442 views
Skip to first unread message

aranga. raja tamil

unread,
Oct 20, 2014, 2:48:58 AM10/20/14
to brailleacl, Valluvan Paarvai
விகடன் டைம்பாஸ்.

்கு ஃபேஸ்புக், ட்விட்டர்னு ஏகப்பட்ட வழிகள் இருக்கு. இந்தக் குழந்தைகள்
தங்களோட மனசுல இருக்கிறதைப் பகிர்ந்துக்கிட்டா எப்படி இருக்கும்..?
 ஏன் மம்மி, டாடி... குடும்பத்தோட ஊருக்குக் கிளம்பும்போது, நாங்க ஆர்வமா
முன்னாடி ஓடிப்போய் பஸ்ல ஏறி ஜன்னல் ஓரமா சீட்டைப் போட்டு, கையாலேயே
துடைச்சுவெச்சு உட்கார்ந்திருந்தோம்னா, நீங்க சாவகாசமா உள்ள வந்து வேற
சீட்ல உட்கார்றதும் இல்லாம, அந்த சீட்ல 'அது நொள்ள, இது நொள்ள’னு சொல்லி,
நாங்க பிடிக்சுவெச்சிருந்த சீட்ல உட்காரவிட மாட்டீங்க, சரினு நாங்களும்
பெருந்தன்மையா எழுந்து உங்க சீட்ல வந்து உட்கார்ந்தா, 'உன்னை ஜன்னல் ஓரமா
உட்காரவெச்சா வெளியில கையை நீட்டுவே, இங்கேயே உட்காரு’னு சொல்லி எங்களை
அங்கேயும் உட்காரவிட மாட்டீங்க... அப்போ, எங்ககூட போட்டி போட்டு சீட்
போட்ட சக போட்டியாளர்கள் எங்களை எப்படிப் பார்ப்பாங்க தெரியுமா..? ஷேம்
ஷேம் பப்பி ஷேம்!
 ஒரு நாளாவது எங்களை போகோ சேனல் பார்க்கவிடுறீங்களா, ரிமோட்டைப் பிடுங்கி
அந்த நமீதா ஆன்ட்டி ஸ்கர்ட் போட்டு ஆடுற 'வருவியா வர மாட்டியா’னு பாட்டை
வெக்கிறீங்களே... அதைப் பார்த்தா ராத்திரி தூங்கும்போது பேய், பிசாசு
கனவெல்லாம் வருது தெரியுமா?
 டாடி... எனக்கு ஒரு டவுட்டு. அது ஏன் பஸ்ல எங்களுக்கு அரை டிக்கெட்
எடுக்கிறதுல அவ்ளோ ஆர்வமா இருக்கீங்க. அதுல மிச்சப்படுத்தி வர்ற காசை
வெச்சு சொந்தமா ஒரு பஸ்ஸா வாங்கப்போறீங்க. அந்த கண்டக்டர் அங்கிளே,
'பார்த்தா பெரிய பையனா இருக்கானே... ஃபுல் டிக்கெட்டுதான்’னு சொன்னா,
நீங்க அப்போதான், 'அவன் இன்னும் பால் குடி மறக்காம இருக்கான். அவனைப்போயி
பெரியவன்கிறீங்க’னு கேட்பீங்க. டென்ஷனான அந்த கண்டக்டர் அங்கிள், 'சரி
சரி... அந்தக் கம்பி பக்கத்துல போய் நிக்கச் சொல்லுங்க. ஹைட்டு என்னன்னு
பார்ப்போம்’னு நீங்க எதிர்பார்த்த மாதிரியே சொல்வார். ஏன் டாடி, உங்க ஒரு
ரூவா, ரெண்டு ரூவா பிரச்னையில என் ஹைட்டு, வெயிட்டெல்லாம் ஏன் இப்படி
பப்ளிக்ல லீக் பண்றீங்க? சொல்லுங்க டாடி சொல்லுங்க...
 ஆமா, நாங்க என்ன உங்களுக்கு டி.வி சேனலா..?  சொந்தக்காரங்க நம்
வீட்டுக்கு வந்தா, ஹோம்ஒர்க் பண்ணிட்டிருக்கிற எங்களைக் கூப்பிட்டு
நடுவுல நிக்கவெச்சு, ஏதோ வித்தை காட்டுறவங்களை சுத்தி நிக்கிற மாதிரி
எல்லோரும் உட்கார்ந்துகிட்டு, 'எங்க சொய்ங்... சொய்ங்... பாடு’, 'எங்க
ஃபை ஃபைக்கு ஆடு’னு டார்ச்சர் பண்ணவேண்டியது. ஆல் மம்மீஸ் டாடீஸ்...
சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தா, அவங்களுக்கு சிக்கன் சமைச்சுப்போடுங்க.
இப்படி எங்களை சின்னாபின்னமாக்காதீங்க.
 ஏன் டாடி..? குடிச்சுட்டு லேட்டா வீட்டுக்கு வர்றதே தப்பு. அதுக்கு
முதல்ல மம்மிகிட்ட ஸாரி சொல்லுங்க... அதை விட்டுட்டு லேட்டா வந்த
பிரச்னையை மூடி மறைக்கிறதுக்காக, 'தம்பிக்கு பக்கோடான்னா ரொம்ப
பிடிக்கும்ல, அதான் வாங்கிட்டு வந்தேன்... குட்டியை எழுப்பு’னு கனவுல
பேட்டிங் பண்ணிட்டு இருந்த எங்களை டிஸ்டர்ப் பண்ணி எழுப்பி ஏன் டாடி அந்த
நமத்துப்போன பக்கோடோவை வாயில திணிக்கிறீங்க. பேசாம தூங்குங்க டாடி...
காலையில ஸ்கூலுக்குப் போகணும்.
 ஏன் மம்மி... இப்படி அடிக்கடி பக்கத்து வீட்டுக்குப் போய், 'காபி பொடி
வாங்கிட்டு வா’ 'உறைமோர் வாங்கிட்டு வா’னு கொடுமை பண்றீங்களே, கையில
டம்ளரோட போனா அந்த வீட்டு ஆன்ட்டி  எப்படி முறைக்கிறாங்க தெரியுமா?
 காலாண்டு லீவுக்கு ஊருக்குப் போயிருக்கோமே, கொஞ்ச நேரம் ஃப்ரீயா
இருக்கவிடுங்களேன் மம்மி...  உங்க அங்காளி பங்காளிங்க முன்னாடி உங்க
ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் இமேஜை கிரியேட் பண்றதுக்காக 'டேய் அசைன்மென்ட் எழுதி
முடிச்சுட்டியா, கோணல் மாணலா மட்டும் எழுதி வை. வெளுக்குறேன் உன்னை’னு
சீன் போட வேண்டியது. அதுவும் இந்த டாடீஸ் இருக்கிறாங்களே...  உங்களுக்கு
எங்க ஸ்கூல்லயே எங்க திவ்யா மிஸ்ஸைத் தவிர, வேற யாரையும் தெரியாது.
அப்புறம் ஏன் டாடி இப்படி?
 ஏன் மம்மி, கோவிலுக்குப் போகும்போது கடையில விக்கிற அந்த கூலிங்கிளாஸை
வாங்கிக் கொடுங்கனா வாங்கிக்கொடுக்க மாட்டீங்களா, அது என்ன 'கோவிலுக்குப்
போயிட்டு வரும்போது வாங்கித்தர்றேன்’னு சொல்ற கெட்ட பழக்கம்.
கோவிலுக்குப் போகும்போதே அதை வாங்கிக்கொடுத்தா, சாமி உங்க கண்ணைக்
குத்திடுமா மம்மி...?
ஐயோ புல்லைங்களா இது? குட்டி சாத்தானுங்க.

--
"தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர்" வென்றதில்லை!!.
நட்புடன்
ர. ராஜா. M. a, M ed, Phd'
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
மாநிலக் கல்லூரி
சென்னை 5.

Ashoak P

unread,
Oct 21, 2014, 5:30:10 AM10/21/14
to brailleacl
ரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற
ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால்
ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம்.
கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி,
பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க
பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான்
தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!

34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு
அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத்
தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில்
சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன்
ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான்
முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட்! மூன்றாவது
அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன்
போல்டு! தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு!
hina-rabbani-khar-meets-sm-kri…
தமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை
ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா
ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு
நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு,
அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை
காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து
மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின்
பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது,
ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி
பேசுவது?” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி
விளக்கத் தேவையில்லை.
• “பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.
• “மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” –
இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.
• “அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல்,
அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும்
நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.
• “காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி
விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு
மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில்
டுடே.
• புதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான
கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான
சீமா கோஸ்வாமி.
• “ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ்
பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது
கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி.
என்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை
ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ
பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக்
கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும்
வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது,
மும்பையின் மிரர் பத்திரிகை.
79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர்
கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து
புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை
கவர்ந்திழுக்க முடியவில்லையாம்.
இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய
ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக
வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக்
கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார
வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம்
அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு! இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக்
காட்டும் கண்ணாடி!
இரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று
தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ! பெனாசீர் பூட்டோ போல
பாக்கின் பஞ்சாப் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நிலவுடமை குடும்பத்தைச்
சேர்ந்தவர் ஹீனா. இந்தியாவைப் போல பாக்கிலும் இத்தகைய பாரம்பரிய
பணக்காரக் குடும்பங்களே அரசியலிலும், தொழிற்துறையிலும் கோலேச்சுகின்றன.
அந்த வகையில் ஹீனாவின் வருகை ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அவர்
அமைச்சராக்கப்பட்ட நேரம்தான் முக்கியமானது. பின்லேடன் மரண நாடகத்திற்குப்
பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான
பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை
குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின்
பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம்
நினைத்திருக்கலாம்.
இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார்
வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக
இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட
மேம்பட்டே இருக்கிறது. டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர்
அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார்.
அப்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது
அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத
மேடையில் மட்டும்தான் இந்திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத
பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
சரி பாக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அப்படி என்ன பேசி
சாதிக்கப் போகிறார்கள்? வந்த செய்திகளைப் பார்க்கும் போது “இதுவரை பேச்சு
வார்த்தை திருப்தி அளிக்கிறது, இனி தொடர்ந்து பேசுவதற்கு
ஊக்கமூட்டுகிறது” இதுதான் அந்த சாதனையின் சிகரம். பேசுனோம், பேசிகிட்டு
இருக்கோம், பேசுவோம் என்பதுதான் சாதனை என்றால் அர்த்தமில்லாமல்
வளவளவென்று பேசும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகளையே அமைச்சராக்கலாமே?
தீவிரவாதத்தை எதிர்க்க இருநாடுகளும் இணைந்து பணிபுரிய பேசுவார்களாம்.
பணிபுரிவது இருக்கட்டும், மும்பை 26/11 தாக்குதலுக்காக பாக்கில் உள்ள
குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா கேட்டால், சம்ஜூத்தா
எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கான இந்திய குற்றவாளிகளை பாக் கேட்கிறது.
மும்பையில் கொல்லப்ப்பட்டது இந்தியக் குடிமகன்களென்றால், சம்ஜூத்தாவில்
கொல்லப்பட்டது பாக் குடிமகன்கள். அடுத்து காஷமீர் பிரச்சினை குறித்து
இந்தியா ஏதாவது வாயைத் திறந்தால் மாட்டிக் கொள்ளும். முழு காஷ்மீரத்து
மக்களும் ஏகோபித்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போது
அங்கும் பாக்கின் கையே ஓங்கி நிற்கிறது. தற்போது காஷ்மீர் மக்கள் இயக்க
பிரதிநிதிகளை ஹீனா சந்தித்ததை இந்திய அரசு கண்டித்திருப்பதாக செய்தி
வந்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் என்று
சொல்லும் இந்திய ஊடகங்கள் இதனாலொன்றும் ஹீனாவை அவ்வளவாக கண்டித்து
விடவில்லை. மேலும் இந்தியா வந்து காஷ்மீர் போராட்டக்காரர்களை
சந்திப்பதற்கு ஒரு தில் வேண்டுமே?
ஆக இறுதியில் என்னதான் பேசினார்கள்? இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள்
வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை
அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல
விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய
முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே? அதைத்
தீர்ப்பது எப்படி? பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு
பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது, அதை யார் கேட்பது?
மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த
பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன.
ஒன்று மட்டும் உண்மை. இந்திய பாக் கவுரவப் பிரச்சினைகள் இருநாட்டு ஆளும்
வர்க்கங்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதை வைத்து மக்களை
திசைதிருப்புவதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அழியாத சாக்கு.
அதனால்தான் நேற்று வரை பாக் காஷ்மீரில் குண்டு போட்டு அழிக்க வேண்டும்
என்று சாமியாடிய இந்திய ஊடகங்கள் இன்று பாக்கிலிருந்து வந்திருக்கும்
தேவதையை ஆராதிக்கின்றன. அந்த வகையில் இந்த பேச்சு வார்த்தையில் முழு
வெற்றி அடைந்திருப்பது பாகிஸ்தான்தான்.
இந்திர பதவிக்கு ஆப்பு வைத்த மாமுனிவர்களின் தவத்தை கலைத்த ரம்பா,
ஊர்வசி, மேனகை என உலகின் முதல் ஜெள்ளாயுத்தை தயாரித்த இந்த புண்ணிய
பூமிக்கு இது வெட்கக்கேடல்லவா? அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு
அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை
சூடலாமே? அப்படி ஒன்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது
கஷ்டமானதில்லையே? ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு
நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம்.
கிருஷ்ணா? இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட்
முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியாதா என்ன?
கமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி
போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் ந

Ashoak P

unread,
Oct 22, 2014, 12:35:25 AM10/22/14
to brailleacl
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send
an email to brailleacl+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வநக்கம் னந்பர்கலே, இது எணது முதல் பதிவு. பிழைகளள் இருப்பிண் மண்ணிக்கவும்.

