அறிவியல் ஆயிரம் : பூமியின் பாதுகாப்பு வளையம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Apr 1, 2026, 9:01:59 PM (2 days ago) Apr 1
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : பூமியின் பாதுகாப்பு வளையம்

 பூமியின் வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் சூழப்பட்டுள்ளது. இதில் நைட்ரஜன் 78.08 சதவீதம், ஆக்சிஜன் 20.95%, ஆர்கன் 0.93%, கார்பன் டை ஆக்சைடு 0.04%, நியான், ஹீலியம், மீத்தேன் உள்ளிட்டவை 0.0025% உள்ளன. வளி மண்டலம் ஒரு கம்பளியை போல பூமியை மூடி உள்ளதால் அதிக குளிர், அதிக வெப்பத்திலிருந்து பூமியை காக்கிறது. வளிமண்டலம் ட்ரோப்போஸ்பியர் (0 - 12 கி.மீ., உயரம்), ஸ்ட்ராடோஸ்பியர் (12 - 50 கி.மீ.,) , மீசோஸ்பியர் (50 - 85 கி.மீ.,), தெர்மோஸ்பியர் (85 - 600 கி.மீ.,) எக்ஸோஸ்பியர் (600 - 10,000 கி.மீ.,) என ஐந்து அடுக்காக பிரிக்கப்பட்டுள்ளது.
  தகவல் சுரங்கம் : உலக ஆட்டிசம் தினம்

 ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளை நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. 100ல் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது. உலகில் 6.10 கோடி பேர் 'ஆட்டிசம்' பாதித்தவர்கள். குழந்தையின் 10 - 18 மாதங்களில் பாதிப்பை கண்டறிய முடியும். இவர்கள் தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில் கலந்து பழகும் திறன் போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். ஒரே மாதிரி விஷயங்களைத் திரும்ப திரும்பச் செய்வர். ஐ.நா., சார்பில் ஏப். 2ல் உலக ஆட்டிசம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஆட்டிசம், மனித நேயம் - ஒவ்வொரு உயிருக்கும் மதிப்பு உண்டு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
 
Reply all
Reply to author
Forward
0 new messages