அறிவியல் ஆயிரம்:பாலைவனத்தில் தண்ணீர்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Mar 7, 2026, 8:40:31 PM (6 days ago) Mar 7
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்:பாலைவனத்தில் தண்ணீர்

 வேதியியலுக்கான நோபல் பரிசு (2025) வென்றவர் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் உமர் யாஜி. இவர் பாலைவனத்தில் வறண்ட காற்றில் இருந்து தண்ணீர் பெறும் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளார்.
 காற்றின் ஈரப்பதம் 20% இருந்தாலும் வேலை செய்யும். இது சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும். இதன்மூலம் ஒரு நாளைக்கு 1000 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். அதிக நுண்துளைகள் கொண்ட உலோக- கரிம கட்டமைப்புகளில் இயங்கும் இந்த தொழில்நுட்பம், குறைந்த ஈரப்பதம் உள்ள சூழல்களில் கூட நீராவியை ஈர்த்து தண்ணீரை எடுக்கும் திறன் உடையது என தெரிவித்துள்ளனர்.
 தகவல் சுரங்கம்:சர்வதேச பெண்கள் தினம்

 உலகில் முந்தைய காலங்களில் இருந்த பல அடக்குமுறைகளை தாண்டி தான், இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கின்றனர்.
 அவர்களுக்கான சம உரிமை, வாய்ப்புகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 8ல் உலக பெண்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பெண் என்பவள் மகள், சகோதரி, மனைவி, தாய் என பல பரிணாமங்களாக திகழ்கின்றனர்.

பெண் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படை. பெண்களுக்கு எதிரான பாலியல், வன்கொடுமை உள்ளிட்டவை தடுக்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages