொள்ளாமல்
புகழ்பெற்ற ஊடகமான அரங்கையும், அச்சையும் கற்பித்தலுக்கு மிக அதிக அளவில் பயன்படுத்தினார்கள்.
பாதிரியார்கள் விவிலியச் செய்திகளைப் பரப்பவும் கல்வியறிவைப் பெருக்கவும் அச்சுக்கருவியை
மிகவும் சிரத்தையோடு பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய எழுத்து மற்றும் அச்சுக்
கலைக்கான அவர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுப் பகைமை பேசப்பட்டது. ஏனெனில்
அவர்களுடைய நோக்கம் மத போதனை என்ற அளவிலேயே இருந்ததாகக் கருதப்பட்டது.
கல்விமுறையிலும் மொழி யியலிலும் மொழிப்படிப்பிலும் அகராதியியலிலும் இலக்கியத்தி லும்
மதபோதகர்களின் பங்களிப்புகள் குறித்து இதுவரையில் தகுந்த அளவிலான மதிப்பீட்டினை
ஒட்டுமொத்த இந்திய மற்றும் இலங்கையின் கல்வியறிவு தொடர்பான வரலாற்றில் பதிவு
பெற்றிருக்கவில்லை.2 ஏனெனில் அவர்களுடைய நோக்கம் குறிப்பிட்ட ஒரு மதத்தை பரப்புவதிலும்
பாதுகாப்பதிலுமே இருந்தது. ஆயினும் கல்விக்கும் இலக்கியத்திற்குமான அவர்களுடைய
பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
அச்சு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது கல்வி மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த
நிகழ்வாகும். 1556இல் கோவாவிலிருந்த ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள் முதல் அச்சுக்கூடத்தை
இந்தியாவிற்குள் நிறுவினார்கள். இவ்வச்சுக் கூடத்தில் ஐரோப்பா விலிருந்து கொண்டுவரப்பட்ட
இலத்தீன் எழுத்து அச்சுக்கட்டை பயன்படுத்தப்பட்டது.3 ஆனால் இக்கால கட்டத்தில் கோவா
அச்சுக்கூடம் தன் அச்சுப்பணியை லத்தீன் மற்றும் போர்த்துக்கீசிய மொழியிலேயே மேற்கொண்டது.
இருப்பினும் முதல் தமிழ்ச் சிறுநூல் 1554இல் லிஸ்பனில் பிரசுரிக்கப்பட்டது. இந்தியாவில்
அச்சு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே இது நடைபெற்றிருப்பது
குறிப்பிடத்தக்கது. அச்சிறுநூல் முழுமைக்கும் தமிழ் மொழி யிலான மூலம் ரோமன் எழுத்து
வடிவத்தைக் கொண்டு பிரதியாக்கப்பட்டிருக்கிறது.
முதன் முதலில் தமிழ் அச்செழுத்தால் அச்சிடப்பட்ட பிரதியை 1577இல் கோவாவில்
கொண்டுவந்தார்கள். ஆனால் அவர்கள் அதில் முழுமையாகத் திருப்தியடையவில்லை. இதனைத் தொடர்ந்து
இரண்டாவது முயற்சியாக கொல்லத்தில் 1578இல் தமிழ் அச்சுக்கட்டையின் மூலம் அச்சிடப்பட்ட
பிரதி திருப்தியளிக்கக்கூடியதாக அமைந்தது. கொல்லத்தில் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி
1578ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட அந்நூல் பிரார்த்தனைப் பாடல்களையும், வினாவிடை முறையில்
மதத்தைக் கற்பிக்கும் வழிமுறைகளையும் கொண்டதாக அமைந்திருந்தது. 16 பக்கங்களில், அமைந்த
அச்சிறுநூல் ‘Doctrina Christian or Tambiran Vanakkam’ (தம்பிரான் வணக்கம்) என்று
தலைப்பிடப்பட்டது. இதன் மூலம் இந்திய மற்றும் இலங்கை மொழிகளில் முதன் முதலில் புத்தகம்
அச்சிடப்பட்ட மொழியாக தமிழ்மொழி அமைந்தது.
அச்சுக்கூடங்களின் உருவாக்கமும் அதனைத் தொடர்ந்த பல புத்தக வெளியீடும் நிகழ்ந்த காலம்
பெருமைப்படத்தக்க காலமாக தமிழ் மாவட்டங்களில் கருதப்பட்டது. கடற்கரை யோரங்களில் வாழ்ந்த
மீனவ சமுதாயத்தின் தமிழ் கிறித்தவர்கள் முதல் அச்சுக்கூடம் உருவாக தாராளமாக தங்களுடைய
பங்களிப்பைச் செய்தார்கள்.4 அச்சாகி வெளியான முதல் புத்தகம் அதிசயிக்கத்தக்கப் பொருளாகக்
கருதி வரவேற்கப்பட்டது. அப்புத்தகம் கிறித்தவர்களாலும் கிறித்தவரல்லாதவர்களாலும் மிக
உயர்வானப் பொருளாகக் கருதி வாங்கப்பட்டது. அச்சிடும் கருவி கண்டுபிடிக்கப்பட்ட சாதனையை
இந்திய கவிஞர்கள் செய்யுள் எழுதி கொண்டாடினார்கள்.5 இவ்வுண்மைகள் ரோமன் கத்தோலிக்கப்
பாதிரியார்களின் கடிதங்கள் மற்றும் 1579இல் கொச்சியில் அச்சிடப்பட்ட தமிழ்நூலான தம்பிரான்
வணக்கம், பிரான்சிஸ்கோ டிசோசா எழுதிய குறிப்பிடத்தக்க கிறித்தவ மதம் தொடர்பான
முன்னுரையான ‘Oriente conquistado’வில் இருந்தும் அறிய முடிகிறது. இம்முன்னுரை
மீனவப் பகுதியில் இருந்த மத போதகர்களின் பெயரில் எழுதப்பட்டு மீனவ சமுதாயத்தின்
கிறித்தவர்களுக்கும் தமிழ்மொழி அறிந்த கிறித்தவர்களுக்கும் மொழியப்பட்டது “உங்களுக்கும்
உங்கள் சந்ததிகளுக்கும் சொற்கத்துக்குப் பொற வழி படிப்பிக்கத்தக்க பலபல பொத்தகங்கள் அச்சிலெ
உண்டாக்கவேணுமென்று அனெக முதல் அச்சுண்டாக்க சிலவளித்தீர்களெ ஆகையினால் இந்தப் பொத்தகம்
உங்களுக்கு நன்கொடையாக வர விட்டோம். அனெக முதல் சிலவளித்து அச்சுண்டாக்கி வித்ததினாலே
சங்கையும் கீர்த்தியும் உலொகா முன்பாகப் பெற்றீர்களெ’’
உஙகளுகமுஙகளசநததிகளுககுஞசொறகததுககுபபொறவழி
படிபபிககததககபலபலபொததகஙகளசசிலெயுணடாககவேணு
மெனறுவனெகமுதலசசுணடாககசிலவளிததீ£களெயாகையினாலி
நதபபொததகமுஙகளுககுநனகொடையாகவரவிடடொமனெக
முதலசிலவளிததுவசசுணடாககிவிதததினாலெசஙகையுஙகீ£ததி
யுமுலொகாமுனபாகபபெறறீ£களெ.
இப்பகுதி நிறுத்தக் குறியீடுகளும் புள்ளிகளும் இல்லாமல் உச்சரிக்கமுடியாத
மெய்யெழுத்துக்களைக் கொண்டு நீளமாக எழுதப்பட்டுள்ளதையும் நிறுத்தக்குறியீடுகளும்
புள்ளிகளும் பயன்பாட்டுக்கு வராதிருத்ததையும் காட்டுகிறது. ஆயினும் பெஸ்கியினுடைய
எழுத்துச் சீர்திருத்தத்தின் மூலமாக குறியீடுகள் உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்தின்
எழுத்துக் கூட்டும் அல்லது எழுத்திலக்கண முறைபற்றி அக்காலத்தில் அச்சிடப்பட்ட புத்தகப்
பக்கங்களில் காண இயலும். கிறித்தவரல்லாதவர்கள் சாதாரணமாக புத்தகத்தை வாங்கவுமில்லை அதை
உயர்வாகக் கருதவுமில்லை. அவர்களுள் படித்த சில ஆண்கள் ஐரோப்பியர்களின் செயலுக்கு
ஒத்துழைப்பவர்களாகவும் தமிழ்மொழியையும் ஆரம்பகால தமிழ்க் கிறித்தவ முன்னோடி இலக்கியத்தின்
மொழியின் போக்கையும் திருத்தம் செய்ய இணைந்து பணியாற்ற தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.6
தமிழ்நாட்டில் அச்சு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட
காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது.
1584இல் தான் சீனாவில் முதல் அச்சாக்கம் ஐரோப்பியர்களால் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து
ஜப்பானில் 1590இலும் பிலிப்பைன்ஸில் 1593லும் முதல் அச்சாக்கம் நடைபெற்றது. 1584இல் பெரு
நாட்டில் லிமா என்ற இடத்தில் ஸ்பானிஷ் குய்ச்வா (Quichua) மற்றும் அய்மாரா (Aymara)
மொழியில் அச்சிடப்பட்ட ‘Doctrina’ என்ற நூல்தான் உலகின் வெளிச்சத்திற்கு வந்த முதல் அச்சு
நூலாகும். இருப்பினும் ஆடெக் (Aztec) மற்றும் ஸ்பானிஷ் மொழியில் வெளியான
‘Doctrina’வின் எந்தப் பிரதியும் இதுவரையிலும் கண்டெடுக்கப்படவில்லை. இப்பிரதி
மெக்சிகோ நகரத்தில் 1539இல் அச்சடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆப்பிரிக்க மொழிகளில்
கங்கோலியர்களுக்காக (congolese) அவர்களின் மொழியில் 1624இல் தான் முதல் அச்சாக்கம்
செய்யப்பட்டது. இதில் 1554ஆம் ஆண்டு லிஸ்பனில் அச்சிடப்பட்ட தமிழ் சிறுவெளியீடான
‘Cartilha’வில் உள்ள வரிகளே இடம்பெற்றிருக்கிறது. ரஷ்யா தனது முதல் நூலை 1563இல்
அச்சிட்டது. கான்ஸ்டாண்டினோபிள் தன் முதல் அச்சுக்கூடத்தை 1727இலும் கிரீஸ் 1821இலும்
நிறுவியது. இவ்வாறாக 16ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகங்கள் மேற்கத்திய
நாடுகளில் அச்சிடப்பட்ட மாதிரிகளினும் முதன்மையாகக் கருதப்படுகிறது. இச்செயல்பாடு
ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்டிருப்பதன் விளைவே அவர்களை உடனடியாக நம்
அருகாமைக்கு கொண்டுவந்துள்ளது.7
அச்சிடப்பட்ட நான்கு பிரதிகள்
இந்திய மண்ணில் இந்திய மொழியில் அச்சிடப்பட்ட முதல் நூல்களின் தன்மை மற்றும் அதன்
பொருளடக்கம் குறித்து, அச்சாக்கப்பட்ட நாள் மற்றும் அச்சுக்கூடம் அமைந்திருந்த இடம்
குறித்து, அறிவதில் மிகத் தொடர்ச்சியான பெரிய குழப்பமும் அதனைத் தொடர்ந்த அனுமானமும்
நீடித்து வருகிறது. இருப்பினும் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிற பதினாறாம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட நான்கு தமிழ் நூல்
வெளியீட்டின் மாதிரிப் பிரதிகளிலுள்ள அச்சாக்கப்பட்ட இடம், நூலின் ஆசிரியர் தொடர்பான பல
உண்மைத் தரவுகள் அவற்றைத் தொகுத்துப் பார்க்கிற பொழுது கிடைக்கப் பெறுகின்றன.
1) Cartilha: pp. 38, Germano Galhardo, Lisbon, 11th February, 1554.
இச்சிறு வெளியீட்டின் தலைப்புப் பக்கத்தில் அதன் முழுத் தலைப்பு இவ்வாறு அமைந்திருக்கிறது.
“Cartilha Che conte breuemente ho q todo christo deue apreder pera sua
saluacam, A qual el rey Dom Joham teraro deste nome nosso senhor mandou
imprimir e lingoa Tamul e Portagues co ha deeraracam do Tamul por cima
de vermulho.” இச்சிறு வெளியீடானது ஒரு கிறித்தவன் முக்தியடைவதற்கு கட்டாயம்
தெரிந்திருக்க வேண்டியவற்றைச் சுருக்கமாகக் கொண்டிருக்கிறது. நம்முடைய பிரபு டாம்
மூன்றாம் ஜான் அவர்களுடைய உத்தரவின்படி இந்நூல் தமிழ் மற்றும் போர்த்துக்கீசிய மொழிகளில்
அச்சடிக்கப்பட்டு அதற்கு சிவப்பு நிறத்தில் தமிழ் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது.
இக்குறிப்பிட்ட பிரதி தற்போது லிஸ்பனில் உள்ள பீலம் (Belem) என்ற இடத்திலுள்ள “Doctor
leile de vasconcellos” என்கிற மானிடவியல் அருங்காட்சியகத்தில் மிகுந்த
பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்நூல் எவோரா (Evora)விலுள்ள
கார்த்தூசியன் மடாலயத்தின் “Scala Cocli” நூலகத்திற்குச் சொந்தமாயிருந்தது. இப்பிரதி
Jesuit Theotonio de Braganca (1536-1602) என்கிற புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரால்
நூலகத்திற்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இவர் கோய்ம்பிரா (Coimbra)வில் பிறந்து ரோம்
மற்றும் பாரிஸ் நகரங்களில் கல்வி பயின்றவர். இவர் எவோராவின் கிறித்தவ மதகுருவாக இருந்து
1598இல் கார்த்தூசியன் மடாலயமான Scala Caeliயை நிறுவினார். அப்பிரதியில் அவர் கைப்பட
எழுதியிருக்கிற குறிப்பே கார்த்தூசியன் நூலகத்திற்கு அப்பிரதி அன்பளிப்பாக
அளிக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவலைக் கொடுக்கிறது.8 அதன்பிறகு மடாலயத்திலிருந்து
இப்பிரதி மறைந்துவிட்ட போது Torre do Tombo என்கிற அமைப்புக்குச் சென்றிருக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் அப்பிரதி Torre do Tomboவினுடைய முன்னாள்
இயக்குனரான Jose Bastosற்கு உரிமையாயிருந்தது. 1909இல் இப்பிரதி படிக்காத ஒருவர்
கையில் இருந்தது, அவரிடமிருந்து Dr.Vasconcellos என்பவர் அவருடைய மானிடவியல்
அருங்காட்சியகத்திற்குப் பெற்றார்.
1948ஆம் ஆண்டு போர்ச்சுகலுடைய அச்சு வரலாற்றை எழுதுவதற்கு இப்பிரதி பெறப்பட்டதன் மூலம்
அதனுடைய மேன்மையால் பரவலாக அறியப்பட்டது. Americo cortez Pinto என்பவர் தன்னுடைய
ஆய்வான Da famosa Arte da Imprimissaoவிற்கு தரவுகளைச் சேகரித்த பொழுது
பீலமிலுள்ள மானிடவியல் அருங்காட்சியகத்தின் தற்போதைய இயக்குனராக உள்ள பேராசிரியர்
மேனுவல் ஹெலினோ என்பவரை தன்னுடைய ஆய்வில் குறிப்பிட நேர்ந்தது. ஹெலினோவால் பழமையான
நூல் அட்டவணையான Innocencio da silvaவினுடைய Bibliographia Lusitanaவில்
குறிப்பிடப்பட்டிருக்கிற அரிய அச்சு நூல்களை தற்செயலாகக் கண்டறியமுடியவில்லை. இவரினும்
பழமையான அட்டவணையாளர்களாலும் காணமுடியாமல் போனது. இந்நிலையில் பேராசிரியர் ஹெலினோ,
கார்ட்ஸ் பின்டோ-வை அழைத்து அவர் தன்னுடைய அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக
வைத்திருக்கிற அரிய புத்தகத்தைக் காணச் செய்தார். பிறகு அப்புத்தகத்தின் அடையாளம்
காணப்பட்டது. Cortez Pinto அவர்கள் தன் ஆய்வில் மிகுந்த ஈடுபாட்டுடன் அபூர்வமான
அப்புத்தகத்தைப் பற்றி எழுத சில பக்கங்களை ஒதுக்கினார். அத்துடன் அச்சிறுப் புத்தகத்தின்
நான்கு பக்கங்கள் அவரால் வண்ண நகலெடுக்கப்பட்டது. இச்சிறுவெளியீட்டின் கையெழுத்துப்பிரதி
Oportoவிலுள்ள நகராட்சி நூலகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.10
நான் 1954ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிலநாள் லிஸ்பனுக்குச் சென்றிருந்தபோது அப்பிரதியை
ஆராய்ந்தேன். ஆனால் அப்பிரதியைப் பற்றி விரிவானத் தகவல் எடுக்கப்படவில்லை, தற்சமயமும்
அதைப் பற்றி ஆராய, அதன் ஒளிப்படங்கள் அனுப்பப்படும் என்று எதிர்நோக்கியிருக்கிறேன்.
இதுவரையிலும் அப்பிரதியின் ஒளிப்படங்களோ, நுண்படங்களோ பெறுவதில் நான் எடுத்த முயற்சி
வெற்றியடையவில்லை. 1554இல் அச்சிடப்பட்ட Cartilha எனும் அந்த அற்புதமான
அச்சுப்பிரதியிலுள்ள அச்சையும் தமிழ் மொழியையும் ஆராய Cortez Pintoவினுடைய
நூலிலுள்ள நகல்களும் நேர்மையான முறையில் செயல்படவில்லை.
2. Doctrina Christam en Lingua Tamul or தம்பிரான் வணக்கம், pp.16, Colligio
do Saluador, Quilon, 20 Febraruy, 1577.
பிரார்த்தனைகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படைத் தத்துவங்களடங்கிய இச்சிறுநூல் ஹார்வர்ட்
கல்லூரியால் வாங்கப்பட்டதற்கு முன்பாக ஆராய்ச்சியாளர்கள் இதனை முற்றிலும் அறியாதவர்களாய்
இருந்தார்கள். இந்நூலைப் பற்றியான சிந்தனை 1952ஆம் ஆண்டின் இளவேனில் காலத்து ஹார்வர்ட்
நூலக அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஹார்வர்டிலுள்ள நூலகரான G.W.Cottrell
Jr. என்பவரின் உதவியால் இச்சிறுநூலின் புகைப்படப்பிரதி தற்சமயம் எனக்கு
கிடைக்கப்பெற்றது. இந்திய மொழிகளுள் குறிப்பிட்ட ஒரு மொழியின் எழுத்தால் அச்சிடப்பட்ட
முதல் நூலுக்குச் சான்றாக இந்த ஹார்வர்ட் பிரதி அமைந்திருக்கிறது. அத்துடன் இந்தியாவில்
இந்திய மொழி ஒன்றில் அச்சிடப்பட்டு கிடைக்கப் பெறுகிற முதல் நூலுக்குச் சான்றாகவும் இது
அமைந்திருக்கிறது.
பாதிரியார் Pedro de Fonseca (1527-1599)வின் ஊகத்தின்படி இப்பிரதி
இந்தியாவிலிருந்து ரோமுக்கு அனுப்பப்பட்டு நவம்பர் 1579ஆம் ஆண்டில் பெறப்பட்டிருக்கிறது.
இவர் ரோமில் 1573-81 வரை ‘General of the Jesuit order’ இல் போர்ச்சுகலுக்கான
துணைவராகப் பணியாற்றியிருக்கிறார். இவர் தன் வாழ்க்கை வரலாற்றுக் கையெழுத்துப் பிரதியில்
பின்வருமாறு எழுதியிருக்கிறார். “Portata dall India. Hauuta dal pre Fonseca
del mese di novembre M.D. Lxxix”. இப்பிரதி 1773இல் Jesuit order
தடைசெய்யப்பட்டது வரை சியனா (Siena)வில் உள்ள ஒரு கிரேக்கப் பாதிரியார் நடத்தும்
கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. பிறகு வியன்னாவிலுள்ள Fideikommissbibliothek எனும்
இடத்தின் அரசனான Liechtenstain என்பவரிடம் இருந்தது. சமீபத்தில் இப்பிரதி ஐரோப்பா
மற்றும் அமெரிக்கப் புத்தக சந்தைகளுக்கு அனுப்பப்பட்டது. பிறகு லண்டனிலுள்ள William H.
Robinson Ltd என்ற நிறுவனத்திடமிருந்து ஜனவரி 1951ஆம் ஆண்டு ஹார்வர்ட் கல்லூரியின்
நூலகத்திற்காக வாங்கப்பட்டது.11
3. Doctrina Christam: கிரீசித்தியானி வணக்கம், pp. 120, Collegio da madre de
Deos, Cochin, 14 November, 1579
இப்பிரதி “Bibliotheque de I Universite de France” என்று முத்திரையிடப்பட்டு
Sorbonne நூலகத்தில் இடம்பெற்றிருந்தது என 1928ஆம் ஆண்டு Fr. Robert Streit.
O.M.I. அவர்களால் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.12 அதன்பிறகு இப்பிரதி Sorbonne
நூலகத்திலிருந்து காணாமல் போய்விட்டது. அநேகமாக பிரதி இடம்மாறி இருக்கவேண்டும் அல்லது
இரண்டாம் உலகப் போரின்போது வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். எதிர்பாராத
வகையில் இப்பிரதி இன்னும் Sorbonneவிலேயே கிடைக்கப்பெறுகிறது. St.Francis Xavier
என்பவரின் அதிகாரத்தின் மூலம் கிறித்து ஆராய்ச்சியாளர் Fr.Georg Schurhammer
அவர்களுக்காக உரிய காலத்தில் ஒளிப்படம் எடுக்கப்பட்டது. இவரால் இவ்வொளிப்பட நகல்
தூத்துக்குடியிலிருந்த பிரெஞ்சுப் பாதிரியார் T.Roche S.J. அவர்களுக்கு அன்பளிப்பாக
அளிக்கப்பட்டது. இப்பாதிரியார் 1951ஆம் ஆண்டு எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். இப்பிரதியை
ஆராய்ச்சி செய்யவும், நுண்படம் எடுக்கவும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு 1952ஆம் ஆண்டு
இரவலாகத் தரப்பட்டது. ஆயினும் இப்பிரதி எனக்கே உரிமையாக இருந்து வருகிறது.
1732ஆம் ஆண்டின் கடைசிவரை ‘Doctrina’வினுடைய பிரதிகள் தென்னிந்தியாவில் விற்பனை
செய்யப்பட்டிருக்கிறது. டானிஷ் மிஷினரியைச் சார்ந்த Sartorius என்பவர் 1732ஆம் ஆண்டு தன்
நாட்குறிப்பில் இந்நூலின் பிரதியை பழவேற்காட்டிலும் மற்றொரு பிரதியை தரங்கம்பாடியிலும்
கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.13
4. Flos Sanctorum o Libro de las vidas di algunos santos trasladas en
lengua malavar, pp. 669, (Tuticorin or Punnaikayil), 1586.
நான் இந்நூலினுடைய பிரதியை ஜூன் 1954இல் வாடிகன் நூலகத்திலுள்ள கையெழுத்துப் பிரிவில்
கண்டறிந்தேன். மீனவர் பகுதியில் அச்சிடப்பட்ட Flos Sanctorum நூல் அச்சேறிய ஆண்டு
குறித்து பல எழுத்தாளர்கள் பலவாறாகக் கூறுகிறார்கள். நூலின் கடைசியில் கொடுக்கப்
பட்டிருக்கிற மாதா கோயில் தொடர்பான நாட்குறிப்பைக் கொண்டு பார்க்கிறபொழுது இந்நூல்
1587ஆம் ஆண்டில் அல்லது அதற்கு முன்பாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்று காரணத்தோடு
நம்பப்படுகிறது. ஏனெனில் நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கிற நாட்குறிப்பில் சாம்பல்
புதன் (Ash wednesday), ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (Easter Sunday) போன்ற பல
நிகழ்வுகளுக்கான நாட்கள் ஒரு பக்க அளவில் 1587 தொடங்கி 1614 வரை தொடர்ச்சியாக
அடுத்தடுத்த ஆண்டுக்கு கூறப்பட்டிருக்கிறது. இந்நூலாசிரியரின் ஸ்பானிஷ் மொழியிலமைந்த
முன்னுரை எந்த சந்தேகமுமின்றி காலம் தொடர்பான கருத்தைக் கூறுகிறது.
அக்குறிப்பிட்ட ஆண்டிற்கு முன்பாக அச்சிடப்பட்ட சில புத்தகங்களைக் குறிப்பிட்டிருப்பதன்
மூலம், ‘துறவிகளின் வாழ்க்கையைப்’ பற்றி கூறுகிற இந்நூல் 1586ஆம் ஆண்டு
அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதே முன்னுரையில் ஆசிரியர் தான் மீனவர் பகுதியில் 37 ஆண்டு
காலம் பணிபுரிந்ததாகக் கூறியிருக்கிறார். ஹென்றிக்ஸ் அவர்கள் 1546இல் கோவா வந்தடைந்த
ஓரிரு ஆண்டுகளில் மீனவர் பகுதிக்கு வந்தடைந்தார். இனி, ஹென்றிக் அவர்கள் மீனவர் பகுதிக்கு
1548 அல்லது 1549இல் வந்தடைந்திருந்தாரேயானால் முன்னுரை கொடுக்கிற ஆதாரம்
சரியாகிறது. ஹென்றிக்ஸ் பாதிரியார் ‘Doctrina’வை 1579இல் அச்சிடுகிறார், அதன் பிறகு
Flos Sanctorumஐ 1587இல் அச்சிடுகிறார், இடைப்பட்டு அவருக்குக் கிடைத்த போதுமான கால
அளவே அவரை நிரந்தரமாக நினைவுபடுத்தக்கூடிய 669 பக்கங்கள் கொண்ட நூலை அச்சுதொகுத்து
அச்சிட முடிந்திருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக வாடிகனில் உள்ள இப்பிரதி தமிழிலமைந்த தலைப்புப்பக்கம் மற்றும் அதனைத்
தெடர்ந்த தொடக்கப் பக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. மூலப்பிரதியில் நிச்சயமாக இவை
இருந்திருக்க வேண்டும். இருந்திருப்பின் அச்சடிக்கப்பட்ட நாள் மற்றும் இடத்தைப்பற்றியான
திட்டமான தரவுகளைக் கொடுத்திருக்கும். இதற்கு பதிலாக ஸ்பானிஷ் மொழியில் கையினால்
எழுதப்பட்ட சிறு அளவிலான அறிமுகவுரையும் பொருளடக்க அட்டவணையும் உள்ளது.
ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்ட மூலப்பிரதியிலிருந்த பக்கங்களுக்கு மாற்றாக இந்த கையெழுத்துப்
பக்கங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
இந்த வாடிகன் பிரதியினுடைய நம்பகமான தரவுகளைத் துல்லியமாக அறியமுடியவில்லை. Fr.
S.G. Perera S.J. என்பவர் தன்னுடைய Jesuits in Ceylon என்கிற நூலில் Fr.Henrique
Henreques அவர்களின் பணியைப் பட்டியலிடுகிறபோது பின்வருமாறு கூறுகிறார். “Vitae
Christi Domini, Beatissimae Virginis et aliorum Sanctorum” எனும்
ஹென்றிக்கின் தமிழ்ப்பிரதி நூல் 1602 ஆம் ஆண்டு ரோமுக்கு அனுப்பப்பட்டது. தற்போது அது
“Bibliotheca Vaticana”வில் உள்ளது.14 Fr. S.G. Perera அவர்களால் இத்தகவலுக்கான
ஆதாரத்தை என்னிடத்தில் தரமுடியவில்லை. அதேபோல வாடிகன் நூலகர்களும் இத்தலைப்பிலமைந்த
நூலைப்பற்றி எந்த அறிதலையும் கொண்டிருக்கவில்லை. இத்தகைய காரணங்களால் Fr. S.G. Perera
அவர்களால் விளக்கமாகத் தலைப்பிட்டுக் கூறப்பட்ட ‘Flos Sanctrum’ நூலைப் பற்றி
நம்புவதிலிருந்து நான் விலகுகிறேன். வாடிகன் பிரதியான Flos Sanctrum நூலின்
அட்டைக்கு அடுத்துள்ள வெற்றுத்தாளில் “Se dar alla biblioteca Vaticana” என்று
கையால் எழுதப்பட்டக் குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.
ஆசிரியர்பற்றி
1. Carilha of 1554
இச்சிறுவெளியீட்டின் முகவுரை லிஸ்பனில் வாழும் மூன்று இந்தியர்களால் எழுதப்பட்டது.
Vicente de Nazareth, Jorge Carvalho. மற்றும் Thoma da Cruz என்று அவர்களின்
பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்புக்கும், ஒலி பெயர்ப்புக்கும் இவர்களே
பொறுப்பு வகிக்கிறார்கள். வழக்கமானத் தரவுகள் இவர்கள் தொடர்பான எந்தத் தகவல்களையும்
கொடுக்கவில்லை.
இருப்பினும் முகவுரையின் அடிப்படையில் அவர்களுடைய பணிகளை Fra Joam de vila de
conde என்பவர் மேலாய்வு செய்திருக்கிறார். Fra Joam என்பவர் பலரும் அறிந்த
பிரெஞ்சுக்காரர். 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சிலோன் விவகாரங்களில் மிகமுக்கியமான
பங்கை வகித்திருந்தார். தமிழ்ச் சமூகத்தின் சூழ்நிலையை Fra Joam நன்கு அறிந்தவராக
இருந்தார் என்பதை பலவகையான நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன. சிலோன் மற்றும் இந்தியாவிலுள்ள
தமிழ்ப் பகுதிகளில் இவர் பயணம் மேற்கொண்டு அப்பகுதிகளில் இருந்த பாதிரியார் களோடு
தொடர்ந்து கடிதத் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.15
சிலோனிலுள்ள கொட்டெ அரசனான Bhuvanaike Bahu (1521-1551)வின் அரசவையில் Fra Joam
உரையாற்றியபோது திருக்குறளை மேற்கோள்காட்டி அரசனும் அவையும் எவ்வாறு செயல்பட்டால் அரசன்
புகழைப்பெறுவான் என்பதைக் கூறியிருக்கிறார்.16 கொழும்பில் தமிழ்க் கிறித்தவ
சமூகத்தினரிடம் பணியாற்றிய பிரெஞ்சுக்காரர்கள் 16ஆம் நூற்றாண்டளவில் வெளியேற்றப்பட்டார்கள்.
கொழும்பில் வாழ்கிற ஒரு தமிழ்பேசுகிற கத்தோலிக்கக் கவிஞன் வினாவிடையில் அமைந்தவாறு
பாடவேண்டிய செய்யுளை இயற்றினான். Fra Joamமினுடைய உள்ளுணர்வால் பாடல்களை அவர்மீதும்
பாடியிருந்தான். பிறகு ஹென்றிக்ஸ் அவர்களின் தொடக்ககால தமிழாய்வுக்கு உதவ “நாட்டில்
நன்றாகத் தமிழறிந்த’’ பாதிரியான Fra Joam கொழும்பிலிருந்து மன்னாருக்கு அனுப்பப்பட்டார்.17
2. The Doctrina Christam (தம்பிரான் வணக்கம்) of 1577
போர்ச்சுக்கலில் எழுதப்பட்டக் குறிப்பின்படி இச்சிறுநூல் கிறிஸ்து சமூகத்தைச் சார்ந்த Fr.
Anrique Anriqueg (Same as Henrique Henriques) மற்றும் புனித பீட்டரைச் சார்ந்த
Father Manuel ஆகியோரால் அச்சிடப்பட்டிருக்கிறது. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர்
மதச்சார்பற்ற பாதிரியாராக இருந்திருக்கிறார். இவர் கிறிஸ்து சமூகத்தைச்
சாராமலிருந்ததால் பெயர் குறிப்பிடப்படவில்லை.
“Doctrina Christaa tresladada em linqua Tamul pello padre Anrique
Anriquez de copanhia de Jesu pello padre Manoel de sao pedro”. இருந்தாலும்
தமிழ் தலைப்பு தனிப்பட்ட நிலையில் Father Henriques S.J. அவர்களின் பெயரைத்
தாங்கியிருக்கிறது. முதல் பக்க அச்சுக்கட்டையின் கீழ் அமைந்திருந்த கட்டுப்பாட்டான இடத்தின்
காரணமாகவே இரண்டாம் ஆசிரியரின் பெயர் விடுபடலுக்கு காரணமாக அமைந்திருக்கக்கூடும்.
தமிழ் தலைப்பு கீழ்வருமாறு படிக்கப்படுகிறது.
கொமபஞஞிய தெ செசூ வகையிலணடிறிககிப
பாதிரியார தமிழிலெ பிறிததெழுதின தமபிரான வணககம
இதனை இன்றைய எழுத்திலும், எழுதுகிற விதத்திலும் கீழ்வருமாறு படிக்கவேண்டும்.
கொம்பஞ்சிய தெ சேசு வகையில் அண்டிறிக் பாதிரியார்
தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்.
Fr. Manuel of St. Peterப் பற்றி ஆசிரியர் குறிப்பில் கூறப்பட்டிருக்கிற தகவலைத்
தவிர்த்து வேறெந்த தகவலும் இல்லை. வெளிப்படையாக இவர் தமிழ்ப்பேசுகிற மதச்சார்பற்ற
பாதிரியாக இருந்தார் என்பது தெளிவாகிறது. போர்த்துக்கீசிலிருந்து வந்த இவர் கோவாவில்
பயிற்சி பெற்றிருக்கிறார். பிறகு தொடக்கத்தில் அவர் இருந்த மாவட்டத்துக்கே திருப்பி
அனுப்பப்பட்டிருக்கிறார். Father Henrique அவர்களின் உதவியாளர்களுள் ஒருவராக இருந்தவர்
Father Pero luis, S.J. என்பவர். இவர்தான் முதன்முதலில் பார்ப்பன சமூகத்திலிருந்து
கிறித்து சமூகத்திற்கு மாறியவர். இவர் Henrique பாதிரியார் தமிழ் ஆய்வதற்கும் அவரின்
நூலை தொகுப்பதற்கும் உதவியாக இருந்திருக்கிறார். ஆயினும் நமக்குக் கிடைத்திருக்கிற
அச்சடிக்கப்பட்ட எந்த நூலிலும் இணை ஆசிரியர் என்ற முறையில் இவருடைய பெயர் எங்கும்
இடம்பெறவில்லை.
குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த Quilon Catechism (1578) என்பது வினாவிடை போதனை
முறையில் அமைந்த நூல். இதனை St. Francis Xavier என்பவர் முதலில் 1542ஆம் ஆண்டு
போர்த்துக்கீசிய மொழியிலும் 1544ஆம் ஆண்டு தமிழிலும் உருவாக்கினார். முறைப்படி இது St.
Francis Xavier அவர்களால் Doctrinaவிற்கு தயாரிக்கப்பட்டு Joam de Barros அவர்களால்
போர்ச்சுக்கலில் 1539இல் வெளியிடப்பட்டது. ஆகையால் இந்நூல் முதலில் Fransis Xavier
அவர்களாலும் அவரைத் தொடர்ந்து Father Henriques அவர்களாலும் விரிவான நிலையில்
திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கவேண்டும்.18
16ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தமிழ் நூல்களின் பிரதான தொகுப்பாளராகத் திகழ்ந்தவர்
Father Henrique Henriques. S.J. அவர்கள், கொய்ம்பரா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்ற
மாணவரான இவர் 1545ஆம் ஆண்டு தன்னுடைய 25வது வயதில் கிறிஸ்து சமூகத்தில் சேர்ந்தார்.
1546இல் கோவா வந்தடைந்த இவர் அடுத்த ஆண்டில் மீனவர் பகுதிக்கு அனுப்பப்பட்டார். பிரான்சிஸ்
சேவியரின் அறிவுரைப்படி தன்னை இருத்தி, இரவு பகலாகத் தமிழ் மொழியைக் கற்றதாகக்
கூறுகிறார். தான் மீனவர் பகுதிக்கு (தூத்துக்குடி, புன்னைக்காயல்) சென்ற நாள் தொடங்கி
Joam de Barrosன் இலத்தீன் இலக்கணத்தை மாதிரியாகக் கொண்டு முறையாகத் தமிழ் மொழியைக்
கற்கத் தொடங்கியிருக்கிறார். 1552க்கு முன்பாகவே இவர் தமிழ் இலக்கணத்தை போர்த்துக்கீசிய
மொழியில் தொகுத்து இதனை அச்சிட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ரோமுக்கு
அனுப்பியிருக்கிறார். 1561 முதல் 1564 வரை மன்னாரில் வசித்திருக்கிறார். அப்போது
திரிகோணமலையின் தலைவரை கிறித்துவ மதத்தில் சேர்த்திருக்கிறார். இவரிடத்தில்
யாழ்ப்பாணத்தின் அரசதிகாரத்தை வழங்க போர்த்துக்கீசியர்கள் திட்டமிட்டிருந்தார்கள். இவரோ
இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் சந்தித்து அவர்களிடத்தில் பிரசாரம் செய்வதில் மகிழ்ச்சி
அடைந்திருக்கிறார். அத்துடன் அவர் எழுதிய தமிழ்க் கைப்பிரதியிலுள்ள மொழிநடையின் போக்கு
குறித்து கிறித்தவரல்லாத படித்தவர்களிடம் ஆலோசனை செய்வதில் விருப்பம் கொண்டவராக
இருந்திருக்கிறார். இது தவிர கீழே கூறப்பட்டிருக்கிற புத்தகங்களை அச்சிடுவதற்கான
தொகுப்புப்பணியை மேற்கொண்டிருக்கும் செய்தியை தொடர்ச்சியாக அவர் எழுதிய கடிதங்களின்
மூலம் அறிய முடிகிறது.
1. தமிழ்மொழி இலக்கணம் (A Grammer of the Tamil Language)
2. தமிழ்க் கலைச்சொல் அகராதி (A Vocabulary of Tamil words and terms)
16ஆம் நூற்றாண்டில் இவரின் புத்தகங்கள் எத்தனை அச்சிடப்பட்டிருக்கின்றன என்பதை இதுவரையில்
திட்டவட்டமாக அறியமுடியவில்லை Flos Sanctorum நூலுக்கான இவரது முன்னுரையில்
1586க்கு முன்பாகவே “algunos libros” (சில புத்தகங்கள்) தமிழில்
வெளியாகியிருப்பதாகக் கூறுகிறார்.19
3. Doctrina Christam (கிரீசித்தியானி வணக்கம்) கொச்சின், 1579
உண்மையானப் போக்கில் அமைந்த வினாவிடை போதனை நூலுக்கு இந்நூலே சான்றாக இருக்கிறது.
Marcos Jorge S.J. அவர்களால் போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்டு வெகு பிரபலமடைந்த
வினாவிடை போதனை நூல் முதன்முதலாக 1566இல் லிஸ்பனில் வெளியிடப்பட்டது. இந்நூலின்
தமிழாக்கமாகவே கிரீசித்தியானி வணக்கம் இருக்கிறது. இவ்வகையான வினாவிடை நூல்களுக்கு
17ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்நூலே முன்மாதிரியாகத் திகழ்ந்தது. Robert
Bellarmine எழுதிய Doctrina நூலின் வருகைக்குப்பிறகு இந்நூல் புறந்தள்ளப்பட்டது.
இவ்வினா விடையில் அமைந்த போதனை நூலை கிறிஸ்து சமூகம் வெளியிட்டது.
அப்பொழுதிலிருந்து போர்ச்சுகல் மற்றும் பிற ராஜ்ஜியத்தைச் சேர்ந்த கிறித்தவர்கள் மிக
விரிவான அளவில் இதன்மூலம் பயனடைந்தார்கள். அதனால் தமிழ்ப் பேசுகிற கிறித்தவர்களும் அதே
பலனைப் பெற இந்நூல் தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று Marcos Jorge தன்
முன்னுரையில் கூறுகிறார்.
Marcos Jorgeயினுடைய இம்மொழிபெயர்ப்பு இந்தியா மற்றும் சிலோனில் மிக விரிவான அளவில்
பயன்பாட்டுக்கு வந்தது. 17ஆம் நூற்றாண்டுப் பகுதியில் இந்நூலில் கூறப்பட்டிருக்கிற
அறிவுரைகள் மிகச் செம்மையான முறையில் யாழ்ப்பாணத்துப் பாதிரியார்களால் சொல்லி
கொடுக்கப்பட்டது. அதனால்தான் “கிழக்கிந்தியப் பகுதியிலேயே யாழ்ப்பாணச் சபையிலிருந்த
சிறுவர்கள்தான் மிகச்சிறந்த முறையில் கிறிஸ்து சமூகத்தின் மூலம்
போதிக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்று சொல்லப்பட்டது. வினாவிடை நூலின் தமிழ்ப் பிரதிகள்
1644இலிருந்து அங்கு தெளிவான முறையில் பயன்படுத்தப்பட்டது. இதனை Figureydo
பின்வருமாறு எழுதுகிறார்: “எங்களுடைய பாதிரியார்கள் மூலம் அவர்கள் மிக நன்றாக
போதிக்கப் பட்டிருக்கிறார்கள். இவ்வினா விடை போதனை நூலை முழுவதுமாக அறியாத சிறுவர்
அல்லது சிறுமியர் மிக அரிதாகவே இருப்பர். மேலும் Morcos Jorgeயினுடைய
முழுப்புத்தகமும் அவர்களுடைய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.’’20
4. Flos Sanctorum, 1586
வாடிகனிலுள்ள பிரதியான Flos Sanctorum நூலிலுள்ள ஸ்பானிஷ் மொழியில் கையால்
எழுதப்பட்ட முன்னுரையானது அந்நூலின் ஆசிரியர் தொடர்பான பல ஆவலை எழுப்பும் தகவல்களைக்
கூறுகின்றது. புதிய தலைமுறைக் கிறித்தவர்களுக்கு “துறவிகளின் வாழ்க்கை’’ (Lives of
saints) பற்றியான மிக விரிவான முழுமையானத் தகவல்கள் அவ்வளவு முக்கியமானதல்ல என்று
கருதிய Father Henriques அவர்கள், அத்துறவிகளில் மிகவும் ஏற்ற பொருத்தமானவர்களின்
வாழ்க்கையை மட்டும் புதிய தலைமுறைக் கிறித்தவர்களுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்திருக்கிறார்.
ஆகையால் அவர் Friar Diegodel Roasioவின் Flos Sanctorumமின் ஒரு பகுதியையும்,
Lipomaniயின் Flos Sanctorumமின் ஒரு பகுதியையும், Perionனின் Lives of the
Apostlesயையும் மொழி பெயர்த்திருக்கிறார். மேலும் அவர் இதற்கு தொடர்பாகத்
தோன்றியதையும், பிரதிபலிப்பை ஏற்படுத்தக்கூடியதையும், கவனத்தை ஈர்க்கக் கூடியதையும்
வாசகர்களுக்கு ஏற்ற வகையில் இணைத்திருக்கிறார். தமிழ்ப் பேசுகிற மக்களிடையே அவர் 37
ஆண்டுகாலம் ஊழியம் செய்து Algunos libros எழுதினார். பின்னர் இது அனுமதிக்கப்பட்டு
அச்சடிக்கப்பட்டது. இதற்காக அவர் மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்ற வேண்டியிருந்தது.
இறுதியாக 1586ஆம் ஆண்டு Flos Sanctorumஐ வெளியிட்டார். இதை இவர் சரிபார்த்தபோது
“algunos naturales que saben y entienden bien esta lengua” (இம்மொழியைத்
தாய்மொழியாகக் கொண்டு நன்கு கற்றவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.)
Flos Sanctorum தொடர்பான முதன்மை மூல ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்றன. Historia das
vidas e feitos heroycos e obras insignes dos Sanctos, Com muitos sermoes
e praticas spirituais que servem a muytas festas do anno எனும் நூலின்
திருத்தப் பதிப்பினை 1577ஆம் ஆண்டு கொய்ம்பிராவில் வெளியிட்டார்.
இத்திருத்தப் பதிப்பு Father Henriques கையில் கட்டாயம் கிடைத்திருக்க வேண்டும்.
அவருடைய இரண்டாவது வெளியீட்டுக்கு அவர் பயன்படுத்திய ‘the Sanctorum priscorum
patrum vitae centum sexaginta tres’ எனும் பெயரிலான தொகுதிகள் முதன் முதலில்
அறிவியல் முறையில் துறவிகளின் வரலாற்றை விளக்கும் தொகுதிகளாக அமைந்திருந்தன.
இத்தொகுதிகளின் ஆசிரியர் Luigi Lippomano என்பவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் எட்டுத்
தொகுதிகளாக அமைந்த இந்நூலினை முதலில் 1551இல் வெனிஸிலும் பிறகு 1560இல் ரோமிலும்
வெளியிட்டார். ஹென்றிக் தன் முகவுரையில் குறிப்பிடும் மூன்றாவது நூல் De rebus gestis
vitisque Apostolorum liber என்பது, இந்நூலைத் தொகுத்தவர் Joachim Perion எனும்
பிரெஞ்சுப் பிரார்த்தகர், இவர் 1551ஆம் ஆண்டு பாரிஸில் இந்நூலினை வெளியிட்டார்.21
அடிக்குறிப்புகள்
1. S.G. Perera, S.J., The Jesuits in Ceylon, P.18, De Nobili Press,
Madura, 1941; D. Ferroli, S.J., The Jesuits in Malabar, Vol.1, Bangalore
Press, Bangalore City, 1939.
2. Americo cortez pinto, Da famosa Arte da Imprimissa, esp. p. 297ff.,
Editora “Ulisseia” Limitada, Lisbon, 1948.
3. Georg Schurhammer, S.J., G.W. Cottrell, Jr., The First Printing in
Indic Characters, Pp. 147-160, in Harvard Library Bulletin, Vol. VI,
No.2, Spring 1952.
4. Ibi., P. 150.
5. Francisco De sousa, S.J., Qriente conquistado a Jesus Christo pelos
Padres de companhia de Jesus de Provincia de Goa, Vol.II, PP.256-257,
Lisbon, 1710; Americo Cortez pinto, Da famosa Arte, op. cit, pp. 368-369.
6. See Preface to Doctrina Christam, Cochin, 1579: தமிழை நன்றாயறிந்த சில
கல்விமான்களைக் கொண்டு தமிழுக்கு நன்றாயினங்கத்தக்க சில வாத்தைசாவை தீர்த்துக்கொண்டு
இடறுகள் வராமல் அநேகமெல்லாந் தெண்டித்தார்.’’
Preface to Flos Sanctoru, 1586: “agora nuevamente en esteano di 86 se
imprimio esto libro cli la vida de los sanctos las quales communiqui con
algunos naturales que saben y entienden boen esta lengua, y porque estas
vidas saliessen bien apuradas gaste en las tresladar en esta lengua mas
de tres anos”.
7. See references to early printing in the works quoted above of Americo
Cortez Pinto, Da famosa Arte, and Georg Schurhammer and G.W. Cottrell,
The first printing in Indic Characters, O.C., cf. S.H. Steinberg, Five
hundred years of printing, Penguins ltd., Harmondsworth, Middlesex
(England), 1955. The Welsh Bible was printed in 1588 and the first book
in Irish was published in 1571.
8. “Livro da cartuxa de Scala Caeli deg.
Illmo et Revmo Sor D. Theotonio de
Braganca, Archbpo de Evora, che fez
donaca e foy fundador da mesma casa.
9. See article on this booklet by Sousa Viterbo in the daily, Diario de
Noticias, March 16, 1909, also Disuonario Bibliografico Portuguez,
Vol.II, P.216; Vol VII, pp.433, 434; ANTONIO JOAQUIM ANSELMO,
Bibliografia das obras impresas em Portugal no secolo xvi, No. 650,
Lisbon, 1926; AMERICO CORTEZ PINTO, Da Famosa Arte, op. cit., pp.357-359
and plates xvii-xi.
10. Antonio Joaquim Anselmo, Bibliografia das obras impresas em portugal
no secolo xvi, op. cit. No. 650.
11. Georg Schurhammer and G.W. Cottrell, The first printing in Indic
characters, O.C. Containsa Description of this booklet.
12. Robert Streit, Bibliotheca Missionum IV, 145.
13. See C.E.K., Notes on Early Printed Tamil Books, in Indian Antiquary,
Vol.II (1873), Pp. 180-181, and early printing in India, P. 98
14. S.G. Perera, The Jesuits in Ceylon, O.C., P.157.
15. See P.E. Pieris and M.A.H. Fitzler, Ceylon and Portugal, Vol.I,
Verlag der Asia Minor, Leipzig, 1927; G. Schurhammer, Ceylon Zu Zeit des
konigs Bhuvanka Babu and Franz Xavers, 2 Vols., Leipzig 1928.
16. Fernao De Queyroz, The Temporal and Spiritual Congust of ceylon,
Book II, P. 241, Colombo Government press, 1930.
17. S.G. Perera, The Jesuits in Ceylon, O.C., Passim.
18. Georg Schurhammer and G.W. Cottrell, J.R., The first printing in
Indic Characters, O.C., P. 157.
19. For particulars regarding Fr. Henriques, See Monumenta Historica
Societatis lesu, IO sephus wicki, Documenta Indica in which the letters
of H. Henriques are reproduced. See also Xavier S. Thaninayagam, Tamil
Manuscripts in European Libraries, in Tamil Culture, Vol.III (1954), pp
219-220, and BSOAS, Vol.III, P. 147.
20. S.G. PERERA, The Jesuits in Ceylon, O.C., P. 157.
21. See Joseph Wicki, O. “Flos Sanctorum” do P.H. Henriques, Impresso no
Lingua Tamul em 1586, in Bulletin do Institut wascoda gama, No. 73
(1956), pp. 43-49, Goa.
மொழிபெயர்ப்பு: தே.சிவகணேஷ்
முனைவர் பட்ட ஆய்வாளர். தமிழ் இலக்கியத் துறை, சென்னை பல்கலைக் கழகம்.
'Tamil Culture' தொகுதி VII (ஜூலை 1958) இதழில் வெளிவந்த கட்டுரை.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 7:26:04 AM5/30/15
to brail...@googlegroups.com
நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு வேளாளப் பெண்
8
விவரங்கள்
எழுத்தாளர்: பெர்னார்ட் பேட்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: ஆகஸ்ட்09
C வெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009
- தமிழக சுதேசி இயக்கச் சொற்பொழிவாளர்கள் குறித்த குறிப்புகள்
சுதேசியத்தைப் பொருத்தவரை, பொதுவாகவே இவ்விடம் சற்று மந்தமானது என்று நான்
நினைக்கிறேன்... கோவிலின் முன்னும், புதுமண்டபம் மற்றும் பஜாரிலும் நாலைந்து
மாதங்களுக்கு முன் ஓரிரு சொற்பொழிவுகள் நடந்தன. ஆனால் இவைகளைக் கேட்க வந்தவர்களின்
எண்ணிக்கை மிகக் குறைவே. கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவிலின் முன் நாற்பது வயது மதிக்கத்தக்க
ஒரு வேளாளப் பெண் சொற்பொழிவாற்றியதாகச் சொல்லப் படுகிறது.
சென்னை ஆவணக் காப்பகத்திலிருந்து இப்பகுதியைக் கண்டெடுத்துக் கொடுத்தவர் பெர்னார்ட் பேட்.
புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ஒருவரின் மதுரைப் பற்றிய, 9 நவம்பர் 1908 தேதியிட்ட,
அறிக்கையின் நகல், நவம்பர் 1908-டிசம்பர் 1908, தொகுதி 4, தமிழ்நாடு ஆவணக் காப்பகம்.
இக்காலகட்டத்தில் அளிக்கப்பட்ட பல அறிக்கைகளில் சுதேசி இயக்கத்தின் பால் வெளிப்படும்
ஏளனத்திற்கு இவ்வறிக்கை ஒரு எடுத்துக்காட்டாகும். சுதேசிகளை அவர்களின் வெற்றிகளுக்கும் -
தோல்விகளுக்கும் பிரிட்டிஷ் காவல்துறையும் அரசாங்கமும் இகழ்ந்தன. இன்ஸ்பெக்டர் பின்வருமாறு
எழுதுகிறார்.
மதுரையின் வக்கீல்களால் அதிகாரிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் ‘மாவட்ட
ஆட்சியாளரையும் நீதிபதியையும் மகிழ்வித்து மேலும் வழக்குகளைப் பெறுவது ஒன்றே அவர்களின்
குறிக்கோளாக உள்ளது’. சுதேசிகளின் கோட்பாடுகளுக்குப் பொருளாதார ஆதரவு கொடுத்தது
மிகச் சிலரே என்பதை இருந்த நாலைந்து சுதேசிக் கடைகள் எடுத்துக்காட்டின. அச்சுதேசிக்
கடைகளும் சில நூறு ரூபாய்கள் முதலீட்டில் இயங்கும்போது அவை கேலிக்குரியனவே தவிர
பிரிட்டிஷ் வணிகத்திற்கு போட்டியாக இருக்கவே முடியாது. மேலும் மதுரையில்
சுதேசியத்தின் ‘மந்தத் தன்மைக்கு’ சொற்பொழிவாளர்களின் தகுதியை விட வேறு சான்று
வேண்டுமா என்ன? ஒரு பெண் கடந்த ஏப்ரலில் சொற்பொழி வாற்றியுள்ளார்.
சுதேசி இயக்கத்தின் சொற்பொழிவாளர்கள் மிகச் சாதாரண நிலையில் இருந்தது கேலிக்கு இலக்காக
இருந்தது. பெரும்பாலும் காங்கிரசுடனோ, அரசாங்கத்துடனோ எந்தத் தொடர்பும் இல்லாத, எந்த
கௌரவப்பட்டங்களும் பெறாத இளம் வாலிபர்கள், மாணவர்கள், மாணவப் பருவத்தினர் போன்ற வர்களே
இயக்கத்தினராக இருந்தனர். அதிகாரப்பூர்வமான இந்தியாவையும் இந்தியச் சமூகத்தையும்
பொருத்தவரை இவர்கள் அரசியல் தெரியாத, யாரை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும், யாருடன்
பேசவேண்டும் என்பதெல்லாம் புரியாத நேற்று முளைத்தக் காளான்கள். இவர்களுடைய கூட்டங்களில்
மிக இள வயதினரே கலந்து கொண்டார்கள். பாரதியின் மெரினா கடற்கரைக் கூட்டங்களில் மாணவர்கள்
கலந்து கொண்டனர். ஆந்திர டெல்டா கிராமங்களில் கிருஷ்ணா மாவட்டச் சங்கத்தினர் ஏற்பாடு செய்த
இளம் சுதேசி சொற்பொழிவாளர்களின் கூட்டங்களிலும் மதுரை போன்ற சிறு நகரங்களின் பஜார்
கூட்டங்களிலும் “கூலிகள் மற்றும் சுமைத்தொழிலாளர்கள் விவசாயிகளுமே’’ கலந்து கொண்டனர்.
அவர்கள் சொற்பொழிவாற்றிய இடங்களும் அவர்களுடைய தாழ்ந்த அந்தஸ்த்தை குறித்தன. மேட்டிமை
மிக்கவர்கள், செறிந்த ஆங்கிலத்தில் மதறாசில் பச்சையப்பா ஹால் மற்றும் விக்டோரியா பப்ளிக்
ஹால், மதுரையில் விக்டோரியா எட்வர்ட் ஹால் போன்ற கூடங்களில் உரையாற்றினர். ஆனால்
சுதேசிகளோ பஜாரில் படிப்பறிவில்லாத காய்கறி வியாபாரி களிடமும் கூலித்
தொழிலாளர்களிடமும் உரையாற்றினார்கள். மதுரையைப் பொருத்தவரை இப்பொழுது மீனாட்சி
பூங்காவாக இருக்கும் ஆண்டிக்கடைப் பொட்டல் எனும் இடத்தில் உரையாற்றினார்கள். ‘கோவில் முன்’
என்று குறிப்பிடப்படுவது, கீழ வீதியில் புது மண்டபத்திற்கும் (1906 வரை நகரச் சிறையாக
இருந்த) சென்ட்ரல் மார்கெட்டுக்கும் இடையில் உள்ள இடம் ஆகும். மதுரை ஜில்லாத் தியாகிகள்
மலர் (1948) அறிக்கையின் படி சுதேசியக் கப்பல் கம்பெனிக்காக நிதி வசூலிக்க 1906இல்
வ.உ.சிதம்பரம் பிள்ளை இந்த இடத்திற்குத் தான் வந்தார்.
கூடம் என்பது சமூகரீதியாகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட இடம். ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச்
சார்ந்தவர்கள் கூடி, தினசரி முக்கியச் செய்திகளை ஆங்கிலத்தில் அலசும் இடம். ஆனால் பஜார்
என்பது பலதரப்பட்ட மக்கள் கூடும் இடமாக, அவர்களிடையே கருத்தாடல் மற்றும் வணிகத்துக்கான
வெளியாக இருந்தது. காலனிய இந்தியாவில் பொது வெளிக்கு நிகரான இடமாக பஜார்கள்
இருந்தன. அதாவது, பாரபட்சமில்லாத எல்லோருக் கும் பொதுவான வெளியாக (சிலர்
இவ்வெளியிலிருந்தும் ஒதுக்கப்பட்டிருந்தாலும்) இவை இருந்தன. இவைகளே வட்டார மொழிகளின்
முதல் வெளியாக இருந்தன. ஆரம்பத்தில் கிருத்துவ ப்ராடஸ்டெண்ட் போதனைகள் மூலமும் பின்னர்
அரசியல் உரைகள் மூலமும் உரைமரபு உருவானது. இந்த ‘பொதுத் தன்மை’ இப்படிப்பட்ட
வெளிகளின் தாழ்ந்த நிலையை குறித்தது. இங்கு உரையாற்றுபவர்களின் தாழ்ந்த அந்தஸ்தையும்
குறித்தது.
ஆயினும் அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிக்கையில் குறிப்பிட்ட தாழ்ந்த அந்தஸ்துக்கான
அடையாளங்களில் கவனத்தை மிகவும் ஈர்ப்பது அவ்வேளாளப் பெண்ணே. அவள் யார் என்று நமக்குத்
தெரியாது. அவள் பெயரும் தெரியாது. எங்கிருந்து வந்தாள் என்று தெரியாது. என்ன சொன்னாள்
என்றும் தெரியாது. ஆனால் நமக்கு என்ன தெரிகிறது என்றால் முதல் முறையாக ஒரு அரசாங்க
அறிக்கை-ஒரு பெண்-அது எந்தப் பெண்ணாக இருந்தாலும் - ஒரு அரசியல் கூட்டத்தில்
உரையாற்றியதைக் குறிப்பிடுகிறது. மதுரையில் சுதேசி இயக்கம் எவ்வளவு மந்தமாக இருந்தது
என்பதைக் குறிப்பதற்காகவே இன்ஸ்பெக்டர் அப்பெண்ணைப் பற்றிய செய்தியை அறிக்கை யில் சேர்த்தார்
என்பதற்கான சாட்சியாகவும் அவ்வறிக்கை விளங்குகிறது.
இது எப்படி நடைபெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, நாம் ஓர் ஆவணம் எப்படி
உருவாக்கப்படுகிறது, அது எதை யெல்லாம் உள்ளடக்கியது, சரித்திரம் எப்படி
எழுதப்படுகிறது -அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இப்பொழுது மிகத் தீவிரமாக
ஆராய்ச்சிப்பணி மேற்கொண்டிருக்கும் மாணவர் களால் எப்படி எழுதப்படுகிறது போன்றவற்றை
அறிந்து கொள்ள வேண்டும். 1960-70 காலகட்டத்தில் அரசாங்க அறிக்கைகளிலிருந்து
ஆயிரக்கணக்கான பகுதிகள் தமிழக சுதந்திர இயக்கத்தின் வரலாறு (History of Freedom
Movement) என்ற தலைப்பில் 106 தொகுதிகள் கொண்ட தட்டச்சுப் பிரதிகளாக தொகுக்கப்பட்டன.
பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டு அரசியலைக் குறித்து புதிய ஆராய்ச்சி
மேற்கொள்ளும் மாணவர்கள் மேற்குறித்த தொகுதிகளைக் கொண்டு தான் தம் பணியைத்
தொடங்குகிறார்கள். அத்தொகுதியின் மிக உபயோகமான ஒரு ஆவணமாக இருப்பதன் காரணம், அது
அரசாங்க ஆவணக்காப்பகத்தின் முக்கிய ஆவணங்களான, அரசாங்க ஆணைகளின் சிறு பகுதிகளைக்
கொண்டிருப்பது. மேலும் ஏதாவது ஒரு தொகுதியைப் படித்தாலே அக்கால கட்டத்தின் நிகழ்வுகளை
தலைமைச் செயலக அதிகாரிகள் எப்படிப் பார்த்தார்கள் என்று புரிந்துகொள்ளலாம். தமிழ்நாடு
ஆவணக் காப்பகத்தில் என்னுடைய பத்து மாதங்களுக்கும் மேலான அனுபவத்தில் செய்தித்தாள்களில்
வெளியானவை குறித்த அறிக்கை, பதினைந்து நாள் அறிக்கை, மற்றும் செயலாளர்
இரகசியக்கோப்புகள் ஆகியவற்றோடு மிக அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட ஆவணமாக இதுவும்
இருந்தது. இவ்வாவணங்களைக் கொண்டே இன்று சரித்திரம் எழுதப்படுகிறது.
இக்காலகட்டத்தின் குறிப்பிட்ட அரசாங்க ஆணைகளைப் பார்க்கும்போது சில ஆவணங்களின் ஓரங்களில்
மேலிருந்து கீழாக பென்சில் கோட்டுடன் ‘டைப்’ என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கும்.
ஆவணவியலாளர் அவர் பெரும்பாலும் ஆணாகவே இருந்திருக்கக் கூடும் - அரசாங்க ஆணைகளைப்
படித்து எவையெல்லாம் மேற்குறித்த தொகுதிகளுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டவை என
தட்டச்சாளருக்கு தெரிவிப்பதற்காக இக்குறிகளை இட்டிருக்க வேண்டும். இப்பென்சில் குறிகள்
அரைப் பக்க நீளத்திற்கு இடப்பட்டு, பின் நிறுத்தப்பட்டு, அடுத்தப் பக்கத்திலோ, ஓரிரு
பக்கங்கள் தள்ளியோ தொடர் கின்றன. எல்லாமே ஆவணவியலாளர் எதை சரித்திர முக்கியத் துவம்
வாய்ந்ததாகக் கருதுகிறார் என்பதைப் பொருத்தது.
மேலே குறிப்பிட்ட வேளாளப் பெண்ணைப் பற்றிய ஆவணத்தை பொருத்தவரை, கண்காணிப்பாளரின் முழு
அறிக்கையைக் காணவில்லை; ஆவணவியலாளர் பார்த்தது செயலக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட
கண்காணிப்பாளர் அறிக்கையின் முன்நகலே. அலுவலக ரீதியாக அனுப்பப்பட்ட அறிக்கை அல்ல.
புலனாய்வுத்துறை அறிக்கை கட்டுகளில் இவ்வறிக்கை காணப்பட்டது. 1970க்கு முன் இதுபோன்ற
கட்டுரை சுமார் நாற்பது வருட ஆவணங்களாக இருந்தது என அறிய முடியும். அவற்றுள் ஒன்பதுள்
ஒரு பங்குதான் மிச்சம். ஆகவே ஏப்ரல் 1908இல் கோவிலின் முன் நடந்ததைப் பற்றிய நமது
புரிதல் கீழ்கண்டவற்றைச் சார்ந்திருக்கிறது: யாரோ ஒரு கண்காணிப்பாளரின் தேர்வு,
செயலகத்திற்கு முன்நகலைத் தயார் செய்த ஒருவரின் தேர்வு, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு
ஒன்பது புலனாய்வுத்துறை தொகுதிகளில் இதைச் சேர்க்க வேறொருவர் எடுத்த முடிவு, மேலும்
தொகுதிகளை உருவாக்கிய ஆவண வியலாளர் முக்கியமானது எது, தேவையற்றது, சங்கடமானது
அல்லது சுவாரசியமற்றது எவை என்பது குறித்து செய்த தேர்வு ஆகியவை அடங்கும். ஒரு சிறு
நகரத்தின்ஆண்டிக்கடைப் பொட்டலில், ஒரு ஊர் பேர் தெரியாத பெண் உரையாற்றியது
முக்கியமற்றது. அவளைப் பற்றிய குறிப்புகள் தேவையில்லை. அவளை நினைவுகூற வேண்டிய
அவசியமும் இல்லை.
79ஆம் தொகுதி பக்கம் 167-168இல் இடம்பெறத்தக்கது என்று தொகுதியை உருவாக்கிய
ஆவணவியலாளர் நினைத்தது இதைத்தான்:
சுதேசியத்தைப் பொருத்தவரை பொதுவாகவே இவ்விடம் சற்று மந்தமானது என்று நான்
நினைக்கிறேன். வக்கீல்களில் நாராயண ஐயர் மற்றும் இன்னும் இரண்டொருவர் தவிர மற்றவர்கள்
எல்லோருமே மிதவாதிகள். அவர்கள் அரசாங்க அதிகாரிகளின் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியாளரையும் நீதிபதியையும் மகிழ்வித்து மேலும் வழக்குகளைப் பெறுவது ஒன்றே
அவர்களின் குறிக்கோளாக உள்ளது. மொத்தம் நாலைந்து சுதேசி கடைகளே உள்ளன. அவையும் சில
நூறு ரூபாய்கள் முதலிலேயே இயங்குகின்றன. கோவில் முன்பும் புது மண்டபத்திலும் பஜாரிலும்
நாலைந்து மாதங்களுக்கு முன் எப்போதாவது சில உரைகள் நிகழ்ந்தன. ஆனால் அவற்றுக்கும் கூட்டம்
மிகுதியாக இல்லை.
ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சில பெங்காலியர்கள் சந்யாசி வேடத்தில் சோம்பியிருக்கும்
இம்மக்களுக்கு எழுச்சியூட்ட வந்தார்கள் என்று கே.வி. இராமாச்சாரி சொன்னார்.
வேளாளப் பெண் பற்றிய குறிப்புக்கு முன்பே விடுதலை இயக்க வரலாற்றுத் தொகுதிகளின்
ஆவணவியலாளர் நிறுத்திவிட்டார். சில வாக்கியங்கள் நீக்கப்பட்டதற்கான குறியீடுகூட (...)
இல்லை. நியாயமாகப் பார்த்தால், கே.வி.இராமாச்சாரியைப் பற்றிய செய்திக்கு முன் இரு
வாக்கியங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று
1906இல் மிகச்சிறிய கூட்டமே வந்த ஜீ. சுப்ரமணிய ஐயரின் உரையைப் பற்றியது. இன்னொன்று
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் சுதேசி உரையாற்றிய (பெயர் தெரியாத) மூன்று
பார்ப்பனர்களின் வரவைப் பற்றியது. ஜீ. சுப்ரமணிய ஐயரும் மூன்று பார்ப்பனர் களும்
சரித்திரத்திலிருந்து ஏன் நீக்கப்பட்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை தொகுதி
ஆவணங்கள் தொகுக்கப்பட்ட காலகட்டமான 1960-70க்களில் நிலவிய அரசியல் வரலாற்றுப்
போக்குகளில் இருந்த ‘அரசியல்’ இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால்
கண்காணிப்பாளருக்குத் தகவல் தந்த கே.வி. இராமாச்சாரி சந்தேகப்படத் தக்க சந்யாசிகள்
பெங்காலில் இருந்து வந்ததைப் பற்றிச் சொல்லி யிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பிரிட்டிஷாரையும் இந்திய அறிவுஜீவிகளையும் பொருத்தவரை, பெயர் தெரியா விட்டாலும் எல்லா
பெங்காலிகளுமே - பிபின் சரித்திர பால் மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜியைப் போல -
உண்மையான சரித்திரச் செயல் திறம் வாய்ந்தவர்கள்.
மாறாக, ஏப்ரல் 1908இல் கோவில் முன்பு சுதேசி உரை யாற்றிய நாற்பது வயது மதிக்கத்தக்க
வேளாளப் பெண்ணின் கதியும் ஜீ. சுப்ரமணிய ஐயர் மற்றும் மூன்று பார்ப்பனர்களின் கதியும்
ஒப்பிடத்தக்கன - ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிர. சுதேசி இயக்கம் பெரும்பாலும் ஒரு
பார்ப்பன இயக்கமாகவே இருந்தது என்பது நமக்குத் தெரியும். மேலும் ஜீ. சுப்பிரமணிய
ஐயராலும் அவர் பற்றியும் எழுதப்பட்ட சரித்திரச் சான்றுகள், ஒரு தனிமனிதனைப் பற்றியச்
சான்றுகளிலேயே மிக அதிகமான எண்ணிக்கை வாய்ந்தவை. மாறாக, அவ்வேளாளப் பெண் ஒருமுறைதான்
சரித்திரத்தில் இடம்பிடித்தாள். அதுவும் சுதேசி இயக்கம் மதுரையில் எவ்வளவு மந்தமாக
இருந்தது என்பதன் அடையாளமாக. சரித்திரத்தில் அவள் எழுதப்பட்டது அவளுடைய
முக்கியத்துவமின்மையால் ஆகும். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு
ஆவணக்காப்பகம் மூலமாக சரித்திர உருவாக்கத்தை யாரோ ஒருவர் வடிவமைத்தபோது மறுபடியும்
அவள் சரித்திரத்திலிருந்து நீக்கப்பட்டாள். ஒரு பெண் என்பதால் முக்கியத்துவம் அற்றவளாக அவள்
இருந்தாள்.
(பெர்னார்ட் பேட் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் நவம்பர் 2008க்கும் மே 2009க்கும் இடையில்,
சுமார் 700 மணிநேரம் தமிழ் அரசியல் சொற்பொழிவு குறித்த ஆய்வை மேற்கொண்டவர். கொலம்பியா
பல்கலைக்கழக பதிப்பகம் பதிப்பிக்கவிருக்கும் ‘மேடைத்தமிழும் திராவிட அழகியலும்’ என்ற
நூலின் ஆசிரியர். யேல் பல்கலைக்கழகத்தின் மானிடவியல்துறைப் பேராசிரியர்.
இதனை மொழியாக்கம் செய்தவர்: க.லதா, ஆங்கிலத்துறை, ஸ்டெல்லா மேரி கல்லூரி, சென்னை.)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 7:31:16 AM5/30/15
to brail...@googlegroups.com
மதச்சார்பற்ற கலைகளுக்கான போராட்டம்: கேரள
சிற்பி கானாயி குஞ்ஞிராமனுடன் உரையாடல்
8
விவரங்கள்
எழுத்தாளர்: எ.டி.மோகன்ராஜ்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: ஆகஸ்ட்09
C வெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009
கானாயி குஞ்ஞிராமன் (1937- )
சென்னை கலைக்கல்லூரியில் பயின்றவர். 1957இல் ஓவியம் கற்க சென்னை வந்து கே.சி.எஸ்.
பணிக்கரைச் சந்தித்தார். பணிக்கர் இவரிடம் ஒரு சிற்பியைக் கண்டு சிற்பத்துறைக்கு திசை
திருப்பினார். சிற்பக்கலையை தேவி பிரசாத் ராய் சௌத்திரியின் மாணவராகக் கற்றார்.
சென்னையில் சிற்பக்கலை பட்டயப் படிப்புக்குப் பின் லண்டனில் உள்ள Slaid School of Arts
இல் மேற்கல்வி பெற்றுத் திரும்பினார். திருவனந்தபுரம் கலைக்கல்லூரியில் பேராசிரியராகப்
பணியாற்றினார். கானாயியின் கலை வாழ்க்கை நிறையப் போராட்டங்களை சந்தித்தது. இன்று கேரளம்
எங்கும் கானாயியின் சிற்பங்களைக் காணலாம்; குறைந்தது மாவட்டத்திற்கு ஒன்றாவது உள்ளது.
இவர் தற்போது கேரள லலித்கலா அக்காதமி தலைவராக உள்ளார். கலைக்கு அளிக்கப்படுகின்ற
பெருமைக்குரிய ‘ராஜா ரவிவர்மா’ விருது பெற்றவர். ஒரு லட்சம் ரூபாயும் பட்டயமும்
சிற்பமும் கொண்டது இப்பரிசு. இப்பரிசுக்கான சிற்பத்தை வடிவமைத்தவரும் கானாயிதான்.
சாகித்ய அகாதமி தங்கள் மோணோகிராம் வெளியிட்டுள்ளது. தில்லியிலிருப்பவர்கள் அங்கீகரித்தது
சந்தோஷம்தானே?
நான் தில்லிக்குப் போகவில்லை. அவர்கள் இங்கே வந்து புத்தகம் வெளியிட்டார்கள்.
சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நாற்பதாண்டுகளுக்கு மேல் வேறெதிலும் ஈடுபடாமல் மதச்சார்பற்ற
கலைக்காக நான் போராடிவந்தேன். அதில் வெற்றி பெற்றதாகக் கருதுகிறேன்.
சிற்பக் கலைக்காகப் போராட வேண்டி வந்தது என்றா கூறுகிறீர்கள்?
சிற்பக் கலையைக் கோவில்களின் மதில் சுவர்களுக்கு வெளியே பொதுவிடத்திற்கு கொண்டு வந்த
முயற்சியைப் போராட்டமா கவே கருதுகிறேன். அதற்காக துணிச்சலுடன் செயல்பட்டேன். சிற்பம்
மதம் சார் கலையாக இருந்தது. மரபுக்கலையாகவே இருந்து வந்த சிற்பக்கலைக்கு ஒரு
தன்னிச்சையான, சுதந்திரமான இருப்பை உருவாக்க இயன்றது. சிற்பத்தை கலைத்துறைக்குள்
கொண்டுவர இயன்றது. நிறையவே எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டி வந்தது. உடல்மீதான
தாக்குதல்களுக்குப் பயந்து வாழ்ந்த நாட்களுமுண்டு. ‘மலம்புழா’விலும் ‘வேளி’யிலும்
தொழிலாளர்கள்தான் எனக்குப் பாதுகாப்பளித்தனர். நான் அவர்களில் ஒருவனாகவே வாழ்ந்தேன். ஆசான்
நினைவகத்திலும் கூட அந்த அச்சுறுத்தல் தொடர்கிறது.
மாத்யமம் இதழில் நடத்திய எதிர்வினைகள் பற்றி நீங்கள் கருதுவதென்ன?
யக்ஷி போலவொரு சிற்பம் அமெரிக்காவில் கூடக் கிடையாது. கேரளமாக இருந்ததால் மட்டுமே
அதைச் செய்ய இயன்றது. இங்குள்ள சாதாரண மக்கள் கூட அதை ஏற்றுக் கொண்டனர். இந்தியாவில்கூட
வேறெங்கும் அதைப் போலொரு சிற்பம் இல்லை. அமெரிக்காவில் நான் ‘யக்ஷி’யின் சிலைடு காட்டிய
போது ‘இதெல்லாம் உங்கள் நாட்டில் எப்படி நடந்தது’ என்று சிலர் என்னிடம் வியப்புடன்
கேட்டனர். நிர்வாணம் இந்த அளவு பாப்புலர் ஆக (நவீன கலையில்) வேறெங்கும் இல்லை. ‘யக்ஷி’
ஒரு திருப்புமுனையாகி விட்டதல்லவா? சாதாரணமாக இதுபோன்ற சிற்பங்கள் தனியார் முதலீட்டில்
மட்டுமே செய்யப்படும். ஆனால் ‘யக்ஷி’யும் ‘வேளி’யும் ஒரு பொது முதலீடென்பதை நீங்கள்
மறக்கக் கூடாது. தனியாரின் பணமல்ல; அரசாங்க முதலீடு - பொதுமக்கள் பணம். சிற்பம் என்ற
ஊடகத்தைப் புழக்கப்படுத்தி அங்கீகரிக்கச் செய்தது சிறு விஷயமொன்றுமல்ல.
‘யக்ஷி’யின் நோக்கமென்ன? உளவியல் ரீதியாகத் தூண்டுவதா?
அப்படியேதும் சொல்வதற்கில்லை. நிர்வாணம் இந்திய மரபில் உண்டு. தாயை-இயற்கையை இந்திய
சிற்ப மொழியில் நான் வெளியிட்டேன். அது ஒரு வெடிகுண்டாக வெடித்தது. நமது பாலியல்
சார் கற்பிதங்களும் அணுகுமுறைகளுமே அதற்குக் காரணம்.
இந்த அளவுக்கு பெரியபெரிய சிற்பங்களை உருவாக்குவது ஏன்?
ஒருவேளை எனது ஊரிலுள்ள தெய்வங்களின் உருவ அமைப்பின், தனித்துவத்தின் தாக்கமாக
இருக்கலாம். பெரிய - உயரமான கிரீடம் - இருபத்தைந்து அடிக்கு மேல் கூட உயரமான பகவதி
தெய்வங்கள், வட்ட வடிவில் விசாலமான கிரீடம் கொண்ட தெய்வங்கள் இவையெல்லாம் என்
ஊரிலிருக்கின்றன. தெய்வத்தை சிற்பமாக மட்டுமே என்னால் காண இயலும். பெரிய அளவுகளில்
செய்ய அகாதமிக் கல்வியும் பயிற்சியும் எனக்கு உதவியது. சந்தானராஜின் ஓவியங்கள் கூட
தாக்கம் செலுத்தியிருக்கலாம்.
ஓவியங்கள் சிற்பியிடம் தாக்கம் செலுத்துவதெப்படி?
சிற்பியால் தவிர்க்க இயலாதது ஓவியம். அனைத்து விதமான காட்சிக் கலையிலும் ஓவியத்தின்
பங்கு இன்றியமையாதது. நடனத்தின் அடிப்படைத் தத்துவம் அரங்க அசைவின் அடிப்படைத் தத்துவம் -
கான்டூர் லைன் டிராயிங்காக இருக்க வேண்டும். ஓவியம் பயில வரும் மாணவர்களை சிற்பக்கலை
கற்பிக்க வேண்டுமென்று சொல்வது அதனால்தான். முப்பரிமாணத்தை இரு பரிமாணமாக்க அது
மிகவும் உதவும்.
யக்ஷி, வேளி சிற்பங்களில் கான்டூர்லைன்ஸ் ஒரே மாதிரியானவை அல்லவே?
சூழலுக்கு ஏற்ப அது மாறும். ‘யக்ஷி’க்கு ‘ரஃப்’ ஆன ஒரு இஃபக்ட் அவசியமானதால் கான்டூர்
லைன்கள் தடிப்பானதாக அமைந்தது. ‘வேளி’யில் அப்படிச் செய்யவில்லை. அங்கு கான்டூர் லைன்கள்
வெளி (atmosphere)யில் முயக்கப்பட்டுள்ளது.
சிற்பங்களின் அமர்த்தலில் உள்ள தனித்தன்மையால் தானே இது நிகழ்கிறது?
அது மட்டுமல்ல. வழக்கமாகச் சிற்பங்கள் ஏதேனுமொரு வைப்பு மேடையின் மீது நிறுவப்படும்.
இங்கு நான்தான் முதன்முறையாக வைப்பு மேடையற்ற சிற்பங்கள் செய்தேன். சிற்பத்தை இயற்கை /
சூழலுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தினேன். சிற்பம் அமைகின்ற இயற்கைக்கு ஏற்ப கான்டூர்
லைன்ஸ் மாறும்.
சிற்பங்களின் textureரிலும் மாற்றம் உள்ளதே?
Texture கலையின் ஒரு கூறு. பொதுவாக எல்லாச் சிற்பிகளும் அவரவருடைய பாணியில் இதைச்
செய்வார்கள். எனது செயல்களுக்கு ஏற்ற Texture நான் தேர்வு செய்கிறேன். ‘யக்ஷி’
சிற்பத்தில் அது கரடுமுரடாக இருந்தது. சங்குமுகம் சிற்பத்தில் அப்படியில்லை. உண்மையில்
சிற்பம் ஒளி நிழலின் மாயவித்தை. அதை நிகழ்த்துவதில் texture இன்றியமையாதது. texture
வடிவை மாற்றுகிறது. மனிதனே நிற்கிற, மனிதனின் நிற்கிற உருவம் ஆகிய இரண்டில்
மனிதனின் நிற்கிற சிலை உருவமே நம் மனம் கவரும்.
ஃபிகரேட்டிவ் (Figurative) படைப்புக்கள்தானே நிறையவும்?
ஃபிகரேட்டிவ், அப்ஸ்ட்ராக்டும் செய்கிறேன். அது ஒரு மொழி. இரண்டு முறைகளிலும்
ஈடுபடுகிறேன். எந்த ஒன்றோடும் தனித்த அதீத நாட்டம் கிடையாது.
அனுபவங்கள் சொல்லவியலாத அளவு சிக்கலாகும் போது கலையின் உருவம் அப்ஸ்ட்ராக்ட் ஆகுமென
நவீனத்துவவாதிகள் சொல்கிறார்களில்லையா?
அறிவியல் வளர்ச்சி காரணமாக ஐரோப்பிய நவீனத்துவக் கலையில் பற்பல இயக்கங்கள் தோன்றின. அங்கு
அறிவியலில் புதுப்புது கண்டுபிடிப்புக்கள் நிகழ்கின்றன. இங்கே அப்படி என்ன இருக்கின்றது.
இங்கே சாதியும் மதமும் மூடநம்பிக்கை களும்தான் இன்னமும் நம் சிந்தனையை வழிநடத்துகிறது.
இங்கே மேலைநாடுகளில் இருப்பது போன்ற பார்வைகள் ஏற்படுவது கடினம்.
வேளி, பய்யம்பலம் போன்ற இடங்களில் மிகவும் வித்தியாசமான எதிர்பாராத இடங்களில் சிற்பங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. டிசைனிங் வாய்ப்புக்கள் தானே அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?
நவீனத்துவக் கலையில் ‘டிசைனிங்’ இன்றியமையாதது. செஸானும், பிக்காசோவும் தமது
கலைப்படைப்புகளில் டிசைனிங்கை தாராளமாகவே பயன்படுத்தியுள்ளனர். செஸானின் ‘இயற்கை’
பற்றிய ஓவியங்களில்கூட அதைக் காண லாம். மான்ட்ரியானின் ஓவியங்களிலும் டிசைனிங் ஆற்றலைக்
காணலாம். மான்ட்ரியானின் ஓவியங்கள் ஆர்க்கிடெக்சரில் மாற்றம் ஏற்படுத்தின. டிசைனிங்
ஆற்றலால்தான் அது நிகழ்கிறது. உருவத்திற்கு அடிப்படை வடிவம் அளிப்பது டிசைனிங்தான்.
அடிப்படையான வடிவத்தை எளிமைப்படுத்தினால் டிசைனாக மாறும். சிலர் அதனை Functional
designஇற்கு கொண்டு செல்கின்றனர். Commercial artஇல் இதுதான் பயன்படுகிறது. ஒவ்வொரு
ஓவியரும் டிசைனை ஒவ்வொரு முறையில் பயன்படுத்துகின்றனர். Constantin Brancusi
மினிமல் டிசைனை வைத்துக் கொண்டு சிற்பங்கள் செய்தார். அவற்றை டிசைன் மட்டுமே என்று
கூறுபவருண்டு. ஆனால் சிற்பிக்கு அது ஒரு உன்னதக் கலைப்படைப்புத்தான். கலை வெறும்
Decoration மட்டும் அல்ல. பிரான்குசி ஒரு புதிய காட்சிமொழியைக் கொண்டுவந்து
சிற்பக்கலையில் புரட்சி செய்தார்.
பிரான்குசியைப் போல நவீனச் சிற்பக்கலையின் மொழியைப் படைத்த ஆல்பர்டோ ஜியாகொமெட்டி
ஊடகத்தை மிகவும் மினிமல் ஆகவே பயன்படுத்துகிறார். அவரது பாணி பற்றி...
மிகவும் தனித்துவம் வாய்ந்த கலைஞர் ஜியாகொமெட்டி; அவர் இருப்பியல்வாதக் கலைஞர்.
சார்த்தரின் நண்பர். அவரது சிற்பங்களை பிற சிற்பிகளின் சிற்பங்கள் போல மதிப்பிட்டுவிட
முடியாது. அவரது தரிசனத்தின் வெளிப்பாடாகவே அதைக்கருதி அணுகவேண்டும்.
ஊடகத்தைப் பயன்படுத்துவதில் நுண்மை - பருண்மை வேறுபாடுகளுண்டல்லவா...?
அவற்றை முதன்மைப்படுத்த வேண்டியதில்லை. கலைஞன் மிகப்பொருத்தமானதைத் தேர்வு செய்யலாம்.
கலைப்படைப்பில் அது எவ்வாறு வெளிப்படும் என்பதையே சிந்திக்க வேண்டும்.
தங்களின் பாணி பற்றி...
பாணி உயிர்ப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். கருத்தைத் தொடர்புறுத்த இயல வேண்டும்.
சுதந்திரமே எனது கலையின் பாணி.
அது நவீனத்துவக் கற்பிதமல்லவா?
ஆமாம். கலை, சுதந்திரம் என்பதற்கான மாற்றுச்சொல். ஆகவே அது முன்தீர்வுகளால் ஆகக்கூடாது.
ஸ்டைல் உருவாக வேண்டும்; உருவாக்குவது அல்ல. தனித்துவமான, தனதாகிய ஸ்டைல் தானே வரும்.
ஸ்டைல் போலச் செய்துவிட்டால் அது மிமிக்ரி ஆகிவிடும். ஸ்டைல் இயல்பாக உருவாகி எழுந்து
வருவது.
பின்நவீனத்துவம் மிமிக்ரியை அங்கீகரிக்கின்றதே...
அந்த மிமிக்ரியை இங்கு கூறவில்லை. பின்நவீனத்துவம் கலைஞனின் சுதந்திரத்தை அதிகரித்தது.
ஜிutஷீக்ஷீ செய்யாமலேயே கலைப்படைப்பில் ஈடுபடலாமென்ற நிலை ஏற்பட்டது.
ஓவிய - சிற்பக் கலைகளின் இணைவால் உருவான Installation art இன்று புழக்கத்தில் வந்து
கொண்டிருக்கிறது. இன்ஸ்டலேஷன் கூறுகள் தங்கள் படைப்புக்களிலும் காணப்படுகின்றதே.
இன்ஸ்டலேஷன் என்பது வைப்புநிலைக் கலை. ஒரு சாதாரணமான பொருள் ஒரு தனிப்பட்ட சூழலில்
கலைப் படைப்பாக அங்கு மதிப்புப் பெறுகின்றது. நான் பிரிட்டனில் படித்துக் கொண்டிருந்த
நாட்களிலேயே அங்கு இன்ஸ்டலேஷன் கலை புழக்கத்திலிருந்தது. நான் இங்கு 1979இல் இன்ஸ்டலேஷன்
படைப்பைச் செய்தேன். இன்ஸ்டலேஷன் இரண்டு வகை; Permanent installation, Instant
installation. எனது ‘முக்கோலப் பெருமாள்’ ஒரு பெர்மனன்ட் இன்ஸ்டலேஷன். இன்ஸ்டன்ட்
இன்ஸ்டலேஷனும் நான் செய்திருக்கிறேன். ஐரோப்பாவில் Pop art, Minimalist art,
Readymade art இவை இன்ஸ்டலேஷனில் தாக்கம் செலுத்தின. எங்கும் வியாபார நோக்க உற்பத்திப்
பொருட்கள் பெருகும் வேளை அவற்றை கலைப்படைப்பாக்கும் முயற்சியும் ஏற்படும். அங்கே
டானிகிரேக், இன்னும் சிலரும் இதை முன்பே செய்துவிட்டனர். நான் எனது மாணவர்களிடம் முன்பே
இது பற்றிக் கூறிவந்தேன். சிலர் சோதனைகள் செய்து வெற்றி பெற்றுள்ளனர். சிலர் ஐரோப்பியரின்
வெறும் மாதிரிகளாகித் தோல்வியடைந்தனர். ஐரோப்பியர் கீழை நாடுகளிலிருந்து நிறையவே
எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் அவற்றைத் தமதாக உருமாற்றிக் கொள்வர். நாம் அவற்றை
மாதிரிகளாக பின்பற்றுவோம்.
இன்ஸ்டலேஷனுக்குப் பல தளங்களுண்டு. இதை முதன்முறை யாக கவிஞரும் ஞானியுமான
ஸ்ரீநாராயணகுரு பயன்படுத்தினார். ஆச்சரியப்பட வேண்டாம். இதை நான் பல வருடங்களுக்கு
முன்னரே குறிப்பிட்டுள்ளேன். பொதுவாகக் கருவறையில் கடவுட்சிலைகள் பிரதிஷ்டை
செய்யப்படும். ஆனால் குரு அருவிப்புற ஆற்றங்கரையில் கிடந்த உருளைக் கல் ஒன்றை எடுத்து
நிறுத்தியபோது அதுவொரு கடவுட் சிலையானது. கவிஞருமான குரு வெறும் கல்லைச்
சிற்பமாக்கினார்.
இருபதாண்டுகளுக்குப் பின் ஐரோப்பாவில் தாதாயிஸ்டுகளும் இதைத்தான் செய்தனர். வழியோரம்
வீசியெறியப்பட்டதொரு போர்சிலைன் கழிவறை - யூரினல் (1914)ஐ மார்ஷல்துஷாம்ப்
கலைப்படைப்பாக்கினார். நாராயணகுருவின் சிலைப் பிரதிஷ்டையையும் இதே பொருளில் காணலாம்.
ஆயிரம் வார்த்தைகளால் சொல்லிவிட இயலாததை ஒரு கல் பிரதிஷ்டையால் சொல்ல இயன்றது. அதுதான்
சிற்பத்தின் ஆற்றல். சிற்ப மொழியின் வரம்பற்ற வாய்ப்பு. இதைத்தான் கலையுலகில் துஷாம்ப்
செய்து காட்டினார். இரண்டும் யதார்த்துவத்துக்கெதிராக விடப்பட்ட சவால்கள். தாதாயிஸ்டுகள்
கல், கண்ணாடியால் கலைப்படைப்புக்கள் செய்தனர். குரு பல ஆண்டுகள் முன்பே இதைச் செய்தது -
இப்படியரு தரிசனம் ஏற்பட்டது வியப்புக்குரியது.
ராஜாரவிவர்மா ஐரோப்பியக் கலையை பதிவு செய்தார். குரு கவிஞரானதால் அவரே அறியாமல்
இது நிகழ்ந்துள்ளது. ஓவியத்தில் ரவிவர்மா செய்ததற்கு நிகரான செயல் இது. குரு
சிற்பத்தின் ஆற்றலை உணர்ந்திருந்தார். பின்னாளில் கண்ணாடியை பிரதிஷ்டை செய்தார்.
இப்பொருட்களை எல்லாம் ஐரோப்பியக் கலையுலகம் பின்னர் பயன்படுத்தியது.
ஆற்றுக் கல்; பொதுவழி யூரினல் இவை இரண்டும் சூழல் மாற்றப்பட்டு ஒரு வைப்பு மேடை
(Pedestal)யில் வைக்கப் பட்டபோது புரட்சிகரமானது. குரு ஓர் ஆன்மீகவாதியாக இருந்து
செய்ததை தாதாயிஸ்டுகள் கலைஞர்களாக நின்று செய்தனர். குருவிடமிருந்து நமது கலைஞர்கள்
இன்ஸ்டலேஷனைக் கற்கவேண்டும்.
ஹென்றிமூர், ழான் ஆர்வி இவர்களின் ஸ்டூடியோவுக்கு நான் சென்றபோது அங்கு இதே பொருட்களைக்
கண்டேன். பல வடிவங்களில் சிறிதும் பெரிதுமான கற்கள் பாலிஷ் செய்தனவும் செய்யாதனவுமாக
வைக்கப்பட்டிருந்தன. சூழலே ஒரு பொருளைக் கலைப்படைப்பாக்குகிறது. கோவில்களுக்குள்ளும்
சுவர்களிலும் தூண்களிலும் இருந்து வந்த யக்ஷியை ஒரு திறந்த வெளியில் நிறுத்திய போதும்
இதுதான் நிகழ்ந்தது. அது மரபுக்கலையின் மறுவடிவாக்கமல்ல.
செவ்வியல் கலையில் அணி அலங்காரத்துடன் காணப்படுகின்ற யக்ஷியை அலங்காரமேதுமின்றி உட்கார
வைத்திருக்கிறீர்களே?
ஐரோப்பாவில் கூட நிர்வாணம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நான் ஒரு மலையாளி செய்தபோது
அப்படியன்றும் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை. கலைவரலாற்றில் இதற்கு நிகராக ‘எட்வர்ட்
மானோ’வின் ‘லஞ்ச் ஆன் த கிராஸ்’ என்ற ஓவியம் ஒன்று மட்டுமே உள்ளது. கோட்டும் சூட்டும்
அணிந்த ஆடவர்களுக்கிடையே முழுநிர்வாணமாக ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். அங்கு அது
பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது அவர்களின் மனோபாவத்தையே மாற்றி
அமைத்தது. யக்ஷி கேரளத்திலும் அதே மாற்றங்களை உருவாக்கியது. அந்த நாட்களில்
‘கஸாக்கின்டெ இதிகாசத்திலும் இது இருந்தது. ஓ.வி. விஜயன் ஒருமுறை என்னிடம் கூறினார்
“நீங்கள் அதிர்ஷ்டக்காரர். இது போலொரு புத்தகம் எழுதி யிருந்தால் என்னை என்ன
செய்திருப்பார்கள்!’’ சிற்பங்களின் ஆற்றல் அளப்பரியது. சிற்பமானதால் மட்டுமே
அங்கீகரிக்கப்பட்டது. ஃபிகரேட்டிவ் ஆர்ட் ஆக இருந்தும்கூட ஏற்கப்பட்டது. இங்கே எழுத்துக்கு
மட்டும்தான் பிரச்சினைகள்.
இன்ஸ்டலேஷன் ஆர்டிற்குப் பின்னர் பெர்பமன்ஸ் ஆர்ட், கன்செப்சுவல் ஆர்ட், நியோ டாடா போன்ற
ஓவியக்கலை இயக்கங்கள் மேற்குக் கலையுலகில் தோன்றின. அவற்றிற்கு நிகராக நமது கலையுலகில்
மாற்றங்கள் நடந்துள்ளனவா?
ஐரோப்பாவில் அறிவியல் வளர்ச்சியுடன் இணைந்து கலைத்துறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. கலையை
ஓர் அருளாக அவர்கள் கருதுவதில்லை. புதியமொழி கண்டடையவே முயல்கின்றனர். இங்கு
அப்படியில்லை. பெருமளவும் பகடியும் மிமிக்ரியும் மட்டும்தான். இந்திய மரபின் ஏதோ
தொலைதூரச் சுவடுகள் தென்படுவதால் சில தப்பித்து நின்று விடுகின்றன.
மரபைப் பற்றிக் கூறியதால் கேட்கிறேன். மெட்ராஸ் காலேஜ் ஆப் ஆர்ட் அன்ட் கிராப்டின் கலைப்
பாரம்பரியம் என்ன? கல்லூரி முதல்வராக இருந்த டி.பி.ராய்சௌத்ரி புகழ்பெற்ற சிற்பியாக
இருந்தவராயிற்றே?
ராய்சௌத்ரி மிகவும் பிரபலமானவர். அவர் செவ்வியல் ரசனைகள் கொண்டவர். அவர் பணி ஓய்வு
பெற்றபின் நான் அங்கு மாணவனாகச் சென்றேன். இருப்பினும் அவரோடு நெருங்கிப்
பழகியிருக்கிறேன். நான் கற்றுக் கொண்டிருந்த நாட்களில் கே.சி. எஸ். பணிக்கர் முதல்வராக
இருந்தார். அவரும் சௌத்ரியின் மாணவரே எனினும் அவரது கலைப் பாணியை கொஞ்சமும்
விரும்பாதவர் பணிக்கர். பணிக்கர் இம்ப்ரஷனிசப் பாணியைப் பின்பற்றுபவர். சௌத்ரி பணிக்கர்
இருவரின் கலைக் கொள்கைகளுக்காக சென்னைக் கலைக் கல்லூரியில் கோஷ்டி மோதல்கள் கூட
நடந்துள்ளன. பணிக்கர் மாணவர்களை நவீனத் துவ இயக்க அசைவுகள் நோக்கி வழிநடத்தினார். சௌத்ரி
நவீனத்துவத்தைப் புறக்கணித்திருந்தார். இவர்களிடையே கடுமையான கருத்து மோதல்களும் போட்டா
போட்டிகளும் நடந்து வந்துள்ளன. சென்னைக் கலைக் கல்லூரி வளாகத்தில் சௌத்ரி செய்த
‘சுதந்திரத்தின் சிலை’ ஒன்றிருந்தது - பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்த மாபெரும் சிலை.
அகாடமிக் ஸ்டடிக்கான ஒரு உன்னத மாதிரி அது. சௌத்ரி பணி ஓய்வு பெற்றபின் பணிக்கரும்
பிறரும் அச்சிலையை உடைத்து தகர்த்து எறிவதை நான் நேரில் கண்டிருக்கிறேன். அச்செயல் என்னை
மிகவும் துன்புறுத்தியது. ஒருக்காலும் செய்யக்கூடாத ஒரு செயலாக நான் இன்றும் அதைக்
காண்கிறேன். சிற்பக்கலை மாணவர்கள் பார்க்கவும் பயிலவும் உதவும் அற்புதமான சிற்பம் அது.
பழமையைத் தகர்த்தெறியும் ஒரு ப்யூச்சரிஸ்ட் ஆவேசமாக அதைக் காணலாமே?
பணிக்கரின் அச்செயல் ஒரு ப்யூச்சரிஸ்ட் கலைச்செயல் பாடல்ல. சௌத்ரியின் அடையாளங்கள் ஒன்றுகூட
மிச்ச மிருக்கக் கூடாது என்ற பிடிவாதம் மட்டுமே அது.
ராய்சௌத்ரிக்குப் பின்...
ராய்சௌத்ரிதான் என்னிடம் தூண்டுதல்களை உருவாக்கியவர். அவரது மாணவரான உலகநாத முதலியார்
எனது ஆசிரியர். அவர் சௌத்ரியின் பாணியைத் தொடர்ந்து வந்தார். புதுமையை ஏற்கத்
தயங்கினார். நான் வகுப்பற்ற வேளைகளில் புதுமையாக ஏதேனும் செய்து வந்தேன். நான் இல்லாத
வேளைகளில் அவர் அவற்றை நாசமாக்கி விடுவார். நான் ஓர் இரையாக இருந்தேன் என்றுதான்
கூறவேண்டும்.
ராய்சௌத்ரியின் சிற்பங்கள் - Portraitகள் பிரபலமானவை. இந்திய சிற்பக்கலை வரலாற்றில்
அவரது இடம் பற்றி...
அவரது படைப்புக்கள் பல இடங்களில் உள்ளன. இங்கு Public art சிலைகள் அரசர்களும் பிறரும்
அவையனைத்தும் செவ்வியல் விதிகளுக்கேற்ப செய்யப்பட்டவை. அதிகாரத்தின் வலிமை தோரணை
அவற்றில் வெளிப்படுகின்றன. அவை அதிகாரத்தின் காட்சிப்படுத்தல்கள். ஐரோப்பிய சிற்பக்கலை
ஆதிக்கம் இந்தியத் தன்மையை இல்லாமல் செய்கிறது. இந்த இயல்பை மீறி வர சௌத்ரி பாடுபட்டார்.
நிறைய பங்களித்தும் இருக்கிறார்.
ராம் சிங்கர் பெயிஜினின் சிற்பங்கள் பற்றி...
நிறைய மாறுதல்களை உருவாக்கிய சிற்பி அவர்தான். இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்
அவர் செயல்பட்டு வந்தார். அவர் Free lance ஆக உருவாக்கிய சிற்பங்கள் கூட பெரிய
மாறுதல்களுக்கு காரணமாகியுள்ளது.
தன்ராத் பகத்தின் கலைத்தன்மையை எப்படி மதிப்பிடலாம்?
நமது சிற்பிகளிடையே இந்திய இயல்பை உண்மையாக பிரதிபலித்தவர் பகத். அதற்காகவே அவரது
படைப்புகள் கவனிப்புப் பெற்றன. சிற்பக்கலையை இந்தியப்படுத்த அவர் மிக முயன்று
பங்காற்றியுள்ளார். இந்தியக் கலையின் மெல்லியல் தன்மையை அவரது படைப்புக்களில் காணலாம்.
ராம்சிங்கரிடமும் இவ்வியல்பு இருந்ததே...
இருந்தது. போகப்போக ராம்சிங்கர் அளப்பரிய மேலைத் தாக்கம் உடையவராகி விட்டார்.
ராகவ் கனேரியின் சிற்பங்கள் பற்றி...
ராகவ் கனேரியின் சிற்பங்கள் மோசமானவையல்ல. ஆனால், அவற்றிற்கு இந்தியத்தன்மை குறைவு.
சோம்நாத் ஹோரின் சிற்பங்கள் கவனித்ததுண்டா?
சமூக விழிப்புணர்வு ஊட்டுவன ஹோரின் சிற்பங்கள்.
இவர்கள் நிறைய பங்களிப்புச் செய்திருக்கிறார்களே...
இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் அதிகமாக இயலும். அவர்கள் (ஒவ்வொரு
நிறுவனங்களில்) அனைவரும் கற்பித்து கற்பித்து வெறுமையடைந்து போனார்கள். நான் என்
அனுபவத்திலிருந்து சொல்கிறேன். நல்ல கலைஞன் - முதல்தேதி சம்பளம் வாங்குபவனாக இருக்கக்
கூடாது.
கானாயி ஒரு டூரிசம் சிற்பி. சுற்றுலாத் துறையை வளர்க்க சிற்பங்கள் செய்தவர் என்ற உங்கள்
மீதான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
சுற்றுலாவை ஊக்குவிக்க நான் ஒரு சிற்பமும் செய்ததில்லை. சுற்றுலா வணிகமயமாகிப் போனபின்
என் ஆர்வம் குறைந்து போனது. கேரளத்தின் பொதுநிதி பயன்படுத்தி பொதுமக்களுக் காக செய்த
கலைப்பணி என்னுடையது. மக்கள் அதை வரவேற்றனர் எனக்கு ஆதரவளித்தனர்.
கலையைப் புரிந்துகொள்ள அழகுணர்ச்சி வேண்டுமென்ற கருத்து நிலவுகிறதே; குறிப்பாக
நவீனத்துவவாதிகள் இப்படிக் கூறினார்களே.
அதுதேவையில்லை. அப்படிக் கருதுவது தவறு. கொள்கைகள் கலை அல்ல. நவீனத்துவ கலை கலையைக்
கொள்கைகளுள் பிணைத்தது. மக்களுக்கு கொள்கைகள் அல்ல, கலைதான் தேவை. நல்ல இசைதான் தேவை.
நவீனத்துவ வாதிகள் கலையைப் பூடகமாக்கி விட்டார்களே?
நவீனத்துவவாதிகள் பூடகமாக்கினர். கலை கருத்தைத் தொடர்புறுத்த வேண்டும். எப்படி கருத்தைத்
தொடர்பு றுத்துவது என்ற தேடல் கலைஞனுக்கு வேண்டும். கலையைக் கொலை செய்துவிடக் கூடாது.
பூடகத்தன்மை கலைஞனிடம் இருக்கட்டும். சமூகத்தை அதில் தள்ளிவிடக்கூடாது. பூடகத்தை
அழிப்பதே கலைஞனின் வேலை. நமது நாட்டிலும் கூட பூடகத்தன்மையை ஒரு டிரேட் மார்க்காக
வைத்துக் கொண்டி ருப்பவர்களுண்டு. மீண்டும் மீண்டும் ஒரே பொருளை வெளியிடு வது பின்னர்
பூடகமாக்கிக் குழப்புவது. தமது வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்யத் துடிக்கிற வணிக
மனநிலையின் அவசரம் அது. மதத்தில் இருப்பது போன்ற மூடநம்பிக்கைகள் கலையிலும் உண்டு.
சிலர் அந்த நம்பிக்கையை சுரண்டிப் பயன்கொள்கின்ற னர். கலையின் நோக்கம் தூய்மையை உருவாக்குவது.
நீங்கள் நிறைய Portrait செய்திருக்கிறீர்கள். Portraitகளில் எதை நிறைவேற்ற முயல்கிறீர்கள்?
நிறைய கால அவகாசத்தோடு செய்ய வேண்டிய வேலை Portrait எனக் கற்றுக் கொண்டுள்ளேன். பட்டம்
தாணுப்பிள்ளை, விக்ரம் சாராபாய், ஈ.எம்.எஸ்., தேவராஜன், மன்னத்து பத்மநாபன் போன்ற
பிரபலங்களை Portrait செய்திருக்கிறேன். Portrait ஒருபோதும் போட்டோகிராஃபிக்
உருவமல்ல. மனிதனின் / நபரின் அக ஆளுமையையும் அதில் வெளிப்படச் செய்யவேண்டும்.
புறவடிவம் மட்டுமாக அமைந்துவிடக் கூடாது.
ஒப்புமை ஒரு சிக்கலல்லவா?
ஒப்புமை வேண்டும். பிரபலங்களின் Portrait செய்யும்போது உருவ ஒற்றுமை இல்லாமல் இயலாதே?
ஆனால் முன்பு சொன்னது போல நபரின் அக ஆளுமை அதில் வெளிப்பட வேண்டும். நபரின் உருவமல்ல.
அதை போட்டோவாக எடுத்து விடலாம். நான் ஈ.எம்.எஸ்.இன் Portrait செய்தபோது அவரது
முதுமைக்கால உருவத்தைத் தேர்வு செய்தேன். இடதுகைப் புத்தகப் பக்கங்களுக்கிடையில் அவர் ஒரு
விரல் வைத்துக் கொண்டிருக்கிற நிலையில் வாசித்துக் கொண்டிருக்கிறார். வலதுகை சோர்வும்
தளர்ச்சியும் உண்டென்றாலும் முஷ்டியைச் சுருட்ட இயலுமெனும் குறிப்புத் தோன்றச்
செய்திருந்தேன். ஈ.எம்.எஸ்.இன் மனைவி வந்து பார்த்தார். அவருக்கு மிகவும்
பிடித்திருந்தது. கட்சிக்காரர்களுக்கும் பிடித்திருந்தது.
சிற்பக்கலை வாயிலாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
சிற்பக்கலை வழியாக காட்சிக் கல்வியை அளிக்க இயன்றிருப் பதாகக் கருதுகிறேன்.
கலைப்பாரம்பரியத்தையும் அதன் வழியாக மன உலகங்களையும் மாற்ற இயன்றுள்ளதெனவும் கருதுகிறேன்.
இது எப்படி நிறைவேறியது?
நான் படைப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். வேறு எதிலும் நான் ஈடுபடவில்லை.
கலையின் இன்றைய சூழ்நிலைகள் பற்றி...
இன்று கலை சந்தை மயமாக்கப்பட்டுவிட்டது. அதாவது சந்தைக்கலையாக உள்ளது. கலைஞர்கள்
நுகர்வோருக்கான உற்பத்திகளையே செய்து வருகின்றனர். அது சந்தையில் விற்பனையாக வேண்டும்.
எனவே அது பணமதிப்பு நோக்கு உடையது. ஒரு தொழில் சார் உற்பத்தியாதலால் அதில்
கலைமதிப்பு குறைவு. பணமதிப்பு அதிகம். கலைஞர்களுக்கு வேலை செய்ய நேரம் வாய்ப்பதில்லை.
பெரும்பாலும் றிக்ஷீஷீ ஓவியர்கள் கலைப்பணி தொழில்சார்ந்து விட்டதால் றிக்ஷீஷீ வேலையும்
ஸ்டுடியோ வேலையும் செய்ய வேண்டி வருகிறது. சினிமா நடிகர் ஸ்டார் ஆவது போல ரசிகர்
மன்றம் வேண்டும். அந்த நடிகர்கள் சினிமாவின் நடிப்புக்கலை பற்றி ஒருபோதும் வாய்திறக்க
மாட்டார்கள். ஏழ்மை மிக்க நாடுகளில் மட்டுமே இப்படி நடக்கும். கலையை விற்கப் போகக்
கூடாது. வாங்க ஆட்கள் வரவேண்டும்.
இங்கு கலை பிற ஊடகங்களோடு கொண்டுள்ள உறவு எப்படிப்பட்டது?
இங்கு அப்படியன்றுமில்லை. ஐரோப்பாவில் அப்படி யல்ல. பல ஊடகங்களில் பணியாற்றுபவர்கள்,
சிந்தனை யாளர்கள் இணைந்து செயல்படும் அமைப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் நிகழ்கிறது.
அங்கு புதிய கலை இயக்கங்கள் இவ்வாறு உருவாகின்றன. இங்கே அதுபோன்ற தொடர்புகள் ஒருநாளும்
ஏற்பட்டதில்லை.
இதுவரை செய்த உங்கள் படைப்புக்கள் மீதான உங்கள் மதிப்பீடு என்ன?
எனது படைப்புக்களுக்கு நிகரான வேறு படைப்புக்கள் இல்லை. இந்தியாவில் எங்குமே இல்லை.
ஐரோப்பாவிலும் இல்லை. கேரளத்தின் பாரம்பரியம் இதை நிறைவேற்றியிருப்பதாக நான் கருதுகிறேன்.
குறிப்புகள்
மலம்புழா: பாலக்காட்டில் உள்ளது. மலம்புழா அணைக்கட்டு பூங்காவில்தான் புகழ்பெற்ற ‘யக்ஷி’
சிலை உள்ளது.
வேளி : திருவனந்தபுரத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ள பூங்கா.
ஆசான் நினைவகம் : குமாரனாசானுக்கு கேரள அரசு உருவாக்கி வரும் நினைவகம். கானாயி
அங்கும் சிற்பங்கள் உருவாக்கி வருகிறார்.
தெய்யம் : வடகேரளப் பகுதிகளில் இன்றும் இருந்து வருகின்ற நாட்டார்கலை.
சங்குமுகம் : திருவனந்தபுரத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. புகழ்பெற்ற ‘கடற்கன்னி’
சிலை அங்கு உள்ளது.
பய்யாம்பலம் : கண்ணூர் மாவட்டத்திலுள்ள கடற்கரையோரமாக அமைந்துள்ள சிற்பப் பூங்கா.
முக்கோலப் பெருமாள் : கொச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிற்பம்.
உரையாடியவர்: எ.டி.மோகன்ராஜ்
தமிழில்: ந.மனோகரன்
('சமகாலிக மலையாளம்' சனவரி 2009 இதழில் வெளிவந்த பேட்டி)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 7:36:53 AM5/30/15
to brail...@googlegroups.com
அதிவளர் திணையென்ப அழிவும் அவலமும்
8
விவரங்கள்
எழுத்தாளர்: நாகார்ஜுனன்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: ஆகஸ்ட்09
C வெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009
1
இந்தியத் துணைக்கண்டம் என்ற பரப்பு, புவிசார் வாணிப வலைப்பின்னல்கள் மற்றும் சந்தைகளில்
பலவகையில் பங்கேற்று வருவதைப் பல நூற்றாண்டுகளாகக் காணலாம். குறிப்பாக, இந்த வகையில்
இங்கே தொடங்கிய காலனித்துவம் பிரித்தானியக் காலனித்துவமாக மாறிய பிறகு, இந்தப்பரப்பின்
சமுதாயம், பொருளாதாரம், அரசியல் என யாவும் முற்றிலும் புது வடிவங்களை எய்தின.
இருந்தபோதும், தற்போது இந்தியா என்ற அரசியல்-பரப்பில் நடக்கும் மாற்ற நிலைகள்,
பிரத்தியேக மானவை எனக் கூறலாம்.
இங்கே நான் முன்வைத்திருப்பவை, சுமார் இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதின குறிப்புக்கள்.
இங்கே நடப்பதன் உள்-கட்டமைப்பையும் உள்-தர்க்கத்தையும் புதிதாகப் புரிந்து கொள்ளும் நிலையில்
எழுதியவை. இப்போதுள்ள நிலையில் ஒருசில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். இவற்றையெல்லாம்
வாசிக்கும்போது இதைப் பொருளியல் சார்ந்த மரபான கட்டுரை யாகக் கொள்ள முடியாது. அரசியல்
அல்லது பொருளியல் என்ற துறைகள் சார்ந்தோ, கோட்பாடு சார்ந்தோ நடப்புநிகழ்வுகளை அலசுவதாக
எடுத்துக்கொள்ளவும் முடியாது. மாறாக, பிரத்தியேகமான ஒரு களக் கண்ணோட்டத்தின் (Unique
Spatial Vigion) அடிப்படையில் இவற்றை நான் வைத்திருப்பதாக நோக்குவதே சரி.
புவிமயமாதல் என்ற சொல்லை-கருத்தாக்கத்தைக் காட்டிலும் ஃப்ரெஞ்சு விவசாயிகள் சிலர் கூறும்
ஒரு சொல்லை, இங்கே காணலாம். அதாவது, புவிமயமாதல் என்கிற அனுபவம் யார் யாருக்கு
நடக்கிறது, யார் யாருக்கு நடக்கவில்லை, ஏன், அதன் அனுகூலங்கள், தாக்கங்கள், பாதிப்புக்கள்
யாவை என்றெல்லாம் பார்ப்பது ஒருவித ஆய்வு. எனினும் அதைச் செய்வதற்கு மாற்றாக, அதற்கான
காரணமும் விளைவும் கலந்துகட்டும் ஒரு சூழலே இங்கே விரிந்துகொண்டுசெல்கிறது என்பதை
அறியும் நிலைக்கேற்ப ஒரு சொல்லை இங்கே காணலாம். அது, delocolisation. . தமிழில்
பொருளின், அறிவின் தன்-புலமாற்றம் அல்லது தன்-தலமாற்றம்.
இது என்ன எனப் புரிந்துகொள்வதற்கு முன்பாக, காலனித் துவ சூழல் பற்றிய நினைவுறுத்தல்
அவசியம், ஆனால் சற்றே புதுவழியில். அரசியல்-பொருளாதார விழைவுகள் ஒருபுறமென,
அவற்றுக்குப் பின்புலமாக இருப்பவை, காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் மற்றும் அதற்கும்
பிறகான ஆதிக்க நிலை ஆகியவை. இவை அதிகார -விழைவுகளே. அதாவது, காலனியப் பகுதிகள்
மற்றும் புதுக்காலனியப் பகுதிகளில் வளங்கள் மீதான, இவற்றின் கலாச்சார இயங்கு போக்குகள்
மீதான, நேரடியானது மட்டுமன்றி மறைமுகக் கட்டுப்பாட்டுக்கும் செல்வாக்குக்குமான
விழைவுகள்; இன்றும் தொடருபவை இவை. குறிப்பாக, மேற்காசியப் பரப்பில் ஒரு
புதுக்காலனியப் போர் வரை சென்றி ருக்கும் இவற்றின் வழியில் காணத்தக்கவை. அந்தப்பரப்பின்
எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை நிரந்தரமாக அடையும் வழியைக் கைக்கொள்ளும் முஸ்தீபு
ஒருபுறமும் மறுபுறம் ஃஸியோனிஸ அரசுக்கு எதிராக உருவாகவல்ல படைப்புலத்தை
அழித்தொழிக்கும் மறுபுறமும் தாம்.
சொல்லப்போனால், அங்கு அண்மையில் நடந்திருக்கும் போர், அழிவும் அதே வேளை ஒரு புதிய
தொழில்நுட்பத்தின் இறக்கமும் தான். ஆக, ஒருபுறம் போராக இருப்பது மறுபுறம் இந்தப் போரை
ஊடகத்தில் வைத்து நடத்திக் காட்டுவதாக இருக்கிறது; மூன்றாம் புறம், இந்தப்போரின் வெற்றி
மேற்கண்ட வளங்களை அடைவதை உறுதிசெய்து இந்த இறக்கத்தின் நியாயப்பாடாகவும்
மாறியிருக்கிறது. அதாவது, அங்கே செயல்படும் சட்டகம் என்பதில், போர்க்கருவிகளும்
உத்திகளும் ஒருபுறம், ஊடகங்களுக்கான போர்க்காட்சித் தொழில்நுட்பம் இரண்டாம் புறம், எண்ணெய்
வருகைக்கான நவீன தொழில் நுட்பம் மூன்றாம் புறம் ஆகிய மூன்றும் கலக்கும். பிரிந்திருப்ப
தாகவும் இனியும் பிரியப்போவது போலவும் தெரியும் இந்த மூன்றும் மேற்குலக அதிகார
விழைவின் பிரியாப்புறங்கள் எனலாம். இந்த மூன்றிலும் அரபுலகம் தோல்வியைச் சந்தித்தது.
எடுத்துக்காட்டாக, அதன் போர் ஆயுதங்கள் பேரழிவுக்கான கருவிகளாக மறைந்து நீடிக்கின்றனவா
என்ற நிச்சயமின் மையைத் தாண்டிப் பேரழிவுக்கருவிகளாகவே நிலைக்க, நாம் காணக்காண
மேற்குலகின் நேரடியான போர் -ஆயுதங்களும் மறைமுகமான பேரழிவு- ஆயுதங்களும்
புவிக்காப்பாக மாறின. இந்த விநோதம் நியமமான காலம் ஆண்டுகளாக நம்மைக் கடக்கக்கண்டோம்.
இப்படி மேற்குலகம்-அரபுலகம் இரண்டுக் குமான வேறுபாடு நியமமானதே என்று கேட்கப்போக,
அதற்கு, மேற்குலகு பொறுப்பானது, தேர்தல் ஜனநாயகம் கொண்டது என்ற ஒரு காரணமே போதும்
என்ற பதில் கேட்டு மௌனமானோம்.
ஆக, இங்கே இந்த மூன்று புறங்களையும் இன்ன பிற புறங்களையும் தனித்தனியாகப்
பிரித்துக்காண்பதை விடவும் இணைத்துக் காண்பதே மேற்கூறிய களக் கண்ணோட்டத்தின் அடிப்படை.
தவிர, இங்கே மேற்குலகம் சார்ந்து மாத்திரமே இந்தக் களக் கண்ணோட்டத்தை உருவாக்கவும்
முடியாது. காலனித்துவத்துக்குப் பிறகான நாடுகளின் அரசுகள் பலவும் மேற்குலக அரசுகளின்
லீணீக்ஷீபீஷ்ணீக்ஷீமீ என்றாகிய வன்பொருள் யாவற்றையும் தமக்கெனவே, தமக்கிடையே உருவாக்கிவரும்
நிலையைக் கவனித்துத்தான் இதை உருவாக்கவும் பரிசோதிக்க வும் முடியும். ஆக, இந்தக் களக்
கண்ணோட்டம் என்பதைக் கருதுகோள் (hypothesis) அல்லது முற்கோள் (lemma) எனலாமா!
2
காலனியத்துக்குப் பிறகான எனக் கருதும் இன்றைய சூழலில் வளமும் அழிவும் நோக்கிச்
செயல்படுவது எவையெல்லாம்? நிஜத்தில் இன்று நீடிப்பது புதுக்காலனியத்துவமா, ஏகாதிபத்
தியமா, இவற்றுக்கும் பிறகான ஒன்றா? ஒருவிதத்தில் (மார்க்ஸ் வரையறுத்ததைப் போல)
காலனித்துவம் இல்லாமல் முதலீட்டி யம் பெருகவில்லை என்பதில் வளமும் அழிவும் அன்று
இணைநிகழ்வாயின. (லெனின் வரையறுத்ததைப் போல) அடுத்த கட்டமான ஏகாதிபத்தியம் அன்றி
முதலீட்டியம் பெருகவில்லை என்பதிலும் அதே இணைநிகழ்வுகள் இயங்கின. அதற்கும் அடுத்த
கட்டமாக வளமும் அழிவும் இணைநிகழ்வுகள் என்பது ஒருபுறமும் அதைக் காட்டிலும் இரண்டும்
கலந்து குழம்பிய நிலை இன்று பரவக் காணலாம். ஆக, காலனித்துவம், ஏகாதி பத்தியம் இரண்டும்
இணைந்து தொடர்வதும் இவற்றுக்குப் பிறகானதும் இன்றைய குழப்ப நிலை. இது நீடிக்க,
புவிப்பரப்பின் வெவ்வேறு திணைகளிலிருந்து வளங்களை உரித்தெடுப்பதும் அப்படி
உரித்தெடுப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வதுமான வன்-கட்டமைப்பும் (hardware)
மென்கட்டமைப்பும் (software) தேவை. இதைச் சற்றே பழைய, பழகிய மொழியில் சொன்னால்
அழிவுக்கும் வளத்துக்குமான அடிக்கட்டுமானமும் மேற்கட்டு மானமும் தேவை. இதற்கென,
புவிப்பரப்பின் சில இடங்களில் வன்பொருளாகவும் பிற இடங்களில் மென்பொருளாகவும் இயங்கி
அமையும் புவிசார்-அரசியலும் தேவை. இதற்கு விலக்கா வதல்ல இன்றைய இந்தியப்பரப்பு,
மாறாகப் பொருந்துவது.
ஏகாதிபத்தியம் என இங்கே சுட்டுவது, வரலாற்றில் குறிப்பிட்ட ஓர் அரசியல்-பொருளியல்
அமைப்பைத்தான் என்பது வரலாறு. எத்தகைய வரலாறு? தம் La Comedie Humaine
பெரும்படைப்பில் பாரீஸின் சமூக இனங்களை வரையறுத்து, தம்மைக் கடந்துகொண்டிருந்த ஆண்டுகளைப்
பால்ஸாக் பதிந்த அதே 1847-ஆம் ஆண்டில், அதையட்டி ஏகபோக நகர முதலீட்டியத்தின் வருகையைத்
தம்முடைய The poverty of philosophy நூலில் மார்க்ஸ் கணித்துவிட்டார். பிறகே,
இந்தியாவில், அயர்லாந்தில் பிரித்தானியக் காலனிய ஆட்சியை அலசுகிறார். அதேபோல சென்ற
நூற்றாண்டின் தொடக்கத்தில் தம்முடைய The development of capitalism in Russia
நூலில் ஆராயும் லெனின் ஏகபோக முதலீட்டியம் என்பது ஏகாதிபத்தியமாகிறது, அது
புவிப்பரப்பின் பகுதிகள் பலதிலும் புதுச்சந்தைகளையும் வளங்களையும் தேடும் தர்க்கத்தின்
இயங்குபோக்கில் சிக்குகிறது என்று விளக்குகிறார். இப்படி முதலீட்டியம் நாட்டெல்லைகள்
தாண்டிச் சந்தைகளையும் வளங்களையும் நாட வேண்டும் என அன்று பெற்ற அறிவுக்கும்
பதற்றத்துக்கும் மாறாக அதை இன்று பலரும் ஏற்பது ஒரு இயல்பான நியமமாக.
ஆக, அன்று மாத்திரமல்ல, இன்றுவரையான இரண்டு நூற்றாண்டு காலத்துக்கும் மேலான போர்கள்,
போராட்டங்கள், எதிர்ப்புகள், கலகங்கள், புரட்சிகள், எதிர்ப்புரட்சிகள், இவற்றின்
வெற்றிதோல்விகள் மற்றும் கொடூரங்கள் என யாவற்றையும் கத்தரித்து வருவதே இன்றைய இயல்பான
நியமம்! ஆக, இந்த வரலாற்று அறிவுக்கண்டமும் அதையட்டிய கோட்பாடு களும் ஒருபுறம்
உருவாக, மறுபுறம் அந்த அறிவையே கத்தரித்துத் தன்னை நிறுவ முயலும் நியமமும்
கிளர்ந்திருக்கிறது! இந்தக் கிறுகிறுப்பான இரண்டு புறங்களில் சிக்கியிருப்பவை, இந்த
அறிவை முன்வைக்கும் பதற்றமும் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி எனத் தன்னை அழைத்துக்கொள்ளும்
திட்ட முனைவும். இந்தக் கிறுகிறுப்பில் புவிப்பரப்பின் திணைகளின் அழிவும் காப்பும்
ஆக்கமும் கலந்துகட்ட, மாறாகத் தன்னை ஆக்கமாக மாத்திரம் நியமப்படுத்திக்கொள்வது,
வளர்ச்சியெனும் திட்டம்.
இன்னொரு விஷயம்-இன்றைய நிலையில் ஆய்வென்பது, நாடுகளுக்கிடையில் மாத்திரம் நடப்பதல்ல;
நாடு என்ற புவிசார்-அமைப்பின் அகத்தில் நடக்க வேண்டியதும்தான். ஒரு நாடு இன்னொன்றைச்
சுரண்டுவது, ஒரு வர்க்கம் இன்னொன்றைச் சுரண்டுவது, ஒரு திணைப்புலத்தொகுதி இன்னொன்றைச்
சுரண்டி அழிப்பது என்ற யாவும் இங்கே ஆய்வுக்கானவையே.
இவை இயங்குவது எப்படி எனக் காணலாம்: புவிப்பரப்பி லும் புவிப்பரப்பின் முன்-நிழலாக
ஒட்டி உருவாகும் அதி-குறியியல் பரப்பிலுமாக. இந்த இயக்கத்தின் ஒரு பரிமாணம்,
புவிப்பரப்பெங்கும் அலைந்தும் பாய்ந்தும் பின்வாங்கியும் செயல்படும் முதலீட்டமைப்புக்கள்; மறு
பரிமாணம், தேவைகள் வர வர அவற்றை மேன்மேலும் பெருக்கித் திகட்ட வைக்கும் பண்டங்கள் மற்றும்
சேவைகள்; மூன்றாம் பரிமாணம், இவற்றின் உற்பத்தி-வாணிபம்-விநியோகம்-நுகர்வு-கழிவு
என்பனவற்றின் நாள்தோறுமான உயிர்த்துடிப்பையும் சாவையும் தொலைகாண இருபத்துநான்கு மணி
நேரம் இடைவிடாமல் உருவாக்கிப் பதியும் பதிந்து உருவாக்கும் ஊடகங்கள். ஆக, புவிப்பரப்பின்
பண்டம் என்பது இந்த அதி-குறியியல் பரப்பில் அதி-பண்ட மாகவும் புவிப்பரப்பின் சேவை என்பது
இந்த அதி-குறியியல் பரப்பில் அதி-சேவையாகவும் புவிப்பரப்பின் அரசியல்-சமுதாய-சூழலியல்
எதார்த்தம் என்பது இந்த அதி-குறியியல் பரப்பில் அதி-எதார்த்தமாகவும் சுரண்டல் என்பது
அதி-சுரண்டலாகவும் இயங்குன்றன. இப்படித்தான் அதி-நுகர்வையும் கழிவையும்
உயிர்-வடிவங்களின் அழிவையும் இன்று ஆக்கமாகவும் காப்பாகவும் திட்டமிட முடியும்;
இவற்றுக்கென புவிசார் மோஸ்தர்களைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் முடியும்;
ஆக, காலனியத்துக்குப் பிறகான நாடுகளின் சில, பல பகுதிகளில் ஒடுக்குமுறையும்
போர்களும் நோய்களும் நிலவும் நேரத்தில், அதை எதிர்ப்பதான கோட்பாடுகள் தாம் தங்கியிருக்
கும் திணைப்புலத்தை அழித்துக்கொள்ளும் தற்கொலை என யாவும் இனி சாத்தியம். இதைத் திறம்படச்
சாதித்துத் தன்னைப் பெருக்கும் நோக்கத்தில் முதலீட்டியம் புவிப்பரப்பில் தனக்கான பகுதிகளைத்
தேடும். இந்தத் தேடலில் முதலீட்டியத்துக்குத் தேர்வு என்பது சிலவேளை இருக்கும், சில வேளை
இல்லாமலும் போகும். இப்படித் தேடி அது அடையும் புலங்கள் புறப்படுகின்றன, புறத்தின்
-பாற்படுகின்றன, அதுவே புல-மாற்றம் எனலாம்.
நாமறிந்த வரை, முதலீட்டியம் என்பது உற்பத்தி வழிமுறைகளையும் உற்பத்தி உறவுகளையும்
மாற்றுருவமாக்கும் ஒன்று. இந்தச் சுரண்டல் நிலையைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டி, ஆள்கிற
-ஆளப்பெறுகிற - வர்க்கங்களைத் தக்க வைத்துக் கையாண்டது. அதேபோல முன்பு பாட்டாளி
வர்க்கத்தினரைப் பெருக்கியது. ஆனால் அந்தப்பெருக்கம் நிச்சயமில்லை இனியும். அதேநேரம்
வளங்களுக்காக நாடுகளும் நாடுகளுக்குள்ளாக வர்க்கங்களும் மோதித் திணைப்புலங்களைச் சுரண்டி
அரசியல்-நெருக்கடிகளைத் தூண்டுகின்றன. இப்படித் தூண்டும்போதே இந்த மோதல்களின் கெட்டி
தட்டிய வடிவமாக நவீன அரசு எந்திரம், ஒடுக்குமுறை உள்ளிட்ட தன் பல்வேறு செயல்
பரிமாணங்களுடன் தன்னைத் தக்க வைக்கிறது. உடனாக, உற்பத்தி வழிமுறைகளையும் நகல் செய்யும்
வழிமுறைகளையும் தொடர்ந்து மாற்றிவரும் சக்தியான தொழில் நுட்பத்தையும் அதன் ஊடான
உறவுகளையும் தூண்ட வேண்டுமென்கிறது. இந்த வகையில் நவீன அரசு எந்திரங்களும் முதலீட்டிய
மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தத் தூண்டலைத் தம்முள் வரைந்துகொண்டு இயங்குவன. -இவை
அறிவை ஒரு தொழில் நுட்பமாக வைத்துத் தம் பணியில் ஈடுபடுகின்றன என்பது முக்கியம்.
குறிப்பாக, இங்கே தொழில்நுட்பக் கண்டறிதல்களை நனவாக்கி, நிறுவனமாக்கிச் செயல்படும் நிலை
முக்கியம். இதற்காக காலத்தையும் வெளியையும் மறுவரையறை செய்கின்றன, அவற்றில் பலவழிகளில்
முதலீடு செய்கின்றன.
இரண்டாம் உலகப்போர்க்காலத்துக்கு முன்பாகவே இத்தகைய மறுவரையறை பாரிய அளவில் இயங்கத்
தொடங்கிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கறாரான தொழிற்சாலை என்ற வடிவம் மாறி, ஹென்றி
ஃபோர்ட்டின் நவீன assembly line தொழிற்சாலை என்று உருவானது. அடுத்த சில
ஆண்டுகளிலேயே-அதாவது 1929-ஆம் ஆண்டில் புவிப்பரப்பு முழுதும் சந்தித்த பொருளியல்
பின்னடைவில் இந்தப் மாற்றுருவை அதன் சிக்கலுடன் Modern times திரைப்படத்தில் காண
முடிந்தது. அடுத்த முக்கிய வடிவமென்பது, போர்க்கால அமெரிக்காவின் அரசே பங்கேற்று
உருவாக்கிய லாஸ் அலோமோஸ் (Los Alamos) ரகசியக்களம் தான். இந்த ரகசியக்களத்தில் நவீன
இயல்பியலுக்கான ஆராய்ச்சித்தொழில் நுட்பமும் ராணுவமும் கைகோர்த்தன. புவிப்பரப்பின் முதல்
அணுகுண்டை பாலையெனும் திணைப்புலத்தில் வடிவமைத்து அடுத்து ஓரிடத்தில் வெடித்துப்
பரிசோதித்தார்கள். இந்த ரகசியக்களத்தை ஜெர்மன் நாஃஸி அரசு வடிவமைப்பதற்கு முன்பாகச்
செய்தாக வேண்டுமே என்று பெயர்பெற்ற இயல்பியல் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்க அதிபர்
ஃப்ராங்ளின் ரூஸ்வெல்டிடம் கவலை தெரிவித்திருந்தார்களே. ஆக, புவிப்பரப் பின் அரசுகள்
யாவற்றின் பிறகான கனவாக அமைந்தது, அமெரிக்காவில் நனவான இந்த ரகசியக்களம். போர்
முடிந்த அமெரிக்காவில் அடுத்த முயற்சியாக, உருவாகி வந்த வெளிகளை அரசு எந்திரமும்
முதலீட்டிய-தொழிற்துறை நிறுவனங்களும் தொழிற்துறையும் அறிவியல் ஆராய்ச்சியும் இணைந்து
முறைப்படுத்தியதைக் காண முடிந்தது. இங்கே ரகசியத்தன்மை என்பது தேவையற்றுவிட்டது.
அதாவது அரசு எந்திரம், முதலீட்டியம், தொழிற்துறை, அறிவியல் ஆராய்ச்சி என நான்கும்
இணைவதான வடிவப் பரிசோதனைகளெனப் பலப்பல. இவற்றைக் கொத்தணிக்களங்கள் (Cluster spaces)
என அழைத்தால் இவற்றின் முக்கியத்துவம் புரியும்.
இந்தக் கொத்தணிகள், ஒத்த தன்மை கொண்ட தொழில கங்களை அருகருகே அமைத்து இயங்கின.
அவ்வகையில் வெளி என்பது மறுவரையறைக்கு ஆளானது. அதாவது, அறிவுக்கரு ஒன்றை யோசித்து,
ஆராய்ச்சிவழி அதைப் பரிசோதித்து, வடிவமைத்து, தயாரித்து, நகலியங்க வைத்து, சந்தையில்
சுழற்சிக்கு விட்டு, வாணிபத்தில் விற்று, வெற்றிகரமாக விநியோகித்து, அதைக்
கண்காணிக்கிற, பழுதுபார்க்கிற சேவையையும் உறுதிசெய்வது இது. ஒரு நிறுவனத்தால்
மாத்திரம் இது சாத்தியமில்லை. அதனால்தான் கொத்தணி. அமெரிக்காவில் வாகன ஆலைகளுக்கென
டெட்ராய்ட்டும் க்வார்ட்ஸ் நகரமென ஸிலிக்கான் பள்ளத்தாக்கும் கனிம வேதியல் பரப்பென
ஜெர்மனி-ஸ்விட்ஸர்லாந்தின் மருந்துக் கம்பெனிகளும் சரியான எடுத்துக்காட்டுக்கள். ஆனால் இன்று
இது எப்படித் தொடர்கிறது என்பது முக்கியக்கேள்வி.
சொல்லப்போனால், இத்தகைய நடவடிக்கைகளின் சில கட்டங்கள் அருகருகே இனியும் நடக்கத்
தேவையில்லை என்ற துணிபை இனிக் காண்கிறோம். ஆக, பண்டங்களின் உற்பத்தியும் சேவைகள்
வந்துசேரும் வழிகளும் அருகருகே இருக்கத் தேவையில்லை; உற்பத்திக்கு முன்பும் பின்புமான
செயல்பாடுகள் கூட அருகருகே இருக்கத் தேவையில்லை; இவற்றை அருகருகே வைத்திருப்பது,
ஏன், லாப-நஷ்டப் பொருளியல் நோக்கில் தவறாகக்கூட இனி அமையும்; போட்டியில் தோற்பதில் போய்
முடியும் என்ற துணிபை இனிக் காண்கிறோம். இனி நெருக்கடியென்பதெல்லாம், இந்தச்
செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குள்ளாக நடந்தாக வேண்டும் என்று வலியுறுத்தும்
அரசுகளுக்குத்தான்!
ஆக, முதலீட்டியம் என்பது அதை எதிர்ப்போர் எண்ணு வதைக் காட்டிலும் வேகத்தில் புவிதழுவிப்
பரவுவதாக மாறியிருக்கிறது. அதன் அவ்வப்போதைய நெருக்கடிகளும் தோல்விகளும் தான்
முடியப்போவதான சமிக்ஞையைத் தன்னை எதிர்ப்போருக்கான ஆசுவாசம் அளித்துவருவதாக
மாறியிருக் கின்றன. ஆக, கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணையின் நகலாக இன்று
இயங்குவது, முதலீட்டிய நிதியும் தொழில்நுட்பக் கூறுகளும் தொழிற்செயல்பாடுகளும் உற்பத்திப்
பண்டங்களும் சேவை வழிகளும் இவற்றை உறுதிசெய்யும் திறன் கொண்ட வல்லுநர் மனிதரும் என்று
சொல்லும்போது மார்க்ஸ் தாம் கண்டறிந்த விவரிப்பின்வழி இந்த வாக்கியத்தை மிக எளிதாக
எழுதியிருப்பார் என்பதையும் சேர்த்துக்கூறியாக வேண்டும்.
தொழிற்செயல்பாட்டின் கட்டங்கள் பல புலம் மாறித் தம் மென்பொருள் நிலையில், இணையமெனவும்
இணையவழி இரவு-பகல் நேரமாற்றெனவும் கண்டப்பெயர்வுக்கு வழிவகுத்ததும் இப்படித்தான்.
பெங்களூர்களும் குர்காவ்களும் நாமறிந்து வளர்ந்த ஆண்டுகள் கடந்ததும் இப்படித்தான். வன்பொருள்
நிலையில் மேற்குலகச் சந்தைகளுக்கான பண்டங்களின் உற்பத்திச்செயல்பாடுகள் நாம்
காணப்பெரும்பாலும் சீனத்துக்கும் தூரக்கிழக்கு நாடுகளுக்கும் சென்றடைந்ததும் இப்படித்தான்.
ஆக ஆய்வு, வடிவமைப்பு, உற்பத்தி, நகலியக்கம், விநியோகம் எனப் பலதும் கொத்தணி என்ற
வரலாற்று-வடிவத்தைத் தாண்டி, நாட்டு -எல்லைகள் தாண்டி, கண்டங்கள் தாண்டி, சாத்தியமாயின.
இந்த நிலையில் இவையனைத்தும் தம் ஓட்டத்தின் எல்லையையும் தாண்டி நமக்குச் சொல்லும்
செய்தியென்ன என்பதே இங்கு எழும்பும் கேள்வி. இதற்கு ஒரே பதில் - துறைசார்-அறிவு
பிரசன்னமாகி இருக்கிறதா, இல்லையா என்பது இந்தப் புலமாற்று நடக்குமா, நடக்காதா என்பதை
முடிவுசெய்யும் முக்கிய விஷயம். துறைசார்-அறிவும் அதன் தொடர்ந்த மறு-உற்பத்தித் திறனும்
புலமாற்றம் என்ற சாத்தியத்தைத் திறக்கும் சாவிகள். ஆக, அரசு எந்திரத்தின், முதலீட்டியத்தின்
விழைவு, இந்தப் தன்-புலமாற்றத்துக்கு வேண்டிய துறை-சார்-அறிவைக் கல்வி நிறுவனங்கள் மூலம்
உறுதிசெய்வது. இது சாத்தியமென்றால் மற்ற விஷயங்களைப் பயிற்சியின் மூலம், பயணத்தின் மூலம்
சாதித்துவிடலாம் என்பது அடுத்த விழைவு.
3
இதில் உற்பத்தி-விநியோகம்-நுகர்வு-பழுதுபார்த்தல் என்ற கண்ணி, திணைப்புலம் பலதிலும்
இயங்குவதை உறுதிசெய்து அதற்கான உறவுகளை நிலைநிறுத்தி வைக்கும் துணிபும் பொறுப்பும்
நவீன அரசு எந்திரத்துடையது. இந்த வகையில் ஆள்கிற-ஆளப்பெறுகிற வர்க்கங்களிடை தோன்றும்
மோதல் களின் கெட்டி தட்டிய வடிவமாக இயங்குவது நவீன அரசு எந்திரம். ஆக, ஒருபுறம் வர்க்க
மோதல்களின் எச்சமாகவும் மறுபுறம் ஆளும் வர்க்கத்தின் மேலாண்மையை நிறுவி வர்க்க மோதல்களைக்
கையாண்டு ஒடுக்கும் எந்திரமாகவும் செயல் படுவது நவீன அரசு எந்திரம். இந்த வகையில்,
இந்தியப்பரப்பில் ஏற்கனவே நிலவும் மோதல்களுடன் இப்போது, புதியதொரு மோதலுக்கான
மட்டமொன்று அலையாய் எழும்பிவந்தி ருக்கிறது; தன்-புலமாற்றத்தின் சாத்தியங்களை ஒட்டிக்
கிளம்பியிருக்கிறது.
கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இந்தியப்பரப்பில் அரசு எந்திரம் செயல்படுத்திவரும்
அரசியல்-பொருளியல் கொள்கை களும் செயல்பாடுகளும் ஆள்கிற-உயர்மட்ட வர்க்கத்தினருக்குக்
கொழுத்த லாபத்தைக் கொடுத்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை. இவற்றுடன் இயற்கைத்
திணைப்புலங்கள் ஒத்திசைவாகும் சாத்தியமில்லை என்ற பட்சத்தில் ஏறத்தாழ ஒரு அரசியல்-சமுதாய
ஒத்திசைவை நிறுவ முயன்றிருக்கிறார்கள். ஒத்திசைவு என்றால் இங்கே அரசியல் கட்சிகளைத்
தாண்டி அபிவிருத்தி, வளர்ச்சி என்பதாக அரசு எந்திரம் மற்றும் நிதி முதலீட்டியம்,
தொழிற்துறை, அறிவியல் ஆராய்ச்சி ஆகிய நான்கு தரப்பும் ஏற்றிருக்கும் ஒத்திசைவு தான்.
அதே வேளை, மேற்கண்டபடி இந்த அபிவிருத்தி, வளர்ச்சி என்பனவற்றைப் பல தரப்பும் பல்வேறு
செய்திகளாக, சமிக்ஞைகளாகக் காண்கின்றன. ஒரு தீவிர எடுத்துக்காட்டாக, தற்கொலையின்
விளிம்பில் தள்ளப்படக்கூடும் நிலையில் உள்ள நாக்பூர் மாவட்ட விவசாயி ஒருவருக்கு
அபிவிருத்தி என்பது பயிர்ப் பாதுகாப்பை உறுதிசெய்வதாக, பட்ட கடனைத் தள்ளுபடி செய்வதாக
அமையும். இன்னொரு கட்டத்தில் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதாகக் கூட அமையும். இன்னொரு
தீவிர எடுத்துக்காட்டு, இந்தியாவில் வைத்துத் தொடங்கியதும் முன்னாள் மத்திய அமைச்சரவைச்
செயலர் ஒருவரைத் தன் இயக்குநர்களில் ஒருவராகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம் வேதாந்தா. இந்த
நிறுவனத்துக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆதிவாசிப்பகுதியில் பாக்ஸைட் என்ற அலுமினியத்
தாதுவை அவர்களை வைத்தே நாசகாரமாய் வெட்டியெடுக்கிற செயலும் அபிவிருத்தி,
வளர்ச்சிதான். இந்த அபிவிருத்தி, வளர்ச்சியில் யாவரையும் சேர்க்க வேண்டும் (inclusive
growth) என்பதே அரசு எந்திரம் அறிவித்து முழங்கிவிட்ட ஒன்று. அபிவிருத்தி என்பதற்கான
சமிக்ஞைச் செய்தியான எந்தச் செய்தி முன்னால் வரும் யாருமறியா மர்மம். இது தேர்தல் என்ற
சடங்காக்கத்தின் அண்மை-தூரத்தைப் பொறுத்து அமையலாம் என்பதைத் தவிர வேறொன்றும் கூற
முடியாததே இன்றைய நிலை.
இந்த நிலையில்தான் மேலே குறிப்பிட்ட பிரத்தியேகக் களக் கண்ணோட்டம் அவசியமாகிறது. இதற்கு
வேண்டி, வழக்கமான அரசியல் ஆய்வுகள், அபிவிருத்தி அல்லது வளர்ச்சி மீதான மோகம்,
பொருளியல் வளர்ச்சி அல்லது வளர்ச்சி விகிதம் உச்சத்தில் தாழ்வில் என்பன குறித்த
புள்ளிவிபரங்கள் போன்றவற்றை சற்றே இடைநிறுத்திவைத்து இதைப் பேசலாம்.
கள ரீதியாக, ஒரு சைக்கிள் சக்கரத்தில் சுழலும் மையம், அதிலிருந்து பிரிந்துசெல்லும்
ஆரங்கள் (rotor hubs) என்பன போன்ற ஒரு வடிவத்தை வைத்து நோக்கலாம். இதே வடிவத்தில்
மூன்று அமைப்புகள் பரவி வருகின்றன-அரசு எந்திரத்தின் முழு ஒத்துழைப்புடன்-ஆதரவுடன் எனலாம்.
1. உற்பத்தி மற்றும் கனிம உறிஞ்சு மையமும் ஆரமும் (rotor hub for manufacturing
and mineral extraction)
2. சேவை வழங்கு மையமும் ஆரமும் (rotor hub for information technology and
related other services)
3. ராணுவத்துறை மையமும் ஆரமும் (rotor hub for defense, space, nuclear
activities)
இந்த மைய-ஆர வடிவம் என்பது ஒரு பிரதேசமல்ல. மாறாக, இது குறிப்பிட்ட பிரதேசங்களில்
நிபந்தனைகள் சில கொண்ட சூழலில் செயல்படுகிற வடிவம். அதாவது, ஒரு பிரதேசத்தில்
குறிப்பிட்ட துறை-அறிவுப் பெருக்கத்துக்கும் முதலீட்டியப் பாய்ச்சலுக்கும் அடித்தளம்
அமைந்திருப்பது அவசியம்; தன்-புல மாற்றத்தின் இணைநிகழ்வாக நிதி முதலீடு பாயவேண்டும்.
அப்போது மையம் சுழலும். அது சுழலும்போது ஆரங்களும் வேறுவழியின்றி அத்துடன் சுழலும்.
அப்போது இயல்பியல் விளக்குவது போல, ஆரங்கள் வழி மையத்தை நோக்கிய இயக்கமும் அதற்கு
எதிராக ஆரத்தின் எல்லை நோக்கிய இயக்கமும் உடன் வரும். இந்த மைய-ஆர வடிவத்தில் இயங்கும்
பொருளியல்-நகர்வு இதுவே. இத்தோடு அரசியல்-சமுதாய நகர்வும் சாத்தியம்.
தவிர, மேற்கண்ட மூன்று அமைப்புக்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒரே பிரதேசத்தில் அமைந்து
இயங்குவதும் சாத்தியம்தான். அவற்றின் பொருத்தப்பாடு என்பது புவிசார்- மற்றும் வரலாற்றுக்
காரணங்களில் தங்கும். எடுத்துக்காட்டாக, காலனித்துவம் மற்றும் பிரித்தானியக்
காலனித்துவத்தின் விளைவாக இந்தியத் துணைக்கண்டப் பரப்பில் தோன்றி வளர்ந்த புதிய
துறைமுக-நகரங்களைக் கூறலாம். கச்சாப் பொருள் ஏற்றுமதி, அவற்றை வைத்து மேற்குலகு
தயாரித்த பொருட்களின் இறக்குமதி என்ற அடிப்படையில் பெரும் சுரண்டலைச் சாத்தியமாக்கியவை
இந்த நகரங்கள். இந்த துறைமுக-நகரத்தை ஒரு காலனித்துவ வடிவம் என்று கொண்டால், இதற்கு
மேல் வந்து இறங்கியிருக்கும் மைய-ஆர வடிவம் இதைப்போன்ற, அடுத்த வடிவம் எனலாம்.
இந்த மைய-ஆரவடிவத்தில் இந்தியாவின் முக்கியப் பிரதேசங்கள் மாற்றுருவம் பெற்றுவருகின்றான.
டில்லி மற்றும் டில்லியை அடுத்த குரிகாவ், நோய்டா பகுதி ஒருபுறம்,
மும்பை-புனே-குஜராத் என ஒரு பெரும் பகுதி மறுபுறம், சென்னை,-பெங்களூர், ஹைதராபாத்,
கேரளம் எனத் தென்னாட்டில் சில பகுதிகள், ஜார்க்கண்ட்-ஒரிஸ்ஸா-சத்தீஸ்கர்-வடக்கு ஆந்திரம் என
ஒரு பெரும் பகுதி இப்படியான தோற்றத்தைக் காணலாம். இவற்றில் எந்தப்பிரதேசத்தில் மேற்கண்ட
மூன்று அமைப்புக் களில் எவைஎவை செயல்படுகின்றன என்பதையும் எளிதில் அடையாளங்காண முடியும்.
ஆக, இந்தியப்பரப்பில் அரசு எந்திரம் என்பது, இவற்றைத் திட்டமிட்டு உருவாக்குவதில் தன்
சக்தியைப் பிரயோகித்து வருகிறது. இந்த மூன்று மைய-ஆர வடிவ அமைப்புக்களும் பரஸ்பரம்
மதித்து இவற்றின் சமநிலையை உறுதிசெய்வதும் அரசு எந்திரத்தின் கடமைதான்.
எடுத்துக்காட்டாக, சேவைத் துறை கொண்ட மைய-ஆர வடிவம் பெரிதாக இயங்கும்போது, அதை மற்ற
இரண்டு அமைப்புக்களுடன் சமநிலைக்குக் கொணரும் பணியை அரசு எந்திரம் ஏற்கிறது. அதேபோல,
ராணுவத்துறை மையமும் ஆரமும் மற்ற இரண்டு அமைப்பு களுக்கும் சளைக்காமல் வளர வேண்டும்
என்பதை முன்வைத்து வருபவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்பதைக் கவனிக்காமல் இருக்க
முடியாது. தவிர, அண்மையில் நிறைவேறிய இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையை
முன்வைத்து யோசிக்கும்போது, மைய-ஆர வடிவத்தின் வீச்சு எத்தகையது என்று விளங்கிக்கொள்ளலாம்.
இன்னுமொரு விஷயம்: இயற்கை மற்றும் சமுதாயப்பரப்பில் தன்னைச் செலுத்தும் எவ்விதக்
களக்கண்ணோட்டமும் வன்முறை கொண்டே இயங்க முடியும். அதாவது, ஒரே நேரத்தில் வன்முறையைத்
தூண்டவும் உறையவும் செய்வதே இதன் நோக்கம். மேற்கண்ட மைய-ஆர வடிவமும் இதற்கு
விதிவிலக்கல்ல. வன்முறையைத் தூண்டவும் உறையவும் வைக்கும் இதன் சக்தியை ஏற்கனவே மேற்கு
வங்கம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட பல இடங்களில் பார்த்தாயிற்று. இதன் பரவல் என்பது வன்முறையும்
வேதனையும் கொண்டதாக, அங்குள்ள மக்கள் பலரின் கையிலிருப்பதைப் பறிப்பதாக, அவர்களின்
போராட் டத்தைத் தூண்டி, அவர்களின் ஒற்றுமையைப் பிளந்து அடக்குவதாக அமைந்திருக்கிறது.
அதே நேரம், இந்தப்பரவல் என்பது இந்தியப்பரப்பில் சில இடங்களுக்கு மதிப்புண்டு என அவற்றைத்
தேர்ந்துகொள்கிறது; மற்ற இடங்களுக்கு மதிப்பு குறைவு எனச்சொல்லி அவற்றைப்
புறந்தள்ளுகிறது. இப்படி மதிப்புக்குறைவாகிப்போன இடங்களில் உள்ள மக்களுக்கென, அரசு
எந்திரம் என்பது நிவாரண உதவி தாண்டிச் செயல்படுவ தில்லை, மற்றபடி அவர்கள் இனி தத்தம்
வழியே போய்க் கொள்ள வேண்டியதுதான்.
4
ஒரு பிரதேசத்தில் மைய-ஆர வடிவ அமைப்பு இயங்க வேண்டுமென்றால் அதற்கேற்ப மேற்கண்ட வசதிகள்
தேவை; தவிர நிலம் தேவை; அதிலும் கனிமத்தொழில் என்பது நிலமின்றி, பிரத்தியேக மின்
வழங்கலின்றி, போக்குவரத்து வசதிகளின்றி, சாத்தியமில்லை. நிலம், நீர், காடுகளைப்
பறிப்பது இந்த மைய-ஆர அமைப்பின் அத்தியாவசிய உரிமைகளாக மாறுகின்றன. அந்தந்தப் பகுதி
மக்களின் விருப்பத்தைப் பற்றிக் கவலையற்று, காலனியக்காலச் சட்டங்களின்படி நடக்கிற
நிலப்பறிப்பு, சிறு விவசாயிகள் மற்றும் ஆதிவாசிகளை நேரடியாக ஏய்த்து இன்னொரு
தரப்புக்கான மூதலீட்டு வரவுக்கு வழிவகுக்கிறது. நிச்சயமற்ற இந்தச்செயலை உறுதிசெய்யும்
நிலை, அரசு எந்திரத்துக்கு! ஆக, நிலப்பறிப்பும் அதற்கு எதிர்ப்பும் இப்படிப்பரவுகின்றன.
நிலத்தைப் பறிப்பதை ஏற்றுப் பணம் வாங்கினால், அதற்காகப் பேரம் செய்தால், எதிர்காலத்தில்
வாழ்வுரிமையே போய்விடும் நிலை ஏற்படலாம் என விவசாயிகளும் ஆதிவாசிகளும் அஞ்சி
எதிர்க்கின்றனர். எதிர்த்தால் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை ஒரிஸ்ஸாவில் கலிங்காநகர்,
மேற்குவங்கத்தில் நந்திகிராம், சிங்கூர் பகுதிகளில் காண முடிந்தது. இங்கெல்லாம் எதிர்ப்பின்
காரணம் ஒன்றில் நிலப்பறிப்பு நின்றுபோனது, அல்லது தொடர முடியவில்லை.
ஆக, தனக்கான கள-ரீதியான எதிர்ப்பைத் தூண்டுவது நிலப்பறிப்பு. அந்த எதிர்ப்புக்களங்களில்
பரந்துபட்ட போராட் டங்களிலிருந்து ஆயுத மோதல்கள் வரை நடப்பதைக் காண முடிகிறது.
இந்தியப்பரப்பில் சில மாநிலங்களிலாவது இப்படி யான நிலை பல்வேறு கட்டங்களில் உண்டு. இதே
போல நகரங்கள் பலதிலும் பொதுவெளி என்பது மாற்றுருவம் பெற்றது, பெறுகின்றது.
பொதுச்சேவைகள் பல படிப்படியாகக் குறைக்கப்பெற்று, தனியார் பொறுப்பேற்கும் நிலை. பூட்டிய
குடியிருப்புக்கள், புதிய சாலைகள், பாலங்கள், பேரங்காடிகள், விமான நிலையங்கள்,
தனியார்ப்பூங்காக்கள் என இவற்றின் மூலம் பயன்பெறும் வர்க்கத்தினர் யார் என வரையறையில் இந்த
நகர வெளி மாற்றுருவம் பெறுகிறது; வளர்ச்சி என்பதாகத் தன் நியாயப்பாட்டை முன்வைக்கிறது.
ஆக, மைய-ஆர வடிவ அமைப்பின் இயக்கத்திலேயே வன்முறையைத் தூண்டும் சாத்தியம்
உறைந்திருக்கிறது. பெருவாரி குறுவிவசாயிகள் மற்றும் ஆதிவாசிகள் எதிர்நோக்குவது,
ஒன்றில் இந்த மைய-ஆர அமைப்புடன் எப்படியாவது இணைய வேண்டும் அல்லது அதை எதிர்க்க வேண்டும்
என்ற கசப்பான தேர்வைத்தான். ஆக, அவர்கள்தம் போராட்டங்களை அழிக்கவும் மழுங்கடிக்கவுமென
பல்வேறு உத்திகளை வகுக்கும் திறன் அரசு எந்திரத்துக்கு உண்டு எனக் கொள்ளலாம். இவற்றில்
அந்தந்தப்பகுதி மக்கள் தமக்குள் மோதிக்கொள்வது என்ற உத்திவரை அடங்கும். அதே நேரம்
எதிர்ப்புகளும் கலகங்களும் உருவாகுமிடமெல்லாம் அரசு எந்திர இருப்பின் நியாயப்பாட்டுக்கு
நெருக்கடி ஏற்படும். ஒருபுறம், இத்தகைய மக்களுக்கு அரசியல்-சட்ட ரீதியாக ஒருசில
உரிமைகளை வழங்கினாலும் செயல்பாட்டில் அவற்றைக் கழற்றிவிடும் சூழல். மறுபுறம், மைய-ஆர
வடிவ அமைப்பு சுழல வேண்டுமென, புதுப்புது சட்ட இயற்றல்கள், திருத்தங்கள். இந்த
மக்களுக்கும் தொழில்துறை நிறுவனங்களுக்கும் நேரடி பேரம் நடப்பதை ஊக்குவிக்கும் உத்தியும்
இவற்றில் அடங்கும். ஆக, இப்படி அரசு எந்திரம் என்பது இத்தகைய பகுதிகளில் இதுநாள்
வரையிலான தன் குறைந்தபட்சப் பணிகள், கடமைகள், ஏன் ஒடுக்குமுறையிலிருந்துகூட தேவை
ஏற்படும் வரை விலகி நிற்கலாம் என்ற நிலை.
மைய-ஆர அமைப்பு இயங்காத பகுதிகளில் அரசு எந்திரம் இனி முன்போலச் செயல்படுவதில்
பொருளுண்டா என்று கேட்குமளவு இந்த நிலை சென்றிருக்கிறது. சொல்லப்போனால் தேர்தல்,
விவசாயிகளின் தற்கொலைகள் போன்ற அரசியல்-சமுதாய நெருக்கடிகள் மற்றும் இயற்கைச்சீற்றங்கள்
நடக்கும் காலகட்டங்களைத் தவிர, இங்கு அரசு-எந்திரத்தின் செயல்பாடு என்பதை சற்றேனும்
விலகியிருக்கும் ஒன்றாகவே காண வேண்டும். இந்த அவசரக் காலகட்டங்களில் மட்டுமே
இந்தப்பகுதிகளில் தன் நியாயப்பாட்டை நிறுவ முடியும் என்று அரசு எந்திரத்துக்குத்
தெரியும். இந்த நிலையில், வளர்ச்சி, அபிவிருத்தி என்பதாக இந்தப்பகுதி மக்களின்
எதிர்பார்ப்புக் களும் விழைவுகளும் நிறைவேறாது நீடிக்கின்றான.
ஆக, இது அதிவளர்ச்சிச் சுழலும் அதன் அழிவும் அவலமும் நீடிக்கும் நிலை எனலாம்.
- நாகார்ஜுனன்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 7:43:46 AM5/30/15
to brail...@googlegroups.com
இந்திய அரசு - ஒரு விசாரணை
8
விவரங்கள்
எழுத்தாளர்: வ.கீதா
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: ஆகஸ்ட்09
C வெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009
தெற்காசியாவில் தான் வல்லரசாக அறியப்பட வேண்டும். தனது பலத்தையும் அதிகாரத்தையும் கண்டு
பிற தெற்காசிய நாடுகள் அச்சப்பட வேண்டும். தனது ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளாக அவை
இருக்க வேண்டும் என்ற பேராசையும் ஆணவமும் இந்திய அரசின் பண்புகளாக, அடையாளங்களாக
தங்கிவிட்டன. பிற தெற்காசிய நாடுகள் அமெரிக்காவுக்கு இணையான நாடாக, தம்மை அதட்டி,
மிரட்டி அடிபணிய வைக்க வல்லவராக இந்திய அரசினை அடையாளங் காண்கின்றனர். நேபாளம்,
வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சாமான்ய மக்களுங்கூட இந்திய அரசின்பால் வெறுப்பை
செலுத்தத் தயங்குவதில்லை. உலக காவலாளிகளாக விளங்கும் அமெரிக்கா சம்பாதித்து வைத்துள்ள
வெறுப்புக்கு இணையான ஒன்றை இந்திய அரசு சம்பாதித்துக் கொண்டுள்ளது என்று கூடச் சொல்லாம்.
வல்லரசாக தன்னை அறிவித்துக் கொள்ளும் இவ்வரசின் தன்மை, உள்ளீடு பற்றி நாம் சிந்திக்க
வேண்டியது என்பது காலத்தின் தேவையாக உள்ளது. இத்தகைய சிந்தனையை வளர்த்தெடுக்கும்
முகமாக சில அனுமானங்களை இக்கட்டுரை முன் வைக்கிறது. தாராளவாத சனநாயக சிந்தனையில்
தேசநலம், குறிப்பிட்ட தேசத்தின் இறையாண்மை முதலியன குடிமக்களின் நலம், குடியரசின்
திண்மை ஆகியவற்றோடு தொடர்பு படுத்தப்படுவதும் அந்த அடிப்படையில் விளக்கப்படுவதும்
வழக்கம். இந்தியா போன்ற சனநாயக நாடுகளின் அரசியல் வாழ்க்கையை மதிப்பிடுவதற்கும்
புரிந்து கொள்வதற்கும் இத்தகைய விளக்கங்களும் வரையறைகளும் கையாளப்படுவதும் வழக்கம்.
இத்தகையவற்றின் அடிப்படையில் இந்திய அரசு பறைசாற்றும் தேசநலம், தேசத்தின் இறையாண்மை
குறித்த வாதங்களை பரிசீலிக்க முற்படுவோமேயானால் சாதி நலன்களுக்கு தேசிய முலாம்
பூசப்பட்டு அவையே பொது நலன்களாக உருமாற்றப்படுவது என்பது நாளரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக நடைபெற்று வருவதை தற்கால நிகழ்வுகள் பல நமக்கு உணர்த்துகின்றன.
முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், சிறப்பு பொருளாதார மன்றங்களை அமைத்தே தீருவோம்
என்பதில் உறுதியாக நின்று கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துணியும்
அரசின் மெத்தனம், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இறந்து
போனதற்கு காரணமாக உள்ள நரேந்திர மோடியின் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை முதலாளிகள்
புகழ்ந்துப் பேசுவதற்கு வழிவகுத்துக் கொடுக்கும் அரசின் பொருளாதாரத் திட்டங்கள்,
வாழ்வாதார உரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக ஆதிவாசிகளும், குடியானவர் களும்,
தலித்துகளும் முன்னெடுத்துள்ள போராட்டங்களை ‘பயங்கரவாத’ செயல்பாடுகளாக
அடையாளப்படுத்தும் அரசின் அறமற்ற, பொய்யான அரசியல் தந்திரம்: இவை அனைத்தையும் செய்தாலும்
நாட்டு நலம், எல்லைப் பாதுகாப்பு, இந்திய இறையாண்மையை பேணுதல் என்பனவற்றின் பெயரில்
தனது செயல்பாடுகளை சாடுபவர்களையும் எதிர்ப்பவர்களையும் ‘தேச துரோகி’களாக
முத்திரையிட்டு, சாமான்ய குடிமகனின் உணர்ச்சி மேம்பட்ட தேசியவுணர்வை உசுப்பிவிட்டு,
தனது குற்றங் குறைகளை அரசு இருட்டடிப்பு செய்து விடுகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் ‘சட்ட ஒழுங்கு’ நடவடிக்கைகள், ‘பாதுகாப்பு’ நடவடிக்கைள்
ஆகியவற்றை, தான் பேண விரும்பும் இறை யாண்மைக்கான உத்திரவாதங்களாக இந்திய அரசு
ஆக்கியுள்ளது. தனது ‘நியாயத்தை நிறுவுவதன் பொருட்டு மக்கள் மத்தியில் பணிப்புரிந்து
வருவோரையும், அவர்களுடைய சனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரையும்
‘குற்றவாளி’களாக இந்த அரசு அறிவித்து வருகிறது. அரசு என்ன செய்தாலும் அது
சட்டத்துக்கு உட்பட்டதாக விளக்கப் படுவதும், அதனை எதிர்ப்பவர்கள் நியாயம், நீதிகோரி
போரிட்டாலும் அது சட்ட விரோதமானதாக ஆக்கப்படுவதும் காலத்தின் கோலமாக உள்ளது.
இந்திய அரசின் செயல்பாடுகளை மேன்மேலும் ஊக்குவித்து அவற்றை தொடரச் செய்வதில் பன்னாட்டு
மூலதனத்துக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் பெருத்த அக்கறை உள்ளது போலவே, முதலாளிகள்
பெறும் கொள்ளை இலாபத்தில் தம் பங்கைக் கேட்டுப் பெறுவதற்காகக் காத்திருக்கும் நிர்வாகத்
துறைக்கும், அரசின் நியாயத்தை ஏற்று அதற்கு மெருகூட்டும் நீதித்துறைக்கும் அக்கறை உண்டு.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வரும் முதலாளித்துவ பகல் கொள்ளைக்கு ஆதரவாக அனைத்து
அரசு நிறுவனங்களும் துறைகளும் செயல்பட்டு வருவதை நாம் யாவரும் அறிவோம். இந்தப் பகல்
கொள்ளையால் பெரும்பாதிப்பை சந்தித்துள்ள ஆதிவாசிகளை கூறுபோட்டு அவர்களின் சிலரைக்
கொண்டே அங்கு நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ளத் துணிந்துள்ள மாநில அரசின்
சாதுரியமும் அதனை ஒரு அரசியல் கொள்கையாக ஆக்கத் துடிக்கும் மத்திய அரசின்
சாணக்கியத்தனமும் இந்திய அரசினை இயக்கும் பார்ப்பனீயத் தின் வெளிபாடுகளே அன்றி வேறல்ல.
இந்து - இந்தி -இந்தியா குறித்து தமிழ்நாட்டில் நாம் அதிகம் பேச வேண்டியத்தில்லை என்ற
போதிலும் பெரியாராலும் அம்பேத்கராலும் ‘பார்ப்பன _ பனியா’ அரசு என அழைக்கப் பட்ட
அரசின் தன்மையை குறித்து நாம் தொடர்ந்து பேசுவ தென்பது தவிர்க்க முடியாததாக
ஆகியுள்ளது. இதைச் செய்யும் போது இந்த அரசின் ‘சனநாயக’த் தன்மை குறித்தும் யோசிக்க
வேண்டியவராகிறோம்.
இந்திய பாராளுமன்றத்தை எடுத்துக் கொள்வோம். காலங்காலமாக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட
கடைநிலை சாதிகளின், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின், தாழ்த்தப் பட்ட சாதிகளின்
பிரதிநிதிகள் அதில் இன்று கூடுதலான எண்ணிக்கையில் உள்ளனர். தேர்தல் அரசியலும் அது
சாதிக்க விரும்பும் வரம்புக்குட்பட்ட சனநாயகமும் இதை சாத்திப் படுத்தியுள்ள போதிலும்,
இப்பிரதிநிதிகள் அரசியல் வாழ்க்கை யில் தமக்குரிய இடத்தையும் உரிமையையும் பெறுவதற்காக
அவர்களது மூதாதையர்களும், சென்ற தலைமுறையினரும் மேற்கொண்ட போராட்டங்கள்தான். இந்த
குறைந்தபட்ச சனநாயகத்துக்கும் கூட ஆதாரமாக விளங்கி வருகின்றன. பார்ப்பனர்களின்
மேலாண்மையை முற்றிலும் தகர்க்காது. பிறப்பின் அடிப்படையில் அவர்கள் செலுத்தும்
மேலாதிக்கத்தில் பங்கு பெற விழையும் இதர சாதியினரின் அரசியலுங்கூட ஏதோவொரு
வகையிலான சனநாயகத்தை சாத்தியப்படுத்த வல்லதுதான்.
இன்னும் சொல்லப்போனால் இவ்வாறு உள்ள படியே ஆட்சியதிகாரத்தில் பங்கு கேட்க விழையும்
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அரசியல் தலைமைகளின் அரசியல் ஆர்வத்துக்கான நியாயத்தை,
மேற்கூறிய போராட்டங்களைப் பற்றிய நினைவும் அந்நினைவு தோற்றுவிக்கும் மனக்கிளர்ச்சி
யும்தான் இயற்றியளித்துள்ளன. மேலும், சாதி ஏற்றத் தாழ்வுகள் மலிந்து கிடக்கும்
சமுதாயத்தில் சாதி நலன்களை கடந்த, பொதுநலனை, பொதுவுரிமையை ‘அரசு’ என்ற ஒன்றுதான்
இதுநாள் வரைக்கும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ளது. அத்தகைய பொதுவுரிமைக்கான
அடிப்படை ஆதாரங்களையும் அந்த அரசின் இருப்புக்குக் காரணமாக உள்ள அரசியல் சட்டமும், அதன்
முக்கியமான பகுதியாக உள்ள அடிப்படை உரிமைகள் சாசனமும் தான் வழங்கி வருகின்றன.
இத்தகைய அரசை இயக்கும் சனநாயக உந்து சக்திகளில் ஒன்றான பாராளுமன்றம் கண்டுள்ள சனநாயக
மாற்றங்களை இந்தக் கோணத்தலிருந்தும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பொதுவுரிமைக்ககான
அரசாக அது இருக்க வேண்டுமானால் சகல சாதியினரும் தமக்குரிய பங்கை கோருவது என்பது
தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
பிரச்சினை என்னவெனில் நவீன கால இந்திய அரசு தன்னை ஒரு குடியசராக வரையறுத்துக்
கொண்டதாலேயே பொது உரிமையை பிரதிநிதித்துவப்படுத்த வல்லதாகி விடுவதில்லை. காரணம்,
ஒரு குடியரசின் தன்மை அது வகுத்துக் கொண்டுள்ள அற்புதமான சட்டத்திட்டங்களைப் பொருத்து
இருப்பதில்லை. அச்சட்டத்திட்டங்கள் அரசியல் வாழ்வுக்கு மட்டுமில்லாது சமுதாய வாழ்வுக்கும்
உரியவையாய் அறியப்படுவதும், பொருளாதார வாழ்வில் சமத்துவத்தையும் சமநீதியையும் ஏற்படுத்த
வல்லதுமாக இருந்தால்தான் ஒருஅரசானது ‘குடியரசு’ என்ற தகுதியைப் பெறும். அரசியல்
சட்டத்தைக் கொண்டு சாதிய தன்மையுடைய இந்திய அரசை குடியரசாக மாற்ற முடியும் என்ற
நம்பிக்கையில் பணிபுரிந்த அம்பேத்கரும் கூட, பின்னாட்களில் சமுதாய மாற்றம் என்பதை இவ்வாறு
சாதிக்க இயலாது; முற்றிலும் வேறுபட்ட அறவியல் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் மூலம்
மட்டுமே சாதி இந்து சமுதாயத்தை எதிர்க்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அரசியல்
சட்டத்தை வரைந்த அறிவு தம்மத்தில் தன்னை இணைத்துக் கொண்டது.
அம்பேத்கரைப் போல அல்லாது, அரசியல் சட்டம் உருவாக்கும் முயற்சியை பற்றி தொடக்கம் முதலே
பெரியாருக்கு நல்லெண்ணமும் நம்பிக்கையும் இருக்கவில்லை. சாதி அமைப்பை கட்டுக்குலையாது
காப்பாற்றும் வேலைகளை அரசியல் அமைப்பின் பார்ப்பன-பனியா அங்கத்தினர் செய்து வருவதாக அவர்
1948இலேயே குற்றம் சாற்றினார். பார்ப்பனீய தத்துவமும் பனியாக்களின் பொருளாதாரச்
கொள்கைகளும் கைக்கோர்த்துக்கொண்டு பொதுவுரிமை, பொதுவுடைமை ஆகிய இரண்டையும்
தவிடுபோடியாக்கி விடும் என்பதை அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டினார்.
தத்துவரீதியாகவும் வர்க்கரீதியாகவும் குடியரசாக விளங்காது இந்து-இந்தி-இந்தியாவாக
அவதாரம் எடுத்துள்ள இந்திய அரசானது தொடர்ந்து தன்னை ஒரு சனநாயக அரசாக இனங்காட்டிக்
கொண்டு வருவதன் சூட்சமத்தை மேலும் ஆராய்வோம்.
குறிப்பிட்ட சாதி, வர்க்க நலன்களை முன்னிட்டே அரசின் திட்டங்களும் செயல்பாடுகளும்
அமைந்துள்ள போதிலும், அரசு தன்னை அனைவருக்குமான அரசாகக் காட்டிக் கொள்ளவும்
விழைகிறது. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே தனது ‘சனநாயக’த் தன்மையின் மேன்மையையும்
பாகிஸ்தானின் ‘ஏதேச்சதிகார’ அரசியலையும் ஒப்பிட்டுக்காட்டி முற்போக்கான அரசாக தன்னை
காட்டிக் கொண்டது. மேலும், தாராளவாத சனநாயகம் என்பதில் முழு நம்பிக்கையுடைய அரசியல்
தலைமைகள் அக்காலக் கூட்டத்தில் அரசியல் வாழ்க்கையிலும் சுதந்திர இந்தியாவின்
அரசியலதிகாரத்திலும் பங்கு வகித்து வந்தனர். தங்களது வர்க்கசாதி நலன் அச்சுறுத்தலுக்கு
ஆளானபோது இவர்கள் வெகுண்டு செயல்பட்டனர் என்பதை மறுப்பதற்கில்லை.
தெலுங்கானா போராட்டத்தை நேரு அரசு முடிவுக்குக் கொண்டு வந்தவிதம், தேர்ந்தெடுக்கப்பட்ட
கம்யுனிச அரசை (கேரள அரசை) கலைத்த தோரணை போன்ற சம்பவங்கள் சுதந்திர இந்திய அரசின்
பண்புகளை சுட்டுவனவாக அமைந்தன. 1950களில் பெரியாரின் கொடி எரிப்புப் போராட்டத்தையும்
சட்ட எரிப்புப் போராட்டத்தையும் ஒடுக்கியதிலும் நேரு பேணிய சனநாயகத்தின் வரம்புகள்
வெளிபட்டன என்றாலும் தாராளவாத அரசியல் சிந்தனையுடைய சட்டத்தின் ஆட்சியை நிலை
நிறுத்தவும் சுதந்திர இந்திய அரசு ஆவல் கொண்டிருந்தது. நீதித்துறை சுயாதீனமாக
செயல்படுவதை அது எல்லா நேரங்களிலும் கட்டுப்படுத்தவில்லை. அரசாங்கம், கட்சி, நிர்வாகம்,
ஆகியன தம்மளவில் சுதந்திரமாக இயங்குவதையும் ஓரளவுக்கு அனுமதித் தது. பாராளுமன்ற
செயல்பாடுகளும் சனநாயகத்தை விரிவுப்படுத் துபவையாக அமைந்தன. நேரு அரசு தொடர்ந்து
எதிர்க்கட்சி களின் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.
காலப்போக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடை யாளங்களும் மாறின. 1970
ஆதிக்கசாதிகளையும் வாக்கங்களை யும் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், நாம் ஏற்கனவே
கூறியதுபோல, பல்வேறு சமூக வகுப்புகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகத் துறையில் இந்த வகுப்பினருக்குப் போதுமான
பிரதிநிதித்துவம் வாய்த்திருக்கவில்லை என்றாலும், பாராளுமன்ற அரங்கில் வகுப்புரிமைக்கான
விவாதத்தையும் அதற்கான தேவையையும் முன்னெடுத்துச் செல்ல இவர்களால் முடிந்தது. பல்வேறு
சமூக, சாதி நலன்களுக்கிடையே நிலவிய முரண்கள், போட்டா போட்டிகள் முதலியவற்றுக்கு
பாராளுமன்ற சனநாயகம் ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. மண்டல் பரிந்துரைகள் தொடர்பாக
நிகழ்ந்த நிகழ்வுகளும், சமுதாய களத்தில் இப்பரிந்துரைகளின் விளைவாக உண்டாகிய சலன்களும்
இந்திய சனநாயகத்தின் எல்லைகளை விரிவுப்படுத்தின. இந்திய அரசு தனது உள்ளார்ந்த வர்க்க,
சாதி நலன்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத போதிலும் இவற்றுக்கு சவாலாக
தோன்றியிருந்த எதிர்ப்புக் குரல்களுக்கும் எதிர்வினைகளுக்கும் செவி மடுக்க
வேண்டியிருந்தது. ஏன், அவற்றுடன் சமரசம் செய்து கொள்ளவும் தள்ளப்பட்டது.
பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் இவ்வாறிருக்க, மாறி வரும் சமூகச் சூழலின் எதிரொலிகள்
வேறு தளங்களிலும் ஒலிக்கத் தொடங்கின. 1975க்குப் பிறகு, அதாவது அவசர
சட்டக்காலத்துக்குப் பிறகு, இந்தியாவின் அரசியல், சமுதாய வாழ்வில் சிவில் உரிமை
அமைப்புகளும் இயக்கங்களும் முக்கிய பங்காற்றி வந்தன. அடிப்படை உரிமைகள் என்பனவற்றுக்கு
வழங்கப்பட்டிருந்த வரையறைகளுக்கு புரட்சிகரமான விளக்கங் களை அளித்து அவற்றின் வீச்சை
சிவில் உரிமைகளை வழக்காட வந்த வழக்கறிஞர்கள் விரிவுப்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக
உயிர் வாழ்வதற்கான உரிமை என்பது மிக விரிவான பொருள் பெற்று, சாமான்ய இந்திய
குடிமக்களின் உரிமைப் போராட்டங் களுக்கு ஆதாரமாக அமைந்தது. அரசியல், சமுதாய களங்களில்
தீர்க்கமுடியாதப் பிரச்சினைகள் நீதிமன்றங்களில் அடைக்கலம் கண்டன. நிர்வாகமும் அரசாங்கமும்,
பாராமுகமாக இருந்தா லும் நீதிமன்றம் கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையை வளர்க்க, மக்கள்
சார்பாக வழக்காட வந்தவர்களின் நேர்மையும் திறமையும் காரணமாக அமைந்தன.
இவ்வாறாக மக்களின் செயல்பாடுகளும் அரசியல் பங்கேற்பும் இந்திய அரசை சனநாயகப்படுத்த,
அதாவது, சற்றே சனநாயகப் படுத்த உதவின. அரசின் வர்க்க-சாதி பண்புகள் நேரடியாக
மேலாதிக்கம் செலுத்தும் நிலை மாறியமைந்தது. இப்பண்புகளை உருட்டிப்போட்டு, பதம்பார்த்து,
தரம்பிரித்து பிரத்யேக வடிவங்களில் அவற்றை செதுக்க பல சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்
முட்டி மோதுவதென்பது தவிர்க்க முடியாத தாகியது.
அதேசமயம் இந்தியஅரசு தொடர்ந்து தனது உள்ளார்ந்த சாதி-வர்க்க நலன்களை பாதுகாத்துக்
கொள்ளவும் அவற்றை பொது நலன்களாக விளக்கி, பரந்துப்பட்ட மக்களின் ஒப்புதலைப் பெறவும்
முக்கியமான கருத்தியல் பணிகளை மேற்கொள்ள தவறவில்லை. தேசியம் என்ற கருத்தாக்கத்தை
சமயத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற வகையில் கையாண்டது. இந்தியா, சீனா எல்லைப்
போரின்போதும், வங்கதேச விடுதலைப் போரின்போதும். தேசபக்தியாக அவதரித்த தேசியமானது,
அவசர சட்டக் காலத்தில் கண்டிப்பான கொள்கையாகவும் நாட் டின் எதிரிகளாக அரசால் அடையாளங்
காணப்பட்டவர்களை தண்டிக்கவும், அத்தகைய தண்டனையை நியாயப்படுத்தவும் உதவக்கூடிய பாசிச
சாயலுடைய சூத்திரமாகவும் உருவெடுத்தது. இந்திய அரசின் மேலாண்மை காஷ்மீரத்திலும்
நாகலாந்திலும் எதிர் வினைகளை சந்தித்தப்போது இத்தேசியம் வன்மத்தை உமிழ்ந்தது. தீர்க்க
இயலாத வர்க்க சாதி முரண்பாடுகளை களையெடுக்க வகுப்பவுவாதத்தை ஊக்குவித்து ‘இந்து’க்களை
அணித்திரட்டும் தேசியமாக (1980களில்) பரிணமித்தது.
தேசியம் கண்ட பல்வேறு அவதாரங்களுக்கு சிகரம் வைத்தாற் போல இந்துத்துவம் என்ற தத்துவம்
எழும்பி, அப்பட்டமான சனநாயக விரோத வடிவங்களை மேற்கொண்டு, சிறுபான்மை யினரை
வதைத்தது. வருணதருமத்தை நிலைநிறுத்தப் பார்த்தது.
1990களின் இறுதி ஆண்டுகளில் உருதிரட்சி பெற்று வளர்த்த இந்துத்துவம் இந்திய அரசின்
வர்க்க-சாதி நலன்களுக்குரிய பிரத் யேக அடையாளமாக அமைந்தது. இந்நலன்களை ஊடறுக்க வல்ல
சமூக பின்புலத்தையும் கருத்தியல் செறிவையும் பெற்றிருந்த அரசியல் மரபுவழி வந்த
மாயாவதி போன்றவர்கள் கூட, இந்தஅடையாளத்துடன் சமரசம் செய்ய துணிந்தனர் என்றால்,
இந்துத்துவம் சாதித்த அரசியல் வெற்றியை என்னவென்று சொல்வது? பெரியார் பலமுறை
சொன்னதுபோல, ‘பலித்தவரை என்பதுதான் பார்ப்பனீயம்’ என்பதற்க்கு இதைவிடச் சிறந்த சான்று
இருக்குமா என்று தெரியவில்லை.
இந்துத்துவம் வேறொன்றையும் அம்பலப்படுத்தியது. தாராளவாத சனநாயக அரசுக்குரிய பண்புகளை
ஏற்று இயங்கிய அரசானது, உண்மையில், யாருக்கானதாக, யாருடைய உரிமையைக் காக்க வல்லதாக
இருந்து வந்துள்ளது என்பதை அரசு அமைத்த சச்சார் குழு வெளிப்படுத்தியது. இக்குழு,
இஸ்லாமியர்களின் வாழ்நிலைமைகளை ஆராய்ந்தது. அவர்களின் முன்னேற்றத்துக்கென சில
பரிந்துரைகளை செய்தது. இந்துத் துவத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்தவும், தனது
‘மரச்சார் பற்ற’ அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மன்மோகன்சிங் தலைமையிலான
காங்கிரஸ் அரசு இந்த குழுவை அமைத்திருந்தாலும், அக்குழுவின் பரிந்துரைகளினு டாக
இந்துத்துவத்தின் பாரபட்சங்கள் சாதித்தவை மட்டும் வெளிபடவில்லை. சுதந்திர இந்தியாவில்
நெடுநாள் ஆட்சி நடத்திய ‘மதச்சார்ப்பற்ற’ காங்கிரஸ் அரசுகள் யாவும் செய்ய தவறியவையும்
செய்ய மறுத்தவையும் வெளிபட்டன.
குறிப்பிட்ட வர்க்கசாதிகளின் பிரதிநிதியாக, காப்பாளனாக, விளங்கும் இந்திய அரசின்
உள்ளார்ந்த தன்மைக்கும் குறிப்பிட்ட வரலாற்று சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப மாறியமையும் அதன்
செயல்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளியும் முரண்பாடுகளும் தான் எதிர்வினைகளுக்கும்
போராட்டங் களுக்கும் தளம் அமைத்து தருகின்றன. இத்தகைய போராட்டங்கள் அரசின் உள்ளார்ந்த
தன்மையை மாற்ற முனையலாம். அல்லது உள்ளதைப் பங்குப் போட்டுக் கொள்வதற்கான போராட்டமாக
இருக்கலாம். முதலாம் வகைப்போராட்டத்துக்குக்கு இரண்டு முக்கிய கருத்தியல் மரபுகள்
ஆதாரமாக அமையலாம்: இந்து-இந்தி-இந்தியாவை எதிர்த்து குறிப்பிட்ட தேசிய இன அடையாளத்தை
முன்நிறுத்திய மரபு, அரசின் வர்க்க பண்பை எதிர்த்து அதற்கு எதிராக ஆயுதங்தாங்க துணிந்த
இடதுசாரி மரபு.
முதலாம் மரபு தமிழகத்தில் உயிர்ப்புடன் செயல்பட்ட காலகட்டத்தில், இந்தியா என்பதற்கு
எதிராக தமிழ், திராவிட அடையாளங்களை முன்நிறுத்திய அதே வேளையில், இந்தியாவின் சாதி
வர்க்கப் பண்புகளை விமர்சித்தும் கண்டித் தும், பார்ப்பனீயத்தை எதிர்த்தும் செயல்பட்டது. இன்று
இம்மரபுக்கு எதிர்வினையாற்ற வல்ல ஆற்றல் இருக்கிறதா என்று தெரியவில்லை. திராவிட இயக்கம்
கண்ட கட்சிகள் யாவும் இந்திய அரசின் பங்காளிகளாக உள்ளதுடன், அவ்வரசுக்கு ஆதாரமாக உள்ள
வர்க்கப் பிரிவுகளுடனும் சாதிகளுடனும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளன. தொடர்ந்து ‘தமிழ்
தேசிய நலம்’ குறித்து பேசுவோரில் பலர் தமிழ் அடையாளத்தை முன்நிறுத்தி
போராடுகிறார்களேயன்றி, இந்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் வர்க்க சாதியினரையோ அவர்கள்
போற்றும் ‘இந்து’ தேசியத்தையோ போதுமான அளவுக்கு எதிர்ப்பதில்லை. அவ்வாறு எதிர்ப்பதன்
தேவையை வலியுறுத்து வதில்லை. தமிழுக்குள் அனைத்து முரண்பாடுகளையும் முடக்கிவிட
முடியும் என்ற நினைப்பில் இவர்களில் பலர் செயல்படுகின்றனர்.
ஆயுதங்களை கையிலெடுத்து களம் இறங்கியுள்ள இடது சாரிகள் அரசுக்கு எதிராகவும், ஆளும்
வர்க்க சாதியினருக்கு எதிராகவும் வர்க்கப் போரை முன்னெடுத்துச் செல்ல மேற்கொண்டுள்ள
செயல்பாடுகள் அரசால் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக ஆயுதம்
தாங்குபவர்கள் அரசின் வன்மத்தை அதிகரிக்கச் செய்கிறார்கள் என்பது கண்கூடு, இவ்வன்மத்துக்கு
ஆளாகும் எளிய மக்களின் கதிக்கும் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள அமைதியான புரட்சி
செயல்பாடுகளுக்கும் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?
இந்திய அரசை உள்ளவாறே சனநாயகப்படுத்த முடியுமா? உண்மையான இறையாண்மையை வரையறுத்து
பாதுகாப்ப தென்பது சாத்தியமா? தாராளவாத சனநாயகத்தின் வரம்புகளை குலைக்காமல் இந்திய
அரசினை எதிர்கொள்ள இயலுமா? அவ்வாறு அவ்வரம்புகளை மீற முனைபவர்கள், தாராளவாத சனநாயகம்
சாதித்தளிக்கக்கூடிய சிற்சில வெற்றிகளை இழக்கவும் கைவிடவும் தயாராக உள்ளனரா?
இந்திய அரசு குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
- வ.கீதா
(கட்டுரையாளர், சுயமரியாதை இயக்கம் மற்றும் பெண்ணியம் குறித்துத் தமிழிலும்
ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிட்டுள்ளார். எஸ்.வி.ராஜதுரை அவர்களோடு இணைந்து பல
நூல்களை எழுதியுள்ளார். முழுநேர ஆய்வாளர்)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 7:53:50 AM5/30/15
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com, Thamaraikkannan B, rajavelu....@gmail.com, Palaniappan Nalliappan, Ramesh M
நூல் அறிமுகம்
8
விவரங்கள்
எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: ஆகஸ்ட்09
C வெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009
தொல்காப்பியம் -பன்முக வாசிப்பு
தமிழ்ச்சூழலில் அண்மைக்காலமாக இலக்கண ஆய்வு, இலக்க நூல் பதிப்பு குறித்தான செயல்பாடுகள்
வேகம் பெற்றுவருவதைப் பார்க்க முடிகிறது. இந்தச் செயல்பாட்டுத் தளத்தில்
‘தொல்காப்பியம்-பன்முக வாசிப்பு’ எனும் நூல் புதிய வரவாகும். தமிழ் இலக்கண மரபிலும்,
புலமை மரபிலும் உச்சநிலையில் வைத்து எண்ணப்படும் தொல்காப்பியம் குறித்து இந்த
இருநூற்றாண்டுகளில் முன்னெ டுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் காலம் குறித்தான ஆய்வுகளும் பிற்பகுதியில்
மொழியியல், கோட்பாட்டு ரீதியிலான ஆய்வுகளும் தமிழ்ச்சூழலில் முனைப்பாக நடந்தன.
இவ்வாறானப் பன்முகப்பட்ட ஆய்வுத் தளத்தில் தொல்காப்பியம் குறித்து நிகழ்த்தப்பட்ட பன்னிரண்டு
ஆய்வுக்கட்டுரைகளைத் தேடித் தொகுத்து பா.இளமாறன் இந்நூலை உருவாக்கியுள்ளார்.
தமிழ்ச்சமூகம் தொல்காப்பியத்தை இலக்கணப் பிரதியாக மட்டும் பார்க்காது சிந்தனை மரபின்,
பண்பாட்டின் அடையாளமாகவும் பார்த்து வருகிறது. இதன் விளைவாக, அப்பிரதியின் மீது
பலதரப்பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரைகளைத்
தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
தொல்காப்பியப் பனுவலின் காலம் அப்பனுவல் உருவாக்கத் தின் தேவை, பனுவலின் அமைப்பு, அவை
குறித்த ஆய்வு, மொழிபெயர்ப்பு, பதிப்பு எனும் பன்முகத் தன்மையில் கட்டுரைகள்
தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியப் பிரதியின் பல்பரிமா ணத்தையும் புரிந்துகொள்ளும்
வகையில் இத்தொகுப்பு நூல் உருவாக்கப்பட்டுள்ளமை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இலக்கணம்
குறித்த தேடலில் ஈடுபடும் ஆய்வாளனுக்கும் வாசிப்பாளனுக்கும் இத்தொகுப்பு நூல் ஒரு
முதன்மைத்தரவாக இருந்து உதவும்.
சீனாவின் முற்றுகையில் இந்தியா
2009 மே 16, 17, 18 ஆகிய நாட்களில் சிங்களப் பேரின இராணுவ அரசாங்கம்
இருபதனாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்பேசும் மனிதர்களைக் கொலைசெய்து முடித்தது. மூன்று
லட்சம் தமிழ் பேசும்மனிதர்கள் சொந்தமண்ணில்அகதிகளாக்கப்பட்டு அவதியுறுகின்றனர்.
இந்தக்கொடுமைக்குப் பின்புலமாக இந்தியா, சீனா ஆகிய ஆசியக் கண்டத்தின் வல்லரசுகள் எவ்விதம்
செயல் பட்டன? இவை இரண்டிற்குள்ளும் உள்ள முரண்பாடுகள் எவை? சீனா முன்னெடுக்கும் திட்டங்கள்
எவை? இதனை இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறது? ஆகிய பல உரையாடல்களை இந்நூல்
முன்வைக்கிறது. இணையத் தளங்களில் உள்ள கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (1919-1947)
பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிபுரிந்தபோது இந்தியாவில் நடைபெற்ற செயல்களை எப்படிப்
புரிந்துகொள்வது? இந்திய முதலாளி வர்க்கம், ஏகாதிபத்தியத்துடன் எவ்வகையில் உறவு
கொண்டிருந்தது? இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களைக் காங்கிரஸ்காரர்கள்
மட்டும்தான் நடத்தினார்களா? காங்கிரசின் தொடர்பில்லாமல், சுயேச்சையாக
விவசாயிகள்-தொழிலாளிகள்-நகர்ப்புற குட்டி முதலாளிகள் நடத்திய போராட்டங்களை எவ்வகையில்
மதிப்பிடுவது? இந்தியப் பெருமூலதனமும் ஏகாதிபத் தியமும் எவ்வகையில் இணைந்து
செயல்பட்டன? ‘சத்தியாகிரகம்’, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் ஆகிய பிறவற்றை காந்தி
எதற்காக நடத்தினார்? இவ்வகை இயக்கங்கள் முதலாளிகளை எப்படிக் காப்பாற்றின? இந்தியாவில்
செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரத்தை எப்படிப் புரிந்துகொள்வது? ஆகிய பல
கேள்விகளுக்கான உரையாடலை இத்தொகுதிகள் முன்வைக்கின்றன.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 7:58:02 AM5/30/15
to brail...@googlegroups.com
இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சியும்
விரிவடைதலும்: ஒரு குறிப்பு
8
விவரங்கள்
எழுத்தாளர்: இராமன் மகாதேவன்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: ஆகஸ்ட்09
C வெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009
இந்திய முதலாளி வர்க்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு நெடிய கதை. அக்கதையின்
சாராம்சத்தை மட்டும் நாம் இங்கே வழங்க முற்படுகிறோம். இந்தியாவில் இன்று நாம் காணும்
தொழில் வளர்ச்சியையும் முதலாளி வர்க்கத்தின் எழுச்சியையும் மூன்றாம் உலக நாடுகள்
பலவற்றிலும் நம்மால் காண இயலாது. அந்நிய முதல் பெருமளவில் இந்திய பொருளாதாரத்தில்
புழங்கிக் கொண்டிருந்ததற்கு இடையிலும் உள்நாட்டு முதலாளி வர்க்கம் இயங்குவதற்கு அதற்கென
ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டது இந்தியாவில் நடந்தது. இப்படி இயங்குவதன் மூலம் அந்த
வர்க்கம் வளர்ச்சியும் பெற்றது. இது எந்த அளவிற்கு வளர்ச்சியுற்றது என்றால், நாடு 1947ஆம்
ஆண்டு விடுதலை பெற்றபோது, காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற எந்த ஒரு ஆசிய,
ஆப்பிரிக்க நாட்டை விடவும் வளர்ந்த ஒரு முதலாளிவர்க்கமும் தொழில்துறையும் இந்தியாவில்
இருந்தன. இந்தியாவின் நவீன தொழில்சார்ந்த முதலாளி வர்க்கம் தழைத்தோங்க முக்கியக்
காரணிகளில் ஒன்று, காலனி ஆதிக்கத்தின்போது, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து
கட்டவிழ்த்து விடப்பட்ட வணிகமயமாக்கலாகும்.
இந்திய பொருளாதாரத்தை ஒருங்கிணைத்த அதே வேளையில், உலக முதலாளித்துவ அமைப்பிற்கு
இந்தியப் பொருளாதாரத்தை கீழ்ப்படிய வைத்ததும் காலனி ஆதிக்கத்தின்போது நடை பெற்றது. இந்த
பொருளாதார நிகழ்வுதான் இந்தியாவில் வணிக முதல் (Merchant capital) வளர்வதற்கான
உகந்த சூழலை உருவாக்கியது. இந்த காலகட்டத்தில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்ததால்
அதன் பொருளாதாரம் ஆதிக்க நாட்டின் பொருளாதார நலன்களை முன்னிலைப்படுத்தி செயல்பட
வேண்டிய சூழலும் நிலவியது. அதாவது, ஆங்கிலேய நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு
ஒரு சந்தையாகவும் அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு தேவையான மூலப் பொருள்களை
வழங்கும் ஒரு நிலப்பரப்பாகவும் இந்தியா மாற்றப்பட்டது. இந்த இரு நடவடிக்கைகளும் வர்த்தகம்
வாயிலாகவே நடைபெற்றன. இந்த வர்த்தகம் தான் இந்தியாவில் முதல் வளர்வதற்கான வழிவகையாக
திகழ்ந்தது. வர்த்தக மயமாக்கலுக்கு ஏதுவாக பிற மாற்றங்களும் அக்காலகட்டத்தில் நடந்தேறியதை
நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் அடிக்கட்டமைப்பு வசதிகள் இக்காலகட்டத்தில்
பெரும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் அடைந்தன. நாடெங்கும் இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டு
தொடர்வண்டி சேவைகள் தொடங்கின. புதிய சாலைகளும் துறைமுகங்களும் ஏற்பட்டதால் தரைவழி
போக்குவரத்து எளிதாகவும் விரைவாகவும் நடைபெற ஏதுவாயிற்று. தந்தி, தொலைபேசி,
தபால்துறை போன்றவற்றின் அறிமுகத்தில் தொலைதொடர்பு வசதி பெருகியது. இவை யாவும்
இந்தியச் சந்தையை ஒருங்கிணைப்பதிலும் வர்த்தக மயமாக்களிலும் பெரும் பங்காற்றின.
இதனால் பொருள்களுக்கான சந்தை விரிந்தது. இத்தகைய விரிவாக்கத்தினால் இந்திய வர்த்தக முதல்
பெரும் வளர்ச்சியைக் கண்டது. இந்திய வர்த்தக முதல் ஏற்றுமதியிலும் இறக்குமதியிலும் மற்றும்
லேவாதேவி தொழில் மூலமாகவும் வளர்ந்தது. அபின், பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள்
பெருமளவில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், வர்த்தகமயமாக்கலால் ஏற்பட்ட
வளர்ச்சி ஒரே சீராக இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் நடைபெறவில்லை. சில பகுதிகள்
அதிவேகமாக வளர்ந்த நிலையில் நாட்டின் பல பகுதிகள் பின்தங்கின. மும்பையும் கொல்கத்தாவும்
வியாபார மையங்களாக செழித்தோங்கத் தொடங்கின. இதன்பயனாக இப்பகுதிகளில் இந்திய முதலும்
வெளிநாட்டு முதலும் குவிந்தன. சீரற்ற வளர்ச்சி சமுதாய அளவிலும் நடந்தேறியது. வர்த்தக
மயமாக்கல் வழங்கிய வாய்ப்புகளை பார்சி இனத்தவரும் குஜராத்தின் பனியாக்களும் மார்வாடிகளும்
பெருமளவில் பயன்படுத்தி தங்களது மூலதனங்களைக் கணிசமாக பெருக்கிக் கொண்டனர்.
தொழிற்சாலைகளை அடிப்படையாகக் கொண்ட நவீனத் தொழில்மயமாக்கல் 19ஆம் நூற்றாண்டின் மையப்
புள்ளி யிலிருந்து இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இது வர்த்தக மயமாக்கலின் ஒரு
தொடர்ச்சியாகும். இந்த தொழில் வளர்ச்சி பெருமளவில் தனியாரின் முன்முயற்சியால் ஏற்பட்ட
ஒன்றாகும். இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி அனைத்து தொழில்களிலும் ஏற்படவில்லை.
ஒருசில இரும்பு உருக்கு ஆலைகளையும் சிமெண்டு ஆலைகளையும் தவிர்த்தால் மற்றவை அனைத்தும்
பஞ்சாலைகளாகவும் சணல்ஆலைகளாகவுமே திகழ்ந்தன. ஆக, முதலீடுகளில் பெரும்பாலானவை விவசாய
விளைப்பொருட்களை தொழில் பொருட்களாக மாற்றுபவை யாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாம் முன்பே குறிப்பிட்டவாறு, மூலதனத்தின் சமுதாயக் கூறுகள் பகுதிக்குப் பகுதி
வேறுபட்டது. வங்காளத்தை எடுத்துக் கொண்டால் அங்கு தொடங்கப்பட்ட சணல் ஆலைகளும் தேயிலை
தோட்டங்களும் பெரும்பாலும் ஐரோப்பிய, குறிப்பாக ஸ்காட்லாந்து மேலாண்மை நிறுவனங்களால்
தொடங்கப் பட்டவையாகும். இந்தச் சூழல் ஏறக்குறைய முதல் உலகப்போர் நடைபெறும் வரை
தொடர்ந்தது. இத்தகைய ஐரோப்பிய மேலாண்மை நிறுவனங்களே நிலக்கரிச் சுரங்கங்களிலும் முதலீடு
செய்திருந்தன.
இதற்கு நேர்மாறாக, மும்பையிலும் அகமதாபாத்திலும் பஞ்சாலைகளும் நூற்பாலைகளும் துணி
ஆலைகளும் பார்சி சமூகத்தவராலும் குஜராத்தி பனியாக்களாலும் தொடங்கப் பட்டன. இவர்கள்
முன்பு வியாபாரத்தில் பொருள் ஈட்டிய வர்கள் ஆவர். குறிப்பாக அபின் மற்றும் பஞ்சு
வியாபாரத்தில் பொருள் குவித்தவர்கள்.
முதல் உலகப் போரும் அதன் பின் வந்த காலகட்டமும் இந்திய மூலதனத்தை பரவலாக்கியது
மட்டுமின்றி தொழில் முதலீடுகளில் அவை ஈடுபட்டு தழைத்தோங்கவும் செய்த காலமாகும். இரண்டு
உலகப் போர்களின் போது ஏற்றுமதி / இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்பட்ட தொய்வும் காலனிய அரசு
இந்திய தொழில்களை காப்பாற்ற மேற்கொண்ட வர்த்தகம் தொடர்பான கொள்கை முடிவுகளும் இந்திய
உள்நாட்டுச் சந்தையை விரிவாக்க உதவியது.
இத்தகைய ஆதரவான சூழ்நிலையால் தனியார் பலரும் பலதரப்பட்ட தொழில்களில் முதலீடு செய்யத்
தொடங்கினர். இறக்குமதி பொருள்களின் பதிலிகளை (import subsituting) உற்பத்தி செய்யும்
துறையின் வளர்ச்சி இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது. முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த
காலத்தில் தான் மார்வாடிகள் பெருமளவில் சணல், சர்க்கரை மற்றும் காகித தொழிலில் முதலீடு
செய்தனர். இதே காலகட்டத்தில் வேறு ஒரு மாற்றமும் நிகழ்ந்தது. அது வரையில் தொழில்துறை
யில் கோலோச்சி வந்த ஐரோப்பிய மேலாண்மை நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை இந்திய தொழில்
உற்பத்தியிலிருந்து விலக்கிக்கொள்ளத் தொடங்கின. இதற்கு முக்கியக் காரணம், அவர்கள் முதலீடு
செய்து நடத்தி வந்த தொழில்களின் வாய்ப்பும் முக்கியத்துவமும் குறையத் தொடங்கியதே. அவர்கள்
விலகத் தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தைக்குள் காலடி
எடுத்து வைத்தன. ஐரோப்பிய மேலாண்மை நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய
தொழில்களில் ஈடுபட்டிருந்த போதிலும் இந்திய முதலாளிகளின் பங்கு, குறிப்பாக நவீன
தொழில்களில் அவர்களின் பங்கு சிறப்பானதாகவே திகழ்ந்தது.
சமூக ரீதியாகவும் தங்களுக்குள் ஏற்பட்ட முரண்களினாலும் பிளவுபட்டதுபோல் தோற்றமளித்த
போதிலும், இந்திய முதலாளி வர்க்கம், தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை இந்திய
அரசியலிலும் உருவாக்கத் தொடங்கியது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் இதன் தாக்கம்
தெளிவாகப் புலப்பட்டது. நாடு விடுதலை பெற்ற 1947ஆம் ஆண்டு காலகட்டத்தில் காங்கிரசில்
இந்திய முதலாளி வர்க்கத்தின் இடம் குறிப்பிடத்தக்கதாகும்.
1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய வர்த்தகத் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு
(Federation of Indian Chanmber of commerce and Industry) இந்திய
முதலாளிவர்க்கம் நிலைபெற்றதைச் சுட்டும் ஒரு நிகழ்வாகும். இந்த அமைப்பு தொடங்கப்பட்டப்
பின்னர் நாட்டில் நடைபெற்ற ஒவ்வொரு பொருளாதார நிகழ்வின்போதும் இந்திய முதலாளி
வர்க்கத்தின் நிலைபாட்டை எடுத்துரைக்க இந்த அமைப்பு தவறியதில்லை. குறிப்பாக தங்களது
தொழிலை நேரடியாகவோ மறைமுக மாகவோ பாதிக்கும் நிகழ்வுகள் குறித்த தங்களது கருத்துகளை
இந்த அமைப்பு முன் வைத்துள்ளது. காலப்போக்கில் இந்த அமைப்பு மிகவும் செல்வாக்குள்ள
கருத்தாக்க அமைப்பாக (think tank) பரிணாமம் அடைந்தது. காங்கிரசு கட்சியும் அரசும்
இந்த அமைப்பின் நிலைப்பாடுகளை கவனத்தில் கொள்ளத் தொடங்கின. 1930களிலேயே இந்த அமைப்பால்
தொடக்கி வைக்கப்பட்ட பொருளாதார திட்டமிடல் குறித்த விவாதம் நாடு விடுதலை பெற்ற
பின்னரும் தொடர்ந்தது மட்டுமின்றி விடுதலை பெற்ற இந்திய நாட்டின் பொருளாதார
மேலாண்மையையே தீர்மானிக்கும் வல்லமை பெற்றதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த
அமைப்பால் உருவாக்கப்பட்ட பாம்பே திட்டம் அல்லது டாட்டா - பிர்லா திட்டம் பொருளாதார
திட்டமிடும் வல்லுனர்களின் கவனத்தை பெற்றது மட்டுமின்றி பிற்காலத்தில் இந்திய பொருளாதார
வளர்ச்சிக்கு வரையப்பட்ட திட்டங்களின் முன்னோடியாகவும் திகழ்ந்தது.
தென்னிந்தியச் சூழல்
1800ஆம் ஆண்டு வாக்கிலேயே சென்னை ராஜதானி எனப் பிற்காலத்தில் வழங்கப்பட்ட நிலப்பரப்பின்
பெரும்பகுதி கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. ஆனாலும் கூட
பொருளாதார ரீதியாக இப்பகுதியை ஒன்றாக இணைப்பது சீராகவும் சுலபமாகவும் நடைபெறவில்லை.
கொல்கத்தாவையும் மும்பையைப் போலவும் சென்னை ஒரு வியாபார தொழில்நகரமாகவும் வளரவில்லை.
இதன்தாக்கம் தென்னிந்தியாவில் உள்நாட்டு முதலாளி வர்க்கம் தோன்றியதிலும் வளர்வதிலும் நன்கு
தெரிந்தது. இங்கு தோன்றிய தொழில் வளர்ச்சி மிகவும் குறுகிய அடித்தளம் கொண்டது. துணி
தொழில் மட்டுமே குறிப்பிடத்தகுந்த அளவில் முதலீடுகளை ஈர்த்தது. வங்காளத்தில் காணப்பட்டது
போலவே, சென்னையிலும் 1920 வரையில் ஐரோப்பியர்களே தொழில்களில் முதலீடு செய்திருந்தனர்.
உள்நாட்டு முதலாளி வர்க்கம் சென்னைப் பகுதியில் சீரான வளர்ச்சியை அடையாதது மட்டுமின்றி
மந்தமாகவும் இருந்தது. ஐரோப்பிய முதலாளிகளின் மேலாதிக்கம் கூட இதற்குக் காரணமாக
இருக்கலாம். தோன்றி வளர்ந்த முதலாளிகளும் பலதரப்பட்டவராய் இருந்தனர். முதலைப்
பெருக்குவதில் காணப்பட்ட வேறுபாடுகள் ஒரு முக்கியக் காரணம். ஒருபுறம் நாட்டுக்கோட்டை
செட்டியார்கள் புதிதாக தோன்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தங்களது முதலை ஏற்றுமதி
செய்து பெரிய அளவில் பொருள் ஈட்டினர். மற்றொரு புறம், கம்மா நாயுடுகளும் கவுண்டர்களும்
வெள்ளாளர்களும் நாடார்களும் கல்லிடைகுறிச்சி பார்ப்பனர் களும் உள்நாட்டில் இருந்த குறுகிய
கொடுக்கல் வாங்கல் தொழிலில் ஈடுபட்டு சிறிய அளவில் முதல் சேர்த்தனர்.
தென்னிந்தியாவின் தற்போதைய தொழில் முதலீட்டில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும்
நாட்டுக்கோட்டை செட்டியார் களுக்கு அக்காலகட்டத்தில் பெரிய அளவில் பங்கு இருக்க வில்லை
என்பதே உண்மை. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மதுரை வங்கி ஆகியவற்றின்
வாயிலாக கடன் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியபோதிலும் அவர்களது சொத்துக்கள்
பெரும்பாலும் அசையா சொத்துக்களாக தென்னாசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில்
முடங்கிப் போயிருந்தன. அவற்றை மீட்டு மீண்டும் தாயகம் கொண்டுவர பெரிய முயற்சிகளில்
செட்டியார் சமூகம் ஆர்வம் காட்டவில்லை.
1930களில் ஏற்பட்ட உலகம் தழுவிய பொருளாதார மந்தநிலை தென்னிந்திய தொழில் முதலீட்டில்
ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இக்காலகட்டத்தில், தொழில்துறைக்கும் வேளாண் துறைக்கும்
இடையே உள்ள பண்டமாற்று விகிதம் தொழில்களுக்கு சாதகமாக மாறியது. அதாவது, விவசாயிகள்
தொழில் பொருட்களை வாங்க அதிக அளவில் செலவிடும் நிலை ஏற்பட்டது. இந்த நிலை ஏற்பட்டால்
தொழில் செய்வோரின் நிலை உயர வேளாண் தொழில் செய்வோரின் நிலை தாழும். அதன் தொடர்ச்சியாக
முதலீடும் வேளாண்மையிலிருந்தும் லேவாதேவி தொழிலி லிருந்தும் உற்பத்தி தொழிலுக்கு மாறும்.
இந்த மாற்றத்தின் சிறந்த உதாரணமாக கோவை பகுதியில் தோன்றி வளர்ந்த பருத்தி சார்ந்த துணித்
தொழிலைச் சுட்டலாம். வேளாண் வியாபாரத்தில் சேர்த்த மூலதனத்தை தொழிற் சாலைகளில் முதலீடு
செய்யத் தொடங்கினர் நாயுடு சமூகத்தவர். கவுண்டர்களும் ஓரளவு இதுபோல் முதலீடு செய்தனர்.
இவர்கள் மட்டுமல்லாது கைக்கோளர்கள் மற்றும் செங்குந்தர்களும் இத்தகைய தொழிலில் முதலீடு
செய்தனர். இதேபோல் ஒரு சில நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பங்களும் இத்தொழிலில் முதலீடு
செய்தனர்.
1920களின் தொடக்கத்திலிருந்து நாடார்கள் பெருமளவில் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில்
முதலீடு செய்தனர். இதேபோல் தோல் பதனிடும் தொழிலில் இசுலாமியர்கள் ஈடுபட்டனர். இந்த
காலகட்டத்தில் ஒருசில பார்ப்பன தொழில்முனைவோரும் தோன்றினர். சேஷசாயி, இந்தியன் சிமெண்ட்,
டி.வி.எஸ்., ராயல் என்ஃபீல்டு, ஈசன் குரூப் போன்ற நிறுவனங்கள் இக்கால கட்டத்தில்தான் தோன்றின.
நாடு விடுதலை பெற்றபோது, தமிழ்நாட்டில் ஓரளவு வளர்ச்சி பெற்ற முதலாளி வர்க்கம்
இருந்தது. ஆனால் வலுவான நிலையில் அது இல்லை. வட இந்தியாவில் இருந்த முதலுடன்
போட்டியிடும் வலு அவர்களுக்கு இல்லை. வட இந்திய முதல் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துமோ
என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டது. இந்த அச்சத்தின் காரணமாக, பல முதலாளிகளும் வட இந்திய
ஆதிக்கத்திற்கு எதிர்ப்பாக தோன்றிய திராவிட இயக்கத்தை ஆதரித்தனர்.
இந்தியா விடுதலை பெற்றபோது, இந்திய மூலதனம், அளவிலும் முதலீட்டிலும் வேறுபட்டு
காணப்பட்டது. ஒருபுறம் இந்தியத் தொழில் நிறுவனங்கள் இருக்க மறுபுறம் ஐரோப்பிய மேலாண்மை
நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் தொழில் புரிந்து வந்தன. ஆனால், பம்பாய்,
அகமதாபாத், கல்கத்தா, கான்பூர் மற்றும் வட மாநிலங்களின் சில பகுதிகளிலிருந்து வந்த
முதலாளிகளே இந்திய முதல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் பெரிய முதலாளிகள்
மட்டுமல்லாது அவர்களது சந்தையின் அளவும் பெரிதாக இருந்ததே இதற்குக் காரணம். இதனால்
அவர்களது முதலின் பெருக்கமும் அதிக அளவில் இருந்தது. இந்த சூழ்நிலை யிலும்கூட இந்திய
முதலின் சமூக அடித்தளம் விரிவடைவ தற்கான சான்றுகள் நமக்குக் காணக் கிடைக்கின்றன.
குறிப்பாக தமிழகத்திலும் ஆந்திரத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் இதனைத் தெளிவாக
படம்பிடிக்கின்றன. விவசாய வியாபாரத்திலிருந்து பல வியாபாரிகள் சர்க்கரை மற்றும் துணித்
தொழிற்சாலைகளில் முதலீடு செய்தனர்.
விடுதலை பெற்ற அரசு தனது தொழில் கொள்கையாக இறக்குமதி பதிலி தொழில் கொள்கையை
அறிவித்தது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக ‘லைசென்சு’ மற்றும் ‘கோட்டா’ பெறுவதும் தொழில்
தொடங்கவும் தொடரவும் அவசியமான தாக மாறியது. ஏற்கனவே வலுவாக இருந்த வட இந்திய
முதலாளிகள் இச்சூழலின் முழுபயனையும் பெற்றனர். அரசியல் செல்வாக்கும் பணமும்
முன்அனுபவமும் அவர்களுக்கு சாதகமாக இருந்தன. இவை அனைத்தும் இணைந்து புதிதாக தொழில்
தொடங்க முனைவோருக்கு தடையாக விளங்கின. இதையும் மீறி ஒருசில தொழில்கள் தென் பகுதியில்
தொடங்க முடிந்ததற்கான காரணம் டி.டி. கிருஷ்ணமாச்சாரி மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய
பல தமிழ் அலுவலர்களின் உதவியேயாகும்.
1970களிலிருந்து ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது. வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதால்
அதுவரை பெரு முதலாளிகளின் பிடியிலிருந்த வங்கிகள் மற்றும் வங்கிகள் தொழில் தொடங்க
அளித்து வந்த நிதியும் ஜனநாயகப் படுத்தப்பட்டன. நிலைமை ஓரளவு மற்றவர்களுக்கும்
ஏதுவானது. அதே சமயம் பல்கிப் பெருகிய பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியின் வாயிலாக
புதிய முதலாளி வர்க்கம் ஒன்று தோன்றி வளர்ந்தது. குறிப்பாக கட்டுமானத் துறையில் ஆந்திர
மாநிலத்து நிறுவனங்கள் பெற்ற வளர்ச்சி இதனால் ஏற்பட்டதாகும். இதே சமயத்தில் சமுதாய
அளவில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்கு சாதகமாக திரும்பின. இதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த
அடித்தளசாதியினர் பொருளாதார நிகழ்வுகளில் பங்குபெற ஆரம்பித்தனர். இவை அனைத்தும்
இணைந்து புதிய சூழலை உருவாக்கின. இதே சமயத்தில் தொழில் நடத்துவதில் புதிய முறையாக
உள்ஒப்பந்தங்கள் மற்றும் தொழிற்சாலைக்கு வெளியே பொருள் உற்பத்தி செய்தல் எனும் முறை
நடைமுறைக்கு வந்தது. இதனாலும் புதியதொரு சிறு முதலாளி வர்க்கம் வளர ஆரம்பித்தது.
1980களின் தொடக்கத்திலிருந்து மைய அரசின் தொழில் கொள்கைகள் பெரும் மாற்றத்தைக் கண்டன.
தாராளமயமாக்கல் நடைமுறைக்கு வரத்தொடங்கியது. பொருளாதார சீரமைப்பினால் மின்னணு
துறையும் தொலைதொடர்புத் துறையும் இதன் பலனைக்கண்டன. புதிய தொழில் முனைவோரும் முதலாளி
வர்க்கமும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி வெகு வேகமாக வளர்ந்தன. புதிய முதலாளி வர்க்கம்
வளர்ந்த அதே சமயம் பழைய பெருமுதலாளிகள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். மாறிய
பொருளாதார சூழலில் அவர்களின் போட்டியிடும் திறன் குன்றியது. அவர்களது முதலீடுகள் பல
தொடர்பற்ற துறைகளில் விரவிக் கிடந்தன. குறிப்பிட்ட தொழில்களை மட்டும் திறம்பட நடத்தும்
ஆற்றல் இல்லாததால் இந்த பழைய முதலாளித்துவத்தின் பிடி தேய்வுரத் தொடங்கினர். கான்பூர்,
அகமதாபாத் மற்றும் பம்பாய் பகுதிகளில் ஓய்ந்து போன துணித் தொழில் இதற்கு உற்ற சான்றாகும்.
புதிய தொழில் தொடங்கியவர்களுக்கு ஏதுவாக நாட்டில் பரவிய விஞ்ஞானத் தொழில்நுட்ப
படிப்புகளும் ஒரு முக்கியக் காரணமாகும். மின்னணு, தொலைத்தொடர்பு, கணினித்துறை,
மருந்து தயாரிப்பு மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கு இது
ஒரு முக்கியக் காரணமாகும்.
- இராமன் மகாதேவன்
தமிழில்: ஜெ.ரஞ்சன்
(இக்கட்டுரையாளர் பொருளாதாரம், வரலாறு ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை
நிகழ்த்தி வருகிறார். சென்னையில் வசிக்கிறார்.)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 8:10:57 AM5/30/15
to brail...@googlegroups.com
‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானது’ - தமிழியல் ஆய்வின்
கதை
8
விவரங்கள்
எழுத்தாளர்: வீ.அரசு
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: நவம்பர்2013
C வெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2013
“Dravidian studies had also been officially recognised in 1873 when the
First International Orientalists in Paris devoted a special session to
those Studies” - (Prof.Jean Filliozat, Presidentitial Address:III
International Tamil Conference, Paris,1970. IATR)
ஐரோப்பிய முறையியலில் திராவிட இயல் ஆய்வு கால்கொண்டதை பேராசிரியர் ஃபிலியோசாவின்
மேற்குறித்தக் கூற்று உறுதிப்படுத்துகிறது. சீகன்பால்கு, தமிழ்நூல்கள் அடங்கிய பட்டியல்
ஒன்றை உருவாக்கினார்.
அது 1724இல் வெளிவந்தது. பாரீஸ் நகரத்தில் இயங்கிய இராயல் நூலகமும் 1739இல் புத்தகப்
பட்டியல் ஒன்றை வெளியிட்டது. இவற்றில் தமிழ் நூல்களும் இடம்பெற்றிருந்தன. இவ்விதம் 18ஆம்
நூற்றாண் டில் உருவான திராவிட இயல் ஆய்வின் பகுதியாகவே தமிழும் இடம் பெற்றது.
திராவிட இயல் என்பதும் தமிழியல் என்பதும் ஒரே பொருளில் 1950வரை புரிந்து
கொள்ளப்பட்டது. இப்போது இன்னும் கூடுதல் துல்லியம் நோக்கி “தமிழியல்” என்ற சொல்லைப்
பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். இச்சொல்லைப் பயன் படுத்திய முன்னோடிகளில் ஒருவர்
பேரா.எஸ்.சேவியர் நாயகம் அவர்கள்.
1950கள் தொடக்கம், பயன்படுத்தப்பெறும் தமிழியல் என்னும் சொல்லாட்சி என்பது தமிழ்மொழி,
தமிழ் நாடு, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்திலும் உள்ள பல்வேறு பரிமாணங்கள் குறித்த ஆய்வைக்
குறிப்பதாக அமைகிறது. இவ்விதழில் தமிழியல் ஆய்வு தொடர்பான கதையைப் பதிவு செய்ய
முயலுவோம். பேரா.தனிநாயகம் அவர்களை ஒரு குறியீட்டுப் புள்ளியாகக் கொண்டு, தமிழியல்
ஆய்வுக் கதையைப் புரிந்து கொள்ள பின்கண்டவாறு தொகுத்துக் கொள்வோம்.

1950க்கு முற்பட்ட அல்லது Tamil Culture இதழுக்கு முற்பட்ட காலங்களில் செயல்பட்ட
தமிழியல் ஆய்வின் பரிமாணங்கள்; அவை உருப்பெற்றப் பின்புலம், அவை முன்னெடுக்கப்பட்ட முறை,
அவற்றின் தாக்கங்கள் - விளைவுகள் என்று பரந்த தளத்தில் அணுக முடியும்.

1950-1980 இடைப்பட்ட, பேரா.தனிநாயகம் காலத்தில் உருவான நவீன வளர்ச்சி மற்றும்
சமசுகிருத மரபு ஆகியவைக் கீழைத்தேயவியல் மரபாக மட்டும் புரிந்து கொள்ளப்பட்டது.
இச்சூழலில் தமிழியல் ஆய்வு, கீழைத்தேயவியல் ஆய்வில் இடம்பிடித்த வரலாற்றை அறிதல்.

1980ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட இன்று வரை நடந்து கொண்டிருக்கும் தமிழியல் ஆய்வின் கதை
குறித்துப் பதிவு செய்யலாம். ஆனால் 1980க்கு முற்பட்ட தமிழியல் ஆய்வு மரபுகள்
இக்காலங்களில் தொடர்கிறதா? என்பது கேள்வி. காலம் பதில் சொல்லும்.
மேலே குறித்த காலப் பாகுபாடு என்பது தமிழியல் ஆய்வின் போக்குகள் பற்றிய புள்ளிகளை இனம்
காண உதவும். மிக விரிவான தரவுகளோடு விவாதிக்க வேண்டிய இப்பொருண்மை கடந்த முப்பது
ஆண்டுகால எனது நேரடி அனுபவப் பகிர்வாகக் கூட அமையலாம். பகிர்வில் தன்முனைப்பைத்
தவிர்த்து யதார்த்த நிகழ்வுகளின் தர்க்கப் பாங்கினை மட்டும் பதிவு செய்ய முயலுவோம்.
வரலாறு - தனிமனித அநுபவம் - தர்க்க ஒழுங்கமைவு என்ற கண்ணோட்டத்தில் தமிழியல் ஆய்வுக்
கதையைக் கட்டமைக்கலாம்.
ஐரோப்பியர்கள் உருவாக்கிய கீழைத்தேயவியல் - திராவிட இயல் - தமிழியல் என்பதை 1700-1950
என்ற கால ஒழுங்கில் புரிந்து கொள்ள இயலும். சீகன்பால்கு (1682-1719) முதல்
கமில்சுவலெபில் (1927-2009) வரை என்று வரையறை செய்யலாம். இந்த மரபில் தமிழ்மொழி
பற்றி உலக அளவில் அறிதல், உலக மொழிக்குடும்பத்தில் திராவிட மொழிக் குடும்பம் இடம்பெறல்,
திராவிட மொழிகள் குறித்த ஆய்வுகள், திராவிட மொழிகளைப் பேசுவோர் குறித்தப் புரிதல்,
இம்மொழி பேசுவோர் வாழுமிடம், இவர்களின் வரலாறு, பண்பாடு ஆகிய பலவற்றையும்
ஆவணப்படுத்துதல், உரையாடுதல், ஆய்வு செய்தல் எனும் போக்கில் நிகழ்த்தினர். மொழி நூல்,
மொழிஇயல், இனமரபியல், தொல்லியல், மக்கள் கணக்கெடுப்பு, தொன்மையான இடங்கள் ஆகிய பல்வேறு
கோணங்களில் பதிவுகள் உருவாகின. மொழி அமைப்பு - வரலாறு, மக்கள் வாழ்முறை - வரலாறு
ஆகியவற்றைப் பல்வேறு வகையில் ஆவணப்படுத்தினர். ஐரோப்பியர்கள் உருவாக்கிய தொல்லியல்
துறையின்மூலம் பெற்ற செய்தி களைக் கீழ்க்காணும் வகையில் தொகுப்போம். அவர்கள் உருவாக்கிய
ஒவ்வொரு துறை குறித்தும் இவ்வகையில் தொகுக்க முடியும். ஆனால் அவர்களது ஆய்வியல்
செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு எடுத்துக்காட்டாகத் தொல்லியல் துறை தொடர்பானதை மட்டும்
இங்குப் பதிவு செய்வோம்.

பல்வேறு அகழாய்வுகள் மூலம் திராவிட இயலோடு தொடர்புடையவர்கள், பழமையான நாகரிக மரபுக்
குரியவர்கள் என்ற புரிதல் சார்ந்து, சிந்துசமவெளி அக ழாய்வு என்பது, ஐரோப்பாவில் உள்ள
பல்வேறு தொன்மை நாகரிகங்களைப் போன்றது என்று உலகுக்கு அறிவித்தனர்.

கள ஆய்வு வழியும் அகழாய்வு வழியும் பெற்ற மண், கல் மற்றும் இரும்பு போன்ற உலோகங்களில்
உருவாக்கப் பட்ட கருவிகள், புழங்கு பொருட்கள் ஆகியவை கண் டெடுக்கப்பட்டதன் மூலம்,
திராவிட மொழி பேசுவோர் வாழும் நிலப்பகுதியின் தொன்மையும் அதில் வாழும் / வாழ்ந்த மக்கள்
வரலாற்றின் தொன்மையையும் ஊகித் தறியும் வாய்ப்புகள் உருப்பெற்றன.

காசுகள், மண் ஓடுகள் ஆகிய பிறவற்றில் இருந்த பொறிப் புகள் வழி கண்டறியப்பட்ட குறியீடுகள்
பல்வேறு புதிய செய்திகளைப் பெற வழிகண்டது. குறிப்பாக, எழுத்து வடிவங்களைக்
கண்டறிந்ததன் மூலம், மொழிசார்ந்த பதிவுகளை அறியும் வாய்ப்பு உருவானது.

