அறிவியல் ஆயிரம் : இரவை பகலாக்கும் திட்டம்
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது. இந்நிலையில் விண்வெளியில் பிரதிபலிப்பு கண்ணாடிகளை நிறுவி, இரவு பகுதிகளில் சூரிய ஒளியை திருப்பும் திட்டத்தை அடுத்தாண்டு செயல்படுத்த உள்ளதாக கலிபோர்னியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதிபலிப்பு கண்ணாடியுடன் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளது. சூரிய ஒளி குறைந்த பகுதிகளுக்கு இத்திட்டம் பயன்பெறும் என தெரிவித்துள்ளது. ஆனால் இது இயற்கைக்கு எதிரானது என வானியல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்: உலக மலைகள் தினம்
உலக மலைகள் தினம்
உலகில் 200 கோடி பேர், தண்ணீருக்கு, மலைகளை நம்பியே உள்ளனர். 50 சதவீத பல்லுயிரினங்களுக்கு மலையே பிரதானம். ஏற்கனவே 600 பனிசிகரங்கள் அழிந்து விட்டன. 1.5 கோடி பேர் பனிப்பாறை ஏரிகளில் இருந்து வரும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர். உலக சுற்றுலாவில் 15 - 20 சதவீதம் மலைப்பகுதிகள்தான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மலைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச. 11ல் உலக மலைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'மலைகளில் தண்ணீர், உணவு, வாழ்வாதாரத்திற்கு பனிப்பாறைகள் முக்கியம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.