Ashoak P

unread,
Oct 22, 2014, 12:49:46 AM10/22/14
to brailleacl
படித்துள்ளேன், ஆனால், வேலை மட்டும் கிடைக்கவில்லை. இது பெரும்பாலான
இளைஞர்களின் புலம்பல்.
தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன், மொழிப்புலமை ஆகிய மூன்றிலும் கவனம்
செலுத்தாமல் இருப்பதுதான் வேலை கிடைக்காததற்கான அடிப்படைக் காரணங்கள்.
அதேபோல, மாணவப் பருவத்தில் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் இல்லாமல்,
நாட்டு நடப்புத் தெரியாத தலைமுறை உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தலைமுறையினருக்கு இணையதளம் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ள
முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ஆனால், இணையதளத்தில்
வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே நம்பகத்தன்மையுடையவை அல்ல என்பதை
உணராதவர்களாக இருப்பது வேதனைக்குரியது.
அதேபோல, மாணவர்களின் தோல்விக்குத் தாய்மொழியாம் தமிழைச் சரளமாகப் பேசத்
தெரியாமல் இருப்பதும் முக்கியக் காரணமாகும். இதே நிலை
தொடர்ந்தால், வரும் காலங்களில் ஆங்கில மொழிக்குச் சிறப்புப் பயிற்சி
மையங்கள் செயல்படுவதைப்போல, தமிழைப் பேசவும், படிக்கவும் பயிற்சி
மையங்கள் தோற்றுவிக்கும் நிலை உருவாகும். கிட்டத்தட்ட இப்போதே அந்த நிலை
வந்துவிட்டதாகக்கூட கூறலாம்.
மாணவரின் முதல்கட்டத் தோல்வி மொழியில் இருந்தே தொடங்குகிறது. உலக நாடுகள்
சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு அடிப்படைக் காரணம் பேச்சுரிமைதான்.
ஆனால், சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பிறகும், நமது இளைஞர்கள்
பேசத் தயங்கியே வாழ்க்கையை இழந்துவிட்டனர். ஆனால், வீண் பேச்சு,
விவாதங்களில் மட்டும் சளைப்பதில்லை.
இதை உணராமல் – உணர முயற்சிக்காமல் படித்துவிட்டேன், எனக்கு அரசுதான் வேலை
அளிக்க வேண்டும் என்று காலத்தைக் கழிப்பது சுய முன்னேற்றத்துக்கும்,
நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவாது. எனவே, ஆக்கப்பூர்வமாகவும்,
அறிவுப்பூர்வமாகவும் செயல்படுவார்களேயானால், இளைஞர்கள் யாரிடமும் வேலை
கேட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்படாது.
ஆளுமைத் திறன் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியும். பணம்
சம்பாதித்தால்தான் மனிதனைச் சம்பாதிக்க முடியும் என்ற சூழல் நிலவுவது
என்பது உலகறிந்த உண்மை. இந்தச் சூழலில், ஆளுமைத் திறன் வளர்த்தலில்
இன்றைய இளைஞர் சமுதாயம் அக்கறை செலுத்த வேண்டும்.
தாய் மொழி, தேசிய மொழி, பன்னாட்டு மொழிகளில் புலமையை வளர்த்துக்கொள்ள
வேண்டும். இது புலம்பெயர்ந்து செல்லும் அனைவருக்கும் அடிப்படையானது,
அவசியமானது. ஆனால், எத்தனை இளைஞர்கள் படிக்கும் காலத்தில் மொழி அறிதலில்
கவனம் செலுத்துகின்றனர் என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்கும் நிலையே
உள்ளது.
முதுநிலைப் பட்டம் பெற்றவருக்குக்கூட தான் வாங்கிய பட்டத்தில் இடம்
பெற்றுள்ள வாசகங்களின் அர்த்தம் தெரியாமல் இருப்பது கசப்பான உண்மை.
புதுக்கோட்டையில் இயங்கி வரும் ஆங்கிலப் பயிற்சி நிறுவனம், தமிழகம்
முழுவதும் உள்ள தனது பயிற்சி மையங்களுக்குத் தேவையான ஆசிரியர்களைத்
தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆசிரியர் பயிற்சி
முடித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் உள்பட சுமார் 13 ஆயிரம் பேர்
விண்ணப்பித்தனர். ஆனால், இவர்களில் தேர்வானவர்கள் 2 பேர் மட்டும்தான்
என்பதிலிருந்து, ஆங்கில மொழி அறிவில் நமது இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
வறுமையால் படிக்க இயலாத சூழலில் எந்த வேலையும் செய்யலாம் என்ற சூழல்
இருந்தது. ஆனால், இன்று உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்ட நிலையில்,
ஆசிரியர் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சாராயக் கடைகளில்
பணிக்குச் செல்வது அவர்கள் தகுதியை அவர்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்
என்றுதானே அர்த்தம்.
நமது பள்ளிகளில் பாடங்கள் மட்டுமே போதிப்பது, தன்னம்பிக்கை,
ஆளுமைத்திறன், உலக விஷயங்களைப் போதிக்காதது ஆகியனவே இதற்கெல்லாம்
அடிப்படைக் காரணம். அந்தக் காலத்தில் இருந்ததைப்போல நீதி போதனை
வகுப்புகளை பள்ளிகளில் மீண்டும் தொடங்க வேண்டும். அதில் கூறப்படும்
நீதிக் கதைகளைக் கேட்காமல் பிள்ளைகள் வளர்வதால்தான் நேர்மை, நியாயம்,
நீதி, மனசாட்சி போன்றவை எங்கே கிடைக்கும்? என்ன விலை எனக் கேட்பதுடன்,
குறுக்கு வழியில் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும்
நிலை அதிகரித்துள்ளது.
பள்ளிகளில் பொது அறிவை வளர்க்கும் போக்கு அதிகரிக்க வேண்டும். தினமும்
நாளிதழ்கள், வார இதழ்களைப் படித்து, அதில் உள்ள நல்ல விஷயங்களைத்
தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கான களமாக நூலகங்களை உருவாக்க வேண்டும்.
அப்போதுதான் மாணவர்கள் அறிவுத் திறனுடன் ஆளுமைத் திறனையும் பெற முடியும்.
இந்தத் தகுதிகளை வளர்த்துக் கொண்டால்… யாருக்கும் வேலை இல்லை என்ற கேள்வி
தானாகவே மறைந்துவிடும்.

Ashoak P

unread,
Oct 22, 2014, 2:25:13 AM10/22/14
to brailleacl
---------- Forwarded message ----------
From: Ashoak P <youth...@gmail.com>
Date: Wed, 22 Oct 2014 10:19:45 +0530
Subject: [Braille Acl]
To: brailleacl <brail...@googlegroups.com>

Professor k. kumar

unread,
Oct 22, 2014, 6:51:19 AM10/22/14
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com, Thamaraikkannan B

கோலம் தோன்றிய கதை
Submitted by on Mon, 11/23/2009 - 18:38
பழங்காலத்தில் மணலில் கோல வடிவங்களை போட்டிருக்கிறார்கள், இதற்கு மனலோவியம் என்று பெயர், பரி பாடல் என்னும் நூலில் மட நல்லார் மணலில் எழுதிய பாவை என்று எழுதியிருப்பார்.
“தோலில் கோத்த் செவ்வரிப் பாறையின் கண்ணத் தொழ்திய குரீஇ”
தமிழ்நாட்டுக் கோலம் மிகப் பிரசித்தி பெற்றது, இக்கோலம் அரிசி மாவினால் பலவித வடிவங்களில் போடப்படுகிறது, திபாவளி, பொங்கல், நவராத்திரி, கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, திருமணம், வருடப்பிறப்பு, போன்ற பண்டிகைகளில் வாசலில் மிக பெரிய வண்ணக் கோலங்கள் இடுவர், பண்டிகை இல்லாத நாட்களில் சிறிய கோலங்கள் இடுவர்.
வண்ணங்களுக்கும் முக்குணங்களுக்கும் அதிக தொடர்புண்டு
முக்குணங்கள்
ஸத்வம் – ஸத்விகம் அல்லது சாந்தம்
தாமோ - தாமதம்
இரஜோ – இராக்கம்
இவை முறையே வெள்ளை (கோலப்பொடி), கருநீலம் (சாணம்), சிவப்பு (செம்மண்), ஆகிய நிறங்களைக் குறிக்கிறது.
கோலப்பொடிகளின் நிறங்களும் அவற்றின் வெளிப்படுத்தும் குணங்களும்
மஞ்சள் - பக்தி, மங்களம்
பச்சை - அன்பு, வளம்
ஆரஞ்சு - தியாகம்
வெள்ளை - தூய்மை, சமாதனம்
சிவப்பு - வீரம்

தண்ட காருண்யத்தில் முனிவர்களுடைய பத்தினிகள் மூலிகை மற்றும் மாவினால் கோலமிட்டுத் தங்கள் பர்ணசாலைகளை அழகுப்படுத்தினர், ஹோலி என்ற பெயருடைய முனிவரின் மனைவி தன் கணவர் இறந்ததும், அவருடைய உருவத்தை பல வகையான வர்ணத்தூள்களை கொண்டு கோலத்தால் கோலத்தால் வரைந்து நாற்பத்தெட்டு நாட்கள் அக்கோலத்திலேயே படுத்திருந்து தன் உயிரை விட்டாள், ஹோலியின் நினைவாக போட்ட கோலம் பல வண்ணங்களால் போடப்பட்டததால் ரங்கோலி (ஹிந்தியில் ரங் என்றால் வர்ணம்) எனப் பெயர் பெற்றது. இன்று முக்கியமான பண்டிகைகளுக்கும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் ரங்கோலி அழகு சேர்க்கிறது.
இசையிலுள்ள பலவித ராகங்களை போலவே, பலவித நிறங்களும் உள்ளத்தை மகிழ்ச்சியை உண்டு பண்ணும் என்று விஞ்ஞான உண்மையை ரங்கோலி கலர் கோலம் உணர்த்துகிறது.
கோலத்தை குஜரத்தில் – சக்தியாஸ் என்றும் வங்காளத்தில் அல்பனா என்றும், ஆந்திராவில் மொக்கு என்றும், மகாராஷ்ட, கர்நாடகவில் ரங்கவல்லி என்றும், உத்திராப்பிரதேசத்தில் ஸரன்ஸி என்றும் ராஜஸ்தானில் மாண்டனா என்றும் அழைக்கின்றனர்.
குஜராத் – ரங்கோலி
குஜராத்தில் போடப்படும் ரங்கோலியை சக்தியாஸ் அல்லது சாகியா என்று அழைக்கிறார்கள், இக்கோலத்தை குஜராத் மக்கள் மஞ்சள் பொடி கொண்டு அழகு செய்து மகாலஷ்மியை வீட்டிற்க்கு அழைக்கிறார்கள், இந்த அழகிய கோல வடிவத்தை உடைகளிலும் சில உடை நிறுவனங்களும் பயன்படுத்துகிறார்கள்.
கேரளா
கேரளாவில் பிரசித்தி பெற்றது பூக்கோலம், இப்பூக்கோலம் ஒணப்பண்டிகையின் போது போடப்படுகிறது. இதை அத்திப்பூவிடல் என்று அழைக்கிறார்கள், நமக்கு பிடித்த சிறிய மாதிரி வரைந்து கொண்டு அந்த வடிவத்தின் மேல் பல நிறமுள்ள பூக்களின் இதழ்களை வைத்து அழகுபடுத்த வேண்டும், பல நிற பூக்கள், கோல வடிவில் பார்க்கும்பொழுது மிகவும் அழகாக இருக்கும்.
ஆந்திரப்பிரேதசம் ஆந்திரா (அ) ஆந்திர மாநிலம்
ஆந்திர பொட்டு கோலத்திற்க்கு பெயர் பெற்றது, பொட்டு வைத்து இணைப்பது இக்கோலத்தின் சிறப்பு, பல கிராமங்களில் அரிசிமாவால் போடுகிற பொட்டுக்கோலம் மிக அழகு வாய்ந்தது.
admin's blog English --
--
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
இவன்
கெ. குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை மாநிலக் கல்லூரி தன்னாட்சி சென்னை-5.