சிற்பக் கலைமரபு, கட்டிடக்கலைமரபு, நிலவியல் அமைப்பு, உயிரினங்கள் வாழ்முறை ஆகிய
பல்துறை தொடர்பான புரிதல்களைத் தொல்லியல் ஆய்வுகள் வழி கட்டமைக்க முடிந்தது.
மேற்குறித்தவாறு பல்துறைகளில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் உலக வரைபடத்தில் இந்தியா என்ற
பகுதி, அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியா என்ற வேறுபட்ட பகுதியும் இருப்பது
பதிவானது. இந்தோ - ஆரிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக்குடும்பம் என்னும் வேறுபட்ட
அடையாளங் களின் பதிவுகள் உலகில் புதிதாக அறியப்பட்டது. ஐரோப்பியர் களின் இவ்வகைப்
பதிவுகள் மூலம் இந்தியா - தென்னிந்தியா எனும் நில மற்றும் பண்பாட்டு வேறுபாடுகளைப்
புரிந்துணரும் வாய்ப்பு உருவானது.
ஆசியக் கண்டத்தின் பழங்காலப் புதிர்கள் விடுவிக்கப்பட்டன. சீனா, ஜப்பான், இந்தியா மற்றும்
தென் - தென்கிழக்கு ஆசிய நாடுகள் எனும் வேறுபாடுகளின் தனித் தன்மைகள் அறியப்பட்டன.
இதில் திராவிட இயல் - தமிழியல் குறித்த தனி அடையாளம் முன்னெழும் சூழல் உருவானது.
மேற்குறித்த தன்மைகள் பொதுவான நிலையில் அமைந்தவை. ஆனால் தமிழ்மொழி மற்றும் தமிழ்மொழி
பேசும் காலனிய இந்தியாவின் சூழல் குறித்து, மேலும் துல்லியமாக அறியும் தேவை நம்முன்
உள்ளது. 1950க்கு முற்பட்ட தமிழியல் ஆய்வை, அதன் பிற்காலப் போக்குகள் குறித்துப் புரிந்து
கொள்ளும் கண்ணோட்டத்தில் பதிவு செய்ய முயலுவோம்.

எல்லீஸ் (1777-1819), கால்டுவெல் (1838-1891) வழி உருப்பெற்று எ.பி.எமனோ
(1904-2005) - டி.பர்ரோ (1909-1986) வழியாக நிறைவேறிய திராவிட மொழிகள் குறித்த
ஆய்வுகள். கால்டுவெல்லின் A Comparative Grammar of Dravidian South Indian
Languages (1856), A Dravidian Etymological Dictionary (1961) எனும் இரண்டு
ஆக்கங்கள் திராவிட மொழிஇயல் என்பதன் உலக அங்கீகாரமாக அமைந்துள்ள பாங்கு.

மெக்கன்சி (1754-1821), இராபர்ட் புரூஸ்புட் (1839-1912) ஆகியோரதுவழி உருவான
பல்வேறு தொகுப்பு சார்ந்த ஆவணங்கள் மூலம், தமிழ்மொழி பேசும் இனக் குழுவின் தொன்மைப்
பரிமாணங்கள் கண்டறியப்பட் டுள்ள முறைமை.

ஜான்மர்டாக் (1819-1904) உருவாக்கிய நூல் பட்டியல் வழி உருவான தமிழ் அச்சுமரபை
அறியலாகும் தரவுகள்.

ஜேம்ஸ் பிரின்ஸ்ப் (1799-1840) கண்டறிந்த பிராமி எழுத்து வடிவம் சார்ந்து உருவான
தொல்லெழுத்தியல் துறை சார்ந்த பதிவுகள்.

தமிழ் அச்சுப் பண்பாடு சார்ந்த, சி.வை.தா. (1832-1901) உ.வே.சா. (1855-1942),
ச.வையாபுரிப்பிள்ளை (1891-1956) உருவாக்கிய பதிப்பு மரபுகள் வழி உருவான தமிழியல்
ஆய்வுகள்.

மதுரைத் தமிழ்ச்சங்கம் (1901), சைவசித்தாந்த சமாஜம் (1905) ஆகியவை சார்ந்த பதிப்பு
மற்றும் ஆய்விதழ் செயல்பாடுகள் வழி உருவான நவீன ஆய்வு முறையியல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (1927) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1929) வழி வடிவம் பெற்ற வளாகம்
சார்ந்த ஆய்வு மரபுகள்.
மேலே குறித்த 1950க்கு முற்பட்ட தமிழியல் ஆய்வுப் போக் குகள் தொடர்பான விவரணங்கள் வழி
கட்டப்பட்ட வரலாறு கள் குறித்து விரிவாக உரையாடல் நிகழ்த்த வாய்ப்புண்டு. ஆனால்
இத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டே 1950க்குப் பிற்பட்ட தமிழியல் ஆய்வு மரபுகள் மேலும்
மேலும் முன்னெடுக்கப்பட்டன. தமிழியல் எனும் விரிந்த களம் உருவானது. புதிய
பல்கலைக்கழகங்கள் மூலம் உருவான புதிய ஆய்வாளர்கள் தமிழ்ச்சமூகத்தில் உருவாயினர்.
காலனிய அதிகாரத்திலிருந்து விடுபட்ட நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளை ஏகாதிபத்திய
நாடுகள் கவனிக்கத் தொடங்கின. ஏகாதிபத்திய அதிகார அமைப்புகள் உருவாகின. அவை விடுதலை
பெற்ற காலனிய நாடுகளில் தங்களது இருப்பை நிலைநிறுத்துவது தொடர்பாகவும் செயல்படத்
தொடங்கினர். பல்கலைக்கழகச் செயல்பாடுகளில் மறைமுகமாகப் பங்கு பெறத் தொடங்கினர்.
யுனெஸ்கோ நிறுவனம் மூலம் ஆய்விற் கான பல்வேறு உதவிகளைச் செய்ய முன்வந்தனர். பூனாவில்
உள்ள தக்காணக் கல்லூரியில் மொழியியல் பயிற்சிப் பட்டறை களை அமெரிக்க மற்றும் பிரித்தானிய
நாடுகளைச் சேர்ந்த வர்கள் நடத்தினர். இதில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும்
கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். வட்டார மொழி சார்ந்த ஆய்வுகளும் உருவாகின.
ஆங்கில மொழி அறியாதவர்களும் ஆய்வில் செயல்பட முடியும் என்ற சூழல் உருவானது.
இத்தன்மை இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் செயல்பட்ட தமிழியல் ஆய்வுத்
துறைகளில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது. புதிய வகையான தமிழியல் ஆய்வுகள் உருவாகின.
1950களுக்குப் பின் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் உருப்பெற்ற தமிழியல்
ஆய்வின் போக்கை கவனத்தில் கொள்வது அவசியம். இந்நாடுகளில் செயல்பட்ட சில பேராசிரியர்களின்
செயல்பாடுகளைக் குறியீ டாகக் கொண்டு பின்வரும் வகையில் பகுத்துக் கொள்வோம்.

பேரா.தெ.பொ.மீ. (1901-1980) வழி உருவான மொழி சார்ந்த ஆய்வுப் பரிமாணங்கள்; அதன்
பல்வேறு பெறு பேறுகள் குறித்த புரிதல்.

பேரா.தனிநாயகம் (1913-1980) மூலம் உருவான இதழியல், கருத்தரங்க மாநாடுகள் மற்றும்
ஆய்வுத் துறைகள் சார்ந்த தமிழியல் ஆய்வின் பரிமாணங்கள்.

பேரா.வ.அய்.சுப்பிரமணியம் (1926-2009) கட்டமைத்த நிறுவன வழிபட்ட ஆய்வு மரபுகள்; அதன்
போக்குகள்; விளைவுகள் குறித்த புரிதல்

பேரா.முத்துச்சண்முகம் (1920-1998) மற்றும் அறிஞர் நா.வா. (1917-1980) வழி உருவான
நவீன ஆய்வு மரபுகள், அதன் தாக்கங்கள் பற்றியப் பதிவுகள்.

பேராசிரியர் சு.வித்தியானந்தன் (1924-1989), க.கைலாசபதி (1933-1982),
கா.சிவத்தம்பி (1932-2011) வழி உருவான தமிழியல் ஆய்வு மரபுகள்.
மேற்குறித்த பேராசிரியர்கள் வெறும் குறியீடுகள் மட்டுமே. நிர்வாக அளவில் இருந்து
செயல்பட்டதோடு, தங்களுக்கென மாணவப் பரம்பரையை உருவாக்கியப் பேராசிரியர்களாகவும் இவர்கள்
அமைகிறார்கள். 1980ஆம் ஆண்டுகட்கு பிற்பட்ட தமிழியல் மாணவனாக நின்று மேற்குறித்த
பதிவைச் செய்ய விரும்புகிறேன். இவர்களது மாணவர்களும் இவர்கள் காலத் தில் இருந்த
புலமையாளர்களும் மேற்கொண்ட தமிழியல் ஆய்வுகளைக் கவனத்தில் கொள்வது அவசியம். தமிழியல்
ஆய்வின் போக்குகளுக்கானப் புரிதலாகவே, மேலே கண்ட பேராசிரியர்கள் குறியீடுகளாக
அமைகின்றனர். ஒவ்வொரு குறியீடு பற்றியும் புரிந்து கொள்வதன் மூலம், சமகாலத் தமிழியல்
ஆய்வு குறித்தப் புரிதலுக்கான வாய்ப்புகள் உருவாகலாம்.
மேலே குறித்த காலச்சூழல் என்பது திராவிடக் கருத்தியல் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலம்
ஆகும். ஆனால் மேற்குறித்த பேராசிரியர்கள் எவரும் திராவிட அதிகாரக் கருத்தியல்
சார்புடையவர்கள் இல்லை. தேசிய அரசியல் மற்றும் இடதுசாரி அரசியல் சார்பாளர்களாக
இருந்தனர். ஈழ தேசிய விடுதலையின் மீது ஈடுபாடு உடையவராக பேரா.தனிநாயகம் இருந்தார்.
திராவிட அரசியல் அதிகாரம் சார்ந்த பேரா.மு.வரதராசன் (1912-1974) போன்றவர்களைத்
தமிழியல் ஆய்வில் பெரும் தாக்கத்தை உருவாக்கியவர்களாகக் கருதமுடியாது. இன்றையத்
தமிழியல் ஆய்வுச் சீரழிவுக்கு ஏதோவொரு வகையில் திராவிட அதிகார மரபே காரணமாக
அமைந்துள்ளது என்பதைத் தர்க்கபூர்வமாக விவாதிக்க முடியும். அதனைச் செய்ய இன்னும் கொஞ்சம்
காலம் பொறுக்க வேண்டும். இப்போது, மேற்குறித்த பேராசிரியர்கள் சார்ந்த குறியீட்டுப்
போக்கில், தமிழியல் ஆய்வுப் போக்கை மதிப்பீடு செய்ய முயலுவோம்.
1920களில் உருவான நவீனப் போக்குகளை உள்வாங்கிக் கொண்ட இளைஞராகத் தெ.பொ.மீ. தொடக்கத்தில்
இருந்தார். கல்வி உளவியல் குறித்தும் சமண மதம் குறித்தும் 1930களில் அவர் எழுதிய நூல்கள்
வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டவை. சட்டம் படித்ததோடு தமிழையும் கற்றார். 1940களில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார்.
1950களில் மொழியியல் தொடர்பான ஆய்வு களில் சிறப்பாக ஈடுபட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்
தில் சிறந்த மொழியியல் ஆய்வுத் துறை உருவாக முன்னோடி யாக இருந்தார். இந்தியாவில்
முதன்மையான மொழியியல் ஆய்வுத் துறையாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வுத் துறை
உருவாவதில் தெ.பொ.மீ. அவர்களது பங்கு குறிப்பிடத் தக்கது. பேராசிரியர்கள் அ.தாமோதரன்,
அ.தெட்சிணாமூர்த்தி, கோ.விஜயவேணுகோபால் ஆகிய வாழும் அறிஞர்கள், தெ.பொ.மீ.குறித்து
உணர்ச்சி பூர்வமாகப் பதிவுசெய்வதைக் காணமுடிகிறது. நீண்ட மாணவர் பரம்பரைக்குச் சொந்தக்கார
ராக அவர் இருக்கிறார்.
பின்னர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகி, அப்பல்கலைக்கழகத்
துறைகள், நவீன சிந்தனைப் போக்குகளுடன் செயல்படுவ தற்குக் களன்களை உருவாக்கினார்.
இவ்வகையில் தெ.பொ.மீ. வழிப்பட்ட தமிழியல் ஆய்வு மரபு என்பது வளமானது. இ.அண்ணாமலை,
ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு மொழியியல் அறிஞர்கள் பாரம்பரியம்
தொடருவதற்குத் தெ.பொ.மீ. இட்ட வித்து முதன்மையானது. இம்மரபு இன்றைய சூழலில் எவ்விதம்
செயல்படுகிறது என்பது தொடர்பான புரிதல் தேவைப்படுகிறது. தமிழ்ப் புலமைச்சூழ லில்
மொழிசார்ந்த ஆய்வுகளின் வளமான காலமாக 1950-1980 காலச் சூழலைக் கூற இயலும். இதற்கு
ஏதோவொரு வகையில் தெ.பொ.மீ. மூலமாக இருக்கிறார். மொழியியலில் நடைபெற்ற பல்வேறு
துறைகள் சார்ந்த ஆய்வுகளைத் தனித்தனியாக மதிப்பீடு செய்யும்போது, அதன் வீரியத்தை உணரமுடியும்.
1950-1980 இடைப்பட்ட காலச்சூழலில் தமிழியல் ஆய்வை உலக வரைபடத்தில் இணைத்தவர்
பேரா.தனிநாயகம் அவர்கள். இதழியல் வழி கட்டமைத்த தமிழியல் ஆய்வு, ஆராய்ச்சிக்
கருத்தரங்குகள் வழி கட்டமைத்த தமிழியல் ஆய்வு, நிறுவனங்கள் வழி கட்டமைத்த ஆய்வு எனப் பல
பரிமாணங் களில் அவரது செயல்பாட்டைப் புரிந்து கொள்ள இயலும். 1952-1966 காலச் சூழலில்
அவர் கொண்டுவந்த Tamil Culture இதழ்களின் கட்டுரைகள், தமிழியலின் பல்வேறு பொருண்மை
களைப் பேசும் வகையில் அமைந்தன. எமனோ, பர்ரோ, ஃபிலியோசா, கமில்சுவலெபில் எனப் பல்வேறு
மேலை நாட்டு அறிஞர்கள் தமிழியல் குறித்து Tamil Culture இதழில் எழுதினார்கள்.
தமிழ்ச் செவ்விலக்கிய மரபின் வளம் உலகுக்கு அறிவிக்கப்பட்டது. கிரேக்க, ரோமானிய,
அரேபிய மரபுக ளோடும் சமஸ்கிருத மரபுகளோடும் தமிழ்ச்செம்மொழி மரபுக் குள்ள இணையான
கூறுகள் உரையாடலுக்கு உட்படுத்தப் பட்டன. திராவிட மொழிக்குடும்பத்தின் தனித்தன்மைகள்
வெளிப்படுத்தப்பட்டன. தமிழ் அச்சு மரபின் தொன்மை மற்றும் வளங்கள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டது. தமிழ்க்கவிதை, தமிழ் உரைநடை ஆகியவற்றின் தன்மைகள், உலகத்தில் உள்ள
பிற கவிதை மற்றும் உரைநடைகளோடு இணையான தன்மை யுடையவை என்ற கருத்தை முன்னெடுக்கும்
உரையாடல்கள் நிகழ்ந்தன.
உலகத் தமிழ் ஆய்வுமன்றம் (IATR), மலேயப் பல்கலைக் கழக இந்தியவியல் துறை, உலகத் தமிழ்
ஆராய்ச்சி நிறுவனம் (IATR) ஆகிய நிறுவன உருவாக்கத்தில் பேரா. தனிநாயகம் முன்னின்று
செயல்பட்டார். அவர் காலத்தில், நான்கு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்க மாநாடுகள்
(1966,1968,1970, 1974) நடைபெற்றன. அதில் முதல் மாநாட்டை கோலாலம் பூரில்
நடத்துவதற்கு அவரே முன்னோடியாக இருந்தார். அம்மாநாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளைப்
பின்னர் (1968) இருதொகுதிகளாகப் பதிப்பித்துக் கொண்டுவருவதில் அவரது பங்கு
முதன்மையானது. அத்தொகுதிகளில் தரம் வாய்ந்த தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
அவ்விரு தொகுதிகளில் 146 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதிலிருந்தும்
ஆய்வாளர்கள் அக்கருத்தரங்கில் பங்கு பெற்றனர். வரலாற்றில் முதல்முறையாகத் தமிழியல் ஆய்வு
உலகம் தழுவிய நடைமுறையாக வடிவம் பெற்றது. பல்வேறு புதிய பயில்துறைகள் குறித்தப்
புரிதலும் உருவானது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் மற்றும் தமிழர்கள் தொடர்பான ஆய்வுகள், மேலைநாடுகளில்
தமிழியல் ஆய்வு, சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், திறனாய்வுக் கோட் பாடுகள், தொல்லியல்,
ஒப்பிட்டு மொழியியல், இசை மற்றும் நடனம், தற்காலத் தமிழ்ச் சமூகம் ஆகிய பல பொருண்மை
களில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு அவை தொகுக்கப்பட் டிருப்பதைக் காண்கிறோம். இவ்விதம்
உருவான இந்த ஆய்வு மரபு, பின்னர் பல்வேறு தமிழியல் ஆய்வுகள் உருவாக அடிப் படையாக
அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. தொடர்ந்து 1970இல் பாரிசில் நடந்த மூன்றாவது உலகத்
தமிழ் மாநாட்டுக் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகளைப் பதிப்பித்துக் கொண்டு வருவதில் பேரா.
தனிநாயகம் முதன்மையான பங்கு வகித் துள்ளார். அத்தொகுதியில் காணப்படும் கட்டுரைகள்,
தமிழுக் கும் சமசுகிருதத்திற்குமான உறவுமுறைகள் குறித்த விரிவான பதிவுகளைக் கொண்டுள்ளன.
மேலும், உலகம் முழுவதுமான தமிழர் பரவல் (Tamil Diaspora) குறித்த விரிவான
ஆய்வுகளை இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது. யாழ்ப்பாணத்தில் நடந்த
நான்காவது மாநாட்டுக் கருத்தரங்கில், ஆரம்ப உரையைப் பேரா. தனிநாயகம் நிகழ்த்தினார்.
அதில் காணப்படும் பின்வரும் பகுதி, அவர் முன்னின்று நடத்திய உலகத்தமிழ் கருத்தரங்க
மாநாடுகளின் தரம் குறித்து அறிய உதவும்.
ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டை அறிவ தற்கு வடமொழி அறிவிருந்தாற்போதும் என்று
மேல்நாட்டார் நினைத்தனர். ஆனால் இன்று திராவிட மொழிகளிற் சிறந்த தமிழ்மொழியை அறியாது
இந்தியாவின் அடிப்படைப் பண்பாட் டையும் கலைகளையும் உணர முடியாது என்றே, வடமொழியுடன்
தென்மொழியையும் பயின்று வருகின்றனர் மேல்நாட்டு அறிஞர். எங்கு மேல் நாட்டுப் பல்கலைக்
கழகங்களில் ஆழ்ந்த வடமொழிப் பயிற்சியுண்டோ அங்குத் தமிழையும் பயிலத் தொடங்கிவிட்டனர்.
இம்மாநாடுகளின் பயனை நாம் கணிக்க வேண்டுமாயின், சென்ற மூன்று மாநாடுகளின் தொகை
நூல்களைப் (Proceedings) படித்துப் பார்க்க வேண்டும். அந்நூல் களைப் பார்த்தால்
தமிழாராய்ச்சி எவ்வளவிற்கு முன்னேறி வருகின்றது என்பதை உணரக் கூடும் (சே.தனிநாயகம்,
நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு, முதல்தொகுதி,1977 ஆரம்ப உரை)
பேராசிரியரின் மேற்குறித்த தன்விளக்கம், அவர் முன்னின்று நடத்திய தமிழாராய்ச்சி
மாநாடுகளின் ஆய்வுத்தரத்தைப் புரிந்து கொள்ள உதவும். இதைப் போலவே மலயாப் பல்கலைக்கழக
இந்தியவியல் துறையில் அவர் உருவாக்கிய ஆய்வுப் பாரம்பரியம் வலுவானது. பேராசிரியர்கள்
எஸ்.அரசரத்தினம், எஸ்.சிங்காரவேலு ஆகிய பல ஆய்வாளர்கள் தனிநாயகம் அவர் களின்
வழிகாட்டுதலில் உருவானவர்கள். மலாயப் பல்கலைக் கழகத்தின் தரமான வெளியீடுகளுக்கும்
பேராசிரியரே காரணம்.
உலக அளவில் நடைபெற்ற ஆய்வுகளை, ஒழுங்குபடுத்தி, “Tamil Studies Abroad” எனும்
பெயரில் பேராசிரியர் உருவாக்கிய ஆக்கம், உலகில் தமிழியல் ஆய்வு குறித்த பதிவாகவும்
புரிதலாகவும் அமைந்துள்ளது. மேற்குறித்த உலகளாவிய தொடர்பு மற்றும் அநுபவம் சார்ந்து
சென்னையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்குவதற்கான அடிப்படை வரைவுகளைச்
செய்தார். இதில் பேரா.வ.அய்.சுப்பிரமணியம் பெரிதும் உதவினார். மால்கம் ஆதிசேஷையா
அவர்களின் உதவியோடு, யுனெஸ்கோ உதவி மற்றும் அங்கீகாரமும் பெறப்பட்டது. “தமிழியல்” எனும்
பெயரில் “Journal of Tamil Studies” எனும் இதழையும் கொண்டு வந்தார். ஆய்வு மரபைக்
கட்டமைக்க அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்த ஆவணங்கள், “Journal of Tamil Studies”
முதல் இதழின் இரண்டாம் பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. அதில் காணப்படும் செய்திகள்
மேல்குறித்த விவரணங்களுக்கு அடிப்படைச் சான்றாக அமை கிறது. (பார்க்க: Journal of
Tamil Studies;Vol.I.number.I.April.1969.Part II)
மேற்குறித்த பல்வேறு தரவுகளின் மூலம் பேரா.தனிநாயகம் அவர்களின் தமிழியல் ஆய்வு மரபைப்
புரிந்துகொள்ள முடியும். இம்மரபுகள் இன்றும் தொடர்கிறதா? என்ற கேள்வியை முன் வைப்பது
அவசியம். ஏறக்குறைய பேரா.தனிநாயகம் செயல் பாடுகளை அடியற்றிச் செயல்பட்டவராகப்
பேரா.வ.அய். சுப்பிரமணியம் அவர்களைக் கருதமுடியும். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல்
பயிற்சியும் அதேபோல், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பயிற்சியும், தமிழியல் ஆய்வில்
பல்வேறு பயில்துறைகள் உருப்பெற முன்னின்றவராக வ.அய்.சு. அமைகிறார். கேரளப்
பல்கலைக்கழகத்தில், இவர் உருவாக்கிய மொழியியல் ஆய்வுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
தெ.பொ.மீ. உருவாக்கிய மரபினின்றும் வேறுபட்டது. பண்பாட்டு மானிடவியல் படிப்பாக, மொழி
யியல் படிப்பைக் கட்டமைத்தார்.
நாட்டார் வழக்காறு, தொல் பழங்குடிகள் வழக்காறு ஆகியவற்றையும் மொழியியல் புலத்தின்கீழ்க்
கொண்டு வந்தார். தொல்பழம் தமிழ் இலக்கியப் பிரதிகளின் மொழி சார்ந்த அமைப்பை மொழியியல்
கண்ணோட்டத்தில் உள்வாங்கும் நோக்குடன் தமது மாணவர் களுக்குப் பயிற்சியளித்தார். இதனால்
இலக்கியங்களுக்கான குறிப்படைவுகள் (Indicies) உருவாக்கப்பட்டன. இலக்கணம், வழக்காறு,
தொல்குடிகள் ஆகியவற்றை மொழியியல் எனும் பண்பாட்டு மானிடவியல் படிப்பாகக் கட்டமைப்பதற்கு
அவரது அமெரிக்கப் பல்கலைக்கழகப் பயிற்சி வாய்ப்பளித்தது. அதனை நடைமுறைப்படுத்தி,
தமிழியல் ஆய்வுக்கென புதிய ஆய்வாளர்களை உருவாக்கினார். அவரது மாணவர்களே உலகம்
முழுவதும் சென்று தமிழியல் ஆய்வில் ஈடுபடும் வாய்ப்புப் பெற்றனர். இவரது இவ்வகையான
அணுகுமுறையே தமிழியலுக்கான முதன்மையான ஆய்வு நிறுவனங்களை பின்னர் உருவாக்குவதற்கான
அடிப்படைக் களனாக அமைந்தன. இவர் அளவிற்குத் தமிழியல் ஆய்வுநிறுவனங்களை உருவாக் கிய
இன்னொருவரைக் கூற இயலாது.
திருவனந்தபுரத்தில் உலகத் திராவிட மொழிகளின் ஆய்வு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
(International School of Dravidians Linguistics) அதன்மூலம் திராவிட
மொழியியல் கழகம், திராவிட மொழிகளுக்கான அனைத்துலக ஆய்வு இதழ் (IJDL) ஆகியவற்றை
உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கிய நிறுவனத்தின் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளாக
ஆய்விதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தப்பெறுகின்றன.
இந்நிறுவனத்தின் நீட்சியாகக் குப்பத் தில் திராவிடப் பல்கலைக்கழகம் ஒன்றையும் உருவாக்குவதில்
இவர் முன்னின்றார். தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் உருவாக்கிய
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக அமைந்து, தமிழியல் ஆய்வுப்
புலத்தின் பல்வேறு துறைகளை உருவாக்கினார்.
தனது பயிற்சியில் உருவான மாணவர்களை அப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு புலங்களில் செயல்பட
வழிகண்டார். தெளிவான கண்ணோட்டத்துடன் உருவாக்கப் பட்ட இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு
துறைகள், உலகில் மொழிசார்ந்த நிலையில், வேறு மொழிகளுக்கு இல்லை என்று கூறும் அளவில்
இருந்தது. இவரது மாணவர் பரம்பரை தமிழியல் ஆய்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை
ஏற்படுத்திய வர்கள். இவர்கள் அனைவரும் தங்களது ஓய்வுப்பருவத்தை எட்டிவிட்டனர். தமிழியல்
ஆய்வும் ஓய்வுப்பருவத்தை எட்டி யிருப்பதன் குறியீடாகக் கூட இதனைக் கருத இயலும்.
1970-1990 காலச் சூழலில் தமிழியல் ஆய்வில் பல்வேறு புதிய பரிமாணங்களை உருவாக்கிய
பேராசிரியராக வ.அய்.சு. அமை கிறார். அவர் பெரிதும் மதித்துப் போற்றிய
பேரா.தனிநாயகம் அவர்களது ஆய்வு மரபை வளமாக முன்னெடுத்தவராக இவரைக் கருதமுடியும்.
பேரா.ச.வையாபுரிப் பிள்ளையின் நேரடி வாரிசாகவும் பேரா.தனிநாயகம் அவர்களின் உற்ற
தோழனாகவும் தன்னைத் தகவமைத்துக்கொண்டவர் வ.அய்.சு. அவரது தனிப்பட்ட கருத்து
நிலைபாடுகளை மீறி அவரது ஆய்வுப்பணிகள் நிலைபேறு கொண்டுள்ளதை புரிந்து கொள்ள இயலும்.
இவரால் கட்டியெழுப்பப்பட்ட மரபின் தொடர்ச்சி என்னவாக உள்ளது? என்ற உரையாடலை நிகழ்த்த வேண்டும்.
அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் சமூக மொழியியல் பயிற்சி பெற்ற பேரா.முத்துச்சண்முகம்
அவர்கள், மதுரைப் பல்கலைக்கழகத்தின் மூலம் தமிழியல் மரபைப் புதிய பரிமாணத்திற்கு
வளர்த்தெடுத்தவராகக் கருதஇயலும். நிகழ்த்துக்கலைகள், புழங்குபொருட்கள், நம்பிக்கை மற்றும்
சடங்குகள், வட்டார மொழிகள், நவீனக் கோட்பாடுகள் எனப் பல்வேறு பயில்துறைகளில் தம்
மாணவர்களைப் பயிற்று வித்தப் பெருமை இவரைச் சாரும். நவீனத் தமிழியல் மரபில், நிறுவன
வலையத்திற்குள் வராத, சிரத்தையான சிற்றிதழ் ஆய்வு மரபை நிறுவன அங்கீகாரம் பெறச் செய்தவர்
இவர். இத்தன்மை விதந்து பேசக்கூடிய ஒன்றாகும். நவீனத் தமிழ் இலக்கிய மரபின் வளத்தை ஆய்வுப்
புலமாக வளர்த்தெடுத்த இவரது பணி வரலாற்றில் நினைக்கப்படும்.
இக்கண்ணோட்டத்தில் மாணவப் பரம்பரையை உருவாக்கினார். பேராசிரியர்கள் தனிநாயகம், வ.அய்.சு.
ஆகியோர் கண்ணோட்டங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட மரபைக் கட்டியதில் இவருக்கான இடம்
முக்கியமானது. சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களுக்கு இல்லாத அடையாளத்தை
மதுரைப் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வில் உருவாக்கினார். சமூக மொழிஇயல் சார்ந்த
பயிற்சிமூலம், தமிழின் நவீன பண்பாட்டு மானிட வியலைக் கட்டமைத்த பேராசிரியர் இவர்.
தமிழ்க்கல்வி பல்வேறு புதிய துறைகளுக்குள் பயணம் செய்ய வழி திறந்தார். மரபான
பண்டிதர்களுக்கு எதிர்நிலையில், தமிழியலை நவீன மயமாக்கிய இவரது செயல், தமிழியல்
ஆய்வின் திருப்பு முனையாகக் கருதமுடியும்.
மேலே குறித்தப் பேராசிரியர்கள், நிறுவனம் சார்ந்து தங்களது கல்விப் பயிற்சியையும்
செயல்பாட்டையும் நிகழ்த்தியவர்கள். இதன்மூலம் தமிழியலின் பல்வேறு களன்களை கண்டெடுத்து
அடையாளப்படுத்தியவர்கள். இதிலிருந்து வேறுபட்டவராக, கல்விப்புலம் சாராத
பேராசிரியராக, நா.வானமாமலை அமைகிறார். குறிப்பிட்ட தத்துவச் சார்போடு, ‘ஆராய்ச்சி’
இதழ் மூலம் தமிழியல் ஆய்வில், பல்கலைக்கழகம் சாராதவர்களை யும் வளர்த்தெடுத்த அணுகுமுறை
நா.வா.அவர்களின் அணுகு முறை. மேற்குறித்த பேராசிரியர்களின் பணிகளுக்கு எவ்வகை யிலும்
குறைவற்றதாக இவரது செயல்பாடும் அமைந்துள்ளது. தத்துவம், வழக்காறு, தற்கால இலக்கியம்
ஆகிய பல்துறை களைச் சார்ந்து ஓர் ஆய்வுவட்டத்தைக் கட்டியமைத்தார். இவரின் தாக்கம் தமிழகப்
பல்கலைக் கழகங்களிலும் ஏற்பட்டது. க.நா.சு., சி.சு.செ., ஆகியோர் செயல்பட்ட தளத்தின்
வேறுபுள்ளியில் நா.வா.செயல்பட்டார். தமிழக நாட்டார் வழக்காற்றுத்துறைக்குப் புதிய
அடையாளத்தை வழங்கியதில் இவருக்கும் பேரா.தே.லூர்து அவர்களுக்கும் உரிய இடம் விதந்து
போற்றத்தக்கது.
தமிழியல் ஆய்வு என்பது, தமிழ்நாடு, இலங்கை, மலேசியா என்ற நிலப்பரப்பில் தொடர்ச்சியாக
நிகழ்ந்து வருவது. தற்போது சிங்கப்பூரும் இணைந்துள்ளது. மலேசியப் பல்கலைக் கழகத்
தமிழியல் ஆய்வை பேரா.தனிநாயகம் அவர்களைக் கொண்டு அடையாளப்படுத்தலாம். அவர் அப்பல்கலைக்
கழகத்தில் உருவாக்கிய மரபு இன்றும் தொடர்கிறதா? என்று உரையாடுவது அவசியம். இலங்கையில்
உள்ள, கொழும்புப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம்
ஆகியவற்றின் தமிழியல் ஆய்வு மரபில், பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் மாணவப் பாரம்
பரியமான பேரா.சு.வித்தியானந்தன் பரம்பரை முக்கியமானது. இவரது மாணவர்களான
க.கைலாசபதி, கா.சிவத்தம்பி மற்றும் நுஃமான் ஆகியோர் உள்ளிட்ட தமிழியல் ஆய்வு இவ்வகையில்
தாக்கங்களை உருவாக்கியதாகும்.
கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் பெற்ற பர்மிங்காம் பல்கலைக்கழகப் பயிற்சியும் அவர்கள்
ஏற்றுக்கொண்ட தத்துவ நிலைபாடும் புதிய தமிழியல் ஆய்வுக்கு வழிகண்டது. ஆனால் இலங்கையில்
உருவான இன அழிப்புப்போர், அடுத்தகட்ட வளர்ச்சிக்கான வாய்ப்பை இழக்கச் செய்துள்ளது. இலங்கை
யில் செயல்படும் அண்மைக்கால தமிழியல் ஆய்வுகள் தொடர்ச்சி அறுபட்டுத் தத்தளிக்கிறது.
முறையான பயிற்சி பெற்றவர்களோ குறிப்பிட்ட கருத்து நிலைசார்ந்து செயல்படு பவர்களோ
அருகிப்போன சூழல் அங்கு நிலவுகிறது. இனப் போரால் உருவான அவலமாக இதனைக் கருதமுடியும்.
மேலே நாம் உரையாடலுக்கு உட்படுத்திய 1950-1980 அல்லது 1980-1990 காலச் சூழல் சார்ந்த
தமிழியல் ஆய்வைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அநுபவத்தில் 1990க்குப் பிற்பட்ட கடந்த
இருபது ஆண்டுகளின் தமிழியல் ஆய்வை எவ் வகையில் மதிப்பிடுவது? மேலே விவரித்த மரபுத்
தொடர்ச்சி நடைமுறையில் உள்ளதா? என்ற உரையாடல் அவசியம். இந்த உரையாடலை பேரா.தனிநாயகம்
அவர்களின் இந்த நூற்றாண்டில் நிகழ்த்தும் தேவை நம்முன் உள்ளது; சமகால நிகழ்வுகள், அரசியல்
போக்குகள் ஆகிய பிறவற்றைச் சார்ந்து இதனை வெளிப்படையாகப் பதிவு செய்யும் வாய்ப்பு
அரிதாக உள்ளது. தேவைப்படும் சூழலில் விரிவாகவே பதிவு செய்யமுடியும். ஆனால், இக்காலத்
தமிழியல் ஆய்வுச் சூழலில் நிலவும் பின்வரும் போக்குகள் கவலை தரும் வகையில் இருப்பதைப்
பதிவு செய்வோம். அதுவே பேரா.தனிநாயகம் அவர்களின் நூற்றாண்டை நினைவு கூர்வதாக அமையும்.

பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகிய வற்றில் குறிப்பிட்ட துறைசார்ந்து பயிற்சி
பெற்று, அத்துறையில் தம் பயிற்சியை வெளிப்படுத்தும் பாங்கில் செயல்படுபவர்களை, பணி
அமர்த்தம் செய்வது நடை முறையில் இல்லை. அரசியல் கட்சிகளின் தலையீடு முதன்மையாக உள்ளது.

பல்வேறு ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பல பேராசிரியர்கள்,
திட்டமிட்ட ஆய்வுத் திட்டங்களில் ஈடுபாடு காட்டுவதை விட, அதிகாரம் உடைய இருக்கைகளில்
இருந்து பொருளாதாரப் பயன்கருதி செயல்படுகின்றனர். வீறார்ந்த கல்வி மரபு என்னும்
சுயமரியாதை இழந்தவர்களையே நமது சூழல் இட்டு நிரப்புகிறது. சொந்தச் செயல்பாடு சார்ந்த
அர்ப்பணிப்பு, கருத்துநிலை ஈடுபாடு, தனது பணி மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்த
புரிதல் அற்ற “தொழில்நிமித்தமானவர்கள்” நிறைந்து காணப்படும் சூழல் உள்ளது. எவருக்கும்
கோபமோ, சுரணையோ இல்லை.

கடுமையாக உழைத்து, தனது துறையில் பயிற்சி பெற்ற இளம் ஆய்வாளர்கள் பலர் விரக்தி அடையும்
சூழல் உருப்பெற்றுள்ளது. குறிப்பிட்ட நபரின் புலமைசார் ஈடுபாடு மற்றும் செயல்பாடுகள்
கணக்கில் கொள்ளப் படுவதில்லை; மாறாகச் சாதி, பணம் ஆகியவை முதன்மை பெற்றிருப்பதைக்
காண்கிறோம். குறிப்பிட்ட சில இருக்கைகளில், அடிப்படை அறிவும் ஈடுபாடும் அற்ற மொண்ணைகளை
உட்கார வைத்து, அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை இருட்டில் தள்ளும் சூழல் உள்ளது.
புலமையாளர்களை மதிக்கும் சூழல் அருகி உள்ளது. ஈகோ (Ego) என்னும் மனநோய் நீக்கமற
நிறைந்து, கல்விச்சூழலைச் சுடுகாடாக்கும் அவலம் நடைமுறையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
‘ஆய்வு நிறுவனம்’ என்ற பெயரில் பல்வேறு அரசு மானியங் களைக் கையூட்டுக் கொடுத்து
உறங்கும் சிலர் செயல் படுகின்றனர். ‘கல்வி வணிகம்’ நவீனத் தொழில் வடிவம் பெற்றதுபோல்
ஆய்வும் தரகுத் தொழிலாக நடை பெறுகிறது.

தமிழியல் ஆய்வில் பெரும் சாதனையைச் செய்த பேராசிரியர் தனிநாயகம் அவர்களின் நூற்றாண்டுச்
செய்தியாக மேலே கண்ட தன்மைகளை நாம் உள்வாங் கும் அவலத்தில் வாழ்கிறோம். இதற்கு மாற்றான
சூழல் பற்றிக் கற்பனை கூட செய்ய முடியாத மன இருண்மை பயமுறுத்துகிறது. என்ன செய்ய?
தமிழ்ச் சாதிக்கு நேர்ந்த அவலம் வேறு எவருக்கும் நிகழக்கூடாது என்று மனது பதைபதைப்புடன்
சொல்கிறது. வேறொன்றும் தோன்ற வில்லை. தனிமை... அழுகை... இருண்மை... நம்பிக்கை
இழப்பு... என்றே மனம் சென்று கொண்டிருக்கிறது. வேறு என்ன செய்ய முடியும்? வாழ்க
தமிழியல்...
பின்குறிப்பு : நிறுவனங்கள் சார்ந்த தமிழியல் ஆய்வுச் சூழல் குறித்த பதிவே மேற்கண்டவை.
நிறுவனங்கள் சார்ந்தும் நிறுவனத்தை உருவாக்கியும் செயல்படும் பேரா.ஒய்.சுப்பராயலு,
பேரா.பா.ரா.சுப்பிரமணியம் போன்றோரின் செயல்பாடுகள் புறனடை.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 8:17:35 AM5/30/15
to brail...@googlegroups.com
பேராசிரியர் தனிநாயக அடிகள்
8
விவரங்கள்
எழுத்தாளர்: வ.அய்.சுப்பிரமணியம்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: நவம்பர்2013
C வெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2013
பேரா.வ.அய். சுப்பிரமணியம் அவர்களின், இலக்கணமும் ஆளுமைகளும் (தொகுதி 2) என்ற
கட்டுரைத் தொகுதியிலிருந்து எடுத்து இக்கட்டுரை இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
பேரா. வ.அய்.சுப்பிரமணியம், பேரா. தனிநாயகம் அவர்களின் வீறார்ந்த வாழ்வைக் காட்சிப்
பாங்கில் நம்முன் காட்டுகிறார். இக்கட்டுரையின் மொழி, அடிகளாரை நேரில் காண்பதைப் போன்ற
உணர்வை உருவாக்குகிறது. அடிகளாரின் அண்ணாமலைப் பல்கலைக்கழக வாழ்க்கை, Tamil Culture
இதழ் உருவாக்கம், நான்கு உலகத் தமிழ் மாநாடுகளில் அடிகளாரின் பங்களிப்பு, அடிகளாரின்
மனிதநேயம், அவரிடம் காணப்பட்ட சுயமரியாதை ஆகிய பிறவற்றை வ.அய்.சு. அவர்கள் விவரணப்
படமாக நமக்குக் காட்டுகிறார். அடிகளாரின் மொழிப்புலமை, ஆய்வுப்புலமை, நிர்வாகப் புலமை
ஆகியவை தொடர்பான விரிவான தகவல்களை இயல்பான மொழியில் வ.அய்.சு. பதிவுசெய்துள்ளார்.
சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக அடிகள் மேற்கொண்ட நிலைபாட்டைக் குறிப்பாகச்
சுட்டியுள்ளார். வெற்றுப் புகழ்ச்சிச் சொற்களோ, மிகைப்படுத்தப்பட்ட விவரணங் களோ இன்றி
அமைந்திருக்கும் இப்பதிவு அடிகளாரைச் சந்தித்து உரையாடிய அநுபவத்தையும் அவரது புலமைத்
தளங்களைப் பற்றி புரிந்துகொள்ளும் அரிய வாய்ப்பையும் நமக்குத் தருகிறது.
1944ஆம் ஆண்டு, கோடைகால விடுமுறையின் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள்
துவங்கின. நான்காம் தமிழ்ச் சிறப்பு வகுப்பில் பாதிரி உடையணிந்து மிடுக்கான நடையுடைய
ஏறத்தாழ முப்பது வயதினர் ஒருவர் என் அருகே அமர்ந்தார். வகுப்பு துவங்கியது. கேள்வியும்
விடையும் தொடர்ந்தன. திரு.பூவராகம் பிள்ளை தமக்கே உரிய நகைச்சுவையுடன் தமது வகுப்பை
நடத்தினார். வகுப்பின் இறுதியில், “தாம் தனிநாயகம்” என்றும் தமிழ் படிக்க வந்திருப்
பதாகவும் கூறினார். உடனிருந்த மாணவர்களிற் பலர் எதுவும் அவரிடம் பேசவில்லை. சிலர்
வணக்கம் கூறி அகன்றனர். நான் அருகிலிருந்ததால் அடுத்த வகுப்பு ஆரம்பமாவது வரை அவருடன்
என் பேச்சு தொடர்ந்தது.
“இலக்கண இலக்கியங்களை இனிமேல்தான் நன்கு படித் தறிய வேண்டும்Õ என்றார்.’ இங்குள்ள பலரும்
அந்த நிலையில் தான் இருக்கிறோம்” என்றேன். “உங்கள் கேள்விகள் அதனைப் பொய்யாக்குகின்றன”
என்றார். அவ்வாறு ஆரம்பமான நட்புறவு எங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
சனி, ஞாயிறுகளில் நான் நூல்நிலையம் சென்று படிப்பது வழக்கம். அதனைக் கவனித்த அடிகள்
புதுச் செய்திகளிருப்பின் அவற்றைத் தன்னுடன் விவாதிக்க அழைப்பார். அப்போது பல்கலைக்கழக
விருந்தினர் விடுதியில் அவர் தங்கியிருந்தார். ஒரு சிற்றாள் அவருக்கு உதவியாக
எடுபிடிவேலை செய்தான். அவன்தான் என் அறைக்கு வந்து ஏதேனும் அவர் குறித்து அனுப்பும்
செய்திகளை என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்வான். ஒருநாள் மதிய உணவிற்கு அழைத்திருந்தார்.
நான் அறையிற் சென்றதும், “சுப்பு என்று உங்களை அழைக்கலாமா!” என்றார். “தாரளமாக”
என்றேன். அன்று ரிக் வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர் படித்து முடித்திருந்த சமயம்.
“தரமான பாக்கள் ரிக் வேதத்தில் குறைவாகக் காணப்படு கின்றன. அவற்றை நோக்கச் சங்க இலக்கியப்
பாக்கள் எவ்வ ளவோ மேல்” என்றார். அவற்றின் உண்மையை நான் அப்போது தெரிந்திடவில்லை.
பின்னர்தான் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் தமிழ் ஆங்கில
மொழிபெயர்ப்பு வழி படித்தறிந்து கொண்டேன். ஆனால் என் கேள்வியனைத்தும் “கிறித்துவப்
பாதிரியான அவர், இந்து வேதங்களைப் படிக்க அனுமதிக்கப்படுகிறாரே” என்பது பற்றித் தான்
இருந்தன. “எல்லா மதங்களின் அடிப்படை நூற்களையும் நாங்கள் படித்துத் தெளிவோம். அது
மட்டுமன்றுப் பிரம்ம சரியம் மேற்கொள்ளும் நாங்கள் மனிதக் காதல்நிலை பற்றிய பல நூல்களையும்
படிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. பல துறைகளைத் தெரிந்த பின் துறவு பூண்பது, தெரியாமல்
துறவு பூண்பது என்ற இரண்டில், முதல் முறையை நாங்கள் கடை பிடிப்போம். தேவார திருவாசக
முதலிய நூற்கள் மனதை உருக்குவனவாக இருக்கின்றன. இறைவனை வழிபடும் எந்த மதமும் அந்த
நூற்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது” என்றார். தனிநாயக அடிகளின் பரந்த படிப்பும் பிற
மதங்களைப் புறக்கணிக்காத நிலையும் என்னைக் கவர்ந்தன. கிறித்துவ மதத்தில் ஆழமான பற்று
உடையவராயினும் தமிழ்மொழி மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அளவற்ற மதிப்புடையவராக
இருந்தார். அவர் பேச்சிலும் தமிழ் எழுத்திலும் இலங்கை வழக்குப் பளிச்சிடும். ஆங்கில
எழுத்து எடுப்பான நடையில் இருக்கும்; அவருடைய பின்னணிக்கும் என் படிப்பிற்கும் எவ்வளவு
வேறுபாடு!
வகுப்பறைகளில் பாடம் நடந்த பின்னரும் உடன் உணவு உண்ணும் வேளைகளிலும் அடிகளின்
பேச்செல்லாம் தமிழின் இலக்கிய வளத்தை உலகறியச் செய்ய வேண்டும்; தமிழ் ஆசிரியர்களும்
மாணவர்களும் சமுதாயத்தில் பிறருடன் ஒன்றா மல் தனித்து நிற்பது நன்றன்று. எல்லாத்
துறைகளிலும் முன்னேற வேண்டும். தமிழாய்வின் தரம் உயரவேண்டும். பல நாடுகளுக்குத் தமிழ்
ஆய்வாளர்கள் சென்று தமிழ் இலக்கியச் செல்வங்களை உலகறியச் செய்திட வேண்டும் என்பன பற்றித்தாம்
இருந்தன.
அந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையிலிருந்து வெளி யான சைமன் காசி செட்டி ஆங்கிலத்தில்
எழுதிய தமிழ் புளூட்டார்க் (Tamil Plutarch) என்ற நூலை (தமிழ்ப் புலவர் களைப் பற்றிய
செய்திகளை அகரவரிசைப்படி ஆங்கிலத்தில் தொகுத்துத் தருவது) பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி
சுந்தரனாரைக் கொண்டு கூடுதல் செய்திகளைச் சேர்த்து பிழை களைந்து வெளியிட ஏற்பாடு
செய்தார். அதற்குக் கணிசமான தொகையன்றையும் தெ.பொ.மீக்குப் பெற்று அளித்தது நினைவிருக்கிறது.
அடிகள் அண்ணாமலைக்கு வருவதற்கு முன்னர் ரோமில் உள்ள வாடிக்கனில் குருமார்களுக்குரிய
வகுப்புகளில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பயின்று தெய்வ தத்துவத்தில் முனைவர் பட்டம்
(Doctot of Divinity) பெற்றிருந்தார். தமது ஆய்வறிக்கைக் கிறித்துவத் தொண்டர் பலரைப்
பற்றியது. பின்னர் வெளிநாட் டில் வெளியிடப்பட்டது. அதன் படியன்றையும் பலவாண் டுகள்
கழித்து தமது கையெழுத்திட்டு எனக்குத் தந்தார். ஸ்பானிய மொழி, ரோம மொழி,
போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழி வாற்றவும்
வல்லவர். உயர்மட்ட மக்களிடம் எளிதில் பழகி அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்று தமிழிற் காணும்
அறக்கருத்துக்களின் உலகளாவிய தன்மையையும் அதன் சங்க இலக்கியச் செல்வத்தையும் அவர்களிடையே
விளக்கித் தமிழ்ப் பண்பாட்டில் பற்றுக் கொள்ளுமாறு செய்வதற்கு அவரால் முடிந்தது.
அன்றாடம் நடக்கும் பாடங்களைப் படிப்பதிலும் நூல் நிலையத்திலிருந்து புதிய செய்திகள்
பலவற்றைத் திரட்டு வதிலும் நான் அன்று முனைந்து உழைத்தேன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புதிய விடுதியின் அன்று எனக்குத் தங்குவதற்குத் தனியறை
கிடைத்திருந்தது. தனிநாயக அடிகள் அடிக்கடி அங்கு வருவார். ஒருநாள் முற்பகல் பத்துமணி
அளவில் எதிர்பாராத விதமாக அறைக்கு வந்தார். என் படுக்கை யில் போர்வை தலையணை முதலியவை
உரிய இடத்தில் வைக்காமல் அலங்கோலமாகக் கிடந்தன. உள்ளே வந்த அவர் தாமே அவற்றை ஒழுங்காக
அடுக்கி வைத்துப் புன்முறுவல் பூத்தார். அது எனக்கு நல்ல பாடமாகப் பட்டது. வீட்டில்
அன்னையால் மிகவும் ஆதரிக்கப்பட்ட என் போன்றோர் அறைகள் அலங்கோலமாகத்தான் இருக்கும். எனினும்
ஒழுங்கு, சிட்டை முதலியவற்றை மறைமுகமாகத் தம் செயலால் செய்து காட்டுகின்றவர்கள் எத்தனைபேர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், அன்று தரைப் படை, விமானப்படை முதலியவற்றில்
மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. விமானப்படையின் மேலாளர் அடிகளின் நண்பர்.
‘சுப்பு! ஏன் நீ விமானப்படைப் பயிற்சியில் சேர்ந்து இந்த வேனல் விடுமுறையில் விமானம்
ஓட்டக் கற்றுக்கொள்ளக் கூடாது. தமிழ் மாணாக்கர்கள் எல்லாத் துறைகளிலும் பங்கு பெறவேண்டும்;
முன்னணியில் நிற்க வேண்டும்’ என்றார். அதனை ஒத்துக் கொண்ட நான் உடற் பரிசோதனைக்குச்
சென்றேன். அதில் வெற்றிபெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அடிகள் பின்னர் கூறினார். அந்த வேனல்
விடுமுறையில் இறுதித் தேர்வு எழுதியதும் என் தந்தையின் உடல் நலம் சீர் கெட்டு விட்டதை
அறிந்து ஊர் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனவே பயிற்சியில் சேரவில்லை.
எனினும் ஒரு வாய்ப்பை இழந்து விட்டேனே என்ற வருத்தம் இருந்தது. அடிகளிடம், ஊர்
திரும்பும் நிர்ப்பந்த நிலையைக் கூறிய பின்னர்தான் புறப்பட்டேன்.
அந்த ஆண்டில் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் பதவிக் காலத்தை நீட்டுவதற்கு அடிகள் உருவாக்கிய
வரைவும் அதனை இராஜா அண்ணாமலைச் செட்டியாரிடம் நான் கொடுக்க வேண்டிய சூழ்நிலையும்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரைப் பற்றிய கட்டுரையில் சற்று விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
(பார்க்க தெ.பொ.மீ. சிதறிய செய்திகள்)
1944-46 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அடிகளுடன் பழகிய நாட்களில் என்னுள் பல மாற்றங்கள்
தோன்றுவதற்கு மிகவும் துணை செய்தன. என்பார்வை அகன்றது. மறைந்து கிடந்த என் இலட்சியமும்
பெரும் சக்திக் கனலாக மாறியது.
அவர் கிறித்துவப் பாதிரியாயினும் என்னிடம் கிறித்துவ மதத்தின் பெருமையையும் இந்து
மதத்தின் குறைபாடுகளையும் என்றும் கூறியதில்லை. அதற்கு நேர் மாறாகத்தேவார
திருவாசகத்தின் பெருமையைக் கூறிப் பாராட்டியது இன்றும் நினைவிருக்கிறது. அடிகள் தன்
சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூறிய செய்திகள் மிகக் குறைவு. யாழ்ப்பாணத்தில் பிரபல இந்துக்
குடும்பம் ஒன்றில் பிறந்து கிறித்துவக் குருமார் நிலையைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்டார்
என்று பிறர் கூறக் கேட்டிருக்கிறேன். யாழ்ப்பாணத்தின் இந்து கிறித்துவ மதக் காழ்ப்பில்லை.
இரு மதத்தினரும் மன ஒருமைப்பாட் டுடன் வாழ்க்கை நடத்துகின்றனர்.
கிறித்துவக் குருமார்களுக்கு இருநிலைகளுண்டு. ஒன்று மதத் தளம் (Priesty Order).
மற்றொன்று மதச் சார்பற்ற தளம் (Secular Order). இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்களுக்குக்
கட்டுப்பாடு மிகக் குறைவு. பிற நிலையங்களில் பணிசெய்து அந்த வருவாயின் ஒரு பகுதியைத்
தன் செலவுக்கும் மீதத்தை கிறித்துவ சபைக்கும் கொடுத்துவிடுவர். வாரம் ஒருநாள்
கிராமங்களில் மதப் பிரச்சாரத்திற்குச் செல்வர். படிப்பிற்காக ஈழத்திலிருந்து மேல்நாட்டிற்கோ
இந்தியாவிற்கோ செல்லும் போது பயணச் செலவு, தங்கல் செலவு முதலியவற்றைத் திருச்சபை
ஏற்கும். எனவே அடிகள் சுதந்திர வாழ்க்கையை விரும்பி இரண்டாவது பிரிவை ஏற்று உழைத்தார்
என்று பிறர் கூறக் கேட்டிருக்கிறேன்.
அடிகள் அண்ணாமலையில் சேர்வதற்கு முன்னர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம்
கிறித்துவப் பள்ளியில் நாலாண்டு ஆசிரியராகப் பணி செய்தார். அப்போது தமிழில் போதிய
அடிப்படை அறிவு பெறும் வாய்ப்புக் கிடைத்ததாகக் கூறினார்.
ஒருமுறை இராஜா முத்தையாச் செட்டியார் அவர்கள் கொழும்பு சென்றிருந்த போது அவரை அணுகித்
தான் தமிழ்ப்படிக்க அண்ணாமலை செல்ல விரும்புவதாகவும் அதற்குத் துணை நிற்க வேண்டுமென்றும்
வேண்டிக் கொண்ட போது விதி விலக்காக, மூன்றாம் ஆண்டு சிறப்பு வகுப்பில் சேர அனுமதியும்,
அந்த ஆண்டுநடக்கும் ஆங்கிலத் தேர்வை அடிகள் எழுத வேண்டாமென்றும், விருந்தினர் விடுதியில்
தங்கிப் படித்திட அனுமதியும் அடிகளுக்கு வழங்கப்பட்டன என்று கூறியது நினைவிருக்கிறது.
அப்போது துணைவேந்தராக இருந்த இரத்தினசாமி ரோமன் கத்தோலிக்கர். அவர் குடும்பத்தினர்
அனைவரும் கடவுள் பக்தி மிக்கவர்கள். எனவே அடிகள் அந்தக் குடும்பத்தின் நெருங்கிப் பழகும்
வாய்ப்பு மிகுத்து இருந்தது. எனினும் துணைவேந்தருடன் தாம் கொண்டுள்ள தொடர்பை அளவு மீறிப்
பயன்படுத்தியதில்லை. அகலாது அணுகாது அதிகாரிகளுடன் நடந்து கொண்டார். அவர் காலத்தில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றிரண்டு பாதிரிமார் களும் கன்னியாஸ்திரீகளும்
படித்துவந்தனர். கிறித்துவக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவார்கள். அதன் பின்னர்
அவர்கள் ஒன்று சேர்ந்து பழகுவதை நான் கண்ட தில்லை. எனவே அடிகளாரின் மதச்சார்பு மிகக்
குறைவாக இருந்ததால் இந்து மதத்தில் பற்றுள்ள என் போன்றோர் அடிகளாருடன் நெருங்கிப் பழக
தடையேதும் ஏற்படவில்லை.
1946 ஆம் ஆண்டு நான் தேர்வு எழுதி வீடு திரும்பிய பின் அடிகளாருடன் கொண்ட தொடர்பு
குறைந்துவிட்டது. ஆனால் அற்றுவிடவில்லை. அடுத்த ஆண்டு இறுதிச் சிறப்பு வகுப்பில்
இரண்டாம் வகுப்புடன் அடிகள் தேறினார். அதன் பின்னர் ஆய்விற்காக எம்.லிட். பட்டத்திற்குப்
பதிவு செய்திருந்தார். ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் அவர் படைத்த
ஆய்வுக்கட்டுரை பின்னர் அச்சாகி வெளியிடப் பட்டது. அது தமிழ் ஆய்வாளர்களிடையே வரவேற்பைப்
பெற்றது.
1948 ஆம் ஆண்டு முதல் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் தமிழ்
விரிவுரையாளராக நான் பணியாற்றியபோது தூத்துக்குடிக்கு வரவேண்டுமென்று அடிகள் தந்தி
ஒன்று அனுப்பியிருந்தார். ஒரு ஞாயிறன்று அங்கு சென்றேன். விசாலமான ஒரு பங்களாவில்
தமிழ் ஆய்வுக் கழகம் ஒன்றை உருவாக்கிப் பல நூற்களை அச்சிட்டு வெளியிடும் பணியில்
முனைந்து நின்றார். வெளிநாடு சென்று, குருமார் ஒவ்வொரு வரும், தமது அறப்பணிக்குப்
பொருள் திரட்டலாம் என்றும், அதன்படித் திரட்டிய பொருளால் அந்தப் பெரும் வீட்டைச் சொந்தமாக
வாங்கி, பல வெளியீடுகளைக் கொண்டு வரும் தமது திட்டத்தை விரிவாகக் கூறினார். அப்போது
பாளையங் கோட்டையில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு. மாசிலாமணி
அவருக்குத் துணையாக நூல்களைச் செப்பனிட்டு வந்தார். 1961 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்ப்
பண்பாட்டுக் கழகம் (Academy of Tamil Culture ) ஒன்று சென்னையில் நிறுவித்
தமிழ்ப்பண்பாடு (Tamil Culture ) என்ற அரையாண்டு இதழை வெளியிட ஏற்பாடு செய்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளராகப் பதவி வகித்து ஓய்வு பெற்ற அ.சுப்பையா அந்த
அகாதமி நிறுவுவதற்கும், ஆங்கில அரையாண்டு இதழ் ஒன்றை வெளியிடவும் மிகவும்
துணைநின்றார். அதன் பதிப்பாசிரியர் குழுவில் நானும் உறுப்பினராக நியமிக்கப் பட்டேன்.
எனது கட்டுரைகள் சில, அதில் வெளியிடவும் வாய்ப்பு ஏற்பட்டது. கல்வெட்டு பற்றி
கட்டுரையன்றை அடிகள் எழுதுமாறு கூறி, அதன் நகலை அடிகளே செம்மை செய்து என்பெயரில்
மட்டும் வெளியிட்டதும் மறக்க இயலாத நிகழ்ச்சி. அந்த சஞ்சிகை வெளியானதும் ஆங்கிலம் அறிந்த
தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
சிலமுறை என்னைச் சந்திக்கத் திருநெல்வேலி இந்துக் கல்லூரிக்கு வருவார். சுருக்கமாகத்
தனது கருத்தைக் கூறி விடை பெற்றுச் சென்று விடுவார். எங்களிருவர் நட்புறவும்
நம்பிக்கையும் மேலும் வலுப்பெற்றது.
ஒருமுறை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையைப் பேட்டி கண்டு அவருடைய கவிதை பிறந்த
நிகழ்ச்சியைப் பற்றி எழுதுமாறு அடிகள் கேட்டுக் கொண்டார். அதன் பொருட்டு கவிமணியைச்
சந்தித்து செய்தி திரட்டினேன். ஆனால் அந்தக் கட்டுரை பெரும்பாலும் மொழிபெயர்ப்புச்
செய்திகளைப் பற்றி அமைந்ததால் எனக்கும் கவிமணிக்கும் அந்த வரைவு மனத் திருப்தி தரவில்லை.
எனவே வெளியிட அனுப்பாமல் கோர்ப் பிலேயே தங்கிவிட்டது.
1950ஆம் ஆண்டுவாக்கில் ஒருநாள் திரு.பால்நாடாருடன் அடிகள் பாளையங்கோட்டை எனது
இல்லத்திற்கு வந்து குற்றாலத்தில் உறையும் டி.கே.சி.யைக் காண அழைத்துச் சென்றார். நான்
வாழ்ந்த வீடு சிறிது. என் வருவாய்க்குள் வாழ நினைத்ததால் அந்தச் சிறிய வீடுதான் வாடகைக்கு
அமர்த்த முடிந்தது. எனினும் அந்தச் சிறிய வீட்டில் திரு. பால்நாடாரும் அடிகளும்
மகிழ்ச்சியுடன் சிறிதுநேரம் தங்கி, காப்பியருந்தி விட்டுப் புறப்பட்டனர். அடிகள்தான் கார்
ஓட்டினார். தென்காசி யில் அப்போது முன்சீப்பாகப் பணிசெய்த திரு. மகாராஜன் வீட்டிற்கு
முதலில் சென்றோம். அன்புடன் வரவேற்ற அவர் இரவு அங்கு உண்டுவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று
வற்புறுத்தவே அங்கேயே உண்ட பின்னர் குற்றாலம் சென் றடைந்தோம். திரு.மகாராஜன்,
டி.கே.சி.யை மிகவும் மதிப் பவர். அவர் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர். இரவு
டி.கே.சி.யைக் கண்டபோது எடுப்பான தோற்றமும் முறுக்கிய அடர்ந்த மீசையும் குழந்தையின்
சிரிப்பும் உடைய ஒரு ஞானியைக் கண்ட உணர்வு என்னுள் ஏற்பட்டது.
அடிகளை அன்புடன் வரவேற்றார். அடுத்துத் திரு. பால்நாடாரை அதன்பின் வயதில் சிறியவனான
என்னை டி.கே.சி.யிடம் அறிமுகம் செய்யவே அவர் வீட்டில் ஒருவனாக உடனே என்னை ஏற்றுக்கொண்ட
உணர்வு என்னுள்ளே தோன்றியது. செட்டி நாட்டு அரசர் பங்களாவில் நாங்கள் இருநாள் தங்கு
வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்நாள் இரவு தூங்குவதற்கு முன்னர் அடிகள் தந்த
தமிழ்க் கல்ச்சரின் கட்டுரை களைப் படித்து அதிற்காணும் பிழைகளைக் கூறினேன். அச்சடித்த
பின்னர்தான் சிலருக்குப் பிழைகள் கண்ணில்படும். அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவன் நான். எனவே
சற்று வருத் தத்துடன் அடிகள் என் விமர்சனத்தைக் கேட்டுக்கொண்டார். இரண்டு நாள் அங்குத்
தங்கினோம். அந்த நாட்களில் டி.கே.சி. கூறிய தமிழ்ப்பாடலின் விளக்கங்கள் சுவையாக இருந்தன.
அவரிடம் புலமைச் செருக்கில்லை. இலக்கண நுணுக்க விளக்கமில்லை. ஆனால் அவர் விளக்கம் மனதைத்
தொட்டு எழுச்சியூட்டியது. இறுதியில் நாங்கள் பிரியும்போது என்னை நோக்கி தமிழ் உலகில்
தோன்றிய கோடரிக்காம்பு என்று சிலாகித்தது நினைவிருக்கிறது. நான் அந்த உவமையைச்
சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் தப்புத் தவறுகளை அகற்றித் தமிழ் நிலத்தைத்
திருத்த வந்திருக்கும் காம்பு என்று டி.கே.சி.கருதுகிறார் என்றார் அடிகள். அந்தத் தகுதி
எனக்கு இல்லாததால் அந்தக் கௌரவத்தைப் பற்றிய உணர்வு இல்லாதிருந்தது. ஊர் திரும்பினோம்.
டி.கே.சி.யுடன் ஏற்பட்ட தொடர்பு அது முதல் நிலைத்தது. இலக்கிய நயமிக்க பல
எழுத்துக்களை நான் அவரிடமிருந்து பெற அது வழி செய்தது. அடிகள் அறிமுகம்
செய்திராவிட்டால் அந்த வாய்ப்பு கிடைத்திராது.
1951ஆம் ஆண்டு நான் திருவனந்தபுரத்திலுள்ள தமிழ்த் துறையில் எஸ்.வையாபுரிப்பிள்ளை
பேராசிரியராக நியமிக்கப் பட்டதால் அங்கு ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். அப்போது
திருவனந்தபுரத்தில் வாழும் அறிஞர்கள் சிலரிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று நான்
அனுப்பினால் அவை தமிழ்க் கல்ச்சரில் உடன் அடிகள் வெளியிடுவார். ஒருமுறை பேராசிரியர்
வையாபுரிப்பிள்ளையைக் காணவந்திருந்தார். அப்போது மகிழ்வுந்து ஒன்றை வாங்கியிருந்தார்.
தூத்துக்குடியிலிருந்து தாமே அதனை ஒட்டி இரவில் திருவனந்தபுரம் இரயிலடியில் வந்து
சேர்ந்ததாகவும் அறையெதுவும் அமர்த்தாது காரினுள்ளே தூங்கிப் பக்கத்துக் கடைகளில்
விசாரித்து என் மாமனார் வீட்டை அடையாளங்காண அங்குள்ள ஒரு சிற்றாள் துணையுடன்
தேடிப்பிடித்து வந்தார்.
அவரை அன்று காலையில் காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் பேராசிரியர்
வையாபுரிப் பிள்ளையைக் காணச் சென்றோம். போகும் வழியில், ‘ஏன் உற்சாகமில்லாமல் இருக்கிராய்
சுப்பு’ என்றார். ‘விரிவுரையாள ராக இருந்தபோது மாதம் 120 ரூபாய் சம்பளம். இப்போது
இங்கே கிடைக்க இருக்கும் தகமை முப்பது ரூபாய் மட்டும் தான். அதுவும், இதுவரை
கிடைத்திடவில்லை. எனவே பணமுடையின் கடுமை; ஆய்வாளனின் வறுமையின் கூர்மை இப்போது என்ன
என்று தெரியவருகிறது’ என்றேன். அப்போது ஒன்றும் பதில் சொல்லவில்லை. பேராசிரியர்
வையாபுரிப் பிள்ளையின் ஆய்வு முடிவுகளை அடிகள் ஒப்புக்கொள்ளா விட்டாலும் அவருடைய
ஆய்வுத் திறமையையும் வாதத் திறமையையும் மிகவும் அடிகள் மதித்தார். எனவே அவர்க ளிடையே
நடந்த உரையாடல் மிகவும் மதிப்பைத் தெரிவிப்ப தாக இருந்தது. லக்னோவில் நடந்த கீழ்த்திசை
மாநாட்டுத் திராவிடப் பிரிவில் நிகழ்த்திய தலைமை உரையை தமிழ்க் கல்ச்சரில்
வெளியிடுவதற்கு எஸ். வையாபுரிப்பிள்ளையிடம் அனுமதி பெற்றார்.
அன்று மாலையே நாகர்கோவில் திரும்ப வேண்டியதால், விடைபெறும் போது இருநூறு ரூபாய்க்கு
ஒரு காசோலையை அடிகள் எழுதித் தந்தார். பின்னர் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற
உறுதியால் அதனைப் பெற்றுக் கொண்டேன். நிலையறிந்து உதவும் மனநிலையை உள்ளூரப் பாராட்டினேன்.
1953ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை திருவாங்கூர்ப்
பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றதால் நான் ஐந்து ஆண்டுகள் சிறப்புத் தமிழ்ப் பேராசிரியராக
நியமனம் பெற்றேன். அப்போது டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் ஏறத்தாழ ஓராண்டு
பணி செய்து அதனை விட்டு திருவனந்தபுரம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. வருவாய்
நிலையில் குறைந்த அந்தப் பேராசிரியர் பொறுப்பை ஏற்றால் தமிழ் ஆய்வில் பல திட்டங்களை
நிறைவேற்ற முடியும் என்ற உறுதியால் அதனை ஏற்க முடிவு செய்தேன். எனவே
டெல்லியிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் வந்து பொறுப்பேற்றேன்.
ஒரு சில மாதங்கள் கழிந்ததும் பூனாவிலுள்ள டெக்கான் கல்லூரி இராக்கிப் பெல்லர் நிலையம்
வழங்கிய மானியத்தால் மொழியியலுக்குக் குளிர்கால வேனிற்காலப் பள்ளிகள், டாக்டர் கத்ரே
தலைமையில் நடந்தது. தமிழ் மொழி வரலாறு என்ற பாடத்தைக் கற்பிக்கும் பேராசிரியராக
அதற்கு அழைக்கப் பட்டிருந்தேன். அங்கு இராக்கி பெல்லர் நிலையத்தின் துணை மேலாளரான
சாட்போர்ன் பாட்ரிக்கைச் சந்தித்தபோது அமெரிக்கா சென்று படிக்கும் வாய்ப்புக் கிடைத்தற்குரிய
வழிவகை கூறினார்.
குறிப்பாக அன்று திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரான சர்.இராமசாமி
முதலியாரின் பரிந்துரையைப் பெற்று அனுப்புமாறும் கூறினார். சர். இராமசாமி
முதலியாரிடம் அதைக் கூறவே புன்முறுவ லுடன் பரிந்துரை ஒன்றைத் தந்தார். இராக்கி பெல்லர்
தகமை கிடைத்ததும் ஐக்கிய அமெரிக்காவில் முதலாண்டு கார்னேல் பல்கலைக்கழகத்திலும்
இரண்டாவது ஆண்டு இந்தியானாவி லும் படிக்க நேர்ந்தது. இந்தியானாவில் படிக்கும்போது
ஒருநாள் எதிர்பாராதவிதமாக தொலைபேசியில் அடிகள் தொடர்பு கொண்டார். ‘தாம் நியுயார்க்
வந்திருப்பதாகவும் மேலும் இரண்டு வாரம் அங்கே தங்குவதாகவும் இயலுமாயின் எழுபத்தைந்து
டாலர் அனுப்புமாறும்’ கூறினார். முன்கடன் ஒன்று வட்டியுடன் அப்போது தீர்ந்திட்ட மனநிம்மதி
எனக்கு ஏற்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சித் துறையில் அப்போது
பணிசெய்து வந்த அடிகளார் இலண்டனில் மூன்றாண்டு அந்தத் துறையில் டாக்டர் பட்டம் பெற
உழைத்தார். அதன் பின்னர் மலேயாப் பல்கலைக்கழக இந்தியத் துறையின் தலைவராகப்
பொறுப்பேற்றிருந்தார். அந்த வேளையில் என்னுடன் கொண்ட தொடர்பு நலிந்திருந்தது.
1964இல் டெல்லியில் அகில உலக கீழ்த்திசை ஆய்வு மாநாடு நடந்தது. அதற்கு ஏறத்தாழ
இரண்டாயிரம் பேராளர்கள் உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்தனர். மாநாடு துவங்கு
வதற்கு முன்னர் விஞ்ஞான பவன் முகப்பில் பேராளர்கள் பெருங்கூட்டம் கூடியிருந்தது. பலவாண்டு
காணாத நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ந்து பேசி நின்றனர். அங்குத் தனிநாயக
அடிகளை எதிர்பாராத விதமாகக் காண நேர்ந்தது. இருவருக்கும் சொல்ல முடியாத
பெருமகிழ்ச்சி. பழைய நட்புறவு மீண்டும் தளிர்விட்டது. அந்த மாநாடு நடந்த நாலைந்து
நாளும் அடிக்கடி சந்தித்தோம். முன்னர் சென்னையில் தோற்று வித்த தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும்
அதன் வெளியீடான தமிழ்க் கல்ச்சரும் மிகவும் செயலிழந்துவிட்டன என்றார். தமிழ்க்கல்ச்சர்
பணமுடையால் நிறுத்திவிட அன்று பொறுப்பு வகித்த செயலாளர் தமது அறையில் கூடுமாறு
எழுத்து ஒன்றை எழுதியிருந்ததும் அதற்கு எப்பாடுபட்டாவது தொடர்ந்து நடத்திட வேண்டும்
என்று நான் பதில் எழுதியதும் நினைவிற்கு வந்தன.
‘சுப்பு நாம் தமிழுக்கென உலகமாநாடு ஒன்று நடத்த முயல வேண்டாமா? அதற்குரிய கூட்டம்
ஒன்றைக் கூட்டி ஒரு நிறுவனம் அமைக்க வேண்டாமா?’ என்றார்.செய்ய வேண்டியதுதான். டெல்லியில்
ஜீன் பிலியோசா (பிரான்சு) டி.பர்ரோ (இங்கிலாந்து), எல்.பி. ஜே. கைப்பர் (நெதர்லாந்து)
ஹெர்மன் பெர்கர் (ஜெர்மனி) கமில்ஸ்வலெபில் (செக்கோஸ்லோவாகியா) ஆர். ஆஷர் (பிரிட்டன்)
முதலிய அயல்நாட்டு ஆய்வாளர்கள் பலரும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராஜன்,
மொ.அ.துரை அரங்கசாமி முதலியவர்களும் மாநாட்டிற்கு வந்திருப்பதாக தெரிகிறது.
அவர்களிடம் எல்லாம் கலந்து கொள்க’ என்றேன்.
ஓரிரு நாட்களில் அந்தத் திட்டத்தைப் பற்றிப் பிறரிடம் உசாவிய அடிகள் தமிழ் நாட்டிலிருந்து
வந்த அறிஞர்களுக்குத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உடன்பாடில்லை. எனவே விண்ணப்பம் ஒன்றில் நீ
கையெழுத்திட்டு, கூட்டம் ஒன்றைக் கூட்டுவதற்குரிய அறிவிப்பு ஒன்றை எல்லோருக்கும் அனுப்பு
வோம் என்றார். இந்தியாவிலுள்ள தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் அதில் கையெழுத்திட
வேண்டுமென்று உறுதியாக நினைத் திருந்தார். ஆனால் மற்றுள்ளவர்கள் அதற்கு ஊக்கமளிக்க
வில்லை. மனம் தளர்ந்து அடிகள் அன்று காணப்பட்டார்.
“நீங்கள் மேற்கொள்ளும் எந்த முடிவிற்கும் என் துணையும் ஒத்துழைப்பும் உண்டு. எனவே நீங்கள்
முதல் கையெழுத்தாக அந்த விண்ணப்பத்திலிட வேண்டும். அதன் பின்னர் நான் இடுகின்றேன்” என்றேன்.
அவரும் மறுப்புக் கூறாது ஒப்புக் கொண்டார். விஞ்ஞான பவனில் சுற்றுப்புறத்திலிருக்கும்
அறைகளிலுள்ள அலுவலர் பெயர்ப்பலகை ஒவ்வொன்றையும் நடந்து கவனித்தோம்.
திரு.இராமன் துணைச்செயலாளர் (அந்தப் பெயர் சரியாக இருக்கும் என நம்புகிறேன்) என்ற ஒரு
பெயர்ப் பலகையைக் கண்டோம். அவர் தமிழராக இருப்பார். உதவி செய்வார் என்ற எண்ணத்துடன் அவர்
அறைக்குச் சென்று, எழுதி வந்த விண்ணப்பத்தில் இருநூறு படி எடுத்துத்தருமாறு இருவரும்
வேண்டினோம். அவரும் அதற்கு இசைந்து மதியம் பன்னிரண்டு மணிக்குள் தருவதாகக் கூறினார்.
அவ்வாறே கூறிய படி பன்னிரண்டு மணியளவில் தந்தார்.
தமிழ் ஆய்வாளர்கள், பற்றாளர்கள், நண்பர்கள் முதலியவர்களுக்கு அந்த அறிவிப்பு வழங்கப்பட்டது.
எல்லோரும் குறிப்பிட்ட அறையன்றில் ஏறத்தாழ மாலை நான்கு மணியளவில் கூடினர். தெ.பொ.
மீனாட்சி சுந்தரனாரைத் தலைமை ஏற்குமாறு வேண்டிக் கொண்டு உலகளாவிய தமிழ் ஆய்வு மையம்
ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டிய தேவையை அடிகள் விளக்கினார். கூட்டத்திலுள்ள உறுப்பினர்கள்
பலர் அந்தக் கருத்தை வரவேற் றனர். சிலர் மௌனமாக ஒப்புக்கொண்டனர். ஜீன்பிலியோசா (பிரான்சு)
தலைவராகவும் தெ.பொ.மீனாட்சி சுந்தரம், டி.பர்ரோவும் எல்.பி.ஜே.கைப்பர், எம்.பி.எமனோ
முதலிய நால்வர் துணைத்தலைவர்களாகவும், தனிநாயக அடிகள் செயலாளராகவும் கமில்ஸ்வலபில்
துணைச்செயலாளராகவும் இருக்கலாம் என்றார்.
பின்னர் என்னைச் சந்தித்தபோது “உன் பெயரைக் கூற மறந்து விட்டேனே” என்றார். “அதற்குத்
தேவையில்லை நீங்களிருக்கிறீர்கள் அது போதும். பதவியின்றி பிறருக்குத் துணை நிற்பதுதான்
என் குறிக்கோள்” என்றேன். அந்தக் கூட்டத்தில் கையெழுத்திட்டவர்களின் நிழற்படம் விண்ணப்பத்தின்
நகல் முதலியவற்றை கோலாலம்பூரில் நடந்த முதல் மாநாட்டு நிகழ்ச்சி பதிவில் பின்னிணைப்பாக
அச்சிட்டுள்ளார். அந்த நிறுவனம் தோன்றுவதற்குத் தாம்தான் காரணம் என்று பின்னர் உரிமை
கொண்டாடியவர்கள் அந்த ஆவணத் தைக் காண முற்படவில்லை.
அந்தக் கூட்டத்தில் எல்.பி.ஜே.கைப்பரை முதன் முதலாகக் கண்டேன். அதன் முன்னர், புறநானூற்றுப்
பாட வேத அடிப் படையில் அதன் பூர்வ உச்சரிப்பை மீட்டுரு அளித்து எழுதிய என்
கட்டுரையன்றின் உருளச்சுப்படியைப் பார்த்து ஏறத்தாழ பத்து பக்க அளவில் விரிவாகத் தடைகளை
எழுப்பிக் கடிதம் எழுதியிருந்தார்.”என் கட்டுரையை ஆழமாகப் படித்தாரே என்ற
மகிழ்ச்சியுணர்வு” மேலோங்கியிருந்தது. அவரெழுப்பிய தடைகள் சில எளிதில் மறுக்கத்தக்கன.
பல ஏற்கத்தக்கன. அன்று முதல் அவருடன் கடிதத் தொடர்பு இருந்ததேயழிய நேர் முகத்
தொடர்பில்லை. அம்மகாநாட்டில் அவரைக் கண்டு அளவளாவியது பெரும் வாய்ப்பாக அமைந்தது.
ஒருநாள் டி.பர்ரோவையும் எல்.பி.ஜே.கைப்பரையும் என்னையும் அசோகா ஓட்டலில் இரவு
விருந்திற்கு அடிகள் அழைத்திருந் தார். கமில்ஸ்வலபில்லும் அதற்கு வந்திருந்தார். அன்று
மொழி ஆய்வு பற்றிய பேச்சு விரிவாக நடந்தது. டி.பர்ரோவின் எளிமையான போக்கு அன்று
எல்லோருக்கும் தெளிவானது.
மாநாடு முடிந்ததும் அன்றிரவு நான் தங்கியிருந்த லோடி ஓட்டலில் என் அறைக்குரிய
வாடகையைக் கொடுத்துவிட்டு ஊர்திரும்பப் பணம் எதுவும் இல்லாமல் கலங்கினேன். விமானச் சீட்டுக்
கையிலிருந்ததால் பணமில்லாமை ஒரு தடை யாக மாறவில்லை. டெல்லி விமான தளத்தில் தெ.பொ.
மீனாட்சி சுந்தரனாரைக் கண்டபோது “துணைத்தலைவர் களுக்கு என்ன என்ன பொறுப்பு” என்று
வெளிநாட்டுப் பொறுப்பாளர்கள் தம்மிடம் கேட்டதாகக் கூறினார். “புதிதாகத் தோற்றவித்த ஆய்வுக்
கழகத்தைப் பலப்படுத்தும் பெரும் பொறுப்பு அவர்களது” என்று கூறியது நினைவிருக்கிறது.
உலகக் கீழ்த்திசை மாநாடு முடிவடைந்த ஒரு சில மாதங் களுக்குள் முதல் உலகத்தமிழ் மாநாடு
கோலாலம்பூரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. மலேயர்களும் சீனர்களும் பெரும்பாலும் வாழும்
அந்த நாட்டில் அத்தகைய மாநாடு நடத்த ஒப்புக் கொண்டது பெரும் வெற்றியாகும். தனிநாயக
அடிகள் பிறரிடம் தன் கருத்தை விளக்கும் ஆற்றலும் அவர் களைத் தன் திட்டத்தில் ஈடுபடுத்தும்
சக்தியும் எல்லோருக்கும் அப்போது தெளிவாயிற்று. திரு.பக்தவத்சலம் தமிழக முதலமைச்சராக
அப்போது இருந்தார். இந்தி எதிர்ப்புஇயக்கம் வலுவாக நடந்து முடிந்த சமயம். தமிழ்
ஆசிரியர்கள், எதிர் கட்சிகள் ஆகியவர்களிடையே கசப்பு மனப்பான்மை குறையாத நேரம். எனவே,
தென்னகத்திலிருந்து தமிழ் அறிஞர்கள் பலரை மாநாட்டுக்கு அரசுச் செலவில் அனுப்புவது பற்றி
முதலமைச் சரிடம் எளிதில் ஒப்புதல் பெறப்பட்டது. அவரும் கலந்து கொள்வதாக ஒப்புக் கொண்டார்.
அப்போது எதிர்கட்சித் தலைவராக வி.ஆர்.நெடுஞ்செழியன் இருந்தார். அவரும் மாநாட்டில்
பெருந்தன்மையுடன் பங்கு கொண்டார்.
மலேசியா செல்லும் பேராளர் குழுவில், மதிப்புறு அரசியல்வாதிகளில் பலர்
இடம்பெற்றிருப்பது மாநாட்டிற்குத் துணை செய்யாது என்று நான் அ.சுப்பையாவுக்குக் கடிதம்
எழுதியது நினைவிருக் கிறது. அதனை அன்று கல்விச் செயலாளராக இருந்த
திரு.க.திரவியத்திடம் காட்டி அரசியலாளரின் எண்ணிக்கை யைக் குறைக்கக் கேட்டுக் கொண்டதாகப்
பின்னர் சுப்பையா தெரிவித்தார். அரசுச்சார்பில் அ.ச.ஞானசம்பந்தன் (தமிழ்ப் பண்பாட்டு
இயக்குநர்) கார்த்திகேயன் (தமிழ்ப் பண்பாட்டுத் துறைச் செயலாளர்) கி.வா.ஜகந்நாதன், கல்வி
இயக்குநராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு முதலியவர்களும் இடம்பெற் றிருந்தனர்.
இருநூல்கள்: ஒன்று பிறநாட்டில் தமிழ்ப்படிப்பு, இரண்டாவது தியரி ஆவ் லிட்டரச்சர் (ரெனோ
வெல்லக், ஆஸ்டின் வாரன் இருவரும் சேர்ந்து செய்த தரமான ஆங்கில விமர்சன நூலைத் தமிழாக்கம்
செய்தல்) ஆகிய இரண்டு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொண்டேன்.
முன் கூறிய நூல் மலேயாவில் அச்சிடப்பட்டது. பின்னுள்ளதைச் சென்னைப் பாரி நிலையம் வழி
அச்சேற்றி ஐந்து படிகளையும் எடுத்துச் செல்லும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. சமஸ்கிருத
மகாபாரதத்தில் தென்னக ஏடுகளில் காணும் பிரதி பேத மாற்றங்களை பற்றிய என் கட்டுரை
ஒன்றையும் நான் அந்த மகாநாட்டில் படித்திடவும் ஒத்துக் கொண்டேன். நானும் சில நண்பர்களும்
மாநாடு துவங்குவதற்கு மூன்று நான்கு நாட்க ளுக்கு முன்னர் கோலாலம்பூர் போய் சேர்ந்தோம்.
அப்போது பேராளர்கள் தங்குவதற்குரிய விடுதிகள் தயாராக இராததால் அங்குள்ள ஓட்டலில் இரண்டு
நாள் தங்கினோம். அடுத்த நாள் அடிகள் தன் துறைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆய்வுப் பணியை
விளக்கினார். மகாநாட்டு ஏற்பாடுகளையும் கூறி அதிற் காணும் குறைபாடுகளையும் தெரிவித்தார்.
மாநாடு கூடுவதற்கு ஒரு நாள் முன்னர் என்னென்ன ஆய்வுக் கட்டுரைகளை உருளச்சிட்டுள்ளனர்.
அவை ஒழுங்காக பேராளர்களின் கோர்ப்பில் வைக்கப்பட்டுள்ளனவா என்று பார்த்தபோது பல
உருளச்சிடாமல் இருப்பதைக் கண்டேன். தனிநாயக அடிகளிடம் ஆலோசித்தபோது அதன் பொறுப் பாளர்
வரலாற்றுத் துறை நண்பர் என்று தெரிந்தது. அவர் இல்லத் திற்குச் சென்று நிலையை
விளக்கினேன். கீழ்மட்டத்திலுள் ளவர்கள் செய்திடவில்லை என்று அவர் பொறுப்பைத் தட்டிக்
கழித்தார். எனவே மாநாட்டு அலுவலகத்திற்குத் திரும்பிச் சென்று எந்தெந்த ஆய்வுக் கட்டுரை
முதல்நாள், இரண்டாம் நாள் படித்திடுவதற்குரியன என்று பிரித்து அவற்றை உருளச் சிட்டு
கோர்ப்பில் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். அந்தப் பணி முடிவது வரை அந்த
அறையினிலேயே இருந்து கவனித்தேன். அடிகள் அகல இருந்து கவனித்து நின்றிருந்தார்.
ஒருவரைப் பற்றி தனிநாயக அடிகள் நேராகக் குறை கூறுவதில்லை. மற்றுள்ளவர்களிடம் கூறி
மாற்றுவழிக் காணக் கேட்டுக் கொள்வார். பல பொழுது அதனால் பணிமுடக்கம் ஏற்பட்டு அவர்
தத்தளிப்பதைக் கண்டிருக்கிறேன். “நேராகச் சொல்லுங்களேன்” என்று நான் கூறுவேன். “அது என்
பழக்க மில்லை. உன்னைப் போன்றவர்களிடம் சொன்னால் மன ஆறுதலும் மாற்று வழியும் பிறக்கும்
என்று கருதித்தான் சொல்கிறேன்.” என்றார்.
அடுத்தநாள் காலை மலேசியப் பிரதமர் மாண்புமிகு துங்கு அப்துர் ரஹ்மான் மாநாட்டைத் திறக்க
ஒப்புக்கொண்டிருந்தார். பேராளர்கள் எல்லோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காலை ஒன்பதரை
மணிக்கு, கோலாலம்பூர் டவுன் ஹாலுக்கு வந்துவிட்டனர். அழைப்பு நுழைவுச்சீட்டும் சிலருக்குக்
கிடைக்கவில்லை. எனவே காவலர்கள் உள்ளேவிட சிலரை மறுத்தனர். எனது கோட்டில் மாநாடு
ஐக்கிய அழைப்பாளர் களுக்குரிய தங்கமுலாம் பூசியசின்னம் குத்தப்பட்டிருப்பதால் என் பின்னே
வந்தவர்களனைவரும் உள்ளே தடங்கலின்றி நுழைந்தனர்.
மேடையில் மலேசியப் பிரதமருடன், தமிழ்நட்டு முதலமைச்சர் திரு. பக்தவத்சலம், மாநாட்டுத்
தலைவர் டாக்டர் பிலியோசா அடிகள், அ.சுப்பையா ஆகியோர்களிருந்தனர். தமிழ் நாட்டிலிருந்து
வந்தவர்களில் சிலரிடையே Òஎன்ன, நமக்கு மேடையில் இடமில்லையேÓ என்று முனகல் எழுந்தது.
Òஅந்த மாநாடு நடப்பதற்கு மிகவும் துணைநின்ற சுப்பிர மணியமே பொதுமக்கள் வரிசையில்
இருந்தாரே! எனவே குறுகிய மேடையில் எல்லோருமிருக்க இயலாதாகையால் சிலரைக் குறிப்பாக
முதியவர்களை மேடையில் இருத்தியிருந் தோம்Ó என்று அடிகள் பதில் கூறியதாக நண்பர்கள் சொன்
னார்கள்.
அடுத்த நாள் காலையில் “எனக்கும் பொன்முலாம் பூசிய சின்னம் வேண்டும்; வாழ்நாள் முழுவதும்
தமிழுக்காக உழைத்த எனக்கு அது தராவிட்டால் நான் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று
எப்பொழுதும் அன்பாகப் பழகும், ஆனால் சற்று முன்கோபமுடைய முதிய நண்பர் ஒருவர்
அடம்பிடித்தார். ம.பொ.சிவஞான கிராமணியார் “அவர் அடம்பிடிக்கிறார். சமாதானப்
படுத்துங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் என்னால் ஆனமட்டும் முயன்றேன். “முலாம் பூசிய
என் முத்திரையை தங்கள் தோள்பட்டையில் குத்திவிடுகிறேன். தமிழ் நாட்டிலிருந்து திரளாக
வந்து, கோலாலம்பூர் நண்பர்க ளிடையே மனஉளைச்சல் ஏற்படுமாறு நடப்பது நன்றல்ல” எனக்
கூறினேன். அவர் என் சொற்களைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் தனிநாயக அடிகள்
அவரிடம் சில சமாதானச் சொற்கள் கூறியிருக்க வேண்டும். அடம்பிடித்த நண்பர் கருத்தரங்கில்
முதல் வரிசையிலிருப்பதைப் பின்னர் கண்டேன்.
அந்த மாநாடு ஆய்விற்கு முதலிடம் கொடுத்து, ஒவ்வொரு நாளும் பிற நிகழ்ச்சிகள் நடப்பதற்கும்
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. ஒருநாள் இரவு தனிநாயக அடிகள் விருந்தொன்று கொடுத்து
மகாநாட்டின் முனைப்பாக உழைத்தவர்களைப் பாராட்டி சிறு மது அருந்திய நிகழ்ச்சி ஒன்றும்
நினைவிருக்கிறது.
மாநாடு நடக்கும்போது ஒருநாள் காலை அடிகள் நான் தங்கும் அறையில் வந்து “முக்கியமான
ஒன்றிரண்டு பேரை நாம் சென்று சந்திப்போம்; நீயும் என்னுடன் வா என்றார்” “போவோம்” என்று
கூறி “1935ஆம் ஆண்டு வாக்கில் திருவனந்தபுரத்தில் நடந்த அகில இந்திய கீழ்த்திசை
மகாநாட்டுப் பேராளர்கள் தங்கியிருந்த ஒவ்வொரு அறைக்கும் சென்று, அன்று திவானாக இருந்த
சர்.சி.பி.இராமசாமி ஐயர் குசலம் விசாரித்ததும் அதனால் பேராளர்கள் மிக மகிழ்ந்த தையும்”
கூறினேன். எனவே, எல்லா அறைகளுக்கும் சென்று ஒவ்வொருவருடைய நலனையும் அவர் விசாரிக்க
முற்பட்டார். நான் அவர் பின்னே புன்முறுவலுடன் சொல்லாடாமல் நின்றி ருந்தேன். அன்று நடந்த
நிகழ்ச்சியால் பேராளர்கள் தமக்கிருந்த ஒருசில குறைகளைக் கூட மறந்துவிட்டனர். ஆட்களுடன்
எளிதில் பழகும் ஆற்றல் அடிகளுக்கு வாய்ந்த பெருங்குணம். துறவை மேற்கொண்டிருந்ததால்,
பழகுபவர்கள் மிக மதிப்புடன் அவரோடு உரையாடினர். நீடிக்கும் நட்புறவை பலருடன் அடிகள்
கொண்டிருந்ததற்கு அவைதாம் காரணம்.
மாநாடு நடந்து முடிந்ததும் பேராளர்கள் ஈப்போ போன்ற அயல் நகரங்களுக்கு அழைத்துச்
செல்லப்பட்டனர். நானும் சில நண்பர்களும் கோலாலம்பூர் மாணவர் விடுதியிலேயே தங்கிவிட்டோம்.
அந்த இடைவேளையில் ஒருநாள் ஒரு மலையிடத்தில் உல்லாச பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அங்கு மலைக் காட்சிகளைப் பார்ப்பதுடன் பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் வருங்கால வளர்ச்சி
ஆய்வு நிறுவனம் ஒன்றை நிறுவுவது தமிழ் ஆய்வுக்கென ஒரு அரையாண்டு இதழ் ஒன்றை
வெளியிடுவது போன்ற திட்டங்கள் உருவாயின. பிறர் கருத்தைக் கேட்பதும், அவர்கள் கேட்டால்
அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நானறிந்த மட்டில் தெரிவிப்பதும் என் போக்காக
இருந்தது.
நான் ஊர் திரும்பும் முன் ஒருநாள் “சுப்பு! உன் செலவிற்கு மலேசிய டாலர் தரட்டுமா?
“என்றார் அடிகள்.
‘இலக்கியக் கொள்கை’ என்ற நூலை மொழிபெயர்த்த திருமதி. குளோறியா சுந்தரமதிக்கு
முன்னூறு ரூபாய் சிறப்பு ஊதியம் கொடுக்கத் தீர்மானித்திருப்பதால் அந்தப் பணம் மட்டும் தந்தால்
போதும். கடன் பெற்று செலவு செய்வது நன்றன்று என்றேன். எனது கையில் ஏறத்தாழ எழுநூறு
ரூபாய் இருந்ததால் எனக்குப் பொருள் ஏதும் தேவைப்படவில்லை.
சென்னையில் 1968இல் நடைபெறவிருக்கும் மகாநாட்டிற் கான ஆரம்ப ஏற்பாடுகள் துவங்கின.
அதற்குச் சற்றுமுன் நடந்த பொதுத் தேர்தலில், மகாநாட்டுக்கு அழைப்பு விடுத்த திரு.
பக்தவத்சலமும் காங்கிரஸ் கட்சியும் தோல்வியுற்றன. திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரும்
வெற்றியைப் பெற்றது. எனவே தமிழ் மீதும் தமிழ்ப்பண்பாடு மீதும் புத்துணர்வும் எழுச்சியும்
அன்று வெளிப்படையாகத் தெரிந்தது.
அன்று முதலமைச்சர் திரு. அண்ணாதுரையும் அமைச்சர் களும் தமிழக அரசின் மாநாடு
நடத்துவதில் முனைப்புடன் செயல்பட்டனர். அரசியலும் பிரச்சாரமும் கலவாத ஆய்வு மாநாடு
ஒன்றை நடத்த பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் விரும்பியது. அரசியல் பேச்சாளர்கள் தாங்கள் தாம்
தமிழ் வளர்ப்பவர்கள் பாதுகாவலர்கள்; எனவே, தாம் தாம் முன்னின்று நடத்த வேண்டும் என்று
அடம்பிடிக்கவே மாநாடு இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, பொதுமக்களுக்குத் தீவுத்
திடலிலும் ஆய்வாளர்களுக்குப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திலும் நடத்துவது என முடிவு
செய்யப்பட்டது. பொதுமக்கள் விரும்பும் ஆரவாரப் பேச்சுக்கள் கேளிக்கைகள் முதலியவற்றை
ஆய்வாளர்கள் விரும்புவதில்லை. பல நாட்டி லிருந்து மாநாட்டிற்குப் பேராளர்கள்
வந்திருந்தனர். விழாக் கோலம் கொண்டிருந்த சென்னையில் ஆய்வுக்கட்டுரைகள் படைக்கும் நூற்றாண்டு
மண்டபத்தில் தேர்ந்தெடுத்தவர்கள் மட்டும் நுழைவு அட்டைகளுடன் அனுமதிக்கப்பட்டனர். எனவே
அறிஞர்களும் ஆய்வாளர்களும் மட்டும் கூடிய கூட்டமாக நூற்றாண்டு மண்டபக் கூட்டம் அமைந்தது.
‘ஒரு கொள்கையாக்கச் சொற்பொழிவாற்ற வேண்டும்’ என்றும் அமைப்பாளர் குழுவின் சார்பில்
அ.சுப்பையா என்னைக் கேட்டுக்கொண்டார். “தமிழ் இலக்கியத்தில் சில மைல்கற்கள்” என்பது என்
தலைப்பு. என் கட்டுரை 1960 முதல் 1965 வரை நடந்த ஆய்வைச் சீர்தூக்கிய பின்னர் சில புதுச்
செய்திகளையும் கொண்டிருந்தது. திரு.அ.சுப்பையாவுக்கு அந்தக் கட்டுரையின் போக்கு
பிடிக்காததால், கட்டுரையில் வேறுசில செய்திகளையும் சேர்த்திடுமாறு அப்போது செயலாள
ராக இயங்கிய கமில்ஸ்வலபில் வழி எனக்குக் கடிதமொன்றை எழுதச் செய்தார்.
“என் கட்டுரையில் எவ்வித மாற்றத்தையும் செய்ய இயலாது. மாநாட்டில் அதனைப் படைத்திட
வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை” என்று எழுதினேன். நான் பதில் எழுதுவதற்கு முன்னர்
கமில்ஸ்வலபில் தமது கையெழுத் தில் தன் கருத்தாக “அது நல்ல கட்டுரை, அதை மாற்ற
முனையாதீர்கள்” என்று எழுதியிருந்தார். அவருடைய பரிந்துரையைப் பாராட்டினாலும்
“திரு.அ.சுப்பையாவிடம் அதனைக் கூறியிருக் கலாமே” என்று எனக்குத் தோன்றியது. எனவே
மாநாட்டுக்குச் செல்லும் உள்ளுந்தல் எனக்கு இல்லாமலிருந்தது. திருவனந்த புரத்திலுள்ள
தமிழ்த்துறையிலும் மொழியியல் துறையிலும் பணிசெய்யும் எல்லா ஆய்வாளர்களையும்
பங்குபெறுமாறு அனுப்பிவிட்டு நான் மட்டும் செல்ல மனமில்லாமல் ஊரில் தங்கினேன். அதனை
அறிந்த அடிகள் மாநாட்டிற்கு உடனே வருமாறு தந்தியன்றை அனுப்பினார். செய்தித்தாள்கள் தமிழ்
மாநாட்டு ஏற்பாடுகளை மிக விரிவாக ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வந்தன.
தமிழ் அபிமானிகளுக்கு அந்தச் செய்திகள் எழுச்சியூட்டின. எனவே நான் மாநாட்டிற்குச்
செல்வதாக அது துவங்கும் நாள் காலையில் முடிவு செய்து விமானத்தில் மதுரை வரைச்சென்று
அதன்பின் சென்னை செல்ல இடம் கிடைக்காத தால், இரயிலில் அடுத்தநாள் காலை சென்று சேர்ந்தேன்.
துவக்க நாளில் நடந்த பேரணிகளும், பெருந்திரளான மக்கள் கூட்டமும் அன்று ஜனாதிபதியாக
இருந்த டாக்டர் சாக்கீர்உசேன் அவற்றைப் பார்வையிட்டுக் கடற்கரையின் மைதானத்தில் மாநாட்டினைத்
துவக்கி வைத்ததும் செய்தித் தாள்களில் வெளியிடப்பட்டிருந்தன. கூட்டம் அலைமோதியதாகவும்
செய்தித்தாள்கள் தெரிவித்தன.
சென்னை சென்றதும் அறை யெதுவும் விடுதிகளில் கிடைக்காததால் கீழ்ப்பாக்கத்தில் என் தம்பி
வீட்டில் தங்கி ஒன்பதரை மணிக்கு நான் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்குச் சென்றேன்.
மண்டபத்தின் உள்ளே நுழைவதற்கு அட்டை எதுவுமில்லை. திரு.வி.எஸ்.தியாகராய முதலியார்
வாயிலில் என்னை அடையாளங்கண்டு கொண்டு உள்ளே செல்ல ஏற்பாடு செய்தார். பார்வையாளர்
பகுதியில் அமர்ந்தேன். திருவனந்தபுரத்திலிருந்து வந்த மாணவர்கள் முகத்தில் ஆசுவாசம்
பிறந்தது. அப்போது முதல் அமர்வு தொடங்கியது. அதன் முடிவில் அடிகள் நானிருக்கும் இடம்
வந்து மதிய உணவிற்கு அழைத்துச் சென்றார். அப்போது ‘நான் வரமாட்டேன் என்று திருவனந்தபுரம்
ஆய்வாளர்கள் கூறிய செய்தியை’ யும் பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக்கழகம் துவங்கு வதற்கு முனைந்த
இருவருள் ஒருவன் வராமல் இருப்பது பெருங்குறையாகும் என்று தான் கருதித்
தந்தியனுப்பியதாக வும், முந்தியநாள் கடற்கரைத் திறப்பு விழாவில் நடந்த நிகழ்ச்சிகளையும்
கூறினார். மாநாடு நடந்த ஏழு நாட்களும் அடிகளுடன்தான் பெரும்பாலும் நான் செலவழிக்க
நேர்ந்தது.
எனது கட்டுரை அரங்கேற்றுவதற்கு மாநாடு நடக்கும் காலை புதன்கிழமை ஒதுக்கப்பட்டது என
நினைவு. நான் அன்று அதன் நகலொன்றைக் கையில் எடுத்துச் சென்றிருந்தேன். திரு.வி.எஸ்.
தியாகராய முதலியார். அந்தக் கட்டுரையை அலுவலகத்தில் தேடியும் கிடைக்கவில்லை என்று
வருத்தத்துடன் கூறும்போது, என் கையில் அதன் நகல் இருக்கிறது என்றேன். கருத்து வேறு
பாட்டால் என் கட்டுரையை அலுவலகம் அச்சேற்றவில்லை. அந்தக் கட்டுரை சுருக்கமானதாக
இருந்ததால் இருபது நிமிட நேரந்தான் நீடித்தது. ஆனால் கேள்வியும் அதற்குரிய பதிலும்
ஏறத்தாழ ஒன்றரை மணியளவு நீண்டு நின்றது. அதன் முழு விவரங்களை ஈழ நண்பர் டாக்டர்
கைலாசபதி இலங்கை நாளிதழ் ஒன்றில் பலநாள் வெளியிட்டு எனக்குத் தொகுத்துப் பின்னர்
அனுப்பியிருந்தார். தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில்
Òதரமான முற்போக்கான கட்டுரைÓ என்று பாராட்டியிருந்தார்.
கட்டுரை படிக்காமல் விடப்பட்டிருந்தால், மாநாட்டு நல்ல நிகழ்ச்சி ஒன்று, பிறர் கண்ணில்
படாமல் போயிருக்கும் என்று அடிகளும் திரு.சுப்பையாவும் பின்னர் கூறினர். அந்த
மகாநாட்டில் இந்தியத் தேசிய அமைப்பின் செயலாளராக என் பெயரை அடிகளும், சுப்பையாவும்
செயற்குழுக் கூட்டத்தில் கூறிட அதனைப் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் எதிர்த்தாராம்.
நான் அந்தக் கூட்டத்திற்குப் போகவில்லை. எனவே அடுத்த நாள் உலகக் குழுவின் பொதுச்
செயலாளராக என்னை உயரிடத்தில் நியமித்தனர். அன்று இரவு எக்ஸ்பிரஸ் செய்தித்தாளின்
உரிமையாளர் திரு.கோயங்கா அளித்த விருந்திடத்தில் கண்ட அடிகள், Òஎன்னுடன் நீயும்
பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் செயலாளர் ஆக்கப்பட்டு விட்டாய். இருவரும் சேர்ந்து பணி
செய்வோம்Ó என்றார். பதவியால் எதுவும் சாதித்துவிட முடியாது என்ற எண்ணம் உறுதியாக என்
மனதில் பதிந்திருந்ததால், அடக்கத்துடன் அவர் கூறிய செய்திகளனைத்தையும் கேட்டுக்கொண்டேன்.
ஒருநாள் மாலை, தீவுத் திடலுக்கு அடிகளுடன் நானும் சென்றேன். அங்குச்சென்ற நேரம் மாலை
ஆகையால் நிகழ்ச்சி எதுவும் அப்போது நடைபெறவில்லை. பல கடைகள் (டீஸ்டால், வெற்றிலைப்
பாக்குக் கடை) முதலியவை அரசியல் தலைவர் களின் பெயரில் அங்கே இயங்கின. அவற்றைச்
சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.
ஆய்வு மாநாடு எது, இலக்கிய விளம்பர மாநாடு எது என்பது பிரித்தறிய அன்று வாழ்ந்த
அறிவுச் செல்வர்கள் முயலவில்லை. தமிழ் செய்தித்தாள்களில் சில பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டப
நிகழ்ச்சிகளையும் அதன் அமைப்பாளர்களையும் விமர்சித்து செய்திகளை வெளியிட்டன. ஆனால்
பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக் கழகம் எவ்வித பதிலும் அவற்றிற்கு அளிக்க முயலவில்லை.
புறக்கணித்துவிட்டது. மாநாடு முடிந்தபோது அடிகள் வேலைப் பளுவால் களைப்புடன் ஆனால்
உற்சாகமாக காணப்பட்டார். நானும் அடுத்தநாள் ஊர் திரும்பினேன்.
அந்த மாநாட்டில் முடிவு செய்த தீர்மானங்களுள் ஒன்று உயர் ஆய்வு மையமொன்றைத் துவக்குவது;
ஆங்கிலத்தில் அரை யாண்டு இதழுக்கு அடிகள் ஆசிரியர், நான் இணையாசிரியர்,
திரு.அ.சுப்பையா பொருளாளர் என இவ்வாறு பொறுப்பு ஒதுக்கப்பட்டது. உயர் ஆய்வு மையத்தின்
திட்ட அமைப்புக் குழுவுக்கு நான் உறுப்புச் செயலாளருமாக நியமிக்கப்பட்டேன்.
கல்வி அமைச்சர் வி.ஆர்.நெடுஞ்செழியன் அதன் தலைவர் எனவே என் பொறுப்பு கணிசமாகப்
பெருகியது. அன்று கல்வி அமைச்சராக இருந்த வி.ஆர்.நெடுஞ்செழியனின் ஆதரவு இந்த இரண்டு
திட்டத்திற்கும் மிகவும் கூடுதலாக இருந்தது. அவர் மூலமாக என்னை ஓரிரு மாதங்களுக்குப்
பணிவிடுப்பில் அனுப்புமாறு கேரளப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த திரு.சாமுவேல்
மத்தாயிக்கு திரு.சுப்பையா எழுதி யிருந்தார். நானும் அந்த வேனல் விடுமுறையில், சென்னை
சென்று பன்னாட்டுத் தமிழாய்வு மையத்தின் அறிக்கையையும் செயல்படுத்தும் திட்டத்தையும்
உருவாக்கும் பணியில் ஈடுபட்டேன். திரு.சுப்பையா வேனல் விடுமுறையாகையால் வழக்கம்போல்
கொடைக்கானல் சென்றுவிட்டார். எனவே ஓரிரு மாதங்களுக்குள் நான் மட்டும் சில உதவியாளருடன்
திட்டத்தின் கரடு வரைவைத் தயாரித்தேன். அதனை திருத்தி கல்வி அமைச்சகத்திற்கு
சமர்ப்பிப்பதன் முன்னர், அறிஞர்கள் சிலரை அழைத்து வரைவை ஆய்ந்து அவர்கள் பரிந்துரையுடன்
அனுப்புவது நல்லது என்ற எண்ணத்துடன் ஆய்வுக்குழு ஒன்றும் நிறுவப்பட்டது.
அந்த ஆய்வுக் குழுவில் எஸ்.கே.சட்டர்ஜி (கல்கத்தா), ஆர்.என்.தாண்டேகர் (பூனா), மொ.அ.துரை
அரங்கனார், மு.வரதராசனார், இரஷ்யத் தூதரகப் பிரதிநிதி, அமெரிக்க தூதரகப் பிரதிநிதி
முதலியவர்கள் திரு.வி.ஆர். நெடுஞ்செழியன் தலைமையில் ஒருநாள் ஆய்ந்தனர். அந்தக்
கூட்டத்திற்கு தனிநாயக அடிகள் வர இயலவில்லை. கூட்டம் நடந்து முடிந்ததும், வெளியூர்
அறிஞர்களை இரயிலேற்றிவிட்டு அன்றே திருத்தங்களைச் செய்து அறிக்கையின் மூன்றுபடி எடுத்து
அப்போது துணைச் செயலாளராக இருந்த திருமதி. இரமேசத்திடம் கொடுத்துவிட்டு
திருவனந்தபுரம் திரும்பி விட்டேன். அந்த அறிக்கை உருவாக்கும் காலத்தில், ஒரு ஆய்வு
நிறுவனத்திற்கு என்ன என்ன தேவை, எவர் எவர் துணையை நாடவேண்டும். எவ்வாறு எழுத்து எழுதி
அறிஞர்களை அதில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்பது போன்ற பல அடிப்படை அனுபவங்களை நான்
பெற்றிட வாய்ப்பு ஏற்பட்டது. பின்னர் அனைத்து இந்திய திராவிட மொழியியற் கழகமும்,
பன்னாட்டு மொழியியல் ஆய்வு நிறுவனமும் உருவாக்குவதற்கு அந்த அனுபவம் மிகவும் துணை செய்தது.
தமிழ் ஆய்வு நிறுவனத் திட்டம் சென்னையில் செயல் படுத்தப்பட்டது. மாறுபட்ட சூழ்நிலை
காரணமாகத் தனிநாயக அடிகள் மலேசியாவிலுள்ள பேராசிரியர் பதவியை விட்டு
விலகிவிட்டார். Òஅவரைப் புதிதாக அமையவிருக்கும் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக
நியமித்தால் மிகச் சிறப்பாக நடத்துவார்Ó என்பது எனது உறுதியான நம்பிக்கை. Òஆய்வில்
உனக்கு அடிகளை விடக் கூடுதல் அனுபவமும் உலகோர் ஒப்புதலும் உண்டுÓ என்று பன்னாட்டுத்
தமிழாய்வுக் கழகத்தில் பெரும்பொறுப்பு வகித்த நண்பர் ஒருவர் என்னிடம் ஒருநாள் கூறினார்.
“எங்கள் நம்பு பலவாண்டுகள் நீடித்து வரும் ஒன்று. பல துறை அறிஞர்களைக் கவரும்
தெய்வசக்தியும் தமிழின் ஏற்றத்தைப் பல மொழியாளர்களிடம் கூறி ஒப்புதலைப் பெறும் வல்லமையும்
அடிகளிடம் உண்டு” என்று கூறி அவர்கள் சொற்களை மீண்டும் கூறக் கேட்க நான் விரும்பவில்லை
என்று தெரிவித்துவிட்டேன். மலேசியா பதவியை விட்டு அடிகள் விலகிய போது, சென்னை ஆய்வு
நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க அழைக்கப்படுவார் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. ஆனால்
நாளாவட்டத்தில் அந்த நம்பிக்கை குறைந்தது. நானும் அந்த நிறுவனப் பணியிலிருந்து மெள்ள
மெள்ள அகலத் துவங்கினேன்.
ஆய்வு நிறுவனத்திற்கு மைய அரசு ஏதேனும் நல்கைத் தந்திட வேண்டும் என்று அ.சுப்பையா
முயன்றார். அதற்காக சி.சுப்பிரமணியம் உடன்வர அ.சுப்பையா, அன்று கல்வி அமைச்சராக இருந்த
டாக்டர் வி.கே.ஆர்.வி. இராவை டெல்லி யில் சென்று சந்தித்தனர். அவர் தமிழ் வளர்ச்சிக்கு
ஐந்தாண்டு களுக்குத் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாயிலிருந்து
செலவிடுக என்று கூறிவிட்டார். அன்று வி.கே.ஆர்.வி.இராவ் நடந்துகொண்ட முறை எரிச்சல்
ஏற்படுத்தியதாகவும் அ.சுப்பையா கூறினார். வி.கே.ஆர்.வி. இராவ் நேரத்திற்கேற்ப மனம்
மாறும் நிலையினர். அறிஞர் களுக்கு இயற்கையாகவே ஏற்படும் பெரும் சினமும் அதன்பின்
சினத்தணிவும் அவரிடமுண்டு. ஆனால் மொழி வளர்ச்சியில் நல்லெண்ணம் உடையவர். தாமே வகுத்துக்
கொண்ட திட்டப்படிச் செயல்படுபவர். பிறர் கூறுவதை அனுசரிப்பது மிகவும் குறைவு. எனினும்
அவரைக் கண்ட பின்னரும் அதிக ஆதரவு கிடைக்கவில்லையே என்று சுப்பையா வருந்தினார்.
பன்னாட்டுத் தமிழாய்வு குழுவுடன் நான் கொண்ட தொடர்பு படிப்படியாகக் குறைந்தது. பாரீசில்
நடந்த மூன்றாம் உலக மாநாட்டின் பின் அந்தத் தொடர்பு அறவே குறைந்துவிட்டது. உள்ளேயிருந்து
ஒரு நிறுவனத்தின் அமைப்பை எதிர்ப்பதைவிட அதனை விட்டு விலகுவதுதான் என் வழக்கம். எனவே
1970ஆம் ஆண்டுவாக்கில் என் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் விலகிக் கொண்டேன். அதன் பின்னர்
டாக்டர் மு.வரதராசனார் ஈடுபடுத் தப்பட்டார். தனிநாயக அடிகளும் தொட்டுத் தொடாமலும் அதில்
தொடர்ந்தார்.
பாரீசில் நடந்த உலகக் கீழ்த்திசை மாநாட்டில் அடிகளைச் சந்தித்த போது மிகவும் தன்னம்பிக்கை
இன்றி காணப்பட்டார். தமிழாய்வு நிறுவனம் வேறொரு வழியில் இயங்குவது பற்றியும்
குறிக்கோளனைத்தும் நிலைகுலைந்து போவதையும் கூறினார். அப்போதுதான் யாழ்ப்பாணத்தில்
வாழ்வதாகவும் நீரிழிவு நோய் இருப்பதாகவும் பல குருக்கள்மார் முதுமையில் சித்த பிரமையால்
அவதிப்படுவது போன்று தாமும் அவதிப்படாமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். கேட்பதற்கு
வருத்தமாக இருந்தது. அவர் செய்த பெருந்தொண்டினைக் கூறி அவரைத் தேற்றினேன்.
1972ஆம் ஆண்டில் திராவிட மொழியியல் கழகம் உருவா னது. எதிர்பாராத இடங்களிலிருந்து
ஆதரவு அதற்குக் கிடைத்தது. அது வலுவுற்றபோது இலங்கையிலிருந்த அடிகள் எழுதிய
எழுத்துக்கள் மிகவும் ஊக்கம் தந்தன. ஒருகடிதத்தில் “தன்னைச் சேர்த்துக் கொள்ளாதது ஏன்” என்று
கேட்டிருந்தார். “மொழியியல் ஆய்வில் மட்டும் ஒதுங்கி நிற்கும் அந்த நிறுவனத்தில் அடிகளைச்
சேர்ப்பது பொருந்தாது. அதுமட்டு மன்று நானிருக்கும் இடங்களில் எல்லாம் அடிகள் அல்லவா
இருக்கிறார் என்ற தேற்றினேன். அடிகள் வயது முதிர்வில் எழுதிய கையெழுத்துக் கடிதங்கள்,
தெளிவாக நடுக்கம் எதுவுமின்றி இருந்தன. அவருடைய அன்பு ஒரு துளியளவு கூட
குறைந்திடவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் இருவரும் சந்திப்பது மிகக் குறைவாகவே நடைபெற்றது.
திருவனந்தபுரத்தில் வாழும் மார் கிரிகோஸ் திருமேனியைச் சில ஆண்டுகளுக்கு முன்
சந்தித்தபோது தனிநாயக அடிகள் திருவனந்தபுரம் டையோசிஸில் சேர்ந்தவர் என்று கூறி
அதற்குரிய பின்னணியை விளக்கினார். இலங்கை பிஷப் இத்தாலியில் சென்று தனிநாயகம் படிக்க
அனுமதிக்காததால் திருவனந்தபுரம் மலங்கரை சர்ச்சின் டையோசிசில் உறுப்பின ராக்கி, அதன்
பின்னர் ரோமுக்குக் கல்வி பயில அனுப்பப் பட்டார் என்றார். பின்னர் மலங்கரை சர்ச்சிலிருந்து
பிரிந்து தூத்துக்குடி பிஷப் ரோச்சு அவர்கள் ஆதரவில் தூத்துக்குடி டையோறிஸில் தனிநாயக
அடிகள் சேர்ந்து பணி செய்தார் என்று நண்பர்கள் கூறினர். பிஷப் ரோச்சுதான் அடிகளுக்கு
ஆசிரியராகவும் ஆய்வுப் பணியிலும் கலந்துகொள்ளும் முழு உரிமையை அளித்தவர் என்றும் அவர்கள்
தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திற்கு நான் 1983இல் சென்றபோது அங்குள்ள அரசப் பிரதிநிதியின் தந்தை திரு
நேசையா அடிகளைப் பற்றியும் பல நுணுக்கச் செய்திகளைத் தெரிவித்தார். சிங்களவரின் ஆதிக்கம்
மேலோங்கியதும் தமிழர்களின் இன்னல்களைப் பொறுக்காத தனிநாயக அடிகள் அரசுக்கு எதிராகத்
தமது கருத்தைத் தெரிவித்தார் என்றும், காவல் கண்காணிப்பு மிகவே பல்கலைக்கழகத்தில் தான்
தங்கியிருந்த அறையைப் பூட்டி திரு. நேசையா கையில் சாவியைக் கொடுத்து நூல்களையும்
ஏனைய உடைமைகளையும் தனது வீட்டில் எடுத்துச் சென்று காக்குமாறு கூறிவிட்டு
தமிழகத்திற்குத் தனிநாயக அடிகள் வந்து தங்கிய செய்தியைத் தெரிவித்தார்.
அடிகள் தனிமனித சுதந்திரத்தைப் போற்றியவர். பிறர் சுதந்திரத்தைத் தடை செய்யும் எந்த
முயற்சியையும் எதிர்த்தவர். அதற்காக அவர் மேற்கொண்ட இன்னல்கள் சிறிதல்ல என்று பிறர் கூறக்
கேட்டேன். ஆனால் இலங்கை நிகழ்ச்சி பற்றி என்னிடம் எதுவும் சொன்னதில்லை.
1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற விருந்த உலகத் தமிழ் மகாநாட்டிற்குரிய
அமைப்புக் குழுவில் என்னையும் ஓர் உறுப்பினராகத் தமிழக அரசு நியமித்திருந்தது. அங்கும்
ஆய்விற்கும், பொதுமக்கள் பங்கெடுப்பதற்கும் இரு கூறாக மாநாடு நடத்த
முடிவெடுத்திருந்தனர். ஆய்வு மாநாடு மதுரைப் பல்கலைக்கழக வளாகத்திலும் பொதுமக்கள்
பங்கெடுக்கும் பிரச்சார மாநாடு தமுக்கம் மைதானத்தில் நடத்த ஏற்பாடாகி யிருந்தது.
1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த ஆய்வு மாநாட்டு அமைப்புக் குழுக் கூட்டத்திற்குத்
திரு.ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார். சென்னை இந்திரா நகருக்கு அருகாமையிலுள்ள
வெங்கடரத்தின நகரிலுள்ள ஓர் இல்லத்தில் அதன் அலுவலகம் இயங்கியது. அந்தக் கூட்டத் திற்கு
நான் பயணம் செய்த விமானம் காலந்தாழ்த்திச் சென்னை சென்று சேர்ந்ததால் சற்று நேரம்
கழித்துதான் கூட்டத்தில் பங்கேற்க முடிந்தது. என்னைக் கண்ட வ.சுப.மாணிக்கனார், “தனிநாயக
அடிகள் காலமாகிவிட்டதாக நேற்று ஒரு தந்தி வந்திருந்தது. நீங்கள் தெரிந்திட வேண்டும்
என்று அதனை இப்போதே கூறுகிறேன்” என்றார்.
ஒரு கணம் அந்தச் செய்தி யைக் கேட்டு நிலையிழந்துவிட்டேன்; நா வறண்டது. “என்னைவிட என்
அருகிலிருந்த அ.சுப்பையா அவர்கள் மிகவும் வருத்தமடைவார்” என்றேன். எனினும் கூட்டம்
நடந்து முடிந் தது. நான்காம் உலக மாநாடுகளுக்கு அடிகோலிய, வழிகாட்டி யாக விளங்கிய
அடிகள் இல்லாமல் மதுரை மாநாடு பொலி விழந்துவிடப் போகிறதே என்ற வருத்தம் என்னை
வாட்டியது. எனினும் மாநாடு தோற்றுவிடக் கூடாதே என்ற எண்ணத்தால் அன்றையக் கூட்டத்திலும்
அதன் பின்னர் நடந்த கூட்டத்திலும் பங்கேற்றேன். அதன்பின் நடந்த மதுரை மாநாட்டில், மூன்று
நாள் கலந்துவிட்டு ஊர்திரும்பினேன்.
தனிநாயக அடிகளின் உருவச் சிலையை கல்வியமைச்சர் செ.அரங்கநாயகம் மாநாட்டின் முதல்நாள்
திறப்பதாக அறிவிக் கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என் கடமை யாகக் கருதி
அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். ஈழத்து நண்பர்கள் பலர் வந்திருந்தனர். நண்பர் மதுரை
நெடுமாறன் அங்கிருந்தார். என்னைப் பேசுமாறு அவர் கேட்டுக்கொள்ள கல்வியமைச்சர் அழைத்தார்.
எதிர்பாராத அழைப்பு அது. Òஉலகோர் பலர் தமிழ்மொழியைப் போற்றுமாறு செய்த பெரும் தொண்டை
மேற்கொண்டவர் அடிகள். பிறரைத் தன் வயப்படுத்தும் தெய்வ சக்தியைக் கொண்டவர். தமிழுக்கு
ஏற்றம்; தமிழுக்கு நல்வாழ்வு ஆகியவற்றைத்தமது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டவர்Ó என்று
கூறியது நினைவிருக் கிறது. அதன் பின்னர்தான் மதுரைப் பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில்
கலந்துகொள்ளச் சென்றேன். அந்த மாநாடு நடப்பதற்குப் பெரும் பொருள் செலவாயினும் ஆய்வில்
பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுக் கட்டுரைகள் தெளிவாக்கவில்லை.
அந்த மாநாட்டில்தான் தமிழுக்கு என ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்கும் முடிவை
முதலமைச்சர் எம்.ஜி.இராமச் சந்திரனார் இறுதிநாள் முடிப்புச் சொற்பொழிவில் தெரிவித்தார்
என்று செய்தித்தாள்கள் தெரிவித்தன. அந்தப் பல்கலைக்கழகம் துவங்கியபோது முதன்மைச் செயலாளர்
க.திரவியம் Òதுணை வேந்தராகப் பொறுப்பு ஏற்க இசைவு தரவேண்டுமென்றுÓ தொலைபேசியில்
என்னை அழைத்துத் தெரிவித்தார். எதிர் பாராத அழைப்பு. அதன்பின்னர் முதலமைச்சர்
எம்.ஜி.இராமச் சந்திரனார் 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் தஞ்சை யில் நடக்கும்
பல்கலைக்கழகத் துவக்க விழாவில் கலந்திட வேண்டுமென்று அழைத்தார். எல்லாம் விரைவாக
எதிர்பாரா விதமாக நடந்தது. ஓரிரு ஆண்டுக்குள் பட்டமளிப்பு விழா நடத்த ஏற்பாடாகி
இருந்தது. அந்தப் பல்கலைக்கழக குழுக்கள் செய்யும் பரிந்துரைப்படி நடக்கும் நான், அன்று
விதிவிலக்காக அடிகளுக்குச் சிறப்பு முனைவர்பட்டம் அளிக்கும் தீர்மானத் தைக் கூறவே ஆளுநர்
குழுவும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டது. அடிகளின் மருமகன் மலேசியாவிலிருந்து வந்து அந்தப்
பட்டத்தை, மேன்மை தங்கிய ஆளுநர் குரோனாவிடமிருந்து பெற்றார்.
தமிழ்மொழி பழமையானது. அதன் சங்க இலக்கியம் ஏற்றமுடையது. அதன் பக்தி இலக்கியம் மனதை
உருக்கும் இயல்புடையது. சிலப்பதிகார காவியம் உலக இலக்கியங்களில் சிறப்பிடம் பெறத்தக்கது
என்று பிறநாட்டார் அறிந்திடச் செய்தவர் அடிகளாவார். உலக மாநாடு மலேசியாவில் நடத்திய
தும், அதன்பின்னர் சென்னை, பாரீஸ், யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் நடத்துவதற்கு
வழிகாட்டியாக நின்றவரும் அடிக ளாவார். அதன் பின்னர்தான் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம், இந்தி முதலிய மொழிகள் உலக மகாநாடுகளை நடத்த முயன்றன. அவற்றிற்கெல்லாம்
முன்னோடி அடிகளாவார். தமிழகம் அவர் செய்த பெருந்தொண்டை முழுமையாக உணர்ந்திடவில்லை.
அவரால் உலக அரங்கில் தமிழுக்கு ஏற்பட்ட சிறப்பை, இதுவரை விலை மதித்திட வில்லை.
தமிழ்நாட்டில் நல்ல தொண்டுகளை சீர்தூக்கிப் பாராட்டப் பலவாண்டுகளாகும். வளராத மனநிலை
உடையவர்கள் பலராகையால் அந்த மனநிலை மாற பலவாண்டு நீடித்திடும். ஆனால் விரைவில்
அந்தநிலை மாறாமல் இருக்காது. அன்று தனிநாயக அடிகளைச் சிரமேற்கொண்டு தமிழர் போற்றுவர்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 8:23:16 AM5/30/15
to brail...@googlegroups.com
கீழைத்தேயவியல் - தமிழியல்: பேராசிரியர் சேவியர்
தனிநாயகம் அவர்களின் வகிபாகம்
8
விவரங்கள்
எழுத்தாளர்: வீ.அரசு
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: நவம்பர்2013
C வெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2013
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற அகில உலக கீழைத்தேயவியல் மாநாடுகளிலும் பின்னர்
நடைபெற்ற ஐரோப்பிய கீழைத்தேய மாநாடுகளிலும் சமசுகிருத மொழி மற்றும் பண்பாடு தொடர்பான
ஆய்வுகள் நடைபெற்ற அளவிற்குத் தமிழ்மொழி மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகள்
முன்னெடுக்கப்பட வில்லை. இந்தியாவில் நடைபெற்ற கீழைத்தேய ஆய்வு மாநாடுகளிலும் தமிழியல்
தொடர்பான ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடைபெற்றன.
இந்நிலையை 1950-1980 இடைப்பட்ட காலத்தில் முழுமையாக மாற்றி, உலகம் தழுவிய அளவில்
தமிழியல் ஆய்வைப் பேரா. சேவியர் தனிநாயகம் வளர்த்தெடுத்தார். பேராசிரியர் நடத்திய
Tamil Culture மூலம் இவ்வகையான, தமிழியல் ஆய்வு நடைபெற்றது. அது உலகம் தழுவிய
அங்கீகாரத்தைப் பெற்றது. உலகத்தமிழ் மாநாடுகளில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்
ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இதன்மூலம் தமிழியல் என்பது உலகம் தழுவிய அறிமுகத்தைப் பெறும்
சூழல் உருவானது. சமசுகிருத மரபுக்கு இணையான தமிழ் மரபை அடிகள் உருவாக்கியதைப்
புரிந்துகொள்ளவேண்டும் என்று இக்கட்டுரை பதிவு செய்கிறது.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம்
வரை, ஐரோப்பிய நாடுகளில், கீழைத்தேயவியல் (Orientalism) குறித்துப் பேசப்பட்டது.
(இன்றையச் சூழலில் இச்சொல்லாட்சி வேறுபரி மாணத்தில் பேசப்படுகிறது.) அரபுநாடுகள்,
ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய பல்வேறு பகுதிகளின் தன்மைகளை கீழைத் தேயவியல் எனப்
புரிந்து கொண்டனர். இதில் இந்தியா என்ற நிலப்பகுதி குறித்துக் கூடுதல் கவனம்
எடுத்துக்கொண்டனர். ஜேம்ஸ் மில் எழுதிய The History of British India (1817),
G.W.F.Hegel ஏழுதிய The philosophy of History (1837)ஆகிய நூல்களில்
கீழைத்தேயவியல் குறித்த உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. பிரான்சு நாட்டில் இருந்த பல்வேறு
தரப்பு சார்ந்த புலமையாளர்கள், பதினைந்தாம் நூற்றாண்டு முதல் இப் பொருள் குறித்துப் பேசி
வந்தனர்.
இவ்வகையான உரையாடல் இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியான கல்கத்தாவில்
உருவாக்கப்பட்ட ஆசியவியல்கழகச் (1784) செயல்பாடுகளில் கூடுதல் கவனத்திற் குட்பட்டது.
பிரித்தானி யர்கள் உருவாக்கிய இராயல் கழகம் ((Royal Society) பதினெட்டாம் நூற்றாண்டின்
இடைக்காலம் தொடங்கிச் செல்வாக்குடன் செயல்பட்டது. அவ்வகை அமைப்புகளின் தொடர்ச்சியாகவே
கல்கத்தாவில் ஆசியவியல் கழகத்தைத் தொடங்கினர். இராயல் கழகத்தில் பணியாற்றிய வில்லியம்
ஜோன்ஸ் (1746-1794) போன்றவர்களே ஆசியவியல் கழகத்தை யும் உருவாக்கி நடத்தினர்.
சமசுகிருத மொழி குறித்த விரிவான கருத்துப்பரப்பலை இவர்கள் மேற்கொண்டனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சமசுகிருதம் குறித்த புரிதல் பதினெட்டாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலிருந்து நடைமுறையில் இருந்தது. பாரீஸ் நகரில் உள்ள இராயல் நூலகம் 1739இல்
கீழைத்தேய நூல்கள் குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டது. வீரமாமுனிவர் (1680-1746), சீகன்
பால்கு (1682-1719) ஆகியோர் அறிமுகப்படுத்திய தமிழ்மொழி, பண்பாடு குறித்த புரிதலும்
இருந்தது.
இவ்வகையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயல்பட்ட
புலமையாளர்களின் சொல்லாடலில் கீழைத்தேயவியல் இடம்பெற்று வந்தது. இதன் உச்ச வளர்ச்சியாக
அனைத்துலகக் கீழைத்தேயவியல் முதல் மாநாடு ((First International congress of
Orientalists) 1873இல் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சமசுகிருதம்
குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
திராவிட இயல் குறித்தும் ஓர் அமர்வு இருந்தது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த தமிழர்கள்
இம்மாநாட்டில் பங்குகொள்ளும் வாய்ப்புப் பெற்றனர். சமசுகிருத அறிஞரான ஜுல்ஸ்பிளாக் (Jules
Bloch:1880-1953) இம்மாநாட்டின் முக்கியப் புலமையாளராக இருந்தார். இவர்
ஃபிலியோசாவின் (1906-82) ஆசிரியர் ஆவார். இவ் வகையில் சமசுகிருதத்தை
முதன்மைப்படுத்திய அறிவுப்புல மாகக் கீழைத்தேயவியல் மேலைநாடுகளில் புரிந்துகொள்ளப் பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவ்வகையில் கீழைத்தேய வியல் மாநாடுகள் ஐரோப்பிய மண்ணிலே
தொடர்ந்து நடை பெற்றன. எடின்பர்க், கேம்ப்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்களில்
பணியாற்றியவர்கள் இந்த மாநாடுகளில் கலந்து கொண்டனர். ஆசிய, ஆப்பிரிக்க நிலப்பகுதிகளில்
இம் மாநாடுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் நடைபெறத்தொடங்கின. இலண்டன்
பல்கலைக்கழகத்தில் கீழைத்தேயவியல் - ஆப்பிரிக்க ஆய்வுப்பள்ளி (School of Oriental and
African Studies) 1916இல் உருவாக்கப்பட்டது. அகில உலக கீழைத்தேயவியல் முதல்
பதினான்கு மாநாடுகள் மேலைநாடுகளில்தான் நடைபெற்றன. 1917இல் பண்டாரக்கர் கீழைத்தேயவியல்
நிறுவனம் பூனாவில் உருவாக்கப்பட்டது. 1919இல்முதல் இந்திய - கீழைத்தேயவியல் மாநாடு
(First All India Oriental congress) நடைபெற்றது. உலக அளவில் நடைபெற்ற
மாநாடுகளும், இந்திய அளவில் நடைபெற்ற மாநாடுகளும் தனித்தனியே நிகழ்ந்தன.
இந்திய அளவிலான கீழைத்தேயவியல் மாநாட்டிலும் கூட 1946ஆம் ஆண்டு பேரா.ச.வையாபுரிப்
பிள்ளை தலைமையுரை நிகழ்த்திய கீழைத்தேயவியல் மாநாட்டில்தான் முதன் முறையாக திராவிட
மொழிகளுக்கான அமர்வுகள் நடைபெற்றன.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் (1939-45) அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் ஆசிய -
ஆப்பிரிக்க நாடுகளில் பண்பாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தத் தொடங்கினர். பழைய
பாரம்பரிய முறைகளிலிருந்து மாறி, புதிய நிறுவனங் களை உருவாக்கி அதன்மூலம்
நடைமுறைப்படுத்தத் திட்ட மிட்டனர். அவ்வகையில் 1945இல் உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்க
கல்வி - அறிவியல் பண்பாட்டு அமைப்பு (UNESCO). இவ்வமைப்பு கீழைத்தேயம் தொடர்பான
ஆய்வுகளை நிகழ்த் துவதற்குப் பொருளாதார உதவிகளை வழங்க முன்வந்தது.
இப்பின்புலத்தில் பிரித்தானிய கீழைத்தேயவியல் கழகம் (Association of British
Orientalists) 1946இல் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ நிறுவன உதவியுடன் அகில உலகக்
கீழைத்தேய வியல் கூட்டமைப்பு (International Union of Orientalists) 1951இல்
உருவாக்கப்பட்டது. 1953 இல் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பிரித்தானிய கீழைத்தேயவியல்
கழகத்தின் ஆறாவது மாநாடு வில்லியம் ஜோன்ஸ் அவர்களின் இருநூறாவது ஆண்டு நினைவாக
நடத்தப்பட்டது. இவ்வகையில் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம் ஆகிய
காலங்களில் கீழைத்தேயவியல் ஆய்வு என்பது சமசுகிருதவியல் மற்றும் சிறிய அளவிலான
திராவிடஇயல் என்ற போக்கில் நிகழ்ந்ததை அறியமுடிகிறது. தமிழுக்கான
இடம்கொடுக்கப்பட்டதாகக் கூறமுடியாது. தமிழ் குறித்த புரிதல் பெரிதும் இல்லாமல் இருந்தது.
மேற்குறித்த பின்புலத்தில் தமிழ்மொழியை உள்ளடக்கிய கீழைத்தேயவியல் ஆய்வுச்சூழல் எவ்வகையில்
இருந்தது என்பதைப் பின்வரும் வகையில் தொகுத்துக்கொள்ளலாம்.
1.
வில்லியம் ஜோன்ஸ் (1746-1794) கட்டமைத்த இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்திற்கு இணையாக எல்லீஸ்
(1777-1819) தென்னிந்திய திராவிட மொழிகள் குறித்த கருத்தாக்கத்தை 1916இல் முன்வைத்தார்.
2.
3.
1956 இல் கால்டுவெல் (1838 - 1891) திராவிட மொழி களின் ஒப்பிலக்கண நூலை
வெளிக்கொண்டு வந்தார். ஐரோப்பிய மரபில் அவர் பெற்ற மொழிநூல் (Philology) பயிற்சியால்,
திராவிட மொழிகள் குறித்த நூலை எழுத முடிந்தது.
4.
5.
தாண்டவராயப்பிள்ளை எனும் சைவரின் மகனான சாமுவேல் பிள்ளை கிறித்தவத்தைத் தழுவினார். இவர்
கிரந்த மந்தண கூடம் (Tamil Museum and Review of Philology) என்ற அமைப்பை
நிறுவினார். இந்நிறுவனத் தின் மூலம் 1858இல் தொல்காப்பிய - நன்னூல் என்னும் நூலைப்
பதிப்பித்தார். முதன்முதல் தொல்காப்பிய எழுத்து - சொல் அதிகாரங்களை அச்சுக்குக் கொண்டு வந்தார்.
6.
7.
1903இல் தமிழகத் தொல்லியல் கழகம் (The Tamil Nadu Archeological Society) என்ற
அமைப்பு திருச்சியில் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின் வெளியீடுதான் The Tamilian
Antiquary . இவ்வமைப்பு தமிழ் தொல் லிலக்கியம், மொழிநூல், தொல்லியல், கல்வெட்டு,
காசுஇயல், இலங்கையை உள்ளடக்கிய தமிழ் வரலாறு - மொழி - இலக்கியம் - தத்துவம்
ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்வதாக அறிவித்தனர்.
8.
9.
மதுரைத்தமிழ்ச்சங்கம் (1901) உருவாக்கப்பட்டு, “செந்தமிழ்” (1902) மூலம் சிரத்தையான
ஆய்வுகளும் பதிப்பு களும் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1905ல் சைவ சித்தாந்த சமாஜம்
உருவாக்கப்பட்டு, தமிழியல் தொடர்பான ஆய்வுகளுக்குக் கால்கோளிட்டனர்.
மேற்குறித்த நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த காலங்களில் பிரித்தானியர்கள் மூலம் கண்டறியப்பட்ட
தமிழ் தொல்லெழுத்தியல் (Paleographic), கல்வெட்டியல் (Epigraphy) காசுஇயல்
(Numismatics) தொல்லியல் அகழாய்வுகள் (Excavations) ஆகியவை பல்வேறு புதிய புதிய
வரலாற்றுத் தகவல்களைப் பெற அடிப்படையாக அமைந்தன. மேலும், சுவடிகளிலிருந்து தொல்பழம்
இலக்கியங்கள், இலக்கணங்கள் பதிப்பிக்கப் பட்டன. அவை வெளிப்படுத்திய உலகம் புதியது. சிந்து
சமவெளி அகழாய்வு புதிய உலக நாகரிக எச்சங்களை உலகுக்கு அறிவித்தது. அது திராவிட
இயல் பாரம்பரியத்தைச் சார்ந்தது என்னும் கருத்து பெரும்பகுதியினரால் முன்னெடுக்கப்படுகிறது.
மேற்குறித்த பின்புலத்தில் திராவிடமொழிகள், குறிப்பாகத் தமிழ்மொழி பேசிய இனக்குழுவின்
தொன்மையான வரலாறு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய வரவாகக்
கிடைத்தது. இத்தன்மைகள் 1873முதல் நடைபெற்று வரும் அகில உலக அளவிலான கீழைத்தேய
மாநாடுகளிலோ, 1919 முதல் நடைபெற்றுவரும் இந்தியக் கீழைத்தேய மாநாடுகளிலோ
உரையாடலுக்கு உட்பட்டதாக அமையவில்லை.
1946இல் நடைபெற்ற இந்தியக் கீழைத்தேய வியல் மாநாட்டில், பேரா.ச.வையாபுரிப்பிள்ளை தலைமை
உரையில்தான் முதன்முதல் இத்தன்மை குறித்த கருத்துநிலை முன்வைக்கப்படுகிறது.
கி.பி.1750-1950 என்ற இருநூறு ஆண்டுக்காலப் பின்புலத்தில் திராவிட இயலின் ஒரு
சிறுபகுதி யாகத் தமிழ் குறித்த பேச்சு இருந்தது. இந்தியா எனில் சமசு கிருதம் என்னும்
கருத்துநிலை ஐரோப்பிய - அமெரிக்கர்களால் கட்டமைக்கப்பட்ட கீழைத்தேயவியலின் அடிக்கருத்தாக
அமைந்திருந்தது. இந்நிலையை மாற்றும் செயல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி
இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் வேறு பரிமாணம் பெறும் வாய்ப்பு உருவானது.
தமிழ்மொழி தொடர்பான புரிதல்கள் உலக ஏற்புடைமைக்கு ஒரு நூறாண்டு காலம் பிடித்தது.
இந்தப் பின்புலத்தில் பேரா.சேவியர் தனிநாயகம் (1913-1980) அவர்களின் “தமிழியல்” எனும்
புதிய கட்டமைப்பு குறித்த உரையாடலைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.
வகையில் தொகுத்துக் கொள்ள இயலும். அதன் மூலம் தமிழியல் ஆய்வு வரலாற்றில் பேராசிரியரின்
வகிபாகத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் உலகம் தழுவிய அளவில் கீழைத்தேயவியல்
உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதைப் போல், தமிழியல் வரலாறு உலகம் தழுவிய அளவில்
அறியப்பட்ட பாங்கை அறிய உதவும். இந்தப் பின்புலத்தில் சமகாலத் தமிழியல் வரலாற்றை யும்
புரிந்து கொள்ள இயலும். சமகால தமிழியல் ஆய்வு குறித்த பிரக்ஞைக்கு இவ்வுரையாடல் மிக
அவசியமாகிறது.
பேராசிரியர் சேவியர் தனிநாயகம் இந்தப்பின்புலத்தில் அவர்களது தமிழியல் மற்றும்
தமிழியல்ஆய்வைப் (Tamilia and Tamilology) புரிந்துகொள்ள கீழ்க்காணும் வகையில்
தொகுத்துக் கொள்வோம். இதனை இரண்டு அடிப்படைகளில் புரிந்து கொள்வது அவசியம். அவை வருமாறு:
1.
தமிழ்ச்செவ்விலக்கியம், இலக்கணம் ஆகியவை உலக வரைபடத்தில் எத்தகைய இடத்தைப்பெறத்
தகுதியுடை யவை; அவை அறியப்படாமலும் அங்கீகரிக்கப்படா மலும் இருக்கும் மரபுகள்; இதைப்
போலவே தமிழர் அறமரபு, தத்துவ மரபு ஆகியவை உலகத்தில் உள்ள பிற தேசிய இனங்களின்
மரபுகளோடு கொண்டிருக்கும் உறவு, உலகிற்கு அறிவிக்கப்படாமலும் அறியாமலும் இருக்கும் தன்மை.
2.
3.
மேற்குறித்த தமிழியலை, வளர்ச்சியடைந்த காலச் சூழலில், உலக நிகழ்வாகக் கட்டமைக்கும் செயல்
பாடுகள் எவை? அதனை எவ்விதம் நிகழ்த்துவது என்பதற்கான அடிப்படை வேலைத்திட்டங்கள்,
வெளியீடுகள், நிறுவனங்கள் ஆகிய பிற.
4.
மேற்குறித்த இருநிலைகளிலும் பேரா.சேவியர் தனிநாயகம் அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு
செய்யவேண்டிய தேவை, அவரது நூற்றாண்டு தொடர்பான விழாக்கள், கருத்தரங்குகள், ஆய்வுகள்
ஆகியவற்றின் முதன்மைப் பொரு ளாக அமைய வேண்டும். இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழலுக்கு அது
ஏதோவொரு வகையில் விழிப்பூட்டுவதாக அமையலாம்.
பேரா.சேவியர் தனிநாயகம் என்னும் தனிநாயகம் அடிகள் இளமையில் கிறித்தவ சமயம் சார்ந்த
படிப்பிலும் ஈடுபாட்டிலும் வாழ்ந்தவர். கிறித்தவ சமயத் தொடர்பு அவருக்கு உலகம் தழுவிய
தொடர்பை உருவாக்கித் தந்தது. உலகம் முழுவதும் பயணம் செய்து அவர்பெற்ற அநுபவங்களும்
பயிற்சியும் பிற்காலங்களில் தமிழியல் துறை சார்ந்த ஆய்வுப் புலத்தைக் கட்டமைக்க
அடிப்படையாக அமைந்தது.
என் இருபத்தோராவது ஆண்டில் ஐரோப்பாவிற்கு நான் முதல் முதல் செல்ல நேரிட்டது. ஐந்து
ஆண்டுகள் ஐரோப்பா விலும் ஈராண்டுகள் இங்கிலாந்திலும், ஓராண்டு வட அமெரிக்கா தென்
அமெரிக்காவிலும், ஒன்பது ஆண்டுகள் மலேசியாவிலும் வாழ்ந்துள்ளேன். மேற்கூறிய பயணங்க ளோடு
மத்திய ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா முதலிய பாகங்களில் பன்முறை
சென்றிருக்கின்றேன். பல காரணங்களின் பொருட்டு உலகின் பல நாடுகளில் கல்வி பயின்றும்,
ஆராய்ச்சியில் ஈடுபட்டும் தமிழ்த்தூது நிகழ்த்தியும் வந்துள்ளேன். (ஒன்றே உலகம்: தனிநாயகம்
அடிகள்: 2012: 18)
1945இல் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவரானது முதல்
1980இல் அவரது மறைவு வரை சுமார் ஐம்பது ஆண்டுகள் தமிழியல் தொடர்பான பணிகளில் தம்மை
ஈடுபடுத்திக்கொண்டார். இதன்மூலமே மேலே குறித்தவாறு தமிழியலை வளர்த்தெடுத் தார். 1952
இல் அவர் உருவாக்கிய Tamil culture இதழ் மூலம், அவர் கட்டமைக்க விரும்பிய தமிழியல்
ஆய்வு என்பது, உலக அளவில் நடைபெற்று வரும் கீழைத்தேயவியல் எனும் சொல் லாடலில் தமிழின்
இடத்தை எவ்வகையில் மதிப்பீடு செய்வது என்பதாக அமைகிறது. தமிழ் இலக்கண - இலக்கிய மரபு
என்பது உலக இலக்கிய மரபில் பெறுமிடத்தைப் பதிவு செய்ய திட்டமிட்டார். இதற்கு அவர்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பெற்ற பயிற்சி உதவியது. எம்.லிட்., பட்டம் பெறுவதற்காக,
தமிழ்ச் செவ்விலக்கிய மரபில் உள்ள இயற்கை யின் இடத்தை உலக இலக்கியங்களில் பேசப்படும்
இயற்கை மரபுகளோடு இணைத்து வெளிப்படுத்தும் பணியைத் தொடங்கினார்.
தமிழ்ச் செவ்விலக்கியங்கள், இயற்கை மரபை எவ்வகையில் இயல்பான வாழ்க்கை மரபாகக்
காட்டுகின்றன; செவ்விலக் கியப் பாடல் மரபு என்பதே இயற்கைசார் கவிதை மரபு; காலந்தோறும்
இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் செவ் விலக்கிய இயற்கை மரபாக அமைகிறது; வட்டாரம்
சார்ந்த இயற்கை மரபுகள் எவை; உலக இலக்கியங்கள் காட்டும் இயற்கை மரபுகளுக்கும் தமிழ்ச்
செவ்விலக்கியங்களுக்கும் உள்ள உறவு ஆகியவற்றைத் தமது ஆய்வுப் புலத்தின் மூலம் வெளிக்கொண்டு
வந்தார். “Landscape and Poetry” என்னும் அவரது தமிழ்ச்செவ்விலக்கியம் பற்றிய ஆய்வு,
உலக மரபில் தமிழ்ச் செவ்விலக்கியம் பெறுமிடத்தை மதிப்பீடு செய்வதாக அமைகிறது. இதனை
அவர் வெளிப்படுத்தும் முறை பின்வரும் வகையில் அமைகிறது.
இன்று நம் தமிழ் நாட்டிற்கு வேண்டியவர் யாரெனின் ஆன்றமைந் தடங்கிய கொள்கைச் சான்றோராகிய
ஆராய்ச்சியாளர் பலரே. உலகின் பல்வேறு நாடுகட்குச் சென்றதன் பயனாகவும், பிற மொழிகளையும்
அவற்றின் இலக்கியங்களையும் ஒருவாறு கற்றறிந்ததன் பயனாகவும், தமிழிலக்கியம், தமிழ்ப்பண்பு,
தமிழ்க் கலை, தமிழ் வரலாறு முதலியவற்றை உலகில் எவ்வளவிற்குப் பரப்பவேண்டுமென்று, ஒரு
சிறிது உணர்ந்துள்ளேன்.
ஹோமரின் ஒடிசியையும், வெர்ஜிலின் இலியதையும் மக்கள் போற்றுவது போல், இளங்கோவடிகளின்
சிலப்பதிகாரத்தை - ஒப்புயர்வற்ற முத்தமிழ்த் தொடர்நிலைச் செய்யுளை, உலகம் போற்றுமாறு நாம்
செய்தல் வேண்டும். கொன்பூசியஸ், செனக்கா முதலாய நீதி நூல் ஆசிரியர்களை உலக மாந்தர்
எங்ஙனம் அறிந்து படிக்கின்றனரோ, அங்ஙனமே திருவள்ளுவரையும் அவர்கள் அறிந்து படிக்குமாறு
நாம் செய்வித்தல் வேண்டும். சாபோ, எலிசபெத் பிரௌனிங், ஷேக்ஸ்பியர் முதலானோரின் காதற்
பாக்களை மக்கள் காதலித்துப் படித்து இன்புறுவதே போல், நம் அகத்துறை இலக்கிய நூல்களையும்,
அன்னார் படித்து இன்புறும் புதிய நாள் உதிக்க வேண்டும். உலக இலக்கியத் திரட்டு (World
Classics) என்னும் பெருந்தொகை நூல்களில், நம் இலக்கிய நூல்களும் கீழ்த்திசைக் கண்ணுமுள்ள
பல்கலைக்கழகங்கள், தமிழ்க் கலைகளின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துமாறு செய்வித்தல்
வேண்டும். (சத்திய வேத பாதுகாவலன்: யாழ்ப்பாணம் 1951: தமிழ்த்தூது: கட்டுரைக்கொத்து:
ஐந்தாம் பதிப்பு:1998:29)
பேராசிரியர் வெளிப்படுத்தும் இப்பார்வை, உலகச் செவ்விலக்கிய மரபில் தமிழின் இடத்தைப்
பதிவு செய்வதாக அமைகிறது. இவ்வகையான மரபை முன்னெடுக்கும் அவசியம் உருப்பெற்றதற்கான
பின்புலத்தையும் மேற்குறித்த கட்டுரை யின் தொடக்கத்தில் பேராசிரியர் கூறுவது பின்வருமாறு:
இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்குமின். Discovery of India ஏன்றும், History
of Indian Literature என்றும், பலபடப் புனைந்து வெளிவரும் ஏடுகளை விரித்துப்
பார்மின். மாக்ஸ் முல்லர், வின்றர்னிட்ஸ் போன்றவர் முதலாய், வடமொழி இலக்கியத்தின்
பெருமையையே விரித்துக் கூறுவர். அவ்விந்திய இலக்கியங்களின் வரலாற்றிலே தமிழ் இலக்கியத்
தைப் பற்றியோ, திராவிட நாகரிகத்தைப் பற்றியோ, ஒரு சொல்லேனும், ஒரு குறிப்பேனும், ஒரு
கருத்தேனும் காணக் கிடையா.
இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என அவர்
மொழிவனவெல்லாம் திராவிடப் பண்பு, திராவிட நாகரிகம், திராவிடக் கலைகள், திராவிட
மொழிகள் இவற்றையே அடிப்படையாகக் கொண் டவை. ஆயினும், பல்லாண்டுகளாக, நடுவுநிலை
கடந்தோர் பலர், இவ்வுண்மையை மறைத்தும், திரித்தும், ஒழித்தும் நூல்கள் யாத்தமையின், இன்று
இவ்வுண்மையை எடுத்துக் கூறுவது தானும், மக்கள் மனத்தில் ஐயம் விளைப்பதாக இருக்கின்றது.
அங்ஙனம் எடுத்துக் கூறுதற்குத் தானும் பெரிதும் மனத்துணிவு வேண்டற்பால தாயிற்று.
தமிழராகிய நாமும், இந்திய மொழிகளிலே தானும், நம் தமிழை பற்றிய உண்மை களை இதுகாறும்
கூறினேம் அல்லேம். (மேற்குறித்த நூல்:1998:16,17)
தமிழ்ச் செவ்விலக்கிய மரபு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் கண்டறியப்பட்டது.
1940இல் பேரா.ச. வையாபுரிப்பிள்ளை அவர்களின் Ôசங்க இலக்கியம்Õ - அகராதி முறையில்
சார்ந்த பதிப்பு வெளிவந்த நிலையில், அம்மரபு நிலைபேறு கொண்டது. இதனை உலகில் பரவலாக
அறியப் படும் நோக்கில் பேரா.சேவியர். தனிநாயகம் செயல்பட்டிருப் பதைக் காண்கிறோம்.
உலக இலக்கிய மரபில் தமிழ் இலக்கிய மரபின் இடத்தைப் பதிவுசெய்யும் முயற்சியாக இவரது
செயல்பாட்டைப் புரிந்துகொள்ளும் தேவையுண்டு. இம்மரபு பின்னர் பேரா.க.கைலாசபதி (Tamil
Heroic Poetry) போன்ற பலரின் ஆய்வுகளால் நிலைபேறு கொண்டது. இவ்வுரையாட லுக்கான
தொடக்கப் புள்ளிகளைப் பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களிளின் ஆய்வில் காணலாம்.
தமிழ்ச் செவ்விலக்கிய மரபு உலக இலக்கிய மரபோடு கொள்ளும் தொடர்பைப் போல், தமிழ் நூல்கள்
காட்டும் அறமரபும், தத்துவார்த்த மரபும் உலக அறம் மற்றும் தத்துவ மரபுகளோடு தொடர்பு
கொண்டிருப்பதைத் தமது பல்வேறு சொற்பொழிவுகளில் வெளிப்படுத்தியுள்ளார். இவர் திருவள்ளுவர்
குறித்து நிகழ்த்திய சொற்பொழிவில் இதனைப் பதிவு செய்துள்ளார். கிரேக்க ஒழுக்கவியல்,
உரோமிய ஒழுக்க வியல், புத்தரின் ஒழுக்கவியல் ஆகியவை திருக்குறளில் இடம் பெறுவதை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவில் பதிவு
செய்துள்ளார். பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் அறம் மற்றும் தத்துவ மரபுகளோடு
திருவள்ளுவரின் கருத்து களை இணைத்து வெளிப்படுத்தியுள்ளார்.
சாக்ரெட்டிஸிற்கு (கி.மு.470 - 399) முன்னிருந்த சொபிஸ்டர் (shophists) என்போர்,
ஒழுக்கமென்பது சமூக வாழ்வைத் தருமத்திற்கேற்றவாறு இனிது ஆற்றுப்படுத்தும் ஒரு கருவி
யென்றே கருதினர். ஒவ்வொருவனும் தன்னாலியன்றவாறு தான் விரும்பிய இன்பங்களைத் துய்த்தல்
கூடும் என்றும் விளம்பினர். சாக்ரெட்டின் தருணத்திற்கேற்றவாறு ஒழுக்கம் மாறும் எனும்
இவர்களின் கொள்கையை ஆதரிக்கவில்லை.
இன்பமே ஒழுக்கத்தின் நோக்கமாயினும் அவ்வின்பம் மனத்தின் (பகுத்தறிவின்) இன்பமாக (Rational
Pleasure) இருத்தல் வேண்டும் என்று திருத்திக் கூறினார். அரிஸ்டாட்டில் தன் மகள்
நிக்கோமச்சுக்கென எழுதிய நிக்கோமக்கீயன் ஒழுக்க இயல் என்னும் நூலில் இன்பமே (Happiness)
ஒழுக்கத்தின் நோக்கமென்றும், மனநலத்துடன் (Goodness) ஒன்றி இயங்க வேண்டுமென்றும்
எழுதியுள்ளார். பகுத்தறிவால் மக்கள் அடையும் இன்பத்தைத் திருக்குறளும் அறத்தின் நோக்கமாக
இயம்புகின்றது.
செயல்கள் இன்பம் பயப்பன என்றும் இனிது என்றும், உவப்பன என்றும் அமைவதைக் காண்க. அறத்தான்
வருவதே இன்பம் - 39/ தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து/மன்னுயிர்க் கெல்லாம் இனிது
- 68/ ஈத்து உவக்கும் இன்பம் அறியார் - 228/தாம் இன்புறுவது உலகின்புறக்
கண்டு/காமுறுவர் கற்றறிந் தார் - 399/உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் - 394/இருள்நீங்கி
இன்பம் பயக்கும் - 352/இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந்/துன்பத்துட் டுன்பங் கெடின் -
854. இக்குறட்பாக்களில் கூறப்பெறும் இன்பம், ஐம்புலன்கள் பெறும்இன்பம் ஒழிந்த இன்பம், புதல்வர்
மெய்தீண்டியதால் வரும் இன்பம், அன்னாரின் சிறுகை அளாவிய கூழை உண்பதால் வரும் இன்பம்,
அன்னாரின் மழலைச்சொற் கேட்பதால் வரும் இன்பம் ஆகியவை புலன்களின் இன்பம்.
தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தாயின் உவகை போன்ற இன்பம், புலனிற்கும் உயிருக்கும்
இன்பம். ஆயினும் மனநலம் (நிஷீஷீபீஸீமீss) அறத்தால் வரும் இன்பம், உள்ளத்தின் உவகை ஆகிய இவையே
அறத்தின் நோக்கமும் பயனுமாம். (திருவள்ளுவர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்:1967)
உலகின் தொல்பழம் பண்பாடு மற்றும் நாகரிக வளர்ச்சி மரபுகள் தமிழ் மரபுகளோடு உள்ள தொடர்பு
குறித்துப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் பலரும் பதிவு செய்தாலும்,
கிரேக்கமொழி, இலத்தீன் மொழி ஆகியவற்றைக் கற்றறிந்த பேராசிரியர். சேவியர் தனிநாயகம்
அவர்களின் பதிவை வேறு கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது அவசியம். இத்தன்மைகள் குறித்து
மேலும் மேலும் உறுதிப்பட்ட சான்றாதாரங்களாக இதனைக் கருதலாம்.
ஒரு தேசிய இனத்தின் தனித்த அடையாளங்களாக, அவ் வினத்தின் இலக்கியம், அறம், தத்துவம்
ஆகியவற்றைக் காண்பதோடு அவற்றை அவ்வினம் எவ்வகையில் பதிவு செய்கிறது; அடுத்தடுத்த
தலைமுறைகளுக்கு எப்படி எடுத்துச் செல்கிறது; ஆகிய பிற உரையாடல்களை அவ்வினத்தில்
காணப்படும் கல்வி தொடர்பான ஒழுகலாறுகள் வழியாகக் கண்டறிய முடியும். செவ்விலக்கிய
ஆய்வைத் தமது எம்.லிட். ஆய்விற்காக மேற்கொண்ட பேராசிரியர், முனைவர் பட்ட ஆய்வில்
தமிழர்களின் கல்வி மரபு குறித்த ஆய்வை மேற் கொண்டார்.
Tamil Culture இதழில் தமிழ்க்கல்வி மரபு குறித்த கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது
ஆய்வேடு அண்மையில் நூல்வடிவம் பெற்றுள்ளது (Educational Thought in Ancient Tamil
Literature : பாரதிதாசன் பல்கலைக்கழகம்:திருச்சி:2010) செவ்விலக்கியங்களில் பேசப்படும்
பாணர்கள், புலவர்கள், பௌத்த- சமணத் துறவிகள் ஆகியோரை அடிப்படையாகக் கொண்டு தமிழ்க்கல்வி
மரபை ஆய்வு செய்துள்ளார்.
தமிழ் மரபிற்கென உரிய கல்வியின் தனித்தன்மைகளை உலகில் உள்ள பிற தொல்மரபுகள் சார்ந்த
கல்வி மரபுகளோடு இணைத்துப் பேசியுள்ளார். பேராசிரியர் சேவியர் தனிநாயகம் மட்டும் தான்
தமிழர்களின் இம்மரபு குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். உலகக் கல்வி ஒப்புமை மரபில்
தமிழ்க்கல்வியின் இடத்தை மதிப்பீடு செய்துள்ளார். ஒப்பியல் கல்வி (Comparative
Education) என்னும் புலத்தில் இவரது பங்களிப்பு தனித்து எண்ணத் தக்கது. பழந்தமிழ்
செவ்விலக்கியங்கள் புலப்படுத்தும் கல்வி தொடர்பான அவரது பதிவு பின்வரும் வகையில் அமைந்
துள்ளது.
இச்செவ்விலக்கியங்களின் மதிப்பு வரலாற்று ஆவணங் களின் பதிவு என்பது மட்டுமல்ல.
இவ்விலக்கியங்களைப் புறக்கணிப்பதால் பண்டைய இந்தியா குறித்த பல்வேறு முடிவுகளும்
முழுமையற்றதாகவும் ஒருதலைப்பட்சமானதாக வும் அமைந்துவிடுகிறது.
சேரோகின் (Sorokin) னின் சமூக, பண்பாட்டாய்வுகளும் சரி, சாட்விக்ஸ் (Chadwicks) இன்
இலக்கிய ஆய்வுகளும், டாயன்பீ (Tonybee) யின் வரலாற்றாய்வுகளும் ப்ருபச்சர் மற்றும் வுடி
(Brubac)யின் கல்வியியல் ஆய்வுகளும் கூடத் துல்லியமற்ற, முழுமையற்ற தகவல்களையே உள்ளடக்
கியிருக்கின்றன.
ஏனெனில் அவர்கள் இவ்விலக்கியங்களை யும் வேறெங்கும் காணவியலாத அதன் இலக்கிய வகைமை
களையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே காரணம். பண்டைய இந்தியக் கல்வி ஆய்வுக்கான
ஆதாரங்களைக் கண்டடைய பழந்தமிழ்ச் செவ்விலக்கியங்கள் வரைபடமற்ற கடலையும் அளந்தறியவியலாத
ஆழங்களையும் அளிக்க வல்லன. (பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் கல்வி: மொழி
யாக்கம்.ந.மனோகரன்.2009:28)
இவ்வகையில் தமிழகத்தின் செவ்விலக்கிய மரபுகள் உலகச் செவ்விலக்கிய மரபுகளோடு கொண்டுள்ள
பாங்குகளை இலக்கியம், அறம், தத்துவம், கல்வி ஆகிய மரபுகள் சார்ந்து உரையாடலுக்கு
உட்படுத்தி இருப்பதைக் காண்கிறோம். இம்மரபு உலக அளவில் அறியப்படவில்லை என்பதை உணர்ந்த
பேராசிரியர், அதற்காக அவர் மேற்கொண்ட செயல் பாடுகள் தமிழியல் ஆய்வை உலக வரைபடத்தில்
நிலைபேறு கொள்ளச் செய்தவை ஆகும். உலகப் பொது மரபிற்குள் அமைந்திருக்கும் தமிழியல், ஏன்
உலக அளவிலான தமிழியல் ஆய்வாக உருப்பெறவில்லை?
கீழைத்தேயவியல் ஆய்வோடு அது ஏன் இணையாமல் போயிற்று? ஆகிய பிற உரையாடல் களை
முன்னெடுத்தார். இதற்கான விளக்கத்தைப் பேராசிரியர் ஆங்கில மொழி வழியாகப் பின்வரும்
வகையில் பதிவு செய்துள்ளார்.
1.
1954-1966 காலங்களில் வெளிவந்த Tamil Culture இதழ்களில் இவரால் எழுதப்பட்ட
கட்டுரைகளும் இவரது முன்னெடுப்பில் வேறுபலரால் எழுதப்பட்ட கட்டுரைகளும் இதனை
வெளிப்படுத்துவதைக் காண லாம்.
2.
3.
1964இல் உருவாக்கிய உலகத்தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) வழியாக உருவாக்கப்பட்ட உலகத்
தமிழ் கருத்தரங்க மாநாடுகள் (Conference – Seminar) நடத்தியமுறை மற்றும் அதன்மூலம்
வெளிவந்த ஆய்வுக் கட்டுரைத் தொகுதிகள், அவற்றில் இவரது கட்டுரைகள் வெளிப்படுத்தும்
கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படை யில் புரிந்து கொள்ளமுடியும்.
இத்தன்மைகளைப் புரிந்து கொள்ள பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களைத் தலைமை
ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த (Journal of Tamil Studies ) முதல் இதழில்
(ஏப்ரல்:1969:1:1) பகுதி இரண்டில் உள்ள பதிவுகள் அடிப் படையான ஆவணங்களாக அமைகின்றன.
IATR அமைப்பின், அமைப்பு விதிமுறைகள், அகில உலகத் தமிழ் மாநாடுகள்
நடத்தப்பட்டமுறைகள், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்குவதற்கான அடிப்படை வரைவுகள்
ஆகிய பிற அந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன.
அதில் தமிழியல்ஆய்வு என்னும் தலைப்பில் அமைந்துள்ள செய்திகள், உலக வரைபடத்தில் தமிழியல்
ஆய்வை நிலைபேறு கொள்ளச் செய்வதற்கான அடிப்படைகளைக் கூறுகின்றன. பதினோரு பக்கம்
ஆங்கிலத்தில் அமைந்துள்ள அப்பகுதி, தமிழியல் ஆய்வில் அக்கறை உள்ளவர்கள் அவசியம் வாசிக்க
வேண்டிய பகுதி ஆகும். அதன் முதல் பகுதியின் மொழியாக்கம் கீழ்வரு மாறு அமைகிறது.
“உலகத்தில் உள்ள ஆய்வாளர்களிடத்தில் தமிழியல் ஆய்வு, அதற்குரிய கவனத்தை துரதிருஷ்டவசமாக
இன்னும் பெற வில்லை. நாற்பது மில்லியன் மக்கள் பேசும் இம்மொழியின் ஈராயிரம்
ஆண்டுகாலத்தொடர்ச்சியை, மிகக் குறைந்த அளவி லான பிறநாட்டு அறிஞர்கள் அறிந்துள்ளனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளில் பெரும் மாற்றங்கள் இல்லாமல் இம்மொழி தொடர்ந்து புழக்கத்தில் இருந்து
வருவதின் முக்கியத்துவம் விரிவாக அறியப்படவில்லை.
மொழியில் சில மாற்றங்களை மட்டுமே உள்வாங்கியுள்ள இன்றைய தமிழ் பேசுபவரும் பழந்தமிழ்
இலக்கியங்களை வாசிக்க முடியும். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஷேக்ஸ்பியர் மொழியைப்
புரிந்து கொள்வதற்கு, அவர்களுக்கு ஏற்படும் சிரமம் கூட தமிழ்ச் செவ் விலக்கியங்களை
வாசிப்பவர்க்கு இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் இலக்கணம், இன்று
வாழும் தமிழுக்கும் பெரியமாற்றங்களின்றி ஏற்புடையதாக உள்ளது.
1786இல் வில்லியம் ஜோன்ஸ், கிரேக்கம், இலத்தீன் ஆகிய பிறமொழிகளோடு சமசுகிருதத்திற்கு
உள்ள தொடர்பு குறித்துக் கூறினார். அதிலிருந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அறிஞர்கள்
இந்தியவியலில் மிகுந்த ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர். இந்தியவியல் என்றாலே சமசுகிருத
ஆய்வு என்று கருதும் மேலைநாட்டு ஆய்வாளர்களை நாம் குறைகூற முடியாது; ஏனெனில்
மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இந்தியவியல் என்றாலே சமசுகிருத ஆய்வுக்கான இருக்கையை
உருவாக்குவதாகக் கருதுகிறார்கள். தமிழ் மற்றும் திராவிட இயல் குறித்த ஆய்வை
மேலைநாட்டினர் தவிர்ப்பதற்கான காரணங்களை பிரஞ்சு நாட்டு இந்தியவியல் அறிஞர் பேரா.
ஃபிலியோசா பின்வருமாறு கூறுகிறார்.
1.
18ஆம் நூற்றாண்டு முதல் ஏற்பட்ட ஐரோப்பிய உறவுகள், கல்கத்தா நகரத்தோடு தொடர்புடையதாகவே
அமை கிறது; தமிழ்நாட்டோடு தொடர்புகள் இல்லை.
1.
தமிழ் என்பது இந்தி, வங்காளம், பஞ்சாபி, மராத்தி போலஒரு வட்டார மொழி என்று ஐரோப்பிய
அறிஞர்கள் கருதுகிறார்கள்.
1.
சமசுகிருத வழிப்பட்ட தங்கள் புலமைத் தளப் புரிதலுக் குத் தமிழும் உதவும் என்று ஐரோப்பிய
அறிஞர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு பண்பாடுகளுடன் தமிழுக் குள்ள உறவை ஐரோப்பிய
இந்தியவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லை”. (JOTS : Tamil studies
Vol.No.1.Part:II.1970 P.8-9 : மொழியாக்கம் : வீ.அரசு)
தமிழியல் ஆய்வு, உலகப் பரப்பில் இடம்பெறாமைக்கான காரணங்களை மேற்காணும் பதிவு மூலம்
அறிகிறோம். இத்தன்மை 1950களில் உணர்ந்து செயல்பட்டவர்களில் முதன்மையானவராக பேரா.சேவியர்
தனிநாயகம் அவர்களைக் கருதமுடிகிறது. 1952-1966 காலங்களில் Tamil Culture
நாற்பத்தைந்து இதழ்கள் வெளிவந்தன. அதில் சுமார் 350 கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழியல்
ஆய்வுகளை முதன்முதலாக ஆங்கிலமொழி வழி விரிவாகச் செய்த முதல் இதழ் இதுவே யாகும்.
உலகம் முழுவதும் உள்ள இந்தியவியல் அறிஞர்கள் தமிழியல் குறித்த புரிதலை உள்வாங்க இவ்விதழ்
அடிப்படை யாக அமைந்தது.
பேராசிரியர் பர்ரோ, எமனோ, கமில் சுவலெபில், ஃபிலியோசா ஆகிய பிறர் தமிழியல்
குறித்த ஆய்வில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டபோது இவ்விதழ் அப்பணியை வேறு தளத்திற்கு
வளர்த்தெடுத்தது என்று கூறலாம். உலக அளவில், யுனெஸ்கோ நிறுவனம், பண்பாட்டு
நடவடிக்கைக்கு உதவத் தொடங்கிய காலங்களில், தமிழியல் குறித்த கவனத்தை அவர்கள்
பெறுவதற்கான வாய்ப்பு Tamil Culture இதழ் மூலம் சாத்தியமாயிற்று. இவ்விதழுக்கு அன்றைய
தமிழக அரசு ஆதரவளித்த வரலாற்றையும் கவனத்தில்கொள் வது அவசியம். தமிழ் வளர்ச்சிக்
கழகத்தின் பொருளுதவி இவ் விதழுக்குக் கிடைத்தது. கீழைத்தேயவியலில் சமசுகிருதம் மட்டும்
அறியப்பட்ட சூழலில், தமிழியல் குறித்த புரிதலுக்கு இவ்விதழ் அடிப்படையாக அமைந்த
வரலாறு, தமிழியலுக்கு பேரா.சேவியர் தனிநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட வரலாறாகக்
கருதலாம்.
Tamil Culture இதழ்வழி உருவான புரிதலே 1964ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடைபெற்ற
உலகக் கீழைத்தேய வியல் ஆய்வு மாநாட்டில் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) உருவாக அடிப்படையாக
அமைந்தது. மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறைத்தலைவராக (1961-1969)
பேராசிரியர் பணியாற்றியதன் மூலம் உலக அளவிலான தமிழியல் ஆய்வை வளர்த்தெடுக்க
வழிகண்டதாக அமைந்தது. தமிழியல் ஆய்வு மன்றத்தின் முதல் ஆய்வு மாநாட்டை 1966இல்
கோலாலம்பூரில் நடத்தியதன் மூலம், அவ்வமைப்பிற்குச் செயல்வடிவம் கொடுக்க இவரால் முடிந்தது.
அந்த மாநாட்டில் படிக்கப் பெற்ற கட்டுரைகளின் இருதொகுதிகளைப் பேராசிரியர் பதிப்பித்து
கொண்டுவந்துள்ளார்.
தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா, சமூக வரலாறு, இலக்கியக் கோட்பாடுகள், இசை - நடனம் -
மற்றும் சிற்பவியல், மொழி - மொழியியல், மொழியாக்கம் ஆகிய தலைப்புகளில் இரு
தொகுதிகளிலும் (1968) வெளிவந்துள்ள கட்டுரைகள், உலக வரைபடத்தில் தமிழியல் ஆய்வை
எடுத்துச் செல்லும் பாங்கில் அமைந்துள்ளன. இம்மாநாட்டை ஒட்டி பேரா.சேவியர் தனிநாயகம்
அவர்கள் பதிப்பித்த இரு நூல்கள் முக்கியமானவை. அவை தமிழியல், உலகப் பரப்பில் பெற்
றிருக்கும் இடம் குறித்த கையேடுகளாக அமைகின்றன.
உலகம் முழுவதும் தமிழியல் ஆய்வு குறித்த தரவுகளைக் கொண்டுள்ள Tamil Studies Abroad
“ A Symposium (1968) எனும் நூல் ஆசிய ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில்
தமிழியல் ஆய்வு உருப்பெற்ற வரலாற்றைக் காட்டுவதாக அமைகிறது. 1968ஆம் ஆண்டுகளுக்குப்பின்
உருவான தமிழியல் ஆய்வு குறித்த கையேடு இன்று நம்மிடையே இல்லை. இவ்வகையான ஆய்வு
நிறுவனங்கள் வழி நடைபெற்ற ஆய்வுகள் A reference guide to Tamil studies : books
(1966) என்று பதிப்பித்தார். இதன் தொடர்ச்சியும் கூட இன்று நம்மிடம் இல்லை. இவர் செய்துள்ள
பணிகள் இன்று தொடரவில்லை என்பதன் மூலம், இவரது பணியின் முக்கியத்துவத்தை
உணரமுடிகிறது. மலேசியப் பல்கலைக்கழகத்தில் இவரால் உருவாக்கப்பட்ட ஆய்வுகள், உலகத்
தமிழியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.
உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் இனவியல் தொடர்பு, மொழிசார்ந்த தொடர்பு, பண்பாட்டுத்
தொடர்பு ஆகிய பலகூறுகளை ஆய்வு செய்வதில் பேராசிரியர் தனிக் கவனம் கொண்டிருந்தார்.
மூன்று உலகத்தமிழ் மாநாடுகளின் ஆய்வுக் கட்டுரைத் தொகுதிகளில் இடம்பெற்றிருக்கும் இவரது
கட்டுரைகள் மேற்குறித்தப் பொருண்மைகளில் அமைந்திருப் பதைக் காணமுடிகிறது.
எடுத்துக்காட்டாக, மூன்றாம் உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டுக் கட்டுரைத் தொகுதியில் இடம்
பெற்றுள்ள கட்டுரையின் பொருண்மை பின்வருமாறு அமைகிறது.
The study of contemporary Tamil Groups : A survey (Paris:1970) என்னும்
கட்டுரை, இன அடையாளத்தோடு உலகில் வாழும் தமிழர்கள், தாய்மொழியைத் தமிழாகக் கொண்ட
வர்கள், பண்பாட்டு அடிப்படையில் தமிழர்கள், தாங்கள் வாழும் பூமியைத் தாயகமாகக் கொண்ட
தமிழர்கள் ஆகிய அடிப்படைகளைக் கொண்டு, உலகில் வாழும் தமிழர்களை மதிப்பீடு செய்துள்ளார்.
சுமார் பதினெட்டு நாடுகளில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அவர்
நிகழ்த்தியுள்ள ஆய்வு, “உலகில் தமிழர்” என்னும் வரையறையைத் துல்லியமாகத் தருகிறது.
சிறுசிறு தீவுகளுக்கும் நாடுகளுக்கும் குடியேறிய 1800-1950 இடைப்பட்ட வரலாற்றை
பேராசிரியர் ஆய்வு செய்துள்ளார். இதன்மூலம் தமிழர்தம் அலைவு உழல்வு வாழ்வைப் (Diaspora)
புரிந்து கொள்ளமுடிகிறது. இவ்விதம் முதல் மூன்று மாநாட்டுத் தொகுதிகளிலும் இடம்
பெற்றுள்ள கட்டுரைகள் உலகில் தமிழர் என்ற புரிதலைப் பெறுவதற்கு அடிப்படையாக அமைகிறது.
பேரா.சேவியர் தனிநாயகம் குறித்துப் பேசும்போது, தவிர்க்க இயலாமல்
பேரா.வ.அய்.சுப்பிரமணியம் (1926-2009) குறித்த நினைவுகள் வருவது இயல்பு. அவர்
உருவாக்கிய அகில உலக திராவிட மொழியியல் பள்ளி, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழக புல
அமைப்புகள், திராவிடப் பல்கலைக்கழகம் ஆகியவை பேரா.சேவியர் தனிநாயகம் அவர்களின் கனவை
நினைவாக்க வல்லவை. 1969ஆம் ஆண்டில் மலேசியப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த
பேராசிரியர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராகத் தொடர்ந்திருக்க வேண்டும்.
தமிழியல் ஆய்வுக்கு அவ்வகையான “நல்லூழ்” வாய்க்காமல் போய்விட்டது. இதனை வெளிப்படுத்தும்
பேரா.வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் குறிப்போடு இக் கட்டுரையை முடிப்பது சரியாக இருக்கும்.
தமிழ் ஆய்வு நிறுவனத் திட்டம் சென்னையில் செயல் படுத்தப்பட்டது. மாறுபட்ட சூழ்நிலை
காரணமாகத் தனிநாயக அடிகள் மலேசியாவிலுள்ள பேராசிரியர் பதவியை விட்டு விலகி
விட்டார். அவரைப் புதிதாக அமையவிருக்கும் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக
நியமித்தால் மிகச் சிறப்பாக நடத்துவார்” என்பது எனது உறுதியான நம்பிக்கை, “ஆய்வில்
உனக்கு அடிகளை விட கூடுதல் அனுபவமும் உலகோர் ஒப்புதலும் உண்டு” என்று பன்னாட்டுத்
தமிழாய்வுக் கழகத்தில் பெரும் பொறுப்பு வகித்த நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு நாள் கூறினார்.
“எங்கள் நட்பு பலவாண்டுகள் நீடித்து வரும் ஒன்று, பல துறை அறிஞர்களைக் கவரும்
தெய்வசக்தியும் தமிழின் ஏற்றத்தைப் பல மொழியாளர்களிடம் கூறி ஒப்புதலைப் பெறும் வல்லமையும்
அடிகளிடம் உண்டு” என்று கூறி அவர்கள் சொற்களை மீண்டும் கூறக் கேட்க நான் விரும்பவில்லை
என்று தெரிவித்துவிட்டேன். மலேசியா பதவியை விட்டு அடிகள் விலகியபோது, சென்னை ஆய்வு
நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க அழைக்கப்படுவார் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. ஆனால்
நாளாவட்டத்தில் அந்த நம்பிக்கை குறைந்தது. நானும் அந்த நிறுவனப் பணியிலிருந்து மெள்ள
மெள்ள அகலத் துவங்கினேன். (வ.ஐ.சுப்பிரமணியம் கட்டுரைகள்:இலக்கணமும் ஆளுமைகளும், 2007:18)
சான்றாதாரங்கள்:

மாநாட்டு மலர்கள்

1966 Thaninayagam.S.Xavier & Others (Ed.) Proceedings of the First
international Conference - seminar of Tamil Studies, Kulalupur,
Malaysia, April 1966, Vol. I & II IATR-1968

1968 Asher.R.E (Ed.) Proceedings of the Second International Conference
- Seminar - Madras - India January 1968, Vol. I & II IATR 1971

1968 சுப்பிரமணியம், வ.ஐ. (பதிப்பு) இரண்டாவது உலகத்தமிழ் கருத்தரங்க நிகழ்ச்சிகள்,
மூன்றாம் தொகுதி, உலகத்தமிழாராய்ச்சி மன்றம், சென்னை 34, 1971,

1970 Thani Nayagam X.S.& Francis Gros (Ed.) Proceedings of the Third
international Conference - seminar of Tamil Studies - Paris 1970, French
Institute of Indology

1974 Vithiananthan .S. (Ed.) Proceedings of the Fourth international
Conference - seminar of Tamil Studies, Jaffna - Srilanka. Vol.II January
1974 IATR -1980

1974 வித்தியானந்தன்,சு.(பதி.) நான்காவது அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு
நிகழ்ச்சிகள், யாழ்ப் பாணம், சனவரி 1974, அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை,
கொழும்பு 7, 1977
இதழ்கள்

1897 Nallasami pillai. J.M (Editor), The Siddhanta Deepika or the light
of Truth, Vol.I.No.1, 1907 Asian Education services New Delhi. 1994

1907 Savariroyan.D.Pandit (Editor) The Tamilian Antiquary, Vol.I.No:1,
1907 Asian Educational Service. NewDelhi 2004

1952 Tamil Culture. X.S.Thaninayagam (Editor), A Quarterly Review
dedicted to the study and diffusion of Tamiliana, February.1952.Vol.1.No.1

1969 Journal of Tamil Studies : X.S.Thaninayagam. (Chief Editor).
Vol.I.No:1, April.1969

2012 அரசு.வீ., (சிறப்பாசிரியர்) மாற்றுவெளி, ஆய்விதழ் 11. காலின் மெக்கன்சி
சிறப்பிதழ், டிசம்பர்.2012
நூல்கள்

1919 Collins Mark (Ed.), Dravidic Studies, First Edition, 1919, Reprint
1974, University of Madras

1922 (No Author), Eminent Orientalists, - Indian - European - American
First Edition, 1922, Asian Educational Services, 1991

1942 Dandekar .R.N.(Ed.) Progress of Indic Studies, 1917-1942.
Bhandarkar Oriental Research Institute, Poona, India, First Edition,
1942, Second 1985

1956 Raghavan.V., Sanskrit and allied indological Studies in Europe,
Forward by Dr.A.L.Mudaliar, Vice-Chancellar,University of Madras,1956

2010 சுப்பிரமணியம் வ.அய்., பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் கட்டுரைகள்: இலக்கணமும்
ஆளுமை களும், தொகுதி - 2, அடையாளம், முதற்பதிப்பு 2007

2010 வையாபுரிப்பிள்ளை எஸ்., திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, அலைகள் வெளியீட்டகம்

1954 Thaninayagam .X.S. Landscape and poetry - A Study of Nature in
Classical Tamil Poetry, I.I.T.S., Chennai, 1997 (Reprint)

1966 Thaninayagam .X.S. (Ed.) A Reference Guide to Tamil Studies: Books,
Kulalumpur, University of Malaya Press, 1966

1968 Thaninayagam .X.S. (Ed.) Tamil Studies Abroad: A Symposium IATR-
Malaysia - 1968

2010 Thaninayagam .X.S. Educational Thought in Ancient Tamil Literature
(Thesis Submitted for the degree of Doctor of Philosophy (Arts) in the
University of London (1957), Bharathidasan university, Trichirappalli,
620 024, First Edition.2010

1950 தனிநாயகம் அடிகள்: ஒன்றே உலகம், தமிழ்ப் பேராயம், திரு இராமசாமி நினைவுப்
பல்கலைக்கழகம், தமிழ்நாடு, 2012

1999 தனிநாயகம் அடிகளாரின் சொற்பொழிவுகள், உ.த.ஆ.நி. முதல் பதிப்பு: 1999, சென்னை

1967 திருவள்ளுவர், சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1967

1952 தமிழ்த்தூது கட்டுரைக்கொத்து, உலகத்தமி ழாராய்ச்சி நிறுவனம், ஐந்தாம் பதிப்பு,
1998, சென்னை

