அறிவியல் ஆயிரம் : உணவுப்பொருள் உற்பத்தியில் சவால்
உணவுப்பொருள் உற்பத்தியில் சவால்
இந்தியாவில் உணவுப்பொருள் உற்பத்தியில் பருவநிலை மாற்றம், போர், கட்டண உயர்வு, வெப்பநிலை ஆகிய நான்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம், உணவுப்பொருள் உற்பத்தியை குறைக்கிறது. மேற்காசிய போர், எண்ணெய் வினியோகத்தை பாதிக்கிறது. அதிகரித்த ஏற்றுமதி, இறக்குமதி கட்டணங்கள் வியாபார அளவை கட்டுப்படுத்துகிறது. நான்காவதாக உயரும் வெப்பநிலை. இந்தியாவில் ஏப்ரலில் பல நகரங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியசை தாண்டியது. இதற்கு மரங்கள் அழிப்பு, காடுகளின் பரப்பளவு குறைவது காரணமாகிறது.
தகவல் சுரங்கம்
போரில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் விதமாக 1919ல் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களின் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ஹென்றி துனாத் பிறந்த தினமான மே 8, உலக செஞ்சிலுவை சங்க தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த அமைப்பு மூன்று முறை (1917, 1944, 1963) அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் (1939 - 1945) நான்கு கோடி பேர் பலியாகினர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் தினம் ஐ.நா., சார்பில் மே 8ல் கடைபிடிக்கப்படுகிறது.
செஞ்சிலுவை சங்க தினம்