அலைபேசி எண் – 9444218357.
kaviku...@gmail.com

Professor k. kumar

unread,
Oct 23, 2014, 12:48:08 AM10/23/14
to brail...@googlegroups.com
சிறுகதை
கல்யாணி
ந. முத்துசாமி
என் பேத்தி ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
காலை நேரம்.
புஞ்சையிலிருந்து தொலைபேசியில் செய்தி வந்தது. 'கல்யாணி இறந்துவிட்டார். நேற்று இரவு
இறந்துபோனார். இன்று பிற்பகல் எடுக்கிறார்கள்' என்றார், தொலை பேசியில் பேசியவர்.
'நீங்கள் யார் பேசுவது?' என்று நான் கேட்டேன்.
'நான் நரசிம்மனின் மகன்' என்றார் அவர்.
எந்த நரசிம்மன்?
எனக்கு நிறைய நரசிம்மன்கள் பழகியிருந்தார்கள், கூத்தில் உள்ள நரசிம்மனையும் சேர்த்து.
கல்யாணிக்குக் கல்யாணம் பண்ணிவைப்பதில் என் பங்கு மிகப் பெரிதாக இருந்தது. அவருடைய
தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்த நரசிம்மன் என்ற தையற்காரனின் பங்கும் பெரிதாக
இருந்தது. நாங்கள் இருவரும் நண்பர்கள். ஒருவருக்கொருவர் நண்பராக இருந்ததாலேயே கெட்ட
பெயர் எடுத்தவர்கள். கல்யாணியும் என் நண்பர். கல்யாணிதான் என் நண்பர். அதற்குப் பிறகு
கல்யாணியின் தங் கையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவிதத்தில் நரசிம்மன் எனக்குக் கூடுதலான
நண்பரானார். செம்பனார்கோயிலில் தையற்கடை வைத்திருந்த சர்க்கரையின் மூலம் அதே
செம்பனார்கோயிலில் தையற்கடை வைத்திருந்த நரசிம்மன் நண்பரானார். எனக்குக் கல்யாணி நண்பர்
என்பதால் அவருடைய தங்கையைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதில் என் உதவியைப் பெற்று அதன் மூலம்
கூடுதலான உறவு உண்டாயிற்று எனக்கும் நரசிம்மனுக்கும் இடையில்.
எனக்கும் கல்யாணிக்கும் இடையில் 12 வயது வித்தியாசம் இருந்தது. இறக்கிறபோது வயது 82
என்று பிறகு அவருடைய கருமாதி அன்றைக்குப் புஞ்சைக்கு ஃபோன் செய்து பேசியபோது
தெரிந்துகொண்டேன். கடைசி பன்னிரண்டு ஆண்டுகளில் அவர் சக்கர நாற்காலியிலேயே பொழுதைக்
கழித்தார். அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதில் அவர் ஒரு காலை இழந்து பிறகு சக்கர
நாற்காலியில் ஏறிக்கொண்டு புஞ்சையின் இன்னொரு விநோதமான பாத்திரமாகமாறியிருந்தார்.
சக்கர நாற்காலியில், மாடியில் இருந்த அவர் மகன் வீட்டில் சென்னையில் அவரால் பொழுதைக்
கழிக்க முடியவில்லை. எனவே, அவர் புஞ்சைக்குத் திரும்பிவிட்டார். இந்தப் பன்னிரண்டு
வருஷங்கள் அவருக்குப் புஞ்சையில் மிகவும் சந்தோஷமாகவே போயிருந் திருக்கின்றன. சக்கர
நாற்காலியில் எங்கும் அவர் போய்வந்து கொண்டிருந்ததால் அவருக்கு நல்ல உடற் பயிற்சியும்
கிடைத்திருக்கிறது. அவருக்குப் பிடித்தமான அரசியலைப் பேச முடிந்திருக்கிறது. அதற்குப்
போதுமான டீக்கடைகள் புஞ்சையில் இருந்தன. அவர் திராவிடக் கழகத்துக்காரர். கடைசிவரையில்
அவர் திராவிடக் கழகத்துக்காரராகவே இருந்தார்.
என்னுடைய பேத்தி சென்ற ஆண்டுக்கு முந்தின ஆண்டு சிங்கப் பூரிலிருந்து வந்திருந்தபோது
புஞ்சைக்கு நாங்கள் போயிருந்தோம். அப்போது அவள் கல்யாணியைப் பார்த்தாள். மேற்குப் பார்த்தும்
கிழக்குப் பார்த்தும் இருந்த வீடுகளைக்கொண்ட மேலவீதியின் மேல் சாரியில் தெற்குப் பார்த்து
இருந்த வீட்டின் முன்தாழ்வாரத்தில் அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். 'என்ன
கொழந்தெ, ரவியோட மகளா?' என்று என் பேத்தியை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டார். அது
ஒரு நாற்பது நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முந்தியதாக இருக்குமானால் சாராய வாடையில் என்
பேத்தி அவர் மேலேயே வாந்தி எடுத்திருப்பாள். இப்போது வேர்வை நாற்றம் மட்டுமே இருந்தது.
என் பேத்தி அந்தத் தழுவலில் சற்றுநேரம் அப் படியே இருந்தாள். எனக்கு மட்டும் ஆச்சரியமாகவே
இருந்தது. எப்படி இந்த மொடாக்குடியன் குடியை விட்டுவிட்டு 'அ' குடியரானார்! அது
அவருடைய கல்யாணத்தின் போதே ஆகிவிட்டது. ஆனால் பெரிய வைராக்கியமுள்ள ஒரு பரம்பரையில்
வந்த அவர் குடியை விட்டது ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான்.
அந்தப் பரம்பரையில் ஏற்கனவே நான் சின்னதாடியைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். சின்னதாடி
கல்யாணியின் சின்ன நாயனா. இப்போது கல்யாணியின் நாயனா பெரியதாடியைப் பற்றிச் சொல்ல
வேண்டும். அவர் மிகவும் மௌனமாகப் புஞ்சையின் தெருக்களில் உலவிக்கொண்டிருந்தார். பேசும்
போது தலையை ஆட்டி ஒரு ஆஸ்பதம் போட்டுவிட்டே பேசுவார். இவர்கள் எல்லோருமே கூட்டுக்
குடும்பத்தில் வளர்ந்தவர்கள். கஸ்தூரி நாயுடுவின் வீட்டுக்கு எதிரில் இருந்த அவர்கள் வீடு
எனக்குத் தெரிந்தே வசவசவென்று இருந்தது. இத்தனை ஜனங்களைக்கொண்ட அந்த வீட்டில் எல்லோரும்
பேசினார்கள் என்றால் எல்லோருக்குமே காது செவிடாகி இருந்திருக்க வேண்டும். அவர்களுக்குக்
காது நன்றாகவே கேட்டது. ஆனால் பேச்சு குறைந்துவிட்டது போலும். அப்படித்தான் இருக்க
வேண்டும். தலையை ஆட்டுவது. மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பது. பேச்சு உள்ளிருந்து
புறப்பட்டு யோசனை அனுமதித்த பின்னர்தான் வரவேண்டும் போலிருக்கிறது. தலையை ஆட்டுவது
அதற்கான ஆமோதிப்பு போலும். இந்தப் பேச்சு ஒன்றும் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டுவராது.
எனவே, பேசலாம்.
அவரைப் பற்றி ஒரே ஒரு சம்பவத்தைச் சொன்னாலே போதுமானது என்று நினைக்கிறேன்.
குழந்தைகளான எங்களுக்கு அக்ரகாரத்தைவிட்டு மேற்கே வந்து தெற்கே திரும்பினால் இருந்த
டீக்கடைகளின் வாசல் பெரிய பொழுதுபோக்கு ஸ்தலம். அப்போது நாங்கள் அந்த டீக்கடைகளில் ஏ. கே.
சி. நடரா ஜனின் கிளாரினெட் கேட்டுக்கொண்டிருந்த காலம். எஸ். ஜி. கிட்டப்பா, தியாகராஜ
பாகவதர், டி. ஆர். மகாலிங்கம், டி. கே. பட்டம்மாள் இவர்களையெல்லாம் கொஞ்சம்
பின்தள்ளிவிட்டு ஏ. கே. சி. போன்றவர்கள் முன்னுக்குவந்துவிட்ட காலம் அது. அலுத்துப்போகிற
அளவுக்கு ஏ. கே. சியைப் போட்டிபோட்டுக்கொண்டு மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டிருந்தார்கள்
டீக்கடைக்காரர்கள். நாங்கள் ஏ. கே. சியைச் சங்கீதமாகக் கேட்பதை விட்டுவிட்டு வெறும்
சப்தமாகக் கேட்கிற அளவுக்கு வந்துவிட்டோம். அந்த சப்தத்தைக் கேட்டுக்கொண்டு
நின்றிருந்தபோது, என்ன ஆச்சரியம் இது!
அங்கு ஒரு ஆச்சரியம் நடக்கப் போகிறது என்று எங்கள் உள்ளுணர்வில் புலப்பட்டுவிட்டதுபோலும்.
நாங்கள் எல்லோரும் அங்கு தோளில் மேல் துண்டைப்போட்டு மத்து சிலுப்புவது போலச்
செய்துகொண்டிருந்த பெரியதாடியின் பக்கம் திரும்பினோம். தெற்கே இருந்து ஒரு நாய்
வெகுவேகமாக வடக்கை நோக்கிச் சாலையில் பெரியதாடி நின்றுகொண்டிருந்த பக்கம் ஓடிவந்து
கொண்டிருந்தது. அது அவரைக் கடக்கிறபோது நாயக்கர் ஒரு தாவலில் குனிந்து நாயின்
பின்னங்கால்களைப் பற்றித் தலையைச் சுற்றிக் கார்த்திகைக்கு மாவலிப்பைச் சுற்றுவதுபோலச்
சுற்றித் தரையில் அடித்துக் கொன்றுவிட்டார். எல்லோரும் ஆச்சரியத்தில் பேச்சிழந்து இருந்தார்கள்.
அது ஒரு வெறிநாய். புஞ்சையில் அது இரண்டொரு நாள்களுக்கு முன்பு இரண்டு பேரைக்
கடித்திருந்தது.
அடுத்த முறை புஞ்சைக்குப் போகிறபோது என் பேத்திக்கு அந்த இடத்தைக் காட்ட
வேண்டியிருக்கும். இந்த முறை அவளால் புஞ்சைக்குப் போக முடியவில்லை. செப்டம்பர் வாக்கில்
அவள் ஃபோன் செய்தபோது 'இந்த முறை புஞ்சைக்குப் போய்விட்டுவர வேண்டும் தாத்தா' என்றாள்.
ஏனெனில் போன முறையும் அவளால் போக முடியவில்லை. போன முறை சுனாமி வந்துவிட்டது.
இந்தமுறை அடை மழை. இந்த முறையும் ஊருக்குப் போய்விட்டு வரமுடியாமல் போய்விட்டதே என்றும்
கல்யாணி இறந்துவிட்டாரே என்றும் என் பேத்தி வருந்தினாள். தொலைபேசியில் செய்தியைக்
கேட்டதும் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். இடிந்து உட்காருதல் என்பதற்கு அப்போதுதான் எனக்கு
உண்மையான அர்த்தம் புரிந்தது.
கல்யாணிக்கு அந்தப் பெயரை வைத்தவர் எங்கள் பெரியப்பாதான். பெரியப்பா அவருடைய வாத்தியார்.
அவர் வைத்த பெயரில் அவருக்குப் பெரிய சந்தோஷம் இருந்தது. 'பெரிய ஸார் வைத்த பெயர்.
பெரிய ஸார் வைத்த பெயர்' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். எங்கள் அப்பா சின்ன ஸார்.
அவருக்கு விஜயன் என்ற ஒரு பெயர் இருந்தது நினைவுக்குவருகிறது. கல்யாணத்தின்போது
கல்யாணி என்கிற விஜயனுக்கு என்று போட்டார்கள். பத்திரங்களில் விஜயன் என்ற பெயர்
பயன்பட்டிருக்கும். கல்யாணி என் நண்பராக இருந்ததால், எங்கள் பெரியப்பா அவருக்கு வைத்த
பெயரே நிலைத்துவிட்டது என்பதைச் சொல்லிக்கொள்வதில் அவருக்குப் பெருமையாக இருந்தது.
நான் குழந்தையாக எங்கள் பெரியப்பா போதித்த வகுப்புக்குப் போயிருக்கிறேன். அப்போது
கல்யாணியைச் சந்தித்தது இப்போது நன்றாக நினைவுக்குவருகிறது. ஒரு சந்தோஷ உணர்வாக
உடம்பில் பரவுகிறது. செம்பனார்கோயிலிலிருந்து வரும் சாலை மேலவீதியாக வடக்கே
திரும்பும் முனையில் இருந்த பள்ளிக்கூடத்தைத் தவிர இப்போது கல்யாணி வீடு
கட்டிக்கொண்டிருந்த இடத்துக்கு எதிரே பெரிய கோயிலுக்குப் போகிற சந்துக்கு இடப்பக்கத்தில்
இருந்த கட்டடத்தில் எங்கள் பெரியப்பாவின் வகுப்பு இருந்தது. அப்போது புஞ்சைப்
பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்புவரை இருந்தது. எங்கள் அப்பா அந்தப் பள்ளிக் கூடத்தில்
இருந்தார். இடமின்மையால் இங்கு சில வகுப்புகள் நடந்தன. அங்கு என்னைக் கல்யாணி கையைப்
பிடித்து அழைத்துக்கொண்டு போனது இன்னமும் நினைவிருக்கிறது. அந்த உறவு இன்றுவரையில்
தொடர்ந்தது.
கல்யாணிக்குக் கல்யாணம் பண்ணி வைப்பதில் என் பங்கு மிகப் பெரிதாக இருந்தது என்று சொன்னேன்.
சர்க்கரையைப் பற்றியும் சொன்னேன். சர்க்கரைக்கு அவப் பெயர் இருந்தது. அதனால் அவனோடான எங்கள்
நட்பு கேவலமாக மதிக்கப்பட்டது. அவன் அக்ரகாரத்தில் இருந்த பெண்களுக்கு ஜாக்கெட்
தைத்துக்கொண்டு வந்து கொடுத்தான். அதை வைத்து அவனைக் கேவலமாகப் பேசினார்கள் வடுவத்
தெருவில். அதனால் அவனைநாடான் என்றார்கள். அவனுடைய அண்ணன் கௌரவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு
அவருடைய ஜாதி மறைந்து இருந்தபோது சர்க்கரையுடைய ஜாதி பெரிதாகத் தெரிந்தது.
சர்க்கரையும் தெரியாத்தனமாக ஜாதியைப் பாராட்டினான். எங்களுக்குச்சாதாரண ஒளிப்பந்தம்
உலகளவில் பெரிய அவதானிப்புக்குள்ளாகியிருக்கிறது. 1936 பேர்லின் ஒலிம்பிக்
போட்டியில்தான் ஒளிப்பந்தத்தின் உலகச் சுற்றுலா ஆரம்பமாகியது. இதைத் தொடங்கியவர் ஹிட்லர்.
ஆரிய இனத்தின் மகாத்மியங்களைப் பரப்புரைக்க இந்த விளையாட்டுகளையும் தீப்பந்தத்தையும்
பாவித்துக் கொண்டார். இப்பொழுது இதே தீவெட்டி மேற்கத்தைய கலாச்சாரத்தின் சமீபத்திய உன்னதச்
சின்னமான மனித உரிமைகளைப் போதிக்கும் கூரான கருவியாக மாற்றப்பட்டிருக்கிறது.