2009 தனிநாயகம் சேவியர் அடிகள், ந.மனோகரன் (மொழியாக்கம்), பண்டைத் தமிழ்ச்சமூகத்தில்
கல்வி, மாற்று, டிசம்பர் 2009, முதற்பதிப்பு, சென்னை
(குறிப்பு: தமிழியல் ஆய்வு: தமிழ்ப்பண்பாடு இதழ் முதல் செம்மொழி மாநாடு வரை: வரலாறு
- படிப்பினை - விளைவுகள் (1952-2010) மற்றும் ஆவணங்கள் என்னும் பொருண்மையில் எழுதப்பட
உள்ள நூலின் முன்னோட்ட வரைவுக் கட்டுரை)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 8:29:13 AM5/30/15
to brail...@googlegroups.com
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் - அரசியல் நுண்ணறிவாளர்
8
விவரங்கள்
எழுத்தாளர்: தெ.மதுசூதனன்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: நவம்பர்2013
C வெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2013
1948இல் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் குடியேறி வாழ்ந்த தமிழ் மக்களுக்குக் குடியுரிமை
மறுக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்கள ஆட்சிமொழி சட்டம் வந்தது. இச்சட்டத்தினை எதிர்த்துப்
பேரா. தனிநாயகம் அடிகள் செயல்பட்ட நிகழ்வுகள் இக்கட்டுரையில் பதிவாகியுள்ளது. தனிச்
சிங்களச் சட்டம், தமிழர்களின் உரிமையைப் பறிப்பது குறித்தும் இக்கட்டுரை பேசுகிறது.
ஈழத்தில் வாழமுடியாத சூழலில்தான், அவர் மலாயா பல்கலைக்கழகத்திற்குப் போகவேண்டிய நிலை
உருவானது. மீண்டும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோதும், தமிழ் மக்கள் உரிமைக்காக அடிகள்
மேற்கொண்ட செயல்பாடுகளையும் இக்கட்டுரை மூலம் அறிய இயலுகிறது. உலகம் முழுவதும் பயணம்
செய்த அடிகள் பன்மொழி தொடர்பான நிர்வாகச் சிக்கல்களுக்குத் தெளிவான தீர்வை அறிந்தவராக
இருந்தார். இதனைச் சிங்கள ஆட்சியாளர்களிடம் பலமுறை எடுத்து விளக்கினார். சிங்களப் பேரின
அரசு அடிகள் கூறியவைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தமிழர்கள் தங்களது
உரிமைகளைப் போராடித்தான் பெறவேண்டும் என்றும் அவர் கருதியதை இக்கட்டுரை வழி
அறியமுடிகிறது.
ஒருவரிடத்தில் அமையப் பெறுகின்ற ஆளுமை அகச்சார் அனுபவங்களால் மட்டுமன்றி சுற்றுப்புறச்
சூழல்களாலும் அமையப் பெறுகிறது. ஆகவே ஒரு குறிப்பிட்ட தனியனின் ஆளுமை சமூகத்துடன்
தொடர்புபடுத்தப்படுகின்றது. இந்த வகையில் தனிநாயகம் அடிகளின் ஆளுமை பல்பரிமாண நோக்கில்
விரிவாக்கம் பெறுகிறது. குறிப்பாக இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் எதிர்கொள்ளும் அடையாள
அரசியல் நெருக்கடிகளின் தருக்க விளைவாகவும் ஆளுமை உருவா கின்றது. இந்தப் பின்புலத்தில்
செல்வாக்குச் செலுத்தும் சிந்தனைத் தேட்டங்களையும் மாற்றங்களையும் உள்வாங்கிய ஆளுமையாகவே
தனிநாயகம் அடிகளை முன்நிறுத்த வேண்டி யுள்ளது. இந்த அரசியல் நீக்கம் செய்து அடிகளை தூய
தமிழியல் செயற்பாட்டாளராக மட்டும் ஒற்றைப் பரிமாணத்தில் நோக்குவது தவறானது.
இன்று அரசியல் நுண்மதி என்பது கட்சி அரசியல், தேர்தல் அரசியல், ஆட்சி அரசியல் என்பவற்றைப்
பற்றியல்லாது ஒருவரது சொல் - செயல், பணிகள் தொடர்பான ஆற்றலையும் உளமுயற்சிகளையும்
அடியற்றி உருவாக்கப்பட்ட ஓர் எண்ணக்கருவாகும். இந்த எண்ணக்கரு சார்ந்தும் தனிநாயகம் அடிகளை
நாம் விளங்கிக்கொள்வது அவசியமாகிறது. ஒருவரது உளப்பாங்குடன் இணைந்து செல்லக்கூடிய
சிந்தனைகள், பணிகள் அவருக்கு உளநிறைவு அல்லது உளத் திருப்தி தரக் கூடியனவாகவே
இருக்கும். குறிப்பிட்ட ஒரு சூழமைவில் ஒருவர் எவ்வாறு சிந்திக்கிறார், எவ்வாறு
மனவெழுச்சி கொள்கிறார், எவ்வாறு இயங்குகின்றார் என்பதை அவரது உளப்பாங்குடன் தொடர்புடைய
இயக்கங்களாக கொள்ளப் படுகிறது.
நாம் இங்கு தனிநாயகம் அடிகளது உளப்பாங்குடன் தொடர் புடைய இயக்கங்களில் ஒன்றான அரசியல்
நுண்ணறிவும் அரசியல் செயற்பாடும் எவ்வாறு விளங்கி வந்துள்ளது என்பதை முன்வைத்து அடிகளைப்
புரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சி யாகவே இந்தப் பதிவு அமைகிறது. 1950களுக்குப் பின்னர்
இலங்கையின் வரலாற்றில் சிங்கள பௌத்த ஆதிக்கம் நிறுவன மயமானது. இதுவே அரச நிறுவனத்தை
இயக்கும் கருவியானது. இக்காலகட்டத்தில்தான் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற் றப்பட்டது.
இதனைத் தனிநாயகம் அடிகள் எதிர்கொண்ட விதமும் இந்த நிலைமைகளை மாற்றியமைக்கும் எதிர்
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாங்கும் கவனிப்புக்குரியது.
இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திலிருந்து தனிச்சிங்களச் சட்டம் இயற்றப்படும் 1956
வரை ஆங்கிலமே அரச கரும மொழியாக விளங்கி வந்தது. எனினும், இலங்கைக்கு சுதந்திரம்
கிடைக்கும் முன்னரே இலங்கையில் சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்கவேண்டும்
என்ற கருத்து இலங்கை அரசியல் வாதிகளின் மனதிலே இருந்து வந்தது. இதற்கு ஆதாரமாக
1944ஆம் ஆண்டு சட்டசபையிலே நிதி மந்திரியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் ஆங்கிலத்
திற்குப் பதிலாக சிங்களமே அரச கரும மொழியாக ஒரு குறிப்பிட்ட காலத்துள் ஆக்கப்பட
வேண்டும் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது. பின்னர் தமிழும் அரச கரும மொழியாக இருக்க
வேண்டுமென்ற திருத்தத்துடன் ஏற்றுக்கொள்ளப் பட்டது. ஆனால் செயலளவில் - நடைமுறையில் ஒன்றும்
சாத்தியப்படாமல் ஆங்கிலமே சுதந்திரமடைந்த பின்னரும் அரசகரும மொழியாக இருந்து வந்தது.
இடையிடையே ஆங்கில மொழிக்கு எதிராகவும் சுதேச மொழிகளுக்கு சார்பாக வும் கருத்துகள்
தெரிவிக்கப்பட்டு வந்தன.
1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசில் மந்திரியாக இருந்த
எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா தனது சிங்கள மகாசபா மாதம்பையில் நடத்திய வருடாந்த
கூட்டத்தில் ‘சிங்களம் மட்டும்’ தான் இலங்கையின் அரசகரும மொழியாக இருக்க வேண்டுமென்ற
தீர்மானத்தை நிறைவேற்றினார். இத்தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கும்படி சிங்கள மகா
சபா கேட்டிருந்தது. ஆனால் ஐ.தே.க ஏற்க மறுத்திருந்து இந் நிலையில் பண்டாரநாயக்கா இதனை
சாட்டாக வைத்துக் கொண்டு தனது மந்திரி பதவியை ஜூலை 1951இல் இராஜினாமா செய்தார்.
பண்டாரநாயக்கா சிங்கள மகாசபாவை மிக விரைவில் கலைத்து விட்டு 1951 செப்டெம்பரில்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தாபித்துக் கொண்டார். தொடர்ந்து ஐ.தே.க. அரசாங்கம் அரச
கருமமொழி மாற்றம் பெறுவது குறித்த அக்கறையின்றி இருப்பதாகவும் கால வரையறை ஒன்றை
ஏற்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றஞ் சாட்டினார். சிங்கள மொழியையும் பௌத்த
மதத்தையும் இரு ஆயுதங்களாகக் கொண்டு இலங்கையில் அரசியல் அதிகாரத் தைப் பெற்றுக்கொள்ளலாம்
என கண்ட பண்டாரநாயக்கா அவற்றை வெகு திறமையாகவே கையாள முற்பட்டார்.
1952இன் பின்னர் குறிப்பாக அரச கரும மொழியாக ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களமும்
தமிழும் என்ற சமநிலை மாறி சிங்களம் மட்டும் என்பது வலுமிக்க கோரிக்கையாக மாறத்
தொடங்கியது. இக்கோரிக்கையானது ஆங்கிலேயர் ஆட்சியில் அரசாங்கப் பதவிகளுக்கு தமிழர்களுடன்
போட்டி யிட்ட சிங்களப் புத்தி ஜீவிகள் மத்தியிலே தனிப்பட்ட முக்கியத்துவத்தைப்
பெற்றுக்கொண்டது. அத்துடன் ‘சிங்களம் மட்டும்’ எனும் கோரிக்கையானது சிங்களப் பழைமைவாதி
களை ஒன்றிணைக்கும் மூலமாகவும் அதன் வழியாக சமூகத் திலே உயர்ந்த அந்தஸ்தையும் பெரும்
அங்கீகாரத்தையும் பெற வைத்த ஒன்றாகவும் கருதப்பட்டது. மேலும் இந்தக் கோரிக்கை தனிப்பட்ட
உயர் குழாத்தினரை மட்டுமல்லாது சாதாரண சிங்களப் பொது மக்களையும் கூட கவர்ந்தது.
இதுவரை சிங்கள மக்களிடையே காணப்பட்ட தாழ்நிலைச் சிங்களவர், கண்டிச் சிங்களவர் என்ற இரு
பிரிவுகளையும் ஒற்றுமைப்படுத்து வதாகவும் இக்கோரிக்கை பயன்பட்டது. மேலும் மேலைத் தேயச்
செல்வாக்குக்கு எதிராக பழைமைவாதிகள் நடத்தும் கிளர்ச்சிகளின் அடையாளமாகவும்
செயற்பட்டது. சிங்கள மக்களிடையே காணப்பட்ட தீவிர தன்மை கொண்டோரை ஒன்றிணைத்தது. 1956ஆம்
ஆண்டளவில் பலம் மிக்க சமூக சக்தியாக உருவாக்கியதும் சிங்களம் மட்டும் எனும் கோரிக்கைதான்.
இந்தப் பின்னனியில்தான் தனிநாயகம்அடிகள் தனது பரந்த அறிவைப் பயன்படுத்தி சிங்களமும்
தமிழும் அரச கரும மொழிகளாக இருப்பதால் சிங்களத்திற்கு எந்த ஆபத்தும் வராது. சிங்களம்
அரச கரும மொழியாக இருந்தாலும் தமிழை யும் சிங்களத்தின் நிலையைப் பாதிக்காமல்
பயன்படுத்தலாம். இதுபோன்ற பல்வேறு சிந்தனைகளை பன்னாட்டு அனுபவங் களிலிருந்தும் பல்வேறு
நாட்டு அரசியலமைப்பு வரைவுகளி லிருந்தும் மேற்கோள்கள் காட்டி பத்திரிகைகளில் கட்டுரை
களை எழுதி வந்தார். தொடர்ந்து பல கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு உரைநிகழ்த்தி வந்தார்.
தான் எழுதியவற்றை ஒன்றாகத் திரட்டி ‘தமிழ் மொழி உரிமைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆங்கில
நூலையும் வெளியிட்டார்.
சிங்களம் மட்டும் என்ற போராட்டத்தில் சாதாரண மக்களைப் பொறுத்தளவில் பரந்தளவிலான வலுமிக்க
ஆதரவு உருவானது. தனிப்பட்ட ஒவ்வொரு சிங்களவரும் தனது மொழியுடன் தனது எதிர்கால
நல்வாய்ப்பும் அதன் மூலமாக தனது சுயமரியாதை தங்கியிருப்பதாகவும் கருதிக்கொண்டனர்.
இப்போராட்டம் மூலமாக வலுமிக்க சிங்கள இன உணர்வின் அடிப்படையிலான ஒற்றுமையை சிங்கள
மக்கள் ஏற்படுத்திக் கொண்டனர். மொழி இயக்கமானது சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஒன்றிணைந்த
கூட்டு மனோபாவ சிங்கள மீள் எழுச்சிக்கும் சுயமரியாதையை வலியுறுத்துவதற்குமான அடையாளச்
சின்னமாகவும் கருதப்பட்டது. சிங்கள மொழி யானது அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான
மூலமாக மாற்றமடைந்தது. கட்சி அரசியலையும் கடந்து, சிங்களம் மட்டும் எனும் கோரிக்கை
அரசியல் ஆட்சி அதிகாரத்துவ செல்நெறியை தீர்மானிக்கும் சக்தியாகவும் பரிணாமம் பெற்றது.
இலங்கையில் தனிச் சிங்களம் இயக்கம் தீவிரமடைந்து வருவதைக் கண்டு தனிநாயகம் அடிகள்
கவலைப்பட்டார். தனது உணர்வுகளை சாத்தியப்பட்ட களங்களில் பதிவுசெய்தார். தனிச்சிங்களச்
சட்டம் தமிழ் மக்களைப் பாதிக்கும் கொடுங் கோண்மை சட்டம் என்று அறிவுபூர்வமாக எடுத்துரைத்து
வந்தார்.
1956 பொதுத் தேர்தல் இலங்கை வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தது. M.E.P. கூட்டணி
பெருவெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பண்டாரநாயக்கா பிரதமர் பதவி வகித்தார். இந்தப்
புதிய அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கையாக சிங்கள அரச கரும மொழிச் சட்டப் பிரேரணை
கொண்டு வரப் பட்டது. 1956 ஜூன் 5இல் கொண்டுவரப்பட்ட இம்மசோதா ஜூன் 14ஆம் திகதி M.E.P.
U.N.P .பாராளுமன்ற அங்கத்தவர் களின் ஆதரவுடன் சட்டமாகியது. தனிச் சிங்களம் மசோதா
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்ட அன்று தமிழரசுக் கட்சி யின் தலைமையில்
பாராளுமன்றத்திற்கு முன்னால் காலிமுகத் திடலில் அமைதி முறையிலான எதிர்ப்பு சத்தியாக்
கிரகப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது தனிநாயகம் அடிகள் அப்போராட்டத்தில் நேரில்
கலந்து கொண்டு தனது முழு ஆதரவை வெளிப்படையாக தெரி வித்தார். அந்தப் போராட்டத்திற்கு
ஆன்ம வலிமையைக் கொடுத்தார். இந்த எதிர்ப்பு நடவடிக்கையின்போது தனிச் சிங்கள இயக்கத்தின்
தீவிர ஆதரவாளர்களினாலும் மற்றும் குண்டர்களினாலும் அமைதி வழியிலான எதிர்ப்புப் போராட்டம்
வெறித் தாக்கு தலுக்கு இலக்காகியது. தமிழ்த் தலைவர்கள் அடி உதைக்கு உள்ளானார்கள்.
காயங்களுக்குள்ளானார்கள். இதன் போதுதான் துணிச்சலுடன் போராட்டக் களத்திற்கு அடிகள் சென்று
தனது ஆதரவை வழங்கினார். இந்த நிலைமையை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த
நிகழ்வு பற்றி தனிநாயகம் அடிகளின் இறுதிச் சடங்கு நிகழ்வில் தமிழ்த் தலைவர்களில்
ஒருவரான அ.அமிர்தலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றும் போது மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
“1956ஆம் ஆண்டு ஆனி மாதம் 3ம் திகதி தனிச்சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் புகுத்தப்பட்ட
அன்று காலிமுகக் கடற்கரையிலே அந்தப் பச்சைப்புல் தரையிடல், ஈரமாகக் கிடந்த நிலத்தில்
நாமெல்லாம் இருந்து சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்த போது எம்மை ஆயிரக்கணக்கான
காடையர் சுற்றி வளைத்து கல்மாரி பொழிந்து தாக்கிக்கொண்டிருந்த நேரத்தில், பொலிஸார்
எமக்கும் அவர்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தி, ஓரளவுக்கு அந்தத் தாக்குதலி
லிருந்து எங்களை தடுத்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், திடீரென்று அந்தத் தாக்குதலுக்கு
ஊடாக ஒரு உருவம், துறவியின் உடையிலே எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. எங்கள் மனம்
ஒருநிமிடம் பெருமிதப்பட்டது. இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் நான் இந்தச்
சத்தியாக்கிரகத்தை நடத்துபவர்களோடு சேரப் போகிறேன் என்று அந்தக் காடையர் கூட்டத்தை
விலக்கிக் கொண்டு வரக்கூடிய உளம்படைத்த வராக, தமிழுக்காக நடைபெறுகின்ற
சத்தியாக்கிரகத்திலே தாமும் பங்குகொள்ள வேண்டுமென்ற அந்தத் வீரியத்தோடு அங்கு வந்திருந்த
தனியாகம் அடிகளாரை நாம் என்றும் மறக்க முடியாது’’ என்று நினைவு கூர்ந்தார். மேலும்
‘‘எமக்கு கலாசாரத்தையும் அரசியலையும் பின்னிப் பிணைத்து எமது கலாசாரத்தைக் காப்பதற்கு
அரசியல் எந்த வகையில் பணிபுரிய வேண்டுமென்று காட்டக்கூடியவராக அல்லது அரசியல்
இலட்சியத்தை அடைவதற்குக் கலாசாரம் எந்த வகையில் உதவ முடியும் என்பதை
எடுத்துக்காட்டுபவராக வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகள் விளங்கினார்’’ என்றும் மறைந்த
தலைவர் அ.அமிர்தலிங்கம் கூறுவது முற்றிலும் பொருத்தமாகும்.
இந்த சத்தியாக்கிரக போராட்டத்தின் மீது தாக்குதல் நடை பெற்ற தருணத்தில் கிழக்கிலங்கையிலும்
மட்டக்களப்பிலும் கல்லோயாக் குடியேற்றத் திட்டத்திலும் சிங்களத் தமிழ் மக்களுக்கிடையிலான
இனக்கலவரம் ஆரம்பித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டது. இந்த கலவரத்தைத்
தொடர்ந்து நாட்டில் தீவிரமான இன உணர்வுகள் இரு இனங்கள் மத்தியிலும் வலுப்பெறலாயிற்று.
1956ஆம் ஆண்டு அறப்போரில் அடிகளார் கலந்துகொண்ட போது அவர் இலங்கை பல்கலைக்கழகப் பணியில்
இருந்து விடுப்பு பெற்றுக் கொண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் முனைவர்
பட்டத்துக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்த போதே
அறப்போரில் அடிகள் ஈடுபட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அடிகள் விடுமுறையில்
இருந்த பொழுதும் அரசியல் ரீதியான போராட்டம் தமிழினம் சார்ந்து வெளிப்படு கையில் அதில்
கலந்துகொள்வது தமது கடமையென்று கருதி னார். அதில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருப்பது
கோழைத் தனம் என்ற மனப்பாங்குடன் இயங்கியுள்ளார். இதனால் தனக்கு வரக்கூடிய ஆபத்துக்களைக்
குறித்து அடிகள் கவலைப் படவில்லை.
சிங்கள மொழிச்சட்டம் பாராளுமன்றத்தில் அமுலாக்கப் பட்ட பின்னர் பல்வேறு எதிர்ப்புப்
பிரச்சாரக்கூட்டங்கள் நடை பெறத் தொடங்கின. பத்திரிகையிலும் கட்டுரைகள் வெளிவரத்
தொடங்கின. அடிகளும் கட்டுரைகள் எழுதி வந்தார். எதிர்ப்புப் பிரச்சார கூட்டமொன்றில்
கலந்துகொண்டு சமஷ்டி அரசியல் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். சமஷ்டி அரசியல்
பற்றிய கருத்தாடலை அறிவுபூர்வமாக முன்வைத்தார். பல்வேறு நாட்டு அனுபவங்களின்
வெளிச்சத்திலிருந்து தமது கருத்துக்களை தொகுத்து இலங்கைச் சூழலுக்கு பொருத்தமாக
எடுத்துரைத்தார். மூன்று இனத்தவரும் நான்கு மொழியினரும் மூன்று சமயத்தவரும் ஒன்றிணைந்து
சுவிட்சர்லாந்தில் ஒரு தேசியத்தை உருவாக்கியுள்ளனர். அவ்வாறே நாட்டின் ஒருமைப்பாட்டையும்
ஒற்றுமையையும் காத்திட நாம் விரும்பு வோமாயின் இலங்கையில் இருமொழிகள் தீர்க்க முடியாத
ஒரு பிரச்சினைக்கு காரணமாகிவிட முடியாது என்று விளக்கினார். தொடர்ந்து
தென்னாபிரிக்கா, கனடா, பெல்ஜியம், சுவிட்சர் லாந்து ஆகிய நாடுகள் இருமொழி அல்லது
பன்மொழி பேசும் நாடுகளாக இருந்தும் மொழி பிரச்சினைக்கு தக்க தீர்வு கண்டிருப்பதை
எடுத்துரைத்தார். இதுபற்றியெல்லாம் நாம் அக்கறைப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. நாட்டை
இருண்ட யுகத்துக்குள் கொண்டு போகப்போகிறோம் என்று எச்சரிக்கை செய்தார்.
தமிழ் அல்லது சிங்களப் பண்பாட்டைத் தழுவி வாழ்வதால் இலங்கை தேசிய உணர்வு குன்றிவிடாது.
இது அடிகளாரின் ஆணித்தரமான வாதம். ஆகவே தமிழ் மக்கள் தங்கள் இன உணர்வினைப் போற்றி,
தங்கள் மொழியை வளர்த்து, தங்கள் பண்பாட்டைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கான சிந்தனைத்
தெளிவு நமக்கு வேண்டும் என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் எடுத்துரைத்து வந்தார்.
அடிகளார் சிங்கள மொழிக்கோ சிங்கள மக்களுக்கோ எதிரானவர் அல்லர் என்பதும் அதே சமயத்தில்
தமிழர்கள் தங்கள் இலங்கைத் தேசிய உணர்வுக்கு பங்கமில்லாத வகையில் தங்கள் தமிழின உணர்வை
வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அடிகளாரின் உறுதியான கருத்து. இருமையில் ஒருமைப்பாடு
அல்லது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும் காப்பதும் மனித இயல்பு. இதை ஆணித்தரமாகவும்
நிதானமாகவும் தெளிவுபடுத்தி வந்தார்.
1956ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் தனிச் சிங்கள இயக்கம் தீவிரமடைந்து அமைதியின்மையை
ஏற்படுத்தி வருவதை அறிந்து கவலை கொண்டார். புதிய பிரதமர் பண்டாரநாயக் காவை நேரில்
சந்தித்த தூதுக்குழுக்களில் தாமும் இணைந்து மொழிப்பிரச்சினை பற்றிக்
கருத்துரைத்தார்.சிங்களம் - தமிழ் ஆகிய இரு மொழிகளையும் இலங்கையில் ஆட்சி மொழிக ளாக்கி
இனப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் என்று தகுந்த ஆதாரங்களுடன் பெல்ஜியம், கனடா,
சுவிட்சர்லாந்து முதலான நாடுகளின் முன்னுதாரணங்களுடன் எடுத்துரைத்தார். ஆனால்
பண்டாரநாயக்கா அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. வாள்முனையில் “இப்பிரச்சினைக்குத் தீர்வு
காண்பதையே நான் விரும்புகின்றேன்” (‘Father, I will rather decide it on the
point of sword) என்று பிரதமர் ஆணித்தரமாக கூறினார். இந்தநிலை அடிகளாருக்கு பெரும்
அதிர்ச்சியாக இருந்தது.
இலங்கையில் மொழிப் பிரச்சினை வலுப்பெற்று சிங்களம் மட்டும் அரச கரும மொழிச்சட்டம்
நிறைவேற்றப்பட்டதிலிருந்து M.E.P., M.E.P. ஆகிய பிரதாய இரு கட்சிகளுமே இலங்கையின்
கட்சி முறைமையில் இன ரீதியான பிளவினை அறிமுகம் செய்தன. அதனால் இரு சமூகங்களுமே
தேசிய அணியிலான அரசியல் சக்திகளாக இயங்குவதற்கு தடை யாகின. அதனால்தான் முதன்
முதலாக மாற்று அரசாங்கத்தை தேர்வு செய்யும் பணி சிங்கள பிரதேசங்களுக்கு மட்டும்
கிடைக்கலாயிற்று.
இவ்வகையிலே தமிழ் பிரதேசங்கள் தேசிய நீரோட்டத்தி லிருந்து புறக்கணிக்கப்படலாயின. இந்த
நிலைமைகள் குறித்து அடிகள் மிகுந்த கவலையடைந்தார். தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து
ஒற்றுமையின் வலிமையால் தமது உரிமைகளை நிலைநாட்டா விடில் எதிர்காலத்தில் அவற்றைப் பெறப்
போவதில்லை. ஆகவே தமிழ் மக்கள் தமது உரிமையை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட
வேண்டுமென்பதை வலியுறுத்தி வந்தார்.
பண்டாரநாயக்கா பதவிக்கு வந்து இரண்டு மாதங்களில் கல்லோயா குடியேற்றப் பகுதியில் வெடித்த
கலவரம் 150 பேரின் உயிரைக் காவுகொண்டது. இது சம்பந்தமாக பண்டார நாயக்கா அரசாங்கம்
எத்தகைய சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதே போல காலிமுகத் திடலில் இடம்பெற்ற
சத்தியாக்கிரகத்தை வன்முறையால் குழப்பிய சுதந்திர கட்சி குண்டர்கள் மீதும் சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் அடிகள் உரியவாறு சுட்டிக்காட்டி வந்தார்.
அரசாங்கம் மிக மோசமாக இனவாத பண்புகள் கொண்டதாக மாறி வருவதையும் அரசியல் ரீதியில்
அம்பலப்படுத்தி வந்தார்.
1958இல் பெரும் இனக்கலவரம் மூண்டது. பல்வேறு வதந்திகளை உருவாக்கி தமிழர்களுக்கு
எதிரான வன்முறை களை சிங்களக் காடையர்கள் திட்டமிட்டு நடத்தினர். தமிழர்களுக்கெதிரான
இனவன்செயல்கள் வெடித்து ஆறு நாட்கள் வரை அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட வில்லை.
1958இல் மே 22 அன்று 500க்கு மேற்பட்ட காடையர் பொலனறுவையில் தமிழ்ப் பிரயாணிகள் பயணம்
செய்த புகையிரதத்துக்குள் புகுந்து தாக்கினர். இதைத் தொடர்ந்து பரவலாக கொலை, கொள்ளை,
சூறையாடல்கள், பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தன. இவற்றைக் கட்டுப்படுத்தாமல் அரசு மௌனம்
காத்து வந்தது. வளர்ந்து வரும் நிலைமையின் கொடூரத்தை உணர்ந்த ஒரு குழுவினர் பிரதமர்
பண்டாரநாயக் காவை சந்தித்து, அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு கோரினர். அதற்கு
பிரதமர் ‘ஒரு சிறிய விடயத்தைப் பெரிது படுத்துகிறீர்கள்’ என்று தூதுக்குழுவினரிடம்
கூறினார். தமிழ் விரோத நடவடிக்கைகள் அரங்கேறுவதை விளங்கிக்கொண் டும் அதைப்
பெரிதுபடுத்தாமல் விசித்திரமாக பதில் கூறினார்.
சிங்கள அரசாங்கம் 1953இல் ஒரு நாள் ஹர்த்தாலிற்காக அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது.
ஆனால் 1958இல் தமிழர்கள் கொல்லப்பட்டும் பெண்கள் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்டும்
அகதிகளாக்கப்பட்டும் பொது இடங்களில் தஞ்சம் புகுந்துவரும் போதும் இந்த நிலைமையை
கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரத் தேவையான அவசரகால நிலையை பிரகடனம் செய்ய சிங்கள அரசாங்கம்
மறுத்தது. வன்முறைகள் மோசமாக நடந்தேறிய பின்னர் ஆறாம் நாளில் தான் அவசரகால நிலை
பிரகடனம் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட தமிழரசுக் கட்சியின் சில
பாராளுமன்ற அங்கத்தவர்களும், சிங்களத் தீவிர வாதக் கட்சியான ஜாதிக விமுக்தி பெரமுனவின்
தலைவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
பண்டாரநாயக்கா கலவரம் அடங்கிய நிலையில் ‘தமிழ் மொழி விசேட உபயோகம்’ சட்டத்தை
இயற்றினர். இம் மசோதா பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சியின்
அங்கத்தவர்கள் தடுப்புக்காவலில் இருந் தனர். தமிழ்ப் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் இச்சட்ட
வரையறை விவாதிக்கப்படுவதை ஆட்சேபித்து எல்லா எதிர்க் கட்சி அங்கத்தவர்களுமே
சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
1958 இனக்கலவரம் மற்றும் இனவழிப்பு குறித்து தனிநாயகம் அடிகள் மிகுந்த அக்கறை
கொண்டிருந்தார். ஐ.நா. சபையில் முறையிடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வும்
திட்டமிட்டிருந்தார். குறிப்பாக, இனக்கலவரங்களில் நிகழ்ந்த கொடுமையான நிகழ்ச்சிகளை,
உண்மைச் சான்றிதழ் களில் சாட்சியம் எழுதிக் கொடுக்கப்படுவதைத் தூண்டி வந்தார். இவற்றை
எவ்வாறு எழுத வேண்டும் என்பதை வழக்கறிஞர்களிடமிருந்து அறிந்துகொள்ளவும் மக்களை வேண்டிக்
கொண்டார். தமிழர்கள் அனைவரும் தமிழ் இயக்கத் தில் ஈடுபட வேண்டுமென்று மக்களைக்
கேட்டுக்கொண்டார். தமிழ் மொழி உரிமைகளை பெற முயலும் இயக்கம் வெற்றி பெற வேண்டும், அந்த
இயக்கத்தில் இணைந்து உளப்பூர்வமாக ஈடுபடுவது, நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதையும்
உறுதிபடக் கூறி வந்தார்.
மொழிப் பிரச்சினை என்பது அரசியல் எல்லைகளை விட விரிந்து பரந்தது. அது தத்துவப்
பிரச்சினை; அரசியல், குடியாட்சி யமைப்பு முறைக் கோட்பாட்டுப் பிரச்சினை; அக்கோட் பாட்டை
நடைமுறைப்படுத்தும் பிரச்சினை; அது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை; சமூகவியல் - மனித
இயக்கவியல் பிரச் சினை என்று அடிகளார் மொழிப்பிரச்சினையின் பல்பரிமாணத் துவத்தை
விளக்கினார். எனவே மொழிப் பிரச்சினையைப் பற்றிச் சிந்திப்பது அரசியல் வாதிகளுக்கு
மட்டும் உரியதல்ல; அரசியல் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், சட்டவல்லு நர்கள், சமூகவியல்
அறிஞர்கள் ஆகியோருக்கும் அது உரியது என்றார். அடிகள், ஒற்றுமையில் வேற்றுமை காண்பதன்
மூலம் பண்பாட்டுச் சுதந்திரமும் அரசியல் ஒற்றுமையும் கைகோர்த்துச் செல்வதும், ஒரே
அமைப்புக்குள் சுய நிர்ணய உரிமையும் பண்பாட்டு தன்னாட்சி உரிமையும் நிலவுவதும் இன்று
உலகில் பரவிவரும் சிந்தனைகள் என்பதையும் தமது எழுத்தில் தெளிவாக வெளிப்படுத்தினார்.
அடிகளாரின் மொழி தொடர்பிலான சிந்தனைகள் இரண்டு வகைப்படும். ஒன்று, தமிழ் மக்களுடைய
மொழி உரிமை பற்றியது. மற்றையது, மொழி கற்பித்தல் பற்றியது ஆகும். 1956இல்
தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரவிருந்தபோது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் மொழி
உரிமைப் பண்புகளையும் பன்னாட்டு மொழிப் பிரச்சினை அனுபவங் களையும் பல கட்டுரைகளிலும்
நூல்களிலும் சொற்பொழிவு களிலும் அடிகளார் வெளிப்படுத்தினார். 1956இல் ‘நம் மொழி
உரிமைகள் - தனிநாயகம் அடிகளின் கருத்து’ எனும் சிறுபிரசுரம் கண்டி தமிழ்ப்பண்பாட்டுக்
கழகத்தினால் வெளியிடப்பட்டது. இது பின்னர் புதுப்பிக்கப்பட்டு இரண்டாம் மூன்றாம்
பதிப்புகளாக 1961இல் வெளியிடப்பட்டது. (இந்தப் பிரசுரம் இந்த இதழ் ஆவணப் பகுதியில்
வெளியிடப்பட்டுள்ளது.)
1960ஆம் ஆண்டு தேர்தலில் ஷிலிதிறி தனிச் சிங்கள அரச கரும மொழிச் சட்டத்தைத் தொடர்ந்தும்
பூரணமாக நடைமுறைப் படுத்துவதற்கு மக்கள் அங்கீகாரத்தை வேண்டி நின்றது. 1956
பொதுத்தேர்தலைப் போலவே இத்தேர்தலிலும் மொழியே பிரதான விடயமாக ஆக்கப்பட்டது.
பண்டாரநாயக்காவின் (கணவரின்) கொள்கைகளைத் தொடர்ந்து அமுல்செய்வதற்கு தங்களை தொடர்ந்து
தெரிவு செய்யுமாறு சிறிமாவோ பண்டார நாயக்கா வேண்டி நின்றார். இவர் தமிழ்மொழி
தொடர்பான கணவரின் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுவார் என்று தமிழ்பேசும் மக்களால்
எதிர்பார்க்கப்பட்டது. ஷிலிதிறியின் தேர்தல் அறிக்கையிலும் தமிழ்பேசும் மக்களுக்கு
தீங்கிழைக்காத வகையில் சிங்கள அரச கரும மொழிச் சட்டம் அமுல் செய்யப் படும் என்றும்
பண்டாரநாயக்காவின் ‘தமிழ்மொழி உபயோ கம்’ சரத்துக்கள் திருந்திய முறையிலே
நடைமுறைப்படுத்தப் படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இவற்றுக்கு மாறாக தனது ஆட்சியின் ஆரம்பத் திலேயே நீதி மன்றங்களில் சிங்கள மொழியை
பயன்படுத்து வதற்காக நீதிமன்ற மொழிச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்தது. தமிழ்மொழி பேசும்
பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட சகல தரத்து நீதிமன்றங்களிலும் சிங்களத்தை
திணிக்கும் இச்சட்டம் ஆங்கிலத்துக்குப் பதிலாக கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழ்பேசும் மக்களின்
மொழி யுரிமையைப் பாதிக்கும் ஒன்றாகவே அமைந்தது. இச்சட்டத் திற்கு எதிராக தமிழரசுக்
கட்சியினால் 1961 ஜன 2 இல் ஒருநாள் ஹர்த்தால் இடம்பெற்றது. மொழிஇன உணர்வைத் தூண்டு
வதற்கு இச்சட்டம் துணை போனது. தமிழ்பேசும் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் பரவலாக
வெடித்தது. தொடர்ந்து அகிம்சை வழியிலான சத்தியாக்கிரகப் போராட்டத்தை தமிழரசுக்கட்சி
ஆரம்பித்தது.
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் யாவரையும் ஒன்றுபடுத்திய போராட்டத்தை
தமிழரசுக்கட்சி முன்னெடுத் தது. மொழியுரிமைக்கான இயக்கம் வேகமடைந்தது. அரசாங்கம்
முன்னெடுக்கும் பாரபட்ச கொள்கைகளை எதிர்க்கும் இயக்க நடவடிக்கை எங்கும் வளர்ச்சியடைந்தது.
மக்களை நேரடியாக பங்குகொள்ளச் செய்த முதலாவது போராட்டம் இது எனக் கூறலாம். இந்தப்
போராட்டம் நடைபெற்ற காலத்தில் தனிநாயகம் அடிகள் ஒதுங்கியிருக்க வில்லை. சத்தியாக்கிரக
இயக்கத்திற்கு ஆதரவு தேடும் வகையில் தமிழ்மொழிக்குள்ள நியாயாதிக்கமான உரிமைப்
பாட்டையும் சிங்கள மக்கள் நல்வாழ்வுக்கு தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் விளக்கி
ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். சில கோரிக்கைகளை
முன்வைத்து தயாரித்த ஆவணங்களில் சக சிங்கள விரிவுரை யாளர்களின் கையப்பத்தையும் வாங்கி
ஆதரவு திரட்டி வந்தார். போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று ஆதரவும்
ஆலோசனையும் வழங்கி வந்தார். குறிப்பாக பணம் சேர்த்து, சத்தியாக்கிரகம் நடந்த இடங்களுக்குச்
சென்று கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
1904 செப் 3ஆம் திகதி சேர் பொன். இராமநாதன் கொழும்பு ஆனந்த கல்லூரி பரிசளிப்பு
விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிங்கள மக்கள் சிங்கள மொழியை காக்க வேண்டியதன்
அவசியம் பற்றி ஆற்றிய உரையினை மீண்டும் அடிகளார் துண்டுப் பிரசுரமாக்கி வெளியிட்டார்.
சில இடங்களில் கூட்டங்கள் நடத்தி இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார். துண்டுப்
பிரசுரப் போராட்டத்தை பிரக்ஞை பூர்வமாக திட்டமிட்டு முன்னெடுத்தார். இந்நேரத்தில்
மலேசியப் பல்கலைக்கழகத்தின் முதல் இந்தியவியல் துறைப் பேராசிரியராக பதவியேற்கும்படி
அடிகளாருக்கு அழைப்பு வந்திருந்தது. அப்போது நிலவிய சூழ்நிலைக் காரணமாக அடிகளார்
யாழ்.சத்தியாக்கிரக முறியடிப்புக்கு மறுநாளைக்கு மறுநாள் விமானம் மூலம் இந்தியா சென்று
அங்கிருந்து மலேசியா சென்றார்.
அப்போது இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை முறியடிக் கவும் தலைவர்களை கைதுசெய்யவும்
அரசு திட்டமிட்டிருந்தது. பலர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். பொலிஸ்
குற்றத்தடுப்புப் பிரிவினரால் தேடப்படுபவர்களின் பட்டியலில் தனிநாயகம் அடிகளின் பேரும்
இருந்ததாக அறியமுடிகிறது. தொடர்ந்து பொலிஸ் கண்காணிப்பின் நெருக்கடிக்கு அடிகள் உட்பட்ட
பொழுதுதான் மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பதவியேற்கும்படி அழைப்பு வந்தது.
அப்போது அடிகளாருக்கு வரும் கடிதங்கள் பெரும்பாலும் அரசாங்கத்தால் திறந்து
பரிசீலிக்கப்பட்ட பின்னரே கடிதங்கள் அடிகளாருக்கு கிடைத்து வந்தது. இதனை அடிகளாரும்
உணர்ந்திருந்தார். அப்பொழுது அடிகளார் தங்கி யிருந்த இடத்திற்கு இன்னொருவர் வந்து தங்க
ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில்தான் எவருக்கும் தெரி யாமல் மலேசியா செல்ல
ஆயத்தமானார். தான் மலேசியாவுக் குப் போவதற்கு முன் தனது நெருங்கிய நண்பரும் சக பல்கலைக்
கழக விரிவுரையாளருமான கு.நேசையா என்பவருக்கு கடித மொன்றை ரகசியமாக
எழுதியிருந்தார். அடிகள் யாரும் அறியாதிருப்பதற்காக கடிதத்தை எழுதிய பின்னர் அதில்
‘எக் நாயக்கா’ என கையப்பமிட்டிருந்தார். சிங்கள மொழியில் எக் நாயக்கா என்றால் தனிநாயகம்
என்று பொருள்படும். இவ்வாறு சமயோசிதமாக சிந்தித்து செயல்பட்ட பாங்கு கவனிக்கத்தக்கது.
அடிகள் மலேசிய பல்கலைக்கழகப் பணியிலிருந்து 1969ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். 1972க்குப்
பின்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தார்.
1978இல் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு புலிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர்
புலிச்சட்டம் என்ற அடையாளம் கைவிடப்பட்டு 1979இல் பயங்கரவாத தடைச் சட்டம் என்று பெயர்
சூட்டப்பட்டது. இச்சட்டத்துடன் அவசர கால ஒழுங்குவிதிகளும் பிரகடனப்படுத்தப்பட்டன. வடகிழக்
கில் தமிழ் இளைஞர்கள் வேட்டையாடப்படத் தொடங்கினர். அப்பாவிகள் பலர் கைது செய்யும் படலமும்
ஆரம்பமானது. 1979இல் யாழ்ப்பாணத்தில் எட்டுத் தமிழர்கள் சுட்டுக்கொல் லப்பட்டனர். அப்போது
ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தது. இந்த காலத்தில் தமிழர்கள் மிக மோசமாக பல்வேறு இன்னல்
களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வந்தனர். இவற்றை அடிகளார் நேரில் கண்டு
வந்தார். இந்நிலையில் நீதிக்காக, மனித உரிமைக்காக, நான் மேடையில் பேசி நீண்ட
நாட்களாகிவிட்டது. நமது தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேச ஒரு கூட்டம் ஒழுங்கு
செய்யும்படி தனது நண்பர் களிடம் வேண்டிக் கொண்டார்.
அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண வீர சிங்கம் மண்டபத்தில் கூட்டம்
ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் அடிகள் தோன்றி தமிழ் மக்கள் முகங்கொடுக் கும்
பிரச்சினைகளின் தாக்கத்தை எடுத்துரைத்தார். தமிழ் மக்களின் நீதிக்காக குரல் கொடுத்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றால் நமது இளைஞர்களின் எதிர்காலம் எப்படிப்
பாழாகுமென்பதை தெளிவுபடுத்தினார். உரிமைக்காக நாம் போராடுவதைவிட வேறு மார்க்கம்
இல்லையென்பதை யும் உறுதிப்பட கூறினார். அடிகள் கட்சி அரசியலோடு நேரடி
தொடர்பற்றவராயினும் தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக உரிய முறையில்
உழைக்கத் தயங்கவில்லை. களத்தில் சென்று போராடவும் பின்நிற்கவில்லை. அடிகளாரின் பேச்சும்
எழுத்தும் செயலும் தமிழ் பேசும் மக்களின் விடுதலை அரசியல் சார்ந்ததாகவே அமைந்திருந்தது.
அவரது சொற் பொழிவு பின்காணும் வகையில் இருந்தது.
தமிழா!
தமிழை இழந்து நம் ஒப்பற்ற இலக்கியங்களையும் பண்பாட்டினையும் இழப்பதா! தமிழை இழந்து நம்
செல்வச் சமய நூல்களையும் வழிபாட்டுப் பாடல்களையும் இழப்பதா! தமிழை இழந்து நம்
கவின்கலைகளை இழப்பதா! தமிழை இழந்து பண்பாடின்றி புறக்கணிக்கப்பட்ட கீழ் வகுப்பினராக நம்
சொந்த நாட்டில் வாழ்வதா! தன்னலம் கருதித் தமிழ் இனத்தைக்காட்டிக் கொடுப்பதா?
பெரும்பான்மையோரின் அடிமைகளாக வாழ்வதா-அல்லது சாவதா- இன்றேல் சம உரிமைகளுடன் தனி
இனமாக மானத்துடனும் புகழுடனும் சேர்ந்து இயங்குவதா? அம் மான நிலையை அடைய விடாது முயல்க.
இவ்வாறு முழங்கிய தனிநாயகமடிகளது அரசியல் நுண் ணறிவு நுட்பமாக அடையாளம் காணப்பட
வேண்டும். இன்றைய சூழலில் அடிகளாரின் சிந்தனையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய அவசியப்
பணி உருவாகியுள்ளது. ஆகவே தனிநாயகம் அடிகள் பற்றிய மீள்சிந்தனையையும் மீள்வாசிப் பையும்
உருவாக்குவோம். அடிகளின் அரசியல் நுண்ணறிவு சார்ந்தப் புலத்தை இன்னும் ஆழமாக்குவோம்.
அடிகள் தமிழ்ப் பணி செய்யவே இறைவன் தன்னை அழைக்கின்றான் என்று உறுதியாக நம்பி செயற்பட்டு
வந்தார். யாழ்ப்பாணத்தில் 1951ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழ் விழாவில் அடிகள் உரையாற்றும் போதும்
சரி பின்னர் அவர் உரையாற்றிய பல்வேறு கூட்டங்களிலும் சரி “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே” என்னும் திருமூலரின் உரையைச் சொல்லித் தம் உரையை
முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதன் மூலம் அரசியல் சொல்லாடல் சார்ந்த சிந்தனை
நோக்கி நாம் பயணிப்பது இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.
இக்கட்டுரையாளர் கொழும்பில் வசிக்கும் ஆய்வாளர். பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 8:34:13 AM5/30/15
to brail...@googlegroups.com
தமிழர் பண்பாடு
8
விவரங்கள்
எழுத்தாளர்: பேராசிரியர் சேவியர் தனிநாயகம்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: நவம்பர்2013
C வெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2013
குறிப்பு : அடிகளார் நிகழ்த்திய இறுதிச் சொற்பொழிவு இதுவாகும். அவர் தமிழியலுக்கு
ஆற்றிய தொண்டும் ஈழ மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்ட மனநிலையையும்
வெளிப்படுத்தும் வகையில் இதனை மறுவெளியீடு செய்துள்ளோம். இக்குறு நூலை தந்தை செல்வா
அறக்கட்டளை வெளியிட்டுள்ளது (1980)
பேராசிரியர் சேவியர் தனிநாயகத்தின் இந்த இறுதிச் சொற்பொழிவு மூலம், அவரது
கருத்துநிலையைப் புரிந்துகொள்ள முடியும். வாழ்நாள் முழுதும் எப்படி வாழ்ந்தார் என்பதையும்
அறிய முடிகிறது. தமிழில் உருவான தொல்பழம் இலக்கணம் மற்றும் இலக்கியங்கள்வழி தமிழக
சமூக வரலாற்றை எவ்வாறு கட்டமைக்க முடிகிறது என்பதை இச்சொற்பொழிவால் அறிய இயலுகிறது.
தந்தை செல்வா அறக்கட்டளைச் சொற்பொழிவாக இதனை நிகழ்த்தியுள்ளார். ஏப்ரல் 1980 - 27, 28
நாட்களில் இச்சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து மூன்று மாதங்கள் மட்டுமே அடிகள்
வாழ்ந்தார். இறுதிப் பொழிவிலும் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை குறித்தும் அதனைத்
தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசியுள்ளதைக் காணமுடிகிறது.
இவ்வாண்டின் மூதறிஞர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் நினைவுச் சொற்பொழிவுகளை என்னை
நிகழ்த்து மாறு அழைத்தமைக்குச் செல்வநாயகம் நினைவுக் குழுவி னர்க்கு என் நன்றியைத்
தெரிவிக்கின்றேன். அடியேன் ஓய்வு பெற்றிருப்பதாலும், என் கண்பார்வை குன்றியிருப்பதாலும்,
நூற்கூடம் என்னிடம் இப்பொழுது சிறிதாயிருப்பதாலும், ஆராய்ச்சி விரிவுரைகள் நிகழ்த்த
வாய்ப்புகள் குறைந்திருந் தாலும், இப்பெருந்தகையின் நினைவிற்கு அடியேனும் அஞ்சலி செலுத்த
வேண்டும் என்ற விருப்பினால் இச்சொற்பொழிவு களை நிகழ்த்த உடன்பட்டேன்.
முப்பது ஆண்டுகளாகத் தமிழினத்தின் ஈடேற்றத்துக்காக ஓர் இயக்கத்தை உருவாக்கி அவ்வியக்கத்தின்
பயனாக இந்நாட்டி லுள்ள தமிழரின் மொழி, பண்பாடு, அரசியல் உரிமைகள் காப்பாற்றப்படல்
வேண்டுமென உழைத்த பெருமகனாரின் நினைவாகத் தமிழ்த்துறைகளைப் பற்றிய இரு சொற்பொழி
வுகளை நிகழ்த்த எண்ணியுள்ளேன். அன்னார் தொடக்கிவைத்த இயக்கம் இன்னும் வலுப்பெற்று இந்நாட்டில்
நாம் முழு உரிமைகளுடன் வாழ வழிவகுக்க வேண்டுமென்று இறைவன் திருவருளை இறைஞ்சி
நிற்கின்றேன்.
இன்றைய கூட்டத்திற்கு என் நண்பர் துணைவேந்தர் வித்தியானந்தன் தலைமை தாங்குவது பற்றியும்
மகிழ்ச்சி கொள்கின்றேன். அவர்கள் இந்நாட்டில் தமிழர் பண்பாட்டின் சில துறைகள் வளர்ச்சிபெற
வேண்டுமென அரும்பணியாற்றி யுள்ளார். மேலும் அவரியற்றிய “தமிழர் சால்பு” எனும் நூல்
தமிழர் பண்பாட்டுத் துறையில் எழுதப்பெற்ற சிறந்த முதல் நூல்களில் ஒன்று. இன்னும் இவ்
விரிவுரையின் இறுதியில் தமிழ்த்தலைவர் உயர் திருவாளர் அமிர்தலிங்கம் நன்றியுரை
வழங்கப்போவதாக அறிகின்றேன். மூதறிஞரின் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்துபவர் அவர். அவர்
தலைமையில் நம்மியக்கங் கள் அனைத்தும் வெற்றிபெறல் வேண்டுமென்றும் வாழ்த்து கின்றேன்.
மக்களியல் வல்லுநர் (Anthropologists) பண்பாடு எனும் சொல்லைக் கையாளும் பொருள்களைப்
பற்றி நாம் குறிக்க வேண்டியதில்லை. அவர்களின் கருத்தின்படி பழைய மக்களின் வாழ்க்கையை
விளக்கும் எல்லாத் துறைகளும் பண்பாடு என்னும் சொல்லில் அடங்கும். சென்ற நூற்றாண்டில் மத்தியு
ஆர்ணல்ட் (Mathew Arnold) எனும் நூலாசிரியர் தாம் எழுதிய ஒரு நூலில் இக்காலத்திற்கு
ஏற்றவாறு பண்பாட்டுத் துறையை விளக்கினார். இந்த நூற்றாண்டு டி.எஸ். எலியட் எனும் ஆங்கிலப்
புலவர் “பண்பாட்டின் வரையறை பற்றிய குறிப்புகள்” எனும் நூலில் பண்பாட்டை இன்னும் விரிவாக
விளக்கினார். பண்பாடு என்பது இனிமையும், ஒளியும் என்றும், சிந்தனையின் தொழில் என்றும்
அழகிலும் மனித உணர்ச்சி யிலும் ஈடுபாடு என்றும் கூறியிள்ளார்.
நம்மிலக்கியத்தில் பண்பாடு என்னும் சொல் இந்நூற்றாண்டில் தான் ஆங்கில மறிந்த தமிழறிஞரால்
உண்டாக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இன்று நாம் பண்பாடு எனும் சொல்லால் குறிப்பிடும்
துறைகளை நம் முன்னோர் பண்பு, பண்புடைமை, சால்பு, சான்றாண்மை முதலிய சொற்களால்
குறித்துள்ளனர். இச்சொற் கள் வெவ்வேறு இடங்களில் வேறு சில பண்பாட்டுடன் தொடர்புள்ள
பொருள்களைக் குறித்தாலும் பல இடங்களில் பண்பாட்டையே கருதுகிறது. கலித்தொகையில்
“பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுவது” என்றும் வள்ளுவத்தில் “பண்புடையார் பட்டுண்டு
உலகம்” என்றும் வருவதைக் காண்க.
பண்பாடு உடையவரைச் சான்றோரென்றும், ஒழுக்க முடையோரென்றும் ஒளியோரென்றும், மாசற்ற
காட்சியுடையோரென்றும் அழைத்தனர். ஆங்கிலத்தில் Culture எனப்படும் சொல்லிற்குத் தமிழில்
பண்பாடு என்று குறிப்பிடுகின்றோம். ஆங்கிலச்சொல் எவ்வாறு இலத்தீன் சொல்லாகிய Cultura
Agri நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து பிறந்ததோ அதுபோல தமிழ்ச் சொல்லாகிய பண்பும்
நிலத்தைப் பண்படுத் துவதிலிருந்து தோன்றியிருக்கவேண்டும். உழவுத்தொழில் எவ்வாறு நிலத்தைப்
பண்படுத்துகிறதோ அவ்வாறே மனத்தை யும் மக்களையும் பண்படுத்துவது பண்பு. இச்சொல்லைத்தான்
பண்பாடு என்னும் பொருளில் பண்டைத்தமிழ் இலக்கியங் களில் நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார்.
பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட் பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை
முறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை புறத்திணை
மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு
பொழுதுபோக்கு விளையாட்டுகள், இவற்றையெல்லாம் குறிக்கும்.
ஓர் இனத்தாரின் பண்பாட்டை நாம் அறிந்து கொள்வதற்கு உயர்ந்த இலக்கியம் பயன் படுவதுபோல
நாடோடி இலக்கியமும் பயன்படுகின்றது. அதனை நாட்டுப் பாடல்களிலும் நாடோடி
இலக்கியங்களிலும் பழமொழிகள், முதுமொழிகளிலும் இசையிலும் நாடகத்திலும் நாட்டியத்திலும்
செந்தமிழ் - கொடுந்தமிழ் அமைப்பிலும் வளர்ச்சியிலும் காணலாம். மேலும் ஓவியம், சிற்பம்
கட்டிடக் கலை முதலிய கலைகளிலும் ஓரினத்தாரின் பண்பாடு தோன்றும்.
தமிழர் பண்பாட்டை ஈராயிரத்து ஐந்நூற்று ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்துவந்த
இலக்கியங்களும் கவின்கலை களும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் ஒரு சில நூல்களை மட்டும்
தமிழர் பண்பாட்டின் களஞ்சியங்களாகக் குறிப்பிட வேண்டுமாயின் ஐந்து நூல்களைக்
குறிப்பிடுவேன். அவை, தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந்தொக, புறநானூறு,
திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன.
தமிழர் பண்பாடு கால அடைவில் சிறிது மாறி வந்துள்ளது. ஆனால், அதனுடைய அடிப்படைக்
கொள்கைகள் இத்துணை நூற்றாண்டுகளாக மாற்றங்கள் அடையவில்லை. ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்த
காலத்தில், சிறப்பாக அவர்களுடைய சமய- சமூகக் கொள்கை கள், தமிழ் நாட்டிலும் பரவின.
சமணர், புத்தர், ஐரோப்பியர் தமிழ்நாட்டுடன் கொண்ட தொடர்பாலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆயினும் பிறநாட்டுச் சமயங்களும் மக்களும் தமிழ்நாட்டில் புகுந்த காலத்தில் தமிழ் மரபைக்
காத்துவரப் பயின்றனர். தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள்
சமணர். தமிழொழுக்கத்தின் களஞ்சியமாகிய வள்ளுவத்தை இயற்றியவர் சமணர் என்று சிலர்
கூறுகின்றனர். தொல்காப்பியரும் சமணரென்பது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் கருத்து.
ஆனால் அக்கருத்துக்கு அவர் போதிய சான்றுகள் தரவில்லை. இந்நூலாசிரியரும் வீரமா முனிவர்
போன்ற மேனாட்டாரும் தமிழ் மரபையே தழுவி வாழவும் பாடவும் முயன்றனர்.
நம் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே எக்காலத்தி லும் புலவர்கள் பாடியிருக்கின்றனர்.
பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டில் தமிழின் மறுமலர்ச்சிக்குக் காரணமா யிருந்த எழுத்தாளர்
பலர் ஆங்கிலத்தை நன்கு அறிந்திருந் தாலும், மேல்நாட்டு இலக்கியங்களையும், வரலாற்றையும்
நன்கு பயின்றிருந்தாலும் அவர்கள் தமிழ் பண்பாட்டை இழக்க வில்லை. மாற்றவில்லை.
மயிலாடுதுறை வேதநாயகம் பிள்ளை, சுந்தரம்பிள்ளை, வி.ஜி. சூரியநாராயணசாஸ்திரி என்னும்
பரிதிமாற்கலைஞர், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார்,
பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் மு. வரதராசன் போன்றவர்கள் தம் ஆங்கிலப்
பயிற்சியால் தமிழர் பண்பாட்டை விளக்கினா ரொழிய அதனை மாற்றவில்லை.
நாகரிகம் என்னும் சொல்லும் பண்பாடும் எனும் பொருளில் இக்காலத்தில் கையாளப்பட்டு
வருகின்றது. திருக்குறளிலும், நற்றிணையிலும் முதல் முதல் தோன்றுமிச் சொல் நகர
வாழ்க்கையின் அமைப்பையும் பயனையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் (Civilization) என்று
கூறப்படும் பொருளைத்தான் நாகரிகமும் குறிக்கின்றது. City, Citizen, Civilization
என்ற சொற்கள் இலத்தீன் மொழியின் Civitus, Civis, Civilisation எனும் சொற்களிலிருந்து
தோன்றியவை. அதேபோல இந்த இலத்தீன் சொற்கள் எக்காலத்தில் தோன்றினவோ அக்காலத்திலேயே நகர்,
நகர நம்பியர், நாகரிகம், என்ற சொற்களும் தோன்றின. சங்க இலக்கியத்தில் நகர், நகரைக்
குறிப்பதுடன் ஒரு பெரும் இல்லத்தையும் குறிக்கும். நகரில் சீரடைந்த மக்களை நகர நம்பியர்
குறிக்கும்.
சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் நகர நம்பியர் வருவதைக் காண்க. நகர் என்ற சொல்
திராவிடச் சொல்தான். வடமொழிச் சொல்லன்று. ஆரியர் வட இந்தியாவைக் கைப்பற்றிய காலத்தில்
திராவிட மக்கள் பெரும் நகர்களில் வாழ்வதைக் கண்டு வியப்பு அடைந்தனர். திராவிட
மக்களிடமிருந்தே நகர்களை அமைக்கவும் ஆரியர் கற்றுக் கொண்டனர்.
இந்நூற்றாண்டில் நாகரிகம் என்னும் சொல்லையும் பண்பாடு என்ற பொருளில் கையாளுவது
மரபாயிற்று. ஆனால் நாகரிகம், நகர வாழ்வையும், நகர வாழ்க்கையால் பெறப்படும் நலன்களையும்
குறிப்பதுடன் அறிவியல் துறையால், பொரு ளியல் துறையால் மக்கள் அடைந்துவரும்
மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் குறிக்கத்தான் பயன்படுத்த வேண்டும்.
சில வேளைகளில் பண்பாடு எது, நாகரிகம் எது என்று பிரித்துக் கூறுவது எளிதாக இராது.
ரேணர் (TURNER) என்பவர் The Great Culture Traditions என்ற நூலில் உலகின் பெரிய
நாகரிகங்களையும் பண்பாடுகளையும் விளக்கியுள்ளார். ஆர்ணல்ட் ரொயிம்பி (Arnold Toynbee)
என்பவர் The Great Civilization எனும் நூலில் பண்பாடும் நாகரிகமும் என்று கூறுவதும்
இயல்பாயிற்று. பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் இந்து நாகரிகம் “Hindu Civilization”
கிறிஸ்தவ நாகரிகம் என்று கூறும்பொழுது பெரும்பாலும் பண்பாட்டையே கருதுகின்றனர்.
ஆதலால்தான் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் “Culture and civilization “ என்று இணைத்துப்
பாடத்திட்டத்தின் தலைப்பை வெளியிடுகின் றனர். ஆனால் இயன்றமட்டும் இவ்விரு துறைகளையும்
பிரித்து நோக்குவது பண்பாட்டினை ஆழ்ந்து ஆராய்வதற்கு வழிவகுக்கும்.
தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்கள் சிலவற்றைச் சுருக்க மாகக் கூற விரும்புகின்றேன். அவற்றை
நம்மிலக்கியங்கள் பலவற்றில் தெளிவாகக் காணலாம். பரந்த உலக மனப்பான்மை ஒரு கொள்கை
ஆதலால்தான் புறநானூற்றில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் வள்ளுவத்தில் “யாதானும்
நாடாமால் ஊராமால்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. விருந்தோம்பல் ஒரு சிறந்த கொள்கை.
பிறரன்பு, ஈகை, தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் எனும் கோட்பாடு, என் கடன் பணிசெய்து
கிடப்பதே. அகத்திணை புறத்திணை மரபு, மானமென்றால் உயிரையும் கொடுத்துக் காப்பாற்றும்
வேட்கை, மனத்தூய்மை விடாது முயலல் எனும் கொள்கை, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற
நிகரற்ற மனநிலை, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் உயர்ந்த இலட்சியம் என்பன தமிழர்
பண்பாட்டின் அரிய சில கோட்பாடுகளென்றே கூறலாம்.
இவ்விலட்சியங்களைத் தமிழ் இலக்கியங்களில் பன்முறை தேற்றம் கொடுத்து வற்புறுத்துவதைக்
காண்கின்றோம். எடுத்துக்காட்டாக புறநானூற்றில் வரும் “உண்டாலம்ம இவ்வுலகம்” என்ற செய்யுளும்
“இம்மைச் செய்தது மறுமைக்கா மென” என்ற செய்யுளும் குறிப்பிடத்தக்கவை.
நம்மிலக்கியங்களை நன்கு ஆராய்ந்தால் அவை பண் பாட்டுத் துறைகளை நன்கு பயன்படுத்துவதைக்
காண்கின் றோம். தொல்காப்பியர் கருப்பொருளில் பண்பாட்டுத் துறைகள் சிலவற்றைக் கூறுகின்றார்.
அவற்றுள் வழிபாடும் இசையும் இசைக் கருவிகளும் சில. அகத்திணையியலில் 20ஆம் சூத்திரத்தில்
பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-
தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப
இவ்வாறே பண்பாட்டின் கொள்கைகளும் இலட்சியங்களும் எல்லாக் காலத்து இலக்கியங்களிலும்
கூறப்பட்டுள்ளன.
தமிழர் பண்பாடு கால அடைவில் மாற்றங்கள் அடைந் துள்ளதா எனும் வினாவிற்கு மாற்றம் அத்துணை
அடைந்த தில்லை. ஆனால் வளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறுதல் வேண்டும். வட ஆரியர்
தமிழ்நாட்டிற்கு வந்த காலத்திலும் சமணர், ஐரோப்பியர் ஆகிய பிற நாட்டார் செல்வாக்கடைந்த
காலத்திலும் தமிழர் பண்பாடு அடிப்படைக் கொள்கைகளில் அவ்வளவு மாற்றம் அடையவில்லை.
பிற சமயங்களைப் போதித்த பார்ப்பனரும் சமணரும் புத்தரும் ஐரோப்பியக் கிறிஸ்தவரும்
மகமதியரும் தமிழர் பண்பாட்டைத் தழுவ முயன்றனர். இந்து சமயத்தின் வழிபாட்டு முறையும்,
இலக் கியங்களும் தென்னாட்டுத் தத்துவங்களால் வளம்பெற்றன. வடமொழியிலுள்ள சமய இலக்கியங்கள்
பல சங்கரர், இராமானுஜர், மாதவர் போன்ற தென்னாட்டவரின் மூலமாகத் தென்னாட்டுத் தத்துவங்கள்
வடமொழியில் இடம்பெற்றன. சுனித்குமார் சட்டர்ஜி, இந்திய பண்பாட்டின் எழுபத்தைந்து
விழுக்காடு - திராவிட பண்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
சமணரியற்றிய சிலப்பதிகாரத்தையும், புத்தரியற்றிய மணிமேகலையையும் வீரமாமுனிவரியற்றிய
தேம்பாவணியை யும், உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தையும் ஆராயுங் காலை இவர்கள் தம்
சமயங்களின் கோட்பாடுகளைக் கூறினா லும் தமிழர் பண்பாட்டை எங்ஙனம் விளக்கியுள்ளாரென்பதும்
புலனாகின்றது.
இவை நிற்க, தமிழர் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள் சிலவற்றை ஒரு சிறிது ஆராய்வோம்.
பண்டைக்காலம் தொடங்கி தமிழ்மக்கள் மேற்றிசை நாடு களோடும் கீழ்த்திசை நாடுகளோடும்
இந்தியாவின் வடபாகத் தோடும், வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். அக்காலத் தில்
தமிழ்நாட்டின் பட்டையும் மிளகையும், முத்தையும் இன்னும் பல பொருட்களையும் உலகம்
விரும்பியுள்ளது.
தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு, அதனை பண்டமாற்றத் திற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது.
கீழ்த்திசை நாடுகட்குச் செல்லவேண்டிய மேற்றிசைப் பண்டம், தமிழ்நாட்டில் இறக்கப்பெற்று வேறு
மரக்கலங்களில் கீழத்திசை நாடுகட்கு அனுப்பப்பட்டது. இவ்வாறே கீழத்திசைப்பண்டமும் தமிழ்
நாட்டில் வைத்து மரக்கலங்களில் மேற்றிசை நாடுகட்கு அனுப்பப்பட்டது. மேற்றிசை நூல்களே சங்க
இலக்கியத்தைப் போல் இவ்வணிகத்துக்குச் சான்று தருகின்றன.
எனவே இத்தாலிய நாட்டில் வாழ்ந்த ஸ்டொயிக் (Stoic) வாதிகள் உரோமையப் பேரரசு காலத்தில்
எவ்வாறு ஓர் உலக மனப்பான் மையை வளர்த்தார்களோ அவ்வாறே சங்ககாலத்திற்கு முற்பட்ட காலம்
தொடங்கி ஓர் உலக மனப்பான்மை தமிழ் நாட்டில் பரவியுள்ளது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”,
என்றும் யாதானும் நாடாமால் ஊராமால்” என்றும் கூறுவதற்கு இம்மனப்பான்மை ஊக்கமளித்தது.
மேலும் சமணம், புத்தம் போன்ற சமயங்களும் தமிழ் நாட்டில் வரவேற்கப்பட்டதால் இம்மனப்பான்மை
விரிவாகியது. பார்ப்பனர், மொழிபெயர் தேயத்தார், யவனர், புலம் பெயர் மக்கள் தமிழ்
மக்களோடு இனிதாக வாழ்ந்து வந்தார்கள்.
இம்மனப்பான்மை ஒரு சில காலங்களில் சமயக்காழ்ப்பால் மாசு அடைத்ததாயினும், அது
எக்காலத்திலும் தமிழ் மக்களிடம் வளர்ந்தே வந்துள்ளது. பிற மக்களின் நலத்தைக் கருதும் பண்பு,
தமக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்னும் தன்மை இச் சிறப்பை மேலும் வளர்த்தது.
இம்மனப்பான்மை வட ஆரியர், கிரேக்கர், போன்றோருடைய பண்டைக் கொள்கைகளுடன்
முரண்பட்டேயிருந்தது. பிளேட்டோ, அரிஸ்டோட்டல் போன் றோர் கிரேக்கர் மட்டுமே உயர்ந்தவர்கள்
என்றும், பிற மக்களை நாகரிகம் அற்றவர்கள் என்றும் கூறிவந்தனர். வட ஆரியர் இமயமலைக்கும்
விந்தியமலைக்கும் இடையேயுள்ள நிலம் தான் புண்ணிய பூமி என்று கருதினர்.
உலக மனப்பான்மையில் இருந்து தோன்றிய வேறொரு இயல்பினைக் கண்ணோட்டமென்று
(Tolerance,Ecumenism) அழைக்கலாம். தமிழ்நாட்டிற்கு அப்பாலிருந்து வந்த சமயங்க
ளெல்லாம், தத்துவங்களெல்லாம் தமிழ்நாட்டில் தடையின்றிப் போதிக்கப்பட்டன. பெரும் விழாக்களில்
தத்துவ வாதிகள், சமயவாதிகள் தத்தம் கொடிகளைப் பறக்கவிட்டுத் தம் கருத்துக் களைப்பற்றி உரை
நிகழ்த்தினர். திருவள்ளுவர் தம் கருத்துக் களைப் பல மூல நூல்களிலிருந்து எடுத்திருக்க
வேண்டும். சங்க நூல்கள் பல்வேறு கருத்துக்களுடைய புலவர்களின் இலக்கியப் படைப்புகளைக்
கொண்டுள்ளன. சமணராகிய இளங்கோ அடிகள் தமிழர் தழுவிய பல பழக்கவழக்கங்களையும், வழிபாட்டு
முறைகளையும் விரித்துக் கூறியுள்ளார்.
சமணரும், புத்தரும் இசைக்கலை, நடனக்கலை போன்ற கலைகளை வெறுத்தாராயினும் இளங்கோ அடிகள்,
திருத்தக்கதேவர் போன்றோர் தமிழ்க்கலைகளை நன்கு விரித்துக் கூறியிருக்கின்றனர்.
திருவள்ளுவர் சமணராக இருந் திருப்பார் என்ற கூற்றுக்கு அவருடைய காமத்துப்பாலும்
இல்லறத்தைப் போற்றும் முறையும் முரண்பாடாக இருக்கின் றன. நச்சினார்க்கினியர்
சீவகசிந்தாமணிக்கு உரையெழுதியது போலச் சமணர் எனக் கருதப்படும் இளம்பூரணர் அகத்திணை
யியலுக்கு உரையெழுதியுள்ளார்.
இடைக்காலத்தில் வைணவர், சைவர் ஆகிய பார்ப்பன உரையாசிரியர் சமண நூல்களை எத்துணை
ஆர்வத்துடன் அவை இலக்கிய நூல்களெனக் கருதி, அவற்றில் மூலங்கட்கு நுட்பமான உரைகளை
எழுதியிருக்கின்றனர். பிற்காலத்தில் சமயசமரச கீர்த்தனைகள் என்றும், சமரசக் கொள்கைகள் என்றும்
எங்கு உண்மையும் அழகும் உள்ளதோ அங்கிருந்து கருத்துக்களை நூலாசிரியர் எடுத்துத்
தந்திருக்கின்றனர்.
பேராசிரியர் சேதுப்பிள்ளை திருக்காவலூர்க் கலம்பகத்தைப் பற்றியும், தேம்பாவணியைப்
பற்றியும், சீறாப்புராணத்தைப் பற்றியும் தந்த கருத்துக்களைப் போல வேறு எவரும் எழுதிய தாக
நான் அறியேன். திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், கிறிஸ்துவின் அருள்வேட்டல், புத்தரின்
அருள்வேட்டல் போன்ற இலக்கியங்களைப் பாடி இன்புற்று வாழ்ந்தார். கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை இயேசுவைப் பற்றிப், புத்தரைப் பற்றிப் பாடியுள்ளார்.
பிற நாடுகளிலிருந்து வந்த சமயக் குரவர் தமிழர் பண்பாட்டைக் கடைப்பிடித்து,
இக்கண்ணோட்டத்துடன் தமிழர் மரபின்படியே இலக்கியங்களையும், இலக்கணங்களை யும் யாத்தார்கள்.
வீரமாமுனிவர், கால்டுவெல் ஐயர், போப்பையர் போன்றவர்கள் இம்மனநிலையைக் கடைப் பிடித்து
வாழ்ந்தவர்கள்.
தமிழ் பக்தியின் மொழி என்று நான் அடிக்கடி கூறிவரு கின்றேன். ஏனெனில், தமிழிலுள்ள
பக்தி இலக்கியங்களைப் போல அழகிலும், ஆழத்திலும், பரப்பிலும் இத்துனை இலக்கியம் வேறெந்த
மொழியிலும் இருப்பதாக நான் அறியேன். பரிபாடல் முதலாக, இராமலிங்க சுவாமிகளும்
விபுலானந்த அடிகளும் ஈறாக, பக்திப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிறந்தவர்கள். பரிபாடலின்,
யாமிரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல, நின்பால்
அன்பும் அருளும் அறனும் மூன்றும்.
விபுலானந்தருடைய,
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளலடியினைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
அப்பர் சுவாமிகளின்,
மாசில் வீணையும் எனும் பாக்களைப்பாடி இன்புறாத தமிழ் மக்களில்லை.
இந்தப் பக்தி இலக்கியம் உண்டாகுவதற்கு நம் அகத்திணை இலக்கியம் ஒருவாறு துணையாக
இருந்திருத்தல் வேண்டும். இன்று தமிழ் மொழியை ஆராயும்பொழுது பக்தியை உணர்த் தும் சொற்கள்
பல அமைவதைக் காண்கிறோம். ஆதலால் சமயப் பொருளற்ற பிற நூல்களிலும் இந்தமொழி ஒலிக்கிறது.
எடுத்துக்காட்டாகப் பாரதிதாசன் பாடிய தமிழ் மொழி பற்றிய பாடல்கள் பக்திச் சொற்களை
மிகுதியாகக் கொண்டவை. நாயன்மார், ஆழ்வார், சேக்கிழார், கம்பர் போன்றவர்களுடைய பக்திப்பண்பு
உலகிலேயே நிகரற்றது.
இப்பக்திப் பண்பினை ஏனைய தமிழ்க் கலைகளிலும் காணலாம். தஞ்சாவூர்ப் பெரிய கோவில், கங்கை
கொண்ட சோழபுரம், இசைக்கலை, பரதநாட்டியம் போன்றவை பக்தியால் இயற்றப்பெற்றவை. அல்லது
பக்தியால் வளர்ச்சி யுற்றவை. இப்பக்தி பிற நாடுகட்கும் பரவியது. இந்தோனிசியா
விலிருந்தும் பிறம்பாணான்பானாத்தரான் கோயில்கள், கம்புச்சியாவிலிருந்தும் சில அரண்மனைகள்,
சிற்பங்கள், தாய்லாந்தில் கொண்டாடப்படும் திருவெம்பாவைத் திருநாள் இத்தமிழ்ப் பக்தியின்
பயனென்றே கூற வேண்டும். உலகம் போற்றும் ஆடவல்லாரின் வடிவம் இப்பக்தியின் பயனென் பதை யார்
மறுப்பார்? தமிழர் பண்பாடு பிறநாடுகட்குப் பரவுவதற்குப் பல்லவர் சோழர் படைவீரம் மட்டுமல்ல
இப்பக்தியும் காரணமாக அமைந்தது.
தமிழர் பண்பாட்டின் பக்தி எங்ஙனம் சிறந்து விளங்கியதோ நீதியும் அவ்வாறு சிறந்து
விளங்கியுள்ளது. பாரதியாரின் ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் பெற்ற
தமிழ்நாடு’ என்னும் கூற்றைச் சிந்திக்கும்பொழுதெல்லாம் அதன் உண்மையை உணர முடிகின்றது.
உலகநீதி இலக்கியங் களைச் சிறப்பாக ஆராய்ந்து அரும்பெரும் நூல்களை இயற்றிய அல்பேட் கவைட்சர்
என்னும் மகாத்மா திருக்குறளைப் பற்றி எழுதும்பொழுது “திருக்குறளைப்போல் உயர்ந்த கோட்பாடு
களைக் கொண்ட ஒரு நூலை இவ்வுலகில் காண்பது அரிது” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறளை அவர் ஜெர்மன் மொழிபெயர்ப்பில் படித்தார். தமிழ் மொழியில் அதனைப்
படித்திருந்தால் இன்னும் பன்மடங்கு அதிகமாக அதன் பெருமையை உணர்ந்திருப்பார்.
திருக்குறளுக்குப் பின் தோன்றிய ஏனைய நூல்களைப்பற்றி நான் குறிப்பிட வேண்டியதில்லை.
தமிழை முதற்கற்ற மேனாட்டார் அனைவரும் நம் நீதி நூல்களையே முதலில் மொழிபெயர்த்துத் தமிழ்
மக்களுடைய வாழ்க்கை ஞானத்தைப் போற்றினார்கள். ஒழுக்கமென்பது தமிழர் பண்பாட்டின் ஓர்
அடிப்படை கொள்கையாக அமைந்து, இன்றும் தமிழர் வாழக்கைக்குப் பெரும் அழகையும்
மனநிறைவையும் நல்குகின்றது. தமிழ் மக்கள் இத்துணை நூற்றாண்டுகளாகத் தனி நாடுகளில்
வாழ்ந்து செழித்தோங்குவதற்கும், அரசியல் வாழ்க்கைக்கும், இவ்வொழுக்கமே துணையாக அமைந்தது.
எனவேதான், போப்பையர் இத்துணை நீதி நூல்களை இயற்றிய மக்களுக்குக் கடவுளின் சிறப்பான அருள்
இருத்தல் வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.
இம்மக்கள் நலக் கொள்கையை ஆங்கிலத்தில் Humanism என்று அழைப்பர். ரெறன்ஸ் (Terence) என்னும்
இலத்தீன் புலவர் “நான் மனிதன். மனிதனுக்கு இயல்பான எதனையும் நான் வெறுப்பதில்லை” எனக்
கூறிய கூற்றை மேல்நாட்டார் இம்மக்கள் நலப்பண்பின் குறிக்கோளாகப் போற்றுவர். இப்பண்பு நம்
பண்பாட்டில் ஓர் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது. மனிதனை என்றும் பேணவேண்டுமென்றும்,
ஒரு செயலால் வரும் பிற நலன்களைக் கருதாமல் நன்மையை, நன்மைக்காகவே செய்ய வேண்டுமென்றும்
உணர்ந்த தமிழ்ப் புலவர்கள் பலர்.
“இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகன் ஆஅய்அல்லன்” (புறம். 134) என்றும்,
‘மேலுலகம் இன்றெனினும் ஈதலே நன்று’ என்றும் வற்புறுத்தியுள்ளனர் நம் புலவர்.
பண்டைக்கால இலக்கியங்களில் இவ்வுலக வாழ்க்கையும், மக்களோடு இன்புற்று ஒழுகுவதும்,
இல்லறத்தின் இனிய நலன்களைக் காண்பதும், வாழ்க்கையின் நோக்கங்களாகக் கருதப்பட்டன புறநானூற்றில்.
உண்டாலம்ம இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இவையவதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இவரே............
புகழெனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்வர்...
அன்னை மாட்சிய னையராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலும் உண்மையானே. (புறம். 182)
என்ற செய்யுளில் தமிழர் பண்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளைக் காணலாம். சங்க
இலக்கியத்துக்கும், வடமொழியில் இயற்றப்பெற்ற பழைய இலக்கியங்கட்கும் உள்ள பெரும் வேற்றுமை
இம் மனித நலக் கொள்கையே. ஆதலால்தான் மேல்நாட்டு அறிஞர் தமிழ் இலக்கியத்தின் ‘Life
Affirmation‘ - வாழ்க்கை வலியுறுத்தல் எனும் பண்பைப் போற்றுகின்றனர்.
மக்கள் நல பண்பில் சிரிப்பென்பது மக்களின் சிறந்த ஓர் இயல்பு ஆதனால்தான் புலவர்கள் நட்பைப்
பற்றியும், சிரிப்பைப் பற்றியும் எப்பொழுதும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். இந்நூற்றாண்டின்
ஆங்கிலப் புலவர் ஒருவர் பாடுகின்றார்.
‘‘From quiet homes and first beginning
Our to the undiscovered ends
There’s nothing worth the wear of winning
But laughter and the loe of friends’
திருவள்ளுவர் சிரிப்பைப் பற்றிக் கூறும் இடங்கள் நமக்கு வியப்பைத் தருகின்றன.
“நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்” (திரு. 999)
ஈராயிரம் ஆண்டுகட்கு முன் எந்நாட்டுப் புலவரும் இவ்வாறு கூறியிருப்பரோ என்பது ஐயம்தான்.
மனிதநலப் பண்பிலிருந்து பிறக்கும் ஓர் இயல்பு பிறரன்பு. தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்
என்னும் இலட்சியம் எக்காலத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவோ சான்றோ ருடைய பெரும்
இயல்பு என் கடன் பணி செய்து கிடப்பதே எனப் பிற்காலத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வுலகம்
உறுதியாக நிலைத்திருப்பதற்கு இத்தகைய கொள்கையுடைய சான்றோர் இருப்பதே காரணம்.
இந்நூற்றாண்டில் சாதி வேற்றுமைகளை ஒழிக்க வேண்டுமென்றும் மக்களினத்தின் ஒற்றுமையை
நிலைநிறுத்த வேண்டுமென்றும் விளக்கும் இயக்கங்கள் இக்கொள்கையிலிருந்தே தோன்றின.
பிறருக்குப் பணி செய்யும் மனநிலை இப்பண்பின் பயனே.
தமிழ் மக்களுக்கு இயற்கையிலிருந்த ஈடுபாடும், இயற்கையை செய்யுளுக்குப் பின்னணியாக
அமைக்கும் முறையும், நமக்குப் பெரும் வியப்பைத் தருகின்றது. சங்க இலக்கியத்தையும்,
இடைக்கால இலக்கியத்தையும் பயில் கின்றவர்கள் தமிழரின் இயற்கை ஈடுபாட்டை ஆழமாக
உணர்வார்கள். தொல்காப்பியப் பொருளதிகாரம் இத்துணை நுணுக்கமாக இயற்கையைப் புலனெறி
வழக்கிற்கு அமைத் ததுபோல வேறெந்த இலக்கியத்திலும் அமைந்ததாகத் தெரிய வில்லை.
ஐந்திணைக்குப் பண்டைத்தமிழர் கொடுத்த பெயர்கள் அவர்கள் எத்துணை அளவிற்கு இயற்கையோடு
வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகின்றது.
மலையையும் மலைசார்ந்த இடத்தையும் குறிஞ்சி என்று அழைப்பதற்கு எத்துணைக்காலம் சென்றிருக்க
வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை மலைச்சாரலில் பூக்கும் இச்செடியை
மலைப்பகுதிகட்குப் பொருத்தமான ஒரு பெய ராகக் கருதினார்கள். இவ்வாறே பிற நிலங்கட்கும்
பெய ரிட்டனர். மலர்களையும், மாலைகளையும் அவர்கள் பயன் படுத்திய முறை அவர்களுடைய அழகு
ஈடுபாட்டைப் புலப்படுத்துகின்றது. அன்பிற்கும் மலர்களைக் கையுறையாகக் கொடுத்தனர். போரின்
வெவ்வேறு பிரிவுகட்கும் வெவ்வேறு அடையாளப் பூக்களைக் கையாண்டனர். நம் பழைய
இலக்கியங்களில் முல்லையைப் பற்றியும், காந்தளைப் பற்றியும் கொன்றையைப் பற்றியும் புகழும்
செய்யுட்கள் பெருமின்பம் தருகின்றன. முல்லை சார்ந்த கற்பினள் என்றும், முல்லை நாறும்
கற்பினள் என்றும் வருமடிகளில் முல்லைமலர் எவ்வாறு கற்பிற்கு அடையாள மலராக அமைந்தது
என்பதைக் காட்டுகின்றது. முல்லை வரை அணிசெய்யப் பலமுறைகளைக் கையாண்டனர். புறநானூற்றில்
வருமிந்தச் செய்யுள் நம் நினைவில் என்றும் நிலைத்திருக்கத் தகுதிவாய்ந்தது.
இளையோர் சூடார், வளையோர் கொய்யார்
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான், பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க்கடங்கத
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே. (புறம். 12)
தமிழின் மறுமலர்ச்சி காலத்திலும் இவ்வியற்கை ஈடுபாடு குறையவில்லை. பாரதியார்,
பாரதிதாசன், தேசிகவிநாயகம் பிள்ளை போன்றோருடைய இயற்கை ஈடுபாடு அவர்கள் பாடல்களில்
தெளிவாகத் தோன்றுகின்றது. வேதநாயகம் பிள்ளை மிக அழகாக இயற்கையையும் இறைவனையும்
இணைத்துப் பாடியுள்ளார்.
கதிரவன் கிரணக் கையாற்
கடவுளைத் தொழுவான் புட்கள்
சுதியடும் ஆடிப் பாடி
துதி செயும் தருக்கள் எல்லாம்
பொதி அவர் தூவிப் போற்றும்
பூதம் தம் தொழில் செய்தேத்தும்
அதிர் கடல் ஒலியால் வாழ்த்தும்
அகமே நீ வாழ்த்தா தென்னே.
நம் மக்கள் நம் பண்பாட்டிலும் இயற்கை ஈடுபாட்டினை இழந்துவிடுதலாகாது. மலர்களையும்,
மாலைகளையும் இறை வழிபாட்டிற்கும், வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகட்கும் தொடர்ந்து பயன்படுத்தி
வருதல் வேண்டும். நம்மில்லங்களில் மல்லிகை முல்லை மலர்ச் செடிகளை வளர்த்துப் பேணுதல் வேண்டும்.
தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இருந்த அரசுகள் வெவ்வேறு அரசுகளாக இயங்கத் தமக்குள்
சிலவேளைகளில் போரில் ஈடுபட்டிருந்த போதிலும் தாம் அனைவரும் ஓரினத்தைச் சார்ந்தவரென்றும்
தமிழ்மொழி தம்மை இணைப்பதாகவும் கருதி வந்தனர். பெருநில மன்னரும் குறுநில மன்னரும் தம்
எல்லைகட்குள் அரசுசெலுத்தி வந்தாலும் தம்மனைவரின் நாட்டையும் தமிழகமென்றும், பொதுமை
சுட்டிய மூவருலக மென்றும் அழைத்தனர். தமிழ்மொழியே அன்னாருடைய ஒற்றுமைக்கும்,
ஒருமைப்பாட்டிற்கும் வழிவகுத்தது. தமிழ் நாட்டின் எல்லைக்கப்பால் இருந்த நாடுகளை
“மொழிபெயர் தேயம்” என்று அழைத்தனர். புறநானூறும் சிலப்பதிகாரமும் இவ்வாற்றலைப்
புலப்படுத்தும் இடங்கள் பலர். கனகவிஜயர் தமிழர் வீரத்தை ஏளனம் செய்த காலை.
“தென்தமிழாற்றல் அறிந்திலராங்கு” என்று கூறிச் சேரர் வடநாட்டின் மீது படையெடுத்தனர்.
தமிழ் மக்களுக்குத் தம் சொந்த அரசின் பற்றோடு, தமிழ்நாட்டுப்பற்று என்னும் எல்லாத் தமிழ்
அரசுகளையும் அடக்கியபற்று இயல்பாக அமைந் திருந்தது. தமிழ்ப்பாணரும், புலவரும் குறுநில
மன்னரிடமும் பெருநில மன்னரிடமும் சென்று அன்னாரை வாழ்த்திப் பரிசில் பெற்றனர்.
இளங்கோ அடிகள் மூவேந்தரின் ஒவ்வொரு நாட்டின் சிறப்பையும் பாடியுள்ளார். நாயன்மார், ஆழ்வார்
வடமொழி இலக்கியத்திலிருந்து, சமயக்கொள்கைகள் சில வற்றைப் பயின்றாலும் தமிழ்நாட்டுப்
பற்றையும் அவர்கள் தெளிவாகத் தம் பாடல்களில் காட்டியுள்ளனர். இவ்விரு வகைப்பற்று நமக்கும்
ஒரு பாடமாக அமைகின்றது. ஈழநாட் டில் வடபகுதியும், கிழக்குப் பகுதியும், மலைநாட்டுப்
பகுதியும் தம் தனித்தனி இயல்புகளைப் பாராட்டி வந்தாலும் தமிழ் மக்கள் என்ற முறையில்
பண்டைக்கால ஒற்றுமை முறையை நாம் தழுவ வேண்டும்.
தமிழ் மக்கள் இத்துனை நூற்றாண்டுகளாகத் தழுவிய சமயங்கள் பல. ஆயினும் எச்சமயத்தைச்
சார்ந்தாலும் தாம் தமிழ் மக்கள் என்று தமிழர் பண்பாட்டையும் கொள்கை களையும் அவர்கள்
கடைப்பிடித்தே வந்தனர். இன்றும் கடைப்பிடித்தே வருகின்றனர்.
நம்மிலக்கியத்திலும் கலைகளிலும் தோன்றும் தாய்மொழிப் பற்றினைப் பற்றி நான் விரிவாகக்
கூறவேண்டியதில்லை. சேக்கிழாருடைய பெரியபுராணத்தை நான் படிக்கும் பொழு தெல்லாம்
அவருடைய உருக்கம் நிறைந்த தமிழ்ப்பற்று என் னுள்ளத்தைக் கவர்கின்றது. தமிழ் என்ற சொல்
வருமிடங் களிலெல்லாம் அழகும் அன்பும் நிறைந்த அடைமொழிகளை அமைத்தே கூறுவார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய மறுமலர்ச்சி இம்மொழிப்பற்றை இன்னும் விளக்கமாக
எடுத்துக்காட்டி யுள்ளது. வேதநாயகம் பிள்ளை, பரிதிமாற்கலைஞன், சுந்தரம் பிள்ளை,
மறைமலையடிகள் போன்றவர்கள் இப்பற்றினைத் தம் நூல்களில் தெளிவாகக் காட்டுகின்றனர்.
பேராசிரியர் சேதுப்பிள்ளையின் நூல்களில் தமிழில் இனிமை பக்கந்தோறும் இனிக்கின்றது.
ஆயினும் இம்மொழிப் பற்றினை பாரதியாரும் பாரதிதாசனும் என்றும் மறக்கமுடியாத
செய்யுட்களில் பாடியிருக்கின்றனர்.
பாரதியாரின் ‘செந்தமிழ் நாடென்னும்’ செய்யுள் வரலாற்று உண்மை நிறைந்த அரிய செய்யுள்.
அவருடைய ‘யாமறிந்த மொழிகளிலே’ என்னும் செய்யுள் தமிழர்கட்கு எழுச்சி தரும் செய்யுள்.
இவ்விரு செய்யுட்களையும் நம் சிறுவருடைய பாட நூல்களிலே எது காரணம் பற்றி
சேர்க்காமலிருக்கிறார்களோ நானறியேன். நம்மொழிப் பற்றையும் நாட்டுப்பற்றையும்
குறைப்பதற்காகவே இவ்விருட்டடிப்பு ஒரு சூழ்ச்சி என்று கருதுகின்றேன்.
தமிழ்நாடும் தமிழ் அரசுகளும் இத்துனை நூற்றாண்டுகளாக உலக வரலாற்றில் சிறந்து
விளங்குவதற்குக் காரணமாக இருந்தது தமிழரின் நீதி தழுவும் ஆட்சிமுறையே, “நெல்லும்
உயிரன்று, நீரும் உயிரன்று, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” - என்ற குறிக்கோளும்,
“மாதவர் நோன்பும், மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனின் இன்றாம்” - என்ற கொள் கையும்
ஆட்சிக்கு அடிப்படையாக இருந்த கொள்கைகள்.
தமிழராட்சி முறைகளைக் கூறுவதென்றால் இச்சொற்பொழிவு நீளும். ஆயினும் ஆட்சியமைப்பும்
பண்பாட்டின் ஒரு பகுதி யாதலால் அதைக் குறிப்பிட விரும்புகின்றேன். மார்க்கோ போலே என்ற
இத்தாலியர் தமிழ்நாட்டிற்கு வந்த காலத்தில் சோழருடைய ஆட்சியையும் தமிழ்நாட்டு
வாணிகவளத்தையும் கண்டு “சோழநாடு இந்தியாவின் மிகப் பெருமை வாய்ந்த உன்னத நாடு” என்று
குறிப்பிட்டார்.
கவின்கலைகள் பண்பாட்டில் சிறந்த இடம் பெறுகின்றன. தமிழ் மக்கள் எழுப்பிய கோயில்கள், அமைத்த
கோபுரங்கள், செதுக்கிய சிலைகள், வளர்த்த இசையும் நாட்டியமும் அவர்க ளுடைய அழகுக்
கலையின் ஈடுபாட்டுக்குச் சான்றுகளாக மிளிர்கின்றன. ரொடான் (Rodin) என்னும் பிரான்சிய
நாட்டுச் சிற்பி ஆடவல்லாரின் சிலையை வியந்து போற்றியுள்ளார்.
இவ்வாறு நம்மெல்லாக் கலைகளும் உலகின் மதிப்பைப் பெற்றுள்ளன. நம் மக்களின் கலையீடுபாடு
குறைந்து வருவ தற்கு நாம் ஒருபோதும் இடமளித்தல் ஆகாது. ஈழ நாட்டில் எத்தனையோ கட்டிடச்
செல்வங்களை அந்நியராட்சிக் காலத்தில் நாம் இழந்துள்ளோம். மீண்டும் அழகுச் சின்னங்களை
நிறுவுவது ஒரு பெரும் தொண்டாகும். அத்தகைய ஒரு சின்னத்தைத் தந்தை செல்வாவின்
நினைவுக்கு நம் தலைநகரில் நிறுவியது போற்றத்தக்கது.
தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் சிந்துவெளி நாகரிகத்துடன் ஒப்பிட்டுப்
பார்க்கும்போதுதான் இந்திய வரலாறு தெளிவான விளக்கத்தை அடைகின்றது. ஒரு காலத்தில்
சிந்துவெளி நாகரிகம் என்று நாம் அழைக்கும் நாகரிகம் இந்தியா எங்கும், இலங்கை எங்கும்
பரவியிருந்தது என்பதை ஆராய்ச்சி மேலும் மேலும் காட்டுகின்றது. தமிழர் சமயம், தமிழர்
கலைகள், பிற்காலத்தில் காட்டும் இயல்புகள், மொகஞ்சதாரோ - ஹாரப்பா நகர்களின் கலைகளுடன்
ஒப்பிட்டுப் பார்க்கும்போது தெளிவாகின்றன. சென்ற சில ஆண்டுகளாக இந்திய பண்பாடும்
நாகரிகமும் பெரும்பாலும் திராவிட மக்களுடைய பண்பாட்டையும் நாகரிகத்தையும்
அடிப்படையாகக் கொண்டவை என்ற கருத்து இன்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
சுனித்குமார் சட்டர்ஜி, தம்மிறுதி நாட் களில் இந்தியாவின் பண்பாட்டில் எழுபத்தைந்து
விழுக்காடு திராவிடப் பண்பாடு என்று கூறியுள்ளார். அவ்வாறே பிரான்ஸ் நாட்டு அறிஞர்
பேராசிரியர் ஜீன் பீலியோசா இந்தியாவிற்குத் திராவிட மக்களால் கொடுக்கப்பட்ட நன்மைகள்
இன்னும் முற்றாக ஆராயப்படவில்லை என்று எழுதியுள்ளார்.
தமிழருடைய பண்பாட்டைக் கிரேக்கர், உரோமர் போன்றோருடைய பண்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க
நம் மக்கள் விரும்புகின்றனர். நம் பண்பாட்டினைப் பிறருடைய பண்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது
அத்துணை எளிதன்று. நம்மிலக்கியங்கள் பலவற்றையும், வரலாற்றுச் சின்னங்கள் பலவற்றையும் நாம்
இழந்து விட்டோம். தமிழர் பண்பாட்டின் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இன்னும் எவ்வளவோ இட
முண்டு. நாகரிகங்களை ஒப்பிடுவது எளிது. பண்பாட்டை ஒப்பிடுவது அத்துணை எளிதன்று.
கிரேக்கர் இயற்றிய நாடகங்களைப் போல் நமக்கு நாடகங்கள் கிடைக்கவில்லை.
அவர் சில காலத்தில் நிறுவிய குடியாட்சியைப் போல் நம் தமிழ்நாட்டில் நாம் நிறுவியதாகத்
தெரியவில்லை. அவர்க ளுடைய சிந்தனையாளர் பிளேட்டோ, அரிஸ்டோட்டில் எழுதிய உரைநடை
நூல்களைப் போல் நமக்கு நூல்கள் கிடைக்கவில்லை. உரோமர் சட்டத்தை வளர்த்தவர்கள் மாபெரும்
பேரரசை நிறுவியவர்கள். ஆயினும், நாமும் சோழராட்சியும், திருவள்ளுவர், இராமானுஜர்
போன்ற தத்துவஞானிகளையும் எடுத்துக்காட்டாகக் காட்டலாம்.
பண்பாடு காலக்கிடையில் மாற்றம் அடைவதா என்றும் பலர் வினவக்கூடும். பண்பாட்டைப்
பேணிவராதிருத்தல் அதுமாற்றம் அடைதல் கூடும். தமிழ் மக்களோடு அக்காலத்தில் தொடர்பு கொண்டு
வணிகம் செய்த எத்தனையோ மக்களின் பண்பாடும் நாகரிகமும் அழிந்துபட்டன. எகிப்தியர்,
பாபிலோனியர், அசிரியர் போன்றோருடைய பண்பாடு எங்கே? நாகரிகம் எங்கே?
கீழ்த்திசை நாடுகளில் சாம்பர் என்ற இனத்தவர் மாபெரும் மாளிகைகளையும் அரண்மனை களையும்
தமிழர் மரபினைத் தழுவி நிறுவினர். ஆனால் கம்புச்சியா இன்று எந்நிலையில் உள்ளது.
தமிழரோ ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தம் பண்பாட்டைக் காப்பாற்றி வந்துள்ளனர்.
அவர்களுடைய நாகரிகம் மேல்நாட்டுச் செல்வாக்கால் மாற்றமடைந்திருந்தாலும் பண்பாடு சிறிய
அளவில்தான் மாற்றமடைந்துள்ளது.
இருபத்தைந்து ஆண்டுகட்கு முன், 1956ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் “தமிழர்
பண்பாடும்” - அதன் சென்றகால நிலையும் - இக்கால நிலையும் - வருங்கால நிலையும்” என்ற
பொருள் பற்றி விரிவுரையன்று நிகழ்த்தி னேன். அந்நாட்கள் தமிழ் மொழியை ஒதுக்கி
தனிச்சிங்களமே வேண்டுமென்ற இயக்கம் பரவி வந்த காலம்.
நாட்டில் ஒற்றுமையை விரும்பித் தமிழுக்கும் சமஉரிமை அளிக்க வேண்டுமென்று தமிழ்
மக்களனைவரும் ஒரே குரலெழுப் பினர். இன்று இருபத்தைந்து ஆண்டுகட்குப்பின் நாம் எல்லாத்
துறைகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளோம். நம் உரிமைகள் அனைத்தையும் இழந்து வாழ்கின்றோம். தந்தை
செல்வா, ஈழத் தனிநாட்டை - தமிழ் ஈழத்தை - அக்காலத்தில் கேட்கவில்லை. ஆனால் நமக்கு
இத்துணை ஆண்டுகளாக இழைத்து வந்த தீமைகளால் தனிநாட்டு கேட்கத் தூண்டப்பட்டோம்.
நம்மிலக்கியம், நம் கலைகள், நம் வாழ்க்கை வாழ வேண்டு மாயின் வளர வேண்டுமாயின்,
பண்பாட்டிற்கு ஏற்ற அமைதி யான சூழ்நிலை வேண்டும். நம் அன்றாட வாழ்க்கைக்கும் உரிமைகட்கும்
இடையறாது போராடிக் கொண்டிருக்கும் வேளையில் நம் பண்பாட்டைப் பேண உரிய வாய்ப்புகள் கிடையாது.
கலைகள் வளர்வதற்கு அரசின் ஆதரவும் தேவை. தனிப்பட்ட முறையில் மக்கள் எவ்வளவு உழைத்தாலும்,
இத்தகைய ஆதரவு இல்லாவிடில் மக்கள் தளர்ச்சி கொள்வார்கள். தம் நாடாளு மன்ற உறுப்பினர்
எத்தனைமுறை அரசுகாட்டும் பாகுபாட்டைப் பற்றி முறையிட்டிருக்கின்றனர். தமிழ் மாவட்டங்களில்
புதைபொருளாராய்ச்சி பற்றி அரசு விரும்புவதில்லை.
நம் கல்விக் கழகங்களில் தமிழர் வரலாறு பற்றிப் பாடநூல்கள் கூறுவதில்லை. எத்தனையோ
முறைகளில் நம் பண்பாட்டைக் கைவிட மறைவாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். நம் மக்கள்
விழிப்பாயிருந்து நம் சிறுவர்க்கும், இளைஞர்கட்கும் தமிழிலக்கியத்தின் சிறப்பையும்,
கலைகளின் சிறப்பையும் உணர்த்துதல் வேண்டும். நம் பண்பாட்டின் பழக்கவழக்கங் களைக்
குடும்பங்களில் கைவிடாது வளர்க்க வேண்டும்.
தமிழ் மக்கள் ஈழவளநாட்டில் விஜயன் வருமுன்னரே வாழ்ந்து வந்தனர். விஜயன் வந்தபொழுதே பெரும்
நாகரிக மடைந்த மக்கள் ஈழ நாட்டில் வாழ்ந்தார்கள் என்பதை மகாவம்ச நூலே சான்று. தமிழர்
பண்பாடு இந்த நாட்டில் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் தொடங்கி தனிப்
பண்பாடாக வளர்ந்துள்ளது.
தமிழ் மக்கள் இந்நாட்டில் தனிஇனமென்றும், இரு இனங்கள், இரு மொழிகள் கொண்ட நாடு
இதுவென்றும் கூறுவதற்கு 1956ஆம் ஆண்டு பல வாய்ப்புகள் கிடைத்தன. அவ்வாண்டில் அடியேன்
எழுதிய கட்டுரைகள் ‘Language and Liberty in Ceylon’’ என்னும் சிறு நூலில்
இக்கருத்து வற்புறுத்தப்பட்டுள்ளது. தனிச்சிங்களம் சட்டமாக இருக்குமட்டும் இவ்விரு இனங்களின்
ஒற்றுமை வாழ்க்கை கைவிடாது. தமிழ்மொழி இந் நாட்டில் ஆட்சி மொழியாகவும் அரசியல்
மொழியாகவும் இருந்தால்தான் தமிழ் மக்கள் ஒருவாறு ஆறுதலடைவர்.
வரலாறு வாழ்க்கையின் ஆசிரியன். ஐரிஷ் மக்கள் நானூறு ஆண்டுகளாகத் தம் பண்பாட்டைக்
காப்பாற்றப் போராடி இறுதியில் வெற்றி பெற்றனர். வெல்ஷ் மக்கள் நானூறு ஆண்டுகளாகத்
தம்மொழிக்காகவும், பண்பாட்டிற்காகவும் இயக்கங்களை வளர்த்து இன்று ஒருவாறு சில துறைகளில்
விடுதலையை அடைந்துள்ளனர். இவ்வாறே பெல்சியத்தில் பிளெமிஸ் மக்களும், பின்லாந்தில் பினிஸ்
மக்களும், ஸ்பெயினில் பாஸ்க் மக்களும் இன்னும் பல இனத்தாரும் இயக்கங்களை நிறுவிச் செயற்பட்டு
வருகின்றனர். நம் தந்தை செல்வா காட்டிய அகிம்சைவழியில் நாம் செயல்பட்டால் வெற்றி
காண்போமென்பது திண்ணம். மிக்க நன்றி.
பேராசிரியர் தனிநாயகம் வாழ்க்கைக் குறிப்புகள்

1913 ஆகஸ்டு 2 அடிகளார் பிறந்தநாள்
1.
- தந்தை:கென்றி தானிஸ்லாஸ் கணபதிப்பிள்ளை
2.
- தாய்: செசில் இரசம்மா பஸ்தியாம்பிள்ளை

1918-1930 ஆரம்பக்கல்வி, கல்லூரிக் கல்வி ஆகியவை. ஊர்க்காவற்துறை மற்றும்
யாழ்ப்பாணத்தில் முடித்தல்

1930-1934 கொழும்பில் செமினரிக் கல்வி

1934-1938 ரோம் உர்பன் பல்கலைக்கழகக் கிருத்துவ குருமார் கல்வி

1938-1939 கேரளத்தில் மறைப்பணி

1940-1945 துணைத் தலைமை ஆசிரியர், புனித தெரசான் உயர்நிலைப் பள்ளி, வடக்கன்குளம் -
தமிழ்நாடு.

1948 தூத்துக்குடியில் தமிழ் இலக்கியக் கழகத்தை நிறுவுதல் Tamil Academy

1949-1950 உலகில் பல நாடுகளுக்குப் பயணம் செய்தல்.

1952 Tamil Culture இதழைத் தொடங்குதல்

1952-1961 இலங்கைப் பல்கலைக்கழகம் - கல்வித்துறை - விரிவுரையாளர்

1961 அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்காண்டிநேவியா, சோவியத் யூனியன் ஆகிய
நாடுகளுக்குப் பயணம் செய்து கல்வி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளல்

1961 சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு
நிகழ்த்துதல்

1961 - 1966 மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறைப் பேராசிரியர், தலைவர்.

1964 உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவுதல் - பொதுச் செயலாளர் (International
Association for Tamil Reseach)

1966 மலாயா பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஓய்வு

1969 - 1970 Journal of Tamil Studies முதன்மை ஆசிரியர்

1970 - 1978 பாரிஸ் மற்றும் பல்வேறு உலக நாடுகளுக்கு ஆய்வு நிமித்தமாகப் பயணம் செய்தல்
- இலங்கையில் பல்வேறு உயர்நிலைக் குழுக்களில் பணி புரிதல்

1979 யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பிலுள்ள தியான மண்டபத்தில் வாழ்தல்

1980 ஏப்ரல் 27, 28 தந்தை செல்வநாயகம் நினைவுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தல்.

1980 செப்டம்பர் 1ஆம் நாள் மறைவு

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 8:39:32 AM5/30/15
to brail...@googlegroups.com
நிலக்கிடக்கையும் கவிதையியலும் : இயற்கைப் பாடல்களின் ஒப்பீடு
8
விவரங்கள்
எழுத்தாளர்: பேராசிரியர் சேவியர் தனிநாயகம்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: நவம்பர்2013
C வெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2013
இக்கட்டுரையை மொழியாக்கம் செய்திருப்பவர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை
முனைவர் பட்ட ஆய்வாளர்.Landscape and Poetry என்ற நூலில் இடம்பெற்றுள்ள Nature
Poetry Compared என்ற கட்டுரை மொழியாக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சேவியர் தனிநாயகம் தமிழ் செவ்விலக்கியப் பாடல்களில் உள்ள இயற்கைக் கூறுகளை;
சமசுகிருதப் பாடல்கள், கிரேக்கம் மற்றும் இலத்தீன் பாடல்கள், ஆங்கிலமொழிப் பாடல்கள்
ஆகியவற்றில் காணப்படும் இயற்கைக் கூறுகளோடு ஒப்பாய்வு செய்துள்ளார். சமசுகிருதப்
பாடல்களில் காணப்படும் இயற்கை குறித்த அதீதக் கற்பனைகள் தமிழ் இயற்கைப் பாடல்களில்
காணமுடியாது. சமசுகிருதத்தில் பூக்கள் வெறும் வர்ணனை மரபில் உள்ளன. ஆனால் தமிழ்ச்
செவ்விலக்கியப்பாடல்களில் பூக்கள் குறியீடுகளாகப் பாடப்பட்டுள்ளன.
சங்க இலக்கியத்தில் சமயமரபு உள்வாங்கப்படவில்லை. ஆனால் சமசுகிருதமரபு சமய மரபை
உள்வாங்கியுள்ளது. ஹோமர், ஹெசாய்டு, தியோ கிரிடஸ் ஆகியோர் சங்கப் புலவர்கள் அளவிற்கு
இயற்கையை உள்வாங்கவில்லை. சங்க இலக்கியத்தில் நகரங்கள் பெண்ணுக்கான உவமையாகக்
கூறப்பட்டுள்ளன. வேறு எந்த இலக்கியத்திலும் இத்தன்மை இல்லை. ஆங்கிலத்தில் காணப்படும்
இயற்கைப் பாடல்களைவிட தமிழில் உள்ள இயற்கைப் பாடல்கள் வளமாக உள்ளன. பல்வேறு மொழிகளில்
இயற்கை வெளிப்படுத்தப்படும் முறைமையிலிருந்து சங்கப் பாடல்களின் வெளிப்படுத்தும் முறை
வேறுபட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழில் தோன்றிய இயற்கைப் பாடல்களை ஆங்கில அல்லது ஐரோப்பியப் பாடல்களோடோ அல்லது
சமஸ்கிருதப் பாடல்களோடோ ஒப்பிட இயலாது. எனினும் அவ்வப் பாடல்கள் தோன்றிய நிலப்பரப்பின்
இயற்கைச் சூழல் ஆய்வுக் கான அடிப்படைக் காரணியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஐரோப்பாவின்
இயற்கைச் சூழல் குறிப்பிட்ட அமைதி நிலையையும் கட்டுப்பாடுகளையும் கொண்டது. ஆசிரியர்
அதனை யும் உற்று நோக்கியுள்ளார். அதன் மலைகள் மிக உயர்ந்தும் வியப்பில் ஆழ்த்தக்
கூடியனவாகவும் உள்ளன. வானளாவிய உயரத்தில் மிதப்பவை போலக் காட்சியளித்துக் காண்போரை
வசப்படுத்தக் கூடியவை. ஆனால் தென்னிந்தியாவில் உள்ள மலைகள் பசும் காடார்ந்த பகுதியாகவும்
தொடர்ந்து மாறுதல் களுக்குட்பட்டும் காணப்படுகின்றன. ஐரோப்பாவில் சூரிய உதயமும் மறைவும்
சிவப்பு அல்லது இரத்தச் சிவப்பு நிற முடையது.
ஆனால் அந்தியிருள் மாலை ஃப்ரா ஆஞ்சலி கோவின் ஓவியங்களில் உள்ளது போல அடர்த்தியற்ற அல்லது
வெளிர் சிவப்பு நிறத்தையுடையது. ஆனால் வெப்ப மண்டலப் பகுதியின் அந்திமாலை போன்று
அடர்ந்த நிறம் வேறெங்கும் இல்லை. ஐரோப்பாவின் நிலக்கிடக்கை புனைவற்ற அமைதி
நிலையுடையது. அவர்கள் கூறியது போல ஜெர்மனியில் மட்டுமன்றி பிற ஐரோப்பிய நாடுகளிலும்
ரோஜா மலர்கள் பொலிவுடையன. கரோத்தின் படத்தில் ரஃபீலின் பழைய மடோனா ஓவியங்களில்
காணப்படுவது போன்ற அமைதி நிலை, தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் இல்லை. இங்கு இயற்கை யின்
செழுமை அளவிறந்தும் புனைவுகளோடும் காணப்படுகின்றன.
மரங்களும் மலர்களும் அந்திமாலைப் பொழுதும் மிகப் பொலிவுடையவை. ஒரு கவிஞன்
திருப்பரங்குன்றத்தில் காணப்படும் பல்வேறுபட்ட மலர்களைக் கதிரவன் உதிக்கும் கிழக்கு வானத்து
வண்ணங்களோடு ஒப்பிடுகிறான். எங்கு நோக்கினாலும் நிறைவும் எல்லையற்ற செழுமையும் நிறை
வான உயிர்ப்புமே இயற்கையின் வெளிப்பாடாக உள்ளது. மிதமிஞ்சிய இவ்வண்ணப்பகட்டு
இலக்கியங்கள், உடை அலங்காரங்கள் என்று இந்நாகரிகத்தின் அனைத்துக் கூறுகளி லும் காணப்படுகிறது.
தென்னிந்தியாவின் இயற்கை அலங்காரமிக்கதாகவும் அணி நலமிக்கதாகவும் காணப்படுவதால்
தென்னிந்திய கலைகளும் இசை, இலக்கியம், சிற்பம், ஓவியம் முதலிய அனைத்தும்
நுட்பமானதாகவும் மிகுந்த ஒப்பனைகளைக் கொண்டதாகவும் விவரணங்களையுடையதாகவும்
அமைந்துள்ளன. தென்னிந் தியக் கோயில்கள் அங்கு உருப்பெற்ற பாடல்களோடு ஒத்திசை வுடையனவாக
உள்ளன. விவரணத் தொகுப்புகளாக செதுக்கப் பட்ட கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து
கோயில்களில் உள்ள மிகப்பெரிய கோபுரமாக எழுப்பப்பட்டுள்ளது. அதைப்போலவே தமிழ்ப்பாடலும்
ஒன்றோடொன்று தொடர் புறுத்திப் பாடப்பட்டுள்ளது.
பண்டைய நெடும்பாடல்களும் கூட ஆங்கில இலக்கணத்தின்படி முதன்மை வாக்கியம், எண்ணற்ற துணை
வாக்கியங்கள் சேர்ந்து ஒரு அலகாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை ஒன்றோடொன்று தொடர்
புடையதாகவும் முழுமையான பொருளைத் தருவதாகவும் உள்ளன. இத்துணை வாக்கியங்களுக்குள்
சொற்றொடர்கள் அமைந்திருக்கும். இத்தொடருக்குள்ளாக பெயரடைகளும் அவற்றோடு தொடர்புடைய
பெயர்ச்சொற்களும் உள்ளன. மரத்தின் கீழ் தலைவி நின்று கொண்டிருப்பதைக் கூற வந்த புலவர் மரம்
நிற்கும் இடம், அம்மரம் தாங்கியுள்ள இலைகள், மலர்கள், அம்மலர்களைச் சுற்றும் வண்டுகள்,
மரத்தண்டின் அளவு, நிறம் முதலிய பல விவரணங்களையும் தனித்தனி வாசகங்களாக அல்லது
தொடர்களாகக் கூறுவர். ஆங்கிலப் பின்புலத்தில் உருவாகிய எளிமையான அமைப்புடைய நவீன
ஆங்கில இலக்கியத்தை வாசித்துப் பழகியவர்களுக்கு மேற் கூறப்பட்ட பாடல் உருவாக்க முறைமை
மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் தமிழ்ப் பின்புலத்தில் உருவாகிய தமிழ் நுண்கலைகளைப் பழகியவர்களுக்கு இவ்வமைப்பு
குழப்பத்தை விளைவிப்பதில்லை. காஞ்சிபுரம் அல்லது சிதம்பரம் கோயில் கோபுரங்களை
புறத்தோற்றத்தில் பார்த்தி யோன் (கிரேக்க ஆலயம்) உடன் ஒப்பிட்டு நோக்கும் போது
கிரேக்கத்திற்கும் தமிழுக்குமான வேறுபாட்டை நம்மால் காணமுடியும்.1 இலக்கியங்களில் பண்டைய
நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் பதிவாகியுள்ளன. காளிதாசரின் பாடல்களை வேர்ட்ஸ்வேர்த்தின்
முல்லைப்பாடல்களோடு ஒப்பிடுவதைவிட வெர்ஜிலின் முல்லைப்பாடல்களோடு ஒப்பிடுவது எளிமை.
இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று. இதுவே இந்தியக் கலைகள்
குறித்த ரஸ்கின் தவறுதலான கணிப்பிற்கும் கூர்ந்த அறிவுடைய விமர்சகரான ஆலிஸ் மைனல்
அவற்றைப் பாராட்டுவதற்குமான வேறுபாடாக உள்ளது.
சமஸ்கிருதப் பாடல்கள்
சமஸ்கிருத, தமிழ்ப்பாடல்களுக்கும் மேற்கத்திய பாடல் களுக்கும் இடையே இயற்கை சார்ந்த கற்பனை
நலன்களின் ஒப்புமை இயல்பாகவே மிக அதிகம். திணைசார் தாவரங்கள், திணைசார் உயிரினங்கள்
போன்ற குறிப்பிட்ட பொதுவான காலநிலை அம்சங்களும் திடீர் என்று அல்லாது சீரான வளர்ச்சியின்
ஊடாக ஏற்பட்ட பரஸ்பரத் தாக்கங்களுமே தமிழ் இயற்கைப் பாடல்களுக்கும் சமஸ்கிருத இயற்கைப்
பாடல் களுக்கும் இடையிலான ஒப்புமைக்குக் காரணம். இவ் வொப்புமை இயற்கை சார்ந்த
சொல்லாடல்களிலும் ஆண்-பெண் வருணனைகளிலும் இயற்கை சார்ந்த தொன்மங்களிலும் நாட்டார்
வழக்காறுகளிலும் காணப்படுகின்றன. காட்டாக, மலைகளை பூமித்தாயின் முலைகளாகவும் பெண்
முகத்தை நிலவாகவும் மேகங்களை யானையாகவும் வருணிப்பது இயல்பு. இளவேனிற்கான
வருணனைகளிலும் பொது இயல்பு களைக் காணமுடியும். ஆனால் சங்க இலக்கியங்களுக்கும்
சமஸ்கிருத இயற்கைப் பாடல்களுக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.2
ரிக் வேதத்தின் பெரும்பகுதி சமய உணர்ச்சிப் பாடல்களாக உள்ளன. பத்தாம் பகுதி மட்டுமே
சமயச் சார்பற்ற பாடல்களைக் கொண்டுள்ளன. History of Sanskrit Literature என்கிற
நூலின் ஆசிரியர் ஏ.மெக்டோனல் குறிப்பிடுவதாவது “ரிக் வேதத்தின் பாடல்கள் இறை
வழிபாட்டுப் பாடல்களாகவே உள்ளன. மேலும் அவை தொன்மங்களாகவும் விளங்குபவை.
இயற்கை நிகழ்வுகள் கடவுள்களாக வளர்ச்சியுறுதல் என்னும் தற்குறிப்பேற்றச் செயல்
மிகப்பழமையான ஒன்று. இயல்பு வாழ்க்கையில் மனிதனால் நிகழ்த்த முடியாத செயல்
களை/நிகழ்வுகளை வேதகால இந்தியன் அதாவது மிகவும் வளர்ச்சியுறாத சமூகத்தைச் சேர்ந்த
மனிதன் இயற்கை நிகழ்வு களை கடவுளாக ஏற்றிக் குறிப்பிடுவது இயல்பு. அந்த இயற்கை
நிகழ்வுகள் அவனுக்கு மிகுந்த வியப்பை அளிக்கக் கூடிய தாகவும் உள்ளன. அவன் இயற்கையின்
செயல்பாடுகளை குழந்தை மனநிலையில் வியப்பாகவே காண்பான். ஒரு கவிஞன் கேட்கிறான் ஏன்
சூரியன் வானத்தினின்று விழ வில்லை; இன்னொரு அதிசயமாக விண்மீன்கள் தினமும் காலையில்
எங்கு செல்கின்றன; மூன்றாவது அதிசயமாக அனைத்து ஆறுகளும் கடலில் தொடர்ந்து விழுந்து
கொண் டிருந்தாலும் கடல் ஏன் இன்னும் நிறையாமலேயே உள்ளது”3.
கடவுளர் மற்றும் சமயக் கோட்பாட்டில் வடக்கத்திய கருத்துருவாக்கத்திற்கும் தெற்கத்திய
கருத்துருவாக்கத்திற்கும் வேறுபாடு உள்ளது. இயல்பாக அல்லது எதார்த்தமாக தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு தமிழ்க் கவிஞனால் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பெறும் முப்பத்து
மூன்று கடவுளர் குறித்தும் அவர்களோடு தொடர்புடைய மிக விரிவான தொன்மங்கள் குறித்தும்
விளங்கிக் கொள்ள இயலாது. சங்க இலக்கியம் ஆரியச் சமயத்தாலும் கொள்கைகளாலும் பிற்காலத் தில்
தாக்கம் பெற்றது என்பதை மிகத் துல்லியமாக விளங்கிக் கொள்ள முடியும். எனினும் ஆரியத்
தாக்கம் பெறாத எஞ்சிய பகுதிகள் அதற்கே உரிய பண்பான எதார்த்த/இயல்புத்தன்மை கொண்டுள்ளது.
தமிழரின் கருத்துருவாக்கம் இயற்கை மீது மனிதப்பேற்றிக் கூறும் தன்மை கொண்டது. எனினும்
அவை ஆரியர்களின் தெய்வக் கோட்பாட்டைப் போல அண்டப்பிறப்புக் கோட் பாட்டைப் போல அதீத கற்பனை
கொண்டவை அல்ல. பிற் காலத்தில் ஆரியர்களின் கற்பனைப் பண்பு அறிமுகப்படுத்தப் படும் வரை
பண்டைய தமிழர்கள் அரசர்களுடைய தோற்றத் திற்கு தெய்வீகத் தன்மை (புராண மரபு) சார்த்திக்
கூறியதில்லை. இமயம் அல்லது கங்கையின் தோற்றத்தை பிற்காலக் கவிஞர்கள் குறிப்பிட்டது போல
தமது மலைகளுக்கும் ஆறுகளுக்கும் தெய்வீகத் தோற்ற வரலாற்றைக் கூறியதில்லை. வடக்கினின்று
ஆரியப் புரோகித சாதியினர் அறிமுகப்படுத்தும் வரை வேதத்தில் குறிப்பிட்ட பலிகளையோ
வேள்விகளையோ இவர்கள் செய்ததில்லை.
இவர்கள் தமது கடவுளருக்கு மலையினின்று பெறப்பட்ட பொருட்களையும் தமது
குழுவினரால்/குடியினரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையுமே படைத்தனர். சோமபானம்,
அக்னி ஆகிய வழிபாடு அவர்களிடையே வளருவதற்கு/வழக்கத்தில் வருமுன்னரே அவற்றையட்டி
இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்னரே தினை, செம்மறி ஆட்டுக்கிடாயின் குருதி, தேன், கள்
ஆகியவற்றையே கடவுளருக்குப் படைத் தனர்.
பூக்களையோ இலைகள் கனிகளையோ படைத்து “பூஜித்தல்” என்னும் சடங்கு பண்டைய வேத
இலக்கியங்களில் இல்லை. இத்தகைய சடங்குகள் திராவிடர்களிடம் உள்ளது. பகவத்கீதையில் பல முறை
எடுத்தாளப்பட்ட இது வேதத்துவ பிராமணியத்தால் தனதாக்கப்பட்ட திராவிடச் சடங்கு.4
“ஆன்ம நேர்த்தியுடைய ஒரு மனிதன் இலை, மலர், கனி, நீரைப் பக்தியுடன் எனக்குப்
படைப்பானாயின் நான் அதை ஏற்றுக் கொள்வேன்”
இடி முழக்கத்தை வெற்றிக் கொட்டமாகத் தமிழர்கள் கருதினாலும் கூட இடியேற்றை உண்டாக்கும்
‘வியாழன்’ கடவுள் அவர்களிடம் இல்லை. குதிரைகள் காற்றைப் போலப் பறக்கின்றனவாகவும்
குன்றுகளின் நறுமணத்தை அவை கொண்டு செல்வதாகவும் கருதும் தமிழர்களிடம் காற்றைக்
கட்டுப்படுத்தும் ‘எலியாஸ்’ இல்லை. அலைகளின் மீது திரிசூலம் ஏந்தி எழும் கிரேக்கக் கடல்
தெய்வமான நெப்டியூன் அலைகளின் வெண்நுரைகளை மூத்தோரின் வெள்ளிய நரையாகக் காணும் தன்மை
தமிழர்களிடம் இல்லை.
ஒருவர் தன்னை அலங்கரித்துக் கொள்ள அல்லது விழாக்கால வீடுகளையோ நகரினையோ அலங்கரிக்க
பூக்களையும் இலை/மலர் மாலைகளைப் பயன்படுத்தியமை குறித்து சமஸ்கிருத/வடமொழிப்
புராணங்களில் பெரும்பான்மைக் குறிப்புகள் உள்ளன. சங்க காலத்தில் பூக்கள், மலர் மாலைகளின்
பயன் பாடு மேற்கூறப்பட்ட தன்மையினின்று மாறுபட்டும் அதற் குரிய அடையாளமும்
குறியீட்டுத்தன்மையும் கொண்டதாக விளங்கியுள்ளது. கபிலர், காளிதாசர், வெர்ஜிலின்
பாடல்களில் மரங்களின் பெயர்களும் மலர்களின் பெயர்களுமே தனிச்சிறப் புடையனவாக
விளங்கியுள்ளன. குளிர் பகுதி வாழுநர்களுக்குக் கதிரவன் பெருமகிழ்ச்சியான ஒன்று என்பதைக்
காட்டும் வகையில் கதிரவனைப் பற்றிய புகழ்பாடல்களைக் கொண்ட யுதிஷ்டிராவின்
நளோபாக்யானாவில் கதிரவனைச் சுட்டும் 108 பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அது போல
தமிழர்கள் மாலைப் பொழுதைக் கொண்டாடுகின்றனர்.
“ஓ கதிரவனே குளிர்காலத்தில் வாடும் ஒருவருக்கு உன்னுடைய கதிர்களை விட நெருப்போ,
புகலிடமோ, கம்பளி ஆடைகளோ மிகுந்த இதமளிப்பதில்லை”
காடுறைத் தெய்வமா, மலையுறைத் தெய்வமா அல்லது நீருறைத் தெய்வமா என்று தமயந்தியிடம்
துறவிகள் கேட்கின்றனர். அவள் காட்டில் உள்ள அழகான அசோக மரம் ஒன்றைக் காட்டி தன்னுடைய
நளனைக் கண்டறிய வேண்டு கிறாள். மலைகள், காடுகள், நீரோடைகள் ஆகியவற்றின்
விவரணங்கள்/வருணிப்புகள் மிக ஆழ்ந்த உணர்வுகளோடு காப்பியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக துறவிகளின் குடியிருப்புகளையும் நாடுகடத்தப்பட்ட /தொலைதூரப்பட்ட
இளவரசர்களின் குடியிருப்புகளையும் சித்திரிக்கும் பகுதிகள் மிக ஆழமானவை. இது போன்ற
சூழல் சித்திரிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. பின்னாளில் இந்தியா முழுவதும்
இராமன் சீதையின் அவலச்சூழலே சிறந்த காவிய உதாரணமாகப் பிற்காலக் கவிஞர்களால்
எடுத்தாளப்பட்டது.5
தமிழ்ப்பாடல்களில் ‘இளஞ்சூரியன்’, ‘எழுஞ்சூரியன்’ என்பவை தொழுதற்குரியனவாகக்
கூறப்பட்டுள்ளன. கவிஞர்கள் கதிரவனின் உதயத்தையும் மறைவையும் மிக விரிவாகச்
சித்திரித்துள்ளனர். என்றாலும் அவை கடவுளின் கண்கள் என்றோ விடியலின் துணைவன் என்றோ
ஆரம்பகாலக் கவிதைகளில் பேசப்படவில்லை.
சாவித்திரியோடு தொடர்புடைய அந்திப் பொழுதைக் குறித்த ஒரு பாடல்6
“மிக விரைவில் பெற்ற, அவன் இப்போழ்து அவற்றைக் கட்டவிழ்ப்பான்
துரிதமான தேரில் அமர்ந்து கொண்டு செல்கிறான்
அவற்றின் வேகத்தைப் பறீட்சிக்கிறான் பாம்புகள் இழைவதைப்போல
சாவித்திரியின் கட்டளைப்படி இரவு வந்தது
நெசவாளன் தான் விரித்த வலையினைச் சுருட்டுகிறான்
கடும் உழைப்புக்கிடையில் திறனாளிகள் ஓய்வடைகின்றனர்
பறவைகள் தன் கூட்டை நோக்கிச் செல்கின்றன
விலங்குகள் தன் புகலிடம் நோக்கிச் செல்கின்றன
அனைத்துமே கலைந்து செல்கின்றது சாவித்திரியைத் தவிர”
இப்பாடல் மாலைக்கால இயற்கையோடு தொடர்புடைய நெய்தல் அல்லது முல்லைப் பாடலோடு
ஒப்பிடத்தக்கது. இவ்விருவகை இலக்கியங்களிலும் சில சித்திரிப்புகள் ஒப்புமை
கொண்டவையாகவும் சில வேறுபட்டும் காணப்படுகின்றன. தமிழர் சமயம் இயற்கையைக் கடவுளாகப்
பிற்காலத்தில் உருப்படுத்தத் தொடங்கியது.
காட்டாக, சமயச்சார்பற்றதும் காதலையும் வீரத்தையும் பாடும் பாடல்கள் மறைவாக/குறிப்பாகச்
சமயம் குறித்துப் பேசின. பரிபாடல் சமயத்தை மிக வெளிப்படையாகப் பேசுகின்றது. சங்க
இலக்கியம் சமயத்தை உள்வாங்காத சம காலத்தில் கிரேக்க/லத்தீன் மற்றும் சமஸ்கிருதத்தில் சமயம்
ஓரளவு உள்வாங்கப்பட்டிருந்தது. ஏனெனில் கிரேக்கர்களிடமும் லத்தீன் மக்களிடமும் வட இந்தியக்
கவிஞர்களிடமும் மிக வளர்ச்சியுற்றிருந்த தொன்மவியல் தமிழர்களிடம் இல்லை.
மனிதன் வணங்கத்தக்க அதீத இறைமையியல் சார்ந்த ஒன்றாக இயற்கை விளங்குகிறது என்று பாடும்
இயல் புடையன. முருகன் மீதும் திருமால் மீதும் பாடப்பட்ட சங்கப் பாடல்கள் மட்டும் இவற்றோடு
ஒப்புமை கொண்டவையாக உள்ளன. ஏனெனில் அவை பிற்காலத்தைச் சேர்ந்ததாகவும் ஆரியத்தின் தாக்கம்
வளர்ந்து வருவதற்குச் சான்றாகவும் விளங்கியவை. புரோகிதச் சாதியைச் சேர்ந்த கவிஞர்களுக்கு
கவிதையின் முதன்மைப் பொருளாகவும் எழுச்சியூட்டும் பொருளாகவும் சமயம் விளங்கியது.
இயல்பான மக்களாக வாழ்ந்த தமிழ்க் கவிஞர்களுக்கு காதலும் போரும் அறம் சார்ந்த நடத்தைகளுமே
கவிதையின் பொதுவான பொருண்மைகளாக விளங்கின.7
சமஸ்கிருதத்தில் உள்ள பண்டைய இயற்கைப் பாடல்களை விட சங்க இலக்கியங்களே பெரும்பாலும்
இயற்கையைப் பின்புலமாகக் கொண்டு பாடப்பட்டவை. காளிதாசரை பண்டைய காலத்திற்கு
முன்னுதாரணமாகக் கொள்ளலாம். அவர்தம் நாடகங்களும் காவியங்களும் பிற்கால தமிழ்ப்
பாடல்களோடும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி போன்ற காப்பியங்களோடும்
ஒப்பிடத்தக்கவை. பெரும் பாலான சங்கப்புலவர்களின் காலத்திற்கு இரண்டு/மூன்று நூற்றாண்டுகள்
பிந்தையவர் காளிதாசர். இயற்கை உவமைகளை மிக நேர்த்தியாகப் பயன்படுத்துவதும் மிக
ஏராளமான மலர்களையும் இலைகளையும் இவர்தம் கதைமாந்தர்களால் பயன்படுத்தப்படுவதும் இவருடைய
மலைசார்ந்த உணர்வு நிலைகளும் சங்க கால இயற்கைப் பாடல்களோடு ஒப்புமை கொண்டவை. இந்திய
இலக்கியங்களில் சமஸ்கிருதம் மற்றும் பாலியைத் தவிர்த்து கிடைக்கக்கூடிய ஒரே இலக்கியமான
பண்டைய தமிழ் இலக்கியத்தின் அறிமுகமில்லாத ஒருவருக்கு இவை மிகுந்த வியப்பை அளிக்கலாம்.8
மேலும் இவை தவிர, சகுந்தலை(அங்கம். 4) வரிகளான;
“மலபார் குன்றுகளின் மீதுள்ள சந்தன மரத்திலிருந்து உரிக்கப்பட்ட பட்டை போல நான் எனது
தந்தையின் மார்பிலிருந்து கிழிக்கப்பட்டேன்.”
இவ்வரிகள் பொதுவான செய்தியை/கருத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது
என்பதைவிட தென்பகுதியை அவர் அறிந்து வைத்திருந்தார் என்பதையே காட்டுகிறது. அதேசமயம்
இயற்கையைப் பற்றிய இவரது அடிப்படைக் கருத்துக்கள்/சித்திரிப்புகள் சமஸ்கிருதப் பாடல்
களுக்கே உரிய தனித்த பண்புகளோடு மிகுந்த ஒப்புமை கொண்டவை. கடல் பற்றி பெரிய அளவிலான
எந்த உணர்வு நிலையும் தென்படவில்லை. மலைகள், ஆறுகள், மரங்கள் குறித்த அவரது
சித்திரிப்புகள் பேராசிரியர் ரைடல் குறிப்பிடுவது போல சங்க இலக்கியத்தில் இல்லாத
பகுப்புணர்வைக் கொண்டுள்ளது.
காளிதாசரின் ரீது-சம்ஹாரத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் அதில் கூறப்படும் காலநிலையிலமைந்த
சங்க இலக்கியத்தின் சில பாடல்களையும் ஒருங்கே வைத்துப் படிக்கும் போது காலநிலைகளைச்
சித்திரிப்பதில்/விளக்கியுரைப்பதில் எந்த அளவிற்குப் பழமையானதாகவும் மிக வளர்ச்சியுற்ற
நிலை யிலும் தமிழ்க்கவிதையியல் அமைந்துள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
காலநிலைகளைப் பற்றிய காளிதாசரின் கருத்துக்கள் சங்கப் புலவர்களோடு முரணியும் ஆரம்பகட்ட
நிலையிலும் உள்ளன. கவிஞனின் இளநிலை முயற்சியாகவே இதனை ஆய்வாளர்கள் கருதினர். மேலும்
கருத்தை/காட்சியை உருப்படுத்திக் காட்டுவதில் புறநிலையில் உள்ள வேறுபாட்டைக்
காட்டுவதற்காக இது எடுத்துக் கொள்ளப்பட்டது.
காளிதாசர் காலநிலைகளையும் அதையட்டிய நில இயல்புகளையும்/சூழல்களையும் விவரித்துள்ளார்.
ஆனால் அவை காதலின் பல்வேறு படிநிலைகளையோ காதலர்களின் வேறுபட்ட மன உணர்வுகளையோ
குறியீடாக/உள்ளுறை யாகச் சுட்டுவதாக விளக்கப்படவில்லை.9 புணர்தலிலும் பிரிதலிலும்
மட்டுமே கருத்தைச் செலுத்தியுள்ளார். நில இயல்புகளைப் பற்றிய இவரது விவரிப்புகள் சில
தமிழ்ப் புலவர்களோடு ஒப்புமையுடையனவாக உள்ளன. ஏனெனில் மத்திய இந்தியாவின் பருவ
காலநிலைகள் தமிழகப் பருவ காலநிலைகளோடு குறிப்பிடத்தக்க ஒப்புமை கொண்டவை. ஆனால்
இயற்கையின் மறுமலர்ச்சியையும் வாழ்க்கையின் புதுமைத்தன்மையையும் காளிதாசர் தன்னுடைய
காண்டங் களில் காலநிலைகளூடே விவரித்துள்ளமை தென்பகுதிக்கு ஏற்புடைத்தன்று.
முதற்காண்டத்திலிருந்து வேனிற்காலம் குறித்த கீழ்க்கண்ட வரிகள் தமிழ்ப்பாடல்களில் உள்ள பாலைத்
திணையோடு ஒப்பிடத்தக்கவை.
“பயணிகளாகிய தலைவன்மார்கள் தத்தம் தலைவியை விட்டுப் பிரிதல் என்கிற தீயால் வாடியதால்
தாங்க இயலா கொடுங்காற்றின் காரணமாக பூமியில் குவிந்து கிடக்கும் தூசுக் குவியலைச்
சுட்டெரிக்கும் சூரிய ஒளியால் சூடேறிக் கிடப் பதைக் காண்பதற்குக் கூட இயலவில்லை.
கடுஞ்சீற்றமுடைய சூரியனால் கடுமையாகச் சுட்டெரிக்கும் வெயில் அவர்களின் அண்ணத்தை தாகத்தால்
வளரச் செய்தது. விலங்குகளோ வேறுகாட்டை நோக்கி நகரத் தொடங்கின. சூரியக் கதிர்களால்
ஏற்படும் கொடும் வெப்பத்தால் காட்டுப் பன்றிகளின் கூட்டம் நீரின்றி வறண்டு மணலால் நிரம்பிக்
கிடக்கும் குளத்தைத் தம் கூரிய முகத்தால் குடைந்து கொண்டிருக்கும். அத்தகைய வறண்ட
நிலத்தில் ‘பத்ர முஸ்தா’ என்கிற புல்லைத் தவிர வேறு ஒன்றும் தென்படவில்லை.
இலைகள் உதிர்ந்த மரங்களின் மீது அமர்ந்து கொண்டு எல்லா பறவைகளும் தவித்துக் கொண்டிருக்கும்.
அயர்ச்சியுற்ற குரங்கினங்கள் மலைக்குகைகளில் சென்று தங்கும்.
காட்டுத் தீயால் நிலத்தின் எல்லா பகுதிகளும் எரியூட்டப் பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில்
பரவிய காட்டுத் தீ எல்லா விலங்கினங்களையும் துன்புறுத்தியது. காற்றினால் மேலும் வளர்ந்த தீ
மலைப்பள்ளத்தாக்குகளையும் எரித்தது. காய்ந்த மூங்கில்களில் பட்டு பெரும் சப்தத்தோடு
முன்னேறிச் சென்று மிக வளர்ந்த தீ புல்வெளியினூடே பரவிற்று.
தீயினால் சுட்டெரிக்கப்பட்ட உடல்களைக் கொண்ட யானை, நரி, சிங்கங்களின் கூட்டம் நண்பர்களைப்
போன்று ஓரினக் குழுக்களாகக் காணப்பட்டன. அவை பரந்த பரப்பைக் கொண்ட ஆற்றங்கரைகளில் தங்கின”.
மழை குறித்துப்பாடப்பட்ட கீழ்க்கண்ட வரிகள் சங்கப் புலவர்களை நினைவூட்டுவனவாக உள்ளன.
“மின்னலின் ஒளியில் பெண் சென்ற வழி தென்படுகிறது. பிரிந்து சென்றவர்களின் மனைவிமார்கள்
மனவேதனையில் சுற்றியலைகின்றனர். தாமரை போன்ற கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள்
வழிந்தவாறுள்ளன. இலைகளை ஒத்த கீழுதடுகளைக் கொண்ட அவர்கள் அணிகளையும் ஒப்பனை களையும்
களைந்தவாறுள்ளனர் ” (காண்டம் 2)
நான்காவது காண்டத்தின் தொடக்கத்திலுள்ள சில வரிகள் குளிர்காலத்தில் ஒப்பனைப் பொருட்களையும்
அணிகலன் களையும் பயிலாதிருத்தலை/பயன்படுத்தாதிருத்தலைக் குறித் துப் பேசுகின்றது.
இவ்வரிகள் இவற்றோடு ஒப்புமையுடைய நெடுநல்வாடை வரிகளை நினைவுபடுத்துகின்றன.10
காளிதாச ரின் மேக தூது அவர்தம் மிகச் சிறந்த படைப்பாகும். வால்மீகியின் கருத்தை
எடுத்துக் கொண்டு, மனைவியிட மிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட யக்ஷ, மேகத்தைத்
தூது அனுப்புவதாகப் பாடப்பட்டுள்ளது. தன்னுடைய அன்பு கலந்த ஆறுதல்களைத் தூதாக
அனுப்புகிறார். உயிரற்ற பொருளைத் தூது அனுப்பப் பயன்படுத்துவதில் காளிதாசருக்கே
மறுப்பு இருந்திருக்கலாம். ஐந்தாவது பாடலில் விமர்சனத்திற்கு உரியதாகக் கொள்ளப்பட்டதற்கு
எதிராகத் தாமே முரணித்துள்ளார்.
‘தொடர்பு கொள்ள என்ன வாய்ப்புள்ளது’ என்று கூறி ‘புகை, ஒளி, நீர் மற்றும் காற்றாலாகிய
மேகத்திற்கும் கேட்டல் அறிவினையுடைய படைப்புகளால் மட்டுமே கொண்டு செல்லப்படும்
தூதுவிற்கும் இடையே என்ன தொடர்பு இருக்க முடியும், தொடர்பு கொள்ள என்ன வாய்ப்புள்ளது’
என்கிறார். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஆர்வ மேலீட்டால் யக்ஷ மேகத்தைத் தூது செல்லக்
கோருகிறார். காதலால் பீடிக்கப்பட்ட நபர்களால் இயல்பாகவே உயிரற்ற பொருளுக் கும்
உயிர்ப்பொருளுக்கும் வேறுபாட்டைக் கண்டறிய இயலாது. சங்க இலக்கியத்திலும் மேகம், நிலவு,
கடல், கதிரவன், காற்று, வண்டு முதலியன முன்னிலைப்படுத்திப் பேசப்பட்டுள்ளன. ஆனால், அவை
மிகச் சுருக்கமாக காதலர்களின் துன்பத்தைக் குறிப்பிடுதல் போன்ற சூழலில் பயன்படுத்தப்பட்டன.
தலைவியின் துயர அழுகை குறித்து,
யாரணங் குற்றனை கடலே
... ... ...
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே (குறுந்.163)
(நள்ளிரவிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றாயே நீ யாரால் வருத்த முற்றாயோ கடலே) என்று
தலைவி கேட்டதாக உள்ளது.
மறையும் சூரியனை நோக்கி... ...
கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயின்
அவரை நினைத்து நிறுத் தென்கை நீட்டித்
தருகுவை யாயின் தவிருமென் நெஞ்சத்
துயிர்திரியா மாட்டிய தீ (கலி.142)
என்றும்
நிலவில் உள்ள முயலிடம்...
திங்களுள் தோன்றி யிருந்த குறுமுயல்
எங்கள் இதயத்துள்வழிக் காட்டீமோ
காட்டீயா யாயின் கதநாய் கொளுவுவேன்
வேட்டுவ ருள்வழிச் செப்புவேன் ஆட்டி
மதியடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந்த
என்னல்லல் தீரா யெனின் (கலி.144)
என்று பாடியுள்ளார்.
இந்தியாவில் இயற்கையைப் பாடும் கவிஞர்களில் காளிதாசர் குறிப்பிடத்தக்கவர். அவர்தம்
பாடல்களில் நில இயல்புகள், நீர் அமைப்புகள் (ஏரிகள்), காடுகள் ஆகியவை முதன்மையாக
இடம்பெற்றிருக்கும்.
கிரேக்க, லத்தீன் பாடல்கள் (கவிதையியல்)
சங்கப் புலவர்களின் கருத்துக்கள் பதினெட்டு/பத்தொன் பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐரோப்பியக்
கவிஞர்களின் கருத்துக்களைக் காட்டிலும் கிரேக்க லத்தீன் படைப்பாளிகளின் கருத்துக்களோடு
உறவுடையனவாக உள்ளன. இயற்கை குறித்த கவித்துவ வெளிப்பாடும் (உலக வரலாற்றில் நீண்டகாலம்
வரை) பல்வேறு மாறுதல்களுக்குட்பட்டுள்ளன. மனித இனத் தொடக்க காலத்தில் இயற்கையைப்
பாராட்டுதல்/வியத்தல் என்பது மிக எளிமையாகவும் குழந்தைத்தனமாகவும் வெளிப்
படுத்தப்பட்டுள்ளது. மிக வளர்ச்சியுற்ற பிற்காலத்தில் நாகரிகம் முன்னேறிய சூழலில் நகரிய
வாழ்க்கை வாழ்ந்த மனிதன் இயற்கையைப் பின்புலமாக்கித் தூரப்படுத்தினான். மூன்றாவது கட்டத்தில்
நாகரிகம் மிக வளர்ந்த சூழலில் இயற்கை என்பது வசதியாகவும் துணையாக/ஆறுதலளிப்பதாகவும்
நம்பிக்கை யாகவும் காணப்பட்டது. ஷேர்ப்பின் Poetic Interpretation of Nature என்கிற
நூலில் வீனட் குறிப்பிட்ட மேற்கோளில் குறிப்பிடப்பட்டவை.
“ஆன்மா என்பது சமூக உறவுகளால் பண்படுத்தப்படுவது. குறிப்பாக, அதனால் பாதிக்கப்படுவது
சமூகத்தால் தொல்லைக் கும் துன்பத்திற்கும் ஆளாகும் ஆன்மாவிற்கு இயற்கையின் வளமும் அழகும்
புதிரான ஆற்றலாக உள்ளது. வெம்மையையும் கொந்தளிப்பையும் மையமாகக் கொண்ட
நாகரிகத்தினின்று வெளியேறி இயற்கையை நாடும் ஆன்மாவிற்கு அதன் பலமும் ஆழமும் புரியாத
புதிராகவே உள்ளது.11
இயற்கை குறித்த நவீனப் பார்வையை இது விளக்கவல்லது. ரூஸோ, கதே மற்றும் வேர்ட்ஸ்வர்த்தின்
காலம் வரை உலகில் இதுவே பிரபலமாக இருந்தது. இயற்கை குறித்த கருத்துக் களிலும்
வெளிப்பாட்டு முறைகளிலும் பரணருக்கும் சுப்பிர மணிய பாரதிக்கும் உள்ள வேறுபாட்டைப் போல
வெர்ஜி லுக்கும் வேர்ட்ஸ்வர்த்துக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.
ஹோமர், ஹெசாய்டு, தியோகிரிடஸ் ஆகியோர் சங்கப் புலவர்களுக்கு முந்தையவர்கள். இயற்கையை
இவர்கள் ஒருபோல விரும்பி உள்வாங்கினாலும் தமிழ்ப் புலவர்கள் அளவிற்கு முதிர்ச்சியாகவும்
நேர்த்தியாகவும் வெளிப்படுத்த வில்லை. காப்பியக் கவிஞரான ஹோமர் இயற்கை விளக்கங் களுக்கு
நேரமில்லாத அளவிற்கு மிக வேகமாக கவிதைகளை நகர்த்திச் செல்வார். எனினும் தமது
நாயகர்களின் அசைவுகளை/இயக்கங்களை இயற்கையோடு இயைந்தவாறே படைத்துள் ளார். “ஹோமரின்
ஒவ்வொரு இயற்கை விளக்கமும் ஒரு நீருற்று, ஒரு பசுமை நிலம், நிழலடர்ந்த சோலைகளைக்
கொண்டு மிக அழகாகக் கட்டமைக்கப் படுவதாகக் கருதப் படுகிறது.” என்கிற ரஸ்கின் கூற்று
விமர்சனத்திற்குரியது. ஒடிசியிலும் இலியட்டிலும் இடம்பெற்றுள்ள இயற்கை நலன்களையும்
உணர்வு நிலைகளையும் யாராலும் மறுக்க முடியாது எனினும் கிரேக்கக் கவிஞன் இயற்கையை
விளக்கி யுரைப்பதில் வளமாக இல்லை என்பது வியப்புக்குரிய ஒன்றல்ல. ஏனெனில், கிரேக்க
நாட்டுப்பகுதியின் இயற்கை நலன்கள் வெப்ப மண்டலங்களில் உள்ள இயற்கை நலன் களைப் போல
வளமானதாக/செழுமையானதாக இல்லை. மேகங்களற்ற நீல வானத்தில் நிகழும் சூரியனின் மறைவு
ஏதேனுக்கும் வெப்ப மண்டலப் பகுதிகளுக்கும் இடையே எந்த அளவிற்கு வேறுபாடுடையனவோ அந்த
அளவிற்கு ஹோமரின் எளிமையான இயற்கைச் சித்திரிப்புகளுக்கும் சங்க இலக்கியச்
சித்திரிப்புகளுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளன.12
தமிழ்ப் பாடல்களைவிட கிரேக்கப் பாடல்களில் நீரோடை மற்றும் நீரூற்றின் வருணிப்புகள் மிகுந்த
சுவையுடையவை. மேலும் தமிழ்ப் பாடல்களில் இல்லாத தொன்மம் சாற்றப்பட்ட இயற்கைக் கூறுகள்
கிரேக்க, லத்தீன் பாடல்களில் மிகுதியாக உள்ளன. Dionysius, Hermes, Pan போன்ற
இயற்கைக் கடவுளர்கள் தமிழர்களிடம் இல்லை. அவர்கள் பூமிக்கு மனிதத்தன்மை சாற்றினரேயழிய
வழிபாட்டு மரபை உருவாக்கும் அளவிற்கு அவற்றை வளர்த்தெடுக்க வில்லை. Aeschylus
கூறுவது போல,
“எல்லா கடவுளரும் பூமிக்கு வருமுன்பு நான் வணக்கத்தின் வழி அழைத்துக்கொண்டிருந்தேன்”
(Eumenides,1.f)
வேகமாகச் செல்லும் நீரோடை, ஆறு, நீரூற்று, மிக உயர்ந்த பெரும்பாறைகளின் வரிசை
ஆகியவற்றைக் காணும் கிரேக்கன் அவற்றைத் தாண்டி இயங்கும் தெய்வீக சக்தியைக் கண்டான்.
காடுகளும் குன்றுகளும் சமவெளிகளும் ஓடைகளும் மரங்களும் இலைகளும் மக்கள் கூட்டத்தின்
கடவுளர் உலகத்தில் பெரும் பான்மை அல்லது சிறுபான்மை முக்கியத்துவம் பெற்ற பக்தி
வடிவங்களாகக் கொள்ளப்பட்டன. தமிழ் மக்களுக்கும் அவர்தம் காடுகளும் மலைமுகடுகளும்
குறுங்காடுகளும் கடவுட்தன்மை கொண்டவையாக விளங்கின.
வெர்ஜில், ஹோரஸ், லூக்ரிடஸ் ஆகியோர் ஏறக்குறைய சங்கப் புலவர்களுக்குச் சமகாலத்தவர்கள்.
இவர்கள் ரோம் நகர், நாகரிகத்தின் உச்சத்தை அடையும் காலத்தில் காணப்பட்ட வர்கள். ஆனால் அவர்தம்
இயற்கை சார்ந்த உணர்வு வெளிப்பாடுகள் ஐரோப்பியக் கவிதையூடே வெளிப்பட்டன. ரோமானியர்கள்
எப்போதும் நாட்டை நேசிக்கத் தவறியதே இல்லை. மேலும் ரோமானியர்களிடையே காணப்பட்ட மாளிகை
பிரசித்திபெற்ற கோவில்களுக்கும் நகர்களுக்கும் இணையான எதுவும் தமிழ்நாட்டில் இல்லை.
தமிழர்கள் பட்டனங்களிலும் நகரங்களிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்கள். தமிழரின் பண்டைய
இலக்கியங்களில் தென்னிந்திய துறைமுகப் பட்டினங்கள் குறித்தும் உள்நாட்டுத் தலைநகரங்கள்
குறித்தும் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளன. தமிழர்களின் மிக நேர்த்தியான நகர்சார்
திட்டங்களும் தெருக்கள், பூங்காக்களின் மீது செலுத்திய கவனமும் குடியிருப்புப் பகுதிகளை
நாற்புறங்களாகப் பகுத்தல், அழகிய சிற்ப வேலைப்பாடுள்ள கட்டிடங்களைக் கட்டுதல், எழுநிலை
மாடங்களை எழுப்புதல் முதலியனவும் பண்டைய இலக்கியங் களில் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
வேறு எந்த இலக்கியங் களிலும் இல்லாத பெண்ணுக்கு நகரத்தை ஒப்புமையாகக் கூறுதல் என்பது
தமிழ் இலக்கியங்களில் மிக இயல்பான ஒன்றாக அமைந்திருப்பது வியப்பளிக்கின்றது. தலைவன் தான்
மணந்த அல்லது மணக்கவிருக்கும் பெண்ணைக் குறித்த மகிழ்ச்சியின் நிறைவைக் கூற விரும்பும்
புலவன் தனக்கு மன நிறைவளிக்கக் கூடியதாகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும் விளங்கும்
அழகிய நகரைத் தவிர வேறு எதையும் ஒப்புமையாக/உவமையாகக் கூறமாட்டான். ஒரு நகரம்
அழகிற்குரிய குறியீடாகவும் விளங்குகின்றது. எனவே தான் நகரின் அழகு பெண்ணிற்கு
உவமையாகக் கூறப்படுகின்றது.
“அமெரிக்காவின் நியூயார்க் நகரைப் போன்று அவள் மிக வளமானவள்” அல்லது “லண்டன் மாநகரைப்
போன்று உனது தேவ தூதர்களோடு வந்து என்னைச் சந்திப்பாயாக!” என்று கூறுவது நவீனக்
காதுகளுக்கு மிகப் புதுமையான ஒன்றாக இருக்கலாம். இதைப் போன்றே பண்டைய தமிழ்ப் புலவர்கள்
நகரினையும் பட்டினங்களையும் உவமைகளாகப் பயன்படுத்தினர். அவர்கள் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த நகரினையும் பட்டனங்களையும் தேர்வு செய்தனர். இவை மன்னனுக்கும் மக்களுக்கும் மிகச்
செழிப்பையும் மிகுந்த வளத்தையும் கொடுக்க வல்லவை. குறிப்பிட்ட மன்னர்களுக்குப் பரிசாக
அளிக்கப்பட்ட சில நகரங்கள் பற்றிய குறிப்பு பெரும்பான் மையாக இடம்பெறுவதுண்டு. பெண்கள்
மிக அழகானவர்கள் என்றும் வளமானவர்கள் என்றும் குறிப்பிடுவதற்கு,
தண்குட வாயில் அன்னோள் (அகம் 44)
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன (அகம் 46)
திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்ன (அகம் 60)
என்று பாடியுள்ளனர்.
“வந்திசின்” என்றும் “தொண்டி அன்ன நின் பண்புபல கொண்டே”(ஐங்.175) என்றும் கூறும் தலைவன்
கூற்றில் உள்ள தொண்டி மேற்குக் கடற்கரையில் மிகப் பெரும் துறைமுகமாக விளங்கிய பகுதி.13
காதலர் மொழியில்/கூற்றில் பழமையான தும் புகழுடையதுமான எல்லா பட்டினங்களும் நகரங்களும்
உவமையாகப் பாடப்பட்டுள்ளன. தமிழர்கள் நேர்த்தியான நகர வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஆனால்
நகரத்தின் மீதான அவர்தம் ஈடுபாடு இயற்கை மீதான அவர்களின் விருப்பத்தை எந்த வகையிலும்
இடையீடு செய்யவில்லை.
மாறுதலற்ற ஒருபடித்தான நகர வாழ்வினின்று சிறு விடுபடுதலாக தமிழர்கள் விழாக்களையும்
கடலில்/ஆற்றில் ஆடும் விளையாட்டுக்களையும் இயற்கை எழிலார்ந்த பகுதி களில் அமைந்த
புனிதத்தலங்களுக்கு யாத்திரை செல்வதையும் மேற்கொண்டுள்ளனர். இயற்கை மீது கொண்ட காதலே
தமிழர் சமயம் தோற்றம்பெறக் காரணமாக அமைந்துள்ளது என்பதை நம்மால் காணமுடிகிறது.
மிகச் சிறந்த தத்துவவியலாளரான லூக்ரிடஸ் அவ்வப்போது அச்சத்தையும் மதிப்பையும் தருகிற
கணநேர இயற்கைச் சித்திரிப்புகளைப் படம்பிடித்துக் காட்டுபவர். நகர வாசியான ஹோரேஸ்
தன்னுடைய நாட்டை(நகரை) புகழ்ந்தும் தனக்கு விருப்பமான நாட்டுப்புறச் சூழலையும் குறித்து
மிகுதியாக எழுதியுள்ளார். ஆனால் இயற்கை குறித்து மிகுதியாகப் பாடியவர் வெர்ஜில். இவர்
இயற்கையை விவரித்தும் விரும்பியும் இயற்கையோடு ஒத்த உணர்வு கொண்டும் விளங்கியுள்ளார்.
இவரைச் சங்கப் புலவர்களோடு ஒப்பிடுவது அத்துணை எளிதல்ல. சங்கப் புலவர்கள்
மரபார்ந்தவர்களாகவும் உள்ளனர். வெர்ஜில் மரபார்ந்தும் தியோகிரிடஸைப் பிரதி பலித்தும்
தன்னுடைய பாடல்களைப் படைத்துள்ளார். அவை நாட்டார் வாழ்வை விளக்குவதாகவும் உள்ளன. ஆனால்,
“Georgics” (உழவுத் தொழில் குறித்தப் பாடல்கள்) இல் நேரடி யாகவும் மிக
வெளிப்படையாகவும் வெர்ஜில் எழுதியதைப் போல இவை அமையவில்லை. எனினும் சங்க இலக்கியங்
களில் ஊடுருவிக்கிடக்கும் அதே துல்லியத்தன்மை, நுட்பமான விளக்கங்கள்,
மனிதத்தன்மையேற்றப்பட்ட இயற்கை சார்ந்த உணர்வு நிலைகள் இவற்றிலும் காணப்பட்டன. திணைசார்ந்த
நீண்ட விளக்கங்களோடு அமைந்த நெடும்பாடலான மலைபடுகடாத்தை ‘Georgics’ உடன் ஒப்பிடலாம்.
பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து,
அகல்இரு விசும்பின் ஆஅல் போல,
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை
நீலத்து அன்ன விதைப்புன மருங்கில்
மகுளி பாயாது மலிதுளி தழாலின்
அகளத்து அன்ன நிறைசுனைப் புறவில்
கௌவை போகிய கருங்காய் பிடிஏழ
நொய்கொள ஒழுகிய பல்கவர் ஈர்எண்
பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்
கொய்பதம் உற்றன குலவுக்குரல் ஏனல்
விளைதயிர்ப் பிதிர்வின் வீஉக்கு இருவிதொறும்
குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை (மலை.99-110)
வெர்ஜில் தன்னுடைய பெருங்காப்பியத்தில் (Aeneid) இயற்கைக் காட்சிகளைப் பற்றிய மென்மையான
உவமைகளை யும் நீண்ட விவரிப்புகளையும் குறிப்பிடுவதோடு ஐரோப்பிய வாழ்க்கையில்
மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலாகத் தான் உணர்ந்த ஒப்புமைகளையும் சில
பகுதிகளில்/பத்திகளில் குறிப்பிட்டுள்ளார். பூசாரிணியின் அச்சத்திற்குரிய அணுகுமுறை
யால் பூமி நடுக்குறுவதாகவும் மலைகள் அதிர்வுறுவதாகவும் ஆறாம் பாகத்தில்
குறிப்பிட்டுள்ளார். மானுடக் கதாமாந்தர் களை கிளர்ந்தெழச் செய்யும் உணர்வு நிலைகளுக்கும்
வெளியுலகத்து எதார்த்த நடைமுறைகளுக்கும் இடையே உள்ள ஒத்துணர்வுகளை நான்காம் பாகத்தில்
குறிப்பிட்டுள்ளார். இது டிடோவின் உள்ளத்து எழும் கிளர்ச்சிக்கும் அதற்கு முரணாக உள்ள
இரவின் அமைதிக்கும் இடையில் மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளது.
“இரவு வந்தது; புவி முழுதும் களைப்புற்ற படைப்புகள் ஆழ்ந்த துயில் கொண்டன. கானங்களும்
காட்டாறுகளும் ஓய்வில் மூழ்கின; நட்சத்திரக் கால்கள் அவற்றின் பாதையில் இழைந்து
கொண்டிருந்தன. நாடு முழுதும் அமைதி நிலவிற்று. இரவு வரை விலங்குகளும் களிப்புற்ற
பறவையினங்களும் ஏரி நீர்ப்புறங்களிலோ முள்ளார்ந்த புதர்க்காடுகளிலோ உறங்கிக் கிடந்தன.
ஆனால் ஆழ்ந்த துயரத்தில் இருந்த பொனீஷியனோ (பீனிஷ் நாட்டவன்), இரவுப் பொழுதைக் கண்களிலும்
முலைகளிலும் தாங்கியிருந்த அவளோ துயில் கொள்ள வில்லை. அவளது துயர் இரட்டிப்புற்றும்
அவளது காதல் பித்தேறியும் போன நிலையில் மிகக் கோபத்தோடு உலாவிக் கொண்டிருந்தான்”
(Aeneid IV,521-531)
மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான வெர்ஜில் பயன் படுத்திய இம்முரண் சங்க இலக்கியங்களில்
மிகப் பெரும் பான்மையாகக் கூறப்பட்ட ஒன்று. தினசரி வாழ்க்கையில் இவைகளையும் பல்வகைப்
பூக்களையும் கிரேக்கர்களும் ரோமானியர்களும் பயன்படுத்தவில்லையானாலும் தமிழர் களைப் போல
இவர்களும் அவற்றில் மிக விருப்பமுடைய வர்கள். அவர்தம் ஆயர்கள் இலைகளாலும் மலர்களாலும் ஆன
தலைமாலையினைச் சூடித் தங்களை அலங்கரித்துக் கொண்டவர்கள்.
“தலையினின்று பூமாலை நழுவி விழ கணத்த மதுச்சாடி யினைக் கீழிறக்கினான்” (Ec.VI)
ஆர்காடி(கிரீஸ் தேசத்துப் பகுதி)யின் ஆயர்கள் ஐவி (திண்பச்சை இலைகளையுடைய கொடி)யின்
இலைகளால் அலங்கரித்துக் கொண்ட கோட்ரஸ் எனும் கவிஞன் பொறா மையினால் துயருற்றான் அல்லது
எனது சிறப்பினைத் தாண்டி என்னைப் புகழ்ந்திருந்தால் கையுறையளித்து எனது புருவங் களைக்
கட்டியிருந்தால், பாணனின் கொடிய நாக்கு என்னைத் துன்புறுத்தியிருக்காது. நெட்டிலிங்க
மரத்தினில் ஆல்சைட்ஸ் பெருமகிழ்ச்சியுற்றான். மதுவினில் லாச்சஸ் மிர்டில்(செடி வகை)இல்
வீனஸ், அழகிய புன்னை மரத்தினில் பியோபஸ் ஹோசலி(குறுமர வகை) ஃபில்லிஸ்
மகிழ்ச்சியுற்றான். ஃபில்லிஸ் அவை அனைத்தையும் விரும்பினாலும் ஹேசல் அளவிற்கு மிர்டிலையோ
பியோபஸ் புன்னை மரத்தை விரும்பி யதைப் போலயோ புன்னை மரத்தையோ விரும்பாதிருக்கலாம்.
(Ec.VII)
லத்தீன் நாட்டுக் காதல் கவிஞனான காட்டிலஸ் தனது காதலை (லெஸ்பியா) நேரடியாகவும் எவ்வித
கவித்துவ வெளிப்பாடுகளின்றியும் குறிப்பிட்டுள்ளான். புறப்பாடல் களைப் பாடிய தமிழ்ப்
புலவர்களைத் தவிர்த்து வேறு எந்த(அகம் பாடிய) புலவர்களிடத்தும் இத்தகைய தன்னியல்/சுய
உணர்வுகளைக் கண்டறிய முடியாது.
புறப்பாடல்கள் சிலவற்றிலும் கூட இயற்கை குறித்த குழுப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை
தனது (புலவர்) சுய செய்திகளுக்கான சிறு பகுதியாகக் காணக்கிடைக்கின்றன.14 கபிலரும்
பரணரும் காதல் பாடல்களில் சொந்த அனுபவங்களைத் தான் எழுதினார்களா? அல்லது தனது கற்பனைத்
திறத்தையும் நாடகமாக்கத் திறனையும் மேம்படுத்தும் பயிற்சியாக அவற்றை மேற் கொண்டனரா?
என்பதை நம்மால் அறியவே இயலாது.
சங்க காலப் பாடல்களினின்று நேரடியாக ஒரு தலைவனின் பெயரைக் கூட நம்மால் அறிய
முடியாது. அகப்பாடல்களில் ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ என்பது மரபு. சங்க
இலக்கியத்தில் இயற்கைக்கும் காதலர்க்கும் நேரடிக் குறிப்புகள் காணக் கிடைப்பதில்லை. ஆனால்
இயற்கை குறித்த தெளிவான எளிமையான விவரிப்புகளோடு பிற தேசத்து இலக்கியங்களில்
காணக்கிடைக்கின்றன. சங்கக் கவிதையியல் மிகச் சிறந்த இயற்கை குறித்த தனிப்பாடல்களைக்
கொண்டுள்ளன. எனினும் அவை கவித்துவ வெளிப்பாட்டில் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டும் சில
கட்டுப்பாடுகளுக்கிடையிலும் பாடப்பட்டுள்ளன.
ஆங்கிலக் கவிதையியல்
ஆங்கில இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம் வரை இயற்கை குறித்த கவித்துவ வெளிப்பாடுகளில்
வெர்ஜிலிய மரபு தொடர்ந்து கொண்டிருந்தது.15 சாசர், ஸ்பென்ஸர் ஆகியோர் புத்திலக்கியத்தை
உருவாக்கினர். எனினும் நாடகவியலாளராக இன்பத்தையும் துன்பத்தையும் மேம்படுத்திக் காட்ட
இயற்கையைச் சூழல்களாகப் பயன்படுத்திய ஷேக்ஸ்பியரே இந்த ஒப்பீட்டு ஆய்விற்கு எடுத்துக்
கொள்ளப்படுகிறார்.
பண்டைய காலத்திலேயே ஐரோப்பியப் பருவநிலைகள் மனிதனுள் ஏற்படும் உணர்வு நிலை/உடல்நிலை
மாற்றங்களை ஒப்பிட்டுக் குறியீடாகப் பயன்படுத்தியுள்ளனர். இளவேனிற் காலம் மனிதனின்
வாலிப/இளமைக் காலத்திற்கும் இலையுதிர் காலம் மனிதனின்
அழிவுக்காலத்திற்கும்/இறுதிக்காலத்திற்கும் குறியீடாகக் கூறப்பட்டது. மேலை நாட்டுக்
கவிஞர்கள் பருவ நிலைகளின் சுழற்சியில் மாறுதல்களையும் வகைகளையும்/பல்தன்மைகளையும் கண்டனர்.
தமிழ்ப்பாடல்கள் ஐவகைத் திணையின் கீழ் வகுக்கப்பட்டது போல ஐரோப்பியப் பாடற் தொகையினை
இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், இலையுதிர்/கூதிர் காலம், பனிக்காலம் ஆகிய நான்கு
பருவ நிலை கீழ் வகைப்படுத்தலாம். கவிதை வெளிப்பாட்டிற்கு ஏற்றபடி, தமிழ் நாட்டின் ஆறு
கால நிலைகள் இயற்கையின் புறத்தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல்களையோ பல் தன்மையினையோ
ஏற்படுத்தவில்லை. ஐரோப்பாவில் காணப்படும் முதுவேனிற் காலத்திற்கும் பனிக்காலத்திற்கும் உள்ள
வேறுபாட்டையும் தமிழகத்து மழைக்காலத்திற்கும் கோடைக் காலத்திற்கும் உள்ள வேறுபாட்டையும்
ஒப்பிடுவோமானால் அங்குள்ள பல்தன்மை/பெரும் மாறுதல் தமிழ் நாட்டில் காணப்படவில்லை.
உறைபனியும் பனிக்கட்டிகளும் இங்குள்ள இயற்கைச் சூழலில் இல்லாமையால் பெரும் மாறுதல்
களுக்குரிய நில அமைப்புகளை நாம் கொண்டிருக்கவில்லை. எனினும் தமிழர்களின் இயற்கையமைதி
அவர்களுக்கு ஈடானது. பல்தன்மையையும் மாறுதல்களையும் பருவகால நிலையில்
காணமுடியாவிட்டாலும் நில அமைப்புகளில் தமிழர்கள் காண்கின்றனர். எனவே பல்தன்மைக்கும்
பகுப்புக்கும் நிலத்தை அடிப்படைக் கூறாகவும் நிலத்தை மாறுபடுத்திக் காட்டும் பருவகால
மாற்றத்தை துணைமைக் கூறாகவும் கொண்டனர். பருவகாலங்களில் ஏற்படும் புறக்காட்சியின்
தாக்கத்தில் ஐரோப்பியக் கவிதைகள் அமைந்திருக்க தமிழ்ப்பாடல்கள் திணை அடிப்படையில் அமைந்துள்ளன.
கவித்துவ எண்ணங்களை மெருகூட்ட இயற்கையைப் பயன்படுத்தும் தமிழ்ப்புலவர்களின் அடிப்படைப்
பண்பு ஷேக்ஸ்பியரிடமும் உள்ளது. காட்டாக, மேக்பத்தில் புயல் மீவியல்புத் தன்மையோடு ஆட்சி
செய்கிறது. சூனியக்காரிகள் எப்பொழுதெல்லாம் காட்டப்படுகின்றனரோ அப்பொழுதெல் லாம் இடியும்
மின்னலும் பின் தொடர்ந்து காட்டப்படும். ஜூலியஸ் சீசர் கொலையுறப்போவதை சீற்றமிகு இயற்கை
யுடன் ஒரு இரவுப்பொழுது பல தீநிமித்தங்களுடன் முன்னறி விப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
‘நீண்ட நெடிய இரவுப் போழ்தில் புதிரான ஒரு பறவை ஆரவாரித்துக் கொண்டிருந்தது’ (மேக்பத். 3)
டங்கன் மகாராஜா தனது பரிவாரங்களோடு தோன்றும்போது மகிழ்வூட்டுகிற ஒவ்வொரு
நடவடிக்கைகளுக்கும் அந்த இரவில் அவருக்கு நிகழப்போவதற்குமான முரணை இவ்வாறு எழுதுகிறார்.
‘இந்தக் கோட்டை மிகவும் மகிழ்ச்சியளிக்கிற இருக்கை யைக் கொண்டுள்ளது. புலன்களுக்கு
இதமளிக்கும் வகையில் காற்று விரைவாகவும் இனிமையாகவும் வீசுகிறது’
பாங்கோ பதில்
வேனிற்காலத்து இவ்விருந்தினர் ஆலயத்தில் தங்கியிருக் கும் மார்ட்லெட்(குருவி வகை),
மேலுலகே விரும்பத்தக்க தனது மாளிகையில் வாசம் செய்ய வேண்டுவதாகச் சான்று பகர்கிறது
(காட்சி 1 பகுதி.6)
கிங்லீயருக்குள் ஏற்பட்ட புயல் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனக் கொந்தளிப்பில்
மனிதனின் செயல் பாடுகளுக்கும் முதிய மன்னனின் நெஞ்சத்து எழும் சீற்றத் திற்கும்
தொடர்புறுத்திக் கூறப்பட்டுள்ளது. இதைப்போலவே வெப்பமிக்க கோடைக்காலத்துப் பாழ்நிலப்
பகுதியினைப் பின்புலமாகக் கொண்டு காதலர்களின் பிரிவுத்துயரைத் தமிழ்ப் புலவர்கள்
காட்சிப்படுத்தியுள்ளனர். நெடுநல்வாடையில் துயருறும் மானுட நிலையினை இவ்வாறே
காட்டியுள்ளனர்.
ஷேக்ஸ்பியருக்குப் பின் ஜேம்ஸ் தாம்ஸன் இவ் ஒப்பீட்டாய் விற்குப் பொருத்தமுடையவர். “The
Seasons” என்கிற அவருடைய கவிதையின் உள்ளார்ந்த பொருண்மைக்காகவன்றி பருவகாலம் குறித்து
பல நூறு வரிகளைத் தம் கவிதையில் எழுதியுள்ளார் என்பதைக் கருத்திற்கொண்டு இவருடைய
கவிதைகள் இங்கு ஒப்பீட்டாய்விற்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. போப்பிற்குப் பின்பும் அவருடைய
மீட்டழைப்பிற்குப் பின்பும் இயற்கையிடத்துத் திரும்புமாறு தாம்ஸன் வலியுறுத்தி யுள்ளார்.
இயற்கையைக் குறித்து மிக அழகாகவும் ஆழமாகவும் காலநிலைகளின் எல்லா தன்மைகளிலும்
மரங்கள், மலர்கள், விலங்குகளைக் குறித்து விரிவாகவும் எழுதியுள்ளார். தூய அன்பிற்கான
குறியீடாக இளவேனிற்காலத்தைக் குறிப்பிட்டுள் ளார். அதனை “சோலைகளின் உணர்வு மேலீடு”
என்று அழைக்கிறார்.
நைட்டிங்கேல் பறவைகளே உமது பாடலைக் கொடுப்பாய்
என்னுடைய கவிதை வரிகளுக்கிடையில்
புதிரான உனது ஆன்ம மெல்லிசையைப் பொழிவாய்
முதல் பகுதியிலிருந்து குக்கூ பாடுவதை
என்னால் உணர முடிகிறது.
எப்படிப் புகழ்வது என்பதறியாதபடி
இளவேனிற் காலத்து இன்னிசை - சோலைகளின் உணர்வு மேலீடாக (Spring, 576-581)
தத்துவத்தின் புகழைப்பாடும் தருணத்தை முதுவேனிற் காலம் கொடுத்துள்ளது.
இலையுதிர்காலத்தில் வாழ்க்கையின் தத்துவத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். பனிக்காலத்தில்
சுற்றி யுள்ள அனைத்தும் தற்காலிக/நிலையற்ற அழிவில் இருப் பதைக் கண்டார். அவை
பெரும்பாலான இறவா மனிதர்களை அவருக்கு நினைவூட்டியது. தாம்ஸன் சில இடங்களில் மிக
நுட்பமான விவரிப்பாளராகவும் குறிப்பிட்ட இடங்களில் கணக்கீட்டாளராகவும் இருந்துள்ளார்.
தமிழ்ப் புலவர்கள் சித்திரித்துள்ள வாழ்க்கைக்கும் இவருடைய கவிதைகளில் குறிப்பிட்டுள்ள
வாழ்க்கைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எனினும் தமிழ்ப்புலவர்களைப் போல இயற்கையிலிருந்து
சிலவற்றைக் கற்றுக்கொள்ள முயற்சித்தும் அவற்றின் தோற்றத்தை தத்துவார்த்தப்படுத்தியும் உள்ளார்.
தமிழ்ப்புலவர்கள் அறம் சார்ந்த, தத்துவார்த்தப் பார்வையினை இலக்கியங் களுக்கேற்ப மிகச்
சுருக்கமாகவும் மறைக்குறிப்பாகவும் வெளிப் படுத்தியுள்ளனர். ஆனால் தாம்ஸன் அறனாளனாக
இருந்து இயற்கைப் பாடங்களை(அப்படி எதுவும் இல்லாத நிலை யிலும்) தேடும் தன்மையினைக்
காணும்போது அவை புதுமையாகவும் சில நேரம் வலிந்து கூறுவதாகவும் உள்ளன.
ஸ்காட்லாந்து பெரும்பாலான இயற்கைக் கவிஞர்களைக் கொண்டிருந்தது. அந்நிலப்பகுதி சீரற்றது.
காடுகளும் மலைகளும் சூழ்ந்திருந்தமையால் மலைசார்ந்த இயற்கை உணர்வுகளைக் கொண்டிருந்த
புலவர்கள் அங்கு தோன்றினர். அவர்களில் பர்ன்ஸ் குறிப்பிடத்தக்கவர். இவர் தனது படைப்புகளில்
மனிதனுக்கு முதலிடமும் இயற்கைக்கு அடுத்த இடமும் கொடுத்திருப்பதும் இயற்கையையும்
காதலர்களை யும் பிணைத்துக் கூறும் தன்மையும் இவரிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
“எப்பொழுதும் இயற்கை இரண்டாவது, மனிதத்துவம் முதன்மையானது. சில நேரங் களில் மனிதனின்
செயல்பாடுகளையும் உணர்வு மேலீட்டை யும் விளக்கும் அரங்கக் கூறாக பின்புலத்தைப்
பாடியுள்ளார்.”16 அரங்கக் கூறு என்பது இயங்கும் தன்மையது எனவும் உயிர்ப்புள்ளது
என்பதையும் ஏற்கனவே அறிந்த நிலையில் இயற்கை குறித்த சங்கப் பாடல்களின் கருத்தை விளக்க
“அரங்கக் கூறு” என்பது சரியான சொல்லாக உள்ளது.
கிரே தனது ‘எலிஜி’யிலும் கொலின்ஸ் தனது ‘ஒடே டு ஈவ்னிங்’கிலும் இயற்கை சார்ந்த
ஒத்துணர்வுகளைச் சிலவாறு எடுத்துக் காட்டி விளக்கியுள்ளனர். எனினும் ஸ்டாப்ஃபோர்ட் ப்ரூக்
குறிப்பிட்டுள்ளதைப் போல வேர்ட்ஸ்வர்த் இயற்கை வாதத்தை மிக உச்ச நிலையில்
வெளிப்படுத்தியுள்ளார். கிரேக்க மற்றும் லத்தீன் கவிஞர்கள் இயற்கைப் பொருட்களை
முன்னிறுத்தும் போது அவர்களுடைய பாதுகாவலுக்குரிய தெய்வங்களையும் மீண்டும் மீண்டும்
முன்னிறுத்திக் கூறு கின்றனர். தமிழ்ப் புலவர்கள் கடவுளர்களோடு இவற்றைத்
தொடர்புறுத்துவதில்லை. காதலினாலும் அதன் துன்பத்தி னாலும் தாக்குற்ற தலைவி கடலை நோக்கி
ஏன் இவ்வாறு ஓலமிடுகிறாய்? நீயும் என்னைப் போல யாராலாவது கைவிடப் பட்டாயோ என்று
கேட்பதாக எழுதுகின்றனர். ஆனால் வேர்ஸ்வர்த், “பேராற்றல் மிக்கவன் எழுந்தான்” என்று
எழுதுகின்றார்.
கிரேக்க, லத்தீன் கவிதைகளில் மனிதனின் நாடகத்திற்கத் தளமாக இயற்கை
முன்னிறுத்தப்படுகின்றது. தமிழ்ப்பாடல் களில் மனிதனின் நாடக வாழ்வோடு ஒத்துணர்வுடையதாக
இயற்கை காட்சிப்படுத்தப்படுகிறது. நாடகமாக்கப்படும் மனித உள்ளுணர்வுகளுக்கேற்ப இயற்கையும்
தன்னியல்பில் மாறுபடுவதாகக் காட்டப்படுகிறது. ஆனால், வேர்ட்ஸ்வர்த் படைப்புகளில் இயற்கை
என்பது மனித இயல்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உள்ளது. அண்ட வாழ்வை மேற் கொண்டுள்ள
தன்மைத்தாகவும் தன்னைத் தானே நேசித்துக் கொள்வதாகவும் நம்மோடு உறவு கொள்ள இயலுவதாகவும்
இயற்கையைச் சித்திரித்துள்ளனர். வேர்ட்ஸ்வர்த் இயற்கை யைக் கடவுளாகக் கருதினார். இயற்கையின்
ஒவ்வொரு கூறும், குன்றுகளும் மரங்களும் நெடுஞ்சுனைகளும் கொடும்பாறை களும் காட்டாறுகளும்
மாலை விண்மீன்களும் துடிப்பான வாழ்க்கையுடையவை. அவை ஒவ்வொன்றுக்கும் உள்ளுணர் வும்
ஆன்மாவும் இருப்பதாகக் கற்பிதம் செய்துள்ளார். அதே சமயம் அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கவும்
ஒன்று படுத்தவும் செய்கிற ஒரு ஆன்மாவை மேலும் கற்பிக்கிறார்.17
மேகங்களிலும் காற்றிலும் உள்ள கலை நீ
பசுமையிலும் சோலைகளிலும் உள்ள கலை நீ
.. ... ... ...
மறையும் சூரிய ஒளியில் குடியிருக்கும்
சுழலும் கடலில், வீசும் காற்றில்
நீல வானத்தில் மனித மனத்தில்
அசைவுகளில் உணர்வுத் திளைப்பில், தூண்டப்பெறும்
எல்லா எண்ணங்களில், எல்லாப் பொருட்களின் சிந்தனைகளில்
எல்லாவற்றிலும் ஊடுருவிச் செல்லும்.
கிளர்ந்தெழும் தனது அளவிலா எண்ணங்களை அண்டத்தில் உள்ளடக்கி இயற்கை என்று அழைக்கப்படும்
படைப்புகளின் வடிவில் தந்துள்ளார். மனிதனுக்கான களமாக இயற்கையைப் பார்க்கும் பண்டைய
பார்வை உண்மையானது என்றும் கருதுபவர்கள் வேர்ட்ஸ்வர்த்தின் பிந்தைய நவீனப் பார்வை பொய்யானது
என்றும் கருதுகின்றனர். ஆனால் இதனை மறுக்க இயலாது. இயற்கையை வெளிப்படுத்திக்
காட்டுவதில் ஒரு புதிய தன்மையைத் தொடங்கிவைத்ததிலும் நேரிய பங்களிப்பைச் செய்ததிலும்
வேர்ட்ஸ்வர்த் குறிப்பிடத்தக்கவர். 18
சமய நம்பிக்கைகளின் தாக்கமின்றிக் காணப்படும் பண்டைய தமிழ்ப் புலவர்களின் பாடல்களில்
கடவுளரின் இருப்பு ஊடுரு வியிருப்பது ஒருவருக்கு வியப்பைத் தரும். பரிபாடல் வரிகளாவன:
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; (பரி: 3,63-68)
பகவத்கீதையிலும் இதைப் போன்ற வரிகள் உள்ளன.
அர்ஜுனா, உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். இடையும்
அவற்றின் இறுதியும் யானே (20)
எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா சராசரங்களில் என்னையின்றியுள்ள
பூதமொன்றில்லை (39)
எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து அழகுடைத்து, வலிமையுடைத்து - அதுவெல்லாம்
எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர் (41) (பத்தாவது அத்யாயம்).
மேற்கூறப்பட்ட தமிழ் மற்றும் சமஸ்கிருதப் பாடல்களின் உணர்ச்சி மிக்க வரிகள் பக்தியை
வரையறுப்பன. இவை தமிழர்களின் சமயச் சார்பற்ற கவிதையியலின் தாக்கம் பெறாதவை.
அதோடல்லாமல் பண்டைய காலத்தில் தமிழர்களின் இயற்கை வெளிப்பாட்டுத் திறத்தில் அறிமுகமான
புதிய போக்கின் காரணமாக உருப்பெற்றவை.
Notes:
1. The writer admits the classic simplicity of Pallava art
2. Alice Meynell, Essays, London, 1925, p.152 ff; Cr.C.E.Robinson, Zitto
Hellas, London, 1946, p.182 : “No where can this principle be more
clearly observed than in the Greek’s own language-always a faithful
mirror of a people’s mentality. In style and structure Greek linguistic
methods were a complete contrast to our own. The easy-going,
loose-minded Englishman will express his ideas in a series of
independent sentences ranged side by side, as it might be a row of
single-room hunts. The Greek preferred to build a more complex and more
comprehensive edifice. Viewing a group of ideas as a logical unity, he
would bring them all together into one long period in which through the
subordination of clause to clause he was able to bring out explicitly
the inter-connection between idea and idea-‘a lot of little pieces of
string’ as the school boy ruefully put it, ‘all tied together in one
enourmous knot’. But literary knots, when skillfully tied, serve a
valuable purpose. By their very complexity they focus the mind of the
logical interplay of ideas and it was to their precise grasp of logical
relationships that the Greeks owed the unique clarity of their thought”
3. Arthor A.Macdonell, History of Sanskrit Literature, p.67, London, 1924.
4. S.K.Chatterji, Race Movements and Prehistoric Culture, in Vedic Age,
London, 1951, p.160 : “The characterstic offerings in the Puja rite,
viz., flowers, leaves, fruits, water, etc., are not known to the
homarite, except in instances where it has been influenced by the Puja.
It has been suggested with good reason that puja is the pre-aryan, in
all likelihood the Dravidian form of worship, while the homa is the
Aryan: and throughout the entire early vedic Literature, the puja ritual
with flowers, etc. offered to an image or symbol is unknown. The word
puja from a root puj, appears, like the thing it connotes, to be of
Dravidian origin also. This word of root is not found in any Aryan of
Indo-European Language outside India. Proffessor Mark Collins suggested
that the Sanskrit word puja (from the root puj was deduced later) was
nothing but a Dravidian Pu “flower” plus root+ge “to do” (palatalized to
je), which is found in Tamil as chey, in Kannada as ge and in Telugu as
che. Puja pu-ge, pu-je, pu-che was thus a “flower ritual”. A “flower
service”, pushpa-karma, just as homa was described as pasu-karma or
religious service entailing the slaughter of an animal”.
5. See S.B.Das Gupta, Aspects of Indian Religious Thought, pp.166-188,
culcutta, 1957.
6. A.A.Macdonell, History, o.c.; p.79.
7. On the differences between Aryan and Dravidian religious, see
P.T.srinivas Iyengar, Pre-Arayan Tamil Culture, passim and H.T., pp.102-115.
8. The erotic poetry of Hala in prakrit does not use Nature as a
regional background. See sushil Kumar De, Ancient Indian Erotics and
Erotic Literature, Calcutta, 1959.
9. Sri Auro bindo, Kalidasa, Calcutta, 1929, p.36 : “He fell back on the
life of sensuous passion with images of which, no doubt, his ungoverned
youth was most familiar.”
10. Ritusamhara edited by R.S.Pandit, Bombay, 1942; edited by M.A.Male,
Bombay, 1916.
11. J.C.Shairp, Poetic Interpretation of Nature, o.c.; p.236.
12. On Nature in Greek and Latin poetry see also H.R.Fairclough, Love of
Nature among the Greeks and Romans, New York, 1930; G.Soutar, Nature in
Greek Poetry, London, 1939; W.F.Jakson Knight, Roman Vergil, London, 1943.
13. Aink;175. Cfr.K.N.Sivaraja Pillai, The Chronology of the Early
Tamils, o.c.,p.98.
14. T.P.Meenakshisundaram, The Theory of Cankam Poetry, in Tamil
Culture, vol.I, No.I, P.41
15. J.Ingram Bryant, The Interpretation of Nature in English Poetry,
Tokyo, 1932; F.W.Moorman, The Interpretation of Nature in English poetry
from Beowulf to Shakespeare, pp.215-239, Strassburg, 1915.
16. Stopford A.Brooke, Naturalism in English poetry, London, 1920, p.130.
17. Norman Lacey, Wordsworth’s View of Nature, Cambridge, 1943.
18. J.W.Beach, The concept of Nature in Nineteenth Century English
Poetry, New York, 1936,pp.158-251.
குறிப்புகள்
1.1) ஃபிரா ஆஞ்சலிகோ - இத்தாலிய ஓவியர் (1395-1455)
2.2) டர்னர் - பிரித்தானிய ஓவியர் (1775-1851)
3.3) கோரத் - பிரெஞ்சு ஓவியர் (1796-1875)
4.4) ரஃபீல் - இத்தாலிய ஓவியர் (1483-1520)
5.5) ரஸ்கின் - ஆங்கிலேய கலை விமர்சகர் (1819-1900)
6.6) ஆலிஸ் மைனல் - ஆங்கிலேய எழுத்தாளர், விமர்சகர் (1847-1922)
7.7) ஜூபிடர் - வானம் மற்றும் இடிக்கான ரோமானிய இயற்கைக் கடவுள்
8.8) எலியாஸ் - காற்றுக்கான கிரேக்கக் கடவுள்
9.9) நெப்டியூன் - கடலுக்கான ரோமானிய இயற்கைக் கடவுள்
(மொ-ர்)
மொழியாக்கம் : மு.நஜ்மா

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 8:43:57 AM5/30/15
to brail...@googlegroups.com
தமிழ் பேசும் இனத்தார்க்கு வேண்டுகோள்
8
விவரங்கள்
எழுத்தாளர்: பேராசிரியர் சேவியர் தனிநாயகம்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: நவம்பர்2013
C வெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2013
1956இல் அடிகளால் எழுதப்பட்ட இக்குறு நூல், மீண்டும் வெளியிடப்படுகிறது. இதனைக்
கண்டெடுத்து கொடுத்தவர் ஆய்வாளர் தெ.மதுசூதனன் ஆவார்.
பேராசிரியர் அவர்களது கிறித்தவப்பணி, தமிழ்ப்பணி ஆகியவற்றை அறிந்த அளவிற்கு அவரது
அரசியல்பணி குறித்துத் தமிழ்ச்சமூகம் பெரிதும் அறிந்திருக்கவில்லை. தனிச்சிங்கள மொழிச்
சட்டம், சிங்களப் பேரினவாதிகளால் 1956இல் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் அரசியல்,
பொருளாதார பண்பாட்டுக் கூறுகளின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த
ஆவணம் அமைந்துள்ளது. உலகில் பன்மொழிச் சூழல் எதிர்கொள்ளப்படுவதை இதில் அடிகள்
தெளிவுபடுத்தியுள்ளார். சிறுபான்மை தேசிய இனத்தின் மீது பெரும்பான்மை தேசிய இனம்
நடத்தும் ஒடுக்குமுறைகளில் முதன்மையானது மொழி அழிப்புச் செயல்பாடு. இது இன அழிப்புச்
செயல்பாட்டிற்கு இட்டுச்செல்லும். 1956ஆம் ஆண்டில் அடிகள் பதிவுசெய்துள்ள கருத்துகள் இன்றைய
சூழலில் மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதை அறிகிறோம்; சமயவாதியாக,
தமிழ்ப்பேராசிரியராக மட்டும் அடிகளாரைக் கட்டமைக்க விரும்புவோர், இந்த ஆவணத்தை
வாசிக்கவேண்டும்.
1956ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் பிரதிநிதிகள் மன்றத்தில் நிறைவேறிய பொழுதும் தமிழ்
மக்கள் தம் உரிமைகளை எதிர்காலத்திற் பெறக்கூடுமென்று, ஒருவாறு எதிர்பார்த்தார்கள். சென்ற
நான்கு ஆண்டுகளாக தமிழரின் மொழி உரிமை நிலை இன்னும் வலிமையிழந்து கொண்டே வந்துள்ளது.
இன்று அமுலாகும் தமிழ் வழங்கும் சட்டங்கள் ( Tamil Provision Act ) நம் மக்களின்
உரிமைகளைப் பொருட் படுத்தாது தம் நாட்டிலேயே கீழ்நிலைக் குடிகளாகத் தமிழ் மக்களை
ஆக்கிவிட்டது.
இவ்வாண்டில், தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையின் வலிமையால் தம்முரிமைகளை
நிலைநாட்டாவிடின் எதிர் காலத்தில் அவற்றைப் பெறப்போவதில்லை.
எனவே இவ்வுரிமைகளை மீண்டும் பெறுவதற்கு நாம் ஆக்க வேண்டிய பணிகள் சிலவுள:-
1. தமிழன் ஒவ்வொருவனும் காலை வழிபாடு செய்யும் போது தமிழினத்தின் மொழி உரிமைகளைப்
பெறுமாறு இறைவனின் திருவருளை வேண்டி நிற்க வேண்டும். இறைவன் எல்லாம் வல்லவன். அவன்
திருவருள் இருந்தால் நீதியும் அமைதியும் இன்பமும் நாம் அடைவோம் என்பது ஒருதலை.
2. இவ்வாறு இறைவனை வழிபடுவதுடன், தமிழ் உரிமைகளைப் பெறுவதற்குத் தான் எத்தகைய தொண்டு
ஆற்றக்கூடும் என்று தன் உள்ளத்தை வினவ வேண்டும். இவ்வியக்கங்களில் என்னால் இயன்ற மட்டும்
தொண்டாற்றியுள்ளேனா? பொருள் உதவி செய்தேனா? இவ்வியக்கங்களில் உறுப்பினனாக ஈடுபட்டேனா?
கருத்து வேற்றுமைகள் இருப்பினும் அவ்வேற்றுமை களைப் பொருட்படுத்தாது இவ்வியக்கங்களில்
ஈடுபட்டு ஒத்துழைத்தேனா? என் நலத்தைக்கருதி தமிழ் இனத்தைக் காட்டிக்கொடுக்க முயன்றேனா?
அல்லது நானும் என் குழந்தைகளும் சிங்களத்தைப் பயின்று முன்னேறவும் தமிழை மறக்கவும்
எண்ணினேனா? என்றெல்லாம் தன் நெஞ்சத்தை வினவி, ஒவ்வொரு நாளும் தான் இவ்வியக்கங்களுக்கு
ஆற்றும் தொண் டினைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
3. அரசியல்வாதிகள் அரசியற்றுறையில் நம் உரிமைகளைப் பெற நிகழ்த்தும் இயக்கங்களுடன் நாம்
ஒத்துழைத்தல் வேண்டும்.
4. நீதிமன்றத்தில் தனிச்சிங்களச் சட்டம் தமிழ் மக்களைப் பாதிக்கும் கொடுங்கோண்மைச் சட்டம் என்று
நாம் விவாதிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு மலேயா வில் இருக்கும் தமிழர் பலர்
ஒத்துழைக்கின்றனர். இவ்வழக்கு விரைவில் தொடங்கும். இவ்வழக்கின் செலவு முதலியவற்றிற்கு
தமிழ் மக்கள் பொருள் உதவி கொடுத்தல் வேண்டும். தமிழ் வழக்கறிஞர்கள் உதவி செய்தல் வேண்டும்.
அரசியல் மீது வழக்குத் தொடுப்பது வீண் என்று கருதுவாரும் உளர். ஆயினும் உலகறியு மாறும்
நீதிமன்றங்களின் நடுநிலைமை உண்மை யின்மைகளைப் புலப்படுத்துமாறு இவ்வழக்கினை நடத்துவது
இன்றியமையாதது. ஆங்கில நாட்டின் சட்டவல்லார் பலர் தனிச்சிங்களச் சட்டம் நீதிக்கு முரண்பட்டது
என்று முடிவு கூறியிருக்கின்றனர்.
5. ஈழத்தின் சட்ட மன்றங்களிலும் பிரிவுகவுன்சிலிலும் (Pricy Council) இவ்வழக்கில் நாம்
தோல்வியடைந்தால், அல்லது அதே நேரத்தில் ‘‘ஹேக்’’ கிலிருக்கும் உலகப் பொது நீதிமன்றத்தில்
(Internatonal Court of the Hague) நாம் வழக்குத் தொடர்தல் வேண்டும். அத்துடன் ஐக்கிய
நாடுகளின் சங்கத்தில் ( United Nations) நம் உரிமைகள் இழந்தது பற்றி முறையிட
வேண்டும். சைப்பிறஸ் ஆகிய சிறு தீவினர் இவ்வாறு உழைத்ததால் தம் உரிமைகளைப் பெற்றனர்.
சைப்பிரஸ் தீவில் இருப்பவர்கள் ஒன்பது இலட்சம் மக்கள்தான். அவர்களுள் 30% துருக்கி மொழி
பேசுவோர். 70% கிரேக்க மொழிபேசுவோர். இலங்கை யில் நிகழ்ந்தவாறே அங்கும் கலகங்கள்
நிகழ்ந்தன. அம்மக்களும் மொழி உரிமைகளுக்காக இடைவிடாது போராடியதாலும், ஐக்கிய
நாடுகளின் சங்கத்தில் முறையிட்டதாலும் இன்று இருமொழிகளும் சமநிலை பெற்று
விளங்குகின்றன. சட்டவல்லாரின் கழகம் ( International Commission of Jurists)
நம்நாட்டிற்குக் குறிப் பாளரை (observers) அனுப்புமாறு நாம் கேட்க வேண்டும்.
6. ஐக்கிய நாடுகளின் சங்கத்தில் முறையிடுவதற்கு இனக் கலகங்களில் நிகழ்ந்த கொடும்
நிகழ்ச்சிகளை உண்மைச் சான்றிதழ்களில் (Affidavits) சாட்சிகள் எழுதிக் கொடுப்பாரெனின்
பெரிதும் பயன்படும். ஓர் ஆயிரம் சாட்சிகள் தாம் ஈழத்தின் பல மாவட்டங்களில் கண்ட
கொடுஞ்செயல்களையும் தமக்கு நிகழ்ந்த கொடுமைகளையும் எழுத்தில் கொடுப்பாரெனின் தமிழ் இனம்
பட்ட இன்னல்களை உலகிற்கு புலப்படுத் தும் பெரும் தொகையேடாகும் அச்சான்றிதழ்கள். இச்
சான்றிதழ்களை (Affidavits) எவ்வாறு எழுத வேண்டும் என்பதை வழக்கறிஞரிடமிருந்து
அறிந்து கொள்க. ஒவ்வொரு சான்றிதழும் மூன்று படிகள் கொண்ட வையாக எழுதப்பட வேண்டும்.
அவற்றினை எனக்கு அனுப்புக.
7. நான் தைத்திங்கள் முதலாம் நாள் (1.1.1961) சென்னைக்குப் பறந்து சென்றேன். நிரப்ப
வேண்டிய பாரங்களையெல்லாம் இரத்மலானையில் தமிழில் நிரப்பினேன் எனக்கு வரும் சிங்கள ஆங்கில
பாரங் களையெல்லாம் திருப்பியனுப்பி விடுகிறேன். இயன்ற மட்டும் கடிதங்களின் முகவரிகளைத்
தமிழில் எழுது கின்றேன். தமிழர் அனைவரும் எல்லாம் தமிழ் இயக்கத் தில் ஈடுபட வேண்டுமென்று
கேட்டுக்கொள்கின்றேன். எல்லாத் துறைகளிலும் தமிழையே நாம் கையாளவேண்டும்.
8. சிங்கள மொழியிலும் நாம் கேட்கும் உரிமைகளைப் பற்றி எழுதிப் பரப்ப வேண்டும். சிங்கள
மக்கள் தம் கருத்துக்களையும் அறப்போரின் நோக்கங்களையும் நன்கு அறிதல் வேண்டும்.
9. எத்துணைத் தமிழர் சிங்களத்தைப் படிக்கின்றார்கள் என்று வரும் மூன்று ஆண்டுகளில் சிங்கள
அரசியலார் பார்த்தே சட்டங்களில் மாற்றங்களைச் செய்வார்கள். தமிழர் பலரும் சட்ட எதிர்ப்பின்றி
சிங்களத்தைப் பயின்றால் தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படப் போவதுமில்லை, தமிழ்
உரிமைகளை நாம் பெறப்போவதுமில்லை. இந்நிலையில் சிங்களத்தை மறைமுகமாகக்
கட்டாயப்படுத்துவது கொடுங் கோன்மையென்பதை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழும்
சிங்களமும் வழங்கும் மாவட் டங்களில் மொழி உரிமை உணர்ச்சி பெரிதாக இருக் கின்றது. ஆனால்
தனித்தமிழ் இயங்கும் மாவட்டங் களில் அவ்வுணர்ச்சி குறைந்து இருக்கின்றது. ஆயினும் இன்று
தொடங்கி அது பெருக்கெடுக்காவிடின் நம் மொழி உரிமைகளைப் பெறுவது அரிது. அண்மையில்
சமயச் சிறுபான்மையோர் தம் கல்விக் கழகங்களுக்காக நிகழ்த்திய அறப்போரில் இருந்து தமிழ்
மக்கள் அரிய பாடங்களைப் படித்துக் கொள்ளக்கூடும்.
10. தமிழ்மொழி உரிமைகளைப் பெற முயலும் இயக்கம் இதுகாறும் வெற்றி பெறாததற்குக்காரணம்
தமிழ் மக்களின் உணர்ச்சியின்மையென்றே கூற வேண்டும். தமிழ்பேசும் மக்கள் அனைவரும்
தமிழ்மொழியுரிமை களைப் பற்றிக் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர் என்று அரசியலார் இன்று
அறிவாரெனில் இன்றே வெற்றி காண்போம். நம் இயக்கத்திற்குத் தடைகள் பல உள. அவற்றுள் சில
பின்வருமாறு:-
அ. தமிழர் சிலர் அரசியலாளரின் ஒற்றராக உழைக் கின்றார்கள். நம் இயக்கங்களில் வலிமையில்லை,
ஒற்றுமையில்லையென்று இவர்கள் அரசியலாருக் குக் கூறிக்கொண்டே வருகின்றனர். எனவே அரசிய
லாரும் இத்தகைய பொய்யுரையைக் கேட்கவே விரும்புகின்றனர்.
ஆ. தென் இலங்கையிலுள்ள சிலர் அமைதியாகப் பொருள் ஈட்டுவதற்குத் தமிழ் இயக்கங்கள் தடையாக
இருக்கின்றனவென்று தமிழ் இயக்கங்களில் ஈடுபடுவோரைத் தம் எதிரிகளென்று கருதுகின்றனர்.
‘‘இந்தத் தொல்லையே வேண்டாம்; சிங்களத்தைப் பயின்று இன்னும் பணம் ஈட்டுவோம்’’ என்பதே
அவர்களின் நோக்கம்.
இ. சிலர் கட்சிப்பற்றால் வேறு கட்சிகளின் முயற்சி யைப் பொருட்படுத்துவதில்லை. தமிழ் மக்கள்
உரிமை பெறுவது அவர்களின் நோக்கம் அன்று. பிறகட்சிகளின் வழியாகத் தமிழ் மக்கள் யாதொரு
வெற்றியும் பெறுதல் ஆகாது என்பதே அவர்களின் சிறந்த நோக்கம். தமிழ் பேசும் இனத்தின்
உரிமைப் பற்றினும் கட்சிப்பற்றே இவர்களுக்குப் பெரிது.
ஒவ்வொரு தனி மகனுக்கும் தனி ஆற்றலுண்டு. உனக்குத் தமிழ் உணர்ச்சியில்லையெனில் நீ
இவ்வியக்கங்களிற்கு இடை யூறாக இருக்கின்றாய். இன்றே ஒருவாறு உன் உரிமைகளைப் பற்றி
உணர்ந்து உன்னால் இயன்றவரை ஒத்துழை. ஒவ்வொரு காலையும் ‘‘இன்று தமிழ் உரிமை வெற்றிக்கு
என்ன செய்யப் போகின்றேன்’’ என்றும் ஒவ்வொரு மாலையும் ‘‘இன்று தமிழ் உரிமை வெற்றிக்கு என்ன
செய்தேன்’’ என்றும் உன் நெஞ்சினைக் கேள்.
பொருட் செல்வம்
தமிழ் மக்களிடம் செல்வமில்லாததால் இவ்வியக்கங்கள் வலிமை பெறா என்று கருதுவார் உளர்.
அவ்வாறு நான் கருதுவதில்லை தமிழ் பல்கலைக்கழகத்திற்கென பத்து இலட்சம் நிதியன்றைத்
திரட்டுகின்றோம், தமிழ்பேசும் மகன் ஒவ்வொருவனும் ஒரு ரூபாய் தந்துதவ வேண்டு மென்பதே
இந்நிதியின் நோக்கம். இவ்வாறு நிதி திரட்டினால் எத்துணைத் துறைகளில் நாம் முன்னேறுதல்
கூடும்! வட கிழக்கு மாகாணங்களின் பொருட்டுறை வளர்ச்சிக்கும் ரூபாய் நிதியன்றை ஆண்டின்
பிற்பகுதியில் நாம் நடத்த வேண்டும்.
நாம் உறுதி கொண்டால் யாதொன்றும் நம் வளர்ச்சியைத் தடுக்கப் போவதில்லை.
தமிழ் பல்கலைக்கழக இயக்கம் தமிழைக் காப்பாற்றும் இயக்கம். அக்கலைக்கோயிலை யெழுப்புமாறு
தமிழர் அனைவரும் திரண்டு சேர்க.
சிங்களத்தைப் பயில்வதால் தாம் எதிர்பார்க்கும் நலன் களைத் தமிழ்பேசும் மக்கள் பெறப்போவதில்லை.
நம் மொழி உரிமைகளை நிலைநாட்டுவதால் தான் அந்நலன்களைப் பெறுதல் கூடும்.
நான் இருக்கும் நிலையில் அரசியற்றுறையில் இறங்கி மொழி உரிமைகளுக்காகப் போராடுவதற்கு
எனக்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் மொழிப் பிரச்சினை அரசியற் பிரச்சனை மட்டுமன்று. அது
கல்விப் பிரச்சனை, சமயப் பிரச்சனை, சமூகப் பிரச்சனை எனவே எத்துறையில் தமிழர் ஈடுபட்டு
வந்தாலும் அத்துறைக்கு ஏற்றவாறு தமிழ்மொழி உரிமைகளை மீண்டும் பெறுவதற்கு முன்வருதல்
வேண்டும். இதுகாறும் நன்றாக மொழி உரிமைகளைப் பற்றி உரையாடி யுள்ளோம். இனிமேல்
அவ்வுரிமைகளைப் பற்றிச் செயல் ஆற்றுவது நம் கடமை.
மொழியுரிமைகளின் விளக்கம்
ஈழத்திருநாட்டில் நிகழ்ந்து வரும் மொழி உரிமைகள் விவாதத்தைப் பற்றியும் தமிழ்மொழியின்
உரிமைகள் பற்றியும் தமிழ் மக்கள் முற்றும் அறிந்து தம் உரிமைகளைக் காப்பாற்றும் இயக்கங்கள்
அனைத்திலும் பங்குபற்றுதல் வேண்டும் என்று இறைஞ்சுகின்றேன். இவ்வியக்கங்கள் வெற்றி பெறுமாறு
ஒத்துழைத்தலும் பொருளுதவி செய்தலும் வேண்டும். சிங்கள மக்களின் ‘‘தனிச் சிங்களம்’’ என்னும்
இயக்கத்தை தம் அன்பாலும் அறத்தாலும் உண்மையாலும் உறுதியாலும் தமிழ் மக்கள் வெல்லக்கூடும்.
நான் அரசியலிலும் கல்வித் துறையிலும் இருமொழிகள் பன்மொழிகள் இயங்குந் தன்மையை ஒருவாறு
கற்றவன். இரு மொழி நாடுகள், பன்மொழி நாடுகளுக்கு நேரில் சென்று இருமொழி அரசியல்,
பன்மொழி அரசியல் எவ்வாறு தொழிற் படுத்தப்படுகின்றன என்பதை நன்கு நேரில் கண்டறிந்தவன்.
இருபதாம் நூற்றாண்டில் மொழியுரிமைகள் பண்புடைய நாடுகள் அனைத்திலும் முற்றும்
ஒப்புக்கொள்ளப்பெற்று நிலவுகின்றன. நம் ஈழவள நாட்டில் சிங்கள மொழியுடன் தமிழ் மொழியையும்
அரசின் மொழியாகவும் (National Language) ஆட்சி மொழியாகவும் (Official Language)
அமைக்காததைப் போல் பெருங் கொடுங்கோண்மை வரலாற்றிலேயே இல்லையென்று கருதுகின்றேன்.
உலகச் சட்டவழக்கு
பண்டைக் காலத்தில் தம் மொழிகளை மக்கள் அனைவரும் பேணி வந்தனராயினும் தமிழ் மக்கள் தம்
மொழியை தனி முறையில் பேணினர். தமிழர் தம் நாட்டைத் தமிழ் நாடென்றும் ஏனைய நாடுகளை
‘‘மொழி பெயர் தேயம்’’ என்றும் குறிப்பிட்டு வந்தனர். இடைக்காலத்தில் ஐரோப்பாவின்
கொடுங்கோலர் கட்டாயமாகத் தம் மொழிகளை அரசியல் மொழிகளாகத் தாம் வெற்றி கொண்ட நாடுகளில்
அமைத்தனர். ஆயினும் அத்தகைய நாடுகள் விடாமுயற்சியுடன் தம் மொழி யுரிமைகளுக்காகப்
போராடி வெற்றி பெற்றுக் கொண்டே வந்திருக்கின்றன. எட்டாவது ஹென்றி உவேல்ஸ் நாட்டையும்
அயர்லாந்து நாட்டையும் கைப்பற்றிய பொழுது உவேல்ஸ் மொழியையும் ஐரிஸ் மொழியையும் மக்கள்
பேசுவது சட்டத்துக்கு முரணென விதித்தான். நானூறு ஆண்டுகளாக உவேல்ஸ் மக்களும் அயர்லாந்து
மக்களும் மொழியுரிமை களுக்காகப் போராடி இந்நூற்றாண்டில் ஒருவாறு வெற்றி கண்டு வருகின்றனர்.
மக்களுடைய அறிவும் உரிமைகளின் உணர்ச்சியும் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஒரு காலத்தில்
அடிமைகளை நாட்டில் சட்டத்தால் ஆமோதித்தனர். ஆனால் இன்று அடிமைத் தன்மையைச் சட்டத்தால்
விலக்குகின்றனர். ஒரு காலத்தில் சாதி வேற்றுமைகளை நம் நாட்டில் பாராட்டி வந்தோம். இன்று
ஜயந்தியுடன் சாதி வேற்றுமைகளைச் சட்டத்தால் ஒழித்தல் வேண்டுமென்று திட்டம் வகுக்கின்றனர்
ஆட்சியாளர். எனவே 12ஆம் 13ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய மொழியுரிமை களுக்கும் 20 ஆம்
நூற்றாண்டில் விளங்கும் மொழியுரிமை களுக்கும் மிக மிக வேறுபாடுண்டு. இன்று ஒரு
இனத்தாரின் மொழிக்குச் சம உரிமை கொடுப்பதே முறையாகும். மக்கள் சமகுடிகளாயின் ஒரு
நாட்டில் சமத்துவம் விளங்குமாயின் சிறுபான்மையோர் பேசும் மொழிக்கும் பெரும்பான்மையோர்
பேசும் மொழிக்கு சம உரிமை சட்டத்தால் அளிக்கப்படுதல் வேண்டும். இன்றேல் சிறுபான்மையோரைக்
குறைந்த குடி உரிமை உடையோராகவும் கருதுவதற்கு இடமுண்டு. இச்செயலை எதிர்ப்பது தமிழ்
மக்கள் ஒவ்வொருவரதும் தலையாய கடனென்க.
பின்லாந்தைப் பின்பற்றலாம்
நம் சிங்கள நண்பர்கள் தாம் ஏனைய நாடுகளின் மொழியுரிமை வழக்கைத் தாம் தழுவப் போவதில்லை
யென்று கூறுகின்றனர். மற்றெல்லாத் துறைகளிலும் ஏனைய நாடுகளைப் பின்பற்றும் இவர்கள்
மொழியுரிமைகளைப் பற்றி மட்டும் தழுவ விரும்பாததற்குக் காரணம் ஏனைய நாடுகளின் மொழி
வழக்கிற்கு இவர்களின் கொள்கை நேர்முரணாயிருப்பதேயாம். பின்லாந்து நாட்டில் இரு ஆட்சி
மொழிகள். ஒன்பது விகிதத் தினர் சுவிடிஷ் மொழி பேசுகின்றனர். தொண்ணூறு விகிதத் தினர்
பின்னிஷ் மொழி பேசுகின்றனர். சுவீடிஷ் மொழி சிறுபான்மையோர் மொழியாயினும் அம்மொழிக்குப்
பின்னிஷ் மொழியுடன் சம உரிமை உண்டு. பின்னிஷ் மொழியை பின்னிஷ் மாகாணங்களில் மட்டுமே
கையாளுகின்றனர். ஆயினும் இரு மொழிகளும் அரசு மொழிகளாகவும், ஆட்சி மொழிகளாகவும் சம
உரிமைகளுடன் விளங்குகின்றன.
1949ஆம் ஆண்டு பின்லாந்து தேசத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத்தில் 14ஆம் உட்குறிப்பில்
பின்னிஷ் மொழியும். சுவீடிஷ் மொழியும் நாட்டின் மொழிகளென்றும் இவ்விரு மொழிகளையும் அரசு
காப்பாற்ற வேண்டுமென்றும், இவ்விரு மொழிகளையும் பாராளுமன்றத்திலும் ஆட்சியிலும் கையாளு
தல் கூடுமென்றும்குறிக்கப்பட்டுள்ளது. இங்ஙனமே சுவிட்சர்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா,
இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சைப்றஸ் முதலிய முப்பது இருமொழிப் பன்மொழி நாடுகளில்
சிறுபான்மையோருடைய மொழிகளுக் குப் பெரும்பான்மையோருடைய மொழிகளுடன் சம உரிமைகள்
கொடுத்திருக்கின்றனர்.
சைப்பிறஸ் தீவில் உள்ள ஒன்பது இலட்சம் மக்கள் பேசும் இருமொழிகளுக்கும் சமஉரிமை உண்டு.
இச்சிறு தீவில் இரு மொழிகள் அரசியல் மொழிகளாயின் இலங்கையில் இரு மொழிகள் இயங்குவது
பொருந்தாதா?
நமக்கே உரிமை
சென்ற ஆறு ஏழு நாட்களாகப் பெரும்பான்மையோருடைய மொழியை மட்டும் அரசியல் மொழியாக்க
வேண்டும் என்னும் பிரச்சினையைப் பெரும்பான்மையோரில் சிலர் வற்புறுத்தி வருகின்றனர். இது
நீதிக்கும், சட்டத்துக்கும், மக்கள் உரிமைக் கோட்பாடுகளுக்கும் முரண்படும் கொள்கையாகும்.
மக்கள் அடிப்படை உரிமைகளாகிய மத உரிமை, மொழி உரிமை, பண்பாட்டுரிமை, பேச்சுரிமை,
எழுத்துரிமை முதலிய துறை களில் சிறுபான்மையோரைத் தாக்கும் விதத்தில் பெரும்
பான்மையோருக்குச் சட்டம் வகுக்க உரிமை இல்லை. சிங்கள மக்கள் தமக்கு அரசியல் மொழியாகச்
சிங்களமொழியை அமைக்க முழு உரிமையுண்டு. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் மொழி யாது
என்பதைப் பற்றி முடிவு செய்யத் தமிழ் மக்களுக்கே உரிமை உண்டு. குடியாட்சி என்பது பெரும்
பான்மையோரின் ஆட்சிதான். ஆனால் அது பல்வேறு வகுப்பினரையும் சேர்த்த பெரும்பான்மையோர்
ஆட்சியாதல் வேண்டும். மேலும் தனிச் சிங்கள மக்களின் ஆட்சியன்று. தனிச் சிங்கள மக்களின்
நலன்களுக்காகச் சிறுபான்மையோரின் அடிப்படை உரிமைகளை வேள்வி செய்யும் ஆட்சியுமன்று.
சம உரிமை என்றால் என்ன?
உலகில் விளங்கும் மொழியுரிமைகளின்படி இரு மொழி களுக்கும் அரசு மொழி நிலையும்
ஆட்சிமொழி நிலையும் அளித்துச் சிங்கள மொழி சிங்கள மக்களுக்கு ஆட்சி மொழி யெனவும்,
தமிழ்மொழி தமிழ் மக்களுக்கு ஆட்சி மொழி யனெவும் நிறுவுவதே நீதியின் வழியாகும். சம
உரிமையெனில் சிங்கள மக்கள் தமிழ் கற்க வேண்டுமென்பதும், தமிழ் மக்கள் சிங்களம் கற்க
வேண்டுமென்பதும் அல்ல கருத்து. தமிழ் மாவட்டங்களில் தமிழ் மக்களுக்குத் தமிழும், சிங்கள
மக்களுக்குச் சிங்களமும் ஆட்சி மொழிகளாவதையே நாம் வேண்டுகின்றோம். இதுவே குடியாட்சி
நீதியாகும். இதுவே புத்த தருமமாகும். இதுவே இந்த ஜயந்தி வருடத்தில் நம் புத்த நண்பர்கள்
தழுவ வேண்டிய தருமமாகும். இதுவே தமிழ் அறமாகும். இதுவே கிறிஸ்தவ நீதியுமாகும்.
முறையாது?
ஒரு நாட்டில் ஒரு மொழி இரண்டு சத விகிதம் பேசப்பட் டாலும் கூட, அது ஒருநாட்டின் ஒரு
பகுதியில் மட்டும் வழங்கப் பெற்றாலும் கூட, அதனை அரச மொழியாகவும் தேசிய மொழியாகவும்
நிறுவிச் சம உரிமை கொடுப்பதே பண்புடைய மக்களின் வழக்கமாக இருந்து வருகின்றது.
இவ்வழக்கத்துக்கு முரணாக நம் சிங்கள மக்கள் நடக்கத் துணிவது ஏன்? தமிழ் மக்களின்
உணர்ச்சியையும் உரிமையையும் சிறிதேனும் பொருட்படுத்தாது திட்டம் வகுப்பது எங்ஙனம்?
இறுதியாகத் தமிழ் மக்கள் ஈழ வளநாட்டில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு குடையின் கீழ் சம
உரிமையுடன் வாழவேண்டுமாயின், இரு மொழிகளுக்கும் அரசு நிலையும், ஆட்சி நிலையும் நம்
நாடு கொடுத்தல் வேண்டும். தமிழ் மாணவர் ஆரம்பப் பாடசாலை யிற் தொடக்கம் பல்கலைக்கழகம்
ஈறாகத் தமிழ் மொழியில் கற்க வாய்ப்பு அளித்தல் வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் மொழியில்
அரசுடன் தம் நடவடிக்கைகளை நடத்த வாய்ப் பளித்தல் வேண்டும். மேலும் தமிழ்மொழிக்கும்,
பண்பாட்டிற்கும் அரசினர் ஆதரவு அளித்தல் வேண்டும். இவ்வாறு செய்வ தாலே தமிழருக்கும் சம
உரிமை இந்நாட்டில் உண்டு என்பதை அரசியலார் நிலை நிறுத்த முடியும்.
தனிச் சிங்களத்தை எப்படி எதிர்ப்பது?
தனிச் சிங்களச் சட்டத்தின் அரசியல் கருத்துக்களை அரசியலில் ஈடுபடுவோர் மக்களுக்கு
விளக்கிக் கூறுவார்கள். ஆனால் தனிச்சிங்களச் சட்டத்தின் கல்விக் கருத்துக்களைப் பற்றிக்
கூறவேண்டியது என்னைப் போன்ற ஆசிரியர்களின் கடமையாகும். நான் அரசியலில் ஈடுபட
விரும்பவில்லை. ஆயினும் தனிச் சிங்களம் என்னும் திட்டம் கல்வியோடும், குடியுரிமையோடும்
பண்பாட்டுடனும் தொடர்பு கொண் டுள்ளதால் அதனை நன்கு ஆராயவேண்டியது ஈழத்திருநாட்டின்
எதிர்கால நலத்தை விரும்புவோரின் கடமையாகும். இந்நகல் தமிழ்க் கல்வியையும், தமிழ்ப்
பண்பாட்டையும் தமிழர் தழுவும் திருமறைகளையும் அழிக்கவல்லது என்பதில் சிறி தேனும்
ஐயமில்லை. 1967ஆம் ஆண்டுக்குப் பின் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே வடமாகாணத்திலும்,
கீழ்மாகாணத் திலும் இருப்பன தவிர இடை நிலைப்பாடசாலைகளும், உயர்நிலைப் பாடசாலைகளும்
பல்கலைக்கழக கல்வியும் இருக்கமாட்டாவென்பதே இந்நகலின் திட்டமாகும்.
1.நம் எதிர்ப்பை எவ்வாறு நிகழ்த்த வேண்டுமென்பதை ஆராய்வோம். முதன் முதலில் இந்நகலை
வல்லமையிலும் நம்பிக்கையுடையவராதலால் நாட்டின் நலத்துக்காகவும், தமிழ்மொழியின்
வெற்றிக்காகவும் இறைவனை வேண்டி வருதல் வேண்டும். இவர்கள் ஒவ்வொரு நாளும் பத்துப்
பதினைந்து நிமிடங்கள் தியானம் செய்தல் வேண்டும். தத்தம் திருமறைகளின் நூல்களைச்
சிறிதேனும் தினமும் படித்தல் வேண்டும். தியானத்தாலும் வழிபாட்டாலும் இவர்கள் உள்ளத்
தூய்மையடைந்து புதிய தூய ஆற்றலுடன் இவ்வியக்கத்தில் ஈடுபடுவார்கள்.
2.சிங்கள மக்கள்பால் சிந்தையாலும், செயலாலும் அன்பும் அறமும் காட்டி அவர்களுடன் ஒழுக
வேண்டும். அவர்களுக்குச் சிறிதேனும் சிந்தையாலோ செயலாலோ தீமை செய்தலாகாது. அவர்கள்
இயற்கையில் நற்குணமும் நற்பண்பும் படைத்த வர்கள். அவர்களுட் பலர் சிறுபான்மையோரைப்
பாதிக்கும் இதுபோன்ற நகல்களை விரும்புவதில்லை. ஏனையோர் பெரும்பான்மையோரின் ஆட்சியென்றால்
தனிச்சிங்கள ஆட்சியாதல் வேண்டுமென்று நம்புகின்றனர். அவர்கள் அறியாது செய்வதை நாம்
பொறுத்தல் வேண்டும். அதுவே தமிழ் அறம்.
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்தலோ சால்பு (987)
3. ஒவ்வொரு சிற்றூரிலும் பேரூரிலும் ஆசிரியர்களும், பெற்றோர்களும், மற்றுமுள்ளோரும்
கூடி நம் உரிமைகளைப் பற்றியும், இத்திட்டத்தின் கல்விக் கருத்துக்களைப் பற்றியும் உரைகள்
நிகழ்த்த வேண்டும்.
இத்திட்டத்தை எதிர்ப்பதாகத் தம் பிரதிநிதிக்கும், பிரதமருக் கும், எதிர்க்கட்சித்
தலைவருக்கும் கூட்டங்களின் தீர்மானங் களை அனுப்புதல் வேண்டும். இக்கூட்டங்கள் வடமாகாணம்
கீழ்மாகாணங்களில் மட்டுமல்லாது ஏனைய மாகாணங்களிலும் பெரும்பான்மையோருடைய சீற்றத்தைத்
தூண்டிவிடாது நடைபெறுதல் வேண்டும். தனிச்சிங்களம் எனும் நகல் நம்மைப்பாதிக்கும் இத்துணைக்
குறிப்புகளை உள்ளடக்கி வந்ததற்கு காரணம் தமிழ் மக்கள் இது பற்றி எதிர்ப்புக்
கூறாததேயாகும். குடியாட்சியில் பிரதிநிதிகள் மக்களின் கருத்துக்களை இத்தகைய
கூட்டங்களால் தான் அறிகின்றனர். மக்கள் அனுப்பும் தந்திகளிலிருந்தும், செய்திகளிலிருந்துமே
பிரதமர் அவர்களது எதிர்ப்பை நன்கு அறிய வருவார். எதிர்ப்பு இல்லையென்றால் மக்களுக்கு
இத்திட்டத்தில் உடன்பாடு உண்டென்று கருத இடமுண்டு.
நீதியும், உண்மையும் தமிழ் மக்கள் சார்பில் இருக்கும்போது நாம் உறுதியாக உண்மைகளை
எடுத்துக்கூற வேண்டும். இத்திட்டத்தின் உட்கருத்துகள் பல. இதை அமுலுக்குக் கொண்டு
வருவாரேயாயின் தமிழ் பத்திரிகைகளுக்கும் வானொலி நிகழ்ச்சிகளுக்கும், தமிழ் கலைகளுக்கும்
தமிழர் தழுவும் சமயங்களுக்கும் எழுத்தாண்மைக்கும் இடமிரா தென்பது திண்ணம். இதுகாறும்
இராத மொழிக்கொடுங் கோன்மையும் பண்பாட்டுக்கொடுங்கோன்மையும் இத்திட்டத் தின் பயனாவன. நம்
நாட்டை ஆண்ட ஆங்கிலேயர், ஒல்லாந்தர், பறங்கியர், தம் கருத்திலும் கொள்ளாத நோக்கங் களையும்,
கொடுமைகளையும் இத்திட்டம் கருதுகின்றது. அயர்லாந்து தேசத்திலும், வேல்ஸ் நாட்டிலும் 16ஆம்
நூற்றாண்டில் 8வது ஹென்றி ஐரிஸ் மொழியையும், வேல்ஸ் மொழியையும் அழிக்க நிறைவேற்றிய
சட்டங்கள் போல் 20ஆம் நூற்றாண்டில் இத்திட்டம் உருப்பெற்றிருக்கிறது. மக்களின் உரிமைப்
போராட்டமும் சுதந்திர தாகமும் சமத்துவ மனப்பான்மையும் இந்நான்கு நூற்றாண்டுகளில் எத்துணை
வளர்ந்துள்ளது என்பதை இத்திட்டம் அறிந்திலதுபோல் தோன்றுகின்றது.
சட்டம் நிறைவேறினாலும் போராட்டம் ஓயக்கூடாது
தனிச்சிங்கள மசோதா சட்டமாவது திண்ணமாயினும் அச்சட்டத்தைப் பொருட்படுத்தாது தமிழ்மொழியின்
உரிமை களனைத்தும் மீண்டும் பெறுமாறு அயராது உழைத்தலே தமிழ் மக்களின் கடமை.
இதுகாறும் செல்வாக்குடன் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்குப் பல்வேறு இன்னல்கள்
நிகழ்ந்திருப்பது அவர் களுக்கு ஒற்றுமையையும் புத்துணர்ச்சியையும் அளித்திருக்கின்றது.
தமிழ் மக்கள் எவராயிருப்பினும், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர் முழுமுதற் கடவுள்
ஒருவரை வழிபட்டுவரும் வகுப்பினர். எனவே அத்தோன்றாத் துணையின் திருவருளை நம் அறப்போர்
வெற்றிபெறுமாறு நாள்தோறும் வேண்டி வருதல் வேண்டும். இறைவனின் துணையிருந்தால் நாம் அடைய
முடியாத வெற்றி ஒன்றேனுமில்லை. தியானத்தாலும் வழிபாட் டாலும் இவ்வறப்போரில்
தூய்மையடைந்து உழைப்போம்.
இச்சட்டத்தை தமிழ் மக்கள் சத்தியாக்கிரக முறையில் எதிர்க்க முழு உரிமையுண்டு.
சத்தியாக்கிரகத் துறையில் இதனை எதிர்க்கும் வழிவகைகளை நம் அரசியற் தலைவர்கள் விரைவில்
கூறுவர். அவர்களினுடைய திட்டங்களை நம் மக்கள் அனுசரித்தல் வேண்டும். ‘‘தனிச் சிங்களம்
சட்டமாகி விட்டது. இனிச் செய்வது யாதொன்றுமில்லை’’ எனும் மனப்பான்மை கோழையின்
மனப்பான்மையாகும். பல்லாயிரம் ஆண்டு களாகத் தம்மீது படையெடுத்த மாற்றாரைப் புறங்கண்ட
தமிழன்னை நம்மிடம் வீரத்தையும் ஆற்றலையுமே எதிர்பார்க் கின்றாள்.
மொழியுரிமைகளுக்காகப் போராடிய மக்களின் வரலாற்றை ஆராயும்போது அவர்களினுடைய வரலாறு
நம்முடைய எதிர்கால வாழ்க்கையில் அஞ்சாது உழைப்பதற்குப் பெரும் தூண்டுதலாக இருக்கின்றது.
‘உவேல்ஸ்’ மக்களின் மொழியைச் சிதைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் எட்டாவது ஹென்றி யும் அவனைத்
தொடர்ந்து வந்த மன்னர்களும் படை யெடுத்தனர். 400 ஆண்டுகளாக ‘உவெல்ஸ்’ மக்கள் பலர் தம்முடைய
பண்டைய மொழியை மறைவாகப் பேணி வந்தனர். இன்று அவர்களினுடைய மொழி சில உரிமைகளைப்
பெற்று விளங்குகின்றது. இன்னுஞ் சில ஆண்டுகளில் உரிமைகளனைத்தையும் பெற்று
விளங்குமென்பது திண்ணம். இவ்வாறே பெல்ஜிய நாட்டில் ‘விளமிஷ’ மொழி பேசுவோர் 100
ஆண்டுகளாகப் போராடி இறுதியில் முழு உரிமைகளையும் பெற்று இன்று இன்பமாக வாழ்கின்றனர்.
பின்லாந்தில் 700 ஆண்டுகள் போராடிய பின் இன்று பின்னிஷ் மொழி அரசியல் மொழியாகத்
திகழ்கின்றது. எனவே மொழியுரிமைகளுக்காகப் போராடிய மக்களின் வரலாற்றை இன்னும் பெருகக்
கூறலாம்.
தமிழ்மொழி ஈழத்தின் மொழி. பல நூற்றாண்டுகளாக ஈழத்தில் தனியாட்சி புரிந்தமொழி தமிழ்.
தனியரசின் மக்கள் தமிழ் மக்கள். எனவே தமிழ்மொழியும் சிங்களமொழியைப் போற் சம உரிமை
பெறுதல் வேண்டும்.
தமிழ் மக்களின் கடமை
இச்சட்டத்தின் பயனாக ஈழத் தமிழ் மக்களனைவரும் இன்று தொடங்கித் தமிழ் இலக்கியங்களையும்
தமிழர் வரலாற்றையும் புத்துணர்ச்சியோடு கற்று வருவார் என்பது திண்ணம். பண்டைக் காலத்தில்
இல்லாத தமிழன்பு எதிர்காலத்தில் நம்முள்ளங்களில் பெருக்கெடுக்கும் என்பது ஒரு தலை. தமிழ்
மாணவர் தாழ்வு மனப்பான்மை யாதொன்றும் வளர்க்காது தமிழ்மொழியின் பெருமையையும் தாம் காட்ட
வேண்டிய வீரத்தையும் வளர்க்கு மாறு நாம் கல்வித்துறையில் ஈடுபடவேண்டும். அரசியல் வாதிகள்
அரசியற்றுறையிற் சம உரிமைகளைப் பெற முயலுங்கால் கல்வித்துறையிலும்
பண்பாட்டுத்துறையிலும் சமூகத்துறையிலும் தொண்டாற்றி வருபவர்கள் புது இயக்கங் களை
உண்டாக்கித் தமிழ் மக்களுடைய முன்னேற்றத்துக்காகத் திட்டங்கள் வகுத்தல் வேண்டும்.
சிங்கள அரசியலார் தமிழர் பண்பாட்டை வளர்ப்பாரென்று எதிர்பார்ப்பது வீணாகும். அவர்கள்
தேசியப் பண்பாடென்று கூறுவது சிங்களப் பண்பாடேயாகும். தேசிய இயக்கமென்பது சிங்கள
இயக்கமேயாகும். தேசிய மொழி என்பது சிங்கள மொழியேயாகும். அவர்கள் ஏதோ நம்மை இலங்கைக்கு
வந்துவிட்ட அகதிகளென்றே கருதுகின்றனர். தமிழ் மக்களே தமிழ்த்துறைகளனைத்தையும் காப்பாற்ற
வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ் மக்களின் முயற்சியை வருங்காலத்தின் வரலாறு புகழ்ந்து
கூறும்.
அரசியற்துறை யழிந்த ஏனைய துறைகளில் உழைப்பதற் காகத் தமிழ் பல்கலைக்கழக இயக்கம் என்ற
பெயருடன் ஒரு இயக்கம் உருவாகி வருவது நமக்குப் பெரும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
அவ்வியக்கம் தமிழ்பேசும் மக்களின் கல்வித் துறை பண்பாட்டுத்துறை, பொருளியற்றுறை ஆகிய இம்
முத்துறைகளிலும் ஆராய்ச்சியும் அலுவலும் ஆற்ற முன்வந் துள்ளது. தமிழ் அரசியல் இயக்கங்களை
ஆதரிப்பதுபோல் இவ்வியக்கத்தையும் நம் மக்கள் ஆதரிப்பார்களாக.
தமிழ் மொழியின் உரிமைப்போர் இன்றுதான் ஆரம்பித் துள்ளது. இப்போரில் வெற்றி காணுமட்டும்
தமிழ் மக்கள் அனைவரும் அணிவகுத்து ஆடவரும், பெண்டிரும், மாணவரும், முதியோரும்
நாள்தோறும் இப்போரில் பங்குபற்றி ஒத்துழைப்பது கடமை.
ஒற்றுமை வேண்டும்
சென்ற சில தினங்களாக வடமாகாணம் கீழ்மாகாணங்களில் சொற்பொழிவுகள் ஆற்றியபொழுது நம்
ஈழத்தமிழ் நாட்டின் பொருளியல் சமூக முன்னேற்றங்களைப் பற்றி அறிஞருடன் கலந்து உரையாட
எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. மேலும் வவுனியா தொடங்கி யானையிறவு ஈறாக இடையேயுள்ள
நிலப்பரப்பின் எதிர்கால முன்னேற்றத்தையும் உணர்ந்தேன்.
கோயிலுஞ் சுனையும் உள்ள கடல் சூழ்ந்த திருமலையின் குடாவையும் பாறையையும் அதனைச்
சுற்றியிருக்கும் நீர்ப் பரப்பு நிலப்பரப்பின் அழகையும் கண்டு வியந்தேன். கீழ் மாகாணத்தில்
கடலுடன் கலக்குமுன் மாவலி கங்கையின் இரு மருங்கும் தன் சேயைப்போல்
நீரூட்டும்பச்சைக்கழனிகளைக் கண்டு மகிழ்ந்தேன். மட்டக்களப்பின் தென்பாகத்தில் காரை தீவு,
அக்கரைப்பற்று முதலிய இடங்களில் முஸ்லீம் மக்கள் பொன்னிறக் கதிர்களை வெட்டிக்
குவிப்பதைக்கண்டு களித்தேன்.
சென்றவிடமெல்லாம் தமிழ்பேசும் மக்களனைவரிடமும் புது உணர்ச்சியும் புது ஆர்வமும்
தோன்றியது. தனிச்சிங்களம் சட்டமானதும் தமிழ் மக்களுக்கு முன்பு இராத உணர்ச்சியும்
ஒற்றுமையும் தோன்றிற்று. தமிழ்பேசும் இனம் என்னும் புத்துணர்ச்சி பெருக்கெடுத்து ஓடுவதைக்
கண்டேன்.
எதிர்காலத்தில் தமிழ்மொழி செல்வாக்குடன் வளர்வதற் காகத் தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக
வாழும் மாவட்டங்களை நாம் இன்றே பல துறைகளிலும் சீர்திருத்திக்கொள்ளுதல் வேண்டும்.
1. நம் மாகாணங்களில் காடாகக் கிடக்குமிடங்களை நாடாக்குவது நம்முடைய கடமை.
தென்மாகாணங்களில் செல்வமுள்ள தமிழர் வடமாகாணம் கீழ் மாகாணங்களில் நிலம் வேண்டி நெல்,
கரும்பு முதலிய பயிர்களை விழைத்து உழவுத் தொழிலும் தோட்டத்தொழிலும் சிறக்கச் செய்வதால்
ஈழத் தமிழ்நாட்டில் பொருளியற் துறைகளில் நாம் முன்னேறுவதற்கு வழிவகைகளைக் காண்பர். தென்
மாகாணங்களில் தங்க விருப்பமில்லாத தமிழர் ஒன்று சேர்ந்து வடமாகாணம் கீழ் மாகாணங்களில்
புதுநகர்களை அமைத்து ஈழத்தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குத் துணை புரியக்கூடும்.
வடமாகாணம் கீழ் மாகாணங்களில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் குடியேறுவது நம் எதிர்கால
நலன்களுக்கு இன்றியமையாதது.
மலேயா போன்ற பிறநாடுகளில் இருந்து இலங்கைக்குத் திரும்பும் தமிழர் நம் மாகாணங்களில்
வாழ்ந்து தாம் ஈட்டிய பொருளை இங்கு நன்முறையில் செலவு செய்வது நமக்கும்
பெருந்துணையாகும். தென் மாகாணங்களில் வாழும் தமிழர் அனைவர்க்கும் வடமாகாணம் கீழ்
மாகாணங்களில் நிலமும் பொருளும் முதலும் இருப்பது நன்று. யாழ்ப்பாணக் குடா நாட்டிலும்
தீவுகளிலும் மக்கள் தொகை பெரிதாக இருப்பதால் அங்குள்ளவர்களுள் பலர் வவுனியா
திருகோணமலை, முல்லைத் தீவு, முருங்கன், மாங்குளம், கிளிநொச்சி முதலிய
இடங்களுக்குச்சென்று குடியேறுவது நலமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு அகல்வதற்கு
அஞ்சுவது தமிழினத்துக்குப் பெருமையன்று. கல்லோயா, கந்தளாய் முதலிய திட்டங் களுக்குத்
தமிழரை அழைத்தபோது அங்கு செல்லப் பலர் விரும்பவில்லை.
2. நாம் பண்டைக்காலத்தில் சாதிச் சமய வேற்றுமைகளை எத்துணை பாராட்டி வந்திருந்தாலும்
இன்று நாம் அத்தகைய வேற்றுமைகளை ஒழித்து தமிழ் மொழி நம்மை இணைத்து நிலவும் ஒற்றுமையை
வளர்த்தல் வேண்டும். இவ்விருபதாம் நூற்றாண்டில் மக்களின் உரிமைகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களனைவரும் சமநிலையுடையவர்களும் உடன் பிறந்தாரும் என்று நம் வாழ்க்கையிலும்
கூட்டுறவு அமைப்பி லும் நாம் காட்டி வருதல் நம் கடமையாகும். மக்களை கிணற்றி லிருந்தும்
பொது மன்றத்திலிருந்தும் கல்விக் கழக்கத்திலிருந்தும் அகற்றி வைப்பது தமிழ்ப்பண்பாடுமன்று,
தமிழர் மரபுமன்று, தமிழருள் பெரும்பான்மையோராய் இருப்போர் தமிழருள் சிறுபான்மையோராக
இருப்பவருக்குச் சிறப்பான முறையில் நட்பும் அன்பும் ஆதரவும் காட்டுதல் வேண்டும்.
3. இலங்கையின் தலைநகரிலிருந்து அகன்றிருப்பதாலும் பல இனத்தாருடன் தொடர்பு ஒரு சிறிது
குறைந்து இருப்பதாலும் நம் மாகாணங்களில் பரந்து விரிந்த மனப்பான்மை குன்றியிருத்தல்
கூடும். எனவே சைவ, வைஷ்ணவ, முஸ்லிம், கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து என்று பிரிந்து
தொண்டாற்றும் மனப்பான்மை யும், கொழும்புத்தமிழர், மலைநாட்டுத் தமிழர், மட்டக் களப்புத்
தமிழர், யாழ்ப்பாணத் தமிழர் என்று வேற்றுமை பாராட்டுவதும் நம் இனத்திற்கு நன்மை பயக்காத
முறை களாகும். நம் இனத்திற்கு ஒற்றுமையும் உறுதியும் இருப்பதற் காக நம் எழுத்தறிஞர்களும்
மேடைக்கலைஞரும் ஒத்துழைத் தல் வேண்டும். நமக்கு புத்தம் புதிய பாடல்கள் வேண்டும். சின்னங்கள்
வேண்டும், சிலைகள் வேண்டும். நமக்கென கலைக்கழகங்கள் வேண்டும், பல்கலைக்கழகம் வேண்டும்.
குறிப்பு :
இந்த சிறு பிரசுரம் தமிழ் உரிமைப் பாதுகாப்புக் கழகத்திற்காக கண்டி பேராதெனிய வீதி
105ஆம் இல்லத்தில் வசிக்கும் ஆர்.யே.சிங்கம் அவர்களால் கண்டி காசில் வீதி 8ஆம்-நிர் இல்லம்
நந்தன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. முதற் பதிப்பு 1956இல் வெளியிடப்பட்டது
(5000 படிகள்) இரண்டாம் புதுப்பதிப்பு 1961இல் வெளியிடப்பட்டது (2000 படிகள்).
மூன்றாம் புதுப்பதிப்பு 1961இல் வெளியிடப்பட்டது (3000 படிகள்). மேற்குறிப்பிட்ட
பிரசுரம் மூன்றாம் புதுப் பதிப்பின் பிரதி. இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டவை எவையென்பது
தெரியவில்லை. முதற்பதிப்பு கிடைக்க வில்லை. ஆதலால் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம்
அமையவில்லை. - தெ.ம.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 8:50:31 AM5/30/15
to brail...@googlegroups.com
பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களின் ஆக்கங்கள்
8
விவரங்கள்
எழுத்தாளர்: வி.தேவேந்திரன்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: நவம்பர்2013
C வெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2013
ஆவணம்-2
பேராசிரியர் தனிநாயகம் அவர்களின் நூல்கள், இதழ்களில் எழுதிய கட்டுரைகள், மாநாடுகளில்
நிகழ்த்திய ஆய்வுரைகள் மற்றும் அவர் நிகழ்த்திய ஆய்வுச் சொற்பொழிவுகள் ஆகியவைகளை கால
ஒழுங்கில் தொகுத்துள்ளோம். அவரது முதுநிலை (Master) மற்றும் முனைவர் பட்டத்திற்கு
செய்த ஆய்வுகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. சில கட்டுரைகளும் தொகுத்து நூலாக்கம்
பெற்றுள்ளன. பல்வேறு நாடுகளில் அவர் செய்த பயணம் குறித்த நூல் ‘ஒன்றே உலகம். அவரது
சொற்பொழிவுகளும் நூல் வடிவம் பெற்றுள்ளன.
பேராசிரியரது கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளவர்கள், கால ஒழுங்கைப்
பின்பற்றவில்லை. அவை வெளிவந்த விவரங்கள் குறித்த தகவல்களையும் முறையாகக் கொடுக்கவில்லை.
பேராசிரியர் குறித்த ஆய்வில் ஈடுபடுவோருக்கு இத்தன்மைகள் சிக்கல்களை உருவாக்கும்.
பேராசிரியரின் ஆக்கங்கள் பெரிதும் கட்டுரைகளே ஆகும். இக்கட்டுரைகளைத் தமிழில்
மொழியாக்கம் செய்யும் தேவையுண்டு.
பேராசிரியரின் ஆக்கங்களைக் கால ஒழுங்கில் அணுகும்போது அவரது படிநிலை மாற்றங்களைக் காண
முடிகிறது. தொடக்கத்தில் கிறித்தவ சமயம் சார்ந்து பொதுவான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பின்னர் சமயம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டபோது, பல்வேறு சமயம் சார்ந்த கருத்துநிலைகள்
அடிப்படையில் ஆய்வு செய்திருப்பதைக் காணமுடிகிறது. காலப்போக்கில் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனாக சேர்ந்த காலம் முதல் தமிழியல் ஆய்வில் தம்மை முழுமையாக
ஈடுபடுத்திக் கொண்டார்.
சங்க இலக்கியம் குறித்த விரிவான புரிதல் உருப்பெற்ற காலத்தில் அதன் அடிப்படைகளை தமது
ஆய்வாக தேர்வு செய்து கொண்டார். உலகம் முழுவதும் பயணம் செய்த அநுபவம் சார்ந்து, உலகின்
பல நாடுகளிலும் உள்ள தமிழர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டார். இவ்வாய்வுகள், உலகத் தமிழ்
மாநாட்டு ஆய்வுக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டு, மாநாட்டுத் தொகுப்புகளில்
இடம்பெற்றுள்ளன. ஈழத்தமிழரின் உரிமைகள் தொடர்பாகவும் அவ்வப்போது பல சிறுவெளியீடுகளை
பேராசிரியர் எழுதி வெளியிட்டார். பேராசிரியர் மேற்குறித்த பாங்கில் எழுதிய ஆக்கங்களை
இப்பகுதியில் தொகுத்துள்ளோம்.
இப்பதிவுகள் முழுமையானது என்று கூறமுடியாது. கால ஒழுங்கு மற்றும் பொருள் ஒழுங்கில்
முழுமையான ஆய்வடங்கல் (Annotated Bibliography) ஒன்றைப் பேராசிரியர் ஆக்கங்களுக்கு
உருவாக்குவது அவசியம்.
நூல்கள்
1) 1950, The cartheginian clergy, Tamil literature society, Tuticorin
பேராசிரியர் ரோம் நகரில் தமது குருத்துப் பயிற்சியை மேற் கொண்ட காலத்தில் எழுதிய
ஆய்வேடு இந்நூல். இது 1947ஆம் ஆண்டில் முதல் பதிப்பும் 1950இல் இரண்டாம் பதிப்பும் வந்தது.
தமிழிலக்கியக் கழகத்தின் வெளியீடாக இரண்டு பதிப்புகளும் கொண்டு வரப்பட்டன.
2) 1952, தமிழ்த்தூது, தமிழ் இலக்கியக் கழகம்
இந்நூலில் பேராசிரியரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1959ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக
வெளிவந்தபோது மேலும் சில கட்டுரைகள் இணைக்கப்பட்டன. 1962ஆம் ஆண்டில் சென்னை பாரி
நிலையம் இந்நூலின் நான்காம் பதிப்பை வெளியிட்டுள்ளது.
3) 1961, நம் மொழியுரிமைகள், 3ஆம் பதிப்பு, நந்தன் பதிப்பகம், கண்டி
தனிச் சிங்களச் சட்டம், 1956இல் சிங்களப் பேரினவாத அரசால் கொண்டு வரப்பட்டபோது அதனை
மறுத்து பேராசிரியர் எழுதிய குறு நூல் இதுவாகும்.
4) 1966, A reference guide to Tamil studies, University of Malaya, Kuala
Lampur. (தொகுப்பு நூல்)
இத்தொகுப்பில் 1355 நூல்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. 1960ஆம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட காலங்களில் தமிழியல் ஆய்வு உலக அளவில் நடைபெற்றதை அறிய இந்நூல் உதவுகிறது.
பல்வேறு நாடுகளிலும் உள்ள 18 அறிஞர்கள், பேராசிரியர்கள் தனிநாயகம் அடிகளுக்கு
அனுப்பியக் குறிப்புகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
5) 1966, ஒன்றே உலகம், பாரி நிலையம், சென்னை
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயண அனுபவத்தை இந்நூலில்
வெளிப்படுத்தி யுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் வாழும் தமிழர்கள் குறித்த விரிவான
குறிப்புகளை பதிவு செய்துள்ளார். 1974ஆம் ஆண்டு இந்நூலின் இரண்டாம் பதிப்பு
வெளிவந்துள்ளது. தற்போது மூன்றாம் பதிப்பாக 2012இல் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் உள்ள
தமிழ்ப் பேராயம் வெளியிட்டுள்ளது.
6) 1967, திருவள்ளுவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தனிநாயகம் திருக்குறள் குறித்து நிகழ்த்திய
சொற்பொழிவை அப்பல்கலைக் கழகம் ‘திருவள்ளுவர்’ எனும் தலைப்பில் 1967ஆம் ஆண்டு
வெளியிட்டுள்ளது.
7) 1968, Tamil Studies Abroad, The International Association of Tamil
Research (தொகுப்பு நூல்)
பல்வேறு நாடுகளில் தமிழியல் ஆய்வு குறித்த விரிவான விவரங்களை இந்நூலில் காண
முடியும். உலகின் பல நாடுகளில் நடைபெறும் தமிழியல் ஆய்வு பற்றிய விவரங்களை அந்தந்த
நாட்டில் உள்ள அறிஞர்கள் தொகுத்து அனுப்பினர். அதனை பேராசிரியர் தனிநாயகம் அடிகள்
இத்தொகுப்பு நூலாக உருவாக்கியுள்ளார்.
8) 1970, Tamil culture and civilization : Readings - The Classical
Period, Asia Publishing House, London (தொகுப்பு நூல்)
மலாயா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்தபோது மாணவர்களுக்குத் தமிழ்ப் பண்பாடும்
நாகரிகமும் என்ற பாடத்தை நடத்தி வந்தார். மாணவர்களுக்கு உதவும் வகையில் மேற்குறித்த
பொருண்மை சார்ந்த பல்வேறு கட்டுரைகளைத் தொகுப்பு நூல் வடிவில் கொடுத்தார். இத்தொகுப்பில்
மிகச்சிறந்த அறிஞர்களின் கட்டுரைகள் தெரிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
9) 1980, தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும், Research in Tamil studies :
Refrospect and Prospect, Thanthai Chelva memorial Trust, Jaffna
தந்தை செல்வா அறக்கட்டளையின் மூலம் பேராசிரியர் தனிநாயகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
நிகழ்த்திய இரு சொற்பொழிவுகள் இக்குறு நூலில் இடம் பெற்றுள்ளன.
10) 1997, Landscape and Poetry a Study of Nature in Classical Tamil Poetry
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை எனும் இந்நூல் எம்.லிட்., பட்டத்திற்கான அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கப் பட்ட ஆய்வேடாகும். 1972இல் ‘Nature in ancient Tamil
Poetry’ எனும் தலைப்பில் தமிழ் இலக்கிய கழகத்தால் வெளியிடப்பட்டது. பின்னர் 1963இல்
சிங்கப்பூரில் இந்நூல்‘Nature poetry in Tamil :The classical period’ எனும்
தலைப்பில் வெளியிடப்பட்டது. 1966ஆம் ஆண்டு பம்பாய் ஆசிய வெளியீட்டகத்தின் சார்பில் இந்நூல்
Landscape and poetry : A study of nature in classicasl tamil poetry
எனும் தலைப்பில் வெளியிட்டனர். இந்நூலே உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தால் மறுபதிப்பு
செய்யப்பட்டுள்ளது.
11) 2009, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி, மொழியாக்கம் : ந.மனோகரன், மாற்று, சென்னை.
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் Tamil Culture இதழில் பண்டைத் தமிழ் கல்வி பற்றி
எழுதிய நான்கு ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.
12) 2010, Educational Thought in Ancient Tamil Liteature, Bharathidasan
University, Tiruchirappalli-24
1955-1957ஆம் ஆண்டுகளில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பழந்தமிழ் இலக்கியத்தில் கல்விச்
சிந்தனைகள் எனும் பொருளில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார். அந்த ஆய்வேடு இப்பொழுது
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மாநாட்டுத் தொகுப்புகள்

Proceedings of the first International Conference Seminar of Tamil
Studies, Kulala Lumpur

International Association of Tamil Research, Proceedings of the Third
International Conference Seminar, Paris

The culture problems of Malyasia in the contact of South - East 1965.
The Malayasian Society of Orientalists
பேராசிரியர் - நூல் தொகுப்புகள்
பேராசிரியர் தனிநாயகம் நூற்றாண்டையட்டி அவருடைய ஆக்கங்கள் பின்வரும் வகையில் தொகுத்து
வெளியிடப்பட்டுள்ளன.

2013, தனிநாயகம் அடிகளாரின் படைப்புகள், தனியாக அடிகளார் நூற்றாண்டு விழாக் குழு,
பூம்புகார் பதிப்பகம், சென்னை-108 (முதற் பதிப்பு) இத்தொகுப்பில் ஒன்றே உலகம்,
திருவள்ளுவர், சங்க காலத்தில் விரிவாகும் ஆளுமையின் இயல்பு, தமிழர் பண்பாடும் அதன்
சிறப்பில்புகளும், தமிழ்த்தூது ஆகிய நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

2013 Complete Works of Thaninayagam Adigalar vol-I, Thani Nayagam
Adigalar Centenary Celebrations Committee (First Edition)

2013, Complete Works of Thaninayagam Adigalar Vol-II, Ed:Thani nayagam
Adigalar Centenary Celebrations Committee, (First Edition)
சொற்பொழிவுகள்
பேராசிரியர் தனிநாயகம் நிகழ்த்திய சொற்பொழிகள் தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1959-1960, Aspects of Tamil Humanism
1962 Indiajn Thought and Roman Stoicism, an Inaugural Lecture Delivered
on 14th December, University of Malaya, Kuala Lumpur
1967 Tiruvalluvar, Sornammal Endowment Lectures, Annamalai University
1972 The Humanistic Scene
1972 The Humanistic Ideals
1972 Tamil Humanism - The Classical Period
1997 The Tirukkural and the Greek Ethical Thought
1980 Research in Tamil Studies, - Retrospect and Prospect
1980 தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும்
இதழ்கள்
Bottled Sunshine
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் கிறித்தவக் குருமாராகப் பணி யாற்றியபோது பல்வேறு
கிறித்தவ இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அவ்வகையான இதழ்களில் ஒன்றே, மேலே
காணப்படும் இதழ். இவ்விதழில் தனது இளமைக்காலப் பெயரில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து இவ்விதழ் வெளிவந்தது. கட்டுரைகள் அனைத்தும் பொதுவான பொருண்மை
களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
The messenger of the Sacred heart for Ceylon
கொழும்பிலிருந்து வெளிவந்த மேற்குறித்த இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் கீழ்வரும்
வகையில் அமைந்துள்ளன. இவ்விதழும் கிறித்தவ சமயச் சார்பிதழே.

1933, Oct., The Hound of Heaven

1933, Nov., The Hound of Heaven

1933, Dec., Sea Shells

1934, Jan., A square Mile of Waterfalls

1934, Mar., A Peep into Childhood Lane

1934, Mar., Lead Kindly Light

1934, Apr., Poor thief of Song

1934, May, The run-stalers

1934, July, A showler of rain

1934, Aug., A borrowed Idea

1934, Sep., Thomsonian cameos

1934, Dec., The path to Rome

1935, Apr., The path to Rome

1935, May, The path to Rome

1941, July, The cricketer’s poet
Tamil Culture
1952 முதல் 1966 வரை இவ்விதழ் வெளிவந்தது. முதல் நான்கு ஆண்டுகள் தூத்துக்குடி கல்விக்
கழகத்தின் மூலமே இவ்விதழ் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம்
மூலமாக இவ்விதழ் வருவதற்கு மானியம் வழங்கப்பட்டதை அறிகிறோம். 45 இதழ்கள் வெளிவந்துள்ளன.
இதில் சுமார் 350 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிஞர்கள்
தமிழியல் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

1952 Feb., This Quarterly Review, 1:1

1952 June, The Survival of Tamil Culture, 1:2

1952 Sep., The Ethical Interpretation of Nature in Ancient Tamil
Poetry, 1:3&4

1953 Render upto Tamil the Things that are Tamil, 2:1

1953 The Tamils said it all with Flowers, 2:2

1952 Statesmen and Scholarship, 2:3

1954 The Teaching of Tamil, 3:1

1954 Tamil Manuscripts in European Libraries, 3:3&4

1955 The Journal of the Academy, 4:1

1955 Tamil Culture Influences in South East Asia, 4:3

1955 Tamil Culture - Its past its Present and its Future with Special
Reference to Ceylon, 4:4

1956 Ancient Tamil Literature and Study of Ancient Indian Education, 5:1

1956 The Educator of Early Tamil Society, 5:2

1956 Languages Rights in Ceylon, 5:3

1957 A Seminal Period of Indian Thought, 6:1

1957 A seminar Period of Indian Thought, 6:3

1957 Ancient Tamil Poet Educators, 6:4

1958 The Philosophic Stage of Development in Sangam Literature, 7:1

1958 The First Books Printed in Tamil, 7:3

1959 The Tamil Development and Research Council. 8:1

1959 The Vocabulary and Content of Tamil Primers and First Readers, 8:3

1959 Earliest Jain and Buddhist Teaching in the Tamil, 8:4

1961 Dr. R.P.Sethupillai, 9:3

1961 A bibliographical guide to Tamil Studies, 9:4

1963 Regional Nationalism in Twentieth Century Tamil Literature, 10:1

1963 The Novelist of the City of Madras, 10:2

1963 Indian Thought and Roman Stoicism, 10:3

1963 Nature and the Natural in Kalyanasundaranar, 10:4

1964 Antuo de Proenca’s Tamil - Poratuguese Dictionary 1679 an
Introduction, 11:2

1964 Preface to the Tamil - Portuguese Dictionary, 1679, 11:2

1966 Apperception in Tamil literary Studies, 12:283
Journal of Tamil Studies
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் தமிழக அரசு உதவியுடன், சென்னையில், உயர் கல்வி ஆய்வு
நிறுவனம் ஒன்றை தமிழியல் ஆய்வுக்காக உருவாக்கத் திட்டமிட்டார். இதன் ஒரு பகுதியாக
கொண்டு வரப்பட்ட இதழே மேற்குறித்த இதழ். 1969 இதழ் ஒன்று பகுதி இரண்டில் உலகம் தழுவிய
தமிழியல் ஆய்வு குறித்த விரிவான ஆவணங்களைப் பதிவு செய்துள்ளார்.

1969 Two Decades of Tamil Studies, 1:1

1969 International Association of Tamil Research (a) Notes (b)
Constitution, 1:1 part II

1969 International Conference - Seminar of Tamil Studies (a) Copy of
Invitation Sent to Delegates (b) Review of the Conference by
Dr.H.F.Owen, 1:1 Part II

1969 International Institute of Tamil Studies (a) Notes (b) Detailed
Project (c) Second Report Re-phasing of the Programme and the Budget,
1:1 Part II

1969 Journal of Tamil studies (a) Announcement (b) Style Sheet for the
Guidance of Contributors, 1:1 Part II

1969 Register of Scholars for Service in Institutions in India and
Abroad, 1:1 Part II

1969 News and Notes (a) Pottery will tell the story of man (b)
Decipherment of Indus vally script (c) South Asia Centre Kansan Varsity,
1:1 Part II

1969 Tamil Emigration to the Martinique, 1:2

1972 Tolkappiyam - The Earliest Record, 1
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் வேறு சில இதழ்களிலும் ஒரு சில கட்டுரைகள் எழுதினார்.
அவ்விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

6.11.1953 The Times of Ceylon, Inadequacy of Literature in the Swabasha

8.2.1954 The Times of Ceylon, Swabasha, The Indian Experiment

16.6.1962 Malayan Times, Religion and Culture

1966, July Eastern Horizon, Ancient Tamil Poetry

1953, Jan. - Mar., - Liturgical arts, Catholic Religious Art in South India

1963, Apr - June, Paedagogica Historia, The Typology of Ancient Indian
Education

1959, July-Dec., The Ceylon Journal of Historical and Social Studies,
The Scope of adult education

1959, July-Sep., Journal of the National Education Society of Ceylon,
The Vocabulary and Content of Tamil Primers and First Readers

1960, Nov., Journal of the National Dducation Society of Ceylon, The
Philosophy and Practice of Teacher Education

1961, Mar.-Sep., Journal of the National Education Society of Ceylon,
Aspects of Secondary Education in Western Europe

1959, July, The Ceylon journal of historical and Social studies, The
Scope of Adult Education

1942-43 The Anthonian, The Poetry of Kayts

1949 St. Patrick’s Annual, Don Eogenius Pacelli

1953 Catholic Christmas annual, The Catholic Contributiojn to Tamil
literature

1960-61, Annuals of Oriental Research of the University of Madras,
Aspects of Tamil Humanism. The Ideals of the Expanding self

1975, Religious and Social Issues, Religion and Society

1961, Dr.R.P.Sethuppillai Silvar Jubilee Commemoration Volume, The
Thirukkural and Greek Ethical Thought

1965, Nov., Siam Society Felicitation Volume of South East Asian
Studies, Classical Love Poetry in Tamil
சத்தியவேத பாதுகாவலன்

1949, சித்திரை 21, பனிரெண்டாம் பத்திநாதர்

1951, வைகாசி 03, சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு

1951, வைகாசி 17, பிறமொழிக் கலப்பால் ஒரு மொழி சிதையவே செய்யும்: தமிழில்
உரையாடுகையில் தனித்தமிழ் மொழியைக் கையாள வேண்டும்

1951, ஆவணி 9, தமிழ்த் தூது

1951, கார்த்திகை 1, தமிழின் வளர்ச்சி

1951, கார்த்திகை 22, அர்ச் அருஸ்தீனின் புகழ் உரை நூல்

1954, மாசி 18, கீழ்த்திசை நாடுகளில் அச்சுக்கண்ட முதல் நூல்கள் தமிழ் நூல்களே.

1952, தமிழ் ஓசை (தொகுதி 2), மலரும் மாலையும்

1956, கல்கி தீபாவளி மலர், தமிழ்ச்செல்வங்கள்

1958, கல்கி தீபாவளி மலர், முதல் அச்சேறிய தமிழ் நூல்கள்

1958-59, இளங்கதிர் (தொகுதி), ஒற்றுமை அமெரிக்கா

1960, ஆடி-மார்கழி, சமூக மஞ்சரி, முதிர்ந்தோர் கல்வியின் விரிவு

1961, தை-ஆனி, கலைப்பூங்கா, திருக்குறளும் கிரேக்க ஒழுக்க இயலும்

1963, சித்திரை, கல்வி, கல்வியின் நோக்கம்

1963, ஜூன், தமிழ் நேசன், மலேசியாவின் தமிழ் எழுத்தாளரும் அவர் பணியும்

1971, ஆனி, ஈழ நாடு, தமிழ் மொழியின் வேர் இயல்

1980, அக்டோபர், வீரகேசரி, வீரமாமுனிவர் : தமிழாராய்ச்சிக்குப் பங்களிப்பு செய்த
ஐரோப்பிய தலைமகன்

1963, கலைக்களஞ்சியம், தொகுதி 9, வீரமாமுனிவர் (1680-1747)

1966, கல்கியின் வரலாற்று நூல்கள், பதிப்பு : கா.பொ.இரத்தினம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை
மாநாடுகள்
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மூலமாக (IATR)
நடைபெற்ற மாநாட்டுக் கட்டுரைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் பின்வருமாறு அமை
கின்றன. இதில் இரண்டு மாநாட்டுத் தொகுதிகளை இவரே பதிப்பித்தார்.

1960 Educator Typology in Ancient Tamil Literature, International
Congress of Orientalists xxvth, Moscow

1965 Ideals and Values Common to South and South East Asian Cultures,
Proceedings of the Malaysian Society of Orientalists

1966 Chairman’s Introductory Remarks, Proceedings of the International
Conference Seminary of Tamil Studies, Kula Lumpur, (முதல் தொகுதி 1968)

1966 Appereption in Tamil Literary Studies, (இரண்டாம் தொகுதி - 1968)

1967 The period of Ethical Literature in Tamil : Third Century to the
Seventh Century A.D., Paracidanum - Indian, Iranian and Indo - European
studies, The Houge Moutan

1968 Tamil Migrations to Guadeloupe and Martinique 1853-1883,
Conference Seminar of Tamil Studies, Madras (இரண்டாம் தொகுதி - 1971)

1968 Tamil Trade, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு விழா மலர், சென்னை

1970 The Study of Contemporary Tamil Groups, Conference Seminar of
Tamil Studies, Paris Pondicherry

1974 Inaugural Address, (நான்காவது மாநாடு - முதல் தொகுதி)

1974 ஆரம்ப உரை, (நான்காவது மாநாடு - இரண்டாம் தொகுதி)

1981 சங்க இலக்கியத்தில் விரிவாகும் ஆளுமையின் பண்பு, ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு
விழா மலர், மதுரை.
ஆய்வேடுகள்

The Cartheginian Clergy : During the Episcopate of Saint Cyprian.
Colombo : Ceylon printers 1947, pp xviii&112p. Doctoral thesis at
Ponifical urban Univerisity, Rome, 1939

“Nature in Ancient Tamil poetry : Concept and intepreation” Tuticorin :
Tamil literature society, 1953 xxii, 185 pp. Thesis (M.Litt.,) Annamalai
University, Madras 1949. Party Revised and Published under the Title :
Nature Poetry in Tamil : The Classical Period 1963

Educational Thought in Ancient Tamil Literature. Thesis Submitted to the
University of London for the Ph.D., Degree 1957, Published by
Bharathithasan University in 2012.
இப்பதிவுகளைத் தொகுத்த வி.தேவேந்திரன், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை
முனைவர் பட்ட ஆய்வாளர்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 8:58:34 AM5/30/15
to brail...@googlegroups.com
உலகப் பரப்பில் தமிழியல் ஆய்வு
8
விவரங்கள்
எழுத்தாளர்: பா.ரா.சுப்பிரமணியன்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: நவம்பர்2013
C வெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2013
தமிழியல் ஆய்வில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் பேராசிரியரின்
பதிவாக இப்பகுதி அமைகிறது.மாற்றுவெளி ஆசிரியர் குழு வினாக்களுக்கு பதில் அளித்தவர்
பேரா. பா.ரா. சுப்பிரமணியன் அவர்கள். இவர் ‘மொழி’ நிறுவனத்தின்
இயக்குநர்.இவ்வுரையாடலைப் பதிவு செய்தவர் அ.மோகனா. இவர் தமிழ் இலக்கியத் துறையின்
முனைவர் பட்ட ஆய்வாளர்.
நீங்கள் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்த காலத்தில் இருந்த தமிழ் ஆய்வுச் சூழல் குறித்துக்
கூறுங்கள்.
முதலில் நான் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். 1960 களின் தொடக்கத்தில் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் 1960களின் இறுதியில் கேரளப் பல்கலைக் கழகத்தில்
முனைவர் பட்டமும் பெற்றதால் இந்த ஒரு பத்தாண்டுகளில் தமிழியல் ஆய்வு எவ்வாறு இருந்தது
என்பதை ஓரளவு என்னால் கூறமுடியும்.
இவை என் நினைவுகளிலிருந்து வருபவையேயன்றி குறிப்புகளின் அடிப்படையில் பெறப் பட்டவை
அல்ல. நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் என்னிடம் இல்லை. எனவே, என் நினைவைச் சார்ந்தே நீங்கள்
எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கூறும் நிலையில் இருக்கிறேன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு மூன்று துறைகள் இருந்தன. ஒன்று தமிழ்மொழித்துறை.
இதற்குத் தலைவராக இருந்தவர் பேரா.தெ.பொ.மீனாட்சிசுந்தரம். இந்தத் துறையில்தான் முதுகலை
வகுப்புகள் நடந்தன. இரண்டாவது துறை பேரா.லெ.ப.கரு. இராமனாதன் தலைமையில் இயங்கியது.
இந்தத் துறையில் எம்.ஓ.எல். பட்டங்கள் வழங்கப்பட்டன. மூன்றாவது துறை ஆராய்ச்சித் துறை
ஆகும். இந்தத் துறை பேரா. கோ.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் இயங்கிக் கம்பராமாயண
செம்பதிப்பு ஆய்வில் ஈடுபட்டிருந்தது.
பேரா.தெ.பொ.மீ. அவர்கள் தமிழ்த்துறைத்தலைவராக இருந்தபோது நான் முதுகலை மாணவன். அவர்
மரபிலக் கணங்களிலும் புதிய துறையான மொழியியலிலும் சங்க இலக்கியங்களிலும்
காப்பியங்களிலும் தேவாரப் பதிகங் களிலும் கல்வெட்டுகளிலும் புலமை வாய்ந்தவர். அவருடைய
பெரும் புலமை என்னைச் சற்றே அவரிடமிருந்து விலகியிருக்க வைத்தது. அவரிடம் அங்குப்
பணியாற்றி வந்த சில பேராசிரியர் களும் ஹானர்ஸ் படித்த மாணவர்களும் ஆய்வு செய்துவந்தனர்.
அவர்களுடைய ஆய்வு பெரும்பாலும் இலக்கணம், இலக்கியம் தொடர்பாக இருந்தன. 1961இல்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை தொடங்கப்பட்டது. தமிழ்த்துறைக்கும் மொழியியல்
துறைக்கும் பேரா.தெ.பொ.மீ. தலைவராக இருந்தார். மொழியியல் துறை புதிய துறையாக
இருந்ததால் அந்தத் துறையை அறியும் ஆவல் பலருக்கும் இருந்தது. முழுநேர மாணவர்கள் தவிர
மொழியியல் துறையில் சான்றிதழ் பெறுவதற்கான வாய்ப்பும் இருந்தது.
1962இல் முதுகலையை முடித்துவிட்டு இரண்டாண்டுகள் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும்
புனித சவேரியர் கல்லூரி யிலும் தமிழ் உதவியாளராக இருந்தபின் தமிழ் ஆய்விற்குச் செல்ல
விரும்பினேன். அறுபதுகளின் தொடக்கத்தில் தமிழகத் தில் மூன்று இடங்களில் தமிழ் ஆய்விற்கான
வாய்ப்புகள் இருந்தன.
1.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீ.யின் தலைமையில் தமிழ்த்துறையிலும் மொழி யியல்
துறையிலும் ஆய்வு செய்யும் வாய்ப்பு. 2. திருவனந்தபுரக் கேரளப் பல்கலைக்கழகத்தில்
பேரா.வ.அய். சுப்பிரமணியம் அவர்களும் ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தார். 3. சென்னை
பச்சையப்பன் கல்லூரியில் பேரா.மு.வ. அவர்களும் ஆய்வு நெறியாளராக இருந்தார்.
மரபிலக்கணம், பண்டைய இலக்கியங்கள் இவற்றில் ஆய்வு செய்ய விரும்பியவர்கள்
பேரா.தெ.பொ.மீ.யிடம் செல்ல விரும்பினர்.
தற்காலத் தமிழ் இலக்கியங்கள், செவ்வியல் இலக்கியங்கள் இவற்றில் ஆய்வு செய்ய விரும்பியவர்கள்
பேரா.மு.வ.அவர்களை நாடிச் சென்றார்கள். தமிழ் இலக்கணத்தையும் இலக்கிய நூல்களை யும்
மொழியியல் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்ய விரும்பிய மாணவர்கள் பேரா. வ.அய்.சுப்பிரமணியம்
அவர்களிடம் சென்றனர்.
எனக்குத் தெரிந்தவரை 1960களில் தமிழியல் ஒரு விரிவான பரப்பை நோக்கிப் பயணிக்கத்
தொடங்கியது. பேரா.வ.அய். சுப்பிரமணியம் செவ்வியல் இலக்கியங்களை மொழியியல் ஆய்விற்கு
உட்படுத்துவதில் கவனம் செலுத்தினார். அதே நேரத்தில் கல்வெட்டு, நாட்டுப்புறவியல்
துறைகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தினார். அவருடைய நோக்கம் செவ்வியல் இலக்கியங்களுக்குச்
சொல்லடைவும் மொழிநிலை ஆய்வும் அமைப்பதில் இருந்தது. இந்த நோக்கத்தினால் சங்க இலக்கிய
நூல்களைத் தன் ஆய்வு மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்விற்குத் தெரிவு செய்துவழங்கினார்.
மேலும் அவரே மொழியியல் கண்ணோட்டத்தில் புறநானூற்றிற்கு ஓர் சொல் லடைவும் உருவாக்கி
வெளியிட்டார்.
நான் அவருடைய செவ்வியல் இலக்கியங்களின் மொழி நிலை ஆய்வில் சேராமல் நாட்டுப்புற
இலக்கியங்களில் ஆய்வு செய்ய அவரிடம் பதிவுசெய்துகொண்டேன். என் விருப்பத்தை அவரும்
ஏற்றுக்கொண்டார். எனக்கு முன்பு சென்னை வானொலி நிலையத்தில் பணிபுரிந்துவந்த ஹமீது என்பவர்
நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றை மொழியியல் அடிப்படை யில் பேரா.வ.அய்.சு.அவர்களிடம்
ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றிருந்தார். நாட்டுப்புறத் துறையில் ஆய்வு செய்வதற்கான
ஒரு சிறு வாய்ப்பு அங்கு இருந்தது.
நான் பேரா.வ.அய். சுப்பிரமணியம் அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக 1964இல்
சேர்ந்து 1969இன் இறுதி யில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தேன். பின்னர் வெளிநாடு செல்லும்
வாய்ப்பு கிட்டியது.
1960, 70களில் கேரளப் பல்கலைக் கழகத்தில் உருவான தமிழியல் ஆய்வுப் பின்புலம் பற்றிக்
கூறுங்கள்.
மேலே குறிப்பிட்டது போல புதிய ஆய்வுமுறையாக அப்போது உருவாகியிருந்த மொழியியலைக்
கற்று இலக்கியங் களையும் பேச்சுமொழியையும் பேரா. வ.அய்.சு. அவர்களிடம் ஆய்வு செய்ய பலர்
முன்வந்தனர். பதிற்றுப்பத்தைப் பேரா. ச.அகத்தியலிங்கமும், சிலப்பதிகாரத்தைப் பேரா.ச.வே.
சுப்பிரமணியமும், குறுந் தொகையைக் காமாட்சிநாதனும், திருக்குறளைத் தாமோதரனும்,
பெரியபுராணத்தைத் தா.வே.வீராசாமியும், கம்பராமாயணத்தை முதலில் வேலவன் என்பவரும்
அவரின் எதிர்பாராத மரணத்தின் பின் கோவிந்தன்குட்டியும், பெருங் கதை மொழிநிலையை
இளவரசும் ஆய்வு செய்தனர். நாட்டுப் புறப்பாடல்களில் நானும், ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு
களின் மொழிநிலையைப் பன்னீர்செல்வமும் ஆய்வுசெய் தோம். எங்களைத் தவிர மலையாள கண்ணச
ராமாயணத்தின் மொழிநிலையைப் புதுச்சேரி இராமச்சந்திரன் ஆய்வுசெய்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேரா.தெ.பொ.மீ. தமிழ்த்துறைக்கும் மொழியியல் துறைக்கும்
தலைவராக இருந்தது போலவே பேரா.வ.அய்.சு. கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைக்கும்
மொழியியல் துறைக்கும் தலைவராக இருந்தார். இருவருமே ஒருகட்டத்தில் தமிழ்த் துறையைவிட்டு
விலகி மொழியியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றனர். பேரா.வ.அய்.சு. மொழியியல்
துறைத்தலை வரானதும் அவரிடம் பதிவு செய்திருந்த மாணவர்கள் மொழி யியல் துறை வழியாகவே
தங்கள் ஆய்வேட்டை அளித்தனர்.
1960களில் அண்ணாமலைப்பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுச் சூழல் குறித்துக் கூறுங்கள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை கண்ட பெருவளர்ச்சியை நான் கூறுவதை விட
அங்குப் பணியாற்றிய, படித்த மாணவர்கள் கூறுவது பொருத்தமாக இருக்கும். தொடங்கப்பட்ட சில
ஆண்டுகளிலேயே அந்தத் துறை பெரிய அளவில் வளர்ச்சி பெற்று உலகின் பல நாடுகளில் இருந்த
வெளிநாட்டு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. தெ.பொ.மீ.யும் பேரா.அகத்தியலிங்கமும், அந்தத்
துறையின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருந்தார்கள். அந்தத் துறை Advanced Centre
for Dravidian Linguistic எனப் பரிணமித்தது. அந்தத் துறையில் படித்து ஆய்வு செய்து
வெளிவந்தவர்களும் தரமான ஆய்விற்கு வழிவகுத்தனர்.
1970களில் மதுரைப் பல்கலைக்கழகத்தில் உருவான தமிழியல் ஆய்வு குறித்துக் கூறுங்கள்.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறை 1970களில் சென்னை, அண்ணாமலை,
திருவனந்தபுரம் ஆகியவற்றை அடுத்து ஓர் தமிழ் ஆய்வு மையமாக உருவாகியது. பேரா.
முத்துச் சண்முகம், பேரா. தமிழண்ணல் முதலியோரால் வளர்த்தெடுக்கப்பட்டது. பின்னர் இந்தத்
துறை பல துறைகளாகப் பிரிக்கப்பட்டதையும் அங்கு நடந்த ஆய்வுகளை யும் நான் ஓரளவே
அறிவேன். நான் அறிந்ததை விட அறியாதது மிகுதி. எனவே அந்தத் துறைகளை அறிந்தவர்களிடம்
கேட்பது நல்லது.
பேராசிரியர்கள் ச.வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., வ.அய்.சுப்பிரமணியம் ஆகியோர்
உருவாக்கிய ஆய்வு மரபு இன்றும் தொடர்கிறதா?
பேரா.ச.வையாபுரிப்பிள்ளையிடம் ஆய்வு மாணவராகச் சிறிது காலம் இருந்தவர்
வ.அய்.சுப்பிரமணியம். அவர் அமெரிக்கா சென்று இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
பெற்று திரும்பிவந்து கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப்
பொறுப்பேற்று ஆய்வு மாணவர்களை உருவாக்கினார். வையாபுரிப் பிள்ளை யிடம் ஆய்வு
மாணவர்களாக இருந்தவர்கள் குறைவு என நினைக்கிறேன். அதற்கு மாறாக, வ.அய்.சு.விடம்
ஆய்வு செய்ய மாணவர்கள் பலர் முன்வந்தனர். அவருடைய ஆய்வு மரபு என்பதை நான் இருவழியில்
புரிந்துகொள்கிறேன். ஒன்று, நாம் செய்யும் ஆய்வு உலகத்தரத்தில் இருக்க வேண்டும்; நாம்
எடுத்துக் கொண்ட ஆய்வுத் தலைப்பு உலகத்தின் வேறு மொழியில் வேறுபிற ஆய்வாளர்களால்
ஆராயப்பட்ட ஒன்றாக இருக்கலாம். பரந்த பார்வை (international outlook) ஆய்விற்குத்
தேவை. கிணற்றுத் தவளைகளாக இருக்கக்கூடாது என்பது நாங்கள் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட
பாடம். இரண்டாவது, ஆய்வில் சிதறாத கவனம் இருக்கவேண்டும்.
அரசியல் சாய மில்லாத ஆய்வாக இருக்க வேண்டும். அரசியலில் நம்முடைய சார்பு
எவ்வாறிருந்தாலும் அது நம் ஆய்வைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். இந்த ஆய்வு நேர்மையும்
நாங்கள் அவரிட மிருந்து பெற்றுக்கொண்ட கொடை. பரந்த பார்வையையும் ஆய்வு நேர்மையையும்
அவருடைய மாணவர்கள் முடிந்தவரை கடைபிடித்தார்கள். அவருடைய மாணவர்களின் மாணவர்கள்
மேற்கூறியவற்றைக் கடைபிடிப்பார்களேயானால் மரபு தொடர்கிறது என்று கருதலாம்.
பேரா.வ.அய்.சு. அவர்களிடம் தமிழ்த்துறையில் ஆய்வு செய்த கடைசி மாணவன் நான். அவர்
மொழியியல் துறைத் தலைவரானதும் மொழியியலில் முதுகலை பட்டம் பெற்ற வர்கள் ஆய்வு
மாணவர்களாகச் சேர்ந்தனர். அதன் விளைவாக மலையாள மொழியிலும் ஆய்வு செய்யவும், மலையாள
வட்டார மொழிகளிலும் ஆய்வுசெய்ய அவரிடம் மாணவர்கள் சேர்ந்தனர். அவர் தொடங்கிய திராவிட
மொழிக் கழகமும் (Dravidian Linguistics Association) அதன் வழியாக உருவான
பள்ளியும் (International School of Dravidian Linguistics) அந்நிறுவனத்தின்
ஆய்விதழும் (International Journal of Dravidian Linguistics) அவருடைய பணியை
வேறுநிலைக்கு இட்டுச் சென்றது. இந்தப் பணி அவர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப்
பொறுப்பேற்கும் வரை நீடித்தது.
பேரா.தெ.பொ.மீ. அவர்களிடம் படித்தவர்களும் ஆய்வு செய்தவர்களும் ஒரு பரம்பரையைத்
தோற்றுவித்திருக்கிறார் கள். அந்தப் பரம்பரையின் பேர்சொல்ல இன்றும் நம்மிடையே சிலர் உள்ளனர்.
பேரா.தெ.பொ.மீ.யின் ஆய்வு மரபு மரபிலக் கணத்தையும் மொழியியலையும் உள்வாங்கிய ஓர்
அணுகு முறையைக் கொண்டது. மரபிலக்கணத்தின் நுண்ணிய கோட்பாடுகளை மொழியியல் வழியாக
வெளிக்கொணரும் முறை அவராலும் அவர் மாணவர்களாலும் பின்பற்றப்பட்டது.
தமிழ்மொழி வரலாற்றிலும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்திலும் அவருடன் பணிபுரிந்த
ஆசிரியர்களும், அவரது மாணவர்களும் தடம் பதித்தனர். நம் இலக்கண, இலக்கியங்களின்
பாரம்பரியத்தை அறிவுபூர்வமாகக் காண வழிவகுத்ததும், அவ்வாறு அணுகிக் கண்டதை மறைக்காமல்
உறுதிபட எடுத்துரைத்ததும் அவரது ஆய்வுமுறை. அவர் விட்டுச் சென்ற அந்த மரபு இன்று
மங்கிவருவதாகவே தெரிகிறது.
பேரா.தெ.பொ.மீ. அவர்களுக்கும் பேரா.வ.அய்.சு. அவர் களுக்கும் ஆய்வுலகில் போட்டி
நிலவியது என்பது உண்மை. ஆரோக்கியமான போட்டியாகத்தான் அது இருந்தது என்று
நினைக்கிறேன். பேரா.தெ.பொ.மீ. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக
இருந்து ஓய்வுபெற்ற பின் பேரா.வ.அய்.சு. அவரை DLA வழியாக அழைத்ததும், தெ.பொ.மீ.
அதனை ஏற்று Foreign Models in Tamil Grammar என்னும் தலைப்பில் தன் ஆய்வை
வெளியிட்டதும் இரு பேராசிரியர் களும் கொண்டிருந்த நல்லிணக்கத்தின் வெளிப்பாடாகும்.
பேராசிரியர் தனிநாயகம் வழியாக உருவான உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகள்
குறித்துத் தங்களது மதிப்பீடு யாது?
பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் (IATR) உருவானதற்குக் காரணமாக இருந்தவர்களுள்
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய வர் தனிநாயக அடிகள். இந்த அமைப்பே உலகத் தமிழ்மாநாடு
நடத்துவதற்கு உந்துசக்தியாக இருந்தது. முதல் உலகத்தமிழ் மாநாடு தனிநாயக அடிகள்
பணியாற்றிவந்த மலேசியக் கோலாலம்பூரிலும் (1966), இரண்டாவது மாநாடு சென்னை யிலும்
(1968), மூன்றாவது மாநாடு பிரான்சு தலைநகர் பாரிஸிலும் (1972) நடைபெற்றன.
இம்மூன்று மாநாடுகளை நடத்தியதிலும் பன்னாட்டுத் தமிழ் ஆய்வாளர்களை மாநாட் டிற்கு
வரவழைத்து ஆய்வுக் கட்டுரைகளை வழங்கச்செய்த திலும் பெரும்பங்காற்றியவர் தனிநாயக அடிகள்.
அவர் பல மொழிகள் அறிந்தவர்.
அவரால் தமிழக ஆய்வாளர்களையும் பன்னாட்டுத் தமிழியல் ஆய்வாளர்களையும் ஒருங்கிணைக்க
முடிந்தது. ஆய்வுரைகளின் தரத்தை அளவிட அவர் செக்கோஸ் லோவாகிய அறிஞர் கமில்
ஸ்வலபிலையும் பேரா.வ.அய்.சு. அவர்களையும் அணுகினார். அவர்களின் உதவியால் இளம்
ஆய்வாளர்களின் கட்டுரைகள் செழுமை பெற்றன. இளம் ஆய்வாளர்களும் பன்னாட்டுத் தமிழியல்
ஆய்வாளர்களும் கலந்துரையாட இம்மாநாடுகள் வழிவகுத்தன.
இம்மூன்று மாநாடுகளில் அளிக்கப்பட்ட ஆய்வுரைகள் proceedings ஆக வெளிவந்தன. முதல் இரு
மாநாட்டு ஆய்வுரைத் தொகுப்புகள் தமிழகத்தில் கிடைத்த அளவிற்கு மூன்றாம் மாநாட்டு
ஆய்வுரைத் தொகுப்பு கிடைக்காமல் போனதால் பாரிஸில் நடைபெற்ற மாநாட்டுக் கட்டுரைகளைக்
குறைவாகவே அறிந் திருக்கிறோம். உலகத்தரமான, ஆய்வு செறிந்த கட்டுரைகளும் உலகத் தரத்தை
எட்ட முயலும் இளம் ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இவற்றில் இடம்பெற்றுள்ளன.
இம்மாநாடுகள் தமிழ் ஆய்வுலகக் கருத்துப்பரிமாற்றத்திற்குப் பெரிதும் உதவின. என்னைப்
பொறுத்தவரை முனைவர் பட்ட ஆய்வுமாணவனாக இருந்த காலத்தில் முதல் இரு மாநாடுகள்
நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் இலங்கை ஆய்வாளர் கைலாசபதியைச்
சந்தித்து உரையாடி யதை மறக்கமுடியாது. பேரா.குரோ அளித்த ஊக்கமும் மறக்க முடியாத
ஒன்று. இந்த மூன்று மாநாடுகளின் ஆய்வுரைத் தொகுப்புகளில் அடங்கியுள்ள கட்டுரைகள் பல
ஆய்விற்கு இட்டுச் செல்லக் கூடியவை. ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட இந்த ஆய்வுரைகள்
இன்றைய ஆய்வுலகில் மீண்டும் எளிதில் வாங்கக்கூடிய அல்லது பார்வையிடக்கூடிய முறையில்
வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழியல் ஆய்வு உருவான பின்புலம் பற்றிக்
கூறுங்கள். இப்போது அந்நாடுகளில் தமிழியல் ஆய்வு எவ்வகையில் உள்ளது?
மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் இந்தியவியல்
துறை (Insitute of Indology) பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தோன்றி சமஸ்கிருத மொழியை
ஆய்வு செய்யத் தொடங்கின. சமஸ்கிருதம் இந்திய ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியாக
இருந்ததால் அந்நாட்டு ஆய்வாளர்களின் கவனம் அந்த மொழியின் மேல் திரும்பியதில்
வியப்பொன்றுமில்லை. தமிழும் பிற திராவிட மொழிகளும் இந்த இந்தியவியல் துறை கோட்டைக்குள்
நுழைவதற்குப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.
சமஸ்கிருதப் பேராசிரியர்கள் சிலர் திராவிட மொழிக்குடும்பத்தையும் தொன்மையான இலக்கிய
இலக்கணங்களையுடைய தமிழ் மொழியையும் ஆராயமல் இருப்பது தவறு என உணர்ந்தனர். அமெரிக்க
மொழியியல் பேராசிரியர் எமனோ, இங்கிலாந்து பேராசிரியர் பரோ, செக்கோஸ்லோவாகிய
பேராசிரியர் கமில் ஸ்வலபில், பிரான்ஸ் நாட்டு பில்லியோசா, குரோ ஆகியோரின் ஆய்வு களும்
நூல்களும் தமிழியல் பரப்பைக் காட்டக்கூடியன வாகவும் மேலாய்விற்கு வழிவகுப்பனவாகவும்
இருந்தன. இவர்களுள் சிலர் எழுத்திலக்கியங்களில் மட்டுமல்லாமல் எழுத்து மரபு இல்லாத தோதவர்
மொழி, கோதவர் மொழி, இருளர் மொழி முதலிய மொழிகளையும் ஆராய்ந்தனர்.
கமில் ஸ்வலபில் தமிழகத்திற்கு முதன்முறையாக 1958இல் வந்து பேராசிரியர்
மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை அவர்க ளிடம் தமிழ்கற்றார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின்
காலடியில் இருந்து உ.வே.சா. தமிழ் கற்றது போலவே கமில் ஸ்வலபில்
மே.வீ.வேணுகோபாலப்பிள்ளையிடம் தமிழ் கற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார் (I have had the
honour and luck to sit at the feet of a guru, Mahavidvan M.V.Venugopal
Pillai).கமில் ஸ்வலபில் அரசியல் காரணங்களால் செக்கோஸ்லோவாகியாவை விட்டு வெளி யேறி
அமெரிக்கா, ஜெர்மனி,நெதர்லாந்து ஆகிய நாடுகளி லுள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார்.
தமிழ்மொழி, இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், சித்தர்பாடல்கள், திராவிட மொழிகள்
ஆகியவை அவருடைய ஆய்விற்குக் களனாக இருந்தன. தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில்
எழுதி இரு நூல்களாக வெளியிட்டுள்ளார்.
அவருக்குப்பின் செக் குடியரசின் தலைநகரான ப்ராக்கில் உள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில்
இந்தியவியல் துறை இன்றளவும் இயங்கிவருகின்றது. இதன் தலைவராக கமில் ஸ்வலபிலின் மாணவரான
வாசெக் இருந்துவருகிறார். அவருக்கு அண்மையில் குறள்பீட விருது அளிக்கப்பெற்றதை நாம்
அறிவோம். கமில் ஸ்வலபில் தொடங்கிவைத்த தமிழாய்வு அவருடைய நாட்டில் இன்றும் தொடர்வது
வியப்பான ஒன்றுதான்.
ஏனெனில், ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா விலும் தமிழாய்வு குறைந்துவருகிற இந்த
நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் தமிழ் கற்பிக்கப்படுவதும் ஆய்வுகள் நிகழ்வதும்
பல நெருக்கடிகளினிடையில் நடந்துவருகின்றன.
ஜெர்மனியில் நான் பணியாற்றிய கொலோன் பல்கலைக் கழகத்து இந்தியவியல் துறை இன்று
பெயர்மாற்றம் பெற்றுத் தமிழாய்வைக் குறைத்துக்கொண்டுள்ளது. நண்பர் தாமோதரன் முப்பதாண்டுகள்
பணியாற்றிய ஹைடல்பர்க் பல்கலைக் கழகத்து தெற்காசிய நிறுவனத்தில் தாமஸ் லேமான் தமிழ்
கற்பித்துவருகிறார் என்றாலும் தமிழின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறஇயலாது.
போலந்து நாட்டின் தலைநக ரான வார்சாவில் தமிழ்க் கற்பிக்கப்படுவதும் அதற்காக இந்திய அரசு
நம் நாட்டிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்களை அங்கு அனுப்புவதும் இதுவரை நடைமுறையில் உள்ளது.
இங்கிலாந்து மற்றும் பிரித்தானிய நாடுகளில் உருவான தமிழியல் ஆய்வு குறித்துக் கூறுங்கள்.
இங்கிலாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத் தில் ஜி.யு.போப் ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்ததும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்
பரோ பணியாற்றியதும் நாம் அறிந்ததுதான். இலண்டனில் உள்ள SOAS இல் (School of Oriental
and African Studies) ஜான் மார் பல ஆண்டுகள் பணியாற்றினார். சங்க இலக்கியங்களில்
மிகுந்த பயிற்சியுடைய இவர் ஒரு கர்னாடக சங்கீத ஆர்வலர்.
பல ஆண்டுகள் சென்னையில் டிசம்பர் மாதம் நடக்கும் இசை விழாவில் அவரைப் பலர்
பார்த்திருப்பார்கள். உடல்நலக் குறைவு காரணமாக அவர் இப்போது வருவ தில்லை.
அவருக்குப்பின் SOASஇல் தமிழக நாட்டுப்புற ஆய்வில் நன்கறியப்பட்ட ஸ்டுவர்ட் பிளாக்பர்ன்
தமிழ் கற்பித்துவந்தார். இப்போது அவரும் அங்கில்லை. தமிழகத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும்
மிகுதியாக வாழும் இலண்டனில் பல்கலைக்கழகத்தை விடத் தமிழர்கள் ஏற்படுத்தியுள்ள தமிழ்ப்
பள்ளிகள் தங்கள் வாரிசுகளுக்குத் தமிழ்க்கற்பிக்க முன்வருகின்றன.
அமெரிக்கப் பின்புலத்தில் உருவான தமிழியல் ஆய்வு குறித்துக் கூறுங்கள்.
ஐரோப்பிய நாடுகளில் தமிழாய்வு நடைபெறுவதை நான் நேரடியாக அறிந்தவன். அமெரிக்காவில்
தமிழ் கற்பிக்கப் படுவதையும் ஆய்வுகள் நிகழ்த்தப்பெறுவதையும் நூல்கள் வழியாகவும் நண்பர்கள்
வழியாகவும் அங்கிருந்துவரும் மாணவர்கள் வழியாகவும் ஓரளவிற்கு அறிவேன். சங்க இலக்கியப்
பாடல்களைச் சுவைபட ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஏ.கே. இராமானுஜன் பணியாற்றிய சிக்காக்கோ
பல்கலைக்கழகமும், செம்மொழித் தகுதி உடையது தமிழ் என விளக்கிய ஜார்ஜ் ஹார்ட் பணியாற்றிய
கலிபோர்னியப் பல்கலைக்கழகமும், தமிழின துணைவினைகள் ஆய்வைத் தொடங்கிவைத்த ஹெரால்டு
ஷிஃப்மன் இருந்துவரும் மிச்சிகன் பல்கலைக்கழகமும் அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் இடங்களாக
விளங்குகின்றன. இவர்களைத் தவிர, தமிழின் பல துறைகளில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவின் பல
இடங்களில் ஓரளவிற்கு மொழியோடு தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்துவருகின்றனர்.
தமிழாய்வில் நிலைகொள்ள முடியாமல் வேறு பணிகளுக்குச் சென்றவர்களும் உண்டு.
ஒரு பத்தாண்டு (1960-70) அமெரிக்கர்கள் தமிழ்மொழியில் ஆய்வுநிகழ்த்தினர்; அதன் பின்னர்
மொழியைக் கற்றுக் கொண்டு தமிழக அரசியல், தமிழ்ப் பண்பாடு, தமிழ்ச் சமூகம், தென்கிழக்கு
ஆசியாவில் தமிழகத் தொடர்பு என்பன போன்ற பல் துறைகளில் அவர்களின் ஆய்வு விரிந்து சென்றது.
தாங்கள் கற்ற தமிழை மேலும் வளர்த்துக்கொள்ளவும் தங்களுக்கு வேண்டிய நூல்களைப் படித்துத்
தெளிவு பெறவும் என்னிடம் வரும் அமெரிக்க, ஐரோப்பிய ஆய்வாளர்கள் சிலரின் கூரிய அறிவும்
பிற துறைப் புலமையும் என்னைச் சிந்திக்கவைத்துள்ளன. அவர்களது அறிவும் புலமையும்
தமிழுக்குப் பயன்படுவது வரவேற்கத் தக்கது. அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் நிலைக்க
வேண்டுமே என்பதும் தமிழக இளம் ஆய்வாளர்கள் ஆங்கிலப் பயிற்சியின்மையால் அவர்களோடு கருத்து
பறிமாறிக்கொள்ளாமல் இருப்பதும் கவலை அளிப்பனவாக உள்ளன.
பாரதியார் தனது ‘புதிய ஆத்திச்சூடி’யில் “யவனர் போல முயற்சிகொள்” எனப்
பரிந்துரைத்திருக்கிறார். பாரதி குறிப்பிடும் ‘யவனர்’ சங்க இலக்கியங்களில் பேசப்படும்
‘பொன்னொடு வந்து கறியடு’ மீண்ட கிரேக்க-ரோமர்கள் அல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர் கண்ட
மேலை நாட்டவர்களே. அவர்களின் விடா முயற்சியும் உழைப்பும் அவர்களை நமக்கு
முன்னுதாரணமாகக் கூறச் செய்தது. பாரதியின் புதிய ஆத்திச்சூடியின் அறிவுரையை நம் இளம்
ஆய்வாளர்கள் பின்பற்றுவது நம் முந்தியத் தலைமுறை தமிழ் ஆய்வாளர்களைப் பின்பற்றுவதாகவே
இருக்கும். ஏனெனில், நம் முந்தியத் தலைமுறை ஆய்வாளர்கள் யவனர் போல முயற்சிகொண்டவர்களாக
வாழ்ந்தனர்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 30, 2015, 12:18:28 PM5/30/15
to brail...@googlegroups.com, Thamaraikkannan B
மனதில் உறுதியோடும், தெளிந்த எண்ணங்
களோடும் இலக்கு நோக்கிப் பயணித்தால் வெற்றி வசப்படும்

கோவையில் வணிகவரித் துறை உதவி ஆணையராகவும், இலக்கிய தளத்தில் குறிப்பிடத்தக்க படைப்
பாளியாகவும், இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் மேடைப் பேச்சாளராகவும் பன்முகம் காட்டிவரு
பவர் சென்னிமலை தண்டபாணி.
ஏழு அண்ணன்கள், ஒரு அக்கா கொண்ட பெரிய குடும்பத்தில் கடைசிக் குழந்தையாய் பிறந்தவர். 6
மாதக் குழந்தையாக இருந்த போது, இளம்பிள்ளை வாதத்தால் 2 கால்களும் செயலிழந்தன. 6
வயதில் தந்தை இறந்துவிட, பெரிய அண்ணனின் உதவியோடு படித்து, இன்றைக்கு உயர்ந்த நிலைக்கு
வந்துள்ளார். 'மனதில் உறுதியோடும், தெளிந்த எண்ணங் களோடும் இலக்கு நோக்கிப் பயணித்தால்
வெற்றி வசப்படும்' என்பதையே தன் வாழ்வியல் மந்திரமாக கொண்டுள்ள கவிஞர் சென்னிமலை
தண்டபாணி தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்..
''பிறந்தது படித்தது எல்லாமே ஈரோடு மாவட்டம் சென்னிமலை. புத்தக வாசிப்பு என்பது
சிறுவயதிலேயே எனக்கு மிகவும் பிடித்த மான ஒன்று. அப்போதே கவிதைகளும் எழுதுவேன்.
பாவேந்தர் பாரதிதாசனையும், வங்கக்கவி தாகூரையும் படித்த பின்னால், சந்தத்தோடு கூடிய
இசைப்பாடல் களையும் எழுதத் தொடங்கினேன்.
படிக்காத நேரம் போக மற்ற நேரங்களில் வானொலி கேட்பது வழக்கம். முன்பெல்லாம் கோவை
வானொலியில் அடிக்கடி கவிஞர்கள் சிற்பி, புவியரசு எழுதின கால் மணிநேரச் சிந்தனைகளை
ஒலிபரப்புவார்கள். அதைக் கேட்டுஉந்துதல் பெற்று வானொலி நாடகங்கள் எழுதத் தொடங்கினேன்.
என் எழுத்து முயற்சியில் புத்தர், மகாவீரர் பற்றிய 2 நாடகங்களும் புதிய அனுபவத்தைத்
தந்தவை. அவர்களது போதனைகளை அடிப்படையாகக் கொண்டு வானொலிக் காக எழுதப்பட்ட தொடர்
நாடகங் கள், பிறகு நூல்களாகவும் வந்து பரவலான பாராட்டைப் பெற்றன.
நான் பெரியாரிய சிந்தனைகளில் ஈடுபாடு உடையவன். சிவானந் தரின் வாழ்க்கை நிகழ்வு களை
கவிதை நாடகமாக எழுத முடிந்தது எப்படி என்று கேட்கிறார்கள்.
குருதேவர் சிவானந்தரும் பெரியாரும் என் இரு கண்களைப் போன்றவர்கள். என் சிந்தனை
வளர்ச்சிக்கு பெரியார் நீர் ஊற்றி னார் என்றால், என் வாழ்வியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர்
குருதே வர். இருவரிடம் இருந்தும் நான் கற்றவை அதிகம். அவர்கள் இருவரும் என்னைச்
செதுக்கிய மகா சக்திகள்.
நீ எந்த அளவுக்கு உயரமாகச் செல்ல விரும்புகிறாயோ, அந்த அளவுக்கு நீ சிரமப்பட்டாக வேண்
டும் என்றார் சுவாமி விவேகானந்தர். இன்றைய சமுதாயத்தில் இளை ஞர்கள் நம்பிக்கையோடு இருக்
கிறார்கள். ஆனால், தொடர் முயற்சி கிடையாது. தொடர்ந்து முயற்சிப் பதில் தயக்கம் கூடாது.
பல இடங்களில் சிறுசிறு குழிகள் தோண்டு வதில் பயனில்லை. ஒரே இடத்தில் தொடர்ந்து
தோண்டினால்தான் கிணறு உருவாகும். நீர் கிடைக்கும்.
ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கிறது. அதை நாம் நம்பிக் கையோடு எதிர்கொள்ள வேண்டும்.
'ஒரு குரு, ஓர் இலக்கு, ஓர் இடம்' என்பதை மனதில் வைத்து செயலில் இறங்கினால், வெற்றியை
எட்டிப் பிடிக்கலாம்...'' என உற்சாகமாகக் கூறுகிறார் கவி ஞர் சென்னிமலை தண்டபாணி.
'வசந்தம் உனது வாசலில்', 'உன் கண்களும் என் கவிதைகளும்' என்கிற இவரது கவிதைத் தொகுப்
பின் பெயர்களும், 'வெளிச்சத்தின் பாதை', 'பண்படுத்தும் எண்ணங் கள்' என்கிற வாழ்வியல்
வழிகாட்டும் நூல்களும் இவரை தனித்து அடை யாளம் காட்டுகின்றன.
18க்கும் மேற்பட்ட நூல்கள், அதற்கென பெங்களூரு தமிழ்ச்சங்கம், சிற்பி இலக்கியப் பரிசு
உள்ளிட்ட விருதுகள், இளைஞர் கள், மாணவர்களுக்கான நல்வழி காட்டும் மேடைப் பேச்சுகள்என
இவரது பயணம் சலனமின்றி ஓடுகிறது. இவரது 3-வது மூத்த சகோதரர் கவிஞர் ஈரோடு
தமிழன்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
இடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, மே 29, 2015

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 31, 2015, 12:41:37 AM5/31/15
to brail...@googlegroups.com
முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது!
– ஜெயலலிதா அதிரடி – அதிமுக பரபரப்பு
Posted on May 29, 2015 by vidhai2virutcham
முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! – ஜெயலலிதா அதிரடி – அதிமுக பரபரப்பு
About these ads
முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! – ஜெயலலிதா அதிரடி – அதிமுக பரபரப்பு
குற்ற‍வாளி என்று ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட‍தால், பதவிஇழந் து சிறைச்சென்ற
ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் குற்ற‍மற்ற‍வர் என்று தீர்ப்பு
வெளியாகி,
முதலமைச்ச‍ர் பொறுப்பில் அமர்ந்து விட்டார். இதோ அடுத்த‍ மாதம் ஆர். கே. நகர் இடை
த்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெறப்போகிறார். ஒரு வழியாக இந்த பரபரப்பு அடங்கியது.
ஆனால், தற்போது புதியதாக பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள‍து. அது என்ன‍வென்றால்,
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து
விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியா கியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும்,
தற்போதைய நிதியமைச்சரு மான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, பெரியகுளம் நகராட்சி
தலைவ ராக இருந்தார்.

இந்நிலையில், சில மாதங்களுக்குமுன் பெரியகுளம் அருகேயுள்ள தேவ தானம்பட்டி
கைலாசநாதர்கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் ராஜாவின் தொல்லை
காரணமாகத்தான் தற்கொ லை செய்துகொண்டதாக கடிதம் எழுதிவைத்ததாக கூறப்பட்டது. இது
தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், தான் முதல்வர் பதவியில் இல்லாத போது எவ்வளவு முறைகேடுகள் நடந்தது என்பது
பற்றி ரகசிய விசாரணை நடத்த, குழு அமைத்து விசாரணை நடத்த ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளதாக தெரிகி றது. இந்த குழுவினரின் விசாரணையில், பன்னீர்செல்வம் வசம்
இருந்த பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் வசம் இருந்த சுகாதாரத்துறை ஆகிய
இரு துறைகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் ஓ.பன்னீர்செல்வ த்தின் சகோதரர் ராஜாவை
காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் ரகசிய
இடத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்ச்செய்தி செய்திக்குறிப்பில் இருந்து . . .

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 31, 2015, 2:22:22 AM5/31/15
to brail...@googlegroups.com
Wednesday, May 27, 2015
அம்பையின் பெண்ணியப் பார்வையின் சிக்கல்கள்
Image result for அம்பை
“சிறகுகள் முளைக்கும்” 17 வருடங்களுக்கு முன்பு காலச்சுவடில் வெளிவந்த அம்பையின் ஒரு
பெரிய பேட்டி. மனுஷ்யபுத்திரனும் கண்ணனும் சேர்ந்து எடுத்தது. சுவாரஸ்யமும் சரளமும்
கொண்டது. ஒரு பாதி அம்பையின் வாழ்க்கைக்கதை, இன்னொரு பாதி அவரது இலக்கிய
அபிப்ராயங்கள். இப்பேட்டியை காலச்சுவடு பெண் படைப்புகள் நூலில் காணலாம்.

இப்பேட்டியில் தன் வழக்கமான துணிச்சலுடன் அம்பை இலக்கியத்தில் பெண் சித்தரிப்பு பற்றி பல
கேள்விகள் கேட்கிறார். இக்கேள்விகளின் மையம் ஒரு குறிப்பிட்ட படைப்பில் பெண் பாத்திர
சித்தரிப்பு நியாயமாக, சரியாக இல்லை என்பதாகத் தான் இருக்கும். உதாரணமாய் அம்பை
மகாபாரதம் படித்தால் ஏன் காந்தாரி கண்ணைக் கட்டிக் கொள்கிறாள், அவரது பாத்திர அமைப்பு
ஆணை சார்ந்ததாக உள்ளதே, ஏன் சுதந்திரமாய் இல்லை எனக் கேட்பார். அப்படித் தான் அவர்
சு.ராவின் நாவல்களில் ஏன் பெண் பாத்திரங்கள் அழுத்தமாய் வரவில்லை எனக் கேட்கிறார். சமீபமாய்
இது போல் ஒரு நண்பர் எஸ்.ராவின் சமீப நாவலில் ஏன் பெண் நாதஸ்வர கலைஞர்கள் வரவில்லை என்பதை
ஒரு குற்றமாய் வினவியிருந்தார். நாளை இன்னொருவர் வந்து ஏன் ஊனமுற்றவர், தலித், மூன்றாம்
பாலினத்தவர் எல்லாம் நாதஸ்வர கலைஞர்களாக வரவில்லை என கேட்பார்கள். ஆனால் ஒரு படைப்பில்
யார் பாத்திரமாய் வர வேண்டும் என்பதற்கு அப்படைப்புக்கு உள்ளாகவே ஒரு தர்க்க இருக்கும்.
அரசியல் சரித்தன்மை அல்ல அதை தீர்மானிப்பது.
அம்பை தி.ஜா, ல.ச.ராவின் பெண் பாத்திரங்கள் ஏன் ஆணின் பார்வையில் இருந்து மட்டும்
படைக்கப்பட்டுள்ளன என கேட்கிறார். தி.ஜா பெண்களை உடல்ரீதியாய் குறுக்குகிறார், ல.ச.ரா
தேவி சொரூபமாய் பெண்ணைப் பார்த்து மிகைப்படுத்துகிறார் போன்ற அவரது விமர்சனங்கள்
கூர்மையானவை என்றாலும் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ஒரு படைப்பில் வருகிற கருத்துக்கள்
ஒரு படைப்பாளனுடையதா என்பது அது.
அம்பை ஒரு படைப்பை ஒரு எழுத்தாளனின் அரசியல் மேடையாக பார்க்கிறார். ஆகையால் மிகுந்த
அரசியல் பிரக்ஞையுடன் கருத்துக்கள் வெளிப்பட வேண்டும் என்கிறார். ஆனால் ஒரு படைப்பில் ஒரு
எழுத்தாளனுக்கு சம்மந்தமில்லாத பல கருத்துக்களும் கூடத் தான் வந்து விழும். ஒரு
காலத்தின், ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் பலவித பார்வைகள் ஊடுருவும் களம் தான் ஒரு
படைப்பு. கலைஞனின் நோக்கம் அரசியல் ரீதியாய் ஆரோக்கியமான, நியாயமான கருத்துக்களை
படைப்பில் முன்னிலைப்படுத்துவதல்ல. ஒரு மக்கள் சமூகத்தின் சிந்தனைப் போக்கை, பண்பாட்டு
சாய்வுகளை, தத்தளிப்புகளை, குழப்பங்களை பதிவு பண்ணுவது தான் அவன் நோக்கம். அப்போது
அதில் பல முரண்பட்ட கருத்துக்கள் தோன்றலாம். இதில் எது எழுத்தாளனின் பார்வை என நாம்
முத்திரை குத்த முடியாது.
அம்பை “காணி நிலம் வேண்டும்” பாடலில் ஏன் பாரதி தனக்கு பத்தினிப் பெண் வேண்டும் என
குறிப்பாய் கேட்கிறார், ஏன் ஒரு பெண்ணின் பத்தினித்தனம் நல்லியல்பாய் வலியுறுத்தப்படுகிறது
என விமர்சிக்கிறார். பாரதி பல விசயங்கள் முற்போக்காய் இருந்தும் கூட அவர் ஏன் பெண்களை
பார்க்கும் பார்வையில் மட்டும் பிற்போக்காய் இருக்கிறார் எனவும் கேட்கிறார். ஆனால் பாரதியின்
முரண் தான் அவரது முக்கியத்துவமாகவும் உள்ளது. அவர் காலகட்டத்தின் அத்தனை குழப்பங்கள்
மற்றும் பலவீனங்களின் பிரதிநிதியாக அவர் இருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு காலத்துக்கு
முந்தியும் பிந்தியும் விடை தேடுகிறார். சறுக்குகிறார். மேலெழுகிறார். பாரதியுடன்
சேர்ந்து ஒட்டுமொத்த சமூகமும் தான் அப்போது சறுக்குகிறது. மேலெழுகிறது. ஒரு
படைப்பாளி எப்படி சமூகத்தில் இருந்து வேறுபட்டு தூயவனாக நல்லவனாக உன்னத
“முற்போக்காளனாய்” இருக்க முடியும்?
போரும் அமைதியும் நாவலில் தல்ஸ்தாய் நட்டாஷா எனும் உணர்ச்சி கொந்தளிப்பின் உருவமான ஒரு
பெண்ணை படைக்கிறார். மிகுந்த துணிச்சலும் தன்னிச்சையும் கொண்ட ஒரு சுதந்திர பிறவியாக
அவள் இருக்கிறாள். ஆனால் உள்ளுக்குள் அலைகழிந்தபடி நிம்மதியற்றும் தான் இருக்கிறாள்.
குற்றவுணர்வும் மன ஆவேசமும் குழப்பங்களும் அவளது உடல்நிலையை சீரழிக்கிறது. இறுதியில்
அவள் மணம் புரிந்து தாய்மை அடைகிற போது ஒரு பூரண நிறைவை பெறுவதாய் தால்ஸ்தாய்
சித்தரித்திருப்பார். இதைக் கொண்டு தால்ஸ்தாய் பெண் விரோதி என்றோ, சரியான புரிந்துணர்வு
இன்றி பெண் பாத்திரத்தை அமைத்திருக்கிறார் என நாம் கூறலாமா? கூடாது. ஏனென்றால் அன்றைய
காலகட்டத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தபடி தான் தம் சுதந்திரத்தை
பரிசீலிக்க முடியும். முழுமையாய் நவீனத்தை ஏற்கவோ முழுக்க பாரம்பரிய நம்பிக்கைகளை கை
விடவோ இயலாத ஒரு சமகால ரஷ்ட மனதிடம் தான் தால்ஸ்தாய் பேசுகிறார். இன்றைய வாசகனிடம்
அல்ல. அவர் தன் காலத்துக்கு மக்களின் கண்ணோட்டத்தில் இருந்து, அவர்களின் பண்பாட்டு நிலையில்
இருந்து தான் பிரச்சனைகளை அலசவும் முடிவுக்கு வரவும் முடியும். ஒரு ஆணின் பார்வையில்
இருந்து தான் பெண்ணின் பிரச்சனையை அவர் பார்க்கிறார் என நாம் கூறலாம். ஆனால் ஆண்-மைய
பார்வையே பிரதானப்பட்டிருந்த ஒரு பண்பாட்டு சூழலில் ஒரு எழுத்தாளனால் அப்படி மட்டுமே
பார்க்க இயலும்.
தஸ்தாவஸ்கி இவ்விசயத்தில் இன்னும் சிறப்பான உதாரணம். அவரது கரமசோவ் சகோதரர்கள் நாவலில்
அவர் யார் தரப்பில் நின்று பேசுகிறார் என ஒரு முடிவுக்கு வருவது மிக மிக சிரமம்.
ஓரளவுக்கு அவர் அலோய்ஷாவின் மனதுக்கு நெருக்கமாய் இருக்கிறார் எனக் கூறலாம். ஆனால் அப்பா
கரமசோவ் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் நம்மை முழுவதுமாய் கவர்ந்து அவர் தரப்பு தான்
மற்ற எல்லா பார்வைகளையும் விட சரி என தோன்ற வைக்கிறார். ஒரு மடத்தில் வைத்து கரமசோவ்
சகோதரர்களும் அப்பாவும் தலைமை துறவியுடன் உரையாடும் ஒரு காட்சி வரும். அதில்
டிமிட்ரியின் கொந்தளிப்பான மனநிலை வெளிப்படும். அவன் உக்கிரமான மன உணர்ச்சிகளுடன்
மோதியபடி இரு பக்கமும் சரிகிற நிலையில் இருப்பது தெரிய வரும். இவன் எதிர்காலத்தில்
மிகப்பெரும் குற்றம் ஒன்றுக்கு ஆளாகப்போகிறான் என உணரும் தலைமைத் துறவி ஸோசிமா அவன்
காலடியில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார். மிகவும் நெகிழ்ச்சியான ஆழமான கவித்துவமான
காட்சி. அவனது துன்பத்துக்கு தன்னை பொறுப்பாக்க அவர் காலத்திடம் மன்றாடுகிறார். உலகின்
துயரத்தை தனதாய் ஏற்கும் கர்த்தரின் வெளிச்சம் அவ்வரிகளில் துலங்குகிறது. இதற்கு அடுத்த
காட்சியில் ரகிதின் என்பவனை அலோய்ஷா சந்திக்கிறான். ரகிதின் தலைமை துறவி சரியான
தந்திரசாலி, அவர் டிமிட்ரியின் குற்றமனநிலையை மோப்பம் பிடித்து அவனிடம் மன்னிப்பு
கேட்பது போல் ஒரு நாடகம் போட்டு தன்னை ஒரு பெரிய தீர்க்கதரிசி எனும் தோற்றத்தை
ஏற்படுத்தி விட்டார். நாளை டிமிட்ரி குற்றம் இழைத்து விட்டால் நீங்கள் எல்லாரும் தலைமைத்
துறவியின் தேய்வீகத்தன்மையை போற்றிக் கொண்டாடுவீர்களே என பகடி செய்கிறான். இதைக் கேட்கிற
அலோய்ஷா மிகவும் குழம்பி விடுகிறான். இதற்கு அடுத்து ரகிதின் இரு கரமசோவ்
சகோதரர்களான ஐவன் மற்றும் டிமிட்ரியை திட்டுகிறான். இருவரும் தாம் மோகிக்கும் பெண்களின்
பொருட்டு தம் தந்தையை கொல்வதை கூட பரிசீலிப்பார்கள் என்கிறான். அப்போது அலோய்ஷா
கூறுகிறான் “நீ ஐவனை வெறுப்பதே அவன் காதலிக்கும் பெண்ணை நீயும் மோகிப்பதனால் தானே”
என்பான். ரகிதின் அக்கூற்றின் உண்மையை உணர்ந்து அதிர்ச்சியில் வாயடைத்துப் போகிறான்.
அலோய்ஷா ரகிதின் அதே விளையாட்டை தான் தானும் ஆடுகிறான். அடுத்தவனின் செயல்களை
துர்நோக்கம் கொண்டதாய் கற்பிக்கிறவர்களின் உள்நோக்கமும் அதே போன்றதாகிறது. இதை நாம் ஒரு
சங்கிலித் தொடர் போல் ஒவ்வொருவராய் நீட்டித்துப் போகலாம். இங்கு முக்கியமான கேள்வி
தஸ்தாவஸ்கி யார் பக்கம் - அலோய்ஷாவா அல்லது ரகிதினா? யார் சித்தரிக்கும் தலைமைத்
துறவியின் மனம் சரியானது?
அடுத்து இன்னொரு காட்சியில் அப்பா கரமசோவ் தன் மகன் அலோய்ஷாவிடம் தலைமைத் துறவி பற்றி
எதிர்மறையாய் பேசுகிறார். அலோய்ஷாவின் மிகுதியான ஆன்மீக ஆர்வமும் அவன் அதனால் மடத்தில்
தங்குவதும் அவருக்கு பிடிக்கவில்லை. அவர் சொல்கிறார் “நீ தலையில் வைத்து கொண்டாடுகிறாயே
அந்த தலைமைத் துறவி ஸோசிமா அவர் எப்படியான ஸ்த்ரிலோலன் தெரியுமா?”
“உளறாதீர்கள்”
“நான் கூட இருந்து பார்த்திருக்கிறேன். அவர் எத்தனை பெண்களுடன் கூத்தடித்திருக்கிறார் என
நான் விலாவரியாய் உனக்கு விளக்க முடியும். எல்லாம் என் கண் முன் அல்லவா நடந்தது”
தான் கடவுளாய் போற்றும் ஒருவர் பற்றின இந்த வெளிப்படுத்தல் கேட்டதும் அலோய்ஷா
குழப்பமாகிறான். மௌனமாகிறான். அப்போது அப்பா கரமாசோவ் சிரித்தபடியே சொல்கிறார் “என்ன
நம்பி விட்டாயா? சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்”
மிக முக்கியமான இடம் இது. அலோய்ஷா ஒரு கணம் சுலபமாய் தலைமைத்துறவி பற்றின அவதூறை
நம்பி விடுகிறான். அது எதைக் காட்டுகிறது? உள்ளுக்குள் அவனுக்கும் அப்படியான ஒரு எண்ணம்
இருந்திருக்கலாம். அதனாலே அப்பா அப்படி சொன்னதும் அவன் மனம் சஞ்சலப்படுகிறது. தந்தை
கரமஸோவ் வெளிப்படையாய் தன் தீமையை பறைசாற்றுபவர். அதே நேரம் தன்னைச் சுற்றி இருக்கும்
நல்லவர்கள் எவரும் தன்னை விட மேலானவர்கள் அல்ல என ஒவ்வொரு கணமும் நிருபித்தபடி
இருப்பார். இப்போது ஒரு கேள்வி: அப்பா கரமஸோவ் காட்டும் அலோய்ஷா தான் தஸ்தாவஸ்கியின்
அலோய்ஷாவா? தந்தை கரமஸோவ் துறவிகளை போலிகளாய் சித்தரிப்பது தான் தஸ்தாவஸ்கியின்
பார்வையா? நாவலுக்குள் இக்கேள்விகளுக்கு எல்லாம் தெளிவான விடையே இல்லை. ஒரு நல்ல
இலக்கிய படைப்பின் குணம் இது.
அம்பை “தலைகீழ் விகிதங்கள்” நாவலில் நாஞ்சில் நாடன் ஒரு அங்கிலோ இந்தியப் பெண்ணின்
மிகையான அலங்கார விழைவை கேலி செய்வதை எடுத்துக் கொள்கிறார். அப்பெண் சுதந்திரமாய்
தன்னை சிங்காரித்துக் கொள்வது, காலையில் அலுவலகம் வந்ததும் முதல் வேலையாய் கழிப்பறை போல்
மூத்திரம் கழிப்பது ஆகியவற்றை நாஞ்சில் நாடன் பகடி பண்ணுவது ஒரு ஆண் மைய சமூக பார்வை,
அது நியாயம் அல்ல என கண்டிக்கிறார். ஒருவேளை நாஞ்சில் நாடன் ஒரு கட்டுரையை இப்படி
குறிப்பிட்டிருந்தால் அதை நாம் விமர்சிக்கலாம். ஆனால் ஒரு நாவலில் இத்தகைய பார்வையும்
முக்கியம் தான். அது தான் கதைசொல்லியின் மனப்போக்கை, அவர் பிரதிநுத்துவப்படுத்தும்
பண்பாட்டை, அவனது கலாச்சார சாய்வுகளை சித்தரிக்கிறது. நாஞ்சில் நாடனின் இன்னொரு
நாவலில் ரயிலில் பயணிக்கும் மையப்பாத்திரமான ஆண் கீழே படுத்திருக்கும் ஒரு பெண்ணை இச்சை
காரணமாய் தன் காலால் தொடுவதாய் ஒரு இடம் வருவதை குறிப்பிட்டு, அங்கு அப்பெண் ஒரு
பொருள் போல் சித்தரிக்கப்படுவதாய் குற்றம் காண்கிறார். ஆனால் அப்பெண்ணை ஒரு பொருள் போல்
காணும் ஒரு மனநிலையை அப்படியான காட்சி மூலம் தானே காட்ட முடியும்? இந்த கதைசொல்லியை
நாஞ்சில் நாடனாகவே பார்ப்பது தான் அம்பையின் பிரச்சனை. அவர் எல்லா படைப்புகளையும்
இவ்வாறு எழுத்தாளனின் குரலாகவே காண்கிறார்.

அதைப் போன்றே பெண் சித்தரிப்புகள் அரசியல்ரீதியாய் சரியாய் இருக்க வேண்டும் என
எதிர்பார்க்கிறார். ஆனால் அரசியல் சரித்தன்மை இலக்கியத்தின் நோக்கம் அல்ல. பின் அமைப்பியல்
தோன்றிய பின் குறிப்பாய் ஒரு படைப்பை ஒற்றை நோக்கம் கொண்டதாய் பார்க்கும் பார்வை மாறி
விட்டது. இன்று ஒரு படைப்பு பல்வேறு பார்வைகள் ஊடுரும் ஒரு பிரதியாய், வாசகனின்
சிந்தனைகள் புது நிறம் அளிக்கும் ஒரு நிலைக்கண்ணாடியாக காணப்படுகிறது. ஒரு படைப்பில்
கதைகூறும் குரலை ஒரு வாசகனின் குரலாய் கூட நாம் பார்க்க இயலும். தந்தை கரமசோவை
எழுத்தாளனாகவும், அலோய்ஷாவை வாசகனாகவும் (அதாவது நீங்கள்) கற்பனை பண்ணுங்கள். தந்தை
கரமசோவ் மிகவும் விரசமாய் ஒன்றைக் கூறி உங்கள் மனதை சலனப்பட வைக்கிறார். அப்போது அந்த
விரச சித்தரிப்பு தந்தை கரமசோவுடையதா உங்களுடையதா? எழுத்தாளனின் குரல் அவன் குரலா
உங்கள் குரலா? யோசியுங்கள்!
Posted by Abilash Chandran at 1:13 PM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 31, 2015, 2:24:40 AM5/31/15
to brail...@googlegroups.com
Friday, May 29, 2015
அம்பேத்கர், பகவத் கீதை மற்றும் ஓஷோ
Image result for அம்பேத்கர்
அம்பேத்கரின் “கிருஷ்ணரும் அவரது கீதையும்” எனும் கட்டுரை படித்தேன். முதலில் மொழி
பற்றி. அவரது மொழியின் சில அம்சங்கள் மிகவும் வியப்பூட்டுகின்றன. குறிப்பாய் அதன்
சமகாலத்தன்மை. இன்றைய எழுத்தின் குணங்களாய் நாம் காணும் நேரடித்தன்மை, விவாத வடிவம்,
நேரடியாய் வாசகனை அழைத்து உரையாடும் தன்மை, அபாரமான தெளிவு, தயங்காமல் எதிர்கருத்தை
பதிவு செய்வது, எளிமை, லௌகீக பார்வை இவை அனைத்தும் அம்பேத்கரிடம் உள்ளன. பெயரை மாற்றி
பிரசுரித்தால் நிச்சயம் இணையத்தில் புழங்கும் ஏதோ ஒரு இளைஞன் எழுதியது எனத் தான் தோன்றும்.

இன்னொரு முக்கியமான விசயம் அம்பேத்கரிடம் சுத்தமாய் லட்சியவாதமே இல்லாதது. அதாவது
அரைநூற்றாண்டுக்கு முன் இந்தியர்கள் லட்சியத்துக்காய் உயிர்கொடுக்க துணிந்து வேலை குடும்பம்
அனைத்தையும் உதறி தேசப்பணி செய்தனர். அதனால் அக்கால எழுத்து, படைப்புகள், இசை,
கலைவடிவங்கள் என அனைத்திலும் லட்சியவாதம் ஊடுருவி இருக்கும். இதன் உச்சம் காந்தியின்
எழுத்து தான். காந்திக்கு பிறகு இடதுசாரிகள் வழியாய் எண்பதுகளின் இறுதி வரை மற்றொரு
மக்கள் எழுச்சி சார்ந்த லட்சியவாதம் இங்கு ஓங்கியது. இரண்டு வகையான லட்சியங்கள் சார்ந்த
பார்வைகளும் இன்று முடிவுற்று விட்டன.
அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவரின் சமூக மேம்பாட்டில் நம்பினார். அதற்காய் செயல்பட்டார் என்பது
அனைவருக்கும் தெரியும் தான். ஆனால் எந்த நம்பிக்கையையும் போற்றி கொண்டாடி அதற்காய்
செயல்படுபவர் அவர் அல்ல என்பது அவரது எழுத்துக்களை படிக்கையில் தெரிகிறது. அவருக்கு
நேரடியாய் மனித வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்கள் தாம் முக்கியம். காந்தியும் அது போல்
நேரடியாய் நடைமுறை செயல்பாடு பற்றி அக்கறைப்பட்டார் என்றாலும், தேசியம், ஒழுக்கம்,
கடவுள், பண்பாட்டு விழுமியங்கள் போன்ற அரூப விசயங்களுக்காய் மனிதன் தன்னை தியாகம் செய்ய
வேண்டும் என அவர் நம்பினார். இது தான் கருத்துமுதல் வாதம். ஆனால் அம்பேத்கர் இதற்கு
எதிர்நிலை. மனிதனின் நடைமுறை உலகம், அது மட்டுமே அவரது அக்கறை. அதனாலே அவர்
எழுத்தில் சற்றும் லட்சியவாத கொந்தளிப்புகள், செண்டிமெண்டுகள், அதனாலான வழவழத்தன்மை
இல்லை. அரைநூற்றாண்டு காலம் முடிந்து இன்று லட்சியவாதம், அரூப நம்பிக்கைகள் ஆகியவை
மண்மூடிப் போய் விட்டன. இன்றைய தலைமுறை மிக மிக லௌகீகமாய் யோசிக்கிறது. இன்றைய
எழுத்தும் அவ்வாறே உள்ளது. இன்றைய எழுத்து போலவே அம்பேத்கரின் எழுத்தும் மிக மிக
லௌகீகமாய் உள்ளது. கனவுகளில் சயனிக்க மறுக்கிறது.
மேலே சொன்ன கட்டுரை பற்றி சில வரிகள். பகவத் கீதை பற்றின நம் புரிதலை குப்புற
திருப்பிப் போடுகிறது இக்கட்டுரை. பகவத் கீதை வர்ணாசிரம தர்மம், யாகங்கள் பற்றின
நம்பிக்கைகள், ஷத்ரியர்களின் வன்முறை ஆகியவற்றின் மீது பௌத்தம் தொடுத்த தாக்குதலை
எதிர்கொள்வதற்கு தோன்றின ஒரு அரசியல் பிரதி என்கிறார். கீதை ஒரு மதநூலோ தத்துவ நூலோ
அல்ல என மறுக்கிறார். புத்தரின் கருத்துக்களும் அவர் உருவாக்கிய சமூக மாற்றங்களும்
மக்களுக்கு வன்முறை மீது அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது. யுத்தம் தேவையில்லை எனும்
முடிவுக்கு பிராமணர்கள் கூட வந்து சேர்கிறார்கள். இது ஷத்ரியர்க்ளுக்கு பெரும்
நெருக்கடியை அளிக்கிறது. அதே போல் அரசமைப்பின் பிற தூண்களான வர்ணாசிரமும், யாக
சடங்குகளூம் புத்தர் பிராமணரல்லாதோரை துறவிகளாக இயங்க தூண்டுவதுடன் ஆட்டம் காண்கின்றன.
கீதை வர்ணாசிரமத்தை நியாயப்படுத்த முயல்கிறது. ஆனால் அதிலுள்ள தத்துவார்த்த பிழையை
அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். அதை இங்கே விவரிக்க சற்று சிக்கலானது. அடுத்து
யாகங்களின் அபத்தத்தை பௌத்தம் நிறுவியதற்கு பதிலாக கீதை அதன் முக்கியத்துவத்தை
வலியுறுத்துகிறது. இறுதியாய், மனித கொலைகளை ஆன்மா வேறு, உடல் வேறு என்றும், கொலை
உடலை மட்டுமே இல்லாமல் பண்ணுகிறது என்றும் வாதித்து கீதை நியாயப்படுத்துகிறது. கீதையின்
இந்த நியாயப்படுத்தல்கள் இல்லாவிட்டால் ஒருவேளை இம்மூன்று நம்பிக்கைகளும், அவை சார்ந்த
அரசமைப்புகளும் காணாமல் போயிருக்கும் என்கிறார் அம்பேத்கர்.
உடல்-ஆன்மா வேறுபாட்டு வாதத்தை அசட்டுத்தனமானது எனும் அம்பேத்கர் கிருஷ்ணர் மட்டும்
இவ்வாதத்தை ஒரு நீதிமன்றத்தில் வைத்தால் அவரை பைத்தியவிடுதிக்கு அனுப்பி விடுவார்கள்
என்கிறார். எனக்கு இதைப் படிக்க மற்றொரு எண்ணம் தோன்றியது. புத்தர் உடலைக் கடந்து,
நடைமுறை உலகை மீறி மற்றொரு ஆன்மீக உண்மை, விழிப்புணர்வு நிலை இல்லை என்கிறார். அவரது
ஆன்மீக எழுச்சி இந்த கண்டுபிடிப்புடன் தான் துவங்குகிறது. அவர் இப்படி ஆன்மா-உடல் என
மனிதனை இரண்டாக பார்ப்பதை எதிர்க்கிறார். கீதை மீண்டும் இந்த ஆன்மா-உடல் எனும் கோட்பாட்டை
வன்முறையை நியாயப்படுத்த முன்வைக்கிறது. புத்தர் பேசிய விட்டேத்தி மனப்பான்மையை
வன்முறையில் பிரயோகித்தால் ஒருவன் யோகியாகலாம் என்று கூறுகிறது. அதாவது புத்தரின்
தரப்பை தனக்கேற்றபடி பயன்படுத்தி மறுவாதம் செய்கிறது. இது சற்றே சுற்றிவளைத்த வாதம்
என்றாலும் புத்திசாலித்தனமான ஒரு பௌத்த-மறுப்பு வாதம் தான். ஆனால் அம்பேத்கருக்கு இந்த
தத்துவ விளையாட்டுகளில் நம்பிக்கை இல்லை. நடைமுறையில் எவனாவது விட்டேத்தித்தனமான
மனதுடன் உன் குழந்தையை கொன்றால் அதை ஆன்மீக செயல் என நீ ஏற்பாயா என அவர் பதிலுக்கு கேட்பார்.
கீதை பேசும் வன்முறை பற்றி ஓஷோ கூறியுள்ளதும் இதே பரப்பில் வைத்து படிக்க வேண்டியது
தான் என நினைக்கிறேன். ஓஷோ எந்த சமூகமும் மிகப்பெரிய போர்களை முன்வைத்து தான் செழித்து
ஓங்கி உள்ளன என்கிறார். போருக்கான தயாரிப்புகள் மனிதனின் உள்ளார்ந்த ஆற்றல்களை
வெளிக்கொணர்ந்து சமூகத்தை உச்சபட்ச வளர்ச்சிக்கு இட்டு செல்லும் என்கிறார். இரு
உலகப்போர்களுக்கு பின்னால் பெரும் வளர்ச்சி கண்ட தேசங்களை, தொடர்ந்து மோதிக் கொண்டிருந்த
பழைய கிரேக்க சமூகங்களை உதாரணம் காட்டுகிறார். போரின் போது மனிதனின் தீய குணங்கள்
முழுக்க வெளியாகும் என ஓஷோ ஏற்கிறார். ஆனால் மனிதனின் நற்குணங்கள் இத்தீய குணங்களின் ஊடே
தான் வெளிவர முடியும் என்கிறார். தீமையையும் நன்மையையும் பிரிக்க இயலாது. கொலை
செய்கிற மனிதன் தான் உன்னதமான தத்துவங்களையும் கவிதை உள்ளிட்ட பண்பாட்டு வடிவங்களையும்
தோற்றுவிக்க முடியும். அவன் தான் பொருளாதார மேம்பாட்டுக்கும் காரணமாகிறான். ஆனால் போர்
செய்யாதே எனக் கூறி அவனுக்குள் ஒரு குற்றவுணர்ச்சியை விதைத்தால் அவனது ஒட்டுமொத்த
படைப்பூக்க ஆற்றல்களும் அடங்கி விடும் என்கிறார் ஓஷோ. அவ்விதத்தில் கீதை போரைப் போற்றியது
இந்தியா ஒரு வளர்ந்த பெரும் தேசமாய் இருந்ததற்கு உதாரணம் என்கிறார். ஏனென்றால் பெரும்
போர்கள் நடத்த பொருள் வளம் வேண்டும். பாரதப் போருக்கு பிறகு பெரும் போர்கள் நடக்காதது
இந்தியாவின் பொருளாதார, கலாச்சார தளர்ச்சிக்கு காரணம் என்கிறார். இதற்கு அவர் பகவத்
கீதைக்கு பிறகு தோன்றிய வன்முறை மறுப்பாளர்களின் பிரச்சாரம் தான் காரணம் என்கிறார்.
ஓஷோவின் வாதத்தில் சில பிழைகள் உள்ளன. போரினால் அனைத்து சமூகங்களும் வளர்ந்ததாய் கூற
முடியாது. போருக்கு அது நிகழும் சூழலின் அழுத்தங்களுக்கும் சம்மந்தமுள்ளது. போரை
முன்னிட்டு சமூகங்கள் தம்மை மேலெடுக்கின்றன என்பது தர்க்கரீதியாய் ஏற்கத்தக்கது அல்ல.
மேலெழுந்து வரும் சில சமூகங்களுக்கு அப்போது போர் தவிர்க்க இயலாததாய் இருந்தது என்றும்
பார்க்கலாம். தேவ்தத் பட்நாயக் தனது “ஜெயா” எனும் மகாபாரத நூலில் பாரதப் போர் சில
குறுங்குழுக்கள் மட்டும் பங்கேற்ற எளிய சண்டையாகத் தான் இருந்திருக்க வேண்டும்,
லட்சக்கணக்கில் மக்களும், குதிரைகளும் மாண்டதாயும், ரத்தக்கடல் புரண்டதாயும் கூறுவது
கவிஞனின் கற்பனை மட்டுமே என்கிறார். இதை அவர் பாரதப்போர் நடந்ததாய் கூறப்படும் இடம், அதன்
வரலாறு ஆகியவற்றை சான்றுகளாய் வைத்துச் சொல்லுகிறார். இதன்படி “பெரும் பாரதப்போர் எனும்
பண்பாட்டு எழுச்சி சின்னம்” எனும் ஓஷோவின் வாதம் அடிபட்டுப் போகிறது.

Posted by Abilash Chandran at 12:31 PM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 31, 2015, 2:25:56 AM5/31/15
to brail...@googlegroups.com

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 31, 2015, 2:29:25 AM5/31/15
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
Thursday, May 28, 2015
தமிழில் மெட்டாசினிமா?
”ஜிகிர்தண்டாவை” எல்லாம் மெட்டாசினிமா என்கிறார்கள். ஏதோ மெட்டாசினிமாவை நாம் புதிதாய்
கண்டுபிடிக்க வேண்டி இருந்தது போல. பல வருடங்களாய் நம் மசாலா சினிமாவில் மெட்டா
சினிமா மிக வலுவாய் இருந்து கொண்டு தான் இருந்தது. மெட்டா சினிமா, பின் நவீனத்துவம்
எல்லாம் அறியாமல் இதை மக்கள் ரசித்து கைதட்டிக் கொண்டும் தான் இருந்தார்கள். ஆனால் இந்த
உண்மையை நான் சற்று தாமதமாய் ஒரு நண்பருடன் ராயப்பேட்டையில் ஒரு ரோட்டோரக்கடையில்
தந்தூரி சிக்கனை எச்சில் வழிய கடித்துக் கொண்டிருந்த போது தான் உணர்ந்தேன்.

ஒரு நண்பர் டி.வி சீரியல்களில் நடிப்பவர். இன்னொருவர் நாடக இயக்குநர். நான் நடிகரிடம்
கமல் பற்றின உங்கள் கருத்து என்ன எனக் கேட்க அது பற்றி ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது இயக்குநர் நண்பர் “தசாவதாரம்” பற்றி ஒரு கருத்து சொன்னார். அப்படத்தில் கமல் பத்து
வேடங்களில் பத்து பாத்திரங்களாய் வருகிறார். ஆனால் பத்து பாத்திரங்களும் கமலை ஒத்த தோற்றம்
கொண்டவர்கள் என கதையில் எந்த குறிப்பும் இல்லை. அதாவது “மைக்கேல் மதன காமராஜன்” போல
பத்து பேரும் “இரட்டைப்பிறவிகள்” அல்ல. அதனால் மிச்ச ஒன்பது பாத்திரங்களை கமலே நடித்தாக
வேண்டிய அவசியம் இல்லை. கமல் தன்னை சிவாஜியை விட மேல் என நிரூபிப்பதற்காகவே அவ்வாறு
நடித்தார் என நண்பர் கூறினார். இது சரியான பார்வை தான் என முதலில் பட்டது. ஆனால் ஒரு
சின்ன சிக்கல். அவர் சொல்வது போல, மிச்ச பாத்திரங்களில் வேறு ஆட்கள் நடித்திருந்தால்
கதையில் குழப்பம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலாது.
எப்படி என சொல்கிறேன். சம்மந்தமில்லாத வெவ்வேறு ஆட்கள் விஞ்ஞானி கமலின் வாழ்க்கையில்
தலையிட்டு எதேச்சையாய் வைரஸ் மக்களை பாதிக்காமல் காப்பாற்றுவது தானே கதை. ஒன்பது
பேரும் விஞ்ஞானிக் கமலுக்கு சம்மந்தமில்லாதவர்கள் என்றால அதில் கதையே இல்லாமல் போய்
விடும். அதாவது எனது வாழ்விலும் உங்கள் வாழ்விலும் கூட யாரென்றே தெரியாதவர்களின்
கண்ணுக்கு தெரியாத தாக்கங்கள் இருக்கும். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் உணர்வுரீதியாய்
என்னோடு சம்மந்தபடாத பட்சத்தில் அதை ஒரு கதையாகவோ அல்லது தர்க்கரீதியிலான அன்றாட
நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவோ கூட என்னால் ஏற்க இயலாது. ஏதோ ஒரு வகையில் என் உணர்வுகள்
அதில் சம்மந்தப்பட்டால் ஒழிய அதில் ஒரு சுவாரஸ்யம் இராது. நினைவில் நில்லாது. இதெல்லாம்
கதையின் தர்க்கம், அதன் தேவை. ஆனால் இப்படத்தில் எங்கும் மிச்ச ஒன்பது பேரும் கமலை
தோற்றத்தில் ஒத்தவர்கள் எனும் நேரடியான குறிப்போ ஒப்பிடலோ வராது. இங்கு தான் இப்படம்
மெட்டாசினிமா ஆகிறது.
மெட்டாபிக்‌ஷன் கதையில் வாசகனை இது நிஜமென மயங்க விடாமல், இது கதை தான் என
எழுத்தாளர் உணர்த்தியபடி இருப்பார். மெட்டாசினிமாவிலும் இது சினிமா தான் என உணர்த்திக்
கொண்டிருப்பார் இயக்குநர். அப்போதும் நாம் இந்த குறுக்கீட்டையும் ஒரு கதையாக ஏற்று
ரசித்துக் கொண்டிருப்போம் என்பது தான் மெட்டா படைப்புகளின் மேஜிக். “தசாவதாரத்தில்” பத்து
கமல்களுக்கும் கதையில் எந்த சம்மந்தமும் இல்லாவிட்டாலும், தோற்றத்தில் அவர்கள் ஒத்தவர்கள் என்
கதையின் லாஜிக் சொல்லாவிட்டாலும், பார்வையாளர்கள் பத்து பேரையும் கமலின் பத்து
வேடங்களாகத் தான் பார்த்தார்கள். கமல் ஜார்ஜ் புஷ் ஆக வரும் போது அதை புஷ்ஷாக பார்க்காமல்
“பார் கமல் எப்படி புஷ் போலவே இருக்கிறார்?” என்றார்கள், இதன் உச்சம் கலைஞர் மற்றும் ஜெயா
படத்தின் இறுதியில் வருவதும், ”உலக நாயகனே” கமல் துதி பாடலும்.
தன்னுடைய “உத்தம வில்லனில்” கமல் பிரயத்தனப்பட்டு மெட்டாசினிமா பண்ண முயன்றிருப்பார்.
பதத்வாஜ் ரங்கனும் தன் ஆங்கிலக் கட்டுரையில் அதை மெட்டாசினிமா எனக் காட்ட ரெண்டு
கால்களிலே எட்டு எல்லாம் போட முயன்றிருப்பார். ஆனால் அதற்கெல்லாம் அவசியமில்லை. கமல்
தனக்கே தெரியாமல் பல படங்களில் மெட்டா அம்சங்களை கொண்டு வந்திருக்கிறார். பாமர மக்களும்
ரசித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் டி.வியில் “காஞ்சனா” ஓடியது. என் மனைவி படம் பற்றி ஒரு சந்தேகம்
எழுப்பினாள். “அதெப்படி கோவை சரளா கோவைத் தமிழ் பேசுகிறார். அவர் மகன் ஸ்ரீமன்
மதுரைத்தமிழ் பேசுகிறார். ஸ்ரீமனின் மனைவி தேவதர்ஷினி தனியாய் பிராமணத் தமிழ்
பேசுகிறார். அவரது தங்கை லஷ்மி ராய் பெசண்ட் நகர் தமிழ் பேசுகிறார். லாரன்ஸ் ஒரு பக்கம்
புறநகர் சென்னைத் தமிழ் பேசுகிறார். அதெப்படி ஒரு குடும்பத்துக்குள் இவ்வளவு வட்டார
வழக்குகள் சாத்தியம்?”. ஆனால் இதையெல்லாம் யோசிக்காமலா அந்த இயக்குநரும் தயாரிப்பாளரும்
படத்தில் இவ்வளவு தமிழ்களை அனுமதித்திருப்பார்கள்? உண்மையில் இதில் எந்த லாஜிக் மீறலும்
இல்லை. கதையில் லாஜிக் உதைக்கலாம். ஆனால் திரையரங்கில் ஒரு கதை எதார்த்தமாய் அதன்
உள்ளார்ந்த லாஜிக்குடன் புரிந்து கொள்ளப்படுவதில்லை. பார்வையாளர்களின் கணக்கும் வேறு.
கோவை சரளா அங்கு லாரன்ஸின் அம்மாவாக அல்ல, கோவை சரளாவாகத் தான் தோன்றுகிறார். அவரை
அப்படித் தான் மக்கள் நகைச்சுவை காட்சிகளில் ரசிக்கிறார்கள். அப்போது அது மெட்டாசினிமா
ஆகிறது. அடுத்து சீரியஸ் காட்சிகளில் அவர் லாரன்ஸின் அம்மாவாகி விடுவார். அப்போது
சாதாரண எதார்த்த சினிமா. இது போல் தான் ஒவ்வொரு பாத்திரமும் அவ்வப்போது நடிகர்களாகவே
திரையில் தோன்றுவார்கள். ”ஜிகிர்தண்டாவெல்லாம்” இதன் பக்கத்தில் நிற்க முடியாது.
இப்படி நம் மசாலா சினிமாவில் பல மெட்டாசினிமாக்களை காணலாம். யாராவது தீவிரமாய் ஆராய
வேண்டும்.

பி.கு: இதை சீரியசாய் படித்து விட்டு கேள்வி கேட்பவர்களை அந்த கமல் தான் காப்பாற்ற வேண்டும்.
Posted by Abilash Chandran at 4:15 AM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 31, 2015, 6:10:36 AM5/31/15
to brail...@googlegroups.com
தமிழர் பண்பாடு
காதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள்
பிரபஞ்சன்
பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட டி.கே. சிதம்பரநாத
முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை.
‘கல்ச்சர்’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே
காலகட்டத்தில் பலர் அதைக் ‘கலாச்சாரம்’ எனக் கொண்டார்கள். இந்தக் ‘கல்ச்சர்’ என்னும் சொல்
குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும்
பிள்ளை கூறுகிறார். ‘கல்ச்சரை’ ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு.1
தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது.
சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச்
சுட்டியிருக்கின்றன. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்கிறது புறநானூறு.
பண்பையும் பாட்டையும் இணைத்திருக்கிறார் டி. கே. சி. பண்பாட்டுக்கு மேத்யூ அர்னால்டு தந்த
விளக்கம் மிகச் செறிவானது. தனிமனிதன் அறிவு, குணத்தை நிரப்பிக்கொண்டு தன்னை
முழுமையாக்கிக்கொள்வதோடு, சமூக நலத்தை மேலும் பேணும் தன்மை. ஒரு இனம்
அறிந்தவற்றுக்குள்ளேயே சிறந்ததும் சிந்தித்தவற்றுக்குள்ளேயே உயர்ந்ததும் பண்பாடு எனலாம்
என்கிறார் அவர்.
o
நிறைந்த பல விழுமியங்களைக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய இருப்பாகக் காதலையும்
திருமணத்தையும் குடும்பத்தையும் சங்ககாலத் தமிழர் கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள்
அழுத்தமாகவே சொல்கின்றன. சங்க இலக்கியங்கள் - பாட்டும் தொகையுமான அந்தப் பதினெட்டுத்
தொகுப்புகளின் பாடல்கள் எழுதப்பட்ட காலம் கிறிஸ்து பிறப்புக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு
முன்பிருந்தும் பின்னால் இருநூறு வருஷங்கள் என்னும் அந்த ஐந்நூறு ஆண்டுக் காலகட்டத்துத்
தமிழர் வாழ்க்கையை அச்சங்க இலக்கியப் பாடல்கள் சித்தரித்துள்ளன என்பதைப் பொதுவாகக் கருத்தில்
கொள்ளலாம். தமிழ் ஆய்வுலகம் பெரும்பான்மை இந்தக் கால அளவை ஏற்றுக்கொள்கிறது.
இந்த ஐந்நூறு ஆண்டுக் காலப் படைப்புகள், தம் காலத்து யதார்த்தத்தைச் சித்தரித்தன என்று
சொல்வதற்கில்லை. அவை ஒரு இலக்கிய மாதிரியை முன்வைத்தன; புனைவும் நாடகத்தன்மையும்
யதார்த்தமும் கூடியவை அவை என்ற புரிதலோடு அப்பாடல்களைப் பயில்தல் வேண்டும். மற்றும் அவை
தமக்கு முன்பிருந்த காலத்து வழக்கையும் மரபுகளையும் நினைவுகளையும் தம் சமகாலத்ததாகக்
கொண்டும் புனையப்பட்ட பாடல்கள் என்பதையும் கவனத்தில் கொண்டே அக்காலத்துத் தமிழர்களின் -இந்து
பண்பாடு என்னும் பெரும் தலைப்பில் அடக்கப்படும் காதல், ஒழுக்கம், திருமணம், குடும்பம் ஆகிய
நிறுவனங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
o
சங்க இலக்கியத்தில் காதலாகிய ‘அகம்’ சார்ந்த பாடல்களே, புறம் சார்ந்த பாடல்களைவிடவும்
அதிகமாக இருக்கின்றன என்பது கொண்டே, சங்க காலம் காதலுக்கு இரு கதவுகளையும்
திறந்துவைத்த சமூகமாகவே தோன்றும். அக்காலத்து அறிவாளர்களாகிய புலவர்கள், மிகவும்
உற்சாகமாகவே காதலைப் பாடி, காதல் நிரம்பிய சமூகத்தை உருவாக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள்
என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தில் சுமார் 89 இடங்களில் காதல்
என்ற சொல் பயின்றுவந்துள்ளது என்கிறார் பெ. மாதையன்2. காதல் என்பதைக் குறிக்கக் காமம்
என்னும் சொல் 91 இடங்களில் வந்துள்ளது. இதேபோல ‘நட்பு’ எனும் சொல்லும் கேண்மை எனும்
சொல்லும் ‘தொடர்பு’ என்பதும் காதலைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன என்றும் கூறுகிறார் அவர்.
சில காதலர்களை நாம் சந்திக்கலாம். ஒருத்தி தன் காதலைத் தோழியிடம் இப்படிச் சொல்கிறாள்:
(குறுந்தொகை)
குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மலைத் தலைவனுடன் நான் கொண்ட நட்பு, நாம் வாழும்
நிலத்தைக் காட்டிலும் அகலமானது. வானத்தை விடவும் உயர்ந்தது. கடலைவிடவும் ஆழமானது.
காதலின் தொடக்கத்தில் மிகப் பெரும் நம்பிக்கையும் உறுதியும் தங்கள் காதலர்மேல்
காதலிகளுக்கு ஏற்படத்தான் செய்கின்றன. தலைவியின் காதல் உணர்வுக்குச் சற்றும் குறையாமல்தான்
தலைவர்களின் நட்பின் மணம் இப்படி வீசுகிறது.
‘அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டே! பூக்கள் பலவற்றின் மணத்தையும் நுகர்ந்து, அவற்றின்
தேனையும் உணவாகக் கொண்டு வாழும் இயல்பினைக் கொண்ட வண்டே. என்னோடு நட்பாக இருக்கும் மயில்
போன்ற சாயலையும் அழகிய பற்களையும் கொண்டிருக்கிற என் இந்தச் சினேகிதியின் அழகிய
கூந்தலைவிடவும் வாசனையுள்ள இன்னொரு பூவை நீ அறிந்திருக்கிறாயா? மாட்டாய். இருந்தால்
எனக்கு அதைச் சொல்வாயாக’
- குறுந்தொகை
இது தலைவன் தலைவியின் நலம் பாராட்டிச் சொல்லும் வாசகம். தன் காதலியின் கூந்தலைக்
காட்டிலும் மணம் கொண்ட வேறு ஒரு பொருள் பூக்களிலும்கூட இருக்க முடியாது என்பது அவன்
தீர்மானம். அவனுக்கும் அவளுக்குமான புணர்ச்சி (உடல் புணர்ச்சிதான். இது குறித்து நாம்
கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் விரும்பியதை அவர்கள் நிறைவேற்றிக்கொண்டார்கள்.) நடந்து
முடிந்த பிறகு, தலைவியின் இன்ப நலத்தைச் சொல்லிச் சிலாகிக்கிற பாடல் இது. தலைவிக்கும்
இது மகிழ்ச்சியாக இருக்கும்தான். இந்த இரண்டு பாடல்களையும் ஒப்புநோக்கும்போது, நமக்குப்
பிடிபட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. தலைவி சொன்ன முதல் பாடலின் காதல் உக்கிரமும்
அழகியல்ரீதியாக அதன் ஆழமும் திடநம்பிக்கையும் தெளிவும் தலைவன் நலம் பாராட்டலில்
இருக்கின்றனவா என்பதே நாம் ஆராய வேண்டிய விஷயம். தலைவன் பேச்சில் அனுபவித்த
திருப்தியும் ஒருவகை எக்களிப்பும் இன்னும் கூடுதலாக ஓடும் நதியின் நீருக்குள் புரளும்
கிளிஞ்சல்போல, சத்தம் எழுப்பாத ஆண்தன்மையைக்கூட உணரக் கூடும்.
சங்கக் காதலர்களின் பிரச்சினை இங்குதான் தொடங்குகிறது. தனிமையில் அவர்கள் சந்திக்க
நேரும்போது, அக்காலத்தில் மக்கள்தொகைக் குறைவும் காடுகள் நிறைந்த நிலப்பகுதியையும்
கணக்கில் கொண்டால், மெய்யுறு புணர்ச்சி ஏற்படுதல் இயல்பும் இயற்கையுமே ஆகும். தமிழ்
இலக்கியமும் இலக்கணமும் மெய்ப்புணர்வை ஏற்கவுமே செய்கின்றன. புணர்ச்சிக்குப் பிறகு, தலைவன்
நியாயமான காரணத்தாலோ நியாயமற்ற காரணத்தாலோ சந்திப்பைத் தவிர்க்க முனைந்தால் தலைவிக்குப்
பதற்றம் ஏற்பட்டுவிடுகிறது. காதல் வண்டு மற்றொரு மலருக்குத் தாவிவிட்டதோ என்று
தவித்துப்போகிறாள். மீண்டும் சந்திக்கும்போது அவன் அவளிடம் ஆயிரம் சத்தியம் செய்கிறான்.
‘குவளை மலரின் மணம் வீசுகின்ற, திரண்ட கரிய கூந்தலையும் ஆம்பல் மலரின் மணம் தரும் பவள
வாயினையும் உடையவளே. அஞ்சாதே என்று நான் சொல்லிய சொல்லே உனக்கு அச்சமூட்டியதோ? உன்னைப்
பிரிந்தால் இந்த உலகமே எனக்குப் பரிசாகக் கிடைத்தாலும் அதை நான் புறக்கணிப்பேன். உன்
நட்பே எனக்குப் பெரிது . . .’
பெண்ணுக்கு அப்போதைக்குச் சமாதானம் ஏற்படுகிறது. தொடர்ந்து நிகழ்ந்த சந்திப்புகள் அவளிடம்
வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிறைய காதலர்கள் நிறைய காதலிகளிடம் செய்த
சத்தியங்கள் வெடித்த பஞ்சுபோலக் காற்றில் பறப்பதையும் உதிர்த்த மதுமயக்கம் நனைந்த வார்த்தைகள்
நீரில் மிதந்து செல்வதையும் காதல் செய்த பெண் திடுக்கிடலோடு பார்க்க நேர்கிறது. ‘பொய்யும்
வழுவும் புகுந்த காலம்’ என்று இலக் கணக்காரர்கள் இக்காலத்தையே சொல்கிறார்கள். மேலும்
பெண்ணின் காதல் உறவு மற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் ‘அலர்’ தூற்றப்படுகிறது. சங்க இலக்கியம்
இந்த மற்றவர் வாழ்க்கையை மகிழ்ந்து புறம் பேசுகிற வழக்கத்தை ‘அம்பல்’ என்றும் ‘அலர்’ என்றும்
குறிப்பிடுகிறது.
குறிப்பாகப் பெண்கள் அந்தரங்கம் பற்றிப் பிறர் பேசும் வழக்கத்துக்கு 2500 ஆண்டு வயது
என்பதிலும் தமிழர் பெருமைப்படலாம். இப்படிப் பேசப்படும் அவர் பேச்சுக்கு மனம்
நைந்துபோகிறாள் தலைவி. திருமணத்தை நோக்கிய அவளது நகர்வுக்கு ‘அலர்’ முக்கியக்
காரணமாகிறது. புணர்ச்சி காரணமாகவும் கவலை காரணமாகவும் (தான் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ
என்கிற கவலை) உடல் இளைக்கிறது. உடம்பில் பசலை படர்கிறது. தாய் இதைக் கவனிக்கிறாள்.
பெண்ணுக்கு முருகு அல்லது அணங்கு போல ஏதோ காத்துகருப்பு தோஷம் என்று எண்ணி வேலனை
(பூசாரியை) அழைத்துப் பூசை போட்டுக் (வெறியாட்டு) குறி கேட்கிறாள். தாய்மார்களுக்குத்
தம் பெண்கள் காதலிக்கவும் காதலிக்கப்படவும்கூடும் என்கிற நம்பிக்கையே வருவதில்லை.
தாய்மார்களுக்குத் தம் பெண்கள் என்றும் குழந்தைகள். கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புரிபடுகிறது,
தாய்மார்களுக்கும். தாய்மார்கள் சிலர் பெண்களைக் கோல் கொண்டு அடித்ததாகச் சங்கப் பாடல்கள்
உண்டு. காதலனுக்குத் தன் உடம்பில் சுதந்திரம் கொடுத்த பெண்ணுக்குப் பல சந்தர்ப்பங்களில் அவன்
முகவரிகூடத் தெரிவதில்லை. அதோ அந்த மலைக்கு அந்தப் பக்கம் என்று பொத்தாம்பொதுவாக அவன்
சொல்வதை அவள் கேட்டு அமைதி அடைந்திருக்கிறாள். ‘அவனை நான் விட்டுவிடுவேனா என்ன, ஊர்,
நாடு எங்கும் போய் வீடு வீடாகத் தேடி அவனைக் கண்டுபிடித்து விடமாட்டேனா?’ என்கிறார்
சங்கப் பெண்மணி ஒருவர். ‘அடக் கஷ்டகாலமே. என்னை அறிந்த அவன், நாளை உன்னை எனக்குத்
தெரியாதே என்றால் என்ன செய்வது? எங்கள் உறவை அறிந்தவர்கள் யாரும் இல்லையே. ஆங். . நாங்கள்
உரையாடிக் களித்த அந்தக் குளத்தருகே ஒரு நாரை நின்று கொண்டிருந்தது’ என்று
பேதைத்தனமாக நினைக்கும் தலைவியையும் சங்கப் பாட்டில் காண முடிகிறது.
பெண்ணின் காதல் விவகாரம் தாய்க்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ ஆரம்பிக்கிறது. தேரில் (இன்று
காரில்) வந்த இளைஞன் ஒருவன் ஊர்ப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த சிலர் சொல்கிறார்கள்.
வீட்டுக்கு எதிரே தெருவில் ஒருவன் நின்றதாகப் பார்த்தவர்கள் வந்து சொல்கிறார்கள்.
குளிக்கப்போன இடத்தில் தலைவி அருவியில் வழுக்கிவிழ, எங்கிருந்தோ வந்த இளைஞன் ஒருவன்
அவளைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றியதையும் தோழிகள் தாய்க்குச் சொல்கிறார்கள். ‘அடடா, அவள்
கூந்தல் மாறுபட்டும் முலை முகம் மாறுபட்டும் வளர்ந்தும் இருந்ததைப் பார்த்துச் சந்தேகித்த
அன்றைக்கே அவளை வீட்டுக்குள் (இற்செரிப்பு) அடைத்துவைக்காமல் போனேனே’ என்று வருந்துவார்
தாய். வீட்டுச் சூழல் மாறி அனலடிப்பதையும் தாயின் கண்களில் சினம் வழிவதையும் காண நேர்ந்த
தலைவி தலைவனுடன் உடன்போக்கில் (இன்றைய தமிழ் - ஓடிப்போதல்) அவன் ஊருக்குச் செல்கிறாள்.
காதலின் ஆழத்தை அறிந்த பெற்றோர் அவளையும் அவனையும் அழைத்து வந்து திருமணத்துக்கு
ஏற்பாடு செய்கிறார்கள்.
o
தமிழ்ப் பண்பாட்டின், சங்கத் தமிழர் வாழ்க்கை முறையில் மிக முக்கியமானதாக அறிஞர் உலகம்
கருதிவரும் தமிழர் தம் ‘களவு’ வாழ்க்கையை அது திருமணத்தில் முடிவுற்றமையை மிகச்
சுருக்கமாகக் கண்டோம். பெற்றோர் அறியாமல் பெண்ணும் ஆணும் ‘ஊழ்’ வலிமையது காரணமாக
எதிர்ப்பட்டுக் காதலாகிக் கரந்து புணரும் வாழ்க்கை நெறியே களவு ஆகும். பத்துப்பாட்டில்
ஒன்றாகிய, கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டை, ‘ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ்
அறிவித்தற்குக் கபிலர் பாடியது’ என்று பின்வந்தோர் பரவலாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
இயற்கைப் புணர்ச்சியையும் அது பற்றிய செய்திகளையும் தோழி அன்னைக்குச் சொல்லிக் காதலர்களின்
களவு வாழ்க்கையை வெளிப்படுத்தும் பாட்டாகும் இது. இதைத் ‘தமிழ் அறிவித்தல்’ என்றே
குறிப்பிட்டார்கள் என்றால், தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாகக் களவு வாழ்க்கை
முறையைக்கொண்டிருந்தார்கள் என்பது விளங்கும். என்றாலும் இது குறித்து மேலும்
விளங்கிக்கொள்ளச் சில புரிதல்களுக்கு நாம் வருதல் வேண்டும்.
1. சங்க இலக்கியங்களாகிய பாட்டும் தொகையும் (ஆக மொத்தம் 18 நூல்கள்) காதலை மிகுத்தும்
மேல் வழியும் புளகாங்கிதத்தோடும் பாடினாலும் அக்காலச் சமூகம் காதலை முற்றும்
ஏற்றுக்கொண்டதாகக் கருதுவதற்கில்லை.
2. இற்செரிப்பு எனும் பெண்ணை வீட்டுக்குள் அடைத்துவைத்துத் துன்பம் தருகிற துறை, அன்றைச்
சமூகத்தில் நிலவிய வழக்கத்தையே சொல்கிறது எனில், பெற்றோர் பார்த்துவைக்கும் ஒருவனைத்
திருமணம் செய்துகொள்ளும் முறையே நீடித்துக்கொண்டிருக்கும் சமூக நிலையாகச் சங்கச் சமூகம்
இருக்க வேண்டும்.
3. களவுச் செய்தியை அறிந்த தாய்மார்கள் தம் பெண்களைக் கோல்களால் அடித்திருக்கிறார்கள். இது
காதலுக்கு அவர் காட்டிய முகம்.
4. அலருக்கும் அம்பலுக்கும் பெண்கள் இவ்வளவு அச்சம்கொள்ள வேண்டி இருப்பது சமூகத்துக்குப்
பயந்தல்ல. மாறாகத் தம் பெற்றோர்க்கும் சகோதரர்களுக்கும் இது தெரிந்துவிடக் கூடாது
என்பதற்காகத் தான் என்றும் கருதலாம்.
5. உடன்போக்கு எனும் காதலர் வெளியேறுதல் திருமணம் நடக்கத் தடைவரும் என்று நிச்சயமான
நிலையில்தான் நிகழ்ந்திருக்கிறது.
மாறிவரும் சமூகச் சூழலையே சங்கக் கவிதைகள் சித்தரிக்கின்றன எனத் தோன்றுகிறது. ஒரு
கட்டத்தில் சங்க காலத்துக்கும் முன்னால் பெண்களை, இள மகளிரைப் பிறர் கவர்ந்து செல்லாமல்
பாதுகாக்க அவளுடைய இடுப்பில் கயிற்றைக் கட்டி மறுபுறக் கயிற்றைத் தங்கள் கையில் வைத்துக்
காத்திருக்கிறார்கள் தாயார்கள். இரவு நேரத்தில் அவர்கள் கால்களில் கயிறு கட்டிக்
காத்திருக்கிறார்கள். நாகரிகம் முதிர்ந்த காலத்தில் இடுப்புக் கயிறு மேகலை (ஒட்டியாணம்)
ஆகவும் கால் கயிறு சிலம்பாகவும் மாறியது. பெண்ணுக்குத் திருமணம் முடிந்த பிறகு
பெண்ணின் கால் சிலம்புகளைக் கழற்றும் சடங்கு ஒன்று இருந்துள்ளது. அதற்குச் சிலம்புக் கழி
நோன்பு என்று பெயர்3 என்று கூறுகிற பாலசுந்தரம் அவர்களின் கூற்றால் பழங்காலம் என்கிற
காலத்திலிருந்து சங்க காலம் எனப்பட்ட காலத்துக்கும் முந்தைய, சம காலத்திய தமிழர் எண்ணங்கள்
சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன என்று யூகிக்கலாம்.
பேராசிரியர் மாதையன் ஒரு குறிப்பை நல்குகிறார். குறுந்தொகையில் இரண்டு பாடல்களை அவர்
எடுத்துக் காட்டுகிறார். அவற்றின் (136, 205) சாரம் இது.
‘காமம் காமம் என்று உலகத்தார் சிலர் அதை இழித்துப் பேசுகிறார்கள். அது அச்சமூட்டும் பேய்,
பிசாசு அல்ல. நோயும் இல்லை. அதி மதுரத் தழையைத் தின்ற யானைக்கு மதம் சிறிது
சிறிதாகக் கூடுவதுபோல, மனம் விரும்புகிறவரைக் கண்டு அடைந்த பிறகு மனிதர்க்கு ஏற்படும்
(மதம்போல) பரவச நீட்சியாகும் காமம்.
காமம் காமம் என்று அதனை அறியாதவர்கள் இகழ்ந்து பேசுகிறார்கள். காமம் அணங்கு (வருத்தும்
சக்திகள்) இல்லை. நோயும் இல்லை. மேட்டு நிலத்து முளைத்த பசும் புல்லை ஏறிக் கடித்து
(மென்று) சாப்பிட முடியாத முதிய பசு, புல்லைத் தன் நாவால் நக்கி இன்பம் அடைவதுபோல்
காமம் அது கொண்டவர் ஆர்வத்தின் அளவுக்கு இன்பம் பயப்பதாக இருக்கும். அது விருந்தே ஆகும்.’
இந்த இரு குறுந்தொகைப் பாடல்களும் முக்கியமானவை. காமம் குறித்து அதாவது சமூகத்தில்
பெருகிவரும் காதல் - காதல் திருமணம் குறித்து எதிர்மறையாக விமர்சித்தவர்கள்
இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பதில் சொல்வதே இப்பாடல்கள். தவிரவும் ‘விருந்து’ என்ற
சொல், ‘புதியது’ என்று பொருள் தந்து சமூகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிற புதிய (பெண்
ஆண் காதல் கொள்வது, பிறகு திருமணம் செய்துகொள்வது) பழக்கத்தையும் புதிய சமூக நடைமுறை
ஒன்று உருவாகிவருவதையும் உணர்த்துவதாக இருக்கிறது என்பதாக மாதையன் கருதுகிறார்.
இது மேலும் ஆராயப்பட வேண்டிய கருத்து என்றாலும் ஏற்றுச் சிந்திக்கத் தக்கதாகவே
இருக்கிறது. மனித சமூகம் அதன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டே வந்துள்ளது. மாற்றம்
ஒன்றுதான் மாறாதது என்பதை நாம் அறிவோம். அப்படி மாறிக்கொண்டே வந்த சமூகச் சூழ்நிலையில்
ஒரு கட்டத்தில் புதிதாக வந்தது காதல். ஒரு காலத்தில் பாலுறவு அக்கணத்து மனம் விருப்பம்
தேவை சார்ந்ததாக, உறவுமுறைகள் ஏதும் அற்றதாக, வரையறையற்ற புணர்ச்சிச் சுதந்திரமாக
இருந்துள்ளது. புணர்ச்சிச் சுதந்திரம் சுருங்கிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் ஒருவன்
ஒருத்தி என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்த ஒருவன் ஒருத்தி கருதுகோள் அப்போது புதிதாக
அமைந்துகொண்டு வந்த அரசுகளுக்கும் அதிகாரப் பிரயோகத்துக்கும் வசதியாக இருந்தது.
குடும்பங்கள், ஒரு சின்ன அளவு அரசாங்கம். அரசாங்கத்தில் அரசன் முதன்மை என்றால், ஆண்
ஆதிக்கக் குடும்பத்தில் கணவன் அதிகாரி. அரசனுக்கு ஆளப்படுபவர் மக்கள் என்றால் கணவன்
ஆட்சிக்கு உட்பட்டவர் மனைவி. அரசனுக்குட்பட்ட அதிகாரிகள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களை
ஒடுக் குவதுபோல, தந்தைக்கும் தாய்க்கும் ஒடுக்குவதற்கு ஏற்றபடியாகப் பிள்ளைகள். தனிச்
சொத்துரிமை வழக்கத்துக்கு வந்ததும் கற்பு என்கிற ஆண் இன்பக் களவுகளும் உருவெடுக்கின்றன.
மன்னனின் அந்தப் புரங்கள், மனைவிகள், விருப்பப் பெண்கள், போரில் கொண்டுவந்த மகளிர்கள் என்று
நிரம்பி வழிகிறது என்றால், குடும்பத் தந்தைக்கு அல்லது தலைவனுக்குப் பரத்தைகள். (ஒரு
நல்ல விஷயம்: பரத்தைக்கு ஆண்பாலாகப் ‘பரத்தன்’ என்ற சொல்லும் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.)
தலைவனின் சொத்து அவன் வாரிசுகளுக்கே சென்று சேர்வதை ஒருவன் ஒருத்தி திருமணம்
உறுதிப்படுத்தியது. பெண் தன் சுதந்திரத்தை உறுதிபட இழக்கிறாள் என்பதையும் அத்திருமண
முறை உறுதிப்படுத்தியது.
o
சங்கத் திருமணங்கள் மிக எளிமையாகக் குறிப்பாகப் பிராமணச் சடங்குகள் இன்றி
நடைபெற்றிருக்கிறது. அகநானூற்றில் இரண்டு திருமண விவரங்கள் பேசப்படுகின்றன.
காலையிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தோடுகூடிய
நாளையே திருமணத்துக்கு நல்ல பொழுதாகத் தமிழர்கள் நம்பியிருக்கிறார்கள். நிறைய கால்களை
நட்டுப் பெரிய பந்தல் போட்டு, மலர் மாலைகள் தொங்கவிட்டுத் தரையில் புதுமணல் பரப்பி
இருக்கிறார்கள். ஒரு பக்கம் உளுந்தம் பருப்பு கூட்டிச் செய்த பொங்கலும் சோறும் விருந்தாகப்
பரிமாறப்பட்டுள்ளது. மங்கள மகளிர் தலையில் நீர்க் குடத்தினை எடுத்துவந்து வைக்கிறார்கள்.
மகன்கள் பெற்ற நான்கு மகளிர் கூடிநின்று, ‘கற்பினின்று வழுவாது உன்னைக் கொண்ட கணவனைப்
பேணிக் காப்பாற்றுவாயாக’ என்று வாழ்த்தி, பூக்கள் மிதக்கும் நீரை அப்பெண்ணின் மேல் தெளிக்
கிறார்கள். சுற்றத்தார்கள் வந்து, பெரும் மனைக் கிழத்தி ஆவாயாக’ என்று வாழ்த்துகிறார்கள்.
அன்றே முதல்(?) இரவு நடைபெறுகிறது.
இன்னொரு வசதியான வீட்டுத் திருமணம் இது. நெய்மிக்க வெண்மையான சோற்றினை இறைச்சியுடன்
சேர்த்து ஆக்கி எல்லோரையும் உண்பித்தார்கள். புள் (பறவை) நிமித்தம் பார்த்தார்கள்.
வளர்சந்திரன் ரோகிணியோடு கூடிய நாளில், மண இடத்தை அழகுபடுத்தினர். கடவுள் வழிபாடு
நடந்தது. மண வாத்தியம், முரசுகள் முழங்கின. மங்கள மகளிர் மணப் பெண்ணை நீராட்டினர்.
மணமகனுக்கு வெள்ளை நூலால் காட்டி நூலை (பேய் பிசாசுகளிடம் இருந்து காக்கும் நூல்)
அணிவித்துப் புதுப் புடவையால் சுற்றினார்கள். அணிகலன்கள் பூட்டினார்கள். பெண்ணுக்கு
வியர்வை தோன்றியது. அதைத் துடைத்துவிட்டார்கள். அன்றே முதல் இரவு நடந்தது.
சங்கத் தமிழர் திருமணம் இவ்வளவுதான். ‘மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டும் காலம் வரவில்லை
. . . ஆனால் கோவலன் கண்ணகி திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டவும் பிராமணச்
சடங்கோடும்தான் நடந்தது. சங்க காலத்துக்குப் பிறகு சுமார் 200 ஆண்டுகளாவது பிராமண
சாட்சியாகத் திருமணம் செய்துகொள்ளக் கோவலன் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் வைணவப்
பிராமணக் கொழுந்தும் மாபெரும் கவியுமான ஆண்டாள் கண்ட திருமணக் கனவு சமூக வளர்சிதை
மாற்றத்தை உணர்த்தும்.
வில்லிபுத்தூர் நகரத்தில் ஊர் முழுக்கத் தோரணங்கள் கட்டப்பட்டுப் பூரண கும்பங்கள்
வைக்கப்பட்டுள்ளன. நாளை வதுவை மணம் என்றுதான் குறிப்பிடப்பட்டு விட்டது. பாளையும்
கமுகும் மற்றும் முத்துச் சரங்களும் தொங்கவிடப்பட்ட பந்தலில் அவர் அமர்ந்திருக்கிறார்.
இந்திரன் முதலான தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து நாரணன் நம்பி சார்பாக மணம்
பேசுகிறார்கள். மந்திரிக்கிறார்கள். நால்திசைகளில் இருந்தும் புனித நீர்க் குடங்கள்
வருகின்றன. பார்ப்பன சிஷ்டர்கள் அவனுக்குக் காட்டிக் கட்டுகிறார்கள். மத்தளம் கொட்ட வரி
சங்கம் நின்றூத, முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ், மதுசூதனன் வந்து அவளைக்
கைப்பற்றுகிறான். வாய் நல்ல பிராமணர்கள் மறை ஓதுகிறார்கள். ‘நாங்கள்’ தீவலம் செய்கிறோம்.
நம்பி என் காலை எடுத்து அம்மிமேல் வைக்கிறான். என் கையையும் நாராயணன் கையையும் என் தாய்
மற்றும் சுற்றத்தார் இணைத்துவைக்கிறார்கள் . . .
ஆண்டாள் தன் சாதிக்குரிய சடங்குகளோடு கூடிய திருமணத்தைப் பார்த்து இருக்கக்கூடும்.
அப்படியே கனவும் காண்கிறாள். சில கற்பிதங்கள் இருந்தாலும் அவள் விரும்பிய திருமணம் இது.
o
தமிழர் திருமணத்தில் தாலியும் தீவலம் வருதலும் இல்லை என்பதையும் முக்கியமாகப் பார்ப்பனப்
புரோகிதர் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே உறங்கி எழுந்ததும்
தலைவிமார்கள் தங்கள் தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார்கள்.
தாலியின் மகிமையைப் பற்றியும் பேசிமாயும் நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை.
காதல் வாழ்க்கை களவு என்றதுபோல் திருமண வாழ்க்கை கற்பு எனப்பட்டது. தொடக்கத்தில் கற்பு
என்பதன் பொருள் தாயும் தந்தையும் கற்பித்தபடி நடத்தல் என்றுதான் இருந்தது. ஒருதாரக்
குடும்ப அமைப்பு இறுகியபோது, ஆண் தலைமைத்துவம் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது,
கற்பு என்பதன் பொருள் கணவனுடன் மட்டும் உடல் உறவு கொள்ளுதல் என்று ஆனது. பெண்ணின்
பெருந்தகைமையை அவளது உடலுக்குள் பிரவேசித்த அதிகாரபூர்வமான கணவனின் உறுப்பு மட்டுமே
தீர்மானித்தது. பெண் என்கிற மனுஷியின் மனமோ விருப்பமோ தேர்வோ தமிழ் இலக்கியப் பெரும்
பரப்பில் எப்போதும் உரையாடலுக்குட்படுத்தப்படவில்லை.
திருமணத்துக்குப் பிந்தைய தலைவிகள் தங்கள் கணவர்கள்மேல் காட்ட வேண்டும் என்று எதிர்
பார்க்கப்பட்ட விசுவாசத்தில் வெகுகுறைவான சதமானமே கணவர்மார்களால் தங்கள் தலைவிகள் மேல்
காட்டப்பட்டது என்பதற்கே நிறைய உதாரணங்கள் கிடைக்கின்றன. களவுக் காலத்தில் காதலன் தன்னைப்
புறக்கணித்துவிடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்பட்ட பெண் கற்புக் காலத்தில் கணவன்
தன்னைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந்து விடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்படுவது
தான் நம் சங்கப் பெண்களின் பேரவலம். குறுநில மன்னனும் பெரும் வள்ளலுமான பேகன், மனைவி
கண்ணகி என்பவளைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந் தான். இதைக் கண்டிக்கும் (மிக மிக
மென்மையாக) முகமாகக் கபிலர், பரணர், பெருங்குன்றூர் கிழார், அரிசில் கிழார் என்று
அக்காலத்திய பெரும்புலவர்கள் பஞ்சாயத்து பண்ணிப் பேகனைக் கண்ணகியிடம் கொண்டு
சேர்க்கிறார்கள். பரத்தையர் பிரிவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்காகவே சமூகத்தில்
இருந்துள்ளது. அறிவாளர்களாகிய புலவர்கள் தலைவியர்கள் பால் கரிசனம் கொண்டார்களே தவிர,
பரத்தையரின் அவலத்தைப் பாடவில்லை என்பது கருதத்தக்க ஒன்று. இன்னொன்றையும் கூடவே சொல்ல
வேண்டும். இன்னல்களுக்குரிய வாழ்க்கையைக் கொண்டவர்களேனும் பரத்தையர், தலைவிகளைக் காட்டிலும்
கூடுதலான சுதந்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
கற்பு வேடம் பூண்ட பெண்டிர் சற்றேறக்குறைய தெய்வங்களாகவே புனையப்பட்டுள்ளார்கள். தாய்
வீட்டில் தேனும் பாலும் பருகி வளர்ந்த பெண், கணவன் வீடு வறுமையுற்றதால், மான் கலக்கிய
கலங்கல் நீரைக் குடித்துப் பசியை ஆற்றுகிறாள் என்கிறது ஒரு சங்கக் கவிதை. அடுப்புப்
புகையால் கண் சிவந்து, நீர் சொரிந்தாலும் தான் சமைத்த உணவைக் கணவன் மிக விரும்பிச்
சாப்பிடுவதைக் கண்டு பேருவகை அடைகிறாள் ஒரு கற்புக்கரசி. கணவன் பரத்தையர் வீடு சென்று
திரும்பிவந்தால் மனைவி கோபப்படக் கூடாது, ஊடல் கொள்ளலாம். அதற்கு மேல் தம் கோபத்தை
வெளியிடப் பெண்களுக்கு அனுமதி இல்லை. போர் காரணமாகவோ கல்வி மற்றும் பொருள் சேர்க்கவோ
கணவன் 12 மாதங்கள்வரை பிரியலாம். மனைவிகளுக்கு இந்த மூன்று உரிமைகள் இல்லை. மனைவி
வீட்டுக்கு விலக்காக (கலம் தொடா மகளிர் என்று பெயர் இவர்களுக்கு) இருக்கும்போது, கணவன்
பரத்தையரிடம் போகலாம். ஆனால் மனைவி குளித்து முழுகித் தயாராகிக் கணவன் என்னும்
தெய்வத்தை வரவேற்கத் தயார் ஆக வேண்டும். வெறும் டி.எம்.டி. கம்பிகளுக்கு இருக்கிற
மரியாதைகூடப் பெண்களுக்கு அக்காலத்திலும் இல்லை. எக்காலத்திலும் இல்லை.
ஆண் குழந்தை பெறும்போது பெண்ணுக்குக் குடும்பத்தில் ஓரளவு கவனிப்பு கிடைக்கிறது. ஆண்
குழந்தை பெற்றவரே மங்கள மடந்தையர். மற்றவர்கள் அமங்களர்கள்.
கணவனை இழந்த பெண்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு
பாடல் - புறம் 146.
“சான்றோர்களே! உன் கணவன் இறந்துவிட்டான். நீ அவனது சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறு
என்று சொல்லாமல் என்னைத் தடுக்கின்ற சான்றோர்களே! நான் என் கணவனுடன் எரிந்து போகவே
விரும்புகிறேன். வெள்ளரிக்காய் விதையைப் போல, விரைத்த, தண்ணீர் பிழிந்த சோற்றைக் கீரைக்
குழம்போடு, எள் துவையலுடன், சமைத்த வேளைக் கீரையைத் தின்று கொண்டு பாய்கூட இல்லாமல்
பருக்கைக் கல் மேல் படுத்துக் கைம்மை நோன்பு இயற்றி வருந்தும் பெண்களைப் போல நான் இல்லை.
என் கணவனை எரிக்கத் தயாராகும் இந்தத் தீ, எனக்குத் தாமரைப் பொய்கையைப் போன்றது. . .
என்னைச் சாகவிடுங்கள். . .”
கைம்மை நோன்புக்கு அஞ்சி உயிரையே கொடுக்கச் சித்தமான இந்தப் பெண் சராசரிப் பெண் அல்ல.
மன்னன் பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு! மன்னனின் மனைவிக்கே கைம்மை நோன்பு
இத்தனை கொடுமை தரும் எனில் பிறபெண்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்?
o
1. பல்வேறு மணங்களைக் கால வளர்ச்சியில் கண்ட தமிழ்ச் சமூகம் ஒருதார மண நிலையை எய்தியது
சங்க காலத்துக்குச் சற்று முன்னர்தான். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் காதலிக்கும் சுதந்திரத்தை
ஓரளவாவது பெற்றார்கள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காதல் திருமணத்தை விரும்பவில்லை.
2. சங்க இலக்கியக் கதாபாத்திரங்கள்- தலைவர், தலைவி இருவரும் உயர்குடும்பத்தினர்.
உழைக்கும் வர்க்கத்தினர் இழிசனர்கள் என்றும் புலையர்கள் என்றும் வினைவளர்கள் என்றும் அடியோர்கள்
என்றும் இழிக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் பற்றிப் பாடினால் குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை என்ற உயர்காதல் ஒழுக்கத்தை வைத்துப் பாடும் ஐந்திணைகளில் பாடாமல்
கைக்கிளை, பெருந்திணை போன்றவற்றில் வைத்துப் பாடலாம். அந்த இழிசனர்களுக்குக் காதலின்
நுணுக்கம் தெரியாது. அதோடு காதலை முழுமையாக எடுத்துச் சென்று பயிலத் தகுதி
இல்லாதவர்கள் அவர்கள் என்கிறது, திட்டவட்டமாக இலக்கணம்.
3. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்பதே தமிழ் இலக்கணம்.
4. வைதீக இந்து மதத்தின் வருணாஸ்ரமக் கருத்துகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் அதிகம்
கலக்காத, மிகவும் அரிதாகக் கலந்த இலக்கியமே சங்க இலக்கியம். அந்த வகையில் அது
ஆரோக்கியமானது.
5. சமண சித்தாந்தங்களும் பௌத்தக் கருத்தாடல்களும் விரவிவருகிற காரணத்தால், சங்க இலக்கியம்
உயர்தன்மையைப் பெற்றுள்ளது.
6. சங்க இலக்கியம் சுமார் 500 ஆண்டுக் காலப் படிநிலை வளர்ச்சியைப் பெற்றது. மக்கள் சார்
சிந்தனையும் மன்னர் சார் சிந்தனையும் விரவிவருகிற இலக்கியமாகவும் இருப்பதற்கு அதுவே காரணம்.
7. 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டின் சில பகுதிகள் குறித்த
சங்க இலக்கியம் இப்படியாக நமக்குச் சில தெளிவுகளைத் தருகிறது.
o
1. தமிழர் பண்பாடு, வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், பதிப்பு 1949, பக். 51, 55.
2. சங்க இலக்கியத்தில் குடும்பம், என்.சி.பி.எச். பதிப்பு 2010.
3. தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகை உரை, பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம்,
பதிப்பு 1989.
உள்ளடக்கம்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 31, 2015, 6:43:35 AM5/31/15
to brail...@googlegroups.com
தமிழர் பண்பாடு
இறப்பில் உயிர்க்கும் பண்பாடு
பழ. அதியமான்
நேற்றைய வெயிலுக்கு / ஆலமர நிழலில் / கதை பேசிக் கிடந்த செங்கோடம் பாளையத்து கவுண்டர்
விஷம் குடித்து செத்தார்.
என்று கடைசி இரண்டு வரிகளையும் இன்னும் பல வரிகளையும் கொண்ட ஒரு கவிதை நிகழில்
1994இல் வெளிவந்தது. அதை யதேச்சையாய்ப் படிக்க நேர்ந்த மேற்படி கவுண்டரின் மகன்,
கவிதையின் மற்ற வரிகளையோ பொருளையோ பற்றி எதுவும் சொல்லாமல். . . ‘செத்தார்’ என்பதை
இறைவனடி சேர்ந்தார் என்று எழுதியிருக் கலாமே என்று கவிஞரிடம் வருத்தப்பட்டாராம். தந்தை
செத்துப்போனதைவிட அவர் இறைவனடியில் சேராமல் போனதுதான் மகனுக்குக் கவலை
அளித்திருக்கிறது என்றார் கவிஞர் தேவிபாரதி.
டால்ஸ்டாய் மாஸ்கோவில் மரணம் அடைந்தார் என்ற வரியில் மரணத்தை அடித்துவிட்டு காலமானார்
என்று செம்மையாக்கம் செய்தவரின் பேனா அவரை அறியாமல் திருத்தி மேல் செல்கிறது. மரணம்
கொடூரமான த்வனியைத் தருவதாகப் பிழை திருத்துநருக்குத் தோன்றிவிட்டது. அதேபோல்தான்,
செத்தார் என்பதும் மரியாதைக்குறைவான பதிவாக அந்த மகனுக்குத் தோன்றியிருக்கிறது.
‘திரிமலம் செற்றார்’ (திருமந்திரம், 1907) என்ற தொடரை ஆணவம், கன்மம், மாயை ஆகிய
மும்மலங்களை அழித்தார் என்று விளக்குகிறார் உரையாசிரியர் வரதராஜன். செற்றார் என்பதன்
பிந்தைய வடிவமே செத்தார் என்பதாக இருக்கலாம்.
இறைவனடி சேர்வதிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. சிவலோக பதவியைச் சைவர்களும் வைகுண்ட
பதவியை வைணவர்களும் அடைகிறார்கள். இறந்தார், மறைந்தார் எனக் குறிப்போர் மத அடையாளங்களைத்
தவிர்க்க நினைப்போர். பிறப்பின் முடிவு நிலை இறப்பு என்பது இறந்தார் என்போரின் கருத்து.
பூவுலகில் தோற்றம் காட்டியவர் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை என்பது மறைந்தார் என்று
சொல்பவர்களின் எண்ணம்.
1925 ஜூன் 3ஆம் தேதி பாபநாசம் அருவியில் தவறி வீழ்ந்து இறந்துபோன வ. வே. சு. ஐயரின்
மரணச் செய்தி ‘வ. வே. சு. ஐயர் தேக வியோகமானார்’ என்று சுதேசமித்திரனில் (6 ஜூன்
1925) வெளியாகியிருந்தது. தேகத்தைத் துறந்தார் வ. வே. சு. ஐயர் என்பது அவ்வரி
வெளிப்படுத்தும் கருத்து. வியோகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்குப் பிரிதல், விடுதல்
என்று பொருள்.
முக்தி அடைந்தார், சமாதி ஆனார் (ஜல சமாதி, ஜீவ சமாதி என இதிலும் பல வகை), சித்தி
அடைந்தார் எனச் சமயப் பெரியவர்களின் இறப்பைக் குறிக்கிறார்கள். வள்ளலார் மறைவைச் ‘சித்தி’
எனச் சிலர் குறிப்பிட, அவர் மறைவு சித்தியா மரணமா என்று ஒரு நூல் எழுதி அதை
விவாதத்துக்குள்ளாக்கினார் நீதிபதி பலராமையா.
“சிவஞான முனிவர் சாலிவாகன சகாப்தம் 1708இல் (கி.பி. 1785) இறைவன் மலரடி சேர்ந்தார்
என்று நம்பப்படுகிறது” என்று சைவப் பெரும் புலவரின் மறைவைக் குறிக்கும் அ. தாமோதரன்
(ப.39, நன்னூல் மூலமும் விருத்தியுரையும்), “கூழங்கைத் தம்பிரான் 1795 வாக்கில் ‘உயிர்
நீத்தார்’ ” என்று (ப.37, அதே நூல்) இன்னொரு புலவரின் இறப்பைப் பதிவு செய்கிறார்.
இறக்கும்போது கூழங்கைத் தம்பிரான் சைவராக இல்லை என்பதால் மலரடி அவருக்குக் கிடைக்கவில்லை
போலும். உயிர் நீத்தார், உயிர் துறந்தார் போலவே உயிர் பிரிந்தது, ஆவி பிரிந்தது
என்பனவும் பயன்பாட்டில் உண்டு.
‘கற்பனைக்கு அடங்காத அநியாயம்’ என்று வ.ரா.வால் விவரிக்கப்பட்ட புதுமைப்பித்தனின்
இறப்பை, மஞ்சேரி எஸ். ஈச்வரன் புதுமைப்பித்தன் சிவ சாயு ஜ்யம் அடைந்தார் என்று (மென்மையும்
மேன்மையும் ஏற்றி) சக்தி இதழில் எழுதிய இரங்கலுரையில் குறிப்பிட்டார். இறைவனது
உலகத்தில் இருத்தல் ‘சாலோகம்’, அவனது அருகில் உறைதல் ‘சாமீபம்’ (அண்மையில் என்ற பொருளில்
சமீபம் என்று இப்போது வழக்கில் வந்துவிட்டது), அவனது உருவத்தைப் பெறுதல் ‘சாரூபம்’,
அவனோடு இரண்டறக் கலந்துவிடுதல் ‘சாயுஜ்யம்’. சைவப் பிள்ளைமாரான புதுமைப் பித்தனைச்
சிவனோடு கலக்கச் செய்து மகிழ்ந்தார் மஞ்சேரியிலிருந்து வந்த ஈச்வரன். இறைவனை அடையும்
மனித முயற்சியின் வெற்றி நிலைகளை இவ்விதம் விளக்கும் பாடலைத் திருமந்திரத்தில் (1509)
நீங்கள் படித்துக்கொள்ள முடியும். (முதல் மூன்றும் பதமுக்தி, சாயுஜ்யம் பரமுக்தி).
தெலுங்கில் பெரு வழக்காய் இருக்கும் சிவசாயுஜ்யம் தமிழில் பரவலாக இல்லை. லிங்க
ஐக்கியமாயினாரு, பரம (பதம் போந்தாரு) பதிஞ்சாரு போன்ற பிரயோகங்களும் தெலுங்கில் மிகுதி.
‘சபரிமலை விபத்தில் 64 பேர் பலி’ என்பது அண்மைப் பத்திரிகைச் செய்தி. விபத்துகளில்
இறப்போரைக் குறிப்பிடவும் நிவேதனமாகவோ வேறு காரணங்களுக்காகவோ திட்டமிட்டுச்
செய்யப்படும் கொலைகளைக் குறிப்பிடவும் ‘பலி’ பயன்படுத்தப்படுகிறது. மாண்டார் என்ற
சொல்லாட்சியும் ஏறக்குறைய இதே சூழலில் பயன்பாட்டில் இருக்கிறது. தமிழ்ப் புலவன் ஒருவன்
தன் நரையின்மைக்குச் சொன்ன காரணங்களுள் ஒன்று ‘மாண்ட மனைவி’. இத்தொடரில் வரும் மாட்சிமை
கொண்ட எனப் பொருள்படும் மாண்ட என்னும் சொல்லை இறந்த என்று தவறாகவே புரிந்துகொள்ளுமளவு
அச்சொல் புழக்கத்தில் பெருத்துவிட்டது.
‘100 வீரர்கள் போரில் மடிந்த பிறகும் தலைமைக்குப் புத்திவரவில்லை’ என்ற தொடரில்
இடம்பெறும் மடிதலும் மரணத்தையே குறிக்கிறது. துணியை மடித்துவை, தாளை இரண்டாக மடி
என்று நாம் சொல்கிறோம். நிலை மாறுதல் என்ற பொருளில் மடி, மடிதல் என்ற சொற்கள்
பயன்பாட்டில் இருக்கின்றன. புதுச்சேரியில் நடந்த ஒரு சம்பவம். மேடும் பள்ளமுமான ஒரு
சிறு வழியை இரண்டு பேருந்துகள் கடக்க நேர்ந்த வேளையில், மேடு பள்ளம் மிகுதியான
பகுதியில் சென்ற பேருந்தின் ஓட்டுநர், ‘நான் இனியும் போக முடியாது போனால் பேருந்து
மடியும், நீ கொஞ்சம் ஓரமாகப்போ’ என்று இன்னொரு ஓட்டுநரைப் பார்த்துச் சொன்னார். இங்கே
மடியும் என்ற சொல் பக்கவாட்டில் சாயும் அதாவது நிலை மாறும் என்ற பொருளில் கையாளப்பட்டதை
அன்று (8 பிப்ரவரி 2009) நான் உணர்ந்தேன். நின்ற உடலின் நிலை மாற்றமான மரணத்தை
மடிந்தார் என்ற சொல் குறிக்கிறது எனக் கருதலாமா? நின்றவர் கிடந்தொழிந்தாரோ!
வயதான மனித ஜீவனின் இயற்கையான இறப்பைக் குறிக்கப் பத்திரிகைகள் முன்பு பயன்படுத்தி வந்த
சொல் காலகதி. ‘மாஜி ஜில்லா ஜட்ஜ் திவான் பகதூர் டி. வரதராஜிலு நாயுடு சென்னையில்
அவரது பங்களாவில் 5ஆம் தேதி இரவு காலகதி அடைந்ததைப் பற்றி நாம் மிகவும்
வருந்துகிறோம்’. (தேசபக்தன், 9 மே 1932). டாக்டர் நாயரின் இறப்பைப் பதிவுசெய்த
சுதேசமித்திரனின் விசன(?) வாசகம் பின்வருவது: ‘இங்கிலாந்தில் சென்ற வியாழக்கிழமையன்று
டாக்டர் மாதவன் நாயர் காலகதி அடைந்துவிட்டதாகக் கேட்டு மிகவும் விசனப்படுகிறோம்’
(சுதேசமித்திரன், 22 ஜூலை 1919). ஏறக்குறைய காலமானார் என்ற சொல்லின் முந்தைய
வடிவமாகக்கூடக் ‘காலத்தினடை’ என்ற பொருள் தரும் காலகதி என்ற சொல்லைக் கருதலாம்.
காலத்துக்கு முந்தைய இறப்பு அகால மரணம் எனப்பட்டது. புதுமைப்பித்தனும் பாரதியும் அகால
மரணமடைந்த அமர இலக்கியவாதிகள்.
அண்ணா காலமான காலத்தில் அமரரானார் என்ற சொல் பத்திரிகைகளுக்கு வந்துவிட்டது. அமரரானார்
என்பதன் நேர்ப் பொருள் மேல்உலக வாசி ஆனார் என்பதே. (சாகாதவர் என்னும் பொருள் உடைய)
‘அமரர்’ என்ற சொல்லுக்கு இறந்தவர் என்ற பொருள் வந்து (அமரர்) ஊர்தியிலும் ஏறி உட்கார்ந்து
விட்டது.
“துஞ்சல் பிறப்புஅறுப்பான் தூயபுகழ் பாடிப்
புஞ்சம்ஆர் வெள்வளையீர் பொன்ஊசல் ஆடாமோ”
(திருப்பொன்னூசல் - திருவாசகம்)
என்ற வரியில் வரும் துஞ்சலைக் காண்க. இலக்கியத்தில் இறப்பு துஞ்சல் என்று வழங்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட கிள்ளிவளவனை அடையாளம் கண்டுகொள்ளக் குளமுற்றம் என்னும் ஊரில்
இறந்துபட்டவன் என்று பொருள்படும் குளமுற்றத் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் அடைமொழியோடு
வரலாறு அவனைப் பதிந்துகொண்டது. இளம் வழுதி ஒருவன் இனம்காணக் கடலுள் மாய்ந்த இளம்
பெரும்வழுதியானான். மறைதல் என்னும் பொருள் கொண்ட மாய்தல் இறப்பைக் குறித்தது. இறந்து பட்ட
இடங்களைக் கொண்டு வீர அரசர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இன்றைய நடைபிணங்களுக்கு
வீரத்தலைமை வாய்க்காதுதானே?
‘கண்மூடினார்’ என்ற இலக்கிய வழக்கும் இப்போது அருகிவிட்டது. இதே பொருள்தரும் ‘கண்
மூசினாரு’ என்ற தொடர் தெலுங்கில் பெருவழக்காக உள்ளது. ‘புலிகண்டி கிருஷ்ணா
ரெட்டிகாரு இரோஜ் உதயம் கண் மூசினாரு’ என்றுதான் ராயலசீமா பகுதியில் பிரபலமான அந்தத்
தெலுங்கு எழுத்தாளர் மறைந்தபோது (18 நவம்பர் 2007) பொதுமக்கள் ஊடகமான திருப்பதி
வானொலி அறிவித்தது.
போய்ச் சேர்ந்தாரு, போய்ட்டாரு, நட்டுகிட்டார், நாண்டுகிட்டார், புட்டுகிட்டாரு, மண்டயப்
போட்டாரு, தவறிட்டாரு, டிக்கெட் வாங்கிட்டாரு ஆகியவையும் பெரிய காரியம் என்ற மங்கல
வழக்குச் சொற்களும் இவை போன்ற இன்னும் பலவும் இறப்பைக் குறிக்க மக்களால்
பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்தும் மக்களின் பண்பாட்டுத் தரத்தையும் ஒருவாறு
உணர்த்திவிடுவன இவை. புட்டாரு என்பது பிறப்பையும் கிட்டாரு என்பது இறப்பையும்
குறிக்கும் சொற்களாகத் தெலுங்கில் வழங்குகின்றன. தமிழில் இரண்டு சொற்களும் இணைந்து புட்டு
கிட்டாரு என்று ஒலிக்கும்போது அது இறப்பையே குறிக்கிறது. ஆனால் அது கேவல வழக்காகக்
கருதப்படுகிறது. சச்சி போயினாரு, சனி போயினாரு, மரணிச்சினாரு, முக்தி செஞ்சாரு,
காலதர்மம் செஞ்சாரு போன்ற தெலுங்கு வழக்குகளைத் தமிழரும் ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் வருபவர்க்கு மண்ணில் இடமேது என்று மரணத்தை நியாயப்படுத்தினான்
போகப் போகிற வந்தவன் ஒருவன். ‘நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை’ என்னும் பெருமை கொண்ட
உலகை ஆண்டாண்டு காலம் அழுது புரண்டு சாவித்திரிபோல மாண்டாரை மீட்க ஏன் போராட வேண்டும்?
பெருமையோடு வாழட்டுமே உலகு. நிலச்சுமை என வாழ்தலும் புரிகுவையோ என்று கேட்டான்
பாரதியும். மனித இறப்பால் பூமிக்குப் பயன்தானே! பாரம் குறைகிறது மற்றும் நிலம் வாழ்
நுண் உயிர்க்கு இறந்த உடல் உணவாகப் பயன்படுகிறது. அதனால்தானோ என்னவோ ‘பூமி லாபம்’ என்ற
சொல்கூடப் பழந்தமிழில் மரணத்தையே குறித்தது.
நீண்ட தூக்கமாகவே மரணத்தைக் கலைஞர்கள் பார்த்திருக்கிறார்கள். ‘உறக்கமும் மறதியும் இன்றி
இறப்பு என்பது வேறொன்றும் இல்லை’ என்றார் கவிஞர். ‘உறங்குவது போலும் சாக்காடு . . .’
(339) என்றார் வள்ளுவர். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. வெளிநாட்டு
கீஷீக்ஷீபீsஷ்ஷீக்ஷீtலீ மறதியைக்கூடச் சேர்த்திருக்கிறார். அவ்வளவுதான்.
அகஸ்மாத் மரணம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தன் ஜாதகப் பலன்படி ஒருவருக்கு நேர்வது
சாதாரண மரணம். ஒருவரது ஜாதகத்தை மீறிக் கூடியிருப்பவர்களின் ஜாதகப் பலனின் மீசுர
பலத்தால் ஏற்படும் இறப்பு அகஸ்மாத் மரணம். ரயில் பயணம், தீ விபத்து முதலியவற்றால் ஏற்படும்
மொத்த மரணங்களை இவ்வகையில் சோதிடர்கள் குறிக்கின்றனர்.
மதப் பண்பாட்டில் பிறந்த மரணம் குறித்த இச்சொற்களையெல்லாம் தவிர்த்தார் பெரியார். உயிர்
நீத்தார் (தங்கப் பெருமாள் பிள்ளை), பிரிந்துவிட்டார் (பனகல் அரசர்), மறைந்துவிட்டார்
(எஸ்.ராமச்சந்திரன்), ஆவி நீத்தார் (நாகம்மாள்), முடிவெய்தினார் (சின்னத் தாயம்மாள்,
சி.டி. நாயகம், காந்தி, பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஸ்டாலின், திரு.வி.க., அம்பேத்கர்,
நேரு, அண்ணா, இராஜாஜி) இயற்கை எய்தினார் (ஜின்னா) என்னும் மதச் சார்பற்ற சொற்கள்
மூலமாகவே இரங்கல் குறிப்புகளை எழுதினார் பெரியார். முடிவெய்தினார் என்ற தொடரையே
மிகுதியும் பயன்படுத்தினார் என்று சொல்லலாம். ஓர்மையோடுதான் பெரியார் இதைச் செய்தார்
என்பது சொல்லித் தெரிய வேண்டிய தகவல் அல்ல.
இப்படியாக மரணத்தோடு வாழ்ந்து, அதன் உடனான அனுபவங்களை உட்செரித்தான் மனிதன். மரணத்தைப்
பற்றிய அபிப்பிராயத்தை உட்கிடையாகக் கொண்ட, பண்பாடு தொனிக்கும் சொற்களால் மரணத்தை
எதிர்கொண்டான். அவைதாம் இக்கட்டுரையின் இதுவரையிலான பாகத்தில் காணப்பட்ட சடல சல்லாபங்கள்.
வீவீ
கண்ணுக்குப் புலப்படுகிற பரு உடலிலிருந்து நுட்பமான உடல் (அதை உயிர் என்றும் சொல்லலாம்)
பிரிவதுதான் இறப்பு. மரணத்தை மனித வர்க்கம் எதிர்கொண்ட விதங்களே சமயமாயிருக்க வேண்டும்
என்கிறார்கள் மரணத்தை ஆராய்ந்தவர்கள்.
‘தனது தேகத்தைப் பிரேதமாக ஞானி கருதுகிறான்’ என்று சொல்வது, அப்படிக் கருத வேண்டும்
என்று அறிவுறுத்துவதற்காகவே. மரண பயத்திலிருந்து மீள விரும்பிய சிந்தனையாளர்கள்
இப்படியெல்லாம் சொல்லி மரணத்தை வெல்ல முயன்றிருக்கிறார்கள். ஏசு கிறிஸ்து மரணத்தை வெல்ல
முடியும் என்றார். ‘மரணமடைந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இறந்த லாசரஸை
உயிர்ப்பித்தார்’ என்கிறார்கள். இங்கேயும் மயிலாப்பூரில் பூம்பாவை எலும்புக்
குவியலிலிருந்து எழுந்து நின்றாளாம். ஆனாலும் எல்லோரும் மரணத்தைக் கண்டு
அஞ்சியிருக்கிறார்கள்.
‘ஏந்தும் இவ்வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவது இயல்பே’ என்று வள்ளலார்
பிள்ளைப் பெருவிண்ணப்பத்தில் (3428) புலம்புகிறார். மாந்தர்களின் இறப்பை நினைவுறுத்தும்
பறையின் வல்லொலி கேட்டபோதெல்லாம் வருந்தி அவர் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் அறிந்தது
என்றும் சொல்கிறார் அவர். மரணமிலாப் பெருவாழ்வு அடைய ஒளி உடலானார் வள்ளலார். நூற்றாண்டு
வாழ்வது எப்படி? நூல் எழுதிய சைவப் புலவர் மறைமலையடிகள் 74 வயதில் (மாரடைப்பால்)
காலமானார். மரண பயம்தான் இவர்களை இவ்வாறு சிந்திக்கவும் செயல்படவும் பேசவும் எழுதவும்
தூண்டியிருக்க வேண்டும். “காலா என்னருகே வாடா?” என்பதெல்லாம் பயந்தவன் பேசிய
பேச்சுதான். தன் 76ஆம் வயது போலவே பெரியார் அடுத்த ஆண்டு மலரில் எழுத நான் இருப்பேனோ
என்னவோ என்றே 93 வயது வரை சந்தேகப்பட்டுக்கொண்டே எழுதிவந்தார்.
மரண பயமும் மரணத்திற்குப் பின் என்ன? என்பது பற்றிய அச்சமும் மனிதனை ஆட்டிப்படைத்தன.
சமயங்கள் அதற்குப் பதில் சொல்ல முயன்றன. சமயம் அளித்த விளக்கங்களைத் தான் புரிந்துகொண்ட
அளவிலும் ஏற்றுக்கொண்ட அளவிலும் மரணத்தை ஒருவாறு எதிர்கொண்டான் மனிதன். அவன்
பயன்படுத்திய மேற்கண்ட வார்த்தைகள் அதை நமக்குச் சொல்கின்றன.
‘அஹோராத்ரான் ஸந்த தாமி’ என்ற ரிக்வேத சுலோகத்துக்குப் பொருள் பகலையும் இரவையும்
இணைப்பேன் என்பது. இதை விளக்கும் சித்பவானந்தர் இப்படிச் சொல்கிறார்: “பகலையும் இரவையும்
இணைப்பது என்பது வீண் காலம் போக்காதிருப்பதாகும். காலத்தை நன்கு பயன்படுத்துவதும் கடவுள்
வழிபாடாகிறது. ஏனென்றால் கடவுளே கால சொரூபமாயிருக்கிறான்” (ப. 793, திருவாசகம்,
சித்பவானந்தர் உரை). கால சொரூபியாக இருக்கும் கடவுளை அடைந்தார் என்பதைக் காலமாக
ஆனார், காலமானார் என்ற சொற்களால் கடவுள் நம்பிக்கை கொண்ட மனிதன் சொல்லியிருக்கக்கூடும்.
காலத்திடம் ஒப்படைக்காமல் நேராகக் கடவுளிடமே ஒப்புக்கொடுத்துவிடுவதும் நல்லதுதானே.
செங்கோடம் பாளையத்துக் கவுண்டரை அவர் மகன், இறைவன் அடியில் சேர்க்க விரும்பினார். மஞ்சேரி
ஈச்வரனோ புதுமைப்பித்தனை இறைவனோடு இரண்டறக் கலக்கச்செய்தார். சைவர்கள் சிவலோகத்திற்கும்
வைணவர்கள் வைகுண்ட லோகத்திற்கும் முறையே இறந்தவர்களை அனுப்பிவைத்தார்கள். உலகம் மாயை
என்று கருதியோர், பிறப்பைத் தோற்றமாகக் கண்டதால் இறப்பை மறைவாகக் கருதி
நினைப்பொழித்தார்கள். மலர்வதாகவும் உதிர்வதாகவும் பிறப்பு - இறப்பைக் குறித்தோர் இயற்கை
நிகழ்வுகளில் ஒன்றாக மரணத்தைக் கலாபூர்வமாகக் காண்பவர்கள் போலும்.
உடல் வியோகமாகிறது. பாம்பு சட்டை உரிப்பது போல உயிர் தன் இந்தச் சட்டையைக் கழற்றிவிட்டு
வேறு சட்டையைத் தேடிப் போகிறது என்ற சிந்தனையை ஒப்புக்கொண்டவர்கள் மரணத்தைத் தேக வியோகம்
என்றனர். இரண்டரை நாழிகையில் ஒளி உடலாக மாறிய வள்ளலாரின் மறைவு சித்தி (வீடு பேறு)
எனப்பட்டது. சமாதியும் முக்தியும் இவ்வகைப்பட்ட சமய நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த
சொற்களே.
இறப்பை நீண்ட தூக்கமாகக் கருதியதால் துயிலுதல் என்ற பொருளுடைய துஞ்சல் என்ற சொல்லாட்சி
பிறந்திருக்கக்கூடும். கண் மூடினார் என்ற வழக்கும் ஏறக்குறைய தூக்கம் என்பதன் தொடர்பில்
உருவாகியிருக்கக்கூடும். குழந்தை கண்மூடித் தூங்குகிறது என்று சொல்லவந்தவர் அதன் அமங்கலப்
பொருளை உணர்ந்து குழந்தை கண் வளர்கிறது என்றனர். மாய்தல் என்பது மறைதல் என்பதனடியாகப்
பிறந்தது.
போய்ச் சேர்ந்தாரு, போய்ட்டாரு போன்றவை சொர்க்கம், நரகம் போன்ற மத நம்பிக்கைகளின்
அடிப்படையில் உருவான பண்பாட்டு உருவங்கள். கடவுள், மதம் போன்ற கற்பிதங்களை மறுத்த
பெரியார், பிறப்பைத் தொடக்கமாகக் கொண்டு, இறப்பை மனித வாழ்வின் முடிவாகக் கருதினார்.
மரணத்திற்குப் பிறகான வாழ்வில் நம்பிக்கை அற்றவர் அவர். டாக்டர் வரதராஜுலு நாயுடுவின்
இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பெரியார், “எப்படியோ நம்மை விட்டுப்
பிரிந்துவிட்டார் டாக்டர் நாயுடு அவர்கள். இப்போது சும்மா அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்
என்று பேசுவது வெறும் பேச்சாகும். ஆத்மா என்று ஒன்று இருந்தால் அது நாம் சொன்னாலும்
சொல்லாவிட்டாலும் அது தானே சாந்தி அடையும். அதிலொன்றும் சந்தேகம் வேண்டியதில்லை” என்று
பேசினார் (விடுதலை, 24 ஜூலை 1957).
மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு மனிதன் புரிந்துகொண்ட பதில்களின் அடிப்படையில்தான்
மரணம் குறித்த சொற்கள் அமைந்தன. அந்தப் புரிதலை அவனது சமய நம்பிக்கைகள் அல்லது
அவநம்பிக்கைகள் உருவாக்கின. அது பண்பாட்டு உருவம் கொள்ளும்போது பல்கிப் பெருகும் இத்தகைய
சொற்களாயின.
வீவீமி
இறப்பிற்கும் சமூகத்திற்குமான உறவு, வாழும் மனிதனுக்கும் சமூகத்திற்குமான உறவிற்கு எந்த
விதத்திலும் குறைந்ததாகத் தெரியவில்லை. மாற்றத்திற்கு ஏற்பப் புதுப்புது உறவுகளைச்
சமூகத்தோடு ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. சமீப காலத்தில் தோன்றிய உறவுகள் ஆயுள்
காப்பீடு, இறப்பிற்கு அரசு மரியாதை போன்றவை. சில இறப்புகள் சமூகத்தில் கொந்தளிப்புகளை
ஏற்படுத்திவிடுகின்றன. தற்கொலைகள், கருக்கலைப்பு, தண்டனையாகத் தரப்படும் மரணம் போன்ற
இறப்புகள் குறித்த விவாதங்கள் இன்னும் முற்றுப்பெறாது நீடிக்கின்றன.
தனிமனிதனுக்கு நேர்ந்தாலும் இறத்தல் ஒரு சமூக செயல்பாடாகவே இருக்கிறது. இறுதி
ஊர்வலங்கள், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நடவடிக்கைகள், உடலைக் கெடாமல் காத்துவைக்கும்
பெட்டி உள்பட இது தொடர்பான தொழில் செய்யும் நிறுவனங்கள் எனப் பல அதன் தொடர்பில்
வாழ்கின்றன. இறப்பிற்கும் சட்டத்திற்குமான உறவு, இறப்பை உறுதி மற்றும் பதிவுசெய்தல்,
வாரிசு சான்று எனப் பலவற்றில் நிலை கொள்ளுகிறது.
இறப்பிற்கும் பண்பாட்டுக்குமான உறவு இறப்பைக் குறிக்கும் சொற்கள், இறந்தவருக்கு எழுதப்படும்
சரமகவிகள், இரங்கல் உரைகள், எழுப்பப்படும் நினைவகங்கள், ஏற்படுத்தப்படும் நினைவு அறக்
கட்டளைகள் முதலியவற்றில் உயிர்க்கிறது. லெனின் உடல் பல்லாண்டு காலமாய்ப் பாதுகாக்கப்பட்டு
வருவதும் அதைப் புகைப்படம் எடுக்க அனுமதியில்லாத நிலை சோவியத் உடையும்வரை
இருந்ததையும் இங்கே நினைவுகூரலாம். கோவாவில் கிறித்துவப் புனிதர் (செயின்ட் ஜோஸப்?)
ஒருவர் உடல் இவ்வாறு பாதுகாக்கப்பட்டுவருகிறது. அதை என் அப்பா 1970களில் பார்த்துவிட்டு
வந்து பேசிக்கொண்டிருந்தது என் நினைவில் இருக்கிறது.
சமூக வாழ்வோடு, மேற்காணுமாறு பிணிக்கப்பட்டிருப்பினும், மனித குலம் தோன்றிய
காலந்தொட்டு நிகழ்ந்து வந்தாலும் இறப்பு பற்றிய பேச்சுக்கு ஒரு சமூக அசூயை
இருந்தேவருகிறது. ஆங்கிலத்தில்கூட அந்த sஷீநீவீணீறீ tணீதீஷீஷீ உண்டு. அதனால்தான் ஆங்கிலத்திலும்
மறைமுகப் பிரயோகங்கள் இருக்கின்றன. இந்த மாதிரியான இறப்பு குறித்த தமிழ்ச் சொற்களுக்குப்
பின்னால் இருக்கும் பண்பாட்டுக் காரணத்தைப் பற்றிச் சில குறிப்புகளை இக்கட்டுரை விட்டுச்
செல்ல முயல்கிறது.
இறப்பிலும் இறப்புக்குப் பின்னும் நடந்துகொள்ளும் முறையில் மனிதனது சமூகப் பண்பாட்டு அம்சம்
இணைந்திருக்கிறது. அது பெரும்பாலும் மதம் சார்ந்ததாகவே இருக்கிறது. மனித உடலின் மீது
ஆட்சி செலுத்தும் மதம் இறப்பிற்குப் பிறகு முழுவதுமாக மனித உடலை எடுத்துக்கொள்கிறது.
உடலில் பொறித்த மதச் சின்னங்களை அகற்றிய பிறகே அதைப் புதைக்கவோ எரிக்கவோ மதம்
அனுமதிக்கும். பிறகு சடலத்தைச் சாதி வாரிக் கல்லறையில் வைத்து விட்டுப் போகும். கையறு
நிலையில் எழுதப்படும் அஞ்சலிகள், நினைவகங்கள், கல்லறைகள், சுடுகாடுகள் என்ற இறப் பிற்குப்
பின்னான நடவடிக்கைகள் காட்டும் பண்பாடுகள் இன்னும் வியக்கத்தக்கனவாய் இருக்கும்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 1, 2015, 1:00:20 PM6/1/15
to brail...@googlegroups.com

கருத்துச் சுதந்திர கற்பூர வாசனையும், கழுதைகளும், வாளோடு வலம் வரும்
பண்பாட்டுக் காவலர்களும்
8
விவரங்கள்
எழுத்தாளர்: து.சேகர் அண்ணாத்துரை
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 01 ஜூன் 2015
சில நியாயமான நிபந்தனைகளுடன் கூடிய பேச்சு-கருத்து சுதந்திரத்தை நமது அரசியலமைப்பு
சட்டத்தின் பிரிவு 19 (1)அ நமக்கு வழங்குகிறது. இது அடிப்படைஉரிமையாகும்.
1927-ம் ஆண்டு: இந்திய தணிக்கைச் சட்டம் பிரித்தானிய ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது.
மகமது நபி அவர்கள் தகாத பெண் உறவுகள் கொண்டிருந்தார் என்பதைச் சொல்லும் ஒரு புத்தகம்
வெளியானது. இது இஸ்லாமியர்களிடையே பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக,
இப் புத்தகத்தை வெளியிட்டவர் இசுலாமியர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளரை
இசுலாமியர் மாவீரனாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து, சாதி, மத உணர்வுகளைப்
புண்படுத்துவோரை மூன்று ஆண்டுகள் வரை தண்டிக்கும், பிணை விடாத் தன்மையுடையதான இந்திய
தண்டனை சட்டம் பிரிவு 295A கொண்டு வரப்பட்டது. இது தான் இந்திய தணிக்கை சட்டத்தின் அடிப்படை!
1930-ம் ஆண்டு:இந்தியப் பெண்கள் கடும் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை
தரவுகளுடன் நிறுவியது “இந்தியத் தாயின் முகம்”(The face of mother India) எனும்
புத்தகம். இதன் ஆசிரியர் காதரீன் மேயோ. இவரை “கழிவு நீரோடை ஆய்வாளர்”என்று மகாத்மா
காந்தி கடுமையாகச் சாடினார்.
1950-ம் ஆண்டு: “இராமன் மறு வாசிப்பு”(The Rama Retold) எனும் புத்தகம், ”இராமன் ஓர்
ஆணாதிக்க சிந்தனையாளன்; இராவணன் கல்வி கேள்விகளில் சிறந்தவன்; இசை மேதை; இவன் பேரழகில்
மயங்கியே, சீதை இவன் பின் சென்றாள்” எனக் கூறியது. இப் புத்தகத்தின் ஆசிரியர் ஆப்ரே
மெனன்(Aubray menon). மதச் சார்பற்ற-சமதர்ம கொள்கையுடையவர் எனக் கருத்தப்பட்ட அந்நாள்
தலைமையமைச்சர் சவகர்லால் நேருவே இப்புத்தகத்தை தடை செய்தார். பின்னாட்களில் அரசியல்
ஆதாயம் கருதியே இப் புத்தகத்தை தடை செய்ததாக நேரு அவர்களே ஆப்ரே மெனனிடம் தனது
வருத்தத்தை தெரிவித்தார். தசரா திருவிழாவின் போது தில்லியில் இராவணன் கொடும்பாவி
எரிக்கப்படுவதை ஈண்டு நினைவு கூறவும்!
1970-ம் ஆண்டு:இந்திய துணைக் கண்டத்தில் வறுமையும், கையூட்டும் தலை விரித்தாடுவதை
சொல்லும் ஒரு திரைப் படத்தொடர். இதனை இயக்கியவர் லூயிஸ் மாலே(Louis Malle). இதை பி.
பி. சி. வானொலி ஒலிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், பி. பி. சி. வானொலி
இங்கிலாந்தில் ஒலிபரப்பியது. இதனால், சினமுற்ற அந்நாள் தலைமையமைச்சர் இந்திரா காந்தி
அவர்கள் பி. பி. சி –யை இந்தியாவினின்று வெளியேற்றினார். இதனைத் தொடர்ந்து இந்திய
தண்டனை சட்டம் பிரிவு 153A கொண்டுவரப்பட்டது. இதன் படி சாதி, மதங்களுக்கிடையே
பகைமையை வளர்ப்போரை 3 ஆண்டுகள் வரை தண்டிக்க முடியும்.
1975-ம் ஆண்டு: இந்திரா காந்தி அம்மையாரின் நெருக்கடி நிலை அறிவிப்பைத் தொடர்ந்து,
செய்தி ஊடகங்கள் கடும் தணிக்கைக்கு ஆளாயின. தமிழ் நாட்டில் “உடன் பிறப்பு மடலை”தலைப்புச்
செய்தியாக வெளியிடும் முரசொலி நாளிதழ் “வெண்டைக்காய் உடம்புக்கு நல்லது” என்பதை
அந்நாளில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. பாரதி பாடுகின்ற “இம் என்றால் சிறை வாசம்,
ஏன் என்றால் வனவாசம்” எனும் கொடிய ஆட்சி கோலோச்சியது.
1988-ம் ஆண்டு:சல்மான் ருஷ்டி:இவரின் “சாத்தனின் வரிகள்”(Satanic verses)மகமது நபியை
இழிவு படுத்துகிறது; எனவே, இதனை தடை செய்ய வேண்டுமென்று உலகெங்குமுள்ள பெரும்பான்மை
இசுலாமியர் கூக்குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, இந்தியா உட்பட பலநாடுகளில் இது
தடை செய்யப்பட்டது.
எஃப். எம். ஹுசைன்: இந்திய பெண் தெய்வங்களை நிர்வாணமாக வரைந்தார் எனச் சொல்லி இந்த முது
பெரும் ஓவியர் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன; தாங்கொண தொடர் துன்புறுத்தல் காரணமாக
இப் புகழ் பெற்ற ஓவியர் இந்தியாவினின்று வெளியேறினார். ”இந்திய நாட்டின் நவீன ஓவிய
கண்காட்சி மையத்தின் தலைவரான பெரோஸ் கோத்ரஜ், அபுதாபியில் இருந்த ஹுசைனை இந்தியாவுக்கு
திரும்புங்கள் என அழைப்பு விடுத்தார்!அதற்கு ஹுசைன் “என் கைகள் நொறுக்கப்பட்டால், நான்
ஒன்றும் அற்றவனாவேன்” என்று வருத்தத்தோடு பதிலிறுத்தார்.
வென்டி டொனிகர்: இவரின் “இந்துக்கள்- ஓர் மாற்று வரலாறு”(Hindus- an alternative
history) எனும் புத்தகம், இந்து மதத்தைப் பற்றி உண்மையற்ற தகவல்களைக் கொண்டிருக்கிறது
என்று சொல்லி இந்துத்வ கல்வி அமைப்பான “ஷிக்ஷா பாச்சோவ் அண்டோலன் சமிதி” இவர் மீது
2010-ல் வழக்குத் தொடுத்தது. இந்த அமைப்பும், இப்புத்தக வெளியீட்டு நிறுவனமான
பெங்குவினும் ஓர் உடன்படிக்கைக்கு வந்தன. ”இனி மேல் இப்புத்தகத்தை வெளியிடுவதில்லை
மற்றும் விற்காமல் எஞ்சியிருக்கும் படிகளை கூழாக்குவோம்” என்று நீதி மன்றத்தில்
கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இவ் வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. ”உங்கள்
நாட்டுச் சட்டம் மூன்று ஆண்டுகள் தண்டனைக்கு வழி செய்கிறது(இ. த. பி. 295A). எனவே தான்
நாங்கள் உடன்படிக்கை செய்ய நேரிட்டது” என பெங்குவின் நிறுவனம்பதிலளித்தது.
மகாத்மா காந்தி: ஜோசப் லெலிவெல்ட் தன்னுடைய புத்தகத்தில், மகாத்மா காந்தி தன்னினச்சேர்க்கை
கொண்டிருந்தார் என எழுதியுருந்தார். இதை 2011-ம் ஆண்டு குஜராத் அரசு தடை செய்தது.
2012-ல் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் சல்மான் ருஷ்டி பங்கேற்பதை இசுலாமிய
மதக்குருக்கள் வன்மையாக எதிர்த்தனர். இவ்வச்சுறுத்தலைத் தொடர்ந்து, ருஷ்டியும் தன் பயணத்தை
இரத்து செய்தார். இந்த அச்சுறுத்தலை அனில் சட் கோபால், இர்பான் ஹபீப் போன்றவர்களைக் கொண்ட
சஃப்டர் ஹஷ்மி அறக் கட்டளை கடுமையாகக் கண்டித்தது.
தஸ்லிமா நஸ்ரின்: புகழ் பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான இவரை இசுலாமிய அடிப்படை வாதம்
ஓட, ஓட, விரட்டிக் கொண்டிருக்கிறது!இவரின் தலைக்கு விலை குறிக்கப்பட்டுள்ளது.
ஹைதரபாத்தில் நடந்த உள் அரங்க கூட்டத்தில், இவர் மீது இசுலாமிய அடிப்படை வாதிகள்
செருப்புக்களை வீசி கடுமையான தாக்குதலை நடத்தினர். வங்க தேசத்திலிருந்து துரத்தப்பட்ட
இவர் மேற்கு வங்க மாநிலத்தில் புகலிடம் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தார். இடது ஆட்சி
இருந்த போதிலும், பழமை வாத இசுலாமியர்களின் தொடர் அழுத்தத்தால், தஸ்லிமா அங்கு
தொடர்ந்து வாழ்வதற்குஅனுமதி மறுக்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலுக்கு, சவகர்லால்
நேருவோ, இடது ஆட்சியாளர்களோ எவரும் விதிவிலக்கல்ல.
வங்க தேசத்தில் கருதுரிமைக்காக இன்னுயிர் ஈத்தோர்: வங்க தேசத்தில்
சுதந்திர-மதச்சார்பற்ற-அறிவியல் சிந்தனையாளர்கள் குறி வைக்கப்பட்டு தொடர்ச்சியாகக்
கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப் பட்டியலில் ராஜிப் ஹைதர், எ. கே. எம். ஷைஃபூர்,
ரகுமான், அவ் ஜித் ராய், வாஷிகர்ஆ, ரகுமான் பாபு, அனந் பிஜாய் தாஸ் ஆகியோர் உள்ளனனர்.
இவர்களில் கடைசியாகக் கொல்லப்பட்ட அனந்த பிஜாய் தாஸ் “ஜுக்டி” எனும் அறிவியல் இதழின்
ஆசிரியராக இருந்தவர்; நாத்திக சிந்தனையாளர். இவர் உயிருடன் இருந்த போது, தஸ்லிமா
நஸ்ரினின் துணிச்சலை வியந்து எழுதிய கவிதையின் ஒரு சில வரிகள்:
“குற்றமற்றவர்களின் குருதி சொட்டும் கூச்சமற்ற வாள்கள் எங்கும்!
அவர்களின் சினம் கக்கும் மத-அரச கட்டளைகளை மீறினால்,
எத்திசை புகினும் உங்கள் தலை கொய்யப்படும்!
இருப்பினும் , எங்கோ யாரோ ஒருவர் அறிவு வெளிச்சத்தை கொளுத்துகிறார்!
இப் புரட்சித் தீ, அழுகி முடை நாற்றமெடுக்கும் நம்பிக்கைகளையும்,
சடங்குகளையும், புனித நிறுவனங்களையும் சாம்பல் மேடாக்குகிறது!
இவ்வறிவு வெளிச்சம் அச்சமின்றி தொடர்ந்து பயணிக்கிறது!
யாவரும் புகழாரம் சூட்டுகிறார் தஸ்லிமாவுக்கு,
ஆம்! தஸ்லிமா, உங்களுக்கு எம் செவ்வணக்கம்!
ஏழைப் பங்காளரும், பகுத்தறிவாளருமான மராட்டிய கோவிந் பன்சாரே மற்றும் நரேந்திர
தபோல்கரின் படுகொலைகள்:
இவர் செய்தித்தாள் விற்பவராக இருந்து; பியூனாக-ஆசிரியராக-சிவாஜி பல்கலைக் கழக
பேராசிரியராக-மராட்டிய மாநில சி. பி. அய். கட்சியின் செயலராக-தேசிய செயற் குழு
உறுப்பினராக உயர்ந்தவர். அமைப்பற்ற வேளாண் பட்டாளிகள், வீட்டு வேலை செய்வோர், ஆட்டோ
ஓட்டுநர்கள், பால் உற்பத்தியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், குடிசை வாழ் மக்கள் ஆகியோரின்
மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர். சில குறிப்பிட்ட கொள்கைகளினால் நாட்டு மக்களிடையே
சி. பி. அய். கட்சி செல்வாக்கை இழந்தது என விமர்சித்தவர்.
மதவாத வலது சக்திகளை கடுமையாகச் சாடியவர்; இட ஒதுக்கீடு, சாகு மகராஜ், மார்க்சியம்,
உலகமயமாக்கல் எனும் தலைப்புகளில் புத்தகங்கள் படைத்துள்ளார். இவருடைய "சிவாஜி யார்?
(Shivaji-Kon Hota) எனும் மராட்டிய மொழி குறும் புத்தகம் அனைவரின் கவனத்தையும்
ஈர்த்தது; சிவாஜி எல்லா மதங்களையும் நேசித்து, மதித்த, மதசார்பற்ற மாமனிதன் என்று
ஆதாரங்களுடன் ஆணித்தரமாக இதில் குறிப்பிட்டுள்ளார். சிவாஜியின் பெயரால் மதவெறியை
விதைத்து, வளர்ப்பதை கடுமையாக சாடியுள்ளார்.
நாதுராம் கோட்சேவுக்கு புகழாரம் சூட்டுவோரை அண்மையில் சிவாஜி பல்கலைக் கழகத்தில் நடந்த
நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சித்தார்; இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு மிரட்டல்கள்
வந்தன: அவற்றை இவர் பொருட்படுத்தவில்லை. பகுத்தறிவாளர் நரேந்திர தாபோல்கருடன்
ஒருங்கிணைந்து செயல் பட்டார்; தாபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் காலை
நடைப்பயிற்சியில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மறைவைத் தொடர்ந்து, கோவிந்
பன்சாரே மூட நம்பிக்கைக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற அரசுக்கு கடும் அழுத்தத்தைக்
கொடுத்தார். இச் சூழலில் பன்சாரேயும் சுடப்பட்டு, உயிருக்குப் போராடிய நிலையில் கடந்த
20-02-2015 அன்று உயிரிழந்தார்.
மாதொருபாகனும், திருச்செங்கோடு பெருமாள் முருகனும்:
மகா பாரதம்:விசித்ர வீரியன் நோய்க்கு(மலட்டுத் தன்மை அல்லது பாலியல் நோயாக
இருந்திருக்கும்) ஆளாகி புத்ர பாக்யம் இல்லாது இறந்து விட்டான். என்வே, வியாசர் மூலம்
விசித்ரவீரியன் இரு மனைவியரும் மற்றும் வேலைக்காரியும் மூன்று பிள்ளைகளைப் பெற்றனர்.
அவர்களே திருதராஷ்ட்ரன், பாண்டு, விதுரன். இதில் பாண்டுவுக்கும் அதே நிலை. எனவே
பாண்டுவின் மனைவி குந்தி, யமன். வாயு, இந்திரன் ஆகியோர் மூலமாக, முறையே, தர்மன்,
பீமன், அர்ச்சுனன் ஆகியோரும், பாண்டுவின் மற்றொருமனைவி மாத்ரி அஸ்வினி தேவதைகளின் மூலம்,
நகுலன், சகாதேவன் ஆகியோரும் பிறந்தனர். பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியை மனைவியாகக்
கொண்டனர்: பாகவத புராணம்: தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆயர் குலப் பெண்களின்
ஆடைகளை மரக்கிளையில ஒளித்து வைத்து விளையாடிய கண்ணபிரானுக்கும், "பதினாறு
வயதினிலே" திரைப்படத்திலே- மயிலு, மயிலு இன்னும் கொஞ்சம் என்று சொல்லும் கால்நடை
மருத்துவருக்கும், என்ன வேறுபாடு? இறைச்சாயத்தை தவிர!
மேலே சொன்னவர்கள் எல்லாம் முனிவர் மற்றும் தெய்வாம்சம் உடையவர்களால் பிள்ளைகளைப்பெற்றுக்
கொண்டனர். எனவே பெருமாள் முருகனும் காளியின் மனைவி பொன்னாள் திருவிழா நாளில், இரவில்
ஒரமாக ஒதுங்கி, அர்த்தநாரீஸ்வரன் மூலம் குழந்தைப் பேற்றை அடைந்தாள் என்று எழுதியிருந்தால்
குறிப்பிட்ட சமுதாயம் பூரிப்படைந்து பொன்னாளை "தெய்வமாக்கியிருக்கும். சாதி-மத
பெருமைகள் எல்லாம் பாசிசத்தின் கூறுகள்!
பச்சை எழுத்துக்களும்-புலியூர் முருகேசன் மீதான தாக்குதலும்:
சாதி, மத, ஆணாதிக்க, பெரு முதலாளிய ஆதிக்க சக்திகளின் கோரப்பிடியால்
பாதிக்கப்பட்டோரின் வலிகளின் பதிவுகள் பச்சையாகத்தான் இருக்கும்; தெய்வீகச் சாயப் பூச்சுக்கள்
இருக்காது! பாலியல் எண்ணங்களைக் கிளர்ச்சியுறச் செய்து, மனங்களை கெடுக்கும் எழுத்துக்கள்
என சொல்லப்பட்டவைதான் கீழ்க்காணும் புதினங்கள்:
அருந்ததிராயின் "தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்"(The God of Small things):
தங்களைப் புண்படுத்திவிட்டதாகவும், பாலியல் விரசங்கள் இருப்பதாகவும் சொல்லி ,
கொதித்தெழுந்து நீதி மன்றம் சென்றனர் கேரள சிரியன் கத்தோலிக்க பிரிவைச் சார்ந்தோர்; இதை
வெற்றிகரமாக எதிர் கொண்டார் அருந்ததி ராய்; இந் நாவலே புக்கர் விருதையும் ஈட்டியது.
சிஸ்டர் ஜெஸ்மெயின் "ஆமென்" நாவல் கேரள கத்தோலிக்க திருச்சபை பாதிரிகளின் காமக்
கொடூரங்களையும், கன்னிப் பெண் துறவிகளின் ஓரினச் சேர்க்கைகளையும் பச்சையாகவே பதிவு
செய்திருக்கும். அனைத்து தடைகளையும் தாண்டியதே இந் நாவல்.
கமலா சுரைய்யா(தாஸ்)வின் 'என்ற கத"(My story) எனும் புதினமும் பாலியல் விரசமுடையது
எனும் கடும் விமர்சனத்துக்கு ஆளானது; "என் வலிகளின் வெளிப்பாடுதான் என் எழுத்துக்கள்"
என்றார் கமலா சுரைய்யா.
திருநங்கை ரேவதியின் "வெள்ளை மொழி" திருநங்கை கல்கியின்"குறி அறுத்தேன்" முதலிய
புத்தகங்கள் உண்மைகளை முகத்தில் அடித்தாற் போல் சொல்வன; "சே-சே- இப்படியா எழுதுவது?
என்று பண்பாட்டுக் காவலர்கள் முகஞ்சுளிப்பார்கள்! இவர்களையெல்லாம் புறம் தள்ளிக் கொண்டே
விளிம்பு நிலை மாந்தரின் இலக்கியம் பயணிக்கும்.
புலியூர் முருகேசனின் "நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்" எனும் சிறு
கதைபெருங்குடி கூட்டத்தின் ஒரு குடும்பத்தில் திருநங்கையாகப் (மூன்றாம் பாலினம்)
பிறக்கிறான் சுப்ரமணி; இவன் தந்தை வசதி மிக்கவர்; பல பெண் தொடர்புகள் உடையவர்; மகனை
ஏச்சுக்கும், பேச்சுக்கும், பாலியல் வன் கொடுமைக்கும் ஆளாக்குகிறார்; அவனுக்கு
மணமுடித்து, மருமகளை தன் காம இச்சைக்கு நாளும் ஆளாக்குகிறார்.
" என் பெருமைமிகு குடியில் எனக்கு இப்படி ஒரு மகனா!"என்ற எண்ணம் ஒரு புறம்; மற்றொரு
புறம் சொந்த மகனையே காமக் கருவியாக பயன் படுத்துவது. இவ்வாறான, முடை நாற்ற மனமுடைய
தகப்பனின் போலிப் பெருமையையும், காமக் கொடூரத்தையும்-அவனுக்குரிய தண்டனையையும்
வெளிப்படுத்துகிறது; புறக்கணிக்கப்பட்ட, கடும் அவமானத்துக்கு ஆளான, ஓர் மூன்றாம்
பாலினத்தின் குரலாகவே ஒலிக்கிறது இச் சிறுகதை!
"பாலியல் இச்சையை தூண்டுவதைக் காட்டிலும் சமூக அக்கறையின் வீச்சு அதிகமுடையது"என்று
சொல்லும் உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கள் பல உண்டு:பூலன் தேவி திரைப்படம்(Bandit queen)
வழக்கு என அப் பட்டியல் நீளும்; விரிவு கருதி விடப் படுகிறது. முரண்பட்ட கருத்துக்கள்
இருப்பின், சட்ட வழிகளின் வாயிலாக தீர்வுகள் காணுவதை விடுத்து, எழுத்தாளனை
தாக்குவதும். பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும் சனநாயகத்தை சீர் குலைக்கும். அரசியல்
கட்சிகளும் வாக்கு வங்கி அடிமைகளாக இல்லாமல் துணிந்து சனநாயகத்துக்காக குரல் கொடுக்க
முன் வர வேண்டும்.
லெஸ்லியின் “இந்தியாவின் மகள்” (India’s daughter):
தில்லி கற்பழிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பி. பி. சி. யின் ஆவணப்படத்தை தடை செய்ய
வேண்டுமென்று போலி கௌரவவாதிகள் பெரும் கூச்சலிட்டனர்; காவி அரசும் துள்ளிக் குதித்து
உடனே தடை செய்தது; இணையத் தள உலகில் இது போன்ற தடைகள் வெறும் நூல் வேலிகளே!
தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் பிரிவு 66A வை செல்லாது என அறிவித்த உச்சநீதி மன்றத்தின்
தீர்ப்பு: சட்டக் கல்லூரி மாணவி ஷ்ரேயா சிங்காலின் மனு உள்பட 10 மனுக்கள் தகவல் தொழில்
நுட்ப சட்டத்தின் 66 A பிரிவுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்
பட்டிருந்தன. இவற்றுள் பி. யூ. சி. எல் சார்பான மனுவும், எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்
சார்பான மனுவும் அடங்கும். இதன் சார்பாக மூத்த வழக்குரைஞர் சஞ்சய் பரிக் மற்றும்
வழக்குரைஞர்கள் அபர் குப்தா, கருணா நந்தி ஆகியோர் வாதிட்டனர். இக் கொடுஞ் சட்டம்
அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று சொல்லி உச்ச நீதி மன்றம் நீக்கறவு
செய்துள்ளது. இது சனநாயக சக்திகளுக்கு கிடைத்த வெற்றி!
கருத்து சுதந்திரத்துக்காக உயிர் நீத்த ஈகிகளை நினைவில் ஏந்தி, கருத்து
சுதந்திரத்துக்கான தொடர் போராட்டத்தை தொய்வின்றித் தொடர்வோம்!
- து.சேகர் அண்ணாத்துரை, வழக்குரைஞர், கோவை மாவட்ட பி. யூ. சி. எல். செயலர்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 1, 2015, 1:03:25 PM6/1/15
to brail...@googlegroups.com
நல்ல
காலம் பொறந்தது! யாருக்காக?
8
விவரங்கள்
எழுத்தாளர்: பொன்.சந்திரன்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 01 ஜூன் 2015
பா.ஜ.க. அரசின் ஒராண்டு கால ஆட்சியை முன் வைத்து...
நல்ல காலம் பொறக்குது” என்று உரத்த குரலில் தொடங்கிய பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க)
ஒராண்டு கால ஆட்சியின் சாதனைகள் என்ன? என்ற கேள்விக்கு வேதனைதான் மிஞ்சுகிறது.
”தூய்மை இந்தியா” திட்டத்தை ஒரு புறம் அறிவித்துவிட்டு சமூக நலத்துறையின் முக்கிய
அங்கமான கல்வி, ஆரோக்கியம், குழந்தைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான நிதி ஒதுக்கிடு
குறைக்கப்பட்டுள்ளது ஏன்? இந்த துறைக்கு 2014-15 ஆண்டை ஒப்பிடும்போது 2015-16
ஆண்டிற்கான நிதி ஒதுக்கிடு உரூபா 40,205 கோடி குறைக்கப்பட்டுள்ளது!
மாறாக 2014-15 ஆண்டில் மட்டும் பெரு முதலாளிய நிறுவனங்களுக்கு 70,000 கோடிக்கு மேல்
நிவாரணங்களும் வரிச் சலுகைகளும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன!
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 35% மேல் இன்னும்
பயன்படுத்தாமல் இருக்கும்போது தங்குதடையற்ற தொழில் முன்னேற்றத்திற்காக என்று கூறி மேலும்
நிலத்தை கையகப்படுத்த வெள்ளயன் ஆட்சிக்காலச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர மீண்டும் மீண்டும்
அவசரச் சட்டமாக கொண்டு வருவது யாருடைய நலனிற்காக? உணவு உத்திரவாதத்திற்கு தேவையான
பல்பயிர் விவசாய நிலங்கள் உட்பட உள்ள விவசாய நிலங்களை பறிக்க நினைப்பது யார் நன்மைக்காக?
’நாட்டின் முதுகெலும்பு விவசாயம்’ என்பது உண்மையானால் உழவர்களை விவசாய நிலங்களைவிட்டு
வெளியேற்றும் திட்டத்தை யாருக்காக அமல்படுத்துகிறது மத்திய அரசு?
”இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” (MAKE IN INDIA) என்று அழைப்பு விடுத்துவிட்டு
ஒவ்வொரு அயல் நாட்டு பயணத்தின் போதும் இங்குள்ள பெரு நிறுவன முதலாளிகளுடன் பயணம்
மேற்கொண்டு போடப்படும் ஒப்பந்தங்கள் யாருக்காக? சீனாவில் மட்டும் இத்தியாவின் இரண்டு தொழில்
குடும்பங்களுக்காக 22,000 கோடி ரூபாய்க்கான தொழில் ஒப்பந்தத்தை போட்டது இந்தியாவில்
உற்பத்தி செய்வதற்காகவா?
பரந்துபட்ட தொழில் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் அடிப்படையாக இருக்கும் சிறு/குறு
தொழில்களை ஊக்கிவிக்காமல் பகாசுர பன்னாட்டு கம்பனிகளுக்கு நமது சந்தையை
திறந்துவிடுவது எதற்காக?
இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி உட்பட அன்னிய முதலீட்டிற்கு ரத்தின கம்பளம் விரித்திருப்பது
யாருடைய லாபத்திற்காக?
தமிழகத்தின் வாழ்வாதாரச் சிக்கல்களான முல்லைப் பெரியாறு, காவிரி, மேகதாடு அணை,
மீனவர்கள் படுகொலை போன்ற எந்த சிக்கலுக்கும் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை
எடுக்கவில்லையே ஏன்?
தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டம், அழிவு திட்டங்களான கூடங்குளம் அணு உலைகள்,
தேனி ந்யூட்ரினோ திட்டம், தாது மணல் கொள்ளை போன்ற திட்டங்களை மத்திய மாநில அரசுகள்.
ஊக்குவிப்பது எதற்காக?
ஈழத்தமிழர்களுக்கான நீதி, மறுவாழ்வு, சுயாட்சி மற்றும் ஏழு தமிழர்களின் விடுதலை போன்ற
சிக்கல்களுக்கும் உறுப்படியான நடவடிக்கைகள் இல்லையே ஏன்?.
இறுதியாக, இந்தியாவின் பன்முகத்தன்மையை குலைத்து இந்துத்துவ வெறியாட்டங்களுக்கான,
காவிப்படைகளின் களமாக இந்தியத் துணைக்கண்டம் மாற்றப்பட்டு வருகிறதே? . மதச்
சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களும், பழங்குடியினரும் அஞ்சி
வாழக்கூடிய நிலையை சங் பரிவாரங்கள் உருவாக்கி வருகின்றனவே? “காதல் புனிதப் போர்”
(”காதல் ஜிஹாத்”) என்றும் ”தாய் மதத்திற்கு திரும்புவது” (”கர் வாப்ஸி”) என்றும்
காந்தியடிகளை படுகொலைச் செய்த கோத்சேவுக்கு கோவில் கட்டுவதும், முசுலிம் மக்களுக்கான
வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும் என்றும் தாஜ்மகாலில் பூசை செய்ய அனுமதி வேண்டும் என்று
பா.ஜ.க தலைவர்கள் வெளியிடும் வக்கிரக் கருத்துக்களை மத்திய அரசு கண்டிக்கவில்லையே ஏன்?.
மத்திய அரசை விமர்சிப்பவர்கள் தேசத் துரோகிகள் என்கிறது பா.ஜ.க அரசு. மத்திய அரசை
விமர்சனம் செய்த சென்னையில் உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி மாணவர்களின்
“அம்பேத்கர்-பெரியார் கல்வி வட்டம்” தடை செய்வதற்கு மத்திய அரசே காரணம்.
காவிமயமாக்கலுக்கு எதிராக எழுப்பபடும் குரல்வளை நசுக்கப்படுகிறது. கருத்துச்
சுதந்திரம் மறுக்கப்படுகிறது.
ஆக, மக்களின் அடிப்படையான பிர்ச்சனைகள் எதற்கும் முகம் கொடுக்காத பா.ஜ.க அரசு அறிவித்த
“நல்ல காலம் பிறக்கும்” என்ற வாக்குறுதி மரணித்து ஒராண்டாகிவிட்டது. அதற்கு அஞ்சலி
செலுத்துவோம்!
பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரு முதலாளிக்கும் சாமரம் வீசும் இந்துத்துவ பாசிச ஆட்சியை
வீழ்த்த ஜன நாயக சக்திகளே ஒன்று திரள்வோம். மக்கள் அதிகாரத்தை நிறுவ தன்னாட்சி தத்துவத்தை
உயர்த்திப் பிடிப்போம்.
ஊழலற்ற ஆட்சி அமைய; மதவாதத்திலிருந்து நாட்டை மீட்க; புல்லுருவி முதலாளியத்தை வீழ்த்த
சூளுரைப்போம்!
- பொன்.சந்திரன்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 1, 2015, 1:07:05 PM6/1/15
to brail...@googlegroups.com
தேர்தல் அரசியலில் இருந்து
அந்நியப்படும் மக்கள்
8
விவரங்கள்
எழுத்தாளர்: இராமியா
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 01 ஜூன் 2015
மக்களுக்கு வாக்குரிமை அளித்து இருப்பதே ஜனநாயம் என்றும், அதன் மூலம் மக்களின் அனைத்துப்
பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் கூறி
வருகிறார்கள். அது மட்டும் அல்ல. அதன் மூலம் மட்டும் தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேட
வேண்டுமே ஒழிய வேறு வழி வகைகளைப் பற்றிச் சிந்திப்பதே பயங்கரவாதம் என்றும் அவர்கள்
கூறுகிறார்கள்.

ஆனால் தேர்தல் மூலம் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா?

நம் நாட்டில் இலவச அரிசி, இலவச உரல், இலவச உலக்கை என்ற பெயரில் மக்களின் வாக்குகளைப்
பெறும் தேர்தல் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஒரு தனி மனிதனை இந்திரன், சந்திரன் என்று
புகழ்ந்து, ஊடகங்களில் உயர்த்திப் பிடிப்பதன் மூலம் வாக்குகளைப் பெறும் அரசியல்வாதிகளும்
இருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளால் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பது
ஒரு புறம் இருக்கட்டும்; புரிந்து கொள்ளக் கூட முடியாது என்பது தான் உண்மையான
நிலைமை. இதனால் வாக்களிப்பதில் எந்த விதமான பயனும் இல்லை என்று புரிந்து கொணடு உள்ள
பலர் வாக்குச் சாவடிக்குச் செல்வதே இல்லை. வாக்களிக்க மறுப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்
கொண்டே வருவதைக் கண்ட முதலாளித்துவ அறிஞர்கள், இப்பொழுது பொருட்படுத்தத்
தேவையில்லாத அளவில் இருக்கும் இவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்தால்,
முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு எதிரான கருத்து வலிமை பெற ஆரம்பித்து விடும்
என்று அஞ்சி, நாங்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை (NOTA – none of the above) என்று
என்று பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ள ஆரம்பித்து உள்ளனர். இவ்வாறு செய்தால்
இவர்களுடைய எதிர்ப்பு தனிப்பட்ட மனிதர்களுக்குத் தான் என்று பிரச்சாரம் செய்து,
முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்தை மறைத்து விட விரும்புகின்றனர்.

கல்வி அறிவு குறைந்து உள்ள "புண்ணிய பூமியான" இந்தியாவில் தான் மக்கள் அரசியலில்
இருந்து அந்நியப்பட்டு இருக்கிறார்கள் என்றால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற கல்வி
அறிவும், அரசியல் அறிவும் பெற்றுள்ளதாகக் கருதப்படும், வளர்ந்த நாடுகளின் மக்களும் தேர்தல்
அரசியலில் இருந்து அந்நியப்படும் போக்கு வளர்ந்து கொண்டு வருகிறது. இதைப் பற்றி
பிரிட்டன் செய்தி நிறுவனம் (BBC) 2.5.2015 அன்று ஒரு ஆய்வுரையை வெளியிட்டது.

அமெரிக்காவில் கிளிண்டன், புஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ஆதிக்கத்தில் இருந்து வருவது
குறித்து, சாதாரண மக்களிடையே மட்டும் அல்லாது, அரசியல்வாதிகளிடையேயும் அதிருப்தியை
ஏற்படுத்தி இருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா பிரிட்டன் ஆகிய இரு
நாடுகளிலும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 20% இலிருந்து 30% வரை குறைந்து உள்ளதைச்
சுட்டிக் காட்டி, மக்கள் தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்பட்டு வருவதாக அந்நிறுவனம்
கூறி உள்ளது. இவ்வாறு தேர்தல் அரசியலில் மக்கள் ஆர்வம் இழந்து கொண்டு இருக்கும் நிலையில்
அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளை, அரசியல் பிழைப்புவாதிகள் சூழ்ந்து கொண்டு
ஆட்டிப் படைக்கும் நிலை உருவாகி உள்ளது. (Professional polticians tend to be
surrounded by political professionals.) இதனால் தரமான அரசியல்வாதிகள் அழிந்து
போகும் உயிரினங்களைப் போல் ஆகிவிட்டனர். (Conviction politicians have arguably
become something of an endagered species.) அதாவது பிரிட்டனும், அமெரிக்காவும்
அரசியலில் இந்தியாவைப் போல் ஆகிக் கொண்டு இருக்கின்றன. இனி இந்தியர்கள் தான் உலக
அரசியலுக்கு வழிகாட்டி என்று பெருமைப்பட்டுக் கொளளலாம்.

சரி! நாம் பெருமைப்பட்டுக் கொள்வது ஒரு புறம் இருக்கட்டும். மக்கள் தேர்தல் அரசியலில்
இருந்து அந்நியப்படாமல் இருந்தால் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடுமா?
அதாவது தேர்தலில் மக்கள் தீவிரமாகப் பங்கு கொண்டு, தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண
முடியுமா?

முடியாது என்று சே குவாராவும், ஃபிடல் காஸ்ட்ரோவும் கூறினார்கள். முடியும் என்று
சிலி நாட்டின் சால்வடார் அலெண்டே (Salvador Allende) கூறினார். அவ்வாறு கூறியது
மட்டும் அல்லாமல் மக்களிடையே அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். 1970 ஆம் ஆண்டில்
தேர்தலில் வெற்றியும் பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவி ஏற்ற பொதுவுடைமைக்
கட்சியைச் சேர்ந்த முதல் (ஒரே) அதிபர் என்ற புகழையும் பெற்றார். ஆனால் அவரால் தொடர்ந்து
நிலைத்து நிற்க முடியவில்லை. அவர் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கிய
உடனேயே, சிலி நாட்டின் முதலாளிகளும், அமெரிக்க உளவாளிகளும் அவரை ஒழித்துக் கட்டும்
திட்டத்தைத் தீட்டத் தொடங்கி விட்டனர். அவர்கள் 11.9.1973 அன்று அலெண்டேயையும் அவரது
கூடடாளிகளையும் கொன்று விட்டனர். முக்கியமாக, அலெண்டேயைக் கொன்றதிலும் மனம் ஆறாத
அவர்கள் அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அடக்கம் செய்வதற்கு உடலே கிடைக்காதபடியும்
செய்து விட்டனர்.

மக்கள் வாக்களித்து, தேர்தலில் வெற்றி பெற்ற அலெண்டே, தேர்தல் சமயத்தில் அளித்த
வாக்குறுதியை நிறைவேற்ற முனைந்த போது, அவர் வெட்டிக் கொல்லப்படுகிறார் என்றால்,
முதலாளித்துவத் தேர்தல் என்பது எந்த விதத்திலும் நம்பிக்கைக்கு உரியது அல்ல என்று
தெளிவாக விளங்குகிறது அல்லவா? முதலாளித்துவ முறையை ஒப்புக் கொள்வதற்கும், அதனால்
ஏற்படும் கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொள்வோம் என்பதற்குமான அடிமை முறிச் சீட்டு தான்
முதலாளித்துவத் தேர்தல் முறை.

மக்கள் தங்கள் பிரச்சிகைளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் அதற்குச் சமதர்ம (சோஷலிச)
முறையே சரியான வழியாகும். மற்றவர்களை அடிமை கொள்ளும் ஆசை இருந்தால் சமதர்ம அமைப்பில்
அது முடியாது. மற்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு.

தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்படும் மக்களே! இவ்வாறு அந்நியப்படுவது பிரச்சினைக்கான
தீர்வை நோக்கிய முதல் படியாக இருக்கலாம். அப்படி முதல் படியிலேயே இருப்பது பயனை
விளைவித்து விடாது. தொடர்ந்து சமதர்ம சமூகம் அமைக்கவும் அணியம் ஆக வேண்டும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.5..2015 இதழில் வெளி வந்துள்ளது)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 1, 2015, 1:09:35 PM6/1/15
to brail...@googlegroups.com
தமிழ்ச் சமூகத்தில் தாலி
8
விவரங்கள்
எழுத்தாளர்: இல.கணபதி முருகன்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 01 ஜூன் 2015
தமிழ் மகளிர் தாலி அணிந்தமை பற்றிய வாத விவாதங்களும், பட்டி மன்ற சர்ச்சைகளும் சூடு
பிடித்துள்ள இவ்வேளையிலும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தாலி அணிதல் பற்றிய வரலாற்று
உண்மைகள் நம் முன் கொட்டிக்கிடக்கின்றன அவற்றை சீர் தூக்கிப் பார்த்து உண்மையை ஊருக்குச்
சொல்வது நமது சந்ததிகள் முறையான கலாச்சார பாதையில் பயணிக்க ஏதுவாகும்.
தமிழர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை இன்று, நேற்று வந்ததல்ல.
பன்னெடுங்காலத்திற்கு முன்னமே நம் முன்னோர்களின் பட்டறிவினால் உருவானதாகும். மனிதன்
தோன்றி நாகரீக வளர்ச்சியடைந்த படிநிலை வளர்ச்சியின் போது நாடு காவலுக்காக எழுந்த
போர்ச்சமூகத்தில் குழந்தைப்பேறு ஊக்குவிக்கப்பட்டது. இடைக்காலகட்டத்தில் பேரரசுகள்
உதயமானதால் ஏற்பட்ட படைகளின் பெருக்கம் இதற்கு தூபம் போட்டது. இக்காலத் தில்தான்
பிள்ளைப்பேறுக்கும் பெண்களின் மார்பகங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாக தமிழர்கள்
கருதினர். பழந்தமிழகத்தில் பிள்ளைப்பேற்றினை ஊக்குவிக்கும் வகையில் ஆண்களே, தாம் திருமணம்
செய்ய விருக்கின்ற பெண்ணுக்கு வரதட்சணையை கொடுத்தனர். இதனை “முலைவிலை” என்று
அழைத்தனர். இதுவே பின்னர் வடமொழியில் ஸ்ரீதனம் என்றாகி சீதனம் என்று திரிந்தது.
ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியில் முலைவிலை பற்றிய விரிவான குறிப்பை தருகிறார். இந்த
அடிப்படையில்தான் வளமையின் குறியீடாக மார்பில் தாலி அணியப்படுவது சிறப்பானதாக
கருதப்பட்டு அணியப்பெற்றது. மேலும் தத்துவார்த்த ரீதியிலான கற்பிதங்கள் தாலி அணிவது
தொடர்பாக இதன் பின்னரே எழுந்தது. அங்கீகரிக்கப்பட்ட உறவின் அடையாளச் சின்னமாகவே தாலி
இவ்வேளையில் கருதப்பட்டது.
சங்க காலத்திற்குமுன்னரே தாலிப் பனையின் ஓலையினை சுருளாக நூலில் கட்டி ஆண்மகன்
மணப்பெண்ணிற்கு அணியும் வழக்கம் இருந்தது. ஆதலால்தான் தாலி ஓலையை தந்த மரத்திற்கு
தாலிப்பனை என்ற பெயரே இன்றளவும் வழங்கப்படுகிறது. மங்கலநாண் அணிகின்ற வழக்கத்தை
பொறுத்தமட்டில் சங்க காலத்தில், கடலோடிகளான மீனவர் தம் மனைவிமார்கள் சுறாவின் எலும்பிலான
தாலியினை அணிந்திருந்தனர். கடல் வணிகம் செய்து பொருளீட்டிய வணிகர்களான நானாதேசிகள்
(நான்கு திசைகளுக்கும் சென்று வியாபாரம் செய்தவர்கள்) குல பெண்கள் பொன்தாலி
சூட்டியிருந்தனர். தாலி என்பது காலந்தோறும் பல்வேறு பொருள்களில் வழங்கி வந்தமையத் தமிழ்
இலக்கியங்கள் கூறுகின்றன. ஐம்படைத்தாலி, புலிப்பல்தாலி, நவரத்தினதாலி, மணித்தாலி,
எயிற்றுத் தாலி, போன்றவையை பருவ அடிப்படையில் அணியப்பட்டு வந்தமையை பரவலாக தமிழ்
இலக்கியங்கள் பேசுகின்றன.
கண்ணகி திருமணத்தின் போது நிகழ்ந்த சடங்கினை இளங்கோவடிகள் குறிப்பிடுகையில் “அகலுள்
மங்கல அணி எழுந்தது” என்னும் சொற்றொடரில் குறிக்கிறார். மங்கல அணி என்பதைக்கொண்டு தாலி
கட்டியதாக கூறிவிட முடியாது என்கின்றனர் திராவிட வரலாற்றாளர்கள். ஆனால் கோவலன் தன்னை
விட்டு பிரிந்து மாதவியிடம் வாழ்ந்தபோது ‘மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்’ என்று கூறி
கண்ணகி தாலி அணிந்ததை இளங்கோவடிகளே உறுதி செய்கிறார். சங்க நூலான புறநானூற்றில்
“ஈகையரிய இழையணி மகளிர்’ என்னும் வரிகள் மற்ற அணிகளைத் தானமாக தரலாம், அலங்காரம்
தேவையற்ற காலங்களில் அவற்றை நீக்கி விடலாம். ஆனால் தாலி மட்டும் கழுத்தை விட்டு நீங்காது
என்ற கருத்தினையே உணர்த்துவதாக கூறலாம். சிலப்பதிகாரத்திலேயே வருகின்ற மற்றொரு பாடல்
தாலி அணியும் வழக்கம் காணப்பட்டதை சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்கிறது. கண்ணகி,
கோவலனது திருமணத்திற்காக பொன் உருக்கிய செய்தியினை சிலப்பதிகாரம்,
‘தரவுருக்கப் பொன்னிடவே தக்க கணிதரையழைத்து
வரைவிலிப்போ முகூர்த்தமிட மிக்க பசும்பொன் –வாங்கிக்
கரமதனாற் தான்நிறுத்துக் கடுகவர் கையோழுத்தார்
கொடுத்த பசும்பொன் வாங்கிக் குடைபிடித்தே
எடுத்தாங்கே பாளமாக இயல்பாகவே நீட்டி
அடுத்தங்கே தக்குகொட்டி ஆவதான பணிகள் செய்து’
எனக் கூறக் காணலாம்.
அதேபோல சங்க இலக்கியமான புறநானூற்றில் இடைக்குன்றூர் கிழார் தலையாலங்கானத்து செருவென்ற
நெடுஞ்செழியனை போர்க்களத்தில் எதிரிகளை போர்க்களத்தில் கொல்லாது, அவர்தம் மனைவிமார்கள்
நாணம் கொண்டு இறந்து போகுமாறு அவரவர் ஊர்வரையிலும் துரத்திச் சென்று கொன்றான்.
இந்நிகழ்வினை கூறும் ‘மாண் இழை மகளிர் நாண’ என்னும் பாடலிலும் தாலி பற்றிய குறிப்பு
வருகிறது. சங்கப்புலவர் நக்கீரர் பாடிய நெடுல்வாடையில் தலையாலங்கானத்து செருவென்ற
நெடுஞ்செழியனை போரின்பொருட்டு பிரிந்த அவனது மனைவி கோப்பெரும்தேவி, நெடுஞ்செழியனை
பிரிந்த காரணத்தால் அணிகலன்கள் எதுவும் அணியாமல், அலங்காரம் செய்யாமல், மகரக்குழை அணிந்த
காது வெறுமையாக இருக்க, குழையணிந்த வடுவுடன் வண்ணம் தீட்டப்படாத ஓவியமாக காட்சியளித்த
நிலையிலும் தன் நெஞ்சில் குத்துகின்ற தாலியை அணிந்திருந்தாள் என்று வர்ணிக்கிறது (அடிகள்
136-147).
இம்மட்டுமன்றி பல்லவர் காலம் தொட்டு தமிழர்கள் பின்பற்றிவந்த தேவதாசி முறையில் தாலி
அணியும் வினோத வழக்கமும் காணப்பட்டது.
பருவமடையாத .பதினோரு வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை கோயிலுக்கு அர்ப்பணிக்கும் வழக்கமே
தேவதாசி முறையாகும். கோயில் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இவர்களை தேவரடியவர், கணிகையர்,
கோயில் பெண்டுகள், தளிச்சேரிப்பெண்டுகள், பதியிலார், கோயில் அணங்குகள் என்றெல்லாம்
இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இம்முறையின்படி கோயிலுக்கு நேர்ந்து
விடப்படும் பெண்கள் சீரிய சடங்குகளுடன் உறவினர் புடைசூழ கோயிலுக்கு அர்பணிக்கப்படுவர்.
இச்சடங்குகளுக்கு ஆகும் செலவினை மற்றும் மன்னனோ அல்லது ஊர் சபையோ ஏற்றிருந்தனர்.
இந்நிகழ்வின் போது கோயிலின் சார்பாக பெண்ணை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு கோயிலின் அர்ச்சகர்
(தலைமை பூசாரி) பொட்டுத்தாலி என்ற தாலியை சிறுமிக்கு அணிவிப்பார். சைவ ஆலயங்களுக்கு
உரிய தேவதாசிகள் பொட்டுத்தாலியில் சூலத்தையும் வைணவ ஆலயங்களைச் சேர்ந்தவர்களாயின் சங்கு,
சக்கரதையும் அடையாளமாக கொண்டிருந்தனர். இம்முறை பக்தி இயக்க காலத்தில் அதாவது பல்லவர்கள்
காலத்தில் (கி.பி ஆறாம் நூற்றாண்டு) தோற்றம் பெற்று பின்னர் சோழர்களால் ஏற்றமும் பெற்றது.
தாலி அணிகின்ற வழக்கம் தொடக்கத்தில் குடும்ப மகளிருக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது.
கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கணிகையர்களை புனிதப்படுத்தும் நோக்கில் குடும்ப மகளிரைப்
போன்று தாலி அணிய அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய மாற்றம் நிகழ்ந்த வேளையில்தான் சைவ
ஆலயங்களைச் சேர்ந்த தாலி அணிந்த தேவதாசிகளை சிவமங்கலி என்னும் பெயரில் அழைத்தனர் இதுவே
நாளடைவில் குடும்ப பெண்களையும் குறிக்கும் வகையில் சுமங்கலி என்றானது. தீர்க்க சுமங்கலி
என்ற சொல்லாடலிலும் மறைபொருளாக தேவதாசிகளையே தமிழ்ச்சமூகம் அழைத்தது.
ஆண்டாள் திருமணத்தின்போது தாலி அணிகின்ற வழக்கம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையே என்ற
ஐயம் எழலாம். தாலி அணிகின்ற வழக்கம் அனைத்து சமூகத்தினாராலும் கட்டாய அணிகலனாக
எப்போதுமே அடையாளப்படுத்தப்படவில்லை. அவரவர் வழக்கத்திற்கேற்ப தாலி அணிவதில் விதி
விலக்குகளும் இருந்தன. சோழர் கல்வெட்டுகளில் பெண்கள் தங்களது பொன்தாலியை திருக்கோயில்
ஸ்ரீபண்டாரத்தில் அடமானம் வைத்து பணம் பெற்று சோழப்பேரரசுக்கு நிலவரி செலுத்தியதாக
செய்திகள் உள்ளன.
தாலி பொன்னில் செய்யப்பெற்ற காலத்திற்கு பின்னரே தமிழர்கள் தத்தம் சமூகத்திற்குரிய
குலக்குறி அடையாளங்களையும் மங்கல நாணில் பொறித்துக் கொண்டனர். மரம், விலங்குகள்,
பிறைச்சந்திரன், குன்றினைக்குறிக்கும் முக்கோண வடிவம் போன்றவையெல்லாம் இன மரபின்
அடையாளமாக பொறிக்கப்பட்டன.
தாலி அணியும் வழக்கம் பற்றி நாம் தொல்லியல் சுவடுகளை தேடுகின்ற அதே நேரத்தில் தற்போதைய
வடிவத்திலான தாலி கிடைக்கவில்லை என்றாலும் அதற்காக தமிழர்கள் தாலி அணியும் வழக்கத்தை
பின்பற்றவே இல்லை என்று கருதுதல் அறியாமையே. பண்டைத்தமிழர் திருமணச் சடங்கில்
பாசிமணிகளுக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு மணப்பெண்ணிற்கும் அணிவிக்கப்பட்டது.
தமிழக அகழாய்வுகளில் எண்ணற்ற அளவில் பாசிமணிகள் கிடைத்துள்ளதைக்கொண்டு இவ்வுண்மையை
உணரலாம். திராவிட இனக்கிளை வழியினராக கருதப்படுகின்ற முண்டா இன மக்களிடம் இன்றும்
தாலி மணிக்கற்களைக் கொண்டும் பாசியினைக் கொண்டும் திருமணச்சடங்கில் பயன்படுத்தப்படுவதைக்
கொண்டு இதனை உறுதி செய்து கொள்ளலாம். தமிழ்ச்சமூகம் சிலவற்றில் பவளம், பாசிகள்
போன்றவற்றை ஒவ்வொரு திருமண ஆண்டு எண்ணிக்கை கூடும்போதும் அதற்கு தக்கவாறு பாசிமணிகளை
அதிகரித்து அணிகின்ற வழக்கம் தற்காலத்திலும் தாலி பெருக்குதல் என்ற பெயரில் நடைமுறையில்
உள்ளது.
உண்மை இவ்வாறிருக்க சங்க காலம் அதனை தொட்டு வந்த பிற்காலத்திலும் ஏறாத்தாழ இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் பின்பற்றி தமிழ்க் கலாச்சாரத்தில் இரண்டற கலந்து விட்ட
மங்கலநாண் ஏதோ சமீபத்தில் ஏற்பட்ட வழக்கமாக கூறுவது வரலாற்றை புறந்தள்ளுவது போன்றதாகும்.
- இல.கணபதி முருகன், இயக்குநர். திராவிட வரலாற்று ஆய்வுக்கழகம், துணைப் பேராசிரியர்,
வரலாற்றுத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 1, 2015, 1:12:11 PM6/1/15
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
மின்மினிப் பூக்கள்
8
விவரங்கள்
எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கவிதைகள்
C வெளியிடப்பட்டது: 01 ஜூன் 2015
ஒரு
ஆப்பிள் பழத்தின் மேல்
பச்சை நிறத்தில்
பட்டாம்பூச்சி ஒன்று
ஒட்டிக் கொண்டிருந்தது...
மின்மினிப் பூச்சிகள்
பூக்களெனப் பூத்திருந்தன
வயலட் நிறச்
செடிகளுக்கு நடுவே...
தண்டவாளப் பூவொன்றைச்
சிதைத்து விடாமல்
சற்றே வளைந்தவாறு
நகர்ந்து சென்றிருந்தது
அந்த ரயில்...
நட்சத்திர வானத்தில்
மழை பெய்து
கொண்டிருந்தது
அந்த இரவில்...
அதற்கும்
அடுத்த பக்கத்தில்
ஆரஞ்சு நிறச் சூரியன்
கண் சிமிட்டிச்
சிரித்துக் கொண்டிருந்தது,
அந்தக் குழந்தை
வரைந்து கொண்டிருந்த
ஓவியப் புத்தகத்தில்...
- கிருத்திகா தாஸ்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 1, 2015, 1:16:09 PM6/1/15
to brail...@googlegroups.com
தோட்டிக்குச்சியும் கொள்ளிக் குடமும்
8
விவரங்கள்
எழுத்தாளர்: கட்டாரி
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கவிதைகள்
C வெளியிடப்பட்டது: 01 ஜூன் 2015
அவன்... செத்திருந்தான்
அல்லது.. இதனால் செத்திருக்கலாம்
என்னும் சந்தேகங்களுக்குப்
பேச்சளிக்காமல்..
அவன் செத்திருந்தான்.........!
அவனது... தோட்டிக் குச்சி
மரத்தில் வழக்கம்போலவே
சாய்த்து வைக்கப்பட்டிருந்தது....
அவன் தூர்த்து அள்ளியிருந்த
தெருக்கள்... சுத்தங்களைத் தின்று
குப்பைகளை
ஏப்பமிட்டுக் கொண்டிருந்தன...
அழுது கொண்டிருந்த அவனின்
பிள்ளைகளுக்குத் தெரிந்தது
போல... குப்பைகளுக்கும்
தோட்டிக் குச்சிக்கும்
அவன்.. செத்து விட்டிருந்தது
தெரியாமலிருக்கலாம்....
அவன் பிணமாய் வந்திருந்த
முச்சந்தி கடக்கையில்..
தெருக்களை அடைத்து வழி மறுக்கப்பட...
பழக்கம் மாற்றாது
உயர்திணைகளுக்குப் பயந்து மடங்கிய
பிணம் என்னும் அவனும்
வேறுவழி
பயணித்திருந்தான்....
கொள்ளிக் குடம் உடைத்த
தண்ணீர்.... வழிமறுக்கப்பட்ட
தெருக்களில் ஓடிக்கொண்டிருக்க .....
பானைச் சில்லுகளைப் போலவே
குப்பைகளும்...
தோட்டிக் குச்சியும்
அவனாகியிருந்த பிணமும்...
யாருக்கும் கேட்காமல்
உரக்கக் கத்திக் கொண்டிருக்கலாம் ..
நாங்கள்
அஃறிணைப் பொருள்களென்று...........
- கட்டாரி

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 1, 2015, 1:25:22 PM6/1/15
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
இந்து என்றால் என்ன?
8
விவரங்கள்
எழுத்தாளர்: பெரியார்
தாய்ப் பிரிவு: திசைகாட்டிகள்
பிரிவு: பெரியார்
C வெளியிடப்பட்டது: 01 ஜூன் 2015
பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர் களுக்கு முதலில் பிறந்த
நாள் கொண் டாடினார்கள் - அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்!
periyar 250
கடவுளுக்கு இலக்கணம் கூறியவர் கள் கடவுள் இறக்காதவன், பிறக்காத வன் உருவம் அற்றவன் என்று
கூறி விட்டுப் பிறகு, கடவுள் பிறந்தான் - சிவன் பூரத்தில் பிறந்தான்; கிருஷ்ணன்
அட்டமியில் பிறந்தான்; இராமன் நவமி யில் பிறந்தான்; கணபதி சதுர்த்தியில் பிறந்தான்; கந்தன்
சஷ்டியில் பிறந்தான் என்று கூறி விழாக்கள் - உற்சவங்கள் கொண்டாடினார்கள்.
பிறகு நிஜமாகவே பிறந்தவர்களுக் கும், பிறக்காதவர்களுக்கும் அவர்கள் செய்தவைகளையும்,
செய்யாத சங்கதி களையும் புகுத்தி விழாக் கொண்டாடி னார்கள். அதுதான் ஆழ்வார்கள் திரு
நட்சத்திரம், நாயன்மார்கள் பிறந்த நாள் குருபூசை என்பது போன்றவை.
இவை எல்லாம் மக்களை முட்டாளாக் குவதற்கான ஒரு கொள்கையினைப் பிரச்சாரம் செய்யவே இப்படிச்
செய்கின்றார்கள்.
பிறகு, இப்போதுதான் நிஜமாகவே பிறந்தவர்களுக்கும், நிஜமாகவே தொண்டு செய்தவர்களுக்கும்,
செய்கின்றவர்க ளுக்கும் பிறந்த நாள் விழாக்கள் நடக் கின்றன. அதுதான் எனது பிறந்தநாள்.
அண்ணா பிறந்த நாள். காந்தி பிறந்த நாள். காமராஜர் பிறந்த நாள் போன்றவை.
இதுவும் யார் யார் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றதோ அவர்களின் தொண்டினைப் பிரசாரம்
செய்யவும் - பரப்பவுமே செய்யப்படுகின்றன.
அதில் ஒன்று தான் எனது பிறந்த நாள் என்பதும் ஆகும். இப்படி எனது பிறந்த நாள்
கொண்டாடுவதை எனது கொள்கையினைப் பிரசாரம் செய்ய வாய்ப்பென்று கருதியே நானும் அனு
மதிக்கிறேன். மக்களும் எனது தொண் டுக்கு உற்சாகம் உண்டு பண்ணும் வகை யில் பணம் பல
பொருள்கள் முதலியன வும் அளிக்கின்றீர்கள்.
நாங்கள் யார் என்பதை நீங்கள் நன்றாக உணரவேண்டும். நாங்கள் சமுதாயத் தொண்டுக்காரர்களே தவிர
அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் தேர்தலுக்கு நிற்பதோ, ஓட்டுக்காகப் பொதுமக்களிடம் வருவதோ
எங்கள் வேலை அல்ல. நாங்கள் பதவிக்குப் போகக்கூடாது என்பதைக் கொள்கை யாகத் திட்டமாகக்
கொண்டவர்கள்.
நாங்கள் யார் பதவிக்கு வந்தாலும் எங்கள் கொள்கைக்கு அனுசரணையாக நடக்கக் கூடியவர்களாக
இருந்தால் ஆதரிப்பதும் எதிர்ப்பவர்களாக முரண் பாடு உடையவர்களாக இருந்தால் எதிர்ப் பதும்
தான் எங்களுடைய வேலையாக இருந்து வந்து இருக்கின்றது.
எங்களுடைய பிரதானத் தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டு தான். சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கப்
பாடுபடுவது தான் ஆகும்.
இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்ய இன்றைக்கு 2000 ஆண்டுகளாக எவனுமே முன்னுக்கு வரவே
இல்லை. வேண்டுமானால் நமது சமுதாயத்தை மேலும் மேலும் இழிதன்மையிலும்,
அடிமைத்தனத்திலும், ஆழ்த்தக்கூடிய தொண்டுகளைச் செய்யக்கூடியவர்கள் வேண்டுமானால் ஏராளமாகத்
தோன்றி இருக்கின்றார்கள்.
இப்படிச் சமுதாயத் தொண்டு செய்ய முன் வந்தவர்கள் நாங்கள் தான். நான் தான் என்று சற்று
ஆணவமாகக் கூறுவேன். எங்கள் பிரச்சாரம், தொண்டு காரணமாக இன்றைக்கு எந்தப் பார்ப் பானும்
நம்மை இழிமக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சொல்லத்
துணியவில்லை. நாங்கள் முன்பு சொன்னோம். சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி என்று
சொன்னோம். அதன் காரணமாகப் பார்ப்பான் மனதுக்குள் நம்மைச் சூத் திரன் என்று எண்ணிக் கொண்டு
இருந் தாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.
முன்பு ஓட்டல்களில் சூத்திரருக்கு ஓர் இடம், பார்ப்பானுக்கு வேறு இடம் என்று இருந்தது.
ரயில்வே உணவு விடுதிகளி லும் பார்ப்பானுக்கு வேறு இடம், சூத்திரனுக்குத் தனி இடம்
என்று இருந்ததே! இது மட்டும் அல்ல. சர்க்கார் ஆபீசுகளிலும், பள்ளி களிலும், கல்லூரி
களிலும் பார்ப்பானுக்கு வேறு தண்ணீர்ப் பானை சூத்திரர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்று
இருந்ததே. இவை எல்லாம் இன்று எங்கே போயின? எங்கள் பிரச்சாரம் காரணமாக அடியோடு ஒழிந்து
விட்டது.
அடுத்துப் பார்ப்பான் உத்தியோகத் துறையில் பெரும் பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு
ஆதிக்கம் செலுத்தி வந்தான். பெரும் பெரும் பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களும், பியூன் லஸ்கர்,
போலீஸ்காரர்கள் போன்ற சிறு வேலைகள் தான் நமக்கும் இருந்தன. இன்றைக்கு அத் துணையும் தலை
கீழாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு உத்தியோகத்துறை - எந்தவித மான உத்தியோகமாக இருந்தாலும்
நமது மக்களுடைய கையில் தான் உள்ளது.
இன்றைக்கு அரசியல் துறையிலாகட் டும், மற்ற மற்றத் துறையில் ஆகட்டும் பார்ப் பனர்கள் ஆதிக்கம்
ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையிலும் நாம் இழி மக்களாக தாழ்த்தப்பட்ட மக்களாக சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு
வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம்.
இதற்கு இனி பார்ப்பானைக் குறைகூறிப் பயன் இல்லை. பார்ப்பான் யாரும் உன்னை இன்று இழி மகன்,
சூத்திரன் என்று சொல்லவில்லையே! பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நீங்கள் தானே தங்களை ஆமாம்
நாங்கள் சூத்திரர்கள் தான் என்று கூறிக் கொள்ளும் முறையில் நடந்து கொள்கின்றீர்கள்.
இங்குக் கூடியிருக்கின்ற நீங்கள் எல் லாம் எங்களைத் தவிர, தி.மு. கழகத்தில் பகுதிப்
பேர்களைத் தவிர, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ப்பனர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெட்கம்,
மானம், ஈனம் இன்றி இந்துக்கள் என்று தானே சொல்லிக் கொள்கின்றீர்கள்.
இந்து என்றால் என்ன பொருள்? இந்து என்றால் பார்ப்பானைப் பொறுத்தவரையில் உயர்வு பொருள்
உண்டு. பார்ப்பனர் அல்லா தாருக்கு இந்து என்றால் என்ன பொருள்? சூத்திரர், தாசிபுத்திரர்கள்
என்பதுதானே.
இந்து என்றால் எப்படி அய்யா நாங்கள் தாசி புத்திரர்கள் ஆவோம் என்று கேட்கக் கூடும். அதற்கும்
பதில் கூறுகின்றேன். இந்து மதப்படி இருவிதமான பிரிவுகள் தான் உண்டு. ஒன்று பிராமணன்.
மற்றொன்று சூத்திரர்கள். இதன்படி பார்ப்பானைத் தவிர்த்த மற்றவர்களாகிய நீங்கள் சூத்தி ரர்கள்
தானே. எவனோ எழுதி வைத்தான் இந்து என்றால், நான் எப்படிச் சூத்திரன் என்று கேட்க நினைக்கலாம்.
அவர்களுக்கு விளக்குகின்றேன். நீங்கள் குளித்து முழுகி, பட்டுடுத்தி, தேங்காய், பழம்
எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போகின் றீர்கள். போகின்ற நீங்கள் தங்கு தடை இன்றி நேரே உள்ளே
போகின்றீர்களா? இல்லையே! ஒரு குறிப்பிட்ட இடம் போன தும் மின்சாரம் தாக்கியவன் போல
`டக்கென்று நின்று கொள்கின்றீர்களே ஏன்? அதற்கு மேலே கர்ப்பக் கிரகத்துக்குள் போகக் கூடாது.
போனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று நிற்கின்றீர்கள். ஏன்? எப்படித் தீட்டுப்பட்டு
விடுகின்றது. நீ சூத்திரன். ஆகவே, நீ உள்ளே போகக் கூடாது என்பது தானே! பார்ப்பான்
யாரும் உன்னை உள்ளே வர வேண்டாம், வந்தால் தீட்டுப் பட்டுப் போய்விடும் என்று கழுத்தைப்
பிடித்து நெட்டவில்லையே! நீயாகத் தானே வெளியே நின்று நான் சூத்திரன் என்று காட்டிக்
கொள்கின்றாய்.
அடுத்து, நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே - எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப்
பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப்
போகும் என்றுதானே வெளியே நிற்கின் றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து
என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி
மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப் பாட்டி மக்கள் தானே!
உங்களுக்குப் புத்தி வந்து மானம், ரோஷம் பெற்று உங்களை இழி மக்களாக - சூத்திரர்களாக
ஆக்கி வைத்துள்ள இந்து மதத்தையும், கோயிலுக்குப் போவதையும், சாமியைக் கும்பிடுவதையும்
விட்டு ஒழித் தால் ஒழிய நீங்கள் மனிதத்தன்மை உடைய மக்களாக, மானமுள்ள மக்களாக ஆக முடியாதே.
இனிப் பார்ப்பானேயே குறைகூறிப் பிரயோசனம் இல்லை. உங்களுக்குப் புத்தி வந்து இவற்றை
விலக்கி முன்னுக்கு வரவேண்டும்.
அப்படிச் செய்யாமல் நாங்கள் இன்னும் 100 ஆண்டு கத்தியும், பிரச்சாரம் செய்தும் ஒரு மாற்றமும்
செய்ய முடியாதே!
தோழர்களே! இந்த மதமும், கடவுளும், கோயிலும் இல்லாவிட்டால் மனிதச் சமுதாயம் எதிலே
கெட்டு விடும்?
இன்றைக்கு ரஷ்யாவை எடுத்துக் கொள் ளுங்கள். அங்கு உள்ள மக்களுக்குக் கட வுளும், மதமும்,
கோயிலும் கிடையாதே. சிறுவர்கள் கடவுள் என்றால் என்ன என்று கேட்பார்களே.
அந்த நாடு கடவுளை, மதத்தை, கோயிலை ஒழித்த நாடானதனால் அங்குப் பணக்காரன் இல்லை. ஏழை
இல்லை. உயர்ந்தவன் இல்லை. தாழ்ந்தவன் இல்லை. காரணம் கடவுள், மதத்தை ஒழித்த காரணத் தினால்
பேதமான வாழ்வு ஒழிந்துவிட்டது. மக்கள் மக்களாகவே வாழ்கின்றார்கள்.
மற்ற நாட்டு மக்கள் தங்கள் அறிவு கொண்டு முன்னேறுகின்றார்கள். நாம் அறிவற்ற மக்களாக,
காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.
தோழர்களே! இன்று மானமுள்ள - யோக்கியமுடைய மக்களுக்கு நடக்கக் கூடாத எல்லாம் இன்றைக்கு
அரசி யல் பேரால் நடந்துகொண்டு இருக்கின்றது. காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலிய
காலித்தனங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி
நடக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? 51 பேர்கள் சொல்கின்றபடி 49 பேர்கள் நடப்பதற்குப் பேர்
தானே ஜனநாயகம். அதனை விட்டு, பெருவாரியான மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்துப்
பதவிக்கு வந்தவர்களே - பதவிக்கு வர வாய்ப்பு இழந்தவர்களும், எதையோ எதிர்பார்த்து
ஏமாந்தவர்களும், காலிகளையும், கூலிகளையும் தூண்டி விட்டுக் காலித்தனம், ரகளை, தீ வைப்பு
முதலியவற்றின் மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்த்துப் போடலாம் என்று முயற்சி செய்து வருகின்றார்கள்.
தோழர்களே! நான் இப்போது சொல்ல வில்லை. இந்த நாட்டிற்கு என்றைக்கு ஜனநாயகம் என்று
கூறப்பட்டதோ அன் றைக்கே காலிகள் நாயகம் தான் ஏற்படப் போகின்றது. காலித்தனம் தான் தலை
விரித்து ஆடப் போகின்றது என்று சொன் னேன். இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்புத்
தெரிவிக்கின்றவர்கள் இந்த ஆட்சி இன் னது செய்ய வில்லை. இன்ன கோளாறு செய்தது. ஆகவே,
ஒழியவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லையே.
காலித்தனத்தின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் கனவு காண்கின்றார்கள். சொத்துகள்,
பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன - நாசப் படுத்தப்படுகின்றது என்றால் இது பொதுமக்கள் உடைமை
அல்லவா? கோடிக்கணக்கில் நாசமாவது பற்றி எந்தப் பொதுமக்களுக்கும் புத்தியே இல்லையே.
நாளுக்கு நாள் காலித்தனம், ரகளை, நாசவேலைகள் எல்லாம் அரசியல் பேரால் வளர்ந்த வண்ணமாகவே
உள்ளன.
தோழர்களே! இன்றையத் தினம் நாம் தமிழர்கள் ஆட்சியில் உள்ளோம். இன் றைக்கு நாம் நல்ல வாய்ப்பு
உள்ள மக் களாகவே உள்ளோம். நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம்
படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.
இன்றைக்கு ஆளுகின்ற மந்திரிகளை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரும் தமிழர்கள் - பார்ப்பனர்
அல்லாதவர் களாகத் தானே இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானுக்குக் கூட இடமே இல்லையே! அசல்
தனித்தமிழர் மந்திரி சபையாக அல்லவா உள்ளது.
இன்றைக்கு அய்க்கோர்ட்டில் 18 ஜட் ஜுகள் உள்ளார்கள் என்றால், 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாத
மக்களாக உள்ளார் களே. எந்தக் காலத்தில் அய்யா இந்த நிலை நமக்கு இருந்தது.
பியூன் வேலை, பங்கா இழுக்கின்ற வேலை தானே நமக்கு முன்பு இருந்து வந்தது. சகல
துறைகளிலும் வேலைகளி லும், பதவிகளிலும் பார்ப்பான் தானே புகுந்து கொண்டு ஆதிக்கம்
செலுத்தினான்.
இன்றைக்கு அந்த நிலை இருக்கின் றதா? அடியோடு மாறி விட்டதே. சகல துறைகளிலும்
பார்ப்பனர் அல்லாத மக்கள் தானே இன்று உத்தியோகங்களிலும், பதவிகளிலும் இருக்கின்றார்கள்.
இதற்கு எல்லாம் காரணம் இந்த ஆட்சி அல்லவா? தமிழர் நலன் கருதிக் காரியம் ஆற்றும் இந்த
ஆட்சிக்கு விரோதமாக நடந்து கொள்கின்றவனை எப்படித் தமிழன் என்று ஒப்புவது?
இன்றைக்கு எம்.ஜி.ஆர். பெயரில் கலவரம் நடைபெற்றது. இது யோக்கிய மில்லாத, தேவை இல்லாத
கலவரம் ஆகும். ஓர் ஆட்சியை ஒழித்து ஒரு கட்சி பதவிக்கு வரவேண்டும் என்றால், காலித்தனம்
தான் பரிகாரமா? எனவே, நாட்டின் பொது ஒழுக் கம் அரசியல் பேரால் மிக மிகக் கெட்டுப்
போய்விட்டது என்று எடுத்துரைத்தார்கள்.
மேலும், பேசுகையில், எம்.ஜி.ஆர். சுயநலம் காரணமாக தி.மு. கழகத்தில் இருந்துப்
பிரிந்து அதனை எதிரிக்குக் காட்டிக் கொடுக்க முன்வந்தமை பற்றியும் திண்டுக்கல் தேர்தலில்
பெண்கள் சினிமா மோகம் காரணமாக எம்.ஜி.ஆர். கட்சிக்கு ஓட்டுப் போட்ட கேவல நிலைபற்றியும்
விளக்கினார்கள்.
-------------------------------------------
29-5-1973 அன்று புதுவையிலும், 30.5.1973 அன்று வில்லியனூர், முதலியார்பேட்டை ஆகிய
ஊர்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு-"விடுதலை", 12.6.1973.
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (oviyat...@gmail.com)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 4, 2015, 1:33:38 PM6/4/15
to brail...@googlegroups.com
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம்
நிறைவேறுமா?
8
விவரங்கள்
எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்
தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம்
பிரிவு: பெரியார் முழக்கம் - மே 2015
C வெளியிடப்பட்டது: 04 ஜூன் 2015
மத்திய அரசுக்கான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மூன்றாக வகைப்படுத்தும் பரிந்துரையை
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசிடம் அளித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஜாதிகளுக் கிடையே முன்னேறிய ஜாதியினர்,
பின்தங்கிய நிலையில் உள்ள ஜாதியினருக்கான வாய்ப்புகளைப் பறித்து விடுவதால் அனைத்து
ஜாதியினருக்கும் சமவாய்ப்பு வழங்குவதே இதன் நோக்கம் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர்
ஆணையம் கூறுகிறது.
ஜாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு, அனைத்துப் பிரிவினருக்கும் சமத்துவம் வழங்குவதே
இடஒதுக்கீட்டின் நோக்கம். எனவே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் மிகச்
சரியானது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நோக்கம் வரவேற்கப்பட வேண்டியது தான்.
ஆனால், சமூகநீதிக்கு ‘நந்தி’களாக நிற்கும் உச்சநீதிமன்றங்களும், பார்ப்பன அதிகார வர்க்கமும்
உண்மையில் சமத்துவத்தை நோக்கி, இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிப்பார்களா என்ற நியாயமான
சந்தேகம் எழவே செய்கிறது.
முதலில், மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக் கீட்டில் 7
சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்று அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 27 சதவீத
இடஒதுக்கீட்டை முழுமையாக நிரப்புவதற்கு கடந்தகால காங்கிரஸ் ஆட்சியிலும் இப்போது
நடக்கும் பா.ஜ.க. ஆட்சியிலும் எந்தத் தீவிரமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இரண்டாவதாக - மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை கூடுதலாகப்
பயன்படுத்திக் கொண்ட ஜாதிப் பிரிவுகள் எது? பயன்படுத்தவே இயலாத ஜாதிப் பிரிவுகள்
எது? என்பது குறித்து அரசிடம் எந்த தகவல்களும் புள்ளி விவரங்களும் இல்லை. இதற்கு
அடிப்படையாக ஜாதியடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று
சமூகநீதி இயக்கங்கள் வலியுறுத்தி வரும் கோரிக்கையை கடந்தகால ஆட்சியும் ஏற்கவில்லை.
இப்போது நடக்கும் பா.ஜ.க. ஆட்சியும் செவிசாய்க்க வில்லை. எனவே, ஜாதிவாரியாக
கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 27 சதவீதத்தைவிட
அதிகமாக இருந்தால், அதற்கேற்ப ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, அதற்குள் வாய்ப்பு மறுக்கப்பட்ட
ஜாதிப் பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க முன் வருவதே சரியான நடவடிக்கை ஆகும்.
மூன்றாவதாக - இப்போது ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார வரம்பு, மத்திய அரசின்
இடஒதுக்கீட்டுப் பிரிவில் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோரில் ஒரு
பிரிவினர் இடஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டனர். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில்
‘கிரிமிலேயர்’ அடிப்படையில் இடஒதுக்கீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு, அதற்குத்
தகுதியானவர்கள் கிடைக்காத நிலை வந்தால், ‘கிரிமிலேயரிலிருந்து’ விலக்கம் செய்து,
பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பளிக்கும் முறை குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் தனியார் துறையில் சமூகநீதி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு
கிடக்கிறது. இது குறித்து, பரிசீலிப்பதாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல்
அய்ந்தாண்டு ஆட்சி மக்களுக்கு தந்த வாக்குறுதி காற்றில் பறந்து போய்விட்டது.

