அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் வாழ முடியுமா...
PUBLISHED ON : ஏப் 21, 2025 12:00 AM
கோள்
அறிவியல் ஆயிரம்
செவ்வாயில் வாழ முடியுமா...
செவ்வாய் கோளின் பாறைகளில் கார்பன் எச்சம் இருப்பதை, 'நாசா'வின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் சேகரித்த மாதிரிகளில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது அங்கு பல நுாறு கோடி ஆண்டுக்கு முன், உயிரினங்கள் வாழக்கூடியதாக இருந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. மேலும் செவ்வாய் கோளில் அடர்த்தியான, கார்பன் டை ஆக்சைடு நிறைந்த வளிமண்டலம், அதன் மேற்பரப்பில் திரவ நீர் இருந்திருக்கிறது. இவையிரண்டும், பாறைகளுடன் வினைபுரிந்து கார்பனேட் தாதுக்களை உருவாக்கியிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம் : குடிமை பணிகள் தினம்
PUBLISHED ON : ஏப் 21, 2025 12:00 AM
குடிமை பணிகள் தினம்
இந்தியாவின் வளர்ச்சியில் ஐ.ஏ.எஸ்., / ஐ.பி.எஸ்., / ஐ.ஆர்.எஸ்.,/ ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் (குடிமை பணி) அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. 1947 ஏப்., 21ல் டில்லி 'மெட்கால்பே' இல்லத்தில், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல், சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் முதல் குழுவிடம் (பேட்ஜ்) உரையாற்றினார். இதை நினைவுபடுத்தும் விதமாக 2006ல் ஏப். 21ல் தேசிய குடிமை பணிகள் தினம் தொடங்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளை கவுரவிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.