காலனியக் காலத்தில் கிறிஸ்தவம் இருளில் வாழ்கிறவர்களை நாகரிக நாயகர்களாக உருவாக்கப்
பயன்படுத்தப்பட்டது. பிறநாட்டுப் பிற்போக்குத்தனங்களைப் பழுதுபார்க்கும் அதே வேலையை இன்றைய
பின் காலனியச் சூழலில் மேற்கத்தைய அரசுகள் மனித உரிமைகள் மூலம் சாதிக்க முயல்கின்றன.
சீனாவின் மனித உரிமைகள் பற்றிய பதிவேடு அவ்வளவு பிரகாசமானதல்ல. சீன ஆக்கிரமிப்பினால்
திபேத் கலாச்சாரம் கரைந்து கொண்டிருக்கிறது. திபேத் ஏற்படுத்திய கலகலப்பில் மறக்கப்பட்ட
இன்னொரு சீனா விளிம்பு நிலை மக்கள் ஙீவீஸீழீவீணீஸீரீ மாகாணத்தில் வாழும் ஊகிகுர்ஸ்கள்
(ஹிவீரீலீuக்ஷீs). இவர்கள் முஸ்லிம்கள். இவர்களைச் சீனமயமாக்குதலில் பேஜிங் அரசுதன்
எந்திரங்களைச் செம்மையாகப் பயன்படுத்திவருகிறது. ஊகிகுர்ஸ்கள் இஸ்லாம் மத்தைச்
சேர்ந்தவராகையால் இவர்களின் பிரச்சினையைத் தூக்கிக்காட்ட மேற்கத்தைய ஊடகங்களிடையே ஒரு
தயக்கமிருக்கிறது. சீனாவுக்குப் பெரிய வல்லரசுகளின் வரிசையில் இடம்பிடிக்க ஆசை. ஒரு
வல்லரசின் அடையாளம் பல்லின, பல்மொழி, பல்சமய, பல்கலாச்சார மக்களுக்குக் காட்டும் தாராளத்
தன்மையாகும். இன்னொன்று பல கருத்துகள் முன்பின் முரணாக இருந்தாலும் அவற்றைச்
சகித்துக்கொள்ளும் தன்மையே. இது சீனாவிடம் இல்லை. இந்தப் பரந்த நாட்டைச் சீனா அரசியல்
அமைப்பு பெரும் பான்மையினரான ஹான் இனக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது, நிச்சயிக்கிறது.
இந்தக் கட்டுரையின் பிரதான கவனம் சீனா அல்ல. மேற்கத்தைய நாடுகளின் மனித உரிமைப் பேச்சே.
இந்தக் கட்டத்தில் மனித உரிமைகள் தோற்றம் குறித்து எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சின்னத்
திரட்டு. மனித உரிமைகள் பற்றிய கருதுகோள்கள் சடுதியாகத் தோன்றியவையல்ல. அவற்றைப்
பற்றிய எண்ணங்களும் நிலையானவையுமல்ல. இவை மாறிவரும் சமூக, அரசியல், பண்பாட்டுத்
தேவைகளுக்கும் அதற்கு மேலாக மேலாட்சி செய்யும் நாடுகளின் வினைமுறைதிறன்களுக்குப்
(stக்ஷீணீtமீரீவீநீ) பொருந்துமாறு பதப்படுத்தப்பட்டவை. இவை மூன்று வகைசார்ந்தவை. முதலில்
ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் அறிமுகப்படுத்தப் பட்டபோது தனி
மனித அரசியல் உரிமைகளுக்குத்தான் அதிக மதிப்புக் கொடுக்கப்பட்டது. தனி மனித
சுதந்திரத்தில் அரசு தன்னிச்சையாகத் தலையிடுவதைத் தவிர்ப்பதே இந்தப் பிரகடனத்தின் நோக்கம்.
இந்தத் தனிப்பட்ட மனித உரிமைகளுக்கான பின்னணி பிரான்சுப் புரட்சியும் அமெரிக்க
உள்நாட்டுக் கலவரமுமாகும். இதற்கு அதிக அளவு ஆதரவு மேற்கத்தைய தாராண்மையும் சனநாயக
நாடுகளிலிருந்து கிடைத்தது. இந்த எண்ணங்களைப் பதிவு செய்யும் பிரதிகள்: ஹிஸீவீஸ்மீக்ஷீsணீறீ
ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ மற்றும் மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ சிஷீஸ்மீஸீணீஸீt ஷீஸீ ஷிஷீநீவீணீறீ ணீஸீபீ சிவீஸ்வீறீ
ஸிவீரீலீts. இதற்குப் பிறகு 60களில் சோசலிச நாடுகளினால் அரசியல், பொருளாதார,
பண்பாட்டு உரிமைகள் முன்னெடுத்து வைக்கப்பட்டன. இதற்கு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
நடைபெற்ற சோசலிசப் புரட்சியே காரணமாகும். மனித உரிமைகளைத் தனி ஆளின் பிரத்தியேக
சம்பந்தமாக, அரசியல், பொருளாதார, சூழலமைப்புகளை நீக்கிப் பார்க்கும் மேற்கத்தைய
நாடுகளின் சார்புத்தன்மைக்கு சோசலிசக் கருதுகோள்களின் கூட்டு உரிமைகள்
திருத்தப்பாடாகும். எவ்வாறு தனி மனித உரிமைகள் காப்பாற்றப்படுகின்றனவோ அவ்வாறே இனக்
குழுமங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சோசலிச நாடுகளின் கருத்து.
மூன்றாவது கட்டத்தில் நாடுகளின் தேசிய வள உற்பத்தி அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு நாட்டின்
பொருளாதார அபிவிருத்தி உள்ளார்ந்த மனித உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
புதிதாக விடுதலையடைந்த ஆப்பிரிக்க, ஆசிய, லெத்தீன் அமெரிக்க நாடுகள் காலனிய
ஆட்சியின்போது சீரழிக்கப்பட்ட தங்களின் பொருளாதார உடைமைகள், வளங்களை மீண்டும்
சீர்திருத்துவது தமக்குரிய மனித உரிமை என்று வலியுறுத்தின. ஐ.நா சாசனம் ஷரத்துகள்
55, 56லும் ஹிஸீவீஸ்மீக்ஷீsணீறீ ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ 22, 27இலும் இவை அங்கீகரிக்கப்பட்டிருப்பதைப்
பார்க்கலாம். இவை எல்லாம் வாசிப்பதற்கு இனிமையாக இருக்கின்றன. ஆனால், இவற்றைப் பூலோக
அரசியல் அரங்கில் கையாளும்போது தான் சங்கடம் வருகிறது.
மேற்கத்தைய சொல்லாடலில் மனித உரிமைகள் பற்றி இரட்டை நிலை உண்டு. மேலே சொன்ன மூன்று
வகையில் மேற்குலகச் சொல்லாடலில் முதலாவதே முன்னிறுத்தப்படுகிறது. இன்று சீனாவைத்
தாக்குவதற்குத் தனியார் உரிமைகளே பயன்படுத்தப்படுகின்றன. மேற்கத்தைய வர்ணிப்பில் மனித
உரிமைகள்கூட ஒரு குறுகிய தேர்வே. பேச்சு, எழுத்துச் சுதந்திரம், சுய நிர்ணயம்,
வாக்குரிமைகளையே மேற்கத்தைய அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் பிரதானப்படுத்துகிறார்கள்.
தனி மனித உரிமையின் முக்கிய அம்சமான சித்திரவதையைப் புறக்கணித்துவிடுகிறார்கள்.
சீனாவின் மனித உரிமைக் கறைகள் தெரிகிறது. அதேபோல் சாதாரண மனித உரிமைகளுக்கே இடம்
தராத அமெரிக்க அரசின் கொள்கை மரபு கண்ணுக்குத் தெரிவதில்லை. பர்மா பௌத்த பிக்குகளை
அதிகாரத்திற்கு உண்மையைப் பேசச் சொல்லும் அய்ரோப்பிய அரசியல் தலைவர்கள் அமெரிக்காவின்
அட்டூழியத்திற்கு முன்னால் வாய் அடைத்துப் போயிருக்கிறார்கள். கீணீtமீக்ஷீ தீஷீணீக்ஷீபீவீஸீரீ என்ற
சித்திரவதை முறை (ஆளுக்கு முகத்தைக்கட்டி நீருக்குள் மூழ்குவது போல் அமிழ்த்தி எடுப்பது)
புஷ் அங்கீகரித்தபோது ஜனநாயகத்தின் கண்காணிகளான பிரித்தானியாவோ ஜெர்மனியோ பிரான்சோ
எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
மேற்கின் மனித உரிமை ஆதரவுகூட முரணானது. மனித உரிமைகளுக்கும் அரசியல்
லாபங்களுக்கும் பொருளாதார வாய்ப்புகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டால் மேல் நாட்டு அரசுகளைப்
பொறுத்த மட்டில் தங்களின் அரசியல், வாணிக ஆதாயமே முக்கியம். சவூதி அரேபியா இதற்கு
உத்தம உதாரணம். ஜனநாயகத்தின் அனா ஆவன்னாவைக்கூட மதிக்காத இந்த ஆட்சியைத் தங்களின்
வியாபார நோக்கு காரணமாக மேற்கு நாடுகள் போஷித்துவருகின்றன.
மேல் நாடுகளின் இரட்டைக் குரல் தனி வகையானது. விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் பந்தயத்தில்
கலந்துகொள்ள வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். ஆனால், சீனாவின் சந்தையில் வர்த்தகம் செய்ய
மேற்கு நாட்டு வாணிக ஸ்தாபனங்கள் போட்டிபோடுகின்றன. சீனமக்களும் அரசும் வேறு. சீன
மக்களுக்காக ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற வேண்டும். இதைத்தான் தலாய் லாமாவும்
விரும்புகிறார். எனக்கு என்னவோ விளையாட்டு வீரர்களை இந்தப் போட்டிகளில் பங்கு வகிக்க
வேண்டாம் என்பது மேற்குலக நாடுகளின் இரட்டை நிலைப்பாடுக்கு இரைக்கப்பட்ட கடா என்றுதான்
தோன்றுகின்றது.
கறுப்பர்கள், கனவுகள், கவலைகள்
வி. எஸ். நைபால் பற்றிய ஒரு ஆவணப்படத்தை பிபிசி நாலாவது அலைவரிசையில் பார்த்த
கையுடன் இதை எழுதுகிறேன். அவர் எளிதில் எரிச்சல்படக்கூடியவர், சில தீர்க்கமான எண்ணங்கள்
கொண்டவர், தன்னையும் தன்னுடைய எழுத்துகள் பற்றியும் உன்னதக் கருத்துடையவர் என்ற
அபிப்பிராயம் உண்டு. இந்தக் கட்டுருவாக்கங்களுக்குக் களங்கம் வராதபடி அறுபது நிமிட
நிகழ்ச்சியில் நைபால் நடந்துகொண்டார். எட்வர்ட் சயத் இவரை 'அறிவுலகின் சறுக்கல்' என்று
சொன்னது நினைவுக்குவந்தது. நைபால் இந்திய வம்சாவளியில் வந்த ட்ரினிடாடைச் சேர்ந்தவர்.
இதே நாட்டைச் சேர்ந்த, இந்தியப் பின்புலத்தைக் கொண்ட இன்னுமொரு மேற்கிந்தியப்
படைப்பாளியிருக்கிறார். அவர் பெயர் சாம் செல்வன் (ஷிணீனீ ஷிமீறீஸ்ஷீஸீ.) எனக்கு நைபாலைவிட
செல்வனின் எழுத்து பிடித்திருக்கிறது. இதற்குக் காரணம் நைபாலைப் போல் மூன்றாவது
நாடுகளைப் பற்றி மேற்கத்தைய தாராளவாத வாசிப்பாளர்களை மகிழ்வூட்டும் சித்தரிப்புகள் இவர்
எழுத்தில் இருப்பதில்லை. இவருடைய எழுத்துகளில் நைபால் கண்டுகொள்ளாத அல்லது கண்டு கொள்ள
மறுக்கும் காலனிய ஆட்சி மற்றும் உலகமயமாக்கம் ஏற்படுத்திய தகவல் குழப்பங்கள், சோக
விளைவுகள் பற்றிக் கூர்மையான பார்வைகள் இருக்கும். தருணம் கிடைக்கும்போது செல்வனின்
படைப்புகள் பற்றி எழுதுகிறேன். இப்போதைக்கு நான் சமீபத்தில் படித்துமுடித்த இவரின்
விஷீsமீs கிsநீமீஸீபீவீஸீரீ நாவல் தரும் இரண்டு முக்கியச் செய்திகளை மட்டும் தருகிறேன்.
இந்த 'மோசே அசண்டிங்' செல்வனின் மூன்று பகுதி நாவலில் நடுப்பாகமாகும். செல்வனின்
எழுத்துக்களில் ஒரு வசதி என்னவென்றால் முன்பின் நாவல்களைப் படிக்காமலேயே இந்த மூன்று
தொடர்களில் எந்த ஒரு நாவலுக்குள்ளும் இலேசாக நுழைந்துவிடலாம். ஒரு நாவல் பெரும்திரட்டு
அந்தஸ்து பெறுவதற்கு அதன் தீர்க்கதரிசனப் பார்வை முக்கியமானதாகும். இந்த நாவல் 70களில்
எழுதப்பட்டாலும் அதில் அடையாளப்படுத்தப்பட்ட சில புலப்பதிவுகள் இங்கிலாந்தில் அந்நியர்
குடியேற்றம் பற்றி வருவதை முன் அறியக்கூடிய அறிவுடன் எழுதப்பட்டவை. உதாரணத்திற்கு
ஒன்றைத் தருகிறேன். மேற்கிந்தியத் தீவிலிருந்து இங்கிலாந்தில் குடியேறிய மோசே
அனுகூலமற்ற சீதோஷ்ண நிலை, ஆங்கிலேயர் காட்டிய இயல்பான இனவெறுப்பு இவற்றையும் மீறிக்
கொஞ்சம் பணம் சேர்த்துத் தனக்கென ஒரு வீட்டை வாங்கிச் சொத்துரிமையாளராகிவிடுகிறான். தான்
சாதித்துவிட்டேன் என்ற பெருமிதம் இருந்தபோதும் அவனின் சாதனை ஒரு அபாய அறிவிப்பு என்றே
அவனுக்குப் படுகிறது. அப்போது மோசே யோசிக்கிறான். பொதுமக்கள் நினைக்கிறார்கள். அன்றாட
வாழ்வில் தினமும் ஒடுக்கப்பட்ட கறுப்பர்கள் ஆக்கினையையும் அந்நியப்படுத்துதலையும்
வெறுப்பையும் தாங்க முடியாமல் ஒரு நாளைக்குக் கொதித்து எழுவார்கள். அப்போது இந்த
நாட்டையே கலங்கவைக்கும் இனக் கலவரம் வெடிக்கும். இந்தக் கருத்து தப்பானது என்று மோசேக்குத்
தெரிகிறது. இனக் கலவரத்திற்கு மோசே தரும் காரணம் சற்று வித்தியாசமானது. நம்மையும்
கொஞ்சம் சலனப்படவைக்கிறது. மோசே எண்ணுகிறான் இனவெறியாட்டம் எப்போது இந்த நாட்டில்
தலைதூக்கும் என்றால் வெள்ளையர் மனத்தில் என்றைக்குக் கறுப்பர்கள் சொகுசாக, சௌகரியமாக, சுக
போகங்களுடன் வாழ்கிறார்கள் என்ற கருத்து தோன்றுகின்றதோ அப்போது எழும் இனக் கிளர்ச்சி
நாட்டையே திடீரெனக் கலங்கவைக்கும். செல்வனின் கதாபாத்திரம் நினைத்தது போல்
பெரும்பான்மையான ஆங்கிலேயரின் எண்ணம் வந்த குடியேறிகள் இங்குள்ள சில சலுகைகளைப்
பயன்படுத்தி, குஷியாக வாழ்கிறார்கள் என்பதே. உதாரணத்திற்கு ஒன்று. வெள்ளைத் தொழில்
வர்க்கத்தினர் கவுன்சில் வீடு கிடைப்பதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால்,
குடிபுகுந்தோர் வரிசையைத்தாண்டி கவுன்சில் குடியிருப்புத் தலங்களில் வாழ்க்கையை