சமூக-பொருளாதார அரசியலில் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் ஆதிக்கவாதிகளாக உள்ள
ஜாட் பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்’
சேர்க்கவில்லை. ஆனால், அவர்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்து பிற்படுத்தப் பட்டோர்
ஆணையத்தின் கருத்துகளைப் புறந்தள்ளி, மன்மோகன்சிங் ஆட்சி பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில்
சேர்த்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தது. மோடி ஆட்சியும் ‘ஜாட்’ பிரிவினரை
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கே உச்சநீதிமன்றத்தில் ஆதரவு தெரிவித்தது. ஆனால்,
உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, சமூகநீதிக்காகவும், சமத்துவத்துக்குமான இடஒதுக்கீட்டை
வாக்குவங்கி அரசியலுக்குப் பயன்படுத்தவே தேர்தல் அரசியல் கட்சிகள் பயன்படுத்த
முயற்சிக்கின்றன. பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் செழுமையாக்கப்பட வேண்டும். அதில்
அடங்கியுள்ள அனைத்து ஜாதியினருக்கும் சமத்துவம் கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட
வேண்டும் என்பதில் முழுமையான நியாயம் உண்டு. குறிப்பாக இடஒதுக்கீட்டில் முன்னணியில் உள்ள
தமிழகத்தில் இந்த மாற்றங்கள் தேவைப்படுகிறது.
ஆனால், பிற்படுத்தப்பட்டோரின் 27 சதவீத ஒதுக்கீட்டில் பாதியளவைக்கூட நிரப்பாமல் 120
நாடாளுமன்றத் துறை செயலாளர்களில் ஒரு தாழ்த்தப்பட்டவரையோ, பிற்படுத்தப் பட்டவரையோ
நுழைய விடாமல், தடுப்புச் சுவர் எழுப்பிக் கொண்டுள்ள மத்திய ஆட்சிகளிடம் பிற்படுத்தப்பட்ட
பட்டியல் பிரிவினரையே மூன்றாகப் பிரித்து, சமத்துவம் வழங்கும் கோரிக்கையை முன்
வைப்பதில் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது? இதை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டு, மற்றொரு
பொருளாதார அளவுகோலைத் திணித்து, சமூகநீதியையே புதை குழிக்கு அனுப்பி
விடுவார்களோ என்ற சந்தேகம்தான் மேலோங்குகிறது.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 9, 2015, 1:43:02 AM6/9/15
to brail...@googlegroups.com, Thamaraikkannan B
சத்திய மூர்த்தி அய்யரின் ஜாதி
வெறிக்கு சான்றுகள்!
8
விவரங்கள்
எழுத்தாளர்: கொளத்தூர் மணி
தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம்
பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2015
C வெளியிடப்பட்டது: 08 ஜூன் 2015
தோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல்
வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல்
அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, முதல்
படியை நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பேரன் மார்டின் செல்வம், டாடாஸ் இரவி,
பசு. கவுதமன், த.பரமசிவம், கோவி. லெனின் ஆகியோர் பெற்றுக் கொண்ட னர்.
‘நக்கீரன்’முதன்மை ஆசிரியர் கோவி. லெனின் திறனாய்வு செய்தார். நூலாசிரியர் கவி
ஏற்புரை வழங்கினார்.
நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி.
பாரதிதாசன் திராவிட நாடு கேட்டு, பின்பு பெரியாருக்கு எதிராக தமிழ்நாடு என்று
மாற்றிக் கொண்டார் என்று சிலர் சொல்கிறார்கள். பெரியாரையே அவர் எதிர்த்தார் என்கிறார்கள்.
பாரதிதாசன் எப்போது மாற்றிக் கொண்டார் என்று வரலாற்றைப் படித்துப் பார்த்தால் தெரியும்.
எப்போது பெரியார் 1956இல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியார் சொன்னாரோ
அப்போது பாரதிதாசனும் மாற்றிக் கொண்டார். பெரியார் திராவிட நாட்டைக் கைவிட்டு,
‘தமிழ்நாடு’ என்ற நிலைக்கு வந்த பிறகுதான், புரட்சிக் கவிஞரும் மாற்றிச் சொல்கிறார்.
1956 பதிப்புக்குப் பிந்தைய ‘குயில்’ இதழ்களிலெல்லாம் தமிழ்நாடு என்று மாற்றினார்.
அவ்வளவுதான். ஆனால், இதை வைத்துக் கொண்டு இவர்கள் ஏதோ புதிய கண்டுபிடிப்பை
செய்ததுபோல் பேசிக்கொண்டு திரிகிறார்கள்.
பெரியாரை குறை சொல்பவர்கள் எல்லாம் அவர்கள் ஏதோ புலனாய்வு செய்து கண்டுபிடித்ததாக
சொல்ல முடியாது. பெரியாரே எழுதி வைத்ததை வைத்துத்தான் சொல்கிறார்கள். ஒளிவு மறைவு
இல்லாத தலைவர் பெரியார். “பெரியார் தன்னை கன்னட பலிஜா நாயுடு என்று சொல்லிக்
கொண்டார்” என்று ஒரு பக்கம் பேசுகிறார்கள். ஆமாம் சொன்னார். எப்போது சொன்னார்?
1926ஆம் ஆண்டு, ‘விதவா விவாக விளக்கம்’ என்ற நூலை, திருசிரபுரம் சி.பி.
இராஜகோபால் நாயுடு என்பவர் எழுதியிருக்கிறார். அதற்கு மதிப்புரையை பெரியார்
எழுதுகிறார். அப்படி எழுதும்போதுதான் தன் வீட்டில் தன் தங்கை மகளுக்கு மறுமணம் செய்து
வைத்ததை எழுதுகிறார். அப்போது எழுதும்போது சொல்கிறார், “நான் இந்த ஜாதியில்
பிறந்தவன். எங்கள் ஜாதியில் மறுமணம் செய்து வைக்கும் வழக்கம் இல்லை” என்று சொல்லிவிட்டு
சொல்கிறார் - பெருமைக்காகச் சொல்லவில்லை. அவர்கள் வைத்திருந்த பழக்கத்தை முறியடித்தேன்,
உடைத்தேன் என்று சொல்வதற்காகத் தான் சொல்கிறாரே தவிர, தான் பெருமைமிக்க ஜாதியைச்
சார்ந்தவன் என்பதற்காக சொல்லவில்லை.இந்த ஒரு இடத்தை வைத்துக் கொண்டு சொல்கிறார்கள், அவர்
தன் ஜாதியை பெருமையாகச் சொல்லிக் கொண்டார் என்று.
இந்த நூலைப் பார்க்கிறபோது சில செய்திகளை நான் சொல்லிவிட வேண்டும். எல்லாவற்றையும்
நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஒரு செய்தி, பார்ப்பனர்கள் ஆணவம் மிக்கவர்களாக
இருந்தார்கள் என்பதற்கு ஒரு செய்தி இதில் பதிவாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர்
சத்தியமூர்த்தி அய்யர் ஒருதெருவில் குடியிருக்கிறார். அந்தத் தெருவுக்குப் பெயர்
தணிகாசலம் செட்டித் தெரு. அந்தத் தெருவில் குடியிருக்க அவருக்கு விருப்பமில்லை.
ஏனென்றால், ஒரு செட்டியின் பெயரால் இருக்கும் தெருவில் நான் குடியிருப்பதா என்பது
அவரது நோக்கம். இவர் இரங்கசாமி அய்யங்கார் தெரு என்று மாற்ற முயற்சி செய்கிறார்.
ஏனென்றால் சத்தியமூர்த்தி அய்யர் மேயராக வேறு இருக்கிறார். தனது மேயர்
பதவியைப்பயன்படுத்தி, தனது தெருவின் பெயரை மாற்ற முய்றசிக்கிறார். அதை பெரியார்
இயக்கம் முறியடித்தது என்பது வேறு. ஆனால், இது ஏதோ பெயர் மட்டுமல்ல, அவரது
வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக சில வார்த்தைகளை சொல்லிவிடுகிறேன்.
தணிகாசலம் செட்டியார் என்பவர் நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். என்ன தீர்மானம் என்றால்,
“பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கை, அவர்களுடைய மக்கள் தொகைக்கு சமவிகிதமாக வருகிற வரை
பார்ப்பனர்களை அரசு பதவிகளில் சேர்க்கக் கூடாது” என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு
வருகிறார். வழிமொழிந்து பேசிய உள்துறை அமைச்சர்,“அதெல்லாம் வேண்டாம்; கூடியவரை
பார்ப்பனரல்லாதார் வருகின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று முடித்துக் கொள்கிறார்.
அந்த கோபம் சத்திய மூர்த்தி அய்யருக்கு. சத்தியமூர்த்தி அய்யர் பெயர் சூட்ட விரும்பிய
ரெங்கசாமி அய்யங்கார் யார் என்பதையும் சொல்லி விட வேண்டும். இப்போதைய ‘இந்து’
பத்திரிகையின் முன்னோடி அவர். மத்திய சட்டமன்றத்தின் உறுப்பினர். தற்போது நாடாளுமன்றம்.
அப்போது மத்திய சட்டமன்றம். அங்கே போகிறார். அங்கு ஒரே ஒரு பார்ப்பனரல்லாதார்தான்
உறுப்பினராக இருக்கிறார். அவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார். பதவிக்காக
நீதிக்கட்சியிலிருந்து சுயராஜ்ய கட்சிக்குப் போய் பதவியைப் பெற்றவர். பதவிக்காகக் கட்சி
மாறுவது அப்போதும் இருந்திருக்கிறது. நம்ம ஆட்களும் செய்திருக்கிறார்கள். அப்போது
ரங்கசாமி அய்யங்கார் ஒரு கேள்வியை முன் வைக்கிறார், “சட்ட மன்றத்தில். தமிழ்நாட்டில் சம
உரிமைக்கு எதிராக சில சாதிகளுக்கு மட்டும் அதிக வாய்ப்பு கொடுக்கிற சட்டவிரோத
செயல் நடக்கிறது. அதை இந்த அமைச்சர் நீக்குவாரா” என்று வெள்ளைக்கார உள்துறை அமைச்சரைப்
பார்த்துக் கேட்கிறார். உள்துறை அமைச்சர் சொல்கிறார், “எது சமத்துவத்திற்கு எதிராக
இருந்தாலும் அதை நீக்கிவிடுவோம்” என்கிறார்.
அய்யங்கார் ஏன் அப்படி கூறினார்? ஒரே நம்பிக்கை. சபையில் இருப்பது ஒரே ஒரு ஆள்
பார்ப்பனரல்லாதவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்.அவரும் நம் கட்சியைச் சேர்ந்தவர் என்று
நினைத்துக் கொண்டு பேசுகிறார். ஆர்.கே. சண்முகம் செட்டியார் வெள்ளைக்கார உள்துறை
அமைச்சரைப் பார்த்துக் கூறுகிறார், “அது வாய்ப்பு பறிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பில்லாமல்
புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கிற முறை” என்று அவர் பேசத் தொடங்கியவுடனேயே
உள்துறை அமைச்சர் குறுக்கிட்டு, “புரிந்து கொண்டேன். என் பதிலை திரும்பப் பெற்றுக்
கொள்கிறேன்” என்று சொல்கிறார். அதனால்தான் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்ட
தணிகாச்சலம் செட்டியார் தெருவில் குடியிருக்க, சத்தியமூர்த்தி அய்யர் விரும்பவில்லை.
இடஒதுக்கீடு வேண்டாம் என்று நாடாளு மன்றத்தில் போய் பேசிய இரங்கசாமி அய்யங்கார் தெருவில்
இருக்க வேண்டும்.
இதுதான் இந்த சத்தியமூர்த்தி அய்யர் ஆசை. அதுதான் பெயர் மாற்றத்தின் பின்னால் இருக்கிற
வரலாறு. இந்த சத்தியமூர்த்தி அய்யர் மேயராக இருந்தார் என்றால் எப்படி மேயராக இருந்தார்?
தேர்தலில் நின்று வெற்றி பெற்றாரா? பெரும்பான்மையான காங்கிரஸ் உறுப்பினர்கள்
தேர்ந்தெடுத்தார்களா? என்றால் அதுவும் இல்லை. நீதிக்கட்சி பெரும்பான்மையாக இருந்தபோது,
அதன் மேயராக இருந்த சர்.ஏ.இராமசாமி முதலியார் எல்லா வகுப்பினரும் மேயராக வரவேண்டும்
என்ற காரணத்திற்காக ஆண்டுக்கொரு ஜாதியை சேர்ந்தவர் வருவதற்கான திட்டம் வகுக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு மேயர். ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அளிக்க வேண்டும்.
அது இஸ்லாமியர்களுக்கு, கிறித்துவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட
வர்களுக்கு என்றெல்லாம் பிரித்தளிக்கிறார். அப்படிப் பார்க்கிறபோது நீதிக்கட்சி
பெரும்பான்மைதான் ஒரு பார்ப்பனரை மேயராகத் தேர்ந்தெடுக்கிறது. அதனால் மேயரானவர்,
சத்தியமூர்த்தி அய்யர் தேர்தலில் வெற்றி பெற்று மேயரானவரில்லை.
அவர் மேயரானபோதுதான் ‘வணக்கத்திற்குரிய மேயர்’ (worshipful) என்ற சொல்லை பயன்படுத்த
வேண்டும் என்று அறிக்கை விட்டவர். அதற்கு முன்பு அந்த சொல் இல்லை. His Excellency
என்று கேள்விபட்டிருக்கிறோம். ‘வணக்கத்திற்குரிய’ என்ற சொல்லை, தனக்கு வழங்க வேண்டும்
என்று அவரே போட்டுக் கொண்டார், சத்தியமூர்த்தி அய்யர். தச்சாச்சாரி, கொல்லாச்சாரிகூட
விசுவ கர்மப் பிரிவைச் சார்ந்தவர்கள், தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக்
கூடாது என்று இராஜகோபாலாச்சாரி ஒரு அரசாணை போட்டார். எதுக்கெல்லாம் சட்டம்
போடுகிறார்கள்? அதுவும் முறியடிக்கப்பட்டுவிட்டது. திரும்பப் பெறப்பட்டது. அப்படிப்பட்ட
சின்னச் சின்ன செயல்களையெல்லாம்கூட இந்த நூல் பதிவு செய்கிறது. 1929இல் பெரியார் மலாயா
பயணம் போனதைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். பயணத்தின்நோக்கைப் பற்றியெல்லாம் விரிவாக
எழுதியிருக்கிறார். பெரியார் கிண்டலாகச் சொல்கிறார். மூடநம்பிக்கைப் பற்றியெல்லாம்
சொல்கிறார்.
ஆங்கில அதிகாரிகள், பெரியார் பயணித்த கப்பலை நோக்கி படகில் வருகிறபோது, “உள்ளத்தில்
பதட்டமும் முகத்தில் மட்டும் சிரிப்பையும் காட்டிக் கொண்டிருந்தோம்” என்று பெரியார்
எழுதுகிறார். ‘உள்ளத்தில் பதட்டம். எங்கடா திருப்பி அனுப்பி விடுவார்களோ என்று. ஆனால்
முகத்தில் மட்டும் சிரிப்பைக் காட்டி, அவர்களை வரவேற்றோம்’ என்று எழுதுவார். அதேபோல்,
பெரியார் கப்பலில் ஏறி போனபோது “எப்போதும் போல் இல்லாமல் கடல் அமைதியாக இருந்தது.
ஏரிபோல் இருந்தது. நீங்கள் வந்ததால்தான் கடல் அமைதியாக இருக்கிறதாம்” என்று பெரியாரைப்
பார்த்து கும்பிட்டார்களாம். இந்த மூடநம்பிக்கையையும் பெரியார் சுட்டிக் காட்டுகிறார்.
அங்கே போனபோது ‘பிள்ளை வரம்’கேட்க வந்தார்களாம்.
பெரியார் இன்னொரு இடத்தில் சொல்லுவார். வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈடுபட்டபோது,
திருவாங்கூர் சமஸ்தான அரசர் பெரியாரின் நண்பர். வடநாடு போகிற போதெல்லாம்
கேரளாவிலிருந்து வரும்போது ஈரோட்டில் இறங்கி தொடர் வண்டி மாறவேண்டும்.
அப்போதெல்லாம் அரசர் பெரியார் வீட்டில் தங்கியிருந்துவிட்டு போவதுதான் வழக்கம். “சில
மாதங்களுக்கு முன் போகும்போதுகூட அரசரும் அவரது பரிவாரங்களும் என்னுடைய வீட்டில்
தங்கி இருந்த நட்பின் காரணமாக போராட வந்த எனக்கு வரவேற்புக் கொடுத்தார்கள்.
பெரியாருக்கு அன்பளிப்பாக மோதிரத்தையும் கொடுத்தனுப்பியிருக்கிறார். “மன்னிக்க
வேண்டும். நான் போராட வந்திருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள் நான் போராட்டத்துக்கு
செல்கிறேன்.அவருக்கு நன்றியை சொல்லுங்கள்” என்று பெரியார் மறுத்து விடுகிறார்.
போராட்டம் நடக்கிறது. முதல்முறை பிடித்து ஒரு காவல் நிலையத்திலேயே ஒன்றரை மாதம்
வைத்து விட்டுவிடுகிறார்கள். மீண்டும் போராட்டம் நடத்துகிறார். என்னடா தொல்லையா போச்சு
என்று ஆறு மாதம் உள்ளே வைத்து விடுகிறார்கள்.
பெரியார் சிறைக்குள் இருந்தபோது, கூட இருந்தவர்கள் எல்லாம் அரசருக்கு யோசனை
சொல்லுகிறார்கள். இவனைப் போன்ற எதிரிகளை வீழ்த்தியாக வேண்டும். எதிரிகளை அழிப்பதற்கு
என்று ஒரு யாகம் இருக்கிறது. ‘சத்துரு சம்ஹார யாகம்’ நடத்தியாக வேண்டும் என்று யாகம்
செய்கிறார்கள். பெரியாருக்கு எதிராக அரசரைக் காப்பாற்ற யாகம் நடந்தது; ஆனால், யாகத்தில்
இருக்கும்போது அரசர் செத்து போய் விடுகிறார். அரசர் செத்தவுடன் ஜெயிலில் இருப்பவர்கள்
எல்லாம் பேசுகிறார்களாம் - “பெரியார் இவரைவிட சக்தி வாய்ந்தவர். யாகத்தாலும் ஒன்றும்
செய்ய முடியவில்லை. யாகத்தையே திருப்பிவிட்டார்” என்று. “எனக்கு மரியாதை மிகவும்
கூடிவிட்டது. வந்தவர்களெல்லாம் வணக்கம் கூறி ஆசி கோர ஆரம்பித்து விட்டார்கள்” என்று
பெரியார் எழுதியிருக்கிறார். அந்த வைக்கம் போராட்டத்துக்குப் போனபோதுகூட இந்த
மூடநம்பிக்கைகள் அங்கு எதிரொலிக்கின்றன என்று பெரியார் சொல்கிறார்.
(தொடரும்)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 9, 2015, 1:56:17 AM6/9/15
to brail...@googlegroups.com
வெட்கம்!
மகாவெட்கம்! பொறியாளர்கள் சிறப்பு பூஜை நடத்த நீர்வளத் துறை சுற்றறிக்கை
8
விவரங்கள்
எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்
தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம்
பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2015
C வெளியிடப்பட்டது: 08 ஜூன் 2015
தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள நீர்வள ஆதாரத் துறை மேட்டூர் உள்பட தமிழக
நீர் தேக்கங்களில் நீர் நிரம்புவதற்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று
சுற்றறிக்கை விடுத் துள்ளது. இந்தத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளரான
சோ. அசோகன், துறையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு இந்த சுற்றறிக்கையை
அனுப்பியிருக்கிறார். (சுற்றறிக்கை நகல் நம்மிடம் உள்ளது) அதில்,
“மேட்டூர் அணையில் நல்ல நீர்வரத்து, நீர் இருப்பினைப் பெறுவதற்கும் மற்ற அணைகளில் நீர் நல்ல
இருப்பினைப் பெறுவதற்கும், இயற்கை அன்னையின் அருள் வேண்டி அந்தந்த கோட்டங்களின் ஆளுகைக்கு
உட்பட்ட முக்கிய கோயில்களில் வருகிற 1.6.2015 அன்று சிறப்பு பூஜைகள் செய்திட உரிய
ஏற்பாடுகள் மேற்கொள்ள செயற் பொறியாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பூஜைகள்
மேற்கொள்ளப்பட்ட விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு 2.6.2015 அன்று காலை 10 மணிக்குள்
மின்னஞ்சல் மூலம் தெரிவித்திட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத்
துறையே இப்படி பொறியாளர்களை பூஜை போடும் வேலைகளுக்கு பணிப்பது, தமிழ்நாட்டுக்கே
தலைகுனிவாகும்.
நீர்வளத் துறை பொறியாளராக இருப்பவர் ‘இந்து’வாகவும், ‘பூஜை’ சடங்குகளில்
நம்பிக்கையுள்ளவராகவும் இருக்க வேண்டும் என்பதை ஒரு நிபந்தனை யாகவே இந்த ஆட்சி
அறிவித்தாலும் வியப்பதற்கு இல்லை. ‘இந்து’ மதத்தைத் தவிர, வேறு மதத்தைச் சார்ந்தவர்கள்
எவரும் பொறியாளராக பணியாற்ற முடியாது என்பதும் இந்தசுற்றறிக்கை வழியாக பொதுப்
பணித்துறை சுட்டிக் காட்டியிருக்கிறது. கருநாடகம் காவிரி தண்ணீரைத் திறந்துவிடுவதற்கும்
இதேபோல் பூஜைகள் செய்யலாமே! உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளை ஏறியிருக்க வேண்டாமே!
இதேபோல் கருநாடக அரசும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விடாமல், தங்கள்
மாநிலத்தின் புதியதிட்டங்களுக்கே பயன்படுத்த சிறப்பு பூஜைகள் நடத்த உத்தரவிட்டால்
அப்போது, ‘பகவான்’ தமிழ்நாட்டின் பக்கம் நிற்பாரா? அல்லது கருநாடகத்தின் பக்கம் நிற்பாரா?
கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் கடும் மின்வெட்டு நிலவியபோது இதேபோல் மின்சாரம்
தாராளமாகக் கிடைக்க தமிழக மின் வாரியம், கோயில்களில் சிறப்பு பூஜைகளை ஏற்பாடு
செய்திருக்கலாமே! ‘அம்மா’வின் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற மொட்டை
அடிப்பது, மண்சோறு சாப்பிடுவது, யாகம் நடத்துவது எல்லாம் நடந்து முடிந்த பிறகும்
வழக்கு உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்குப் போவதை எந்தப் ‘பகவானாலும்’ தடுக்க
முடியவில்லையே! அதனால் என்ன? உச்சநீதிமன்றத்தில் ‘அம்மா’ விடுதலை பெற அடுத்தகட்ட
பூஜைகள், யாகங்கள் தொடங்கினால் போச்சு என்று கூறுவார்கள் போலிருக்கிறது!
இதற்கு முன் இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தது இல்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இப்போதாவது கோடையில் மழை பெய்திருக்கிறது. கடந்த ஆண்டு மழையே இல்லை. அப்போது
இப்படி சுற்றறிக்கைகள் வரவில்லை. இப்போது ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆனதற்காக, அணை
நீர் மட்டங்களின் பெயரில் இப்படி ஒரு சுற்றறிக்கை வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா, கருநாடக சிறையில் இருந்தபோது ஆயுத பூஜை வந்தது. அப்போது அரசு
அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் கொண்டாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி
ஆயுத பூஜையும் நடக்கவில்லை. இந்த பூஜைகளுக்கு எந்த நிதியிலிருந்து செலவு செய்யப்படும்
என்பது குறித்தும் விளக்கம் இல்லை. அதிகாரிகள் தங்களின் 10 சதவீதத்துக்கு உட்பட்ட சொத்துக்
குவிப்பு பணத்திலிருந்து செலவு செய்வார்கள் போலும்!

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 9, 2015, 2:12:34 PM6/9/15
to brail...@googlegroups.com
Tuesday, June 9, 2015
கல்வி கோழிப்பண்ணைகள்
தனியார் பள்ளிகளின் முறைகேடான கட்டண வசூலை கண்டித்து SFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள்
இன்று தமிழகத்தின் பல இடங்களில் நடத்தி உள்ள போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அடுத்த கட்டமாய்
இத்தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி
உண்மையை புரிய வைக்க வேண்டும். அதிகப்படியான கட்டணம் செலுத்துவது ஒருவித சமூக அநீதி
எனும் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தினாலே இப்போராட்டம் பெரும் வெற்றியை அடைந்து விடும்.
கல்விக் கோழிப்பண்ணைகள் ஐ.ஐ.டியை விட ஆபத்தானவை.

எனக்குத் தெரிந்த நுண்ணுணர்வும் தெளிவான சிந்தனையும் கொண்ட பெற்றோர்களே கூட தம்
பிள்ளைகளை லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். பிள்ளைகளுக்கு
முடிந்தவரை தம்மால் முடிந்த சிறப்பான வசதிகளை செய்து தர வேண்டும் எனும் பரிதவிப்பு
அனைத்து தட்டு பெற்றோர்களுக்கும் வந்து விட்டது. சிறந்த உடை, சிறந்த உணவு, சிறந்த சூழல்
போல சிறந்த கல்வியும் வாங்கக்கூடியது என நம்புகிறார்கள். நல்ல வசதிமிக்க பள்ளிக்கூடங்கள்
தேவை தான். ஆனால் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடத்து பேசும் போது அவர்களுக்கு
ஒன்றும் விசேச திறன்களோ புத்திசாலித்தனமோ இல்லை எனத் தோன்றுகிறது. இன்றைய வாழ்க்கை
நிலையை போட்டி மிகுந்ததாய் கற்பனை பண்ணி அதற்கு தோதாய் தம் பிள்ளைகளை பெற்றோர் உருவாக்க
நினைப்பதும் இக்குழப்பத்துக்கு காரணம்.
எல்லோரும் இவ்வாறு பந்தயக் குதிரைகளை உருவாக்க நினைப்பதும் இல்லை. என்னுடைய நண்பர்
ஒருவர் தன்னுடைய குழந்தைக்கான பள்ளியை எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதைக் கூறினார். அவர்
ஒரு பள்ளிக்கு சென்று விசாரிக்கிறார். அங்குள்ள மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன்
சுதந்திரமாய் இருப்பதை பார்க்கிறார். தன் மகன் அப்படி மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்
என்பதற்காய் அப்பள்ளியை தேர்ந்தெடுத்ததை சொல்கிறார். ஒருவர் தன் மகனின்
புத்திசாலித்தனத்துக்காய் லட்சக்கணக்கில் செலவழிக்க இன்னொருவர் மகிழ்ச்சிக்காய் அதே போல்
செலவழிக்கிறார். சுதந்திரமும் மகிழ்ச்சியும் வாழ்வில் இயல்பாகவே கிடைப்பது. அதற்கு ஏன்
லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும்?
சரி புத்திசாலித்தனம், திறமை? நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்க சென்னைக்கு வந்து
தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் படித்தேன். அங்கு வெளிநாட்டில், உயர்தர கான்வெண்டுகளில்
படித்த மாணவர்களுடன் போட்டியிட்டேன். என்னுடன் ஆங்கிலத்தை தாய்மொழியாய் கொண்டவர்கள் கூட
படித்தார்கள். நான் தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வாங்கினேன். இத்தனைக்கும்
இளங்கலை முதல் வருடம் படிக்கும் போது எனக்கு ஆங்கிலத்தில் ஒரு வரி தப்பில்லாமல் எழுதத்
தெரியாது. ஏன் மிகச்சிறந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்றவர்கள் என்னளவு
சோபிக்கவில்லை? இயற்கையான திறமையா? இல்லை. நான் மிக மிக சாதாரண மாணவன்.
ஒரே காரணம் தான். நான் சூழலுடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தேன். இது டார்வினின்
பரிமாணவியல் விதி தான். ஒரு சவாலை ஏற்றுக் கொண்டு போராடினால் மட்டுமே திறமை வளரும்.
இது உள்ளார்ந்த ஆர்வமாய் இயல்பாய் தோன்ற வேண்டும். பள்ளி, கல்லூரியில் உள்ள கடுமையான
தேர்வுகள் உதவாது. சிறந்த திறமையான மாணவர்களுடன் உங்கள் பிள்ளைகள் படிப்பதலே அவர்கள்
திறமையானவர்களாகப் போவதில்லை. இது ஒருவருடைய ஆளுமை சம்மந்தப்பட்டது. சூழலின்
அழுத்தம், போராடினால் ஒழிய நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள் எனும் பயம் இது தான் ஒருவரை
அடுத்த நிலைக்கு உயர்த்துகிறது. திறமையை இரட்டிப்பாக்குகிறது. இச்சூழலை செயற்கையாய்
உருவாக்க இயலாது. சிறு வயதில் இருந்தே தன்னை சிரமமான விசயங்களை செய்து
நிரூபிக்கும்படி ஒரு குழந்தையை தூண்டலாம். ஆனால் தூண்டப்படும் அளவுக்கு அக்குழந்தையின்
மன இயல்பு இருக்க வேண்டும்.
அடுத்து பத்து பன்னிரெண்டு வயதுக்குள் சிறந்த பயிற்சிகள் அளித்தால் அவற்றை பயன்படுத்திக்
கொள்ளும் அளவு நம் குழந்தைகளுக்கு மூளை முதிர்ச்சி இருக்குமா என ஐயம் உள்ளது. ஆரம்ப
நிலைக் கல்வி மிக முக்கியம் என கூறப்பட்டாலும் அடிப்படை பயிற்சியே போதுமெனத் தோன்றுகிறது.
ஆதாரமாய் எனக்கு மற்றொரு கேள்வி உள்ளது. குழந்தைகள் அதிகம் கற்பது பள்ளியிலா குடும்பச்
சூழலிலா? (மதிப்பெண் வாங்கும் எந்திரமாய் அவர்களை மாற்றுவது பற்றி கேட்கவில்லை)
குடும்பச் சூழலில் தான் என்பது என் நம்பிக்கை. குழந்தைகள் நமக்கே அறியாமல் நம்மை கவனித்து
கற்கின்றன. பெற்றோர்கள் அவர்களுடன் நிறைய நேரம் செலவழித்து நிறைய உரையாடுவது தான்
சிறந்த கல்விப் பயிற்சி. பெற்றோர்களுக்கு அதற்கான நேரமோ தகுதியோ மனப்பாங்கோ
இல்லாவிட்டால் அவ்விடத்தை ஒரு ஆசிரியரால் எடுத்துக் கொள்ள இயலாது.
சின்ன வயதில் அப்பா என்னிடம் மணிக்கணக்கில் பேசுவார், மாலையில் போதையேறின பின் அவருடைய
பிரதான பொழுதுபோக்கு நான் தான் (அப்போது கேபிள் டிவி இல்லை). என்னிடம் அண்ணா,
பெரியார் பற்றி பேசுவார். உன்னால் அண்ணாவைப் போன்று ஒரு வரி பேச முடிந்தால் வேறு
ஒன்றும் தேவையில்லை என்பார். இன்று நான் அண்ணாவாக இல்லை என்றாலும் ஒரு எளிய எழுத்தாளன்
ஆகியிருக்கிறேன். பத்து வயதுக்கு பிறகு அப்பாவின் போதை சலம்பல்களை கேட்பதை தவிர்த்தேன்.
பள்ளி, கல்லூரியில் எனக்கு நிறைய நல்ல ஆசிரியர்கள் வாய்த்தார்கள். அவர்கள் என்னிடம் நிறைய
பேசினார்கள். கற்பித்தார்கள். ஆனால் அவை எதுவும் அப்பாவின் சொற்கள் போல் என் மனதின் ஆழத்தில்
போய் தைக்கவில்லை. அவரது அந்த உளறல்களை கேட்காவில்லால் நான் மற்றொரு மனிதனாகி இருப்பேன்.
தேசிய விருது வாங்கின உத்தரா உன்னிக்கிருஷ்ணனை எடுத்துக் கொள்ளுங்கள். சதா இசை
புழங்கும் வீட்டுச்சூழல் தான் அக்குழந்தையின் உள்ளார்ந்த திறனை தூண்டி சோபிக்க செய்துள்ளது.
அதே போன்ற இசைச்சூழல் வேறு பத்து குழந்தைகளுக்கு கிடைத்தால் அவர்களில் நால்வராவது
நிச்சயம் இசையில் சிறப்பாய் வெளிப்படுவார்கள். ஆனால் ஒரு பாட்டு வாத்தியாரிடம் மாலை
வகுப்புக்கு அனுப்புவது இதற்கு பரிகாரமாகாது.
தமிழின் சிறந்த எழுத்தாளர்கள் இருபது பேரிடம் சென்று அவர்களுக்கு எப்படி மொழியில்
ஈடுபாடு வந்ததென கேளுங்கள். பெரும்பாலானோர் பள்ளியை காரணம் சொல்ல மாட்டார்கள்.
விஷ்வநாதன் ஆனந்தை அவரது அம்மா எவ்வாறு சிறுக சிறுக பயிற்சி அளித்து உருவாக்கினார்
என அறிவீர்கள். பெற்றோருக்கு எது தெரியுமோ, எதில் ஆர்வம் அதிகமோ அதை பிள்ளைகளுக்கு
கடத்தி விட்டால் போதும். அதை வைத்து அவர்கள் தம்மை மேலெடுப்பார்கள். நீங்கள் சினிமா
வெறியர் என்றால் பிள்ளையை கைப்பிடித்து திரையரங்குகளுக்கு அழைத்து செல்லுங்கள். சேர்ந்து
டிவி பாருங்கள். அது பற்றி தொடர்ந்து பேசுங்கள். முக்கியமாய் பிள்ளைகளுக்கு ஏற்றபடி
நீங்களும் குழந்தைகள் போல் நடக்காமல், பிள்ளைகளை வளர்ந்தோர் போல் நடத்துங்கள். சரிசமமாய்
உரையாடுங்கள். அது ஒரு பொறியைத் தூண்டலாம். வளர்ந்து பல்வேறு விசயங்களைக் கற்று வேலை
செய்து தனிப்பட்ட வாழ்வில் பல இழப்புகளை சந்தித்து நிலைப்பெற்ற பின் அவனுக்கு ஒளிகாட்டக்
கூடியதாய் அந்த இளவயது தருணங்கள் தாம் இருக்கும். ஆரம்பப்பள்ளியிலோ மேல்நிலைப்பள்ளியிலோ
ஆசிரியர் கற்பித்த இலக்கணமோ இயல்பியலோ அல்ல.

பள்ளிக்கூடங்கள் தகவல்களை கற்பிக்கலாம். ஆனால் நம்பிக்கைகளை விதைக்க முடியாது.
நம்பிக்கைகள் தாம் வலுவான ஆளுமை கொண்ட மனிதர்களை உருவாக்குகின்றன.
Posted by Abilash Chandran at 7:36 AM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 9, 2015, 2:32:36 PM6/9/15
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
Friday, June 5, 2015
கார்த்திக் நேத்தாவின் திரைப்பாடல்கள்
தமிழில் நவீன கவிதை என்றும் அருகிப் போன மூலிகை போன்ற வஸ்து தான். ஆனால் அதன் வீச்சை
இன்று விகடனில் வரும் கவிதைகளில் இருந்து திரைப்படப் பாடல்கள் வரை பார்க்க முடிகிறது.
குறிப்பாய் சமகாலப் பாடல்களில் வரும் உவமைகளைச் சொல்லலாம். எழுபது எண்பதுகளில்
கவிதையில் உருவகம் பிரதானமாய் இருந்தது. மு.மேத்தாவின் “நெம்புகோல் கவிதை” ஒரு
உதாரணம். பிறகு தொண்ணூறுகளில் குறியீடு மற்றும் படிமம். “நடக்கும் இடமெங்கும் பொன்மணல்”
எனும் பிரமிள் வரியைச் சொல்லலாம். இப்போது கவிதையின் அச்சாணியாக உவமை இருக்கிறது.
நேரடியான, கதைகூறும் பாணியிலான எளிய கவிதை தான் இன்றைய பாணி. நேரடியான
கவிதையில் உக்கிரமான உணர்ச்சியை சொல்வதற்கும், அதை எளிமையாக வைப்பதற்கும் உவமை ஏற்றது.
சமீப காலத்தில் நினைக்கும் போதெல்லாம் என்னை உலுக்க வைக்கும் உவமை இது.
“வாய்க்குள் உலகத்தை
அடக்கிய கண்ணனைப் போல
உள்ளங்கைக்குள் அடக்குகிறேன்
உன் குறியை” (மனுஷி, “குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்”)

சமகால திரையிசைப் பாடல்களில் வரும் உவமைகளில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று “காத்தோடு
தூத்தல் போல போறானே” எனும் அப்பாடலின் துவக்க வரியில் வரும் உவமை. மிக வித்தியாசமான
அதே வேளை படத்தின் கதையோடு பொருத்தமான உவமை இது. காற்றடிக்கும் போது தூறல் சேர்த்து
போடும் போது ஒரு நூதனமான உணர்வு ஏற்படும். அது காற்றாகவும் இருக்காது, முழுமையான
தூறலாகவும் இருக்காது. தூறல் ஆயிரம் ஊசிகளைப் போல முகத்தில் வீசி அறைந்தபடி கடக்கும்.
அதேவேளை ஈரமேறிய சில்லென்ற காற்று சுகமாகவும் இருக்கும். நம் கண்முன்னே தூறல் மெல்ல
மெல்ல கரைந்து காணாமல் போவது பார்க்க துக்கமாகவும் இருக்கும். பிரிவுக்கு இதைவிட
அழகான உவமை சொல்ல முடியுமா? காதலில் பிரிவிலும் கூட ஒரு சுகமான வலி உண்டு.
காதலின் இழப்பை எண்ணி எண்ணி மருகும் போது தன்னை மறந்து அப்பேருணர்ச்சியில் மூழ்கும்
கிளர்ச்சி தனியானது. காதல் மனதை விட்டு முழுக்க அகன்ற பிறகு ஒரு வெறுமை தோன்றும்.
அப்போது தான் இழப்புணர்ச்சி வெறுமைக்கு எவ்வளவு மேலானது எனப் புரியும். அதனால் தான்
காதல் காயமாகி முழுக்க ஆறாமல், காந்தும் போது, மனம் வலியில் எரியும் போது காதல்
துணையின் வாசனை, உடல் வெம்மை, எண்ணங்கள் அகலாமல் நம் அருகில் வெகு அருகிலேயே
இருக்கும். பிரிவும் இணைதலும் இரு துருவமான ஆனால் அதே காதல் உக்கிரம் கொண்ட எதிர்
உணச்சிகள். முகத்தில் அறைந்து, துன்புறுத்தி, கண்முன்னே பிரிந்து போனாலும், தற்காலிகமான
ஒரு ஆறுதல் தரும் காற்றோடு அடித்துக் கொண்டு போகும் தூறலாக இங்கு பிரிவு
சித்திரப்படுத்தப்படுகிறது.
இப்பாடலில் வரும் வேறு சில உவமைகளைப் பார்ப்போம்.
“மழையில் நனஞ்ச காத்தப் போல,
மனச நீயும் நனச்சுபுட்ட”
காற்று அதன் இயல்பில் ஈரமற்றது. அது மழையில் ஈரமேறி கனக்கிறது. பிறகு வெயிலடிக்க
ஈரத்தை இழக்கிறது. மண்ணைப் போல் ஈரத்தை தனக்குள் ஆழத்தில் பதுக்கி வைக்க காற்றால்
முடியாது. காற்று பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எதையும் சொந்தம் கொண்டாட முடியாது.
”டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா”
இது மிக வித்தியாசமான ஒரு உவமை. இதுவரை தேயிலை வாசனையை பிடித்தவரின் வாசத்தோடு
ஒப்பிட்டு யாரும் எழுதி நான் எங்கும் இலக்கியத்தில் கூட படித்ததில்லை. பாடலாசிரியரின்
ஒரு தனிப்பட்ட ரசனை சார்ந்த அவதானிப்பாக இதைப் பார்க்கலாம். இவ்வுவமை எனக்கு பிடிக்க
காரணம் டீ தூளின் மனதை கிளர்த்தும் வாசம். அடுத்த முறை அடுக்களைக்கு போனால் டீ டப்பாவை
திறந்து முகர்ந்து பாருங்கள். சட்டென மனதை தூக்கி விசிறி அடிக்கும் அந்த வாசனை. ஒரு
காதலனின் வாசனையும் இதைத் தானே செய்யும்!
“மூக்கணாங் கவுரப்போல உன்னெனப்பு…
அடகாக்கும் கோழி போல என் தவிப்பு”
இரண்டாவது உடமையான அடைகாக்கும் கோழியுடன் ஒப்பிடுகையில் முதல் உவமை மூக்கணாங் கயிறு
சற்று எதிர்மறையானது. மாட்டின் மூக்குத்துவாரத்தை அறுத்தபடி அதைப் பிணைக்கும் கயிறு
வலியுடன், ஒடுக்குமுறையுடன் சம்மந்தப்பட்டது. ஆனால் காதலும் ஒரு விதத்தில்
மூக்கணாங்கயிறு தானே. அதை நம் நினைவுகளை மெல்ல மெல்ல அறுத்து அந்த வலியுடனே நம்மை
பிணைக்கக் கூடியது. பிரிந்த காதலின் எண்ணங்கள் நினைக்க நினைக்க வலியை பெருக்கும். ஆனால்
அதனால் அதை நினைக்காமல் இருக்க மாட்டோம். கட்டப்பட்ட கயிறை இழுத்துக் கொண்டே இருக்கும்
மாட்டைப் போல் மனம் தன்னை மீண்டும் மீண்டும் வலிக்குள் ஆழ்த்திக் கொண்டிருக்கும். வலி நிரம்பிய
நினைவுகளை மீண்டும் மீண்டும் எழுப்பி அதில் ருசி காணும். காதல் தோல்வி அல்லது பிரிவை
அறிந்தவர் எவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். யோசித்துப் பார்த்தால் எவ்வளவு உக்கிரமான,
அனுபவ ஆழம் கொண்ட உவமையாக இருக்கிறது இது!
“வாகை சூடவா” படத்தில் உள்ள இப்பாடலை எழுதியவர் கார்த்திக் நேத்தா. இவர் நவீன
கவிதைகள் எழுதுபவர், நவீன இலக்கியம் அறிந்தவர். குறிப்பாக இவருக்கு ஹைக்கூவில் ஈடுபாடு
அதிகம். இளைய தலைமுறை பாடலாசிரியர்களில் மிக தனித்துவமும் திறமையும் கொண்டவர்
நேத்தா. சேலம் மாவட்டம் சின்னனூரை சேர்ந்தவர். “தவளைக்கல் சிறுமி” இவரது கவிதைத் தொகுப்பு.

அடுத்த மாத பகுதியில் மற்றொரு பாடலாசிரியரின் வரிகளைப் பார்ப்போம்.
நன்றி: www.inmmai.com மார்ச் 2015
Posted by Abilash Chandran at 10:51 PM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 12, 2015, 1:17:04 PM6/12/15
to brail...@googlegroups.com
எங்கே போகிறது தமிழ்நாடு அரசு
போக்குவரத்துக் கழகம்?
8
விவரங்கள்
எழுத்தாளர்: பாவெல் இன்பன்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 12 ஜூன் 2015
சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை நினைவூட்ட விரும்புகிறேன். ஒன்று கடந்த மே 14 ம்
தேதி நடந்தது.மேட்டூரில் இருநது தருமபுரி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து
கொண்டிருந்தது. அதை முத்துராஜ் என்ற ஓட்டுநர் இயக்கிவந்தார். தொப்பூர் கணவாயைத் தாண்டி
கட்டமேடு என்ற பகுதியி்ல் பேருந்து வந்தபோது திடீரென பிரேக் பிடிக்காமல் போகவே ஓட்டுநர்
பயணிகளை அவசரமாக இறங்க உத்திவிட்டார் சுமார்30 க்கும் மேற்பட்ட பயணிகள் இறங்கும்போதே
பேருந்து பின்னோக்கி நகரத் தொடங்கி சாலையின் மறுபுறம் உள்ள பாறையில் மோதி கவிழ
ஓட்டுநர் முத்துராஜ் உடல் நசுங்கி உயிரிழந்தார். தங்களை காப்பாற்றிய ஓட்டுநருக்காக
பயணிகள் கண்ணீர் சிந்தியது தாங்கமுடியாதபடி இருந்தது. விசாரித்தபோதுதான் சம்பவத்தன்று
காலை பணிமனையில் பேருந்தை எடுக்கும்போதே பிரேக் கோளறு குறித்து முத்துராஜ்
குறிப்பிட்டதாகவும் அதை அலச்சியப் படுத்திய மேலாளர் கட்டாயப்படுத்தி முத்துராஜை
அனுப்பிவைத்ததாகவும் தகவல் தெரிந்தது.
bus 400
சம்பவம் இரண்டு. கடந்த 2 ம் தேதியன்று தருமபுரியில் இருந்து மொரப்பூர் நோக்கி சென்று
கொண்டிருந்த 21 ம் எண் கொண்ட அரசு நகரப் பேருந்து ஒன்று வழியில் நின்றுபோக அந்த வழியாக
வந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்பு மணி தனது சகாக்களோடு பேருந்தை தள்ளி
இயங்க உதவிய செய்தி எல்லா ஊடகங்களிலும் வந்தது. இதற்காக அந்த பேருந்தின் ஓட்டுநர்,
நடத்துநர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தனிக்கதை.
சமீப காலமாக அரசுப் பேருந்துகளின் விபத்துகள் குறித்த செய்திகள் மலிந்து போய்விட்டன.
கொத்து கொத்தாய் மனித உயிர்கள் மடிவதும், போக்குவரத்து ஊழியர்கள் பலர் தற்கொலைக்கு
முயல்வதும், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு பலர் தொலைந்து போவதும்
தொடர் கதையாகவே மாறி விட்டது.
தினந்தோரும் மொத்தமா 80 லட்சம் கி.மீ பயணிக்கும், சுமார் 1,40,000 பேர்
பணிபுரியும்,நாளொன்றுக்கு 1 கோடிக்கும் மேலான மக்களுக்கு பயன்படும் மக்கள் பயனாளனான
அரசுப் போக்குவரத்துக் கழகம் கண்முன்னால் சிதைவது கண்டு உள்ளம் பதைக்கிறது. அரசின்
பாராமுகமும், சமூக பிரக்ஞையற்ற , உண்டு கொழுத்த உயரதிகாரிகளின் அலச்சியப்போக்கும்
அதிர வைக்கின்றன.
என்னோடு நடைபயிற்சிக்கு வரும் நண்பர் ஒருவர் த. அ.போ.க வில் சீனியர் மெக்கானிக்காக
பணியாற்றுகிறார். அவர் சொல்கிறார்... "எந்த பஸ்சும் முறையாக இல்லைங்க, 60% பஸ்சுங்க
இயக்க முற்றிலும் தகுதியற்றவைங்க, உயிரைக் கையில் பிடத்தபடிதாங்க ஒவ்வாருநாளும் பேருந்த
இயக்கவேண்டியிருக்கு, பழுதான உதிரிபாகங்கள் எப்பவும் காலத்துக்கு வருவதில்லைங்க,
ஓட்டுநருங்க முனுமுனுத்தாலோ, பஸ்ச இயக்க மறுத்தாலோ அதிகாரிங்க மிரட்ல் அவங்கள பணிய
வெச்சுடுதுங்க" அவர் சொல்வது உண்மை என்பது போலத்தான் சமீபத்தில் மதுரையில் நடந்த சம்பவம்
உணர்த்துகிறது.
மதுரை மாட்டுத்தாவணி பணிமனையில் ஊழியர் ஒருவர் மேல் அதிகாரியின் நச்சரிப்பு தாளாமல்
உடலில் தீவைத்துக் கொண்டு மேலாளரை கட்டிப்பிடிக்கப் பாய்ந்த சம்பவம் அண்மையில் தான் நடந்தது.
தனியார் பேருந்துகள் ஆண்டொன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு லாபமீட்டும்போது
அரசுப் பேருந்துகளில் உள்ள 8 மண்டலங்களையும் சேர்த்து நாளொன்றுக்கு சுமார் 5 கோடி ரூபாய்
அளவுக்கு நட்டமடைவதாக குறிப்பிடுவது ஆச்சர்யமே. ஜெயா ஆட்சியில் எப்போதுமில்லாத
அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டும் கூட கி . மீ ஒன்றுக்கு 7 பைசா வீதம் நட்டம் எனப்
புலம்புவது யாரை ஏமாற்றும் செயல்? எல். எஸ் .எஸ், எக்ஸ்பிரஸ், பாயின்ட் டூ பாய்ன்ட் என
விதம் விதமான பேருந்துகளும், தாறுமாறான கட்டணங்களும் வந்தும் கூட நட்டக் கணக்குமட்டும்
ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகிறது. 2012 ம் ஆண்டு 750 கோடியாக இருந்த நட்டக் கணக்கு
2013ல் 850 கோடியாகவும்,2014ல் 1000 கோடிஎனவும் உயர்ந்து நம்மை தலைசுற்ற வைக்கிறது.
கடந்த 2014 ஏப்ரல்வரை 3860 கோடியாக இருந்த அரசுப் போக்குவரத்தின் மொத்தக் கடன் தொகை
நடப்பாண்டில் 5000 கோடியையும் தாண்டிவிட்டது.
8 மண்டலங்களுக்கு உட்டபட்ட 19 உட்கோட்டங்களிலும் உள்ள நூற்றுக் கணக்கான பணிமனை
நிலங்களையும் வங்கிகளில் அடகுவைத்து வாங்கிய கடனைத் தருப்பிக் கட்டமுடியாமல் தவிக்கும்
போக்குவரத்துக் கழகம், நிலங்களின் மதிப்பைக் கூட்டி மேலும் மேலும் கடன் வாங்கிக் குவித்துக்
கொண்டிருக்கிறது. விபத்துக்களில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்திரவுபடி நூற்றுக்
கணக்கான பேருந்துகள் ஜப்தியில் உள்ளன.
2012-2013 ஆம் ஆண்டு கணக்குப்படி இயக்கப்பட்ட பேருந்துகள் 21,607 ன் மொத்த வருமானம் 8
ஆயிரத்து 53 கோடியாகும். இதில் பஸ் கட்டணம் மூலம் 7 ஆயிரத்து 254 கோடியும், ஒப்பந்த
ஊர்தி மூலம் 6 கோடியே 95 லட்ச ரூபாயும் அடங்கும். அதே ஆண்டு செலவுத் தொகை ரூ.11
ஆயிரத்து 328 கோடியாம். இதில் டீசல் வகையில் 3 ஆயிரத்து 22 கோடியும், ஊழியர்களின்
சம்பளத்துக்கு 3ஆயிரத்து 153 கோடியும் அடக்கம். இதுதவிர கடனுக்கான வட்டிஎன 461
கோடியும், டோல்கேட் கட்ணமாக ரூ.90 கோடியும் இந்தக்கணக்கில் அடங்காதவை. மேலும் புள்ளி
விவரத்தில் பிற கட்ணங்கள் என்ற வகையில் 197 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது. அந்த "பிற
கட்டணங்கள்" என்ன என்பது சம்மந்தப் பட்ட அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
உலகமயமாக்கல் உழைக்கின்ற மக்களை திசையெங்கும் சிதறடித்திருக்கிறது. சொந்த நாட்டிலேயே
அகதி வாழ்வெய்தும் அர்ப்ப நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இத்தகு மக்களின் இடம் பெயர்வதற்கான
ஒரே வாய்ப்பு ஏழைகளின் தோழனான அரசுப் பேருந்துகள் மட்டும்தான்.
இத்தகு மகத்துவம் வாய்ந்த இந்தத் துறையைத்தான் தனியாரிடம் தாரைவார்க்க துடிக்கின்றன
திராவிடக் கட்சிகளின் அரசுகள். இன்றைக்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் இதே கருணாநிதி
தலைமையிலான அரசுதான் போக்குவரத்துக் கழகங்களின் கேன்டீன்களையும், பேருந்துகளின் புற
வடிவமைத்தலையும் (பாடி கட்டுதல்) தனயாருக்கு தாரை வார்த்தது. எப்போதும் தனியார்
மயத்தின் பிரதான விசுவாசியான ஜெயலலிதா 40% பேருந்துகளின் வழித்தடத்தையும், இதர
பணிகளையும் தனியாரிடம் தந்துவிட துடியாய் துடிக்கிறார். அதற்கென இரண்டு முதுநிலை
மேலாளர்கள், நிதி சட்டம் ஆகியவற்றின் செயலர்கள் என 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
வண்ண விளக்குகளிலும், விருட்டென்ற வேகத்திலும் மதி மயங்கிய எனது நடுத்தர வர்க்கத்து
நண்பன் ஒருவன், கரும்புகை கக்கியபடிபோகும் அரசுப் பேருந்துகள் மீது வசைமாறிப் பொழிந்து
தனியார் பேருந்துகளுக்கு வரவேற்புக் கம்பளம் விறிக்கிறான். என்ன செய்வது அவனது பி்ள்ளை
இலவச பஸ்பாசில் பள்ளிக்குப் பயணிக்கவேண்டிய அவசியம் இல்லை. கொல்லும் குளிரில் அதிகாலை
காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மார்கெட் போகவேண்டிய கட்டாயம் இல்லை. பாதி ராத்திரியானாலும்
பத்தே பேருடன் பயணிக்கவேண்டிய தேவைஇல்லை. முகவரியே தெரியாத ஏதோஓர் மூலையி்ல்
இருக்கும் குக் கிராமத்தில் , உறவினரின் இறப்புக்கு போகவேண்டிய கட்டாயம் இல்லை. ஆக
அரசுப் பேருந்துகளின் தேவை தெரியாத எவரும் அதன் அவசியத்தை அவ்வளவு சீக்கிரம்
புரிந்துகொள்ளப் போதில்லை. போதிய வருமானம் இல்லாத வழித்தடங்களில் பேருந்துகளை
இயக்குவதை நிறுத்திவிட்ட தனியார் பேருந்துகளின் அனேக கதைகள் இங்கே இருக்கின்றன.
அந்நிய நிறுவனங்களுக்கு சலுகைகள் எனும் பெயரில் கோடிகோடியாய் கொட்டிக்கொடுக்கும் தமிழக
அரசு மக்களின் அத்தியாவசியத் தேவையான பேருந்துகளின் விஷயத்தில் பாராமுகமாய் இருப்பது
ஏன்? சமீபத்தில் பெப்பே காட்டிவிட்டு ஓடிப்போய்விட்ட நோக்யா கம்பெனியின் கதை நாம்
அறிந்ததே. நோக்யாவுக்கு வாட் வரியையும், மத்திய விற்பனை வரியையும் தமிழக அரசே கட்டிக்
கொண்டிருந்த அந்த சூழலில்தான் அரசுப் பேருந்து கழகம் 100 கோடிரூபாய் அளவுக்கு டோல்கேட்
கட்டணத்தை கட்டிக் கொண்டிருந்தது.
எழுத்தளவிலான சேமநலக் கோட்பாட்டுக்கும் ஆப்புவந்துவிட்ட நிலையில், தனியார்மய மாயையில்
எல்லா அரசு நிறுவனங்களையும் தனியார் மயமாக்க அலையும் பேய்களின் கூப்பாட்டில் தேசம்
சீரழிகிறது.
போக்குவரத்துத் துறையில் தனியாரின் ஆதிக்கத்தை முழுமையாக துடைத்தழிப்பதும், அரசே எல்லா
பேருந்துகளையும் எடுத்து இயக்குவதும், ஊழல் பெருச்சாலிகளான உயர்அதிகாரிகளின் பிடியில்
இருந்து போக்குவரத்து கழகங்களை விடுவித்து அவற்றை ஊழலின்றி நிர்வகிக்க தொழிலாளர்
நிர்வாகக் குழுக்களை அமைப்பதும், உடனடியாக அரசுப் பேருந்து கழகத்திற்கு தேவையான
நிதியை வழங்குதும் மட்டுமே அழிவில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகத்தை காப்பாற்றும்.
தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதியில் இருந்து கடன்பெற்று த.அ.போ.க வால் வாங்கப்பட்ட
260 புதிய பேருந்துகள் சுமார் 5 மாதங்களுக்கும் மேலாய் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்
பட்டுள்ளன. இவற்றிற்கு 12.25% என்ற வட்டி வீதத்தில் இதுவரை 2.10 கோடிரூபாய் அளவுக்கு
வட்டி மட்டுமே கட்டப்பட்டுள்ளது. முதலில் ஜெ வுக்காக காத்திருந்த பேருந்துகள் இப்போது
நல்ல நாளுக்காக காத்திருக்கின்றன. மக்களோ பழுதான பேருந்தின் நிழலில் அடுத்த
பேருந்துக்காக சாலையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சும்மாவா பாடினான் "பேய்
அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று...
- பாவெல் இன்பன்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 17, 2015, 1:15:28 AM6/17/15
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
விதைகளாய் எண்ணங்கள்

எண்ணம்தான் வாழ்க்கை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் நல்ல
செய்தி என்னவென்றால் எண்ணம் மாறக்கூடியது. மாற்றக்கூடியது. அதனால், எண்ணத்தில்
ஏற்படக்கூடிய விளைவுகளும் மாறக்கூடிவை. மாற்றக்கூடிவை. சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கை
மாறக்கூடியது. மாற்றக்கூடியது.
விதைகளாய் எண்ணங்கள்
நம் சித்தாந்தங்களும் நம்பிக்கைகளும் சில எண்ணங்களில் உருவானவை தானே? ஜெர்மானிய இனம் தான்
உலகை ஆளத்தக்க இனம் என்ற ஹிட்லரின் எண்ணம்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற முக்கியமான
காரணமானது. இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற ஜின்னாவின் எண்ணம் பாகிஸ்தானை
உருவாக்கியது.
தேர்தல் அரசியலில் பகுத்தறிவுக் கொள்கைகளிலிருந்து கட்சி நுழைந்தால் திசை
திரும்பிவிடும் என்ற ஈ.வெ.ரா.வின் எண்ணம் தான் திராவிடர் கழகத்தை அதிகாரத்தில் ஏற்றாமல்
வைத்திருந்தது. அதற்கு மாறாக, தேர்தல் அரசியல் தான் திராவிடக் கொள்கைகளைச்
செயல்முறைப்படுத்த உதவும் என்ற அண்ணாவின் எண்ணம் தான் தி.மு.க.வை அரியணையில் ஏற்றியது.
பெரிய நட்சத்திரங்களை நாடாமல் புது நடிகர்களை வைத்து நல்ல கதைகளை இயக்கினால் மக்கள்
ஏற்பார்கள் என்ற கே.பாலச்சந்தரின் எண்ணம்தான் பல புதிய நடிகர்களை அறிமுகப்படுத்த வைத்தது.
(பின்னாளில் அவர்களில் பலர் அவரே பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிய நடிகர்கள்
ஆனார்கள் என்பது தனிக் கதை!)
சிலரின் முக்கியமான எண்ணங்களே வரலாற்றின் விதைகள்.
திருப்புமுனைகளாய்..
அதே போல, பலரின் மன மாற்றங்கள் வரலாற்றின் திருப்புமுனைகள். உலக வரலாறு மட்டுமல்ல,
உங்கள் வரலாற்றையே எடுத்துக்கொள்ளுங்கள். மாறிய எண்ணம்தான் வாழ்க்கைப் போக்கையே
திருப்பியிருக்கும். ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு எண்ணத்தின் பிரதிபலிப்புதான்.
உங்கள் எண்ணம் உங்கள் உணர்வையும், உங்கள் நடத்தையையும், உங்கள் உறவையும், உங்கள் உடலையும்
பாதிக்கிறது என்றால் அந்த எண்ணத்தை நீங்கள் மாற்றினால், மற்ற அனைத்தையும் மாற்ற முடியும் அல்லவா?
அஃபர்மேஷன்ஸ் என்ற ஒரு நேர்மறை சிந்தனை முறை கொண்டு உடல் சார்ந்த எல்லா நோய்களையும்
குணப்படுத்தலாம், கட்டுப்படுத்தலாம் .
தீராத பல உடல் உபாதைகளை நேர்மறைச் சிந்தனை மூலம் குணப்படுத்தலாம். Metaphysical
Medicine, Mind- Body Medicine, Quantum Healing எனப் பல சிகிச்சை
முறைகளுக்கும் Affirmations களுக்கும் தொடர்பு உள்ளது.
.
இடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், ஜூன் 17, 2015

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 17, 2015, 1:20:49 AM6/17/15
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
நேர்மறை எண்ணங்கள் :மூன்று அடிப்படையான விதிகள்

எதிர்மறை எண்ணங்கள் நோய்களையும் பிரச்சினைகளையும் உண்டாக்குவது உண்மை என்றால் நேர்மறை
எண்ணங்கள் அதைச் சரி செய்யும் சக்தி கொண்டவை.
பலர் என்னிடம் "நான் பணக்காரன் ஆவேன். நான் பெரிய ஆள் ஆவேன்" என்றெல்லாம் சொல்லிப்
பார்த்தேன், ஒரு பயனும் இல்லை" என்பார்கள். நேர்மறை எண்ணங்களுக்கான பயிற்சியிலும் பலருக்கு
வெற்றி கிடைக்காததன் காரணத்தையும் பிறகுதான் நான் தெரிந்துகொண்டேன்.
மூன்று விதிகள்
அஃபர்மேஷன் என்பதை நேர்மறை சுய வாக்கியங்கள் எனலாம். அவற்றை அமைக்க மூன்று அடிப்படையான
விதிகள் உள்ளன:
1."நான்" அல்லது "என்" என்று தன்னிலை அவசியம் இருக்க வேண்டும்.
2. நேர்மறை வினைச்சொல் ஒன்றோ அதற்கு மேலோ இருக்க வேண்டும். "ஏற்றுக்கொண்டு",
"உறுதிகொண்டு" என்பதைப் போல.
3. முக்கியமான விதி: நிகழ்காலத்தில் அமைய வேண்டும். "இருக்கிறேன்", "செய்கிறேன்",
"ஆகிறேன்" என்று முடிய வேண்டும்.
சரி, உங்கள் வாழ்க்கையின் முதல் அஃபர்மேஷனை எழுதுங்கள். வலது கைக்காரர்கள் என்றால் இடது
கையாலும், இடது கைக்காரர்கள் என்றால் வலது கையாலும் எழுதுங்கள். உங்கள் ஆழ்மனப் பதிவுக்கு
இது உதவும்.
"நான் என்னை விரும்பி ஏற்றுக்கொள்கிறேன்!"
இதில் மூன்று விதிகளும் கடைப் பிடிக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள்.
நொடியில் செயல்
"நான் எனும்போது செயலும் பொறுப்பும் உங்களுடையது என்பதை மனம் புரிந்துகொள்ளும்.
விரும்புதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதலில்தான் நேர்மறைச் செயல்பாடுகள் நடக்கின்றன. தன்னை
நிந்திப்பதையும், தான் நினைத்ததை எண்ணி வருந்துவதையும் இந்தச் செயல்பாடுகள் நேரடியாகக்
கையாள்கின்றன.
முக்கியமான விதி நிகழ்காலத்தில் உள்ளது. "ஏற்றுக்கொள்கிறேன்" எனும்போது நிகழ வேண்டிய
காலம் இந்த நொடி என்பதை உணர்ந்து உங்கள் ஆழ் மனது அதற்கு இசைந்து கொடுக்கிறது. இந்த
வாக்கியத்தைச் சொன்ன நொடியே செயல்பாடு தொடங்கிவிடுகிறது.
பணக்காரன் ஆவேன் என்றால் எதிர்காலம். அது post dated cheque போல. நல்லது. ஆனால்,
உடனே செய்ய எதுவுமில்லை என்று உணர்ந்து மனம் இந்த செயல்பாட்டைத் தள்ளிப் போடுகிறது.
இதனால், பணக்காரன் ஆவேன் ஆவேன் என்று சொல்பவர்கள் தொடர்ந்து
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால், பணக்காரர்கள் ஆவதில்லை.
வருமா,வராதா?
நெப்போலியன் ஹில்லும் இதைத்தான் சொல்கிறார். "நான் பண வரவைத் தொடர்ந்து பெற்று வருகிறேன்"
என்றால் அது நல்ல அஃப்ர்மேஷன் எனலாம். காரணம் பண வரவுக்கான வேலையை, பணத்தைக் கவரும்
வேலையை, பண வரவை முடக்கும் சிந்தனையை எதிர்க்கும் வேலையை உங்கள் ஆழ்மனம் உடனே செய்ய
ஆரம்பிக்கிறது.
தொடர்ந்து சொன்னால் பணம் வருமா என்ற சிந்தனை வருகிறதா? இதை புரட்டிப் போட்டு
யோசிக்கலாம். முதலில் பணம் தொலைத்தவர்கள் எல்லாரிடமும் ஒரு பொதுச் சிந்தனை இருக்கும்.
அது பணம் பற்றிய ஏதோ ஒரு முரணான, தவறான சிந்தனை. அது தொடர்ந்து பேச்சிலும்
செயலிலும் தொடரும்.
"நம்ம ராசிங்க. சாண் ஏறுனா முழம் சறுக்கும்." "நமக்குன்னு ஏதாவது ஒண்ணு கரக்டா வந்து
சொதப்பிடும்". "பணம் வந்தா நிம்மதி போயிடும். நான் இப்ப நிம்மதியா இருக்கேன்". "பணம்
வரும், போகும். அதுவா முக்கியம்?"
இப்படி இறுகிய எண்ணங்களைத் தொடர்ந்து வைத்திருக்கும்போது அவை தவறான முடிவுகளையும்
தவறான சூழ்நிலைகளையும் கவர்ந்து இழுத்து வரும்.
நடக்கும், நடக்காது
வாரன் ப்ஃபே உலகின் தலை சிறந்த முதலீட்டாளர். தன் முழு வாழ்க்கையையும் முதலீடு செய்வதையே
முழு நேரத் தொழிலாகச் செய்தவர். மிக அழகாக ஒரு உளவியல் கூற்றைப் போகிற போக்கில்
சொல்கிறார். தவறான முதலீட்டு முடிவுகளை எடுப்பவர்கள் பயம், பேராசை என்கிற இரண்டு
எதிர்மறை உணர்வுகளால் அத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள்.
இது போல ஆராய்ந்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விதை ஒரு சில அடிப்படையான
சிந்தனைகளும் உணர்வுகளும்தான். அஃபர்மேஷன் முறையில் இரண்டையும் திருப்ப முடியும்.
"ஹூம்.. இதெல்லாம் இனிமே சொல்லி என்னத்தை செய்ய.. இதெல்லாம் நடக்காது !" என்று
நினைத்தால் உங்கள் ஆழ்மனம் அதை அப்படியே ஏற்று அஃபர்மேஷனுக்கு எதிராக வேலை செய்யும்.
அனாயாசமான தாண்டல்
"என்னால் முடிகிறது", "என்னால் முடியாது" என்று இரண்டு வாக்கியங்களில் எந்த ஒன்றையும்
உணர்வுபூர்வமாக நம்பிச் சொல்லும் போது அது பலிக்கிறது. அதனால் தான் ஒரே வேலையை, ஒரே
சவாலை இரண்டு பேர் முயலும்போது ஒருவரால் செய்ய முடிகிறது. இன்னொருவரால் செய்ய
முடியாது. மனம் ஒரு அடிமை. உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப அது செயல்படும்.
ஆறு அடி தாண்ட முடியுமா என்று கேட்டால் 'கஷ்டம்தான்' என்று பதில் வரும்.
தாண்டிப்பார்த்தால்கூட முடியாது. ஆனால், இரவில் ஒரு நாய் துரத்துகையில் அதே ஆறு அடி
அளவுள்ள பள்ளத்தை "தப்பிக்கிறேன், தாண்டுகிறேன்" என்று எண்ணங்கள் தருகிற வலிமையில்
அனாயாசமாகத் தாண்டுவீர்கள்.
சாதாரண மனிதர்கள் அசாதாரண செயல்களைச் செய்வது இந்த நம்பிக்கையில்தான். உங்கள்
பிரச்சினைகளை எழுதுங்கள். வாக்கியங்களைப் படித்து அதில் உள்ள எதிர்மறைச் சிந்தனையை
நேர்மறை சுய வாக்கியங்களாக மூன்று விதிகளை நினைவில் வைத்துக்கொண்டு மாற்றி எழுதுங்கள்.
அவற்றை ஒரு வாரம் மந்திரம்போல ஜபித்து வாருங்களேன்.
மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 17, 2015, 7:56:36 AM6/17/15
to brail...@googlegroups.com
தலையங்கம்
பொதுத் தீமையை வேரறுப்பதற்கு...
ts('body',1)
ts('body',-1)
கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரத்தை வெட்டியதாகச்
சொல்லி 20 தமிழக அப்பாவிகள் ஆந்திர மாநிலக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது இந்தியாவெங்கும் பரபரப்பை உருவாக்கியது. சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால்
இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணங்களாக ஆந்திர காவல்துறை முன்வைத்தவை நம்பகத்தன்மை இல்லாமல்
இருந்தன. சம்பவம் நிகழ்ந்த இடம், காட்சிப்படுத்தப்பட்ட செம்மரங்களின் உயிர்ப்பற்ற தன்மை,
கொல்லப்பட்டவர்களின் உடல்களில் காணப் பட்ட காயங்கள் மற்றும் குண்டு பாய்ந்ததற்கான தூரங்களின்
அளவு மற்றும் செம்மரங்கள் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் நேரத்தில் அவர்கள் பயணத்தில்
இருந்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தும் செல்போன் பதிவுகள் போன்ற எண்ணற்ற அம்சங்கள் ஆந்திர
காவல்துறையைக் குற்றத்தன்மை வாய்ந்ததாகக் காட்டின. செம்மரக் கடத்தலைத் தடுப்பதற்காக
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அல்ல இவை. மாநில அரசின் இடர் களையவும், தாங்கள் தீவிரமாக
இந்தக் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்துவருவதாக ஒரு போலித் தோற்றத்தை
உருவாக்கவும் காவல்துறையினர் அந்த நாடகத்தை நடத்தியுள்ளனர் என்று சந்தேகப்படுவதற்கு
எல்லோராலும் முடிந்தது. அரசின் வாக்குமூலமே ஆந்திரக் காவல்துறையைக் கிடுக்கிப்பிடிக்குள்
சிக்க வைத்துள்ளது.
கூலித்தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக அவர்கள் பயணம் செய்த பேருந்திலிருந்து இறக்கப்பட்டு
சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் சேஷாசலம் வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப் பட்டு
சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அது வனப்பகுதியும் அல்ல. அங்கே செம்மரங்களை வெட்டியவர்களைச்
சுட்டுக்கொல்லும் அளவுக்கு யாதொரு மோதலும் நடக்கவுமில்லை. காட்சிப் பொருள்களாகக்
கிடத்தப்பட்டிருந்த செம்மரக் கட்டைகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அடையாள எண்களைக்
கொண்டிருந்தன. பேருந்திலிருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டதும் அதிலிருந்து
தப்பித்து ஓடி வந்தவர்கள் மறுநாள் பத்திரிகையாளர்களிடம் நடந்த சம்பவங்களை விவரித்ததில்
இவை எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்ட அரச பயங்கரவாதப் படுகொலைகள் என்பது அம்பலமானது.
கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள்; அவர்களைச் சுட்டுக்கொன்றது ஆந்திர மாநிலக் காவல்துறை; அதுவும்
சொல்லப்பட்ட காரணங்களுக்கு ஏற்பில்லாத படுகொலைகள்; இக்காரணங்கள் இனரீதியான மோதல்களுக்குக்
களம் அமைத்துக் கொடுத்துவிட்டன. உடனடியான நம் உணர்வலைகள் நமக்கு இனரீதியான எதிர்மறை
உணர்ச்சிகளைக் கொண்டுவருவது எங்கும் நடப்பதுதான். இதனை இனவாதக் கட்சிகள் பற்ற முயற்சி
செய்கின்றன. பலவிதமான சூழல்களும் தமிழ்நாட்டுக்குச் சாதகமில்லாத நேரம் இது. இந்நிலையில்
நடைபெற்றுள்ள படுகொலைகளை இனவாத மோதலாக்கும் முயற்சிகளால் நீதி பெறுவதில் பின்னடைவு
ஏற்பட்டுவிடக் கூடாது.
செம்மரங்கள் வெட்டப்படுவது ஒரு தனி மனிதனின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படவில்லை. அவை
கடத்தலை மையமாகக் கொண்டவை. மரங்களை வெட்டும் கூலித் தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்தை
ஒட்டியுள்ள தமிழ் மாவட்டப் பகுதியினர்; தமிழகத்தின் நலத்திட்டங்களால் மேம்பாடு அடையாத
கிராமங்களைச் சார்ந்தவர்களை ஆசைகாட்டி மரங்களை வெட்ட அழைத்துச் செல்கின்றனர். செம்மரங்களை
வெட்டிக் கொடுத்ததும் உரிய கூலியைப் பெற்றுக்கொண்டு திரும்பி விடுகிறார்கள். ஆந்திர
மாநிலக் காவல் துறையினருக்கு செம்மரக் கடத்தலைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கம் கொஞ்சமும்
கிடையாது. அவர்கள் வேறு ஆதாயங்களை நோக்கி இயங்கினார்கள். கடமை உணர்வு அவர்களுக்கு
இருந்திருக்குமாயின் அவர்கள் அந்த நோக்கத்தை அடைய மேலிருந்து கீழாக இறங்கி வந்திருக்க
வேண்டும். இக்கடத்தல்களைப் புரிவோர் யார், அதற்குத் துணையிருப்போர் யார் என்பதுதான் முதல்
தேடுதலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் திக்கு தெரியாமல் அலைவதைப் போல ஆந்திரக்
காவல்துறையினர் நாடகம் நடத்துகிறார்கள். ஆதாயம் பெறுபவர்கள் இன்னம் கைதுகூட செய்யப்படவில்லை.
செம்மரக் கட்டைகள் உள்நாட்டில் பயன்படுவது அரிது. அவை சீனா, தென் கொரியா, ஜப்பான்
உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குக் கடத்தப்பட்டு வருகின்றன. கடத்தப்படுவதற்கு இந்தியக்
கட்டமைப்புகளையே பயன்படுத்தியாக வேண்டும். நாடு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள்
வைக்கப்பட்டுள்ளன. துறைமுகங்களுக்குக் கடத்தல் பொருள்கள் வந்தாக வேண்டும். அவை கையாளப்படும்
முறை ஒவ்வொருவருக்கும் அநேகச் சந்தேகங்களை உருவாக்கக் கூடியனவாக இருக்கும். ஒவ்வோர்
அசைவும் பொருள் பொதிந்தவை; அவை ஒளிப்படங்களாகப் பதிவாகின்றன. எல்லாவற்றையும் மீறி
இக்கடத்தல் தொழிலில் யார் யார் ஈடுபட்டுள்ளனர் என்கிற விவரங்களைப் புலனாய்வு பத்திரிகைகள்
வெளியிட்டுள்ளன. அரசியல் வட்டம், அதிகார வர்க்கம் என அனைத்தின் கலவையாகும் இது.
கடத்தல்காரர்களின் பெயர்களும் அவ்வப்போது வெளியானதால் மக்களின் கவனத்திலும் அவர்கள்
இருக்கிறார்கள். உளவுத்துறையின் பின்னணியோடு இயங்கிவருகிற காவல் துறையினர் ஏதுமறியா
அப்பாவிகளைப் போல உயிர்களைச் சூறையாடியிருப்பது மாபெரும் படுகொலையாகும்.
கடத்தல்காரர்களின் உண்மையான கையாள்களாக இருந்து அவர்களைக் காப்பாற்றும்பொருட்டும், தாங்கள்
பெறும் ஆதாயங்களின் பொருட்டும் 20பேரைப் படுகொலைகள் செய்திருக்கிறார்கள். இது மொத்த
நாட்டுக்கே நிகழ்ந்த தீவினையாகும். இந்திய அரசியலும் கோணல்மாணலான அதிகார மிடுக்குகளும்
உலக அளவில் மொத்த இந்தியாவுக்கும் ஏற்கெனவே தலைகுனிவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
நாட்டின் அமைதியையும் வளர்ச்சியையும் விரும்புவதாகச் சொல்லிக்கொள்ளும் ஆளும்
கட்சியினரையும், ஆண்ட கட்சியினரையும் மொத்தமாக எதிர்கொள்வதற்குத் தேசிய அளவில் மாற்றுக்
கருத்துக்களை உருவாக்க வேண்டும். அந்த நல்ல முயற்சியை விட்டுவிட்டு இதனை இனமோதலாகக்
காட்சிப்படுத்துவது கேடு பயக்கும்.
இந்தக் கடத்தல்களின் வேர்கள் சாதி, மதம், இனம் மற்றும் கட்சிப் பேதங்களில்லாமல் எங்கும்
பரவியுள்ளன. குறிப்பாகச் சொல்வதென்றால் அந்தந்த மாநிலத்தின் அரசியல் பெரும்புள்ளிகள் இந்தக்
கடத்தல்களின் உள் இயக்கச் சக்திகளாக இருந்துவருகிறார்கள். தமிழக அரசியல் புள்ளிகளின்
ஒத்துழைப்பும் பங்கேற்பும் உள்ளன. உலக மயம், அரசியல் ரீதியான கருத்தாக்கமாக
வைக்கப்படுவதற்கு முன்னால் கடத்தல் வேலைகள் தனிமனித சாகசங்களாக இருந்தன; அல்லது ஒரு
சிறிய குழுவினரின் சாகசம். இதற்கு நம் இந்தியத் திரைப் படங்கள் ஆயிரக்கணக்கானவை
சான்றாகும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள திரைப்படங்களின் கடத்தல் காட்சிகளையும்,
இன்றைக்கு வெளியாகிற படங்களின் கடத்தல் காட்சிகளையும் ஒப்பீடு செய்தால் மொத்தமாகப்
பழுதடைந்து, நொறுங்கியும் போய்விட்ட நம் அரசியல் மாண்புகள் தெரியவரும். சமூக விரோத
சக்திகள் மொத்தமாகவே நம் அரசு இயந்திரத்தைக் கைப்பற்றித் தமக்காக மட்டுமே சுழலும்வண்ணம்
அவற்றின் இயக்கத்தை ரிமோட் செய்கிறார்கள். சட்ட சம்மதமில்லாத தொழில்களைச் சட்டரீதியாகச்
செய்வதற்கான மறைமுக ஷரத்து உலகமயத்தில் உள் கூறு.
கடந்த ஆண்டு ஜூன்மாதம் வேலூரின் வசந்தபுரம் பகுதியிலுள்ள கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாளின்
காட்பாடி வீட்டில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாயும், நகைகளாக 73 பவுன்களும்
கைப்பற்றப்பட்டன. மோகனாம்பாள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஒரு சாதாரணக் கலையில் ஈடுபட்ட
மோகனாம்பாளின் செல்வவளம் எப்படி இந்த அளவுக்குச் சாத்தியமானது என்று நம் புலனாய்வு
இதழ்கள் ஆராய்ந்து பல உண்மைகளைக் கொண்டு வந்தன. அது செம்மரக் கடத்தலின் ஆதாயம். நேரடித்
தொடர்பு இல்லாத மோகனாம்பாளின் வசம் இத்தனைக் கோடிகள் இருக்குமென்றால், மையத்தின் நிலை
என்னவாக இருக்கும் என ஆராயத் தேவையில்லை. செம்மரங்கள் கடத்திச் செல்லப்படும்போது தமிழக
எல்லையில் தமிழகக் காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் கடுமையான அதிகார
முறைகேடுகளில் ஈடுபட்டுப் பலகோடிகளைப் பெற்றுள்ளனர். இவை யானை உண்ணும்போது சிந்திய
கவளங்கள். இவற்றையெல்லாம் கணக்கில் கொள்வதன் வாயிலாகவே மொத்தத் தீமைகளையும் நாம் எதிர்த்துப்
போராட இயலும். தமிழர்கள் மட்டும் கொல்லப்படக்கூடாது என்பதற்காக நாம் போராடப் போகிறோமா
அல்லது நம் ஒவ்வொருவருக்கும் உரித்தான நாட்டின் செல்வவளம் இவ்வாறு சுரண்டப்படக்கூடாது
என்பதற்காகப் போராடப் போகிறோமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதெனில், இந்த என்கவுண்டர் நிகழ்ந்த மறுநாளே ஆந்திரப் பிரதேச மக்கள்
உரிமைக் குழுவினர் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தை அணுகி மனு செய்தனர். இந்த என்கவுண்டர்கள்
பற்றித் தமிழகம் அறிந்துகொண்ட தகவல்களையும் அவர்கள் தங்களின் மனுவில் குறிப்பிடத்
தவறவில்லை. அதனை அதேவேகத்தில் எடுத்துக்கொண்ட ஹைதராபாத் உயர்நீதி மன்றம் அரசு
வழக்கறிஞரைப் பல கேள்விகளால் துளைத்தெடுத்தது. என்கவுண்டரில் ஈடுபட்ட காவல்துறையினர்மீது
கொலைக் குற்றம் மற்றும் ஆள் கடத்தல் பிரிவுகளின்கீழ் வழக்குகள் தொடுக்கும்படி ஆணையிட்டது.
தேசிய மனித உரிமை ஆணையம் மதுரை மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை
அமைப்புகள் ஆந்திரக் காவல்துறையின் படுகொலைகளுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளன. இவை இனம்
தாண்டிய செயல்பாடுகள். இரு மாநிலங்களுக்கு இடையேயான இரு இனங்களுக்கு இடையிலான
சிக்கலாக இதனை உருமாற்றும் தருணத்தில் பாதிக்கப்படப் போவது யார்? நமக்குத் தேவை
நியாயம்; நிரந்தரமான நியாயம். என்றென்றைக்குமான தடுப்பு முயற்சி. ஆந்திரக்
காவல்துறையும் அரசும் முட்டாள்தனமாக ஏற்படுத்திய இந்தச் சிக்கல்களிலிருந்து அவை இனவாதம்
வழியாகத் தப்பித்து ஓடிவிடக்கூடாது.
எல்லோருக்கும் எதிரான பொதுத் தீமையை வேரறுப்பதற்காக மன எழுச்சிகளை மேற்கொள்ள வேண்டிய
அவசியம் எல்லோருக்கும் இருக்கிறது. இச்சமயத்தில் இதற்கு இன அளவுகோலைக் கையிலெடுத்துக்
கொள்வது நேர்மைசார்ந்த நிலைபாடு அல்ல.
உள்ளடக்கம்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 17, 2015, 8:03:03 AM6/17/15
to brail...@googlegroups.com

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 17, 2015, 8:03:33 AM6/17/15
to brail...@googlegroups.com
அஞ்சலி: குவளைக்கண்ணன் (1964 -2015)
தன்சுமையிலிருந்து விடுதலை
ts('body',1)
ts('body',-1)
கண்ணன்
விட்டேத்தியான மனோபாவம் கொண்டிருக் கையில்தான் ரவியை முதலில் சந்தித்தேன். 1992இல்
தண்டபாணியைப் பார்க்கச் சென்னையில் அவன் அறைக்குச் செல்கையில் அறைத் தோழன் ரவி, மருத்துவப்
பிரதிநிதி. அப்போது, அறியப்பட்ட கவிஞனாகவில்லை. ஆனால் குவளைக்கண்ணன் என்ற பெயரில்
கவிதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. நகைச்சுவை யுணர்வு, குதர்க்கம் எல்லாம் தாராளமாக
இருந்தன. உடன் எனக்குப் பிடித்துப்போனது.
காலச்சுவடின் மறுபிறப்பு வெறும் திட்டமாக இருந்த காலகட்டம். வியாபார நிமித்தமாகச்
சென்னை, சேலம் செல்கையில் ரவியைச் சந்திப்பது வழக்கமாயிற்று. பல சமயங்களில் நான்
சென்றிறங்கியவுடன் ரயில் நிலையத்திலேயே சந்தித்து மீண்டும் ரயில் ஏறும்வரை ஒன்றாக
இருந்ததும் உண்டு. கொள்முதலுக்குப் போகும்போதுகூட கூடவே இருப்பான். வியாபாரிகளுக்கு
இது புதிராக இருக்கும். என்ன தொடர்பு என்று அவர்களுக்குப் புரியும்விதத்தில் விளக்காமல்
தவிக்கவிடுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷமுண்டு.
மீண்டும் காலச்சுவடு திடமாக உருப்பெற்றதும் சென்னையில் நண்பர்கள், எழுத்தாளர்களைச் சந்திக்க
ரவியும் நானும் பேய்த்தனமாகச் சுற்றி அலைந்திருக்கிறோம். வாகனம் ரவியின் ஓட்டை டிவிஎஸ்
50. அது அலற அலற சென்னையில் அலைந்த அலைச்சலுக்கு அளவேயில்லை. அன்றிலிருந்து எனது
எத்தனையோ செயல்பாடுகளில் ரவியின் இன்றியமையாத பங்களிப்பு இருந்திருக்கிறது.
முரண்பாடுகள் இல்லாத நட்பு அல்ல. ஆனால் கண்டபடி திட்ட உரிமையிருந்தது.
பெருமாள்முருகனை அவர் எழுத்தின் வழியாக அடையாளம் கண்டு 1998இல் சேலத்தில் நேரில்
சந்திக்கக் கடிதம்வழி ஏற்பாடு செய்திருந்தேன். அந்த முதல் சந்திப்பில் உடனிருந்த ரவி
நடந்துகொண்ட விதம் என்னை ரொம்பவுமே சீண்டியது. முருகன் செல்லும்வரை எப்படியோ மறைத்துக்
கொண்டேன். பின்னர் கடுமையான சண்டை. உறவு முறியும் என்ற அச்சமின்றி நடந்த சண்டை.
என் நினைவுகள் பலவீனமானவை. 90களின் இறுதியில் காலச்சுவடில் என்னுடன் பணியாற்றிய ஒரு
கவிஞரை என் முன்னர் அவன் அவமதித்ததைப் பொறுக்க முடியாமல் சில ஆண்டுகள் உறவை
முறித்துக்கொண்டேன். பின்னர் மீண்டும் இணைந்த காலத்தில் ரவி அவனுக்கே பெரும் சுமையாக
மாறுவதைக் கவனித்தேன். அதிலிருந்து மீட்க கிட்டத்தட்ட பத்தாண்டுகள் முயன்றேன். காலச்சுவடின்
பல்வேறு செயல்பாடுகளில் இணைந்து செயல்பட்டிருக்கிறோம். சுயமாக வெளியிட்ட முதல் கவிதைத்
தொகுதி நீங்கலாக, ரவியின் மற்ற தொகுதிகளையும் மொழி பெயர்ப்புகளையும் காலச்சுவடு
வெளியிட்டது. நட்புக்காக உறுதுணையாக இருக்கும் உயர் பண்புண்டு ரவியிடம். அன்புண்டு.
அன்புக்கான விழைதலும் உண்டு. இவற்றை மூடிமறைத்த கவசங்கள் ஆமை ஓடுபோல
திடகாத்திரமானவை. உடைத்தெறிய முடியவில்லை. இதில் எங்களோடு இணைந்து ரவியும்
ஆத்மார்த்தமாக முயன்ற காலங்கள் உண்டு. விழிப்புணர்வால் எட்டமுடியாத ஆழங்களில் சில
அகமுடிச்சுகள் அமிழ்ந்திருந்தன.
நான் நம்பிக்கை இழக்கையில் கடுமையாக முயன்றவர்கள் ஆனந்த், அரவிந்தன், க.வை. பழனிசாமி.
நான் அறியாத பிறரும் நிச்சயம் முயன்றிருப்பார்கள்.
எங்கள் தோல்விக்கு இன்று ரவியின் மரணம் சாட்சியாகியிருக்கிறது. அகால மரணம். ஆனால் துக்க
நிகழ்வா?. ரவியால் தாங்க முடியாத ஒரு தன்சுமை இறங்கிவிட்டது என்றே தோன்றுகிறது.
நினைவுகளின் சுமையும் ஆற்றாமையும் நண்பர்களுக்குப் பல ஆண்டுகள் இருந்து கொண்டிருக்கும்.
தில்லை நகர் ஃபஸ்ட் கேட்
வீட்டில் அவர் இல்லை
அழைத்துச் சென்ற தெருவில் இல்லை
இதோ இந்தச் சிறுமியின்
ஜியோமிதி பாக்ஸில் இலைகளின் ஊடே
ஓடி ஓடி மறைந்தும்
ஆப்பிரிக்க பெண்களோடு குனிந்து
ரத்தத்தில் தோய்ந்த தானியங்களைப் பொறுக்கியும்
ஜரதுக்ஷ்ட்ரா இப்படி பேசியதாக
ராப்பகலாய் அலுக்காமல்
தன்மொழியின் மௌனத்தில் ஆழ்ந்தும்
கவனத்தில்
வற்றிய மழைத்துளிகளைச் சேகரித்தும்
யார் கண்ணிலும் படாததன் காதலனாக
சதா காலமும் இருந்துவிட
இப்போது போகிறபோக்கில்
பஜார் தெருக்களில்
வலுக்க ஒரு முத்தம் வீசிவிட்டுப்
போகும் இவரா அவர்
ரயில்வே லைன் கிராஸிங்கில்
தில்லை நகர் ஃபஸ்ட் கேட்
மூடி இருக்கிறது
அது துருப்பிடித்துப் போயிருக்கிறது
(ரவி போனது
குவளைக்கண்ணனுக்குத் தெரியாது)
- ஷாஅ
உள்ளடக்கம்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 17, 2015, 8:41:25 AM6/17/15
to brail...@googlegroups.com
கட்டுரை
இருளுக்கும் பிறகு ஒளிக்கும் அப்பால்
ts('body',1)
ts('body',-1)
தேவிபாரதி
பதினெட்டாண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட
நால்வருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்து பெங்களூரு உயர்நீதிமன்றம்
வழங்கியுள்ள தீர்ப்பைப் போல் சர்ச்சைக்குள்ளான, அரசியல் பதற்றத்தை உருவாக்கிய நீதிமன்றத்
தீர்ப்பு வேறொன்று இருக்க முடியாது. அப்படியொன்றைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால்1975இல்
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவித்த
ஜக்மோஹன்லால் சின்ஹாவின் தீர்ப்பைத்தான் சொல்ல முடியும். சுதந்திர இந்தியா வின் வரலாற்றில்
ஒரு கறுப்பு அத்தியாயமாக நிலைபெற்றுவிட்ட அவசரநிலைப் பிரகடனத்தைச் செய்ய வேண்டிய
கட்டாயத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை இட்டுச் சென்றது அந்தத் தீர்ப்பு தான்.
ஜெயலலிதாவுக்கும் அவ ரோடு இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மற்ற மூவருக்கும் நான்காண்டு
சிறைத் தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு விசாரணை நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்பை ஜெயலலிதாவின் அமைச்சரவையும் அவரது கட்சியும் எதிர்கொண்டதைப்போல்
காங்கிரஸ் கட்சியோ இந்திராவின் அமைச்சரவையோ எதிர்கொள்ளவில்லை. அவர்களில் எவரும் மொட்டை
போட்டுக் கொள்ளவில்லை. தாடி வளர்த்துக் கொண்டு சோகமய மாகக் காட்சி தரவில்லை.
கோயில்கள்தோறும் சிறப்புப் பிரார்த்தனைகளும் யாகங்களும் நடத்த ஏற்பாடு செய்யவில்லை.
குறிப்பாக அஇஅதிமுகவின் முன்னூறுக்கும் மேற்பட்ட தொண்டர்களைப்போல காங்கிரஸ் கட்சியின்
தொண்டர்கள் எவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதற்கான தேவை எழவில்லை. அதிமுகவினரின்
அம்மாவைப்போல் இல்லை அவர்களுடைய அன்னை. நீதிபதியிடம் குறைந்த தண்டனை வழங்குமாறு
கோரிக்கை வைக்கவில்லை. தீர்ப்புக்குப் பின்னர் சிறை வாசத்தை அனுபவித்துவிட்டு வீட்டுக்குள்
ளேயே முடங்கிக் கிடக்கவில்லை. முக்கியமாக ஓ. பன்னீர் செல்வத்தைப் போன்ற தனது
அமைச்சரவையின் நம்பக மான அப்பாவி ஒருவரைப் பிரதமராக்கிவிட்டு, தான் வழக்கை எதிர்கொள்ள
முயலவில்லை.
அம்மாவைப் போல் அல்லாமல் அன்னை மூர்க்கமாக இருந்தார். தீர்ப்பை ஒட்டி உருவான கொந்தளிப்பை
இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். நாட்டின் மதிப்புமிக்க தலைவர்களில் ஏறக்குறைய
எல்லோரையும் கைதுசெய்து விசாரணையில்லாமல் சிறையிலடைத்தார். அரசியல் சாசனத்தை
விருப்பம்போல் திருத்தித் தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அடக்குமுறையைக்
கட்டவிழ்த்துவிட்டார்.
ஜெயலலிதாவுக்கு அதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை என்பது வேறு விஷயம்.
அவர் ஒரு மாநிலத்தின் முதல்வர். அவருடைய வழக்கு நடந்தது, அவருக்குச் சாதகமாயில்லாத
ஒரு கட்சியின் ஆட்சி நடைபெறும் வேறொரு மாநிலத்தில். எந்த அதிகாரமுமற்ற ஆனால்
அதிகாரத்தின் இண்டு இடுக்குகள்வரை நுழையத் தெரிந்த சுப்பிரமணிய சுவாமியும்
அஇஅதிமுகவின் அரசியல் எதிரியான திமுகவின் பொதுச் செயலாளர் க. அன்பழகனும் தங்களுக்குக்
கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஜெயலலிதாவைப் பழி தீர்க்கக் காத்திருந்தார்கள்.
எனினும் ஜெயலலிதாவால் இருபதே நாள்களில் சிறைக் காவலிலிருந்து தன்னை
விடுவித்துக்கொள்ளவும், உச்சநீதிமன்றத்தின் உதவியோடு மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளச் செய்யவும், இறுதியாகத் தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெறவும்
முடிந்திருக்கிறது. அவர் கும்பிட்ட தெய்வங்கள் அவரைக் கைவிடவில்லை என்பதற்கு இதைவிட
வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
சமூக வலைத்தளங்களில் ஜெயலலிதா நீதியை விலைகொடுத்து வாங்கிவிட்டதாக, சட்டத்தை மிக
எளிதாக வளைத்துவிட்டதாக வந்துகொண்டிருக்கும் விமர்சனங்களைப் பாருங்கள், அவற்றின் பின்னால்
இருப்பது ஒருவகையான கையறு நிலை என்பது தெரியவரும். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில்
ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் வருவாயைக் கணக்கிட்டதில் பெரும் தவறு நிகழ்ந்திருப்பதாகக்
கூறப்படுவது அஇஅதிமுக தொண்டர்களுக்குச் சிறிதளவு மனச்சோர்வை அளித்தி ருக்கலாம். ஆனால்
அவர்கள் தங்களுடைய அம்மா, புரட்சித் தலைவி, மக்களின் முதல்வர் சட்டத்தின் பிடியிலிருந்து
மீண்டு வந்துவிட்டதாக நம்புவதற்கு அந்த மனச்சோர்வு எந்தவிதத்திலும் தடை அல்ல. வரும் 22ஆம்
தேதி நடைபெறவிருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்குப் பிறகு அம்மா
மீண்டும் அரியணை ஏறுவார் என்பதில் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஒருவேளை கர்நாடக
அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும்கூடப் பதற்றப்படுவதற்கு ஒன்றுமில்லை என
அவர்கள் நினைக்கக்கூடும். 1996க்குப் பிறகு தன்மீது தொடுக்கப்பட்ட எல்லா
வழக்குகளிலிருந்தும் அவர்களுடைய அம்மா விடுதலையாகியிருக்கிறார்.
படுதோல்விகளிலிருந்து மீண்டு மீண்டும் மீண்டும் அரியணை ஏறியிருக்கும் அவர்களுடைய
அதிர்ஷ்டக்காரத் தலைவிக்குத் தெய்வங்கள் துணை நிற்கின்றன. அவர்கள் செய்யவேண்டியதெல்லாம்
வழிபாடுகள், யாகங்கள், வேண்டுதல்கள் மூலம் அவற்றின் மனங்களைக் குளிர்விப்பது மட்டும்தான்.
கடந்த காலங்களில் ஊழலுக்காகத் தமிழகத்தின் எந்தவொரு முக்கிய அரசியல் தலைவரும்
தண்டிக்கப்பட்டதில்லை, அதன் மூலம் அரசியலைவிட்டு நிரந்தரமாக விலக நேர்ந்ததில்லை என்ற
உண்மைகூட அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கலாம். ஜெயலலிதாவின் அரசியல்
எதிரிகளுங்கூட இந்த உண்மையைக் கண்டுதான் அதிகம் பதற்றமடை கிறார்களோ எனத் தோன்றுகிறது.
இதுபோன்ற தீர்ப்புகளை வைத்து அரசியல்ரீதியாக தற்காலிகமாகச் சில ஆதாயங்களை அடைய
முடியும் என்பதற்கப்பால் யாராலும் சிந்திக்க முடியாது. சென்ற தேர்தலில் கனிமொழி,
அழகிரி, ஆ. ராசா உள்ளிட்ட திமுக முன்னணித் தலைவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைக்
கொண்டு அதிமுக ஆதாயமடைந்ததைப்போல இப்போது யாராவது ஆதாயமடையலாம்.
யார் என்பதுதான் கேள்வி. அந்தக் கேள்விதான் பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது.
1975இல் இந்திராகாந்திக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது நாடு கொந்தளித்தது.
சிதறிக்கிடந்த எதிர்க்கட்சித் தலைவர்களை ஓரணியில் திரளச் செய்த பெருமை அந்தத் தீர்ப்புக்கு
இருந்தது. ஜனநாயக மாண்புகளை மதித்து இந்திரா பதவி விலக வேண்டுமெனக்கோரி
ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட தலைவர்கள் போராடியபோது இந்திரா அவர்களைச் சிறையில்
தள்ளினார். தனது சொந்த நெருக்கடியை இந்தியாவின் நெருக்கடியாக மாற்றினார்.
இருபத்தியேழே ஆண்டுகளில் இந்தியச் சுதந்திரம் என்பதை ஒரு கற்பனையாக மாற்றினார்.
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக மேல்முறையீடு செய்துவிட்டுத் தனது அதிகாரத்தை
நிலைநிறுத்த முயன்றார். இந்தியாவை நூறுகோடி மக்களுக்கானதாக இல்லாமல்
இந்திராவுக்கானதாக மாற்ற முயன்றார். ஆனால் அவ்வளவு அதிகாரங்களைப் பெற்றிருந்தும் அவரால்
பதினெட்டு மாதங்களுக்கு மேல் தன் கற்பனைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அவரால்
செய்ய முடிந்ததெல்லாம் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலமாக அந்தப் பதினெட்டு மாதங்களை
மாற்றியதுதான்.
ஜெயலலிதா அவரை முன்மாதிரியாகக் கொண்டவர் போல் தோற்றமளித்தார். தன்னை ஓர் இரும்பு
மனுஷியாகக் காட்டிக்கொள்ள முயன்றார். அதிகாரம் கிடைத்த ஒவ்வொரு தருணத்திலும் மிக எளிய
மனிதர்களின்மீது அதைப் பிரயோகித்தார். 2003இல் ஊதிய உயர்வு கோரிப் போராடிய மூன்று
லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை ஒரே ஆணையின் மூலம் பணி நீக்கம் செய்ததன் மூலம்
தனது அதிகாரத்தின் எல்லையை உணர்த்தினார். தனது கட்சியை ஒரு ஜனநாயக அமைப்பில்
செயல்படுவதற்கான கருவியாக அல்லாமல் தனது அதிகாரத்திற்குக் கீழ்ப்படியும் ஒரு கூட்டமாக
மாற்றினார். கட்சியின் முன்னணித் தலைவர்களையும் தனது அமைச்சர்களையும் காலில் விழ
வைத்தார். அவர்கள் அவரது அடிமைகளாக இருப்பதில் பெருமிதம் கொண்டார்கள். அவரைத் தம்
குலதெய்வமாக மாற்றி வழிபட்டார்கள். அதனால்தான் இந்திய அரசியல் களத்தில்
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முக்கியத்துவம் பெற்றிருக்கும் அந்தக் கட்சியிலிருந்து அவர்
இல்லாத தருணத்தில் தற்காலிகமாகவேனும் கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமையேற்கும் தகுதி வாய்ந்த
ஒரே ஒருவரைக்கூட அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்போது முகநூல் பதிவர்களில் பலருக்கு ஒரு கேலிச்சித்திரமாகத் தென்படும் ஓ.
பன்னீர்செல்வத்தைக் காட்டிலும் உருப்படியான தலைவர்கள் வேறு யாருமே இல்லை. கடந்த
செப்டம்பரிலிருந்து தமிழகம் நிர்வாக ரீதியில் ஸ்தம்பித்துப் போய்விட்டது என்னும்
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடையது எனக்கொண்டாலும் அது
பொய்யான குற்றச்சாட்டு அல்ல. கடந்த மூன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் ஜெயலலிதாவால்
முன்னெடுக்கப்பட்ட நலத்திட்டங்களைக்கூடத் தொடர்ந்து செயல்படுத்தமுடியாத அரசாக இருந்து
வருகிறது எனத் தனது அரசின்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை ஒரு அறிக்கையின் மூலம்
மறுக்கும் அதிகாரம்கூட அவருக்கு இருப்பதுபோல் தோன்றவில்லை. ஜெயலலிதா அரசுக்கு நல்ல
பெயரைப் பெற்றுத் தந்த அம்மா உணவகம் இதற்குச் சரியான சான்று. பல ஊர்களில் தயார் நிலையில்
இருக்கும் அம்மா உணவகங்களைத் திறந்து வைப்பதற்குக்கூட அம்மா மீண்டும் அரியணை ஏற வேண்டும்
எனக் காத்திருக்கிறது அவரது அமைச்சரவை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கடும்
போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் சென்னையின் மெட்ரோ ரயில்
திட்டப் பணிகளில் ஒரு பகுதி முழுமையாக முடிவடைந்த பிறகும் அது இயக்கப்படாததற்குக்
காரணமும் அதுவேதான் என்பது பன்னீர்செல்வத்தின் அரசுமீது வைக்கப்பட்டுள்ள முக்கியமான
குற்றச்சாட்டுகளில் ஒன்று. நிர்வாக ரீதியில் முக்கியத்துவமுடைய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்
தொடரை ஒருவாரத்திற்கு மேல் அம்மாவின் விசுவாசிகளால் நடத்தமுடியவில்லை என்பது
மட்டுமேகூடப் போதுமான உதாரணம்தான். நிதிநிலை அறிக்கையைச் செயல்பாட்டுக்குக் கொண்டு
வருவதற்கு அவசியமான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குக்கூட சட்டமன்றத்தைக் கூட்ட
முடியாமலிருப்பது பற்றிய கவலை முதல்வருக்கு இருப்பதுபோல் தோன்றவில்லை. சட்டமன்றத்தில்
ஒரு முதல்வராகத் தனக்குரிய இருக்கையில் அமர்வதற்கே தயங்கும் ஒருவரிடமிருந்து வேறு
எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?
இப்போது பெங்களூரு உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் குளறுபடியான, சர்ச்சைக்குள்ளான
தீர்ப்பின்மூலம் மீண்டும் அரியணை ஏறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ள ஜெயலலிதாவால் அடுத்த ஆண்டு
மே மாதம் நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னால் பன்னீர்செல்வத்தின்
தலைமையிலான அதிமுக அரசின்மீது எழுந்துள்ள அதிருப்தியைச் சரிக்கட்ட முடியுமா?
அதற்கான அவகாசம் இருந்தாலும்கூட கர்நாடக அரசு குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து
மேல்முறையீடு செய்யக்கூடுமானால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்ய
முடியாத நிலையில் ஜெயலலிதா அதிகப் பதற்றமடையக்கூடும். அந்தப் பதற்றத்தோடு மீதியுள்ள
பதினோரு மாத கால ஆட்சியில் நல்லதாக ஏதாவது செய்து தனது வாக்கு வங்கியைத் தக்க
வைத்துக்கொள்வது ஜெயலலிதாவின் முன்னுள்ள பெரிய சவால். அவரது அரசியல் எதிரிகள்
எதிர்பார்ப்பதுபோல் உச்சநீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் குறைந்தபட்சம்
இடைக்காலத் தடையாவது விதிக்க வேண்டுமென முடிவு செய்தால் ஜெயலலிதாவின் நிலை என்ன
ஆகும் எனக் கற்பனை செய்வதைவிட, அது தமிழக அரசியல் சூழலில் என்ன மாதிரியான
பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கற்பனை செய்வது சுவாரஸ்யமானதாக இருக்கும்.
ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் அதை திமுகவின் சதி எனக் கட்டமைப்பதற்கு முயல்வார்கள். வழக்கின்
ஒரு வாதியாக இருந்துவரும் திமுக மீது அதுபோன்றதொரு குற்றச்சாட்டு ஏற்கனவே
முன்வைக்கப்பட்டு ஏறக் குறைய நிறுவப்பட்டு விட்டது. ஜெயலலிதா மீண்டும் சிறையிலடைக்கப்பட
நேரும்போது அவருக்கு ஆதரவாக அனுதாப அலையை உருவாக்குவதற்கு அதிமுக முயலும்.
நிச்சயமாக அதில் வெற்றியும் பெறும். தேர்தல் களத்தை உணர்ச்சிகரமானதாகவும் பைத்தியக்
காரத்தனமானதாகவும் மாற்றுவதற்கு அதிமுகவால் முடியுமென்றால், தேர்தல் முடிவுகளை
நிர்ணயிக்கும் ஒரே விஷயமாக இது மாறக்கூடுமானால் அஇஅதிமுக அரசின் ஐந்தாண்டு காலச்
செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கான தேர்தலாக இருப்பதற்கான வாய்ப்புகளை அது முற்றாக இழக்கும்.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பில் உள்ள குளறுபடிகளையும்
முன்னிறுத்தி ஜெயலலிதாவை ஊழலின் உருவகமாகச் சித்திரிப்பதற்கான வாய்ப்புகளை மட்டுமே
நம்பியிருக்கும் திமுகவுக்கு அதைப் பேசுவதற்கான தார்மீக வலிமை இருப்பதாக யாரும் கற்பனை
செய்துகொள்ளப் போவதில்லை. ஊழலுக்கெதிராக திமுக எதையாவது பேசக்கூடுமானால் அது பல
சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிவரும். அப்போது அதன் தலைவர்களால் ஆத்திரத்தைக்
கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் போகலாம். அப்போது தேர்தல்களம் உணர்ச்சி பூர்வமானதாக
மாற்றப்பட்டுவிடும். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்பதைவிட திமுகவுக்கு நல்லதல்ல என்பதே
சரி. ஏனென்றால் இதற்குமுன் நடைபெற்ற உணர்ச்சிபூர்வமான எல்லாத் தேர்தல்களிலும் திமுக
தோல்வியையே தழுவியிருக்கிறது. 1984, 1991 சட்டமன்றத் தேர்தல்கள் அதற்கு நேரடியான
உதாரணங்கள். சட்டமன்றத்திலிருந்து கிழிக்கப்பட்ட சேலையுடன் தலைவிரிகோலமாக அவர்
வெளியேறும் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்று 1991ம் ஆண்டு அதிமுகவின் தேர்தல்
பிரச்சாரச் சுவரொட்டிகளில் தவறாமல் இடம்பெற்றிருந்தது. 2001 சட்டமன்றத் தேர்தல்
களத்தைக்கூட ஜெயலலிதா உணர்ச்சி பூர்வமானதாகவே மாற்றியிருந்தார். 1996இல்
அதிமுகவிடமிருந்து அதிகாரத் தைக் கைப்பற்றிய திமுக அரசு அவர்மீது அடுக்கடுக்காகத்
தொடுத்திருந்த வழக்குகளைத் தன்மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளாகச் சித்திரித்தார்.
தான் கைதுசெய்யப்பட்டதை வைத்து ஒரு பெண் எனப் பாராமல் தான் பழிவாங்கப்படுவதாக
வாக்காளர்களிடம் முறையிட்டார். வாக்காளர்கள் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை
அந்தத் தேர்தல் முடிவுகள் நிரூபித்தன.
இவற்றுக்கெல்லாம் அப்பால், தமிழக அரசியலில் ஜெயலலிதா குறைந்த தீமை எனக் கருதப்படுவது
அவரது வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்று எனலாம். எம்ஜிஆரின்
மறைவுக்குப் பிறகு கடந்த இருபத்தியேழு ஆண்டுகளில் தமிழக அரசியல் தலைவர்களில் வேறு
யாரும் சந்தித்திராத வழக்குகளை எதிர்கொண்ட ஜெயலலிதா அரசியலில் நீடித்திருப்பதற்கும்
மோசமான தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் ஒரே காரணம் அவர்
குறைந்த தீமை எனக் கருதப்படுவதுதான். அவரது அரசியல் எதிரிகள்தாம் அந்தக் கருத்தை
உருவாக்கியவர்கள். 1996லும் 2006லும் சந்தித்த அவமானகரமான தோல்விக்குப் பிறகு அவரால்
மீண்டுவர முடிந்ததற்கு அதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 2006இல்
திமுகவிடம் அதிகாரத்தைப் பறிகொடுத்த பிறகு ஏறக்குறைய நான்காண்டுகள் வரை எவ்விதமான
அரசியல் நடவடிக்கைகளிலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஓய்வெடுத்துக்
கொண்டிருந்தவர் 2011 சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக தலைவரைத் தீயசக்தி என வர்ணித்ததற்கு
எப்படி அவ்வளவு கைதட்டல்களைப் பெற முடியும்?
ஆனால் இதுபோன்ற கற்பனைகளைக் கடந்து செல்வதற்கு நாம் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசோ, வழக்கைத் தொடர்ந்த
சுப்பிரமணிய சுவாமியோ வழக்கின் வாதிகளில் ஒருவரான திமுக பொதுச்செயலாளர் க.
அன்பழகனோ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
அது நடக்கும் என்றுதான் தோன்றுகிறது.
மேல்முறையீடு செய்யுமாறு சித்தராமய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு திமுக,
காங்கிரஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளும் கோரிக்கை
விடுத்திருக்கின்றன. காங்கிரஸோடு இருந்து வந்த பத்தாண்டுகளுக்கு மேலான உறவை, கடந்த
மக்களவைத் தேர்தலில் முறித்துக்கொண்ட திமுக பழைய நண்பனிடம் தூது போய்க்கொண்டிருப்பதாக
வந்திருக்கும் தகவல்களைப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு எதிராக எல்லோரும்
வரிந்துகட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது. இதை ஊழலுக்கெதிரான ஐக்கிய முனணணி என்று ஏன்
சொல்லக்கூடாது? கடந்த காலங்களில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்
கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளானதையும் நீதிமன்ற
நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளதையும் மறந்து விட்டுப் பார்த்தால் நிச்சயமாக இது அப்படியொரு
ஐக்கிய முன்ணணிதான். இந்த ஐக்கிய முன்னணிக்குத்தான் அடுத்த ஆண்டு மே மாதம் வரவிருக்கிற
சட்டமன்றத்தேர் தலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வாய்ப்புகள் கொஞ்சம்கூட நம்பத்
தகுந்ததாக இல்லையென்பது தான் முக்கியமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
ஜெயலலிதா விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது அப்படியொரு வாய்ப்பு
உருவானதுபோல்தான் தோன்றியது.
அனுதாபம் எவ்வளவுதான் கைகொடுத்தாலும் அதிமுகவால் ஊழல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டுச்
சிறையிலிருக்கும் ஒருவரை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திக்க முடியும் என யாரும் கற்பனை
செய்துகொள்ளவில்லை. கட்சி முதலும் முடிவுமாக அவரையே நம்பி இருந்தது. 1987இல்
அக்கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மறைந்தபிறகு அவரது அரசியல் வாரிசாக மக்களால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெயலலிதாவால் கடந்த இருபத்தியேழு ஆண்டுகளில் அரசியல் முதிர்ச்சிபெற்ற
ஒரு தலைவராக உருவெடுக்கவே முடியல்லை. திமுகவின் மீது மக்களுக்கு இருந்த
வெறுப்புணர்வைச் சரியானவிதத்தில் பயன்படுத்திக் கொண்டார் என்பதைத் தவிர அவரது அரசியல்
எதிரியின் கணக்கில் இருப்பதுபோல் அவரது கணக்கில் வேறு சாதனைகள் எதுவுமில்லை. 1987இல்
கட்சிக்குத் தலைமையேற்ற போதிருந்தே கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்துக்கொள்வதற்காக அவர் பல தந்திரங்களைக் கைக்கொண்டார். கட்சியில் யாருக்குமே நீடித்த
உரிமை இல்லையென்பதை அவர் தனது தொண்டர்களுக்கும் அணிகளுக்கும் உணர்த்திக் கொண்டே இருந்தார்.
தேவையானபோது யாரை வேண்டுமானாலும் அச்சுறுத்துவதற்கு அவரால் முடிந்தது. அவருக்கு மிக
நெருக்கமானவராகவும் கட்சியின் சக்திபடைத்த அதிகார மையமாகவும் தோழியாகவும் தற்போது
அவருடன் சேர்த்துக் குற்றம் சுமத்தப்பட்ட நால்வரில் ஒருவராகவும் உள்ள சசிகலா
குடும்பத்தாரைக்கூட பலமுறை அவர் அச்சுறுத்தினார். சசிகலா குடும்ப உறுப்பினர்களான
நடராஜன், தினகரன், பாஸ்கரன், வளர்ப்பு மகன் சுதாகரன் உள்ளிட்ட பலர்மீது சட்ட நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு அவர் தயங்கவே இல்லை. இவர்களில் பலருக்கு எதிராகப் பிணையில் வரமுடியாத
கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. கட்சியினர் சிலருடைய
வரவேற்பைப் பெற்ற அவரது இவற்றைப் போன்ற சில நடவடிக்கைகள் கட்சியின் நலன்களுக்கானவையாக
இல்லாமல் தனிப்பட்ட குரோதம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டவை என்பதே உண்மை. கட்சியில் இரண்டாம்
மட்டத் தலைவர்களாக உருவெடுப்பதற்கான தகுதிகளைக் கொண்டிருந்த பலர் திடீரென
அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதுதான் அவரது முதிர்ச்சியின்மைக்கான சரியான சான்றாக
இருக்க முடியும். அவரால் புறக்கணிக்கப்பட்ட பலரும் அப்போது உண்மையிலேயே கட்சிக்கும்
ஆட்சிக்கும் பங்களிக்கும் தகுதிபடைத்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள். தொடக்க காலத்தில்
தன்னுடன் இருந்த நெடுஞ்செழியன், காளிமுத்து, திருநாவுக்கரசர், முத்துச்சாமி,
செங்கோட்டையன் உள்ளிட்டோருக்கு கட்சியின் வளர்ச்சியில் பங்களிப்பதற்கான வாய்ப்பை அளிக்க
ஜெயலலிதா முயலவே இல்லை. 2001இல் அவர் இரண்டாவது முறையாகத் தமிழக முதல்வராகப்
பொறுப்பேற்றுக்கொண்ட தருணத்தில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுப் பதவி விலக
வேண்டியிருந்தபோது தம்பிதுரை போன்ற நாடாளுமன்ற அனுபவம் மிகுந்த இரண்டாம் மட்டத்
தலைவர்களுக்குப் பதிலாகக் கட்சியில் எந்த அதிகாரமும் இல்லாத
ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.
இப்போது 2014லும் அதுதான் நடந்திருக்கிறது. பதினெட்டாண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில்
விசாரணை நீதிமன்றம் எதிர்மறையான தீர்ப்பை வழங்கியபோது அமைச்சர்கள் கதறி அழுதார்கள். தாடி
வளர்த்துக்கொண்டு சோகமே உருவாகக் காட்சியளித்தார்கள். அம்மாவைச் சட்டத்துக்கு
அப்பாற்பட்டவராகக் காட்ட முயற்சித்தார்கள். தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா மீது வசைமாரிப்
பொழிந்தார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளால் சட்டத்தைப் பணிய வைக்க முடியும் என உண்மையாகவே
நம்புபவர்களாக அவர்களில் பலரும் தென்பட்டார்கள். யாருக்கும் தாங்கள் ஒரு அரசின் பிரதிநிதி
என்பது நினைவில் இல்லை. கடந்த எட்டு மாதங்களில் சமூக வலைத்தளப் பதிவர்களிடையே அவர்கள்
வாங்கிக் கட்டிக்கொண்டதைப் பார்க்க நேர்ந்திருந்தால் இவ்வளவு கேலிக்குரிய ஆள்களைக் கொண்ட ஒரு
கட்சிக்குத் தலைவராக இருக்க நேர்ந்திருப்பதைக் குறித்து ஜெயலலிதா நிச்சயம் வருத்தமடைவார்.
கட்சி இந்த அளவுக்குப் பலவீனமாக இருக்கும் என்பதை ஜெயலலிதாவேகூட
எதிர்பார்த்திருக்கமாட்டார். கட்சியின் மீதான அளவுக்கு மீறிய கட்டுப்பாடு, ஜனநாயக
நடைமுறைகளை முற்றாகப் புறக்கணிக்கும் அவரது போக்கு கட்சிக்கு ஒரு ஜனநாயக அமைப்புக்குள்
செயல்படுவதற்கான வாய்ப்புகளைப் பலவீனப்படுத்தியிருக்கிறது. தானில்லாமல் ஓரணுவும்
அசையக்கூடாது என அவர் நினைத்திருக்கலாம். முந்தைய காலங்களில் நடந்ததைப் போலவே
வழக்கிலிருந்து விரைவாக மீண்டுவந்து கடிவாளத்தைக் கைப்பற்றிக்கொண்டு விட முடியும் என
உண்மையாகவே அவர் நம்பியிருக்கலாம். ஆனால் நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா
உள்ளிட்ட அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் எவரும் சட்டத்திற்குப் பணிந்தே தீர வேண்டும்
என்னும் நிலையை ஏற்படுத்திவிட்ட பிறகு ஜெயலலிதாவின் நிலை பாதுகாப்பானதாக நீடிக்க
முடியும் என நினைப்பது கற்பனையாகவே இருக்க முடியும். தீர்ப்பு பற்றி எழுந்துள்ள
சர்ச்சைகள் ஆளுங்கட்சிக்குப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒருவேளை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் குமாரசாமியால் அளிக்கப்பட்ட தீர்ப்பு
ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.
அப்படி நடந்தால் ஜெயலலிதாவின் நிலை இன்னும் சிக்கலாகக்கூடும். ஏற்கனவே 1996, 2006
தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளனர். சொத்துக்
குவிப்பு வழக்கு என்னதான் புனையப்பட்டது, அரசியல் காழ்ப்புணர்வின் அடிப்படையிலானது எனச்
சொன்னாலும்கூட 2016 தேர்தலில் ஜெயலலிதா வேறு பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல
வேண்டியிருக்கும். ஒருவேளை ஜெயலலிதாவுக்கு வாக்காளர்கள் மத்தியில் அனுதாபம்
உருவானாலும்கூட அவர் இல்லாத நிலையில் அதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூட கட்சியில் தலைவர்கள்
இல்லை என்பதுதான் துரதிருஷ்டம்.
இந்தத் துரதிருஷ்டம் எல்லோரையும் துரத்தும்போல் தெரிகிறது.
ஜெயலலிதாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கான தார்மீக வலிமை எதிர்முகாமில்கூட
யாருக்கும் இருப்பதுபோல் தோன்றவில்லை. தனக்கான வலுவான வாக்கு வங்கியை வைத்திருக்கும்
திமுகவுக்கு அதன் தலைவர் மு. கருணாநிதியின் சாணக்கியத்தனங்கள் ஓரளவுக்குக்
கைகொடுக்கலாம். திமுகவுக்குள்ள பெரிய சிக்கல் அதிமுகவைவிடப் பெரிய அளவிலான ஊழல்
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் அதன் சில தலைவர்கள்தாம். தேர்தல் களத்தில்
கனிமொழி, ஆ. ராசா போன்றோர் தோன்றும்போது நிச்சயம் அதிமுக அதை விமர்சிக்கும்.
திமுகவில் கடந்த இரண்டு வருடங்களாக நீடித்து வரும் அதிகாரப் போட்டி கட்சியின் கீழ்மட்ட
அமைப்புகளைப் பலவீனப்படுத்தியிருக்கிறது. 1996இல் இருந்த நிலைமையில் திமுக
இருந்திருக்குமானால் நிச்சயமாக அது அக்கட்சியின் வெற்றிக்கு உதவியிருக்கும். இப்போது
கூட்டணி வாய்ப்புகளும் அக்கட்சிக்குப் பிரகாசமாக இல்லை. அதன் முன்னாள் கூட்டாளிகளான மற்ற
கட்சிகளிடம் நிலையான வாக்கு வங்கி எதுவுமில்லை. தனித்தன்மை பற்றிப் பேசிக்கொண்டே தேர்தல்
நேரத்தில் திமுக, அதிமுக இவற்றில் ஏதாவதொரு கட்சியிடம் மண்டியிடும் சந்தர்ப்பவாத
நிலைப்பாடுகளால் ஏற்கனவே அவற்றின் பிம்பம் சரிந்துள்ளது. கூட்டணி அமைப்பதாக இருந்தால்
முதல்வர் கனவிலிருக்கும் அன்புமணியையும் விஜயகாந்தையும் சரிக்கட்டுவதற்குத் திமுக தலைமை
அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும்.
ஆக, உச்ச நீதிமன்றத்திடமிருந்து தப்பித்துக்கொண்டு விட்டால் ஜெயலலிதாவுக்கு ஒளிமயமான
எதிர்காலம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதா அதற்காக சாத்தியப்பட்ட எல்லா
வழிமுறைகளையும் முயன்று பார்ப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஜெயலலிதா மத்திய பாஜக
அரசோடு ரகசியமான ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார் என ஊடகங்களில்
தென்பட்டுக்கொண்டிருக்கும் செய்திகள் ஆதாரமற்றவை அல்ல. ஓரிரு மாதங்களுக்கு முன்பு மத்திய
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜெயலலிதாவைச் சந்தித்தபோது அவர் விசாரணை நீதிமன்றத்தால்
தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தார். அவருடைய அரசியல் எதிர்காலம் ஏறக்குறைய இருண்டு
போயிருந்தது. பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், முதல்வர் உள்பட தன் கட்சிக்காரர்கள் எவரையும்
சந்திக்க மறுத்திருந்தார். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவரைப் போல தனது போயஸ் தோட்ட
இல்லத்திலேயே முடங்கிக்கிடந்தார். முகநூல் பதிவர்களில் சிலர் யூகித்ததைப் போல இப்போது
அவர் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.
பெங்களூரு உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு - அது எவ்வளவு சர்ச்சைக்குள்ளானதாக
இருந்தாலும் கூட - ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு ஒளியூட்டியிருக்கிறது.
அரைகுறையான, பிழைகள் மலிந்த அந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஒரு சிறு துரும்பாகக்கூட
இருக்க லாம். ஆனால் அதைக்கொண்டு அவர் வெறுமனே பற்களைக் குத்திக்கொண்டிருக்க மாட்டார்
என்பது மட்டும் நிச்சயம்.
மின்னஞ்சல்: devibha...@gmail.com

Braille Acl

unread,
Jun 18, 2015, 12:44:39 AM6/18/15
to brailleacl
18.06.15 dinamani tamil news papaer

--

Thanks.
 
With best regards,
 
Braille Section Team
Anna Centenary Library
Chennai

"Spend your quality time with volunteers on Sundays from 2pm to 5pm at Anna Centenary Library, Chennai"
18.06.2015 dinamani.html

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 20, 2015, 7:20:49 AM6/20/15
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
இந்த கல்வி ஆண்டி லிருந்து (2015-16)
பி.எட். படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு!
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத் தரவை தொடர்ந்து இந்த கல்வி ஆண்டி லிருந்து
(2015-16) பி.எட். படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு
செய்துள்ளது.
பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் குறிப் பிட்ட பாடப்பிரிவில்
பட்டம் பெற்றிருப் பதுடன் பி.எட். எனப்படும் இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற வேண்டும்.
இதுவரையில் பிஎட் படிப்புக்காலம் ஓராண்டாக இருந்து வந்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும்
அமைப்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) அமைப்பானது பிஎட் படிப்பு
காலம் 2 ஆண்டுகளாக உயர்த் தப்படும் என்று அண்மையில் அறிவித் தது. இதற்கு எதிர்ப்பு
தெரிவித்து தமிழகத்தில் தனியார் கல்வியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் இருந்து வருகிறது.
பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் சூழல் உருவான நிலை யில், அதற்குரிய
பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம்
மேற்கொண்டது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதால் என்சிடிஇ உத்தரவின்படி
பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுமா? அல்லது தொடர்ந்து ஓராண்டாகவே
நீடிக்குமா? என்று மாணவர்கள் மத்தியில் குழப்பம் உருவானது.
இதற்கிடையே, ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகம் தயாரித்த 2 ஆண்டு கால
பாடத்திட்டத்துக்கு அதன் சிண்டிகேட் குழு கடந்த மே மாதம் 20-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இந்த நிலை யில், என்சிடிஇ வழிகாட்டு நெறிமுறை கள் மற்றும் விதிமுறைகளை (பிஎட்
படிப்பு காலம் 2 ஆண்டுகளாக அதி கரிப்பு) 2015-2016-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து
கல்வியியல் கல்லூரி களிலும் நடை முறைப்படுத்துமாறு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக
துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசா ணையை
உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா நேற்று முன் தினம் (18-ம் தேதி) வெளியிட்டார்.
இந்த நிலையில், ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழக கல்விக்குழு வின் கூட்டம் பல்கலைக்கழக
அலுவல கத்தில் நேற்று நடந்தது. கல்விக்குழு தலைவரான துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன்
தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பினர்களான கல்லூரி கல்வி இயக்குநர்
எம்.தேவதாஸ், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்
வி.சி.ராமேஸ் வரமுருகன் உள்பட 24 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பி.எட்.
படிப்பு காலத்தை 2015-16 கல்வி ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக உயர்த்த ஒப்புதல் பெறப்பட்டதாக
துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் 'தி இந்து' விடம் நேற்று தெரிவித்தார். அவர் மேலும்
கூறியதாவது:-
பி.எட். படிப்புக்காலம் ஓராண்டாக இருந்தபோது கற்பித்தல் பயிற்சி காலம் 40 நாட்களாக
இருந்தது. இனி மேல் அது 20 வாரங்களாக இருக்கும். முதல் ஆண்டில் 6 வாரங் களும், 2-ம்
ஆண்டில் 14 வாரங்களும் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள் ஏதாவது ஒரு பள்ளியில்
கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடுவர். கற்பித்தல் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
அத்துடன் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன் படுத்தி பாடம் நடத்துதல்,
விளையாட்டு, யோகா, கலை மற்றும் கைவினை போன்றவற்றுக்கும் அதிக முக்கியத் துவம்
தரப்படும். 2015-16-ம் கல்வி ஆண் டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு
ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். இவ்வாறு துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.


இடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, ஜூன் 20, 2015

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 20, 2015, 7:32:09 AM6/20/15
to brail...@googlegroups.com
நல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்
கூடாது!

பணியின்போது ஊழலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான செய்திகள் தினமும் நம்மை வந்தடைகின்றன.
ஆனால், கல்வி பயிலும் போதே சிலர் முறைகேட்டில் ஈடுபடுவது தொடர்பாகச் சமீபத்தில்
வெளியாகும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. மருத்துவ, பல் மருத்துவப்
படிப்புகளுக்காக அனைத்திந்திய அளவில் மே 3-ல் நடந்த நுழைவுத் தேர்வில் 'அறிவியல்
புனைகதை'களில் நடக்கும் சம்பவங்களுக்கு இணையான முறைகேடுகள் நடந்திருக்கின்றன.
கேள்வித் தாளில் அச்சிடப்பட்ட கேள்விகளுக்கு, யாரோ ஒருவர் பதில்களை ஒவ்வொன்றாகப் படிக்க,
வெவ்வேறு தேர்வு மையங்களில் இருந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்போன் வாயிலாக அதைக்
கேட்டு எழுதியிருக்கிறார்கள். இதற்காக சிறப்பான மேல்சட்டை அணிந்து அதற்குள் செல்போனை
மறைத்து வைத்திருக் கிறார்கள். 'இந்த சேவைக்காக' ஒவ்வொரு மாணவரும் 15 லட்ச ரூபாய் முதல்
20 லட்ச ரூபாய் வரையில் கொடுத்திருக்கிறார்கள்.
3,000 இடங்களுக்கு 6.3 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த நுழைவுத் தேர்வு நேர்மையற்றவர்களின்
செயலால் சீர்குலைந்து விட்டது. கடந்த ஆண்டும் இதே போன்ற மோசடி நடந்திருக்கிறது என்று
பிடிபட்டவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
பணம் கொடுத்த மாணவர்களின் செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு, ஒரே இடத்திலிருந்து பதில்களை
அளிப்பது என்றால் துணிச்சல், திட்டமிடல், ஒருங்கிணைப்பு, அதிகார வர்க்கத்தின் ஆசி இல்லாமல்
நிச்சயம் நடந்திருக்கவே முடியாது. பிஹாரில் பள்ளியிறுதித் தேர்வை எழுதிய
மாணவர்களுக்கு ஜன்னல் வழியாக 'பிட்'டுகளைத் தூக்கி வீசியதைப் போல அல்ல இது. கல்வி,
நேர்மை குறித்து கவலைப் படாத பணக்காரர்கள் சிலர் செய்திருக்கும் உயர் மட்ட ஊழல்.
அலைபேசியில் பதிலைக் கேட்டு வாங்கியவர்களை மட்டும் தனிமைப்படுத்தி அவர்களுடைய தேர்வை
ரத்து செய்யலாம் என்று சி.பி.எஸ்.இ. கூறிய யோசனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
நிராகரித்திருப்பது சரிதான். செல்போனில் தொடர்புகொண்டவர்கள் போக, வேறு யார் யார்,
எந்தெந்த வகையில் அந்தக் கும்பலிடம் உதவி பெற்று எழுதியிருப்பார்களோ, யாருக்குத் தெரியும்?
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து தேர்வை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், நான்கு
வாரங்களுக்குள் (ஜூலை 15-க்குள்) மீண்டும் நுழைவுத் தேர்வை நடத்துமாறு உத்தர
விட்டிருந்தது. எனினும், ஏற்கெனவே பல தேர்வுகளை நடத்தியி ருந்ததால் பணிச்சுமை அதிகம்
என்றும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ. கோரியிருந்தது. இதை ஏற்றுக்
கொண்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 17-க்குள் தேர்வை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்று
உத்தரவிட்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ-க்கும் இது
கூடுதல் சுமைதான். ஆனால், நடந்திருக்கும் விஷயத்துக்கு விரைவில் தீர்வு காணவில்லை
என்றால், அது பல மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துவிடும்.
பல்கலைக்கழகங்களும் சுயாட்சிக் கல்லூரிகளும் நடத்தும் தேர்வுகள் மீது நம்பிக்கை
இல்லாததால்தான் இந்த நுழைவுத் தேர்வு வந்தது. நம்முடைய கல்வியின் தரம் மட்டுமல்ல, கல்வித்
துறையைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஏன் மாணவர்களின் நேர்மைகூட
சந்தேகத்துக்குள்ளாகிவிட்டது. இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய
வேண்டுமோ அனைத்தையும் துளிகூடத் தாமதிக்காமல் உடனே செய்துமுடிக்க வேண்டும்.

Palaniappan kandasamy

unread,
Jun 20, 2015, 10:22:11 AM6/20/15
to brail...@googlegroups.com
ஒரு சிலர் செய்த தவருக்காக அனைவரும் பாதிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை, தவரு செய்தவர்களை தண்டிக்கலாம். தவரு நிகழாமல் பார்த்துக்கொள்ளலாம். வாழ்க வளர்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிரு.
பழனியப்பன் கோவை 4
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


---
This email has been checked for viruses by Avast antivirus software.
https://www.avast.com/antivirus

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 20, 2015, 10:39:22 AM6/20/15
to brail...@googlegroups.com
Friday,
June 19, 2015
ஜெ.பி. சாணக்யாவின் “பூதக்கண்ணாடி”
Image result for ஜெ.பி சாணக்யா

ஜெ.பி சாணக்யாவின் “பூதக்கண்ணாடி” தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாய
இருக்கலாம். அதன் விரிவைப் பார்க்கையில் ஒரு குறுநாவலின் சின்ன விதை போலத்
தோன்றுகிறது. அதன் சிறப்பு ஒரு மனநிலையை மெல்ல மெல்ல மீட்டி பிரம்மாண்டமாய் ஒரு
தாக்கத்தை ஏற்படுத்துவது தான்.

அடிப்படையில் அது ஒரு மனநிலைக் கதை. பெரிதாய் சம்பவங்கள் ஏதும் நடக்காமல், ஆனால்
நடப்பது போன்ற ஒரு திகிலை தக்க வைப்பது சாணக்யாவின் தனித்திறன் தான். கதையின் முடிவில்
ஒரு பெண் இறக்கிறாள். ஆனால் அவள் கொலையை சித்தரிக்காமல் விடுவதன் மூலம் நம் பயத்தை
பலமடங்காய் பெருக்குகிறார். சதா கண்காணிக்கப்படுவதான பயம் அப்பெண்ணுக்கு இருக்கிறது.
அவளை கண்காணிப்பது அவள் அக்காவின் மகனான ஒரு பையன். இந்த கண்காணிப்பின் அச்சம் தான்
கதையின் mood. அவள் மீது அப்பையனுக்கு உள்ள தகாத இச்சை (taboo) கூட நிக்ழவதோ
நேரடியாய் வெளிப்படுவதோ இல்லை. தொழில்நுட்ப ரீதியில் மேலாய் எழுதப்பட்ட ஒரு ”மோகமுள்”
இது.

ஜெ.பி சாணக்யாவின் புனைவில் கதைகூறும் மற்றும் கதை கேட்கும் பாத்திரங்கள் கதைக்குள்
இருப்பதில்லை. அதாவது பங்குபெறுவதில்லை. தன் சொந்த வாழ்க்கையின் கதையை ஒருவன் சொல்வதாய்
இருந்தாலும் எதார்த்தமாய் நினைவில் இருந்து மீட்டு சொல்லும் முஸ்தீபுகள் இல்லை.
“பூதக்கண்ணாடியில்” கதைமாந்தரை நன்கு அறிந்த ஒரு கிராமத்து ஆள் கதையை விவரிக்கிறார்.
அப்போது அவர் பாத்திரங்களை பக்கத்தில் போய் நுணுக்கமாய் விவரிக்கிறார். அவர்களின் மன
ஓட்டங்களைப் பேசுகிறார். சம்பிரதாயமான கதைசொல்லலில் யார் எதை பேச வேண்டும் எனும்
விதிகள் உண்டு. உதாரணமாய் ஒரு பாத்திரத்தின் மன ஓட்டத்தை invisible third person
எனப்படும் மூன்றாம் நிலை கதை சொல்லி கூறலாம். அக்கதைசொல்லி எழுத்தாளன் தான் என்பது
உணர்த்தப்படும். அவன் தன்னை கடவுள் நிலையில் வைத்துக் கொண்டு எதையும் அறிந்து சொல்பவனாய்
இருப்பான். ஆனால் சாணக்யா இந்த சம்பிரதயங்களை கலைத்துப் போடுகிறார். அபரிதமான
சுதந்திரத்துடன் கதையில் பயணிக்கிறார்.

இங்கு கதை கூறுபவரும் கேட்பவரும் யாராக வேண்டுமெனிலும் இருக்கலாம். கதை என்பது
உண்மை என்று அல்லாமல் அதைக் கூறுபவரின் முழுமையான கற்பனையாகவும் பார்க்கலாம், அல்லது
அது கேட்பவரின் விருப்பம், கற்பனை பொறுத்தும் மற்றொன்றாய் திரியலாம். இது பொதுவாய்
எழுதும் போதும் வாசிக்கும் போதும் நடப்பது தான். ஆனால் சாணக்யாவின் கதையில் இது
கதைகூறலுக்குள் நடக்கிறது என்பது தான் சிறப்பு. அதுவும் “பூதக்கண்ணாடி” ஒரு
பின்நவீனத்துவ, மிகைபுனைவு இல்லை. எதார்த்த கதை தான். அதன் எதார்த்த வடிவத்துக்குள் அவர்
அநாயசமாய் விளையாடுவது வியப்பளிக்கிறது. இந்த விளையாட்டின் அற்புதமான உதாரணம்,
என்னைப் பொறுத்தவரையில், ரூல்போவின் பெட்ரோ பரோமா நாவல் தான். அக்கதையில் நாயகன் பேய்கள்
மட்டும் வசிக்கும் ஒரு நகரத்துக்கு போகிறான். அங்கு அவனுக்கு கடந்த காலத்தின் நினைவில்
இருந்து பல குரல்கள் கேட்கின்றன. சம்பவங்கள் நிஜம் போல் மீண்டும் தோன்றுகின்றன. அவனிடம்
பேசும் பாத்திரங்களின் வசனங்களின் ஊடாய் சட்டென ஒரு கடந்த கால உரையாடலுக்குள் கதைசொல்லி
நம்மை அழைத்துப் போவார். பொதுவாய் பேய்க்கதை வடிவம் தரும் சுதந்திரத்தை பயன்படுத்தி
காலம், இடம் சார்ந்து கதைக்கு இருக்கும் விதிமுறைகளை நொறுக்கி விடுவார் ரூல்போ.
ரூல்போவை போல் காலத்தையும் இடத்தையும் சுலபமாய் மீறி கதையை நகர்த்திப் போகும் மற்றொரு
படைப்பாளி இல்லை. யார் எந்த இடத்தில் கதையை சொல்லுவது என்கிற சிக்கலே அவருக்கு இல்லை.
சாணக்யா இவ்விசயத்தில் ரூல்போவை ஓரளவு நெருங்குகிறார். உண்மையில், எதார்த்த கதை
எழுதுபவர்களுக்கு இது எவ்வளவு சிக்கலானது எனத் தெரியும். கதையின் கட்டுப்பாடுகளை
உதறி, இயல்பாய் பயணிப்பது ஒரு தனி சாதனை தான்.

“முதல் தனிமை” என்னும் கதையில் ஒரு பாரில் இருந்து தன் கதையை ஒரு பழைய வயதான
நண்பருக்கு கூறுகிறான் கதைசொல்லி. ஆனால் அவன் தன் நினைவை சித்தரிக்கும் போது inverted
commasக்கு உள்ளே அதை வைப்பதில்லை. நேரடியான சித்தரிப்புக்கும் நினைவு
சித்தரிப்புக்கும் வித்தியாசம் இருப்பதில்லை. இப்போது சொல்லப்படும் இதுதான் உண்மை
என்றில்லை, இது சொல்பவன் மற்றும் கேட்பவனின் கற்பனை பொறுத்து உருவாகிற கதையாக
இருக்கலாம் எனும் தொனி உள்ளது. அதனால் சாணக்யாவுக்கு எந்த கட்டுப்பாடும் இருப்பதில்லை.
தமிழில் இந்த பாணியை சிலர் செயற்கையாய் திணிப்பதுண்டு. ஆனால் சாணக்யா இயல்பாய் சரளமாய்
செய்கிறார்.
Posted by Abilash Chandran at 2:47 PM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 20, 2015, 10:42:42 AM6/20/15
to brail...@googlegroups.com
Sunday, June 14, 2015
தமிழ்த் திரையிசைப் பாடல்களில் கவித்துவம் (2) – வைரமுத்து
Image result for வைரமுத்து
கண்ணதாசனுக்கு பிறகு தோன்றியவர்களில் மிக வளமான கற்பனையும் மரபுடன் ஆழமான தொடர்பும்
கொண்ட பாடலாசிரியர் வைரமுத்து தான். “வானம்பாடி” இயக்க கவிஞர்களிலும் கட்டற்ற கற்பனை
வளம் கொண்ட ஒரே எழுத்தாளர் அவர் தான். அதனாலே இன்றும் மு.மேத்தா, தமிழன்பன் ஆகியோரின்
கவிதைகளை வைரமுத்துவின் வரிகள் அருகே வைத்துப் பார்கையில் அவை ஒளியிழந்து வயதான
நடிகையின் சருமம் போல் தோன்றுகின்றன.

பா.விஜய், ந.முத்துக்குமார் போன்றோருக்கு ஒரு தனியான கவி ஆளுமை இல்லை. அதனால்
அவர்கள் எழுதுபவை மெட்டுக்குக்கான வெற்று வரிகள் மட்டுமே. ஆனால் கபிலன், கார்த்திக்
நேத்தா, உமாதேவி போன்றோர் இன்றும் கவி ஆளுமையுடன் பாடல் எழுதுகிறவர்கள்.
இருசாராருக்கும் உள்ள வித்தியாசம் இது. கவி ஆளுமை கொண்டவர்கள் தம் கவிதைகளின் உலகை
கொஞ்சம் கொஞ்சமாய் பெயர்த்து மெட்டுக்கு ஒத்திசையும் தம் பாடல் வரிகளில் குடி
வைக்கிறார்கள். ஒவ்வொரு பாடலின் சில வரிகளிலும் அவர்களின் தனித்துவமான பார்வை,
மனரேகையின் தடம், சொற்களின் வாசனை இருக்கும். இதை பா.விஜய், ந.முத்துக்குமாரிடம்
பார்க்க இயலாது. தனுஷ், சிம்பு, கமலஹாசன் எழுதும் பாடல்களிலும் இருக்காது. அவர்கள்
ஜெராக்ஸ் மிஷின்கள். கவிஞர்கள் அல்ல.
வைரமுத்துவின் ஒவ்வொரு வரியிலும் அவரது தனித்துவமான வண்ணம் மிளிரும். அவரது மன
அமைப்பின், சிந்தனைகளின், நம்பிக்கைகளின் நீட்சியாக அவ்வரிகள் இருக்கும். “இது ஒரு
பொன்மாலைப் பொழுதிலேயே” இது ஆரம்பிக்கிறது. அவரது “அந்தி” எனும் கவிதையின் சற்றே
மாற்றியமைக்கப்பட்ட வடிவம் அப்பாடல். “வானம் எனக்கொரு போதி மரம்” எனும் வரி அவரது
வாழ்க்கை சித்தாந்தம். இயற்கையை உற்று கவனித்தால் வாழ்க்கை வசப்படும் எனும் கற்பனாவாத
நம்பிக்கை இது.
கற்பனாவாதத்தை ஆங்கிலத்தில் Romanticism என்கிறார்கள். பதினெட்டாவது நூற்றாண்டில்
இறுதியில் துவங்கி பத்தொன்பதாவது நூற்றாண்டின் முதல் பாதி வரை இங்கிலாந்தை ஆட்சி செய்த
கவிதை இயக்கம் கற்பனாவாதம். வெர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், பைரன், காலரிட்ஜ் ஆகியோர் இந்த இயக்கத்தின்
பிதாமகர்கள் மற்றும் உபதளபதிகள். இந்த இயக்கம் தான் பிற்பாடு தமிழகத்தில் அறுபது
எழுதுபதுகளில் “வானம்பாடி” இயக்கம் எனும் பெயரில் இடதுசாரி சிந்தனைகள், சங்க இலக்கிய,
தமிழ் தேசிய தாக்கங்களுடன் உருப்பெற்று தோன்றுகிறது. “வானம்பாடி” இயக்கத்தின் அடிப்படை
கோட்பாடுகள் இயற்கை ஆராதனையும் சுயத்தை உலகின் மையமாக வைத்து வாழ்க்கையை புரிந்து
கொள்ளும் பார்வையும்.
“வானம் எனக்கொரு போதி மரம்” வரியையே எடுத்துக் கொள்வோம். உலகை அறிவதற்கான பார்வையை
வைரமுத்து தான் வெளியில் இருந்து, அதாவது புத்தகம், ஞானிகளின் உரைகள், மரபு
ஆகியவற்றில் இருந்து பெறுவதாய் கூறவில்லை. இயற்கையில் இருந்து ஞானோபதேசமாய் பெற்றதாய்
கூறுகிறார். அது தான் சரியான அறிதல் என அவருக்கு எப்படித் தெரியும்? இங்கு தான்
அகயவயவாதம் (subjectivism) உருவெடுக்கிறது. என் அகத்துக்கும் இயற்கைக்கும் ஒரு
நூதனமான, அந்தரங்கமான உரையாடல் நடக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையே பரிமாறப்படும்
உண்மைகளை வாசகனுக்கு எடுத்துரைக்கிறேன் என்கிறார். இதன் சரித்தன்மையை அதை நேரடியாக
இயற்கையிடம் இருந்து பெறும் வைரமுத்து மட்டும் தான் உறுதிப்படுத்த முடியும். ஆக
வைரமுத்துவின் அறிதலுக்கு அவர் மட்டுமே பொறுப்பு. அவர் தன்னை கர்த்தர், முகமது நபி
போன்ற தீர்க்கதரிசிகளுக்கு இணையாக நினைக்கிறார். இந்த மிதமிஞ்சிய ஈகோயிசம் வானம்பாடி
கவிதையின் ஆதார தொனி. வானம்பாடி கவிதை படிக்கும் போது உங்கள் காதுக்குள் “நான் நான்
நான்” எனக் கேட்டுக் கொண்டே இருக்கும்.
தன்னை அடிப்படையாக வைத்து உலகை கண்டறிவதற்கு “வானம்பாடி” கவிஞனுக்கு உள்ள கருவி
அவனது கற்பனை. சாதாரண கற்பனை அல்ல. மிதமிஞ்சிய, நுரைத்து பீறிட்டு கிளம்பும் கற்பனை.
அதனால் கவிதையை மு.மேத்தா ”உலகை புரட்டிப் போடும் நெம்புகோல்” என்கிறார்.
“கடலுக்குண்டு கற்பனைக்கு இல்லை கட்டுப்ப்பாடு, என் தாய் கொடுத்த தமிழுக்கு இல்லை
தட்டுப்பாடு” என்கிறார் வைரமுத்து.
தன் கவிதையால் உலகை புரட்டிப் போடலாம் என நம்புவதற்கு ஒரு சாதாரண கண்ணாடியும்
ஜுப்பாவும் அணிந்த பேராசிரியரான அக்கவிஞனுக்கு எப்படியான அகந்தை வேண்டும் யோசியுங்கள்.
நவீன கவிஞன் “நான் இந்த உலகில் ஒரு சாதாரண ஆள். எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை” என
நினைத்தால் “வானம்பாடி” கவிஞன் “நானே உலகம், நான் திரும்பினால் உலகமும் கூடத்
திரும்பும்” என திமிறுவான்.
நவீன கவிஞனைப் போல் “வானம்பாடி” கவிஞன் தன் அறிவார்ந்த, உளவியல் அவதானிப்புகள் மூலம்
வாழ்க்கையை மதிப்பிட முயல மாட்டான். பூடகமான குறியீடு, படிமம் மூலம் தத்துவார்த்தமான
வாழ்க்கைப் பார்வையை சித்தரிக்க முயல மாட்டான். அவன் தன் கற்பனையை மட்டும் கொண்டு
வாழ்க்கையின் அத்தனை சிக்கல்களும் பதில் காண முடியும் என கிட்டத்தட்ட துடுக்குத்தனமாகவே
நம்புவான். வைரமுத்துவின் இந்த வரிகளில் வருவது போல்:
“இனி கண்ணீர் வேண்டாம்
ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள்
கேட்டுக் காதல் செய்க
நம் விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால்
நன்மை செய்க” (மெட்டுப் போடு, “டூயட்”)
ஒரு கவிதை எழுதினால் எப்படி வாழ்க்கையின் கண்ணீர் தீரும்? வாழ்க்கை அவ்வளவு எளிதானதா
என்ன? ஆனால் “வானம்பாடி” கவிஞன் அப்படித் தான் நம்புவான். தன் கவித்துவ சொற்கள்
வாழ்க்கையின் பாவங்களை, துக்கங்களை அலம்பி சுத்தம் செய்யும் என கோருவான். ஒரு மிதமிஞ்சிய
ஈகோவில் இருந்து, பகல் கனவின் இறுமாப்பில் இருந்து அவனுக்கு இந்த நம்பிக்கை வருகிறது.
ஆங்கில ரொமாண்டிக் கவிஞனான வெர்ட்ஸ்வொர்த் தன்னுடைய Tintern Abbey கவிதையில்
இயற்கையை நுணுகி பார்க்க நேர்ந்த தருணத்தை கடவுளை அறிந்த சந்தர்ப்பமாக சித்தரிக்கிறார்.
ஒரு குழந்தையாய் இருக்கையில் மனிதன் இயற்கையிடம் மிக நெருக்கமாய் இருக்கிறான்.
களங்கமற்று உலகை தரிசிக்கிறான். ஆனால் பின்னர் வளர வளர அறிவும், லௌகீக அனுபவமும் அவனை
களங்கம் கொள்ள செய்கின்றன. அவன் மீண்டும் குழந்தையானால் மட்டுமே புனிதமாக மாறி நிம்மதி
கொள்ள முடியும். அதற்கு அவன் இயற்கையிடம் திரும்ப வேண்டும். அறிவையும் பிரக்ஞையையும்
துறந்து தன் கற்பனையை மட்டும் துணையாகக் கொண்டு வாழ்க்கையுடன் ஒன்றிப் போக வேண்டும்
என்கிறார். இதைத் தான் வைரமுத்து வேறு சொற்களில் “இது ஒரு பொன்மாலைப் பொழுதில்”
சொல்கிறார். அது ஒரு சாதாரண பாடல் அல்ல. “வானம்பாடி” கவிதை இயக்க சித்தாந்ததின்
பிரகடனம். வைரமுத்து எனும் கவிஞனின் அகச்சித்திரம். ஒரு எழுத்தாளனாக அவரது
curriculum vitae.
வைரமுத்துவின் பாடல்களில் சில வரிகளில் ஒரு நல்ல கவிதைக்கான அற்புதமான திறப்பு
இருக்கும். ஆனால் அதை ஒரு முழுமையான வானம்பாடி பாணி கவிதையாக வளர்த்தெடுக்காமல்
இருக்க கவனம் காட்டுவார். சட்டென பாடல் வணித்தன்மையும் சிலுசிலுப்பும் கொண்டு அடர்த்தியை
இழந்து ஒரு சாதாரண ரசனைப் பாடலாக மாறும். இதை அவர் வணிக வரவேற்புக்காக வேண்டுமென்றே
செய்கிறார் என்பது வெளிப்படை.
அவரது பாடல்களில் அவர் உருவாக்கும் இந்த திறப்புகளிலேயே குறிப்பிடத்தக்கவை ஏராளம்.
இத்தொடரின் எதிர்கால அத்தியாயங்களில் ஒரு சிலவற்றையாவது வைரமுத்துவுக்காக ஒதுக்கினால்
மட்டுமே அவரது கவி ஆளுமைக்கு நாம் ஓரளவாவது நியாயம் செய்ய முடியும். இப்போதைக்கு
“ஜெண்டில்மேன்” படத்தில் வரும் “என் வீட்டுத் தோட்டத்தில்” எனும் பாடலின் கவித்துவமான
இடங்களைப் பற்றி மட்டும் பேசி இந்த அத்தியாயத்தை முடிப்போம். தமிழின் சிறந்த
திரைப்பாடல்களில் ஒன்று அது.
“என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்
உன் பெயர் சொல்லுமே”
காதலிக்கும் போது “பாலும் கசந்ததடி படுக்கை நொந்ததடி” எனும் முரண் உணர்வுக்ள்
ஏற்படுவது, பார்க்கும் இடமெங்கும் காதலிப்பதவரின் முகம் தோன்றுவது ஆகியவை காதல்
சூழலுக்கான தேய்வழக்கு பிரயோகங்கள். இவை வராத சினிமாவே இல்லை எனலாம். ஆனால் காதலில்
இருப்பவர்கள் தாராளமாக பாலுண்டு படுக்கையில் தூங்குவார்கள். ரோட்டில் போகிற கிழவியை
பார்த்தால் கிழவியாகத் தான் தோன்றும், காதலியின் உருவம் அங்கு தோன்றாது. ஆனால் மற்றொரு
லயிப்பு உணர்வு எப்போதும் இருக்கும். ஏக்கத்தின் கசப்பும் தவிப்பும் எப்போதும் மனதை
ஆக்கிரமிக்கும். இன்னும் நுணுக்கமாக பார்த்தால் இந்த உலகமே நாம் தான் எனத் தோன்றும்.
“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம்” எனது பல வடிவங்கள் தானா என கேட்க
தோன்றும். அது ஒரு விதத்தில் உண்மையும் தான். எப்படி?
ஒரு பனியில் துலங்கின ரோஜாவைப் பார்த்தால் ஏன் அழகு என தோன்றுகிறது? அதன் பளீரென்ற
சிவப்பு நிறம், மிருதுவான இதழ்கள், தண்ணென்ற உணர்வு, வாசம் இவையாவும் உங்கள் ரசனையின்
பகுதி. உங்கள் ரசனையை பூவில் பார்ப்பதனால் தான் பூ அழகு. பூவில் இந்த குணங்கள்
இருப்பதால் நீங்கள் அதை ரசிக்க வில்லை. ஏன் பூவுக்கு கீழே முள்ளும், பூனை மயிர்கள்
அரும்பிய தண்டும் தான் இருக்கும். அவை ஏன் உங்களை ஈர்க்கவில்லை. ரோட்டோரம் காய்ந்து
கிடக்கும் மலத்துண்டு ஏன் ரசனையை தூண்டவில்லை? பூ இந்த உலகம் பற்றின உங்கள் அழகிய
பார்வையின் ஒரு வெளிப்புற வடிவம். அந்த பூ உங்கள் மனதின் ம்ற்றொரு வடிவம். உங்களுடைய
மாற்று மனம். அது நீங்களே தான்.
இப்போது காதல் மனநிலைக்கு மீண்டும் வருவோம். காதலிக்கும் போது பூ மட்டுமல்ல நாம் அதுவரை
ரசிக்காத பல பொருட்கள் மீது ஒரு லயிப்பு ஈர்ப்பு தோன்றும். ஜில்லென்ற மண்தரை, காற்றில்
அலைந்து நெளியும் ஜன்னல் திரை, நீரின் சப்தம், ஒரு பாத்திரம் விழுந்து உருளுகிற ஒலி
கூட உங்களுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தும். யாரோ ஒரு குழந்தையை கையில் ஏந்தி நடப்பது
பார்த்தால் மனம் நெகிழும். துள்ளல் நடையும் தொங்கும் காதுகளும் மிளிரும் கண்களுமாய் ஓடி
வரும் நாய்க்குட்டி பார்த்தால் எடுத்து தடவத் தோன்றும். சாலையோரம் நிற்கும் செடிகளின்
தழைகளை வருடிக் கொண்டு நடக்க பிடிக்கும். இந்த உணர்வு காதலியின் மீதுள்ள ஆசையும் அன்பும்
ஏற்படுத்துகிற மனநிலையின் நீட்சி அல்ல. இது வேறு.
காதல் நமக்குள் இந்த பிரபஞ்சம் மொத்தத்தை நேசிக்கும் மனநிலையை சட்டென ஏற்படுத்துகிறது.
வீடு, வீட்டிலுள்ள பொருட்கள், வீட்டுக்கு வெளியே உள்ள இயற்கை, ஆகாயம் எல்லாமே உங்களின்
மற்றொரு பகுதி என தோன்றும். அவை உங்கள் மனதின் தூல வடிவங்கள் என நம்புவீர்கள்.
ஒவ்வொன்றையாய் தொட்டுப் பார்த்து “இது நான் இது நான்” என சொல்லத் தோன்றும்.
சொல்லப் போனால், உள்ளொடுங்கி இருக்கிற ஆட்கள் கூட காதலிக்க தொடங்கினால் வெளியுலகை
நேசிக்க தொடங்குவர்கள். அறையில் முடங்கிக் கிடக்காமல் திறந்த வெளியில் மனிதர்கள்,
ஜீவராசிகள் மத்தியில் திறந்த மனதோடு திரிய விரும்புவார்கள். முட்டையை உடைத்து வெளியே
வருகிற குஞ்சு “அட நம் உலகம் இவ்வளவு பெரிதாக வெளியே இருக்கிறதா?” என வியப்பது
போல் நெகிழ்வீர்கள். இந்த உன்னதமான ஜென் நிலைக்குள் நம்மை கொண்டு போவது தான் காதலின்
சிறப்பு. அதனால் தான் வானம்பாடி கவிதை நம்மை மீண்டும் மீண்டும் காதலிக்க தூண்டுகிறது.
காதலிக்கும் போது மனிதன் தாயுமானவரைப் போல் இயற்கையை தன்னுடைய ஒரு உறுப்பாக எண்ணி
தோய்ந்து உருக கற்கிறான். ஒரு சங்கக் கவிதையில் புன்னை மர நிழலில் தலைவியுடன் முயங்க
எத்தனிக்கும் தலைவனை நோக்கி அவள் கூறுகிறாள்:
“விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்து இனிதுவளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வைஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே… ” (நற்றிணை 172)
அதாவது இந்த புன்னை மரத்தை என் தமக்கை என்று கூறித் தான் என் அம்மா வளர்த்தாள். நானும்
அதை அப்படித் தான் கருதுகிறேன். இப்போது என் தமக்கை அருகே வைத்து என்னை நீ அணைப்பது
வெகுவாக கூச்சத்தை ஏற்படுத்துகிறது என்கிறாள். விளையாட்டுத்தனமாய் அவள் இவ்வாறு
கூறுவதாயும் பார்க்கலாம். ஒருவேளை தலைவனின் துடுக்குத்தனத்தை கேலி பண்ண, அவனை சீண்ட என
பல காரணங்களுக்காக அவள் கூறி இருக்கலாம். ஆனால் அடிப்படையில் அந்த மரத்தை தன் உறவாக,
தன் வாழ்வின் ஒரு பகுதியாக பார்க்கிற மனநிலை முக்கியமானது. இம்மனநிலை இன்று நம்
பண்பாட்டில் இல்லை. ஆனால் இன்றும் காதலிக்கிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தன் வீட்டுத் தோட்டத்து
மரத்தை தன் உறவாக, தன் உடலின் உறுப்பாக தான் காண்பார்கள். இந்த நற்றிணைப் பாடல் அந்த
அபூர்வமான ஜென் மனநிலையைத் தான் சித்தரிக்கிறது. தன்னை ஒரு மரத்தில், மண்ணில், கற்களில்
பிரதிபலித்து உணர்கிற ஒரு பெண்ணின் காதலை அறிய அவளிடம் கேட்க வேண்டியதில்லை. அவள்
வீட்டுத் தோட்டத்து பூவைத் தீண்டினால் நீ அவளைத் தான் தீண்டுகிறாய். அவள் வீட்டு ஜன்னல் கம்பியில்
கை வைத்தால் அவள் தோளைத் தொடுகிறாய். காற்றில் கைகளை விரித்து அளைந்து நிற்கும்
தென்னங்கீற்றின் ஒவ்வொரு விரல் நுனியிடம் கேட்டாலும் அது அக்காதலை சொல்லும். அகமே புறமாக
மாறுகிற காதல் மனநிலையை வேறு எந்த கவிஞனும் தமிழ்ப்பாடல்களில் பதிவு செய்ததில்லை.
”சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத் தானே வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே”
இது கொஞ்சம் நவீன கவிதை போல் தொனிக்கும் உவமை. சொல்லுக்கும் அதன் பொருளுக்குமான உறவை
ஒரு உணர்வுக்கும் அதன் வெளிப்பாட்டுக்கும் பொருத்துகிறது. ஒரு சொல்லுக்கு ஒரு அர்த்தம்
உண்டு என நம்புகிறோம். ஆனால் எந்த அர்த்தமும் அச்சொல்லுக்கானது அல்ல. பயன்பாட்டின் போது
ஒரு சொல்லின் பொருள் முற்றிலும் மாறி வேறொன்றாக ஆகலாம். ஆக சொற்களுக்கும்
பொருளுக்குமான உறவு தற்காலிகமானது, செயற்கையானது என்கிறது நவீன மொழியியல்
கோட்பாடு. அடிப்படையில் சொற்கள் அர்த்தத்தை கொன்று விடுகின்றன. “எனக்கு உன்னை ரொம்ப
பிடிக்கும்” என ஒரு பெண்ணைப் பார்த்து மிகுந்த மன உத்வேகத்துடன் சொல்லிப் பாருங்கள்.
சொல்லி முடித்த அடுத்த நொடி “நாம் நினைத்ததை சொல்லவில்லையோ?” எனத் தோன்றும். இன்னும்
வேறேதேனும் சொற்கள், உவமைகள் கொண்டு சொல்லி இருக்க வேண்டுமோ என வியப்பீர்கள். அதனால் தன்
குழந்தைகளை கொஞ்சும் போது வெற்று ஒலிகள், குதப்பல் சத்தங்கள், நாமே உருவாக்கும் அர்த்தமற்ற
செல்லப் பெயர்கள் தரும் திருப்தியை வழமையான சொற்கள் தராது.

ஆத்மார்த்தமான எந்த உணர்வையும் நம் மொழியால் வெளிப்படுத்த முடியாது. சொல்லி முடித்த
அடுத்த நொடி சொன்னதன் பொருள் செத்து விடும். அதனால் தான் காதலர்கள் பேசிக் கொண்டே
இருப்பார்கள். எந்த நோக்கும் அற்று பொருளும் அற்று ஏதேதோ கதைத்தபடி இருப்பார்கள். எவ்வளவு
பேசினாலும் போதாது. ஏனென்றால் எவ்வளவு பேசினாலும் தாம் உணரும் காதலின் சிறிதளவு கூட
வெளிப்படுத்திய திருப்தி இராது. அதனால் தான் இப்பாடலில் வரும் காதலி “சொல்லுக்கும்
தெரியாமல் சொல்ல” முயல்கிறாள். ஆனால் ஒரு சொல்லுக்குள் இருந்து உண்மையான பொருள்
வெளிப்பட முடியாமல் தவிப்பது போல் அவளும் தன் உணர்வை சொல்ல முடியாது தவிக்கிறாள்.
ஏனென்றால் சொன்ன மறுநொடி தான் நினைத்தது அதுவல்ல என அவளுக்கு தோன்றித் விடும்.
Posted by Abilash Chandran at 12:48 AM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 20, 2015, 11:14:54 AM6/20/15
to brail...@googlegroups.com
லண்டாய் - மெல்லக் கொல்லும் கொடிய விசமுள்ள சிறு பாம்பு - இனியன்


landay
காலங்காலமாக உலகம் முழுவதும் பெண்களுக்கெதிராக இழைக்கப்பட்டு வரும் துன்புறுத்தல்களில்
முதன்மையாகத் திகழ்வது மதம் மற்றும் கலாசாரக் கட்டுப்பாடுகள்தாம். அவ்வகையான
கட்டுப்பாட்டுகளிலிருந்து வெளிவரத் துடிக்கும் பெண்களுக்குப் பாதைகளாக அமைவதில்
கலைகளுக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது.
அக்கலைகளில் பிராதனமாகவும் முதன்மையாகவும் கருதப்படும் கவிதைகளுக்கென இருக்கும்
மொழிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது உணர்வு மொழிதான். அம்மொழியின் வாயிலாக
வெளிப்பட்டு எழுதப்படும் வார்த்தைகள் படிப்பவர்களின் உணர்வுச் சிந்தனைகளைக் கலைத்து விட்டுச்
செல்வதுதான் கவிதைகளுக்கான வெற்றியாக அமைந்திடும். அவ்வாறன உணர்வுகளைப் பெற்றுத்
தமிழகத்திற்கும், தமிழ் கவிதைச் சூழலுக்கும் புதிதாக அறிமுகமாகியிருக்கும் மொழிப்
பெயர்ப்புக் கவிதைகள் மற்றும் பாடல்கள்தான் “லண்டாய்”.
அனைத்து மதங்களும் பெண்களுக்கெதிரான ஒன்றாகவே இருந்து வந்தாலும், மதத்தை மையமாக வைத்து
ஆட்சி நடத்தும் நாடுகளில் மிக அதிகமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. அவ்வகையான
நாடுகளில் ஒன்றான ஆப்கானிய பெண்களால் இயற்றப்படுபவைதான் இந்த லண்டாய் கவிதைகள்.
இங்கு முதன்முதலில் அறிமுகமாகியிருக்கும் இந்தப் பஷ்தூன் சொல்லுக்கான அர்த்தத்தைத்
தெரிந்துக் கொள்ளும்போது சற்று வியப்பாகவே தெரிகிறது. ஆனால் அதனைத் தெரிவிப்பதற்கு
முன்னால், ஆப்கானிய நில அமைப்பு வரலாறு மற்றும் மக்களின் வாழ்வியல் முறைகளைச்
சிறிதேனும் அறிந்திருக்க வேண்டும்.
அவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகப் புத்தகத்தின் முதல் பகுதில் கிட்டத்தட்ட 2000
ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் துவங்கிச் சமகாலத்தில் மேற்கத்திய ஆட்சியாளர்களின்
பிடியிலிருக்கும் ஆப்கானின் நில அமைப்பு மற்றும் மக்களின் வாழ்க்கை முறையையும்
தெளிவுப்படுத்த முற்பட்டுப் படிப்பவர்கள் அந்த வரலாற்றை மேலும் ஆராய வேண்டும் என்ற
முயற்சிக்கான தூண்டுதலை விதைக்கிறார் லண்டாயின் அறிமுகவாளர் கவிஞர்.ச.விஜயலட்சுமி.
மெல்லக் கொல்லும் கொடிய விசமுள்ள சிறு பாம்(பு)பாய் வெளிவந்திருக்கும் இந்த லண்டாய்கள்
முழுவதும் இஸ்லாம் மதத்திலிருக்கும் அடக்கு முறைகள் மற்றும் உடல் மனம் என அனைத்தாலும்
அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆப்கானிய பெண்கள், அவ்வடிமைத் தனத்தை உடைத்தேரிப்பதற்காகத்
தங்களது துயரங்களை உலகிற்குப் பதிய வைக்கும் முதல் முயற்சியே இவை.
இவற்றை வாசிக்கும் போது நம் நாட்டில் பெண்களால் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களுக்கான
துவக்கங்களும் இப்படித்தான் மிகப்பெரிய துயரங்களின் தொகுப்பாக இருந்திருக்கும் என்று
தெளிவாகப் புலப்படுகிறது. அவற்றை இணைக்கும் விதமாகத்தான் இன்றளவும் நமது கிராமங்களில்
“என் துயரை எந்தப் பாட்டால் பாடுவது” என்ற வார்த்தை வயதானப் பெண்களால் பேசப்பட்டு வருவது
நமது நாட்டுப்புறப் பாடல்களின் அறிமுக நாட்களின் அடையாளமாய்த் தெரிகிறது.
“தந்தையே! முதியவன் ஒருவனுக்கு என்னை விற்றுவிட்டாய்
நான் உன் மகளாய் இருந்ததற்காகக் கடவுள் உன் வீட்டை அழிப்பார்.”
“கிழவனோடு கலவிச் செய்வது,கரும்புள்ளிகளைக் கொண்ட நோயுற்று வற்றிய மக்காச்சோளத்தைப்
புணர்வது போல”
“சகோதரிகள் கூடியிருக்கையில் சகோதரரின் புகழ்பாடுகிறார்கள்
சகோதரர்கள் கூடியிருந்தால் சகோதரிகளை மாற்றானிடம் விற்கிறார்கள்.”
ஜப்பானிய ஹைக்கூவை போன்ற இந்த லண்டாய் வரிகள் ஆப்கான் போன்ற நாடுகளில் வெளிப்படையாக
வெளி வருவது ஆபத்தான விசயமானதாக இருந்தாலும், அவற்றையெல்லாம் வெளிக்
கொண்டுவருவதற்கான ரகசிய இலக்கிய அமைப்பாகச் செயல்படும் “மிர்மன் பஹீர்” என்ற அமைப்பைப்
பற்றிய அறிமுகத்தையும் செய்திருக்கிறார் கவிஞர் ச.விஜயலட்சுமி.
தாலிபான்களின் பிடியிலிருந்து மெல்ல மேற்கத்திய ஆக்கிரமிப்பின் கீழ் வாழப் பழகிக்
கொண்டிருக்கும் மக்களிடம் உள்ளப் பழமையான மதக் கலாசார ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணமே
உள்ளன. இம்மாதிரியான சூழலில் பெண்களின் துயரங்களையும் அவர்களது செயல் பாடுகளையும்
மிகவும் ரகசியமான முறையில் தொலைபேசி உரையாடல்களின் மூலமும் சேகரித்தும் ரகசிய
இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதன் மூலம் பெண்கல்வி மற்றும் பெண்களின் படைப்புகளையும்
சேகரித்துக் கொண்டிருக்கும் மீர்மன் பஹீர் அமைப்பும், அதில் பங்குப் பெற்று லண்டாய் கவிதை
அல்லது பாடல் வாசிக்கும் பெண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அடக்குமுறைகள்
என அனைத்தையும் கட்டுரை வடிவில் வாசிக்கும் போது என்றைக்குமே மதங்களும் கலாசாரக்
காவலர்களும் பெண்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாது சமூகச் சமநிலை வாழ்விற்கும்
எதிராகே செயல் பட்டுக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதைத் தெளிவு படிதியிருக்கிறது
மிர்மன் பகிர் பற்றிய கட்டுரை.
மேலும் அங்குள்ள பெண்கள் தங்களுக்காகப் தங்களுக்குள்ளே பாடிக்கொண்டிருக்கும் பாடல்களின்
வரிகளில் உள்ள துயர் மிகு வார்த்தைகள் அனைத்தும் தங்களது அடிமைதனத்திலிருந்து வெளிவரத்
துடிக்கும் உலகிலுள்ள பெரும்பான்மைப் பெண்களின் குரலாகவே ஓலிக்கிறது.
லண்டாய் கவிதைகளை வாசித்து முடித்தபின் ஏற்படும் இருவேறு எண்ணங்களில்
முதன்மையாகப்படுவது ஹைக்கூ கவிதைகளுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அர்த்தமற்ற அபத்த நிலையை
நம்மூர் கிறுக்கல் கவிதைகார்கள் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதும்.எல்லா மொழிப் பெயர்புப்
புத்தகங்களிலும் இருக்கும் மொழிப்பெயர்பாளர்ச் சிந்தனைகள் இடையில் தெளிவாகத் தெரிவது போல்
லண்டாயிலும் கவிஞர் ச.விஜயலட்சுமியின் சிந்தனைகள் ஆங்காங்கே வெளிப்படுவது இயல்பாகவே
தெரிந்தாலும் படிப்பவர்களை மெல்லக் கொல்லும் கொடிய விசமுள்ள சிறு பாம்பு போன்றுதான்
இருக்கிறது லண்டாய்.
Email This

R. BALAGANESAN

unread,
Jun 20, 2015, 11:18:09 AM6/20/15
to brail...@googlegroups.com
B.ed படிப்பு 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்
ஏதும் இல்லையே! அப்படி கிடைக்கப்பெற்றவர்கள் தரலாமே! தனிநபர்களின்
வலைதளங்கள் கூறும் கருத்துகளை எப்படி அதிகாரப்பூர்வமாக
ஏற்றுக்கொள்ளமுடியும்? அரசாணை வெளியிடப்பட்டது என்றால் அதன் எண்ணையாவது
வழங்கியிருக்கலாம். இந்தப் பகிர்வால் குழப்பம்தான் அதிகரித்திருக்கிறது.
அரசானை எண், அதிகாரப்பூர்வ பத்திரிகைச் செய்தி கிடைக்கப்பெற்றவர்கள்
தயவுசெய்து இந்த இழையிலேயே வழங்கினால் பலர் நிம்மதியடையலாம்.
ரா. பாலகணேசன்
அருப்புக்கோட்டை

பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

கைப் பேசி: 9894335053
மின்னஞ்சல்: balagan...@gmail.com
முகநூல்:Rajavadivan Balaganesan
ஸ்கைப்: balaganesan11

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 20, 2015, 11:21:24 AM6/20/15
to brail...@googlegroups.com
நவீன ஹைக்கூ (தமிழில்
ஆர்.அபிலாஷ்)



வயதான குதிரைகள்
அவற்றின் கண்களில்
முடிவற்ற மழையின் நாட்கள்
Old horses
Days of endless rain
In their eyes
- Ron C. Moss, Australia
ஜாடியில் அவள் அஸ்தி –
ஒருமுறை எங்கள் சிற்றறையின் அடுப்பெரித்தோம்
கவிதையின் பக்கங்களால்
- எரிங் ப்ரீஸ்-பாஸ்டட், கனடா
Her ashes in a vase -
Once we lit our cabin stove
With drafts of poems
- Erling Friis-Baastad, Canada
காலை மூடுபனி
தேவாலயப் படிகளில்
பன்னிரெண்டு கறுப்பு ஷூக்கள்
- ஜோ மக்கியோன், ஓஹியோ
Morning fog
Twelve black shoes
On the church steps
- Joe McKeon, Ohio
கிறித்துமஸ் காலை
ஆடும்குதிரை பொம்மையின்
நீலக்கண்
- ஆன் மக்யார், மசசூஸட்ஸ்
Christmas morning
The blue eye
Of the rocking horse
- Ann Magyar
- Massachusetts
முதல் கனவு
சிறுபறவை அழைக்கிறது
என் ரகசியப் பெயரை
- பி.ஜி.எம், கலிபோர்னியா
First dream
A small bird calls
My secret name
- Pjm, California

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 20, 2015, 12:10:01 PM6/20/15
to brail...@googlegroups.com
வன்கொடுமைகள் புள்ளிவிவரங்களல்ல...
8
விவரங்கள்
எழுத்தாளர்: நல்லான்
தாய்ப் பிரிவு: தலித் முரசு
பிரிவு: தலித் முரசு - அக்டோபர் 2012
C வெளியிடப்பட்டது: 05 நவம்பர் 2014
இன்று ஜாதி எங்கே இருக்கிறது? இன்று யாரும் ஜாதி பார்ப்பதில்லை.
அதுவெல்லாம் அந்தக்காலம்...'' இப்படிப் பேசும் குரல்களை இன்று பரவலாகக் கேட்க
முடிகிறது. இந்தியச் சமூகத்தின் இயங்கு முறையை நுட்பமாகப் புரிந்து கொள்ளாத அல்லது
புரிந்து கொண்டும் போலியாக சமத்துவம் பேசுகின்ற மனிதர்களின் குரல் இது. மறுபுறம்
சமூகநீதிக்காய் போராடும் தரப்பிலிருந்தும் சில நேரங்களில் சலிப்புடன் சில வினாக்கள்
எழுகின்றன. “அம்பேத்கர் சட்டம் எழுதியாயிற்று. பெரியாரும் வேறுபல தலைவர்களும்
போராடிவிட்டனர். களத்தில் நின்று போராடிவரும் தலித் தலைமைகளும் இன்று உண்டு. ஆயினும்
இன்னும் சாதி கொடுமைகள் ஒழியவில்லையே ஏன்? இன்னும் என்னதான் செய்வது? எங்கே
தவறிழைக்கிறோம்?'' – இந்த வினாக்களையும் அறியாமையிலிருந்து வெளிப்படுபவை என்றே சொல்ல
வேண்டும்.
இந்தியாவில் ஊனோடும் உயிரோடும் சாதி கலந்திருக்கிறது. இது ஆண்மய்யச் சமூகம் மட்டுமல்ல,
ஜாதி மய்யச் சமூகமும் கூட. இங்கு எல்லாவற்றிலும் சாதி உண்டு. எல்லாவற்றிலும் என்றால்
எல்லாவற்றிலும். மதம், சமூகம் அரசியல், வணிகம், அரசு நிர்வாகம், காவல், நீதி, கல்வி,
கலை, விளையாட்டு என்று சாதியின் வேர்கள் ஆழ ஓடியுள்ள துறைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே
போகலாம். இவற்றுள் ஒரு முனையில் அடித்தால் மற்றொரு முனையிலிருந்து சாதி எழுகிறது.
அண்மை நிலைமைகளைப் பார்த்தால் சாதி எதிர்ப்பாளர்கள் மேலும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
நீதிமன்ற அறையிலிருந்து அம்பேத்கரின் படத்தை அகற்றச் சொல்லியிருக்கிறார் திண்டிவனத்தில்
உள்ள நீதிபதி ஒருவர். தேனி அருகே வடுகப்பட்டியில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒருவர்
தலித் சிறுவன் ஒருவனை தலையில் செருப்பைச் சுமக்க வைத்திருக்கிறார். சென்னையில் நடந்த
இந்து ஆன்மிகக் கண்காட்சியில், சாதி அமைப்பை புகழ்ந்து பேசியிருக்கிறார்
எஸ்.குருமூர்த்தி. அக்கருத்தரங்கில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோடி குரூஸ் உட்படப்
பலரும் சாதி அமைப்பை வரவேற்றுப் பேசியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சாதியைக் காப்பாற்றி அரசியல் நடத்த கட்சிகள் இணைந்துள்ளன. தலித்
பெண்களுக்கெதிரான கொடும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கரூரில் தலித் மாணவி ஒருவர்
பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாய் கொல்லப்பட்டிருக்கிறார். இப்பட்டியலை இன்னும்
விரிவாக்கிக் கொண்டே போகலாம். வடநாட்டில் நடக்கும் சாதிய கொடுமைகளைப் பற்றியும் மிக
விரிவான பட்டியலை இங்கு தரமுடியும். அவ்வளவு கொடுமைகள் நடந்தபடியே உள்ளன.
இந்தியர்களைப் பொருத்த மட்டில் தலித்துகள் மனிதர்களில்லை; அம்மக்கள் செத்தொழிந்தாலும் சாதி
இந்துக்களுக்கு கவலையில்லை.
இந்தியாவின் தலையாய சிக்கல்களில் சாதியமைப்பின் செயல்பாடு முக்கியமானது. இதை ஆதிக்கச்
சாதியினர் ஒப்புக் கொள்வதில்லை. தலித் மக்களுக்கு எதிராக அன்றாடம் நடந்து வரும்
வன்கொடுமைகளை பொது சமூகம் என பசப்பும் சாதிய சமூகம் கண்டும் காணாமல் செல்கிறதென்றால்,
அரசு நிர்வாகமும் நீதிபரிபாலன அமைப்புகளும் கூட அதே விதமாகத்தான் நடந்து கொள்கின்றன.
ஆந்திர மாநிலம் சுண்டூரில் 1991 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தலித் படுகொலைகளை விசாரித்து
வந்த நீதிமன்றம், 22.04.2014 அன்று படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும்
விடுதலை செய்திருக்கிறது. அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் கண்டு கொள்ளப்படாத தீர்ப்பு
இது. மக்கள் மன்றத்தில் இத்தீர்ப்பு கவனப்படுத்தப்படவேயில்லை. தலித் மக்களை கலக்கத்தில்
ஆழ்த்தியுள்ளது இத்தீர்ப்பு.
இந்தியாவில் நீதிமன்றங்கள் சட்டத்தின்படி இயங்குகின்றனவா? மநுதர்மத்தின் படி
இயங்குகின்றனவா? என்ற தலித் மக்களின் வினாவுக்கு அத்தீர்ப்பு மீண்டும் உறுதியாக விடை
சொல்லியிருக்கிறது. நாங்கள் மநுதர்மத்தின் படிதான் செயல்படுகிறோம் என்று. இந்த விடை
ஏற்கெனவே சொல்லப்பட்டதுதான். வெண்மணி தீர்ப்பில், லட்சுமண்பூர் பதே தீர்ப்பில், பதானி தோலா
தீர்ப்பில், கரம்சேடு தீர்ப்பில், பன்வõரிதேவி தீர்ப்பில், பூலான் தேவி தீர்ப்பில், இளவரசன்
திவ்யா தீர்ப்பில். ஆயினும் எங்களுக்கு நீதிமன்றங்களை விட்டால் வேறு போக்கிடமில்லை. அதுவே
எமது கடைசிப் புகலிடம் என்று இன்னும் கூறிக் கொண்டிருக்கிற தலித்துகளுக்கு மீண்டும்
ஒருமுறை உரத்துச் சொல்லியிருக்கிறது.
சுண்டூர் படுகொலைச் சம்பவம் நாடெங்கிலும் கவனத்தை ஈர்த்த ஒன்று. ஆந்திர மாநிலம் குண்டூர்
மாவட்டம் தெனாலிக்கு அருகிலிருக்கும் சிறு நகரம் சுண்டூர். தலித் மக்களும் சாதி
இந்துக்களும் சம எண்ணிக்கையில் உள்ள பகுதி. 1991 கணக்கெடுப்பின்படி சுண்டூரில் அரசுப்
பணிகளிலும் கல்வியறிவு பெற்றதிலும் முன்னிலையில் இருந்தவர்கள் தலித் மக்கள். கல்வியறிவு
பெற்ற சமூகம் தனது அடிமைத் தளையைக் குறித்து கட்டாயம் பரிசீலனை செய்யும். இது அங்கு
நடந்தது. அங்கு ஆதிக்கச் சாதியினராய் இருந்த ரெட்டிகளுக்கு இது உள்ளூர காழ்ப்புணர்வை
வளர்த்திருத்திருந்தது.
தலித்துகள் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை. தலித்துகள் நிலமற்றவர்களாக இருந்த
போதிலும் தமது கல்வியினாலும் உழைப்பாலும் முன்னேறுவதால் ஆதிக்கச் சாதியினரின் பிடி
மெல்ல தளர்ந்து வந்தது. இதை ரெட்டிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உள்ளூர கனன்று
கொண்டிருந்த சாதி வன்மம் 6.8.1991 அன்று வெடித்தது. இந்தியா தனது விடுதலை நாளை
கொண்டாடும் முகமாக தயாரிப்பு வேலைகளில் மூழ்கியிருந்த போது சுண்டூர் தலித் மக்கள்
உயிருக்கு பயந்து ஓடி அலைந்தனர். மூன்று நாட்களாக நிகழ்த்தப்பட்ட கொலை வெறித்
தாக்குதலில் தலித்துகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இக்கொடூரத் தாக்குதலுக்கு காரணமாகச்
சொல்லப்பட்டது ஒரு சிறு சம்பவம்தான்.
மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் முதுகலைப்பட்டப் படிப்பு படித்து வந்தார் கோவிதோட்டரவி
என்ற தலித் இளைஞர்.அவர் 07.07.1991 அன்று கிராமத்திலிருந்த திரைப்படக் கொட்டகையில் படம்
பார்த்துக் கொண்டிருந்த போது – தவறுதலாக அவருடைய கால் – முன்வரிசையில் அமர்ந்திருந்த
ரெட்டி சாதியைச் சேர்ந்த குர்ரி சீனிவாசன் என்பவர் மீது பட்டுவிட்டது. இதைப்பிடித்துக்
கொண்ட ரெட்டி சாதியினர் மேலும் சில புகார்களை கோத்து சாதி வன்மத்தை ஊதிப் பெருக்கிவிட்டனர்.
வெட்டிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சாக்குப்பைகளில் கட்டப்பட்டு துங்கபத்திரா ஆற்று
நீர்க்கால்வாயில் வீசப்பட்டன. முதலில் கொலையுண்டவர்கள் 14 பேர் என்றும், காணாமல் பேனவர்கள் 14
பேர் என்றும் சொல்லப்பட்டது. பிறகு எட்டு பேர் என அறிவிக்கப்பட்டது. கொலையுண்டவர்களில் தன்
மகனும் ஒருவன் என அறிந்து மாரடைப்பில் ஒருவர், போராட்டத்தின் போது ஒருவர், பட்டினிப்
போராட்டத்தின் போது காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் என மேலும் மூவர்
இறந்து போயினர். மொத்தம் பதினோரு தலித் உயிர்கள் பலியாயின.
சுண்டூர் கொலையும், காரம்சேடு கொலையும், புலிவெந்துல படுகொலையும் ஆந்திராவின் சாதிய
முகத்தை உலகிற்கு காட்டியவை. சுண்டூர் படுகொலைகள் குறித்து அப்போது வெளியிடப்பட்ட
வெளியீடு ஒன்று, 1985 முதல் 1991 வரையிலான ஆறு ஆண்டுகளில் ஆந்திராவில் 47 தலித்துகள்
படுகொலை செய்யப்பட்டதை ஆதாரங்களோடு பட்டியலிடுகிறது "மரணவெறித்தாக்குதல்' – தலித்
முன்னேற்றச் சங்கம், சென்னை 23, 1991'
சுண்டூர் படுகொலைகளை காவல் துறை நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். திரைப்பட
கொட்டகை சம்பவத்தை தொடர்ந்து 144 தடையாணை போடப்பட்டிருந்த சூழலில், படுகொலைகள்
நடப்பதற்கு முந்தைய வாரத்தில் திடீரென தடையாணையை காவல்துறை நீக்கிவிட்டது. தலித்
மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதிலிருந்து கூட்டுச்சதியை நம்மால் அறிய
முடிகிறது. சுண்டூர் கொலைகளின் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளச் சொல்லி
பட்டினிப் போராட்டம் நடத்திய கொம்மரேலா அனில் குமார் என்ற தலித் இளைஞரை காவல்துறை
சுட்டுக் கொன்றுவிட்டது. அவர் சுண்டூர் கொலைகளுக்கு நேரடி சாட்சியாக இருந்தவர். இந்த
திட்டமிட்ட சதியின் மூலம் காவல்துறையில் இருந்த ஆதிக்கச் சாதி அதிகாரிகளின்
சாதிவெறியும் அம்பலமானது.
சுண்டூர் கொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்து வந்தது.
காவல்துறை வழக்கமான தனது "வேலை'யைக் காட்டியது. முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்ட
219 குற்றவாளிகளில் 7 பேரை அது கைது செய்யவில்லை. காலம் தாழ்த்தி தொடங்கப்பட்ட
விசாரணைக்குள் 23 பேர் இறந்தே போயினர். இவ்வழக்கில் 189 பேரை விசாரித்த நீதிமன்றம்
31.07.2007 அன்று 21 பேருக்கு ஆயுள் தண்டனையையும் 35 பேருக்கு ஓராண்டு கடுங்காவல்
தண்டனையையும் வழங்கி தீர்ப்பளித்தது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். வன்கொடுமைத் தடுப்புச்
சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில், நீதிமன்றமோ இந்திய தண்டனைச் சட்டம் 302 இன் கீழ் தீர்ப்பினை
அளித்தது.
தண்டனை பெற்றவர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். நீதிபதிகள் எல்.
நரசிம்ம ரெட்டி, எம்.எஸ்.கே. ஜெய்ஸ்வால் அடங்கிய அமர்வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்றம் அளித்திருந்த குறைந்தபட்ச தண்டனையையும் நீக்கி அனைவரையும் விடுதலை
செய்திருக்கிறது உயர் நீதிமன்றம். குற்றவாளிகளை அப்பாவிகள் என்று நீதிமன்றம்
சான்றளித்திருக்கிறது. தங்களின் ஆதிக்கச்சாதி திமிரினை காட்டுவதற்காக எட்டு தலித்துகளை
கொன்றொழித்தவர்களை எப்படி உயர்நீதிமன்றம் அப்பாவிகள் என்று கருதியதெனத் தெரியவில்லை.
சுண்டூர் வழக்கில் தலித் மக்களின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு,
உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடையாணை பெறப்பட்டுள்ளது என அண்மையில் கிடைத்த செய்தி ஒன்று
தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறதென்று காத்திருந்து பார்க்கலாம்.
இத்தீர்ப்பு ஊடகங்களில் போதிய கனவத்துடன் பதிவாகவில்லை. எதற்கெடுத்தாலும் விவாதித்து
பட்டையைக் கிளப்பும் நமது அறிவுஜீவிகளுக்கும், தொலைக்காட்சி ஆளுமைகளுக்கும் இதை
விவாதிக்க நேரம் கிடைக்கவில்லை!
சாதிவெறியால் கொலையுண்டவர்களுக்கு இப்போதிருக்கின்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்
நீதி கிடைக்கவில்லை, இந்திய தண்டனைச் சட்டத்தாலும் பயன் இல்லை என்ற நிலை வெளிப்படையாகத்
தெரிகிறது. இந்தச் சூழலில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கச் சொல்லி ஓர் அமைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. அதை நீதிமன்றமும் ஏற்றிருக்கிறது.
இதை எப்படி விளங்கிக் கொள்வதென்றே தெரியவில்லை. பொய்களால் புனையப்பட்ட உலகில் வாழ்வதற்கு
பழக்கப்படுத்தப்படுகின்றனர் மக்கள். உண்மைக்கு மாறானவையே இன்று உண்மையாக
முன்வைக்கப்படுகின்றன. வன்கொடுமைகளால் நாள்தோறும் துன்பத்தை அனுபவிக்கும் தலித் மக்களுக்கு
ஓயாமல் போராடுவதற்கேற்ற உறுதிப்பாடு ஒன்றே இன்று தேவைப்படுகிறது.
இந்த நாடு தலித் மக்களுக்கு திறந்த வெளிச் சிறைச்சாலையாக மாறிவருகிறது. மிகக்
குறிப்பாக தலித் பெண்களுக்கு இந்த நாடு ஒரு சித்திரவதைக் கூடம். "தாய் நாடு என்று
எனக்கு எதுவுமில்லை. இந்த நாட்டைக் குறித்துப் பெருமை கொள்ள ஒரு தீண்டத்தகாதவனுக்கு
இங்கே ஒன்றுமேயில்லை' என காந்தியிடம் அம்பேத்கர் சொன்னது நினைவுக்கு வருகிறது. இன்னும்
என்ன வாழ்கிறது இந்த நாட்டை மெச்சிக் கொள்வதற்கு? அம்பேத்கர் எத்தனைப் பெரிய தீர்க்கதரிசி.
தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்தபடியே உள்ளது.
தலித்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை சகிக்காமல் தலித் மக்கள் கொதிக்கின்றனர்.
“ ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள் தாக்கப்படுகிறார்கள், ஒவ்வொரு நாளும் மூன்று தலித்
பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், இரண்டு தலித்துகள்
கொல்லப்படுகிறார்கள், இரு தலித் குடியிருப்புகள் கொளுத்தப்படுகின்றன'' என்று
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஹில்லாரி மேயல் வரையறுத்த மேற்கோளையே இன்னமும் எத்தனை
நாட்களுக்குச் சொல்லி பேசிக் கொண்டிருக்கப் போகிறோம்? இன்று அப்புள்ளிவிவரங்களே கூட
மாறிவிட்டன.
தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படுவது ஒரு நாளுக்கு¬ 4.3 பேர் என
அதிகரித்து விட்டிருக்கிறது. இன்னும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? "வன்கொடுமைகள்
புள்ளி விவரங்களல்ல' என்று குமைகிறார் தலித் அறிவாளர் ஆனந் டெல்டும்டே. உண்மைதான். இது
வேடிக்கைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் எழுதுவதற்குமான காலமல்ல. செயல்படுவதற்கான காலம்.
எதையாவது செய்தே ஆக வேண்டும். இது சூழல் விடுத்திருக்கும் நெருக்கடி.
இந்தியா முழுமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற தலித் பெண்களில் 67 சதவிகிதத்திற்கும்
அதிகமானோர் பாலியல் வன்முறைகளை ஏதாவது ஒரு வகையில் எதிர்கொள்வதாக தலித் மனித
உரிமைக்கான தேசிய பரப்புரை கூறியிருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவான
பாலியல் வன்முறை வழக்குகள் 923. இவற்றுள்
46 சதவிகித வழக்குகள் தலித் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பதியப்பட்டவை என
"எவிடன்ஸ்' அமைப்பு ஆய்வு செய்து அறிவித்திருக்கிறது. நிலைமை இப்படி இருக்க
அரசுகளிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும் பொது சமூகத்திடமிருந்தும் எந்தவகையான
எதிர்வினையுமே இல்லை. ஆண்மய்ய பகடிகளும், சாதி வன்மம் தோய்ந்த கேலிக் குரல்களும்
இக்குற்றங்களுக்கு இணையாக வெளிப்படுவது பெருகியுள்ளன. "உத்திரப்பிரதேசத்தில் இருக்கும்
ஆண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுவதென்றால், ஊடகங்களில் வெளியாகும் பாலியல் வன்முறை
செய்திகள் மிகக் குறைவானதுதான்' என்கிறார் முலாயம்சிங் (யாதவ்). "பாலியல் புகார்
அளிப்பது இப்போது பெண்களுக்கு நாகரிக செயலாகி விட்டது' என்று சிவசேனா கட்சியே
அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தமிழகச் சூழலை ஊன்றி கவனித்தாலே போதும் இங்கிருக்கிற நிலைமைகள் புரிந்துவிடும்.
புகழ்பாட நேரம் போதாதவர்களாய் ஒரு சாரார் என்றால், புனரமைப்பு பணிகளை மேற்கொள்பவர்களாய்
மற்றொரு சாரார். இருவருக்கும் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை
கண்டிக்கவும் தடுக்கப் போராடவும் நேரமில்லை. ஒரு சிலரோ, அடிபட்டவனுக்கும் முன்னால்
அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டுள்ளனர். இன்று பதியப்படும் பெண்களுக்கு எதிரான பாலியல்
வன்முறைக் குற்றங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தலித் பெண்கள் தொடர்பானவையாய் இருக்க,
அவர்களோ எம்மினப் பெண்கள் தலித் இளைஞர்களால் ஏமாற்றப்படுகின்றனர் என்ற பொய்யைக் கூறி
புலம்புகின்றனர்.
இந்திய அளவில் தலித் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது பெருகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் கொடூரமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கடந்த
மே மாதத்தில் உத்திரப்பிரதேசம் கத்ரா கிராமத்தைச் சேர்ந்த (பதான் மாவட்டம்) இரண்டு
சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். பதினாறு வயதேயான அவ்விரு
சிறுமிகள் இரவிலே இயற்கை அழைப்புக்கு ஒதுங்கப் போனபோது வன்புணர்ச்சி செய்யப்பட்டனர்.
மறுநாள் காலையிலே இருவரின் உடல்களும் மரத்திலே தொங்கின. இக்கொடுமையைச் செய்தவர்கள்
அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்கச் சாதி ஆண்கள்.
மனதைப்பதறச் செய்யும் வகையிலே நடந்திருக்கிற வேறொரு கொடுமையும் வெளிச்சத்துக்கு
வந்துள்ளது. இது நடந்தது ஹரியானாவில். அம்மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்திலிருக்கும்
பகானா கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி இக்கொடூரம் நடந்திருக்கிறது. பகானா
கிராமத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளி கிருஷ்ணாவுக்கும் ஜாட் சாதி ஆட்களுக்கும் கூலி
தொடர்பான தகராறு இருந்துள்ளது. தன் உழைப்புக்கு ஏற்ற கூலியை அவர் கேட்ட போது
கடுமையாய் தாக்கப்பட்டிருக்கிறார். ஜாட் சாதி பஞ்சாயத்தே இதைச் செய்திருக்கிறது.
கிருஷ்ணன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காவல்துறை தனது வழக்கமான ஆள்காட்டி வேலையைச் செய்திருக்கிறது. அக்கிராமத்து ஜாட் ஆண்கள்
கிருஷ்ணனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
மார்ச் மாதம் 23 அன்று இரவு நேரத்தில் கிருஷ்ணனின் மகளும் வேறு மூன்று தலித்
சிறுமிகளும் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற போது ஜாட் ஆண்களால் கடத்தப்பட்டார்கள். மயக்க
மருந்தினால் தோய்க்கப்பட்ட கைக்குட்டையால் மயக்கமடையச் செய்யப்பட்ட அவர்கள் கிராமத்திற்கு
வெளியே கோதுமை வயல்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.
காலையில் கண்விழித்த போது அச்சிறுமிகள் நால்வரும் பாதின்டா ரயில் நிலையத்துக்கு
அருகிலுள்ள புதர்களில் வீசப்பட்டிருந்தனர்.
அச்சிறுமிகளை மீட்டு வந்தபோது, உண்மையைக் கூறக் கூடாது என்று ஆதிக்கச் சாதி ஆண்களால்
மிரட்டப்பட்டுள்ளனர். அப்பெண்கள் தம் பெற்றோருடன் சென்று புகார் அளித்த போது காவல்
துறையினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விரல் பரிசோதனை செய்துள்ளனர்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு இப்பரிசோதனையை செய்யக் கூடாது என்று
நீதிபதி வர்மா குழு பரிந்துரை செய்துள்ளது. விதிகளைப் புறக்கணித்து அப்பெண்களை மேலும்
அவமானப்படுத்தியுள்ளனர் காவல் துறையினர்.
வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்களுக்காக நீதிகேட்டு பகானா கிராமத்தைச் சேர்ந்த 90 தலித்
குடும்பங்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மூன்று மாதங்களாய் போராட்டம் நடத்தினர்.
அங்கேயே குடில்களை அமைத்து தங்கி எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவர்களின் போராட்டம்
கண்டுகொள்ளப்படாமலேயே போனது. சூன் மாதம் காவல் துறை அம்மக்களை அடித்து துன்புறுத்தி
அவ்விடத்திலிருந்து வெளியேற்றியது. நீதி கேட்டு உறுதியாக அங்கேயே நின்ற பெண்களை
காவலர்கள் கடுமையாகத் தாக்கினர். லத்திகளை நுழைத்தால்தான் இப்பெண்கள் இங்கிருந்து போவார்கள்
என்று சொல்லி தாக்கினர் காவலர்கள். தலைநகரமே பார்த்திருக்க மீண்டும் ஒரு முறை பாலியல்
வன்கொடுமை நிகழ்த்தப்பட்டது.
தமிழகத்தில் தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதை கரூர் அருகிலுள்ள
கே.பிச்சம்பட்டியைச் சேர்ந்த ஒரு தலித் மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு
கொல்லப்பட்டது அப்பட்டமாகக் காட்டுகிறது. பொறியியல் தொடர்புடைய ஒரு படிப்பினை படித்திட
வேண்டும் என்று நினைத்த அப்பெண்ணுக்கு ஏழ்மை இடம் தரவில்லை. பனிரெண்டாம் வகுப்பை முடித்த
கையோடு தனது கிராமத்திலிருந்து
20 கி.மீ. தள்ளியிருக்கும் கரூர் நகரத்திலுள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில்
வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தார் அப்பெண். நாளொன்றுக்கு பத்து மணி நேரம் வேலை செய்து
சம்பாதித்த பணத்தில் தனக்குத் தேவையான துணிமணிகளை வாங்கிக் கொண்டு, முசிறியில் உள்ள
கல்லூரியில் சேர்வதற்கு காத்திருந்தார் அப்பெண். ஒரு நாள் அப்பெண் வேலை முடிந்து வீட்டுக்கு
வரும் போது ஆதிக்க சாதி இளைஞர்கள் சிலரால் வழிமறிக்கப்பட்டிருக்கிறார். அடுத்த நாள்
அப்பெண்ணின் உடல் ஒரு வெற்றிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண் ஓட்டிக் கொண்டு வந்த
மிதிவண்டி கேட்பாரற்று அங்கு விழுந்து கிடந்ததை வைத்து இக்கொடூர நிகழ்வை
கண்டுபிடித்தனர் கிராம மக்கள். கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக்
கொல்லப்பட்டிருந்தார் அப்பெண்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் நடுமாவட்டங்களில் தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
அதிகரித்து வருவதை செய்திகள் சொல்கின்றன. 2012இல் 4 தலித் இளம்பெண்கள் பாலியல்
வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாண்டில் இதுவரை 3 பாலியல் வன்முறைகள்
பதிவாகியுள்ளன. அவற்றுள் கொடூரமானது கரூர் நிகழ்வு. வேறொரு புறம் சாதி மீறிய
திருமணங்களை மேற்கொள்ளும் பெண்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. மாநில
குற்றப்பதிவு பிரிவு தரும் தகவல்களின்அடிப்படையில் பார்த்தாலேயே நெஞ்சம் பதறுகிறது.
கடந்த 30 மாதங்களில் 24 பெண்கள் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2012 இல் தமிழகத்தில்
6,179 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே ஆண்டில் 662 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 198 பேர் 19 லிருந்து 30 வயது கொண்டவர்கள். கடந்த மாதம்
ராமநாதபுரத்தில் தலித் இளைஞர் ஒருவரை காதலித்து மணந்து கொண்டதற்காக, தனது தந்தை
மற்றும் குடும்பத்தினரால் கொல்லப்பட்ட பெண் பற்றி செய்தி ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெறுமனே பாலியல் சார்ந்ததாக மட்டுமே பார்ப்பது
தவறானது. அதை இனவெறி, சாதிவெறி, வகுப்பு வெறி, ஆணாதிக்க வெறி ஆகியவற்றோடு
தொடர்புபடுத்தியே பார்க்க வேண்டும் என்கிறார் தனது ஆய்வு நூலில் கேத் மில்லத் எனும்
அறிஞர். ஆனால் இதை இந்திய அறிவாளர் சமூகமும் பொது சமூகமும் ஏற்பதாகத் தெரியவில்லை.
திறந்த வெளியில் மலம் கழிக்கச் செல்வதாலும் கைப்பேசியைப் பயன்படுத்துவதாலும் தான்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகுவதாக ஆராய்ந்து அறிவித்திருக்கிறார்கள்
தற்போது. திறந்தவெளியைப் பயன்படுத்தும் தலித் அல்லாத பெண்கள் மட்டும் ஏன் பாலியல்
வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதில்லை?
தலித் அல்லாத பெண் பாலியல் வன்கொடுமை செய்திகள் "நிர்பயா'க்களாக்கப்படுவதும், தலித் பெண்
பாலியல் வன்கொடுமை செய்திகள் கவனிக்கப்படாமலேயே விடப்படுவதும் ஏன்? இதற்கெல்லாம் விடை
ஜாதி என்ற சொல்லைத் தவிர வேறென்ன?
அரசும், அறிவார்ந்த சமூகமும் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதற்கு
எதிராக செயல்பட வேண்டியது அவசியம். இல்லையெனில் இதை நாகரிக சமூகம் என்று அழைப்பதில்
எந்தப் பொருளுமே இல்லை. நிலைமை இப்படியே நீடித்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தீவிர எதிர்ப்பு
நிலைக்கு திரும்புவதைத் தவிரவும் வேறு வழியிருக்காது.
நீதித்துறையும் அதிகார வர்க்கமும் ஒரு சார்பாய் செயல்படுகின்றன. சாதியவாதத்தை தீவிரமாக
வலியுறுத்தும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். இச்சூழலில் இனி செய்வதற்கு என்ன இருக்கிறது
என்று கணநேரம் தோன்றி மறைகிறது. மனம் துணுக்குறுகிறது. ஆனால், உண்மையில் தலித் மக்கள்
என்றைக்குமே சாதியற்ற சமூகச்சூழலில் இருந்ததில்லை. தற்போதைய நிலையைவிடவும் கொடூரமாக
சாதிய விதிகளான மநுவின் சட்டம் கடைப்பிடிக்கப்பட்ட காலங்களில் கூட வாழ்ந்து
வந்திருக்கின்றனர். காலந்தோறும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் இருந்திருக்கின்றன என்பதை
வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. தலித் மக்கள் இன்று இச்சூழலை எதிர்கொள்வதற்கு
அணிதிரண்டு நிற்பதற்கு அவசியமாகிறது. திரட்சிக்கு என்றுமே பலம் அதிகம். நமக்கான
சட்டங்களும் உதவிக்கரங்களும் ஆதரவு சக்திகளும் இல்லாமல் இல்லை. அவற்றை தலித் மக்கள்
கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளவேண்டியது இச்சூழலில் அவசியமாகிறது. அந்தந்தப் பகுதிகளில்
வலுவாக இயங்கும் அமைப்புகளின் தனிமையைப் போக்கிடும் வகையில் அவர்களின் பின்னால்
நிற்கவேண்டியிருக்கிறது. தலித் மக்களுக்கெதிரான குற்றங்களை பல முனைகளிலிருந்தும்
அம்பலமாக்க வேண்டியிருக்கிறது.
ஜனநாயக நெறிமுறைகளின் வழியே நமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்காக நியாயம் கேட்டு
தலித் மக்கள் உடனடியாக வீதிக்கு வரவேண்டும். அண்மையில் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட
ஓர் ஆப்ரோ அமெரிக்க இளைஞனுக்காக நீதி கேட்டு பெரும் போராட்டங்கள் அங்கு வெடித்தன.
இதுவரையிலும் தலித் மக்கள் அவ்வாறு எங்காவது அணிதிரண்டுள்ளனரா? ஆதிக்கப்பீடங்களும்
அதிகார அமைப்புகளும் ஆட்டம் காணும் வகையில் இங்கு எங்காவது தன்னெழுச்சியுடன் தலித்
மக்களின் அணி திரட்சி நடந்திருக்கிறதா? ஏன் இல்லை? கருத்தியல் தளத்தில் அவர்களை
ஒருங்கிணைத்து அம்பேத்கரியத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்காமல் விட்டதால்தானே தலித் மக்கள்
தனித்தனித் தீவுகளாய் திரியும் நிலை நீடிக்கிறது.
அம்பேத்கரியத்தை நாடுகிறபோதே நமக்கு கிழக்கு வெளுக்கும்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 21, 2015, 12:58:42 AM6/21/15
to brail...@googlegroups.com
’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா?
December 11, 2014|hemgan
சிறப்புப் பதிவு : ஶ்ரீரங்கம் V மோகனரங்கன்
பாப்பா பாட்டு என்று ஒரு பாட்டு பாரதி பாடியிருப்பது அனைவரும் அறிந்தது. அதில்
சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி – அன்பு
நிறைய வுடையவர்கள் மேலோர்.
என்ற பாட்டில் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியாரின் வரியாகப் படித்துப் பழக்கம்.
ஆனால் திரு சீனி விசுவநாதன் அவர்களது பதிப்பில்
சாதி பெருமையில்லை பாப்பா – அதில்
தாழ்ச்சி உயர்ச்சி செய்தல் பாவம்
என்று வருகிறது. கீழ்க்குறிப்பில் சாதிகளில்லையடி பாப்பா – என்பது 1917ல் வந்த
நெல்லையப்பர் பதிப்பு என்கிறார். அப்படியென்றாலும் பாரதியார் இருந்த பொழுதே அவர்
சம்மதத்துடன் வந்த பதிப்புதானே அது? கையெழுத்துப் பிரதியில் இருந்தாலும் பாரதியார்
பதிப்பிற்குக் கொண்ட பாடத்தைத்தானே பாரதி பாடலாகக் கொள்ள வேண்டும்? இல்லை அவருடைய
கையெழுத்துப் பிரதியில் கண்டதுதான் மிக்க சான்று என்றால், அப்படியென்றால் பாரதியார்
சாதிகள் உண்டு, ஆனால் அவற்றில் பெருமை இல்லை. உயர்வு தாழ்வு சொல்லக் கூடாது.
அவ்வளவுதான் எனும் கொள்கை உடையவரா? சாதிகளை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தர்ம சாத்திரங்கள்
சாதி பற்றிக் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பாரதியின் எண்ணமா? இல்லையெனில்
சாதிகள் இல்லையடி பாப்பா என்பதுதான் பாரதியின் முடிந்த எண்ணமா?
பாரதி பாடல்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பிலும்
சாதி பெருமையில்லை பாப்பா – அதில்
தாழ்ச்சி யுயர்ச்சிசெய்தல் பாவம்
என்று போட்டிருக்கிறது. அதன் கீழ்க் குறிப்பில் 1917 பரலி சு நெல்லையப்பர் பதிப்பைக்
குறிப்பிட்டு, மேற்படிப் பதிப்பில் என்று சுட்டிக்காட்டி
சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி யுயர்ச்சிசொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி – அன்பு
நிறைய வுடையவர்கள் மேலோர்.
என்று பாடலின் வடிவமும் தரப்பட்டு, மேலும்,
” பாரதியாரின் மிக நெருங்கிய நண்பர் நெல்லையப்பர்; கவிஞர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்த
பதிப்பாதலின் பாரதியார் திருத்திக்கொடுத்த வண்ணமே வெளிவந்தது என்றே கொள்ளுதல் வேண்டும்.”
என்றும் மிகத் தெளிவாக அடிக்குறிப்பும் வரையப் பட்டுள்ளது. எனக்கு எழும் சந்தேகம்
என்னவெனில் இவ்வளவு தெளிவாக அடிக்குறிப்பில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதே
பாரதியார் திருத்திக்கொடுத்த வடிவம் என்று சொல்லிவிட்டுப் பின்னர் அந்தப் பாடத்தை
முக்கியமான பாடல் அமைப்பிற்குள் காட்டாமல் ஏனோ கீழ்க் குறிப்புக்குத் தள்ளியிருக்கின்றனர்?
சாதிகளைப் பாரதியார் உடன்பட்டது போன்ற தொனியைத் தரும் வரியான ‘சாதி பெருமையில்லை
பாப்பா’ என்ற வரியை ஏனோ பிரதான பாடல் அமைப்பிற்குள் பெய்துள்ளனர்? பாரதியார்
காலத்திற்குப் பின்னர் வந்த பாடல் வடிவம் என்றால் அவ்வாறு கீழ்க் குறிப்பில் காட்டி,
பாரதியின் கையெழுத்துப் பிரதியில் என்ன வடிவம் உள்ளதோ அதைப் பிரதானமாகக் காட்டுதல்
முறை. ஆனால் இங்கு திருத்தப்பட்ட வரி வடிவம் பாரதி காலத்திலேயே பாரதியாராலேயே
திருத்தப்பட்டது என்று அடிக்குறிப்பும் தெரிவித்து விட்டு அவரால் விடப்பட்ட ஒரு
வடிவத்தைப் பேணி, பிரதான அமைப்பில் தந்திருப்பது ஏன் என்றே புரியவில்லை.
தஞ்சை திரு தி ந ராமசந்திரன் அவர்கள் தாம் எழுதிய வழிவழி பாரதி என்னும் பாரதியார்
பற்றிய நூலில் பாரதியார் எழுதியது சாதி பெருமையில்லை பாப்பா என்பதுதான். சாதியை
அழிக்க முடியாது. சாதி வேற்றுமைகளைக் களைய முடியும் சாதியைக் கடக்கத்தான் முடியும்
என்னும் பொருள்பட எழுதுகிறார்.
பாரதியாரின் பாடல்களைக் கால வரிசையில் தந்த திரு சீனி விசுவநாதனோ பாடலின் வடிவத்தில்
‘சாதி பெருமையில்லை பாப்பா’ என்னும் பாடத்தையே முக்கிய பாடமாகக் காட்டிவிட்டுக் கீழ்க்
குறிப்பில் 1917ல் வந்த பதிப்பில் பாடமான ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்னும் பாடத்தைக்
காட்டுகிறார். அப்படியென்றால் பதிப்பாசிரியராகிய திரு சீனி விசுவநாதன் பாரதியாரின்
அறுதியான பாடல் வரி ‘சாதி பெருமை இல்லை பாப்பா’ என்றுதான் நினைக்கிறார் என்று
பொருளாகிறது. அப்படி இல்லையேல் அவர் இந்த வரியைக் கீழ்க் குறிப்பில் காட்டி 1917ஆம் ஆண்டு
பதிப்பின் படி ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்னும் வரியை பிரதானமாகக் காட்டியிருக்க
வேண்டும். அப்படிச் செய்யவில்லை.
ஆனால் ‘பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்னும் நூலில் எழுதும் போது இதே பாப்பா
பாட்டைப் பற்றியே ஓர் அத்யாயம் ஒதுக்கி இதன் சிக்கல்களை என்றைக்குமாகத் தீர்க்க வேண்டும் என்று
எழுதி வரும் போது புதுமைப் பித்தனின் விமரிசனம் ஒன்றிற்குப் பதில் எழுதுகிறார்.
புதுமைப் பித்தன் 1925 ஆம் ஆண்டு வந்த பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பாப்பா
பாட்டில் பதிப்பித்தவர்கள் பலவித மாறுதல்களுக்கு உட்படுத்திவிட்டார்கள் என்றும், பாட்டுகளைச்
சரியான பாடங்களுடன் ஏன் பிரசுரிக்கலாகாது என்றும் கேட்டிருந்தாராம். அதற்குப் பதில்
எழுதும் போது திரு சீனி விசுவநாதன் கூறுவது:
“புதுமைப் பித்தனின் நியாயமான (?) கேள்வியின் தன்மையைச் சற்றே உரசிப் பார்க்க வேண்டும்.
ஞான பாநு பத்திரிக்கையிலே பாட்டு பிரசுரமான போது, பதினான்கு செய்யுள்களே இடம்
பெற்றிருந்தன. 1917 ஆம் ஆண்டிலே பாட்டைச் சிறு பிரசுரமாக நெல்லையப்பர் வெளியிட்ட போது
இரு செய்யுள்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டன. பாட பேதங்களும் இடம் பெற்றன. 1917 ஆம்
ஆண்டிஎலே செய்யப்பட்ட பாட பேத மாறுதல்களே 1919, 1922, 1925 ஆகிய ஆண்டுகளிலே
மறுபிரசுரமான “பாப்பா பாட்”டில் தொடர்ந்து இடம் பெற்றன. பாரதி காலத்திலேயே
நிகழ்ந்துவிட்ட மாறுதல்களுக்கு அடிப்படை உண்மைகளை ஆராயப் புதுமைப் பித்தன் தவறி
விட்டார்.; ‘இலக்கியத்தைப் பிரசுரிக்க முயலும் முறை வேறு’ என்று சொன்னவர், அந்த
இலக்கியம் பிரசுரம் செய்யப்பட்ட காலப் பகுதிகளையும் ஆராய முற்பட்டிருக்க வேண்டும்.”
இவ்வளவும் புதுமைப் பித்தனுக்குப் பதிலாக எழுதுகின்ற திரு சீனி விசுவநாதன் தாம்
பிரசுரித்திருக்கும் கால வரிசையிலான பாரதி பாடல்களில், பாப்பா பாட்டில், 1917 ஆம்
ஆண்டில், அதாவது பாரதியார் வாழ்ந்திருந்த காலத்திலேயே வந்த பாடல் வரியின் வடிவமான
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதை பாப்பா பாட்டில் முக்கியமான பாடமாகக் காட்டாமல்,
‘சாதி பெருமை இல்லை பாப்பா’ என்னும் வரியைக் காட்டியது ஏன் என்று புரியவில்லை.
சரி. பாரதியாரின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று அவரது மற்ற பாடல் வரிகளை நாம்
கவனித்தால் மிகவும் தெளிவாகவே இருக்கிறது.
‘முரசு’ என்ற பாடலில்,
“சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் – அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம் – தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்”
என்று மிகத் தெளிவாகப் பாரதியார் பாடுகிறார்.
அது போல் ‘பாரத தேசம்’ என்னும் பாடலிலும் இன்னும் தெளிவாகக் காட்டிவிடுகிறார்:
“சாதி இரண்டொழிய வேறில்லையென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்
நீதிநெறியில் நின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.”
ஔவை சாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடியது வர்ண தர்மத்தை அல்லவே!
இவ்வளவு தெளிவாக பாரதியின் இதயத்தைப் பாரதியே கல்வெட்டாகப் பல இடங்களிலும் தெளிவுறப்
பதிந்து வைத்திருந்த போதிலும், ஏன் அவன் கைவிடுத்த பாடம் தலை தூக்குகிறது?

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 21, 2015, 1:17:01 AM6/21/15
to brail...@googlegroups.com
ஒரு கிளைக்கதை
March 26, 2012|hemgan|அசுவத்தாமா, அர்ஜுனன், ஏகலைவன், சகுனி, சுபத்திரை, தருமன்,
துரியோதனன், துரோணர், நகுலன்
abhimanyu-son-of-arjuna-sandilya-debjay
வில் வித்தையில் தன் மானசீக குருவாக நினைத்திருந்த துரோணர் தன்னை சீடனாக ஏற்க மறுத்ததால்
விரக்தியில் கொஞ்ச காலம் அலைந்து கொண்டிருந்த பிறகு, ஏகலைவனுக்கு ஒர் எண்ணம் பிறந்தது.
துரோணர் என்ன துரோணர் ? அவர் மட்டும் தான் குருவா? கல்வித்துறையில் அரசு செய்த
மாறுதல்களுக்கு பிறகு வீதிக்கு வீதி வில் வித்தை கற்றுத்தரும் தனியார் பள்ளிகள் முளைத்து
விட்டனவே? அவற்றில் ஏதாவது ஒன்றில் போய் சேர்ந்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு
வந்தான் ஏகலைவன். தனியார் பள்ளியில் சேர கொஞ்சம் நிதி பற்றாக்குறை. குபேரன் நடத்திய
வங்கியில் தேவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்ட காரணத்தாலும், வேடுவர்களுக்கென
வங்கியெதுவும் நிறுவப்படாததாலும் யாரிடம் கடன் வாங்குவதென்று தெரியவில்லை. ரிசர்வேஷன்
காரணமாக துரோணரின் பள்ளியில் கற்க முடியவில்லை. அக்ரெடிட் பண்ணப்படாத தனியார் பள்ளிகளோ
பகல் கொள்ளைக்காரர்களென லூட் செய்கிறார்களே! நிராசையுற்ற ஏகலைவன் ஜென்டில் மேன்
அர்ஜுனிடமிருந்து தொழில் கற்றுக்கொண்டு, கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.
இந்திரப்பிரஸ்தத்தை தலைநகராகக்கொண்டு பாண்டவர்கள் ஆண்டுகொண்டிருந்த பகுதிகளிலேயே தன்
கைவேலையை காட்டி நிறைய செல்வம் சேர்த்தான். வில்லுக்கு விசயன் என்று போற்றப்பட்டு வந்த
அர்ஜுனனின் இருபதாவது மனைவியின் தந்தையார் வீட்டில் ஏகலைவன் ஒருமுறை கன்னமிட்டு
கொள்ளையடித்த போது வெஞ்சினம் கொண்டான் அர்ஜுனன். ஏகலைவனை கைது செய்ய ஒரு சிறப்புப்படை
அமைக்கப்பெற்றது ; அர்ஜுனனே அதன் போறுப்பேற்றுக்கொண்டான்.
ஏகலைவனின் பினாமியாக இருந்தவன் ஒரு பாஞ்சால நாட்டான். பத்து தனியார் பள்ளிகளை
லம்ப்-பாக வாங்கினான். ஏகலைவன் தான் வாங்கிய பள்ளிகளில் இலவசக்கல்வி தரப்படவேண்டும் என்று
சொல்லப்போக – "ஜென்டில்மேன் உதவி செய்தார் என்பதற்காக, அதே இயக்குனர் தந்த சிவாஜி
பாதையில் போக வேண்டும் என்று அவசியமில்லை. நமக்கும் ரிடர்ன்ஸ் வேண்டாமா?" என்று சொல்லி
கன்வின்ஸ் செய்தான்.
கல்வித்துறையில் மோனோபொலி உருவாகிவருவதை கண்ணுற்ற துரோணர் (இப்போது, பாண்டவநாட்டு
அரசு கல்வித்துறைக்கு சிறப்பு ஆலோசகராக பார்ட்-டைம் செய்து வந்தார்), தருமரிடம்
அதைப்பற்றி ப்ரஸ்தாபித்து, "மோனோபோலிஸ்டிக் டென்டென்சி சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய
தீங்குகள்" என்ற தலைப்பில் பவர் பாயிண்ட் ப்ரசென்டேஷன் செய்தார். சில நாட்களில் ஒர்
அவசரச்சட்டம் பிரகடனப்படுத்தி, தனியார் பள்ளிகள் எல்லாம் லைசென்ஸ் பெறுதல் அவசியம்
என்றானது. பாஞ்சால நாட்டு பினாமி துவாரகையில் இருந்து ஒரு அரசியல் தரகனை தன்
ஆலோசகனாய் நியமித்து உரிமம் பெற முயன்றான்.
பாண்டவர்களின் புதுமையான சட்டத்தை கௌரவர்கள் காப்பியடித்து தங்கள் நாட்டினிலும் அமல்
படுத்தினார்கள். ஏற்கெனவே அதிகம் பள்ளிகள் இல்லாமல் அறியாமையின் பீடியில் சிக்கியிருந்த
கௌரவ நாட்டுக்கு இச்சட்டம் சரி வராது என்று விதுரர் சபையில் உரையாற்றினார். துரோணர்
தான் மோனோபோலிஸ்டிக் கொள்கையை நிலைநிறுத்தி வருகிறார் என்றும் பாண்டவ நாட்டுக்கு
அரசாங்க கஜானாவை நிரப்பித்தரும் சட்டங்களை இயற்றித்தந்து, கௌரவ நாட்டை மட்டும் இலட்சிய
வாத சங்கிலிகளில் துரோணர் பூட்டுகிறார் என்றும் சகுனி குற்றம் சாட்டினார். துரோணர் தன்
குடும்பத்துடன் மலைவாசஸ்தலமொன்று சென்றிருக்கிறார் என்றபடியால், எழுப்பப்பட்ட வாதங்களுக்கு
பின்னர் பதிலளிப்பார் என கூறி விவாதத்தை முடிவு செய்தார் திரிதராஷ்டிரர்.
துரியோதனனின் அதிகாரியொருவன் ஏகலைவனின் பினாமியை அஸ்தினாபுரம் அழைத்து
விருந்தளித்தான். கௌரவ நாடு அன்னிய முதலீடுகளை வரவேற்பதாகவும், பள்ளிக்கூடங்கள் நிறுவ
இலவசமாக இடம் ஒதுக்கி தரப்படும் என்று ஃப்ரி-பைஸ்களை அடுக்கிகொண்டு போக, 25 பள்ளிகளை
ஸ்தாபிக்க எம் ஒ யூ கைசாத்திடப்பட்டது. துரியோதனனுக்கு கிக்-பேக்காக 5%
வழங்கப்படுமென்றும் பாஞ்சால நாட்டான் ஒப்புக்கொண்டான்.
அர்ஜுனனின் சிறப்புப்படையால் ஜென்டில்மேன் ஏகலைவனை பிடிக்கமுடியவில்லை. அவன்
எங்கிருக்கிறான் என்றொ, எப்படி இருப்பான் என்றோ யாரும் அறிந்திருக்கவில்லை. “ஒட்டகத்தை
கட்டிக்கோ” என்ற கீர்த்தனை பாடிக்கொண்டிருந்த பாகவதர் ஒருவர் மதுராவிலிருந்து
கடத்தப்பட்டிருக்கிறார் என்ற புகாரின் பேரில் விசாரணைக்கு வர, அவரிருக்கும் போதே
மதுராவிலுள்ள கோவிலில் இருந்து உண்டியலை காலி செய்தான் ஏகலைவன். அவனுக்கு துணையாக
கவுடமணியென்பவன் வந்தான் என்றும் பின்னர் விசாரணை மூலம் தெரிய வந்தது. அர்ஜுனன் ஏகலைவனை
பிடிக்கும் வரை முடிவளர்க்கப்போவதில்லை என சூளுரைத்து மொட்டையடித்துக்கொண்டான். அவன் வீடு
திரும்பியதும் “பேன் இருப்பது தெரியாமல் ஒட்டடை மாதிரி வழிந்த முடியை எத்தனை முறை
வெட்டும்படி நான் சொல்லும் போதும் மகாபாரத தோனி நான் என்று உளறிக்கொட்டி என் தலைக்கும்
பேனை தானமாக தந்தீரே, நல்ல வேளை இப்போதாவது புத்தி வந்ததே!” என்று சந்தோஷம் கொண்டாள்
சுபத்திரை. திரௌபதியோ “நல்ல வேளை இப்போது நகுலனின் டர்ன்…அர்ஜுனனின் சான்ஸ் வர இன்னும்
நான்கு ஆண்டுகள் இருக்கின்றன.” என்று ஆசுவாசம் கொண்டாள்.
கௌரவ நாட்டுக்கு தனியார் பள்ளிகள் வந்து ஒரு அறிவுப்புரட்சியை ஏற்படுத்தின. பள்ளிக்கு
செல்பவர்களின் எண்ணிக்கை ஆல்-டைம் ஹை ஆனது. புதுமையான மார்க்கெட்டிங் டெக்னிக்குகள், சுலப
தவணை திட்டங்கள், காற்றோட்டமான அறைகள் – இவற்றின் காரணங்களால் ஏகலைவனின் பினாமியின்
பள்ளிகள் கொழித்தன. இவ்வளவு ஏன், துரோணரின் பள்ளியில் படிக்கும் ராஜ குமாரர்கள் கூட
இப்போது தனியார் பள்ளிகளை விரும்பினர். காட்டிலும், வெயிலிலும் ப்ராக்டிஸ் பண்ண
வேண்டியதில்லை. அறைகளிலேயே, ஹெல்மெட், கவச ஆடைகள் அணிந்து பயிற்சி செய்யக்கூடியதாக
இருந்தது. துரோணரின் பள்ளி மூட வேண்டிய நிலைமைக்கு வந்தது. அசுவத்தாமா துரோணரிடம்
சென்று முறையிட்டான். துரோணர், சிறப்புப்படையில் பணியாற்றிய ஒற்றன் ஒருவனின் உதவியுடன்
ஏகலைவனின் அப்பாயிண்ட்மென்ட் வாங்கி ராஜபாட்டையின் தாபாவொன்றில் சந்தித்தார்.
இரகசிய சந்திப்பிற்கு பிறகு நடந்தவை :-
(!) ஏகலைவன் தன் பள்ளியில் சேர முயன்ற போது ரிசர்வேஷன் மூலம் துரோணர் இடம் தர
மறுத்ததாலேயே அவன் ஜென்டில்மேனாக மாறியதை அறிந்தவுடன் அசுவத்தமா வெகுண்டெழுந்து
சொன்னான் “அவன் ஒரு சீட் கேட்டான் ; கொடுத்திருக்கலாம். நீங்கள் தரவில்லை. இன்னைக்கி பாண்டவ
நாடு, கௌரவ நாடு – இரண்டு நாடுகளிலும் பள்ளிகளை நிறுவி, சாதாரணமா இருந்தவனை
சூப்பர் ஸ்டாராக்கி விட்டுட்டீங்க. எதிரிங்க தானா உருவாறதில்லைங்க..நாமதான் உருவாக்கறோம்”
(2) துரோணர் கை கட்டை விரலை இழந்திருந்தார். தாபா மீட்டிங்கில் வெண்ணெய் வெட்டும் கத்தி
தொலைந்து போனது ; ஏகலைவன் வெண்ணெய் நான் வெட்டித்தருகிறேன் என்று உதவ வரும் வேளையில்
திடீரென்று பவர்-ஆஃப் ஆக தவறுதலாக துரோணரின் கை விரல் வெட்டுபட்டது.
(3) ஏகலைவனின் பினாமிக்கும் துரியோதனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்
கல்வி அமைச்சர் சகுனி பள்ளி லைசென்ஸ்களை கான்சல் செய்ய உத்தரவிட்டார். துரோணரின் பள்ளி
வழக்கம் போல் மீண்டும் முண்ணனி பெற்றது. அசுவத்தாமாவிற்கும் சகுனிக்கும் இடையில் ஏதொ ஒர்
அமைதியான புரிந்துணர்வு இருப்பதாக பேசிக்கொண்டனர்.
(4) ஏகலைவனின் ராபின்ஹூட் தன கொள்ளைகள் முடிவுக்கு வந்தன. அவன் மீது சட்ட பூர்வ
நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பாண்டவர்கள் காட்டிற்கு செல்ல வேண்டி நேரிட்டதால்,
ஏகலைவனின் கேஸ் பிசுபிசுத்து போய்விட்டதாக மக்கள் பேசிக்கோண்டனர். ஏகலைவன் மீது ஆக்‌ஷன்
எடுக்கப்படாததற்கு துரோணரின் திரைக்கு பின்னரான நடவடிக்கைகளே காரணம் என்றும் சில
சாரார் சொன்னார்கள். எது உண்மை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
(5) ஏகலைவனின் சம்மர் ரிசார்ட் ஒன்றில் துரோணரின் கட்டை விரல் ஃபார்மால்டிஹைட் சொல்யுஷனில்
ப்ரிசெர்வ் செய்யப்பட்டு வெகுகாலம் காட்சிப்பொருளாய் இருந்தது.
(6) ஏகலைவன் பினாமி பாண்டவர்களின் ஃபைனான்சியர் ஆனான் என்றும் சொல்வார்கள்.
(7) அர்ஜுனன் காட்டுக்கு கிளம்புகையில் ஸ்பெஷலாக மொட்டையடிக்க தேவைப்படவில்லை. ஏற்கெனவே
ஏகலைவனை கைது செய்வதாய் சபதமிட்டு மொட்டையடித்திருந்தபடியால் கொஞ்சம் ட்ரிம் மட்டுமே
செய்ய வேண்டியிருந்தது. மற்ற பாண்டவ சகோதரர்களுக்கு மட்டும் ஃபுல்-ஃப்லெட்ஜ்
மொட்டையடித்துக்கொண்டார்கள்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 21, 2015, 1:38:40 AM6/21/15
to brail...@googlegroups.com
உணர் திறனறிவு –
Emotional Intelligence
8
விவரங்கள்
எழுத்தாளர்: ஜே.எம்.வெற்றிச்செல்வன்
தாய்ப் பிரிவு: தகவல் களம்
பிரிவு: தகவல் - பொது
C வெளியிடப்பட்டது: 25 மே 2015
திருநெல்வேலியைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய விசாலினியைத் தெரியுமா?. எனக்கு நடிகர்
விசாலைதான் தெரியும், யார் இந்த விசாலினி என்பவர்களுக்கு! விசாலினி உலகின் மிக
அறிவுத்திறன் மிகுந்த பெண். I.Q எனப்படும் அறிவுத்திறனில் கின்னஸ் சாதனை படைத்தவர்.
இவரின் திறன் அறிவியல் அறிஞர் ஐய்ன்ஸ்டீனை விட மிகவும் அதிகம்.

vishalini
ஒருவரின் புத்திக்கூர்மை அல்லது அறிவுத்திறனை I.Q என்று அளவிட்டுச் சொல்ல முடியும்.
ஆனால் இதற்கு மேலயும் ஒருவரின் அறிவுத்திறனை அளக்கும் அளவுகோல்கள் உண்டு. அது
“Emotional Intelligence” என சொல்லப்படும் “EIQ/EQ” ”உணர் அறிவுத்திறன்”
என்பதாகும். I.Q ஐ விட 3 மடங்கு பெரியது. அது என்ன என்பதைக் காண்போம்.
”உணர் திறனறிவு” என்பது நாம் எவ்வாறு நம்முடைய உணர்வுகளையும், மற்றவர்களின்
உணர்வுகளையும் புரிந்து கொண்டு இறுதிவரை அவர்களுடனான உறவுகளைப் பேணுவதாகும்.
டானியல் கோல்மேன் என்ற அமெரிக்க உளவியல் நிபுணர் இதனை 5 கூறுகளாக பிரித்துள்ளார்.
அதையாவன,
1. தன்னையறிதல் (self-awareness)
2. சுயகட்டுப்பாடு (self-regulation)
3. ஊக்கமுடமை (motivation)
4. சமூக அறிவு (social skills)
5. பச்சாதாபம். (Empathy)

தன்னையறிதல் (self-awareness)

தன்னையறிதல் என்பது ஒர் கலை. பிறரை அறிந்தவன் புத்திசாலி, தன்னை அறிந்தவன் ஞானி என்பது
சீனத்து ஞானி ஒருவரின் வாக்கு. சரி, நான் என்னை அறிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு
புத்தரைப் போல போதிமரத்தடியை தேடிச் செல்ல வேண்டியதில்லை. போதிமரத்தை தேடிச்செல்ல நாம்
ஒன்றும் புத்தனும் அல்ல. பிறகு எப்படி ..
தன்னையறிதல் என்பது நாம் நம்முடைய உணர்வுகள், விருப்பங்கள், வெறுப்புகள், வாழும் முறை,
ஆளுமைத் திறன், பலம், பலவீனம் போன்றவற்றை தெரிந்தும், புரிந்தும் வைத்திருப்பது ஆகும்.
சில வழிமுறைகள் மூலம் இதனை புரிந்து கொள்ளலாம்.
நாம் நம்மிடமும், பிறரிடமும் நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மையாக இருத்தல் என்பது
தன்னை அறிந்து கொள்ள நாம் எடுக்கும் முதல் செயல்.
பிறர் நம்மைப் பற்றி ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் இடத்தில் இருந்து
தெரிந்து கொள்ளுதல். ஒருவேளை அவர்கள் சொல்வது சரியென்றால் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்,
தவறு என்றால் புரிய வைக்க வேண்டும்.
கடந்த கால நிகழ்வுகளின் மூலம் நாம் செய்த தவறுகளை அறிந்து கொண்டு, வருங்காலத்தில்
அதே தவறை செய்யாமல் தடுக்க வேண்டும்.
எந்த நிகழ்வில் எப்படி நடந்து கொண்டோம், ஏன் அது போல நடந்த்து, போன்ற வற்றை குறிப்பு
எடுத்துக் கொள்வதன் மூலம், நம்மை பற்றி தெரிந்து கொள்ளாலாம்.
சுயகட்டுப்பாடு
சுயகட்டுப்பாடு என்பது, நாம் எவ்வாறு நம் உணர்வுகளை சரியான முறையில் வழிநடத்துவது
மட்டும் அல்லாமல் சரியான மற்றும் எற்றுக் கொள்ளத்தக்க முறையில் வெளிப்படுத்துவதும் ஆகும்.
உதாரணதிற்கு, நீங்கள் மேலாளராக இருக்கும் வங்கியில், உங்களிடம் மிகவும் திறைமையான
ஊழியர் ஒருவர் நெடுநாளக வேலை செய்கிறார். ஒரு நாள் ஒர் கலந்துரையாடலில் அவர்
தெரியாமல் செய்த சிறு பிழைக்காக , பொது இடம் என்றும் பார்க்காமல் அவரை திட்டி
விடுகிறீர்கள். அவரும், இதை மிகப்பெரிய அவமானமாக கருதி வேலையை விட்டுவிடுகிறார்.
அவரைப்போல இன்னொருவர் கிடைக்க உங்களுக்கு பல வருடங்கள் தேவைப் படலாம். உங்களுக்கும்
இழப்பு, அவருக்கும் இழப்பு. இதையே நீங்கள், அவரை தனிமையில் அழைத்து, இந்தத் தவறை
சுட்டிக்காட்டி இருந்தால், அவரும் வேலையில் நீடித்திருப்பார். உங்களுக்கும் இழப்பு
கிடையாது. எனவே உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம்.
உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி, அதனை, சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். இதோ
சில சுயக்கட்டுப்பாட்டு வழிமுறைகள்.
வேண்டும் என்றே சிலவற்றைச் செய்தல். உங்களை மருத்துவர் தினமும் நடக்கச்
சொல்லியிருக்கிறார். அனால், உங்களுக்கு சோம்பேறிதனத்தின் காரணமாக விருப்பமே இல்லை,
அனாலும் நடந்தே ஆக வேண்டும். இப்படிப் பட்ட நிலையில், கடைகளுக்க்குச் செல்லும் போது
வேண்டும் என்றே வண்டிச்சாவியை வீட்டிலேயே வைத்துவிட்டு வரவேண்டும். இவ்வாறு திட்டமிட்டுச்
செய்வதன் மூலம் உங்களை கட்டுப்படுத்தலாம்.
நீங்கள் எந்த நேரங்களில் அல்லது இடங்களில் உங்களை அறியாமல் நடந்து கொள்கிறீர்கள் என்பதை
தெரிந்து கொண்டு அதனை தவிர்த்தல் அல்லது அதனை விட்டு விலகிப்போதல் அல்லது வேறு ஒர்
வேலையில் கவனத்தை செலுத்துதல்.
எப்போதெல்லம் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது என்பதை
குறிப்பெடுத்துக் கொண்டு, மறுமுறை அதே போல நடந்தால் முன்செய்த தவறை எப்படி திருத்திக்
கொள்வது என்பதை திட்டமிடுதல்.
தன்னை கட்டுப்படுத்த முடியாத நேரங்களில், ஆழ்மூச்சுப் பயிற்ச்சி, பத்திலிருந்து கீழாக
எண்ணுதல், தியானம், ஒர் நிமிட மவுனம், பிடித்த பாடலை அசைபோடுதல் போன்றவற்றைச் செய்வத்ன்
மூலம், நம்மைக் கட்டுப்படுத்த முடியும்.
ஊக்கமுடைமை
ஊக்கமிருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான் என்பது நம்மிடம் இருக்கும் பழமொழி.
அடுத்தவர் நம்மை ஊக்குவிக்காவிட்டாலும் , நம்மை நாமே ஊக்கப்ப்டுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் நம்மிடம் எதிர்ம்றை எண்ணங்கள் வலுப்பெற்றுவிடும். தூக்கமின்மை, உடல் மற்றும்
மனச்சோர்வு, உணவை அறவே வெறுப்பது, மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல், சிந்தணைக்
குறைபாடு என்பன எதிர்மறை எண்ணங்களால் வரும் கடும் விளைவுகள். எவ்வாறு இந்த்த திறனை
வளர்த்துக் கொள்வது?