ஆரம்பிக்கலாம். இது ஆங்கிலேய உழைப்பவர் வர்க்கத்தை மட்டுமல்ல, வெள்ளை
மத்தியதரத்தினரிடையேயும் எரிச்சலையும் பதற்றநிலையையும் அச்ச உணர்வையும்
ஏற்படுத்தியிருக்கிறது. இன்று இங்கு உள்ள வலதுசாரி ஊடகங்களினால் இந்த எரிச்சல் மேலும்
ஊக்குவிக்கப்படுகிறது.
கடைசியாக, செல்வனின் நூல் தரும் இன்னுமொரு தகவல். குடியேறிய தொடக்க நாள்களின்
கறுப்பர்களின் நாளாந்த வாழ்க்கையைப் பற்றிய செல்வனின் வர்ணிப்பு. என்னுடைய தளர்த்தியான
மொழிபெயர்ப்பில் தருகிறேன். கறுப்பர்களுக்கு நாள்தோறும் நடப்பவற்றையும் ஆங்கிலேயரின்
தினசரி அடிப்படைத் தேவைகள் சீராகச் செயல்படக் கறுப்பர்களின் பங்கை உணர்ச்சியுடன் செல்வன்
இவ்வாறு பதிவு செய்கிறார்: அதிகாலையில் அடிக்கும் முதல் கடிகாரத்தின் எழுப்பொலி
கறுப்பர்களின் வீட்டில் கேட்கும். சூரியனின் புதிய கதிர்களைக் கறுப்பர்கள்தான் பார்ப்பார்கள்.
முதல் வெண்பனித் துளிகள் கருப்பரின் தேகத்தில்தான் விழும். இலையுதிர் காலத்தில் உதிரும்
முதல் இலை கறுப்பர்கள் தலையைத்தான் தொடும். அதிகாலையில் அலுவலகத்தைச் சுத்தம் செய்பவர்
கறுப்பராயிருப்பார். குப்பைத் தொட்டிகளைத் தூய்மைப்படுத்துபவர் கறுப்பரே. உங்கள் பாதாள
இரயில் ஓட்டுநர் கறுப்பராய்த்தான் இருப்பார். மதுக்கடையில் மதுபானத்தைப் பரிமாறுபவர்
கறுப்பர். வெதுப்பகத்தில் (தீணீளீமீக்ஷீஹ்) கடும் சூட்டைத் தாங்கிக்கொள்பவர் கறுப்பர். தெருவில்
விழும் முதல் மூத்திரத் துளி கறுப்பருடையதாகத்தான் இருக்கும். கடைசி வரி செல்வன்
எழுதவில்லை. நான் சும்மா சேர்த்துக்கொண்டது. செல்வன் ஆவணப்படுத்தியது 70களின்
பிரித்தானியா. இனி அதிதுரித முன்னோக்கிப் பொத்தானை அமுக்கிச் சமகால ஆங்கிலேயச்
சூழலுக்கு வாருங்கள். இன்றைக்கு அய்ரோப்பிய ஒன்றியம் விரிவடைந்ததினால் தினமும் புதிய
வாழ்வைத் தேடி வரும் போலிஷ், ருமேனிய, பல்கேரிய, லாட்வியரை இந்தச் செல்வனின் நாவலில்
வரும் கறுப்பர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்யுங்கள். இன்று மாறிவரும் புலம்
பெயர்ந்தோர் அசைவியக்கத்தில் (னீஷீதீவீறீவீtஹ்) புதிய கறுப்பர்கள் யார் என்று தெரியவரும்.
செம்பனார் கோயில் தையற்கடைக்கு வந்துபோன, ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று வந்த ஒரு தலித்
நண்பன் இருந்தான். அவன் இல்லாத போது அவனைச் செடி என்பான் சர்க்கரை. செம்பனார்கோயிலில்
செடி என்பது தலித்துகளுக்கு அவர்களுக்குத் தெரியாமலே சூட்டப்பட்டிருந்த பெயர். அவன்
எங்களுக்கு இணையாகப் பழகினான். அவனைச் செடி என்று சொல்வதற்கு என்ன நியாயம் இருக்கிறது
சர்க்கரைக்கு.
நரசிம்மனுக்குப் பற்கள் பெரிதாக இருந்தன. அவை நரசிம்மாவதாரத்தின் பற்களைப் போலவே
இருந்தனவாம். எப்போதும் சிரித்துக் கொண்டே பீடியைத் தொடர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான்
நரசிம்மன். பிரஹலாதர்களாகிய எங்களிடம் நரசிம்மன் சந்தோஷமாக இருந்தது போலும். ஆனால்,
நாங்கள் இரணியனை அல்லவா இணையற்ற வீரனாகப் பாராட்டிக்கொண்டிருந்தோம். நரசிம்மனின்
பற்களுக்கு இடையில் இடைவெளி பெரிதாகத் தெரிந்தது. சிரித்தால் மட்டுமே வெளியில்
தெரியும்படி பற்கள் உள்ளடங்கியே இருந்தன. பீடிப்புகை படிந்து சுட்டுக் கருத்த
உதடுகளுக்கு உள்ளே புகையால் பழுத்த பற்கள் சிரிப்பில் பெரிதாகத் தெரியும். அதைக்
காட்டிக்கொள்வதில் அவனுக்குத் தயக்கமில்லை. சிரித்துக்கொண்டே இருப்பான். சிரிப்புக்கு
இடையிலும் புகை இழுப்புக்கு இடையிலும் மிகவும் சந்தோஷமாகப் பேசுவான். புகை
இழுப்புக்கூட மிகச் சந்தோஷமாக நுரையீரல்கள் நிறைய நிறைய இழுப்பதாக இருக்கும். புகை
பிடிப்பதில்லை அது. புகை குடிப்பது. அதுகூடச் சரியான பிரயோகமாகத் தெரியவில்லை.
குடிப்பது எல்லாம் இரைப்பைக்கு அல்லவா போகிறது. கபடமில்லாமலும் பயமில்லாமலும் மிகச்
சந்தோஷமாகப் புகைபிடித்து மிகச் சந்தோஷமாகவே சிறுவயதில் அவன் செத்தும் போய்விட்டான்.
பெரியதாடியின் வேகமான நடைக்குப் பின்னால் நாங்கள் நாய்க் குட்டிகளைப் போல ஓடி
கல்யாணியின் கல்யாணப் பேச்சைப் பேசிக் கொண்டிருந்தோம். நரசிம்மனுக்கு ஆணிக்கால்.
தெத்தித்தெத்தி நடப்பான். அதோடு ஓட்டம். சட் டெனப் பெரியதாடி நின்று திரும் புகிறபோது
அவர்மேல் மோதிக் கொண்டுவிடுவதைப் போல் முட்டுக் கட்டைபோட்டு நாங்கள் நிற்போம். எங்களை ஒரு
பார்வை பார்த்து விட்டு மீண்டும் திரும்பி நடப்பார் பெரியதாடி. 'ஒதவாக்கரைகள்
ஒதவாக்கரைகள்' என்பதுபோல இருக்கும் அந்தப் பார்வை.
கல்யாணி திராவிடக் கழகத்துக்காரர் என்பதல்லாமல் அவர் வேலையில்லாமல் திரிகிறார் என்பதும்
அவருடைய நாயனாவுக்கு அவருக்குக் கல்யாணம் பண்ணிவைப்பதில் பெரிய தடையாக இருந்தது. பணம்
தேவைப்பட்டால் ஒரு வாழைத்தாரை வெட்டிக்கொண்டு போய் விற்றுவிட்டு வந்துவிடுகிறார்.
கல்யாணிக்குக் கல்யாண ஆசை வந்த கதை எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒருமுறை கல்யாணி என்னைக்
குரங்குப்புத்தூருக்கு அழைத்துக் கொண்டு போனார். போகும் வழியில் சர்க்கரையையும் அழைத்துக்
கொண்டு போனோம். குரங்குப்புத்தூரில் சர்க்கரையின் சொந்தக்காரர் ஒருவர் சாராயம் காய்ச்சினார்.
கள்ளச்சாராயம். உள்ளபடியே அதுதான் நிஜச்சாராயம். நான் இலங்கையிலிருந்து வந்த சாராயத்தைக்
குடித்திருக்கிறேன். மணிப்பூரில் 'ரைஸ் ஒயின்' என்று அழைக்கப்படுகிற சாராயத்தைக்
குடித்திருக்கிறேன். அது எங்கள் வீட்டின் இரண்டாம் கட்டில் அடுக்கிவைத்திருக்கும் தவிட்டு
மூட்டைகள் சிக்குப்பிடித்து நாறுவதுபோல் நாறிற்று. நாள்பட்ட உமியின் நாற்றம். பகோடாவில்
சாராயம் குடித்திருக்கிறேன். இந்தச் சாராயங்களைக் குடிக்கிறபோதெல்லாம் அந்தக்
குரங்குப்புத்தூர்ச் சாராயத்தின் நினைவுதான் வந்தது.
சாராயம் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா என்பதைக் காண்பிக்க காலிபாட்டிலின் வாயில்
தீக்குச்சியைக் கிழித்துக்காட்டி அது 'பக்'கென்று எரிந்து வெடித்துத் தழல் இளஞ்சிவப்பிலும்
இளம்பச்சையிலும் வெளியேறி பாட்டில் காய்ந்திருப்பதைக் காட்டினார் கல்யாணி. நாங்கள்
முட்டமுட்டச் சாராயம் குடித்தோம். அவர்கள் வறுத்த கருவாடு தொட்டுக்கொண்டார்கள். நான்
அப்போது அதெல்லாம் பழகிக்கொள்ளவில்லை. எனக்கு எலுமிச்சங்காய் ஊறுகாய் கொடுத்தார்கள்.
உலகமே சந்தோஷத்தில் மிதக்க நாங்கள் காவிரிப்பூம்பட்டினம் மண்சாலையை அலைந்துகொண்டு வந்தோம்.
மண்ணை உழுது புழுதி கிளப்பிக்கொண்டு வந்தோம். அந்தச் சாலையைக் கீழணையிலிருந்து
காவிரிப்பூம்பட்டினம்வரை போட்டு இரண்டு புறமும் ஆலமரங்கள் வைத்த கரிகாலனைப் புகழ்ந்து
கொண்டே வந்தோம். அந்தச் சாலையைச் சோழன் போட்டான் என்பது செவிவழிச் செய்தியாகவே எங்களை
எட்டியிருந்தது. காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்கள் இப்படி ஒரு
சாலையைப் போட்டிருப்பார்கள் என்பதை எந்த ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டு நாங்கள் நம்பினோம்.
'மண்ணை நன்றாக உழு' என்றார் கல்யாணி. அது நம் பண்டைத் தமிழர்கள் மிதித்த மண் என்றார்.
கொரங்குப்புத்தூர் நாடாருக்குச் சாராயம் காய்ச்சும் மரபு அப்படியே சங்ககாலத்திலிருந்து
தொடர்ந்துவருகிறது என்றார். திராவிடக் கழகத்துக்காரராதலால் அவர் படிப்பதிலும் அதிகக்
கவனம் செலுத்தினார். வெ. சாமிநாதசர்மா எழுதிய புத்தகங்களை நான் அவர் வீட்டில்தான்
பார்த்தேன். கோபால கிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளும் எனக்கு அப்போதுதான்
அறிமுகமானது. உ. வே. சாமிநாதய்யர் எழுதிய கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண
பாரதியார் முதலிய புத்தகங்களை அவர்தான் கொடுத்தார். படித்தேன். ஓர் அபூர்வமான உணர்வு
என்னிடம் இருந்தது. ஒரு பெரிய தொடர்ச்சியில் நான் இன்றைய ஒரு கட்டம். இது என்னைப்
பற்றிக்கொண்டிருந்தது.
அப்புறம் நாங்கள் காவிரிக்குப் பக்கத்தில் காவிரிக்கரையில் ஏறினோம். ஏனெனில் அதற்குப்
பிறகு கிடாரங்கொண்டான் வந்துவிடுகிறது. தெரிந்தவர்கள் வந்துவிடுவார்கள். அது எனக்காக.
அவர் ஊரறிந்த குடிகாரன். காவிரிக்கரையில் ஏறியதும் ஆதிமந்தியும் ஆட்டனத்தியும் எங்கள்
பேச்சில் இடம் பிடித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றிப் பாரதிதாசன் எழுதியிருக்கும்
புத்தகத்தை நான் படித்திருந்தேன். சுய மரியாதை மரபில் அது கல்யாணிக்கு நிச்சயம்
தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அதையும் நான் அவரிட மிருந்துதான் படித்திருந்தேன். இந்தக்
காவிரியில் எப்படி ஆட்டனத்தி அடித்துக்கொண்டு போகப்பட்டான் என்ற கேள்வி எங்களுக்குள்
எழுந்தது. அப்போது காவிரி ஆழமாக இருந்ததா? இன்னும் இன்னும் ஆழம் என்று இறந்த காலத்தில்
அதன் ஆழம் பாதாளம் வரையில் போய்ச்சங்க காலத்தில் அடி நாகலோகத்தைத் தொட்டுக்கொண்டு
இருந்ததால் ஆட்டனத்தியால் நீந்த முடியாமல் தண்ணீரில் அடித்துக் கொண்டு போகப்பட்டுவிட்டான்
என்றார் கல்யாணி. கல்யாணி சுத்த சுயமரியாதைக்காரராக இருந்த காரணத்தால் அவருக்குப் பழைய
பெருமை பேசிக்கொண்டிருப்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இன்று இன்று இன்று என்ன என்று
கேட்டுக்கொண்டே இருப்பார்.
இன்றைப் பற்றி எனக்கு நினைவு வந்தபோது இன்று எங்கள் மாமா வீட்டுக்கு வருகிறார் என்பது
நினைவுக்கு வந்துவிட்டது. அப்போது நாங்கள் பள்ளக் கொல்லையைக் கடந்துகொண்டிருந்தோம்.
கல்யாணி ஒரு உபாயம் சொன்னார். போதை தெளிவதற்குக் காவிரியில் கிடந்து புரளலாம் என்று.
காவிரியில் தண்ணீர் அரித்து ஓடிக்கொண்டிருந்தது. படுத்துக் குளித்தாலும் உடல் முழுதும்
நனையாது. என்றாலும் படுத்துப் புரள்வதற்கு மிகப் பிரமாதமாக இருக்கும். மணலில் குதிரை
புரள்வது போல் புரளலாம். வளைவில் களிமண் பாங்கான பகுதியில் தண்ணீர் பள்ளம்
பண்ணியிருக்கும். அதில் தலைமுழுகக் குளிக் கலாம். தண்ணீர் ஓடிக்கொண்டே இருப்பதால் சுத்தமாக
இருக்கும். அப்போது காவிரி சாக்கடையாக மாறவில்லை. காவிரியைத் தெய்வமாக நினைப்பவர்கள்
காவிரி நெடுகிலும் இருந்தார்கள். கல்யாணி, காவிரியை ஒரு பெண்ணைப் போலவே மதித்தார்.
நாங்கள் தண்ணீரில் மணலில் புரண்டு புரண்டு குளித்தோம். உள்ளே ஏற்கனவே பெரிய பழைய நதி
ஓடியிருப்பதால் இரண்டு தண்ணீரும் ஒன்றுக்கொன்று உறவு கொண்டு எங்களைப் பெருத்த
சந்தோஷத்துக்கு ஆளாக்கியிருந்தது. இந்த நதிக்குக் கொஞ்சம் சலுகை காட்டினார் கல்யாணி. வேத
காலத்து நதி. சோமநதி. வேட்டி சட்டைகளை அவிழ்த்துவைத்து விட்டு ஜட்டியுடன் குளித்தோம்.
உடம்பெல்லாம் மணல். தலையெல்லாம் மணல். அரித்தோடும் தண்ணீரில் எதிர் நீச்சல்போட்டு தண்ணீரோடு
அடித்தோடும் மீன்களைப்போல விழுந்து விழுந்து குளித்தோம். ரொம்ப குஷியாக இருந்தது.
அப்படியே கரைந்து தண்ணீரோடுபோய்க் காவிரிப்பூம்பட்டினக் கடலில் கலந்துவிடமாட்டோமா
என்பதுபோல் இருந்தது. ஒருகால் இப்படிக் கரைந்துதான் ஆட்டனத்தி காவிரியோடு போயிருக்க
வேண்டும். இதே போன்ற எண்ணங்கள் கல்யாணியின் மனத்திலும் ஓடியிருக்க வேண்டும். 'பக்தர்களைக்
குறைசொல்வது தப்பு' என்றார் கல்யாணி. நான் ஏன் என்று கேட்கவில்லை. சர்க்கரை மௌனமாகவே
இருந்தான். தன் சொந்தக்காரன் இவ்வளவு அற்புதமான மதுவைக் காய்ச்சி, கல்யாணியிடம் பெயர்
வாங்கிவிட்டான் என்ற சந்தோஷத்திலேயே பின்தங்கி விட்டான்.
கரையோடு போனவர்கள் கல்யாணியைக் குசலம் விசாரித்துக்கொண்டு போனார்கள். நாங்களெல்லாம் என்ன
குழந்தைகளாகிவிட்டோமா என்று கேட்டுக்கொண்டு போனார்கள். ஒங்களுக்கென்ன இன்றுதான்
பதினெட்டாம் பெருக்கா? சப்பரத்தட்டிகள் எங்கே? மரக்கிளைகளில் ஏறிக்குதிக்கச் சொன்னார்கள்.
கொழந்தெயாரு நடேசய்யரு புள்ளையா என்று என் யோக்யதையைச் சிலாகித்துக் கொண்டு போனவர்களும்
உண்டு. அப்போதெல்லாம் கல்யாணி பதில் சொல்லவில்லை. அவர்களெல்லாம் நாங்கள் அதீத உணர்வுகளோடு
இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள். அப்படியென்றால் நாங்கள் இன்னும் மண்ணில் புகுந்து
புறப்பட வேண்டும்.
'அண்ணே, இந்தக் கரையோடுதானே அண்ணே ஆதிமந்தி ஓடினா?' என்று அவர் ஒருவரைப் பார்த்துக்கேட்டார்.
'யாரய்யா அது ஆதிமந்தி?'
அந்த மனிதருக்கு மந்தி என்றால் பெண் குரங்கு என்பதுக்குமேல் ஒன்றும் தெரியாதாகையால்
பெரிய குழப்பத்தோடு போய்விட்டார். ஆனால், அடுத்துவந்த ஆள் 'ஒரு கல்யாணமா கார்த்தியா...
ஊதாரித்தனமா சுத்திக்கிட்டிருந்தா பொறுப்பு எங்கே வரப்போகுது. பெரியதாடி என்ன பாவம்
செஞ்சாரோ... குடிகாரப்பய குடிகாரப்பய' என்று சொல்லிக்கொண்டே போனது கல்யாணியின் காதில்
விழுந்துவிட்டது. அவர் கோபப்படவில்லை. 'கண்ணா... ஒரு யோசனை தோணுது. கல்யாணம்
பண்ணிக்கிட்டா என்ன? என்றார். அப்புறம் கொஞ்சம் மௌனமாகிவிட்டார். அவருக்குக் கல்யாண யோசனை
வந்தது அந்தச் சந்தர்ப்பத்தில்தான்.
நாங்கள் நீண்ட நேரம் குளித்தோம். கண்கள் சிவந்துவிட்டன. வழியில் கிடாரங்கொண்டான் டீக்கடையில்
ஒரு டீ குடித்துவிட்டு, ஒரு ரிண்டான் மாத்திரையை வாங்கிப்போட்டுக்கொண்டு வீட்டுக்குப்
போய்விட்டோம். என்னோடு கல்யாணி வீட்டுக்கு வந்தார். போதை தெளிந்துவிட்டது. நாங்கள்
குளித்தது ஒரு தூக்கத்துக்கு ஒப்பாக இருந்தது. ஏதாவது நாற்றம் வருகிறதென்றால் அது
தன்னிடமிருந்து வருகிறது என்று நினைத்துக் கொள்ளட்டும் என்றுதான் அவர் என்னோடு வந்தது.
எங்கள் மாமா வந்திருந்தார். கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு ஆடிக்கொண்டி ருந்தார். நான்
தலையில் இருந்தமண் எல்லாம் போக வேண்டு மென்று குளிப்பதற்குக் கிணற்றுக்குப் போனேன்.
ஏற்கனவே, மடுவில் குளித்துத் தலையில் மண் எல்லாம் போய்விட்டிருந்தது. வீட்டில் குளிப்பதால்
சோப்பின் மணம் கொஞ்சநஞ்ச வாசனையைக் கழுவிவிட்டுவிடும் என்று எண்ணினேன். நான்
குடித்திருந்தேன் என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. கல்யாணி என் நண்பர் என்பது எங்கள்
மாமாவுக்குத் தெரியும். யாருக்கும் அடங்காத தறுதலை என்ற பெயரும் எனக்கு இருந்தது.
என்னைத் தறுதலை என்று எங்கள் மாமா எண்ணாவிட்டாலும் யாருக்கும் அடங்காதவன் என்று
நினைக்கிறவர்தான்.
எங்கள் மாமா போன பிறகு மாலையில் என்னைப் பார்க்கக் கல்யாணி வந்தார். வழக்கம்போல ஆளுயர
மூங்கில் கம்பும் பெரிய வாழைக்கொல்லை அரிவாளுடனும் இருந்தார். அரிவாள்
வாழைக்கொல்லைக்காக. மூங்கில் கம்பு அவர் சிலம்பம் பழகுவதற்காக. அவர் அறிந்த சிலம்பத்தைத்
தினமும் பழகாமல் அவர் இருப்பதில்லை. காவிரிக்கரையில் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த
வாழைத் தோட்டத்தின் இடையில் ஒரு நல்ல தென்னந்தோப்பு இருந்தது. அதில் சில மரங்களுக்கு
இடையில் கம்பு சுற்றுவதற்குப் போதுமான இடமிருந்தது. அதில் ஒரு மணிநேரம் நன்றாகப்
பழகிவிட்டு வருவார். ஏதாவதொரு காரணத்தினால் ஒரு நாளைக்கு விட்டுப்போய்விட்டதென்றால்
அடுத்த இரண்டு நாள்களில் அரைமணி அரைமணி நேரமாக ஈடுசெய்து சுற்றிவிடுவார். இந்தத்
தோற்றம்கூட அவருக்கு அவப் பெயரைக் கொடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.
''வா கல்யாணி, சேவகம் பண்ணக் கிளம்பியாச்சா?'' என்றாள் எங்கள் பாட்டி. அவள் சேவகம் என்றது
தலையாரியைப் போல இவரும் ஒரு தலை உயரக் கம்பு வைத்துக்கொண் டிருப்பதால். மேலும் சம்பளம்
இல் லாத ஊழியம் செய்பவர் என்பதை யும் குறிக்கத்தான். ஒரு கட்டு வாழை இலையைக் கொண்டு
வந்து தாழ் வாரத்தில் வைத்துவிட்டுச் சிரித்தார் கல்யாணி. ''இல்லை பாட்டி'' என்றார். அது
நான் பாட்டியைக் கூப்பிடுவதைப் போன்றதொரு தொனி.
''என்னமோ . . . போப்பா இப்படியே காலத்தெ ஓட்டிவிடப் பாக்கறெ'' என்றாள் பாட்டி.
''பாட்டி நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் பாட்டி''
''என்ன இது கூத்து'' என்றாள் எங்கள் அம்மா.
''கூத்துமில்லே ஆட்டமுமில்லே. நெஜமா கல்யாணம் பண்ணிக்கப் போறேன்''
''அதெச் செய் முதல்லே'' என்றாள் எங்கள் அம்மா.
''என்னமோப்பா நாயக்கர் பேரெக்காப்பாத்தினேன்னா அதுலே மொதல்லே சந்தோஷப்படறவ நான்தான்''
என்றாள் பாட்டி.
''பெண் யாரு?'' என்று கேட்டாள் எங்கள் அம்மா.
''இனிமேதான் பாக்கணும்''
அந்தச் சில மணிநேரத்தில் ஒருவன் ஏசலாகப் போட்டுவிட்டுப் போனது இப்படி வளரும் என்று நான்
எதிர்பார்க்கவில்லை. அவர் பெண் பார்த்த படலமும் எனக்குத் தெரிந்துதான் நடந்தது.
நாங்கள் காரைக்காலுக்குக் குடிக்கப்போனபோது அது நடந்தது. நாங்கள் எல்லோரும் சைக்கிளில்
போனோம். போகிறபோது ஒரு காரியமாகப் போய்விட்டு, வருகிறபோது குடித்துவிட்டுவந்தோம்.
ராமகிருஷ்ணனுக்குச் சொந்தக்காரனும் எங்களுக்கு நண்பனும் எங்களோடு படித்தவனும் ராமகிருஷ்ணன்
வீட்டில் இருந்தவனும் அரப்புலிசுர சதகத்தைக் கரைத்துக்குடித்தவனுமான தாணுவின் மாமாவின்
வீடு தென்னங்குடியில் இருந்தது. அவர் நகர் சார்ந்த நாகரிகத்தை அனுசரிப்பவர். மேலும்
ஃபிரெஞ்சுக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் நாகரிகமானவர்களாகத் தோற்றம் தருவார்கள்.
நீர்காவி ஏறிய வேட்டியை அவர்கள் கட்டுவதில்லை. சலவை செய்த சட்டையையே அணிவார்கள். நாங்கள்
புஞ்சையில் நீர்காவி ஏறிய வேட்டியையே கட்டிக் கொண்டிருந்தோம். எங்கள் ஊரில் சலவைத்
தொழிலாளர்கள் இருந்தார்கள். என்றாலும் சலவை செய்த வேட்டியை எடுத்து அன்றாடத்
தேவைகளுக்குக் கட்டுவதற்கு எங்களுக்குத் தயக்கமாக இருந்தது. மேலே சட்டையே அணிவதில்லை.
அது ஊர்ப் பயணத்துக்கு மட்டுமே. ஆனால் அவர்களோ வீட்டில்கூடச் சலவை செய்த சட்டையை
அணிந்துகொண்டிருந்தார்கள். வீடு ஒட்டடை அடிக்கப்பட்டு எப்போதும் புதிது போலவே இருக்கும்.
அவர் வீட்டுக்கு மெத்தைகள் தைக்கவே நாங்கள் போனோம். அப்போது இலவம் பஞ்சு மெத்தைகள்தான்
இருந்தன. பஞ்சை அடித்து மெத்தை தைக்க வேண்டும். நரசிம்மன் தையல்காரனானதால் அவனையே
கூப்பிட்டிருந்தான் தாணு. தனக்கு வேண்டியவனுக்குப் பணம் போகட்டுமே என்று அவனுடைய மாமா
இதற்கு ஒத்துக்கொண்டிருந்தார். நாங்களும் கூடப் போனோம்.
அவரை நானும் அறிவேன். அவர் ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு அடிக்கடி வருகிறவர்.
ராமகிருஷ்ணனின் அம்மாவின் தங்கையை அவர் மணந்துகொண்டிருந்தார். நாங்கள் நரசிம்மனின்
வேலையில் உதவ முடியும். நரசிம்மன் மெத்தைக்கு வேண்டிய துணியைச் செம்பனார் கோயிலிலேயே
தைத்துக்கொண்டு வந்துவிட்டான். கையில் கொண்டுபோக வேண்டியது ஊசியும் நூலும்தான். பஞ்சு
தென்னங்குடியில் இருந்தது. ஒரு சைக்கிளில் இருவர் இருவராகப் போனோம். சர்க்கரையை நாங்கள்
அழைத்துக்கொண்டு போகவில்லை. தாணு ஏற்கனவே தென்னங்குடி போய்விட்டான். நானும் கல்யாணியும்
ஒரு சைக்கிள். ராமகிருஷ்ணனும் நரசிம்மனும் ஒரு சைக்கிள்.
கல்யாணியை வெளியில் வைத்துவிட்டு ஒரு அறையில் பஞ்சைப் போட்டுக்கொண்டு கழியால் நாங்கள்
அடித்தோம். அதற்கான வில்லை நாங்கள் தேடவில்லை. அதற்கான தொழிற்திறமை முஸ்லிம்களிடமே
இருந்தது. நாங்கள் வில்லால் பஞ்சு அடிக்கிற கற்பனையோடேயே கழியால் பஞ்சு அடித்தோம். கழி
பஞ்சைக் கொந்திக்கொந்திக்கொண்டு வந்தது. சுவர் எல்லாம் பஞ்சு. கூரை எல்லாம் பஞ்சு. எங்கள்
மேலெல்லாம் பஞ்சு. எங்கள் நுரையீரலில் பஞ்சு. பனி மூட்டம்போலப் பஞ்சு அறையை
மூடிக்கொண்டிருந்தது. இவற்றிலிருந்தெல்லாம் பஞ்சின் தரம் கெட்டுப்போய்விடாமல் துரும்புகள்
பஞ்சில் கலந்துவிடாமல் மெதுவாகப் பஞ்சை எடுக்க வேண்டியிருந்தது. ஒரே நாளில் அடித்து
மெத்தைக்குப் பஞ்சடைத்துவிட்டோம். பிறகு கூரையை ஒட்டடை அடித்துச் சுவர்களைப் பெருக்கித்
தரையை எல்லாம் பெருக்கித் துடைத்து மெத்தையை ஈரத்துணியால் துடைத்துப் பஞ்சு களைப் போக்கி
வெயிலில் காயவைத்து எங்கள் மூக்கு நுரையீரல் தலைமேலெல்லாம் ஒட்டிக் கொண்டிருந்த
பஞ்சைத்துடைத்தும் தும்மியும் காறித்துப்பியும் வெளியேற்றி அங்கு ஒன்றுமே நடவாதது போல
ஆக்கிக்கொடுத்துவிட்டுவர இரண்டு நாள்கள் பிடித்தன. அப்படியரு துல்லியமான வேலையை அவர்
இதற்கு முன் கண்டிருக்க முடியாது. மூன்றாம் நாள் காலையில் நாங்கள் புறப்பட்டோம்.
கல்யாணியை வெளியில் வைத்திருந்தது அவருக்கு நல்லதாகப் போய்விட்டது. அவர் கற்பனையில்
கல்யாண ஆசையைக் காவிரிக்கரையில் போனவன் போட்டுவிட்டுப் போனதற்குப் பிறகு அவர் புலம்பல்
என்ற அர்த்தம் தொனித்துவிடாமல் சற்று முன்னதாகவே முடித்துக்கொண்டு தன் கல்யாண ஆசையை
எல்லோரி டமும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அப்படி அவர் தாணுவின் மாமாவிடமும்
பேசியிருப்பார் போலிருக்கிறது. அவர் அதற்குச் சாத்தியமான ஒரு யோசனையைச் சொல்லிப்
பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்ணையும் காட்டி அவர்களோடு தொடர்புப்படுத்திவிட்டார்
கல்யாணியை. கல்யாணி ஆள்களைக் கவரும் நட்பு பாராட்டத் தெரிந்தவர். அதனால் அங்கு உறவை
உண்டாக்கிக்கொண்டுவிட்டதோடு அந்தப் பெண்ணோடு காதலையும் ஸ்தாபித்துக்கொண்டுவிட்டார். இந்த
இரண்டு நாள்களில் உள்ளே மெத்தை உருவாயிற்று. வெளியில் காதல் உருவாயிற்று.
எங்கள் புறப்பாடு திட்டமிட்ட படியே நடந்தது. நாங்கள் நேரே காரைக்காலுக்குப் போய் பாரில்
உட்கார்ந்துகொண்டு குடிக்கத் தொடங்கிவிட்டோம். எந்த பிராண்ட் எந்தக் கலவையில் எப்படிக்
குடிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் வாத்தியார் கல்யாணிதான். அந்தக் குடியை நாங்கள்
கல்யாணியின் காதலுக்குச் சமர்ப்பித்தோம். அந்த க்ஷணம் நானும் நரசிம்மனும் கல்யாணிக்குக்
கல்யாணம் பண்ணிவைக்கும் பொறுப்புக்குப் பிரமாணம் எடுத்துக்கொண்டோம்.
குடித்துவிட்டு நாங்கள் ஊர் திரும்பியபோது காரைக்காலின் தெருக்களில் சைக்கிளை உருட்டிக்
கொண்டு வந்தோம். தெருவை அலைந்துகொண்டு வந்தோம். குடித்துவிட்டு அப்படி வருவது பெரிய
பெருமையாக இருந்தது எங்களுக்கு. அடங்காப்பிடாரியாக இருப்பதில் லயிப்பு இருந்த