 இயல்பு நிலையை விட்டு வெளியே வரவேண்டும். புதியனவற்றை செய்ய விளைவுகளைப் பற்றி
கவலை கொள்ளாமல் இருக்க வேண்டும்.
தவறு செய்யாமல் எவராலும் இருக்க முடியாது,மேலும், செய்த தவறை நினைத்து மனம்
ஒடிந்து போய்விட வேண்டாம். மாறாக அந்த தவறு எதனால் நடந்தது,அதை எவ்வாறு சரி செய்வது,
வருங்காலத்தில் எவ்வாறு தவிர்ப்பது என்பதைக் குறித்து திட்டமிடுதல்.
பிரச்சனைகள் இல்லதா மனிதர்கள் இல்லை, எனவே, இதனைக் கண்டு மனம் துவளாமல், எதையும் ஒரு
எதிர்கொள்ளும் மன உறுதியையும், நேர்மறை என்ணங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
துவங்கிய செயலை முடிக்க வேண்டும், எந்தச் சூழலிலும் நிறுத்தக் கூடாது.
நம்முடைய அறிவையும், திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் .உதாரணம்: புத்தங்கள் படிப்பது.
உங்கள் குறிக்கோள்களை சித்திரங்களாகவும், படமாகவும், வரைந்தும், எழுதியும் வைத்துக்
கொள்ளுதல், உங்களை சிந்தணையை தூண்டும். உங்கள் அறையின் சுவற்றில் வைத்திருப்பது, உங்கள்
குறிக்கோளை நோக்கி உங்களை உந்தித் தள்ளும். (இதனைப் பற்றி பின்னர் விரிவாக காணலாம்)
உங்கள் கனவுகளை பல பகுதிகளாக பிரித்து , ஒவ்வொன்றிக்கும் ஒர் காலக்கெடுவை முடிவு
செய்து, அதற்குத் தேவையானவற்றைச் செய்யவும்.
உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகளை உங்காளால் நிறைவேற்ற
முடியும், யாராலும் தடுக்க முடியாது.

சமூக அறிவு :
மனிதன் என்பவன் ஒர் சமூக விலங்கு. அவனால் தனியாக எதும் செய்ய முடியாது. சமூகத்தைச்
சார்ந்த்துதான் இருக்க் வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல், நம் வாழ்நாளில் பாதியை நாம்
வெளியிடங்களிலும், நண்பர்களோடும், அலுவலகத்திலும் கழிக்கின்றோம். புது இடங்களுக்கும்,
நாடுகளுக்கும் செல்லும் போது எவ்வாறு நண்பர்களை சேர்த்துக் கொள்வது, எப்படி பழகுவது என
தெரிந்து வைதிருப்பது அவசியம். ஆகவே, நமக்கு சமூக அறிவு மிகவும் தேவையான ஒன்று.

சமூக அறிவு என்பது, நாம் எவ்வாறு பிறரின் உணர்வுகளை நிர்வாகம் செய்கிறோம் என்பதாகும்.
நம்முடைய சமூக அறிவை வளத்துக்கொள்ள சில வழிமுறைகள்.
பிறர் சொல்வதை கவனமுடன் கேட்கவும். கேட்பதைப் போல நடிக்காமல் உண்மையான விருப்பத்துடன்
கேட்கவும்.
 நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதே போல, பிறரையும் நடத்துங்கள்.
 எந்தச் சூழலிலும் நேர்மறையான எண்ணங்களோடு இருத்தல்.
 நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுதல். ஒருவரை காயப்படுத்துவது நகை உணர்வாகாது.
 புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல்.
பச்சாதாபம்
children 600

பச்சாதாபம் என்பது, நாம் எவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளையும், நம்முடைய செயல்கள் எவ்வாறு
அடுத்தவரை பாதிக்கும் என்பதை அறிவதாகும். உதாரணதிற்கு. இரண்டு பேர் அடங்கிய உங்களது
குழுவில் பணிபுரியும் உங்கள் தோழியின் கணவருக்கு திடீரேன நெஞ்சு வலி, அவரை
மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரால் இரண்டு நாட்களுக்கு வரமுடியாது. அனால்,
நீங்களோ நாளைக்குள் உங்கள் திட்டத்தை முடிக்க வேண்டும். மற்ற ஊழியர்களும் அவரவர் வேலையில்
இருக்கிறார்கள், உங்களுக்கு உதவ முடியாது. இப்போது , நீஙக்ள் உங்கள் தோழியின் வேலையையும்
சேர்த்து செய்து கொடுக்கப்பட்ட காலகெடுவுக்கு திட்டத்தை முடித்து விடுகீர்கள். இதுவே
பச்சாதாபம் (empathy). அதாவது, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கு
நம்மால் ஆன உதவிகளைச் செய்வது. இத்திறனை வளர்க்க இதோ வழிமுறைகள்.
பிறரிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் சொல்வதை முழுதாகவும், முழு விருப்பத்துடனும்
கேளுங்கள்.
 ஒருவர் பேசுவதற்கு முன் , குறுக்கே பேச வேண்டாம். எதேனும் கேள்விகள் இருப்பின், அவர்
பேசியபின் கேட்கவும்.
 நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுதல்.
 பிறரின் நிலையையும் அவர்கள் இடத்திலிருந்து புரிந்து கொள்ளுதல்.
 வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல்.
 கேட்டால் மட்டும் அறிவுரை வழங்கவும்.
இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், அலுவலகத்தையும், இல்லத்தையும், நண்பர்களையும்
நிர்வகிக்க EQ- எனப்படும், ”உணர் திறனறிவு” மிகவும் தேவையான ஒன்று. மேலும், இது
பிறந்தவுடனே இருக்கும் தனித் திறைமைகள் அல்ல. சித்திரமும் கைபழக்கம் என்பதைப் போல,
பயிற்ச்சி செய்தால் போதும். நாமும் வளர்த்துக் கொள்ளலாம். என்ன தயாரா?

தகவல் /படங்கள் : இணையம்.
- ஜே.எம்.வெற்றிச்செல்வன்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 21, 2015, 1:58:55 AM6/21/15
to brail...@googlegroups.com
நேர்காணல்களில் கேட்கப்படும் கடினமான கேள்விகளும் அவற்றை எதிர்கொள்ளும் விதமும்
8
விவரங்கள்
எழுத்தாளர்: முத்துக்குட்டி
தாய்ப் பிரிவு: தகவல் களம்
பிரிவு: தகவல் - பொது
C வெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2015
interview
நேர்காணல்களின் போது வந்திருப்பவர் நம்முடைய நிறுவனத்தில் நீண்ட காலம் வேலை பார்ப்பாரா?
என்பதை உறுதி செய்வதற்காகப் பெரும்பாலான நிறுவனங்களில் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நேரடியாகக் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும்
நேரடியாகவே பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பல நேரங்களில்
நேர்க்கேள்விகளுக்கு நேராகப் பதில் சொல்ல முடியாது. அப்படிப் பட்ட கேள்விகள் சிலவற்றை
இங்கு பார்ப்போம்.
•நீங்கள் எத்தனை ஆண்டுகள் எங்கள் நிறுவனத்தில் இருப்பீர்கள்?
இந்தக் கேள்விக்கு எத்தனை ஆண்டுகள் நீங்கள் சொன்னாலும் மாட்டிக்கொள்வீர்கள். எடுத்துக்காட்டாக,
‘நான் ஐந்து வருடம் உங்களுடன் இருப்பேன்’ என்று சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
உடனே, ‘ஏன் ஐந்து வருடம் தானா? அதற்கு மேல் இருக்க மாட்டீர்களா?’ என்று கேட்பார்கள்.
அப்போது நாம் திகைத்துப் போவோம். எனவே இந்தக் கேள்விக்கு ஆண்டு எண்ணிக்கையை விடையாகச்
சொல்ல முடியாது. அப்படியானால் என்ன சொல்வது? உண்மையைச் சொல்லுங்கள்.
எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, வேலை செய்யும் சூழல் சரியாக இருந்தால்
மட்டுமே நம்மால் மன நிம்மதியுடன் வேலை செய்ய முடியும். கோடி ரூபாய் கொட்டிக்
கொடுத்தாலும் வேலை பிடிக்கவில்லை என்றால் ஊழியர்கள் இருக்க மாட்டார்கள். வேலை செய்யும்
சூழல் நன்றாக இல்லாவிட்டாலும் இருக்க மாட்டார்கள். எனவே, இந்தக் கேள்விக்கு, ‘நான்
கற்றுக்கொள்ளும் அளவில், நல்ல வேலைவாய்ப்புச் சூழல் நிலவும் வரை நான் வேறு நிறுவனத்தைத்
தேட மாட்டேன்’ என்று பதில் சொல்லலாம்.
வேறொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால் அங்கு போய் விடுவீர்களா?
சிறிய நிறுவனங்களின் நேர்காணல்களில் இது போன்ற கேள்வி பரவலாகக் கேட்கப்படுவது உண்டு.
‘கட்டாயம் உங்கள் நிறுவனத்தை விட்டுப் போக மாட்டேன்’ என்று இதற்குப் பதில் சொன்னால் அது
வெளிப்படையாகவே பொய் என்று தெரியும். எனவே அதைச் சொல்வதில் அர்த்தமில்லை.
அதற்குப் பதிலாகக் கீழ்க்காணும் பதில்களில் உங்களுக்கு எது பொருந்துமோ அதைச் சொல்லலாம்.
1.‘பெரிய நிறுவனங்களில் நாம் செய்யும் வேலை என்பது கடலில் கரைத்த காயத்தைப் போல;
இலட்சத்தில் ஒருவராகத் தான் நாம் இருப்போம். அதே வேளை, உங்களுடைய நிறுவனத்தைப் போல
சின்ன நிறுவனத்தில் வேலைக்கு வந்தால், நிறைய கற்றுக்கொள்ளலாம். நம்முடைய வேலை பலராலும்
பாராட்டப்படும். எனவே பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால் போக மாட்டேன்.
2.பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. என்னுடைய திறமைக்கு
எங்கு வேலை கிடைக்கிறதோ அங்குத் தான் நான் இருப்பேன். என்னுடைய பயோடேட்டாவும் உங்களுடைய
வேலை தேவையும் பொருந்துவதாக நான் நினைத்தேன். அதற்காகத் தான் இங்கு வந்தேன்.
•எங்களை விட அதிக சம்பளத்தை இன்னொரு நிறுவனம் கொடுத்தால் அங்கு போய் விடுவீர்களா?
யோசித்துப் பாருங்கள். நீங்கள் கம்ப்யூட்டர் துறையில் சேர ஆசைப்படுகிறீர்கள். உங்கள் நண்பர்
‘மருத்துவம் படி; கோடி கோடியாகச் சம்பாதிக்கலாம்’ என்கிறார். மருத்துவம் படிக்கச் சென்று
விடுவீர்களா? இல்லை தானே! ‘இல்லை நண்பா! எனக்கு கம்ப்யூட்டர் படிக்க ஆர்வம் இருக்கிறது!
நான் அதில் கட்டாயம் முன்னேறி விடுவேன்’ என்று தானே பேசுவீர்கள். அதே பதிலை இங்கும்
சொல்லுங்கள்.
சம்பளம் என்பது முக்கியம் தான். ஆனால் அது மட்டுமே முக்கியம் இல்லை. என்னுடைய திறமைகளும்
உங்களுடைய வேலை தேவைகளும் பொருந்துவதாக நான் நினைக்கிறேன். எனவே சம்பளத்திற்காக
மட்டும் வேறு நிறுவனத்திற்குப் போக மாட்டேன்.
•இங்கு உங்களைச் சக்கையாகப் பிழிந்து விடுவார்கள். பரவாயில்லையா?
நீங்கள் சுறுசுறுப்பானவரா? சோம்பேறியா? என்பதைத் தெரிந்து கொள்ள நிறுவனங்கள் கேட்கும்
கேள்வி இது! இந்தக் கேள்வி கேட்கப்பட்டவுடன், நீங்கள் ஒரு நிமிடம் யோசித்து பதில் சொன்னால்
போதும் – நீங்கள் சோம்பேறி தான் என்பதை உறுதிப்படுத்திவிடுவார்கள். இது போன்ற
கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது உடல் மொழியும் ரொம்ப முக்கியம். மலர்ந்த முகத்துடன்,
‘ என்ன சார்! என்னைப் பார்த்தால் என்ன வயதானவர் மாதிரியா தெரிகிறது! அதெல்லாம்
பரவாயில்லை சார்!’ என்னும் பதில் பொருத்தமாக இருக்கும்.
•எங்களிடம் இரண்டாண்டு காலம் ஒப்பந்தம் ('பாண்டு') இருக்கிறது. அதற்கு ஒத்துக்கொள்கிறீர்களா?
முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாண்டு / மூன்றாண்டு என ஒப்பந்தம் போடுவது
சட்டப்படிக் குற்றம். அதை நேர்மையான நிறுவனங்கள் செய்யவே மாட்டார்கள். பிறகு ஏன் இப்படிக்
கேட்கிறார்கள் என்கிறீர்களா? நீங்கள் எத்தனை ஆண்டுகள் இருப்பீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள
உதவும் கேள்வி இது! அதனால் தான் கேட்கிறார்கள். எனவே நல்ல நிறுவனமாக இருந்தால்
துணிச்சலாகச் ‘சரி’ என்று சொல்லி விடலாம்.
சில நிறுவனங்கள் சட்டத்திற்குப் புறம்பாக இப்படிப்பட்ட ஒப்பந்தங்களை வைத்திருக்கின்றன. நீங்கள்
நேர்காணலுக்குப் போவதற்கு முன்பே நண்பர்கள் மூலமோ இணையம் மூலமோ நிறுவனங்களைப் பற்றிய
விமர்சனங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்படி ஒப்பந்தம் உண்மையில் இருந்தாலும்
துணிச்சலாகச் ‘சரி’ என்று சொல்லிவிடுங்கள். ‘ஐயோ! சரி என்று சொல்லிவிட்டால் என்ன ஆவது?
ஒத்துக்கொண்ட வருடங்கள் வேலை செய்ய வேண்டி வருமே!’ என்கிறீர்களா?
‘இல்லை! என்னால் நீங்கள் சொல்லும் வருடங்கள் இங்கு இருக்க முடியாது’ என்று நீங்கள்
நேரடியாகச் சொன்னால் கட்டாயம் உங்களை வேலைக்கு எடுக்கப் போவதில்லை. ‘சரி’ என்று
ஒத்துக்கொண்டால் வேலைவாய்ப்பாவது கிடைக்கும். வாய்ப்பு கிடைத்த பிறகு, சேரலாமா?
வேண்டாமா? எனப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அதனால் நட்டம் ஒன்றும் இல்லையே!
•எலெக்டிரிக்கல் / மெக்கானிக்கல் / வேறு படிப்புகள் படித்துள்ள நீங்கள், உங்கள் துறையிலேயே
வேலை தேடலாமே! ஏன் ஐ.டி. துறைக்கு வருகிறீர்கள்?
வேறு துறைப் படிப்பு படித்து விட்டு, மென்பொருள் துறையில் வேலை தேடும் பலரும்
எதிர்கொள்ளும் கேள்வி இது. இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? என்று பல நேரம் நாம்
குழம்பிப் போயிருப்போம். ‘ஐ.டி. யில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதால் தான் வந்தேன்’
என்று வெளிப்படையாகவும் சொல்ல முடியாது. இது போன்ற கேள்விக்கு விடை சொல்வதற்கு முன்
‘ஐ.டி.க்குப் போகலாம்’ என்று எப்போது நீங்கள் முடிவெடுத்தீர்கள் என்று நன்றாக யோசித்துப்
பாருங்கள். அதிலேயே பாதி பதில் ஒளிந்திருக்கும்.
•என்னுடைய அண்ணன் / உறவினர் ஒருஅர் ஐ.டி. படித்து விட்டு அமெரிக்காவில் இருக்கிறார்.
அவர் ஐ.டி. துறைக்கு வந்துவிடச் சொன்னார். அவருடைய முடிவை யோசித்துப் பார்த்தேன்.
நானும் கல்லூரி நாட்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தேன்.
எனவே ஐ.டி வேலைக்கு ஏன் போகக் கூடாது என்று தோன்றியது.
•நான் படித்த எலக்டிரிகல் / இன்ஸ்டிருமென்டேஷன் ஆகிய படிப்புகளுக்குத் தென்னிந்தியாவில்
அவ்வளவாக வேலை வாய்ப்பு இல்லை. (நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால்), பெண் பிள்ளையை
ஒளரங்காபாத், கோல்கத்தா என்று வேலைக்கு அனுப்ப என் வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால்
நான் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன். எனவே ஐ.டி. யில் வேலை தேடத்
தொடங்கினேன்.
•பிளஸ் டூவில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், எனக்குப் பிடித்த கம்ப்யூட்டர் படிப்பைப்
படிக்க முடியவில்லை. வேறு வழியின்றி வேறொரு துறைப் படிப்பை எடுத்துப் படித்தேன்.
(இந்த பதிலைச் சொல்வதாக இருந்தால், பிளஸ் டூவில் உண்மையில் நீங்கள் குறைய மதிப்பெண்கள்
பெற்றிருக்க வேண்டும்!)
•நான் வேறு துறைப் படிப்பு படித்தாலும் சிறு வயது முதலே எனக்குக் கம்ப்யூட்டர் மீது
ஆர்வம் அதிகம். பிளஸ் 2 படித்து முடித்த போது அவ்வளவாக விவரம் தெரியாது. வீட்டில்
பெரியவர்கள் சொன்ன படிப்பில் சேர்ந்து படித்தேன். பின்னர் தான் நமக்குப் பிடித்த
துறையிலேயே ஏன் வேலை தேடக் கூடாது என்று தோன்றியது.
இந்த பதிலுக்கு உறுதி சேர்க்கும் விதமாக, நீங்கள் ஏதாவது கணிப்பொறிப் பயிற்சி மையத்திலோ
கல்லூரியிலோ கணிப்பொறி தொடர்பாகப் பெற்ற சான்றிதழ் படிப்புகளை ஆதாரமாகக் காட்டலாம்.
அது கேள்வி கேட்பவர் மன நிறைவு பெற உதவும்.
•உங்களுடைய பிளஸ் என்ன? மைனஸ் என்ன?
இதுவும் பெரும்பாலான நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்வி! இது போன்ற கேள்விக்கு உண்மை
என்னவோ அதைத் தயங்காமல் சொல்லுங்கள். ஆனால் பிளசையும் மைனசையும் முடிவு செய்யும் போது
உண்மையிலேயே அது உங்களுடைய பிளஸ், மைனஸ் தானா? என மனத்திற்குள் கேட்டுக்கொள்ளுங்கள்.
அந்த பிளசையும் மைனசையும் நீங்கள் வாழ்க்கையின் எந்தத் தருணத்தில் உணர்ந்தீர்கள் என்பதை
யோசித்துப் பாருங்கள். அந்த நிகழ்வையும் சேர்த்து இந்தக் கேள்விக்குப் பதிலாகச் சொன்னால்
மிகவும் பொருத்தமாக இருக்கும்.
அதை விடுத்து, மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காகத் தவறான பதிலைச் சொன்னீர்கள் என்றால்
அடுத்தடுத்த கேள்விகளில் மாட்டிக் கொள்வீர்கள்.
சில பிளஸ்கள்:
•எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓய மாட்டேன்.
•நண்பர்கள் என்றால் உயிரையும் கொடுப்பேன்.
•என்னுடைய தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளப் பார்ப்பேன்.
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய பிளஸ் என்பதற்கு இதில் எது பொருந்துமோ
அது தான் சிறந்த பதிலே தவிர, நீங்கள் மேல் உள்ளவற்றுள் தேர்ந்தெடுக்கும் பதில் இல்லை.
மைனஸ்:
மைனசை வெளியே சொல்லும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டியது – நான் என்னுடைய
நண்பனிடத்தில் மைனசைச் சொல்லவில்லை. நண்பர்களிடமோ பெற்றோரிடமோ மைனசைச் சொல்வதாக
இருந்தால், உள்ளது உள்ளபடி அப்படியே சொல்லலாம்; தப்பில்லை. அவர்கள் நம்மை
ஏற்றுக்கொள்வார்கள். வேலை பார்க்கப் போகும் இடத்தில் மைனசைச் சொல்லும் போது மிகுந்த கவனம் தேவை.
மைனசே இல்லை என்று சொல்ல முடியாது; அப்படிச் சொன்னால், நம்மைப் பற்றியே நமக்குத்
தெரியவில்லை என்னும் முடிவுக்கு வந்து விடுவார்கள். அதே சமயம், உள்ளது உள்ளபடியும்
சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது உளறிக் கொட்டுவது போல் ஆகிவிடும்.
சில உளறல்கள்:
•நான் ஒரு மகாச் சோம்பேறி; எவ்வளவு நாள் கொடுத்தாலும் கடைசி நாளில் தான் வேலையை
முடிப்பேன்.
இப்படிச் சொல்வது, ‘ஓகோ, இவரை வேலைக்கு எடுத்தால், வேலை வாங்குவது ரொம்ப சிரமம்’ என
நிறுவன அதிகாரி நினைக்கத் தொடங்கி விடுவார். கடைசியில் வேலை கிடைப்பதையே கெடுத்து
விடும்.
•நான் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். பணம் தான் முக்கியம் என்று நினைக்கிறேன்.
இப்படிச் சொல்வது, ‘வேறு ஏதாவது நிறுவனத்தில் அதிக சம்பளத்திற்கு இவரைக் கூப்பிட்டால்
போய் விடுவார்’ என்னும் எண்ணத்தை விதைத்து விடும். இந்தப் பதிலுக்குப் பிறகு வேலை
கிடைப்பது குதிரைக் கொம்புதான்!
எனவே, மைனசை சொல்லும் போது ரொம்ப கவனமாகச் சொல்ல வேண்டும். மைனசுடன் சேர்த்து அதை
மாற்ற நீங்கள் எடுக்கும் முயற்சிகளையும் சேர்த்துச் சொல்வது கூடுதல் பலம்.
சில மைனஸ்:
•எனக்கு ஆங்கிலம் பேச அவ்வளவாக வராது. அதை முன்னேற்ற, கொஞ்சம் காலமாக, வானொலியில்
ஆங்கிலச் செய்திகள் கேட்டு வருகிறேன்.
(ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் – ஆங்கிலச் செய்தி கேட்பதாக நீங்கள் சொல்வது உண்மையாக இருக்க
வேண்டும். இல்லாவிட்டால், ‘அப்படியா? வானொலியில் எத்தனை மணிக்குச் செய்திகள்
வாசிக்கிறார்கள்? எந்த நிலையத்தில் வாசிக்கிறார்கள்? நேற்றைய தலைப்புச் செய்தி என்ன?’
என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டால் மாட்டிக்கொள்வீர்கள். எனவே எப்போதும் உண்மையை மட்டும்
சொல்லுங்கள்.)
•முன்பு அதிகம் கோபப்படுவேன். இப்போது தியானம், ஆசனங்கள் ஆகியன செய்து கோபத்தைக்
குறைக்க முயன்று வருகிறேன்.
(மீண்டும் கேள்விகள் – என்ன முறை தியானம்? என்ன ஆசனங்கள் செய்கிறீர்கள் என்னும் கேள்விகள்
வரும்; ஆயத்தமாக இருங்கள்.)
•முன்பு வீட்டில் வேலை எதுவும் செய்ய மாட்டேன். இப்போது தாய் தந்தைக்கு உதவ ஆரம்பித்து
இருக்கிறேன்.
பிளசையே மைனசாக!
மைனசை சொல்வதில் இன்னொரு முறை இருக்கிறது. உங்கள் பிளசையே மைனஸ் போலச் சொல்வது!
பழம்பெரும் அரசியல் தலைவர் ஒருவரிடம் நேர்காணலின் போது, ‘உங்களுடைய மைனஸ் என்ன?’ என்று
கேட்டார்கள். அதற்கு அவர், ‘இவ்வளவு காலம் நான் அரசியலில் இருந்தாலும், பிற தலைவர்களைப்
போல எனக்கு முதுகில் குத்தத் தெரியாது’ என்று பதில் சொன்னார். எப்படி நயமாக பிளசையே
மைனஸ் போலச் சொல்கிறார் பார்த்தீர்களா? இதே போல் நாமும் பதில் சொல்லலாம்.
•வேலை என்று வந்து விட்டால் சாப்பாடு, தூக்கம் எல்லாம் பார்க்க மாட்டேன் சார். எப்படியாவது
முடித்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன்.
•நண்பர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் மன்னித்து ஏற்றுக்கொள்வேன். அப்படிச் செய்வதால் சில
நேரங்களில் துன்பப்பட்டாலும் என்னுடைய குணத்தை மாற்ற முடியவில்லை.
இந்தக் கேள்விகளுக்கும் ஒரு பொது விதி உண்டு. நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள்
தாம் பொறுப்பாளி! எனவே தகுந்த காரணங்கள் இன்றி எந்த பதிலும் சொல்லாதீர்கள். பதில்
சொல்லிவிட்டுக் காரணங்கள் தேடாதீர்கள். அது மொத்த நேர்காணலையும் சிதைத்து விடும்.
இக்கேள்விகளுக்கும் சரி, இவை போன்ற வேறு கேள்விகளுக்கும் சரி – இது தான் சரியான பதில்
என்று எந்த வரையறையும் கிடையாது. நீங்கள் யார், உங்களுடைய நிலை என்ன என்பதைப் பொருத்து
பதிலைத் தேர்ந்தெடுங்கள். முடிந்த வரை, கேள்விகளை வரிசைப்படத் தொகுத்து, நண்பர்களுடன்
உட்கார்ந்து விவாதியுங்கள். பல புதிய கேள்விகள் கிடைக்கும்; புதிய கோணங்களில் பதில்கள்
கிடைக்கும். கிடைக்கும் பதில்களில் சிறந்த பதில் எது என்று தேடுவதை விட, நமக்குச்
சரியான பதில் எது என்று தேடுங்கள். அப்படித் தேடி உங்களுக்குப் பொருந்தும் பதில்களை
எடுத்துக்கொள்ளுங்கள். பொய் சொல்லக்கூடாது என்பதை ஆழப் பதிய வைத்துக்கொள்ளுங்கள். வெற்றி
நிச்சயம்!
- முத்துக்குட்டி (mu...@payilagam.com)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 21, 2015, 2:02:14 AM6/21/15
to brail...@googlegroups.com
படித்து முடித்த பின் நல்ல வேலை கிடைக்க என்ன
செய்ய வேண்டும்?
8
விவரங்கள்
எழுத்தாளர்: முத்துக்குட்டி
தாய்ப் பிரிவு: தகவல் களம்
பிரிவு: தகவல் - பொது
C வெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2015
படித்து முடித்த பின் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தால் போதும்! வேறென்ன வேண்டும்?
இது தான் நாம் நினைப்பது! ஆனால் வேலை கிடைப்பதற்கு, நாம் படித்திருக்கும் பட்டப்படிப்போ
பட்டயப்படிப்போ போதுமா? என்றால் இல்லை! போதாது! அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?
எல்லா நிறுவனங்களிலும் பல கட்டத் தேர்வுகள் நடத்துகிறார்கள். அந்தத் தேர்வுகளுக்குச் சிறந்த
முறையில் நம்மை நாமே ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மை நாமே ஆயத்தப்படுத்துவது
என்றால் எப்படி? கொஞ்சம் பார்க்கலாம்.
1. தன் விவரக் குறிப்பு (பயோ டேட்டா) தயாரித்தல்
interview
நீங்கள் யார், உங்களுடைய வாழ்க்கைக் குறிக்கோள் என்ன, நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்,
உங்களுடைய தனித்திறமைகள் என்னென்ன, விருப்பங்கள் என்னென்ன? தொடர்பு முகவரி
ஆகியவற்றையெல்லாம் சேர்த்து பயோ டேட்டா தயாரியுங்கள். இந்த பயோ டேட்டா தான் உங்களுடைய
முகம்! எனவே இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயம் - உங்களுக்குத் தெரியாத
ஒன்றைத் தெரியும் எனப் பொய் சொல்லாதீர்கள். பலரும் செய்யும் தவறு - எப்படியாவது வேலை
கிடைத்து விட வேண்டும் என்பதற்காக, தெரிந்தது, தெரியாதது என எல்லாவற்றையும்
தெரிந்ததாகப் போட்டிருப்பார்கள். அப்படிச் செய்பவர்கள் நேர்காணலின் போது எளிதாக
வடிகட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு விடுவார்கள். வேலை கிடைப்பதற்கு நாள் ஆகிவிட்டாலும்
பரவாயில்லை - தவறான தகவலைக் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்று நினைக்காதீர்கள். அந்த
முயற்சி பெரும்பாலான நேரங்களில் தோல்வியில் தான் முடிவடையும். எனவே உள்ளதை உள்ளதென்றும்
இல்லதை இல்லது என்றும் சொல்லுங்கள். பயோடேட்டாவின் முதல் வரியில் இருந்து கடைசி வரி வரை
உங்களுடைய சொந்த வரிகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பிறருடைய பயோடேட்டாவில்
இருந்து எடுத்து எழுதுகிறீர்கள் என்றால், ஒரு முறைக்குப் பல முறை நீங்கள் அந்த வரிகளுக்கு
உரிய ஆள் தானா? எனத் தனக்குத் தானே கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள்
நேர்காணலுக்குப் போகும் போது மறக்காமல் பயோடேட்டாவை எடுத்துச் செல்லுங்கள்.
2. ஆப்டிடியூட் தேர்வு
தேவைக்கு அதிகமான அளவில் நேர்காணலுக்கு ஆட்கள் வரும்போது நிறைய நிறுவனங்கள்
ஆப்டிடியூட் டெஸ்ட் என்னும் தேர்வை வைக்கின்றன. ஆப்டிடியூட் டெஸ்ட் என்னும் பெயர் தான்
நமக்குப் புதியதே தவிர, இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் நமக்குப் பழையவை தாம்!
ஆமாம்! நாம் பள்ளிக்கூடத்தில் படித்த கணக்குத் தான் பெரும்பாலும்!
•'4 பேர் சேர்ந்து ஒரு வீட்டை 40 நாட்களில் கட்டினால் 3 பேர் அதே வீட்டைக் கட்ட எத்தனை
நாட்கள் ஆகும்?'
•'ஒரு தொடர்வண்டி ஒரு கி.மீ நீளமுள்ள பாலத்தை 50 நொடிகளில் கடந்தால், அவ்வண்டியின்
எவ்வளவு வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது'
•'இரண்டு நாணயங்களைச் சுண்டி விடும் போது தலை கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?'
என்பன போன்ற கேள்விகள் தான் அங்கு கேட்கப்படும். இக்கேள்விகளைத் தயாரிப்பதற்கென்றே பல
புத்தகங்கள் கிடைக்கின்றன. நீங்கள் பழைய புத்தகக் கடைகளில் கூட அப்புத்தகங்களை
வாங்கிக்கொள்ளலாம். ஆர். எஸ். அகர்வால் எழுதிய 'குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்' என்னும்
புத்தகம் பலரும் வாங்கும் புத்தகம். அப்புத்தகத்தைப் படித்தாலே போதுமானது.
சில நிறுவனங்களில் இவ்வகைக் கணக்குகளோடு சேர்த்து விடுகதைகளையும் தேர்வில்
வைத்திருப்பார்கள். எளிமையான விடுகதைகளாகத் தான் இருக்கும்.
சில எடுத்துக்காட்டுகள்:
•ஒரு கூடையில் 3 வெள்ளைப் பந்துகள், 3 பச்சைப் பந்துகள், 3 சிவப்புப் பந்துகள் உள்ளன.
நீங்கள் இரண்டு பந்துகளை எடுக்கும் போது அவை இரண்டுமே சிவப்பாக இருக்க வாய்ப்புகள் எத்தனை?
•ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாக ஓடி வருபவரை முந்துபவர் எத்தனையாவது இடத்தில் ஓடுவார்?
என்பன போன்ற எளிமையான கேள்விகள் தாம் இருக்கும். வேறு சில நிறுவனங்களில் ‘வெர்பல்’
எனப்படும் ஆங்கிலம் அறி தேர்வு நடத்துவார்கள். ஒரு ஆங்கில வார்த்தையைக் கொடுத்து அதற்கான
அர்த்தம் என்ன என்பதற்கு 4 விடைகள் கொடுக்கப் பட்டிருக்கும். அவற்றுள் சரியானதை நீங்கள்
தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கும் நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன.
இந்தத் தேர்வில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், தேர்வு மிக எளிதாகத் தான் இருக்கும்;
ஆனால் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் நாம் சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 40
கேள்விகளை ஒரு மணிநேரத்தில் முடிக்கச் சொல்வார்கள்.; சில நிறுவனங்களில் 60 கேள்விகளை
1.5 மணிநேரத்தில் எழுதச் சொல்வார்கள். எனவே, எளிமையான கேள்விகள் தானே கேட்கிறார்கள்,
நாம் பள்ளியில் படித்ததைத் தானே கேட்கிறார்கள் என்று தயாரிக்காமல் வந்து விடக் கூடாது.
ஒழுங்கான தயாரிப்பு இல்லை என்றால் நேரப் பற்றாக்குறையில் சிக்கிக்கொள்வீர்கள். எனவே, இந்தத்
தேர்வுக்குத் தினமும் ஒரு மணி நேரமோ, இரண்டு மணிநேரமோ ஒதுக்கிப் பயிற்சி எடுக்க வேண்டும்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - இவ்வகைத் தேர்வுகளில் 'பாஸ் / பெயில்' என்பதெல்லாம்
கிடையாது. இந்தத் தேர்வுகள் நடத்துவதன் முக்கிய நோக்கம் - அதிக எண்ணிக்கையில்
வந்திருப்போரை வடிகட்டி எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமே! எனவே நீங்கள் எவ்வளவு நன்றாகத்
தேர்வு எழுதியிருந்தாலும் உங்களுடன் தேர்வு எழுதும் சக போட்டியாளர்கள் உங்களை விட
நன்றாக எழுதியிருந்தால் நீங்கள் வடிகட்டப்படலாம். இதை மறந்து விடாதீர்கள். எனவே,
ஆப்டிடியூட் தேர்வில் கூடிய வரை அதிக மதிப்பெண் எடுக்க முயலுங்கள்.
ஒரு நிறுவனத்திற்கு உங்களுடைய பயோ டேட்டாவை அனுப்புகிறீர்கள். அவர்கள் அதைத்
தேர்ந்தெடுத்து, ஆப்டிடியூட் தேர்வு எழுதக் கூப்பிடுகிறார்கள் என்றால்,
•அந்த நிறுவனத்தில் உங்களுடைய உறவினர்களோ கல்லூரி சீனியர்களோ வேலை பார்க்கிறார்களா
என்று பாருங்கள். அப்படி யாராவது இருந்தால், அவர்களிடம் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின்
ஆப்டிடியூட் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் ஏதும் கிடைக்குமா? என்று விசாரியுங்கள்.
•அப்படி யாருமே இல்லாத சூழலில், இணையத்தில் சென்று 'நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு
ஆப்டிடியூட் தேர்வுக்கான முந்தைய தாள்களைத் தேடுங்கள்.
இப்படித் தேடி எடுத்து அந்தந்த நிறுவனங்களுக்கு ஏற்பத் தயாராகுங்கள். வெறுமனே
கண்மூடித்தனமாக, ஒரே புத்தகத்தையோ ஒரே ஒரு இணையத்தளத்தையோ பின்பற்றாதீர்கள்.
3. நேர்காணல்
இந்தச் சுற்று தான் ரொம்ப முக்கியமான சுற்று. இங்குத் தான் நீங்களும் நிறுவன அதிகாரிகளும்
முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கப் போகிறீர்கள். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்'
என்பார்கள். எனவே நல்ல உடை உடுத்தி நேர்காணலுக்குச் செல்லுங்கள். இங்கு நினைவில் கொள்ள
வேண்டியவை:
சரியா நேரத்தில் செல்லுங்கள்:
சரியான நேரத்திலோ முடிந்தால் அதற்கு முன்னதாகவோ நேர்காணலுக்குச் செல்லுங்கள். கடைசி
நிமிடத்தில் கிளம்பாதீர்கள்; போக்குவரத்து நெருக்கடி போன்ற ஏதாவது ஒன்றில்
மாட்டிக்கொண்டீர்கள் என்றால் அதுவே உங்களுடைய மன நிலையை மாற்றிவிடும். சரியில்லாத மன
நிலையுடன் நேர்காணலில் இருப்பதே பாதித் தோல்வியைக் கொடுத்து விடும்.
அலைபேசிகளை அமைதியாக்குங்கள்:
நேர்காணல் அறைக்குள் போவதற்கு முன், உங்கள் செல்போனை அமைதி நிலை ('சைலன்ட்')க்குக் கொண்டு
வந்து விடுங்கள். இல்லாவிடில் முக்கியமான தருணத்தின் போது தேவையில்லாத அழைப்புகள் வந்து
அதுவே உங்களுக்குத் தொல்லையாக அமையலாம்.
பயோடேட்டா ரொம்ப முக்கியம்
கையோடு உங்கள் பயோடேட்டாவை எடுத்துச் செல்லுங்கள். கையில் இருக்கும் பயோடேட்டாவில்
உங்களுடைய லேட்டஸ்ட் தகவல்கள் அனைத்தும் இருக்கின்றனவா என்று ஒரு முறைக்கு இருமுறை
பார்த்துக்கொள்ளுங்கள்.
•நேர்காணலின் முதல் கேள்வி பெரும்பாலும் 'உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்' என்பதாகத் தான்
இருக்கும். அக்கேள்விக்குத் தயாராகச் செல்லுங்கள்.
•நேர்காணல் என்பது தேர்வு இல்லை; நேர்காணல் என்பது ஒரு கலந்துரையாடல் தான். வந்திருப்பவர்
- நம்முடைய நிறுவனத்திற்கு ஏற்றவரா, வேலைக்கு ஏற்றவரா, வந்திருப்பவரை வைத்து வேலை
வாங்க முடியுமா, நீண்ட காலம் நம்மோடு இருப்பாரா என்பனவற்றையே நிறுவனங்கள் சோதிக்கின்றன.
எனவெ, எந்தக் கேள்விக்கும் பொய்யான பதிலைச் சொல்லி விடாதீர்கள். நீங்கள் சொல்வது பொய் என்று
தெரிந்து விட்டாலே உங்களைப் பெரும்பாலும் நிராகரித்துவிடுவார்கள்.
ஏன்? ஒரு வேலைக்காகப் பொய் சொல்லத் தயங்காத நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாளை
அலுவலகத்திலும் பொய் சொல்லத் தொடங்குவீர்கள். அது அலுவலகத்தின் நிர்வாகத்தையே குலைத்து
விடும். தவிர்க்க முடியாத நேரங்களில், உண்மையை மறைக்கலாம்; தப்பில்லை. ஆனால் பொய்
சொல்லக்கூடாது.
திரும்பவும் சொல்கிறேன், நேர்காணல் என்பது கேள்விகள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தேர்வு
இல்லை. நீங்கள் சொல்லும் முதல் பதிலில் இருந்து தான் அடுத்த கேள்வியே கேட்பார்கள். எனவே
ஒவ்வொரு பதிலையும் கவனமாகச் சொல்லுங்கள். பிறரைக் கவர வேண்டும் என்பதற்காகப் பதில்
சொல்லாதீர்கள். நேர்காணலின் போது உங்கள் பொழுதுபோக்கு என்ன என்று கேட்கிறார்கள் என்று
வைத்துக்கொள்ளுங்கள். உண்மையில் உங்களுடைய பொழுது போக்கு என்னவோ அதைச் சொல்லுங்கள்.
உங்களுடைய பொழுதுபோக்கு படம் பார்ப்பதாக இருக்கலாம். அது அவ்வளவு நல்ல பதில் இல்லை என
நினைத்துக் கொண்டு, 'புத்தகம் படிப்பது' என நீங்கள் சொல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.
நேர்காணல் நடத்துபவர், 'என்னென்ன மாதிரியான புத்தகங்கள் படிப்பீர்கள்? இலக்கியமா?
வரலாறா?, தமிழா? ஆங்கிலமா?' என அடுத்துக் கேட்கும் கேள்விகளில் வசமாக
மாட்டிக்கொள்வீர்கள். எனவே, எக்காரணம் கொண்டும் தவறான பதில்களைக் கவர்வதற்காகச் சொல்லாதீர்கள்.
உண்மையைச் சொல்லுங்கள்:
நேர்காணல் நடத்துபவர், 'தமிழக அரசியல்' பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? என்று
கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அதைச் சொல்லுங்கள்.
எல்லாம் தெரியும் என்று சொல்லி மாட்டிக்கொள்வதை விட, 'பத்துக்கு நாலு மார்க் போடலாம்
சார்' என்று சொல்லும் பதில் மேலானது.
நேர்காணல் நடத்துபவரைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்:
நேர்காணல் நடத்துபவர், அடிப்படையான சில கேள்விகளை உங்களிடம் கேட்டுக் கொண்டே வருகிறார்
என்றால், அவருக்கும் அடிப்படை தான் தெரியும் எனத் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
உங்கள் நிலை அறிந்து கூட, அவர் அடிப்படையான கேள்விகளைக் கேட்டிருக்கலாம்.
விரிவாக்கங்களைப் பதிலாகச் சொல்லாதீர்கள்:
சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் நேர்காணல் நடக்கிறது. 'OOPs' என்றால் என்ன? என்று
கேட்கிறார்கள்; அதற்கு 'Object Oriented Programming' என்று விரிவாக்கம்
சொல்லக்கூடாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 'SPB' என்பவர் யார்? என்று ஒருவர் உங்களிடம்
கேட்டால் 'S.P. பாலசுப்பிரமணியம்' என்றா சொல்வீர்கள்? அவர் ஒரு பாடகர், பல படங்களில்
நடித்திருக்கிறார், இசையமைத்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்வீர்கள்
அல்லவா? அதே போல் தான் நேர்காணலும்! விரிவாக்கங்களை மட்டும் பதிலாகச் சொல்லவே கூடாது.
ஒரு வரி / ஒரு வார்த்தை பதில்கள் - கூடவே கூடாது:
முன்னரே சொன்னது போல, நேர்காணல் என்பது ஒரு கலந்துரையாடல். ஒரு வரி பதில்களோ, ஒரு
வார்த்தை பதில்களோ அந்தக் கலந்துரையாடலை நீர்த்துப் போக வைத்து விடும். கூடியவரை
விரிவான விளக்கங்களைக் கொடுக்க முயலுங்கள்.
நிறுவனம் பற்றித் தெரிய வேண்டும்:
நீங்கள் எந்த நிறுவனத்திற்குப் போகிறீர்களோ, அந்த நிறுவனத்தைப் பற்றிய அடிப்படை விவரங்கள்
உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் மதுரைக்குப் போகும் வண்டியில்
உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பக்கத்தில் வந்து உட்கார்பவர், 'தம்பி - எந்த
ஊருக்குப் போறீங்க' என்கிறார். மதுரைக்கு என்கிறார்கள். 'என்ன விசயமா?' என்கிறார்.
தெரியாது; அப்பா போகச் சொன்னார் என்கிறீர்கள். எத்தனை நாள் மதுரையில் இருப்பீர்கள்
என்கிறார்; தெரியாது என்கிறீர்கள். கேள்வி கேட்பவர் 'பையனுக்கு விவரம் போதாது' என்று
கொஞ்ச நேரத்தில் பேசாமல் ஒதுங்கிக்கொள்வார். இதே போல் தான் நேர்காணலும்! நேர்காணல்
எடுப்பவர் 'ஏன் எங்க நிறுவனத்திற்கு வந்திருக்கீங்க', 'எங்க நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு
என்ன தெரியும்' என்பன போன்ற கேள்விகளைக் கேட்பார். எனவே நிறுவனத்தின் பெயர், அவர்களுடைய
முக்கிய தொழில், தலைவர் பெயர், தலைமையிடம், குறிக்கோள் ஆகியவற்றைத் தெரிந்து
வைத்துக்கொள்ளுங்கள். இது போன்ற கேள்விகளுக்கு எவ்வளவு புதுமையாகப் பதில் சொல்ல முடியும்
என்று யோசித்து வைத்துக்கொள்ளுங்கள்.
கடினமான கேள்விகள் சில:
•நீங்கள் எத்தனை ஆண்டுகள் எங்கள் நிறுவனத்தில் இருப்பீர்கள்?
•வேறொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால் அங்கு போய் விடுவீர்களா?
•இங்கு உங்களைச் சக்கையாகப் பிழிந்து விடுவார்கள். பரவாயில்லையா?
•இன்னும் மூன்று ஆண்டுகளில் என்னவாக விரும்புகிறீர்கள்?
•எங்களிடம் இரண்டாண்டு காலம் ஒப்பந்தம் ('பாண்டு') இருக்கிறது. அதற்கு ஒத்துக்கொள்கிறீர்களா?
போன்ற கேள்விகள் பல இடங்களில் கேட்கப்படும். நண்பர்களுடன் இணைந்து இக்கேள்விகளை எப்படி
எதிர்கொள்ளலாம்? என்று முடிவு செய்யுங்கள். பொய் சொல்லக்கூடாது; ஆனால், உண்மையை
மறைக்கலாம் என்னும் விதி இங்கும் பொருந்தும். மறந்து விடாதீர்கள்.
கடைசியாக ஒரு கேள்வி:
நேர்காணலின் முடிவில், 'நீங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா?' என்று பல இடங்களில்
கேட்பார்கள். அதற்கும் தயாராக இருங்கள். நீங்கள் போகும் நிறுவனத்தைப் பற்றித் தெரிந்து அதைப்
பற்றிய கேள்வியோ உங்கள் வேலை பற்றிய கேள்வியோ கேட்கலாம். முடிந்தவரை எதிர்மறைக்
கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள்.
•நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேலைக்குச் சேர்வதற்கு முன் ஏதாவது படித்து வர வேண்டுமா?
•உங்கள் நிறுவனம் பல நாடுகளில் இருக்கின்றதே! பல நாடுகளை நிர்வகிப்பது கஷ்டமான
வேலையாக இருக்குமே! எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
என்பன போன்ற கேள்விகளைக் கேட்கலாம்.
நாளும் பயிற்சி - நிறைவில் வெற்றி
இப்போது நாம் பார்த்த அனைத்தையும் தினமும் பார்க்க வேண்டும். அடுத்த வாரம் தானே நேர்காணல்
இருக்கிறது; அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மந்தமாக இருந்து விடக்கூடாது.
முயற்சியும் பயிற்சியும் மட்டுமே வெற்றியைத் தரும். மறந்து விடாதீர்கள்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 21, 2015, 9:01:01 AM6/21/15
to kaviku...@gmail.com, brail...@googlegroups.com
சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி
சுந்தரராமசாமி அவரது அபிமானிகளின் கூற்றுப்படி, நவீனத்துவத்தின் இலட்சிய உருவமாய்,
பாதைகள் மயங்கும் அந்தியில், நினைவின் நதியில், பின்னும் உயிர்வாழும் கானலாய்,
இறுதியில், காற்றில் கலந்த பேராசையாய் மறைந்து விட்டார். அவரைப்பற்றி நாங்கள் என்ன எழுத
முடியும், ஏன் எழுதவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அவர் உயிரோடு படைப்பின் முக்கி
முனகும் அவஸ்தையோடு வார்த்தைகளை அச்சிட்டு சந்தைப்படுத்தி “சிற்றிலக்கிய உலகில்
இங்கொருவன் இருக்கின்றேன்’ என்று ஜாக்கி வைத்த பல்லக்கில் பிதாமகராய் உலா வந்த நேரத்தில்
கூட அவரை நாங்கள் கண்டு கொண்டதில்லை. அதேசமயம் அப்படி முழுவதுமாய் அவரை ஒதுக்கி
வைத்ததாகவும் சொல்லிவிட முடியாது.
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட தமிழகத்தில் அதற்கு
அடுத்தபடியாக சு.ராவுக்கு அவரது ரசிகர்கள் ஒரு இலக்கிய ரசிகர் மன்றம் ஆரம்பித்து,
அவரது இருப்பை அதாவது லவுகீகத்தில் திளைத்து உள்ளொளியில் தத்தளித்து சிந்தனையில்
தோய்ந்து வார்த்தைகளைப் பிரசவிக்கும் மின்னொளித் தருணங்களை பல்வேறு கால, இட, வெளிகளில்
உறைய வைத்து ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்தினார்கள்.
என்னடா இது, ஏற்கெனவே சினிமாவின் அட்டைக் கத்தி வீரர்கள் தமிழ் அரசியல் வெளியில்
தாள்வாள்களைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது தாள்களையே உச்சிமோந்து புளகாங்கிதம் அடையும்
இலக்கியவாதிகளும் அதுவும் ஓரிரு கதைகளும் கவிதைகளும் நாவல்களும் எழுதியவுடன்
இப்படிக் கிளம்பி விட்டால் தமிழ்மக்களின் கதியும் அரசியலின் தரமும் என்னவாகுமோ என்று
தலையிலடித்துக் கொண்டு சு.ராவின் அந்தப் புகைப்படக் கண்காட்சியை இடக்கு பண்ணி புதிய
கலாச்சாரத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். மற்றபடி சு.ரா இருந்தபோதும் இறந்த
போதும் எங்களைப் பொறுத்தவரை முக்கியமானவர் இல்லை; என்றாலும், எந்தவொரு
முக்கியமின்மையிலும் ஒரு சில முக்கியத்துவங்கள் இருக்கத்தானே செய்கின்றன!
இது நடந்து சுமார் பத்தாண்டுகள் இருக்கும். அப்போது புதிய கலாச்சாரம் மற்றும் மக்கள் கலை
இலக்கியக் கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னை வில்லிவாக்கத்தில் இருந்தது. அங்கே ஒருநாள்
அதிகாலையில் தற்செயலாக ஆந்திராவைச் சேர்ந்த தோழர் நிர்மால்யானந்தாவைச் சந்தித்தோம். அவர்
ஜனசக்தி என்ற மார்க்சிய லெனினியக் கட்சியினைச் சேர்ந்தவர் என்பதோடு அக்கட்சியின்
பிரஜாசாஹிதி என்ற பத்திரிக்கையின் ஆசிரியரும் கூட. அவரது தமிழக வருகையின் நோக்கம்
குறித்துக் கேட்டபோது, “தமிழகத்தின் இடதுசாரி எழுத்தாளர்களைச் சந்திப்பது’ என்றார்.
அப்படி ஒரு பட்டியலையும் வைத்திருந்தார். அதில் கோமல் சுவாமிநாதன், கோவை ஞானி,
எஸ்.வி. ராஜதுரை, எஸ்.என். நாகராசன் முதலானோர் இருந்ததாக நினைவு. “நினைவின்
நதி’யில் சில விடுபடுதல்கள் இருக்கலாம்.
போகட்டும், இந்தப் பட்டியலிலுள்ளோர் அனைவரும் மார்க்சியத்தை பல்வேறு வகைகளில் கடுமையாக
எதிர்ப்பவர்களாயிற்றே என்று அவர்களது எழுத்தையும், நூல்களையும், நிலைப்பாட்டினையும்
விளக்கிவிட்டு “இந்தப் பட்டியலை யார் கொடுத்தது?’ என்று அந்தத் தோழரிடம் கேட்டோம். அவர்
சுந்தர ராமசாமி தந்ததாகச் சொன்னார். அடேங்கப்பா, தமிழகத்து இடதுசாரி எழுத்தாளர்களின்
அத்தாரிட்டி சு.ரா.தான் என்று ஆந்திர மா.லெ. குழு ஒன்றுக்கு ஒரு பொய்யான தகவல்
உறுதியாகப் போய்ச் சேர்ந்திருக்கிறதே என்று உண்மையில் விக்கித்து நின்றோம். அப்போதுதான்
சு.ரா.வின் ‘பவர்’ என்னவென்று புரிந்தது.
நடந்தது என்னவென்றால், அந்தத் தோழர் கேரளம் சென்றபோது அங்கிருந்த அவரது கட்சித்
தோழர்களிடம் தமிழகத்தின் இடதுசாரிக் கலை இலக்கியப் போக்கு குறித்து
விசாரித்திருக்கிறார். கேரளத்துத் தோழர்களும் சு.ரா.தான் முக்கியமான இடதுசாரி
எழுத்தாளர், அவரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம் என்று தோழர் நிர்மால்யானந்தாவை
நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். நாஞ்சில் மண்ணில் கால் பதித்த அவரும்
தமிழகத்தின் இடதுசாரி இலக்கிய வரலாற்றை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு இடதுசாரி
எழுத்தாளரின் மூலமாக அறியப் போகும் உற்சாகத்துடன் சு.ரா.வைச் சந்தித்திருக்கிறார்.
சு.ரா.வோ தமிழகத்தில் முக்கியமான இடதுசாரி போக்கு இலக்கியம் பத்திரிக்கை என்று
பெரிதாக எதுவும் இல்லையென்றும், தனித்தனி எழுத்தாளர்கள்தான் உண்டெனவும் அலட்சியமாகக்
கூறிவிட்டு, வேண்டுமானால் அவர்களைப் பார்க்கலாமென மேற்படிப் பட்டியலை முகவரிகளுடன்
கொடுத்து அனுப்பிவிட்டார். இதில் எமது முகவரியையும் சு.ரா. கொடுத்திருப்பாரென
வாசகர்கள் தவறாக நினைத்து விடக்கூடாது. அந்தத் தோழர் ஆந்திராவிலிருந்து கிளம்பும் போதே
எமது முகவரியும் அவரது முகவரிப் பட்டியலில் இருந்திருக்கிறது.
அதன்பிறகு அந்தத் தோழரிடம் சு.ரா.வைப் பற்றியும் அவரது இரண்டாவது நாவலைப்பற்றியும்
காலச்சுவடு குறித்தும் அவரிடம் நிலவும் கடைந்தெடுத்த மார்க்சிய வெறுப்பையும்
விளக்கினோம். அப்போது கருவறை நுழைவுப் போராட்டம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம்
ஆகியவை நடந்து முடிந்த நேரம். அந்தப் போராட்டங்களின் வரலாற்றையும், அவை தமிழகத்தில்
ஏற்படுத்தியிருந்த பாதிப்பையும், தமிழ் மக்கள் இசைவிழா கலை நிகழ்ச்சிகள் பாடல்
ஒலிப்பேழைகள் பத்திரிக்கைகள் அவற்றின் விநியோகம் இவற்றையெல்லாம் விளக்க விளக்க அந்தத்
தோழர் விக்கித்து நின்றார். “”உங்களைப் பற்றி சு.ரா. ஒன்றும் சொல்லவில்லையே” என்றார்.
சு.ரா ஏன் சொல்லியிருக்க முடியாது என்ற விளக்கத்துடன் அந்த உரையாடல் முடிந்தது.
நாங்களும் சு.ரா.வும் ஒருவரையொருவர் முக்கியத்துவமுடையவர்களாகக் கருதவில்லை.
இவ்விசயத்தில் மட்டும் எங்களிடையே ஒத்த கருத்து இருந்தது உண்மை. ஆயினும் தமிழகத்தின்
யதார்த்தம் குறித்த தவறான புரிதலை ஆந்திரத்துக்கு அளிவித்த கேரளத்தின் மீது சற்று
வருத்தம் ஏற்பட்டது. இது கேரளத்தின் பலவீனமா, சு.ராவின் பலமா என்பது ஒரு சுவாரசியமான
கேள்வி.
சு.ராவைக் கொண்டாடும் கேரளம், சாருவை வியந்தோதும் மலையாளம் – ஏன்?
சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா
“சு.ரா.வின் மறைவு மலையாளிகளைப் பொருத்தவரை பக்கத்து வீட்டில் நிகழ்ந்த சோகமல்ல, தங்கள்
வீட்டில் நிகழ்ந்த சோகம்” என்று மாத்ருபூமி நாளிதழ் தலையங்கமே எழுதியிருக்கிறது! இதற்கு
முன் சு.ரா. கோட்டயத்தில் தான் பிறந்து வாழ்ந்த வீட்டைக் கண்டுபிடித்ததைக் கூட
புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டிருந்தது அந்த நாளிதழ். படிப்பறிவிலும்
பத்திரிக்கைகள் விநியோகம் படிக்கும் பழக்கத்திலும், பொதுவில் முற்போக்கு சாயலிலும்
முன்னணி வகிக்கும் அந்த மாநிலம் சு.ரா.வின் மீது கொண்டுள்ள காதலின் காரணமென்ன? அவரது
நாவல்களில் இடம் பெற்றுள்ள மலையாள சூழலும், மாந்தர்களும், அவரது படைப்புகள் மலையாளத்தில்
மொழிபெயர்க்கப்பட்டதும், அவரே சில மலையாள நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்ததும் அந்த நேச
உறவைத் தோற்றுவித்திருக்கலாம்.
ஆனாலும் போலி கம்யூனிசத்தில் முங்கி உருவான முற்போக்கு மாயையும், தமிழகத்தை விட
ஆர்.எஸ்.எஸ்.ஐ அபாரமாக வளர வைத்த சனாதனப் பிடிப்பும் கொண்ட கேரளத்திற்கு சு.ரா. போன்ற
ஆளுமைகள் பொருந்தி வந்திருக்கலாம். போலி கம்யூனிசத்தை மொண்ணையாக எதிர்க்கும் ஒரு
போலியான எழுத்துக் கூட அங்கே சாகா வரம் பெற்றுவிடும். நகரமயமாக்கமும், பெருகிவரும்
நடுத்தரவர்க்கமும் கொண்ட கேரளத்தில் சன் டிவியின் சீரியல்கள் சூர்யா டிவியின் வழியாக
வெற்றி பெறுவதும், இங்கு வரும் மலையாளப்படங்களை விட அங்கு போகும் தமிழ்ச் சினிமாக்கள்
அதிகநாட்கள் ஓடுவதும் சாத்தியமான கேரளத்தில், சு.ரா. மட்டும் செல்லுபடியாகாமல்
போய்விடுவாரா என்ன?
சு.ரா.வை விடுங்கள், தான் முப்பது இட்டலிகள் சாப்பிட்டதையும், மனைவி தோசை சுட்டதையும்
கோணல் பக்கங்களாக எழுதித் தள்ளும் சாரு நிவேதிதா எனும் காரியக் கிறுக்கு மூன்று
மலையாளப் பத்திரிக்கைகளில் தொடர் எழுதுகிறது என்றால் இந்தக் கொடுமையை எவரிடம் சொல்லி
அழ? சா.நி. கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் அவருடைய நாவல் தொடர்பான வெளியீட்டு விழாவில்
பேசிய பேச்சு கேரளத்தில் ஹிந்து உட்பட ஆறு தினசரிகளில் வெளிவந்ததாம். புட்டு பயிறு
பப்படம் ஆப்பம் கடலைக்கறி வாழைக்கப்பம் முதலான அன்றாட உணவு வகைகளில் சலித்திருந்த
கேரளத்தில் ஃபாஸ்ட் புட் அயிட்டங்கள் வயிற்றுக்குக் கேடுதான் என்றாலும் வரவேற்பைப் பெறலாம்
இல்லையா?
தமிழ் வாழ்க்கையிலிருந்து துண்டித்துக் கொண்டு தம்மைத்தாமே சிற்றரசர்களாகப் பாவித்துக்
கொள்ளும் சிறு பத்திரிக்கை இலக்கியவாதிகளின் மனோநிலையும், போலி முற்போக்குச்சாயம்
வெளுத்து காலியாக இருக்கும் அரியணைகளில் கோமாளிகளை அமரவைத்து அழகு பார்க்கும்
கேரளத்தின் மனோநிலையும் ஒன்றையொன்று கவர்ந்திழுக்கின்றன. இந்த இழுப்பில் அடிபணிந்த கேரளம்
அந்த ஆந்திரத் தோழருக்கு தவறான வழியைக் காட்டியிருப்பதில் யார் என்ன செய்ய முடியும்?
இதில் கூடுதலான செய்தி என்னவென்றால் கேரளப் பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு
உறுப்பினராகுமாறு சு.ரா.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். அதற்குள் அவர் போய்ச்சேர்ந்து
விட்டார். ஒருவேளை அவர் இருந்து உறுப்பினராகியிருந்தால் என்ன நடந்திருக்கும்? கல்வி
தனியார்மயமாகும் கேரளத்தில் மாணவர்கள் அதிக இலக்கியம் அதிலும் காலச்சுவடு வழியான
இலக்கியங்கள் படிக்க வேண்டும் என்பதை விதியாக்கியிருப்பார். ஊர் பற்றி எரிந்து
கொண்டிருந்தாலும் ஒரு கலை இலக்கியவாதியின் மனம் ஊற்றுவதற்குத் தண்ணீரையா தேடும்?
மீட்டுவதற்கு ஃபிடிலைத்தானே தேட முடியும்!
சு.ராவின் இதயத்தை கவர்ந்த அமெரிக்கா! ஏகாதிபத்தியமும், இலக்கிய மனமும் கைகோர்க்கும் அழகு!!
அமெரிக்க கொடி
சு.ரா.வின் இறுதிப்பயணம் அவர் மிகவும் நேசித்த அமெரிக்காவில் முடிந்தது என்பது
தற்செயலான ஒன்றல்ல. அவர் கிரீன் கார்டு வாங்கி அமெரிக்க குடியுரிமை பெற்று, அதன்படி,
வருடத்தில் ஆறு மாதம் அமெரிக்காவில் தங்க வேண்டிய கடமையைச் செவ்வனே செயல்படுத்த
ஆரம்பித்திருந்தார். அங்கே அவரது இரண்டு மகள்கள் சான்டாக்ரூசிலும், கனெக்டிகட்டிலும்
செட்டிலாகியிருந்தார்கள்.
சான்டாக்ரூசில் அவரது மகளின் மிகப்பெரிய வீடு, நீச்சல்குளம், கண்ணாடி அறை, வெளியே
நிற்கும் பசிய மரங்கள், சுத்தமான நெடிய சாலைகள், அழகான பேரங்காடிகள், கம்பீரமான
கட்டிடங்கள், தாள் மணம் வீசும் புத்தகக் கடைகள், தொண்ணூறு வயதிலும் காரோட்டிக் கொண்டு வரும்
சீமாட்டிகள், எண்பது வயதிலும் கட்டிளங்காளை போலத் திருமணம் செய்யும் சீமான்கள்… என்று அவர்
அமெரிக்காவை அணு அணுவாக ரசித்ததை அவரது அமெரிக்க வாழ் நண்பர்கள் எழுத்தாளர்கள்
கோகுலக் கண்ணனும், பி.ஏ. கிருஷ்ணனும் பதிவு செய்திருக்கின்றனர். இதுபோக ஒரு
கட்டுரையில் அமெரிக்க ஜனநாயகம் தனக்குப் பிடித்திருப்பதாக சு.ரா.வும் ஒப்புதல்
தெரிவித்திருக்கிறார். (ஃபுளோரிடாவில் கறுப்பின மக்களைத் துப்பாக்கி முனையில் விரட்டி
விட்டு புஷ்ஷை அதிபராக்கிய அதே ஜனநாயகம் தான்.)
சு.ரா.வின் அமெரிக்க மோகம் என்.ஆர்.ஐ. இந்தியர்களின் அமெரிக்கக் காதலிலிருந்து
கடுகளவும் வேறுபட்டதல்ல. சு.ரா.வின் மகள்கள் படித்து ஆளாகி அமெரிக்க வாழ்
மாப்பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொண்டு அங்கேயே ஒன்றிப்போனது தந்தையின் வர்க்க
வாழ்நிலைக்குப் பொருத்தமானது என்றாலும் சு.ரா. அதை தன் இலட்சிய விருப்பமாகக்
கொண்டிருந்தார் என்பதுதான் முக்கியமானது. அமெரிக்காதான் பூவுலக சொர்க்கம் எனக் கருதும்
மேட்டுக்குடி நடுத்தர வர்க்கத்தின் உளப்பாங்கைத்தான், மனிதனின் அக உலகைக் கலைத்துப் பார்த்து
நிம்மதியைத் தேடிய இலக்கியவாதியான சு.ரா.வும் பெற்றிருந்தார். அவர் அமெரிக்காவுடன்
போக்குவரத்து துவங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில்தான், அமெரிக்க இராணுவம் ஈராக்கிலும்,
ஆப்கானிலும் அப்பாவி மக்களின் பச்சை இரத்தம் குடித்து வந்தது. இந்த இரத்தத்தைக்
குடித்துத்தான் அமெரிக்கக் கார்கள் ஓடின. இந்த இரத்தத்தைக் கழுவித்தான் அமெரிக்கச் சாலைகள்
பளிச்சென்று மின்னின. இந்த இரத்தத்திலான கலவையைக் கொண்டுதான் அமெரிக்கக் கட்டிடங்கள்
நெடிதுயர்ந்து நின்றன.
இவையெல்லாம் சு.ரா.வின் மெல்லிய இலக்கிய அக உலகில் மென்மையாகக் கூட உரசவில்லை. அப்படி
உரசியிருந்தால் இரத்தப் பணத்தால் வாழும் அந்த நாட்டில் வாழாமல் நாகர்கோயில்
சுந்தரவிலாசத்திலேயே அந்திமக் காலத்தை முடித்திருப்பார். அப்படி உரசல் ஏதும் நடக்கவில்லை
என்பதுடன் அமெரிக்க வாழ்க்கை அவரை மென்மையாக வருடிக் கொடுத்தது. ஒருவேளை தான்
இதுகாறும் செய்து வந்த இலக்கியத்தவத்தினால் அகத்தில் கண்டு உவகையடைந்த அழகுணர்ச்சியின்
பௌதீக வெளிப்பாட்டை அவர் அமெரிக்காவில் கண்டிருப்பாரோ!
“நான் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை நீங்கள் என் கண் எதிரே வாழ்ந்தீர்கள். ஒவ்வொரு முறையும்
உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கும் என் ஆதர்சத்திற்குமுள்ள இடைவெளி குறுகிக் கொண்டே
வந்தது. இன்னும் கடக்க வேண்டிய தூரம் சிறிதே என்றபொழுதில் விடை பெற்றுக் கொண்டீர்கள்”
என்று கோகுலக்கண்ணன் சு.ரா.வின் இறுதி நாட்களை தரிசிக்க வாய்ப்பு பெற்றவர் அவரது
அஞ்சலிக் குறிப்பில் எழுதுகிறார். இவரும் என்.ஆர்.ஐ. தான். சு.ரா.வுடனும்
இலக்கியத்துடனும் சில ஆண்டு பரிச்சயம் போலும். கூடவே காலச்சுவடின் ஆலோசனைக் குழுவில்
அமெரிக்கப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். உறவு, நட்பு, தகுதி, பதவி, ரசனை எல்லாம்
ஒன்றுக்கொன்று கச்சிதமாகப் பொருந்தியிருப்பதுதான் இலக்கியவாதிகளின் இயற்கையோ?
இருக்கட்டும், கோகுல் வாழ விரும்பிய சு.ரா.வின் வாழ்க்கைதான் என்ன, விடை அதே அஞ்சலிக்
குறிப்பிலேயே பொதிந்திருக்கிறது.
கோகுல் சு.ரா.வை எப்படி அழைப்பது என்று கேட்க தன்னை சு.ரா. என்று அழைக்கலாமென
சு.ரா. பதில் சொல்ல இறுதியில் சு.ரா.வை “சார்’ என்று அழைக்கிறாராம் கோகுல். கோகுலின்
மகள் “”சு.ரா. தாத்தா உனக்கு எப்படி நண்பராக முடியும்” என்று கேட்கிறாளாம். இது
அவளுக்கு கடைசி வரை விளங்காத ஒன்றாய் இருந்ததாம். கோகுல் ஒவ்வொரு முறையும் சு.ரா.வைப்
பார்த்து நலம் விசாரிப்பாராம். “”ரொம்ப நல்லாயிருக்கேன் கோகுல்” என்று சு.ரா.
பதிலளிப்பாராம். இருவரும் அமெரிக்காவில் இரு வாரத்திற்கொருமுறை சந்திப்பார்களாம்.
அதற்கு இரண்டு நாள் முன்பாகவே கோகுலின் மனம் பரபரக்கத் தொடங்கிவிடுமாம். இருவரும்
சு.ரா.வின் மகள் வீட்டின் அற்புதமான கண்ணாடி அறையில் அமர்ந்திருப்பார்களாம். கோகுல் கொண்டு
வந்த புதிய புத்தகங்கள் மேசையில் இருக்குமாம். அதன் அட்டையை சு.ரா.வின் விரல்கள்
சொல்லமுடியாத பிரியத்துடன் நீவிக் கொண்டிருக்குமாம். அதன் பிறகு ஒரு கோப்பை மதுவுடன்
கவிதைபற்றிப் பேசுவார்களாம். இதுதான் சு.ரா.வைப் பார்த்து கோகுல் வாழ விரும்பிய வாழ்க்கை!
இந்த அக்கப்போர் அரட்டை வாழ்வை விட ரஜினி ரசிகனாக இருப்பது எவ்வளவோ மேல். அரசியல்
சமூகப் பார்வையை விடுங்கள். அமெரிக்கா போன்ற பல்தேசிய இனங்கள் குவிந்து வாழும் நாட்டில்
பார்ப்பதற்கும், பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் எவ்வளவோ விசயங்கள் இருக்கும்போது இருவரின்
ரசனை மட்டம் எப்படி குண்டு சட்டியில் குடுகுடுக்கிறது பாருங்கள். இது கோகுல் வாழ
விரும்பிய வாழ்க்கை என்பதை விட அவரால் வாழ முடிந்த வாழ்க்கை என்பதே சரியாக இருக்கும்.
அவரைப் போன்ற முதலாம் தலைமுறை என்.ஆர்.ஐ.கள் சொத்து சேர்த்துவிட்டாலும், அமெரிக்க
வாழ்க்கையுடன் ஒன்ற முடியாமல் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், பாரதப் பண்பாடு அல்லது
இலக்கியம் என்று கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம், அவ்வளவுதான்.
இதனால்தான் புதிய புத்தகத்தை மோந்து பார்க்கும் சுந்தரராமசாமி ஒரு சூப்பர் ஸ்டாராக
கோகுலின் கண்களுக்குத் தெரிகிறார். சரக்கடித்துவிட்டு இலக்கியம் பேசுவதுதான்
கவர்ச்சிகரமான வாழ்க்கையென்றால் தமிழ்நாட்டிலேயே லட்சம்பேர் தேறுவார்களே. அதிலும்
கூடுதலாக சாருநிவேதிதா போன்றவர்கள் சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வாழ்க்கையின்
“இனிமை’யைக் காட்டுவார்கள். ஒருவேளை சாருநிவேதிதா அமெரிக்கக் குடியுரிமை பெற்று
அங்கே தங்கியிருந்தால், கிழவர் ராமசாமியைக் கடாசிவிட்டு சாரு பக்கம் தாவியிருப்பார் கோகுல்.
சு.ரா.வின் இறுதி நாட்களில் அவரைச் சந்தித்துப் பேசிய மற்றொரு எழுத்தாளரான பி.ஏ.
கிருஷ்ணனும் கோகுல் ரேஞ்சிற்கு அஞ்சலிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இவர்
சான்ஃபிரான்சிஸ்கோவில் கோதுமைத் தோசை போன்ற ஒன்றைச் சாப்பிட்ட கதையை சு.ரா. ஆர்வமுடன்
கேட்டாராம். அன்று இரவு சு.ரா. மகள் வீட்டில் மெக்சிகன் டைப் உணவு விருந்தாம். அதற்காக
ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்றார்களாம். சு.ரா.தான் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு
வந்தாராம். இரவில் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்காத இரண்டு படங்களைப் பார்த்தார்களாம்.
இடையில் கிருஷ்ணன் ஒரு விசயத்திற்காகக் குற்றஉணர்வு அடைகிறார். அது என்னவென்றால், அவர்
சு.ரா.வின் மனைவி கமலா மாமிக்கு ஸுடோகு புதிர் புத்தகம் ஒன்றை வழங்கினாராம்.
இதனால் ஒவ்வொரு நாள் காலையிலும் சு.ரா.வின் மகள், மருமகன், பேரன் பேத்திகள் வெளியே
சென்று வீடே வெறிச்சோடிவிட, அப்போது கமலா மாமி ஸுடோகு புதிரை மணிக்கணக்கில் போட்டுக்
கொண்டிருக்க, சு.ரா. வேறு வழியின்றி மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு பரிதாபமாய்
அமர்ந்திருப்பாராம். இப்படி வயோதிகத் தம்பதியினரைப் பேசவிடாமல் செய்துவிட்டோமே
என்பதுதான் கிருஷ்ணனின் குற்ற உணர்ச்சி. ஒருவேளை இதனால்தான் பெரிசு நோய் முற்றி
மண்டையைப் போட்டதோ, யார் கண்டது? அது எப்படியோ போகட்டும், மறுநாள் காலையில் கிருஷ்ணன்
விடை பெறும்போது சு.ரா. நெஞ்சாரத் தழுவி விடை கொடுத்தாராம், கண்கள்
கலங்கியிருந்ததாம். வீடு திரும்பும்போதுதான் சு.ரா. கமலா தம்பதிகளிடம் காலில் விழுந்து
சேவிக்க மறந்து போனது அவருக்கு ஞாபகம் வந்ததாம்!
தமிழ்நாட்டுச் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்களின் உலகம்தான் எவ்வளவு குட்டியாக
இருக்கிறது. சாதாரணமாக உண்டு, பேசி, களித்த கதைகள்தான் அவர்களது வாழ்க்கையின்
கவித்துவத்தெறிப்புக்களாக இருக்கிறதென்றால் இவர்களது எழுத்தில் வரும் வாழ்க்கை என்கிற
தெருவோரக் குட்டையின் ஆழம் கணுக்கால் அளவைக்கூடத் தாண்டாதே. சாதாரணங்களையே
அசாதாரணங்களாக ரசித்து, உருகி, அசை போடும் வாழ்க்கை திண்ணையோர வேதாந்திகளது பல
நூற்றாண்டு மரபு. அமெரிக்கா போயும் காலில் விழும் வைபவம் யாருடைய பழக்கம்?
இதே கிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கு வரும் போது ஏதாவது ஒரு வயதான தலித் எழுத்தாளரின்
காலில் விழுவாரா? எழுத்தாளன் என்பதால் கோதுமைத்தோசை சாப்பிட்டது, அதைக் காது
கொடுத்துக் கேட்டதெல்லாம் இலக்கியமாகுமென்றால் அது என்னய்யா இலக்கியம்? அல்லது இதுதான்
பின்நவீனத்துவம் விளிக்கும் சின்னச் சின்னக் கொண்டாட்டங்களா? உண்மையில், சு.ரா. இத்தகைய அற்ப
விசயங்களைக் கொண்டாடித்தான் வாழ்ந்து முடித்தார். இடையில் சில கதைகளையும் எழுதினார்.
இதனால்தான் அவர் இலக்கியச் சிகரமென்றால் சாலையோரப் பள்ளங்களை இனி நாம் பள்ளத்தாக்குகள்
என்று அழைக்க வேண்டியிருக்கும்.
சு.ராவின் அற்பவாத இரசனைகளும், அவற்றை வியந்தோதும் இலக்கிய குஞ்சுகளும்!
ஜெயமோகன் நினைவின் ந்தி
ஜெயமோகன்
சு.ரா. இறந்தவுடன் அவருடன் பேசிப் பழகிய அனைவரும், குறிப்பாக, தமிழகத்தின் சிறு
பத்திரிக்கை எழுத்தாளர்கள் சு.ரா. மறைவின் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தங்களது
இரங்கற்பாக்களை இப்படித்தான் பல்வேறு சிறு பத்திரிக்கைகளில் தீட்டியிருக்கின்றனர். அந்தப்
பாக்களில் எழுத்தாளர் ஜெயமோகன் வடித்திருக்கும் நினைவின் நதியில் எனும் காவியம்
மகத்தானது. ஒரு வகையில் சு.ரா.வைப் பற்றியும், ஏன் ஜெயமோகனைப் பற்றியும் அதீத மனத்தாவல்
ஏதுமின்றிப் புரிந்து கொள்வதற்கு அது ஒரு ஆவணம் அல்லது உபநிடதம் போன்றது.
அதில் சு.ரா. பார்த்துப் பறித்த, கேட்டுக் கலந்த, ரசித்து உருகிய, ஆசைப்பட்டுக்
கோட்டைவிட்ட சமாச்சாரங்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் செதுக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம்
உண்மைதானென்று சு.ரா. உயிர்த்தெழுந்து வந்து சாட்சியம் சொல்ல முடியாது என்றாலும் ஏனைய
எழுத்தாளர்களின் பதிவுகளும் ஏறத்தாழ ஜெயமோகனை வழிமொழியத்தான் செய்கின்றன.
இவற்றையெல்லாம் பிழிந்து பார்த்தால், சு.ரா. தனது ஆளுமையின் வளர்ச்சிற்கேற்பப் பேரழகனாய்
மிளிர்ந்தார், அவரது கருத்து தோற்றம் எழுத்து பேசும் முறையின் மீது மூன்றுதலைமுறை
எழுத்தாளர்கள் மோகம் கொண்டனர். சு.ரா. தேள்களைத் தூக்கி நெஞ்சை நிமிர்த்தி நடப்பார்,
ஆரம்பத்தில் தூய கதர்ச்சட்டையும் தும்பைப்பூ எட்டு முழ வேட்டியும் கட்டியவர் பின்னர் ஜீன்ஸ்
பேண்ட் டீ ஷர்ட்டுக்கு மாறினார். சாக்கடையில் வீசப்பட்ட உபயோகமற்ற பொருட்களை விரும்பி
வேடிக்கை பர்ப்பார், சினிமா சுவரொட்டிகளை உறைந்து ரசிப்பார், மலையாள நடிகை
பார்வதியும் நடிகர் கோபியும் அவருக்குப் பிடித்த நடிகர்கள், கட்டிலில் படுத்தபடி
பேசுவது அவருக்குப் பிடிக்கும் (இந்த முக்கியமான விசயத்தை பலரும் பதிவு
செய்திருக்கின்றனர்), பாத்டப்பில் படுத்தபடி குளிப்பது மிகவும் பிடிக்கும் (ஜெயமோகன்
அறிந்த இந்திய நண்பர்களிலேயே பாத்டப்பில் குளிப்பது சு.ரா. மட்டும்தானாம். நாம் அறிந்த
வரை பாத்டப் இருப்பது பங்களாக்களிலும் 5 ஸ்டார் ஓட்டல்களிலும்தான். என்ன செய்வது, இலக்கிய
மனம்தான் வர்க்க பேதம் அறியாததாயிற்றே!)
நினைவின் ந்தியில்
வெளிநாட்டு லோஷன் பூசுவது பிடிக்கும், சில நேரங்களில் “செண்பகமே செண்பகமே’ பாடுவது
பிடிக்கும், தினசரி ஷேவிங் செய்வது பிடிக்கும், அவரது வீடு படிக்கும் அறை வளைந்த
நாற்காலி சாப்பாட்டு மேசை மொட்டை மாடி நிரம்பப் பிடிக்கும், அளவோடு ஆனால் ருசித்துச்
சாப்பிடுவது பிடிக்கும், தோசையும் தொட்டுக்கொள்ள கீரைமசியலும் கெட்டித்தயிரும் தினசரி
பிடிக்கும், தோல் சீவிய பழங்களைத் துண்டுகளாக்கிக் குத்திச் சாப்பிடுவது பிடிக்கும்,
புத்தம் புதிதாக வரும் புத்தகங்களின் புத்தக மணத்தை மோந்து பார்ப்பது சலிக்காமல்
பிடிக்கும், கர்நாடக சங்கீதம் செவி குளிரக் கேட்பது பிடிக்கும், ஹிந்து பேப்பரை படித்து
முடித்ததும் கச்சிதமாக மடித்து வைப்பது பிடிக்கும், (சு.ரா.வை எழுத்தில் விஞ்சியதாக
சுயப் பிரகடனம் செய்யும் ஜெயமோகனுக்கு இந்தக் கலை மட்டும் இன்னும் கை வரவில்லையாம். இது
போன்ற கலைத்தவங்களில் மட்டும்தான் இலக்கியவாதிகளுக்குத் தன்னடக்கம் வரும் போலும் கற்றோரின்
பணிவு!),
சற்றுப் பூசினால் போன்ற உடல்வாகுடன் உள்ள மலையாளப் பெண்கள் குளித்து விட்டு ஈரத்தலையைக்
கோதிவிடுவது பிடிக்கும், பேசிக்கொண்டோ பேசாமலோ இருக்கும் பெண்களின் கழுத்தசைவு
பிடிக்கும், எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் காலாற நடப்பது பிடிக்கும், கூடைக்காரக்
கிழவிகளின் சண்டை போடும் வீரம் பிடிக்கும், ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை எப்போதும்
பிடிக்கும், திருவனந்தபுர இரயில்வே நிலைய உணவகத்தின் தோசை பிடிக்கும், திருவனந்தபுர
மாடி ஓட்டலின் ஐந்தாவது தள உணவறையின் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே பரந்து
விரிந்திருக்கும் கடற்பரப்பையும் கட்டிடப்பரப்பையும் பார்த்துக் கொண்டு சாப்பிடுவது
பிடிக்கும், பெண்கள் கண்ணாடி வளையல்கள் போடுவது பிடிக்காது, வளைந்து நெளிந்த தங்க
வளையல்கள் போடுவது பிடிக்கும்…
அப்புறம் நாலணா பாளையங்கோடன் பழத்திற்காகப் பெட்டிக்கடைக்காரரிடம் பேரம் பேசிய சு.ரா.,
கார் பார்க்கிங் பிரச்சினையில் போலீசுக்காரருடன் சாமர்த்தியமாக வாதம் செய்த சு.ரா.,
நண்பருக்கு முன் பதிவு செய்த இருக்கையில் வேறு யாரோ அமர சின்ன உரிமையைக் கூட
விட்டுத்தர முடியாது என்று சண்டை போட்டு இடம்பிடித்த சு.ரா., ஒரு நண்பர் சு.ரா.வைப்
பார்த்தவுடன் உடன் வந்த தன் மருமகளிடம் விடைபெற மறந்த போது “மறதி என்பது எவ்வளவு
அருமையான விசயம்’ என்று தத்துவம் உதிர்த்த சு.ரா., சாப்பாட்டு மேசையின் அடியில்
புகுந்து வெளியே ஓடிய குழந்தையைப் பார்த்து “குழந்தைகள் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக
எதிர் கொள்ளுகிறார்கள்” என்று அதிசயித்த சு.ரா. என்று இந்த “வரலாற்றுப் பதிவுகள்’
முடிவில்லாமல் நீளுவதால் நாம் இந்த மட்டும் நிறுத்திக் கொள்வோம்.
ஜெயமோகன் மற்றும் அவரது சக எழுத்தாளர்களால் இவை மட்டும்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன
என்பதல்ல. நண்பர்களை வரவேற்று உபசரிக்கும் சு.ரா.வின் விருந்தோம்பல், நண்பர்கள் சிலருக்கு
நிதியுதவி அளித்த பெருந்தன்மை, அப்புறம் தத்துவ இலக்கிய ஆராய்ச்சி எல்லாம்தான்
பதிவாகியிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மேற்கண்ட அழகியல் ரசனைகளுக்குப் பொருத்தமான
ஒத்திசைவோடு சேர்ந்தேதான் வருகின்றன. சு.ரா. என்ற எழுத்தாளுமை மேற்கண்ட
“பிடிக்கும்’களில் இருந்துதான் உருவாகி எழுந்து வர முடியும். அவையன்றி சு.ரா. இல்லை.
இத்தகைய அற்ப விசயங்கள் ஒரு எழுத்தாளனுக்கும், அவனைப் பகிர்ந்து கொள்ளும்
எழுத்தாளர்களுக்கும் ஏன் முக்கிய விசயங்களாகப் படுகின்றன?
இலக்கியவாதிகளின் தற்காதலிய கட்டவுட் வெறி!
சுயமோகிகள்
பொது வாழ்வில் இருப்பவர்கள் இறந்து போனால் அவர்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதிலும், பதிவு
செய்வதிலும் இத்தகைய அற்பமான, பொருளற்ற, நகைப்புக்கிடமான நினைவுகூறும் முறை வேறு
எந்தத் துறையிலும் இல்லை என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். காரணம் சரியோ, தவறோ
அவர்கள் பொதுவாழ்வில் இயங்குகிறார்கள். எவ்வளவு அற்பமானவர்களாக இருந்தாலும் அவர்களது
ஆளுமை குறித்த மதிப்பீடு முன்னுதாரணமாகவோ அல்லது முன்னுதாரணமற்றதாகவோ இருப்பினும்
அவை அநேகமாகப் பொது வாழ்வு குறித்துத்தான் இருக்கும். பொது வாழ்வு குறித்த நீர்த்துப்போன
சிந்தனை அல்லது மக்கள் விரோதச் சிந்தனை அல்லது மக்களுக்கு மேலாகத் தன்னைக் கருதிக் கொண்டு
புகழ் அதிகாரம் பெற நினைப்பவர்கள் மட்டும்தான் தமது தனிப்பட்ட நடவடிக்கைகளை
உன்னதமானவையாகக் கருதிக் கொண்டு முன்வைக்கவும் முடியும்.
பாசிஸ்டுகள் தங்களது பிம்பத்தைக்கூட பொதுமக்கள் நலனுக்காக என்று பொய்யாகவேனும் கட்டி
எழுப்புகிறார்கள். எந்தக் கட்சியையும் மதிக்காத அகங்காரத்தைக் கொண்டுள்ள ஜெயலலிதா,
தமிழ்நாட்டு மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதாகக் கூறுவதும், கருப்புப் பணத்தையும்
காலேஜையும் காப்பாற்ற கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயகாந்த் “”வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று மேடைதோறும் முழங்குவதும் இப்படித்தான். ஆனால்
தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் கதை வேறு.
அவர்கள் பொதுவில் கதை எழுதுகிறார்களேயொழிய பொதுவாழ்வில் அவர்கள் இல்லை. மாறத்துடிக்கும்
மனித வாழ்க்கை குறித்த அக்கறையும், மனித குலத்தின் மீதான நேசமும் அவர்களிடம் இல்லை.
இந்நிலையில் ஒரு சில கதைகள் எழுதியதும் புகழ், பரிசு, விருது முதலியனவற்றை
எதிர்பார்ப்பதிலும், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போவதால் வருகின்ற பிரச்சினைகள்,
குழுச்சண்டைகள், பொறாமைகள், சாகித்ய அகாடமி, ஞானபீடம் மீதான மனத்தாங்கல்கள், எழுத்தாளனை
மதிக்காத அரசு சமூகத்தின் மீதான வெறுப்பிலும்தான் பொதுவாழ்வு குறித்த “அக்கறை’
அவர்களிடம் வெளிப்படுகிறது.
கடந்த ஐம்பதாண்டுச் சிறு பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள். ஆயிரக்கணக்கான பக்கங்களில்
அவர்கள் எழுதியிருப்பது இந்த அற்பமான சமாச்சாரங்கள் குறித்துத்தான். இப்படிப் பச்சையான
சுயநலத்தையும், சமூக விரோதத்தையும் இயல்பிலேயே வரித்துக் கொண்டிருக்கும் சிறு
பத்திரிக்கை எழுத்தாளர்கள் தங்களது இறந்த காலத்தில் தற்செயலாகச் சிக்கித் தவித்த சில
தருணங்களை அசை போட்டு அசை போட்டு சில கதைகளை முக்கி முக்கி எழுதி, உடனே
எழுத்தாளர்களும் ஆகிவிடுகிறார்கள். செயற்கையாகக் கட்டியமைக்கப்படும் மிகச் சிறுபான்மையான
வாசிப்பின் சந்தைக்கேற்பத் தங்களைப் புதுப்பிக்கவும் ஏற்கெனவே தேங்கிவிட்ட எழுத்துத் திறனைச்
செயற்கையாக மாற்றிக் கொள்ளவும் முயலுகிறார்கள். அப்புறம் அந்த எழுத்திற்காக அதே சண்டை,
சச்சரவுகள்!
மிகச் சாதாரணமாக வாழ்ந்து கொண்டு தங்களைத் தாங்களே அசாதாரணமான பிறவிகளாக
சிலாகித்துக் கொள்வதாக இவர்களது வாழ்க்கையே மாறிவிடுகிறது. இதிலிருந்து தங்கள்
சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை ரசிப்பது என்ற நார்சிச நோய் வலுவாக
இவர்களைத் தொற்றிக் கொள்கிறது. அப்புறம் இவர்கள் மண்டையைப் போட்ட பிறகு, இவர்களது
எழுத்து தவம் மோனம் கலை குறித்த அக்கப்போர்களையெல்லாம் ஏற்கெனவே எழுதிவிட்ட நிலையில்
இவர்களது அஞ்சலிக் குறிப்பாக எதை எழுத முடியும்? வந்தார், போனார், சட்டை போட்டார்,
பேண்ட் போட்டார், ஜிப் போடவில்லை என்றுதானே எழுத முடியும்?
தன்னிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கும் சிற்றிலக்கியவாதிகள் குறித்த சித்திரத்தில் சு.ரா.
ஒரு எம்.ஜி.ஆர். என்றால் ஜெயமோகனை ரஜினி என்று அழைக்கலாம். ஆக புரட்சித் தலைவருக்கு
சூப்பர் ஸ்டார் என்ன அஞ்சலி செலுத்த முடியுமோ அதைத்தான் ஜெயமோகனும் அதிகபட்சமாகச்
செய்திருக்கிறார். ரஜினிக்கும், ஜெயமோகனுக்கும் மூப்பனார் பிடிக்கும், பொள்ளாச்சி
மகாலிங்கம் பிடிக்கும், பாபா விசிறி சாமியார் சைதன்ய நிதி போன்ற சாமியார்கள்
பிடிக்கும், இமயமலைக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை போவது பிடிக்கும் போன்ற
ஒப்புமைகளும் உண்மைகளும் தற்செயலாக அமைந்தவை அல்ல. இயல்பின் அவசியம் கருதி அவை
அப்படித்தான் இருக்க முடியும். என்ன, அதிகபட்சம் பாபா படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் வசனம்
எழுதியது வேண்டுமானால் ஜெயமோகனுக்கு ஒரு குமைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதனாலென்ன, தற்போது கஸ்தூரிமான் படத்தில் கிரேசி மோகன் லெவலுக்கு வசனம்
எழுதியிருக்கும் ஜெயமோகனுக்கு விரைவிலேயே சூப்பர் ஸ்டாரிடமிருந்தோ, இளைய
தளபதியிடமிருந்தோ அழைப்புகள் வரலாம். காத்திருக்கட்டும். நாம் சு.ரா.விடம் திரும்புவோம்.
சு.ரா. தன் எழுத்திற்காகத் தன்னையே மிகவும் நேசித்த ஒரு எழுத்தாளர். இந்தத் தற்காதல்
ஜெயலலிதாவின் கட்அவுட் மோகத்தைவிட அதிகமானது. ஆனால் சற்று சூக்குமமானது. வண்ண
ஓவியத்தை விட எழுத்தோவியத்தைப் புரிந்து கொள்வதற்குச் சற்று நேரம் பிடிக்கும் என்பதே
காரணம். சு.ரா. தன் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் அதிகம் கவலைப்பட்டு, வருத்தப்பட்டு,
எழுதி, பேசி, விவாதித்த ஒரே சமூக விசயம் “சாகித்திய அகாடமி விருது’ தான்.
தனக்குக் கிடைக்காத அந்த விருது தீபம். நா.பார்த்தசாரதிக்கும், அகிலனுக்கும், கோவி.
மணிசேகரனுக்கும், தி.க.சி.க்கும், வைரமுத்துவுக்கும், இன்னபிற அனாமதேயங்களுக்கும்
கிடைத்தது குறித்து சு.ரா. சொல்லணாத் துயரடைந்தார் என்றால் அது மிகையல்ல. கிடைத்திராத
இந்த விருது கூட அவரது சுவாசப்பை நலிவடைந்ததற்குக் காரணமாக இருந்திருக்கலாம்,
தெரியவில்லை.
சு.ராவுக்கு கிடைக்காத சாகித்திய அகாதமி, சமூகத்தின் தடித்தனமாம்!
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி
வருடாவருடம் சாகித்ய அகாடமி விருது அறிவித்தவுடன் பீரங்கியில் இருந்து குண்டு
பாய்வதைப்போல சு.ரா.விடமிருந்து அதை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை அச்சில் பாயும்.
இருப்பினும் சு.ரா. தனக்கு விருது கொடுக்குமாறு எப்போதும் கேட்பதில்லை. என்னதான்
ஜெயலலிதாவை விட தற்காதல் அதிகம் இருந்தாலும் சபை நாகரீகம் என்ற ஒரு விவஸ்தையற்ற வஸ்து
இருக்கிறதல்லவா! அதன் பொருட்டு வேறு வழியின்றி பந்தியில் தன் கூட இருந்து சாப்பிடும்
அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், ஏன் ஜெயமோகனுக்கும் பாயசம் போடுமாறு எப்போதும் பல்லவி
பாடுவார்; மற்றவர்களோ, சு.ரா.வுக்குப் போடுமாறு சரணம் பாடுவார்கள். ஆனாலும் பந்தி
பரிமாறும் தேர்வுக் கமிட்டியினர் இவர்களை அவ்வளவாகச் சட்டை செய்வதில்லை. பின்னே, இந்தியா
முழுவதும் செப்புமொழி பதினெட்டிலும் பல இலட்சம் எழுத்தாளர்களைச் சலித்துப் புடைத்து உமி
நீக்கி சிலருக்கு விருது கொடுப்பது என்பது லேசுப்பட்ட விசயமா என்ன?
தமிழ்நாட்டில் ஒரே ஒரு புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்கள் பல ஆயிரம் பேர் தேறுவார்களே,
இதில் தேர்வுக்குழு என்ன செய்துவிட முடியும்? விருதின் பின்புலத்தில் பலான வேலைகள் பல
இருப்பது உண்மையானாலும் நம்மைப் பொறுத்தவரை விருது வாங்கியவர்களுக்கும்,
வாங்காதவர்களுக்கும் இலக்கியத் தரத்தில் பெரிய வேறுபாடு இல்லை. இந்திய கிரிக்கெட் அணி
தேர்வில் கூட அரசியல் இருப்பதாகக் கூறுகிறார்கள், இருந்த போதும் இந்த அணி சில
போட்டிகளில் தோற்றாலும் சில போட்டிகளில் வெல்வதில்லையா என்ன?
ஆனாலும் சு.ரா. விடுபவரில்லை. தேர்வுக் கமிட்டியில் அரசியல் இருக்கிறது என்றார். என்ன
அளவுகோலை வைத்து தேர்வுக் கமிட்டிக்கு நடுவர்கள் தெரிவுசெய்யப்படுகிறார்கள் என்று கேள்வி
கேட்டார். விருது கிடைப்பதற்கான விதிமுறைகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
இறுதியில் தமிழ் எழுத்தாளர்கள் டெல்லி சாகித்திய அகாடமி அலுவலகம் முன்பு ஒருநாள்
அடையாள உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கூட அறைகூவல் விடுத்துப் பார்த்தார். இப்படி
எதிர்மறையாக விமரிசனம் செய்வதில் மட்டுமல்ல, நேர்மறையிலும் தேர்வுக் கமிட்டியினர்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை பலபத்து ஆலோசனைகளாகவும் தெரிவித்திருக்கிறார்.
சரியாகச் சொல்லப்போனால் இந்த விசயத்தில் ஒரு கலை இலக்கிய மந்திரி எப்படிச் செயல்பட
வேண்டுமோ அப்படியும் அதற்கு மேலும் செயல்பட்டார்.
சாகித்ய அகாதமி, ஞானபீடம் குறித்து இதுவரை அவர் எழுதியுள்ள கட்டுரைகளைக் கத்தரித்து
ஒட்டினால், அது ஜெயாவின் கட்அவுட்டை விஞ்சுவது உறுதி. இருப்பினும் இறுதி வரை விருது
கிடைக்காதபடியால் “”அரசு கலாச்சார நிறுவனங்களின் தடித்தனத்தை மாற்ற முடியாது” என்று
ஒரு கட்டுரையில் சலித்துக் கொண்டார். இதே தடித்தனம் என்ற வார்த்தைதான் அவரது புகழ் பெற்ற
கவிதையான “”என் நினைவுச் சின்னத்”தில் நம் கலாச்சாரத் தூண்களின் / தடித்தனங்களை எண்ணி /
மனச்சோவில் ஆழ்ந்து கலங்காதே…” என்று வருகிறது. இந்தக் கவிதையின் அருஞ்சொற்பொருளே
விருது கிடைக்காததனால் வரும் சுய பச்சாத்தாபமும் அதனால் நான் ஒன்றும் குறைந்து
விடவில்லை என்று போலிப்பகட்டும்தான். வஞ்சப் புகழ்ச்சி அணி போல இது பச்சாத்தாபத்தின்
பாவனையில் ஒளிந்து கொள்ளும் தற்புகழ்ச்சி அணி.
ஆனால் காலச்சுவடு அரவிந்தன் இதற்குத் தரும் வியாக்கியானம், “ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல்
அதில் ஒன்றுமில்லை எனத் தன் மரணம் பற்றி அறிவிக்கிறது அவரது கவிதை வரி ஒன்று.
சுயபடிமம் சார்ந்த உரிமைக்கோரல்களை முற்றாகத் துறந்த ஓர் ஆளுமையால்தான் இப்படிச் சொல்ல
முடியும்” என்று சிலாகிக்கிறார். சுய உரிமைக் கோரல்களை முற்றாகத் துறந்த இன்னொரு
ஆளுமை தமிழ்நாட்டில் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்குகிறது. அதையும் சிலாகிக்க
வேண்டியதுதான்.
சு.ரா.வுக்கு கேரளத்து ஆசான், அமெரிக்க விளக்கு, கனடா இயல் போன்ற குட்டிக் குட்டி
விருதுகள் கிடைத்த நேரத்திலும் கூட இவ்விருதுகளைப் பாராட்டும் சாக்கில் சாகித்ய
அகாடமி, ஞானபீடத்தைக் கரித்துக் கொட்ட அவர் தவறியதே இல்லை. ஜெயமோகனின் நினைவுகூறல்கள்
உண்மையாக இருக்கும் பட்சத்தில், சு.ரா. தன் வாழ்நாளில் சக தமிழ் எழுத்தாளர்கள் எவரையும்
தனக்கு நிகராகவோ, மேலாகவோ கருதியதில்லை என்றாகிறது. அவர்களைப் பற்றி அவர்
எழுதியிருக்கும் கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள், பாராட்டுக்கள் போன்றவற்றைப்
படித்தால் அது உண்மை என்றே படுகிறது. தன் எழுத்தின் மேலாண்மையை நிறுவிக் கொள்ளும்
முகாந்தரத்திலேயே அவர் மற்றவர்களைப் பார்த்தார், எழுதினார். தன்னுடைய படைப்பில் தான்
கண்டுபிடித்திருந்த இலக்கியத் தரிசனங்களை நினைவு கூறும் பொருட்டே மற்றவர்களை
மேலோட்டமாகவேனும் பாராட்டினார். தன்னைத்தாண்டி எவரும் செல்லவில்லை என்பதில் உறுதியான
கருத்தைக் கொண்டிருந்தார்.
சு.ரா – ஒரு கார்ப்பரேட் இலக்கியவாதி!
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி
இதில், தன்னை ஒரு நிறுவனமாக மாற்றிச் செயல்பட்டதில்தான் அவருக்கும் மற்றவர்களுக்குமான
வேறுபாடு அடங்கியிருக்கிறது. சிறு பத்திரிக்கை உலகம் குறுகியதாக இருந்தாலும் தன்னைத்
தேடி வந்த வாசகர்கள், இளம் எழுத்தாளர்கள், புதியவர்கள் அனைவரோடும் அவர் திட்டமிட்ட உறவைப்
பேணினார். அவரது ஐம்பதாண்டு கால இலக்கிய வாழ்க்கையில் வெளிவந்த அநேக
சிறுபத்திரிக்கைகளுடனும் இடையறாத தொடர்பைக் கொண்டிருந்தார். அவரே எழுதியிருப்பது போல
நண்பர்களுக்கு தினசரி ஐந்து கடிதங்கள் வீதம் ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதியிருக்கிறார்.
அவரது மாலைப் பொழுது ஏதேனும் ஒரு இலக்கிய நண்பருடன் அரட்டையடிக்காமல் கழிந்ததில்லை.
பெரும்பான்மையான இலக்கியவாதிகள் அவரது வீட்டில் தங்கியிருக்கின்றனர்.
சுதர்சன் ஜவுளிக் கடையில் இருந்த அவரது சிறிய அறை, ரிலீசாகும் சினிமாக் கம்பெனி ஆபீசு
போல விறுவிறுப்பான இலக்கிய ஆபீசாகச் செயல்பட்டது. அவருக்கு போலி கம்யூனிசத் தலைவர்கள்
சிலரிடம் இருந்த நெருக்கம், மற்றும் அவரது தனிப்பட்ட செல்வாக்கினால் உருவாகியிருந்த
அகில இந்திய, உலக ஈழத்தமிழ் இலக்கிய உறவுகள் மூலமாக தன் நாவல்களை சில மொழிகளில்
மொழிபெயர்த்து ரிலீஸ் செய்திருக்கிறார். அவருக்கு மலையாளம் தெரியும் என்பதால் தனது
நூல்களின் மலையாள மொழிபெயர்ப்பை வரிக்குவரி சரிபார்த்து மலையாள மொழிபெயர்ப்பாளர்களைத்
திண்டாட வைத்திருக்கிறார். எல்லாம் தன் எழுத்து மனிதகுலத்துக்கு மிகச்சரியாகப் போய்ச்
சேரவேண்டுமே என்ற நல்லெண்ணம்தான்.
அவரது நாவல் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் வெளியான போது அவரது அடிமனதில் ஒரு
பெருங்கனவு மாபெரும் புயல்மூட்டமாய் மூண்டிருக்க வேண்டும். அது என்னவென்று யூகிக்க
முடிந்திருக்குமே, அதுதான்… அதேதான்…! நோபல் பரிசு! அவரது “”குழந்தைகள் பெண்கள்
ஆண்கள்” நாவலுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று இலக்கியவாதி சிவதாணு (ஆட்டோ ஓட்டுனர்)
சு.ரா.வுக்கு கடிதம் எழுதியிருந்தாராம். “”அப்படிக் கிடைத்தால் நாமிருவர் மட்டும்
பரிசு வாங்க ஸ்டாக்ஹோம் செல்லலாம்” என்று சு.ரா.வும் வேடிக்கையாகப் பதில் கடிதம்
எழுதியிருந்தாராம். இருப்பினும் அந்தப் பெருங்கனவு தனது வாசகனிடமும் மூண்டிருப்பது
குறித்து அவர் ஒரு சில நாட்கள் மகிழ்ச்சியில் தூங்காமல் புரண்டிருக்கக் கூடும்.
இரண்டு மலையாள நாவல்களையும் ஒரு சில உலகக் கவிதைகளையும் மட்டுமே தமிழில்
மொழிபெயர்த்துள்ள சு.ரா. அதை வைத்தே தன்னை ஒரு முக்கியமான மொழிபெயர்ப்பாளராக
மற்றவர்களைச் சித்தரிக்க வைத்தார். இதுபோக, தமிழக, கேரள இலக்கியக் கூட்டங்களிலும்,
வாய்ப்புக் கிடைக்கும்போது அகில இந்திய அளவிலான கூட்டங்களிலும் கலந்து கொண்டார். கவிதை
படிக்க பாரீசுக்கும், விருது வாங்க கனடாவுக்கும் சென்றார். இதன்மூலம் தன் பெயர் எப்போதும்
இலக்கியச் செய்திகளில் அடிபடுமாறு பார்த்துக் கொண்டார். தனது தூய கலை இலக்கிய
சிந்தனையுலகின் ஆதாரவிதிகளை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பல இளைஞர்களை எழுத வைத்து
எழுத்தாளராக்கியிருக்கிறார். இன்றைய சிறு பத்திரிக்கை உலகின் பெரும்பான்மையான
எழுத்தாளர்கள் சு.ரா. குருகுலத்தில் பயின்றவர்கள்தான். அதில் யாரெல்லாம் சு.ராவின்
“தன்னெழுத்து தற்காதல்’ என்ற ஆளுமையைப் பெற்றார்களோ அவர்கள் அதனைப் பெற்ற மாத்திரத்தில்
சு.ரா.விடமிருந்து உடன் விலகியும் இருக்கிறார்கள்.
சு.ரா, ஜெயமோகனின் சூனிய ஆமைகள்! காமடிச் சண்டை!!
“அவர் நவீனத்துவக் காலத்தைச் சேர்ந்தவர்; அவருடன் சண்டை போட்டவர்கள் பின்நவீனத்துவக் காலத்தைச்
சேர்ந்தவர்கள்” என்று இந்த பாரதப் போருக்கு கீதைப் பேருரை எழுதுகிறார்கள் ஜெயமோகனும் இன்ன
பிறரும். இது ஈகோ சண்டைக்கு கொள்கை முலாம் பூசும் மேட்டிமைத்தனமேயன்றி வேறல்ல. வாழ்வின்
புரியாமையை, போதாமையை, நிலையாமையை மற்றும் இன்ன பிற ஆமைகளைத் தர்க்கபூர்வமாக அடைய
வேண்டும் என்று சு.ரா. கருதினாராம்; அந்த “ஆமை’களை அடைய தர்க்கம் உதவாது, அதீத
மனத்தாவல் மூலம் மட்டுமே தரிசிக்க வேண்டும் என்று ஜெயமோகன் வகையறாக்கள்
கருதுகிறார்களாம். இதில் கொள்கை வெங்காய வேறுபாடு எங்கே வருகிறது? முடிவு சூனிய
“ஆமை’ என்றாகும் போது வழிகளில் நடுவழி, குறுக்கு வழி, நேர்வழி, சுற்றுவழி
என்றிருப்பதில் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது?
சு.ரா. தன் எழுத்தையும், எழுத்தாளர் என்ற தனது பிம்பத்தையும் ஸ்தாபிக்க நாசூக்கான
இலக்கியச் சாமர்த்தியங்களை, தேர்ந்த விளம்பர நிறுவனங்களை விஞ்சும் வகையிலான வேலைகளை,
தனிநபராகவே நின்று செய்து முடித்தார். இவரைப் போன்று ஒரு சில புனைகதைகள் மட்டும்
எழுதிய எழுத்தாளர் எவரும் இவர் அடைந்த இடத்தை கற்பனையில் கூட தரிசனம் செய்ய முடியாது.
சு.ரா. என்ற நிறுவனம் மாபெரும் பள்ளம் தோண்டி நிரப்பிய அஸ்திவாரத்தின் மீதுதான்
தமிழிலக்கியத்திற்கு ஐ.எஸ்.ஐ. மற்றும் ஐ.எஸ்.ஓ. முத்திரை தரும் காலச்சுவடு நிறுவனம்
பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.
காலச்சுவடு மூலம் கமலஹாசன் பாணி மேக்கப்பில் ரிலீசான புளித்துப் போன சு.ரா!
காலச்சுவடு கண்ணன்
காலச்சுவடு கண்ணன்
இன்று எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கான மூடு வாய்க்கப் பெறுகிறதா இல்லையா என்பதை விட
காலச்சுவடின் பெருங்கருணை வாய்க்கப் பெறுமா என்ற தவிப்பே பெரும் பிரச்சினையாக
உருவெடுத்திருக்கிறது. அதனாலேயே பின்நவீனத்துவவாதிகள், தலித்தியவாதிகள்,
பெண்ணியவாதிகள், கதைசொல்லிகள், கவிஞர்கள், விமரிசகர்கள் முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரை
எழுத்தால் பெயர் பெற்றவர்களும் பெறவிரும்புகிறவர்களுமாகிய அனைவரும் சு.ராவின் மரணச்
செய்தி கேட்ட மாத்திரத்தில் எழுதுகோலை எடுத்து அஞ்சலிக் குறிப்பைத் தீட்டி பதிவு செய்ய
போட்டி போட்டார்கள். அமெரிக்கா ஈராக்கிலும், இந்து மதவெறியர்கள் குஜராத்திலும் மக்களை
வெட்டிச் சாய்த்தபோதெல்லாம் இலேசாகக் கூட இதயத்தை வாடவிடாதவர்கள், சு.ரா.வுக்காக தங்கள்
இதயத்தைக் கசக்கிப் பிழிந்து அழுதார்கள். இலக்கியவாதிகளை பொதுச் சோகத்திற்காகவெல்லாம்
இப்படி அழவைத்து விட முடியுமா? பொது நீரோட்டத்தில் இருந்து தங்களை வெட்டிப் பிரித்துக்
கொண்ட மிக உயர்வான தனித்துவமிக்க அபூர்வப் பிறவிகளாகத் தங்களைச் சித்தரித்துக் கொள்கிற
இந்தக் காரியவாதிகளின் அற்பத்தனத்தைத் தனது மரணத்தின் மூலம் அம்பலமாக்கிய பெருமையை நாம்
சு.ரா.விற்கு வழங்கத்தான் வேண்டும்.
போகட்டும், மறைந்துபோன ஒரு தமிழ் எழுத்தாளனுக்காக இரங்கற் கல்வெட்டில் இத்தனைப்பேர்
செதுக்கியிருப்பது இதுவே முதல்முறை. இலக்கிய வெளியை இப்படி மாற்றிய அப்பாவின்
ஆளுமையை மட்டும் முதலீடாக வைத்து காலச்சுவடை ஆல் போல் தழைக்கச்செய்த பெருமை மகன்
கண்ணனையே சாரும். அப்பா நிலப்பிரபுத்துவ மகானைப் போல சிற்றிலக்கிய உலகத்தை ஆதிக்கம்
செய்து ஆசி வழங்கினாரென்றால், மகன் முதலாளித்துவ நிர்வாகத்திறனால் சிற்றிலக்கியச்
சந்தையை சற்றே உப்ப வைத்திருப்பதோடு கடிவாளத்தையும் கையில் வைத்திருக்கிறார்.
திரையுலகில் எம்.ஜி.ஆரின் சாதனை ஆதிக்கத்திற்கு நிகரானது, சு.ரா.வின் சிறு
பத்திரிக்கை ஆதிக்கம்.
எழுபதுகளின் இறுதியில் புரட்சித்தலைவரின் ஃபார்முலா அதன் தர்க்கபூர்வமான நீட்சியில்
புளித்துப்போய் கசந்த நேரத்தில் அவர் புதுப்புது இளம் நாயகிகளுடன் கலர்ஃபுல்லாகக்
கட்டிப்புரண்டு காமரசத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பார்த்தார். ஒருவேளை அவர் அரசியலுக்கு
மாறியிருக்காவிட்டால் அவரது பொற்காலச் சினிமா வாழ்க்கை காமெடியாய் முடிந்திருக்கும்.
இருபத்தியோராம் நூற்றாண்டில் கண்ணன் காலச்சுவடை நிலைநிறுத்தியிராவிட்டால் சு.ரா.வின்
கதியும் அதோகதியாய் முடிந்திருக்கும். வெகுகாலம் முன்னரே சு.ரா.வின் படைப்புச் சிந்தனை
கெட்டிதட்டித் தேங்கிப் போயிருந்தது. சிந்திப்பதற்கோ, எழுதுவதற்கோ, எழுதுவதுபோல் பாவனை
செய்வதற்கோ, அவரிடம் ஏதுமில்லை என்ற நிலை ஏற்பட்டிருந்தது. மகன் தந்தைக்காற்றும் உதவியாய்
கண்ணன் வந்தார், காலச்சுவடைக் கட்டி எழுப்பினார்.
அப்புறமென்ன, சு.ரா.வின் பழைய படைப்புகள் புற்றீசல் போல வடிவில் புதிது புதிதாகப்
படையெடுத்தன. அவரது மூன்று நாவல்களும் முப்பது விதமான அட்டைகளில் செம்பதிப்பாக
வெளிவந்து குவிந்தன. அவரது சிறுகதைகளும், கவிதைகளும், தனித்தும், பிரிந்தும்,
கூட்டணி வைத்துக் கொண்டும் அழகழகாய்ப் பாய்ந்தன. மற்றவர்களைப் பற்றிய அவரது நினைவுக்
குறிப்புகள் அகராதியின் துணை கொண்டு நினைவோடை நூல்களாகக் உப்பின. அவரது கட்டுரைகள்,
நேர்காணல்கள், கேள்விபதில்கள், மதிப்பீடுகள், நூல் அறிமுகங்கள், விமரிசனங்கள், பயண
அனுபவங்கள், கோட்டயத்தில் அவர் பிறந்து வளர்ந்த வீட்டைக் கண்டுபிடித்த வரலாற்றுச்
சிறப்புமிக்க சம்பவம், இலக்கியக் கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகள், நேரம் போகாமல் அவர்
மொழிபெயர்த்த கவிதைகள், நானும் அரசியல் சமூகப் பிரச்சினைகளைப் பார்க்காமலில்லை என்பதான
அபூர்வமான எழுத்துக்கள், கவிதைகளை அடித்து அடித்துத் திருத்தித் திருத்தி எழுதிய
படைப்பின் அவஸ்தைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதிகள், அப்புறம் “மனதை எப்படிக் கட்டவிழ்த்து
விடுவது’ என்பது குறித்து அவர் எழுதிய தமாசான டயரிக் குறிப்புகள்… (காலச்சுவடு
அறிவாளிகள் இதையெல்லாம் கவித்துவத் தெறிப்புகள் என்று அடைமொழியிட்டுப்
பிரசுரித்திருக்கிறார்கள். அதற்காக இப்படியா?) அத்தனையும் அச்சிலேற்றப்பட்ட அம்புகளாய்ச்
சீறிப் பாய்ந்தன.
இப்படி சு.ரா. எழுதிய, எழுத நினைத்த அனைத்தும் அவரது மூளை உட்பட எல்லா இடங்களிலும்
தோண்டிப் பார்த்து, தேடி எடுத்து வழித்துத் துடைத்து ஒரு துளி மிச்சம் விடாமல் தாள்களில்
அச்சிடப்பட்டு விட்டன. அதோடு விட்டார்களா, சிந்திக்கும் திறனை இழந்திருந்த சு.ரா.வை
நாகர்கோவில் பகுதிகளில் பத்து நாட்கள் சுற்ற விட்டு மகத்தான ஞானியாக செட்டப் செய்து
புதுவை இளவேனில் உருவாக்கிய புகைப்படங்களைக் கொண்டு நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி,
நாடகங்களாக மாற்றப்பட்ட சிறுகதைகள், அவரது கவிதைகள் வாசிக்கப்பட்ட கவிதா நிகழ்வுகள்,
இன்னும் புதிய மொழிகளில் பெயர்க்கப்பட்ட அவரது நாவல்கள், இப்படி மிகப் பழைய சு.ரா.வை,
சிந்தனையில் திகட்டியிருந்த சு.ரா.வை, படத்துக்குப் படம் கெட்அப்பை மாற்றும் கமல்ஹாசனைப்
போல அவர் சாகும் வரை மாற்றி மாற்றி ரிலீஸ் செய்து வந்தார்கள். மொத்தத்தில் சிவப்பு வண்ண
கோல்கேட் டூத் பேஸ்ட்டைப் போல சு.ரா.வின் பிம்பமும் இலக்கிய உலகில் வம்படியாய்ப்
பதிக்கப்பட்டிருக்கிறது.
சு. ராவின் வணிகப் பத்திரிகை கோபம் – ஒரு பொய்ச் சண்டை!!
காலச்சுவடு சுந்தர ராமசாமி கமல்
இந்த பிம்பத்தின் வீச்சு காரணமாக சு.ரா.வின் பிற்கால ஆண்டுகளில் பெரிய அல்லது வணிகப்
பத்திரிக்கைகளில் எழுதுமாறு அழைப்பு வந்தது. சு.ரா.வும் ஏனைய சகல சிறு
பத்திரிக்கையாளர்களும் வணிகப் பத்திரிக்கைகளை இலக்கியக் கற்பூரத்தின் வாசனை தெரியாத
தடித்த மூக்கைக் கொண்ட கழுதைகள் என்றே எப்போதும் வசை பாடி வந்தனர். ஆனால், உண்மையில்,
அனைத்துச் சிறுபத்திரிக்கையாளர்களும் பெரிய பத்திரிக்கைகளில் எழுத வாய்ப்பு வராதா அதன்
மூலம் சினிமாவுக்கு எழுத அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கத்தை இதயத்திலும், அதற்கேற்ற
தந்திரங்கள் மற்றும் காரியவாதக் கண்ணோட்டத்தை மூளையிலும் கொண்டு செயல்படுபவர்கள்தான்.
பெரிய பத்திரிக்கைகளுக்கோ இவர்களைப் பற்றி பெரிய மதிப்பு எதுவும் அப்போதுமில்லை,
இப்போதுமில்லை.
தமிழ் மக்களின் வாசிப்பு நேரத்தை தொலைக்காட்சிகள் மொத்தமாக அள்ளிக் கொண்டுவிட,
மிச்சமிருக்கும் சிறுபான்மை வாசகர்களின் வெரைட்டியான தாகத்தைத் தீர்க்கவேண்டும் என்ற அளவில்
சிறியவர்கள் பெரியவர்களுக்குத் தேவைப்பட்டார்கள். சிறியவர்களின் குழுச்சண்டைகள்,
கிசுகிசுக்கள், போன்றவை சினிமாத் துணுக்குகளுக்கு இணையான நொறுக்குத் தீனியாகப்
பயன்பட்டன என்பது ஒரு துணை விசயம். மற்றபடி இவர்களுடைய வரலாறு என்பது புதுமைப்பித்தன்
தொடங்கி பாலகுமாரன் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் ஜெயமோகன் வரை பெரியவர்களிடம்
சிறியவர்கள் சரணாகதியடைந்ததைத்தான் காட்டிக் கொண்டிருக்கிறது. இதில் சு.ரா.வுக்குப்
பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்பது அவரே ஒத்துக் கொண்டிருக்கிற ஒரு பெரிய
ஏமாற்றமாகும். இருந்தாலும் காதல்கோட்டை திரைப்படத்தில் அவரது காலச்சுவடு இதழின் அட்டை
ஒரே ஒரு சீனில் நடித்திருப்பது சற்றே ஆறுதலளிக்கும் விசயமாகும்.
சு.ராவின் புகழ்பெற்ற பத்து தத்துவ முத்துக்கள்! ஐம்பதாண்டு இலக்கிய தவம் பெற்றெடுத்த
விட்டைகள்!!
இதைத்தவிர சு.ரா. என்ற தனிநபர் நிறுவனமும், அவரது வாரிசால் வெற்றிகரமாக நடத்தப்படும்
காலச்சுவடு என்ற வணிக நிறுவனமும், சு.ரா. என்ற பிம்பத்தை விசுவரூபமாய்க்
காட்சிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளும், சவால்களும் பகீரதப் பிரயத்தனங்களும் யாரையும்
மலைக்க வைப்பவைதான், சந்தேகமில்லை. சிறுபத்திரிக்கை உலகைப் பொறுத்தவரை சு.ரா. ஒரு
வரலாறு மட்டுமல்ல, ஒரே ஒரு வரலாறுங்கூட. வாழ்வின் போதாமை குறித்துச் சிந்தித்ததாகப்
பாவனை செய்த ஒருவரது இலக்கிய வாழ்க்கை இப்படிச் சகல சௌபாக்கியங்களுடன்
பூர்த்தியடைந்திருப்பது ஒரு முரணாகத் தோன்றலாம். ஆனால், உண்மை முரணில் இல்லை, அதன்
ஒத்திசைவில்தான் மறைந்திருக்கிறது.
வாழ்வின் நிலையாமை மற்றும் போதாமை குறித்துச் சிந்தித்து எழுதுவதையே தன் வாழ்வின்
மையமான நோக்கமாகக் கற்பித்துக் கொண்ட ஒருவரது சொந்த வாழ்க்கையும் இலக்கிய வாழ்க்கையும்
சகலவிதமான திருப்திகளையும் வழங்க முடியும் என்றால், வாழ்வின் போதாமை குறித்து அவர்
என்ன உணர்ந்திருக்க முடியும். அவருக்கு என்ன தெரிந்திருக்க முடியும்? எதுவும் தெரியாது
என்பதோடு அப்படித் தெரிந்தது போல் காட்டிக் கொள்வதில்தான், வாழ்க்கை குறித்த பெரும்
திருப்தியே அவரிடம் நிலவியிருந்திருக்கிறது. இதுதான் சு.ரா.வின் இலக்கிய வாழ்க்கையை
உந்தித்தள்ளிய உணர்ச்சி. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் சு.ரா. தனக்காக தன் எழுத்தையும்,
தன் எழுத்திற்காகத் தன்னையும் நேசித்த ஒரு எழுத்தாளர். அவர் ஒரு தன்னெழுத்து
தற்காதலியவாதி. தத்துவ உலகில் இவர்கள் அற்பவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
sura-books
சு.ரா.வின் கருத்தியல் உலகில் நுழைந்து சற்று மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை
சட்டெனப் புரிந்துவிடும். சு.ரா.வின் சிந்தனை உலகம் இலக்கியவாதிகளின் மொழியில் சொன்னால்
மிகவும் தட்டையானது. அவரது படைப்புகள், எழுத்துக்கள் அனைத்தையும் கசக்கிப் பிழிந்து
பார்த்தால் உலகைப் பற்றியும், மனித சமூகத்தைப் பற்றியும், மனித மனத்தைப் பற்றியும் அவர்
வெளியிட்டிருக்கும் முழுக் கருத்துக்களையும் மொத்தம் ஒரு பத்து எண்களுக்குள்
அடக்கிவிடலாம். “”தமிழ்ச் சமூகப் பண்பாட்டுச் சூழல் கெட்டுக் குட்டிச் சுவராகிவிட்டது;
மந்தைகளைப் போன்ற மக்களுக்கு தனது சிந்தனைத் திறத்தால் திசைகாட்டும் எழுத்தாளனுக்கு இங்கே
எந்த மதிப்பும் இல்லை; ஒரு எழுத்தாளனுக்கு இந்தச் சூழல் மூச்சுத் திணற வைக்கிறது; எல்லா
இயக்கங்களும் எல்லா நம்பிக்கைகளும் தோற்று வாழ்வே நிலையாமை என்றாகி விட்டது; இந்த
நிலையாமையைப் புரிந்து கொள்வதில் அல்லது புரியமுடியாததன் தவிப்பிலேயே ஒரு எழுத்தின்
வெற்றி அடங்கியிருக்கிறது….” என்பன போன்ற சின்னச் சின்ன வேறுபாடுகள் அடங்கிய பொத்தாம்
பொதுவான கருத்துக்கள்தாம் அவை.
சு.ரா. தன் எழுத்தை நிறுவும் பொருட்டுத்தான் இந்தப் பத்துக் கருத்துக்களைக் கஷ்டப்பட்டுக்
கண்டுபிடித்தாரேயொழிய அவை மனித வாழ்வை நேசிப்பதால் ஏற்படும் சிந்தனையின் அவஸ்தையில்
பிரசவிக்கப்பட்டவை அல்ல; மேலும் இந்தப் பத்துக் கருத்துக்களும் மேற்குலகின் இலக்கியங்கள்
மற்றும் சில சிந்தனையாளர்களை வாசித்து அரைகுறையாக ஜீரணித்து வெளிவந்தவைதான். இவற்றை
சு.ரா.வின் சொந்தச் சரக்கு என்றும் சொல்லிவிட முடியாது. இவை வாழ்வின் கேள்விகளுக்கு
விடையளிப்பவையும் அல்ல, புதிய சிக்கல்களை இனம் காட்டுபவையும் அல்ல. இந்த கருத்துக்களை
வைத்துத்தான் சு.ரா. தன் வாழ்நாள் முழுவதையும் ஒப்பேற்றியிருக்கிறார். இந்த ஒப்பேற்றலைச்
சுற்றி வளைத்து மூக்கைத்தொடும் சொல்லாடல்கள் மூலமும், இலக்கிய வகை பேதங்களை வைத்தும்,
காலச்சுவடின் அச்சு பலத்தை வைத்தும் அவர் நெடுந்தூரம் இழுத்து வந்திருக்கிறார். எனினும்,
ஒரு வரலாற்றுப் பார்வையின் மதிப்பீட்டில் இவையனைத்தும் புளித்துப் புரையோடிப் போனவையே.
சு.ரா. இந்தப் பத்தைத் தாண்டி பதினொன்றாவதாக எதையும் சொல்லவில்லை.
எந்த ஒரு புனைகதை எழுத்தாளனுக்கும் எழுதுவதற்கான ஊற்று வாழ்வை வெறுமனே வேடிக்கைப்
பார்ப்பதனால் வந்துவிடுவதில்லை. புலனறிவு, யதார்த்தத்தில் ஒரு பத்து சதவீதத்தை மட்டும்தான்
காட்டும். மீதியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு மனித வாழ்வு குறித்த மாறாத நேசமோ
அதனூடாக இடையறாமல் புதுப்பிக்கப்படும் தத்துவ நோக்கோ வேண்டும். அத்தகைய நேசமும்,
தத்துவக் கண்ணோட்டமும் கொண்டவர்களாலேயே உலகின் மாபெரும் இலக்கியங்களைப் படைக்க
முடிந்திருக்கிறது. அந்தக் கண்ணோட்டம் கிஞ்சித்தும் இல்லாதவர்கள் குண்டுச் சட்டிக்குள் மட்டுமே
ஓட்ட முடியும். தொடர்ந்து ஓட்ட நினைத்தால் கால்களோ சட்டியின் பகுதிகளோ உடைந்து விடும்.
அப்படி ஓட்டி உடைந்து போனவர்கள்தான் ஜெயகாந்தனும், சுந்தரராமசாமியும்.
சு.ரா. வாழ்வை வெறுமனே விதவிதமாக வேடிக்கை மட்டும் பார்த்தார். அந்த வேடிக்கையையும்
தான் தன் வாழ்வு தன் சூழல் இவற்றை மட்டும் அடிப்படையாக வைத்துப் பார்த்தார்; அவற்றையே
படைத்தார். அதனால் அவை வெறும் கண்காட்சிப் படைப்புகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன.
சிற்றிலக்கிய உலகில் மிகவும் புகழ்பெற்ற சு.ரா.வின் இல்லமான சுந்தர விலாசம்தான்
அவருடைய முழு உலகம். அந்த இல்லத்தின் மகிழ்ச்சி, அழுகை, துக்கம், சிரிப்பு, ஏக்கம்,
இரக்கம், கருணை, பச்சாத்தாபம் முதலியவைதான் அவருடைய தத்துவநோக்கைத் தீர்மானித்தன. அதைக்
கீழ்க்கண்ட எடுத்துக்காட்டு எடுப்பாக விளக்கும்.
அப்பாவை வைத்து ஹிட்லரின் பாசிசத்தை கண்டுபிடித்த சு.ரா!
சு.ரா.வின் அப்பா, வீடு சுத்தபத்தமாக நேர்த்தியாக இருப்பதில் கறாராக இருப்பாராம்.
அதனால் வீடு உண்மையில் ஒழுங்காக இருந்தாலும் அப்பாவின் பார்வையில் ஒழுங்கற்று இருப்பதாக
மற்றவர்களை நம்ப வைத்து விடுவாராம். இதுதான் சு.ரா.வுடைய தந்தையின் பலமாம். இந்த பலம்
அவர் வேண்டுமென்றே செய்வதிலிருந்து தோன்றுவதில்லையாம், அது ஒரு கோணல் பார்வையிலிருந்து
வருகிறதாம். இந்தக் கோணல் பார்வையோடு அதிகாரம் சேர்ந்து கொண்டால் சர்வாதிகாரிகள் தோன்றி
விடுவார்களாம். ஹிட்லர், இந்திராகாந்தி எல்லாம் அப்படி உருவானவர்கள்தானாம். இதை சு.ரா.
ஒரு உரையாடலில் கூறியதாகவும், இப்பேற்பட்ட தத்துவ முத்துக்களை அவர் பேசும்போது, அதை
உள்வாங்கிக் கொண்டு பின்தொடர்வதற்கு பெரிய பயிற்சி வேண்டும் என்றும் ஜெயமோகன் தன் நினைவின்
நதியில் புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்து எழுதியிருக்கிறார். சர்வாதிகாரிகள் குறித்த
சு.ரா.வின் இந்த அரிய கண்டுபிடிப்பைப் புரிந்து கொள்ளாத ஒரே காரணத்திற்காகத்தான் பல
லட்சம் உலகமக்கள் ஹிட்லரால் கொலை செய்யப்பட்டார்கள் போலும்.
சு.ரா. தன் தந்தையின் வாழ்வை வைத்தே உலக சர்வாதிகாரிகளை எடை போட்டார் என்றால் முழு
உலக மக்களின் வாழ்வை எப்படிப் பார்த்திருப்பார்? அநேகமாக அந்த முழு உலகமும் ஏன்
பிரபஞ்சமும் கூட அவரது சட்டைப் பையிலோ அல்லது ஜட்டியின் இடுக்கிலோதான்
சிக்கியிருந்திருக்க வேண்டும். சு.ரா. ஒரு குண்டுச்சட்டி எழுத்தாளர் என்பதற்கு இந்த ஒரு
சோற்றின் பதம் போதும். சு.ரா. மட்டுமல்ல சிறு பத்திரிக்கை உலகமே பொதுவில் இப்படித்தான்
இருந்தது. இருந்து வருகிறது. இலக்கிய உலகின் ஆதார இயங்கியல் விதி இதுதானென்றால்
சு.ரா.வின் தலைமைச் சீடரான ஜெயமோகனின் கதி என்ன?
டப்பா காலியாகும் ஜெயமோகன் சரக்கு!
இவரும் வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். ஆனால் அதீத மனத்தாவலுடன். ஆகவே சட்டியும் சற்றே
பெரியதுதான். ஜெயமோகனது தத்துவ நோக்கின்படி அவர் எழுத வேண்டியவற்றில் முக்கியமானவற்றை
எழுதி முடித்து விட்டார். இனி புதிதாக ஒன்றுமில்லை என்ற நிலையில் ஏற்கெனவே
எழுதியவற்றை இலக்கிய வகை பேதங்களின் உதவியால் இன்னும் கொஞ்ச காலம் இழுக்கலாம்.
சு.ரா.வைப் போன்று தன்னெழுத்தை வியந்தோதும் திருப்பணியை ஒரு நிறுவனம் போல உயிர்மை
மற்றும் தமிழினி போன்ற காலச்சுவடின் போட்டி பதிப்பகங்களின் உதவியுடன் செய்யலாம்.
பாலகுமாரன், சுஜாதா போல பெரியவர்களின் பெருவெளியில் கரைந்து பெருங்காய டப்பாவாக
மணம் வீசலாம். சு.ரா.விடம் பிரபஞ்ச இரகசியம் அவர் உடலில் இரண்டு இடங்களில் மட்டும்
இருந்தது. அதே இரகசியம் ஜெயமோகனிடம் உடல் முழுவதும் இருக்கிறது. சீடருக்கும்
குருவுக்கும் உள்ள வேறுபாடு அவ்வளவுதான்.
சு.ராவின் ஆனியன் ரவா தோசை அஞ்சலிக் குறிப்புகள்!
ஜீவா
ஜீவா
சு.ரா.வுக்கான அஞ்சலிக் குறிப்பில் அவரைப் பற்றி மற்றவர்கள் என்ன தரத்தில்
எழுதியிருக்கிறார்களோ அதேதரத்தில்தான் அவரும் மற்றவர்களைப் பற்றிப் பேசியும்
எழுதியுமிருக்கிறார். அதில் சு.ரா.வின் அந்த பத்துக் கருத்துக்களை உருவிவிட்டுப்
பார்த்தால்… தீபம் நா. பார்த்தசாரதி தினமும் எட்டு வேளை குளிப்பார், குதிகாலில் என்னன்னமோ
லோஷன் போட்டுப் பளபளப்பாக வைத்திருப்பார், ஈ.எம்.எஸ். வேட்டியை இறுக்கிக் கட்டினால்
அவிழாது, செருப்புக்களை வாழைப்பழத் தோலால் தேய்த்து பளபளப்பாக மாற்றுவார், நாகர்கோவில்
ஆனியன் ரவா தோசை க.நா.சு.வுக்குப் பிடிக்கவில்லை… இப்படித்தான் மிஞ்சுகின்றன.
ஜீவாவின் மறைவையொட்டி சு.ரா. எழுதிய “காற்றில் கலந்த பேரோசை’ என்ற கட்டுரை இதை
எடுப்பாகப் புரிய வைக்கும். நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் சுப்பையா பிள்ளை என்ற
அப்பாவி ஒரு ஓட்டலை நடத்தி வருகிறார். அங்கே ஒரு நொண்டிக்குதிரை நிற்கிறது.
சிறுவனாக இருந்த சு.ரா. “இந்தக் குதிரை ஏன் நொண்டுகிறது’ என்று ஜீவாவிடம் கேட்கிறார்.
உடனே ஜீவா சுப்பையாவை அழைத்து பதில் சொல்லுமாறு கட்டளையிடுகிறார். அந்த அப்பாவியோ
“”போங்க அண்ணாச்சி சும்மா ஆளுகளப் போட்டு பயித்தியக்காரனாக்குதீகளே” என்று மிக்க
பணிவுடன் மறுக்கிறார். உடனே ஜீவா ஆவேசம் வந்தவராய் அந்த அப்பாவியைப் பார்த்து, “”உலக
வரலாறு, அறிவியல் தெரியுமா, சூரியன் கிழக்கே உதிப்பது ஏனென்று தெரியுமா, ஸ்விட்சைப்
போட்டால் லைட் எரிவது ஏன் தெரியுமா, கடைசியில் இப்படி ஒண்ணுமே தெரியாத
மண்ணாந்தைகளாகப் போய்விட்டோமே” என்று சுப்பையாவை உண்டு இல்லையெனப் பிச்சு உதறுகிறார்.
ஒரு அப்பாவியின் மீதான ஜீவாவின் இந்த மேட்டிமைத்தனமான உளறலை ஏதோ மாபெரும் அறிவொளியுக
நடவடிக்கை போலப் பதிவு செய்த சு.ரா. அடுத்த வரியில் “”ஜீவா நீங்கள்தான் எத்தனை
அற்புதமான மனிதர்” என்று உருகுகிறார். நமக்கோ குமட்டுகிறது. இதையே அற்புதமான அஞ்சலி
இலக்கியக் கட்டுரை என்று தாமரை பத்திரிக்கையில் போலி கம்யூனிஸ்டுகள் உருகுகிறார்கள்.
கலையிலும் சரி, கம்யூனிசத்திலும் சரி போலிகளிடையே என்ன ஒரு ஒற்றுமை! உண்மையில்
ஜீவாவின் மறைவையொட்டி அப்போதைய தினத்தந்தியில் இதைவிட மேலான கட்டுரை நிச்சயம்
வெளிவந்திருக்கும். காரணம், தினத்தந்தியின் உதவி ஆசிரியர்கள் சு.ரா.வை விட அறிவும்
அனுபவமும் உள்ளவர்கள்.
சு.ரா.வின் படைப்பில் அவரது மூன்று நாவல்கள் உன்னதமாகக் கருதப்படுகின்றன. அவரது
பிம்பத்திற்கு இந்த மூன்றும் முக்கியமானவை என்பதால் அவை பற்றி இங்கே ஏதோ நம்மால் முடிந்த
மட்டும் பார்க்கலாம்.
“புளியமரத்தின் கதை” வேப்பமர ஜவுளி வியாபாரியின் அரட்டைக் கதை!
ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி
சு.ரா.வின் முதல் நாவலான ‘ஒரு புளிய மரத்தின் கதை‘ வெகு சாதாரண தரத்தில்
அமைந்திருந்தாலும், அவரது பின்னாளைய இமேஜ் காரணமாக மறுவாசிப்பு செய்யப்பட்டு
வியந்தோதப்படுகிறது. சமூக மாற்றத்தைச் சித்தரிக்கும் இலக்கியமாகப் போற்றப்படும் இந்த
நாவலின் நாயகனான அந்த மரமும், கதைக்களமான வேப்பமூடு ஜங்சனும் கூட, சு.ரா.வின்
ஜவுளிக் கடையிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் தான் உள்ளன என்ற உண்மையை மட்டும்
இங்கே பதிவு செய்கிறோம். நாவலின் முதல் பாதியில் கதை குறைவாகவும், சு.ரா. ஏதோ
அபூர்வமாகச் சொல்லப்போவதான பீடிகையும், மற்றும் அவரது நீதி உபதேசங்களும் சலிப்பூட்டும்
விதத்தில் வருகின்றன. நாவலின் மறுபாதியில் இரண்டு வியாபாரிகள் அதில் ஒருவர் இந்து,
மற்றொருவர் முசுலீம் வளர்ந்த கதையும், வளர்ந்த பின் இருவரும் போட்டியிட்டுக் கொண்டு
ஒருவரை ஒருவர் வீழ்த்துவதும், ஒரு மலிவான துப்பறியும் மர்ம நாவல் பாணியில் சொல்லப்படுகிறது.
இந்த நாவலின் விறுவிறுப்பே அடுத்து என்ன நடக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்று
தொடருகின்ற மேலோட்டமான ஆவலில்தான் அடங்கியிருக்கிறது. இங்கும் அந்தப் பத்து புகழ் பெற்ற
கருத்துக்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேடம் போடுகிறார்கள், முனிசுபாலிட்டியில்
ஊழல், பத்திரிக்கையாளர்களிடம் பிழைப்புவாதம், அரசியல்வாதிகள் வெற்று முழக்கத்தின் மூலம்
மக்களை ஏமாற்றுகிறார்கள், வியாபாரிகளிடம் தருமம் இல்லை என்று நாவல் முழுக்க நம்மைத்
துன்புறுத்துகிறார் சு.ரா. இலக்கியவாதிகள் கூறுவது போல இந்தக் கதை ஒரு
சமூகமாற்றத்தின் குறியீடு, அடையாளம், பதிவு என்பதெல்லாம் தாங்க முடியாத கருத்துச்
சித்திரவதைகளே. குமரி மாவட்ட சமூக வாழ்க்கையும் அதன் மாற்றமும், ஒரு காய்ந்த இலைச்
சருகாய் பறப்பது போன்ற பாவனை கூட இந்த நாவலில் இல்லை. குறைந்தபட்சம் நாகர்கோவிலின்
சுக்குக்காபி, மட்டிப்பழம், ரசவடை, தாராமுட்டை ஆம்லெட் கூடப் பதிவாகவில்லை.
இந்தக் கதை எழுதும்போது ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாய் இருந்த சு.ரா.வின் சுதர்சன்
ஜவுளிக்கடை இன்று ஆண்களுக்கான ஆடையகமாய் மாறியிருக்கிறது. சு.ரா.வுக்குத்
தெரிந்திருக்கக்கூடிய குமரி மாவட்டத்தின் ஒரே சமூகமாற்றம் இதுவாகத்தான் இருந்திருக்க
முடியும். அதையும் அவர் ஒரு வியாபாரி என்ற அளவில்தான் புரிந்திருக்கக் கூடுமென்பதால்
அந்த மாற்றம் ஒரு கதையாகக் கருத்தரிக்கவில்லை போலும். சுந்தரவிலாசம் சு.ரா.வின் அக
உலகக் கண்ணோட்டத்தைத் தீர்மானித்தது என்றால் சுதர்சன் ஜவுளிக்கடை அவரது புற உலகப்
பார்வையைப் பொருத்தமான விதத்தில் இணைத்தது.
போத்தீஸ், ஆர்.எம்.கேவி முதலான ஜவுளிக்கடை வியாபாரிகளின் வணிக அனுபவத்தில் தோய்ந்த
உலகக் கண்ணோட்டம்தான் மற்றொரு வணிகரான சு.ரா.விடமும் உருவாயிருந்தது. இத்தகைய பெரிய
வியாபாரிகள் எல்லா வகை அதிகார நிறுவனங்களுடனும் பணிந்து இசைந்து, குழைந்து,
சாமர்த்தியமாக நடந்து கொள்வார்கள். தன் கீழே வேலை செய்பவர்களைக் கசக்கிப் பிழிந்து
இரக்கமின்றி நடத்துவார்கள். ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்ற செலவினங்களில் கஞ்சத்தனமாக
இருக்கும் அதேவேளையில் விளம்பரம் கோவில் கொடை போன்றவற்றுக்கு அள்ளிக் கொடுப்பார்கள்.
நுகர்வோரான மக்களை மந்தைகளைப் போலப் புரிந்து கொள்வார்கள். அவர்களின் பசி, ருசி,
பணப்புழக்கம், சாதிவர்க்கப் பின்னணி, இப்படி அனைத்தையும் வியாபார நிமித்தம் அனுபவத்தில்
அறிந்திருப்பார்கள். கல்லா கட்டக் கட்ட உலகமே தன் கல்லாப் பெட்டிக்குள் அடங்கி விடுவதாகக்
கற்பித்துக் கொள்வார்கள்.
குமரி மாவட்டத்தின் சமூக உக்கிரங்கள் சு.ரா படைப்பில் தேடினாலும் கிடைக்காது!
சுந்தரவிலாசத்திலிருந்து சென்டிமெண்ட் எனப்படும் அகமும், சுதர்சன் கடையிலிருந்து
மேட்டிமைத்தனம் கலந்த சமூகப்பார்வை என்ற புறமும் கைவரப் பெற்று இலக்கியம் படைக்க வந்த
சு.ரா. ஒரு புளியமரத்தின் கதையில் திருவிதாங்கூர் மன்னர் வந்து போகும்
வருணனைகளையெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். எனவே அவர் குமரிமாவட்டத்தின்
உக்கிரமான சமூக நிகழ்வுகளையெல்லாம் நிச்சயம் செவி வழியிலோ பாட்டி வழியிலோ
கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவையும் அவர் காலத்தில் நடந்த முக்கியமான சமூக நிகழ்வுகள்
எவையும் அவர் படைப்பில் இடம் பெற்றதில்லை.
அவரது வீடு இருக்கும் இராமவர்மபுரம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்தான்
கோட்டாறு சவேரியார் சர்ச் உள்ளது. போர்ச்சுக்கீசியப் பாதிரியாரான சவேரியார்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பல லட்சம் மக்களை மதம் மாற்றியவர். இவ்வளவு பெரிய மதமாற்றம்
ஏன் நடந்தது? பார்பனக் கொடுங்கோன்மை கொடிகட்டிப் பறந்த சமஸ்தானம் அது.
பார்ப்பனியத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகவே அய்யா வைகுண்டநாதர் அய்யா வழி என்ற தனி
வழிபாட்டுப் பிரிவையே உருவாக்கினார். அவரும் குமரிமாவட்டம்தான். திருவிதாங்கூர்
சமஸ்தானத்திற்கெதிராக நாடார் இனப் பெண்கள் நடத்திய வீரஞ்செறிந்த தோள்சீலைப் போராட்டமும்
அப்பகுதியில்தான் நடந்தது.
1981-82இல் சு.ரா. தனது இரண்டாவது நாவலை வெளியிட்ட போதுதான் மண்டைக்காடு கலவரம்
மூலம் இந்துமதவெறியர்கள் குமரிமாவட்டத்தில் வேர்விட ஆரம்பித்தார்கள். அதன்மூலம்
தமிழகத்திற்கு இந்துமதவெறியை அறிமுகப்படுத்தினார்கள். சாதியால் ஒன்றுபட்டிருந்த
நாடார்கள்கூட மதத்தால் பிரிக்கப்பட்டார்கள். வணிகவர்க்கமாக மாறியிருந்த நாடார்களில் சிலர்
சங்கபரிவாரங்களின் தளபதிகளாகத் தலையெடுத்தனர். அப்புறம் தாராளமயத்தால் நலிவடைந்த
வடசேரி, கிருஷ்ணன் கோவிலின் கைத்தறி, பாமாயில் இறக்குமதியால் பாதிப்படைந்த
குமரிமாவட்ட தென்னை விவசாயிகள், ரப்பர் இறக்குமதியால் வாழ்விழந்த பால் வெட்டும்
தொழிலாளிகள், கடைசியாக சுனாமி… இவ்வளவு உக்கிரமான சமூக இயக்கங்கள் எவையுமே
சு.ரா.வின் படைப்பிலோ, கட்டுரையிலோ இலை மறைவு காய் மறைவாகக் கூட இறங்கவில்லையே,
ஏன்? இந்தப் பிரச்சினைகள் சு.ரா. என்ற இலக்கிய பீடத்தின் முன் மண்டியிட்டுத் தங்களைத்
தாங்களே போதுமான அளவு விளக்கிக் கொள்ளவில்லை என்பதாலா?
கேட்டால் “படைப்புச் சுதந்திரம், எந்த ஒரு படைப்பாளியையும் இன்னதுதான் எழுத வேண்டும்
என்று கட்டளையிட முடியாது’ என்பார்கள். அப்படியே இருக்கட்டும். ஆனால் சமூகத்தின் சாரத்தை
உறிஞ்சி வாழ்ந்து கொண்டே, வாழ்வை ரசனையுடன் அனுபவித்துக் கொண்டே, தன்னைச் சுற்றிய
வாழ்வின் இயக்கத்தையும், வலியையும், போராட்டத்தையும், கண் கொண்டு பார்க்காமல், வேதனையுடன்
உணராமல், இதயத்தைத் தடிப்பாக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை என்னவென்று அழைப்பது? இதை
உணராத ஒரு படைப்பு மனம் எப்படித் தன்னைப் புடம் போட்டுக் கொண்டு உக்கிரமாக வெளிவர முடியும்?
இதே சு.ரா. அமெரிக்காவிலிருந்து கவிஞர் பௌத்த அய்யனாருக்கு எழுதிய கடிதமொன்றில்,
“ஹிந்து சர்வதேசப் பதிப்பு இங்கே வருகிறது. அதன் மூலம் இந்தியச் செய்திகளின் சாராம்சம்
கிடைக்கிறது. சிலுக்கு காலமான செய்தி மனதைப் பாதித்தது. 15 வருடங்களில் 600 படங்கள்.
எவ்வளவு கடுமையான உழைப்பு” என்று துக்கம் விசாரித்துக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்தியச் செய்திகளின் சாராம்சம் சு.ரா.வினுள் இந்த அளவுதான் இறங்கியிருந்தது.
திருவிதாங்கோடு முசுலீம் மக்கள், பழமைவாதத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக
அனுபவித்த வலி நிறைந்த வாழ்வை உணர்த்தும் தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோரக்
கிராமத்தின் கதையை வேண்டுமானால், ஒரு சமூக மாற்றத்தைப் புரியவைத்த நாவல் என்று
சொல்லலாம். ஆனால், ஒரு புளிய மரத்தின் கதையை அப்படி எவரும் கூற முடியாது.
ஜே.ஜே. சில குறிப்புகள்: போலி கம்யூனிசத்தின் போலி அவஸ்தைகளைப் பேசும் போலியான நாவல்!
சுந்தர ராமசாமி ஜே.ஜே. சில குறிப்புகள்
‘ஜே.ஜே. சில குறிப்புகள்‘ எனும் சு.ரா.வின் இரண்டாவது நாவல் அவரது எழுத்து வாழ்வில்
மிகவும் ஹிட்டான ஒரு படைப்பு. சு.ரா. எனும் இலக்கிய விக்கிரகத்தை சிற்றிலக்கியக்
கோவிலில் பிரதிஷ்டை செய்து ஆண்டுதோறும் குடமுழுக்கு நடத்துமளவுக்கு மிகவும் பேசப்பட்ட
படைப்பு இந்த நாவல். கம்யூனிசத்தைக் கட்டோடு வெறுப்பதே ஒரு இலக்கியவாதியின் முதலும்
முக்கியமுமான தகுதி என்பதைச் சிறுபத்திரிக்கையுலகில் அழுத்தமாக நிலைநாட்டிய நாவலும்
கூட. தான் ஒரு மாபெரும் உலக எழுத்தாளர் என்பதையும், மானுடப் பிரச்சினைகளுக்கு விடை
தேடும் பொறுப்பினை காலம் தன்மீதுதான் சுமத்தியிருக்கிறது என்ற மாயையும் சு.ரா.வுக்கே
கூட இந்த நாவல் கற்பித்திருக்கக்கூடும். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் ஏகாதிபத்திய
ஆக்கிரமிப்புக்கெதிரான உலக மக்கள் மனநிலையில் இந்த நாவலை வாசிக்கும் போது மிகச்
சாதாரணத் தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றாலும், இந்த நாவல் வெளிவந்த நேரத்தில்
சிற்றிலக்கியவாதிகளின் இதயத்தைக் கவ்விக் கவர்ந்திழுத்தது என்கிறார்கள்.
இந்த நாவலை ஒரு வாக்கியத்தில் சுருக்குவதென்றால் — போலி கம்யூனிஸ்டுகளை, அதிலும்
குறிப்பாக போலி கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியவாதிகளை வெறுக்கும் ஒரு போலியான
இலக்கியவாதியின் போலியான ஆன்மீகப் பிரச்சினைகளை, நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட
வார்த்தைகளின் உதவி கொண்டு பேசக்கூடிய ஒரு போலியான நாவல் என்று சொல்லலாம். ஒரு
நாவலுக்குள் இத்தனைப் போலிகள் இருப்பதால் அதை இலேசாக எடுத்துக் கொண்டுவிடலாம் என்பதல்ல.
எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்போது போலிகள் அசலைப் போலத் தோற்றம் கொண்டு விடுகின்றன.
உண்மைகள் சமாதியாக்கப்பட்ட மயானத்தில் பொய்கள் மட்டும் ஆனந்தக்கூத்தாடுவதால், நிழல்
நிஜமாகிவிடுகிறது.
நாவலின் நாயகன் ஜே.ஜே., சு.ரா.வின் இலட்சிய நாயகன். சு.ரா. என்ற உன்னதத்தை மற்றவர்கள்
புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காவே சலித்துப் புடைத்துப் பிழிந்து உருவாக்கப்பட்ட
கதாநாயகன். அவன், உலகின் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தன் மூலமே அறியப்படவேண்டும்
என்பதால், தன்னைத்தானே அறிவாளியாகவும், உலகின் அசிங்கங்கள் அருவெறுப்புக்கள் தன் கண்ணில்
தென்படக்கூடாது என்பதால், தன்னை ஒரு தூய்மையான அழகியல்வாதியாகவும், சிறுநீர் கழிக்கும்
நேரத்தில்கூட அவன் வாய் இலக்கியத்தின் உன்னதத்தைப் பேசும் என்பதால் தன்னை ஒரு
இலக்கியவாதியாகவும், அச்சிலேற்றப்படும் தாள்கள் அவனது எழுத்தைத் தரிசனம் செய்வதற்காகவே
காலந்தோறும் காத்திருந்து ஏங்கித் தவித்துத் தவம் செய்து வருகின்றன என்பதால், தன்னை ஒரு
எழுத்தாளனாகவும், எழுதவரும் இளைஞர்கள் அவனது உரையாடலை மட்டும் எப்போதும் கேட்டுக்
கொண்டிருக்க வேண்டும் என்பதால், தான்மட்டுமே ஒரு ஆசிரியனாகவும் மனிதவாழ்வு குறித்த
பெரும் புதிரை அவன் மட்டுமே தீர்க்கவேண்டும் என்று தத்துவ உலகம் சாஷ்டாங்க நமஸ்காரம்
செய்திருப்பதால், தன்னை ஒரு தத்துவவாதியாகவும், பன்றிகளின் மந்தைகளாய் வாழும் மக்கள்
மத்தியில் அவன் உடல் மட்டும் எப்போதும் அணையாத விளக்காய் ஒளி வீசிக் கொண்டிருப்பதால் தன்னை
ஒரு மாமனிதனாகவும் கருதிக் கொள்கிறான், வெளிப்படுத்துகிறான், அறைகூவுகிறான். இதை
சு.ரா.வின் உதவியுடன் நவரசங்களிலும் பதிவு செய்கிறான்.
இதுவரை யாரும் கண்டு கேட்டிராத ஒரு மகத்தான மனிதனைப் படைத்ததாக சு.ரா.வும் அவரது
அபிமானிகளும் புல்லரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய வரலாறு அவர்களைப் பார்த்துச்
சிரித்தவாறு, “”இவன்தானா இவனை நான் நீண்டகாலமாக பார்த்து வருகிறேனே” என்று ஒரு
வரியில் முடித்துக் கொள்கிறது. ஆம். இந்தப் பண்புகளைக் கொண்டவர்கள் கேரள வரலாற்றில்
நம்பூதிரிகள் என்றும் இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தின் தலைமைச் சித்தாந்தவாதிகள் என்றும்
அழைக்கப்படுகிறார்கள். எனவே ஜே.ஜே. சில குறிப்புகளை கம்யூனிச வெறுப்பு நாவல்
என்பதைவிட காலந்தோறும் அவதரிக்கும் பார்ப்பனியத்தின் மேட்டிமைத்தனம் கொண்ட நாவல் என்று
சொல்லலாம்.
சு.ரா.வின் மொழியில் சொன்னால், ஜே.ஜே என்பவன் யார்? அவன், “உலகமே குரங்குகளின் வாத்திய
இசை போல் இருக்கிறது. அவை எழுப்பும் கர்ண கடூரமான அபசுரங்களைத் தாங்கிக் கொள்ள
முடியாமல் கத்திக் கொண்டிருந்தான்.” பார்ப்பனியத்தின் மேலாண்மையை நெஞ்சிலேந்தி முனகிக்
கொண்டிருந்தவர்கள், உபநிடதக் காலம் தொட்டு “உன்னால் முடியும் தம்பி’ ஜெமினி கணேசன்
வரையிலும் இப்படித்தான் கத்திக் கொண்டிருந்தார்கள். குரங்குகளின் கர்ண கடூர அபஸ்வரத்தில்
உழைக்கும் மக்கள் வாழ்வின் அவலக்குரலும், அந்த அவலத்தைத் தாங்கிக் கொள்ள மறுக்கும்போது
போராட்டத்திற்கான உயிர்ப்புக் குரலும், பல சமயங்களில் அந்த உயிர்ப்பு நசுக்கப்படும் போது
கேட்கக் கிடைக்கும் மயானக்குரலும், இத்தகைய குரல்கள் கேட்காத தூரத்தில் அரியாசனங்களில்
வசதியாக அமர்ந்து கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்பவர்களின் அதிகாரக்குரலும், அதிகார
நேரம் போக அவர்கள் சுருதி சுத்தமாகப் பாடும் கேளிக்கைக் குரலும் கலந்துதான் வந்து
கொண்டிருக்கின்றன. எனவே இவை குரல்களின் பிரச்சினையல்ல, வாழ்வை உள்ளது உள்ளபடி
உணரமறுத்து, கீழே வாழ்ந்து கொண்டு மேலே பளிச்சிடும் வாழ்வை இதயத்தில் பொதிந்து கனவு
காணும் நடுத்தர வர்க்கக் காதுகளின் பிரச்சினை.
ஜோசப் ஜேம்ஸ் எனப்படும் ஜே.ஜே. தனது நாவலில் வெற்று இலக்கிய நயத்துடன் கூறும் இந்தப்
படிமத்தின் அன்றாட மொழிபெயர்ப்பினை ஹிந்து பேப்பரில் வரும் வாசகர் கடிதங்களில் —
தொழிலாளர்களின் ஊர்வலம் போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறது, கூவம் குடிசைகளால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, மக்கள் மழை நிவாரணத்திற்காக அடித்துக் கொண்டு சாகிறார்கள் என்று
— விதவிதமாகப் பார்க்கலாம். அவ்வகையில் இந்த நாவல் ஹிந்து பேப்பருக்கு வாசகர் கடிதம்
எழுதும் இதயங்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறலாம்.
நாவலின் கதைதான் என்ன? சு.ரா. தன்னை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். தமிழ் இலக்கியச்
சூழலை வெறுக்கும் பாலு என்ற தமிழ் எழுத்தாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது
மற்றொரு பாதியான ஜே.ஜே. எனும் இலட்சிய கேரள எழுத்தாளரை தமிழுக்கு அறிமுகப்படுத்த
வேண்டும் என்பதற்காக கேரளாவிற்குப் பயணம் செய்து அவனுடன் பழகியவர்களைச் சந்தித்து
ஜே.ஜே.வைப் பற்றிய குறிப்புக்களைச் சேகரிக்கிறார். பாலு சந்தித்தவர்களில் சூப்பர்மென்
குவாலிட்டி கொண்டவர்களும் சு.ரா.வின் மறு பிறவிகள்தான். அவ்வகையில் சிவாஜி கணேசனின்
நவராத்திரியைப் போன்று சு.ரா. பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்த நாவலென்றும் சொல்லலாம்.
நாவலில் சு.ரா.வின் புகழ் பெற்ற கருத்துக்கள் சுற்றிச் சுற்றி வரும் சொற்றொடர்களின்
மூலமும், உப்ப வைக்கப்பட்ட படிமங்களின் வழியாகவும் முன் அட்டை முதல் பின் அட்டை வரை
வழக்கம் போல வருகின்றன. தனது உலகை வடிவாக உருவாக்க விரும்பும் ஜே.ஜே.வின்
அழகுணர்ச்சிக்கு அளவே இல்லை. அவன்வசிக்கும் நகரில் இருக்கும் மைதானம் ஒன்றை தான்
அரசனானால் எப்படி மாபெரும் பூங்காவாக, வெட்டுவதற்கு மனம் வராத மரங்களையும், குழந்தைகள்
சுற்றுச்சூழலை அறியும் வண்ணமும் அமைக்கப் போவதாக வரைபட விளக்கத்துடன் தன் டயரியில்
குறித்து வைத்திருக்கிறான். (இந்த வேலைகளைச் செய்ய கவுன்சிலர் ஆனால் போதும் என்ற விசயம்
அந்த மாபெரும் அறிவாளிக்குத் தெரியவில்லை.) அவன் நகரில் ஏழைகளும், குடிசைகளும்
நிச்சயம் இருந்திருக்கக் கூடும். அவர்களுக்கு ஏதோ மழை ஒழுகாத கூரையாவது மாற்றித்
தரலாம் என்பதற்கெல்லாம் அவன் அழகுணர்ச்சியில் இடம் இல்லை போலும். ஒருவேளை இவன் இந்தியாவின்
அரசனாகியிருந்தால் நகர்ப்புறச்சேரிகள் அனைத்தும் அழகின்மை காரணமாக ஒரே நாளில்
துடைத்தெறியப்பட்டிருக்கக் கூடும்.
அவன் காதலி ஓமனக்குட்டி எழுதிய வாரமலர் தரத்திலான கவிதைகளை அவனால் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை. இலக்கியத்தில் அவனால் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதால் அந்தக் கவிதை
நோட்டுக்களை அவள் கையிலிருந்து பிடுங்கி வீசி எறிகிறான். அத்துடன் காதலியை விட்டுப்
பிரியவும் செய்கிறான். இது ஜே.ஜேயின் திமிரான இலக்கிய மேட்டிமைத்தனம்.
கதையும், கவிதையும் எழுதத் தொடங்குபவர்கள் முதலில் சாதாரணமாகத்தான் எழுத முடியும். ஏன்
சு.ரா.வும், ஜே.ஜேயும் அப்படித்தானே ஆரம்பித்திருக்க முடியும். ஒருவேளை அவன்
ஆசிரியராகியிருந்தால் தப்பும் தவறுமாக எழுதும் முதல் தலைமுறை ஏழைக் குழந்தைகளின்
கைகளை ஒடித்திருப்பானோ? சிற்றிலக்கியவாதிகள் பொழுதுபோக்காய் இலக்கியம் பக்கம்
திரும்பியது ஒருவகையில் நல்லதுதான். இவர்கள் சற்றே அரசியல் பக்கம் வந்திருந்தால் மக்களின்
கதி என்ன? நம்மைப் பொறுத்தவரை ஓமனக்குட்டியின் கவிதைகள் சு.ரா.வின் கவிதைகளை விடப்
பரவாயில்லை என்றே கருதுகிறோம். அவரது நினைவுச்சின்ன கவிதையின் சின்னத்தனத்தை இங்கே
நினைவுபடுத்திக் கொள்வோம். அவரது மற்ற கவிதைகள் என்ன சொல்கின்றன?
சு.ரா. தனது அசட்டுத்தனத்தையே ஆழமான சமாதிநிலையாக உணர்வது, அவர் சிந்திக்கும் போது
லாரியின் இரைச்சல் வந்து கெடுத்த பிரச்சினைகள், அப்புறம் ஜன்னல் எப்போதும் வானத்தைப்
பார்க்கும் பாக்கியம் பெற்றதாகவும், மின் விசிறிக்கு அந்தப் பேறு இல்லை என்பதான துயரமான
தருணங்கள்… இந்த பினாத்தல்களை செம்பதிப்பாக வெளியிட்டதற்காக காலச்சுவடு ஆபீசை குண்டு
வைத்தா தகர்க்க முடியும்? இதுதான் அவருடைய கவிதை உலகம். இது அவருடைய உலகம்
மட்டுமல்ல, இன்றைய சிறு பத்திரிக்கைகளின் அனைத்துக் கவிஞர்களின் உலகமும் கூட.
நீர்த்துப்போன தங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கி நோக்கி புதிதாக எதையும் காண இயலாத
நிலையில், “வாட் இஸ் நியூ?’ (புதிதாய் என்ன) என்ற கேள்விக்கு விடையாக சொற்களிலும்,
மோஸ்தர்களிலும் சரணடைபவைதான் அவர்களது கவிதைகள்.
நாவலின் ஓர் இடத்தில் மாட்டின் முதுகில் ஒருவன் வெற்றிலை எச்சிலைக் குறி பார்த்துத்
துப்புவதை ஜே.ஜே. பார்ப்பதாக ஒரு காட்சி வருகிறது. இதை ஸ்கேன் செய்த ஜே.ஜேயின்
அழகுணர்ச்சி உடனே மனிதனின் கீழ்மை அல்லது விலங்குணர்ச்சி குறித்து ஆய்வு செய்ய
ஆரம்பிக்கிறது. அவன் காலத்தில் பெண் குழந்தைகள் கற்பழிக்கப்படுவது குறித்தோ, தலித்துக்கள்
எரிக்கப்படுவது குறித்தோ, வரதட்சணைக்காகப் பெண்கள் எரிக்கப்படுவது குறித்தோ அவன்
கேள்விப்பட்டதே இல்லை போலும்! அவனுடைய அழகுணர்ச்சிதான் கொடூரமான எதையும் பார்க்காதே.
மனிதனின் விலங்குணர்ச்சியை ஆய்வு செய்யுமாறு அவனை எது தூண்டுகிறது பாருங்கள்!
இந்த எச்சில் பிரச்சினையை வைத்து மனிதன் விலங்காக வாழ்வதற்கே பணிக்கப்பட்டவன், மரபும்
பண்பாடும் அவனைத் தடை செய்கின்றன என்று அவன் ஆய்வு பயங்கரமாக எங்கோ போகிறது. இறுதியில்
மனிதன் விலங்குணர்ச்சிக்கும், மனித உணர்ச்சிக்கும் இடையில் தத்தளிப்பதாக ஒரு புதிய
விசயத்தை ஜே.ஜே. கண்டுபிக்கிறானாம். உண்மையில் இந்த எச்சில் பிரச்சினையில் தத்துவ
ஆராய்ச்சிக்கு ஒரு வெங்காயமும் இல்லை. மனிதனின் விலங்குணர்ச்சி எனப்படுவது,
ஏற்றத்தாழ்வாய்ப் பிரிந்திருக்கும் இந்தச் சமூகத்தின் வர்க்க முரண்பாட்டின் வழியாக
வெளிப்படுகிறதேயன்றி மாட்டின் முதுகில் எச்சில் துப்பும் அற்ப விசயத்தில் அல்ல. இதே
எச்சிலை பன்றியின் மீது துப்புவதாக சு.ரா. எழுதவில்லை. எச்சில் துப்பும்
எல்லாவகைகளையும் அவர் பார்த்திருந்தாலும், மாடு புனிதம் என்ற கருத்து, மரபில் இருப்பதால்
வாசகருக்குக் கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்து தன் தத்துவப் பாடத்தை விளக்க அவர்
நினைத்திருக்கலாம். இந்த நாவலின் போலியான ஆன்மீக அவஸ்தைக்கு வேறு சான்று தேவையில்லை.
மற்றொரு இடத்தில் ஒரு தொழுநோயாளியைப் பார்த்த ஜே.ஜே., அவனுக்கு காசு போடலாமா
வேண்டாமா என்று ஒரு ஓட்டலில் உட்கார்ந்து மூன்று மணி நேரம் யோசிக்கிறான். இதுவரையிலான
மனிதகுல வரலாற்றின் வள்ளல் குணம், தானம், அறம், மனிதாபிமானம் மற்றும் இன்னபிற “ம்…’களைக்
குறித்து ஆய்வு செய்கிறான். இறுதியில் ஒரு ஐம்பது காசைப் போடலாம் என்று முடிவெடுத்து
வெளியே வருகிறான். தொழுநோயாளியைக் காணவில்லை. சில மணிநேரம் அலைந்து திரிந்து
அவனைக் கண்டுபிடித்துக் காசைக் கீழே வீசுகிறான். காசைப் போடும் போதுதான் கை மழுங்கிய
தொழுநோயாளி அதை எப்படி எடுக்க முடியும் என்பது அவனுக்கு உறைக்கிறது. உடனே அவனது
மனிதாபிமான அழகுணர்ச்சி ஒரு புதிய விசயத்தைக் கண்டுபிடிக்கிறது. அதன்படி மனிதன்
இதுவரை உருவாக்கிய தானம் தர்மம் தத்துவம் அனைத்தும் தன்னை மட்டும் மையமாக வைத்துக்
கண்டுபிடிக்கப்பட்டதே ஒழிய, எதிரிலிருக்கும் மனிதனது பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு
அறியப்பட்டவையல்லவாம். அப்படிக் கணக்கில் கொண்டிருந்தால் ஜே.ஜே. அந்தக் காசை
தொழுநோயாளியின் கையில் கொடுத்திருப்பானாம்.
இப்படி தன் மனிதாபிமானத்தைத் தள்ளாட வைத்த மனித குலத்தின் மீது கோபம் கொண்டு ஜே,ஜே.
தனக்குள்ளேயே துன்புறுகிறான். வரலாற்றையும், தத்துவத்தையும் அடிமுதல் நுனி வரை எவ்வளவு
கேவலப்படுத்தமுடியுமோ அவ்வளவு படுத்தி எடுத்து விட்டு நம்மையும் அதற்கு விளக்கம்
எழுதுமாறு துன்புறுத்துகிறார் சு.ரா. விசயம் மிகவும் எளிமையானது. சு.ரா. எங்கேயோ
ஒரு தொழுநோயாளிக்கு காசை விட்டெறிந்திருக்கிறார். காசைக் கையில் கொடுக்காமல்
இருந்ததற்குக் காரணம் மழுங்கிய கைகளைத் தொட்டால் வரும் அருவெறுப்புதான். அதற்கு ஏதோ
கொஞ்சம் குற்ற உணர்வு அடைந்திருப்பார் போலும். அதனால் தான் பெற்ற குற்றவுணர்வைப் பெறுக
இவ்வயைகம் என்று முழு உலகத்தையும் தன் நாவலில் தண்டித்துவிட்டார். எழுதுவதற்கு எவ்வளவோ
இருக்கும் போது இவற்றையெல்லாம் எழுத வேண்டியிருப்பது சு.ரா. நமக்கு அளித்திருக்கும்
தண்டனை போலும்!
நாவலில் ஜே.ஜேவை சினிமாக் கதாநாயகன் போலச் சித்தரிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட நம்பியார்
போன்ற வில்லன் பாத்திரம் முல்லைக்கல் மாதவன் நாயர். இந்த முல்லைக்கல்லை ஜெயகாந்தன் என்றும்
சொல்லுகிறார்கள். இருக்கலாம். நாவலில் சித்தரிப்பு அப்படித்தான் வருகிறது. முல்லைக்கல்
நம்மூர் த.மு.எ.ச. போன்ற கேரளத்தில் இருக்கும் போலி கம்யூனிச கலை இலக்கிய அமைப்பில்
இருப்பவன். இந்த வில்லன் பசி, பட்டினி, வேலையின்மை, வறுமை இன்னபிற சமூகப்
பிரச்சினைகளை அந்த மக்கள் வாழ்க்கை மற்றும் மொழியில் எழுதிப் பெயரெடுத்து, புகழ், பணம்
சம்பாதித்து செட்டிலாகிறான். இதற்குத் தோதாக கம்யூனிசக் கட்சியும் முதலாளிகளைப் போல
வாழ்ந்து கொண்டே தொழிலாளி வர்க்கத்திற்காகப் போராடுவதாக நடிக்கும் தலைவர்களைக் கொண்டதாக
மாறிவிடுகிறது.
ஆனால் ஜே.ஜே.யின் விமர்சனம் கட்சியின் அரசியல், திட்டம், நடைமுறையின் மீதெல்லாம் இல்லை.
கட்சியின் கலைஞர்கள் மீதுதான் அவனுக்குக் கோபம். அந்தக் கோபமும் உலகில் சோசலிசமும்,
சமதர்மமும் வரவேண்டும் என்ற குறைந்தபட்ச அற உணர்விலிருந்து வரவில்லை. “தன்னைப்போன்ற
அறிவாளிகளுக்கு இந்த உலகில் மதிப்பு இல்லையே’ என்ற பச்சையான சுயநலத்திலிருந்தே
ஆவேசமாக வருகிறது.
போலிகளின் சாயம் வெளுத்துவிட்ட சாதகமான நிலையில் “”நான்தான் உன்னதமானவன்” என்று
காட்டிக் கொள்ளும் நோக்கத்திற்காகவே அவனுக்கு கம்யூனிசத்தின் மீதான விமரிசனம்
தேவைப்படுகிறது. அந்த உன்னதமும் பொதுவில் சமூகத்தையும் மனிதகுலத்தின் முன்னேற்றத்தையும்
கேலி செய்யும் திண்ணைப்பேச்சு வேதாந்திகளின் தனிமனித அரட்டைதான். நாவலில் நோயால் இளம்
வயதில் இறந்து போன ஜே.ஜேவின் நினைவுகளைத் தேடித்தான் எழுத்தாளர் பாலு கேரளம்
செல்கிறான். நாயகன் ஜே.ஜே., எம்.ஜி.ஆரைப் போன்று சித்தரிக்கப்பட்டாலும் முடிவில் சிவாஜி
படங்களைப் போல செத்துப்போவதற்கு வாசகர்களின் சென்டிமெண்டைப் போட்டுத்தாக்கும் நோக்கம்தான்
காரணம். மற்றபடி நாவலை வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி விளக்குவதற்கு அல்வா போல
ஏகப்பட்ட ஐயிட்டங்கள் இருந்தாலும் இத்துடன் முடித்துக் கொள்வோம். சு.ரா.விற்கும்
கம்யூனிசத்திற்கும் பொதுவில் உள்ள உறவு என்ன? இதனைப் புரிந்து கொள்ள ஜெயமோகனது
ஆவணத்தில் உள்ள தகவல்கள் உதவுகின்றன.
சு.ரா எனும் போலி கம்யூனிச இலக்கியவாதியின் உண்மையான கம்யூனிச வெறுப்பின் பின்னணி!
ஜெயகாந்தன் 60,70களின் ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி மூலமும் பின்னர் தனது சொந்தத்
திறமை மூலமும் எழுதிப் பிரபலமாகியது சு.ரா.வுக்குப் பெரிய மனக்குறையைத்
தந்திருக்கலாம். தன்னைத் தவிர எந்த எழுத்தாளரையும் ஏற்காத அவரது சொந்த மனநிலையை இது
சீண்டி விட்டிருக்கலாம். சு.ரா.வுக்கு ஜெயகாந்தன் அளவுக்கு நேரடி வாழ்க்கை அனுபவம் இல்லை
என்பதால் போட்டி போட முடியவில்லை. ஒருவேளை ஜெயகாந்தனைப் போன்ற பின்னணி சு.ரா.வுக்கு
இருந்திருந்தால் அவரும் கட்சிக்கு ஜே போட்டுவிட்டு அப்போதே பிரபலமான எழுத்தாளராக
செட்டிலாகியிருப்பார். அது முடியவில்லை என்பதால்தான் 80களில் ஜெயகாந்தன் வீழ்ந்த நேரத்தில்
அவரை முல்லைக் கல்லாக்கி பழிதீர்த்துக் கொண்டார். சு.ரா.வின் கம்யூனிச எதிர்ப்பைத்
தீவிரப்படுத்தியதில் இந்தப் பார்வைக்கு முக்கியப் பங்குண்டு.
ரஸ்ஸல்
இங்கிலாந்து உளவுத்துறையிடம் சன்மானம் பெற்ற ‘அறிஞர்’ ரஸ்ஸல்
ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த குருசேவ் முதன்முதலாக ஸ்டாலின் கால மனிதப்
படுகொலைகளை வெளிப்படையாக அறிவித்ததும் உலகமே அதிர்ச்சியடைந்தது போல சு.ரா.வும்
பேரதிர்ச்சியடைந்தாராம். அப்புறம் ஆர்தர் கீஸ்லர் என்ற எழுத்தாளர் எழுதிய தோல்வியுற்ற
கடவுள், நடுப்பகலில் இருள் எனும் நூல்களைப் படித்ததும் சோவியத் கால பயங்கரங்களை மேலும்
தெரிந்து கொண்டு மேலும் அதிர்ச்சியடைந்து கம்யூனிஸ்டு கட்சியிடமிருந்து முற்றிலும்
விலகிக் கொண்டாராம். அக்கால இரவுத்தூக்கங்களில் ஸ்டாலின் கனவில் வந்து பூட்சுக்காலால்
சு.ரா.வைக் குத்துவாராம். ஏற்கெனவே சுந்தர விலாசத்தில் தந்தையின் கோணல் பார்வையின் மூலம்
சர்வாதிகாரத்தின் இலக்கணத்தைத் தெரிந்தும் அனுபவித்தும் வந்த சு.ரா.வுக்கு ஸ்டாலினது
சர்வாதிகாரம் அதிகம் விளக்கமின்றியே சட்டென்று புரிந்து விட்டதாம். இதிலிருந்து சு.ரா.
கம்யூனிசத்தைக் கட்டோடு வெறுத்தார் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் புரியாத
உண்மை ஒன்று உள்ளது. அது சு.ரா. போலி கம்யூனிசத்தை ஆதரித்தார் என்பதே. இதையே
ஜெயமோகன் “”சு.ரா. தனது கட்சித் தோழர்களிடமிருந்து ஆழமான மார்க்சிய மன அமைப்பைப்
பெற்றார்” என்று கூறுகிறார். இதை ஒரு சின்னத்திருத்தத்துடன் ஏற்றுக் கொள்வோம். அதாவது
சு.ரா. தனதுக் கட்சித் தோழர்களிடமிருந்து போலி மார்க்சிய மனஅமைப்பைப் பெற்றார். அது
எவ்வாறு என்று பார்க்கலாம்.
முதல்விசயம் குருசேவுக்கு முன்பேயே, ஸ்டாலின் காலத்திலேயே அவரைப் பற்றிய அவதூறுகள்
ஏகாதிபத்திய அறிவாளிகளால் திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டன. இயற்கைச் சீற்றம், தொற்று
நோய் மற்றும் சோவியத் யூனியனின் சராசரி இறப்பு விகிதத்தையே பல ஆண்டுகளில் கூட்டி
மாபெரும் படுகொலை போன்று புள்ளிவிவர மோசடி செய்தார்கள். இதை அமெரிக்காவின் அப்போதைய
ஏகபோக பேப்பர் முதலாளி ஹெர்ஸ்ட் என்பவன் பெரும் முதலீட்டுடன் உற்பத்தி செய்து விநியோகம்
செய்தான். இதையே இலக்கியமாக மாற்றி எழுத்தாளர்கள் வெளியிட்டனர். இத்தகைய நாவல்களுக்கு
பெரும் பணமும், நோபல் பரிசு முதலான விருதுகளும் கிடைத்து வந்த படியால் கம்யூனிச
எதிர்ப்பு இலக்கியம் எழுதுவது அப்போது இலாபம் தரும் தொழிலாக நடைமுறையில் இருந்து வந்தது.
ஜெயமோகனும், சு.ரா.வும் வியந்தோதும் ஆர்தர் கீஸ்லர் என்ற எழுத்தாளர் மட்டுமல்ல, அறிஞர்
ரஸ்ஸல் போன்றவர்களும் தமது கம்யூனிச எதிர்ப்பு எழுத்துக்காக பிரிட்டிஷ் உளவுத்துறையான
எம்.15இலிருந்து பெருந்தொகையை ஊதியமாக அல்லது கைக்கூலியாகப் பெற்று வந்தனர்.
இவையெல்லாம் 90களில் இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வமாகவே வெளிவந்து நாறிய செய்திகள்.
அடுத்து, சோவியத் யூனியனிலேயே இத்தகைய கைக்கூலிகள் உருவாகிச் செயல்பட்டு வந்தனர்.
புகாரின் போன்றவர்கள் கட்சித் தலைமையிலேயே அந்தச் சதியை செய்து வந்தனர் என்பதை நிரூபித்த
மாஸ்கோ சதி வழக்கு உலகப் பத்திரிக்கையாளர்கள் முன்பு பகிரங்கமாகத்தான் நடந்தது.
இறுதியில் போலி கம்யூனிசத்தின் முகமூடியை முழுவதும் கலைத்துப் போடவந்த கோர்பச்சேவின்
காலத்தில் சோவியத் யூனியனின் ஆவணக்கருவூலம் திறக்கப்பட்டபோது, “ஸ்டாலின் காலப்
படுகொலைகளுக்கான இறுதி ஆதாரம் அதில் கிடைக்கும்’ என்று ஏகாதிபத்தியவாதிகள் ஆரூடம்
கூறினர். ஆனால் அத்தகைய சான்று ஒன்று கூட அதில் இல்லை. இதனால் ஸ்டாலின் மீதான
அவதூறுகளுக்கு ஆதாரம் ஏதும் கிடைக்காத நிலையில் ஏகாதிபத்தியவாதிகள் வேறுவழியின்றி
இலக்கியவாதிகளின் புனைகதைகளை மட்டும் வைத்து அந்தப் பிரச்சாரத்தைத் தொடருகின்றனர்.
‘பனித்துளியில் இருக்குதடா உலகம்’ என்ற வரிக்குள் முடங்கிக் கொண்டு உண்மையான உலகைப்
புரிந்து கொள்ள மறுக்கும் மூடுண்ட அகத்தை வரித்திருக்கும் ஜெயமோகன் போன்றோர் மேற்கண்ட
கைக்கூலிகளின் கம்யூனிச எதிர்ப்புக் கருத்தைத்தான் தமது உடலில் ஓடும் ரத்தமாகக்
கொண்டிருக்கின்றனர். இவை குறித்த விரிவான கட்டுரைகளை ஆதாரத்துடன் புதிய கலாச்சாரத்தில்
பலமுறை வெளியிட்டிருக்கிறோம். இந்நூலில் உள்ள அந்தக் கட்டுரைகள் ஜெயமோகன், சு.ரா.
போன்றோரின் கம்யூனிச எதிர்ப்புத் தத்துவத்தின் ஊற்று மூலத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவும்.
இப்படி ஸ்டாலின் மீதான அவதூறுப் பிரச்சாரங்கள் ஏற்கெனவே கட்டவிழ்த்து விடப்பட்ட
நிலையில்தான் குருசேவ் என்ற மார்க்சியத் திரிபுவாதிகளின் தலைவர் தலைமைக்கு வந்து அவற்றை
வழிமொழிந்தார். வெறுமனே ஸ்டாலினைச் சிறுமைப்படுத்தி தன்னை உயர்த்திக் கொள்வது மட்டும்
குருச்சேவின் நோக்கமல்ல. மார்க்சியத்தின் ஆதாரமான கோட்பாடுகளையும், நடைமுறைகளையும்
மொத்தத்தில் சோவியத் யூனியனை அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடாக மாற்றுவதுதான்
குருசேவின் நோக்கமாக இருந்தது. அதன்படி “”சமாதான சகவாழ்வு ஏகாதிபத்தியங்களுடன்
சமாதானமாக வாழலாம், அமைதி வழியில் சோசலிச மாற்றம் ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலம்
புரட்சியின் மூலம் சோசலிசம் அடையத் தேவையில்லை; பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம்
சோசலிசத்தை அடையலாம்; அனைத்து மக்களுக்கான அரசு இதன்படி சோவியத் யூனியனில் இனி
பாட்டாளி வர்க்க அரசு தேவையில்லை” என்ற குருசேவின் இந்த திரிபுவாதக் கருத்துக்களின்
அடிப்படையில் உலகக் கம்யூனிசக் கட்சிகள் இரண்டாகப் பிரிந்தன.
இவை மார்க்சியத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் சதி என்றவர்கள் உண்மையான கம்யூனிஸ்டுகள்
எனவும், ஆதரித்தவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவின்
வலது கம்யூனிசக் கட்சியும், ஆரம்பத்தில் குருசேவை மேலோட்டமாக எதிர்ப்பது போல பாவனை
செய்த இடது கம்யூனிசக் கட்சியும் குருசேவின் திரிபுவாதத்தை ஆதரித்து பாராளுமன்ற
கட்சிகளாகச் சீரழிந்து போயின. அப்போதைய சீனக்கம்யூனிசக் கட்சி, அல்பேனியக் கட்சி,
இந்தியாவில் நக்சல்பாரிக் கட்சி போன்றவர்கள் குருசேவை கடுமையாக எதிர்த்துப் போராடி
அம்பலப்படுத்தினர். இந்த வரலாற்றுக்கும் சு.ரா.வுக்கும் என்ன சம்பந்தம்?
ஸ்டாலின் மீது குருசேவ் பொழிந்த அவதூறுகள் குறித்து மட்டும்தான் சு.ரா.
அதிர்ச்சியடைந்தார். மார்க்சியத்தைக் குழி தோண்டிப் புதைத்த திரிபுவாதம் குறித்து எந்த
அதிர்ச்சியும் அடையவில்லை. குருசேவின் திரிபுவாதத்தினால் கம்யூனிசக் கட்சிகள் எப்படி
இரண்டு முகாம்களாகப் பிரிந்ததோ அதைப்போல மார்க்சியத்தை ஆதரித்த கலைஞர்களும் இரண்டு
பிரிவுகளாய்ப் பிரிந்தனர். இந்த இரண்டாவது திரிபுவாத முகாமைச் சேர்ந்த எழுத்தாளர்கள்,
கலைஞர்கள், அறிவாளிகள் அனைவரும் அல்லது பெரும்பான்மையினர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை
ஏற்றுக் கொண்ட அதேசமயம் திரிபுவாதம் குறித்து வாய் திறக்காமல், அந்தத் திரிபுவாதத்தை
எதிர்த்த உண்மையான கம்யூனிஸ்டுகளை மட்டும் தீவிரமாக எதிர்த்தனர். “”முன்னாள் கம்யூனிஸ்டுகள்
சோசலிசத்தை ஆதரிப்பவர்கள், முற்போக்கான இடதுசாரிகள்” என்ற பட்டங்களுடன்தான் இவர்கள்
உண்மையான கம்யூனிசத்தை எதிர்த்தனர் என்பது முக்கியமானது. அவ்வகையில் இவர்கள் எந்தக்
கட்சியிலும் உறுப்பினராக இல்லாத போதும் இவர்களின் சேவையை ஏகாதிபத்தியவாதிகளும், போலி
கம்யூனிஸ்டுகளும் ஊக்குவித்துப் பயன்படுத்திக் கொண்டனர். இப்படித்தான் சு.ரா. போலி
மார்க்சிய மன அமைப்பைப் பெற்றுக் கொண்டார்.
சு.ரா.வுடன் 1952 முதல் நட்பு கொண்டவரும், வலது கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு
கொண்டவருமான மி.ராஜூ என்பவரின் பதிவின்படி சு.ரா.வுக்குக் கட்சி இயக்கத்தில் தன்னை
இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற விருப்பம் இருந்த போதிலும் அதை அவர் வெளிப்படையாகக் காட்டிக்
கொள்ளத் துணியவில்லையாம். அப்புறம் அவரது சிறுகதைத் தொகுப்பு செக் மொழியில் வந்தபோது
அதில் அவரைப்பற்றிய அறிமுகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்று எழுதி அவரிடம்
ஒப்புதலைக் கேட்டபோது அந்த வரியை அடித்து விட்டாராம். அதேசமயம் இந்தியாவில் உள்ள
அரசியல் கட்சிகளில் ஓரளவு நம்பிக்கை தருவதாக உள்ளவை (போலி) கம்யூனிஸ்டு கட்சிகள்தான்
என்று சு.ரா. ஒரு சந்தர்ப்பத்தில் ராஜூவிடம் சொன்னாராம்.
குருச்சேவ்
குருச்சேவ்
சு.ரா. ஒரு தீவிர கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருந்து, பயங்கரமாகக் களப்பணியாற்றி,
ஸ்டாலின் குறித்த பிரச்சினையால் கட்சியிலிருந்து விலகிவிட்டது போல இலக்கிய உலகில் ஒரு
வதந்தி உலவி வருகிறது. முதலில் இது உண்மையல்ல. கட்சி அவரது கதையை செக் மொழியில்
வெளியிட முன்வந்த போதும் அவர் தன்னை ஒரு உறுப்பினராகக் கூட காட்டிக் கொள்ள
முன்வரவில்லை. மேலும் ஒரு கம்யூனிசக் கட்சியைப் பொறுத்தவரை உறுப்பினராவது என்பது
பயிற்சிக் காலத்தை முடித்த பின்னரே நடக்க முடியும். இங்கே அந்த உரிமை சு.ரா.வின் பேனா
மையில் இருக்கிறது. அவர் நினைத்தால் ஆமாம் என்றோ அல்லது இல்லையென்றோ உறுப்பினர் தகுதியை
“டிக்’ செய்ய முடியும். இன்றைக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சிகள் தமக்கு ஆதரவான
இலக்கியவாதிகளிடம் இப்படித்தான் உறவு கொண்டுள்ளன. இது போலி மார்க்சிய இலக்கியவாதிகளின்
முதல் மனநிலை.
அடுத்து அநேக இலக்கியவாதிகள் மேலோட்டமாக மார்க்சியத்தை ஒரு பாவனை போல் ஆதரித்தாலும்
கட்சி என்று வரும் போது தம்மை ஒப்படைத்துக் கொள்ள மறுத்து விடுவார்கள். அதாவது கட்சியின்
கடமைகளை ஏற்றுக் கொண்டு கட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவது என்பது அவர்களைப்
பொறுத்தவரை வேப்பங்காயைப் போன்று கசப்பிற்குரியது. இலக்கியவாதிகளின் கம்யூனிச வெறுப்பே
இந்த அடிப்படையிலிருந்துதான் கிளம்புகிறது. நிலவும் எல்லாவகையான அதிகார
நிறுவனங்களுடனும் சமரசம் செய்து கொண்டோ, கட்டுப்பட்டோ வாழப்பழகியிருக்கும் இலக்கியமனம்
கம்யூனிஸ்டு கட்சி கோரும் சுயக் கட்டுப்பாட்டையும், சுய அர்ப்பணிப்பையும் மட்டும் ஏற்றுக்
கொள்ளாது. இது இரண்டாம் மனநிலை.
அடுத்து மார்க்சிய சித்தாந்தம் குறித்து அ,ஆ கூடத் தெரியாத போதே கம்யூனிசத்தைக் கற்றுத்
தேர்ந்து, கரைத்துக்குடித்த பண்டிதராகக் காட்டிக் கொள்வது மூன்றாம் மனநிலை. நான்காவது,
ஒருபுறம் கம்யூனிசம், கட்சியெல்லாம் டூபாக்கூர் என்று கேலி செய்து விட்டு இன்னொருபுறம்
போலி கம்யூனிசக் கட்சித் தலைவர்களிடம் நெருங்கிப் பழகுவதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வை
மாபெரும் தியாகமாகச் சித்தரிப்பதும், அந்தத் தலைவர்களும் இத்தகைய இலக்கியவாதிகளை “என்ன
இருந்தாலும் இவன் நம்மாளுயா’ என்று பரஸ்பரம் முதுகு சொறிவதுமாகும்.
இறுதியாக, கம்யூனிசம், புரட்சி என்பதையெல்லாம் ஃபேன்டசி, ரொமான்டிக் விசயங்களாக, ஒரு
நேர்த்தியான மாலை நேர விருந்து போல எந்தப் பிரச்சினையோ, துன்பமோ, ரத்தமோ, போரோ
இல்லாமல் வந்துவிடுவதாகக் கருதுவது ஐந்தாம் மனநிலை. இதன்படி “கம்யூனிசம் என்ற
அமுதப்பழம் தானாகவே வந்தால் புசித்து இன்புறுவோம், இல்லையா, புறங்கையால் ஒதுக்கிவிட்டு
இருக்கின்ற வாழ்க்கையை ரசித்து அனுபவிப்போம்’ என்பதாகும். சு.ரா. மேற்படி
‘பஞ்சபூதங்களால்’ ஆன மனநிலையைக் கொண்டவர். இதன் பொருள் அவர் ஒரு தீவிர மார்க்சிய
எதிர்ப்பாளர் என்பதே.
எனவே சித்தாந்தத்தைத் தவிர்த்து விட்டு போலிகளின் சில்லறை நடைமுறைப் பிரச்சினைகளை
விமரிசனம் செய்துவிட்டு ஈ.எம்.எஸ். போன்ற முக்கியமான இடது மற்றும் வலது தலைவர்களிடம்
சு.ரா. நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். நல்லக்கண்ணு போன்ற தமிழகத் தலைவர்களும்
நாகர்கோவில் வந்தால் சுந்தர விலாசத்திற்குத் தவறாமல் வந்து தங்கிப் போவார்களாம்.
திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் வலது கம்யூனிசத் தலைவர் எம்.என்.கோவிந்தன் நாயர்
ஒரு தேர்தலில் நீலலோகிததாஸ நாடாரிடம் தோல்வியுற்றது குறித்து “”இது சாதியின் வெற்றி,
இந்திய அரசியலில் ஐடியலிசம் சாகுதுன்னு அர்த்தம்” என்று சு.ரா. துக்கப்பட்டு சில நாட்கள்
தூங்காமல் அவதிப்பட்டாராம். ஐடியலிசம் குறித்த அறிவும் வருத்தமும் எவ்வளவு அற்பமாக
இருக்கிறது பாருங்கள்!
வலது கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்றச் சகதியில் மூழ்கி நேருவின் போலி சோசலிசத்திற்குப்
பக்கமேளம் வாசித்து, இந்திராவின் எமர்ஜென்சிக்கு பஜனை பாடி, தமிழ்நாட்டில் புரட்சித்
தலைவர் மற்றும் தலைவிக்கும், கலைஞருக்கும் காவடி தூக்கி, இப்போது முதலாளிகளுக்கும்,
காங்கிரசுக்கும் பல்லவி பாடி கட்டெறும்பாகத் தேய்ந்து விட்டது. இவையெதுவும்
சு.ரா.வுக்கு கோபத்தையோ துக்கத்தையோ தரவில்லை. அக்கட்சியின் ஒரு தலைவர் தோற்றுப் போனது
மட்டும் சு.ரா.வுக்கு துக்கத்தை தருகிறது என்றால் அவரது “ஐடியலிச’த்தை மட்டுமல்ல,
‘ஐடியாலஜி’யையும் அதன் முத்திரை பதிந்த “லிட்ரேச்சரி’ன் ஆழத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
சு.ரா. அவரது இளமைப்பருவத்தில் தன்னை இந்தியாவில் புரட்சி நடத்தப்போகும் ஸ்டாலினைப்
போன்ற தலைவராகக் கற்பனை செய்து கனவு கண்டாராம். இதை ஜெயமோகன் ஒருமுறை சு.ரா.விடம்
அந்தரங்கமாகக் கேட்டபோது அவர் ஒத்துக் கொண்டாராம். இருக்கலாம். தன்னெழுத்தை மட்டும்
வியந்தோதக்கூடிய ஒரு நபர் புரட்சி என்பது கூட தன்னால் வழங்கப்பட இருக்கின்ற கோவில்
சுண்டல் என்று ஏன் நினைக்க முடியாது? இப்படி ஒரு தனிநபர், புரட்சியை பிச்சை போன்று
மக்களிடம் தூக்கி எறிவதாக எத்தனை தெலுங்குப் படங்களும் ஹாலிவுட் படங்களும்
வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆரின் ஒரே ஃபார்முலா அதுதானே. ஆனால், புரட்சி என்பது
கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் மக்கள் நடத்தும் போர். இதைச் சாதிக்கும் தலைமை என்பதே
இத்தகைய போராட்டத்தினூடாகத்தான் முகிழ்த்து வரும்.
கம்யூனிஸ்டு கட்சியில் சேரும் எவரும் தலைமை குறித்துக் கனவுகாண மாட்டார்கள். தலைமை
என்பது என்ன, அது எவற்றைக் கோருகிறது, அது என்னவிதமான பொறுப்புக்களையும்,
பிரச்சினைகளையும் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். மறுபுறம்
கம்யூனிஸ்டு கட்சியின் எல்லா உறுப்பினர்களும் தலைமைப் பண்பைக் கொண்டிருப்பது அவசியமாகும்.
ஏனெனில் அவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்க வேண்டும். புரட்சிகர நடைமுறையில் இல்லாத
நடுத்தரவர்க்கத்தினருக்கு மட்டும்தான் கம்யூனிசம் என்ற பெருஞ்சொர்க்கத்தில் தான்
முடிசூடவிருக்கும் மகுடம் குறித்த அற்பக் கனவு இருக்க முடியும். அவ்வகையில் போலி
மார்க்சியக் கலைஞரும், சிற்றிலக்கியத்தின் எம்.ஜி.ஆருமான சு.ரா., இந்தியாவின்
புரட்சித்தலைவராக மட்டுமல்ல, சிறு பத்திரிக்கைகளின் பிதாமகராவும் தன்னைக் கனவு கண்டார்.
பின்னதில் மட்டும் ஓரளவு வெற்றியும் பெற்றார். பின்னாளில் அந்தப் பதவியும் பல்வேறு இலக்கிய
கோஷ்டிகளுடன் நடத்திய சண்டையால் ஆட்டங்கண்ட போதுதான் சு.ரா. சொல்லொண்ணாத்துயரம் அடைந்து
தன்னைப் புகைப்படங்களாகவும், குறிப்புக்களாயிருந்த நினைவுகளை வார்த்தைகளின் உதவியால்
புத்தகங்களாகவும் பதிவு செய்து சமாதானம் அடைய முயன்றார்.
எஸ்.வி.ராஜதுரை
எஸ்.வி.ராஜதுரை
கோர்பச்சேவ் கொண்டுவந்த பெரஸ்த்ரோய்க்காவும் கிளாஸ்நோஸ்தும் சு.ரா.வை பெரும் உற்சாகத்தில்
தள்ளியதாம். இதே உற்சாகத்தைத்தான் அறிஞர் எஸ்.வி. ராஜதுரை தனது ‘ரஷ்யப்புரட்சி ஒரு
இலக்கிய சாட்சியம்‘ என்ற நூலின் இறுதி அத்தியாயத்தில் விஜய் பட ரீலிசுக்கு இணையாகக்
கொண்டாடியிருப்பார். இவர்களது மார்க்சிய அறிவை நாம் விளங்கிக் கொள்ள இந்தக் கொண்டாட்டமே
போதும். குருசேவ் காலத்தில் தொடங்கிய திரிபுவாதம் சமூக ஏகாதிபத்தியமாய் அதாவது
சொல்லில் சோசலிசமும் செயலில் ஏகாதிபத்தியமுமாய் சீரழிந்த காலத்தில்தான் அதன் நீட்சியாய்
கோர்பச்சேவ் பதவிக்கு வந்தார்.
ஏற்கெனவே சோவியத் யூனியனின் பொருளாதாரம் ஏகாதிபத்தியக் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில்
மாற்றப்பட்டு முக்கால் நிர்வாணமாகியிருந்த நிலையில், “ஒரு கட்சி ஆட்சிமுறை’ என்ற கோவணம்
மட்டும் எதற்கு என்று ஏகாதிபத்திய நாடுகள், அதைத் தூக்கியெறியுமாறு நிர்ப்பந்தம் செய்து
வந்தனர். அதன் பொருட்டு கோர்பச்சேவ் கோவணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து எறியலாம் என்று
கொண்டு வந்தவைதான் மேற்கண்ட சீர்திருத்த நடவடிக்கைகள். இதை அப்போதைய உண்மையான மார்க்சிய
லெனினிய வாதிகள் தெளிவாக அம்பலப்படுத்திய போது அதை எதிர்த்த போலிகளும் அவற்றின்
ஆதரவாளர்களும் கோர்பச்சேவின் அரை நிர்வாண சீர்திருத்தங்களை மாபெரும் புரட்சி நடவடிக்கைகள்
என்று வரவேற்றனர்.
இக்காலகட்டத்திற்குச் சற்று முன்பாக காலச்சுவடை ஆரம்பித்திருந்த சு.ரா., எம்.என்.ராய்,
எரிக் ஃபிராம், எம்.கே. கோவிந்தன் முதலான விதவிதமான கம்யூனிச எதிர்ப்பு
எழுத்தாளுமைகளை வெளியிட்டார். எல்லாம் கோர்பச்சேவின் கோவணக் கிழிசலுக்கு உதவியாய்
இருக்கும் என அவர் நினைத்திருக்கக் கூடும். மேலும் கம்யூனிசத்தை திருத்துவதற்கு
குமரிமுனையில் ஒருவன் இருக்கிறான் என்பதை உலகத்திற்கு அடையாளம் காட்டவும் அவர்
நினைத்திருக்கலாம். கடைசியில் என்ன நடந்தது? சோசலிச மாயைக்காகப் பராமரிக்கப்பட்ட “ஒரு
கட்சி ஆட்சி’ என்ற கோவணம் பறந்த உடன் மாலெ கட்சிகள் மதிப்பிட்டது போல ரசியா
வெளிப்படையான முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடாக மாறியது. இதை எதிர்பார்க்காத
போலிகள், சோவியத் யூனியனை வைத்து அணிகளுக்கு பிலிம் காட்டியவர்கள் கதிகலங்கிக்
கதறினார்கள். அதன் பிறகு ரசியாவில் செங்கொடி கீழிறக்கப்பட்டு கம்யூனிச ஆசான்களின்
சிலைகளும் இடிக்கப்பட்டன. இதைக்கண்டு பதறிய சு.ரா. பல நாட்கள் தூங்கமல் கண்ணீர்
விட்டாராம். “ஸ்டாலின் இன்னும் கொஞ்சம் மனுஷாளை நம்பியிருக்கலாம்” என்று அப்போது
ஜெயமோகனிடம் சொன்னாராம். அப்பக்கூட மனுஷன் கம்யூனிஸ்டுகளை அதுவும் ஸ்டாலினைத்
திருத்துவதற்கான தன் கடமையில் இருந்து பின்வாங்கவில்லை. சு.ரா. ஏன் கண்ணீர் விட்டார்
என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டு விடுகிறோம்.
செங்கொடிகளும், சிலைகளும் சரிந்து சோவியத் யூனியனின் முகமூடி கிழிந்ததை வைத்து
கம்யூனிசம் காலாவதியாகிவிட்டது என ஏகாதிபத்திய முகாம் காத்திருந்து ஆர்த்தெழுந்த
காலமது. அதன் எதிரொலிகள் தமிழ்நாட்டின் சிற்றிலக்கிய உலகிலும் அலற ஆரம்பித்தன. “வர்க்கப்
போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது, வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது, எல்லா
தத்துவங்களும் இயக்கங்களும் தோற்றுப் போய் விட்டன, அவையெல்லாம் பெருங்கதையாடல்கள், விளிம்பு
நிலை மக்களின் போராட்டங்கள் என்ற சின்னக் கதையாடல்கள்தான் சரியானது, தலித்தியம்
பெண்ணியம் சுற்றுச் சூழலியம் போன்ற மறைக்கப்பட்ட பிரச்சினைகள்தான் இனி பேசப்படவேண்டும்…”
போன்ற கொள்கை முழக்கங்களை நிறப்பிரிகை முன்வைத்தது.
ஜெயமோகனது கம்யூனிச வெறுப்பு! சங்க பரிவாரத்தால் தயாரிக்கப்பட்ட விருப்பு!
ஜெயமோகன்
ஜெயமோகன்
கம்யூனிசத்திற்கு இனி எதிர்காலமில்லை என்பதாகப் புரிந்து கொண்ட சு.ரா. தன்னை எதிர்
மார்க்சியவாதியாக நிரூபிக்க மேற்கண்ட விசயங்களில் அந்த அளவுக்கு அறிவில்லையென்றாலும்
பேசி, எழுத முயன்றார். கம்யூனிச எதிர்ப்புக்கு புது மவுசு இருப்பதைப் புரிந்து கொண்ட
சு.ரா.வின் தலைமைச் சீடர் ஜெயமோகன் முந்திக் கொண்டார். உடனே ஜெயமோகனுடைய கனவில்
ஸ்டாலின் வந்திறங்கி பூட்ஸ் காலால் உதைக்கத் தொடங்க, ராணுவ பூட்ஸை விடக் கனமான பின்
தொடரும் நிழலின் குரலை ஜெயமோகன் பிரசவித்தார்.
தனது குருநாதரின் ஜே.ஜே. நாவல் போன்று இந்த நாவலும் பெரும் வரவேற்பைப் பெறும்,
ஒருவேளை நாவலில் புகாரின் கதையெல்லாம் விரிவாக வருவதால் நோபல் பரிசு கூடக்
கிடைக்கலாம் என்று ஜெயமோகன் மனப்பால் குடித்திருக்கலாம். நாவல் கடைசியில் கழுதைப்பாலாக
வீணாகிவிட்டது. ஜே.ஜேயில் கம்யூனிச எதிர்ப்பு சற்றே இலைமறைவு காய் மறைவாக
வந்ததென்றால், பின்தொடரும் குரலில் வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி, படிமத்திற்கு படிமம்
அப்பட்டமாய் எழுந்து அம்மணமாக ஆட்டம் போட்டதனாலோ என்னவோ வாசகர்களிடம் வரவேற்பைப்
பெறவில்லை. எந்தக்கதை 50 நாட்களாவது ஓடும் என்ற சூட்சுமம் தமிழ் சினிமாத்
தயாரிப்பாளர்களுக்கே தெரியவில்லை. எந்த நாவல் காலத்தை விஞ்சி நிற்கும் என்ற சூட்சுமம்
அதீத மனத்தாவல் கொண்டு யோசித்தாலும் ஜெயமோகனுக்குப் பிடிபடவில்லை போலும்! ஆனால் இந்த
நாவல் குருவுக்குப் பிடித்திருந்ததாம். ஒருவேளை நாவல் தோல்வியடையலாம் என்ற கணிப்பு
காரணமாகக்கூட சு.ரா. அதைப் பாராட்டியிருக்கலாம். ஏனெனில் குருநாதர் சிஷ்யனின்
கிளாசிக் நாவலான விஷ்ணுபுரத்தை படிக்கவே இல்லை என்று புளுகிவிட்டாராம்.
துணிக்கடை முதலாளி படிக்காவிட்டாலென்ன, சாய ஆலை முதலாளியும், சர்க்கரை, லாரி, நிதி
இன்னபிற தொழில்களின் அதிபரும் கொக்கோ கோலா முகவருமான அருட்செல்வர் பொள்ளாச்சி
மகாலிங்கம் விஷ்ணுபுரத்தை இரண்டு தடவை படித்து தன் ரசிகராகி விட்டதை ஜெயமோகன் தன்
வாசகர் ஒருவருக்கு போகிற போக்கில் பெருமை பொங்க அவிழ்த்து விட்டிருக்கிறார்.
அருட்செல்வர் முதலாளி மட்டுமல்ல, அறிவாளியும் கூட. “மின்சாரத்தில் நேர்எதிர் மின்சக்திகள்
கண்டுபிடிக்கப்பட்டவுடனே மார்க்சியம் காலாவதியாகி விட்டதாக’ சுபமங்களாவுக்கு பேட்டி
கொடுத்தவர். அவர் பின் தொடரும் நிழலின் குரலை நான்கு முறையாவது படித்திருக்க வேண்டும்.
ஜெயமோகனது தத்துவக் கண்ணாட்டம்: சமரசங்களை தியாகமாக்கும் அற்பத்தனம்!
ஜெயமோகன் தனது வாழ்க்கை மற்றும் எழுத்துக்கு அடிப்படையான புரிதல் என்று சு.ரா. பற்றிய
நினைவின் நதியில் நூலில் குறிப்பிடுகிறார்: “மனித வாழ்க்கையும் சரி, வரலாறும் சரி,
அப்படிப்பட்ட உக்கிர கணங்களால் ஆனவை அல்ல. அவை மிக மெல்ல மாறுவது தெரியாமல்
மாறியபடி விரிந்து கிடக்கின்றன. சலிப்பூட்டும்படி மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. அந்தத்
தளத்தில் மனித மனத்தை இயக்கும் விசைகள் பெரும்பாலும் மிக மிகச் சாதாரணமானவை. பல
தீவிரச் செயல்பாடுகளுக்கு உள்ளே இருக்கும் உளவியல் காரணங்கள் எளியவை, அபத்தமானவை.”
உண்மையில், ஜெயமோகனது அடிப்படையான ஆன்மீகம் இதுதான். இதன்படி ஜெயமோகன் வேலை செய்யும்
தொலைபேசித் துறையில் தனியார்மயத்திற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்யும்
நடவடிக்கைக்குள்ளேயும், எம்.ஜி.ஆர். நகரில் 43 பேர் இறந்துபோன படுகொலைச் சம்பவத்திற்கு
உள்ளேயும், அமெரிக்கா ஈராக்கின் மீது குண்டுவீசித் தாக்கி நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கு
உள்ளேயும், அதை எதிர்த்துத் தன்னுடலையே வெடிகுண்டாக்கி தற்கொலையின் மூலம் தியாகம்
செய்யும் போராளியின் சிந்தனைக்கு உள்ளேயும் இருக்கும் உளவியல் காரணங்கள் எளியவை,
அபத்தமானவை என்றாகிறது. இவற்றுக்கு அடிப்படையாக அமையும் பொருளியல் மற்றும் சமூக
உளவியல் காரணங்களை ஆராய்வதோ இலக்கியத்திற்கெதிரான அபச்சாரம்!
ஜெயமோகனது தத்துவ விசாரங்களைக் கண்டு அஞ்சிச் சரணடைந்த வாசகர்களுக்குப் புரியும்படி
சொல்கிறோம். ‘உயிரே’ திரைப்படத்தில் வடகிழக்கிந்திய மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான
நியாயத்தை மனிஷா கொய்ராலாவின் முலைகள் வழியாக மணிரத்தினம் நிறுவுகிறாரல்லவா, அது
துல்லியமான ஆன்மீகச் சித்தரிப்பு; ஒரு மனித வெடிகுண்டின் நியாயம் எந்த அளவுக்கு
அபத்தமானது என்கிறார் ஜெயமோகன். எந்த ஒரு வரலாற்றையும் சம்பவத்தையும் நிகழ்ச்சியையும்
என்ன காரணம் என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுப் பரிசோதித்தால் அதன் விடை அபத்தமாக
வரும் என்பதுதான் அவரது ஆன்மீகத்தின் உட்கிடை. தன்னை டன் கணக்கில் எழுதிக் குவிக்கத்
தூண்டும் ஆன்மீக உந்துதல் சாகித்ய அகாதமி, ஞானபீடம் போன்ற சாதாரணமான விசயங்களில்தான்
உறைந்திருக்கிறது என்ற உண்மையை அவர் பார்க்கிறார். சு.ரா. இறந்தவுடன் 3 நாட்கள் சிறுநீர்
பிரிந்தது கூடத் தெரியாமல் தீவிரமாகத் தன்னைச் செயல்பட வைத்த ஆன்மீக விசை எது? புகழ்வது
போலக் கேவலப்படுத்தவும், வியப்பது போலக் காறித்துப்பவும், வருத்தப்படுவது போல நடிக்கவும்
தன்னுடைய மனத்தை இயக்கிய அந்த உளவியல் காரணம் அற்பமானதே என்பதை அவர் உணர்ந்திருப்பதால்
‘உலகமே அற்பத்தனமானது’ என்று பிரகடனம் செய்கிறார்.
ஆனால், ஜெயமோகன் தன் நாவலை அப்படி எழுதவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் நாயகன் ஒரு
போலி கம்யூனிசத் தொழிற்சங்கத்தில் சேர்ந்து படிப்படியாகத் தலைவராகிறான். பின்பு கட்சியின்
காரியவாத பிழைப்புவாதங்களைக் கண்டு, மனஞ்சோர்ந்து, விலகி மனைவியின் முலைகளில்
தஞ்சமடைந்து இறுதியில் ஆன்மீகவாதியாக மாறுகிறான். இந்த நாவலை ஜெயமோகன் தனது எழுத்தின்
தத்துவ அடிப்படையை வைத்து எழுதவில்லை என்பதோடு அதற்கெதிராகவும் எழுதியிருக்கிறார்.
நாவலில் அதீத நாடகத்தன்மையும், வாழ்க்கையை செயற்கையாக உக்கிரப்படுத்துவதும், விரிவான
எரிச்சலூட்டும் பாத்திரப்படைப்பும், வாழ்வின் அநீதியை எதிர்த்து வரலாறு முழுவதும்
போராடும் மனித சமூகத்தை எதிர்த்து ஆபாசமாக வசைபாடும் ஜெயமோகனது நீண்ட பிரசங்கங்களும்
முடிவில், எல்லாம் சேர்ந்து நாவலை மிகச் செயற்கையாகத் தூக்கி நிறுத்துகின்றன. அதனாலேயே
வாசிப்பில் சரிந்து விழுகின்றன. சு.ரா.வின் ஜே.ஜேவைக் கிணற்றுத் தவளை என்று
மதிப்பிட்டால், ஜெயமோகனை சற்றே எம்பிக் குதிக்கும் கிணற்றுத் தவளை என்று சொல்லலாம்.
குருவை விஞ்சிய சீடன்தான்! எவ்வளவு துள்ளினாலும் இந்தத் தவளையும் மீண்டும் கிணற்றுக்குத்தான்
போகிறது என்பதே முக்கியம்.
ஜே.ஜே. எழுதிய சு.ரா. போலி கம்யூனிஸ்டு தலைவர்கள் மீது நன்மதிப்பு கொண்டிருந்ததை
சீடரும் “கவனத்தில்’ கொண்டிருக்கிறார். சு.ரா.வுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு குமரி
மாவட்ட தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கலை இலக்கியப் பெருமன்றமும் கிளை
கிளையாக வந்தனராம். சு.ரா.வுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அருகதை உள்ள கட்சிகள் இவைகள்
மட்டும்தான் என்று தனது “நினைவின் நதியில்’ ஜெயமோகன் எழுதுகிறார். போலிகளும்
இவருடனான தமது பழைய கசப்பை மறந்துவிட்டுக் கைகோர்க்கக் கூடும். நல்லகண்ணுவைப் பாராட்ட
இல.கணேசன் போகவில்லையா? அரசியலைப் போல “இலக்கியத்திலும் இதெல்லாம் சகஜமப்பா’ என்று
எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மனுஷ்ய புத்திரன்: சு.ராவிற்கு தப்பாமல் உருவான சீடப்பிள்ளை!
மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்
ஜே.ஜே. சில குறிப்புகளையும் மார்க்சியத்திற்கும் சு.ரா மற்றும் அவர் சீடப் பிள்ளைக்குமுள்ள
உறவுகளைப் பார்த்துவிட்டோம். இங்கே ஜே.ஜே. நாவலால் பாதிக்கப்பட்ட ஒரு ஆளுமையைப்
பார்ப்போம். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பொருத்தமானவர். “சு.ரா.வை ஜே.ஜே. சில குறிப்புகள்
வழியாகத் தேடிச் சென்றவர்களில் நானும் ஒருவன். எனது இடதுசாரி நம்பிக்கைகள் பெரும்
மனமுறிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம். ரஷ்யப் புரட்சி: ஒரு இலக்கிய சாட்சியம் எனது
நம்பிக்கைகளைக் குரூரமாகச் சிதைத்தது. அந்த காலகட்டத்தில்தான் ஜே.ஜேயையும் படித்தேன்.
அனைத்தின் மீதும் ஜே.ஜே. வெளிப்படுத்திய எதிர்நிலையும் விழிப்புணர்வும் சட்டென ஒரு
வெளிச்சத்தை ஏற்படுத்தியது. ஜே.ஜேயில் வெளிப்பட்ட மொழியும் புத்துணர்ச்சியும் மூர்க்கமும்
பித்தேற்றுவதாக இருந்தன….” என்கிறார் கவிஞர்.
முதலில், கவிஞரின் இடதுசாரி நம்பிக்கை என்னவாக இருந்தது? புதிய கலாச்சாரத்தில் ஓரிரு
கவிதைகள் எழுதியிருக்கிறார். ஷாபானு குறித்து ஒரு கட்டுரை எழுதியதாக நினைவு.
அப்புறம் மன ஓசையில் சில கவிதைகள் எழுதியிருக்கிறார். இதைத் தவிர கவிஞர் அவர்கள்
இடதுசாரி இயக்கத்திற்காகக் கருத்துப் பணியோ, களப்பணியோ ஆற்றவில்லை. பெரிய அளவில்
காரியம் ஆற்றாமலேயே நம்பிக்கை மட்டும் பெரிய அளவில் மனமுறிவைச் சந்தித்தது எப்படி என்று
தெரியவில்லை. தொலையட்டும். அப்படி மனமுறிவைப் பெற்றதாகவே வைத்துக் கொள்வோம். அதன்
பிறகு கவிஞர் என்ன செய்தார்?
இடதுசாரி நம்பிக்கை என்ற சிறிய குன்றை விட்டுக் கீழிறங்கி அதைவிட உன்னதமான சிகரத்தை
நோக்கிப் போனாரா? இல்லை. கவிதைத் தொகுப்புக்களைக் கொண்டு வந்தார். பிறகு காலச்சுவடின்
ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணனுடன் ஏதோ
தகராறு. அந்தத் தகராறில் “சு.ரா. மகனை ஆதரித்தார்’ என்று குற்றம் சாட்டிவிட்டு
வெளியேறினார். அப்புறம் எழுத்து வியாபாரி சுஜாதாவின் நல்லாசியுடன் அவரது புத்தகங்களை
வெளியிடும் உயிர்மைப் பதிப்பகத்தை நடத்துகிறார். சுஜாதாவைப் பற்றி எவரும் விமரிசனம்
செய்யக்கூடாது என்ற ஒரே ஒரு கொள்கையுடன் உயிர்மை பத்திரிக்கையை நடத்தி வருகின்றார்.
இப்படியொரு பெரும் பள்ளத்தாக்கில் தலைகுப்புற விழுந்த போதிலும் அவருக்கு மனமுறிவோ
எலும்பு முறிவோ கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமானது. பிழைப்புவாதமும்
காரியவாதமும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என இன்று அவர் தெளிந்திருக்கலாம். இந்தக்
குறிக்கோளுக்கிடையில் அவரால் கவிதை எழுதுவதையும் நிறுத்த முடியவில்லை.
கவிதை என்றவுடன் அவர் காலச்சுவடில் எழுதிய “அரசி’ என்ற கவிதை நினைவுக்கு வருகிறது.
ஜெயலலிதாவைப் பற்றி பூடகமாக “அரசி வந்தாள், சிலிர்த்தாள், நகரம் பணிந்தது’ என்று
உப்புச்சப்பற்ற நீர்த்துப்போன படிமங்களால் தயாரிக்கப்பட்ட இந்தக் கவிதையை “தமிழகத்தின் மிகச்
சிறந்த அரசியல் கவிதை’ என்று தங்களைத் தாங்களே இலக்கிய உன்னதங்களாக அழைத்துக் கொள்ளும்
ஜெயமோகன் மற்றும் பிரேம் ரமேஷ் போன்றோர் பாராட்டியதும் நினைவுக்கு வருகிறது. அரசியல்
வெளி இருண்டு போன இலக்கியப் பாலைவனத்தில் இதுபோன்ற அசட்டுக் கவிதைகள் மகத்தான அரசியல்
கவிதைகளாக வரவேற்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இதே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் பற்றி
“அண்ணன் வர்றாரு’ என்ற பாடல் ஒலிப்பேழையை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அரசி கவிதையைப்
படித்துவிட்டு எமது பாடல் ஒலிப்பேழையைக் கேட்டுப் பாருங்கள். எதில் கவித்துவமும்,
கூர்மையும், எள்ளலும், உற்சாகமும் இருக்கிறது என்பது தெரியவரும். அதனால்தான் எமது
பாடலை சாதாரண தி.மு.க. தொண்டர்கள் பாராட்டி தங்களுடைய வெளிப்படுத்த முடியாத
குரலாகப் பயன்படுத்தியும் வந்தனர். அரசி கவிதை யாருக்குப் பயன்படும்? அடுத்து தி.மு.க.
ஆட்சி வந்தால் எழுதிய மனுஷ்யபுத்திரனுக்கும் வெளியிட்ட கண்ணனுக்கும் பலவகையில் பயன்படும்.
எனில், சு.ராவின் ஜே.ஜே. நாவல், கவிஞரைப் போன்ற இலக்கியவாதிகளிடம் ஏற்படுத்திய
பாதிப்பின் விளைவு இதுதான். அந்த நாவல் தெரிந்தே ஓம்பப்படும் அறியாமையை எல்லாம் தெரிந்த
ஞானமாக காட்டிக் கொள்பவர்களுக்கும், சமூகத்திற்கு விரோதமான தன்னிலையை சமூகத்திற்கு
மேலான உயர்நிலையாகக் கற்பித்துக் கொள்பவர்களுக்கும், சோம்பிக் கிடக்கும் சொந்த வாழ்வில்
விறுவிறுப்பைக் கற்பிதம் செய்து கொள்பவர்களுக்கும் அக உலகில் கட்டியமைக்கப்படும் கற்பனையான
வாழ்வின் இல்லாத புதிரை நிஜ உலகில் தேடுவதைப் போன்று பாவனை செய்பவர்களுக்கும் எல்லா
தத்துவங்களும் தோற்று விட்டதென்னும் புனைவு தரும், பொய்க்களைப்பை வாழ்வின் அற்ப விசயங்களில்
ஊறித்திளைப்பதற்கான நியாயமாக முன்வைப்பவர்களுக்கும் சு.ரா.வின் ஜே.ஜே. ஒரு ஆதர்ச நாயகன்.
உலகின் மிகவும் மொக்கையான நாவல் எது? அது சு.ராவின் மூன்றாவது நாவல்!
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் சுந்தர ராமசாமி
‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்‘ சு.ரா.வின் மூன்றாவது நாவல். அவர் இறந்துவிட்டதால் இறுதி
நாவலுங்கூட. முதலாவது, ஜவுளிக் கடையில் அமர்ந்து கொண்டு வேப்பமரத்தையும் அதைச்
சுற்றியிருக்கும் வியாபாரிகளையும் வேடிக்கை பார்த்து எழுதப்பட்ட நாவல். இரண்டாவது,
போலி மார்க்சியர்கள், சிற்றிலக்கியவாதிகளிடம் உரையாடிக் கேட்டும், ஐரோப்பாவின் மார்க்சிய
எதிர்ப்புக் குப்பைகளைக் கிளறியெடுத்தும் எழுதப்பட்ட நாவல். மூன்றாவது, சு.ரா. தனது
சொந்த வாழ்க்கையைப் பல ஆண்டுகளாக அசை போட்டுப் பதப்படுத்தி எழுதிய நாவல். எல்லா
இயக்கங்களும், சித்தாந்தங்களும் தோற்று விட்டதான பாவனையில், எழுதுவதற்கான விசயங்கள்
இல்லாத நிலையில் எல்லா இலக்கியவாதிகளும் தஞ்சமடைவது அவர்களது இளமைப்பருவம் பற்றிய
இனிய நினைவுகளில். சு.ரா.வும் அப்படித்தான் தனது நாவலுக்கான கருவை தனது இளமைப்
பருவத்தில் கண்டெடுத்தார்.
இது அவரது பிரச்சினை. நமது பிரச்சினை வேறுமாதிரி. வாழ்நாளிலேயே படிப்பதற்கு
மிகவும் சிரமப்பட்டு நொந்து நூலான நாவல் உறுதியாக இதுதான். இந்தக் கட்டுரைக்காக
சு.ரா.வின் படைப்புகளைப் படிக்கவேண்டியிருந்தது ஒரு தண்டனை என்றால், அதில் கொடிய
தண்டனை இந்த நாவல்தான். இது சு.ரா.வின் குடும்ப நாவல். அவரது குடும்ப உறுப்பினர்கள்
மட்டுமே “இது நம்ம மாமி, இது நம்ம அத்திம்பேர், இது நம்ம தோப்பனார், இவதான் நம்ம மன்னி,
இவாதான் நம்ம ஓரகத்தி” என்று அடையாளம் காட்டி, கலந்துரையாடி மகிழ்ச்சியடைய வேண்டிய
நாவல். மற்றவர்கள் எவருக்கும் தனது பிரதியாகப் படிப்பதற்கோ, படித்ததை அனுபவமாக
உணர்வதற்கோ, உணர்ந்ததை மற்றவரிடம் பகிர்வதற்கோ இதில் துளியும் இடமில்லை.
சு.ரா. கோட்டயத்தில் சிறுவன் பாலுவாகக் கழித்த ஐந்து வருடங்களைப் பற்றிய விரிவான,
விலாவாரியான தினசரி டயரிக் குறிப்புதான் இந்த நாவல். கோட்டயத்தில் வரலாற்றுச்
சிறப்புமிக்க அவரது வீடு, வீட்டிற்கு வெளியே வளர்க்கப்பட்ட வாழைத்தோட்டம், வீட்டுக்குள்
இருக்கும் தேக்குமரத்தினாலான ஓவல் வடிவமேசை, சக்கை உப்பேரி தின்ன ஆசைப்படும் சித்தப்பா,
ஜே.ஜேயைப் போல வாழ்வின் நிலையாமை குறித்து குடும்ப அளவில் பதட்டமடையும் சு.ரா.வின்
அப்பா, சு.ரா.வைவிட சாமர்த்தியமாக வளரும் அக்கா ரமணி… இப்படி உயர்திணைகளும்
அஃறிணைகளும் மாறி மாறிக் கலந்து கசிந்துருகி அற்ப உணர்வின் பிரவாகமாய் சுமார் 640
பக்கங்கள் எவரும் தடுக்கமுடியாதபடி பெருக்கெடுதது ஓடுகிறது. இதை ஒரு நாவலென்று
சு.ரா. ஏன் எழுதினார், இதை எதற்காக அச்சிட்டு வெளியிட்டார்கள், இதை பல அப்பாவிகள் பணம்
கொடுத்து ஏன் வாங்குகிறார்கள்… ஒன்றும் புரியவில்லை. இந்த விசயத்தில் மட்டும்தான் வாழ்வின்
புரியாமை பற்றிய பிரச்சினை நம்மை அச்சுறுத்துகிறது.
ஒரு பார்ப்பன மேட்டுக்குடியின் ஐந்தாண்டு வாழ்க்கையை, உண்டு களித்து அசைபோட்டுச் செத்த
கதைகளை சு.ரா.வின் புகழ் பெற்ற அந்த பத்துக்கருத்துக்களின் நமத்துப்போன வகைபேதங்களோடு
நுணுக்கி, மினுக்கி எழுதப்பட்ட இந்தக் “காப்பியம்’ சு.ரா. யார் என்பதை நிச்சயம் அடையாளம்
காட்டும். கவிஞர் மனுஷ்யபுத்திரன் போன்றோர் இந்த நாவலை கலையமைதி கொண்ட நாவல் என்றும்
சு.ரா.வின் படைப்பிலேயே இதுதான் சிறந்தது என்றும் பாராட்டுகிறார்கள். செஞ்சோற்றுக்கடனா,
பாம்பின்கால் பாம்பறியுமா, இனம் இனத்தோடு சேருமா இதற்கு எந்தப் பழமொழி பொருத்தமாக
இருக்கும் என்பது தெரியவில்லை. நான்கு சுவர்கள் மற்றும் ஒரு பெரிய இரும்புக்கதவால்
திறக்க முடியாதபடி மூடப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையை, உரையாடலை, மனவோட்டத்தை,
நெகிழ்ச்சியை, தத்தளிப்பை யார் ரசிக்க முடியும்? யாரெல்லாம் தெருவையும், ஊரையும்
மறந்து, மறுத்து குடும்பத்திற்குள் மட்டும் வளைய வருகிறார்களோ, அவர்கள் மட்டும்தான்
கதைப்பதற்கு வேறு விசயங்கள் இன்றி, குடும்பத்தின் அற்ப விசயங்களை மெய்மறந்து பேசவோ,
நினைக்கவோ, ரசிக்கவோ முடியும்.
“இந்த நாவலில் நகரும் காலமில்லை; வரலாற்றுப் பின்புலம் இல்லை” என்பது சீடர் ஜெயமோகனின்
“விமர்சனம்.’ சக்கை உப்பேரிக்கும் அடைப்பிரதமனுக்கும் இடையில் காலம் நகர்ந்தாலென்ன,
நகராவிட்டாலென்ன? சு.ரா.வின் சித்தப்பா பலாப்பழம் பறித்த கதை வைக்கம் போராட்டம் நடந்த
காலத்தில் தான் நடக்கிறது. இந்த வரலாற்றுப் பின்புலத்தை விளக்குவதன் மூலம் சு.ரா. வீட்டுப்
பலாப்பழம் பற்றியோ, சு.ரா. பற்றியோ என்ன புதிய ‘தரிசனம்’ கிடைத்துவிடும்? சமூக
உணர்வற்ற அற்பவாதக் குட்டைதான் உலகம் என்றான பிறகு அதில் கிழக்கென்ன, மேற்கென்ன?
இப்படிப்பட்ட நாவல் எழுதியவருக்கு என்ன தரத்தில் அஞ்சலி செலுத்த முடியுமோ அதைத்தான்
அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளும் எடுத்தியம்புகின்றன.
நிகழ்கால சு.ரா. இளமைப்பருவத்தில் எப்படி இருந்திருப்பார் என்ற ஊகத்தைச் சரிபார்ப்பதற்கு
இந்த நாவலும், இந்த நாவலில் வரும் சிறுவன் எதிர்காலத்தில் எப்படி இருப்பான் என்ற ஊகத்தைச்
சரிபார்ப்பதற்கு நிகழ்கால சு.ராவும் உதவி செய்வதால் இந்த நாவல் தன் வரலாற்றுக் கடமையைச்
செவ்வனே செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆதலால் இந்த நாவல் குறித்த நமது
விமரிசனத்தை இதற்கு மேல் இழுப்பது என்பது அந்த வரலாற்றுக்குச் செய்யப்படும் அநீதி என்பதால்
இத்துடன் முடித்துக் கொள்வோம்.
பார்ப்பன சனாதனவாதி, சுயமரியாதை சிங்கமாக வலம் வரும் கொடுமை!
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி
சு.ரா.வின் படைப்பிலக்கியங்கள் இத்துடன் முடிவதால் படைப்புக்கு வெளியே அவர் எப்படி
வாழ்ந்தார் என்பதைப் பார்க்கலாம். தமிழகப் படைப்பாளிகளில் பலர் சாதி, மத,
மூடநம்பிக்கையுடன் வாழ்ந்தாலும் அவர்கள் விமரிசிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த அடையாளங்களைத்
தவிர்த்தும், துறந்தும் வாழ்ந்த சு.ரா.வை மட்டும் சனாதனி, பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டு
வாழ்ந்தவர் என்று பல விமரிசகர்கள் சு.ரா.வின் வாழ்நாள் முழுவதும் அவதூறு செய்து வந்ததாக
அவரது அபிமானிகள் ஜெயமோகனும், மனுஷ்யபுத்திரனும் கூறுகின்றனர். இதன்படி பார்த்தால்
சு.ரா. சாதி மத மூடநம்பிக்கைகளை முற்றிலும் துறந்த ஒரு புரட்சிக்காரர் என்றாகிறது.
இது உண்மைதானா?
சு.ரா. சாதி மறுப்புத் திருமணம் செய்தாரா? இல்லை, சரி தொலையட்டும், திருமணமாவது
சீர்திருத்த முறையில் சடங்கின்றி நடந்ததா? இல்லை, அதை விடுங்கள். சு.ரா. தனது
குழந்தைகளுக்காவது சாதி மறுப்பு சுய மரியாதைத் திருமணத்தைச் செய்து வைத்தாரா?
அதுவும் இல்லை என்பதோடு தினமலர் என்ற பார்ப்பன பிரச்சார பீரங்கிக் குடும்பத்தோடு சம்பந்தம்
வைத்துக் கொண்டார். சு.ரா.வின் இல்லமான சுந்தரவிலாசத்தில் பூஜை அறை உண்டா? நிச்சயமாக
உண்டு, சுந்தரவிலாசத்தில் தீபாவளி, ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற
பண்டிகைகளைக் கொண்டாடுவார்களா? அதெப்படிக் கொண்டாடாமல் இருக்க முடியும்? சு.ரா.வின்
சொந்த ஊரில் இருக்கும் “தழுவிய மாகாதேவர் கோவிலுக்கு’ அவர் நன்கொடை ஏதும் கொடுப்பாரா?
இவரே மறந்து போனாலும் அந்த ஊர் பார்ப்பனர்கள் விடாமல் ஆண்டுதோறும் வாங்கிக் கொண்டு
போவார்கள். இருக்கட்டும், சு.ரா. பேசுகின்ற தமிழ் எந்த வகை? அதுவும் சுத்தமான
அக்கிரகாரத்துத் தமிழ்தான்.
இப்படி சாதிமத மூடநம்பிக்கைகளின் எல்லா அம்சங்களோடும் வாழ்ந்து கொண்டே தன்னைப் பொருத்தவரை
சு.ரா. அவற்றைத் துறந்துவிட்டு வாழ்ந்தார் என்றால் என்ன பொருள்? தாமரை இலைத் தண்ணீர் போல
இந்த அடையாளங்களோடு வாழ்ந்து கொண்டே மனதளவில் மட்டும் துண்டித்துக் கொண்டு வாழ்ந்தார்
என்பதா? அவரை அவரது பௌதீக இருப்பில் வைத்து அல்ல, சிந்தனையின் இருப்பில் வைத்து
மட்டும்தான் பார்க்க வேண்டுமா? “”வரதட்சிணை வாங்கக் கூடாது என்பது என் கொள்கை, ஆனால் என்
பெற்றோர் வாங்கினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று மாப்பிள்ளை இளைஞர்கள்
கூறுவார்களே, அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
மக்கள் கலை இலக்கியக் கழகம் முதலான எமது புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் சாதிதீண்டாமை
மறுப்புத் திருமணங்களை தாலி முதலான சடங்குகள் எதுவுமின்றி எளிமையாகச் செய்து
கொள்கிறார்கள். திருமணத்தில் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் முதலியவற்றைத் துறந்தும்
குடும்பப் பிரச்சினைகளை ஜனநாயக முறைப்படி தீர்த்துக் கொள்வதாகவும், தமது குடும்ப வாழ்வை
பொது நலனுக்கேற்ற வகையில் அமைத்துக் கொள்வதாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு மாலைகளை
மாற்றிக் கொள்கிறார்கள். இப்படி மாதம் ஒரு திருமணமாவது நடக்கத்தான் செய்கிறது. அதேசமயம்
இந்தத் திருமணங்கள் ஒரு புனைகதை எழுதுவது போலச் சுலபமாக நடைபெறுவதில்லை. பலசுற்றுப்
போராட்டங்களைத் தாண்டி நடக்கும் இந்தத் திருமணங்களுக்கு மணமக்களின் பெற்றோர் பலர்
வருவதில்லை. திருமணம் முடிந்தாலும் உற்றார் உறவினர், மேல்சாதி ஆதிக்கம் முதலானவற்றை
எதிர்கொண்டு போராடியபடிதான் வாழவேண்டியிருக்கிறது.
மேலும் எமது தோழர்கள் பார்ப்பனப் பண்டிகைகள் எதையும் கொண்டாடுவதில்லை. நவம்பர் 7 ரசியப்
புரட்சி நாள் முதலான உலகமக்கள் இதயத்தில் நிறுத்த வேண்டிய நாட்களைத்தான்
திருவிழாக்களாகக் கொண்டாடுகிறார்கள். இப்படி சொல்லிலும் செயலிலும் அரசியலிலும்
வாழ்விலும் சாதி மத அடையாளங்களையும் மூடநம்பிக்கைகளையும் துறந்து வாழும் எமது தோழர்கள்
உன்னதமான உலக உள்ளூர் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் இல்லை. எங்களுக்கும் இத்தகைய
போராட்ட வாழ்வை இலக்கியமாக்குவதற்கான நேரம் இருப்பதில்லை. கவிதையும், கவித்துவமும்,
இலக்கியத்தின் உன்னதமும் எங்கள் தோழர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறது.
அவற்றை வெறும் தாள்களில் மட்டும் பார்க்கும் இலக்கியவாதிகளின் வாழ்வோ சராசரிக்கும் கீழே
சாதாரணமாகச் சோம்பிக் கிடக்கிறது. அதையே முற்போக்கு என்றும் அசாதாரணம் என்றும் காட்டிக்
கொள்வதுதான் அற்பத்தனம் என்கிறோம்.
ஜெயமோகனது ஆன்மீகத்தின் படி எமது தோழர்களின் புதிய பண்பாட்டிற்கான இந்த போராட்டத்தின்
காரணங்கள் எளிமையானவை. அபத்தமானவை. அதே ஆன்மீகம், மேட்டுக்குடிப் பார்ப்பனராக வாழ்ந்து
மரித்த சு.ராவை மட்டும் பார்ப்பன வாழ்க்கையைத் துறந்தவராக செயற்கையாக, உக்கிரப்படுத்திச்
சித்தரிக்கிறது. சாரமாகக் கூறுவதென்றால், பிழைப்புவாதத்தையும், காரியவாதத்தையும்
உன்னதப்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டதுதான் ஜெயமோகனது ஆன்மீகம்.
நம்மைப் பொருத்தவரை சு.ரா. மட்டுமல்ல அநேகச் சிறு பத்திரிகை எழுத்தாளர்களும் சாதிமத
வாழ்க்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள்தான். அதனால்தான் சாதி மத அடையாளங்களைத் துறப்பது
குறித்து “உண்மையில் அது ஓர் எழுத்தாளன் என்ற அளவில் உகந்ததுதானா என்றே எனக்கு ஐயமாக
இருக்கிறது” என்று முன்னெச்சரிக்கையாகத் தப்பித்துக் கொள்கிறார் ஜெயமோகன்.
அடித்தட்டுச் சாதிப்பெண் ஒருத்தி சுதர்சன் ஜவுளிக்கடையில் வளைகாப்பிற்காக 7000 ரூபாய்
மதிப்புள்ள பட்டுப்புடவை எடுத்ததை பெரும் தலித் எழுச்சிபோல சு.ரா. கொண்டாடியதை
ஜெயமோகன் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். சு.ரா. கல்லாப்பெட்டியிலிருந்துதான்
உலகத்தை பார்த்தார் அளவெடுத்தார் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த
விசயம் மகிழ்வுக்குரியதல்ல; வருத்தத்திற்குரியது. வளைகாப்பை இவ்வளவு ஆடம்பரமாகக்
கொண்டாடுவதெல்லாம் உழைக்கும் சாதிகளிடம் பொதுவில் இல்லை. இப்போது அப்படிக்
கொண்டாடுகிறார்கள் என்றால் அது பார்ப்பனமயமாக்கம் மற்றும் நுகர்வியத்தின் மோசமான வெளிப்பாடு.
அரசு வேலையில் இருக்கும் வசதியான தலித் நடுத்தரவர்க்கத்தினர் பிறந்தநாள், சஷ்டியப்த
பூர்த்தி, நவமி, அஷ்டமி முதலானவற்றைக் கொண்டாடுகின்றார்கள் என்பது சு.ரா.வுக்கு மிகவும்
பிடிக்கும் என்றால் அதன் பொருள் என்ன? யார் பார்ப்பனியத்தைச் சிக்கென இதயத்தில் பிடித்து
வைத்திருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் இப்படிப் பார்ப்பனமயமாக்கத்தைப் பாராட்ட முடியும்.
தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட சாதி மக்களும் இப்படித்தான் மாற வேண்டும் என்று இந்து
முன்னணியும் கூறுகிறது. எனில் சு.ரா.வுக்கும் இராம கோபாலனுக்கும் என்ன வேறுபாடு?
சமூக நிகழ்வுகளைப் பேசினால் அவை மிகை! சொந்த சோகங்களை எழுதினால் அவை இலக்கியம்!!
வாச்சாத்தி சம்பவத்திற்குப் பிறகு சு.ரா.வின் மனதைப் பாதித்த தமிழக அளவிலான சம்பவம்
கொடியங்குளம் கலவரமாம். “”அதை பேச்சிலும் எழுத்திலும் பதிவு செய்து நானும் இது பற்றிக்
கருத்துக் கூறியிருக்கிறேன்” என்று மிகையாகக் காட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லையாம்.
அப்படியெனில், சு.ரா.வின் மனதை அது பாதித்தது என்பதன் நிரூபணம் என்ன? அவரது அன்றாடப்
பணிகளான ஜவுளி வியாபாரம், படைப்பு எழுதுவது, மாலை உலா, இரவில் இலக்கிய அரட்டை,
எல்லாம் செவ்வனே நடக்கும், ஆனால் மனது மட்டும் தென்மாவட்டச் சாதிக் கலவரங்களுக்காக
வருத்தப்படுமாம். மொத்தத்தில் தினசரி செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்து விட்டு பாவம்
என்று “உச்’ கொட்டிவிட்டுத் தனது வேலைகளைப் பார்க்கப் போகும் நடுத்தரவர்க்கத்தின்
உதட்டளவிலான மனிதாபிமானம்தான் இது.
சு.ரா. தனது மூத்த மகள் சௌந்தரா நோயுற்று இறந்ததைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். அதில் தன் மகளுக்கு வந்த
அபூர்வமான நோய் குறித்தும், அதற்கான மருத்துவத்தின் போதாமைகள் குறித்தும், மகளைப்
பிழைக்க வைக்க பிரார்த்தனை மூலம் முயற்சி செய்யும் தனது நண்பர் குறித்தும், அந்தப்
பிரார்த்தனையில் அறியணாவாதியான தான் பங்குபெற இயலாததால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி
குறித்தும் விளக்கி எழுதியிருக்கிறார். துள்ளலும், உற்சாகமுமாய் இருந்த சு.ரா. தனது
மகள் இறந்த பிறகு அடிக்கடி தனிமையிலும், துயரத்திலும் மூழ்கி விடுவதாக ஜெயமோகனும்
எழுதியிருக்கிறார்.
இங்கும் ஜெயமோகனது ஆன்மீகம் சமூகத்துயரத்தை அற்பமானதாகவும், சொந்த வாழ்க்கைத் துயரத்தை
மகத்தானதாகவும் எப்படிச் சித்தரிக்கிறது பாருங்கள்! அவ்வகையில் இந்த ஆன்மீகத்தை
அற்பவாதத்தின் தத்துவம் என்றும் அழைக்கலாம். கொடியங்குளம் என்ற சமூகத் துயரத்தை பேசினாலும்
எழுதினாலும் “மிகை’ என்று ஒதுக்கி விட்ட சு.ரா.வின் இதயம், தனது சொந்த வாழ்க்கைத்
துயரத்தை மட்டும் இந்திய அளவிலான வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்றால் அதன்
இதயத்துடிப்பின் இலக்கணம் என்ன? ஒரு குடிமகனுக்கு இருக்கவேண்டிய கடமையுணர்வும்,
பொறுப்புணர்வும் கூட சு.ரா. என்ற இலக்கியவாதியிடம் இல்லாமல் போனதன் மர்மம் என்ன? இலக்கிய
உன்னதங்களுடைய சமூகப் பொறுப்புணர்ச்சியின் இலக்கணம் இப்படித்தான் இருக்க முடியும் போலும்!
சு.ரா புலவர் மட்டுமல்ல புரவலரும் கூட!
பிறகு ஏன் சு.ரா.வை சாதி மதங்களைத் துறந்தவரென்று அவரது அபிமானிகள் கூறுகிறார்கள்?
ஒரே விடை சு.ரா. தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு இலக்கியவாதிகளை காரில் வரவேற்று,
மேசையில் உணவிட்டு, வீட்டில் தங்கவைத்து, உபசரித்து விருந்தோம்பியிருக்கிறார் என்பதே.
சு.ரா.வின் சாப்பாட்டு மேசையில் சங்கோசத்துடன் சாப்பிட்டதையும், சு.ரா. அதற்கு
நேரெதிராக இயல்பாக உபசரித்துப் பழகியதையெல்லாம் அறிஞர் ராஜ் கௌதமன் போன்றோர் தமது
அஞ்சலிக் குறிப்பில் பதிவு செய்திருக்கின்றனர்.
தமிழக வரலாற்றில் புலவர்களுக்கும் புரவலர்களுக்குமான உறவு வாசகர்கள் எல்லோரும் அறிந்த
ஒன்று. புரவலர்களைத் தேடி வரும் புலவர்கள், புரவலர்களின் இல்லாத நல்லதுகளை இட்டுக்கட்டிப்
பாடிப் புகழ்ந்து பரிசுகளை வாங்கிச் செல்வார்கள். பரிசுகள் தர மறுக்கும் புரவலர்களை
புலவர்கள் மறைமுகமாக வசைபாடுவார்கள். மற்ற புலவர்களை “நீயெல்லாம் புலவனா” என்று
எகத்தாளமாக கேலி செய்வார்கள். சிறு பத்திரிகைகளின் உலகமும் குழுச் சண்டைகளும் இந்த
மரபின் தொடர்ச்சிதான்.
பாடிப் பரிசு பெறுவதும், தூற்றிக் கேலி செய்வதுமான தமிழ் மரபை வரித்திருக்கும் சிறு
பத்திரிக்கை உலகில் சு.ரா. யார்? அவர் புலவராக மட்டுமல்ல, புரவலராகவும்
இருந்திருக்கிறார் என்பதே சரியான விடை. எழுதியதால் அவர் புலவர். தன் எழுத்தை
நிலைநாட்டுவதற்காகப் பலரை வரவேற்று உபசரித்திருப்பதால் அவர் புரவலர். எழுத்தின்
உணர்ச்சியை அவருக்களித்த அதே சுந்தரவிலாசம்தான், அவரது எழுத்தை மற்றவர்கள்
சிலாகிப்பதற்கான விருந்தோம்பலையும் ஒரு சத்திரம் போலச் செய்திருக்கிறது. இதை சலிக்காமல்
செய்து வந்ததற்கு சு.ரா.வின் மனைவி கமலா மாமி போக, கார், பங்களா, சமையல்காரர்
முதலான சகல வசதிகளும் அவருக்கு கைகூடி இருந்தன. ஒரு நிறுவனம் போல தன் எழுத்தை
மற்றவர்கள் வியந்தோதுவதற்கு இத்தகைய மக்கள் தொடர்புத்துறை வேலைகள் சு.ரா.வுக்குத்
தேவைப்பட்டாலும், அதை சலிக்காமல் செய்வதற்கான உபசரிப்பு மனநிலையை அவர் கொண்டிருந்தார்.
இந்த மனநிலையை அவர் போலி கம்யூனிசக் கட்சியுடனான ஆரம்ப காலத் தொடர்பில்
பெற்றிருக்கலாம். விருந்தோம்பும் “அதிதி தேவோ பவ’ உணர்வில் அவர் மற்றவர்களை விட
முன்னணியில் இருந்திருக்கலாம்.
சு.ராவின் ஆர்.எஸ்.எஸ் கனக்ஷனை மறைத்த ஜெயமோகன் எனும் ஸ்வயம்சேவக்!
ஜெயமோகன்
ஜெயமோகன் – படம் 10hot.wordpress.com
சு.ரா. தனது வீட்டிற்கு இலக்கியவாதிகள், பேராசிரியர்கள், போலி கம்யூனிசத் தலைவர்களை
மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சண்முகநாதன் போன்றோரையும் வரவேற்று
உபசரித்திருக்கிறார். மண்டைக்காடு கலவரத்திற்குப் பின் இந்து மதவெறியர்கள் குமரி
மாவட்டத்தில் வேர்விட்ட காலத்தில்தான் சண்முகநாதன் அங்கே அடிக்கடி விஜயம் செய்வார்.
வரும்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போது சுந்தரவிலாசத்திற்கும் செல்வார். சு.ரா.வின்
மகன் கண்ணனும் ஆர்.எஸ்.எஸ்இன் மாணவர் அமைப்பில் இருந்ததாகக் கூறுகிறார்கள். காலச்சுவடின்
அரவிந்தனும் முன்னாளில் ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ்காரர்தான்.
குஜராத் கலவரத்தின்போது, காலச்சுவடு பத்திரிக்கை, இந்துமதவெறி என்று குறிப்பிடாமலே
அதைக் கண்டித்தும், காசு வசூலித்தும் தனது மதச்சார்பற்ற கடமையை ஆற்றியது. இன்னும்
ஜெயேந்திரன் பிரச்சினையில் கூட சங்கரமடம் எப்படி நல்ல மடமாக மாறவேண்டும் என்றுதான்
காலச்சுவடு அருள் வாக்கு அளித்தது. மேலும், பார்ப்பனியத்தின் அடியாளான ‘தினமலர்’தானே
காலச்சுவடின் நிரந்தர விளம்பரப் புரவலர்!
சிறுவனாக இருக்கும்போது கடற்கரைக்குச் சென்ற சம்பவம், அப்போது என்ன சட்டை போட்டிருந்தார்,
பார்த்த சிப்பி ஓட்டின் டிசைன் முதலியனவற்றையெல்லாம் சு.ரா. நினைவு கூர்ந்தார் என்பதைக்
கூரிய அவதானிப்புடன் பதிவு செய்திருக்கும் ஜெயமோகன் மேற்கண்ட ஆர்.எஸ்.எஸ். கனைக்சனை
மட்டும் விட்டுவிட்டார். இது செலக்டிவ் அம்னீஷியாவா, இல்லை தெரிந்தே அழிக்கப்பட்ட வரலாறா?
முக்கியமாக, இந்த வரலாற்றில் சு.ரா.வைவிட ஜெயமோகனுக்குத்தான் முதன்மைப்பங்கு உள்ளது.
ஜெயமோகனது இலக்கிய வாழ்க்கை ஆர்.எஸ்.எஸ்.உடனும், சு.ரா.வுடனும் சேர்ந்தேதான்
ஆரம்பித்தது. சு.ரா.வுக்கான அஞ்சலிக் குறிப்பில் தனது மனைவி, மகன், வீட்டுநாய் ஹீரோ
போன்றவர்களையெல்லாம் இடம் பெறச் செய்த ஜெயமோகன் தனது ஆர்.எஸ்.எஸ். பாத்திரத்தை மட்டும்
திட்டமிட்டு மறைத்திருக்கிறார். அப்புறம் சு.ரா.வின் வழிகாட்டலில் அவர் நவீன இலக்கியம்
கற்று எழுத ஆரம்பித்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் விஜயபாரதத்திலும் சில ஆண்டுகள்
எழுதியிருக்கிறார். அவரது ஆர்.எஸ்.எஸ். தொடர்பு குறித்தும் அதன் பத்திரிக்கையில்
எழுதுவது குறித்தும் சு.ரா. என்ன கருத்து தெரிவித்தார் என்பதையெல்லாம் அவர் தந்திரமாக
சுய தணிக்கை செய்து விட்டார். சு.ரா. இல்லத்திற்கு நல்லகண்ணு வந்தபோது சு.ரா.
ஜெயமோகனை வீட்டிற்கு அழைத்தாராம். அதேபோல சண்முகநாதன் வந்தபோது அழைத்தாரா,
சண்முகநாதனுடன் பேசியதை ஜெயமோகனிடம் சு.ரா. பகிர்ந்து கொண்டாரா என்பதெல்லாம்
“நினைவின் நதி’யில் வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.
ஜெயமோகனின் ஆழ்மனம் வரை பதிந்திருக்கும் கடைந்தெடுத்த கம்யூனிச வெறுப்பும், சநாதனச்
சார்பும் அவரது சங்கபரிவார் தொடர்பில்தான் உருவாகியிருக்க வேண்டும். காசர்கோடில் போலி
கம்யூனிச தொழிற்சங்கத்தின் கம்யூனில் தங்கியதை வைத்து, (நாலு பேர் சேர்ந்து ரூம் எடுத்துத்
தங்குவதெல்லாம் கம்யூன் என்றால் திருவல்லிக்கேணி முருகேசநாயக்கர் மான்சனில்
தங்கியவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகளே) கம்யூனிசம், கட்சி நடைமுறை, தோழர்களின் உளப்பாங்கு
ஆகியவற்றைக் கரைத்துக் குடித்ததாக மனப்பாங்கு கொண்டு அதையே கற்பனையில் ஊதிப் பெருக்கி
பின்தொடரும் நிழலின் குரல் என்று ஒரு கம்யூனிச வெறுப்பு நாவலையே எழுதிவிட்டார்.
இதற்கு அதிகமாகவோ நிகராகவோ ஆர்.எஸ்.எஸ். அனுபவமும் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.
மேலும் விஜயபாரதத்திற்கு அவர் எழுதியதை வைத்துப் பார்த்தால் அவருக்கு சங்கபரிவாரின்
தமிழகத் தலைமையுடனும் நெருக்கம் இருந்திருக்க வேண்டும்.
இந்த அனுபவத்தை வைத்து, குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலீம் மக்கள் கொல்லப்பட்ட
இனப்படுகொலையை இணைத்து, அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு நாவல் மேலோட்டமாகவேனும்
எழுதியிருக்கலாம் அல்லவா? பல ஆண்டுகளுக்கு முந்தைய புகாரின் கதையையெல்லாம்
ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ரசியாவிலிருந்து பொய்யுடனும்,
புனைவுடனும் இழுத்து வந்து எழுதியவருக்கு, அருகிலிருக்கும் குஜராத்தில் இந்தியாவே
வெட்கித் தலைகுனியும் வண்ணம் நடந்த ஒரு படுகொலையை அறிந்து கொண்டு எழுத மனம்
வரவில்லையே, ஏன்? ஒருவேளை விஷ்ணுபுரம் நாவலை வெளியிடுவதற்கும், விநியோகிப்பதற்கும்
உதவிய ஸ்வயம் சேவகர்களுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்ற நன்றியுணர்வு காரணமாக
இருக்கலாம். அல்லது ஆர்.எஸ்.எஸ்.இன் தமிழ்நாட்டுப் புரவலர்களில் ஒருவராக இருக்கும்
பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற தரமான ரசிகர்களை இழக்க நேரிடும் என்ற பயம் கூடக் காரணமாக
இருக்கலாம். அத்துடன் உலக முதலாளித்துவச் சந்தையில் தண்டியான கம்யூனிச எதிர்ப்பு
நாவல்களுக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்ற காரியவாதக் காரணமும் சேர்ந்திருக்கலாம்.
இன்றைக்கு இந்து மதவெறியர்கள் மிகவும் அம்பலப்பட்டுள்ள நிலையில் ஜெயமோகன் தனது இமேஜை
தோற்றத்தில் மாற்றியிருக்கலாம். “இந்திய அரசியலில் கம்யூனிசக் கட்சிகள்தான் சற்றே நம்பிக்கை
தரும் வகையில் செயல்படுகின்றன” என்ற சு.ரா.வின் வாக்குமூலத்தை வழிமொழியலாம்; அல்லது
“நான் சி.பி.எம்.முக்குத்தான் ஓட்டுப் போடுகிறேன்” என்றும் ஜெயமோகன் சொல்லலாம். ஆனால்
அவையெல்லாம் இலக்கியமல்லவே. ஒரு இலக்கியவாதியை அவரது படைப்பை வைத்துத்தான் மதிப்பிட
வேண்டும் என்பதுதானே இலக்கியவாதிகளின் கொள்கை. எங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட
வரலாற்றுக் காலகட்டத்தில் ஒரு இலக்கியவாதி எதைப்படைத்தான் என்பதை வைத்து மட்டுமல்ல, எதைப்
படைக்கவில்லை என்பதை வைத்தும் மதிப்பிட முடியும் என்கிறோம்.
தனது இளமைப்பருவத்தையும், ஆதர்சநாயகன் மற்றும் போலி இலக்கியவாதி ஜே.ஜேவையும் தேடி
கேரளாவுக்குப் போன சு.ரா தான் வாழ்ந்த குமரிமாவட்டத்தின் இந்து மதவெறியர்களை எதிர்த்து
தனது படைப்பில் ஒரு சொல்லைக்கூடச் சேர்க்கவில்லை எனும் போது சீடப்பிள்ளை மட்டும் என்ன
செய்யமுடியும்? ஆகவே எப்படிப் பார்த்தாலும் சு.ராவும் சரி, அவரது தலைமைச் சீடரும் சரி
போலி மார்க்சிய ஆதரவு என்ற பெயரில் கம்யூனிச வெறுப்பும், இன்னொருபுறம் தீவிரமான
பார்ப்பனிய ஆதரவும் கொண்ட மேட்டிமைத்தனமான இலக்கியவாதிகள் என்றுதான் அறுதியிட
முடியும். எழுதியவற்றுக்கும், எழுதாதவற்றுக்கும் இடையில் உள்ள இடைவெளியிலிருந்தும் ஒரு
படைப்பாளி யாரென்பதை நாம் கண்டுபிடிக்க முடியும்.
துக்ளக் சோவின் இலக்கிய பிரதிநிதி சு.ரா!
சோ ராமசாமி சுந்தர ராமசாமி
சோ ராமசாமி – சுந்தர ராமசாமி
மதுரை இறையியல் கல்லூரியில் ஒருநாள் தங்கியிருந்த அனுபவத்தை சு.ரா. பின்வருமாறு
சொன்னாராம். “காலம்பற கதவைத் திறக்கிறேன், கொழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக்
குடுக்கிறாங்க. ஓ…ன்னு கத்தி பாடறதுகள். “எங்களை ஹரிஜன்னு சொல்ல நீ யாருடா கேடுகெட்ட
நாயே’ன்னு… கண்ணீர் வந்துடுத்து. அதுகளுக்கு என்ன தெரியும்? என்ன படிச்சிருக்கும்ங்க?
ஆராய்ந்து பாக்கிற பக்குவம் இருக்குமா? ஏதோ சாப்பாடு, எடம் இருக்குன்னு வந்து படிக்கிற
ஏழைகள். மனசில ஆழமா வெறுப்பை உட்கார வைச்சாச்சு. அது மாறவே மாறாது. காந்தி மேல
மட்டுமில்ல, காந்தியை ஐடியலா வைச்சிருக்கிற இந்த தேசம் மேலேயே வெறுப்பு… அதனால்
யாருக்கு என்ன இலாபம்? அன்னியப்பட்டுப் போன ஒரு தனி சமூகம் உருவாகும்ங்கிறத விட்டா என்ன
நடக்கும்? யாரு இதையெல்லாம் பிளான் போட்டு செய்றா? புரியலை…”
இதை பிளான் போட்டுச் செய்தது வேறு யாருமல்ல, நாங்கள்தான். இந்தப் பாடல் நாங்கள்
வெளியிட்டிருக்கும் ‘அசுரகானம்‘ என்ற பாடல் ஒலிப்பேழையில் உள்ள பாடலின் சரியான வரி…
“”ஆயிரங்காலம் அடிமை என்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே..” என்று வரும்.
இந்தப் பாடல் ஒலிப்பேழை பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய மாதங்களில் இந்து மதவெறியை
எதிர்த்து வெளியிடப்பட்டது. இந்தப் பேழை உழைக்கும் மக்களையெல்லாம் இந்துக்கள் என்று
சித்தாந்த ரீதியாக அணிதிரட்டிய ஆர்.எஸ்.எஸ்இன் வருணதர்ம மோசடியைக் கூர்மையாக
அம்பலப்படுத்தியது. அக்கிரகாரம், சேரி என்று பிரித்து வைத்து இழிவாக நடத்தியது,
அப்துல்காதரா, அனந்தராமய்யரா என்று உண்மையை எள்ளலுடன் கேள்வி கேட்டது. நந்தன், ஏகலைவன்,
சம்பூகன் போன்ற பார்ப்பனியத்தால் தண்டிக்கப்பட்ட வரலாற்று மாந்தர்களின் கதைகளை உழைக்கும்
மக்களுக்கு நினைவுபடுத்தியது. முசுலீம்களைத் தோற்றத்திலும், சாரத்திலும் துரோகிகளாகச்
சித்தரிக்கும் இந்து மதவெறியர்களின் சதியை எடுத்துக் காட்டியது.
சு.ரா. குறிப்பிட்டதாக ஜெயமோகன் பதிவு செய்திருக்கும் இந்தப் பாடல் பல நூற்றாண்டுகளாகத்
தாழ்த்தப்பட்ட மக்களைப் பஞ்சமரென்று இழிவுபடுத்தி விட்டு இப்போது அரிஜன் என்று அழைக்கும்
காந்தி, காங்கிரஸ், பா.ஜ.க.வின் பார்ப்பனமயமாக்கத்தை நூறாண்டுக் கோபத்துடன் கேள்வி
கேட்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களிடமும் பெரும்
வரவேற்பைப் பெற்றது இந்தப் பாடல். எல்லா தலித் இயக்கங்களும் இந்தப் பாடலையே தமது தேசிய
கீதம் போல அங்கீகரித்து மேடைகள் தோறும் பாடினர். தங்கள் வரலாற்றுத் துயரத்தை
போர்க்குணத்துடன் வெளிப்படுத்தும் இந்தப் பாடலை தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் இதயத்தில் வைத்துப்
போற்றினர். இந்தப் பாடல் ஒலிப்பேழைகளின் விற்பனை பல ஆயிரங்களைத் தாண்டியிருக்கும்.
இதன் தொடர்ச்சியாக திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ்மக்கள் இசைவிழா போன்ற
நிகழ்வுகள் இந்து மதவெறியர்களை உழைக்கும் மக்களிடமிருந்து கருத்து ரீதியாகத்
தனிமைப்படுத்தின. பார்ப்பன இந்து மதவெறியர்களை எதிர்த்த எமது போராட்ட வரலாறு அவர்களை
எப்படி வெல்ல முடியும் என்ற பாடத்தை, புரிதலை இந்திய அரசியல் அரங்கில் முதன்முதலாகச்
செய்து காண்பித்தது. பார்ப்பனியத்தை நெஞ்சில் ஏற்றிப் போற்றி வைத்திருக்கும் சு.ரா.
ஜெயமோகன் போன்றோருக்குத்தான் இந்தப் பாடல் கடுங்கசப்பை ஏற்படுத்த முடியும். இந்த உண்மையை
ஆய்வுகள் ஏதுமின்றியே எமது பாடல் ஒன்று போகிற போக்கில் நிரூபித்திருப்பது குறித்து
உண்மையில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சு.ரா.வின் அரசியல் சமூகப் பார்வை என்பது துக்ளக் சோ ராமஸ்வாமியிடம் கற்றுக்
கொண்டதுதான். சோவை அவர் முக்கியமான அரசியல் விமர்சகராகக் கருதியதைப் பதிவு
செய்திருக்கிறார். காந்தி நல்லவர், காமராஜ் ஆட்சி பொற்காலம், தமிழகத்தை திராவிட
இயக்கம்தான் சீரழித்தது… போன்ற சோவின் கருத்துக்களை சு.ராவும் பல இடங்களில்
பிரயோகித்திருக்கிறார். எனினும், சோவை ஒரு பாசிஸ்ட் என்று அழைப்பது போல சு.ராவை நாம்
அழைக்க முடியாது. ஏனென்றால் சு.ரா.வின் அரசியல் சிந்தனையில் கோமாளித்தனமும் பாசிசமும்
பிரியுமிடத்தை நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. “”திராவிட இயக்கத்துக்கும்
இலக்கித்துக்கும் சம்பந்தமே கிடையாது, கம்யூனிஸ்டுகள் இலக்கிய விரோதிகள்” என்பவை
சு.ராவின் புகழ் பெற்ற பத்து கருத்துகளில் முக்கியமானவை. அரசியல்வாதிகள் இலக்கியத்தில்
நுழைந்தால் பூசையறையில் நுழைந்த பன்றிகளாக அவர்களைக் கருதி உறுமுவது, சு.ரா.
குருகுலத்தின் மரபு.
ஆனால் அரசியல் சமூக விவகாரங்களில் தெக்கு வடக்கு தெரியாத இந்தக் கோமாளிகள் பாட்டாளி
வர்க்கச் சர்வாதிகாரம் பற்றி விமர்சிப்பார்கள். ‘பெரியார் எதிர்மறை அரசியல், காந்தியிசம்
நேர்மறை அரசியல்’ என்று உளறுவார்கள். இப்படி உலக விவகாரங்கள் அனைத்திற்கும் தம்மைத்தாமே
அத்தாரிட்டிகளாக நியமித்துக் கொள்வது பற்றி இவர்கள் எள்ளளவும் கூச்சப்பட்டதுமில்லை.
சு.ரா.விடம் நட்பு கொண்டிருந்த அனைவரும் அவரது பெரியமனிதத் தோரணை காரணமாக, தமது
வாழ்க்கைப் பிரச்சினைகளை அவரிடம் சொல்லி மனச்சமாதானம் அடைந்திருக்கின்றனர். சொந்தப்
பிரச்சினைகள் பற்றி யாரிடமாவது வாய் திறந்தால், அதையும் அச்சிலேற்றி அசிங்கப்படுத்தி
விடுவார்களோ என இலக்கியவாதிகள் ஒருவரையொருவர் ஐயுறும் ஆவிகள் நிறைந்த சிற்றிலக்கியச்
சூழலில், சு.ரா. மட்டும் பாவ மன்னிப்புக் கூண்டில் காதை வைத்திருக்கும் பாதிரியாரைப்
போல பலருக்கும் ஆறுதலளித்து வந்தார். அவருடைய இலக்கிய அந்தஸ்தைத் தீர்மானித்த காரணிகளில்
புரவலர் பாத்திரத்துக்கு இணையானது இந்தப் பாத்திரம்.
கவிஞர் சல்மா, சு.ராவுக்கான தனது அஞ்சலிக் குறிப்பில், “”ஒருமுறை என் கணவர் என்னை
அடித்து விட்டதாக நான் எழுதிய கடிதத்தைக் கண்டு தொலைபேசியில் அழைத்து, “”ஏம்மா, உங்கள
அடிக்க அவருக்கு எப்படி மனம் வந்தது” என்று கேட்டவரின் குரலில் உணர்ந்த துயரம் எனக்கு
வாழ்நாள் முழுக்கத் தேவையான குற்றவுணர்வை இன்றும் தந்து கொண்டிருக்கிறது” என்று
எழுதியிருக்கிறார். இதையே சல்மா ஒரு இலக்கிய அறிவற்ற பெரியவர் யாரிடமாவது
கூறியிருந்தால், அவர் சல்மாவின் புருசனைக் கூப்பிட்டு எச்சரித்திருப்பார். விவகாரம்
பஞ்சாயத்து செய்யப்பட்டிருக்கும். அல்லது போலீசுக்காவது போயிருக்கும். சு.ரா.விடம்
சொன்னதில் பயனென்ன? வாங்கிய அடி போதாதென்று போனசாக குற்றவுணர்வு! உலகப்
பிரச்சினைகளுக்கெல்லாம் விடை சொல்லும் சு.ரா.விடம் சல்மாவின் பிரச்சினைக்கு ஏன்
தீர்வில்லை? ஏனென்றால் சு.ரா.வின் அந்த புகழ் பெற்ற பத்து கருத்துக்களில் இந்த சிக்கலான
பிரச்சினைக்குத் தீர்வில்லை.
ஒரு மென்மையுள்ளம் கொண்ட முதியவரை, இப்படி ஏளனம் செய்வதா என அவரது அபிமானிகள்
வருந்தலாம். இந்த குரு சிஷ்ய கோழைகள், கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தைக் கேலி
செய்து சிரித்ததை ஜெயமோகன் தனது நூலில் குறிப்பிடுகிறார். அச்சுத மேனனும்
இ.எம்.எஸ்ஸும் கையில் துப்பாக்கியுடன் தடுப்பரணின் பின்னே அமர்ந்திருக்கும் காட்சியைக்
கற்பனை செய்து இவர்கள் கண்ணீர் வருமளவு சிரிப்பார்களாம். கொத்தி எடுக்கவேண்டிய அளவுக்கு
உடல் முழுவதும் பார்ப்பனக் கொழுப்பு நிறைந்த இந்த அற்பர்கள் விசயத்தில் இரக்கம் காட்டுவது
அபாயகரமானது.
சு.ராவுக்கான அஞ்சலி முகாந்திரத்தில் எழும் ஜெயமோகனது சுயசொறிதல்கள்!
ஜெயமோகன்
ஜெயமோகன்
கட்டுரையின் இறுதிப்பகுதியை நெருங்கிவிட்டபடியால் ஜெயமோகனது “நினைவின் நதி’ என்று
பெயரிடப்பட்ட அற்பவாதக் குட்டையை கடைசியாக ஒருமுறை மூக்கைப் பொத்திக் கொண்டு பார்த்து
விடலாம். இந்த நூலில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்று இரண்டு பார்வைகள் உள்ளன.
கிட்டப்பார்வையில் சு.ராவின் அற்பமான வாழ்க்கை ரசனை விசயங்களும், தூரப்பார்வையில்
சு.ராவைவிட ஜெயமோகன் எப்படி ஒரு பெரிய எழுத்தாளர் ஆனார் என்பதும்
பதிவாகியிருக்கின்றன. இடையில் குட்டையின் நாற்றத்தை அடக்குவதற்கு சு.ராவின் சாதாரண
மனிதாபிமான நடவடிக்கைகள், பதிவுகள் அசாதாரணமாக்கப்பட்டு ஆங்காங்கே தூவப்பட்டிருக்கின்றன.
“சிற்றிலக்கியவாதிகளின் அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்” என்று பறைசாற்றுவதற்காகவே
சு.ராவின் இறப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன். அவரது தன்னெழுத்துத்
தற்காதலியத்தை இலக்கிய வாசிப்பு மனங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கென்றே இந்த நூல் வெகு
அவசரமாக எழுதப்பட்டிருக்கிறது. இருவருக்கும் நடந்த உறவு, பிரிவு, போராட்டம் அனைத்தும்
தங்கப்பதக்கம், கௌரவம் ரேஞ்சுக்குச் செதுக்கப்பட்டுள்ளது. சென்டிமென்டுக்கு வீழப்
பழகியிருக்கும் வாசிப்பு மனம் இதை மாபெரும் பாசப் போராட்டமாய்க் கற்பிதம் செய்து
கொள்ளும். உண்மையில் இருவருக்கும் நடந்த பிரச்சினை என்ன? சு.ரா.வைத் தேடி ஜெயமோகன்
வந்தார். அவர் உதவியால் இவர் எழுத்தாளரானார். நாவல்கள் எழுதினார். சீடன் தன்னை விஞ்சுவதாக
எண்ணியபோதெல்லாம் குரு அஞ்சினார். அவர் அஞ்சும் தருணங்களுக்காகவே காத்திருந்து இவர்
குரூரமாக ரசித்தார். “தான் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்’ என்பதை குருவின்
வாயிலிருந்தே வரவழைக்க ஜெயமோகன் அவரது தொண்டை வரை விரலை விட்டு நோண்டினார். ரத்தம்
கக்கிய குரு சத்தம் போடாமல் அமெரிக்காவுக்குத் தப்பினார். இந்த வரலாறு எதுவும் எங்கள்
சொந்தச் சரக்கு அல்ல, ஜெயமோகன் தந்த சரக்குகள்தான்.
இந்தக் குட்டை முழுவதும் எஸ்ரா பவுண்டு, கீஸ்லர், டால்ஸ்டாய், தஸ்தாவ்ஸ்கி முதலான உலக
இலக்கியவாதிகள், நல்லகண்ணு, இ.எம்.எஸ்., காந்தி முதலான அரசியல்வாதிகள், க.நா.சு.,
லா.ச.ரா போன்ற உள்ளூர் இலக்கியவாதிகள், பட்டுப்புடவை, சினிமா போஸ்டர் முதலான ஜடப்
பொருட்கள் போன்ற அனைத்தையும் தமது தத்துவ வாளால் கலக்குகிறார்கள் குருவும் சீடரும். ஆனால்
தத்தம் சொந்தப் படைப்புகள் பற்றிய விவாதமோ, கருத்துப் பரிமாற்றமோ வரும்போது மட்டும் ஒரு
மகாமவுனம் இருவர் மீதும் கவிந்து விடுகிறது. அந்த மவுனத்தின் ஊடாகவே ஒரு எழுதப்படாத
உடன்பாடு அவர்களுக்கிடையில் கையெழுத்தாகி விடுகிறது. “”என்னைப் பற்றி நீ பேசாதே,
உன்னைப் பற்றி நான் பேசவில்லை. உலகத்தைப் பற்றி நாம் பேசுவோம்” என்பதே அந்த
உடன்படிக்கையின் சாரம். அதுவும் வெகு நாள் நீடிக்க முடியவில்லை. நாச்சார் மட விவகாரமாக
வெளியே வந்து புழுத்து நாறியது.
வாழ்க்கையில் தமது குறை நிறைகளை மனம் திறந்து பரிசீலிக்கும் சாதாரண உழைக்கும் மக்களிடம்
நிலவும் நாகரிகம் கூட இல்லாத இரண்டு அற்பங்கள், தமிழிலக்கிய உலகில் முடி சூட்டிக்
கொள்வதற்காக இலக்கியப் போர் புரிந்ததும், இந்த ஆபாசத்தை ஷகீலா பட ரசிகனின்
கிளுகிளுப்புணர்ச்சியோடு பார்த்து ரசித்துப் பரிமாறிக் கொள்ளும் கும்பல் தன்னை
“சிற்றிலக்கிய உலகம்’ என்று பெருமையுடன் அழைத்துக் கொள்ள முடிவதும்தான் தமிழ்நாட்டின்
ஆகப்பெரும் அவமானங்கள்.
_________________________________________________________________________________________
– இளநம்பி,