காலகட்டம் அது. சமூக நியதிகளை உடைத்தெறிந்து அதில் மூத்திரம் பெய்து காறித்துப்பி
நாசப்படுத்த வேண்டும் என்றும் அதுவும் போதாமல் மனம் வெறுப்புக்கொள்ளும் காலகட்டமாக அது
இருந்தது. அது திராவிட இயக்கத்தால் உண்டாகியிருந்த மனநிலைதான். மிக மெதுவாக மாறும்
சமூகத்தில் நாங்கள் பொறுமையில்லாதவர்களாக இருந்தோம். எங்களுக்கெல்லாம் தலைவர் கல்யாணி.
அவருடைய கல்யாணம் என்னும்போது எங்கள் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
திரும்பும்போது கல்யாணியால் சைக்கிள் மிதிக்க முடியவில்லை. ஒருக்கால் எங்களைவிட அவர்
அதிகம் குடித்திருந்தாரோ என்னவோ? நாங்கள் எதையுமே இயல்பாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்த
போராட்டத்தில் இருந்துகொண்டிருந்த காரணத்தால் போதைகூட எங்கள்மேல் ஏறத்
தயங்கிவிட்டதுபோலும். இந்தச் சமூகத்தை எதிர்த்த யுத்தத்தில் நாங்கள் போர்வீரர்கள். அப்படித்
தான் அப்போது எங்கள் மனநிலை இருந்தது. நாங்கள் ஒன்றுமே ஆகாதவர்களைப்போல இருந்தோம்.
ஆகாயத்தில் இருந்தோம். பெரிய பெருமை. படுபலம். கல்யாணியை சைக்கிளில் வைத்துக்கொண்டு
நான்தான் ஓட்டிக்கொண்டு வந்தேன்.
அவரைக் காதலிப்பதற்கும் ஒரு பெண் இருக்கிறாளா என்றுதான் நாயக்கருக்குத் தோன்றியது.
நாயனா மறுக்க மறுக்க அவருடைய காதல் வலுவாக வளர்ந்தது. எங்களை அன்னியில் அவர்
இரண்டொருமுறை தென்னங்குடிக்குப்போய் விட்டு வந்தார். நாங்கள் அறியாமல் அங்கே போய்விட்டு
வந்தாரோ என்றும் எங்களுக்குச் சந்தேகம் இருந் தது. இப்படி அவர் தென்னங்குடி போய்விட்டு
வருவது அநியாயமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கிவிடும் என்று நாயக்கர் பெரிய
கவலைக்கு ஆளாகிவிட்டிருந்தார்.
இப்படி ஒரு புள்ளையா வந்து பொறக்கணும். என்ன பாவம் செஞ்சோமோ என்றே அவர் குன்றிப்போய்க்
கொண்டிருந்தார் என்பது எங்களுக்கு அவர் எதிர்வீட்டுக்காரர் கஸ்தூரி நாயுடுவிடம்
பேசிக்கொண்டிருப்பதிலிருந்து தெரிந்தது. இதில் கஸ்தூரி நாயுடு தலையிடமாட்டாரா என்ற
ஆதங்கமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு நம்பிக்கை வரும்
இரண்டொரு காரியங்கள் நடந்தன. அந்த நேரத்தில்தான் அவர் நான் மேலே குறிப்பிட்ட வீட்டைக்
கட்டியது. அதை மட்டும் அவர் கட்டாமல் இருந்திருந்தாரானால் அவருடைய கல்யாணத்துக்கு
ஒத்துக்கொண்டிருக்கமாட்டார் நாயக்கர். வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் பண்ணிப்பார் என்று ஒரு
பழமொழி இருக்கிறதல்லவா? அவர் வீட்டைக்கட்டிப் பார்த்துவிட்டதனால் இனிமேல் அவருக்குக்
கல்யாணம் பண்ணிப்பார்க்கலாம் என்று நாயக்கர் தன் ஸ்தானத்திலிருந்து கீழிறங்கி வந்துவிட்டார்
போலிருக்கிறது.
அந்த இடத்தில் இடிந்த ஒரு பழைய வீடு இருந்தது. வரிசையாகக் கிழக்குப் பார்த்த வீடுகளின்
இடையில் பாழடைந்துபோயிருந்தது அந்த வீடு. ஆள்களைவிட்டு அந்த வீட்டின் செங்கற்களைப்
பெயர்த்து அடுக்கி ஒப்பேறிய ஓடுகளைப் பிரித்து அடுக்கித் தெற்குப் பார்த்து வாசலை வைத்து
வீட்டைக் கட்டுவதற்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார் கல்யாணி. அது தெருவின் சாரியில்
அமையவில்லை என்பதும் ஆரம்பத்தில் அவருக்கு நாயனாவிடம் அவப் பெயரைக் கொடுத்தது. ஊரோடு
ஒத்துப்போகாத காலிப்பயல். காலிப்பயல்கள் அதுதான் சரியானது.
அந்த மனைக்கட்டின் கோடியில் இருந்த ஒரு மூங்கில் கொத்தின் மூங்கில்கள் எல்லாவற்றையும் வெட்டி
மேற்கே காவிரிக்கரையில் இருந்த குட்டையில் ஊறப்போட்டு விட்டு - அந்தக் குட்டையில் மட்டும்
தான் அதிகம் மனிதர்கள் குளிக்காமல் இருந்தார்கள் - போதாக் குறைக்குப் புதிய ஓடுகளை
மட்டும் வாங்கிக்கொண்டு அழகிய ஒரு சிறிய வீடு உருவாகிக்கொண்டு வந்ததைப் பார்த்த
பிறகுதான் ஊரோடு முரணிக்கொண்டு அவர் வீட்டைக்கட்டவில்லை என்பதும் தெற்குப் பார்த்து வாசலை
வைத்துக்கட்டுகிறார் என்பதும் நாயனாவுக்குப் புலப்பட்டது.
கிளுவை வேலியால் வாயிலை அடைத்து, அந்தக் கொல்லைக் கோடியில் போகிறவரையில் கிளுவை
வேலியால் எல்லாவற்றையும் நன்றாக அடைத்துக் கொத்தி வாழை வைத்து அது நன்றாகக்
குருத்துவிட்டு ஓரிரு இலைகள் வெளியில் வந்து இடமே களைகட்டியபோது நாயனாவுக்கு நன்றாக
நம்பிக்கை வந்துவிட்டது. புஞ்சையில் கிளுவை என்றால் அது சின்னதாடியைத்தான்
நினைவுபடுத்தும். கிளுவை வேலிபோடுவதும் கிளுவைப் பேத்துகளை வெட்டி வியாபாரம்
பண்ணுவதும் ஒரு பெரிய கலை. அதை மிக நன்றாகச் செய்தவர் சின்னதாடி. அப்படியே கல்யாணி
பரம்பரைப் பழக்கத்தில் வருவது கண்டு பெரியதாடிக்கு உள்ளூரச் சந்தோஷமாகவே இருந்தது.
நானும் நரசிம்மனும் செய்ய முடியாத காரியத்தை வீடும் வாழைத் தோட்டமும் கிளுவை வேலிகளும்
செய்துவிட்டன.
கல்யாணி மிக எளிமையாகக் கொண்டாடிய கிரகப்பிரவேசம், என்னவோ வீட்டை நாயக்கர்தான் கட்டி
கிரகப்பிரவேசம் பண்ணுவது போல இருந்தது. நாங்கள் எல்லோரும் இருந்தோம். அது ஒரு நல்ல
சடங்காகத்தான் நடந்தது. அவருக் கும் மனசுக்கு ஒத்துப்போயிற்று. அவருடைய நாயனாவுக்கும்
சம்பிர தாயமாக இருந்தது. அதற்குப் பிறகு நாய்களைப் போல நாங்கள் நாயனாவுக்குப் பின்னால்
ஓடவில்லை.
வீடு கட்டியதைத் தொடர்ந்து அவர் தன் டீக்கடையைத் திறந்தார். அது உட்கார்ந்து இருப்பதற்கு
சந்தோஷமான இடமாக அமைந்துவிட்டது. தெற்கு வடக்காக நீண்ட ஓர் அமைப்பு. அதன்
நடுவிலிருந்து கிழக்கே போகும் ஒரு பகுதி அடுப்படிக்கு. மனையின் வடமேற்குத் தென்மேற்கு
மூலைகளில் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன. அந்தத் தென்னைகளைச் சுற்றி வட்டமாகக் கூரை
அமைத்து, அதன் அடியில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அமைப்புகளை உருவாக்கியிருந்தார். அந்த
வசதிகள் தெற்கு வடக்காக இருந்த தென்னைகளின் வரிசையில் உண்டாக்கப்படவில்லை. அது
இடைஞ்சலாக இருக்கும் என்று விட்டுவிட்டார் போலிருக்கிறது. தென்னைகளுக்கு வெளிப்புறத்தில்
அழகான கிளுவை வேலியை அடர்த்தியான படலை வைத்து அமைத்துவிட்டார். இடம் மிகச் சுத்தமாக
இருந்தது. நான் ஏற்கனவே சொல்லியிருந்த அக்ரகாரத்தின் முனையில் இருந்த டீக்கடைகளும்
இருந்தன. இது வடக்குவீதி வடக்கே திரும்பி சாலையாக மாறும் இடத்தின் கீழ் கையில்
இருந்தது. இது வடக்கு வீதி மேலும் தொடர்ந்து கிழக்கேபோய்த் தெற்கே திரும்பிக் கீழ வீதியாக
மாறிவிடுகிறது. தெற்கு வீதியான வடுவத்தெருவிலிருந்து வரும் சந்து, குருக்கள் வீட்டை
ஒட்டி மேலும் தொடர்ந்து வடக்கு வீதியில் வந்து சேர்கிறது. எனவே இந்தக் கடை இந்தப்
பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து வடக்கே போய்ப் பழைய டீக்கடைகளை நாடவேண்டிய அவசியமற்றுப்
போயிற்று. இது அக்கடைகளுக்குப் போட்டி அல்லவென்றும் தன் கடை புதிய வாடிக்கையாளர்களை
உண்டாக்குவதிலேயே கருத்தாக இருக்கும் என்றும் அந்தக் கடைக்காரர்களுக்குச் சொல்லி
அவர்களுடைய கவலைகளைப் போக்கியதுதான் கல்யாணியின் முதல் வேலையாக இருந்தது.
முதன்முதலில் புஞ்சையில் பறையர்கள் எல்லோரும் சமமாக உட்கார்ந்து டீ குடிக்க அனுமதித்தார்
கல்யாணி. எல்லோருக்கும் கொடுத்ததைப் போல அதே டபரா டம்ளர்களில் அவர்களுக்கும் டீ
கொடுத்தார். அதற்கு முன்பெல்லாம் அவர்களுக்கு டீக்கடையின் பக்கத்தில் சார்ப்பு இறக்கி
இருப்பார்கள். அதிலிருந்துதான் அவர்கள் டீ குடிக்க வேண்டும். அவர்களுக்கு டபரா டம்ளர்
கிடையாது. கண்ணாடி டம்ளர்கள் தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும். டீ வேண்டுவோர் அந்தக் கண்ணாடி
டம்ளரை எடுத்துவைக்க வேண்டும். அதில் டீக்கடைக்காரர் வெந்நீரை ஊற்றுவார். அதைக்
கழுவிவைத்தால் டபரா டம்ளரில் டீயை ஆற்றி அதில் ஊற்றுவார். எடுத்துக் குடித்துவிட்டு அதை
அவர்களே அதற்கான இடத்தில் கழுவிவைத்துவிட வேண்டும். இதுதான் தொடர்ந்துகொண்டிருந்தது.
இப்போது இதைத் தன் கடையில் மாற்றிவிட்டார் கல்யாணி. இதற் கெல்லாம் ஒத்துக்கொண்டவர்கள்
கல்யாணியின் கடைக்கு வந்தார்கள்.
இன்னொரு அற்புதமான வேலையைச் செய்தார் கல்யாணி. அவர் கோயில் காளையைப்போல ஊர்
சுற்றிக்கொண்டிருந்ததால் அவருக்கு யார் யார் வீட்டில் என்னென்ன விசேஷமான பலகாரங்கள் பழக்கத்
தில் இருக்கின்றன என்பது தெரிந்திருந்தது. அவற்றைத் தயாரித்துக் கொண்டுவந்து தன் கடையில்
ஒவ்வொரு நாள் சிறப்பான அம்சங்களாக விற்பனைக்கு வைத்துவிட்டார். அது மாலை நேரங்களில்
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு மட்டும் விற்கப்படும். அது அவர் கடையின்
தனிச்சிறப்பாக எங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. தனக்கு லாபம் குறைவாகப் போதும் என்றும்
வருபவர்களுக்கு நல்ல பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதும் அவருடைய லட்சியமாக இருந்தது.
எனவே மிக உயரிய காபி, டீ அவருடைய கடையில் கிடைத்தது. இளம் காலைப் பொழுதும் மாலை
நேரங்களும் மிக இனியவையாகப் பலருக்கு மாறிவிட்டன.
குறிப்பாக மன அழுத்தத்தைக் கொடுக்கும் மாலைப் பொழுது மிகவும் சுவாரஸ்யமான மாலைப்
பொழுதாக மாறிவிட்டது. இப்போது டீக்கடைக்குப் பால் கொண்டுவரும் நபராகப் பெரியதாடி
மாறிப் போய்விட்டார். இனிமேல் கல்யாணத்தை முடித்துவிடலாம் என்ற கட்டம் வந்துவிட்டது.
கல்யாணம் நடந்தது. கல்யாணம் கஸ்தூரி நாயுடுவின் வீட்டில் நடந்தது. பெரிய சந்தோஷம்.
கஸ்தூரி நாயுடுவுக்குப் பெரிய சந்தோஷம். 'மாமா' என்று கூப்பிடு குரலுக்கு ஓடிவந்து
திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறவர் அல்லவா? யோசனைகள் பண்ணுகிறவர்கள். மதிக்காத
இளைய தலைமுறை மார்பைத் தூக்கிக் கொண்டு தெருவோடு போகிறபோது மதிப்பாகத் திண்ணையில்
உட்கார்ந்துகொண்டு யோசனை பண்ணுகிறதென்றால் அதற்குப் பெரிய மதிப்பு இருந்தது.
நாங்கள் பெரிய சந்தோஷத்தில் இருந்தோம். சர்க்கரை ராமகிருஷ் ணனின் வீட்டுக்கு நல்ல காய்ச்சிய
சுத்த சாராயத்தைப் பாட்டில் பாட்டிலாகக் கொண்டுவந்துவிட்டான். இப்போது நாங்கள் மட்டுமே
சாராயம் குடித்தோம். நாங்கள் குடித்துக்கொண்டிருந்தபோது பெண்ணும் பிள்ளையும் பெரிய
கோயிலுக்குப் போகிறார்களென்றும் எங்களைக் கூப்பிடுகிறார்கள் என்றும் ஒருவன் ஓடிவந்து
சொன்னான். நாங்கள் கச்சேரியை முடித்துக் கொண்டு எழுந்து ஓடினோம். பெண்ணும் பிள்ளையும்
மேளதாளத்துடன் நற்றுணையப்பன் சந்நிதிக்குப் போனார்கள். இதுவரையில் நாங்கள் கிண்டல்
பண்ணிக்கொண்டிருந்த குருக்கள் சம்பிரதாயங்களை எல்லாம் முடித்துத் தீபாராதனைத் தட்டைக் கண்ணில்
ஒத்திக்கொள்ள பெண்ணுக்கும் பிள்ளைக்கும் முன் கொண்டுவந்து காண்பித்தார். கல்யாணி
தீபாராதனையைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டார். அவரைத் தொடர்ந்து நாங்களும் ஒத்திக்கொண்டோம்.
இனிமேல் என் பேத்திக்குத் தெரியும், என் உறவு கல்யாணியோடு எப்படிப்பட்டது என்பது.
ஓவியங்கள்: குணசேகரன்
உள்ளடக்கம்