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 21, 2015, 9:20:38 AM6/21/15
to brail...@googlegroups.com
மேல் பார்வை –
சுந்தரராமசாமி – சிறுகதைத் தொகுப்பு

=====================

நிர்மால்யா வெளியீடு,

48, முதலியார் தெரு,

கிருஷ்ணன் கோவில்,

நாகர்கோவில் – 629001
=====================
சுந்தரராமசாமி பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.
ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. மற்றச் சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து இந்தத் தொகுப்பு
மாறுபட்டிருப்பதற்கு ஒரு காரணம், இதிலுள்ள கதைகள் எழுதப்பட்ட வருடங்கள். 1953 தொடங்கி
1990 வரையிலான வருடங்களில் வெவ்வேறு காலங்களில்

எழுதப்பட்ட கதைகள் புத்தகத்தை அலங்கரிக்கின்றன.
எழுதத்தொடங்கும்போது சுந்தரராமசாமியின் எழுத்து மிக வித்தியாசமானதாக
இருந்துவிடவில்லை என்பதை அறிய முடிகிறது. ஆனால் 1990ம் ஆண்டில் எழுதப்பட்டு
இந்தியாடுடேவில் வெளியாகிய மேல்பார்வை கதையில் அவரது எழுத்தின் நவீனம் தெரிகிறது.
வெவ்வேறு காலகட்டங்களில் அவரது எழுத்து எப்படி மாறிக்கொண்டேயிருந்திருக்கிறது என்பதை
அவதானிக்க விரும்புகிறவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.
முதல் கதையாகத் தண்ணீர். 1953ல் எழுதப்பட்டது. மழையில்லாமல் வாடும் பயிர்களுக்குத்
தண்ணீரில்லை. ஆனால் அந்த வருடத் தெப்போற்சவத்துக்காகத் தண்ணீர் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
அதை அறிந்து கொதித்தெழும் மக்கள் மறைத்துவைக்கப் பட்டிருந்த நீரின் வரப்பை உடைத்து
பயிருக்குத் திருப்பி விடுகிறார்கள். போலீஸ் வந்து ‘கலகக்காரர்களைக்’ கொண்டு செல்கிறது.
கதை இவ்வளவுதான். சில இடங்களில் அழகான அங்கதம் தெரிகிறது. நெல்லை வட்டார வழக்கு
எல்லாக் கதைகளிலும் மாதிரி இதிலும் அழகாகக் கையாளப்பட்டிருக்கிறது.
அடுத்த கதை கோவில் காளையும் உழவு மாடும். 1955ல் எழுதப்பட்டது. தொலைதூரத்திலிருந்து
வரும் கிழவன் ஒருநாள் இராத்தங்க கோவில் பண்டாரத்திடம் அனுமதி கேட்கிறான். பின்
நிரந்தரமாகத் தங்கி விடுகிறான். அந்தக் கிழவன் யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாளாய்
கிணறு தோண்டுகிறான். உடம்பு மிக மோசமாகி, தான் தோன்றிய கிணற்றில் ஊறிய நீரைப்
பருகிவிட்டு, கண்ணை மூடுகிறான். கதை விவரிக்கப்பட்ட விதம் மிக அழகு. கூடவே இருக்கும்
பண்டாரத்தின் மன மாற்றங்களும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்த கதை சன்னல். 1958ம் வருடம் எழுதப்பட்டது. எல்லாக் கதைகளைப் படித்த பின் மனதுக்குள்
ஊடுருவிக்கொண்டு, கீழே இறங்க மறக்கும் கதைகளுள் முதன்மையானது சன்னல் கதை. படுத்த
படுக்கையாகக் கிடக்கும் ஒருவனின் மன ஓட்டங்கள் தான் கதை. ஒரு குளவி நெஞ்சில்
விழுந்துவிட, கத்த முடியாமல், கை கால் அசைக்க முடியாமல் அவன் பதறும் காட்சிகள்
படிப்பவர்கள் மனதுக்குள் பெரும் போராட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படியிருக்கும் அந்த
‘அவனுக்கு’ ஒரே ஒரு ஆறுதல் சன்னல். சன்னல்தான் உலகம். சன்னல் வழியாக வெளியில் நிகழும்
காட்சிகளைக் காண்பது மட்டுமே அவனுக்கு வாழ்க்கை. மூங்கிலை வண்டு ஓட்டை போடுவதையும்,
ரோஜாவைத் திருடிப் பால்செம்பில் போட்டுக்கொள்ளும் பால்காரி மகளையும், கன்றுகளாக நட்ட
வாழைகள் மரமாகிச் செழித்து நிற்பதையும் பார்த்துப் பார்த்துச் சந்தோஷிக்கும் அவனது
வாழ்க்கையில் ஒரு இடி விழுகிறது. சன்னல் வழியாக வீசும் தணுப்புக் காற்று உடலுக்காது
எனத் தடுப்புச் சுவர் எழுப்புகிறார்கள். அவனது அழுகையோடு கதை முடிகிறது. வாச்கர்கள்
மட்டும் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். கதையின் எளிமையும் உணர்வும்
மனது மறக்காத கதையாக்குகின்றன. (இதே கதையை சல்மாவும் அவரது நேர்காணலில்
பாராட்டியிருந்தார்.)
அடுத்தது ஸ்டாம்பு ஆல்பம். (1958) பள்ளி மாணவர்களுக்கு மாணவப்பருவத்தில் ஏற்படும்
அசூயையையும் அதன்காரணமாக நிகழும் சில நிகழ்வுகளையும் சொல்லும் கதை. தனது ஸ்டாம்பு
ஆல்பத்தை விட இன்னொருவனின் ஸ்டாம்பு ஆல்பம் அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வதைப்
பொறுக்காமல் எரித்துவிடும் சிறுவன் அதற்காக வருந்துகிறான். தாந்தான் எரித்தது எனக்
கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோமோ என்று பயப்படுகிறான். எரித்த தவறுக்காக வருந்தி, தனது
ஆல்பத்தை மனமில்லாமல், இன்னொருவனுக்கு விட்டுக்கொடுக்கிறான். எந்தவிதச் சிக்கலுமில்லாமல்
எளிமையாகப் பயணிக்கும் கதை. சிறுவர்களின் பேசும் விதமும் பேச்சும் வெகு நேர்த்தியாகச்
சொல்லப்பட்டிருக்கின்றன.
சீதைமார்க் சீயக்காய்த்தூள். பணத்துக்காக சீதையை ‘எடுப்பாக’ வரையச் சொல்லும் கதை. அங்கதமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. வறுமையிலும் நியாயம் பேசும் கலைஞன் காட்டப்பட்டிருக்கிறான்.
வட்டார வழக்குத்தான் கதையை தூக்கிப்பிடிக்கிறது. மற்றபடி கதையில் ஆழமாக ஒன்றுமில்லை.
ஆனாலும் எழுதின வருடம் 1959 என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
சன்னல் கதையை அடுத்து மனதைத் தொடும் இன்னொரு கதை. எங்கள் டீச்சர். (1962). மிக
நெருக்கமானத் தோழிகளாக இருக்கும் இரண்டு டீச்சர்கள் ஒரு சின்ன நிகழ்வில் பிரிகிறார்கள்.
மோசமான வகுப்பைத் தனது திறமையால் ஒரு டீச்சர் முதன்மையாகத் தூக்கி நிறுத்த, இன்னொரு
டீச்சர் பொறாமையில், கேள்விகளைச் சொல்லித் தந்து முதன்மை பெறச் செய்துவிட்டாள் குற்றம்
சாட்டுகிறார். நேர்மையான டீச்சர் நொறுங்கிப் போகிறார். வெளியூரில் கேள்விகள் தயாராகும்
அடுத்த தேர்வில் தனது மாணவர்களை மீண்டும் முதன்மை பெறச் செய்து தனது

நேர்மையையும் தனது மாணவர்களின் திறமையையும் நிரூபிக்க ஆயத்தமாகிறார். எதிர்பாராத
விதமாக அந்தத் தேர்வில் தவறிழைக்கும் தனது மாணவிக்கு, மறைமுகமாகச் சொல்லித் தர
முனையும்போது கையும் களவுமாகப் பிடிக்கப்படுகிறார். தவறை ஒத்துக்கொண்டு வேலையை விட்டே
போய்விடுகிறார் நேர்மையான டீச்சர். கதையில் இரண்டு

டீச்சர்களுக்கிடையேயான அன்னியோன்யமும் நட்பும், ஒரே ஒரு அசூயையில் (பொறாமை)அது உடைந்து
போவதும் எந்தவித மேல்பூச்சுகளும் இல்லாமல் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தனது
மாணவி மீண்டும் வென்றே

ஆக வேண்டும் என்ற நினைப்பில், “நேரமிருக்கிறது. சரி பார்” என இரண்டு மூன்று முறை
நிர்பந்திக்கும்போது நமக்கே அந்த டீச்சரின் மீது பச்சாதாபம் தோன்றி விடுகிறது. நடையின்
வெற்றி.
விகாசம். 1990ல் எழுதப்பட்ட கதை. கண் தெரியாத ராவுத்தருக்கு ஒரு திறமை. நொடியில்
கணக்குப் போடுவார். அவர் இல்லையென்றால், ஓணத்தின் பரபரப்பான ஜவுளி வியாபாரத்தைச்
சமாளிக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் தேவை இருந்தது. எதிர்பாராத விதமாய்
அவருக்குப் பெரிய இடி ஒன்று கால்குலேட்டர் வடிவில் வந்து சேர்கிறது. அவரை
பெயர்த்துகிறது கால்குலேட்டர். அவரின் முக்கியத்துவம் குறைவதாக உணர்கிறார். சிப்பந்திகள்
தொகையைச் சொல்ல, முதலாளி கால்குலேட்டரைத் தட்ட, வியாபாரம் கனஜோராக நடக்கிறது. யாரோ
ஒரு சிப்பந்தி விலையைத் தவறாகச் சொல்ல, அதை திருத்துகிறார் ராவுத்தர். தவறாகச்
சொல்லப்படுவது கால்குலேட்டருக்குத் தெரியாது என்பதை உணர்கிறார் முதலாளி. ஸ்டாக் விவரம்,
கரண்ட் பில் என்று கட்டவேண்டும் என்பன போன்ற விவரங்களைச் சரியாகச் சொல்கிறார் இராவுத்தர்.
கால்குலேட்டர் வருவதற்கு முன்பு ‘கால்குலேட்டராக’ இருந்த இராவுத்தர் அதன் வரவுக்குப்
பின்னர் மானேஜராகிறார் என்பதோடு முடிகிறது கதை. தன்னை மிஞ்ச ஆள் கிடையாது என்ற போது
இராவுத்தரின் நக்கலும் குத்தலும் திமிரும், திடீரென ஒருநாள் அவரது பேத்தி, அவரை விட
வேகமாகக் கணக்கைச் சொல்ல, அதிரும் இடமும் அதற்குக் காரணம் கால்குலேட்டர் என்று அறிந்து
அதைத் தொட்டுப் பார்த்துப் பயப்படும் இடமும் அருமை. கால்குலேட்டர் எல்லாக் கணக்கையும் செய்யத்
தொடங்கும்போது நக்கல், குத்தல் பேச்சில்லாமல் நடைபிணமாகிறார். கால்குலேட்டர் செய்ய
முடியாத காரியங்களை அவர் செய்யத் தொடங்கும்போது மீண்டும் நக்கல், குத்தல் எல்லாம் வந்து
சேர்கிறது அவருக்கு. கடைசியாக, “இப்போ இப்ராஹிம் ஹசன் ராவுத்தர் கணக்கு மிஷின் இல்லே.
மானேஜர். ஆண்டவன் சித்தம்” என்று இராவுத்தர் சொல்வது நச் கமெண்ட்.
அடுத்த கதை மேல்பார்வை. 1994-95ம் ஆண்டுக்கான இந்தியாடுடே ஆண்டுமலரில் வெளியான கதை.
இதுவரை கதைகளில் இல்லாதிருந்த கதைக்களம் பற்றிய விவரிப்புகள் அதிக அளவில் இடம்
பெறுகின்றன. எழுத்தில் நவீனம் தெரிகிறது. கூடைப்பந்தாட்டம்தான் கதை. அதன் நடுவர் ஒரு
பெண். மைதானத்தில் அந்தப் பெண்ணின் வேகத்தால் கிராம மக்கள் வசீகரிக்கப்படுகிறார்கள்.
கடைசியில் அதிகம் உணர்ச்சிவசப்பட்ட கிழவி ஒருத்தி, ஆட்டத்தில் நடக்கும் தவறை
சுட்டிக்காட்டி, சரியான தீர்ப்பைச் சொல்லும் நடுவர் பெண்ணுக்குப் பாராட்டைத் தெரிவிக்கிறாள்.
ஆட்டத்தைப் பார்க்கும் கிழவியின் கமெண்ட்கள் கிராமத்தை கண்முன் கொண்டுவருகின்றன. இந்தக்
கதையில் வரும் சில வரிகளைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். “செப்பனிடப்பட்ட ஒரு
படியின் மீது சிமெண்ட் காய்வதற்கு முன் கெட்ட வார்த்தை ஒன்றை ஒரு கை எழுதி
வைத்திருக்கிறது. அதன் இருப்பு கஷ்டம். அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பதில் அடையும் தோல்வி
அதைவிடக் கஷ்டம்”. பலமுறை நான் அனுபவித்த விஷயம் இது.
பக்கத்தில் வந்த அப்பா. கடைசி கதை. 1987ல் எழுதப்பட்டது. தொலைபேசி பிரபலாமாகாத
காலத்தில் அப்பாவுக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. சிறுவயது மகன் கூடச் செல்கிறான்.
அப்பாவுக்குத் தொலைபேசியில் பேசத் தெரியாமல் போகவே மகன் பேசுகிறான். அவனது பெரியப்பா
இறந்த செய்தியை அப்பாவுக்குச் சொல்கிறான். அப்பா இடிந்து போகிறார். வரும் வழியெல்லாம்
அழுது புலம்புகிறார், தன் பாசமான அண்ணன் மறைவுக்காக. வீட்டுக்கு வந்து இடிந்து போய்
உட்கார்ந்துவிடுகிறார். மகன் தாந்தான் அப்பாவுக்கு உதவினதாய் எல்லோரிடமும் சொல்லிப்
பெருமை பட்டுக்கொள்கிறான். ஆனால் அப்பா அதைச் சொல்லாமல், அவரது அண்ணன் மறைவுக்காக
வருந்துவது அவனுக்கு வருத்தமாக இருக்கிறது. அந்தச் சிறுவனின் அக்கா அவன் பொய் சொன்னதாக
அவனைக் கேலி செய்கிறாள். மனம் நொந்து போன அவன் இப்படிச் சொல்கிறான்: ” இன்னொரு
பெரியப்பா வருவாரே.. அவர் செத்துப்போகும்போது போன் வரும். அப்பவும் நான் அப்பாக்கூடப்
போவேன். அப்பத்தெரியும் உனக்கு”. ஒரு சிறுவனின் மன ஓட்டங்கள் சொல்லப்பட்ட விதம் கதையின்
பலம். நேர்த்தியான நடை. அப்பாவின் குணநலன்களும் அம்மாவும் அக்காவும் அப்பாவைக் கிண்டல்
செய்வதும், தானும் அவர்களைப் பார்த்துப் படித்து அப்பாவைக் கிண்டல் செய்வதும், பின்னர்
தனக்குப் பெரியத்தனம் வந்துவிட்டதாகத் தானே நினைத்துக்கொள்வதும் என அந்தச் சிறுவனின்
மனஓட்டம் நம்மை வசீகரித்துக்கொள்கிறது.
எல்லாக் கதைகளும் நன்றாக இருந்தாலும் சன்னல் கதையும் எங்கள் டீச்சர் கதையும் பக்கத்தில் வந்த
அப்பாவும் மனசுக்குள்ளேயே தங்கிவிடுகின்றன. இந்தப் புத்தகத்தில், என் பார்வையில் இந்த
மூன்று கதைகளும் சிறந்த கதைகள்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 21, 2015, 9:28:00 AM6/21/15
to kaviku...@gmail.com, brail...@googlegroups.com
என் பார்வையில்
சுந்தரராமசாமி
எழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Tuesday, June 28, 2011
sundararamasamy1
(சுரா-80 என்கிற தலைப்பில் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் 80ஆவது பிறந்த நாளை
முன்னிட்டுக் காலச்சுவடு அறக்கட்டளை கன்னியாகுமரியில் ஜுன் 2,3,4 ஆகிய 3 நாட்கள்
கருத்தரங்கம் நடத்தியது.100 பேருக்கு மேலான பேச்சாளர்கள் மூன்று நாட்களிலுமாக சு.ராவை
நினைவுகூர்ந்தார்கள்.அங்கு நிகழ்த்தப்பட்ட என் உரையின் திருத்தப்பட்ட வடிவம் இது)
I
என் பார்வையில் சுந்தரராமசாமி என்னும் தலைப்பின் கீழ் நான் சுரா அவர்களை ஒரு ஆய்வாளனாக
நின்று மதிப்பீடு செய்ய வரவில்லை.சுரா அவர்கள் குறித்த என் மனப்பதிவுகளைப்
பகிர்ந்துகொள்ளவே விழைகிறேன்.அவரை அடிக்கடி சந்தித்து உரையாடியவன் அல்லன் நான்.சிறு
வயதிலிருந்தே எனக்கு எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இல்லாதிருந்தது ஒரு
காரணம்.இப்போதும் அந்த உணர்வு எனக்குள் மேலோங்கி இருந்து கொண்டுதான் இருக்கிறது.
எழுத்துக்களின் வழி நமக்கு அறிமுகமாகும் மதிப்புக்குரிய எழுத்தாளர்களின் பிம்பம் நேரில்
சந்திக்கையில் உடைந்து போவதும்கூட அப்படியான ஆர்வமின்மைக்கு ஒரு காரணமாக
இருந்திருக்கும்.அவர் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு உரையாடியது என்று பார்த்தால் ஒரு
நான்கைந்து முறைக்கு மேல் இருக்காது.ஆனாலும் ஒரு மன நெருக்கம் எங்களுக்குள் எப்போதும்
இருந்தது.
என் முன்னோடிகளில் ஒருவரான சுரா அவர்களின் மீது அவரை நேரில் சந்திக்கும் முன்பே
அவருடைய எழுத்துக்களின் வழியாகப் பெரும் மதிப்புக்கொண்டிருந்தேன்.1959இல் பதிக்கப்பட்ட
அவரது முதல் தொகுப்பான அக்கரைச்சீமையில் மற்றும் 1964இல் பதிப்பிக்கப்பட்ட பிரசாதம் ஆகிய
இரு கதைத் தொகுதிகளும்தான் எனக்கு முதலில் வாசிக்கக் கிடைத்த சுரா அவர்களின்
படைப்புக்கள். அக்கரைச்சீமையில் தொகுப்புக்கு தோழர் ரகுநாதன் கச்சிதமான ஒரு முன்னுரை
எழுதியிருப்பார்.பிரசாதம்தான் முதலில் வாசித்தேன்.அவர் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்டுகளான
ரகுநாதனும் விஜயபாஸ்கரனும் முறையே நடத்திய சாந்தி,சரஸ்வதி ஆகிய இதழ்களில்தான் தன்
முதல் 15 கதைகளை எழுதினார். முஷ்டி உயர்த்தும் வரிகளோடுதான் கதையை முடிப்பார்கள்
என்கிற விமர்சனத்தை முற்போக்காளர்கள் மீது நவீன இலக்கியவாதிகளில் சிலர் சதா
வைப்பதுண்டு.அத்தகைய கதைகளுக்கும் முன்னோடி சுந்தரராமசாமி அவர்கள்தான் என்பதை இங்கு
குறிப்பிட விரும்புகிறேன்.சாந்தியில் வெளியான அவருடைய ‘தண்ணீர்’ சிறுகதையின் கடைசி
வரிகளே இதற்குச்சான்று. அவர் தொடங்கி வைத்த இந்தப் பாரம்பரியத்தைத்தான் சில முற்போக்கு
எழுத்தாளர்கள் மேலும் முன்னெடுத்துச் சென்றார்கள் என்பேன்.
அவருடைய எழுத்து வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் உண்டு.கம்யூனிஸ்ட்டுகளோடு –கம்யூனிஸ்ட்
இயக்கத்தோடு-அவர் நெருக்கமாக இருந்த முதல் கட்டம்.அதிலிருந்து முற்றிலுமாக விலகி
பிரபஞ்ச வெளியில் சூரியனை நோக்கிப் பறக்க முயலும் ஒரு பறவையாக வாழ ஆசைப்பட்ட
இரண்டாவது கட்டம்.நிதானமும் முதிர்ச்சியும் கொண்ட மூன்றாவது காலகட்டம்.
இரண்டாவது தொகுப்பான பிரசாதம் கதைகளுக்கு அவரே எழுதிய முன்னுரையில்
குறிப்பிடுகிறார்,” 1956 ஆம் ஆண்டு உலக நிகழ்ச்சிகள்,அன்று வரையிலும் மனவேதனையை
அளித்துக்கொண்டிருந்த சந்தேகங்களைச் செம்மையாக ஊர்ஜிதம் செய்து என் முள் முடியைப் பிடுங்கி
எறிந்துவிட்டன.இதன் பின் வாழ்க்கைக் கண்ணோட்டமும், அதன் ஒரு கிளையான கலைக்கொள்கைகளும்
மாறுதல் உற்றன.இந்த ‘இரண்டாவது மனநிலை’யில் எழுதிய கதைகள் இவை “ 1950 களில் தோழர்
ஜீவாவுடனான நெருக்கத்துடன் துவங்கிய அவரது இடதுபக்கப் பயணம் 1956களின் உலக
நிகழ்வுகளால் திசை மாறியது.1956இல் என்ன நடந்த்து? சோவியத் படைகள் ஐரோப்பிய நாடுகள்
சிலவற்றில் அதிரடியாக நுழைந்தது.உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் எரிக் ஹோப்ஸ்வாம்
போன்ற சில மார்க்சிய அறிஞர்களைத்தவிர பெரும்பாலான அறிவுஜீவிகள் அப்போது கம்யூனிசத்தின்
மீது கோபம் கொண்டு வெளியேறினார்கள்.அந்த உலகநிகழ்வைத்தான் சுராவும் குறிப்பிடுவதாக
நினைக்கிறேன். இப்படிப் புற உலக நிகழ்வுகளுக்குச் செவி சாய்ப்பவராக-முகம்
கொடுப்பவராகத்தான் அதன் பிறகும் அவர் இருந்தார்.இறுதிவரை அப்படியேதான் இருந்தார்.உள்மனத்
தேடல் என்று அவர் ஒருபோதும் கிளம்பிவிடவில்லை. எப்போதும் ஒரு பொருள்முதல்வாதியாகத்தான்
அவர் பெரும்பாலும் இருந்தார் என்று நான் உணர்கிறேன்.
இரண்டாம் கட்டம் எனப்படும் காலப்பகுதியில் மட்டும் வாழ்வின் அர்த்தம் அர்த்தமின்மை குறித்த சில
குழப்பங்கள் அவரிடம் இருந்ததாக நான் கருதுகிறேன்.அக்காலகட்ட்த்தையே நவீன இலக்கிய உலகில்
பலரும் பாராட்டிப் பேசுவதும் உண்மை.வாசனை,அழைப்பு,போதை போன்ற கதைகளிலும் ஜேஜே சில
குறிப்புகள் நாவலிலும் அதற்கான அடையாளங்களைக் காணலாம்.நினைவின் எந்தப்பக்கத்தைப்
புரட்டினாலும் பிழைகள் மலிந்து கிடக்கும் அவமானம் என்று மனம் பிறழும் ஒருவரின் கதையான
அழைப்பு,சாதிய மனமோ என்கிற ஆழமான சந்தேகத்தைக் கிளப்பும் போதை மற்றும் வாசனை கதைகளை
இப்போது வாசித்தாலும் அந்தச் சிக்கலை உணர முடிகிறது.அவரது மரணத்தின் போதுகூட எந்த
சாதி மதச்சடங்குகளும் இல்லாமல் தன் உடல் மின்மயானத்தில் எரிக்கப்படவேண்டும் என்று
சொல்லிச்சென்ற சாதி மத மறுப்பாளராகிய அவரா போதையையும் வாசனையையும் எழுதினார் என்று
நம்பமுடியாத வியப்பாக இருக்கிறது.இவை இரண்டுமே இரண்டாம் காலகட்ட்த்தில் அவர்
எழுதியவை.இரண்டாம் கட்டத்திலும்கூட அவர் பல நல்ல யதார்த்தக் கதைகளை
எழுதியுள்ளார்.தமிழ்ச்சிறுகதை உலகின் சிகரமான கதைகளில் ஒன்றான ரத்னாபாயின் ஆங்கிலம்
கதையும் இக்காலத்தில் எழுதப்பட்ட்துதான்.
என்னதான் அமைப்புரீதியான விஷயங்களுக்கு எதிராக அவர் பேசி வந்தாலும் வாழ்நாள்
முழுவதிலும் கச்சிதமான யதார்த்தவாதக் கதைகளையே அதிகம் எழுதினார் என்பது மறுக்க
முடியாத உண்மை.அவரது மூன்றாம் கட்ட்த்தில் மீண்டும் அவர் சரஸ்வதி காலத்து
எழுத்துமுறையிலான கதைகள் பலவற்றை எழுதினார்.நாடார்சார்,பிள்ளை கெடுத்தாள் விளை,அந்த
ஐந்து நிமிடங்கள்,கிட்னி என்று பல கதைகளைச் சான்றாகக் குறிப்பிடலாம்.
கல்கி,தினமணி கதிர்,யாத்ரா,தீபம்,,காலச்சுவடு எனப் பல இதழ்களில் அவர்
எழுதியிருந்தபோதும் அதிகமான கதைகளை அவர் சாந்தியிலும் சரஸ்வதியிலும்தான் எழுதினார்
என்பதை அழுத்தமாக்க் குறிப்பிட விரும்புகிறேன்.உரைநடையைப் பின் தொடர்ந்த்துபோல அவரது
கவிதைகளை நான் தொடர்ந்து வாசித்ததில்லை.பசுவய்யா என்கிற பெயரில் அவர் எழுதிய சில
கவிதைகளை மட்டுமே வாசித்த அனுபவம் எனக்கு.கவிதைகளில் வேறு ஒரு மனதை வாசித்த
நினைவே எனக்கிருக்கிறது. மரணம் பற்றிய பயம் அவ்ருடைய சில கவிதைகளில் தென்பட்டதை
அவரிடமே பேசியிருக்கிறேன்.
II
தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்குமிடையே பேசிக்கொள்ளாத ஒரு நெருக்கம் இருந்த்து.
ஆங்கிலத்தில் சொன்னால் அது ஒரு LOVE AND HATE RELATIONSHIP .The love was too
personal and the hate was organizational என்று சொல்ல்லாம்.என்னைப்
பார்க்கும்போதெல்லாம் அவர் உற்சாகமடைந்து ‘ என்ன தலைவரே..’ என்று அழைத்துக் குஷியாகப்
பேசுவார். உருப்படியாக எழுதிக் கொண்டிருக்காமல் கட்சி,இயக்கம் என்று
சுற்றிக்கொண்டிருப்பதில் அவருக்கு என்மீது வருத்தம் இருந்த்து.அதைச் சுட்டித்த்தான் தலைவரே
என்றழைத்துக் கேலியாகப் பேசித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துவது அவர் வழக்கம்.கலைஞனை
சமூகத்தில் எல்லோருக்கும் மேலான இட்த்தில் வைத்துப் பார்ப்பது அவர் மனம்.அதில் எனக்கு
உடன்பாடு இருந்த்தில்லை. தொழிலாளர்கள், குழந்தைகள்,பெண்கள் ,கலைஞர்கள் இவர்கள் நால்வருமே
சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பது என் கருத்தாக இருக்கும்.குழந்தைகள்,பெண்கள்
,ஆண்கள் என்று வரிசைப்படுத்தித் தன் நாவலுக்கு அவர் பெயர் வைத்தபோது நான் மிகவும் மகிழ்ந்தேன்.
மலையாள அறிவு உலகில் மாற்றுச்சிந்தனைகளை முன்வைத்த எம்.கோவிந்தன் மீதும் ஆரம்பகால
கம்யூனிஸ்ட் தோழர் எம்.என்.ராய் மீதும் அளப்பரிய மரியாதை கொண்டிருந்தார்.இயக்கத்தில் இணைந்து
பணியாற்றும் கம்யூனிஸ்ட்கள் பற்றி அதிகம் அவர் பேசியதில்லை.இதில் எனக்கு மாற்றுக்கருத்து
இருந்தது.கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் ஒரு தகப்பனுக்குரிய இடம் என் மனதில்
அவருக்கு இருந்தது உண்மை.ஒரு கறாரான தந்தை.என்ன எழுதினாலும் அவர் வாசித்தால் என்ன
நினைப்பாரோ என்கிற ஒரு சிறு பயம் எனக்கு அந்த நாட்களில் இருந்துகொண்டேதான்
இருந்தது.நான் செய்யும் வேலைகள் குறித்து அவ்வப்போது அவருக்குச் சொல்ல வேண்டும் என்கிற
வேட்கை எனக்குள் எப்போதும் இருக்கும்.
கல்வி குறித்து அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.வசந்திதேவியுடன் அவர் நட்த்திய
உரையாடல் மட்டுமின்றி அவரது பல படைப்புகளில் கல்வி பற்றி எழுதியிருக்கிறார்.அவர்
ஆசைப்பட்ட விதத்தில் நாங்கள் ஒரு பள்ளியை பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில்
நட்த்தி வருகிறோம்.அந்த இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளியில் பிரம்பு
கிடையாது.வீட்டுப்பாடம் என்கிற சித்ரவதை கிடையாது.பாடங்களை விளையாட்டாகக்
கற்பிக்கிறோம்.குழந்தைகள் அப்படி ஒரு ஆனந்த்த்தோடு குதித்துக்கொண்டு பள்ளிக்கு
வருகிறார்கள். அப்பள்ளிக்குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான வெற்றிகள் பெறும் போதெல்லாம்
சுரா அவர்களுக்குப் போன் செய்து பேச வேண்டும் என்று ஆசைப்படுவேன். அவரை எங்கள் பள்ளிக்கு
அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்கிற அவா
நிறைவேறாமலே போனது.இப்போதும் கூட பள்ளியில் எது நடந்தாலும் சுரா சாருக்குப் போன்
பண்ணிச் சொல்லணும் என்று மனதில் ஒரு எண்ணம் மின்னி மறைவதும் அடுத்த கணமே அவர் இல்லையே
என்கிற ஏக்கம் ஒரு கேவலுடன் கண்ணீராய் என் கன்னங்களில் உருளுவதும் நடந்து கொண்டே
இருக்கிறது.தெருவில் எது நடந்தாலும் அம்மாவிடம் ஓடிச்சென்று சொல்லும் ஒரு குழந்தையின்
மனநிலைதான் அது.அப்படி ஒரு இடம் அவருக்கு என் மனதில் எப்போதும் உண்டு-விமர்சனங்களை
எல்லாம் தாண்டி.
அவருடைய கடைசி நாட்களில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார்.அப்போதும்கூட அவர்
எழுதினார்.கடைசியாக அவர் எழுதிய பத்துக்கட்டுரைகளில் ஒன்று என் ‘இருளும் ஒளியும்’
என்கிற புத்தகம் பற்றியது என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு.அக்கட்டுரை புதிய பார்வை
இதழில் வந்த்து.அறிவொளி இயக்க அனுபவங்களின் தொகுப்பான அப்புத்தகத்தை அவருடைய இடையறாத
தூண்டுதல் காரணமாகவே எழுதினேன்.பார்க்கும்போதெல்லாம் தலைவரே புத்தகம் என்னாச்சு என்று
கேட்ட அந்தச் சிரித்த முகம் மனதில் அப்படியே நிற்கிறது.அந்த அனுபவங்களை அவர் மிகவும்
மதித்தார்.
அவர் மீது எனக்கு இருக்கும் தீராத வருத்தம் ஒன்று உண்டு.இடதுசாரிகளை விட்டு அவர்
விலகியபிறகு அவர் இட்துசாரிப் படைப்பாளிகளின் படைப்புகளை ஏறெடுத்தும் பார்க்காமல்
விட்டுவிட்டார்.கந்தர்வன் கதைகளைக்கூட அவர் வாசித்திருக்கவில்லை.என்னுடைய கதைகளை அவராக
வாசிக்கவில்லை.ஜோதிவிநாயகம் சிபாரிசு செய்து அவரிடம் என் தொகுப்பைக் கொடுத்ததால்
வாசித்தார்.ஆனால் வாசித்த பிறகு அவரே காலச்சுவட்டில் தமிழ்ச்செல்வன் ஒரு கலைஞன் என்று
எழுதினார்.எவ்வளவு போதையூட்டும் ஒரு வரியாக அது எனக்கு இருந்துகொண்டிருக்கிறது!
எங்கள் தோழர்களின் படைப்புகளை வாசித்தால் நிச்சயம் அவர் கொண்டாடியிருப்பார்.ஆனால்
இடதுசாரி எழுத்துக்கள் என்றால் வாசிக்காமலேயே கருத்துச் சொல்லலாம் என்கிற ஒரு
பாரம்பரியத்தை அவர்தான் உருவாக்கிச் சென்றார் என்கிற வருத்தம் எனக்கு ஆழமாக உண்டு.இந்தக்
கருத்தரங்கிலேயே இன்று காலை நண்பர் பெருமாள் முருகன் சமகால பத்தாண்டு எழுத்துக்கள் பற்றி
வாசித்த கட்டுரையில் கூட எஸ்.லட்சுமணப்பெருமாள், சுப்பாராவ் ஆகிய இரண்டு அற்புதமான
படைப்பாளிகள் பற்றிக் குறிப்பிடவே இல்லை.அவர்கள் செம்மலரில் எழுதுகிறார்கள் என்பதால்தானே
இந்தப் புறக்கணிப்பு?அல்லது மறதி? லட்சுமணப்பெருமாளின் வயனம் ஒரு கதையையாவது
வாசியுங்கள்.சுரா இருந்து அக்கதையை வாசித்திருந்தால் நிச்சயம் கொண்டாடியிருப்பார்.மிக
வலுவான படைப்பாளிகளின் படை வரிசையாக முற்போக்காளர்கள் இன்று வந்திருப்பதை நீங்கள்
வாசிக்க வேண்டும்.( நான் பேசி முடித்ததும் பெருமாள் முருகன் வந்து லட்சுமணப்பெருமாளைத்
தான் வாசித்திருப்பதாகவும் அவரை காலத்தால் முந்தியவராகக் கருதியதால்தான் சேர்க்கவில்லை
என்றும் சுப்பாராவ் பற்றி அறியாமல் இருந்தது பற்றிய என் விமர்சனத்தை ஏற்பதாகவும் கூறினார்).
III
ஒவ்வொரு நூற்றாண்டும் உலகத்துக்குச் சில வார்த்தைகளை விட்டுச்செல்வதாக எரிக் ஹோப்ஸ்வாம்
குறிப்பிடுவார்.ஒவ்வொரு படைப்பாளியும் அவ்விதமே சில வாக்கியங்களை விட்டுச்
செல்கிறான்.ஒரு எழுத்தாளன் தான் வாழும் சமூகத்துக்கு வேறு என்னதான் செய்துவிடப்
போகிறான்.சில வார்த்தைகளை,வாக்கியங்களை விட்டுச்செல்லலாம்.அவ்வார்த்தைகளில் சில
நம்மைக்கொல்லும்.சில நாம் சோர்ந்து வீழும்போது தூக்கி நிறுத்தும்.முகம் துடைத்து ஆறுதல்
சொல்லும்.சுந்தரராமசாமி அவ்விதமாக எனக்கான வரிகளாகச் சிலவற்றை விட்டுச்
சென்றிருக்கிறார்.என் வாழ்நாள் பூராவும் கூட வரும் வரிகளாக இவை இருக்கின்றன.சுரா
என்பது இந்த ஏழெட்டு வாக்கியங்கள்தானா என்று ஒரு கேள்வியும் எனக்குள் எழுகிறது.ஆனால்
அவரால் இவ்வளவு வரிகளை எனக்காக விட்டுச்செல்ல முடிந்திருக்கிறதே ,நான் வாழ்க்கை
பூராவும் எழுதி எழுதி என் வருங்கால சந்ததியினர் நினைவு கொள்ளத்தக்க ஒரு வரியையாவது
விட்டுச் செல்வேனா என்கிற ஏக்கம்தான் மிச்சமாக இருக்கிறது.
ஜீவா மறைந்தபோது தாமரை அவர் நினைவாக மலர் ஒன்று கொண்டு வந்தது.அதில் பல தலைவர்கள்
கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.அவை எல்லாவற்றிலும் பார்க்க சுந்தரராமசாமி அவர்களின்
கட்டுரையான காற்றிலே கலந்த பேரோசைதான் எல்லோருடைய மனதையும் உலுக்குவதாக- ஜீவாவின்
முழுமையைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.ஜீவாவுக்கு அதை விடச் சிறப்பான
அஞ்சலியை அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் யாருமே செய்து விடவில்லை.(காற்றிலே கலந்த
பேரோசை என்கிற தலைப்பில் அவருடைய கட்டுரைத் தொகுப்பு பின்னர் வந்தபோது நண்பர்
தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு என்று கையெழுத்திட்டு 10.2.98 தேதியிட்டு சுரா எனக்களித்த
அப்புத்தகப் பிரதியை ஒரு பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.)
அக்கட்டுரையின் துவக்க வரிகள் இன்றும் என்னை அலைக்கழிக்கிற வரிகளாக இருக்கின்றன.
“ நண்பர் ஒருவரிடம் ‘ஜீவா மறைந்து விட்டார்’என்றேன்.1963 ஜனவரி மாதம் பதினெட்டாம்
தேதி.நண்பகல் வேளை.செய்தி தபால் நிலையத்துக்கு வந்து அப்போது ஒரு மணி நேரம் கூட
ஆகியிருக்கவில்லை.’ஆ!’ என்று கூவி ஸ்தம்பித்து நின்ற நண்பர், இரண்டொரு நிமிஷங்களுக்குப்
பின் ‘கூட்ட்த்தில் பேசிக்கொண்டிருக்கும்போதா?” என்று கேட்டார்.” இந்த ஒரு வரியை நான்
வாசித்தபோது எனக்கு வயது 21.கம்யூனிஸ்ட் இயக்கத்தில் காலடி எடுத்து வைத்துக்கொண்டிருந்த
நேரம்.இந்த வரி எனக்குள் புகுந்து ஒரு பூதம்போல ஆட்ட்த்துவங்கியது.வாழ்ந்தால் ஜீவா மாதிரி
வாழணும்.தமிழ்ச்செல்வன் செத்துட்டானா மேடையில் பேசிக்கிட்டிருக்கும்போதா?
இயக்கப்பணிகளின்போதா? என்றுதான் பேசப்பட வேண்டும் என்று ஒரு சங்கற்பம் அன்று
ஏற்பட்டது.இன்று வரை என் கூடவே எனக்கு ஓரடி முன்னால் சென்று என்னை இழுத்துச்செல்லும்
வரியாக இது இருந்துகொண்டிருக்கிறது என்பேன்.
இரண்டாவது வரி “ புரட்சி சமீபத்தில் இருக்கிறது என்று நம்பிய கடைசித் தலைமுறை நாங்கள்”
என்று சுந்தரராமசாமி எழுதிய அல்லது நேர்காணலின்போது சொன்ன ஒரு வரி.வாசித்த உடன் நான்
மறுத்துத் தலை ஆட்டிய வரி இது.இல்லை சுரா சார்..உங்களுக்கு அப்புறமும் வந்துள்ள இரண்டு
தலைமுறைகளாக புரட்சி பற்றி நீங்கள் கண்ட கனவை சுருதி சுத்தமான ஒரு உலகைப் படைக்கக்
கனவைக் காணும் தோழர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறோம் என்று ஒரு வரி என் மனதில்
ஓடிக்கொண்டே இருக்கிறது. எத்தனை வெற்றி தோல்விகள் வந்தாலும் வீழ்ச்சிகள் ஏற்பட்டாலும்
கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னும் அழியாமல் இயங்குவது புரட்சி பற்றிக் கனவுகள் கொண்ட தோழர்கள்
வந்து கொண்டே இருப்பதால்தான்.புரட்சி பற்றிய கனவுகளுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும்
கடைசித்தலைமுறை என்று ஒன்று இருக்கவே முடியாது.
மூன்றாவது வரி இடதுசாரி எழுத்தாளர்கள் பற்றி அவர் எங்கோ எழுதிய ஒரு வரி “ இவர்கள்
இலக்கியக் கால் நனைப்புக் கொண்ட அரசியல்வாதிகள்”இவ்வரியின் அங்கதத்தை இப்போதும் நான்
ரசிக்கிறேன் என்றபோதும் இந்த வரியைப்பொய்யாக்கும் ஒரு வாழ்வை நாம் வாழ்ந்துவிட வேண்டும்
என்கிற வெறியை எனக்குள்ளும் என் தோழர்கள் பலருக்குள்ளும் கிளர்த்துகிற வரியாக இது
நிலைத்து நிற்கிறது.
நான்காவது வரி “ படைப்புகளை அணுகும்போது பண்டிதம் எவ்வித அனுபவங்களையும்
பெறுவதில்லை.இன்றுவரையிலும் அது எந்தச் சீரிய கலைஞனையும் புன்னகையுடன் வரவேற்றதில்லை”
இளம் படைப்பாளிகளை அணுகும்போதும் எதை வாசிக்கும்போதும் எனக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக
இவ்வரிகள் துணை நிற்கின்றன.
ஐந்தாவது வரி “ இலக்கியம் சங்கீதம் அல்ல என்பதாலேயே அர்த்தமும் தத்துவமும் அதன் உடன் பிறந்த
சங்கடங்கள் .எனவே தத்துவத்தின் ஒரு சாயலில் ,திட்ட்த்தின் ஒரு நிலையில் நின்றே தொழிலைத்
தொடங்க வேண்டியதாக இருக்கிறது.எனினும் கலைஞன்,சிருஷ்டி கருமத்தில் முன்னேறும்போது,
மனசை ஏற்கனவே பற்றியிருக்கும்முடிவுகள் ,த்த்துவச்சாயல்கள் இவற்றைத்தாண்டி ,சத்திய வேட்கை
ஒன்றையே உறுதுணையாகக் கொண்டதன் விளைவால்,கலை சத்திய வெறி பெற்று, குறுகிய வட்டங்களை
‘நிரூபிக்க’க் குறுகாமல்,அனுபவத்தின் நானாவிதமானதும் மாறுபட்ட்தும் முரண்பட்ட்துமான
சித்திரங்களின் மெய்ப்பொருளை உணர்த்த வேண்டும்.நான் நம்பும் கலை இது”- உடன்படவும்
முரண்படவுமான உள்ளடக்கத்தோடு வந்து விழுந்துள்ள வரிகள் இவை.இவ்வரிகள் குறித்து நிறைய
ஒட்டியும் வெட்டியும் பேச முடியும்.இப்போதைக்கு இலக்கியம் சங்கீதம் அல்ல.அதற்கு அர்த்தமும்
தத்துவமும் வேண்டும் – இருந்துதான் தீரும் என்றுதான் சுந்தரராமசாமி கூறியிருக்கிறார்
என்று அடிக்கோடிட்டு விட்டுச் செல்கிறேன்.தவிர இந்த வரிகளை அவர் 1963இல் கம்யூனிஸ்ட்
கட்சியிலிருந்து விலகிய தருணத்தில் எழுதினார் என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.
ஆறாவதாக, குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் வரும் ஒரு வரி “ இந்த பூமியில் சரஸ்வதி
கடாட்சம் இல்லாத குழந்தை என்று யாரும் இல்லை”-என்ன அற்புதமான வரி இது. கல்வித் தளத்தில்
எம் முயற்சிகளுக்கு அடிநாதமாக இவ்வரி எப்போதும் கூடவே ஓடி வந்துகொண்டிருக்கிறது.
ஏழாவதாக ரத்னாபாயின் ஆங்கிலம் கதையில் வரும் வரிகள் “ பாஷை ஒரு அற்புதம்.கடவுளே
உனக்கு நன்றி” என்றாள்.இதை விட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை” என்றாள்.மீண்டும் கண்ணாடி
முன் நின்று சிறு அபிநயத்துடன் அந்தக் கடித்த்தைப் படித்தாள் “ அந்தக் கதையே தன் ஆங்கில
மொழி அறிவு மற்றும் மொழி அழகில் தானே மயங்கி அதையே தன் வாழ்வின் வரமாக்க் கற்பிதம்
செய்து வாழும் பெண்ணைப்பற்றியது.அக்கதையின் கடைசி வரிகள்தாம் இவை.ஒவ்வொரு
எழுத்தாளனுக்கும் பொருந்தும் வரிகள் இவை.வார்த்தைகளை விட்டால் நமக்கு வேறு என்ன இருக்கிறது?
இப்படியான வார்த்தைகளாக சுந்தரராமசாமி நம்மோடு வாழ்கிறார்.வணக்கம்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jun 21, 2015, 9:40:03 AM6/21/15
to brail...@googlegroups.com, kaviku...@gmail.com
சுந்தரராமசாமி (1931 - 2005)
8
விவரங்கள்
எழுத்தாளர்: அ.மார்க்ஸ்
தாய்ப் பிரிவு: அநிச்ச
பிரிவு: நவம்பர்05
C வெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2010
சுமார் 50 ஆண்டுகாலம் தமிழ் இலக்கியத்தோடும் சிற்றிதழ்களோடும் தொடர்பு கொண்டிருந்த
எழுத்தாளர் சுந்தரராமசாமி இப்போது நம்மிடையே இல்லை. நாவல், சிறுகதை, கவிதை என
மூன்று துறைகளிலும் தடம் பதித்தவர். ‘காகம்’ என்றொரு இலக்கிய அமைப்பைப் பலகாலம் நடத்தி
தென் மாவட்டங்ளைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்தவர். சொற் சிக்கனம் கூடிய
நேர்த்தியான மொழி நடை வாய்க்கப் பெற்றவர்.

மணிக்கொடி காலத்திலிருந்து பார்த்தால் இன்று எழுதிக் கொண்டிருப்பவர்களை நான்காம் தலைமுறை
எனலாம். இதில் மூன்று தலைமுறையினருடன் வாழ்ந்தவர் ராமசாமி. முதலிரண்டு தலைமுறை
எழுத்தாளர்களும் தமது எழுத்துக்களுக்கு உரிய ஏற்பும், வருமானமும் இன்றி மறைந்து
போனவர்கள். அடுத்த இரு தலைமுறையினரை அப்படிச் சொல்ல வேண்டியதில்லை. அங்கீகாரம்
மட்டுமின்றி போதிய வருமானமும் இப்போது கிடைக்கிறது. நூல் வெளியீடு என்பது லாபகரமான
தொழில்களில் ஒன்றாகிவிட்டது. இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டவர் சுந்தர ராமசாமி.
ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற பரிசுகள் அவருக்கு வாய்க்காத போதும், அவருடைய
தகுதிக்குரிய, சொல்லப்போனால் தகுதிக்கு மீறிய மதிப்பும் ஏற்பும் அவருக்குத் தமிழ்ச்
சூழலில் இருந்தது. பத்திரிகை, நூல் வெளியீடு முதலிய துறைகள் பொருளியல் ரீதியிலும்
லாபகரமாகவே இருந்தன.

மறைவை ஒட்டி எதிர்பார்த்தது போல அவருக்கு நிறையப் புகழாரங்கள் சூட்டப்படுகின்றன. ஒரு
எழுத்தாளனுக்குத் தமிழ்ச் சூழல் அளிக்கும் மரியாதை மகிழ்ச்சியளிக்கிறது. இறப்பை ஒட்டி
நல்ல வார்த்தைகள் சொல்வதே மரபென்ற போதிலும் விருப்பு வெறுப்பின்றி மதிப்பீடுகளை
முன்வைப்பதை நாம் தவிர்க்க இயலாது.

சமீப காலத் தமிழ்ச் சூழலில் எல்லா விவாதங்களும் அவரை மய்யமாகக் கொண்டே நடந்தன என
ஜெயமோகன் கூறியுள்ளார். அவரது எழுத்துக்களை ‘மாற்றுக்குரல்’ என மாலன் பதிவு
செய்துள்ளார். இரண்டு கருத்துக்களுமே ஏற்க இயலாதவை. ராமசாமியின் குரல் எப்படி
மாற்றுக்குரலாக அமைந்தது என்பதை மாலன் விளக்கி எழுதினால் நல்லது. பெரிதும் பேசப்பட்ட
அவரது நாவல்களான ‘புளிய மரத்தின் கதை’, ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ இரண்டுமே பழமைச்
சிந்தனைகளை உயர்த்திப் பிடிப்பதாக உள்ளன என்கிற விமர்சனங்கள் தமிழில் உண்டு. முன்னது
குறித்த குறையின் முறையில் கட்டுரையும் பின்னது குறித்தச் சாரு நிவேதிதாவின்
கட்டுரையும் குறிப்பிடத்தக்கன. புதிய வடிவங்களிலும் கூடச் சனாதனமான கருத்துக்களைப்
பொதிந்து விட முடியும் என்பதற்கு, ஒரு எடுத்துக்காட்டாகவே ஜே.ஜே. சில குறிப்புகளைச்
சொல்ல முடியும்.

வாழ்ந்த காலத்தில் புதிய சிந்தனைகளுக்கும் மாற்றுக்குரல்களுக்கும் மிகப் பெரிய எதிரியாக
இருந்தவர் ராமசாமி. தனது வயதின் மூப்பிற்குக்கூட பொருத்தமற்ற வார்த்தைகளால் அவர் புதிய
சிந்தனைகளின் அறிமுகத்தைக் கொச்சைப்படுத்தி வந்ததை நாம் மறந்து விடமுடியாது. கண்டதைத்
தின்றுவிட்டு அரை குறையாய்ச் செரித்தவற்றை வாலைத் தூக்கிக் கழித்துத் திரியும்
நாய்களாகவும், சுற்றுச்சூழலைக் கெடுத்துத் திரிபவர்களாகவுமே அவர் ஸ்ட்ரச்சுரலிசம், போஸ்ட்
ஸ்ட்ரச்சுரலிசம் அந்நியமாதல், போஸ்ட் மாடர்னிசம் முதலான சிந்தனைகளை பேசியவர்களை அவர்
விமர்சித்து வந்தார்.

மணிக்கொடி தோற்றுவித்த இலக்கியப் போக்கின் தொடர்ச்சியாகவே அவரது சிறு பத்திரிகை
முயற்சிகள் இருந்தன. வெறுமனே தூய இலக்கியப் பெருமை, வெகுஜன இலக்கியச் சீரழிவு பற்றிப்
பேசிக் கொண்டிராமல் சமூகக் களத்தையும் வரலாற்று விமர்சனத்தையும் சிறு பத்திரிகைகள் கவனம்
கொள்ள வேண்டும் என்கிற கருத்து நெருக்கடி நிலை (1975 - 78) காலத்தை ஒட்டி இங்கு
ஏற்பட்டது. பிரக்ஞை, படிகள், பரிமாணம், இலக்கிய வெளிவட்டம், மீட்சி, நிறப்பிரிகை
என்றொரு போக்குச் சிறு பத்திரிகை உலகில் வந்த போது அவரது முயற்சியும் ஆதரவும்
வரலாற்றையும் சமூகச் சூழலையும் இலக்கியத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் போக்கை நிலை
நாட்டுகிற செயற்பாடுகளுக்கு ஆதரவாகவே அமைந்தன. அவரது ‘காலச்சுவடு’ அவரை ஆராதித்த
‘கொல்லிப்பாவை’ முதலான இதழ்கள் ‘பிரக்ஞை.. நிறப்பிரிகை’ போக்கிற்கு எதிரான பழைய
நிலைப்பாட்டையே தூக்கிப்பிடித்தன.

அவரது கடைசி கால எழுத்துக்கள் ஒரு தேக்கத்தை எட்டின. ‘குழந்தைகள், ஆண்கள், பெண்கள்’
என்கிற அவரது கடைசி நாவல் தமிழ்ச் சூழலில் யாராலும் பேசப்படவில்லை. ‘தோட்டியின் மகன்’
மொழி பெயர்ப்பும் அவரது கடைசிச் சிறுகதைகளில் ஒன்றான ‘பிள்ளை கொடுத்தான் விளை’யும்
தலித் எழுத்தாளர்களின் கடுமையான விமர்சனத்திற்குள்ளாயின. கண்டனக் கூட்டங்கள் கூட நடத்தப்பட்டன.

ஜீவா மீதும், புதுமைப்பித்தன் மீதும் அவருக்கு நிறைய மரியாதை இருந்தது. ஆரம்ப காலத்தில்
இடதுசாரி அரசியலுடன் தொடர்பு கொண்டிருந்தார் என அவரைப் பற்றிச் சொல்வதுண்டு. எனினும்
அவரது எழுத்துக்களில் அதற்கான சாட்சியங்களை நாம் பார்த்துவிட இயலாது. அன்றாட சமூக,
அரசியற் பிரச்சினைகளில் அவர் கவனம் செலுத்தியவரல்லர். எனினும் மரண தண்டனை ஒழிப்பு
இயக்கத்தில் அவர் தன்னை விரும்பி இணைத்துக் கொண்டது. குறிப்பிடத்தக்கது. கல்வி குறித்து
அவர் வசந்திதேவியுடன் நடத்திய உரையாடல் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமையவில்லை. எல்லாத்
துறையினரையும் போலவே பேராசிரியர்களிடமும் பல சீரழிவுகள் இருந்தன என்றாலும் கல்வித்
துறை சார்ந்த பேராசிரியர்கள் மீது அவருக்கு அளவுக்கு மீறிய காழ்ப்பு இருந்தது. இதை மீறி
கல்வி சார்ந்த எந்த மாற்றுக் கருத்தையும் அவரால் முன் வைக்க முடியவில்லை.

கடைசியாக அவரைச் சென்ற ஆண்டு ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் (நாகர்கோவில்) நடைபெற்ற
பாரதி தொடர்பான தேசியக் கருத்தரங்கொன்றில் சந்தித்தேன். தொடக்க விழாவில் நானும் அவரும்
பங்கு பெற்றோம். மேடையில் நடுநாயகமாக அவரும் ஓரமாக நானும் அமர்ந்திருந்தோம். அவர் பேசத்
தொடங்குகையில் இடையில் இரு நாற்காலிகள் காலியாக இருந்தன. புகைப்படம் எடுப்பவர் கேட்டுக்
கொண்டதற்கிணங்க அவரருகில் சென்று அமர்ந்தேன். பெண் கவிஞர்களின் எழுத்துக்களைப் புகழ்ந்து
பேசினார். நன்றாக எழுதும் பெண் கவிஞர்களில் பட்டியலொன்றைச் சொல்லி மாணவிகளை எழுதிக்
கொள்ளச் சொன்னார். மாலதி மைத்ரியின் பெயர் அவருக்கு மறந்துவிட்டது. “மை.... மை....’’
எனத் திணறினார். அருகிலிருந்த நான் பெயரைக் கொண்டேன். “ஓ! ஆமாம்..... மாலதி மைத்ரி’’
என்று சொன்னவர் அப்படியே என்னைத் தழுவிக் கொண்டார். “இவர் ரொம்ப அபாரமான ஞாபக சக்தி
உடையவர் எதையும் மறக்க மாட்டார். ஏகப்பட்ட பெயர்களை நினைவில் வைத்திருப்பார். அவ்வப்போது
பயன்படுத்துவார்’’ என்றார். தழுவிய கைகளை அவர் நீக்கவில்லை அவருடைய பேச்சில்
மறைந்திருந்த அவரது வழக்கமான குசும்பை நான் உணர்ந்த போதிலும் அவரது தழுவல் எனக்குப்
பிடித்திருந்தது. எத்தன்மையாய் இருந்த போதிலும் தழுவல்கள் சுகத்திற்கும் மகிழ்ச்சிக்கும்
உரியவைதானே. அவருடன் அதிகம் மோதியவர்களில் நானும் ஒருவன். அவரது பிரிவு என்னை
வருத்துகிறது. மனம் கசிகிறது.
- அ.மார்க்ஸ்

bharath

unread,
Jun 25, 2015, 10:27:17 AM6/25/15
to brail...@googlegroups.com

Dear Friends,

Here is an interesting message from Dr Kalam on what being a Leader is all
about.
We all have heard so much being said and written about Leadership.
Here is possibly one of the greatest lessons in leadership.

Regards
Padmini


****************************************************************************

Former President of India APJ Abdul Kalam: 'A Leader Should Know How to
Manage Failure'


India Knowledge@Wharton: Could you give an example, from your own
experience, of how leaders should manage failure?


Kalam: Let me tell you about my experience. In 1973 I became the project
director of India’s satellite launch vehicle program, commonly called the
SLV-3. Our goal was to put India’s "Rohini" satellite into orbit by 1980. I
was given funds and human resources -- but was told clearly that by 1980 we
had to launch the satellite into space. Thousands of people worked together
in scientific and technical teams towards that goal.


By 1979 -- I think the month was August -- we thought we were ready. As the
project director, I went to the control center for the launch. At four
minutes before the satellite launch, the computer began to go through the
checklist of items that needed to be checked. One minute later, the
computer program put the launch on hold; the display showed that some
control components were not in order. My experts -- I had four or five of
them with me -- told me not to worry; they had done their calculations and
there was enough reserve fuel. So I bypassed the computer, switched to
manual mode, and launched the rocket. In the first stage, everything worked
fine. In the second stage, a problem developed. Instead of the satellite
going into orbit, the whole rocket system plunged into the Bay of Bengal.
It was a big failure.


That day, the chairman of the Indian Space Research Organization, Prof.
Satish Dhawan, had called a press conference. The launch was at 7:00 am,
and the press conference -- where journalists from around the world were
present -- was at 7:45 am at ISRO's satellite launch range in Sriharikota
[in Andhra Pradesh in southern India]. Prof. Dhawan, the leader of the
organization, conducted the press conference himself. He took
responsibility for the failure -- he said that the team had worked very
hard, but that it needed more technological support. He assured the media
that in another year, the team would definitely succeed. Now, I was the
project director, and it was my failure, but instead, he took
responsibility for the failure as chairman of the organization.


The next year, in July 1980, we tried again to launch the satellite -- and
this time we succeeded. The whole nation was jubilant. Again, there was a
press conference. Prof. Dhawan called me aside and told me, "You conduct
the press conference today."


I learned a very important lesson that day. When failure occurred, the
leader of the organization owned that failure. When success came, he gave
it to his team. The best management lesson I have learned did not come to
me from reading a book; it came from that experience!

M Sivakumar

unread,
Jul 3, 2015, 3:42:33 AM7/3/15
to brailleacl
2.08 crore households in India have disabled persons: Census
New Delhi, Jun 30, 2015 (PTI)
Disabled persons. DH File Photo for representation.
 As many as 2.08 crore households in the country have
differently-abled persons constituting 8.3 per cent of the total
homes, the 2001-11 Census data said today.

According to the 2011 data released by Registrar General and Census
Commissioner of India today, out of the total households having
disabled persons, about 99 per cent homes are normal homes, 0.4 per
cent are institutional and 0.2 per cent are house-less households.

The data on disabled population has been released by types of
disability, households and gender.

The differently-abled living in different types of households are
further cross-classified into eight different disabilities i.e.
seeing, hearing, speech, movement, mental retardation, mental illness,
multiple disability for India, States and Union Territories.

Total households having disabled persons has shown an increase of 20.5
lakhs, from 187.3 lakhs in 2001 to 207.8 lakhs in 2011. Of these, 6.2
lakhs are in rural and 14.3 lakhs in urban areas.

The differently-abled in normal households increased by 48,19,382,
institutional households by 65,895 and house-less households by 22,948
between 2001-11, the data said.

Meanwhile, normal households increased by 2,02,4495, institutional
households by 8,370 and house-less households by 13,560 during the
time, it added.

According to the Census of India, a group of unrelated persons who
live in an institution and take their meals from a common kitchen is
called an 'institutional household'.

'House less households' are those households who do not live in
buildings or census houses but live in the open on roadside, pavements
etc
source
http://www.deccanherald.com/content/486687/208-crore-households-india-have.html


--
m. sivakumar. P.hd.
International Institute of Tamil Studies CIT Campus, 2nd Main Road,
Tharamani, Chennai, 600113

We're conditioned to think that our lives revolve around great moments.

But great moments often catch us unaware-beautifully wrapped in what
others may consider a small one.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 7, 2015, 1:04:26 PM7/7/15
to kaviku...@gmail.com, brail...@googlegroups.com
தெருக்கூத்து ( 3)
Monday, 06 July 2015 23:30 - வெங்கட் சாமிநாதன் - வெங்கட் சாமிநாதன் பக்கம்
E-mail
Print
PDF
- வெங்கட் சாமிநாதன் -
இவையத்தனையும் முதலில் சொல்லிவிட்டு, இப்பொழுது நாம் கூத்தின் முதல் நாளின்
அரங்கேற்றத்துக்குத் திரும்பப் போவோம், அதாவது திருவிழாவின் 10வது நாள்.அன்றையச் சம்பவம்
திரௌபதியின் திருமணம்.பாஞ்சால மன்னனின் அரண்மனையில் நடக்கும் சுயம்வரத்தில் ஆரம்பிக்கிறது
நாடகம்.அரசர் வில்லை எடுத்து வர ஆணையிடும் கட்டத்தில் மேடையில் நாடகம் நின்று
போகிறது.இதற்குள் நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மல்லர்கள் போல் வேடமணிந்த சில
நடிகர்கள் (பழந்தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் போர்வீரர்கள்/ மல்யுத்தக்காரர்கள் இவர்கள்)
கோவிலுக்குச் சென்று 30 அடிக்கு 40 அடி நீளத்தில் மூங்கிலால் செய்யப்பட்டு பூஜை
செய்வித்து புனிதப்படுத்தப்பட்ட ஒரு வில்லை எடுத்து வருகிறார்கள். கிராமத்து மக்களும்
பறை மற்றும் சிலம்பு ஒலிக்க இவர்களுடன் வருகிறர்கள். ஆங்கில எழுத்து F போன்ற ஒரு மரச்
சாதனமும் வருகிறது. ஒரு வில்லில் மரத்தாலான ஒரு மீனுடன் ஒரு சின்னச் சக்கரம் உள்ளது.
அந்த வில்லைத்தான் அங்கு கூடியுள்ள மன்னர்கள் எடுக்க முயற்சி செய்து தோற்பார்கள், ஆனால்
அருச்சுனன் அதைத் தூக்குவதில் வெற்றியடைந்து இலக்கையும் அடித்து விடுவான். கூத்து
நிகழ்ச்சி திரௌபதியின் திருமணத்துடன் நிறைவடையும். மறுநாள் திரௌபதியின் திருமணம்
மீண்டும் கொண்டாடப்படும், அதாவது தென்னிந்தியக் கோவிலில் இத்தகைய கோவில் விழாக்களில்
நடக்கும் அனைத்து சடங்கு முறைகளுடனும் அது நடைபெறும். கோவிலின் கர்ப்பக்கிருகத்தில்
திரௌபதியின் சிலைக்கருகே அருச்சுனன் சிலையும் வைக்கப்படுகிறது.அனைத்துத் திருமணச்
சடங்குகளும், அம்மனின் கழுத்தைச் சுற்றித் தாலி கட்டுவது உட்பட
அனுஷ்டிக்கப்படுகின்றன.மறுபடியும் அந்தச் சிலை கிராமத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு,
கிராமம் முழுவது விழாக்கோலம் கொள்கிறது.பிறகு அம்மன் கோவிலுக்குத்
திரும்புகிறாள்.இங்கே பண்டைய காலத்து அம்மன் மற்றும் காவல் தெய்வத்தை திரௌபதி அம்மனுடன்
இணைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.காவியம் (பிரசங்கி), நாடகம் (தெருக்கூத்து)
மற்றும் சடங்கு (அம்மன்) என்பவற்றின் ஒருங்கிணைப்பும் இங்கே நடக்கிறது.ஒவ்வொன்றும் அவற்றின்
தனி அடையாளத்தைக் கைக்கொண்டிருக்கையிலேயே, அவற்றிடையேயான உறவுடன் ஒன்றிணைவது இது.
மற்றொரு நாள் நாடகத்தில் சுபத்திரையின் திருமணச் சம்பவம் நடிக்கப்படும்போதும், திருமணம்
மீண்டும் அத்தனை வைபவங்களுடனும் கொண்டாட்டத்துடனும் நடக்கும். திருவிழாவின் மிக
முக்கியமான நாள் திரௌபதி வஸ்திராபகரணம் நடிக்க எடுத்துக் கொள்ளப்படும் நாள்.சம்பவங்களின்
கோர்வையில், நாம் நினைவில் கொள்ள வேண்டியது, திரௌபதி நாடகத்தில் ஒரு பாத்திரம்
மட்டுமல்ல, அவள் கிராமத்தின் காவல்தெய்வம்.சூழலில் படிப்படியாக சுருதி ஏறிக்கொண்டு
போவதற்கும். உணர்ச்சிகளின் தீவிரம் அதிகரித்துக் கொண்டு போவதற்கும், பார்வையாளர்களின்
சீற்றத்துக்கும் இதுவே காரணம். திரௌபதியின் துகிலுரிப்பு நடக்கும் தருணம் வரும்
சமயத்தில், கிட்டத்தட்ட பொழுது விடியும் நேரம், கூத்து முந்தைய இரவு 9.30
மணியிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது.அது வரையான உரத்த கோபவெளிப்பாடுகள், தரை
அதிரும் வகையில் மிதித்தல், துரிதமான உடற்சுழற்சிகள் இவற்றின் தாக்குதலால் படிப்படியாய்
சூழலின் பதற்றம் அதிகரித்துள்ளது.திரௌபதி மேடைக்குள் அழைத்துவரப்பட்டு அவளது ஆடை இதோ
நீக்கப்படப் போகிறது.இப்பொழுது நாடகம் நிறுத்தப்ப்டுகிறது. கட்டியக்காரன் மேடைக்குள் வந்து
திரௌபதி அம்மனைப் புகழ்ந்து பாடி மன்னிப்புக் கேட்கிறான். கற்பூரம் ஏற்றி பிரார்த்தனை
செய்கிறான் “அம்மா, நாங்கள் இங்கு செய்வதற்கெல்லாம் எங்களை மன்னித்துவிடு.பாண்டவர்களைப்
பொறுத்தது போல் எங்களையும் பொறுத்துக்கொள். கருணைகாட்டு, ஏனென்றால் நாங்கள் எங்கள்
வயிற்றுக்காக இதைச் செய்கிறோம்” என்று சொல்லி புனித ‘வீரகந்த” த்தை திரௌபதியாக
நடிப்பவருக்கும் துச்சாசனனாக நடிப்பவருக்கும் கொடுக்கிறான். திரௌபதியின் வஸ்திராபகரணம்
தொடங்குகிறது.திரௌபதி கிருஷ்ணனிடம் பாதுகாப்பு வேண்டிக் கதறுகிறாள். துச்சாசனன் அவளை
மேடைக்கு இழுத்துக் கொண்டுவந்திருப்பதாகப் பொருள்.ஆனால் அவள் துச்சாசனன் பிடித்திருக்கும்
ஒரு கோலின் மறுமுனையைப் பற்றிக் கொண்டு ஓடிவருகிறாள். நாடகத்தின் திரௌபதி ஒரு ஆண்
நடிகர்தான் இருப்பினும் துச்சாசனன் அவளைத் தொடுவதுகூட இல்லை.துகிலுரிப்பு சமயத்தில்,
பார்வையாளர்கள் ’கோவிந்தா’ ‘கிருஷ்ணா’ என அலறிக்கொண்டு திரௌபதியைப் பாதுகாக்க
மேடைக்கு ஓடிவருகிறார்கள். பலருக்கும் சன்னதம் பிடிக்கிறது, பார்வையாளர்களில் நிதானமாக
இருப்பவர்கள் அப்படி ஆவேசம் பிடித்தவர்களையும் மேடையை நோக்கி ஓடுபவர்களையும் இறுக்கமாக
பிடித்துக் கொள்கிறார்கள். திரௌபதி மற்றும் துச்சாசனன் வேடமணிந்திருக்கும் நடிகர்களும்
ஆவேசம் பிடித்து வெறிபிடித்ததுபோலக் காணப்படுகிறார்கள் அல்லது மயக்கமடைகிறார்கள்.
கிராமத்து நாடகவடிவில் திரௌபதி வஸ்திராபகரணத்தைக் கண்டவர்களுக்கு இந்தச் சூழலுக்கு
வெளியே திரைக்கு முன் மாநகரப் பார்வையாளர்களுக்காக நடக்கும் ஒன்றரை மணிநேர நாடகங்களில்
வழங்கப்படுவது உயிரிழந்து காணப்படும். தென்னிந்திய நாட்டார் கலைவடிவங்கள் அனைத்தையும்விட
தெருக்கூத்தின் பெண் கதாபாத்திரங்கள் காணச் சகிக்காதபடி இருந்தபோதிலுமே இப்படி.(ஒரு
தாக்கம்.)
இந்த நாடகப்பாத்திரம் அவளது வழக்கமான ஆடையின் மேல் இறுதி அடுக்காய் சுற்றிக்கொண்டு
அவளது தூய்மையைக் காப்பாற்றும் இந்தப் புடவை கிராமத்தின் இடையர் சமூகத்தினரால்
நன்கொடையாய் வழங்கப்படும், இது அவர்களது பரம்பரை உரிமை என்பது அவர்களுடைய கோரிக்கை,
இது பொதுவாகவும் ஆமோதிக்கப்பட்ட ஒரு விஷயம். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைப்படி யாதவ
குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் அல்லவா அவளைக் காப்பாற்றியது?இதைக் கொடுப்பதினால் திரௌபதி
அம்மனின் விசேஷமான ஆசிகளைத் தாம் பெறுவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.
பதிமூன்றாம் நாளைய நிகழ்ச்சி அருச்சுனன் பாசுபதாஸ்திரத்துக்காக சிவனுக்குத் தவம்
புரியும் சம்பவம் பற்றியது. இந்த சம்பவத்துக்கு முன்னேற்பாடாக, கிராமத்தினர்
திருவிழாவின் துவக்கத்துக்கு முன்பே இதற்கென குறித்து வைத்துக்கப்பட்ட ஒரு 80 அடி
பனைமரத்தை வீழ்த்தப் போவார்கள். அவ்விடத்துக்கு சடங்குகளுடன் ஊர்வலமாகப் போய், அந்த
மரத்துக்குப் பூஜை செய்து பின் அதை வீழ்த்துவார்கள்.பின்பு அதை மேளதாளத்துடன் ஊர்வலமாக
அரங்குக்கு எடுத்து வருவார்கள்.அதை நேர்த்தியாக சீவி 2 அடி’ இடைவெளியில் மூங்கில்களைப்
படிபோலச்சொருகி ஏணி போலச் செய்வார்கள்.மரத்தின் இலைகளை நீக்கிவிட்டு அதன் உச்சியில் ஒரு
மேடை எழுப்பப்படும்.தென்னிந்தியக் கோவில்களின் சுவர்களில் இருப்பதைப்போல சிவப்பும்
வெள்ளையுமாய் வண்ணங்கள் அடுத்தடுத்து அடிக்கப்படும்.பின் ஒரு ஆழமான குழியில் அது
இறக்கப்பட்டதும் குழி மூடப்பட்டு, ஒரு உயரமான கம்பத்தின் மேலான மேடையும் அதன் உச்சியை
அடைவதற்கான படிகளும் அமைக்கப்பட்டுவிடும்.நிகழ்ச்சி நடக்கும் தினத்தன்று, கிராமத்துப்
பெண்கள் அந்த இடத்தை சாணத்தால் சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட்டு
அலங்கரித்திருப்பார்கள். அந்தக் கம்பம் சிவனின் இருப்பிடமான கைலாய மலையைக் குறிக்கிறது:
அருச்சுனன் அதன் மேலேறித் தவம் புரிவான். இது கோவிலுக்கு அருகில் கூத்து நடக்கும்
இடத்துக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும். நிகழ்ச்சியன்று இரவு 9.30 மணிக்கு
அருச்சுனன், பூர்வாங்க சடங்கு பூஜை, ஒப்பனை எல்லாம் முடிந்ததும், பம்பை ஒலிக்க முழு
வேடத்துடன் கோவிலுக்குப் போய் அம்மனை வழிபட்டு பின் தன் நடிப்பை ஆரம்பிக்க வருவான்.
தன் சகோதரர்களிடம் விடைபெற்று அந்தக் கம்பம், அதாவது சிவனின் இருப்பிடமான கைலாய மலையை
நோக்கி நடப்பான். கிராமத்தில் மணமாகிக் குழந்தைகளில்லாத பெண்கள் இப்போது அதைச் சுற்றிக்
கூடியுள்ளனர். அவர்கள் மங்கள ஸ்நானம் செய்து, ஈரப்புடவையுடனேயே, மணிக்கட்டுகளில்
மலர்வளையங்களைக் கட்டிக்கொண்டு, வெற்றிலைப் பாக்கு, தேங்காய்கள், வாழைப்பழங்கள் போன்றவற்றை
தாம்பாளங்களில் ஏந்திக்கொண்டு அந்த பனைமரக் கம்பத்தை வழிபாட்டுமுறைப்படி
சுற்றிவந்திருப்பார்கள். இசைக்குழுவினர் கம்பத்துக்குச் சற்று தூரத்தில் ஒரு மரப்பலகையில்
அமர்ந்து பாடிக்கொண்டும் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.அருச்சுனன்
விருத்தப்பாடல்களைப் பாடிக்கொண்டு மூன்று முறை கம்பத்தை சுற்றி வருகிறான்.இந்த
நிகழ்வுக்கான பாடல்கள் சைவ அருட்தொண்டர்களின் பாடல்களிலிருந்து அண்மைய கடந்தகாலத்தில்
சிவனைப் புகழ்ந்து இயற்றப்பட்ட பாடல்கள் வரை எடுக்கப்பட்டிருக்கும். அவனும் தன் கையில் ஒரு
மஞ்சள் துணியில் தேங்காய், வெற்றிலைகள், வில்வ இலைகள், பூக்கள் இவற்றை எடுத்துச் சென்று,
சிவனை பூஜிக்க மேடை மேலேறி சிவனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறான்.
மேலே வரும்வரை பல மணி நேரங்களுக்கு அவன் நிதானமாக ஒவ்வொரு பாட்டாகப்பாடி,
படிப்படியாய் மேலேறி உச்சியை அடைந்ததும், மரப்பலகையில் அமர்ந்துள்ள வாத்திய கோஷ்டியும்
அவன் பாட்டுக்குத் துணையாக இசைத்துப் பாடுவார்கள். இறுதியில் சிவன் ஒரு வேடன் வேடத்தில்
வெளிப்பட, 80 அடி உயரக் கம்பத்தின் மேலிருக்கும் அருச்சுனனுக்கும், நிலத்தில்
நின்றிருக்கும் சிவனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. வேடன் வேடத்தில் வந்திருப்பது சிவன்
என்பதை அறிந்ததும் அருச்சுனன் கற்பூரம் ஏற்றி மேலிருந்து பூஜை செய்கிறான். அர்ச்சிக்கும்
மலர்களும், வில்வ இலைகளும், விபூதியும் விழ ஆரம்பிக்கையில், கீழே கம்பத்தைச் சுற்றி
நின்றிருக்கும் பெண்கள் தங்கள் புடவை முந்தானைகளை விரித்து அவற்றைத் திரட்டிக்
கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆசி கிடைத்துவிட்டது, இனி அவர்கள் குழந்தையின்றி
இருக்கமாட்டார்கள்.அன்றைய நாடகம் தவம் முடிந்து பாசுபதாஸ்திரத்தைப் பெறுவதுடன் முடிகிறது.
பதினைந்தாம் நாளின் கதை விராடபர்வத்தில் நடக்கும் சம்பவங்கள்.அன்றைய தினம் நாடக அரங்கம்
ஊருக்கு வெளியேயுள்ள ஒரு வயல்வெளிக்கு நகர்கிறது. கிராமத்தின் ஆடுமாடுகள் வழிதவறிப்
போய்விடாமல் இருப்பதற்காக அங்கேயே ஓட்டிச்செல்லப்பட்டு சூழப்பட்டுள்ளன..அம்மனின் விழா
ஊர்வலம் அங்கு செல்கிறது.பிரசங்கியும் அங்கே இடம்மாறி தன் விளக்கவுரையை அங்கே
நடத்துகிறார்.அலிவேடம் பூண்டுள்ள அருச்சுனனும், விராடத்தின் உத்தரகுமாரனுடன் பறை இசை
ஒலிக்க அங்கே வந்து காளியின் பூஜைமாடத்தில் பிரார்த்த்னை செய்து கோவிலின் புனித வாளால்
அங்குள்ள ஒரு வாழை மரத்தை வெட்டியபின் ஆடுமாடுகளை கிராமத்துக்குள் பாதுகாப்பாக
அனுப்பிவைக்கிறான். கைப்பற்றப்பட்ட ஆடுமாடுகளை விடுவிப்பதற்கு சம்பந்தமே இல்லாமல்
உத்தரகுமாரன் அவ்விடத்தில் அங்கும் இங்கும் ஓடுகிறான்.இங்கும் முழு கிராமமும் இச்சம்பவத்தைக்
காண வந்திருக்கிறார்கள். மழை பொய்த்த இடங்களில் விராடபர்வ நாடகத்தை நடத்தினால் மழை
வருவது நிச்சயம் என்றவொரு நம்பிக்கையினால் இந்தச் சம்பவத்தை மட்டும் எடுத்துக் கூத்து
நடத்தத் தனியாக உபயம் செய்து நடத்தும் வழக்கம் உண்டு.
அடுத்தநாள் நிகழ்ச்சி கிருஷ்ணன் தூதுபோவது பற்றியது, தெருக்கூத்து நடக்கும் அனைத்து
இடங்களிலும் இந்தநாளைய நிகழ்ச்சிக்கான செலவுகள் யாதவர் சமூகத்தினரின் உபயத்தில் நடக்கும்.
கிருஷ்ணன் ஒரு யாதவன். அதைத் தவிர, விதுரனின் விருந்தாளியான கிருஷ்ணனுக்குக்
கொடுப்பதற்காக அனைத்து யாதவ வீடுகளிலிருந்தும் உணவுப்பொருட்களும், இனிப்புகளும்
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு எடுத்துவரப்படும். சண்டையிடும் இரு பிரிவினருக்கிடையில்
சமாதானமுயற்சிகளில் கிருஷ்ணன் தோல்வியடைவதால் கதையின் இப்பகுதியை மட்டுமே தனியாக
எடுத்துக்கொண்டு எந்தக் கூத்தும் நடைபெறுவதில்லை. இச்சம்பவத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு
கூத்து நடத்தினால் கிராமத்தில் சண்டை உண்டாகும் என நம்பப்படுகிறது.இது தப்பாமல்
நடந்திருக்கிறது என சாட்சியளிக்கப் பலரும் உண்டு. அப்படி ஏதாவது கட்டாயக்
காரணங்களுக்காக இந்தச் சம்பவத்தைத் தனியாக எடுத்து நடிக்க நேர்ந்தாலும், அந்தக் கூத்து
கிருஷ்ணனின் முயற்சி தோல்வியடைவதில் முற்றுப்பெறாமல், “நான் திரும்பை வருகிறேன். இதைப்
பற்றி யோசியுங்கள்” என கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம் சொல்லிச் செல்வதாக முடிவடையச்
செய்யப்படும். பாரதவிழாவின் 16வது நாளன்று அரவானின் பலி நடிக்கப்படும். ஊரில்
காளிக்குக் கோவில் இருந்தால் அதற்கு வெளியே ஒரு 25 அடி உயர உருவம் எழுப்பப்படும்,
இல்லையெனில் பலி கொடுக்கவேண்டிய வயல்வெளியில் ஒரு காளி உருவமும் உருவாக்கப்பட்டு
வைக்கப்படும். கிரீடத்துடனான அரவானின் தலை கிராமத்துக் குயவர் ஒருவரால் தனியாக
களிமண்ணால் செய்யப்பட்டு, மற்ற கூத்து நடிகர்களைப் போலவே சாயம் பூசப்பட்டு இருக்கும்.கண்ணை
வரைவது ‘கண் திறப்பு’ என்ற ஒரு சடங்கு. அரவானின் தலையும் கிரீடமும் ஊர்வலமாக காளியின்
பீடத்துக்கு எடுத்துச் செல்லப்படும், அங்கு ஏற்கனவே அரவானின் பிரும்மாண்டமான உடல்
செங்கற்களால் கட்டப்பட்டுத் தயாராக இருக்கும். வலதுகாலை மடித்து இடது தொடையின் மேல்
வைத்துக்கொண்டு, ஒருகையில் வில்லுடன் அமர்ந்த நிலையிலுள்ள உருவம் அது.சமைக்கப்பட்ட தலை
கிரீடத்துடன் அதன் மேல் பொருத்தப்படும்.இருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டபடி,
கோவில்பூசாரி கையில் உயர்த்திய புனித வாளுடன் (பலிக்கத்தி) அங்கு வருகிறார்; அவர் ஒரு
ஆவேசநிலையில் இருக்கிறார்.காலியை வழிபட்டபின் அரவான் உருவத்தினருகே சென்று அதைச்
சுற்றி வந்து, இரத்தம் வழியும் விளைவை ஏற்படுத்துவதற்காக குங்குமம் பூசிய ஒரு
பூசணிக்காயை வெட்டுகிறார்.முற்காலத்தில் ஒரு ஆடு பலி கொடுக்கப்படும், இப்போது அதற்கு
பதிலாய் பூசணிக்காய் உபயோகிக்கப்படுகிறது.இந்த”இரத்தம்’ அரவானின் உடலில்
தெளிக்கப்படும்.நாககன்னி வேடம் தரித்த கூத்து நடிகர் விரைந்து வந்து அரவானின்
இறப்புக்காக புலம்ப ஆரம்பிக்கிறார்.அரவானின் பலி முற்காலத்தைய ஒரு திராவிட வழிபாட்டு
வடிவத்தையும், வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி, அதை பாரதவிழாவுடன் இணைத்துள்ளது
என்பது தெளிவு.இதற்குப் பின் அன்றைய கூத்தில் அரவான் பலி நடிக்கப்படுகிறது. ஆனால்
கூத்தில் அரவானின் பலியைக் குறிக்கும் வகையில் ஒரு சேவல் மேடையில் பலி கொடுக்கப்படும்
வேளையில், அரவானுக்கு ஆவேசம் வர அவர் ஒப்பனை அறைக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்படுகிறார்.
அரவானின் பலி நடிக்கப்படலாம் அல்லது நடிக்கப்படாமலும் இருக்கலாம்.அது தவிர்க்கப்பட்டால்,
அபிமன்யு வதம் நடிக்கப்படும்.இது மேடையில் மட்டுமே நடிக்கப்படும், மேடைக்கு அப்பால் நீளும்
மற்ற சடங்குகள் இருக்காது.சண்டைக் காட்சியோ, தெருக்கூத்து பாணியில், உரத்த கோப
வெளிப்பாடுகளுடனும் மிகைபடுத்தப்பட்ட வீரதீர கையசைவுகளுடன் இருக்கும்.அடுத்த நாள் ’கர்ண
மோட்சம்’ என அழைக்கப்படும் கர்ணவதம் பற்றியது.அன்றைய தினத்தின் முற்பகுதியில் பிரசங்கி
கர்ணனின் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து அவன் வாழ்வு முழுவதையும் விரிவாக
விளக்கியிருப்பார்.தெருக்கூத்தில் வாளாலும் வார்த்தைகளாலும் இருவரிடையே சண்டையின்
சிறப்பு வெளிப்படும்.வாய்ச்சண்டையில் திறமையான வாக்குவாதம் உபயோகிக்கப்படும், வாள்
சண்டையில் அத்தனைக் கழைக்கூத்தாடித்தனமும் உபயோகிக்கப்படும். 18ம் நாள் துரியோதன வதத்துடன்
குருச்சேத்திரப்போர் முடிவதோடு பாரத விழாவும் முடிவடையும்.பிரசங்கியும் கூத்தில் கதை
விரியும் வரிசையிலேயே தன் உரையையும் நடத்திக்கொண்டு வருகிறார்.திறந்த வெளி
போர்க்களமாக மாறியுள்ளது (இதை ‘படுகளம்’ என்பார்கள்).பிரும்மாண்டமான 70லிருந்து 80
அடி வரையிலான உயரத்துக்கு துரியோதனின் மண் உருவம் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில்
கட்டப்பட்டிருக்கிறது.முந்தைய வருடங்களில் அப்படிக் கட்டப்பட்ட துரியோதனின் உருவங்கள்
இப்போது கலைந்துபோன மண்மேடாய் அங்கு இருக்கின்றன. இரவுமுழுவதும் 50,60
மாட்டுவண்டிகளில்மண்ணைக் கொண்டுவந்து அந்த மேட்டின் மேல் போட்டு புது துரியோதன உருவத்தைக்
கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கூத்து துரியோதனனைப் போலவே, சில நாட்களுக்கு முன்பு
அரவான் உருவம் வடிவாக்கப்பட்டதுபோல அதற்கும் சாயம் பூசப்படுகிறது.அதன் தொடையில்
ஓரிடத்தில் சிவப்புச் சாயம் நிரப்பிய மண்குடம் (இரத்தத்தைக் குறிக்க) புதைக்கப்பட்டு அதனுள்
ஒரு மரக்கத்தி சொருகப்பட்டிருக்கிறது. மதியத்துக்குள் அக்கம்பக்கத்துக்
கிராமங்களிலிருந்தெல்லாம் வந்த நிறைய மக்கள் அங்கு திரண்டிருக்கிறார்கள், பலவிதமான
கடைகள் எழுப்பட்டுள்ளன, அது ஒரு கிராமத்துச் சந்தை போல ஆகிவிட்டிருக்கிறது. நிகழ்ச்சி
காலையிலேயே ஆரம்பிக்கிறது.துரியோதனன், பீமன் வேடம் போடும் நடிகர்கள் முழு ஒப்பனையுடன்,
மேளதாளங்களுடன் விழாக்கால ஊர்வலமாய் கோவிலுக்குப் போய் அம்மனை
வழிபடுகிறார்கள்.திரும்பும் போது ஊர்வலம் அவர்க்ளை கிராமத்தின் தெருக்களுடே அழைத்துச்
செல்கிறது. துரியோதனும் பீமனும் ஒருவரை ஒருவர் வாய்ச்சண்டைக்கு இழுத்து, வம்பு செய்து,
கழைக்கூத்தாடிகளைப் போல பலவித துணிச்சலான காரியங்கள் செய்து நடனமாடி, எகிறிக்
குதித்து ஒருவரை ஒருவர் மிரட்டிக்கொண்டு போகிறார்கள் ஆனால் அவர்கள் இருவருக்குமிடையே
ஒரு பெரிய கயிறு, இருபக்கமும் மக்கள் நின்று அவர்களை வேடிக்கப் பார்க்கிறார்கள்.
இதற்குள் பிரசங்கி சல்லியன் மற்றும் கௌரவர் அணியில் இதரரின் வதம் பற்றி தன் உரையில் பேசி
முடித்திருக்கிறார். துரியோதனனின் மண் உருவுக்கு அருகே 5 குழிகள் தோண்டப்பட்டு
அக்குழிகளில் ஐந்து காப்புகாரர்களும் (திருவிழாவின் ஆரம்பத்தில் காப்பு கட்டப்பட்டவர்கள்)
சாய்ந்தவாக்கில் ஈர மஞ்சள் துணி சுற்றிக் கொண்டு, உடம்பெல்லாம் மஞ்சள் பூசி
படுத்திருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் இருக்கும் ஆண்கள் அவர்கள் மீது மஞ்சள் நீரை அடிக்கடித்
தெளித்தபடி இருக்கிறார்கள், அவர்களை இறப்பினின்று காப்பது போல. அவர்கள் ஆவேசம் வந்தது
போல ஒரு மயக்க நிலையில் இருக்கிறார்கள். ஐவராக இருப்பதினால் அவர்கள் தூக்கத்தில்
கொல்லப்பட்ட பாண்டவர்களின் மகன்களைக் குறிக்கலாம். துரியோதனனும் பீமனும் தெருக்கூத்து
நடக்கும் இடத்துக்குள் நுழைகிறார்கள்.பிரசங்கி துரியோதன் ஆழ்கடலுக்குள்
மறைந்துகொண்டிருக்கிறான் எனப் பார்வையாளர்களிடம் சொல்கிறார்.துரியோதனன் திரை மறைவில்
மேடைக்குள் நுழைகிறான்.வயலில் பார்வையாளர்களிடையே காத்திருக்கும் பீமன் அவனை வெளியே
வரச்சொல்லி அழைக்கிறான்.அவர்கள் இருவரும் துரியோதனின் மண் உருவத்தைச் சுற்றி ஒருவர் பின்
ஒருவர் ஓடிக்கொண்டு ஒருவரையொருவர் எதிர்கொள்கிறர்கள்.இருவரின் பற்களிடையேயும்
எலுமிச்சம்பழம் இருக்கிறது, இருவரும் ஆவேச நிலையில், உக்கிரமான வெறியில்
இருக்கிறார்கள். தெருக்கூத்துக்கே உரிய பாணியில் அவர்கள் ஒருவரை ஒருவர் சண்டையில்
எதிர்கொள்வது அதன் உச்ச வெறிநிலைக்கு எடுத்துப்போகப்பட்டு இறுதிக் கணத்தில் பீமன்
துரியோதனனின் மண் உருவத்தின் தொடைப்பாகத்தில் (சிவப்புச்சாயம் நிரம்பிய) மண்குடம்
புதைக்கப்பட்டுள்ள இடத்தில் அடிக்க, மண்குடம் உடைந்து இரத்தம் சுற்றிலும் சிதறியடிக்கிறது.
இன்னும் ஆவேசநிலையிலேயே இருக்கும் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்துள்ள நடிகர்களைக்
கூத்து அரங்கத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்குத் தூக்கிச் செல்கிறார்கள். துரியோதனன்
கூத்து அரங்கிற்குத் திரும்பக் வரக்கூடாது, அவ்விரண்டு நடிகர்களும் ஒருவருக்கொருவர்
சமீபமாக இருக்கக்கூடாது. ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும் திரௌபதி அம்மன் சிலையும்,
கூத்தில் திரௌபதி வேடம் போட்டிருப்பவரும் துரியோதனனின் மண் உருவம் தொடையிலிருந்த்
இரத்தம் வழிய அடிக்கப்பட்ட இடத்தில் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். இரத்தத்தின் குறியீடான
சிவப்புச் சாயம் அவ்விருவரின் அவிழ்ந்த கூந்தலிலும் பூசப்பட்டு, அதன் பின் கூந்தல்
முடியப்படுகிறது.திரௌபதியின் சபதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.கிராமத்திலிருந்து ஓர்
ஏணியில் ஊர்வலமாக ஒரு பெண் துரியோதனனின் மண் உருவத்திடம் அழைத்து வரப்படுகிறாள்.
அவளிடம் ஒரு துடைப்பமும், தானியங்கள் புடைக்க உபயோகப்படும் மூங்கில் முறமும்
இருக்கிறது.அவள் உரத்த குரலில் ஒப்பாரி வைத்தபடி வருகிறாள்.அவள் துரியோதனின் அரண்மணைப்
பெண்களின் பிரதிநிதிகளின் சின்னமாகக் கொள்ளவேண்டும்.அவள் துரியோதனின் மண் உருவத்தின் மேல்
அமர்ந்து ஒப்பாரி வைக்கிறாள்.பார்வையாளர்கள் அவளுக்குப் பணம் கொடுக்கிறார்கள். திரௌபதியின்
சிலை ஒரு பிரார்த்தனை சடங்குக்குப் பின் கிராமத்தினூடே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுப்
பின் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.இதற்குள் மதியமாகி விட்டிருக்கிறது.
2 மணியளவில் பாரதவிழாவின் கடைசி சடங்கான தீமிதிப்புச் சடங்குக்கான ஆயத்தங்கள்
செய்யப்படுகின்றன.இது எல்லா அம்மன் கடவுள் திருவிழாக்களுக்கும் (காளி, மாரியம்மன்)
பொதுவான சடங்கு.திரௌபதி அம்மன் தாயாக வழிபடப்படும் தெய்வம், மேலும்
வில்லிப்புத்தூராரின் தமிழ் பாரதக்கதையின் படி அவள் அக்னியில் பிறந்தவள்.ஒரு செவ்வகமான
தீக்குழியில்பெரிய மரக்கட்டைகள் எரிக்கப்பட்டு அக்குழி ஒரு எரியும் படுக்கையாய்
மாறியுள்ளது.குழியிலிருந்து வெளியேறும் இடத்தில் ஒரு சிறிய தண்ணீர்குட்டை
உருவாக்கப்பட்டுள்ளது.கோவில் தர்மகர்த்தா, கோவில் அலுவலர்கள் மற்றும் கரகம் எடுப்பதற்காக
விரதம் மேற்கொண்டுள்ள ஐந்து காப்புக்காரர்களும் கோவில் குளத்துக்குக் குளிக்கச்
செல்கிறார்கள். அவர்கள் மஞ்சள்நீரில் நனைக்கப்பட்ட துணிகளைக் கட்டிக் கொண்டு வெளியே வந்து,
மணிக்கட்டுகளைச் சுற்றி மலர்களைச் சுற்றிக்கொண்டு, கிராமத்து மக்களுடன் ஊர்வலமாகக்
கோவிலுக்குச் சென்று, அங்கு சடங்கால் புனிதப்படுத்தப்பட்டிருக்கும் கரகப்பானைகளை எடுத்துக்
கொள்வார்கள். கோவிலில் பிரார்தனை செய்த பின், கரகம் எடுப்பவர்களும் அம்மனும் ஊர்வலமாக
தீக்குழிக்கு வருவார்கள்.அம்மன் சிலையை அங்கே வைத்து, எரியும் கரித்துண்டுகளைத் தீக்குழி
முழுவதும் சமமாகப் பரப்புவார்கள்.அப்பொழுதுதான் வெட்டப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட ஒரு
அக்கினியின் சிலையும் அங்கு வைக்கப்படுகிறது.பிரசங்கி தீக்குழியிலிருந்து ஒரு கையளவு
தணல்கட்டிகளை எடுத்து அவற்றை மஞ்சள்நீரில் நனைத்த ஒரு துணியில் கட்டி அதை திரௌபதி அம்மன்
சிலையின் மடியில் வைக்கிறார்.அந்தத் தணல் துணியை எரித்து வெளியே வரக்கூடாது.அப்படி
வந்தால் அது கெட்ட சகுனமாகக் கருதப்படும்.அப்படி வரவில்லையானால், அது தீமிதிப்பை
நடத்தலாம் என்பதற்கான அறிகுறி.எரியும் நெருப்புக் குழியினுள் மலர்கள் எறியப்படும். ஆவேச
நிலையில் இருக்கும் கரகம் தூக்குபவர்கள் –அவர்களை நெருப்பில் எரிபட்டு மரிப்பதிலிருந்து
காப்பாற்ற அவர்கள் உடலை அம்மன் ஆட்கொண்டிருக்கிறாள் – தீக்குழியின் முழு நீளமும் மூன்றுமுறை
நடக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் குழியிலிருந்து வெளியேறும் கோடியில் இருக்கும்
தண்ணீர்குட்டையை மிதித்துப் பின் திரும்பக் குழியின் ஆரம்ப இடத்துக்கு வந்து மீண்டும்
தீமிதிப்பார்கள். ஒருமுறை தீமிதிப்புச் சடங்கு முடிந்ததும், குழியைச் சுற்றி
நின்றிருக்கும் கிராமத்தினர் இதற்குள் சற்றுக் குளிர்ந்திருக்கும் நெருப்பிலிருந்து ஒரு
கையளவு கரித்துண்டுகளை அம்மனின் பரிசாக எண்ணித் தம் வீட்டுக்கு எடுத்துப் போவார்கள்.
மறுநாள் தர்மராஜாவின் பட்டாபிஷேகம் கோவிலில் நடத்தப்படுகிறது.இந்தச் சடங்கில் பிரசங்கி
பாரதத்தில் இதுகுறித்த சம்பவத்தைப் பற்றிய விளக்கவுரையை நடத்தி அதன் பின் தர்மராஜாவின்
சிலைக்கு மகுடம் அணிவிப்பார்.இத்துடன் 20 நாள் பாரத விழா முடிவடைகிறது.
(தொடரும்…)
vswaminat...@gmail.com
Next >

Braille Acl

unread,
Jul 10, 2015, 1:55:16 AM7/10/15
to Braille Acl News, brailleacl
10.07.2015dinamani.html

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 12:47:52 AM7/12/15
to brail...@googlegroups.com
சிறைப்பட்டிருத்தல்
8
விவரங்கள்
எழுத்தாளர்: பா.கார்த்திகா
தாய்ப் பிரிவு: அணங்கு
பிரிவு: அக்டோபர்09
C வெளியிடப்பட்டது: 16 டிசம்பர் 2009
இரவில் ஒரு சின்னச் சத்தங்கேட்டாலும் நெஞ்சு விறைக்கத் தொடங்கிடும். இப்ப இருக்கிற
நிலையில பயப்பிடாமலுக்கு இருக்கேலுமே? என்னவும் நடக்கலாம். ஆர் கேக்கிறது? ஒவ்வொரு
கட்டத்திலயும் தப்பி வந்து கடைசியில ஏதோவொரு கட்டத் துக்குள் சிக்கிச் சீரழிஞ்சிடுவனோ
ஆருக்குத் தெரியும்? எந்தப் பக்கந் திரும்பினாலும் தடுப்புகள். அந்தத் தடுப்புகளுக்குள்ளால
தான் திரிய விதிக்கப்பட்டவளாய் நான். எவனின்ரை பார்வையும் பிடிச்சு விழுங்கிற
மாதிரித்தான் இருக்கு. அம்மா கொஞ்சம் பெருமப்பட்டுத்தான் சொல்லுவாள். எண்பத்தேழாமாண்டில
சனமெல்லாம் இடம்பெயர நானும் பிள்ளையும் தனிச்சிருந் தனாங்கள். அவங்களால எந்தக் கரைச்சலு
மில்லை. ‘அவங்கள் தங்கடை பாடு. நாங்கள் எங்கடைபாடு’ அப்ப நான் ஆறு வயதும் நிரம்பாத
சிறுமி. ஆனால் இப்ப.... பாக்கிறவை யெல்லாம் அம்மாவிடம் உன்ர மகள் ஒரு வாகனம் மாதிரி
வந்திட்டாள்’ என்கினம். மற்றது அப்ப இருந்த மாதிரியில்ல இப்போ தைய நிலமை. பாக்கிற
பார்வை யிலேயே பிடிச்சு விழுங்கியிடுவாங்கள் போலயிருக்கு.
வெளியேறத் தொடங்கினோன்ன பூவரசுகளில் இருந்து இறங்கி ஊர்ந்து திரியுற மசுக்குட்டியள்
கணக்காக இப்ப எங்க பாத்தாலும் இவங்கதான். இவங்களின்ரை பார்வைய்ல இருந்து தப்பேலுமே?..
ஒரு நாளைக்கு முறையா அகப்பிடு. அப்ப பாரன் என்ன நடக்குமெண்டு. எண்டு சொல்லுற
மாதிரியிருக்கு இவங்களின்ரை பார்வையள். இவங்களைக் கடந்து சைக்கிளில போகேக் குள்ள நெஞ்சு
பக்.பக்.. எண்டிருக்கும். ஏதாவது காது கூசுறமாதிரி என்ர அவயவங் களுக்குக் குறிச்சுக்
கொச்சைத்தனமாச் சொல்லுறதையே வழக்கமாக வைச்சிருக் கிறாங்க. நான் செவிடு மாதிரிக்
குனிஞ்ச தலை நிமிராமல் போக வேண்டியதுதான். இதைத்தவிரப் பாதுகாப்பான வேறை
வழியேதுமிருக்கோ? அப்பா, அண்ணா எண்டு ஆரிட்டையும் சொல்லேலுமோ? சொன்னாலும் அவையள் என்ன
செய்யி றது? இவங்கட்கையில் படைக்கலங்களிருக்கு. எதுவும் செய்வாங்கள். அதனால என்ன
நடந்தாலும் பேசாமல் பறையாமல் குனிஞ்ச தலை நிமிராமல் திரிய வேண்டியதுதான்.
கெம்பஸ் பெட்டையள் எண்டால் இவங்கள் வித்தியாசமாகத்தான் பாப்பாங்கள். ஏதோ நாங்கள
வெடிபொருட்களைக் கொண்டு திரியறம் என்கிற மாதிரி லெக்சரசுக்கு றூமிலயிருந்து
வெளிக்கிட்டுத் தனியப்போறதை நினைச்சால் பயமாயிருக்கு. நானும் சசியும் இருக்கிற றூம்ல
இருந்து கூப்பிடு தூரத்திலதான் இவங்கடை முகாமிருக்கு. எப்படியும் அதைத் தாண்டித் தான்
போக வேண்டியிருக்கு. உட்பாதைகள் எண்டு எதுமில்லை. நானும் சசியும் சேர்ந்து தான்
லெக்சர்சுக்குப் போவம். நாங்கள் போகேக்க இவங்கள் காத்து நிண்டு சீக்கா யடிப்பாங்கள் அல்லாட்டில்
ஏதும் காது கூசுகிற மாதிரி நொட்டை சொல்லுவாங்கள். நாங்கள் குனிஞ்ச தலை நிமிராமல் தான்
போய் வாறம்.
சசி றூமில நிக்காத நாளில நான் லெக்சர்சுக்குப் போறேல்லை. ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப்
போகுதெண்டு உள்மனம் சொல்லுது. இப்ப பலாலி றோட்டால போகேக்க ஒரு மயானத்துக்குள்ளால போற
மாதிரியிருக்கு. முந்தியெண்டா வீதி கலகலப் பாயிருக்கும். நிறைய வாகனங்கள் போய் வரும்.
இரவு பகலாய்க் கடையள் திறந்த வியாபாரம் நடக்கும். இப்ப அநேகமாக எல்லாக் கடைகளும்
பூட்டிக்கிடக்கு. ஒண்டு ரண்டு சைக்கிள் திருத்திற கடையள் தவிர. இவங்கட வாகனங்கள்தான்
வலுவேகமாய்ப் போய்வருகுது.
இப்பக் கொஞ்சநாளா ஒரு வழமை என்னெண்டா இவங்கட வானகத் தொடரணி போய்வாறதுக்காக றோட்டில
சனங்களை மறிச்சு வைக்கிறாங்கள். மத்தியானம் பன்னிரண்டு மணிக்கும் பின்னேரம் நாலு மணிக்கும்
றோட்டில அடிக்கொருத்தனா நிக்கிறவங்களில் ஒருத்தன் விசில் ஊதுவான். அதுக்கு பிறகு யாரும்
அசையேலாது. நீண்ட இடத்தில நிக்க வேண்டியதுதான். சில நேரங்களில் இ ரண்டு, மூண்டு
மணித்தியாலத்திற்கு மேலை நிக்க வேண்டிவரும். இவங்கட வாகனத் தொடரணி போய்
முடிஞ்சாப்போலதான் சனம் போகலாம். இதால நானும் சசியும் கனக்க லெக்சேர்சைத்
தவறவிட்டிருக்கிறம். என்ன செய்யிறது எது நடந்தாலும் பேசாம லிருக்க வேண்டியதுதான்.
லெக்சேர்சும் முந்தின மாதிரி கலகலப்பாயில்லை. ஏதோ செத்த வீட்டுக்குத் துக்கம்
விசாரிக்கப்போய் வாற மாதிரியிருக்கு. லெக்சரர்மார் தொடக்கம் பொடியள் xt/javascript">
gt;, பெட்டையள் எண்டு எல்லாரின்ரை முகங்களும் இறுகிப் போய் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்கவும்
பயந்து, இப்பிடியே காலங்கள் கழியுது.
சில நாட்கள்ள சசி வடமராச்சியில இருக்கிற தன்ர வீட்டுக்குப் போகிடுவாள். றூமில நான்தான்
தனிச்சிருக்க வேண்டி வரும். வீட்டுக்கார அன்ரி இருக்கிறாதான். அவ வேளைக்கு வைற்றை
நூத்திட்டுப் படுத்திடுவா. படுக்கிறதுக்கு முதல் ஒருக்கா றூமை எட்டிப் பார்த்து பிள்ளை
கெதியா வைற் ஓவ் பண்ணிப்போட்டுப் படுபிள்ளை படிக்கிறதெண்டா காலமை எழும்பிப் படியம். நான்
படுக்கப் போறன்” எண்டிட்டுப் போய்ப்படுத்திடுவா. மனுசி படுத்ததுதான் தாமதம் குறட்டைவிடத்
தொடங்கிடுவாள். அன்ரிக்கென்ன கவலை? வயதும் அறுபதைத் தாண்டியிடுத்து. பிள்ளையள் மூண்டு
வெளிநாட்டில. புருஷன் காரன்ரை பென்சனும் கிடைக்குது. அதுக்குள்ளை எங்கடை
வாடகைக்காகவும் அவ படுத் தோண்ண குறட்டை விடுகிறதுக்கு என்ன குறை?
இது தனிய நான் றூமுக்குள்ளை முடங்கினபடியே யன்னலையும் கதவையும் பூட்டியிட்டு இருள்
விழுங்கின அறைக் குள்ளை புழுங்கி அவிய கண்ணோடை கண் மூடேலாமலுக்குப் பயந்து செத்தொண்
டிருப்பன். வெளியில ஆரோ கனபேர் நடக்கிற மாதிரியிருக்கும். நாயள் வலுமோச மாகக்
குலைக்கும். முத்தத்துப் பிலாவால உதிர்ந்த சருகுகள் நொருங்குகிற மாதிரியும் சத்தம்
கேக்கும். இண்டைககு நான் துலையப்போறன் எண்டு நினைப்பன். என்ன நடந்தாலும் ஆருக்கும்
தெரியாது. கதவு தட்டுற சத்தம் ஏதும் கேக்குதோ எண்டு காதைத் தீட்டிக்கொண்டு நெஞ்சுக்குள்ளை
தண்ணியில்லாமல் உடல் விறைக்க அங்கால இங்கால அசையவும் பயந்து மல்லாந்து கிடப்பன். இரவு
எனக்குப் பாதகமாய் நீண்டுகொண்டிருக்கும். வெளியில கேட்கிற சின்னச் சத்தமும் பீதியைக்
கிளப்பும். பிலா மரத்தால ஏறி ஓட்டில நடந்து திரிகிற பூனை ரீய்ய்ய்ய.. எண்ட சத்தத்தோட
தொடர்ந் திரையிற நிலக்கறையான். எங்கையோ இருந்து தேக்கம் பழங்களைக் கவ்விக் கொண்டு
ஓட்டுக்கு மேல விழுதியிட்டு படக¢ படக் கெண்டு செட்டையடிச் சொண்டு போற வவ்வால்.
கிடக்கிற துக்கிதமாய் முத்தத்து மண்ணை வறுகிற அன்ரியின்ரை செல்லப் பிராணி ரொமி நாய்.
எல்லாம் எளிய மூதேசியள். திட்டம் போட்டுத் தாக்கிற விரோதியளப் போல இருள்
விழுங்கியிருக்கிற இரவின்ர கனதியைக் கூட்டி என்னை வெருட்டிச் சாகடித்துக் கொண்டிருக்குங்கள்.
ஒரு கோழித்தூக்கம் மாதிரித்தான் என்ர நித்திரை. இடையில கெட்ட கனாக்களும் வரும்.
கண்முழிச்சா நான் ஆஸ்பத்திரிப் பிரேத அறைக்குள் கிடக்கிற மாதிரியிருக்கும். நெஞ்சு
வேகமா அடிச்சுக்கொண்டிருக்கும். போதாக்குறைக்கு அன்ரி விடுற குறட்டைச் சத்தம் இன்னும்
பயத்தைக் கிளப்பும். றோட்டில வாகனங்கள் இரையிற சத்தம் கேக்கும். என்ர உடம்பு தன்பாட்டிற்கு
விறைக்கத் தொடங்கிவிடும். பிறகு பாத்தா வானங்கள் வீட்டை நோக்கி வார மாதிரியிருக்கும்.
இனியென்ன அவங்கள் வந்து கதவைத் தட்டப்போறாங்கள். அடையாள அட்டையைப் பாத்திட்டு நீ வன்னியில
இருந்தா வந்தினி? உன்னில எங்களுக்குச் சந்தேகம் வலுக்குது. உன்னை விசாரிக்கோணும் கெதியா
வா? என்பாங்கள். நான் போக வேண்டியதுதான். நடந்தது ஆருக்குத் தெரியும். நான் துலைஞ்சு
போகிடுவன். பிறகு பேப்பரில் செய்திவரும் என்னைக் காணேல்லயெண்டு. வரிக்கு வரி கடிதத்தில்
பிள்ளை கவனம். பிள்ளை கவனம் எண்டு எழுதுகிற அம்மா தவிச்சுப் போவா. எதுக்கும் அன்ரியை
எழுப்புவமோ? அப்படி நினைச்சாலும் தொண்டைக்குள்ளால சத்தம் வெளிக்கிடாது. இப்பிடியே
கிடந்து துலைய வேண்டியதுதான். எடியே சசி உனக்கினி வைதேகி எண்டொரு சிநேகிதி
இல்லையடி. அவள் துலையப் போறாள். நடக்கப்போற அசம்பாவிதம் உனக்குத் தெரியாது. நீ உன்ர
அம்மாவோடு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பாய் எனக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கு...
நான் தனிச்சுப்போய் ஒடுங்குகிற இரவுகளில் இப்பிடித்தான் எப்பவும் தவிர்க்கேலாமல் புலம்பி¢க்
கொண்டிருக்கிறன். பகல் தொடங்கினால் எந்தக் கணத்தில் என்ன நடக்குமோ? எண்டு மனம் தவிக்கத்
தொடங்கிவிடும். எல்லாம் உலரத் தொடங்கும். வெக்கை தோலைக் கருக்கிக் கொண் டிருக்கும். ஒரு
சொட்டு மழைவந்து இந்த இறுக்கத்தைத் குலைக்காதா? எண்டு மனம் ஏங்கும். மழை வாறதுக்கான
எந்தவொரு அறிகுறியுமிருக் காது. ஹர்த்தல், கடை யடைப்பு நாள்களில் பகல் முழுக்க
றூமுக்குள்ளதான் ஒடுங்க வேண்டியிருக்கும். உடம்பெல்லாம் வேர்த்தொழுக வெறுந் தரையில்
மல்லாந்து கிடக்க வேண்டியது தான். ஏதும் நோட்சை எடுத்துப் படிக்கவும் ஏலாது. மனதில்
எப்பிடிப் பதியும்? கண்கள் எழுத்துகளில் தாவிக்கொண்டிருக்க மனதில பயந்திருக்கும் காட்சியா
ஓடிக் கொண் டிருக்கும். முகத்தைக் கறுப்புத் துணியளால்.... மறைச்சுக் கட்டிக்கொண்டு
நிக்கிற அவங்கட உருவங்கள்தான் அடிக்கடி வரும். வெறிபிடிச்சு அலையிற நாயளாக அவங்கள்
சனத்தை வெட்டியும் சுட்டும் கருக்கிக் கொண்டிருப்பார்கள். சனங்கள் எல்லாம் அவங்களால அடிச்சு
நொருக்கப்படவும் சுட்டுக் கொல்லப்படவும் பிறந்ததுகள் மாதிரி தலையைக் குனிஞ்சு கொண்டு
நிக்குங்கள்.
கொஞ்ச நாளைக்கு முன்னம் மதியத் திரும்பினாப் போல நானும் சசியும் லெக்சர்ஸ் முடிஞ்சு
வாறம். அண்டைக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து அவங்களில இரண்டு பேர் செத்திட்டார்கள். பலாலி
றோட்டால வந்த ஒரு பஸ்ஸை மறிச்சு இளந்தாரியள் இறக்கி கேபிள் வயறுகளாலையும், துவக்குச்
சோங்குகளாலையும் நாலைஞ்சுபேர் வெறிபுடிச்ச நாயள் மாதிரி மாறி மாறி அடிச்சுத்
துவைச்சுக்கொண்டிருந்தாங்கள். அப்பதான் நான் முதன்முதலா அவங்கள அடிச்சுத் துவைக்கிறதைப்
பாக்கிறன். இப்பிடித்தான் என்னையும் சசியையும் போலப் பெட்டையள் தனியப்போய் அகப்பட்டால்
சட்டையளக் கீலங் கீலமாகக் கீழிச்சி வாயால சொல்லேலாத வேலையள் எல்லாம் செய்வாங்கள் எண்டு
நினைச் சோண்ண எனக்கெண்டால் தலை விறைக்கத் தொடங்கியிடுத்து. ஓரு மாதிரி தப்பித் தவறி
றூமுக்கு வந்து சேந்தாப் போலயும் எனக்கு உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அண்டைக்கு
இராமுழுக்க அவங்களட்ட நானும் சசியும் இன்னும் சில பெட்டையளும் தனிய அகப்படுறதும் அவங்கள்
எங்களைக் குழறக்குழற இழுத்தொண்டு போய்ச் சட்டயளக் கிழிச் செறிஞ்சிட்டு சின்னா
பின்னப்படுத்துறதுமா ஏதோ கனவெல்லாம் வந்து நான் படுக்கை யில் குழறியிட்டன். அடுத்த நாள்
சசி என்னடி இரவிரவாக் கத்திக் கொண்டி ருந்தாய்? எண்டு கேட்டிட்டு விழுந்து விழுந்து
சிரித்தாள்.
எனக்கு உண்மையில் கோபம்தான் வந்தது. பேய்ச்சி இன்னும் நிலமை விளங்காமல் செல்லங் கொட்டுறாள்
எண்டு. இவளை மாதிரித்தான் இங்கை கன பெட்டையளுக்கு நிலமை விளங்கிறதில்லை. நாளுக்கு
நாள் நிலமை மோசமாகிக்கொண்டு வருகிறது. இனிமேல் பெண்ணாய்ப் பிறந்தனாங்கள் என்ன
செய்யப்போறம்? எண்ட அச்சத்துக்குரிய பெரிய கேள்வி யண்டிருக்கு. ஆரிட்டையும் இந்தக்
கேள்விக்கு விடையில்லை. திறந்த வெளியில் திரியிற செம்மறியாடுகள் மாதிரித்தான் எங்கடை
நிலை. ஆரும் குளிருக்குப¢ போர்க்க எங்கடை மயிரை கத்தரிக்கலாம் அல்லாட்டில் இறைச்சிக்காக
எங்களை வெட்டி பிளக்கலாம் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமலுக்குத் தலையக் குனிஞ்சு
கொண்டு நிப்பம். அவ்வளவுதான் நான் அடிக்கடி நினைப்பன் இந்தக் கம்பஸ் படிப்பை விட்டுப்போட்டு
ஊரில போய் இருப்பமெண்டு. பிறகு மூண்டு வருசமாக் கனக்கக் காசு செலவழிச்சாச்சு. படிப்ப
முடிய இன்னும் ஒரு வருசங்கிடக்கு. பல்லைக் கடிச்சொண்டு பேசாமல் இருப்பம் எண்ட
முடிவுக்குத்தான் வாறன். என்ன செய்யிறது.
எங்கை சண்டை தொடங்கினாலும் எங்களைப் போல பொம்பளையளுக்குத்தான் ஆபத்துக் காத்திருக்கும்.
ஆர்மிக்காறவங்களின்ர மிருகத்தனமான உணர்ச்சிகளுக்கு இரையாகிறதெல்லாம் நாங்கள்தான். அவங்கள்
மாமிசத்தை நுகர்ந்த நாயள் கணக்காக அலைஞ்சு திரிவாங்கள். எப்ப சந்தர்ப்பம் வாய்க்குதோ அப்ப
கடிச்சுக் குதறிப்போட்டுப் போவாங்கள். பேப்பருகளில் பெரிசாச் செய்தியள் வரும். பலர் கண்டனம்
தெரிவிப்பம். மருத்துவப் பரிசோதனை அறிக்கையைப் பலரும் ஆவலோட எதிர்பார்த்திருப்பினம்.
பாலுறுப்புகளில் நகக்கீறலும், கடிகாயமும் அவதானிக்கப் பட்டிருப்பதான அறிக்கை
வெளியாகும். வழக்குப் பதிவு நடந்து விசாரணையள் தொடங்கும். சாட்சியங்கள் இருக்காது.
சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தித்
தண்டனை வழங்கப்படும் எண்டொரு கூற்று வெளியாகும். பிறகு கொஞ்ச நாளைக்கு எந்த
அசம்பாவிதமும் நடக்காது. அவங்கள் நல்ல பிள்ளையளாத் திரிவாங்கள்.
எல்லாம் ஓய்ஞ்சு நடந்த சம்பவத்தை மறந்தாப் போல திரும்பவும் தங்கடை வேலையளத் தொடங்கி
யிடுவாங்கள். காலப்போக்கில் அறிக்கை வெளியிட விரும்புகிற சிலர் எழுதுவினம்.
ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் இப்படி நடக்கத்தான் செய்யும். கொங்கோவைப் பாருங்கோ,
வியட்நாமைப் பாருங்கள். ஈராக்கைப் பாருங்கள் இதெல்லாம் தவிர்க்ககேலாது எண்டு கனக்க
ஆதாரங்கள் காட்டி விளக்குவினம். இதெல்லாத்தையும் நாங்கள் வாசிச்சுக் கொண்டு
செம்மறியாடுகளாகத் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரிய வேண்டியதுதான். என்னைப்போலப்
பெட்டையளில அக்கறை யுள்ள ஒரு கடவுள் இருந்தால் அவர் கனவில யெண்டாலும் வரோணும். வந்தால்
நான் கேக்கிற வரம் இதுதான். எங்களில உண்மையான அக்கறையுள்ள கடவுளாக நீர் இருந்தால் எங்களை
உடன கிழவியாக்கி விடும். இல்லாட்டில் பால்குடிக் குழந்தை யாக்கி விடும். உம்மில நாங்கள்
விசுவாசமா யிருப்பம். இதுகும் முடியாட்டில எங்களைக் கல்லாக்கி விடும் அல்லது
சாக்காட்டிவிடும். உமக்குப் புண்ணியங்கிடைக்கும். நாங்கள் நிம்மதியில்லாமல் எவ்வளவு
காலத்துக்குச் செத்துக்கொண்டிருக்கிறது?
(குறிப்பு: சென்ற வருடம் இச்சிறுகதை எழுதப்பட்டது. இப்பொழுது ஈழப் பெண்களின் நிலைமை
இதைவிடக் கொடுமையாகச் சீர்குலைந்து போய்கிடக்கிறது.)
- பா.கார்த்திகா

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 12:54:11 AM7/12/15
to brail...@googlegroups.com
வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
8
விவரங்கள்
எழுத்தாளர்: வெ.சுந்தரம்
தாய்ப் பிரிவு: செம்மலர்
பிரிவு: நவம்பர்2011
C வெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2011
பண்டைக்கால இந்திய வரலாறு பற்றிய மார்க்சிய ஆய்வாளர்களில் ஒருவரான சுவீரா ஜெயஸ்வால்
தனது முனைவர் வட்டத்திற்காக பாட்னா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த ஆய்வுதான் இந்நூல்.
மார்க்சிய ஆய்வாளர்கள் ஆர். எஸ். சர்மா வழிகாட்டியாகவும், டி. டி கோசாம்பி ஆலோசகராகவும்
உதவியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு. கி.அனுமந்தன், ஆர். பார்த்தசாரதி தமிழாக்கத்தில்
என்.சி.பி.எச் புத்தக நிறுவனம் பயனுள்ள வகையில் இந்நூலை வெளியிட்டுள்ளது.
கிபி 300 முதல் 500 வரை மௌரியர், குப்தர்களின் ஆட்சிக் காலம் வைணவ வரலாற்றில்
முக்கியமான காலகட்டம். அக்காலத்திய இலக்கிய ஆதாரங்களையும், தொல் பொருள் ஆய்வுகளையும்
ஆதாரமாகக் கொண்டு சுவீரா ஜெயஸ்வால் இந்த ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் இறையியல் கருத்துக்கள் மக்களிடம் எப்படித் தோன்றியது என்ற ஆய்வுகள்
நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் பல ஆய்வாளர்கள் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ளனர்.
மார்க்சிய ஆய்வு முறையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இராமாயணம், மகாபாரதம் இரண்டும் வைணவ வரலாற்றில் முக்கிய இடம் பெறும் இதிகாசங்கள்.
இரண்டும் மக்களிடம் பரவியிருந்த கதைப்பாடல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவை.
இராமாயணத்தின் முதலாவது மற்றும் இறுதிக் காண்டங்கள் பிற்சேர்க்கை. மேலும் பல இடைச்
செருகல்கள் மூலம் சாதாரண மனிதனான இராமன் விஷ்ணுவின் அவதாரமாகச் சித்தரிக்கப்பட்டான்.
பரதம் பழங்கடி பிரிவுகளுக்கு இடையே நடந்த போராட்டங்களைச் சித்தரிக்கும் 'ஆதிபாரதம்'
பின்னால் இதிகாசமாக மாற்றப்பட்டு, உட்கதைகள் புகுத்தப்பட்டு, மகாபாரதமாக மாறியது.
திறமையான போர்க்கடவுளாக, ஆன்மீக வழிகாட்டியாக, பாண்டவர்களின் துணையாகச் சித்தரிக்கப்பட்ட
வாசு தேவ கிருஷ்ணன், நாராயண விஷ்ணுவின் அவதாரமாக மாற்றப்பட்டார். ஸ்ரீ, லட்சுமி என்ற
பெண் தெய்வங்கள் ஸ்ரீலட்சுமி என்ற செல்வத்தின் தேவதையாக மாற்றப்பட்டு விஷ்ணுவுடன் இணைக்கப்பட்டது.
குப்தர்கள் காலத்தில் வைணவம் ஆளும் வர்க்கத்தின் சமயமாக ஓங்கியது. நிலப்பிரபுத்துவ வேளாண்
சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றும் ஆற்றல் பெற்ற பிராமணிய வைணவம் எழுந்தது. இந்திய
மக்கள் மனதில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தியது.
வேதகால யாகம், பலியிடுதல் மாறி இறை பக்தி வழிபாட்டு முறை உருவானது. பலியிடுதலை
எதிர்த்த புத்த, சமண மதம் பலவீனம் அடைந்தது. பக்தி மயமான வைணவம் அகிம்சையை
வற்புறுத்தியது. பலியிடுதல் எதிர்த்தது. மாமிச உணவை மறுத்தது. சமூக நிலை மட்டத்தை
அனைத்திந்திய மரக்கறி உணவு ஒரு அளவு கோலாக மாறியது.
வைணவத்தில் மற்றொரு முக்கிய அம்சம் அவதாரக் கொள்கை. விஷ்ணுவின் பத்து அவதாரங்களும்
தீமைகளை அழித்து நல்லவர்களை காப்பாற்ற என்ற கருத்து கீதை மூலம் நிலைநிறுத்தப்பட்டது.
உள்நாட்டு இனக் குழு மக்களிடம் பிராமணியத்தை பரப்ப இது பயன்பட்டது. நாட்டுக்கு ஒருவித
கலாச்சார ஒற்றுமையை தருவதற்கும் உதவியது. மன்னர், உயர் குடியினர், மேனிலை மாந்தர்
அரியின் அவதாரமென்று வர்ணிக்கப்பட்டனர்.
சடங்குகளும், விரதம், நோன்பு போன்ற செயல்முறைகளும் இந்தியா முழுவதும் பரவியது. இதன்
மூலம் வைணவம் நாடு முழுவதும் பரவி பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பரவியது.
பகவத் நாராயணரின் வழிபாடாகிய பாகவத கோட்பாடு வளர்ச்சியுற்ற நிலையே வைணவ சமயமாகும்.
அது பல்வேறு கூறுகளைச் சேர்த்து உட்கொள்ளும் போக்கை மேற்கொண்டதால் குப்தர் காலத்தில் மிகச்
செல்வாக்கு பெற்ற சமயங்களில் ஒன்றாக மாறியது. நால் வர்ணம் சார்ந்த எல்லா மக்களும் வந்துசேர
வைணவம் திறந்திருக்கிறது. வர்ணாசிரமம் காப்பாற்றப்படுவதற்கும், பாமர மக்கள் தம் சமூக
பொருளாதார நிலைகளை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்வதற்கும் அது காரணமாக இருந்தது.
மேற்கண்ட விளக்கங்களும், நிர்ணயிப்புகளும் ஆதாரப்பூர்வமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
ஆரம்பக்கால மத கோட்பாடுகளும், இதிகாசங்களும் எவ்வாறு உருவாகின -ஆளும் வர்க்கங்களுக்கு
அவை எத்தகைய சேவை செய்தன என்பதும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மதவாத பிற்போக்குக்
கருத்துக்களையும், சாதியத்தையும் எதிர்த்துப் போராட இந்நூல் தத்துவ பலம் அளிக்கும்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 1:02:34 AM7/12/15
to brail...@googlegroups.com
புராணக் கதைகள் தோன்றிய இரகசியம்!
8
விவரங்கள்
எழுத்தாளர்: பெரியார்
தாய்ப் பிரிவு: திசைகாட்டிகள்
பிரிவு: பெரியார்
C வெளியிடப்பட்டது: 26 ஆகஸ்ட் 2010
பிராமணீயத்தில் பிரம்மன் முதலிடம் பெற்றுள்ளான்; இதற்குக் காரணம் பிராமணர் தமது இனத்துக்கு
முக்கியத்துவம் தரவேயாகும். மற்றும், பிரஜாபதி என்ற தேவனும் முக்கியமாகக்
கருதப்படுகிறது. இந்தப் பிரஜாபதி லிங்க வரலாறு பற்றிய கதைகள் அசிங்கமாக
அருவருக்கத்தக்கவையாக உள்ளன. பிரஜாபதி என்றால் உலகை உற்பத்தி செய்யும்
கடவுளெனப்படுகிறது. இதனை சில இடங்களில் 4 ஆவது தேவனென்று குறிப்பிட்டுள்ளனர்.
மூவுலகின் தந்தையும் சிருஷ்டி கர்த்தாவும் இந்த தேவனென வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆயினும்
இதைப் பற்றிக் கூறப்படும் கோட்பாடுகள் ஒத்துவரவில்லை.

பிராமணர்கள், காலப்போக்கில் அரசியல் நோக்கங்களுக்காக இக்கோட்பாடுகளையெல்லாம்
தோற்றுவித்திருக்கவேண்டும். அதாவது, தங்கள் ஜாதியை உயர்த்திக் காட்டவும், ஜாதி
வேற்றுமைகளை நுழைக்கவும் செய்த ஏற்பாடாகவிருக்கும். பிராமண ஆதிக்கம் தலைசாயும்
காலத்தில்தான் இந்த ஜாதி வேற்றுமை அதிகரிக்கப்பட்டு பிராமணர்களை உயர்த்திக்காட்ட தீவிர
முயற்சிகள் செய்யப்பட்டன; இதற்காகத்தான் பிரம்மன் என்ற தேவனைக் கற்பித்து முதல்
தேவனாக்கியுள்ளனர். பிற்கால வேத நூல்களில் இந்த பிரம்மனைப் பற்றிய குறிப்பே கிடையாது.

மனுவின் காலத்தில்தான் பிரம்மன் முக்கியமாக்கப்பட்டுள்ளான். அதாவது, ஜாதி வேற்றுமைகளை
உண்டாக்க பிரம்மனைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். பிராமணருக்கு உயர்வு தரவே
பிராமணரின் பெயரடியாகப் பிரமன் கற்பிக்கப்பட்டு, விஷ்ணுவுக்கும், சிவனுக்கும், தகப்பனும்
மேலானவனும் என்று காட்டியுள்ளனர். பிரம்மனே தன் உடலிலிருந்து உலகை சிருஷ்டித்தானென
புனைந்துள்ளனர்.

மதிப்பாரில்லை

மற்றும், இந்தப் பிரம்மன் பொன் முட்டையிலிருந்து பிறந்தானாம். ஆனால், இந்தப் பிரம்மனை
யாரும் வணங்குவதோ, மதிப்பதோ இல்லை; மக்களுக்கு உலகானுபவமும் பகுத்தறிவும் வளர வளர,
இந்தப் பூசாரிகளின் கொள்கைகளில் நம்பிக்கை குறையலாயிற்று. மற்றும் பல குழுவினர் தலை
தூக்கி ஒவ்வொருவரும் தத்தமக்கென ஒவ்வொரு கடவுளை முக்கியமும் முதன்மையுமாக்கிக் கொண்டனர்.
ஆரியக் கோட்பாடுகளும் மதிப்பிழந்தன. வேதக் கடவுளுக்குப் போட்டியாக எண்ணற்ற கடவுள்கள்
தோற்றுவிக்கப் பட்டன. வேதத்திற்கு வெகுநாட்களுக்குப் பின்பே சிவனும், விஷ்ணுவும் பிராமண
மதத்தில் இடம் பெற்றனர். சிவன் என்ற கடவுளின் பெயர் வேதங்களில் இல்லை. அன்பு உடையவன்,
புனிதன் என்ற அர்த்தத்தில்தான் சிவன் என்ற பெயர் கையாளப்பட்டுள்ளது. அக்னியையே சிவன் என்றும்
மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷ்ணுவிலும் வேதகால விஷ்ணுவிற்கும் பிற்கால விஷ்ணுவிற்கும் வேற்றுமை காணப்படுகிறது.
இதுவும் இனச்சிறப்புக் காட்டும் நோக்கத்துடன்தான் கற்பனை செய்யப்பட்டதேயாகிறது.

விஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இவை நிகழ்ந்த காலம் எவை என
நிர்ணயமாகத் தெரியவில்லை. இந்த அவதார வரலாறுகள் எல்லாம் பிராமணீய சிறப்பு
நோக்கத்துடன்தான் இருக்கின்றன. பிராமணீய மதத்தை எதிர்த்த அரசர்களை ஒடுக்க கற்பனை
செய்யப்பட்ட கதைகள்தான் அவதாரக் கதைகள்!

ஏதாவது அரசனின் அடக்குமுறையிலிருந்து மக்களைக் காக்கத்தான் விஷ்ணு அவதாரம்
செய்திருக்கிறார். எனவே பிராமணீயத்தை அரச குலத்தினர் எதிர்க்கும் போதெல்லாம்
பிராமணீயத்துக்கு ஆபத்து நேரிடும் போதெல்லாம் இந்த அவதாரக் கதைகள்
தோன்றியிருக்கவேண்டுமென எண்ணச் செய்கிறது.

மகாபாரதமும், இராமாயணமும் பிராமணீயத்தை எதிர்த்த அரச மரபினை அச்சுறுத்தி ஒடுக்கப்
புனையப்பட்டவையாகும். எப்படியெனில், இந்த அரச மரபினர் ஒடுக்கப் படுவதற்கு முன்பே இந்தக்
கதைகள் வழக்கில் இருந்திருக்கின்றன. பிற்காலத்தில்தான் இக்கதைகளில் வரும் இராமனையும்,
கிருஷ்ணனையும் பிராமணர்கள் அவதாரங்களாக்கிவிட்டனர். வேதங்கள் மதிப்பிழக்கவே, பூசைச்
சடங்குகளைப் பிராமணர்கள் தோற்றுவித்து, அவற்றைத் தாங்களே செய்ய வேண்டுமென ஏற்பாடும்
செய்து கொண்டனர். இந்தச் சடங்குகளைச் செய்யும் உரிமை பிறருக்குப் போகக்கூடாதென்றுதான்,
சமஸ்கிருத மந்திரங்களைப் பிறர் படிக்கக்கூடாது, ஒப்புவிக்கக்கூடாது என்று தெய்வ சாப பயம்
காட்டி அச்சுறுத்தி தடைப்படுத்தி, அவற்றைத் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டனர்.

மற்றும் ஒரு தந்திரம் செய்தனர். அதாவது, பழங்குடிகள் வணங்கியவற்றை எல்லாம் பிராமண
மதத்திலும் சேர்த்துக் கொண்டு அவர்களே பூசாரிகளாயினர்.

மற்றும் இந்த பூசை சடங்குகளுக்கு மதிப்புத் தருவதற்காக சுவர்க்கம் நரகங்களையும் கற்பனை
செய்தனர். ஜாதி உயர்வு தாழ்வு கற்பித்தும், பல்வேறு பிறவிகள் கற்பித்தும், பிராமண
ஜாதியே உயர்ந்தது என்று கூறியும், உயர்ந்த ஜாதியை மறுபிறப்பில் தானடைய
முடியுமென்றும், இதற்காக பூசைகள் சடங்குகள் செய்யவேண்டுமென்று கூறியும் தங்கள்
கொள்கைகளுக்கு ஆக்கம் தேடிக் கொண்டனர். பிதுர்கள் மூதாதைகள் பூசை என்பது பிராமணர்களுக்கு
மதிப்பு தேடக் கையாளும் முறையே. இதற்காகத்தான் யமன் என்ற தேவனும் கற்பிக்கப்பட்டான்.
பூலோகத்தில் வசித்த முதல் மனிதனே செத்தபின் யமதர்ம ராஜனானான் என வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

மோட்ச - நரக பித்தலாட்டம்

மோட்சமடைய தவம் செய்ய வேண்டுமென்ற கோட்பாடும் சூழ்ச்சியாகவே இருக்கிறது. எப்படியெனில்,
இந்த தவம் செய்வதில் விதிக்கப் பட்டுள்ள கடுமையான விதிகளை நிறைவேற்றி, தவத்தில் முழு
வெற்றி பெற்றவர்கள் யாரும் காணோம். இந்தப் பித்தலாட்டத்தை மறைக்கவே பிற்காலத்தில் பக்தி
முறை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
கபிலம் - புத்தம்

இவற்றை எல்லாம் ஆட்சேபிக்கத் தான் மீமாம்சம், கபிலம் முதலியன, தோன்றின. கபிலம் என்பது
பிராமணீயப் பித்தலாட்டங்களை வெட்ட வெளிச்சமாக்கும் கோட்பாடு கொண்ட இயக்கம். இக் கோட்பாடுகள்
பிராமண மதத்தினரின் கடவுள் கொள்கைக்கே வெடி வைப்பதாகவுள்ளன. பவுத்தமோ பிராமண மதக்
கோட்பாடுகளை அடியோடு பொய்யாக்கும் நோக்கம் கொண்டது.

நெடுங்காலமாக மோட்ச நரகத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. புத்த மதத்தின் செல்வாக்கைக்
குறைக்கவே பார்ப்பனர்கள் காம லீலைகள் மிகுந்த கிருஷ்ணாவதாரக் கதையை மக்களிடையே அதிகம்
பிரச்சாரம் செய்தனர். மற்றும், இன வேறுபாடுகளும் அதிகரிக்கப்பட்டன. பவுத்த மதத்தால்
செல்வாக்கிழந்த பிராமண மதத்திற்குப் புத்துயிரளிக்கத்தான் சங்கராச்சாரி பாடுபட்டார்.
மற்றும் சைவை வைணவ மடங்கள் தோற்றுவிக்கப்பட்டதும் பவுத்த மடங்களுக்குப் போட்டியேயாகும்.
சங்கராச்சாரியார் காலத்திலும் அதற்குப் பின்னரும்தான் ஜாதிப்பிரிவுகள் அதிகரித்தன. இந்த
ஜாதிப் பிரிவினைகள் தொல்லையானவை என்றும், மானக்கேடானவையென்றும் ஹிந்துக்கள் உணர்வதாகக்
காணோம். ஆனால் பிராமணர்கள் கருத்தோ தங்கள், இனம் ஒன்றுதான் உண்மையான சுத்தமான ஜாதி; மற்ற
ஜாதியாரெல்லாம் கலப்புகள் என்பதாகும்.

இப்போது பிராமணர்களின் மதிப்பு விரைந்து நசிந்து வருகிறது. உலகத் தொடர்பு அதிகமற்ற
சில கிராமாந்திரங்களிலும் நகரங்களிலும் மூடக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள்
வட்டாரங்களிலும் மாத்திரமே இவர்கள் கொஞ்சம் மதிக்கப்படுகிறார்.

(மேலே குறிப்பிட்டவை என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பேரகராதியில் காணப்படும்
கருத்துகளாகும்.)

விஷ்ணு அவதாரம்

பரசுராமன், சத்திரியர்களை (ஆரியர்களுக்கு எதிராக இருந்த அரசர்களை) எல்லாம் கொன்று,
அவர்களுடைய நாடுகளைக் கவர்ந்து, அவற்றைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்தான். அதன் பின் தன்
இறுதிக் காலத்தைக் கழிக்க சிறு நிலத்தைத் தந்துதவும்படி அவன் பார்ப்பனர்களைக் கேட்டானாம்.
ஆனால் அந்தப் பார்ப்பனர்கள் பரசுராமன் கேட்ட சிறு நிலமும் கொடுக்க மறுத்துவிட்டனராம்.
இதைக் கண்டு சீற்றமடைந்த பரசுராமன் அப்பார்ப்பனர்களைப் பழி வாங்கத் திட்டமிட்டானாம். பிறகு,
வருணனை அடைந்தான். தான் யாரென்பதையும், தான் வந்த காரியத்தையும் வருணன் இடம் சொல்லி,
அந்தப் பார்ப்பனர் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் தண்ணீரில்லாது போகச் செய்ய உதவி புரியும்படிக்
கேட்டான். வருணனும் இணங்கினான். பரசுராமன் எய்யும் அம்பு எவ்வளவு தூரம் பாய்கிறதோ,
அவ்வளவு தூரம் கல் கொள்ளச் செய்யவேண்டுமென்பது ஏற்பாடு ஆயிற்று. பரசுராமன் அம்பு
எய்வதற்கு முன்னிரவு அவனுடைய வில்லின் நாண் பழுதாக்கப்பட்டு விட்டது. காலையில் எய்யப்பட்ட
அம்பு அதிக விசை கொண்டு பாயாது. இப்போது உள்ள மலையாள நாட்டளவுக்குப் பாய்ந்து
விழுந்தது. எனவே, மலையாளக் கரைப் பகுதிக்கப்பாலிருந்த நாடெல்லாம் கடல் கொள்ளப்பட்டு
விட்டதாம்.

(இது கால்வின் - புராண ஆராய்ச்சி)

ஏராளமான பார்ப்பனர் கும்பகர்ணனுக்கு ஆகாரம்

கும்பகர்ணன் தவழும் குழந்தையாக இருந்தபோது தன் கைகளை நீட்டி அக்கையில் அகப்பட்டவைகளை
எல்லாம் விழுங்கிவிட்டான். ஒரு சமயம் இந்திரனுடைய காமக்கிழத்திகளில் 5000 பெண்கள், 7000
ரிஷிபத்தினிகள், ஏராளமான பிராமணர்கள், பசுக்கள் ஆகியவற்றை விழுங்கிவிட்டதாக இராமாயண
வரலாறு கூறுகிறது.

(இது கால்வின் - புராண ஆராய்ச்சி)

சேது- தமிழ் மன்னன் கட்டியது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள சேது (பாலம்) இராமாயணத்தில் வரும் அனுமானும்
அவன் படைகளும் கட்டியதாகக் கூறப்படுகிறது. ஆயினும் சரித்திர ஆதாரமான ஓர் வரலாறு
உள்ளது. அதாவது, மதுரை மன்னனிடம் தோற்ற மறவர் குல மன்னன் ஒருவனே இப்பாலத்தை அமைத்து,
அவனும் அவனுடைய படைகளும் மதுரை மண்ணை விட்டுத் தப்பி இலங்கைக்குச் சென்றனர் என்பதாக.

(இது கால்வின் _- புராண ஆராய்ச்சி)

தெய்வலோக இறக்குமதி பித்தலாட்டம்

சிறந்த பொருள்கள், கலைகள், ஏதாவது இருந்தால் அவை தெய்வலோகத்திலிருந்து கொண்டு வரப்
பட்டவையென்றும், தெய்வ வாக்கென்றும், கடவுள் அருள் பிரசாதமென்றும் கூறுவது ஹிந்துக்கள்
(பிராமணர்) வழக்கம்.

(சர். வில்லியம் ஜோன்ஸ்)

அமெரிக்கர், இந்தியர் கூர்மாவதாரம்

அமெரிக்க, இரோகங் இந்தியர்களும் ஆமையைப் பற்றி ஒரு புராண வரலாறு கூறுகின்றனர்.

ஆதிகாலத்தில் ஆறு ஆண்டுகள் ஆகாச மண்டலத்திலிருந்தனர். ஆனால் பெண்கள் இல்லை.
இனவளர்ச்சிக்காக ஒரு பெண்ணைத் தேடினர். தேவலோகத்தில் ஒரு பெண்ணிருப்பதாக கேள்விப்
பட்டனர். ஒருவனை அங்கு அனுப்பத் தீர்மானித்தனர். ஆனால் அவ்வளவு தூரம் பறக்க முடிய வில்லை.
அவன் கருடனின் உதவியை நாடினான். கருடன் அந்த ஆளைத் தேவலோகம் கொண்டு சேர்த்தான். அங்கு
அவன் அந்தப் பெண்ணை மயக்கி வசப்படுத்தினான். அந்த நடவடிக்கைகளை அறிந்த பரமாத்மா
சீற்றமடைந்து அப்பெண்ணையும், அவனையும் சொர்க்கலோகத்தில் இருந்து தள்ளிவிட்டார். அவர்கள் கீழே
விழுவதைக் கண்ட ஓர் ஆமை அவனைத் தாங்கிக் கொண்டது.

மீன்களும், கடல் பூச்சிகளும் கடலடியிலிருந்து மண்ணை எடுத்து வந்த ஆமையைச் சுற்றிப் போட்டு
மூடிவிட்டின. இவ்விதம் ஆன மண் கண்டமே உலகமாயிற்று; அப்பெண்ணிற்குப் பிறந்தவர்களே மனிதர்கள்.

(இது கால்வின்_ - புராண ஆராய்ச்சி)

பன்றித்தலை லட்சுமி

விஷ்ணு, பன்றி உருக் கொண்டது (வராகவதாரம்) பற்றி ஒரு சித்திரமுள்ளது. விஷ்ணுவின்
உருவத்துடன் லட்சுமிக்கு 4 தலைகள். ஒரு தலை பன்றித் தலை. 8 ஆயுதங்கள் ஏந்திய எட்டுக்
கைகள். இப்பெண்ணுருவத்தைச் சுற்றிப் பல பன்றிகள் வில்லேந்தியபடியுள்ளன.

(இது கால்வின்_ - புராண ஆராய்ச்சி)

கிரேக்க மன்னர் படையெடுப்பு வரலாறே இராமாயணம்

இராமாயணம், கிரேக்கரில் தீரேனிசால் அல்லது பஞ்சுரங்கதையே என விளக்குகிறார் சர்.
வில்லியம் ஜோன்ஸ். இந்த பஞ்சுரங் என்ற கிரேக்க வீரன் பெரும்படையுடன் இந்தியா முதலிய
நாடுகள் மீது படையெடுத்து வந்தான். இந்தப் படையெடுப்பின் வரலாறாகவோ அல்லது அவ்வரலாற்றின்
ஒரு பகுதியை ஒட்டிப் புனையப்பட்ட வரலாறாகவோ இராமாயணம் இருக்கவேண்டுமென்கிறார் இவர்.

--------------------
தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட ஆரியர்களின் மத வேத சாஸ்திர புராணங்களின்
புரட்டுக்களை ஆதாரங்களுடன் விளக்கும் நூல் : ”புரட்டு இமாலயப் புரட்டு” - பக்கம் 66 -74
அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 1:07:39 AM7/12/15
to brail...@googlegroups.com
விஷ்ணுபுரம் (1998)
8
விவரங்கள்
எழுத்தாளர்: ஜ.சிவகுமார்
தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
பிரிவு: டிசம்பர்2010
C வெளியிடப்பட்டது: 05 ஜனவரி 2011
தமிழ்ப் புனைகதை உலகில் ‘விஷ்ணுபுரம்’ தனித்ததொரு நிலையில் தன்னை அடையாளம்
காட்டிக்கொண்டது. இதற்குக் காரணம் இதன் கதையமைப்பு, மொழியமைப்பு என்பதை விடக் கதையை
நிகழ்த்த ஏதுவான பரிமாணத்தை முக்கியமாகக் குறிப்பிடலாம். இந்நாவல் ஸ்ரீபாதம், கௌஸ்துபம்,
மணிமுடி என மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் தோற்றம் கொள்வதற்கு முன்
வாழ்ந்த ஆதிமக்களின் வாழ்நிலை, விஷ்ணு புரத் தோற்றம், விஷ்ணுபுரத்திற்குள் நிகழும்
உள்முரண்பாடுகள் ஆகியவற்றை முதற்கட்டமாகவும் விஷ்ணுபுரம் அழிவதற்கான காரணம், அழிவுற்ற
பிறகான சமூகநிலை அதற்குப் பின்னும் சொல்லப்படுகிறது.
பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட விஷ்ணுபுரம் பார்ப்பனர்களின் செல்வாக்குமிக்க இடமாகத் தோற்றம்
கொள்கிறது. விஷ்ணுபுரத் தலைவராகிய சூர்யதத்தரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே
விஷ்ணுபுரம் அமைகிறது. அங்கு நிகழும் திருவிழாச் சடங்குகள், நீதி வழங்குதல்
முதலானவற்றின் அடிப்படையில் இதனை அனுமானிக்க முடிகிறது. ஆனால் விஷ்ணுபுர
பார்ப்பனர்களுக்கும் காளாமுகர்களுக்கும் இடையே நிகழும் உள்முரண்பாடுகள் காலச் சுழற்சியில்
உச்சகட்ட மடைந்து பார்ப்பனர்களின் ஆட்சி வீழ்ச்சியடைகிறது. பார்ப்பனர்களின் ஆட்சி
வீழ்ச்சியடைவது போலச் சித்திரிக்கப்பட்டாலும் ஆத்திகத்தின் வெற்றியே இந்நாவலின் உட்கருத்தாக
அமைகிறது.
விஷ்ணுபுரத்தில் பௌத்தர்களின் ஆட்சி மேலோங்க ‘அஜிதன்’ முயற்சிப்பதை நாவலின்
திருப்புமுனையாகக் கருதலாம். அஜிதன் ஆட்சியில் எதுவும் பங்கேற்காமல் பிட்சுக்களுடனும்
மதவாதிக ளுடனும் சேர்ந்து பார்ப்பனர்களுக்கு எதிராகப் போரிட்டு நகரத்தை விட்டே
பார்ப்பனர்களைத் துரத்துகிறான். இதனைத் தொடர்ந்து இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்வதாக
ஜெயமோகன் புனை கிறார். ஆனால் அவைதீகத்தை வீழ்த்தி வைதீக சமயங்கள் பதினான்காம் நூற்றாண்டு
வரை ஆதிக்கம் செலுத்தியதுதான் வரலாறு.
மேலும் வைதீக, அவைதீக போராட்டங்களை முன்னெடுத் துள்ள இந்நாவல் வைதீக சமயத்தை ஆதிப்
பழங்குடிகளுக்கு இணக்கமான சமயமாகவும், அவைதீக சமயத்தை தாந்திரிகம் மற்றும் சூழ்ச்சியின்
அடிப்படையில் தோற்றம் கொண்டதாகவும் சித்திரித்துள்ளது. இவ்வாறு இந்நாவலில் வரலாற்றுக்
காலகட்டம் ‘புனைவு’ சுதந்திரத்தின் மூலம் திரித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
உணரமுடிகிறது.
கல்கியின் புனைவுகளில் காபாலிகர்களையும் நாகந்தி முதலான அவைதீக சமயத்தாரையும்
எதிர்மறையாகச் சித்திரித்துள்ளார். சம்பந்தர், நாவுக்கரசர் முதலான வைதீக சமயத்தாரை
நேர்மறையாகச் சித்திரித்துள்ளார். இந்நாவலிலும் அவைதீக சமயத்தை எதிர்மறையாகவும் வைதீக
சமயத்தை நேர்மறையாகவுமே ஜெயமோகன் சித்திரித்துள்ளார். இவர் பயன்படுத்திய மொழியும்
காலத்தன்மையும் தமிழ்ப் புதினப் போக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றாலும் அதன்
உள்ளீடாக ‘இந்துத்துவச் சார்பு’ இருப்பதனை அவதானிக்க முடிகிறது.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 1:54:05 AM7/12/15
to brail...@googlegroups.com
கிருஷ்ணன் - லட்சக்கணக்கான பெண்களை கெடுத்த காமுகன் – II
8
விவரங்கள்
எழுத்தாளர்: பெரியார்
தாய்ப் பிரிவு: தலித் முரசு
பிரிவு: அக்டோபர்10
C வெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2010
கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாக
சித்தரிக்கப்படுகிறார்கள். இரண்டும், தேவர்கள் அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக
வைத்துதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்த புராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிகமிக
அதிகமாகக் காணப்படுகிறது. பெரும்பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படுகின்றன.
அதில்தான் வைக்கோலிலிருந்து பட்டாளங்கள் தோன்றியதாகவும், நெற்றியிலிருந்து மனித உருவம்
பெற்ற குழந்தைகள் தோன்றியதாகவும் பகிரண்டப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்றன.
கடவுள் பேரால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று, தம் இஷ்டம்போல் எதை எதையோ
புளுகிவைத்து விட்டார்கள். பாரதமோ இன்னும் மோசம். ஒருத்திக்கு 5 புருடர்கள் இருந்ததாக
எழுதிவிட்டு, அவளையே பதிவிரதையாகவும் கற்பித்து விட்டார்கள். அந்தப் புருஷர்களும் –
அந்தப் பஞ்சபாண்டவர்களும் யார் யாருக்கோ, எந்த எந்தவிதமாகவோ பிறந்ததாகத்தான் கதை
எழுதப்பட்டிருக்கிறது. அக்கதையில் காணப்படும் குழந்தைகளில் பெரும்பாலானவற்றிற்கு
தகப்பன்மாரைக் கண்டறிவது கஷ்டமாகவேயிருக்கிறது. அக்காலத்தில் ஆரிய நாகரிகம் அப்படித்தான்
இருந்தது போலும்!
கந்தபுராணமும் ராமாயணமும் எப்படி ஒரே அடிப்படைக் கதையை வைத்துக் கொண்டு எழுதியவை
என்று விளக்கிக் காட்டுகிறேன் பாருங்கள். கந்த புரணாத்தில் சுப்பிரமணியன் கடவுளாகவும்,
ராமாயணத்தில் ராமன் கடவுளின் அம்சமாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் பெண்டாட்டிமார்
இருவருமே காட்டில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். பெற்றோர்கள் யார் என்று
தெரிவிக்கப்படாதவர்கள். அனுபவத்திற்கு ஒட்டிப் பார்த்தால், யாரோ திருட்டுத்தனமாகப் பெற்றுப்
போட்டுவிட்டுப் போன குழந்தைகள் என்றே கொள்ளத்தக்கவைகள்.
ராமனும், கந்தனும் இருவருமே தேவர்களின் முறையீட்டால் – அவர்களை, அசுரர் –
ராட்சதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு தோற்றுவிக்கப்பட்டவர்கள். இருவருக்கும் விரோதிகள்
சூரனும், ராவணனும் ஆகிய அசுரர்கள்தாம் (அசுரர் என்றால் மது அருந்தாதவர்கள்; ராவணன்
என்றால் கறுத்தவன்). இருவருடைய தங்கைமார் இருவருமே மேலே கூறப்பட்டவர்களின்
தம்பிமார்களால் மூக்கும், முலையும் அறுபடுகிறார்கள். ராமனுக்கு அனுமார் கிடைத்ததுபோல் –
கந்தனுக்கும் ஒரு வீரபாகு என்கிறவன் கிடைக்கிறான். இலங்கை எரிக்கப்பட்டதுபோல் – சூரனுடைய
நகரமும் எரிக்கப்பட்டிருக்கிறது. சூரன், தேவேந்திரன் மனைவியைச் சிறை பிடிக்க ஆசைபட்டு,
அவன் மகனை சிறையில் வைத்தான். ராவணன், ராமன் மனைவியை சிறை பிடித்தான். இன்னும் பல
நடப்புகள் ஒன்றுபோலவே – பேர்கள்தான் மாறியிருக்கின்றனவே ஒழிய – கதைப் போக்கில் எவ்வித
முக்கிய மாறுதலும் காணப்படாமல் அமைந்துள்ளன.
கந்தபுராணத்தில் கந்தனை தெய்வமாகவே காட்டப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் கொஞ்சம் அது
குறைவாக்கப்பட்டு – அதாவது ராமன் கடவுள் அவதாரமாக மட்டுமே காட்டப்படுகிறான்; சில
இழிதன்மைகளாலும் சுமத்தப்படுகிறான். ஆனால், திருவள்ளுவர் குறளோ இவற்றை – ஆரியத்தை –
ஆரிய தர்மத்தை. அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள்
வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மையையும்தான் கடவுளாகக்
காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்கிறார்; ஆசை அறுந்தோன் என்கிறார். அவர் ஓரிடத்திலாவது
கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனமுடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபச்சாரியாகவோ
சிருஷ்டித்திருக்கவில்லை.
ராமனை எடுத்துக் கொள்ளுங்களேன்! ராமனை எடுத்துக் கொண்டால் – அவன் யாருக்கோ பிறந்த
தாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதேயொழிய, தசரதனுக்கே பிறந்ததாக இல்லை. அவன் பெண்டாட்டியை
இழந்து அலைவதற்கு கூறப்படும் காரணமோ அதைவிடப் படுமோசம். அதாவது, மகாவிஷ்ணு எந்தப்
பெண் மீதோ மோகங்கொண்டாராம்; மோகத்தை திருப்தி செய்ய அவள் இடம் கொடுக்கவில்லையாம். எனவே,
அம்மகாவிஷ்ணு அவளுடைய புருஷன் இறக்கும் தறுவாயைப் பார்த்துக்கொண்டேயிருந்து, இறந்ததும்
அவனுடைய உடலில் தான் புகுந்து கொண்டு அப்பெண்ணை அடைந்து கூடி இன்புற்றுக்
கொண்டிருந்தாராம். அந்தப் பெண், எப்படியோ தன் புருஷனுடைய உயிரல்ல அவ்வுடலில் வேலை
செய்வது என்று அறிந்தவுடனே உண்மையைக் கேட்டுணர்ந்து, மகாவிஷ்ணு மறு ஜென்மமெடுத்து தன்
மனைவியைப் பிறன் கையில் விட்டு தன்னைப்போல் கற்புக் கெட்டவளாக வேண்டும் என்று சாபம்
கொடுத்தாளாம்.
அதையொட்டிதான் ராமன் அவதாரம் ஏற்பட்டு – சீதையை ராவணனுக்குப் பறிகொடுக்க வேண்டி
ஏற்பட்டதாம். என்னே தெய்வத் தன்மை! பிறன் மனைவி மீது மோகிப்பதும், வஞ்சகமாக அவளை
அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப்பட்ட தெய்வத் தன்மைகள்! ஆண்கள் தன்மை இப்படியென்றால்
ஆரியப் பதிவிரதைகளைப் பற்றிப் பேசினால், நமது பெண்கள் சகிக்க மாட்டார்கள்.
– தொடரும்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 1:59:11 AM7/12/15
to brail...@googlegroups.com
நரகாசுரப் படுகொலை
8
விவரங்கள்
எழுத்தாளர்: பெரியார்
தாய்ப் பிரிவு: திசைகாட்டிகள்
பிரிவு: பெரியார்
C வெளியிடப்பட்டது: 02 நவம்பர் 2010
நரகாசுரப் படுகொலை என்னும் இப்புத்தகத்திற்கு நான் முகவுரை எழுத வேண்டும் என்று, எனது
நண்பர் ஒருவர் வேண்டிக்கொண்டார். மகிழ்ச்சியோடு சம்மதித்து எழுதுகிறேன். நரகாசுரன்
என்பதாக என்பதாக ஒருவன் இருந்தானோ, இல்லையோ என்பதும், நரகாசுரன் வதை சம்பந்தமான கதை,
பொய்யோ, மெய்யோ என்பதும் பற்றி, நான் கவலை எடுத்துக் கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட கற்பனைகளைச் செய்து, ஆரியர்கள் அவற்றை நம் தலையில் சுமத்தி, நம்மை அதற்கு
ஆளாக்கி தங்கள் உயர்வுக்கும், நமது இழிவுக்கும் ; தங்கள், வாழ்வுக்கும், நமது தாழ்வுக்கும்
; அவர்கள் நலத்திற்கும், நம் முட்டாள் தனத்துக்கும், நிரந்தர ஆதரவாக்கிக் கொண்டு, பாடும்,
கவலையுமில்லாமல் சுகபோகிகளாய் இருந்து, நம்மைச்சுரண்டி வருகிறார்களே என்பதற்காகவே,
நான் கவலைப்பட்டு இதன் தன்மையை, நம் திராவிட மக்களுக்கு உணர்த்துவதற்கு ஆக பொதுவாகவே,
ஆரிய சாஸ்திர புராண இதிகாசங்களின் ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தனங்களையும்,
விளக்கும் தொண்டை எனது வாழ்வின் முக்கிய தொண்டுகளில் ஒன்றாகக் கொண்டு, பணியாற்றி
வருகிறேன். அதனாலேயே இப்படிப்பட்ட புத்தகத்திற்கு என்னை முகவுரை எழுதக் கேட்டார்கள்
என்பதாகக் கருதியே, எழுதச் சம்மதித்தேன்.
திராவிட மக்கள் அருள்கூர்ந்து, நரகாசுரன் வதைப் புராணத்தை, சற்று, பகுத்தறிவோடு
சிந்திக்க வேண்டும். கதையின் சுருக்கம் என்னவென்றால்; நரகாசுரன் என்கிற அசுரன்,
அயோக்கியனாக இருந்தான்; கடவுளால் கொல்லப்பட்டான்; பொதுமக்கள் அவனுடைய சாவுக்காக,
மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதேயாகும்.
ஆனால், இதற்காக சித்திரித்த கதையின் தன்மை எப்படிப்பட்டது? அதன் உள் கருத்து
எப்படிப்பட்டதாய் இருக்கும்? இந்த 20_ஆம் நூற்றாண்டாகிய விஞ்ஞான காலத்தில், இதை நம்பி
இக்கருத்துக்கு ஆளாகலாமா? என்பதைச் சிந்திக்கத்தான், இந்த நரகாசுரப் படுகொலை என்கின்ற
புத்தகம், அருப்புக்கோட்டை தோழர் வி.ஷி. இராமசாமி அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த
மூலக்கதைக்கு, நரகாசுரன் தேவையே இல்லை என்றாலும், திராவிடர்களை இழிவுபடுத்துவதற்கு
என்று, எழுதப் புகுந்த கற்பனையில், ஆரியர்களது நிலை, தன்மை, ஆகியவை எவ்வளவு இழிவாகக்
கூடியதாயிருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், இக் காரியத்தில்
புகுந்திருக்கிறார்கள். இதற்கு ஒரு சமாதானம் என்னவாக இருக்குமென்றால், இக்கதை தொகுத்த
காலத்தில், ஆரியர்கள், அவ்வளவு காட்டுமிராண்டிகளாகவும், அவ்வளவு மானாவமானக் கவலையற்ற
மிருக வாழ்வு வாழ்ந்தவர்களாகவும், இருந்திருக்கலாம் என்பதாகக் கொள்ளலாம். என்றாலும்,
இக்காலத்திலுள்ள ஆரியர்களும்; அதாவது, எவ்வளவு விஞ்ஞான அறிவு, பகுத்தறிவு, மான
உணர்ச்சி கொண்ட இக்கால ஆரியர்களும், இந்த, இது போன்ற ஆபாசக் கதைகளைக் காப்பாற்றி
பிரசாரம் செய்து, மக்களையும் அவற்றை நம்பி நடக்கும்படி செய்கிறார்கள் என்றால், நம் மக்கள்
நிலை அதைவிட காட்டுமிராண்டித் தனமானதும், மானாவமான லட்சியமற்றதும்,
மிருகப்பிராயத்திலிருப்பதும், அல்லது அப்படியெல்லாம் இருப்பதாக அவர்கள் கருதி
இருப்பதாகவாவது இருக்கலாம்.
எப்படி இருந்தாலும், இனியாவது பகுத்தறிவோடு, மான உணர்ச்சியோடு, சிந்திக்க வேண்டியது
திராவிடர் கடமையாகும். ஆரியக் கற்பனையாகிய இக்கதையில் உள்ள முக்கிய சில குறிப்புகளை
மாத்திரம் குறிப்பிடுகிறேன் :
1. இரணியாட்சன் என்கிற இராக்கதன், பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்திரத்திற்குள்
போய் பாதாளத்தில் ஒளிந்துகொண்டது.
2. மகாவிஷ்ணு என்கின்ற கடவுள், பன்றி உருவம் எடுத்து, சமுத்திரத்திற்குள் புகுந்து,
இராக்கதனைக் கொன்று, பூமியை எடுத்துக்கொண்டு வந்து விரித்துவிட்டது.
3. இந்த விஷ்ணுப் பன்றியைக் கண்டு, பூமிதேவி காம விகாரப்பட்டுப் போகித்துக் கலவி செய்தது.
4. இக் கலவியின் பயனாய் ஒரு பிள்ளை பிறந்து, அப்பிள்ளை ஒரு அசுரனாக ஆகி, ஒரு
இராஜ்ஜியத்தை ஆளும், அரக்கனாகி, தேவர்களுக்கு (ஆரியர்களுக்கும், தன் தாய் தந்தையான
கடவுளுக்கும்) கேடு செய்தது.
5. பிறகு, அந்த நரகாசுரனைக் கடவுளும் கடவுள் மனைவியும் கொன்றது.
6. அந்தக் கொலைக்கு, மக்கள் மகிழ்வது.
7. அந்த மகிழ்ச்சிக்குப் பேர்தான் தீபாவளி கொண்டாட்டம்.
என்பனவாகிய இந்த ஏழு விஷயங்களை திராவிட மக்கள் மனித புத்தி கொண்டு சிந்திக்க வேண்டும்
என்பதே, இப் புத்தகம் எழுதியவருடைய ஆவல்.
ஆதலால், பொதுமக்கள் இதை இந்தப் புத்தகத்தின் உதவியைக்கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து
பார்த்து தீபாவளி கொண்டாட வேண்டியது அவசியம் என்று பட்டால் அந்தப்படி செய்யுங்கள். அதுவே
ஆசிரியருக்கு மக்கள் கைம்மாறு ஆகும்.
இப்புத்தகம் எழுதியதற்காக தோழர் M.S. இராமசாமிக்கு திராவிடர் சார்பாக எனது நன்றி
உரித்தாகுக.
---------------------
தந்தை பெரியார்
(நரகாசுரப் படுகொலை என்ற பெயரில் அருப்புக் கோட்டை M.S. இராமசாமி அவர்களால்
எழுதப்பட்ட நூலுக்கு தந்தை பெரியார் அளித்த முகவுரை - 1947)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 2:03:32 AM7/12/15
to brail...@googlegroups.com
சிவா ! ராமா ! – 2060
8
விவரங்கள்
எழுத்தாளர்: கிருஷ்ணகுமார்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: சிறுகதைகள்
C வெளியிடப்பட்டது: 01 மார்ச் 2010
2060 ஜனவரி 3ந் தேதி சிவா ! ராமா ! என்று தி.நகர் சிவா விஷ்ணு கோவிலில் வாசலில்
உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்தேன் . . .

சென்னை பற்றி 2006 ல் புலம்பினாலும் 2060 ல் புலம்பினாலும் ஒன்று தானே ?.

சென்னையில் வயோதிகர்கள் கூட்டம் 2060ல் அதிகமாகிப் போனது. முக்கால்வாசிப் பேர்
வெளிநாட்டில் பல வருடக் காலங்கள் வசித்து, சாகும் போது "சிவா, ராமா" என்றபடி
கோவில்களில் வெட்டி அரட்டை அடிக்க தமிழகத்தில் களம் புகுந்து மீண்டும் விட்டுப் போனத் தன்
பால்ய காலங்களை வாழ ஆரம்பித்தனர். ஆங்கில உச்சரிப்போடு “ஐ கேம் ஹியர் டு பிரே
பீஸ்புல்லி” என்று வாயைக் குழைத்து ஆங்கிலம் உச்சரிக்க, வேடிக்கையோடு மற்றவர்கள் பார்த்து
ஒரு மாதிரியான “லோக்கல் பீட்டர்” விட்டு “அர்ச்சனை ஐநூறு” என்று ஏமாற்றிப் பணம்
பறித்தனர். கடவுளுக்கு “பீட்டரில்” தான் அர்ச்சனை. I salute Shiva. I salute Rama.
Long live the God. என்று . . ..

தமிழில் தான் அர்ச்சனை பண்ண வேண்டுமென்று ஒரு கூட்டம் போர்க் கொடித் தூக்கி “தமிங்கலத்தில்”
(தமிழ் + ஆங்கிலத்தில்) போஸ்டர் ஒட்டியிருந்தது. கந்தர் சஷ்டி கவசத்தில் “துதிப்போர்ர்கு
வல்வினைப்போம் . . .” தெரியுமா என்றேன் ?. வேறு கிரகத்துப் பிறவியாக என்னைப்
பாவித்தனர். “oh ! my Jeez உ “ என்று ஸ்டைலாக உச்சரித்தேன். புரிந்து கொண்ட பாவனையில்
தலையாட்டினர்.

காலையில் ஜி.என்.செட்டி ரோட்டில் காலை வைக்க முடியவில்லை. நரகலால் இல்லை. அவ்வளவு
வாகனங்கள். நடேசன் பூங்கா மற்றும் மாறாமல் இருந்தது. அதனருகே பல ஐந்து நட்சத்திர
ஹோட்டல்கள் இருந்தமையால் நடந்த “பெரிசு” களான எங்களை அனவைரும் அல்பமாகப் பார்த்தனர்.
முதல் நாள் குடித்து விட்டு அடுத்த நாள் தொந்தியைக் கரைப்பது 2060 இலும் நடந்தது.
நடந்தவுடன் சாப்பிடச் சுட சுட இட்லி, தோசை விற்றுக் கொண்டிருந்தன. ஒரு தோசை $8 மற்றும்
ஒரு காபி $2. டிப்ஸ் 15% வைத்துவிட்டு மீண்டும் கலோரிகளைக் களைய நடக்க ஆரம்பித்தேன்.
முருகன் இட்லி கடைக்குப் பக்கத்தில் கணேசன் கறிக் கடையும், சிவாஸ் விஸ்கி கடையும்,
விஷ்ணுவின் சைனீஸ் காண்டீனும் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரம் செய்தன. பல மியூசிக்
சபாக்களும் போட்டி போட்ட வண்ணம் கும்பலோடு அலை மோதிக் கொண்டிருந்தது.

ஆண்களும் பெண்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டிகளில் ஆபிஸுக்கும், கல்லூரிகளுக்கும் போய்
கொண்டிருந்தனர். பல்லவன் பஸ் ஹை டெக்காகி கீழேயும் மேலேயும் வீடியோ படம் காட்டி 200 பேர்
நிற்கத் தக்கவாறு மாரியிருந்தது. கண்டக்டர்கள் இல்லாமல் சீட்டு டிக்கெட் ஆட்டாமாடிக் பன்ச்
மெஷினுக்கு மாறியிருந்தது. டிரைவர் பொத்தானை அமுக்கினால் தான் கதவு திறக்கும். ஃபுட்
போர்டு டிராவல் (படிக்கட்டு பயணம்) 2030லேயே தடை செய்யப்பட்டுவிட்டது. முதல்வரின் பேரன்
அப்படி பயணம் செய்து இறந்து போகவே, அதைத் தடை செய்ய சட்டம் ஒரு மனதாக இயற்றப்பட்டது.
“சாவு கிராக்கி ! இப்போது “சாவ்கிராக்” ஆக மாறியிருந்தது.

அக்கம் பக்கம் இருக்கும் தெருக்களில் பிள்ளையார் கோவில்களில் கூட்டமும், அதன் வாசலிலே பக்தி
வீடியோக்களும் அதிகம் இருந்தன (நிசமா “பக்தி” படம் தான் சார் !). சன் டிவியில் வந்த
2006 ல் வந்த வேப்பிலைக்காரி, 2010 ல் வந்த விபூதிக்காரன், மற்றும் 2025 ல் வந்த
நாமவந்தான், 2050 ல் வந்த பாற்கடல் கொண்டான், 2060 ல் வந்த “முக்கண் திறந்தால் ?” போன்ற
பக்தி சீரியல்களினால் நாட்டில் புது பக்தி மோகம் இருந்தது.

சிவா விஷ்ணு கோவிலின் பக்கம் என்ன கூட்டம், என்ன கூட்டம் ?. 2006 ல் சென்னை வந்த போது
டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்களும், சைக்கிள்களும், ஆட்டோக்களுமாய் நிறைந்திருந்த உஸ்மான்
ரோட்டில் வெறும் பாதசாரிகள் மட்டுமே போய்க்கொண்டிருந்தனர். தற்போது பாட்டரியில் இயங்கும்
ஆட்டோ ரிக்சாக்கள் அதிகமாக இருக்க, புகையில்லாத இடத்தில் கூட மண்புழுதியை இறைத்த படி
மக்கள் நெருக்கமாகப் போய் வந்த வண்ணமிருந்தனர். சிக்னல்களில் கவுண்ட் டவுன் “அ, ஆ, இ, ஈ .
. .” என்று மக்களைத் தமிழ் படிக்க வைத்தது சுவாரசியமாக இருந்தது.

அருகே சென்று என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தால் 90% ஆங்கிலத்திலும், 5% ஹிந்தியிலும்
மற்ற மொழிகளிலும் மீதம் 5% தமிழிலும் கதைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆங்கிலம் தமிழ்
போன்று பேசியது வேடிக்கையாக இருந்தது.

“மச்சி! இப்ப அப்ப சாப்பிட்டேன், நல்லா, இல்ல போன்ற சொற்ப தமிழ் வார்த்தைகள் ஆங்கிலத்தோடு
இரண்டறக் கலந்து விட்டிருந்தன. தமிழ் எழுத்து கூட ஆங்கிலம் போன்றுச் சுருங்கிக்
காணப்பட்டது. தமிழ் படங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே வெளியாயின. “Time for Another
Love ?” (“ மற்றுமொரு காதக்கு நேரம் ?” சுத்தமானப் புதியத் தமிழ்படம் ) Tamil
Newyears’s day அன்று release செய்யப்படும் ! என்ற போஸ்டர் இருந்தது. மெகா சீரியல்
போய் “நேர் தொலைக்காட்சி” உண்மை நிகழ்ச்சிகளை அப்படியே தொகுது அளித்தது. பக்கத்து வீட்டு
மல்லிகா யாரிடமோ பேசுவதைத் தப்பாக எடுத்துக் கொண்டு கணவனுடன் சண்டை போடுவதை அனைவரும்
தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் கண்டு “அப்படி செய்யலாமா ? வேண்டாமா ?” என்று
விவாதித்துக் கொண்டிருந்தனர்.

பத்து கிராம் Gold வாங்கினால் 5 கிராம் Gold Free என்று சரவணா ஸ்டோர்ஸில் போர்டு
தொங்கியது.

தீபாவளி அடுத்த நாளென்பதால் அடுக்கு மாளிகைக் கடைகளில் கலராக கலராக வியட்நாமிலிருந்த
இறக்குமதி செய்யப்பட்டத் துணிகளும், நெய்ரோபியிலிருந்து வரும் மளிகைச் சாமான்களும்
நிறைந்து காணப்பட்டது. சீனப் பட்டாசுகள் பாண்டி பஜாரில் கொட்டிக் கிடந்தன. கேரளா சலூன்
கடையில் பெண்கள் கேரளாவில் மாதிரி உடை அணிந்து கொண்டு அனைவருக்கும் முடி வெட்ட கூட்டம்
அலை மோதியது.

இத்தாலியிலிருந்து பட்டுப் புடவைகள் வாங்க நிறைய வணிகர்கள் வந்திருந்தார்கள். சில்க்
கடைகள் ஐரோப்பிய மொழிகளான பிரென்சு, ஜெர்மன், இத்தாலி மொழிகளில் போர்டுகள்
வைத்திருந்தனர். ஜார்டன் நாட்டு சில்க்கைப் பற்றி சிலாகித்த பெண்கள் மற்றவரிடம் “பிரெஞ்சு
பட்டு எடுக்கவில்லையா ?. ஜெர்மன் தான் கிடைத்ததா ? ” என்று இளக்காரமாய் கிண்டலாகப் பார்த்தனர்.

ஆர்.எம்.கே.வி. பனகல் பார்க்கை அடைத்துக் கொண்டு பல்வேறு மாடி கட்டடங்களை
எழுப்பியிருந்தது. குமரன் சில்க்ஸிலிருந்து சிவா விஷ்ணு கோவிலருகே திநகர் பஸ் ஸ்டாண்ட்
வரை அனைவரும் நின்றால் தானாகவே நகரும் ஓடும் தளம் போடப் பட்டிருந்தது. அதனருகே
துப்புவதற்கு ஆங்காங்கே குழி வெட்டியிருந்தார்கள். பாண்டி பஜாரிலிருந்து மேற்கு மாம்பலம்
போவதற்கு மேல் வழிப் பாலம் போடப் பட்டிருந்தது. அதன் கீழே நூற்றுக் கணக்கான பூ கடைகள்
இருந்தது. அருகே இருந்த கலியாண மண்டபங்கள் எச்சில் பேப்பர் பிளேட்டுக்களை வாறி
சாப்பாட்டுடன் மாபெரும் குப்பைத் தொட்டியில் கொட்டியவண்ணமிருந்தன.

லலிதா ஜுவல்லரியில் குடிக்கத் தண்ணீர் $5 ஒரு டம்ளர் என்று எழுதியிருந்தது. 2050 ல்
உலகம் அனைத்தும் ஒரே கரன்சிக்கு மாறி விட்டிருந்தது. ஜி.என்.செட்டி தெருவில் ஆயிரம்
கார்களை நிறுத்த பல் மாடிக் கட்டடங்கள் பல இருந்தன. அங்கு கார்களை நிறுத்தி விட்டு
கோல்ஃப் கார்ட்டுக்களிம் மூலம் “நல்லி” கடைக்குச் செல்ல வேண்டும். பிறகு தானியங்கி ஓடு
தளத்தில் ஏறி அனைத்துக் கடைகளையும் மாம்பலம் மின்சார ரயில் வண்டி நிலையம் வரை நின்ற்,
மெதுவாக ஊர்ந்து செல்லலாம். அனைவரும் கையில் புது குத்து ஆட்டக்காரரின் மியூசிக்
வீடியோவை கண்டு ரசித்த வண்ணம் சென்றனர். சிலர் அதைப் போன்றே வானவில் எஃப் எம்சூரியன் எஃப்
எம், சந்திரன் எஃப் எம்களையும், பல்வேறு சாட்டிலைட் சானல்களையும் கேட்டு ரசித்த வண்ணம்
வளைய வந்தனர்.

கலாச்சாரக் குழுவினர் பெண்கள் கண்ட கண்ட ஆடைகள் போடுவதற்குத் தடைவிதித்தமையால் அனைவரும்
புடவைக் கட்டிக் கொண்டு வந்தனர். பெண்கள் முழுக்கை தைத்த சட்டையையும், ஆண்கள் அனைவரும்
பேண்ட் , சட்டை மற்றும் “2059” பேட்டா செருப்பினை ஒன்றையும் போட்ட வண்ணம் பவனி வந்தனர்.
வியர்வை தாங்காமல் சட்டைக் காலரை இழுத்து விட்ட சில வாண்டுகளைப் பார்த்து பெண்கள்
கூச்சலிட்டு போலீஸாருடன் முறையீடு செய்தனர்.

2059 Dec 26 அன்று சுனாமி வந்ததில் கடல் சோழா ஷெரட்டான் அருகே வந்தமையால் தி.நகர்
ரியல் எஸ்டேட் விலைத் தாறுமாறுமாக ஏறிக் கிடந்தது. கடற்கரைச் சாலை மற்றும் பழைய
மகாபலிபுரச் சாலைகள் கடலில் மூழ்கவே வேளச்சேரி சாலையில் போக்குவரத்து மிக அதிகமாகிப்
போனது. வட சென்னை 2058ல் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதி அழிந்து போனது. அப்போது கூடத் தென்
சென்னையில் சினிமா தியேட்டர்களில் நள்ளிரவுக் காட்சிகளில் கூட்டம் அலை மோதியது. வடக்குத்
தேய தெற்கு வாழ்ந்தது.

கோவில்களில் பெருமாளுக்கும், சிவனுக்கும் ஏஸி ரூம்கள் இருக்க பட்டர்களுக்கும்,
குருக்களுக்கும் ஏக வியர்வை. காரணம் உள்ளே ஏற்றி வைத்த கற்பூரம் மற்றும் ஊதுவத்தி. கோவில்
தூண்கள் எல்லாம் குங்குமம் ஏறிச் சிவப்பாக இருந்தது. கிருஷ்ணா ஸ்விட்ஸ் அருகே ராதா ஸ்வீட்ஸ்
பெரும் கடை ஒன்று வைத்திருந்தது. ஜிலேபி கவுண்டருக்கு ஏகக் கூட்டமாக இருந்தது.
அப்பாக்கள் இன்னும் மல்லிகைப்பூ மற்றும் ஜிலேபி வாங்கிப் அம்மாக்களைத் தாஜா செய்தனர்.

ராமகிருஷ்ணா பள்ளிக் கூடம் இன்னும் கொஞ்சம் பாழடைத்திருந்தது. பழமை எங்கள் பாரம்பரியம்
என்று போர்டு வைத்திருந்தது. வெங்கட் நாராயணா தெருவில் திருப்பதி கோவில் ஒன்று பல்வேறு
தளங்களில் குமரன், நல்லி சில்க்ஸ் போன்று வளர்ந்து ஏ.ஸி. யுடன் புடவைக் கடை போன்று
பெருமாளுடன் ஜொலித்தது. இலவசமாக லட்டு, மற்றும் அல்வா பக்தர்களுக்குக் கொடுத்தனர்.
நுழைவுக் கட்டணம் $10 ஆக இருந்தது. பெருமாளுடன் கருடன், சக்கரத்தாழ்வார், அனுமார்
யாவருக்கும் தனியே ஏ.ஸி. வசதி செய்யப்பட்டு தனியறைகள் சர்வ அலங்காரத்துடன் காணப்பட்டது.

புகையினால் நிறைய டிராபிக் கான்ஸ்டபிள்கள் 2045ல் செத்ததால், கோர்ட்டு மூலமாக மனிதர்கள்
தி.நகரில் போலீஸாக நிறுத்துவதற்குத் தடை இருந்தது. ஆர்.எம்.கே.வி, சரவணா ஸ்டோர்ஸ்
அன்பளிப்பில் ஜப்பானிலிருந்து தருவித்த ரோபோக்கள் மக்களை கைகாட்டி வழிகாட்டின. பாலு
ஜுவல்லரியின் அன்பளிப்பில் ரோபோக்கள் தலையில் இருந்த சிகப்பு, பச்சை விளக்குகள்
வண்டிகளுக்கு வழிகாட்டின. சைக்கிள்கள் அதிகம், புகையில்லாத கோல்ஃப் கார்ட்டுக்கள் – ஆட்டோ
போன்று மாற்றப்பட்டிருந்தன. சிலர் குதிரைகளைப் பழக்கி மீண்டும் சாலைகளில் ஓட்டிக்
கொண்டிருந்தனர்.

அனைத்து இடங்களிலும் மரங்கள் அடர்த்தியாக வீட்டு மொட்டை மாடிகளில் பூந்தொட்டிகளில் மட்டும்
இருந்தது. வீடுகளனைத்தும் வணிகத் தளங்களாக மாறி விட்டிருந்தன. எங்கள் சித்தப்பா இருந்த
வீட்டில் தற்போது பழைய 2006 குமுதம், ஆனந்த விகடன் கிடைக்கும் பேப்பர் கடை இருந்தது.
எங்கள் மாமா இருந்த வீட்டில் ஆப்பிள் கம்பெனியின் ஐ2050-வீடியோ பிளேயர் மாடல் கிடைக்கும்
எலக்ட்ரானிக் கம்பெனியிருந்தது. லிஃப்கோ கம்பெனியினர் சோனியின் கையடக்க எலக்ட்ரானிக்
புத்தகங்களை விற்பனைச் செய்து கொண்டிருந்தனர். ஒரு விளம்பரத்தில் அனைத்து தமிழ்,
சமஸ்கிருத, ஆங்கிலத் தோத்திரங்கள் மாலைகள் , சுலோகங்கள் அடங்கிய சோனி புத்தகத் மின் தட்டு
$1.99 க்கு இங்கு கிடைக்கும் என்று போட்டிருந்தது.

மாம்பலம் ரயில் நிலையம் அருகில் பிளாட்பாரக் கடைகள் அனைத்தும் அந்தரத்தில் மிதக்கும்
டேபிள்கள் மீது கடை விரித்திருந்தன. போலீஸ் தொல்லை இருந்தால் சட்டென்று சுலபத்தில் மடித்து
கக்கத்தில் வைத்து ஓடிவிடலாம். ரங்கநாதன் தெருவில் (ரங்கநாதன் மருவியாச்சு !) பின்புறம்
பர்மா பஜாரில், வியட்நாம், கம்போடியா, அமெரிக்கா துணிகள் இரைந்து கிடந்தன. சிங்கப்பூர்
சரக்கு இன்னும் அதிக டாலரில் விலை போய்க்கொண்டிருந்தது. போலீஸை “மாம்ஸ்” என்று செல்லமாக
அழைக்கும் பழக்கம் மாறவில்லை.

ஹும் எங்க காலத்தில் உஎன்று ஆரம்பித்தால் உ”கமான் பெர்சு ! ஓவரா திங்க் பணாதே “ என்று
கமெண்ட் விழுந்தன. அனைத்து அரசியல்வாதிகளின் பேரர்கள் மற்றும் பேத்திகள் தேர்தல்களில்
நிற்பதாய் செய்திகள் வந்தன. “சன்” தொலைக்காட்சி செய்திகள் செல்போனில் டிவியின் “சின்ன
சின்ன” திரையில் வந்தது. பெண் குழந்தைகள் சாரதா பள்ளியைவிட்டு திரலாக வெளியே வந்தனர்.
யூனிபார்ம் கூட 2006 கலரிலேயே இருந்தது. பள்ளிப் பிள்ளைகள் பலரும் கையில் சோனியின்
மின்புத்தகங்களை ஜாமெட்ரி பாக்ஸ் மாதிரி வைத்திருந்தனர். 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான
பாடங்கள் அரசாங்கம் இலவசமாக உள்ளேற்றி அனைவருக்கும் தந்திருந்தது.

இன்று சத்யம், சாந்தம், சுபம், செளந்தர்யம், சமாதம், சமணம் காம்ப்லெக்ஸில் “Aliens – 10”
என்ற ஆங்கிலப் படம் என்றும் போஸ்டர் ஒட்டியிருந்தது. கோடம்பாக்கத்து பிரிட்ஜ் இரண்டு மடங்கு
பெரிதாக்கப்பட்டு டிராபிக் ஜாம் வடபழனியிலிருந்து, உஸ்மான் ரோடு வரை விழி
பிதுங்கியது. நடிகர் விஜய்யின் மகன் அஜய் நடித்த படம் தேவி பாரடைசில் ஓடிக்
கொண்டிருந்தது. படம் பெயர் “புல்லட்வாதி”. ஜோடி ரிஷா ! குத்து ஆட்டம் எல்லாம் உண்டு.

சரவணா பவன் தன் 250 வது கிளையை மேற்கு மாம்பலம் உமாபதி தெருவில் ஆரம்பிப்பதாக ஒரு
விளம்பரம் பார்த்தேன். MULLIGATANNAI SOUP and IDLI ! என்றப் பெயர் பலகைத் தாங்கிய
பிரமாண்டமான ஹோட்டலைப் பார்த்தேன். இரவானதும் கையேந்தி பவன் கடைகள் ஹை டெக்காக மாறி
இருந்தன. கையில் கிளவுஸ் போட்டுக் கொண்டு சுத்தமானத் தட்டுகளில் சுடச் சுட இட்லிகள்
பறிமாறப்பட்டன. “மச்சி சூப்பர்டா ! என்று இன்றும் கேட்க முடிகிறது.

கடைகளில் நடையேறிக் களைத்து, கையேந்தி பவனில் சாப்பிட்டுவிட்டு இரவு ஹபிபுல்லா
ரோட்டில் உள்ள வீட்டின் 20வது மாடியில் ஆக்சிஜன் முகமூடியைப் போட்டுக் கொண்டு தூங்க
ஆரம்பித்தேன். நாளைக்கு காலையில் 3 மணிக்கு மெட்ரோ வாட்டர் வரும். வந்தவுடன் “பார் கோடு
வளையத்தைக் காண்பித்து” மெட்ரோ லாரியிலிருந்து பக்கெட் வாளித் தண்ணீர் வாங்கணும். வீட்டு
ரோபோவிற்கு சொல்லிவிட்டு 2.45 மணிக்கு காலையில் என்னை எழுப்பச் சொன்னேன்.


- கிருஷ்ணகுமார்இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது.
இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த
வேண்டும்.">(kkvs...@yahoo.com)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 2:28:54 AM7/12/15
to brail...@googlegroups.com
Monday, July 6, 2015
அமேசான் கிண்டில் எனும் மின்நூல் வாசிப்புக்கருவி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த
கிண்டிலை இப்போது மும்முரமாய் டி.வியில் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஆங்கில நூல்களை
வாசிப்பதற்கான எளிய மார்க்கமாய் அதை முன்வைக்கிறார்கள். சுலபமாய் புத்தகங்களை நொடியில்
தரவிறக்கலாம்; ஒருதடவை சார்ஜ் செய்தால் வாரக்கணக்கில் பயன்படுத்தலாம். நிறைய புத்தகங்களை
அதில் வைத்திருப்பதன் மூலம் பயணத்தின் போது புத்தக சுமை இருக்காது என அனுகூலங்களை
கூறுகிறார்கள். எனக்கு என்றுமே மின்நூல்களில் ஆர்வமுண்டு. நான் கோபோ எனும் வாசிப்பு
கருவியை பயன்படுத்துகிறேன். சில வருடங்களுக்கு முன் சந்தையில் அதுவே விலை குறைவாக
இருந்தது. இப்போது wifi கொண்ட கிண்டிலின் விலையை அதிரடியாய் குறைத்து விட்டார்கள்.
அதனால் கோபோவை விட கிண்டிலே மலிவாய் உள்ளது. ஐயாயிரம் ரூபாய்க்குள் வாங்கி விட்டால்
கணிசமான ஆங்கில மின்நூல்களை இலவசமாய் தரவிறக்கி படிக்கலாம்.
உதாரணமாய் எழுத்தாளர் இந்திரன் தான் ஐயர்லாந்தில் சந்தித்த ஜான் பான்வில் எனும் புக்கர்
பரிசு வென்ற எழுத்தாளர் பற்றி முகநூலில் ஒரு வித்தியாசமான சேதி எழுதியிருந்தார்.
பான்வில் எனும் பெயரில் இலக்கிய நாவல்களும், பெஞ்சமின் பிளேக் எனும் பெயரில் அவர்
துப்பறியும் நாவல்களூம் எழுதி இருக்கிறார். ஏற்கனவே போர்கஸ் போன்றோர் துப்பறியும் கதைகள்
எழுதியுள்ளதை அறிந்திருக்கிறோம். இவர் ஒரு பேட்டியில் “நான் இலக்கிய நாவல் எழுதும்
போது வசந்த காலமாகவும் துப்பறியும் நாவல் எழுதும் போது இலையுதிர் காலமாயும்
உணர்கிறேன்” எனக் கூறுகிறார். இவரது மொழி அழகும் பிரசித்தம். சரி இப்படியானவர் இரண்டு
வகைகளிலும் புழங்கும் போது எப்படி மாறுபடுகிறார் என அறிய ஆவல் கொண்டேன். உடனே அவரது
படைப்புகளை இணையத்தில் தேடினால் விலை அதிகம். ஒரு இணையதளத்தில் இலவசமாய் கிடைக்க
தரவிறக்கி வாசித்தேன். முதலில் பெஞ்சமின் பிளேக்காய் அவர் எழுதிய “Christine Falls”
படித்தேன். அடுத்து பான்விலாக அவர் எழுதிய ஒரு நாவலை படிக்கப் போகிறேன். (இரண்டையும்
முடித்து விட்டு என் வாசிப்பனுவத்தை எழுதுகிறேன்) இப்படி உடனடி வாசக ஆர்வ
நிவாரணத்துக்கு மின்நூல் வாசிப்பு கருவி முக்கியமானது.
தமிழில் கிண்டில் நூல்கள் இப்போது வரை இல்லை என நினைக்கிறேன். அமேசான் தமிழ் சந்தையை
கண்வைப்பதாயும் தெரியவில்லை. மாநில வாரியான புத்தக விற்பனையை அமேசான கணக்கில்
கொள்ளும்பட்சம் அவர்கள் கோடிக்கணக்கான லாபம் வரக் கூடிய ஒரு சந்தைக்குள் காலடி வைக்கக்
கூடும். ஆனால் அது அவ்வளவு எளிதாகவும் இருக்காது. தமிழில் புத்தக விற்பனை
பெரும்பாலும் நூலக ஆணை, கண்காட்சி, சிறு புத்தக வியாபாரிகளை நம்பித் தான் உள்ளது.
ஆங்கிலத்தில் இலக்கிய நூல்கள் அந்தஸ்துக்காகவும் ஆர்வத்துக்காகவும் ஒருசேர வாங்கப்படுகின்றன.
ஆங்கிலத்தில் விற்பனை ஒருங்கிணைந்ததாகவும் இங்கு ஒருங்கிணையாததாகவும் உள்ளது. தற்போது
நியூஸ்ஹண்ட் போன்ற மொபைல் இணையதள வாசிப்பு நிறுவனங்கள் பழைய ஜாம்பவான்களான ராஜேஷ்குமார்
துவங்கி இலக்கிய பிதாமகர்கள், இன்றுள்ள இலக்கியவாதிகள் வரை மின்நூல் வடிவுக்குள் கொண்டு
வர முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் சந்திக்கும் பிரதான பிரச்சனைகள் - எனக்குத் தெரிந்து –
இரண்டு. ஒன்று இதுவரையில் பதிப்பாளர்களுக்கு மின்நூல் வடிவம் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.
பெரும்பாலான நூல்களின் உரிமைகள் அவர்கள் வசமே உள்ளதால் எழுத்தாளன் நினைத்தால் கூட
எளிதில் தன் நூல்கள் முழுதையும் மின்நூலாய் வெளியிட முடியாது. ஏனென்றால் மின்நூல்
வடிவம் இன்னும் இங்கு உறுதியாய் வாசகர்களை சென்றடையும் என்றோ லாபம் பெற்றுத் தெரியும்
என்றோ ஆதாரபூர்வமாய் தெரியவில்லை. அதனால் இரண்டு பக்கமிருந்தும் மின்நூல்
வெளியிடுபவர்களுக்கு ஆதரவு குறைவே.
ஆனால் அமேசான் போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையில் காலெடுத்து வைக்கும் போது
அவர்களால் எளிதில் நம் பதிப்பாளர்களின் நம்பிக்கையை பெறவும் போதுமான முதலீடுகளை
செய்யவும் இயலும். மின்நூல் வருவதனால் அச்சுநூல்களின் விற்பனை குறையுமா? ஓரளவு
குறையும். ஆனால் மின்கருவிகள் வழி வாசிக்கும் புது வாசகர்கள் தோற்றுவிப்பதன் வழியாக
ஒரு சமநிலையை எட்ட முடியும். ஒரு கட்டத்தில் இது பதிப்பாளர்களுக்கு லாபமாகவே அமையும்.
இதனால் எழுத்தாளனுக்கு அனுகூலமா?
வணிக எழுத்தாளர்கள் சந்தையில் எந்த புது இடம் தோன்றினாலும் அங்கு முதலில் கடை
விரிப்பார்கள். மின்நூல் விசயத்திலும் இதுவே நடக்கும். இப்போதே இணையத்தில் கணிசமான இலவச
நூல்களை வெளியிட்டுள்ளவர்கள் கிழக்கு பதிப்பகத்துடன் சம்மந்தமுள்ள எழுத்தாளர்கள் தாம்.
எனக்குத் தெரிந்து மின்நூலாய் விற்கத்தக்க கணிசமான நூல்களை கிழக்குப்பதிக்கம்
வைத்திருக்கிறார்கள். அதே போன்று சோதிடம், சமையற்குறிப்பு நூல் வெளியீட்டாளர்களும் லாபம்
பார்ப்பார்கள். முகநூலில் எழுதுபவர்களும் முந்தியடிப்பார்கள். எல்லாரும் வண்டியில் தொத்திக்
கொள்ள பார்க்கும் போது இலக்கிய எழுத்தாளனும் நிச்சயம் பின்னாலே ஓடி வருவான். பெரிதும்
சின்னதுமாய் எல்லாருக்கும் லாபம் இருக்கும்.
இதுவரையிலும் மின்நூலாய் மட்டுமே புத்தகங்களை வெளியிடும் வழக்கம் ஆங்கிலத்திலும்
குறைவே. அச்சு மற்றும் மின்நூலாய் சேர்த்து வெளியிடுகிறார்கள். இரண்டின் விலையிலும் 10
சதவீதத்திற்கு மேல் வித்தியாசம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பதிப்பகங்களின் நோக்கம்
இதன் மூலம் வாசகர்களை முழுக்க மின்நூல் நோக்கி கொண்டு போகாமல், இருவடிவங்களிலும்
வாசிக்க வைத்து வாசக எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது. தமிழிலும் இவ்வாறே நடக்கும்.
விளைவாக, அமேசான இங்கு வந்தாலும் கூட எழுத்தாளர்களின் ராயல்டி தொகை அதிகமாகப்
போவதில்லை. ஏனென்றால் அச்சில் கொண்டு வருவதற்கான செலவையும் சேர்த்து மீட்க வேண்டுமே? சில
அதிக விற்பனை சாத்தியமற்ற நூல்களை மட்டும் ஒரு பதிப்பகம் மின்நூலாய் வெளியிடும் சூழல்
தோன்றுமா? தெரியவில்லை. அதை எழுத்தாளர்கள் விரும்புவார்களா என்பதும் சந்தேகமே.
அமேசான் ஆங்கிலத்தில் சுயபிரசுர வாய்ப்பை எழுத்தாளனுக்கு அளிக்கிறது. குறைந்த விலையில்
உங்கள் நூலை நீங்களே வெளியிட்டுக் கொள்ளலாம். இம்முறையில் ஆங்கிலத்தில் நிறைய
சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள். தமிழிலும் இது வெற்றி பெறலாம். ஆனால் சில தடைகள் உள்ளன.
ஒன்று wifi இணைய தொடர்பு இன்னமும் நம்மூரில் இலவசமாகவில்லை. அதை விட முக்கியமாய்
வாசிப்புக் கருவிகளை ஐயாயிரம் ரூபாய் கொடுத்து நம்மாட்கள் வாங்குவதும் சிரமம் தான்.
சற்றே பெரிய மொபைல் இருந்தாலும் அதில் பெரிய/சிறிய நாவல்கள் வாசிப்பதும் வசதியானதல்ல.
ஒருவேளை நம் அரசாங்கமே கிண்டில் போன்ற கருவிகளை குறைந்த விலைக்கு வாங்கி இலவசமாய்
பள்ளி மாணவர்களுக்கு அளிக்குமானால் அது இங்கு பெரும் மாற்றத்தை கொண்டு வரலாம். பள்ளி
நூல்கள் பிரசுரமாவது தாமதமாவதைச் சொல்லி வகுப்புகள் தாமதமாவதையும் தவிர்க்கலாம்.
பொதுவாக இக்கருவிகளை இயக்குவது மொபைலை விட எளிது. இக்கருவிகளில் இணையதளங்களில்
உலவுவதில் பெரும்பாலும் சாத்தியப்படாது என்பதல் மாணவர்களுக்கு தோதாக இருக்கும். மேலும்
உயர்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான எத்தனையோ மின்நூல்கள் இணையத்தில் இலவசமாய்
கிடைக்கின்றன. அவற்றைத் தேடி திருவல்லிக்கேணி நடைபாதை கடைகளில் அலைய வேண்டியதில்லை.

மக்களுக்கு வாசிக்க நேரமில்லை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் வகுப்பில் பல
புதுதலைமுறை படிப்பாளர்களை பார்க்கிறேன். அடுத்த சில பத்து வருடங்களில் இது போன்ற
புதுதலைமுறை மாணவர்கள் பெருகுவார்கள். கல்வி பரவலாகும் போது வாசகர்களை பெருக்குவதும்
வாசிப்புக்கான மலிவான கருவிகளை வழங்குவதும் முக்கியமான மாற்றத்தை கொண்டு வரும்.
அத்தகையவர்கள் டி.வி, பேஸ்புக், வேலை என வாழ்க்கையை பிரித்து சமாளிக்கும் திறன்
கொண்டவர்கள். வாசிப்புக்கும் தினம் அரைமணி ஒதுக்குவது ஒன்றும் சாகசம் அல்ல. இன்று முகநூல்
வந்த பின்னரும் இணையதளங்களில் கட்டுரைகள் படிக்கப்படுவது தொடர்கிறதே. எப்போதும் ஒரு
புது விசயம் தோன்றும் போது அதற்கான பயன்பாட்டாளர்களும் கூட புதிதாய் தோன்றுவார்கள்.
புத்தகங்கள் என்றுமே அழியப்போவதில்லை. வாசகர்கள் பன்மடங்காகப் போகிறார்கள்.
Posted by Abilash Chandran at 1:11 AM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 2:43:00 AM7/12/15
to brail...@googlegroups.com
Wednesday, July 1, 2015
புதுமைப்பித்தன் நினைவுதின அரங்கு
abilash%2Bputhumai%2Bpithan%2B…
abilash%2Bputhumai%2Bpithan%2B…
நேற்று பனுவலில் புதுமைப்பித்தன் நினைவுதின அரங்கு மிக நிறைவான வகையில் நடந்தது.
வேலை நெருக்கடி காரணமாய் நான் சற்று தாமதமாகவே செல்ல நேர்ந்தது. அதனால் முதலில்
பேசிய இருவரை கேட்க இயலவில்லை. பெருந்தேவியின் உரை செறிவான ஒன்று. காஞ்சனை கதை
பற்றி பேசிய அவர் புதுமைப்பித்தனிடம் செயல்பட்ட நவீன தன்னிலை (modern subjectivity)
பேய் போன்ற மரபான நம்பிக்கைகளை சித்தரிக்கும் போது அடையும் தத்தளிப்புகளை
குறிப்பிட்டார். அக்கதையின் சிறப்பே தன்னை நவீனமான, புரட்சிகரமான சிந்தனையாளனாக
நினைக்கும் ஒருவன் பேய் போன்ற வேலைக்காரி அவன் வீட்டில் இருக்கையில் அடையும் குழப்பங்களும்
பயமும் தான். அவன் பயம் உண்மையானதா அல்லது வெகுளியானதா என பு.பி அறுதியிட்டு கூற
மாட்டார்.

அரவிந்தன் புதுமைப்பித்தன் கதையுலகு பற்றி விரிவாக நுணுக்கமான பார்வையுடன்
பேசினார். இரண்டாம் முறையாக அவர் பேச்சைக் கேட்கிறேன். “நீங்கள் ஒரு நல்ல பேராசிரியராய்
வந்திருக்க முடியும்” என அவரிடம் கூறினேன். தனக்கு அப்படி ஒரு ஆசை முன்பு இருந்தது
என்றார். பொதுவாக சுந்தர ராமசாமியின் பள்ளியை சேர்ந்தவர்கள் – ஜெயமோகன்,
மனுஷ்யபுத்திரன், யுவன் சந்திரசேகர், அரவிந்தன், சங்கர ராமசுப்பிரமணியன், சுகுமாரன் –
சமத்காரமாய், நுணுக்கமாய், அறிவார்ந்த நகைச்சுவையோடு சிறப்பாய் பேசக் கூடியவர்கள்.
தனிப்பட்ட உரையாடல்களில் இவர்கள் மேலும் வித்தகர்கள். சங்கர் மேடையை விட தனிப்பட்ட
முறையில் சிரிக்க சிரிக்க பேசுவார். இப்படி சு.ரா பள்ளிக்கு என தனிப்பட்ட ஒரு பேச்சு
பண்பு இருப்பது இயல்பான விபத்தா அல்லது சு.ராவின் தாக்கமா அல்லது எதேச்சையாக
இவர்களுக்கு கடவுள் வாயில் வயம்பு தேய்த்து அனுப்பினார்களா தெரியவில்லை.
இறுதியில் பேசின தமிழ்மகன் “புதிய நந்தன்” கதையை சுவைபட வாசித்து நகைச்சுவையுடன்
விளக்கினார். அதையும் ரசித்தேன். இப்படி கதை வாசிப்பது ஒரு நல்ல பாணி. இனிவரும்
நிகழ்ச்சிகளில் நாம் ஆளாளுக்கு மணிக்கணக்கில் உரையாற்றாமல் சில கதைகளை வாசித்து
கூட்டமாய் அமர்ந்து கேட்கலாம். அப்போது நாடகம், சினிமாவுக்கு இணையான ஒரு காட்சிபூர்வ
அனுபவத்தை இலக்கியம் நமக்கு தரும். நூல்வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும் இதை பின்பற்றிப்
பார்க்கலாம்.
நான் புதுமைப்பித்தனின் மூன்று தத்துவார்த்த கதைகளான “பிரம்மராக்ஷஸ்”, ”கபாடபுரம்”,
”கயிற்றரவு” பற்றி பேசினேன். இந்திய தத்துவத்தையும், நமது நாட்டுப்புற வாழ்வையும்
புதுமைப்பித்தன் பேசும் போது இன்றுள்ள ஜெயமோகன், இமையம், அழகிய பெரியவன் போன்றோரிடம்
இருந்து இருவிதத்தில் வேறுபடுவதைக் குறிப்பிட்டேன். திருநெல்வேலி பிள்ளைமார் வாழ்க்கையை
அவர் விவரிக்கும் போது வெளிப்படுவது அவ்வாழ்க்கையோடு ஒன்றிப் போய் அதை ஏற்றுக் கொண்ட
குரல் அல்ல. அது அவ்வாழ்க்கையை விலகி நின்று பார்த்து விமர்சிக்கும் ஒரு நவீன குரல்.
கிராம மற்றும் நகர வாழ்க்கையை அதிருப்தியுடன் அங்கதம் செய்யும் ஒரு வேற்றாள் குரல்.
இமையம் தன் ஊர் மக்களைப் பற்றி கரிசனையோடும் விமர்சனத்தோடும் பேசுகையில் அவ்வாழ்வோடு
உணர்வுரீதியில் ஒன்றுகிறார். அழகிய பெரியவனும் அவ்வாறே. பு.பியிடம் இதைப்
பார்க்கவியலாது. அதைப் போல் ஜெயமோகன் இந்திய மரபின் தத்துவங்கள், வரலாற்று தொன்ம
சித்திரங்களை மீள் கட்டமைக்கும் போது அவற்றை ஏற்றுக் கொள்ளே உள்ளே பயணிக்கிறார். ஆனால்
புதுமைப்பித்தனின் கபாடபுரம், கயிற்றரவு போன்ற கதைகளில் ஐரோப்பிய புத்தொளி இயக்கத்தின்
வாரிசான ஒருவனாக நின்று ஒவ்வொரு திருப்பத்திலும் நம் இந்திய நம்பிக்கைகள், மயக்கங்கள்
பற்றி விமர்சித்தும் கிண்டலடித்தும் போகிறார்.
புதுமைப்பித்தனின் “பிரம்மராக்‌ஷஸ்”, “கபாடபுரம்” போன்ற கதைகளை எவ்வாறு ஒரேநேரம்
தத்துவக்கதைகளாகவும் விஞ்ஞான புனைவுகளாகவும் பார்க்க இயலும் என்று பேசினேன்.
இச்சிறுகதைகளில் அவர் உருவாக்கும் பிரம்மாண்டம், சீற்றம் கொண்ட மொழி, கதையின் உருவத்தை
குடைந்து வெளிவரத் துடிக்கும் கருத்துக்களும் உணர்வுகளும், தத்துவார்த்த, வரலாற்று
கேள்விகள் ஆகிய அவர் காலத்திலோ அவருக்கு பின்னரோ கணிசமான சிறுகதையாளர்கள் முயலாதவை
என்றேன். ஏனென்றால் அடிப்படையில் சிறுகதை அவ்வளவு பாரத்தை தாங்காது. புதுமைப்பித்தன்
சிறுகதைக்குள் நாவல் எழுத முயன்ற கலைஞன். அவருக்கு பின் அவரைப் போன்று விரிவான
களமும், கொப்புளிக்கும் பிரம்மாண்ட சித்தரிப்புகளும் கொண்டு சிறுகதை எழுத முயன்றவர்
ஜெயமோகன் மட்டும் தான் என்றேன். நான் பேசி முடித்ததும் பெருந்தேவி அதற்கு உடனே மறுப்பு
தெரிவித்தார். ஜெயமோகனை விட சம்பத்தை தான் புதுமைப்பித்தனின் நீட்சியாக கருத முடியும்
என்றார். எனக்குப் பின் பேசிய அரவிந்தன் புதுமைப்பித்தனுக்கும் ஜெயமோகனுக்குள் உள்ள
ஒற்றுமைகள் உண்மை தான் என்றார். ஆனால் புதுமைப்பித்தன் லாவகமாய் பிரக்ஞையின்றி எழுதும்
போது ஜெயமோகன் அதையே சற்று பிரக்ஞைபூர்வமாய் செய்வதாய் கூறினார்.
கூட்டம் முடிந்த பிறகு என்னுடன் வந்த நண்பர்கள் நிகழ்ச்சியுடன் சாப்பாடும் போட்டால் சிறப்பாக
இருக்குமே என ஆலோசனை சொன்னார்கள். நான் செந்தில்நாதனிடம் “என்ன முதலாளி அடுத்த
நிகழ்ச்சிக்கு ஒரு கெடா வெட்டுங்க” என்று பரிந்துரைத்தேன். அவர் “கல்லாவில்
உட்கார்ந்திருப்பவர் தான் நிஜமான முதலாளி” என்றார். சரி தான். இப்படி படாதபாடுபட்டு
நிகழ்ச்சியை சிறப்பாய் ஒருங்கிணைப்பது போதாதென்று சோறும் கேட்பது சற்று அதிகம் தான்.

Posted by Abilash Chandran at 1:10 AM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 2:47:17 AM7/12/15
to brail...@googlegroups.com
உடலைக் காப்பாற்றுவது எப்படி?

நம் உடலை நம்மிடம் இருந்து காப்பாற்றுவது பற்றி நிறைய டயட் டிப்ஸ், உடற்பயிற்சி
அறிவுரைகள், உடல் எடை குறைக்கும் மருந்து பரிந்துரைகள் என விளையாட்டு பொம்மைகளால்
சூழப்பட்ட குழந்தை போல ஆகி விட்டோம். வேறெந்த காலத்திலும் மனிதன் தன் ஆயுள், ஆரோக்கியம்,
உடல் தோற்றம் பற்றி இவ்வளவு அக்கறைப்பட்டிருப்பானா என்பது சந்தேகம். ஆனால் உடல் ஆரோக்கியம்
என்பது இதற்கு எல்லாம் அப்பாற்பட்டதாக இருக்கிறது. தினசரி உடற்பயிற்சி
செய்கிறவர்களுக்கும் நோய்கள், அது சம்மந்தமான வலிகள் வருகின்றன. யோகா மாஸ்டர்களும் கூட
சின்ன உபாதைகளால் கடும் அவதிப்படுகிறார்கள். உடற்பயிற்சி, நல்ல உணவு, கட்டுப்பாடான
வாழ்க்கை ஆகியவை நம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்பது மட்டுமே இப்போதைக்கு உண்மை.
உடல் வலுவாக, சுலபமாக, அலுப்பின்றி உணரும் போது ஒரு விடுதலை உணர்வு கிடைக்கும்
அல்லவா அது தான் ஒரே பலன்.

பல சமயங்களில் இந்த டயட் நிபுணர்கள், எடை குறைக்கும் மருந்து உபகரண நிறுவனங்கள்,
அவற்றின் விளம்பரங்கள் ஆகியவை மனிதனை குறி வைத்து தம் சம்பாத்தியத்துக்காக சுரண்டுகின்றன
என சொல்லப்படுகிறது. எளிதில் புரிய வரும் உண்மை இது. ஆனால் இது பாதி உண்மை தான்.
மனிதன் என்ன அவ்வளவு முட்டாளா? தன் உடல் பற்றி தனியார் நிறுவனங்களும், மருத்துவ
நிபுணர்களும் கூறும் அத்தனை பரிந்துரைகளையும் யோசிக்காமல் நம்ப அவன் என்ன அடிமுட்டாளா?
இல்லை. நாம் எல்லாரும் புத்திசாலிகள் தாம். ஒரு நவீன உடற்பயிற்சி நிலையம் ஒரு வருட
சந்தாவாக 25000 வாங்கி உங்களை சேர்க்க அழைக்கும் போது அதில் வியாபார நோக்கும் உண்டென
அறிவீர்கள் தாம். உங்களால் தினசரி சென்று உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகலாம் என்பதையும்
அறிவீர்கள். உடல் பருமன் குறைப்பதற்கான மருந்துகளும் கூட மற்றொரு விதத்தில்
ஆரோக்கியத்துக்கு கேடு என்பதையும் அறிவீர்கள். தொடர்ந்து நம் உடல் குறித்த புது நோய்
அறிகுறிகளை கண்டுபிடித்து சொல்லி மருந்து நிறுவனங்கள் பீதியை கிளப்பி லாபம் அறுவடை
செய்கிறார்கள் என்பதையும் அறிவீர்கள். உடல்நல சந்தை என்பதே ஒரு கட்டுவிக்கப்பட்ட மாயை என
கணிசமான மக்கள் அறிவார்கள். ஆனாலும் நாமாகவே போய் இந்த பீதி கலாச்சாரத்தில் மாட்டிக்
கொள்கிறோம். இதற்கு காரணம் நமது புத்திசாலித்தனம். வேறெப்போதையும் விட நாம் இன்று அதிக
புத்திசாலிகளாய் இருக்கிறோம். இன்று சாதாரண செய்தித் தாள், பத்திரிகைகளில் வரும்
மருத்துவக் கட்டுரைகளை நம் முந்தைய தலைமுறையினர் இவ்வளவு எளிதாய் புரிந்து உள்வாங்கி
இருப்பார்களா என்பது சந்தேகமே. முன்னெப்போதையும் விட உடல் குறித்த அறிவு, பிரக்ஞை,
கவனம் இன்று பன்மடங்க்கு ஆகியிருக்கிறது. இது நன்மையை விட அதிகம் தீமையே ஏற்படுத்தி உள்ளது.
மனித உடலுக்கு என்று ஒரு ஆயுள் கடிகாரம் உள்ளது என ஒரு அறிவியல் கோட்பாடு
சொல்கிறது. நாம் எவ்வளவு காலம் வாழ வேண்டும் என நம் உடல் தீர்மானிக்கிறது. நாம் எதற்காக
வாழ்கிறோம்? சாப்பிட்டு, ஊர் சுற்றி, குடித்து கும்மாளமிட்டு, வேலை செய்து போராடி
பொருளும் அதிகாரமும் சந்தித்து மகிழ்ச்சியாக இருக்கவா? அறிவையும் அனுபவங்களையும்
பெறவா? உண்மையயை, கடவுளை அறியவா? அல்ல. ஒரே காரணம் தான். அது வம்ச விருத்தி.
இப்படித் தான் நம் உடல் புரிந்து வைத்திருக்கிறது. அதனால் தான் மிகக்குறைவாய் உணவு
அருந்தும், வற்றலும் தொற்றலுமாய் இருக்கிறவர்கள் அதிக காலம் வாழ்வார்கள் என்கிறது ஒரு
அறிவியல் ஆய்வு. அதெப்படி நேர்மாறாக அல்லவா சொல்லித் தந்திருக்கிறார்கள்? நன்றாக
சத்துணவை உண்கிறவர்கள் தாம் அதிக ஆயுள் பெறுவார்கள் என்று. ஆனால் பட்டினி ஆயுளை
நீட்டிக்கிறது என்பதுவும் உண்மை தான். உணவு மிகக் குறைவாக உண்ணும் போது உடல் நாம் பஞ்ச
காலத்தில் இருப்பதாக கருதுகிறது. அப்போது மனிதனுக்கு இணையை அடைந்து குழந்தை
பெறுவது சாத்தியமில்லை, நீண்ட காலம் பஞ்சத்தில் வாழும் மனிதனுக்கு ஒரு துணையை தேடி
அடைய நீண்ட காலம் எடுக்கும். அதனால் அவன் நீண்ட காலம் வாழ வேண்டும் என உடல் தீர்மானிக்கிறது.
சுமார் முப்பது வயதில் இருந்தே உடல் மெல்ல மெல்ல தன்னை சுயமாக அழித்துக் கொள்ள
தொடங்குகிறது. செல்கள் புதுப்பிக்கப்படுவது குறைகிறது. உள்ளுறுப்புகள், தசைகள்,
எலும்பு ஆகியன திட்டமிட்டு பலவீனமாக்கப் படுகின்றன. இதனால் தான் நாற்பதுக்கு பிறகு
நோய்கள் வருவது அதிகமாகிறது. களைப்பும் அலுப்பும் அதிகமாகிறது. மரணம் என்பது உடலின்
ஒரு தற்கொலை தான். உடல் நினைத்தால் “வயதாகும்” வயதில் செல்களை தொடர்ந்து புதுப்பித்து
நம்மை “இளமையாக்க” முடியும். உடல் அதை செய்யும். உணவு பற்றாக்குறையின் போது மட்டும்.
சரி அப்படி என்றால் பிரம்மசாரிகள் நீண்ட காலம் வாழ்வார்களா? இதற்கு இப்போதைக்கு தெளிவான
விடை இல்லை. அடிக்கடி உடலுறவு கொள்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என ஒரு ஆய்வு
சொல்கிறது. டெஸ்டோர்டிரோன் எனும் ஆண்களின் ஹார்மோன் செக்ஸின் போது அதிகமாகிறது
டெஸ்டோர்டிரோன் அதிகமாய் சுரக்கும் ஆண்களில் ஆயுள் குறைவு என்றும் ஒரு புள்ளி விபரம்
சொல்க்றது. இது இத்தகைய ஆண்கள் அதிக ரிஸ்க் எடுப்பவர்களாக, வன்முறையாளர்களாக இருப்பதனால
இருக்கலாம். இரண்டு அவதானிப்புகள் இங்கு முக்கியம்.
ஒன்று உணவு உட்கொள்ளும் சாத்தியம் இன்று வேறெந்த காலத்திலும் விட அதிகமாகி உள்ளது.
அதாவது சேரிவாசிகளுக்கு கூட நகரங்களில் உணவுப் பற்றாக்குறை இல்லை. அதாவது கிராமத்து
ஏழைகளுடன் ஒப்பிடுகையில். மத்திய, உயர்தட்டினரோ மிதமிஞ்சிய உணவை உண்டு செரிக்க
முடியாமல் தவிக்கிறார்கள். எண்பதுகளை விட இன்று ஆண்கள் திருமணம் செய்யும் வயதும்
குறைந்துள்ளது. எனக்குத் தெரிந்தே 25-27க்குள் மணம் முடிந்த தகப்பனாகிய பல நண்பர்கள்
உள்ளனர். இரண்டுக்கும் இன்றுள்ள பொருளாதார வளம் முக்கிய காரணம். இதன் அடுத்த விளைவாகத்
தான் இன்று 40-45க்குள் மரணமடைகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒப்பீட்டளவில்
நம் தாத்தா, அப்பாக்களின் தலைமுறையை விட நாம் 30-40 வருடங்கள் குறைவாகவே வாழ்கிறோம்
என்பதை நிதர்சனத்திலேயே பார்க்கிறோம். இதை அறிய நமக்கு எந்த புள்ளிவிபரமும்
தேவையில்லை. இத்தனைக்கும் நம் தாத்தா, அப்பாக்கள் நம்மளவுக்கு கூட ஆரோக்கிய அக்கறைகள்
கொண்டவர்கள் அல்ல. அவர்கள் மாசுபடாத உணவை உண்டு காற்றை சுவாசித்தார்கள் என்பதை காரணமாக
சொல்லலாம். ஆனால் சதா குடித்து புகைபிடித்து, அலட்சியமாய் உணவை உண்டு வாழ்ந்தவர்கள் கூட
அந்த தலைமுறையில் இருந்தார்கள். அவர்கள் எப்படி நீண்ட காலம் வாழ்ந்தார்கள்? தேவையான உணவும்,
அதன் மூலம் குழந்தை பெறும் சாத்தியங்களும் மிக இளமையிலேயே நம் தலைமுறை பெறுகையில் நம்
ஆயுளும் குறைகிறது. ஜென்ம லட்சியமான வம்ச விருத்தியை அடைந்த பின், செய்ய
வேண்டியதையெல்லாம் நாற்பதுக்குள் செய்து முடித்த பின் நீ ஏன் அதற்கு மேல் வாழ வேண்டும் என
நம் உடல் கேட்கிறதோ?
2001இல் மைக்கேல் ரோஸ் எனும் ஆய்வாளர் கலிபோர்னியா பல்கலையில் பழப்பூச்சிகளைக் கொண்டு ஒரு
வித்தியாசமான ஆய்வு செய்தார். பொதுவாக இப்பூச்சிகள் பாலியல் முதிர்ச்சி பெற்றவுடனே
உடலுறவு கொள்ளத் துவங்கி விடும். ரோஸ் இந்த பூச்சிகளை அவை சற்று வயதாகி முதிர்வதை
வரை தனிமைப்படுத்தினார். முதிய வயதில் இப்பூச்சிகளை உடலுறவுக்கு அனுமதித்தார்.
இப்பூச்சிகளின் ஆயுட்காலம் சில நாட்களே என்பதால் பல தலைமுறைகளை ’இந்த
முதிர்ந்த-பின்-மட்டும்தான்-செக்ஸ்’ எனும் ஒழுக்கத்துக்கு உட்படுத்தினார். விளைவாக
பழப்பூச்சிகளின் ஆயுட்காலம் இரட்டிப்பானது. அதாவது வழக்கமான பழப்பூச்சியின் ஆயுள் 50
நாட்கள் என்றால் ஆய்வகத்தில் இப்பூச்சிகள் 100 நாட்கள் வாழ்ந்தன. அதுவும் இறுதிக் காலம் வரை
துடிதுடிப்பாக உடலுறவு கொண்டு ஜம்மென வாழ்ந்தன என்கிறார். நாம் குழந்தை பெறுவதை
அல்லது பெறுவதற்கான சாத்தியங்களை பயன்படுத்துவதை உடல் எப்படியோ அறிந்து அதற்கு ஏற்றபடி
நம் ஆயுளை குறைத்தோ நீட்டிக்கவோ செய்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
நம் ஆயுள் நம் கைவசம் இல்லை என்றால் நாம் அதைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறையும் ஆவலாதியும்
கொள்ள வேண்டும்? உண்மையில் நீண்ட காலம் வாழ வேண்டும் என ஆசையினால் ஆரோக்கிய சந்தை
பிம்பங்களில் மாட்டிக் கொள்கிறோமா அல்லது எப்படி வாழ்கிறோம் எனும் மிதமிஞ்சிய பிரக்ஞை
நம்மை இவ்வாறான ஆரோக்கிய கவலைகளில் தள்ளுகிறதா? நம் உடலை மிக அதிகமாய் மீடியா மூலம்
திரும்ப திரும்ப பார்க்கிற காலத்தில் வாழ்கிறோம். நம் உடலை பிறர் மிக அதிகமாய் பார்க்கிற
காலத்தில் வாழ்கிறோம். நம் தோற்றம் நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு என மிதமிஞ்சி நம்புகிற
காலத்தில் வாழ்கிறோம். இது வாழ்க்கையை ஒரு இடறல் இல்லாத ஒழுக்குடன் வாழ நம்மை
அனுமதிப்பதில்லை. சதா தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டு வாழ்வது போன்ற ஒரு அவலம்
வேறில்லை. அது தான் நம்மை உளவியல் ரீதியாய் நெருக்கடிக்கும், மனச்சோர்வுக்கும்
ஆளாக்கிறது. விளைவாக மோசமான கொண்டாட்ட செயல்களில் ஈடுபட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக்
கொண்டு அது குறித்து வருந்தி மேலும் மனம் சோர்ந்து மீண்டும் மருத்துவரிடம் சென்று மருந்து
உண்டு ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு…இது ஒரு முடிவற்ற சுழற்சியாக உள்ளது.
நம் உடல் பற்றி சதா அடுத்தவர் அலசுவதும் கவலைப்படுவதும் பரிந்துரைகள் செய்வதும் வெறும்
வியாபார லாபம் சம்மந்தபட்ட ஒன்று மட்டுமல்ல. தன் உடல் மீது மதிப்பீடுகள் வைக்கப்படும் போது
அதை ஏற்கிற மனிதன் தன்னை முழுக்கவே மதிப்பிடுகிறவரிடத்து இழக்கிறான். மீடியா
நிறுவனங்கள் பார்வையாளனின் உடலை இவ்வாறு கையகப்படுத்துவதைப் பற்றி நிறைய பேசி
இருக்கிறோம். எவ்வாறு இன்று சிவப்பு × கறுப்பு நிறம், ஒல்லியான உயரமான பெண்கள் ×
கறுத்த குள்ளமான பெண்கள் என எதிரிடைகள் உருவாக்கப்பட்டு தென்னிந்தியர்களின் சுயபச்சாதாபம்
தூண்டப்படுவது பற்றி விவாதங்கள் நடந்துள்ளன. அழகுநிலையங்கள் பெண்களின் கேசத்தை பார்க்கும்
விதமே விநோதம். சுருள் மயிர், அலையலையான மயிர் ஆகியவற்றை “நோய்வாய்ப்பட்டவையாக”
பார்த்து அவற்றுக்கு “சிகிச்சைகளை” பரிந்துரைக்கிறார்கள். டானி ஏண்ட் கய் எனும் அமெரிக்க
மயிர் திருத்த நிலைய ஸ்டைலிஸ்ட் என்னிடம் சொன்னார் “சுருள் மயிர் கொண்ட பெண்களுக்கு வேறு
வழியே இல்லை. இந்த 2500 ரூ களிம்பைத் தடவி செட் செய்தால் மட்டுமே பார்க்கும்படியாய் 8
மணிநேரம் இருக்கும்”. அவர் சொல்வதிலும் உண்மையில்லாமல் இல்லை. ரொம்பவே சுருண்ட கேசம்
கொண்டவர்களுக்கு அடர்த்தியும் இருந்தால் முடி சரியாக பராமரிக்காவிட்டால் சற்று
பீதியூட்டும்படி தான் இருக்கும். ஆனாலும் அதுவும் ஒரு இயல்பு தானே. இந்த ஸ்டைலிஸ்டுகள்
வரும் முன் நம்மூரில் எத்தனையோ பெண்கள் இவ்வகை கூந்தலை அள்ளிக்கட்டித் தானே திரிந்தார்கள்.
நாம் இதுவரை கவனிக்காமல் நார்மல் என நினைத்தவற்றை இவர்கள் கண்டுபிடித்து அவற்றின் பிசிறை
சுட்டுக் காட்டுகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொண்டு விட்டால் பிறகு நம் தலையை அவர்களிடம்
ஒப்புக் கொடுத்தே ஆக வேண்டும்.
எனக்கு இது நம் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனையாகத் தான் தெரிகிறது. தலையை ஸ்டைலிஸ்டிடம்
ஒப்புவிக்கையில் நம் மனதை, நம் ஆளுமையைத் தான் அவரிடம் கொடுக்கிறோம். அதை வெட்டி எப்படி
வேண்டுமெனிலும் வடிவம் தர உரிமை அளிக்கிறோம். இது நம்மை மேலும் நன்றாக தோற்றம் கொள்ள
வைக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் எப்படி வேண்டுமெனிலும் இருக்கக் கூடிய
சுதந்திரத்தையும் அதோடு இழக்கிறோம். எப்படி வேண்டுமெனிலும் எனில் சற்று பிசிறாக,
குளறுபடியாக, குறைகளுடன், ஏறுக்குமாறாய், சீரற்று, ஒழுங்கற்று இருக்கும் சுதந்திரத்தை.
முன்பை விட நாம் இன்று அதிக புறவயமாய் சிந்திக்க தொடங்கி விட்டோம். நம் ஆளுமையை
தோற்றமாய் புறவயப்படுத்தி படுத்தி மனமற்றவர்களாகி விட்டோம். கண்ணாடியிலும்,
புகைப்படத்திலும், பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் புரொபைல் படங்களிலும் நம்மை பார்த்து
பார்த்து அதுவே நாமாகி விட்டோம். நம் சுயம் என்பது நம் உடலின் பிம்பங்களாக நமக்கு
வெளியே புது வடிவம் எடுத்துள்ளது. இன்று பரவலாகி வரும் டேட்டூ எனப்படும்
பச்சைகுத்துவது நல்ல உதாரணம். முன்பு எம்.ஜி.ஆர், முருகன் வேல் போன்ற பொது பண்பாட்டு
அடையாளங்களை பச்சை குத்தினார்கள். அது லட்சியத்தின், விசுவாசத்தின் அடையாளமாக
இருந்தது. இன்று இது தனிப்பட்ட உணர்வுகளை, அந்தரங்க நம்பிக்கைகளை உடல் மீது பதிப்பதாக
மாறி உள்ளது. இரண்டு பேர் முத்தமிடும் படத்தை சரிபாதியாய் பிரித்து காதலர்கள் பச்சை
குத்துகிறார்கள். செல்லப்பிராணிகள், பிடித்த கார்டூன் நாயகர்கள் என்று எதையெதையோ உடலில்
சுமந்து விளம்பரப் பலகை போல் ஆகி வருகிறோம். இங்கிலாந்தில் உள்ள ஹேடென்ஹேமில் ஒருவர் தன்
வீட்டு வேலியில் உள்ள புதரை ஆண்குறியின் வடிவில் செதுக்கினார். அதை கவனித்த அரசு
அதிகாரிகள் அவருக்கு 80 பவுண்டுகள் அபராதம் விதித்தனர். அவருக்கு தன் பால்நிலையின்
பிம்பமாக அப்புதர் இருக்கிறது. அது பொதுவெளியில் மக்கள் பார்க்கும் படி வைப்பது
உண்மையில் விரசம் அல்ல. டேட்டூ, வித்தியாசமான கூந்தல் வடிவங்கள் போல இதுவும் ஒரு கலை
வெளிப்பாடு தான். இப்போது நம் மனதை, சுயத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனிலும் நம் தோற்ற
பிம்பத்தை கட்டுப்படுத்தினால் போதும் என்றாகி விட்டது. அதாவது அபராதம் விதித்தால் போதும்.
கடந்த பத்து வருடங்களில் விக்ரம், சூர்யா இருவரும் சில படங்களுக்காக தம் உடலை
தேவையில்லாத அளவுக்கு வருத்திக் கொண்டு பார்வையாளர்களையும் முகம் சுளிக்க வைத்தனர்.
சூர்யா “வாரணம் ஆயிரத்துக்காக” உடல்நலம் கெடும் அளவுக்கு எடையை குறைத்தார். விக்ரம் “ஐ”
படத்துக்காக தன் பல் ஒன்றை பிடுங்கினதுடன், உடல் எடையையும் ஆபத்தான அளவுக்கு குறைத்தார்.
எதார்த்தம் எனும் பெயரில் பாலா தன் நடிகர்களின் உடல்களை படுத்துகிற பாட்டை பற்றி சொல்ல
வேண்டியதில்லை. நடிப்பு என்பது உடலை நேரடியாக மாற்றி வடிவமைக்கிற கலை அல்லவே. ஒரு
சாதாரண உடல் கொண்ட ஆள் கூட தன் நடிப்பின் மூலம் தன்னை பிரம்மாண்டமான ஆகிருதியாகவோ மிக
பலவீனமான நோயாளியாகவோ காட்ட முடியும். இன்றும் நாடக அரங்கில் நடிகர்கள் இதை
சாதாரணமாய் நிகழ்த்துகிறார்கள். பார்வையாளனின் மனம் மிக சுலபமாக புற உண்மைகளை மறுத்து
மாற்று உண்மையை ஒரு கலை அரங்கில் ஏற்று நம்பி அதில் லயிக்கும் என்பது காலங்காலமான
உண்மை. ஆனாலும் இந்த நடிகர்கள் ஏனிவ்வாறு உடலை நேரடியாக ஒரு தோட்டக்காரர் புதரை
வடிவமைப்பது போல் வடிவமைப்பதே நடிப்பு என நம்புகிறார்கள்? நடிகர்களும் தமக்கே அறியாமல்
புறத்தோற்றத்தின் பிம்பமே தம் சுயம் என நம்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஆக இது இருவிதமாக செயல்படுகிறது. மீடியா ஆளுமைகள் நம்மை நம் உடல் பிம்பத்தை கட்டமைக்க
தூண்டுகிறார்கள். பிறகு நாமே இந்த மீடியா ஆளுமைகளே இதை தமக்குத் தாமே செய்து
கொள்ளும்படி தூண்டுகிறோம். பரஸ்பர வதை.
சமீபமாக பிரெஞ்சு அரசாங்கம் மிக மெல்லிசான (ultra-thin) மாடல்களை தடை
செய்திருக்கிறது. அதாவது உடலை எடை குறைந்ததாக வைப்பதே லட்சியம் என தொடர்ந்து
செய்யப்பட்ட பரப்புரையால் ஒரு தலைமுறையே நோஞ்சான்களாக, பலவீனர்களாக போய் விட்டார்கள் என
பிரஞ்சு அரசு அஞ்சுகிறது. அதனால் அப்படி பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களுக்கு ஐந்து
வருடங்கள் சிறைத்தண்டனையும் அபராதமும். குறிப்பிட்ட BMIக்கு கீழ் எடை கொண்ட பெண்
மாடல்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 75,000 யுரோக்கள் அபராதமும். ஆனால் இயல்பாகவே
ஒல்லிப்பீச்சான்களாக உள்ள பெண்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் ஏன் சிறை செல்ல வேண்டும்?
முற்போக்கு சிந்தனையாளர்கள் கூட எவ்வாறு உடல் பிம்பத்தை ஒரு மதிப்பீடாக கொண்டு மக்களை
ஒடுக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதே பார்வையின் படி அதிக கொழுப்புள்ள
உணவுகளை உண்டு குண்டாக இருப்பதும் கூட குற்றம் தானே! அவர்களையும் தானே தண்டிக்க
வேண்டும். ஒரு எடை எந்திரத்தை வீடு வீடாக கொண்டு போய் கச்சிதமான BMI இல்லாதவர்களை
சிறையில் தள்ளலாமே? BMI எனும் உயரத்துக்கு ஏற்ற எடை எனும் மாய சதவிகித விதிமுறை
தான் நம் காலத்தின் மிக பயங்கரமான ஒடுக்குமுறைக் கருவி. இந்த BMIயை கச்சிதமாக
கொண்டுள்ளோர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்றோ இல்லாதவர்கள் ஆரோக்கியமற்று
இருக்கிறார்கள் என்றோ எந்தவித உத்தரவாதமோ அறுதியான தரவுகளோ இன்றி இதை முன்வைத்து
மக்களை ஒடுக்குகிறார்கள். ஒரு பக்கம் தனியார் மருந்து நிறுவனங்களும், மீடியாவும் மக்களை
கட்டுப்படுத்த விழைந்தால், அவர்களை எதிர்க்கும் நோக்கில் அரசாங்கமும் அதே BMI கருவியைக்
கொண்டு மக்களைக் கட்டுப்படுத்துகின்றன. ஏற்கனவே இஸ்ரேல், ஸ்பெயின், இத்தாலி ஆகிய
நாடுகளில் இத்தடை நிலுவையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
BMI மட்டுமல்ல கச்சிதமான சிக்ஸ்பேக் உடமைப்பு என்பது மற்றொரு போலி பிம்பம் தான். நான்
முன்னர் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் ஒரு நண்பரை சந்தித்தேன். என்னோடு தான் சேர்ந்தார்.
ஆனால் மூன்றே மாதத்தில் அர்னல்டு ஷுவஸ்நேக்கர் மாதிரி உடல் வந்து விட்டது. அடுத்து
ஆறுமாதங்கள் அப்படியே இருந்தார். பிறகு மெல்ல மெல்ல உடல் இளைத்து முன்பிருந்தது போல்
சாதாரண மனிதர் ஆகி விட்டார். இடையில் என்ன நடந்தது எனக் கேட்டேன். அவர் சொன்னார் “body
mass powder வாங்க காசில்ல அதனால் தான். அதை சாப்பிடிறதை நிறுத்தினதும் இப்பிடி
ஆயிட்டேன்”. ஊரில் என் அப்பாவுக்கு ஆத்மநண்பர் ஒருவர் இருந்தார். அவர் பால்யத்தில் இருந்தே
கடுமையான உடற்பயிற்சிகள் செய்பவர். ஊரில் அவர் அளவுக்கு சிறப்பாய் பாரில் பயிற்சி செய்ய
யாராலும் முடியாது என அப்பா சொல்வார். ஆனால் அவரைப் பார்த்தால் தொப்பையும் தொளதொள
மார்புமாய் இருப்பார். அவர் உடல்வாகு அப்படி, ஆனால் நல்ல சண்டைக்கலை ஆசான் என அப்பா
அவரைப் பற்றி சொல்வார். அவர் எண்பது வயதுக்கு மேல் நன்றாக வாழ்ந்து தான் இறந்தார். ஜெயின்
கல்லூரியில் நான் வேலை பார்க்கையில் வேதியல் துறையில் ஒரு பேராசிரியர் இருந்தார்.
பார்ப்பதற்கு குள்ளமாய் ரொம்ப ஒல்லியாய் பாவமாய் இருப்பார். ஆனால் இஷின்ரியு கராத்தேவில்
தமிழகத்தின் சிறந்த ஆசான்களில் ஒருவர். ஜப்பானுக்கு சென்று கராத்தேவின் பல நிலைகளை
கற்று வந்தவர். அவரால் சில நொடிகளில் நான்கு பேரை அடித்து வீச முடியும். அவரைப்
பார்த்தால் “நீங்க இந்த பவுடரை சாப்பிட்டா மூணே மாசத்தில “ஐ” பட விக்கிரம் மாதிரி
ஆகலாம் சார்” என யாராவது விற்பனை பிரதிநிதி சொல்வார். ஆனால் அவர் விக்கிரமை விட
ஆரோக்கியமானவர்.
உடல் பற்றி அடுத்தவர் கருத்து தெரிவிக்கும் போது நம் மீது தம் அதிகாரத்தை பிரயோகிக்க
முயல்கிறார் எனப் பொருள். இந்த ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்க முதல் வழி நம் உடல்
மீதான விமர்சனத்தை வெளியில் இருந்து ஏற்காது இருப்பது. நம் வாழ்வு என்பது தொடர்ந்து
மாறுதலுக்கு உட்படும் ஒரு ஒழுக்கு. அதன் பிரதிபலிப்பு மட்டுமே நம் சுயம் என்பது. ஆக
நம் சுயத்துக்கும் நிரந்தர அடையாளம் இல்லை. அது மாறிக் கொண்டே இருக்கிற ஒன்று. நம்
வாழ்வின் பிரதிபலிப்பு சுயம் என்றால், அப்பிரதிபலிப்பின் நீட்சி நம் உடல். ஆக நம் சுயமும்
உடலும் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிற, அடையாளமற்ற வஸ்துக்கள். இரண்டுமே
விளக்கங்களுக்கும் தர்க்கத்துக்கும் அப்பாற்பட்டது. நாம் எப்படி வாழ்கிறோமோ அதுவாக
இருக்கிறோம். உதாரணமாய் மூன்று மாதங்கள் நடைபயிற்சி செய்கிறீர்கள். உங்கள் உடல் அதற்கு
தோதாக மாறுகிறது. ஒரு வாரம் நிறுத்தி வைத்தால் மற்றொன்றாக மாறுகிறது. நிறுத்தாமலே
பயிலும் போதும் உங்களுக்கு கடும் உளவியல் நெருக்கடி வேலையிலோ தனிப்பட்ட வாழ்விலோ
ஏற்படுகிறது என்றால் அதுவும் உங்கள் மனதையும் உடலையும் நிச்சயம் மற்றொன்றாக மாற்றும். எந்த
வித ஆரோக்கியமும் நிரந்தரம் அல்ல. நீங்கள் சற்று முன் போல் இப்போது இல்லை. ஆக
“ஆரோக்கியமான வாழ்க்கை” என்பதை வாழவே முடியாது. ஆரோக்கியமாக சற்று காலம் இருக்கலாம்.
ஆனால் அது வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே. ஆரோக்கியமற்று இருப்பதும் வாழ்வின் நல்ல பகுதி
தான். நிரந்தர ஆரோக்கியம், நீடித்த உடல் நலம் ஆகியவை வெறும் லட்சியபூர்வ கட்டமைப்புகள்.
அதை அடைந்தவர் யாரும் பூமியில் இல்லை. ஏனென்றால் வாழ்வின் போக்கே நிரந்தரத்துக்கு
எதிரானது. ஆக நாம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சொல்லப்படும் அறிவுரைகளை
பரிசீலிக்காமலே நிராகரித்து விடலாம். அவை நம் மீது அதிகாரம் பிரயோகிப்பதற்கான
தந்திரங்கள் மட்டுமே.
வாழ்கிறோம் எனும் பிரக்ஞை இன்றி லயித்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை. மற்றபடி நம் மனம்
மற்றும் உடலை சரிப்படுத்தி சீர்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்தலாம் என அறிவுறுத்துபவர்களை
நிராகரிக்க வேண்டும். நம் வாழ்வை உள்நோக்கி திருப்ப வேண்டும். சமீபத்தில் திருவல்லிக்கேணி
தெரு ஒன்றில் ஒருவர் என்னை எதிர்கொண்டு ஒரு துண்டு பிரசுரம் நீட்டினார். அது உடல் எடை
குறைக்கும் மருந்து பொடி ஒன்றிற்காக விளம்பரம். பார்த்ததுமே நிராகரித்தேன்.
“ஏன் சார் ஒரு தடவை டிரை பண்ணிப் பாருங்களேன்”
“எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்ல”
அவர் சற்று வாயடைத்து நிற்க நான் நடந்தேன். சற்று தூரத்தில் அவரது சகா ஒருவர் என்னிடம்
வந்து சொன்னார் “சார் உங்க நிலைமைக்கு இன்னும் வெயிட் குறைச்சா ரொம்ப வசதியா இருக்கும்
இல்லையா? ஏறி இறங்க நடக்க எல்லாம் ஈஸியா இருக்குமே?”
நான் சொன்னேன் “சரி தான் சார். அதே மாதிரி எனக்கு இன்னும் கொஞ்ச நல்ல வேலை கிடைச்சாலும்
நல்லா இருக்கும். இன்னும் அதிகம் சம்பளம் கிடைச்சாலும் நல்லா இருக்கும். இன்னும் நல்ல வண்டி
ஒண்ணு கிடைச்சா நல்லா இருக்கும். என்னை சுற்றி இருக்கும் இந்த மக்கள் நிறைய படித்து
விழிப்புணர்வு பெற்றாலும் நல்லா இருக்கும். சரியான படி ஓட்டுப்போட்டு ஊழல்
அரசியல்வாதிகளை இவங்க துரத்திட்டா அதுவும் நல்லா இருக்கும். இவங்க எல்லாருக்கும் இது
போல எத்தனையோ விசயங்கள் நடந்தா நல்லா இருக்கும். அதெல்லாம் நடந்ததும் நான் உங்களைத் தேடி
வரேன்”

அவர் எனக்கு பதிலளிக்கவில்லை. மாற்றப்படாதபடி இந்த உலகில் எவ்வளவோ சிக்கலான விசயங்கள்
உள்ளன. அதில் ஒன்று தான் நம் உடலமைப்பும். மிச்சத்தை எல்லாம் மாற்றாமல் இதை மட்டும் ஏன்
மாற்றத் துடிக்கிறார்கள் என எனக்கு விளங்கவில்லை.
ஜூன் 2015 உயிர்மையில் வெளியான கட்டுரை
Posted by Abilash Chandran at 11:44 PM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 2:53:15 AM7/12/15
to brail...@googlegroups.com
கதையை கேட்பது
Image result for அசோகமித்திரன்

கதைகளை நாம் கண்களால் வாசிப்பது தான் வழக்கம். ஆங்கிலத்தில் ஒலி நூல்கள் பிரபலம். ஆனால்
பழக்கம் காரணமாய் நான் எப்போதும் வாசிக்கவே பிரியப்பட்டிருக்கிறேன். முனைவர் பட்ட
ஆய்வுக்கு சேர்ந்த பின் அங்குள்ள சக ஆய்வாளர்களான நண்பர்கள் அருள், டேவிட் ஆகியோர் குழுவாய்
சேர்ந்து ஒரு கதையை வாசித்து கேட்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். எல்லா
வெள்ளிக்கழமையும் சில நண்பர்கள் சேர்ந்து மெரீனா கடற்கரையில் படைப்புகளை வாசித்து கேட்டு
அது குறித்து கலந்துரையாடுகிறார்கள். இந்த குழுவுக்கு Men Friday என
பேரிட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ஆங்கிலத்துறை மாணவர்கள் என்பதால் ஆங்கிலப்பெயர் போல.

துறையில் இருக்கையில் எதேச்சையாய் ஏதாவது ஒரு கதையை பற்றி பேச்சு ஆரம்பித்து அதை
கூட்டமாய் வாசிக்கவும் துவங்குவோம். அப்படித் தான் நான் போன வியாழக்கிழமை
அசோகமித்திரனின் “விருந்து” கதை பற்றி அருளிடம் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தேன்.
அ.மியின் இரு மொத்த தொகுப்புகளும் எங்கள் நெறியாளரின் நூலகத்திலேயே இருந்ததால் உடனே
எடுத்து வாசிக்க துவங்கினோம். விருந்து, பயணம், எலி, பூனை, புலிக்கலைஞன் ஆகிய ஐந்து
கதைகளை நானும் டேவிட்டுமாய் வாசித்தோம். பெரும்பாலான கதைகளை டேவிட் அழகாய் ஏற்ற
இறக்கங்களுடன் சரியான தொனி மாற்றங்களுடன் வாசித்தார். ஒரு கதையை கண்களால் வாசிப்பதை
விட கேட்பது இன்னும் அதிகமாய் கற்பனையை தூண்டுகிறது என்பதை அனைவருமே உணர்ந்தோம்.
கேட்கையில் கதை கண் முன் காட்சிபூர்வமாய் நிகழ்கிறது. இது ஒரு அலாதியான அனுபவம்.
“பயணம்” எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான கதை. அக்கதையை அபௌதிகவாதம் மீதான
பகடியாய் மட்டுமே இதுவரை புரிந்து வைத்திருந்தேன். கடினமான யோகா பயிற்சி மூலம் தன்
உடலை முழுக்க கட்டுப்படுத்துபவராய், உடலின் எல்லைகளை விரிவுபடுத்தி அதைக் கடந்து
பயணிப்பவராய் அதில் வருகிற குருநாதர் இருக்கிறார். அவருக்கு உடல் நலமில்லாமல் போக சீடன்
அவரை காடு, மலைப் பாதைகளில் சுமந்து கொண்டு ஒரு கிராமத்துக்கு பயணிக்கிறான். அப்போது
அவர் அனுபவிக்கும் அவஸ்தைகள், தான் எப்படியும் ஒரு அற்ப உடல் தான் என குருநாதர்
நிரூபிக்கும் இடங்கள், இறுதியில் குருவின் உடலை ஓநாய்கள் சீடனிடம் இருந்து பிடுங்கி
புசிப்பது என கதை உடல் இம்மண்ணின் ஒரு பகுதி தான் என கூறுவதாய் கருதியிருந்தேன்.
ஆனால் அன்றைய வாசிப்பு எனக்கு இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது. அதில் வருகிற
குருநாதர் பெரிய சித்தர். அவர் சலனமின்றி மூச்சு விடக் கூடியவர். ஆனால் நோய்வாய்ப்படும்
போது எளிய காரியங்கள் செய்வதற்கே அதிகம் சிரமப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர்
மூச்சுக்காய் திணறும் இடம் வருகிறது. அப்போது நமக்கு பரிதாபம் வருகிறது. என்ன தான்
சித்தர் என்றாலும் அற்ப மனிதப் பதர் தானே எனத் தோன்றுகிறது. பிறகு கதையில் இன்னொரு தளம்
திறக்கிறது.
இரவில் குருவின் உடலை ஒரு ஓநாயிடம் இருந்து சீடன் காப்பாற்றுகிறான். மறுநாள் அவர்
இறந்து விட்டதை உணர்கிறான். அவர் உடலை எப்படியாவது கிராமத்துக்கு கொண்டு போய்
முறைப்படி புதைத்து விட வேண்டும். ஆனால் இரவுக்குள் அவனால் மலையை கடக்க இயலவில்லை.
இரவு வருகிறது. கூடவே ஓநாய்க் கூட்டமும். அவற்றை விரட்டி பிணத்தை பாதுகாக்கையில்
அவனுக்கு தானும் அந்த ஓநாய்களில் ஒருவனோ என குழப்பம் ஏற்படுகிறது. ஓநாய்கள் பல
திசைகளில் இருந்தும் அவனைத் தாக்கி குலைத்து அதிரடியாய் பிணத்தை பிடுங்க முயல்கின்றன.
அவன் தொடர்ந்து ஓநாய்களுடன் போராடுகிறான். இறுதியில் ஓநாய்கள் பிணத்தை தூக்கிக் கொண்டு
ஓடுகின்றன. மறுநாள் குருநாதரின் சிதைந்து போன பிணத்தை தேடிக் கண்டுபிடிக்கிறான்.
தலையை காணவில்லை. ஆனால் ஒரு கையில் ஒரு ஓநாயின் பிய்ந்த கை இருக்கிறது. கதை
முடிகிறது. இம்முடிவு எனக்கு இது குருநாதர் மற்றும் சீடனின் மனதின் பயணமாகவும்
இருக்கலாம் என நினைக்க தூண்டியது.
ஓநாய்களுடனான போராட்டம் அச்சீடனின் மனப்போராட்டத்தின், குருவுடனான அகமோதலின் குறியீடாய்
இருக்கலாம். நோயின் விளிம்பில் தன் உடம்பில் இருந்து வெளியேறும் குருநாதர் தன் அபார
கட்டுப்பாடு காரணமாய் ஓநாய்கள் தன் உடலை குதறுகையில் மீண்டும் வந்து விடுகிறார். அப்போது
அவர் தன் உடலுக்காய் போராடுகிறார். மிருகத்தோடு மிருகமாய் சண்டையிட்டு ஓநாயின் கையை
பிய்த்து எடுக்கிறார். ஒரு கட்டத்தில் குருநாதரும் சீடனும் கானகத்தின் மத்தியில் மிருக
நிலையை அடைந்து போராடுகிற சித்திரத்தை நான் அன்று கதை கேட்கையில் மனதில்
உருவாக்கினேன். ஆன்மாவின் உச்சத்தை நாடி பயிலும் இருவர் தம்முள் உள்ள மிருகநிலையின்
உச்சத்தை அடைவதைக் காட்டும் கதையாய் ஒரு புது பார்வை கிடைத்தது. நல்ல கதைகளின் குணம்
இது. அவை எவ்வளவு முறை வாசித்தாலும் எப்போதும் ஒரு புது ஜன்னலைத் திறந்து எதிர்பாராத
காட்சியை காட்டும்.
“பயணம்” மாந்திரிக தன்மை கொண்டது. கவித்துவமானது. அசோகமித்திரன் பாணி கதையே அல்ல.
புதுமைப்பித்தன் விளையாடுகிற கதைக் களம் இது (கபாடபுரம்). இக்கதை எனக்கு ஹெமிங்வேயின்
படைப்புகளையும் நினைவுபடுத்தியது.

Posted by Abilash Chandran at 9:08 AM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 2:55:39 AM7/12/15
to brail...@googlegroups.com
குடல் கிருமிகளால் ஆட்டுவிக்கப்படும் மனித
மூளை
நியு யார்க் டைம்ஸில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தேன். நம்முடைய குடலில் இருக்கும்
கிருமிகள் நம் மனநிலையை, மூளையின் செயல்பாட்டை தீர்மானிக்க கூடும் என சில ஆய்வுகள்
நிரூபித்து வருகின்றன. பேக்டீரியா சில நரம்பணு ரசாயனங்களை ரத்தம் வழி மூளைக்கு
அனுப்பி தேவையான சமிஞைகளை உருவாக்கி நம் நடத்தையை தீர்மானிக்க முடியும். ஆட்டிஸம்
போன்ற வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடலில் உள்ள கிருமிகளை மாற்றும் சிகிச்சை
அளிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

இப்போதைக்கு ஆய்வை எலிகளிலும் குரங்குகளிலுமே செய்து வருகிறார்கள். மன அழுத்தத்தை
தூண்டும் ரசாயனங்களை சுரக்கும் கிருமிகளும், அதைத் தடுக்கும் ரசாயனங்களை சுரக்கும்
கிருமிகளும் உள்ளன. இவற்றை எலிகளில் செலுத்தி நடத்தை மாற்றங்களை பதிவு
செய்திருக்கிறார்கள். ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு என்னவென்றால் ஒரு கூண்டில் உள்ள
எலியின் அருகே வியாதி தொற்றிய புது எலியை விடும் போது முதல் எலியின் உடலில்
தற்காப்பு சக்தி உயர்கிறது. ஆனால் இதன் விளைவாக அதற்கு வியாதி எளிதில் தொற்றிக்
கொள்கிறது. இது நம் தற்காப்பு சக்தி குடலில் உள்ள கிருமிகளை அழிப்பதனால் இருக்கலாம்.
பொதுவாக நமக்கு சீக்கு வரும் போது மனம் சோர்வடைவதை கவனிக்கலாம். இது சீக்கின் போது
இக்கிருமிகளின் எண்ணிக்கை மிகுவதனாலோ குறைவதனாலோ இருக்கலாம். அதே போல மனம்
சோர்வடையும் போது நோய்த்தொற்று எளிதில் ஏற்படும். இது குடலில் மனச்சோர்வை தடுக்கும் நல்ல
கிருமிகள் இல்லாமல் ஆகி விட்டால், அதனால் நம் செரிமானம், உடலின் வேதியல் சமநிலை ஆகின
சீரற்று போய் மனமும் உடலும் பலவீனமாய் எளிதில் நோய்க்கு அடிமையாகலாம் என்பதைக் காட்டுகிறது.
மனிதனின் பாலுறுப்புகளில் தோன்றும் சில வைரஸ்கள் அதிகமான உடலுறவு இசையை தூண்டி அதன்
மூலமாய் பிற உடல்களுக்கு பரவும் என முன்னர் படித்திருக்கிறேன். நம் உடலில் உள்ள
மரபணுக்கள் அடிப்படையில் நுண்ணுயிர்களில் இருந்து நாம் பெற்றவை என்றும் ஒரு கோட்பாடு
உண்டு. எதை சாப்பிடுகிறோமோ அதுவாக ஆகிறோம் என்பது இந்திய பாரம்பரிய நம்பிக்கை.
குண்டானவர்கள் களங்கம்ற்றவர்கள் என்றும், ஒல்லியனவர்கள் சூழ்ச்சியாளர்கள் என்றும் ஷேக்ஸ்பியரின்
ஜுலியஸ் சீஸரில் ஒரு பாத்திரம் சொல்கிறது. சைவ உணவாளர்கள் சூழ்ச்சியாளர்கள் அல்லது
சமூகத்தில் இருந்து விலகி நிற்கும் மேட்டிமைவாதிகள் என சில நண்பர்கள் என்னிடம் கூறி
இருக்கிறார்கள். இவை எல்லாம் முன்னெண்ணங்கள் (prejudices). நம் சூழலும் அதற்கு நாம்
எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதும் நம் குணம் மற்றும் நடத்தையை நிச்சயம்
தீர்மானிக்கிறது. உதாரணமாய், சைவ உணவு உட்கொள்ளும் பிராமணர்கள், சைவவேளாளர்கள், ஜெயின்
சமூகத்தினர் ஆகியோரிடம் முற்றிலும் வேறுபட்ட நடத்தைகளை கண்டிருக்கிறேன். ஆனால்
எதிர்காலத்தில் நல்ல மனநிலைக்கான உளவியல் மருந்தாக உணவுகள் பரிந்துரைக்கப்பட
சாத்தியமுண்டு என்றாலும் அது எந்தளவுக்கு உதவும் எனத் தெரியவில்லை.

இன்னொரு மருத்துவ சாத்தியம் மனச்சோர்வு கொண்டோரின் குடலில் உள்ள கிருமிகளை மாற்றுவது.
இப்போதைக்கு இது சிக்கலானதாக இருக்கிறது. 35 வருடங்களுக்கு மேலாய் நடந்து வரும் ஆய்வு
இது. இப்போது தான் தகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
Posted by Abilash Chandran at 8:16 AM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 7:47:55 AM7/12/15
to brail...@googlegroups.com
என்ன சொல்கிறாய் சுடரே
can
(உயிர்மை இதழில் வெளியான எனது புதிய சிறுகதை)
••
ஒவ்வொரு இரவும் அந்த மனிதன் வீடு திரும்ப நடக்கும் போது அவனது முன்னால் சின்னஞ்சிறிய
மெழுகுவர்த்தி ஒன்று தனியே எரிந்து கொண்டு போனது.
உண்மையில் நான் சரியாகச் சொல்கிறேனா எனச் சந்தேகமாக உள்ளது,
அந்த மனிதன் மெழுகுவர்த்தியை கையில் பிடித்திருக்கவில்லை, உடன் யாரும் வரவுமில்லை,
ஆனால் ஒற்றை மெழுகுவர்த்திக் காற்றில் மிதந்தபடியே அவன் முன்னால் நகர்ந்து போய்க்
கொண்டிருந்தது,
விசித்திரமாகயிருக்கிறதில்லை, ஆனால் அது தான் நிஜம்.
பிறந்தநாள் கேக்குகளில் கொளுத்திவைக்கபடும விரல் நீளமுள்ள ரோஸ் வண்ண மெழுகுவர்த்தியது,
அதன் சுடர் தூய வெண்ணிறமாக இருந்தது. ஒரு ஆள் நடப்பதற்கு மட்டும் வெளிச்சம் தருவது போல
அந்த மெழுகுவர்த்தி முன்னகர்ந்து போய்க் கொணடிருந்தது
இது ஒன்றும் பெரிய அதிசயமில்லை என்பது போலவே அவன் நடந்து சென்றான்
தோல்வி மனிதர்களின் இயல்பை மாற்றிவிடுகிறது, விருப்பமான விஷயங்களைக் கூட
வேண்டாவெறுப்புடன் செய்ய வைக்கிறது. அதிலும் காரணம் அறியாமல் தோற்றுப்போனவர்கள் எப்போதும்
தன்னைத் தானே குற்றம் சொல்லிக் கொள்கிறார்கள், வருத்தப்படுகிறார்கள். தன்னை நொந்து கொள்வது
எவ்வளவு எளிதான வழி, ஆனால் ஆற்றுப்படுத்திக் கொள்ள வேறு என்ன தான் செய்யமுடியும்.
அந்த மனிதன் எப்போதும் இரவில் மிகத் தாமதமாகவே வீடு திரும்புகிறான், ஏன் வீட்டிற்குப்
போகிறோம் என்பது போன்ற தயக்கத்துடன், கவலையுடன் வெறுமையுடன் நடந்து போகிறான்.
சில மாதங்களாகவே தனது இயலாமையை நினைத்து நினைத்து நிறையப் புலம்பிவிட்டான், உலகின்
மீதான அவனது கோபமும் வடிந்துவிட்டது, இப்போது அவன் குழப்பத்துடன் காத்துக்
கொண்டிருக்கிறான், அடுத்த நாளில் தனது வாழ்க்கை இயல்பிற்குத் திரும்பிவிடும் என்ற துளி
நம்பிக்கை இன்னமும் அவனிடம் மிச்சமிருக்கிறது
ஒருவேளை கடந்த காலத்தின் சந்தோஷங்கள் தான் ஒன்று திரண்டு இந்தச் சிறிய வெளிச்சமாக
வழிகாட்டுகிறதோ என்று அவன் சந்தேகப்பட்டான். ஆனால் மாயவெளிச்சத்தால் தனது வாழ்க்கையை
மாற்றிவிட முடியவில்லையே, பின் எதற்கு இந்த ஒளி. அவனைப் போன்ற சாமானிய மனிதனுக்கு
அதிசயத்தால் ஒரு பயனுமில்லை
ஒரு நாள் என்பது அவனுக்கு நீண்ட பகலாக இருந்தது. தையற்கடையைத் திறந்து வைத்து தெருவை
பார்த்து வெறித்தபடி அவன் நாளெல்லாம் அமர்ந்திருந்தான்,
உலகம் தன் போக்கில் இயங்கிக் கொண்டேயிருந்தது, அவன் ஒருவன் மட்டும் விலக்கபட்டுவிட்டான்.
அவனது எதிர்பார்ப்புகள் எதுவும் நடக்கவேயில்லை, வேலையை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு
வழியில்லை, ஆனால் புதிதாக ஒரு வேலைக்குப் போகிற மனநிலை அவனுக்கில்லை, உலகம் ஏன்
தன்னை இப்படிக் கைவிட்டது எனக் குழப்பமாக இருந்தது.
வீட்டில் மனைவியும் பிள்ளைகளும் அவனது இயலாமையைச் சுட்டிக்காட்டுகிறார்கள், சாப்பிடும்
போதும், கதவை தட்டும் போது அதை நன்றாக உணர முடிகிறது. சோப்பு போட்டு குளிப்பதற்குக்
கூடக் கூச்சமாகயிருக்கிறது. சம்பாதிக்க இயலாதவன் உறவுகளின் கனிவை எதிர்ப்பார்க்க
கூடாது தானா
இந்த நகரில் தான் ஒற்றை மனிதன், தனக்கென யாருமில்லை என அவன் உணர்ந்திருந்தான். இத்தனை
ஆண்டுகளுக்குப் பிறகு தனிமை பூதாகரமாக வளர்ந்து அவனைக் கவ்வி கொண்டது. ஏன் தனக்கு
நண்பர்களேயில்லை. ஏன் தான் மற்றவர்களைப் போலச் சீட்டு ஆடவோ, குடிக்கவோ பழகவேயில்லை,
வெளியுலகம் என்ற ஒன்றிருக்கிறது என்பதை இத்தனை ஆண்டுகளாக ஏன் மறந்திருந்தேன் என
யோசித்துக் கொண்டேயிருந்தான்.
வேலை எத்தனையோ விஷயங்களை மறக்க வைத்திருந்தது, கவனம் திரும்ப விடாமல் குவிய
செய்திருந்தது. ஆனால் வேலையின்மை எல்லாவற்றையும் அடையாளம் காட்டிவிடுவதுடன்
குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்திவிடுகிறது
சம்பாதிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை, அன்றாடத் தேவைகளுக்கு எளிதாகச்
சம்பாதித்துவிடலாம் என்று தான் அவனும் நினைத்திருந்தான், அப்படித் தான் இத்தனை காலமும்
நடந்து கொண்டிருந்த்து, ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அவன் எவ்வளவு முயன்றும்
அன்றாடம் ஐம்பது ரூபாய் கூடச் சம்பாதிக்க முடியவில்லை,
சில நாட்கள் டீச்செலவிற்குக் கூட அவனிடம் காசில்லாமல் போயிருந்த்து, ஆனால் கடை வாடகை
கொடுக்க வேண்டும், தானும் குடும்பமும் மூன்று வேளைகள் சாப்பிட வேண்டும், பிள்ளைகள் படிக்க
வேண்டும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும், மனைவிக்கான மருந்து மாத்திரைகள் வாங்க
வேண்டும், இப்படி நிறையத் தேவைகளிருந்தன, ஆனால் எதையும் அவனால் நிறைவேற்ற முடியவில்லை.
நான் ஏன் ஒரு தையற்காரனாக இருக்கிறேன், இப்படி ஒரு வேலையை ஏன் இத்தனை ஆண்டுகள்
விருப்பத்துடன் செய்து வந்தேன் என அவன் மீதே கோபம் அதிகமிருந்தது. உலகில் எத்தனையோ
வேலைகள் இருக்கின்றன, அதில் தையல் மீது ஏன் தனக்கு ஆர்வம் உண்டானது,
உண்மையில் அந்த ஆர்வம் அவன் விரும்பி உண்டாக்கி கொண்டதில்லை, வீட்டின் வறுமை அவனை ஏழு
வயதிலே தையற்கடையில் உதவியாளாக வேலைக்குச் சேர வைத்தது. அவன் நிஜாம் டெய்லரிடம் பத்து
ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தான், அதன்பிறகு சில வருஷங்கள் கை மெஷின் ஒன்றை வைத்துக்
கொண்டு வீடு வீடாகப் போய்ப் பழைய துணிகள் தைத்துக் கொடுத்தான், முடிவில் தனக்கென ஒரு
தையற்கடையை அமைத்துக் கொண்டான்,
எல்லாமும் எளிதாகத் தான் நடந்தேறியது, அவனது தையற்கடைக்கென நிறைய வாடிக்கையாளர்கள்
இருந்தார்கள், அவர்கள் மணிக்கணக்காகக் கடை வாசலில் காத்திருந்து துணிதைத்து வாங்கிப்
போவார்கள், பண்டிகை நாட்களில் இரவு உறங்க கூட நேரமிருக்காது, மற்ற டெய்லர்களைப் போலத்
தனது பெயரையோ, கடையின் பெயரையோ அவன் துணியில் பொறிப்பதில்லை. ஒரு போதும் தவறான
அளவில் எவருக்கும் உடைகள் தைத்துக் கொடுத்ததுமில்லை. வேலை மட்டுமே அவனது
உலகமாகயிருந்த்து, ஆனால் எல்லாமும் இன்று வெறும் நினைவுகள்.
காலத்தின் சுழிக்காற்று அவன் கடையில் வெறுமையை நிரப்பிப் போய்விட்டது, இப்போது ஒருவர்
கூட அவன் கடையின் முன்பாக வந்து நிற்பதில்லை, தையல் இயந்திரத்தின் மீது போட்டு வைத்த
நீலத்துணியை அவன் விலக்கவேயில்லை, இரண்டு நாட்களுக்கு முன்பாகக் கடையிலிருந்த ஆள் உயர
கண்ணாடியை கூடத் துணி போட்டு மூடிவிட்டான், அது தன்னைப் பிரதிபலிக்கும் போது ஏமாற்றம்
அதிகமாகிறது.
சீருடைகள் தைக்கிற வேலையிருக்கிறதா என்று கூட அவன் ஒவ்வொரு பள்ளியாகப் போய்க்
கேட்டுவந்துவிட்டான், எவரும் அவனுக்கு வேலை தரவில்லை, பலசரக்குக் கடைகளுக்குத் துணிப்பை
தைத்துத் தருவதாகக் கூடக் கேட்டுவந்தான், அதிலும் ஒருவருக்கும் ஆர்வமில்லை. தினக்கூலிக்கு
டெய்லராக வேலை செய்கிறேன் என்று கூட விசாரித்துவிட்டான்,அதற்கும் திருப்பூர் போக
வேண்டும் என்றார்கள்,
பதினெட்டு வருஷங்கள் நடத்திய தையற்கடையை மூடிவிட்டு கூலி வேலைக்குப் போவதற்கு அவனது
மனது ஒப்பவில்லை. ஏதாவது நல்லது நடந்துவிடும், மீண்டும் தனது கடைக்கு ஆட்கள்
தேடிவருவார்கள் என அவன் நம்பத்துவங்கினான்,
ஆனால் அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வந்தது. பகலில் கூடத் தான் இருட்டில்
இருப்பதைப் போலவே உணர்ந்தான்.
சில நாட்களின் முன்பு ஒரு பூனை அவனது கடை வாசலில் வந்து நின்று சோம்பல் முறித்தது,
பிறகு அவனைக்கடந்து வலதுபக்கக்சுவர் வழியாகத் தாவி ஏறி நடந்து போனது, அந்தப் பூனை
திரும்பி வரும் போது அதன் வாயில் நீண்ட மீன் முள் ஒன்றிருந்தது, அதைத் தரையில் போட்டு
கடித்து நிதானமாகச் சாப்பிட்டது, அவன் பூனையைக் கண்டு பொறாமை பட்டான், எவ்வளவு எளிதாக
இருக்கிறது வாழ்க்கை, மீன்முள்ளை பூனை ருசித்துச் சாப்பிடும் போது அவன் குற்றவுணர்ச்சிக்கு
ஆட்பட்டான். தான் கேட்பது மீனில்லை, முள் கிடைத்தால் கூடப் போதும் தானே, ஆனால் அதுவும்
கிடைக்கவில்லையே. உலகம் ஏன் இத்தனை கொடூரமாகயிருக்கிறது
குற்றவுணர்ச்சியை ஒருவன் வளர்ந்து கொள்ளத் துவங்கிவிட்டால் உலகம் நரகமாகிவிடும், அது தான்
அவனுக்கும் நடந்து கொண்டிருந்த்து,
தன்னைச் சுற்றி நடக்கும் சகல சந்தோஷங்களையும் அவன் வெறுத்தான், வேலையில்லாத ஒருவன்
எதற்காகச் சூடாகத் தேநீர் குடிக்க வேண்டும் என டீயை வாங்கி நீண்ட நேரம் ஆற விட்டுக்
குடித்தான். தாகம் எடுக்கிற நேரங்களில் கூடத் தண்ணீர் குடிக்க மறுத்தான். எங்காவது
சிரிக்கிற சப்தம் கேட்டால் எரிச்சல் அடைந்தான். அரசமரத்திலிருந்து ஒரு இலை உதிர்வது கூட
அவனுக்குத் தாங்க முடியாத துக்கம் தருவதாக மாறியிருந்தது
நாளைக்கடத்துவது என்பது எளிதானதில்லை. மனம் பின்னோக்கி போகவே விரும்புகிறது. ஆனால்
கடந்த காலத்தை நினைக்கத் துவங்கியதும் தாங்க முடியாத மனவேதனை கொப்பளிக்கத்
துவங்கிவிடுகிறது. விரும்பி செய்த வேலையை விட்டு போவது எளிதா என்ன.
எவ்வளவு நேரம் வெறுமையில் உட்கார்ந்தே இருப்பது எனப்புரியாமல் ஒருநாள் தானாக மீதமான
துணிகளைக் கொண்டு சிறுவனுக்கான சட்டை ஒன்றை தைக்கத் துவங்கினான்
யாருடைய அளவில் தைப்பது எனத் தெரியவில்லை, மனதிற்குள் ஒரு சிறுவனைக் கற்பனை செய்து
கொண்டான்
யாரோ ஒரு சிறுவன் தன்னிடம் சட்டை தைக்கக் கொடுத்திருப்பது போலவும், அதைத் தைத்து
முடிந்தவுடன் தேடி வந்து பணம் கொடுத்து வாங்கிப் போவான் என்றும் நினைக்கத் துவங்கினான்
அந்தக் கற்பனை விளையாட்டு அவனை உற்சாகப்படுத்தியது. வீட்டிலிருந்து கிளம்பும் போதே
இன்றைக்கு அந்தச் சிறுவன் வந்துவிடுவான் எனச் சொல்லிக் கொள்வான், ஆனாலும் வேலையை உடனே
முடித்துவிடக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டவன் போல மெதுவாக, கவனமாக அந்தச் சட்டையைத்
தைக்கத் துவங்குவான், தையல் இயந்திரத்தில் கால்கள் அசையும் போது மனதில் அந்தச் சிறுவன்
வந்து வாசலில் காத்திருப்பது போலத் தோன்றும்,
இன்னும் முடியலை தம்பி, போய்விட்டு நாளைக்கு வா எனச் சொல்லிக் கொள்வான்
ஒரு சிறுவனின் சட்டையை எவ்வளவு அழகுபடுத்த முடியும் என அவனுக்கு நன்றாகத் தெரியும்,
கடையில் உள்ள பொத்தான்களிலே தங்க நிறம் கொண்ட பொத்தானை எடுத்து சட்டைக்குத் தைத்தான்,
காலரும் கூடப் பட்டையான காலராகவே வைத்துத் தைத்தான், பூவேலை பாடுடன் இரண்டு பைகள்
வைத்தான், இத்தனையும் முடிந்து புதுச்சட்டையை முகர்ந்து பார்த்த போது, புதுத் துணியின்
வாசனை இனம்புரியாத வருத்தத்தை உருவாக்கியது.
கண்ணாடி முன்பாக அந்தச் சட்டையை வைத்து அழகு பார்த்துக் கொண்டபடியே தம்பி சட்டை ரொம்ப
ஜோரா இருக்குடா. இதைப் போட்டுகிட்டா நீ இன்னும் அழகா இருப்பே எனச் சொல்லிக் கொண்டான்
அப்போது தான் அந்த அபத்தம் புரிய துவங்கியது.
ச்சே, என்ன இது, என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்
இது என்ன பைத்தியக்காரன விளையாட்டு,. இதில் என்ன ஆனந்தமிருக்கிறது. எனச் சட்டையைத்
தூக்கி மூலையில் எறிந்தான்
அதன பிறகான நாட்களில் அந்தச் சட்டையை யாராவது ஒரு சிறுவனுக்குத் தந்துவிட வேண்டும்
என்று மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது, ஒரு மாலையில் புதுச்சட்டையை ஒரு காகிததில்
சுற்றிக் கொண்டு வீதியில் இறங்கி நடந்தான், ஒரு சிறுவன் கூட அவன் கண்ணில் படவேயில்லை,
வடக்குரத வீதியை ஒட்டிய பிளாட்பாரத்தினைக் கடந்த போது யாரோ உரத்த குரலில் அழுது
கொண்டிருப்பது கேட்டது, சுற்றிலும் கூட்டமாக இருந்தது, கூட்டத்தை விலக்கி எட்டி பார்த்த
போது பிளாட்பாரத்தில் வசிக்கும் குடும்பத்தில் ஒரு சிறுவன் இறந்து போயிருந்தான், அவனது
உடல் கிடத்தப்பட்டிருந்த்து, சுற்றிலும் ஆணும் பெண்ணுமாக அழுது கொண்டிருந்தார்கள்.
தன் கையில் வைத்திருந்த புதுசட்டையை இறந்து போன பையன் உடல் அருகே போட்டுவிட்டு
பதற்றத்துடன் தனது கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்
வாழுகிற மனிதர்கள் மீதான கோபத்தை இப்படித் தான் தீர்க்கமுடியும் எனத்தோன்றியது, அன்றிரவு
கடையைத் தாமதமாக மூடிவிட்டு வெளியே கிளம்பும் போது இறந்து போன சிறுவன் புதுச்சட்டை
அணிந்தபடியே கடை முன்பாக நின்று கொண்டிருப்பது போலத் தோன்றியது,
ஒரு நிமிஷம் பொறி கலங்கிப் போய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான், என்ன காட்சியிது.
மனம் தடுமாறுகிறதோ எனப் புரியாமல் வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தான்
சரியாக அந்தப் பிளாட்பாரத்தைத் தாண்டும் போது தான் அவன் முன்னால் சின்னஞ்சிறிய
மெழுகுவர்த்தி ஒன்று தோன்ற துவங்கியது, ஆமாம், அந்த இடத்தில் தான் எரியும்
மெழுகுவர்த்தியை முதன்முறையாகக் கண்டான், சிறிய மெழுகுவர்த்தி, ஆனால் ப்ரகாசமான ஒளி.
அந்த வெளிச்சம் அவனது முன்னால் போகத் துவங்கியது, , எதற்காக ஒரு வெளிச்சம் தனக்கு
வழிகாட்டுகிறது எனப்புரியவில்லை, அவனுக்குப் பயமாக இருந்த்து, வேகமாக நடந்தான்,
வெளிச்சம் கூடவே வந்து கொண்டிருந்த்து,
ஒரு இடத்தில் நின்று அந்தச் சுடரை ஏறிட்டுப் பார்த்தான், ஒற்றை விழியைப் போல அந்தச் சுடர்
மினுங்கிக் கொண்டிருந்தது தனது மீளமுடியாத துக்கம் தான் இப்படி ஒரு சுடராக ஒளிர்கிறதோ
என நினைத்தான். அந்தச் சுடரை பார்க்கும் போது இந்த உலகில் தான் தனியாக இல்லை என்று
தோன்றியது, தனக்கென ஒரு வெளிச்சம் துணையிருக்கிறது, அது தன்னை அழைத்துப் போகிறது,
இதை விட வேறு என்ன வேண்டும் என்றும் தோன்றியது
இப்படி யோசிக்க யோசிக்க மனம் கவலையற்றுப் போய்ப் புதியதொரு நம்பிக்கை கொள்ளத் துவங்கியது.
நீண்ட நாட்களின் பிறகு சந்தோஷமாக வீட்டினை நோக்கி நடந்தான், மனைவி பிள்ளைகளிடம் தனக்கு
ஒரு மெழுகுவர்த்தி வழிகாட்டுகிறது என வியப்போடு சொன்னான் பிள்ளைகள் அதைக் கேட்பதில்
ஆர்வம் காட்டவில்லை,
மனைவி மட்டும் சொன்னாள்
“இப்படி நடக்கும் என எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன்“
அவள் சொன்னதன் பொருள் அவனுக்குப் புரியவில்லை
நிஜமாகவே ஒரு மெழுகுவர்த்தி நான் நடந்து வரும் பாதையில் வழிகாட்டுகிறது என்றான்
`அதனால் என்ன` என்று அவள் கோபத்துடன் கேட்டாள்
சரிதானே, அதனால் என்ன, இந்த வெளிச்சத்தால் தனக்கு என்ன பயன். இதை ஏன் பெரிதாக
நினைத்துக் கொண்டேன் என அவன் மௌனமாகினான்,
அவன் மனைவி கடுகடுத்த குரலில் சொன்னாள்
“கடை நடத்தி சம்பாதித்தது எல்லாம் போதும், கடன்காரர்கள் நெருக்குகிறார்கள்
திருப்பூருக்குப் போய்ப் பிழைக்கப் பாருங்கள். இல்லை நானும் பிள்ளைகளும் ஊருக்கு கிளம்புறோம்“
அது ஒன்று தான் கடைசிவழி, நாளைக்குக் கடையை மூடிவிட்டு திருப்பூர் போய்விட வேண்டியது
தான் என முடிவு செய்து கொண்டான், ஆனால் மறுநாள் அவன் கடையை மூடவில்லை, காத்திரு,
ஏதாவது நல்லது நடந்துவிடும் என அவன் மனது சொல்லிக் கொண்டேயிருந்தது. இப்படியே சில
நாட்களைக் கடந்து போனான்,
பின்னொரு இரவு வீடு திரும்பும் போது தன் முன்னே ஒளிரும் சுடரை பார்த்துச் சொன்னான்
தோற்றுப்போனவனுக்கு இருளே ஆறுதல், இந்த ஒளி எனக்குக் கூச்சத்தைத் தருகிறது,
அவமானப்படுத்துகிறது, தூயவெளிச்சம் வழிகாட்டுவதற்கு அருகதையற்றவன் நான், எனக்கு
வழிகாட்டுதல் தேவையில்லை, விலகிப்போய்விடு,
வெண்ணிற வெளிச்சம் அவன் முன்னால் மெதுவாக ஊர்ந்து போய்க் கொண்டேயிருந்தது,
தனது கவலைகள் வருத்தங்கள் எதுவும் நீங்கப்போவதில்லை, பின் எதற்கு ஒரு மாயம் தன்னைத்
தொடர்கிறது. உலகம் இப்படிப் பட்டது தானா, பசித்தவனுக்கு உணவு தருவதை விடுத்து
சிறகுகளை அளித்துப் பறக்க வைக்க முயற்சிப்பது தான் அதன் இயல்பா.
அதன்பிறகான நாட்களில் அவன் சவஊர்வலத்தில் செல்லுகிற ஆளைப் போல மெதுவாக வீடு திரும்பத்
துவங்கினான், அவன் முன்னே ப்ரகாசமாக மெழுகுவர்த்தி ஒளிர்ந்தபடியே நகர்ந்து போய்க்
கொண்டிருந்த்து, சாலையோரங்களில் விழித்தபடியே கிடக்கும் பிச்சைக்காரர்களும்,
இரவுக்காவலாளியும் இந்த அதிசயத்தைக் கண்டுவியந்தார்கள், சில சமயங்களில் அவன் கடந்து
போகும் போது கைகூப்பி வணங்கவும் செய்தார்கள்
சின்னஞ்சிறு வெளிச்சம், இதில் என்ன அதிசயமிருக்கிறது, வானில் கோடான கோடி நட்சத்திரங்கள்
ஒளிர்க்கின்றன, அதை எவரது கைகள் ஏந்தியிருக்கின்றன, ஆனால் அதைக் கண்டு இவர்கள் யாரும்
அதிசயம் கொள்வதில்லையே, பின் ஏந்த சிறிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தினைக் கண்டு
வியக்கிறார்கள் என அவன் நினைத்துக் கொள்வான்
ஒரு நாளிரவு பாலத்தைக் கடந்து போகும் போது அதன் அடியில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு
கிழட்டுப் பிச்சைக்காரனும் அவனது மனைவியும் குறுக்கிட்டு அவனது காலில் விழுந்து
வணங்கினார்கள்
பிச்சைக்காரனின் மனைவி வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்
“சாமி, நீங்க தான் எங்க கஷ்டத்தைப் போக்கி நல்ல வழிகாட்டணும்“
அவன் எரிச்சலான குரலில் சொன்னான்
“நான் ஒண்ணும் சாமியில்லை. நானும் ஒரு சாமானிய மனுஷன் அதுவும் ஒரு டெய்லர், உங்களைப்
போலவே நானும் கஷ்டப்படுகிறேன். இந்த வெளிச்சம் வெறும் ஏமாற்று. இதனால் ஒரு பிரயோசனமும்
இல்லை“
“அப்படிச் சொல்லாதீங்க சாமி. கடவுளோட கை தான் அந்த மெழுகுவர்த்தியை பிடிச்சிகிட்டு
நிக்குது. கடவுளோட அன்பு தான் உங்களுக்கு வழிகாட்டுது. நீங்க கொடுத்து வச்சவரு“ என்றான்
பிச்சைக்காரன்
தையற்காரனுக்கு ஆத்திரமாக வந்தது. அவன சப்தமாகச் சொன்னான்
“வழிகாட்டுற கடவுள் என் வாழ்க்கையை மாற்ற வேண்டியது தானே, எதற்காக இப்படிக் கிடந்து
கஷ்டப்படுறேன்“
“மனுசனோட வாழ்க்கையை எப்போ எப்படி மாற்றணும்னு கடவுளுக்குத் தெரியும், வெளிச்சத்தை ஏன்
சாமி கோவித்துக் கொள்கிறீர்கள், இந்த வெண்ணிற வெளிச்சத்தைப் பார்க்கும் போது மனசு எவ்வளவு
சந்தோஷப்படுது தெரியுங்களா, இதற்காகவே நீங்க பாலத்தைக் கடந்து போற வரைக்கும் நாங்க கண்ணு
முழிச்சிகிட்டு இருப்போம்“ என்றாள் பிச்சைக்காரனின் மனைவி
“அப்படியனால் இந்த வெளிச்சத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்“ எனத் தன்முன்னே உள்ள
மெழுகுவர்த்தியை பிடுங்கி எறிய முயன்றான், ஆனால் அவனால் அதைத் தொடக்கூட முடியவில்லை.
ஆத்திரத்தில் அவன் வேகமாக ஒட துவங்கினான், அப்போதும் வெளிச்சம் முன்னால் சென்று
கொண்டுதானிருந்தது
ஏமாற்றத்தின் இறுதி நிலை எப்போதுமே வன்முறை தானே, அப்படியான ஒரு தருணத்திற்காக அந்த
மனிதனும் ஏங்க துவங்கினான். சலிப்பின் உச்சத்தில் சம்பந்தமேயில்லாமல் யாருடனாவது சண்டையிட
வேண்டும் என விரும்பினான், முன்பு சில தருணங்களில் வாடிக்கையாளர்களிடம் சண்டையிட்டுக்
கத்தியிருக்கிறான், அது போலின்றி இப்போது முன்பின் தெரியாத ஒரு மனிதனை கண்டபடி திட்ட
வேண்டும் போலிருந்தது,
கோபமாகச் சண்டையிடும் போது தனது குரல் உயர்ந்துவிடுகிறது, அப்போது உடலும் உயரமாவது
போலவே உணர்ந்தான், தான் உயிர்ப்புடன் இருப்பதைச் சண்டையே நிருபணம் செய்கிறது, அத்தோடு
சண்டை மனதில் உள்ள ஆற்றாமையைப் போக்கிவிடும். ஆனால் யாருடன் சண்டையிடுவது, அதற்கான
தருணம் கூடிவர வேண்டும் தானே.
வீட்டில் உள்ளவர்களிடம் சண்டையிடும் போது உடல் குறுகிப்போய்விடுகிறது, வெளியில், யாரோ
ஒரு மனிதனிடம் காரணம் இல்லாமலே சண்டையிட வேண்டும் என்ற வேட்கை அவனுக்குள் தீவிரமாக
எழுந்திருந்த்து
ஒருநாள். அவன் கடையை மூடிவிட்டு நடக்கத் துவங்கிய போது ஒரு திருடன் பின்னாடியே
நடந்து வர துவங்கினான்,
அந்தத் திருடன் வயதானவன், எழுபது வயதிற்கும் மேலிருக்கும், அவன் சில வாரங்களாகவே
நோயுற்றிருந்தான், படுக்கையில் கிடந்த போது அவனது நம்பிக்கைகள் முற்றிலும் வடிந்து
போயிருந்தன, திருடனுக்கு எதற்கு உறவுகள் என்று அவன் தனியாகவே வாழ்ந்து வந்தான், இத்தனை
நாட்களாக மனிதர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவில்லையே என வேதனைப்பட்டான், குறைந்த
பட்சம் ஒரு பெண்ணோடு மட்டுமாவது தான் அன்பாக நடந்து கொண்டிருந்திருக்கலாம் என்று கூடத்
தோன்றியது,
நோயுற்ற நாளில் அவனுக்குப் பசி மிகவும் அதிகமானது, பிடித்தமான கோழி இறைச்சி மற்றும்
விதவிதமான மீனை சாப்பிட ஆசைப்பட்டான், ஆனால் அதற்கு அவனிடம் பணமில்லை, உடலில்
வலுவுமில்லை. பகல் முழுவதும் காய்ச்சல் அடித்த்து, இரவில் காய்ச்சல் வடிந்து உடல்
குளிர்ந்தது பாதி உறக்கமும் விழிப்புமாக அவன் கிடந்தான், இரண்டு நாட்கள் முன்பு தான்
காய்ச்சல் நீங்கியிருந்த்து, நீண்டநாட்களுக்குப் பிறகு அன்றிரவு தான் அவன் கத்தியை எடுத்து
சொருகிக் கொண்டு வழிப்பறிச் செய்வதற்குக் கிளம்பியிருந்தான்
அந்த டெய்லரை பற்றியோ அவனது கஷ்டங்களைப் பற்றியோ திருடனுக்கு எதுவும் தெரியாது, அவன்
பாலத்தின் ஒரமாகக் காத்திருக்கும் போது யாரோ ஒரு ஆள் கையில் டார்ச் வெளிச்சத்தை
ஏந்தியபடியே நடந்து வருவது போலதான் தெரிந்தது,
நெருங்கி வரும்போது தான் அது டார்ச் வெளிச்சமில்லை, மெழுகுவர்த்தியின் சுடர் எனத்
தெரிந்தது, இதை ஏன் கையில் பிடித்து வருகிறான் என்ற குழப்பத்துடன் , தாவி வெளிச்சத்தை
அணைத்துவிட்டால் போதும் எளிதாக அந்த மனிதனை தாக்கிவிடலாம் எனக் காத்திருந்தான்
தையற்காரன் மெதுவாக நடந்து வந்தான், எதிர்பாராத நேரத்தில் திருடன் பாய்ந்து வெளிச்சத்தை
ஊதி அணைக்க முயன்று தோற்றுப்போய்த் தடுமாறி தையற்காரன் மீது விழுந்தான்,
தான் காத்துக் கொண்டிருந்த தருணம் சாத்தியமாகிவிட்டதைப் போல உணர்ந்த தையற்காரன் தன்மீது
மோதி விழுந்தவனைக் கண்டபடி திட்டத் துவங்கினான்
கிழே விழுந்து கிடந்த திருடன் அந்தரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சம் மிதந்து
கொண்டிருப்பதை அதிசயத்துடன் பார்த்தபடி தையற்காரன் திட்டுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்,
பிறகு எழுந்து நின்று வியப்போடு கேட்டான்
“இந்த மெழுகுவர்த்தி யாரும் ஏந்திப்பிடிக்காமல் எப்படி மிதந்து கொண்டிருக்கிறது, நீ யார்
யோகியா, மாயமந்திரம் தெரிந்தவனா, இது என்ன சித்துவேலையா“
“கிழட்டுநாயே உனக்கென்ன வேண்டும்“ என்று கடுகடுத்த குரலில் கேட்டான் தையற்காரன்
“நான் திருடன், உன்னிடம் இருப்பதை எடுத்துக் கொடுத்துவிடு“ எனக் கத்தியை நீட்டினான் திருடன்
“நான் வெறும் ஆள் என்னிடம் எதுவுமில்லை“ என்றான் தையற்காரன்
“பொய், நீ ஒரு மாயக்காரன், இல்லாவிட்டால் இப்படி ஒரு வெளிச்சம் உன் முன்னால் வருமா.
உனக்குத் தெரிந்த மாயத்தைக் கொண்டு எதையாவது செய்“ என மிரட்டினான் திருடன்
“முட்டாள், நானே வேலையில்லாமல் கிடக்கிறேன், என்னிடம் மாயமும் இல்லை மண்ணுமில்லை“
“என்னை ஏமாற்றப்பார்க்காதே, உன் ஏளனப்பேச்சு என்னை ஆத்திரமூட்டுகிறது“ எனக் கத்தினான் திருடன்
“உனக்கு வேண்டும் என்றால் இந்த வெளிச்சத்தைத் திருடிக் கொண்டு போ“, என்றான் தையற்காரன்
“வெளிச்சத்தை யாரும் திருட முடியாது“ என்றான் திருடன்
“இருட்டையும் தான் “என்றான் தையற்காரன்
“வாயை மூடு “எனக்கத்தினான் திருடன்.
“நீயும் என்னைப் போலவே ஒன்றுக்கும் இயலாதவன் தான்“ என்றான் தையற்காரன்
தனது இயலாமையைத் தையற்காரன் சீண்டுவதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனைப் போலத் திருடன்
தனது கைகளை விரித்துத் தாவி அந்த மெழுகுவர்த்தியை பிடிக்க முயன்றான், ஆனால்
கைவசமாகவில்லை, சுடர் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது. எக்கிநின்று ஆவேசத்துடன்
கைகளை வீசியும் தோற்றுப் போனான்,
தையற்காரன் அதைக் கண்டு சப்தமாகச் சிரித்தான்
அந்தச் சிரிப்புத் தன்னைக் கைவிட்ட உலகிற்கு எதிரான சிரிப்பை போல ஒங்கி ஒலித்தது
திருடனால் அந்தச் சிரிப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் உருவிய கத்தியை அப்படியே
தையற்காரனின் நெஞ்சினை நோக்கி வேகமாகச் செலுத்தினான்
மறுநிமிசம் தையற்காரன் ரத்தம் கொப்பளிக்கத் தரையில் விழுந்து இறந்தான்,
அப்போதும் அந்த மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது
திருடன் ஆவேசத்துடன் மெழுகுவர்த்தியை நோக்கி தனது கைகளை வீசினான், மறுநிமிசம் எங்கும்
இருளானது, அந்த வெளிச்சம் இருந்த அடையாளமேயில்லை, பசியோடு திருடன் இருப்பிடம்
திரும்பினான்
மறுநாள் காலை தையற்காரனை கொன்ற திருடன் கண்விழித்தபோது அவனது கைகள் சூடாக இருந்தது,
எதனால் எனப்புரியாமல் அவன் தனது வலது கையை விரித்தபோது அதனுள் மெழுகுவர்த்தியின்
சுடர் ஒளிந்து கொண்டிருந்தது, உற்றுப் பார்த்தான், அதே சுடர் தான் ஆனால் அதன் சூடு
தாங்கமுடியவில்லை, வேகமாகக் கையை உதறினான்,
உள்ளங்கையினுள் சுடர் எரிந்து கொண்டிருந்த்து, பயத்துடன் ஒடிப்போய்க் கையைத் தண்ணீரில் வைத்து
குளிர செய்தான்,
நீரினுள்ளும் அந்தச் சுடர் அதே வெம்மையோடு அசைந்தபடியே தானிருந்தது. எப்படி இந்தச் சுடர்
அவன் உள்ளங்கையினுள் வந்தது என அவனுக்குப் புரியவேயில்லை,
தையற்காரனைப் போலவே அவனும் தனக்குத் தானே பேசிக் கொள்ளத்துவங்கியிருந்தான்
•••

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 7:51:10 AM7/12/15
to brail...@googlegroups.com
உனக்கு 34 வயதாகிறது
art
- சிறுகதை
“உனக்கு 34 வயசாச்சி, நினைவிருக்கில்லே“ என்று அப்பா அவளிடம் கேட்டபோது சுகந்தி
அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
சற்று ஆத்திரத்துடன் தலையைத் திருப்பி அப்பாவை பார்த்து முறைத்தபடியே அதுக்கு என்ன என்று
கேட்டாள். அப்பா பேப்பர் படிப்பது போலத் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். அது ஒரு
தந்திரம், சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயல்.
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்பதால் அப்பாவோடு சண்டை போட அவளுக்கு விருப்பமில்லை,
ஒய்வு நாளாக இருந்தால் நிச்சயம் இது சண்டையில் தான் போய் முடிந்திருக்கும். அப்பா
எப்போதுமே அவள் அலுவலகம் கிளம்புகிற நேரம் பார்த்து தான் பேச்சை ஆரம்பிப்பார்.
தன்னைக் குத்திக்காட்டுவதற்குத் தான் அப்படிச் சொல்கிறார் என ஆரம்ப நாட்களில் தோன்றியது.
ஆனால் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போய், லைட் லேம்ப் எரிந்து கொண்டிருக்கிறது, கேஸ்
அணைக்கபடவில்லை என்பது போல நினைவூட்டும் குரலாக அது மாறிவிட்டிருக்கிறது.
அவள் தனக்குள் முப்பத்திநான்கு வயதானதை உணரவேயில்லை. பள்ளி வயது வரை தான் வளர்ச்சியை
அவளால் துல்லியமாக உணர முடிந்த்து, கல்லூரி நுழையும் போது சட்டெனத் தான் நிறைய வயது
கடந்துவந்துவிட்டதைப் போல உணர்ந்தாள். நான்கு ஆண்டுகள் இன்ஜினியரிங் படித்து முடிக்கும்
வரை அவளுக்கு வயது தெரியவேயில்லை, வருஷம் தான் ஒடியிருந்த்து,
வேலைக்குப் பெங்களுர் போய் அங்கிருந்து மும்பை மாறி பின்பு அங்கிருந்து ஒன்றரை வருஷம்
அமெரிக்கா சென்ற போது தான் வயது கூடியிருப்பதை அவளால் உணரமுடிந்த்து,
அப்போதும் கண்ணாடி வயதை காட்டிக் கொடுக்கவில்லை, திடீரென அப்படியொரு உணர்ச்சி அவளுக்குள்
உருவானது, இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால் ஒருநாள் சாப்பிடப் போகிற நேரத்தில் தான்
அது அவளுக்குள் எழுந்தது.
மணி இரண்டை கடந்த போது திடீரென உடனே கேண்டியனுக்கு ஒடிப்போய்ச் சாப்பிட வேண்டும் போலப்
பதற்றமாகியது,. வேலையை முடித்துவிட்டு எழுந்து கொள்வோம் என நினைத்தால் முடியவில்லை
சே, எதற்கு இவ்வளவு அவசரம், பசித்தால் பசித்துவிட்டுப் போகட்டுமே என விட்டுவிடலாம்
தானே என்றால் உடல் கேட்க மறுத்துக் கைகள் நடுங்க துவங்கின. அப்போது தான் தனக்கு 32 வயது
என்பதைச் சுகந்தி உணர்ந்தாள்
பசி வந்தவுடன் திடீரென வயதாகி விட்ட உணர்வு வருவது அவளுக்கு மட்டும் தானா, இல்லை
பலரும் அதை அனுபவித்திருப்பார்களா
சுகந்தி யாருடனும் இதைப்பற்றிப் பேசிக் கொள்ளவில்லை.தனியாகப் போய்ச் சாப்பிட்டாள்,
தனியாகச் சாப்பிடப்போவது தான் வயதாவதன் முதல் அறிகுறியா
அவளுக்கு அப்படித்தான் தோன்றியது. கேண்டியனில் நிறையக் கூட்டம், எது உடனே கிடைக்குமோ
அதுவே போதும் எனத் தோன்றியது, தயிர்வடை வாங்கிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள். எப்படி
அதைச் சாப்பிட்டாள் என அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் சாப்பிட்டு முடிந்திருந்தாள்.
படியேறி அலுவலகத்தினுள் போய்த் தனது நாற்காலியில் உட்கார்ந்த போது அலுப்பாக இருந்தது.
திடீரெனத் தனது கால்கள் மறத்துப்போய் உடல் ஒரு கற்பாறையாக மாறிவிட்டது போலத் தோன்றியது.
கைகால்களை உதறிக் கொண்டாள். சுற்றிலும் திரும்பி பார்த்த போது எல்லாமும் பழசாகத்
தோன்றியது, எதிரே உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்த கேசவ் உட்பட அத்தனை பேருக்கும்
வயதாகியிருப்பது துல்லியமாகத் தெரிந்த்து.
பலரும் வயதை மறைக்கப் பார்க்கிறார்கள். சிலர் வயதை ஒரு ஆயுதம் போலக் கையாளுகிறார்கள்.
சிலர் வயதை காட்டி யாசிக்கிறார்கள். அன்று வீடு திரும்பிய போது தனக்கு அறுபது எழுபது
வயது ஆகிவிட்டது போலச் சுகந்திக்கு தோன்றியது.
அவள் படுக்கையில் விழுந்து அழுதாள், எதற்காக அழுகிறோம் எனத் தோன்றவேயில்லை, ஆனால்
நிறைய நேரம் அழுதாள். பின்பு எழுந்து முகம் கழுவி கொண்டு வெளியே போய்ச் சாப்பிட்டு
வரலாம் என ஆட்டோ எடுத்துப் பெசன்ட் நகர் வரை கிளம்பினாள்.
ஆட்டோவில் போகும் போது சாலையில் கடந்து செல்லும் ஒவ்வொருவர் வயதையும் மனதிற்குள்ளாகவே
எண்ணிக் கொண்டு வந்தாள். உணவக வாசல் வரை போன பிறகு திடீரெனச் சாப்பிட வேண்டாம் என்று
தோன்றியது.கடற்கரைக்கு நடந்து போய் உட்கார்ந்து யோசித்தாள், திடீரென ஊருக்குப் போய்
ஒருவாரம் இருந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது.
முன்பெல்லாம் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ஊருக்குப் போய் வருவாள்.அண்ணன் வீட்டில் தான் ஒய்வு
பெற்ற அப்பா இருந்தார். வீட்டிற்குப் போய் இறங்கியதும் அண்ணன் அறிவுரை சொல்ல ஆரம்பிப்பான்,
அவனுக்குத் தான் இன்னமும் ஒரு பள்ளிமாணவி என்ற எண்ணம்.
அப்பா அதிகம் அறிவுரை சொல்ல மாட்டார்.ஆனால் தான் ஏதோ தவறு செய்துவிட்டவரைப் போலவே
அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். பேச்சை விடவும் மௌனம் மோசமானது.
அண்ணி சாப்பாடு போடும் போது அவளிடம் வேண்டும் என்றே குத்தலாகச் சொல்வாள். சிலவேளைகளில்
சுகந்தியும் பதிலுக்குச் சூடு போட்டது போல ஏதாவது சொல்லிவிடுவதுண்டு,
ஒருமுறை அவள் சொன்ன பதிலை கேட்டு அண்ணி சப்தமாக அழுது கொண்டே சமையல் அறைக்குள்
ஒடினாள்.அவளுக்குத் தன்னை விட இரண்டுவயது குறைவாகத் தான் இருக்கும். திருமணமாகி
குழந்தைகள் பெற்றுவிட்டால் அது பெரிய தகுதியா என்ன.
சுகந்தி அதன்பிறகு அண்ணன் வீட்டிற்குப் போகவேயில்லை. அவளது தம்பி லண்டனில் வசிக்கிறான்,
அவனுக்கும் திருமணமாகிவிட்டது. அவன் மனைவியின் உறவினர்கள் திருவான்மியூரில்
இருந்தார்கள். ஆகவே அவனும் அங்கேயே ஒரு புதுவீடு வாங்கிக் கொண்டிருந்தான், ஒருமுறை
கூடச் சுகந்தியை அந்த வீட்டிற்கு அழைக்கவேயில்லை. எப்போதாவது அவனாகப் போனில் நலம்
விசாரிப்பதுடன் உறவு முடிந்துவிடுவதாக இருந்தது
வயது வளர வளர உறவுகள் விலகிக் கொண்டேதான் போகுமா.
ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போக எத்தனிக்கும் போது தான், தனது வயது பற்றி உணர்வது
அதிகமாகிறது எனச் சுகந்தி நன்றாக அறிந்திருந்தாள்.
ஊருக்கு ஊர் வயது என்பதன் வரையறை வேறுபடுகிறது. பெருநகரங்களில் நாற்பது வயது வரை
இளைஞர்கள் தான், ஆனால் கிராமங்களிலே நாற்பது வயது என்பது முதுமையின் நுழைவாயில்.
பெருசு என அழைக்க ஆரம்பித்து விடுவார்கள்
ஆண்களின் நாற்பது வயதும் பெண்களின் நாற்பது வயதும் ஒன்று போலக் கருதப்படுவதில்லை,
ஆண்களுக்கு நாற்பது வயதாகும் போது தான் ஆசைகளும் சுகம் தேடுதலும் அதிகமாகின்றன.
பெண்களுக்கு நாற்பது வயதில் ஆசைகள் வடிந்து போகத் துவங்கி தனித்து இயங்குவதிலும், துணை
தேவையில்லாமல் பயணம் செய்வது, சுதந்திரமாகச் செயல்படுவது என ஆர்வம் உருவாக ஆரம்பிக்கிறது.
வயது என்பது பாம்பு ஊர்ந்து போவது போலச் சப்தம் இல்லாமல் கடந்து போகிறது. ஐந்து வயதில்
பீரோவில் இருந்த கண்ணாடி அவளுக்கு எட்டாது, எக்கி நின்று பார்க்கும்போது தனக்கு ஒரே
நாளில் வயது வளர்ந்துவிடாதா என ஏங்கியிருக்கிறாள். ஆனால் வயது எவர் ஆசைக்கும்
செவிசாய்ப்பதில்லை தானே.
பள்ளி வயதில் அந்தக் கண்ணாடி முன்பாக மணிக்கணக்கில் நின்றபடி தாவணியைத் திருத்திக் கொண்டு
புருவங்களை அழகுபடுத்திக் கொண்டு காதோரம் சுருள்முடியை சுருட்டிவிட்டபடியே
நின்றிருக்கிறாள். அந்த நாட்களில் வயது என்பது வாசனை தைலம் போலத் தேய்க்க தேய்க்க நறுமணம்
தருவதாகயிருந்தது.
எந்த ஆடையை அணிந்தாலும் அழகாக இருப்பது போலத் தோன்றியது. கண்ணாடியை பார்க்கும் போது
அவள் தனக்குத் தானே சிரித்துக் கொள்வாள், அந்தச் சிரிப்பு எதற்காக என அவளுக்கு மட்டுமே
தெரியும்,
ஆனால் கல்லூரி நாட்களில் வயதை பெரிதாகக் கண்டுகொள்ளவேயில்லை, கூடவே திரியும் நிழலை
போல அவள் பொருட்படுத்தாமல் வயது உடன் வளர்ந்து கொண்டிருந்தது
அவள் வயதை அவளை விடவும் அப்பா தான் அதிகம் எண்ணிக் கொண்டிருந்தார். அது அவளது அப்பா
மட்டுமில்லை, எல்லா அப்பாக்களும் பெண் பிறந்தவுடனே திருமணத்தைப் பற்றிக் கனவு காண
துவங்கிவிடுகிறார்கள், நல்ல கணவன் கிடைக்க வேண்டுமே என்ற பதைபதைப்பு அவர்களுக்குள்
சொட்டு சொட்டாக நிரம்பத்து. அம்மாவிற்குத் திருமணமில்லை பிரச்சனை, திருமணத்திற்குப்
பிறகு மகள் எப்படி வாழப்போகிறாள் என்பது தான் சிக்கல்.
அதைத் தான் சொல்லி சொல்லி காட்டுவாள். யாராவது ஒருவன் அவளைக் கட்டிக் கொள்ள நிச்சயம்
வந்து சேருவான் என்பது அம்மாவின் எண்ணம்.
அப்பா அப்படி நினைக்கவில்லை. தான் விரும்புகிற, சுகந்திக்கும் பிடித்த, வசதியான,
படித்த, ஒழுக்கமான மாப்பிள்ளை வேண்டும் என அவராக ஒரு பிம்பத்தை மனதிற்குள் உருவாக்கி
வைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அப்படி எல்லாம் ஒருவன் கிடைக்க மாட்டான் என்ற உண்மையை அவர் அறிந்திருந்தாலும்
நம்பிக்கையை அவரால் விட முடியவில்லை
கல்யாணத்தைப் பற்றிக் கல்லூரியின் முதல் ஆண்டில் சுகந்தி நிறையக் கனவு கண்டாள். கல்யாணம்
செய்து கொண்டுவிட்டு படிக்கலாமே என்று கூடத் தோன்றியது. ஆனால் இறுதி ஆண்டுப் படிக்கும்
போது கல்யாணம் பற்றிய கனவுகள் மறைந்து போயிருந்தன.
வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு எதற்குக் கல்யாணம் என நினைக்க ஆரம்பித்தாள். அமெரிக்கா
போய்வந்தபிறகு தனியாக வாழ்வது என முடிவே செய்து கொண்டாள்.
அப்பா அதைப் புரிந்து கொள்ளவேயில்லை. சில வேளைகளில் அவளுடன் சண்டையிட்டார், சில
வேளைகளில் அழுதிருக்கிறார், அவள் அப்பாவின் அழுகையைப் பொருட்படுத்தியதேயில்லை,
ஆண்களுக்கு அழுகையும் ஒரு தந்திரம்.
அப்பா அவளுடன் மாத கணக்கில் பேசாமல் இருந்திருக்கிறார், அதனால் ஒரு நஷ்டமும் தனக்கில்லை
என்பது போல வைரக்கியமாக இருந்தாள். பின்பு ஒருநாள் அவராக அலுவலகம் தேடி வந்து இனி
தான் அவளிடம் திருமணம் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொன்னார்.
எதற்காக எனச் சுகந்தி கேட்டுக் கொள்ளவில்லை.
அப்பாவை அழைத்துக் கொண்டு போய் அடையாரில் கண்பரிசோதனை செய்து புதுக்கண்ணாடி வாங்கித் தந்தாள்.
அன்றிரவு சாப்பிடும் போது புதுக்கண்ணாடி அணிந்தபடியே அப்பா சொன்னார்
“தலையில நிறைய நரைமுடி வந்துருச்சி, அதுக்கு மை அடிச்சிக்கோ“
“எதுக்கு“
“இல்லேண்ணா நரை தெரியுது“
“தெரியட்டும், அதனாலே ஒண்ணுமில்லை“
“உன் நல்லதுக்குத் தான்மா சொல்றேன்“
“என் நல்லது எனக்குத் தெரியும்பா“
“அப்பா எது சொன்னாலும் நீ கேட்க மாட்டயா“
“கேட்கிற மாதிரி நீங்க எப்போ சொல்லியிருக்கீங்க“
“உன்னை படிக்க வச்சது தான் நான் செஞ்ச ஒரே தப்பு“
“உங்களை நான் மதிக்கிறதுக்கு அது ஒண்ணு தான்பா காரணம்“
“இப்பவே உனக்கு 33 வயதாகிருச்சி“
“அதுக்கு என்ன“
“உனக்குனு ஒரு வாழ்க்கை வேணாமா“
“வாழ்க்கைன்னா“
“கல்யாணம்மா“
“உங்களைக் கல்யாணம் பண்ணிகிட்டதாலே அம்மா ஒண்ணும் நிறைவா வாழ்ந்திறலையே“
“அவ தான் அல்ப ஆயுசில போயிட்டாளே“
“இது தான்பா என் வாழ்க்கை, இது போதும், நான் இப்படியே தான் இருப்பேன்“
“இப்படி இருந்திட முடியாதும்மா“
“ஏன்“
“நான் எத்தனையோ பேரை பாத்துருக்கேன். கெட்டு சீரழிஞ்சி போயிருக்காங்க“
“அப்படி நானும கெட்டு சீரழிஞ்சி போகணும்னு ஆசைப்படுறீங்களா“
“அதுக்கில்லைம்மா, வயசு போனா வராது“
“அதை பற்றிக் கவலையில்லை“
“ஐம்பது வயசுல உன்னை யாரு கட்டிகிடுவா சொல்லு“
“எதுக்குக் கல்யாணம் பண்ணனும், போதும் லைப்னு செத்து போயிடுவேன்“
“இதெல்லாம் விதாண்டவாதம்“
“கல்யாணம் புருஷன் பிள்ளைகுட்டிக, இதைத் தவிரப் பேசுறதுக்கு வேற விஷயமே கிடையாதா
விடுங்கப்பா“,
“இனிமேல் இதைபற்றிப் பேசினா என்னைச் செருப்பாலே அடி“
என அப்பா பாத்ரூமிற்குள் போய்க் கதவை மூடிக் கொண்டார், மணிக்கணக்கான கழிப்பறையில்
உட்கார்ந்து இருப்பதால் அவரது கோபம் புரிந்து கொள்ளப்படும் என நினைப்பது முட்டாள்தனம்.
நேரடியாக அவளிடம் அறிவுரை சொல்லி கேட்காமல் போய்விட்டால் உறவினர்கள் மூலமாகவும்
அலுவலக நண்பர்கள் மூலமாகவும் அப்பா இதைச் சொல்ல துவங்கினார்
சுகந்திக்கு கேட்டு கேட்டு அலுத்துப் போயிருந்தது. அப்பாவை தன்னோடு வந்து
இருக்கும்படியாக அவள் தான் அழைத்திருந்தாள். காரணம் தனியாக ஒரு அபார்ட்மெண்டில் வாழும்
போது ஏற்படும் சகிக்க முடியாத நெருக்கடிகள்
அதற்கு முன்புவரை அவள் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தான் தங்கியிருந்தாள், ஹாஸ்டலில் உள்ள
எவரோடும் அவளுக்கு நெருக்கம் உருவாகவில்லை.அது ஒரு சிறைக்கூடம் போலவே இருந்தது,
அத்தனை கட்டுபாடுகள், அதை விடவும் அறைத்தோழிகள் பொறாமையிலும் வெறுப்பிலும் படுமோசமாக
நடந்து கொண்டார்கள். மூன்று முறை அவளது சம்பள பணம் திருடு போனது
அவதூறுகள், வீண்வம்பு, திருட்டு என எல்லாமும் அந்த ஹாஸ்டலில் இயல்பாகயிருந்தது. அவள்
அறையில் இருந்த பெண்களில் ஒருத்தி சுகந்தி காது கேட்கவே எக்ஸ்பரி டேட் முடிஞ்ச கேஸ் எனச்
சொன்னாள். சுகந்தியால் அதைக் கேட்டுக் கொண்டிருக்கமுடியவில்லை.
அந்தப் பெண்ணை மிக மோசமான வசைகளால் திட்டினாள். அப்பெண் அழுதபடியே வார்டனிடம் போய்ப்
புகார் சொன்ன போது வார்டனும் சுகந்தியை முத்துன கேஸ் அப்படித் தான் இருக்கும் எனக் கேலி
செய்து அறையைக் காலி செய்து கொண்டு போகும்படியாகச் சொன்னாள்,.
அதன்பிறகு இதற்காக அவள் தனியே ஒரு அபார்ட்மெண்ட் எடுத்து வாழ ஆரம்பித்தாள். குடி வந்த
சில நாட்களில் தனித்து வாழும பெண் என்றால் யார் வேண்டுமானாலும் கதவை தட்டலாம் என
நினைத்துக் கொண்ட ஆண்களை அறிய துவங்கினாள். வயது வேறுபாடின்றி ஆண்கள் அவளிடம் மோசமாக
நடந்து கொண்டார்கள். அதன்பிறகு தான் அவள் ஊரிலிருந்த அப்பாவை உடன் வந்து தங்கும்படியாக
அழைத்தாள்
வந்து தங்கிய சில நாட்களுக்குப் பிறகு அப்பா கேட்டார்
“நீ யாரையாவது லவ் பண்ணுறயா“
அப்பா இப்படி என்றாவது கேட்பார் எனப் பலவருஷங்களாக அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆகவே
அதைக் கேட்டபோது முறைத்தபடியே இல்லை என்று சொன்னாள்
“யாரா இருந்தாலும் பரவாயில்லை, அவனைப் பேசி முடிச்சிவைக்குறேன்“
“ஏன் எனக்கே கல்யாணம் பண்ணிகிட தெரியாதா“
“அப்போ ஏன் வேண்டாம்கிறே“
“வேண்டாம்னு நான் சொல்லவேயில்லை“
“அப்போ பண்ணிகிட வேண்டியது தானே“
“பண்ணிகிடணும்னு தோணலை“
“அப்போ வேண்டாம்னு தானே அர்த்தம்“
“அது நீங்களா கற்பனை பண்ணிகிடுறது“
“கல்யாணம் பண்ணியிருந்தா இந்நேரம் உன் மகள் ஸ்கூலுக்குப் போயிருப்பா, அதைப் பாக்க எனக்குக்
கொடுத்து வைக்கலை“
“அதான் உன் மகன் ரெணடு பேரும் கல்யாணம் பண்ணி பேரன் பேத்தியை ஸ்கூலுக்கு அனுப்புறாங்களே
அதைக் கண்குளிர பார்த்தது போதாதா“
“ஒற்றைக் குரங்கா திரி, யாரு உன்னைக் கேட்குறது“ என ஆத்திரப்பட்டார் அப்பா
சுகந்தி அன்றைக்கு அழுதாள். அப்பா அதை எதிர்ப்பார்க்கவில்லை, அவளைச்
சமாதானப்படுத்தியபடியே ஆறுதல் சொல்வதைப் போலச் சொன்னார்
“வேணும்னா ஒரு சைக்கியாட்ரிக் டாக்டர் கிட்ட காட்டி கவுன்சிலிங் பண்ணிக்கிடுறியாம்மா“
“எதுக்குப்பா, எனக்குப் பைத்தியம் இருக்கா இல்லையான்னா“
“அதுக்கில்லே, மனசு சம்பந்தபட்ட விஷயமில்லையா அதான்“
“அதான் நீங்களே சொல்வீங்களே வயசு 34 ஆச்சுனு, முற்றின கேஸ், அதான் அழுதுகிட்டு இருக்கேன்“
அப்பா பதில் சொல்லவில்லை, நியூஸ் பேப்பரை பிரித்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார்,
அன்றிரவு அவர்கள் இருவரும் சாப்பிடவில்லை. காலையில் எழுந்த போது அப்பா வீட்டில் இல்லை,
ஒரு துண்டுசீட்டில் தான் ஊருக்குப் போவதாக எழுதி வைத்திருந்தார், அதைக் கிழித்துப்
போட்டுவிட்டு தனக்கு இந்த உலகில் யாருமில்லை என முடிவு செய்து கொண்டவளாகச் சுகந்தி
அலுவலகம் போய்வந்தாள்
ஒரு நாள் பேருந்தில் திரும்பி வரும் போது ஔவையாரின் நினைவு வந்தது, திடீரென ஔவையார்
ஒரேநாளில் கிழவியாக உருமாறிவிட்டார் என்கிறார். ஏன் ஔவை கிழவியாக மாறினாள், எட்டு
வயது சிறுமியாக மாறியிருக்கலாமே. கூடுதலாகச் சில வருஷங்கள் சந்தோஷமாக
இருந்திருக்கலாமே.
அதன் சிலவாரங்களுக்குப் பிறகு அவள் ஒருநாளிரவு அவள் திடீரென ஒரு விளையாட்டினை
கண்டுபிடித்தாள், அந்த வீட்டில் அவளுக்குப் பிடித்தமான ஒரு ஆண், இரண்டு குழந்தைகள்,
விருப்பமான ஒரு கிளி எல்லாமும் இருக்கின்றன எனக் கற்பனையாக நினைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.
வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு அவர்களுடன் தனியே பேச ஆரம்பித்தாள், தனது பிள்ளைகளுக்குக்
கதை சொன்னாள். வீட்டில் எப்போதும் அவளுக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் என நம்ப ஆரம்பித்தாள்,
ஆரம்பத்தில் அது ஒரு விளையாட்டு போலவே இருந்தது. பின்பு மெல்ல அது
ஒருவிளையாட்டில்லை, உண்மை என உணர துவங்கினாள்.
இதை நிரூபணம் செய்வது போலவே அவள் ஒரு டீசர்ட், ஜீன்ஸ், குழந்தைகளின் உடைகள் போன்றவற்றை
வீட்டுக் கொடியில் துவைத்துப் போட்டு காயவிட்டாள். அரூபமான மனிதர்கள் அவளை மிகவும்
ஆறுதல்படுத்துகிறவர்களாக இருந்தார்கள்.
இவ்வளவு தானே வாழ்க்கை, கற்பனை செய்து கொள்வது தான் வாழ்க்கையைச் சந்தோஷமாக்குகிறது.
நிஜம் சந்தோஷமானதில்லை.
அதன்பிறகு அவள் அலுவலகத்தில் இருந்து வேகமாக வீடு திரும்ப ஆரம்பித்தாள், அத்துடன் தனக்கு
வயது இனிமேல் வளரவே வளராது என்பது போல உணரத்துவங்கினாள்.
அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கூடத் தனது வீட்டில் உள்ள கற்பனை மனிதர்கள்
பற்றி நினைத்துக் கொண்டு சிரித்துக் கொள்வாள். பிறகு ஒரு நாள் அவள் திருமணமான பெண்கள்
அணிந்து கொள்வது போன்று மெட்டி அணிந்து கொண்டாள், அவளது மாற்றத்தை அலுவலகமே
விசித்திரமாகப் பார்த்தார்கள், ஆனால் யாரும் அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை
பின்பு ஒருநாள் அதிகாலை அவளது வீட்டு காலிங்பெல் அடிக்கும் சப்தம் கேட்டது, கதவை
திறந்து வெளியே வந்த போது அப்பா நின்றிருந்தார்
உள்ளே அழைத்தாள், அப்பா கொடியில் காய்ந்து கொண்டிருந்த உடைகளைப் பார்த்தபடியே யாரோடது
எனக்கேட்டார்
அவள் பதில் சொல்லவில்லை
அப்பா வந்து தங்கிய சிலநாட்களில் அந்த வீட்டில் அதுவரை அவளுக்குத் துணையாக இருந்தவர்கள்
வெளியூர் போய்விட்டார்கள் என நம்பத் துவங்கினாள். அந்த வெறுமை அவளுக்கு வேதனையூட்டியது,
அதை மறைத்துக் கொண்டு அலுவலகம் போய் வந்து கொண்டிருந்தாள்
ஒருநாள் அவள் காலில் அணிந்த மெட்டியை பார்த்துவிட்டு, இதை ஏன் போட்டு இருக்கே
எனக்கேட்டார் அப்பா
“பிடிச்சிருக்கு, போட்டுகிட்டேன் “என்றாள்
“எவனையாவது திருட்டுதனமா கட்டிகிட்டயா“ எனக்கேட்டார்
இல்லை எனத் தலையாட்டினாள்
“அப்போ உனக்குக் கிறுக்கு பிடிச்சிருக்கா“ என அப்பா மறுபடியும் திட்ட ஆரம்பித்தார்,
அவள் அதைக் கேட்டுக் கொள்ளாமல் அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தாள். அப்போது தான் அப்பா சொன்னார்
“உனக்கு 34 வயசாச்சி, நினைவிருக்கில்லே. நான் சொல்றதை நீ கேட்காமல் இருக்கலாம், ஆனா
வயசு ஆக ஆக உன் உடம்பு நீ சொல்றதை கேக்காது, அதையாவது புரிஞ்சிக்கோ“
சுகந்திக்குக் கோபம் கொப்பளித்தது. நேரமாகிறதே என ஆத்திரத்தை அடக்கி கொண்டு வெளியே
வந்தாள், லிப்டில் இறங்கும் போது தோன்றியது
வயது ஏறிக் கொண்டே முன்னால் போவதற்குப் பதில் இறங்கிக் கொண்டே பின்னாலும் போகலாம் தானே
உலகிற்கு எப்படியும் இருந்துவிட்டு போகட்டும், தனக்கு வயது பின்னால் போக ஆரம்பிக்கிறது
என நினைத்துக் கொள்ள வேண்டியது தான், இன்று அலுவலகத்திற்குப் போய்த் தனக்கு 33 வது
பிறந்தநாள் எனப் பொய் சொல்லி அனைவருக்கும் கே கொடுக்க வேண்டும் என்று தோன்றியது,
இதைப்பற்றி நினைத்தவுடன் தனது வயது கிடுகிடுவெனக் கிழே இறங்கி பள்ளிசிறுமி
ஆகிவிட்டதைப் போல உணர்ந்தாள், என்ன கேக் வாங்குவது என நினைத்தபடியே அவள் பேருந்தில்
போகத் துவங்கினாள், சாலைகள், மனிதர்கள், வாகனங்கள், மரங்கள், ஆகாயம், பறவைகள் என
எல்லாமும் புதிதாகத் தெரிந்தன, தனக்குத் தானே சுகந்தி சிரித்துக் கொண்டாள்,
சட்டென அது ஒரு அபத்தமாகத் தோன்றியது.தன்னை மீறிக் கொண்டு அழத்துவங்கினாள். பேருந்தில்
அத்தனை பேர் முன்னாலும் தான் அழுவதைப் பற்றி அவள் கண்டுகொள்ளவேயில்லை.
வயதானால் எல்லாவற்றையும் மறைத்துக் கொள்ள வேண்டுமா என்ன ?

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 7:56:43 AM7/12/15
to brail...@googlegroups.com
ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி
athmanam
சிறுகதை
ஆத்மாநாமிற்கும் எனக்குமான இடைவெளி நான்கு அடி தூரம். எவ்வளவு தான் நான் நெருங்கி
நெருங்கிப்போனாலும் அந்த இடைவெளி அப்படியே தான் இருக்கிறது
என்ற குரல் ஒலித்த போது டோக்கியோ செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தான் ஜோதிராம்.
அந்தக் குரல் குமாரசாமியுடையது, இருபத்திரெண்டு வருஷங்களுக்கு முன்பு ஒன்றாகக்
கல்லூரியில் படித்தவன். ஒரு வருஷம் ஜுனியர், பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு
பேசியது போல அத்தனை துல்லியமாக மனக்குரல் கேட்டது.
பாதிசொருகியிருந்த கண்களைக் கசக்கிவிட்டபடியே மணி பார்த்தபோது இரவு
இரண்டரையாகியிருந்தது. இன்னும ஆறுமணி நேரம் பயணம் செய்ய வேண்டும், விமானம் பறந்து
கொண்டிருக்கும் இந்த உயரத்திற்குப் பெயரில்லை, அடையாளமற்ற அந்தரமது.
அவனைப் போலவே உறக்கம் பீடிக்காமலிருந்த சிலர் குறுந்திரையில் திரைப்படம் பார்த்துக்
கொண்டிருந்தார்கள், பக்கத்துச் சீட்டிலிருந்த ஜப்பானியன் ஏதோ ஒரு அனிமேஷன் படம் பார்த்து
தனியே சிரித்துக் கொண்டிருந்தான். விமானத்தின் இரவு விளக்கு வெளிச்சம் ஏதோ
தேவாலயத்தினுள் படுத்துகிடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது
இத்தனை வருஷஙகளுக்குப் பிறகு இந்த இரவில் குமாரசாமியின் குரல் ஏன் மனதில் கேட்க
வேண்டும் என அவனுக்குப் புரியவில்லை இவ்வளவிற்குக் குமாரசாமியை சந்தித்து ஒன்பது
வருஷங்களுக்கு மேலாகயிருக்ககூடும், நெருங்கிப்பழகியவர்களின் குரல் எத்தனை காலம் ஆனாலும்
நமக்குள்ளே ஒலித்துக் கொண்டேதானிருக்குமா.
பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படித்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு ஆத்மாநாம் கவிதைகள் மீது எப்படி
இத்தனை ஆர்வம் வந்தது என ஜோதிராமுக்குப் புரியவேயில்லை.
ஆத்மாநாம் பற்றி வாய் ஒயாமல் பேசிக் கொண்டேயிருப்பான் குமார். அவரது கவிதைகளை உரத்து
வாசித்துக் காட்டுவான். ஆத்மநாமிற்குப் பிடித்த மிலிட்டரி பச்சை நிறம், ஆத்மாநாமிற்குப்
பிடித்த இசைத்தட்டு என உண்மையில் அவன் ஆத்மாநாமை வழிபட்டான்.
••
குமாரசாமி ஜோதியோடு ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். அருகிலுள்ள தென்பட்டி என்ற சிறிய
கிராமம் தான் அவனது ஊர், விவசாயக்குடும்பத்திலிருந்து படிக்க வந்தவன். பேஸ்ட்கட்பால்
விளையாட்டு வீரனைப் போன்று நல்ல உயரம். கருங்கல்லில் செதுக்கியது போன்ற முகம், மஞசள்
படிந்த கண்கள். எப்போதும் கோடு போட்ட முழுக்கை சட்டை, அதில் ஒரு கையைப் பாதிக்கும் மேலே
சுற்றிவிட்டிருப்பான். சட்டை பாக்கெட்டில் சிகரெட். தீப்பெட்டி, ரோஜாபாக்கு, சில்லறை
நாணயங்கள் கிடக்கும். அதனோடு விரல்நீளமுள்ள சிவப்புப் பென்சில் ஒன்றையும் வைத்திருப்பான்.
அந்த நாட்களில் கெமிஸ்ட்ரி பைனல் இயர் படித்துக் கொண்டிருந்த ஜோதிக்கு இருந்த ஒரே கனவு
அமெரிக்காவிற்குப் போய் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பதே, ஆனால் படித்துக்
கொண்டிருந்த சுப்பையா நாயுடு கல்லூரியில் எம்எஸ்சி கூடக் கிடையாது, அது போன்ற
சிறுநகரக்கல்லூரிகளில் படிக்கிற மாணவர்களில் பெரும்பான்மையினர் பேங்க், அல்லது ரயில்வே
எக்ஸாம் எழுதி வேலைக்குப் போகக் கனவு காண்பவர்கள், சிலர் கல்யாண பத்திரிக்கையில் போட்டுக்
கொள்ளப் படிப்பவர்கள்
நல்லவேளை கல்லூரியின் நூலகம் மிகப்பெரியது, அங்கே பத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு
ஆய்விதழ்களுக்குச் சந்தா கட்டியிருந்த காரணத்தால் படிப்பதற்கு நிறைய விஷயங்கள் கிடைத்தன.
நூலகத்தில் உட்கார்ந்து படித்தால் பேராசிரியர்கள் கண்ணில் பட நேரிடுமே என்பதற்காகவே ஜோதி
விளையாட்டு மைதானத்திலிருந்த பழைய கேலரியில் உட்கார்ந்து ஆய்விதழ்களைப் படிக்கத் துவங்கினான்.
அப்போது தான் தன்னைப் போலவே ஒருவன் கேலரியின் ஒரு பகுதியில் கையில் புத்தகத்தோடு
உட்கார்ந்திருப்பதைக் கண்டான். ஆரம்பநாட்களில் அவனை ஜோதி பொருட்படுத்தவேயில்லை.
திடீரென ஒரு நாள் குமாரசாமி நெருங்கி வந்து சிகரெட் இருக்கிறதா என்று கேட்டான்.
பொதுவாகத் தீப்பெட்டி தான் ஒசி கேட்பார்கள், இவன் நம்மிடம் சிகரெட் கேட்கிறானே என்ற
யோசனையுடன், இல்லை என்றான் ஜோதி.
“குடுக்க இஷ்டமில்லையா, சிகரெட் இல்லையா“ எனத் திரும்பவும் கேட்டான் குமார்
“சிகரெட் இல்லை“
நோ பிராப்ளம் என்றபடியே தாவி இறங்கி கல்லூரியை ஒட்டிய நியூ காலனியை நோக்கி நடந்து
போகத்துவங்கினான் குமாரசாமி,
திரும்பி வந்த போது, சீனியர் இந்தாங்க என்று ஒரு சிகரெட்டும் கடலைமிட்டாயும்
கொடுத்துவிட்டு தன் இடத்திற்குப் போய் உட்கார்ந்து கொண்டான்
ஜோதியை யாரும் அதுவரை அப்படிச் சீனியர் எனக் கூப்பிட்டதில்லை, அத்துடன் தானே கடைக்குப்
போய்ச் சிகரெட் வாங்கிவந்து ஒசி கொடுத்துவிட்டு போகிற ஒருவனை அவன் சந்தித்ததேயில்லை
குமார் அப்படி நடந்து கொண்டது பிடித்திருந்தது. கல்லூரி முடிந்து ஹாஸ்டலை நோக்கி
மாணவர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அவனிடம் நீ ஹாஸ்டலா எனக்கேட்டான் ஜோதி
“இல்லை டேஸ் ஸகாலர், நைட் கடைசி டவுன் பஸ்ல தான் வீட்டுக்குப் போவேன். அதுவரைக்குக் காலேஜ்
உள்ளேயே தான் சுற்றிகிட்டு இருப்பேன்“ எனச் சொன்னான் குமாரசாமி
அப்படி என்ன படித்துக் கொண்டிருக்கிறான் என அன்று ஜோதி கேட்டுக் கொள்ளவில்லை, அடுத்தச்
சில நாட்களுக்குள் அவன் நன்கு பழக்கமாகிவிட்டான்.
குமாரசாமி முதன்முதலாகப் பேச துவங்கிய விஷயமே ஆத்மநாம் பற்றித் தான்
“சீனியர், உங்களுக்கு யாரு ஆதர்சம்“
“எதுக்குக் கேட்குறே“
“ஒருவனுடைய இருபது வயதுகளில் கவிதை நுழைந்துவிட்டால் அதைத் தவிர வேறு ஆதர்சமான
விஷயம் இருக்கவே முடியாது. அதிலும் கவிஞனை ஆதர்சமாகக் கொண்டுவிட்டால் அவனால்
அதிலிருந்து மீளவே முடியாது, எனக்கு ஒரே ஆதர்சம் ஆத்மநாம், முக்கியமான பொயட். என்
வரையில் ஆத்மாநாம் என்பது வெறும் பெயரில்லை, அது ஒரு வெளிச்சம், ஒரு மேஜிக், எனர்ஜி. “
“எனக்குக் கவிதைகளே பிடிக்காது“ என்றான் ஜோதி
“அப்படியானால் நீங்கள் நிலம் வாழும் உயிரினம்“ என்றான் குமார்
“நீ“ எனக்கேட்டேன் ஜோதி
“நான் நீர்வாழ் உயிரினம், ஆனால் தவளையைப் போல அவ்வப்போது நிலத்திலும் வாழ்வேன்“
எதை வைத்துச் சொல்கிறாய்
“சீனியர், நிலம் வாழும் உயிரினங்கள் ஒன்றை ஒன்று வேட்டையாடி வாழக்கூடியவை, முழு
லௌகீகவாசிகள். நீரிலும் அப்படியான உயிர்போராட்டம் உண்டு தான், ஆனால் ஏதாவது ஒரு
பாறையடியில் ஒளிந்து கொண்டு பூஞ்சையான எதையாவது தின்றுவிட்டு பெருங்கடலின் இசையைக்
கேட்டபடியே வாழ்ந்துவிட முடியும், தப்பித்தலுக்கு நிறைய இடமிருக்கிறது“
“நீ பேசுவது புரியவில்லை“
“சராசரிகளின் பேச்சை கேட்டுப் பழகியது உங்கள் தவறு“ என்றான் குமாரசாமி
“சராசரியாக இருப்பது ஒன்றும் சாதாரணமில்லை குமார்“
“கரெக்ட் சீனியர் அது தான் பிழைக்கத் தெரிந்த மனிதனுக்கான பொது அடையாளம். சராசரிகள்
பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள். “
“இப்படி பேசுவதற்கு ஆத்மாநாம் கற்றுக் கொடுத்திருக்கிறானா“ எனக்கேட்டான் ஜோதி
“சீனியர், கோப்ப்படுகிறீர்களா, சராசரி என்ற வார்த்தையை யார் கேட்டாலும் கோபம்
கொண்டுவிடுவார்கள், சராசரியாக வாழ்வதற்கு நிச்சயம் திறமை வேணும் சீனியர், எனக்கும்
அப்படி வாழ ஆசையாகத் தானிருக்கிறது“ என்றான்
“இப்போது தான் சராசரிகளுக்கு எதிராகப் பேசினாய், அதுக்குள் என்ன“
“இயலாதவன் அப்படியும் பேசுவான் இப்படியும் பேசுவான்“ எனச்சிரித்தான் குமார்
“உன்னை புரிந்து கொள்ளவே முடியவில்லை“
“கரெக்டா சொன்னீங்க சீனியர். இதற்காகத் தான் நான் கவிதைகள் படிக்கிறேன்“
“எதற்குக் குழப்புவதற்காகவா“
“இல்லை, என்னைப் புரிந்து கொள்வதற்காக“
“இதில் என்ன சிரம்ம் இருக்கிறது“
“என்ன சீனியர் இவ்வளவு எளிமையாகச் சொல்லிவிட்டீர்கள், இந்த உலகத்திலே மிகச்சிரமமான
காரியம், ஒருவன் தன்னைப் புரிந்து கொள்வது தான்“
“எனக்கு அப்படி ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை“
“அப்படியானால் தன்னைப் பற்றி யோசிக்கவே இல்லை என்று அர்த்தம்“
“யோசிக்க வேண்டும் என்று என்ன அவசியமிருக்கிறது“
“ஒரு அவசியமில்லை, பெரும்பான்மையினர் இப்படித் தானிருக்கிறார்கள், அப்படியே
இருநதுவிட்டால் அதிர்ஷடம். உலகம் அப்படியே இருக்கவிடாது, யோசிக்கச் சொல்லும்,
பிரச்சனைகளில் தள்ளி யோசிக்க வைக்கும், ஒருவேளை யோசிக்கத் துவங்கிவிட்டால் உருப்படாமல்
போய்விடுவாய் என ஒடுக்கவும் செய்யவும்“
“குமார், நீ நிறைய உன்னைப் பற்றி யோசித்துக் குழம்பிப் போயிருக்கிறாய்.இதை எல்லாம் உன்
ஐம்பது வயதில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே, இப்போதைக்குப் போய்ப் படிக்கிற வழியைப் பார்“
“சீனியர், ஐம்பது வயசில் ஒருவன் தன்னைப் பற்றி யோசிப்பது பயத்தால், அதுவும் சாவு மீதான
பயத்தால், நான் வாழும் போது என்னைப் பற்றிப் புரிந்து கொண்டு வாழ ஆசைப்படுகிறேன். “
“இதற்குக் கவிதைகளுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது“
“ஒருவன் தன்னைப் புரிந்து கொள்ளக் கவிதைகள் மட்டும் தான் எளிதாகத் துணை செய்கின்றன.
எனக்குத் திருக்குறள் பிடிக்கும், சாக்லெட் சாப்பிடுவது போல ருசித்து நாவில் இனிமை
கரைய படிப்பேன். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி, தன் மெய் வருத்த கூலி தரும் என்றொரு
குறள் இருக்கிறது, இதை வாசித்தவுடன் தெய்வத்தால் ஆகாதது என்றால் என்ன, எவை எல்லாம்
தெய்வத்தால் ஆகாது, ஏன் ஆகாதது. தெய்வத்தால் ஆகாது என்றாலும் மெய் வருத்தி அதைப்
பெற்றுவிடமுடியும் என்றால் நாம் தெய்வத்தை விட மேலா, இல்லை தெய்வம் என்பது கடவுளை
குறிக்கவில்லையா இப்படி அந்தக் கவிதை ஏதேதோ எண்ணவோட்டங்களை உருவாக்கிவிடுகிறதில்லையா.
கவிதை என்பதே இருப்பதிலிருந்து இன்மையையும் இன்மையிலிருந்து இருப்பையும் உண்டாக்கி
காட்டுவது தானே“
“நீ ரொம்பவும் குழப்புகிறாய்“ என்றான் ஜோதி
“ஒரு குழப்பமும் இல்லை, தவளை தண்ணீருக்குள் ஒரு இடத்தில் குதித்து இன்னொரு இடத்தில் தாவி
வெளியேறுவது போன்றது தான் கவிதை வாசித்தலும், சொற்களின் இடைவெளிக்குள் நீந்துவது
சுகமானது. அதைச் சொல்லி புரிய வைக்கமுடியாது சீனியர்“
“இதெல்லாம் உனது கற்பனை, நிஜத்தில் கவிதை என்பது அச்சிட்ட வார்த்தைகள் மட்டும் தான்.
ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல ருசியிருக்க்கூடும், ஆனால் கவிதைகள் படித்து வாழ்க்கையில்
ஜெயித்தவர் ஒருவருமேயில்லை“
“ஏன் சீனியர் எப்போதுமே முடிவுகளோடு பேசுகிறீர்கள், கொஞ்சம் திறந்த மனதோடும் பேசலாம் தானே“
“திறந்த மனதோடு பேசுவதால் தான் உன்னோடு நேரம் செலவழிக்கிறேன்“
“இது கூட ஒரு முடிவு தான்“
ஜோதிராம் சிரித்தபடியே சொன்னான்
“உன் அளவிற்கு எனக்குப் பேசத் தெரியாது“
“ரொம்பப் பேசிவிட்டோம், ஒரு ஆத்மநாம் கவிதை சொல்கிறேன் கேளுங்கள்“
என்னை அழித்தாலும்
என் எழுத்தை அழிக்க இயலாது
என் எழுத்தை அழித்தாலும்
அதன் சப்தத்தை அழிக்க இயலாது
என் சப்தத்தை அழித்தாலும்
அதன் எதிரொலியை அழிக்க இயலாது
என் எதிரொலியை அழித்தாலும்
அதன் உலகத்தை அழிக்க இயலாது
என் உலகத்தை அழித்தாலும்
அதன் நட்தத்திரக் கூட்டங்களை அழிக்க இயலாது
என் நட்சத்திரக் கூட்டங்களை அழித்தாலும்
அதன் ஒழுங்கை அழிக்க இயலாது
என் ஒழுங்கை அழித்தாலும்
அதன் உள்ளழகை அழிக்க இயலாது
என் உள்ளழகை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
அழிப்பது இயல்பு
தோன்றுதல் இயற்கை
••
இதைக் குமார் சொல்லி நீங்கள் கேட்க வேண்டும், ஒரு நாடகம் போல நிகழ்த்திக்காட்டுவான். கடைசி
வரியை சொல்லி முடிக்கும் போது கண்களை உற்று பார்த்தபடியே சொன்னான்
“அழிப்பது இயல்பு
தோன்றுதல் இயற்கை“
எத்தனை எளிமையான வரி. ஆனால் எவ்வளவு மகத்தான அனுபவம். ஆத்மாநாமை கட்டிக் கொண்டு
முத்தமிட ஆசைப்படுகிறேன் சீனியர், பாவி செத்துப் போய்த் தொலைந்துவிட்டான், என் வாழ்க்கையில்
எந்தப் பெண்ணையும் முத்தமிட ஆசைப்பட்டதே கிடையாது, இந்த மடையனை முத்தமிட
ஆசைப்படுகிறேன், அவன் நிகரற்ற கவி. தோற்கடிக்கப்பட்ட கவி. எரிந்த நட்சத்திரம்
ஆத்மாநாமை பற்றிச் சொல்லும் போது குமாரின் முகம் இயல்பாக ஒரு போதும் இருந்த்தேயில்லை,
ஏதோ ஒரு அரிய கண்டுபிடிப்பினை அடைந்தவன் முகத்தில் ஒளிர்வது போன்ற ஒரு பிரகாசம், அதே
நேரம் கண்டுபிடிப்பினை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையே என்ற வேதனை இரண்டும்
கலந்திருக்கும். தன்னை வீட்டில் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் குமாரிடம்
அதிகமிருந்த்து, சில நாட்கள் முன்பு தனது அண்ணனை அடித்துவிட்டதாகச் சொன்னான், இது போல
ஒருமுறை அவன் தந்தையைக் கொல்ல வேண்டும் என்று கடப்பாரையைத் தூக்கி கொண்டு விரட்டியதாகக்
கூறினான், குடும்பத்திற்குள் அவனால் நிலை கொள்ளமுடியவில்லை, அதே நேரம் காதல், வேலை
போன்ற கனவுகள் எதுவும் அவனுக்குள் இல்லை.
“வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை, ஆனால் வீட்டை விட்டு வெளியேறி போகவும்
பிடிக்கவில்லை“ என்றான் குமார்
“இதற்கு என்ன தான் தீர்வு“
“அதைபற்றி யோசித்தால் துக்கமாக இருக்கும், அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன்,
சரி தவறுகள் எனக்குக் கிடையாது சீனியர்“
ஒருநாள் இருவரும் ஹாஸ்டலின் பின்புறமுள்ள குளத்தை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்
திடீரெனக் குமார் கேட்டான்
“சீனியர், இந்தப் பாறைகள், கற்கள், செடிகள் பற்றி எல்லாம் எப்போதாவது நீங்கள் யோசித்து
இருக்கிறீர்களா“
“எதற்காக யோசிக்க வேண்டும்“
“ஆத்மாநாம் நிறைய யோசித்திருக்கிறான்“
“கவிஞனில்லையா அப்படித் தான் இருப்பான்“
“அது ஏன் கவிஞர்கள் மட்டுமே இப்படியிருக்கிறார்கள்“
“இந்த உலகிலே மிக எளிமையானது கற்பனை செய்வது தான். இயலாதவர்களின் கவசம் கற்பனை“
“என்ன சீனியர் நான் எதை எல்லாம் கஷ்டம் என்று நினைக்கிறேனோ, அதை எல்லாம் நீங்கள்
ஒன்றுமேயில்லை என்கிறீர்கள், கற்பனை செய்வது எளிதானதேயில்லை. “
“யார் சொன்னது அப்படி. “
அப்படியா என்றபடியே குமார் கிழே கிடந்த ஒரு கோழி ரோமம் ஒன்றை கையில் எடுத்துக்காட்டி
இதைப் பற்றிக் கற்பனையாக ஏதோவொன்று சொல்லுங்க பார்க்கலாம் என்றான்
“குப்பை“ என்றான் ஜோதி
குமார் சிரித்தபடியே கேட்டான்
“நான் கேட்டது கற்பனை. “
ஜோதி அந்தக் கோழி ரோமத்தை கையில் வாங்கிப் பார்த்துவிட்டுச் சொன்னான்
“பறக்க தெரியாத பறவை“.
“இது உண்மை, கற்பனையில்லை“
“காது குடையும் கருவி“
“அது உபயோகம், கற்பனையில்லை“
“இதற்கு மேல் குப்பையில் கிடக்கும் ஒரு பொருளுக்கு நான் முக்கியத்துவம் தர மாட்டேன் குமார்“
“உபயோகமற்றது என்பதால் தானா“
“ஆமாம், இந்த உலகில் தேவையானது, தேவையற்றது என்ற இரண்டு பிரிவுகள் இருக்கிறது,
தேவையற்றதை பற்றி யோசிக்கத் தேவையேயில்லை“
“தேவையற்றது, தேவையானது என்பதை எதை வைத்து யார் முடிவு செய்வது. சீனியர்,
தேவையற்றவைகளாகத் தோன்றுபவை தான் உலகில் அதிகம்,காரணம் அதன் தேவையை இன்னமும் மனிதர்கள்
அறியவில்லை“,
“கோழி ரோமத்தை பற்றிப் பேசினாலும் கூடக் குழப்பவே செய்கிறாய் குமார்“
“இது குழப்பமில்லை சீனியர், புரிந்து கொள்ளப்பார்க்கிறேன்“
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
இந்தக் கவிதை உங்களுக்குப் புரிகிறதா, இது தான் கற்பனை. இப்படி ஒன்றை கற்பனை செய்யக்
கவிஞனால் மட்டுமே இயலும். மனிதர்களின் மகத்தான சக்தி கற்பனை தான். வேறு எந்த
உயிரினமும் கற்பனை செய்யுமா எனத்தெரியவில்லை“
“அந்த கவிதையைத் திரும்பச் சொல்லு குமார்“ எனக்கேட்டான் ஜோதி
குமார் ஒவ்வொரு எழுத்தாக அழுத்தமாக உச்சரித்துக் கவிதையைத் திரும்பச் சொன்னான்
“இது ஆத்மநாமின் கவிதையா“
“இல்லை பிரமீள். “
“உனக்கு ஆத்மநாமை தானே பிடிக்கும் என்பாய்“
“ஒரு கவிஞன் தான் மற்ற கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்ள வழிகாட்டுகிறான். ஒரு
சுடரிலிருந்து இன்னொரு சுடர் பற்றிக் கொள்வது மாதிரி“
••
குமார் இப்படித்தான், வாய் ஒயாமல் கவிதைகள் பற்றியே பேசிக் கொணடிருப்பான், சில சமயம்
தான் எழுதிய கவிதைகளைக் கொண்டு வந்து வாசித்துக் காட்டுவான், கவிதை படிப்பதற்குச்
சரியான இடம் சுடுகாடு என ஒருநாள் சொன்னான், இன்னொரு நாள் கல்லூரி மரங்கள் தோறும்
கவிதைகளை அட்டையில் எழுதி தொங்கவிட்டிருந்தான்
கல்லூரி நாட்களில் அறிவாளிகளாகத் தென்படும் பலர் வாழ்க்கையில் ஏன் ஜெயிப்பதில்லை, ஒரு
சராசரியாகக் கூட வாழ முடிவதில்லை, முற்றிலும் தோற்றுப் போய்விடுகிறார்கள், அதைத்
தோல்வி என வரையறுக்க முடியுமா எனத் தெரியவில்லை, ஆனால் அடையாளமற்றுப் போய்விடுகிறார்கள்
குமார் அப்படித்தான் நாலாவது செமஸ்டரோடு கல்லூரியை விட்டு நின்றுவிட்டான், எதற்காகப்
படிப்பை நிறுத்திக் கொண்டான் எனக் கேட்டதற்கு அவன் பதில் சொல்லவேயில்லை, ஆனாலும் சில
நாட்கள் அதே கேலரியில் உட்கார்ந்து கவிதைகள் வாசித்துக் கொண்டிருப்பான், கையில் ஆத்மாநாம்
கவிதைகள் என்ற புத்தகம். பெரும்பான்மை வரிகள் அடிக்கோடு போட்ட புத்தகமது
ஒருமுறை ஜோதியிடம் கொடுத்து படித்துப்பார்க்க சொன்னான், ஹாஸ்டல் அறையில் படுத்தபடியே
ஜோதி புரட்டி புரட்டி பார்த்தான், ஒன்றுமே புரியவில்லை, மறுநாள் திரும்பக்
கொடுத்துவிட்டான், குமார் சிரித்தபடியே சொன்னான்
“சீனியர் நீங்க கிளார்க்ஸ் டேபிள் மட்டும் தான் படிக்க லாயக்கு“
“பெருவாரியானவர்கள் என்னைப் போன்றவர்கள் தான்“ என்றான் ஜோதி
“ஏன் சீனியர் உங்களுக்கு எப்போதும் துணை சேர்த்துக் கொள்கிறீர்கள், அதிலாவது தனியாக இருங்களேன்“
அதைக்கேட்டு ஜோதி சப்தமாகச் சிரித்தான், பிறகு இருவரும் ஹாஸ்டல் அறைக்குப் போய் நீண்ட
நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்
••
விமானத்தின் விளக்குள் திடீரென ஒளிரத்துவங்கின, உறக்கத்திலும் பசியறிந்து உணவளிக்கும்
விமானப்பணிப்பெண்கள் உறைந்த புன்னகையுடன் தள்ளுவண்டியில் பழச்சாறும் மதுபாட்டில்களையும்
தள்ளிக் கொண்டு வரத்துவங்கினார்கள். ஒரு கோப்பை ஒயினை வாங்கிக் கொண்டான் ஜோதி.
அருகிலுள்ள ஜப்பானியன் சாக்கே வேண்டும் எனக்கேட்டான். கொண்டு வருவதாகச் சொன்னாள் பணிப்பெண்.
ஒயின் கோப்பையைக் கையில் வைத்தபடியே மீண்டும் குமாரைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் ஜோதி
“கவிதை ஒரு மனிதனை உயர்வு அடையச் செய்யாதா, ஏன் இத்தனை நல்ல கவிதைகளை வாசித்த
குமார் வாழ்வில் தோற்றுப் போனான்“
இதற்கான பதிலை முன்எப்போதோ குமார் சொன்னது நினைவில் ஒடியது
“சீனியர், வாழ்க்கையில் ஜெயிப்பது என்றால் பணம் காசு சம்பாதிப்பது, வீடு கட்டிக் கொள்வது,
மனைவி குழந்தைகளுடன் சுகமாக வாழ்வது என்பது மட்டும் அர்த்தமில்லை, அப்படிச் சராசரிகள்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை விடுங்கள், வாழ்க்கையில் ஜெயித்தவன் என உண்மையில்
எவனும் கிடையாது, வாழ்க்கையின் விசித்திரங்களை, சிக்கல்களைப் புரிந்து கொள்ள இலக்கியம்
உதவுகிறது, குறிப்பாகக் கவிதைகள். கவிஞன் வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து
அனுபவித்து உண்ணுகிறான், ஒருவனின் இளமையில் கவிதை நுழைந்துவிட்டால் அவன்
வேற்றுலகவாசியாக மாறிவிடுவான், இதே உலகிற்குள் அவன் இன்னொரு உலகில் சஞ்சரிப்பான்,
அப்படிச் சஞ்சரிப்பதை போதை என்பார்கள். கவிதை என்பது போதையில்லை, தெளிவு.
விழிப்புணர்வு, உந்துசக்தி. தீராத்துடிப்பு. அதைக் கொண்டே வாழ முயற்சிப்பது ஒரு
பைத்தியக்காரத்தனம், எந்தக் கலையும் சோறுபோடாது, கலையைக் கொண்டு வாழ்வதற்குச் சாதுர்யம்
வேண்டும், அது வேண்டுமானால் கவிஞனுக்குக் குறைவாக இருக்கலாம், ஆனால் கவிஞர்கள் அடைகிற
சந்தோஷமும், அகசுதந்திரமும் மற்றவர்கள் அறியாதது“
“கவிஞர்களை உயர்த்திப் பேசுவது போல உன்னை நீயே உயர்த்திக் கொள்கிறாய் குமார், அப்படி
ஒன்றும் கவிஞர்கள் இந்த உலகிற்கு ஆதர்சமானவர்களில்லை, உலகம் ஒரு போதும் அவர்களை
வழிகாட்டியாக முன்னிறுத்தியதில்லை“
“அதற்குக் காரணம் வேறு, தான் மட்டும் பறக்கவிரும்புகிறவன் கவிஞனில்லை, உங்களையும்
இணைத்துக் கொண்டு பறக்க விரும்புகிறவனே கவிஞன், அது தான் இவ்வளவு போராட்டமும். “
“இதற்கு நீ இலக்கியத்தைப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது தானே குமார்“
“இலக்கியத்தைப் பாடமாகப் படிப்பதை விடக் கொடும்தண்டனை வேறு கிடையாது, “ எனச் சொல்லி
சிரித்தான் குமாரசாமி
“மற்றவர்கள் உன்னைப் பரிகசிப்பது உனக்கு வேதனையாகயில்லையா“ எனக்கேட்டான் ஜோதி
“யாரை பரிகசிக்காமல் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஆதர்சமாக இருப்பவர்கள்
அரசியல்வாதிகள். அதிகாரிகள், செல்வந்தர்கள், வணிகர்கள், நடிகர்கள், இவர்களிடம் எவ்வளவு
தான் கவிதை பற்றிப் பேசினாலும் மண்டைக்குள் ஏறாது என்று தெரியும். எனக்குக் கவிதைகள்
போதுமானதாகயிருக்கிறது, அதுவும் ஆத்மாநாமின் கவிதைகள் மட்டுமே போதும் என்றிருக்கிறது “
“இது உனது பலவீனம், நீ ஒளிந்து கொள்ளப் பார்க்கிறாள், நண்டுகள் தான் இப்படி வாழும்“
“நான் நண்டில்லை, ஆமை, உண்மையில் கவிதை ரசிகனாக இருப்பமதென்பது ஆமைகள் தண்ணீருக்குள்
வாழ்வது போன்றது, அதற்கு வெளியுலகே தேவையில்லை, எப்போதாவது தனது இருப்பை
வெளிக்காட்டிக் கொள்ள மேற்பரப்பில் வந்து சில நிமிசம் நீந்துவிட்டு மீண்டும் அடியாழத்திற்குள்
சென்றுவிடக்கூடியது. கவிதையின் ரசிகனும் அப்படிபட்டவன் தான், அவனுக்குக் கவிதை என்பது
சொற்களின் சேர்கையில்லை, அது தண்ணீரைப் போன்றதொரு உயிராற்றல். “
“உனது விருப்பத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது குமார், அதற்காக ஏன் உன் படிப்பை
கெடுத்துக் கொள்கிறாய், கெமிஸ்ட்ரி பரிட்சை எழுதுவதற்கும். கவிதைக்கும் என்னடா பிரச்சனை“
எனக்கேட்டான் ஜோதி
செமஸ்டர் பரிட்சை எழுத ஹாலில் உட்கார்ந்து பேப்பரை வாங்கினால், மனதில் ஈழக்கவிஞர்
மஹாகவியின் ஒரு கவிதை ஒலிக்கிறது, மகத்தான கவிதையது
சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்
வெறு வான வெளி மீது மழை வந்து சேரும்
வெறிக் கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்
எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்
எதுவந்ததெனினென்ன அதை வென்று செல்வார்
இருளோடு வெளியேறி வலை வீசினாலும்
இயலாது தரவென்று கடல் கூறலாகும்
ஒருவேளை முகில் கீறி ஒளி வந்து வீசும்
ஒருவேளை துயர்நீள உயிர் வெந்து சாகும்
இந்த வரிகளை அப்படியே பரிட்சை பேப்பரில் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்து
உட்கார்ந்து கொண்டு ஈழப்போரை பற்றி நினைத்து அழுது கொண்டிருந்தேன் சீனியர். எனக்குள்
கவிதை மட்டுமே இருக்கிறது, அதற்குள் சோடியம் பைகார்பனேட், பென்சாயிக் ஆசிட் போன்றவற்றைக்
கலக்க முடியவில்லை“
“அப்போ நீ படித்து வேலைக்குப் போகபோவதில்லையா“
“நான் ஒண்ணுக்கு போவதற்கே பத்து முறை யோசிக்கிறவன், படித்து வேலைக்குப் போவது எல்லாம்
நடக்காத கனவு. அதனால் தான் லியோ லாண்டரி கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன், அங்கே
தான் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது“
லாண்டரி கடையில் உட்கார்ந்து கொண்டு பில்போட்டபடியே கவிதை படிக்க எப்படிக் குமரால்
முடிந்தது. ஒருவேளை கவிதைகள் அவ்வளவு முக்கியமானவை தானா. அதைத் தான் இன்னமும்
உணரவில்லையா
••
கல்லூரி முடிந்த பிறகு எம்எஸ்சி படிக்கச் சென்னை கிளம்பிய ஜோதி அங்கிருந்து அமெரிக்கா
போய்விட்டிருந்தான், பிறகு குமாரை சந்திக்கவேயில்லை, நீண்ட இடைவெளிக்கு பிறகு குமார்
தன்னுடைய கல்யாண பத்திரிக்கை அனுப்பியிருந்தான், அதிலும் ஆத்மாநாமின் கவிதை இடம்
பெற்றிருந்தது,
அதன்பிறகு ஒருமுறை விடுமுறையில் பழனிக்கு வந்திருந்த போது மொட்டை தலையுடன் குமாரை
சந்தித்தான், கையில் நாலு வயதில் ஒரு மகள், ஆள் அப்படியே இருந்தான், உடலில் ஒரு
மாற்றமுமில்லை, அவன் மனைவியை அறிமுகம் செய்து வைத்தபடியே டிவிஎஸ் 50யில் வீடு வீடாகப்
போய்ப் பிஸ்கட் பாக்கெட் விற்பதாகச் சொன்னான்.
பிறகு நெருங்கிவந்து ரகசியமான குரலில் சொன்னான்
“என் மனைவிக்குப் புஸ்தகம் படிப்பது பிடிக்காது, அதை எல்லாம் மூட்டை கட்டி தூக்கி
எறிந்துவிட்டேன். இப்போது நானும் ஒரு சராசரி “.
“ஆத்மாநாமை“ எனக்கேட்டான் ஜோதி
“என் மகள் பெயர் மது, ஆத்மநாமின் நிஜப்பெயர். “ எனச்சொல்லி சிரித்தான் குமார்.
“ஆத்மாநாமை உன்னால் விடவே முடியாது“ என்றான் ஜோதி
“புஸ்தகமே பிடிக்காத என் மனைவி கூட ஆத்மநாமை படிக்கிறாள், அந்த ஒரு புத்தகம் மட்டும்
வீட்டில் அனுமதிக்கபட்டிருக்கிறது, ஒரு ஆச்சரியம் ஒரே கவிதையை நான் ஒருவிதமாகவும் அவள்
வேறுவிதமாகவும் படிக்கிறோம், அவளுக்குத் தெரிந்த ஆத்மாநாம் எனக்குத் தெரியாதவன் “
“அவள் ஏன் ஆத்மாநாமை படிக்கிறாள்“
“என்னை சகித்துக் கொள்வதற்குத் தான், வேறு என்ன, அரைமணி நேரம் நாம் எங்காவது வெளியே
போய்ப் பேசிக் கொண்டிருக்கலாமா “
அவனை ஜோதி தான் தங்கியிருந்த லாட்ஜிற்கு அழைத்துப் போனான்
“உன் கல்யாணப்பத்திரிக்கை வித்தியாசமாக இருந்த்து, “
“கோவமா சீனியர், கல்யாணம் என்பது என் தனிப்பட்ட விஷயம், இதில் சுயநலத்தைத் தவிர
ஒன்றுமேயில்லை, இதில் ஏன் நண்பர்கள் ஒன்று கூட வேண்டும் என எனக்குப் புரியவில்லை, அதான்
இது தகவலுக்காக மட்டும் யாரும் கல்யாணத்திற்கு வரத்தேவையில்லை என அச்சிட்டிருந்தேன்“
“உனக்குக் கல்யாணம் ஆன தகவலை நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்“
“இளவரசி டயானாவிற்குக் கல்யாணம் ஆன தகவலை ஏன் தெரிந்து கொண்டீர்களோ, அது போலத் தான்
சீனியர் “
“நீ மாறவேயில்லை குமார்“
“பொய், என்னிடம் மிச்சமிருப்பது ஆத்மாநாம் மட்டுமே, மற்றபடி நான் ஒரு கெட்டவன்.
இலைச்சுருள் பிடிப்பவன்“
“உனக்கு என்னதான் பிரச்சனை குமார்“
“எது தான் பிரச்சனையில்லை சீனியர். இந்த இழவெடுத்த காம்ம் படுத்துகிற பாடு தான் என்
முதற்பிரச்சனை, காமத்தை மிருதுவானது எனச் சொல்லி வைத்த்து பெரும் பொய், அது ஒரு
அவஸ்தை, தவிப்பு, மூச்சுமுட்டல். ஆஸதுமா நோயாளிகளுக்குத் தொண்டையில் சளி நின்று கொண்டு
அவஸ்தையை உருவாக்கும், துப்பி வெளியேற்றினால் தான் மூச்சுவிட முடியும், காம்மும்
அப்படியானது தான், வடிகால் இல்லாவிட்டால் முழுஅவஸ்தை தான். அதிலும் இணக்கமான காமம்
என்பது அரிதினும் அரிதானது, இணக்கமில்லாத காமம் என்பது தக்கையோடு கூடுவது,
நிழல்புணர்வு. “
“உன் பேச்சு மாறவேயில்லை குமார், இன்னமும் கவிதைகள் எழுதிக் கொண்டு தான் இருக்கிறாயா“
“ரகசியமாக எழுதி காற்றில் பறக்கவிட்டுவிடுகிறேன், அது ஒரு ஆசுவாசம், வெட்டவெளியில்
மூத்திரம் அடிப்பது மாதிரி“
“உனது கிறுக்குதனங்களை உன் மனைவி ஏற்றுக் கொண்டுவிட்டாளா“
“நான் குடிப்பதை, சிகரெட் பிடிப்பதை, ஊர் சுற்றுவதைக் கூட அவளால் ஏற்றுக் கொள்ள
முடிகிறது, படிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதற்குத் தான் நிறையச் சண்டை
போட்டிருக்கிறேன்“
“நீ மட்டுமில்லை, நானும் தான். என் மனைவிக்கும் படிப்பது பிடிக்காது என்றான் ஜோதி
“எனக்குக் காரணம் புரிந்துவிட்டது சீனியர்“
“என்ன காரணம்“
“புஸ்தகங்களுக்குள் காணாமல் போகிறவர்களுக்குப் பெரிய ஆசைகள், கனவுகள் இருக்காது,
குடும்பம் நடத்த நிறையக் கனவுகள, ஆசைகள் வேண்டும், அதை அடைய பரபரப்பாக ஒட வேண்டும்,
தோற்க வேண்டும், “
“நான் நிறையச் சம்பாதிக்கிறேன், கனவு காணுகிறேன்,ஆனாலும் நான் படிப்பதும் மனைவிக்குப்
பிடிக்கவில்லை தானே“
“அப்படி பார்த்தால் எத்தனை கணவர்கள் மனைவி புத்தகம் படிப்பதை அனுமதிக்கிறார்கள்“
“பேச்சை திருப்பிப் போடுகிறாய், பிரச்சனை புத்தகங்களில் இல்லை, நமது கவனம் எதில்
குவிகிறதோ, அதுவே நாம் ஆகிறோம், நிஜத்தில் புத்தகம் என்பது இன்னொரு பெண். “
“சீனியர், நீங்களும் பேசக்கற்றுவிட்டீர்கள்“
“நீ பழைய மனிதன்தான் என்கிறது ஒரு புத்தகம்
புதிய மனிதன்தான் என்கிறது இன்னொரு புத்தகம்“
இதுவும் ஆத்மநாம் கவிதை தான், எனக்கு நேரமாகிறது, இன்னொரு முறை சந்தித்து விரிவாகப்
பேசலாம், உங்கள் கார்டு கொடுங்கள் என அவசரமாகக் குமார் கிளம்பிப் போனான். ஏனோ அவன் பாவம்
என்று தோன்றியது
••
இதன் ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு ஜோதி செகாந்திரபாத்தில் உள்ள எண்டோமின் நிறுவனத்தில் வேலை
செய்து கொண்டிருந்த போது ஒரு பின்மதியம் குமார் வந்திருந்தான், உருக்குலைந்து போன
தோற்றம். அடர்ந்த தாடி, குழிவிழுந்த கண்கள், கையில் ஒரு துணிப்பை வைத்திருந்தான்,
“நான் இங்கே வேலை பாக்கிறேன் என எப்படிக் கண்டுபிடித்தாய்“ எனக்கேட்டான் ஜோதி
“விக்டரைப் பார்த்தேன், அவர் தான் அட்ரஸ் கொடுத்தார்“
“சொல்லு குமார், ஏன் இப்படி இருக்கே, என்ன ஆயிற்று உன் வேலை“
“அதை எல்லாம் விடுங்க சீனியர், எனக்கு ஒரு பொஸ்தகம் போடணும், எழுதின கவிதைகள் எல்லாம்
இந்தப் பையில் கிட்க்கு, அதை ஒரு கவிதை தொகுப்பாகக் கொண்டு வரணும்“
“நான் என்ன செய்யணும்“
“ஐந்தாயிரம் பணம் தரணும், அதை நான் திருப்பித் தர மாட்டேன்“
“தர்றேன், இப்போ என்ன வேலை செய்துகிட்டு இருக்கே“
“ஒன்றரை வருஷம் வேலை எதுவும் செய்யலை, பத்மா கார்மெண்ட் கம்பெனிக்கு வேலைக்குப் போறா,
நான் வீட்டை பாத்துகிட்டு பிள்ளைகளை வளர்க்கிறேன்“,
“தப்பா எடுக்க மாட்டேன்னா ஒரு கேள்வி குமார், இப்போ எதுக்கு உனக்கு இந்தக் கவிதை தொகுப்பு“
“இதை எனக்கு நானே ஒரு வருஷமா கேட்டுகிட்டே தான் இருந்தேன், உண்மையைச் சொன்னா ஒரு
காரணமும் கிடைக்கலை, அற்ப ஆசைனு வச்சிகிடலாம். “
“ஏன் உன்னை நீயே அவமானப்படுத்திக்கிடுறே குமார், இது ஒன்றும் அற்ப ஆசையில்லை, கவிதை
எல்லோரும் எழுத முடியாது, நீ எத்தனையோ வருஷமாக எழுதிக் கொண்டிருக்கிறாய், இதுவரை
புத்தகம் போட்டதேயில்லை“
“என்ன ஆச்சு சீனியர் உங்களுக்கு, என்னைக் கேலி செய்யுறீங்க“
“இல்லை குமார், ஐ ரெஸ்பெக்ட் பொயட்ரி. “
செக் வாங்கிக் கொண்டு திரும்பி போகும்போது குமார் சொன்னான்
“பொஸ்தகம் வந்தவுடனே அனுப்பி வைக்குறேன், பிடிச்சிருந்தாலும் பிடிச்சிருக்காட்டியும்
எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை, எனக்குக் கவிதைகள் எழுதப்பிடிக்கும், வாசிக்கப்
பிடிக்கும் அவ்வளவு போதும்“

குமாரசாமி கவிதை தொகுப்பினை வெளியிடவில்லை, நண்பர்களிடம் வாங்கிய பணத்தைக் குடித்துச்
செலவழித்துவிட்டான் என்றும், இப்போது முன்பு வேலை பார்த்த அதே லாண்டரியில் திரும்ப வேலை
செய்வதாகவும் விக்டர் சொல்லியிருந்தான், பின்பு விக்டரே தானே குமாரசாமியின் கவிதைகளைத்
தொகுத்து ஒரு புத்தகமாக்கி அதற்கு ஒரு வெளியீட்டுவிழாவும் நடத்தினான், அந்த
விழாவிற்குக் குமாரசாமி வரவில்லை. அதைப்பற்றிக் கேட்டதற்கு
“ஊரை கூட்டிவைத்து முதலிரவு நடத்த முடியாது“ என்று பதில் குமார் சொன்னதாக விக்டர்
கூறினான்
நண்பர்களுக்கு விநியோகம் செய்ய விக்டர் இருநூறு பிரதிகளைக் குமாரசாமிக்குக்
கொடுத்திருந்தான், அத்தனையும் ஒருநாளில் வெந்நீர் எரிக்க அடுப்பில் போட்டுவிட்டதாகச்
சொன்னான் குமாரசாமி
இப்படிக் குமார் குறித்து நிறையப் புகார்கள், கட்டுக்கதைகள் நண்பர்களுக்குள் உலவிக்
கொண்டிருந்தன, ஒருமுறை குமாரை நெல்லை ரயில்வே ஸ்டேஷன் உள்ளே வைத்து பார்த்த போது
சபரிமலைக்கு மாலைபோட்டிருந்தான், கறுப்புச் சட்டை, தாடி, கழுத்தில் ருத்ராட்சமாலை.
சாயவேஷ்டி. என்ன கோலமிது என ஜோதி கேட்ட போது அமைதியான குரலில் சொன்னான்
“கடவுளே போதுமானதாகயிருக்கிறார். அதான் மலைக்குப் போகிறேன்“
“உனது எல்லாப் பிரச்சனைகளுக்கு ஒரே காரணம் தானிருக்கிறது, அதை நீயே தான் உருவாக்கி
கொண்டாய்“
“கவிதை என்னைச் சீரழித்துவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள் சீனியர், ஆனால் என்னை விடுதலை
தான் செய்திருக்கிறது. மனதளவில் நான் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறேன். காசில்லாதவனின்
சந்தோஷத்தை இருப்பவனால் புரிந்து கொள்ளமுடியாது. “
“முன்பு ஒரு நாள் நீ ஒரு தவளை என்று சொன்னது நினைவிருக்கிறதா குமார், நிஜத்தில் நீ
தவளை கூடயில்லை, வெறும் தலைப்பிரட்டை“
“என்மீது கோபப்படுகிறவர்கள் அத்தனை பேரும் என்னை நேசிக்கிறார்கள், நான் நேசிக்கும்
அனைவரும் என்மீது கோபபடுகிறார்கள்“,
“அதற்கு நீ தான் காரணம், உன்னை யாரும் ஒரு போதும் புரிந்து கொள்ளப்போவதில்லை, காரணம்
நீயும் ஒரு கவிதையைப் போன்றவன் தான், அவரவர் புரிதல் அவரவருக்கு“
“ஆமாம் சீனியர், நான் மிக மோசமான பால்யகாலத்தைக் கொண்டவன், அய்யா என்னை அடிக்காத
நாளேயில்லை, மிக மோசமான பள்ளிவாழ்க்கை கொண்டவன், ஆசிரியர்கள் என்னைத் திட்டாத
நாளேயில்லை, கல்லூரி தான் எனது முதற்திறவு கோல், எனது விருப்பத்தின் படியே நான் வாழ
முயன்ற நாட்கள் கல்லூரியில் தான் துவங்கியது. எனக்கு வீடு, ஊர், மனிதர்கள் எதுவும்
பிடிக்காமல் இருந்த நாட்களில் தான் கவிதை அறிமுகமாகியது, என்னை உதறி வெளியேற நான்
தயார் ஆக இருந்த மனநிலையில் தான் கவிதை எனக்குள் இறங்கியது, நாட்டுசாராயத்தைக்
குடிப்பது போலச் சூடாக, நெஞ்சு எரிய கவிதைகளைக் குடித்துத் தீர்த்தேன், அந்த மயக்கம்
என்னை விடவேயில்லை, அது என்னைக் காப்பாற்றியது, கவிதை தந்த உஷ்ணத்தில் தான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன், கவிதை உண்மையில் பெரும் நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. அந்தக்
கதகதப்பில் என்னை வளர்த்துக் கொண்டேன், உலகம் கவிதைகளை வாசனை திரவியத்தைப் போலக்
கருதுகிறது, வெறும் பரிமளம் மட்டுமே அதற்குப் போதுமானது. நான் கவிதைகளை ஏற்றுக்
கொண்டதோ, அதை நம்பி வாழ்வை ஒப்படைத்ததோ தவறில்லை, தவறு இதை உலகம் அங்கீகரிக்க மறுத்தது
தான். முழுமுட்டாளை கூட வாழ அனுமதிக்கும் சமூகம், கவிஞனை வாழ விடுவதில்லை என்பது
தான் நிதர்சனம்“
எனச் சொல்லியபடியே குலுங்கி அழ ஆரம்பித்தான் குமாரசாமி, இத்தனை வருஷங்களில் அந்த
நிமிசம் தான் அவன் அழுவதை ஜோதி காண்கிறான், அதுவும் சபரிமலைக்கு மாலை போட்ட ஒருவன்
ரயில் நிலையத்தில் கவிதையை நினைத்துக கொண்டு அழுவது அபத்தமானதாகத் தோன்றியது
இருவரும் ஒன்றாகத் தேநீர் குடித்தோர்கள், குமாரின் ரயில் வந்த போது அவன் சொன்னான்
கற்பனையிலேயே செத்துப்போ என்றது மனம்
நானும் செத்துப்போனேன்
கற்பனை உலகில் உயிர் வாழ்ந்தேன்
எல்லோரும் சந்தோஷமாய் இருந்தார்கள்
நானும் என் நண்பர்களும்கூட
அற்புதமான ஓவியங்களைப் பார்த்தேன்
நெஞ்சின் ஆழத்திலிருந்து
துவங்கிய இசையைக் கேட்டேன்
உன்னதமான கலை இலக்கிய வடிவங்களை
தரிசித்தேன்
உண்மையான கவிதைகளை எழுதினேன் படித்தேன்
முழுமையான இதழ் ஒன்றை நடத்தினேன்
ஒரு நாள் என் சாய்வு நாற்காலியில்
அமர்ந்துகொண்டிருக்கும்பொழுது
என் மனம் கேட்டது
எப்படி இருக்கிறாய் என்று
நன்றாய் இருக்கிறேன்
பசிதான் தீரவில்லை என்றேன்“`
இதுவும் ஆத்மாநாம் தான் என்றபடியே அவன் ரயிலினுள் ஏறி சென்று கொண்டிருந்தான், அந்தக்
கவிதையை ஜோதி மட்டுமில்லை, பிளாட்பாரத்திலிருந்த பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்,
அதற்குப் பிறகு குமாரை சந்திக்கவேயில்லை, உடல்நலிவுற்று எங்கோ சிகிட்சை எடுத்தான்
என்றும், இப்போது ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் கேள்விப்பட்டான், அடுத்த
ஆண்டு ஊருக்குப் போயிருந்த போது ஏனோ குமாரை சந்திக்க விருப்பமேயில்லை.
இத்தனை வருஷங்களுக்குப் பிறகு இப்படி நடுவானில் ஏன் அவன் மனதில் ஒலிக்கத் துவங்கினான்,
தனிமையை உக்கிரமாக உணர்பவன் மனது கவிதையை நோக்கி நகரும் என்பது தான் காரணமா.
நினைவின் அடுக்கில் இருந்த என்றோ குமார் சொன்ன ஆத்மாநாமின் கவிதை கொப்பளிக்கத் துவங்கியது
தன்னை மறந்து உச்சாடனம் போல அதைச் சொல்லிக் கொண்டிருந்தான் ஜோதிராம்,
“நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய்
என்கிறது மனித இனம்
நான்
வேலையைக் கேட்கவில்லை
உணவைக் கேட்கவில்லை
குடியிருப்பைக் கேட்கவில்லை
கேட்பதெல்லாம் ஒன்றுதான்
நான் வேறு நீ வேறு
என்பது பொய்
நானும் நீயும் ஒன்றுதான்
என்பதை உணர்“
பக்கத்து இருக்கையில் இருந்த ஜப்பானியன் திரும்பி பார்த்து கைகளை லேசாகத் தொட்டு
உடல்நலமில்லையா என ஆங்கிலத்தில் கேட்டான்,
“இல்லை கவிதை சொல்கிறேன்“ என்றான் ஜோதி
“நீங்கள் கவிஞரா“
“இல்லை நான் கேட்ட கவிதை, ஆத்மாநாமின் கவிதை“
என அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தான் ஜோதி, கேட்டு முடித்த ஜப்பானியன்
கைகுலுக்கியபடியே மிக நல்லகவிதை என்றபடியே ஜப்பானிலும் இது போன்ற கவிதைகள் எழுதிய
ஒருவன் இருந்தான், அவனது பெயர் டகுபோகு இஷிஹவா, குடி, வேசை என அலைந்தவன், 26
வயதில் காசநோய் பாதித்து இறந்து போய்விட்டான், ஜப்பானிய இலக்கியத்தில் முக்கியமான கவிஞன்“
“ஆத்மாநாமும் 33வது வயதில் தற்கொலை செய்து கொண்டுவிட்டான்“ என்றான் ஜோதிராம்
அதைக் கேட்ட ஜப்பானியன் முகம் வெளிறிப்போனவன் போல “கவிஞர்கள் வாழ்வதற்கு இந்த உலகம்
ஏற்றதில்லை“ என்றான், பிறகு பெருமூச்சுடன் சொன்னான்
“என் மனைவிக்குப் புத்தகம் படிப்பது பிடிக்காது, நான் அலுவல நூலகத்தில் தான் கவிதைகள்
படிக்கிறேன்“
“உலகம் முழுவதும் இப்படித்தான்“ எனச் சொன்னான் ஜோதி.
அதன்பிறகு இருவரும் மாறிமாறி கவிதைகள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். காலை ஒன்பது
மணிக்கு டோக்கியோ வந்து இறங்கிய போது அந்த ஜப்பானியன் மிகுந்த நன்றிவுணர்வுடன் சொன்னான்,
“தூக்கமற்ற மிகச்சிறந்த இரவு, கவிதைகளுக்கு நன்றி, ஒவ்வொரு மனிதனும் தன்னுடையதைத்
தவிர வேறு பல வாழ்க்கைகளைக் கற்பனையிலாவது வாழ ஆசைபடுகிறவன், அதற்குக் கவிதைகள்
தானே எளிய வழி “
விசா பரிசோதனை, செல்லவேண்டிய கருத்தரங்கம், அதற்கான முன் தயாரிப்பு வேலைகள், இரவு
சரியாகச் சாப்பிடாத வயிற்றுவலி எல்லாம் ஒன்று சேர்ந்து ஜோதிக்குள் பதற்றத்தை
ஏற்படுத்தியிருந்த்து, ஜோதி தலை அசைத்தபடியே சொன்னான்
“அரிகாதோ“
ஜப்பானியனும் தலைவணங்கி “அரிகாதோ“ என்றதுடன் ஏதோ யோசனையில் கேட்டான்
“நீங்கள் ஏன் ஆத்மாநாமை மொழிபெயர்க்க கூடாது. “
அந்த நிமிசம் மனதிற்குள் குமாரசாமி பலமாகச் சிரிக்கிற குரல் ஜோதிக்கு மட்டும் கேட்டுக்
கொண்டிருந்தது.
••••
Search

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 12, 2015, 11:22:14 AM7/12/15
to brail...@googlegroups.com
களப்பிரர் காலம் இருட்டடிப்புக் காலம்
8
விவரங்கள்
எழுத்தாளர்: ந.எழிலரசன்
தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம்
பிரிவு: உங்கள் நூலகம் - டிசம்பர் 2013
C வெளியிடப்பட்டது: 10 ஜனவரி 2014
கடைச்சங்க காலத்திற்குப் பிறகு அதாவது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி
முதல், பல்லவர் ஆட்சி ஏற்பட்ட காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரையிலான
காலகட்டத்தினைச் சங்கம் மருவியகாலம் என்பர். சங்ககாலத்தில் முடியுடை மூவேந்தராலும்,
வேளிர் முதலான சிற்றரசர்களாலும் ஆளப்பட்டுவந்த தமிழகம் அதன் பிறகு அயலவர் ஆட்சிக்கு
உட்பட்டது.
இக்காலகட்டத்தில் தமிழகத்தின் அரசியல் நிலைமை இன்னதென்று தெரியாமல் இருந்தது. கடைச்சங்க
காலத்தின் முடிவு ஏறத்தாழ கி.பி.250 என்று கருதப்படுகிறது. கடைச் சங்க காலத்தின்
இறுதியில் ஆட்சிபுரிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர் களின் பெயர்கள் சில சங்கப்
பாடல்களிலிருந்து கிடைக் கின்றன.
ஆனால், அதன் பிறகு தமிழகத்தின் நிலை என்ன என்பது வெகு காலமாகவே குழப்பமாக இருந்து
வந்தது. கே.ஜி.சங்கரன் என்பவர், வட்டெழுத்தில் எழுதப்பட்ட ‘வேள்விக்குடிச் செப்பேட்டை’
இக்காலத் தமிழ் எழுத்தில் செந்தமிழ் இதழில் வெளியிட்டார்.
அதன் பிறகு, இந்திய சாசன இலாகா 1923 - ஆம் ஆண்டு எபிகிறாபியா இந்திகா என்னும்
ஆங்கில வெளியீட்டில் வேள்விக்குடிச் சாசனத்தை ஆங்கில (இலத்தின்) எழுத்தில் வெளியிட்டது.1
வேள்விக்குடிச் செப்பேடு வெளியான பிறகுதான் கடைச்சங்க காலத்திற்குப் பிறகு தமிழகத்தை
ஆண்டவர்கள் களப்பிரர்கள் என்கிற செய்தி தெரியவந்தது.
இக்களப்பிரர் காலத்தில் தமிழில் இலக்கியவளர்ச்சி குன்றியிருந்தது எனவும் அதனால் அக்காலம்
தமிழகத்தின் ‘இருண்டகாலம்’ எனவும் சொல்லப்பட்டுவருகிறது. உண்மையில் களப்பிரர் காலம்
இருண்டகாலமா? என்பதனை இக்கட்டுரை ஆராய்கிறது.
களப்பிரர்கள் காலம் இருண்டகாலமா?
களப்பிரர்கள் என்பவர்கள் தமிழர்கள் அல்லர் அவர்கள் கன்னடம் பேசிய அயலவர். அவர்கள் தமிழ் மீதும்
தமிழ் இலக்கியங்கள் மீதும் பெருவிருப்பம் இன்றியிருந்தனர். எனவே, அக்காலகட்டத்தில் தமிழில்
இலக்கியங்கள் அதிகம் தோன்றாமையால் களப்பிரர் காலத்தைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட
காலம் என்கின்றனர்.
‘சங்ககாலத்திலேயே தமிழகத்தில் புத்த, சமண சமயக் கோட்பாடுகள் ஓரளவு தமிழகத்தில் தலை
காட்டியிருந்தன. சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றிய களப்பிரர்கள் பௌத்த சமயத்தைத்
தென்னகத்தில் பரப்ப முயன்றனர்.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டி நாட்டில் கொடும்பஞ்சம் ஏற்பட்டதாக இறை
யனார் களவியலுரை மூலம் அறியமுடிகிறது. அக்காலப் பகுதியில்தான் பல்லவர் என்ற
பிராகிருத மொழியினர், தொண்டை நாட்டையும், நடுநாட்டையும் கைப்பற்றி ஆளத்தொடங்கினர்.
அவர்கள் சமண சமயத்தையும், வடமொழியையும் பேணினர். ஆனால், பல்லவப் பேரரசு கி.பி.ஆறாம்
நூற்றாண்டளவில்தான் நிலைபெறத் தொடங்கியது.
களப்பிரர்க்கும் உள்நாட்டு மன்னர்க்கும் இடையே நிலவிய போரும் பூசலும் தமிழிலக்கியம், கலை,
பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றில் பெரும் சிதை வையும், இழப்பையும் ஏற்படுத்தின.
இந்நிலையில் தேனும் ஊனுமாக, தேறலும் களியாட்டமுமாக இருந்த சங்க காலத்து இன்ப வாழ்க்கை
மாறி, சமண பௌத்த மதங்களின் செல்வாக்கால் பல்வேறு நோன்பு வாழ்க்கை மேற்கொள்ளப் பட்டது.
தமிழ்மொழியும் ஆதரிக்கப் படாமல் தாழ்த்தப்பட்டு வளர்ச்சிகுன்றி, போற்றுவாரற்று விளங்கியதால்
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெருந் தேக்கமும், மாற்றமும் ஏற்பட்டன. எனவே, இக்களப்பிரர்
ஆட்சிக்காலத்தை, கலை இலக்கிய நோக்கிலும், அரசியல் நோக்கிலும் இருண்ட காலம் என்பர்’.2
ஆனால், களப்பிரர்கள் ஆட்சியில் எண்ணற்ற தமிழ் இலக்கியங்கள் தோன்றியுள்ளன என்பதனைப் பல
இலக்கியச் சான்றுகளின் வழி அறியமுடிகிறது.
களப்பிரர்களின் ஆட்சியில் தமிழ் இலக்கியம்
களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற புதிய பாவினங்களும்
அவிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பல்கயாம்,
போன்ற இலக்கண நூல்களும் நரிவிருத்தம், சீவக சிந்தாமணி, எலிவிருத்தம், கிளிவிருத்தம்,
விளக்கத்தார் கூத்து, பெருங்கதை போன்ற சமண சமய இலக்கியங்களும் மூத்த திருப்பதிகங்கள்,
திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி, கயிலை பாதி காளத்திபாதி திருவந்தாதி,
திருஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை,
பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்பதேவர்
திருமறம், மூத்த நாயனார் இரட்டைமணி மாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை,
சிவபெருமான் திருவந்தாதி ஆகிய சைவ சமய நூல்களும் தோன்றின. மேலும், இவற்றோடு ‘நீதி
இலக்கியங்கள் எனப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பான்மை நூல்கள் இக்களப்பிரர்
காலத்தில் தோன்றியவைகளே ஆகும்”3 என்று மயிலை. சீனி.வேங்கடசாமி தமது களப்பிரர்
ஆட்சியில் தமிழகம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
களப்பிரர்கள் தமிழர்கள் இல்லை. அவர்கள் காலத்தில் தமிழ் இலக்கியங்கள் அதிக அளவில்
தோன்றவில்லை. தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பதாலே தான்
களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று குறிப்பிடுகிறார்கள் என்றால் அதில் உண்மை இருக்க
முடியாது. களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்பதன் காரணம் அறிய இயலவில்லை.
தொல்காப்பியர் காலந்தொட்டே தமிழகத்தில் பார்ப்பனர்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது என்பதனை
‘ஓதலுந் தூதும் உயர்ந்தோர் மேன’4 என்னும் தொல்காப்பிய நூற்பா உட்பட பல இடங்களில் காண
முடிகிறது. அதன் பிறகு எழுந்த சங்க இலக்கியங்களில் போரில் பார்ப்பன மக்களுக்கு
விதிவிலக்கு அளிக்கப் பட்டிருந்த செய்தியைப் பின்வரும் புறநானூற்று வரிகள் மூலம்
அறியமுடிகிறது.
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டீரும் பிணியுடை யீரும்”5
மேலும், சங்க இலக்கியத்தில் இராமாயண, பாரதக் கதைகள் பல பாடல்களில் இடம்பெற்றிருப்பதைக்
காண முடிகிறது. இவை, தமிழ் இலக்கியங்களில் பிராமணியத் தாக்கம் இருப்பதை
உணர்த்துகிறது. ஆனால், களப்பிரர் காலத்தில் பிராமணியத்திற்கு எதிராகத் தோன்றிய பௌத்த,
சமண சமயங்களின் செல்வாக்கு வளரத்தொடங்கியிருந்ததும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’
என்ற வள்ளுவத்தை அடியற்றி அற இலக்கியங்கள் தோற்றம் பெற்றதும், ஏற்கனவே கோலோச்சிக்
கொண்டிருந்த பிராமணியமும் சைவமும் ஆட்டமுறத் தொடங்கின. அதுமட்டுமல்லாது அன்றைய தமிழ்
ஆட்சியாளர்களைத் தம் ஆளுமையின் கீழ் வைத்துக் கொண்டு சுகவாழ்வு வாழ்ந்துகொண்டிருந்தவர்களின்
வாழ்வில் வறுமை ஏற்படத் தொடங்கியது.
மேலும், பாண்டிய அரசர்களிடம் பிராமணர்கள் தானமாகப் பெற்ற நிலங்களையெல்லாம் களப்பிரர்
பிடுங்கிக் கொண்டனர் என்ற செய்தியை வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.
‘கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந் தவிர்த்த பல்யானை முதுகுடுமிப் பெருவழுதி
என்னும் பாண்டியாதிராசன் நாகமா மலர்ச் சோலை நளிர்சினை மிசை வண்டலம்பும் பாகனூர்க்
கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கண்ணாளர் சொலப்பட்ட ச்ருதி மார்க்கம் பிழையாத
கொற்கை கிழானற் கொற்றன் கொண்ட வேள்வி அந்தணாளர் முன்பு கேட்க என்றெடுத்துரைத்து வேள்விச்
சாலை முன்பு நின்று வேள்விக்குடி என்ற பதியைச் சீரோடு திருவளரச் செய்தார். வேந்தனப்
பொழுதேய் நீரோடட்டிக் கொடுத்தமையால் நீடுபுத்தி துய்த்த பின்னளவரிய ஆதிராஜரை அகல நீக்கி
அகலிடத்தைக் களப்ர னென்னும் கலியரைகன் கைக்கொண்டதனை இறக்கிய பின்....”6
எனவும் ‘அங்கொருநாண் மாடமாதிற் கூடற்பாடு நின்றவர் ஆக்ரோதிக்கக் கொற்றனேய் மற்றவரைத்
தெற்றென நன்க கூவி ‘என்னேய் நுங்குறை’ என்று முன்னாகப் பணித்தருள ‘மேனாணின் குரவராற்
பான்முறையின் வழுவாமை மாகந்தோய் மலர்ச் சோலைப் பாகனூர்க் கூற்றத்துப்படுவது, ஆள்வ தானை
அடல் வேந்தேய் வேள்விக்குடி என்னும் பெயர் உடையது ஒல்காத வேற்றானை ஓடோத வேலி உடன் காத்த
பல்யாக முதுகுடுமிப் பெரு வழுதி என்னும் பரமேச்வரனால் வேள்விக் குடி என்னப்பட்டது.
கேள்வியாற்றரப் பட்டதனைத் துளக்கமில்லாக் கடற்றானையாய்க் களப்பரரா லிறக்கப்பட்டது’ என்று
நின்றவன் விஞ்ஞாப்யஞ் செய்ய...”7
எனவும் எடுத்துரைப்பதனைக் காணலாம். அதுமட்டு மல்லாது வச்சிரநந்தி சங்கம் வைத்துச் சமணம்
வளர்த்ததும் இக்காலகட்டத்தில்தான். சமணம் வளரத் தொடங்கியதும், சைவமும் வைணவமும் வீழத்
தொடங்கின. எனவேதான் தமிழ் இலக்கிய வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம்
என்கின்றனர். ஏனெனில் இலக்கிய வரலாறு எழுதியவர்களில் பெரும் பாலானோர் பிராமணியத்தில்
ஊறிய சைவர்களே ஆவர்.
“சங்கம் மருவிய காலம் களப்பிரர் ஆண்டகாலமாகக் கருதப்பட்டு, அந்த காலம் இருண்ட காலமாகப்
பெரும் பான்மை வரலாற்று ஆசிரியர்களால் புறந்தள்ளப்பட்டது. இருண்டகாலம் என்று சொல்லப்பட்ட
அந்த காலம் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முடிய சற்றேறக்குறைய
325 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் சமண சமயத்தைத் தொடக்க காலத்தில் ஆதரித்துப்
பரப்பிய காரணத்தால் சைவ சமயத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர்களை வெறுத்து
ஒதுக்கினர்.”8
ஆனால், களப்பிரர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே பகைமை இல்லை என மயிலை. சீனி.
வேங்கடசாமி கூறுகிறார்.
‘களப்பிரர் பிராமணர்களின் பகைவர் என்று சிலர் எழுதியுள்ளனர். பாண்டியன் முதுகுடுமிப்
பெரு வழுதி கொற்கை கிழான் நற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு முற்காலத்தில் வேள்விக்குடி
என்னும் ஊரைத் தானங் கொடுத்ததை அவனுடைய குடும்பத்தார் பரம்பரையாக அனுபவித்து வந்ததைக்
களப்பிரர் தங்கள் ஆட்சிக் காலத்தில் பிடுங்கிக் கொண்டனர்’ என்னும் சாசனச் சான்றை ஆதாரமாகக்
காட்டுகின்றனர்.
களப்பிரர், வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்று செப்பேடு கூறுவது உண்மைதான்.
ஆனால், அதன் காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க
வேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் அல்லர். களப்பிரர்
பிராமணருக்குத் தானங்கொடுத்து ஆதரித்ததை ‘அகலிடமும் அமருலகும்’ எனத் தொடங்குகிற
செய்யுள் கூறுகிறது.
“பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி
இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
மனமகிழ்ந்து
அருள்புரிபெரும் அச்சுதர் கோவே.”
என்று அந்தச் செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர் பார்ப்பனரை வெறுத்தவர் அல்லர்
என்பது தெரிகிறது.9
என்ற செய்யுள் வரிகளைக் காட்டுகிறார். களப்பிரர் வேண்டுமானால் ஆரியரை வெறுக்காமல்
இருந்திருக் கலாம், ஆனால் ஆரியர் களப்பிரரை வெறுக்காமல் இருந்திருக்க முடியாது.
ஏனெனில் இச்செய்யுளில் பிராமணருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள இருநிதி என்பது
குபேரனது நவநிதிகளுள் சொல்லப் படுகின்ற சங்கநிதி, பதுமநிதி என்பவையாகும்.
தானமாகப் பெற்ற பெரிய ஊர்களை இழந்த பிராமணர் களுக்கு இந்நிதிகள் எம்மாத்திரம். மேலும்,
பல்வேறு அறநூல்கள் தோன்றிய இக்காலகட்டத்தை இருண்ட காலம் என்பது அறிவுரை வழங்கி,
கட்டுப்பாட்டுடன் நடந்து நல்வழிப்படுத்த நினைக்கும் ஆசிரியரை வெறுக்கும் மாணவர்களின்
மனநிலை போன்றதாகும்.
எனவே களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்பது அர்த்தமற்றதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில்
களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று சொல்வது வரலாற்று இருட்டடிப்பே எனத் துணிந்து கூறலாம்.
அடிக்குறிப்புகள்
Epigraphia Indica, Vol. XVII, 1923, pp. 291 – 309
தமிழ் இலக்கியவரலாறு ஜனகாபதிப்பகம் - பக்:77,78
மயிலை சீனி.வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம். ப-93
தொல்காப்பியம், பொருளதிகாரம் 28 வது நூற்பா, இளம்பூரணர் உரை. ப-30
புறநானூறு: பாடல்.9
பாண்டியன் செப்பேடுகள் பத்து, வேள்விக்குடிச் செப்பேடு 31-40. மயிலை,சீனி.வேங்கடசாமி
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.
வேள்விக்குடிச் செப்பேடு, வரி 104-112 - களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.
அ.சவரிமுத்து, விடியலை நோக்கிக் களப்பிரர் வரலாறு முன்னுரையில்
களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பக் 59-60.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 13, 2015, 1:25:18 PM7/13/15
to kaviku...@gmail.com, brail...@googlegroups.com
களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா?
Print Email
களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் விளைந்தவை யாவை? அமைதி கெட்டது; கலகங்கள் தோன்றின;
மக்கள் வாழ்க்கை சீர்குலைந்தது; தமிழ் மரபு நூல்கள் அழிந்தன போன்ற குற்றச்சாட்டுகளே
களப்பிரர் ஆட்சியைப் பற்றிக் கூறப்படுகின்றன. சைவத்தில் நாட்டம் கொண்டவரே இத்தகைய
குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். களப்பிரரால் தமிழ்க் கழகம் அழியவில்லை. ஏற்கெனவே கழகக்
காலம் முடிந்து, கழகமருவிய காலம் தொடங்கியிருந்தது. களப்பிரர் வேற்று மொழியினர்;
சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றியவர்கள்; அவர்கள் தமிழகத்தில் ஆளுமை பெற்ற போது
இச்சமயங்கள் சாய்காலுடன் இருந்தன. ஆகவே, அவர்களின் தொடக்ககால ஆக்கம் அச்சமயங்களின் கொள்ளிட
மொழிகளாய் விளங்கிய பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளுக்கே பயன்பட்டது.
இது வரலாற்றுப் போக்கில் வளர்ந்த புதிய இயலேயன்றிக் களப்பிரரால் விளைந்த கேடு எனில்
முற்றும் பொருந்தாது. ஆயின், பின்னர் வந்த பல்லவர் காலத்தில் சமற்கிருதம் ஆக்கம் பெற்றதேன்?
களப்பிரர் ஆட்சியில் சமணர்கள் தமிழைப் பேணிக் காத்தனர். தமிழில் பல அரிய இலக்கண, இலக்கிய
நூல்கள் இவர்களால் எழுதப்பெற்றன. ஏற்கெனவே கி.பி. 470இல் வச்சிரநந்தி என்பான் அமைத்த
திரமிளசங்கம் சமண சமய வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று இத்தகைய நூல்கள் வெளிவர
உதவியது. நாலடியார் போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நுல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை
ஆகிய நூல்களும் சமண சாக்கிய சமயச் சார்புடைய நூல்களே. இவை கழகம் மருவிய காலத்தில்
தோன்றியவையே. ஆகவே, களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் புதிய பொலிவு ஏற்பட்டது, மொழி
வளர்ச்சியேற்பட்டது என்பதையே உணரமுடிகிறது.
ஆனால், களப்பிரர் தமிழகத்தில் இருண்ட காலத்தை ஏற்படுத்தி விட்டனர் எனப் பலரும்
புலம்புகின்றனர். அவ்வாறே எழுதியும் நம்பவைத்து விட்டனர். இவர்களின் புலம்பலுக்கும் காரணம்
இல்லாமலில்லை, களப்பிரர் வருகையால், தமிழகத்தில் கால்கொண்டிருந்த வருணாசிரம தருமம்
ஆட்டங்கண்டது; பார்ப்பனியம் நசிந்து போயிற்று. சமணமும், புத்தமும் இவற்றை ஒழிக்கவே
வீறிட்டெழுந்த சமயங்களென்பதையும், களப்பிரர் இச்சமய வீரர்களென்பதையும் மனத்திற்கொண்டு
நோக்கினால் உண்மை ஒளி தெரியும்.
இந்திய வரலாற்றில் எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் பார்ப்பனியம் செழித்துக் காணப்படுகிறதோ
அப்பொழுதெல்லாம் அங்கெல்லாம் பொற்காலம் எனப் போற்றப்படுவதையும், பார்ப்பனியத்திற்கு மாறாகத்
தோன்றும் ஆட்சி, அல்லது மாறாகத் திளைக்கும் கருத்துச்சுடர் நிலவும் போதெல்லாம் இருண்ட
காலம் என இழித்துரைக்கப்படுவதையும் காண்கிறோம். உலக வரலாற்றிலேயே சிறந்த இடத்தைப்
பெறுவது அசோகர் காலம்.
இந்திய வரலாற்றில் புத்தம் தலைசிறந்து விளங்கியதும் அசோகர் காலமே. ஆனால், இதனைப்
பொற்காலம் எனப் போற்றினரா? இல்லை. ஆரியம் செழித்து, மிளிர்ந்த குப்தர் காலத்தையே
பொற்காலம் என்கின்றனர். மௌரியர் காலத்தில் புத்தக் கலைகளும், அறிவியல் நூல்களும் ஏராளமாய்த்
தோன்றின; உலக நாடுகளிலெல்லாம் பரவின;
உலக நாடுகளிலிருந்து பல்வேறு பண்பாடுகள் இந்தியாவிற்குள் நுழைந்தன. ஆயினும், இதனைப்
பொற்காலம் என்றனரில்லை. இதைப் போலவே புத்தம் புகழ்பெற்ற குசானர் காலமும், வர்த்தனர்
காலமும் பொற்காலமாகவில்லை, இவை யாவும் ஆரியரின் வருணாசிரம தருமத்திற்கும் வேள்வி
முறைக்கும் மாறாகச் செயல்பட்ட ஆட்சியமைப்புகள்.
தமிழகத்திலும் ஆரியத்திற்கு ஏற்றமளித்த பல்லவர் ஆட்சிக் காலத்தையும், சோழர் ஆட்சியின் ஒரு
பகுதியையும் பொற்காலம் என்றனர். ஆகவே, சமணமும் புத்தமும் தழைக்கவும், வருணாசிர தர்மம்
ஒழியவும் பாடுபட்ட களப்பிரர் ஆட்சிக் காலத்தை இருண்ட காலம் என்று அழைப்பதைக் கண்டு
வியப்படையத் தேவையில்லை. ஆரியம் சிறந்தோங்கி நின்ற காலங்களையே இந்திய வரலாற்றில்
பொற்காலம் என்பர். இது கண்மூடித்தனமாகக் கையாளப்படும் பொது நெறி.
(நூல்: தமிழக வரலாற்று வரிசை _ 9, தாய்நில வரலாறு- _ 1)

- பேரா.முனைவர் கோ.தங்கவேலு

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
Jul 14, 2015, 12:37:07 PM7/14/15
to brail...@googlegroups.com, kaviku...@gmail.com
Reply all
Reply to author
Forward
0 new messages