Professor k. kumar

unread,
Oct 23, 2014, 6:26:39 AM10/23/14
to brail...@googlegroups.com
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-பொதுத் தமிழ் 1
தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கான
அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் 21-ஆம்
தேதி நடைபெறுகிறது. இதற்கு பயன்படும் வகையில் 6 முதல் 12 ஆம்
வகுப்பு வரையான சம்ச்சீர் பாடப்பகுதிகள் அனைவருக்கும் பயன்பட
வேண்டுமென்ற நோக்கில் வினா - விடைகளாக .....


ஆறாம் வகுப்பு:
வாழ்த்து
திருவருட்பா
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில் கலந்தான்என்
பாட்டில் கலந்தான் உயிரில் கலந்தான் கருணை கலந்து-திருவருட்பா
* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
* பெற்றோர் - இராமையா - சின்னமையார்
* வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874
* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார்
அமைத்தது - அறச்சாலை
* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை
* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.
* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க
அடிகளார்
* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில்
கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.
* நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.
* வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில்
தொகுக்கப்பட்டுள்ளன.
* சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
* மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை,
அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.
* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
* கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில்,
பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.

அறிவுரைப் பகுதி: திருக்குறள்:
அன்புடைமை
சொற்பொருள்: ஆர்வலர் - அன்புடையவர் புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் என்பு -
எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது. வழக்கு - வாழ்க்கை நெறி நண்பு -
நட்பு மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே அன்புதான் அடிப்படை என்பது பொருள்)
அன்பிலது - அன்பில்லாத உயிர்கள் என்பிலது - எலும்பில்லாதது(புழு) பூசல் தரும் -
வெளிப்பட்டு நிற்கும் ஆருயிர் - அருமையான உயிர் ஈனும் - தரும் ஆர்வம் - விருப்பம்
(வெறுப்பை நீக்கி விருப்பத்தை உண்டாக்கும் என்று பொருள்) வையகம் - உலகம் என்ப - என்பார்கள்
புறத்துறுப்பு - உடல் உறுப்புகள் எவன் செய்யும் - என்ன பயன்? அகத்துறுப்பு - மனத்தின்
உறுப்பு, அன்பு

பிரித்து எழுதுக:
அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத
வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்
தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல
வற்றல்மரம் - வாடிய மரம் *

இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
* இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர்
ஆண்டு கணக்கிடப்படுகிறது.
* சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
* இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும்
பிரிவுகளை உடையது.
* அதிகாரங்கள்: 133
* அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
* இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை.
உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
* திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 =
திருவள்ளுவர் ஆண்டு. எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர்
ஆண்டு 2044 என்று கூறுவோம்.

உரைநடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா.
* உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய
நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
* ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்
* இயற்பெயர் - வேங்கடரத்தினம்
* ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
* அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்
* உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன்
சுருக்கமே உ.வே.சா
* இவரின் தந்தை - வேங்கடசுப்பையா
* காலம் - 19.02.1855 முதல் 28.04.1942

* 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில்
துவங்கப்பட்டது.
* உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
* உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான
ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
* இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
* பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர்.
அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.
* ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில்
புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.

* ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள்
நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.

* குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர்
கபிலர்.
* தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார்.
அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
* ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா
* உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல்
பதிப்பு பணியை மேற்கொண்டார்.
* உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும்
அழைக்கின்றோம்.
* ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர். * குறிஞ்சிப்பாட்டில்
இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை -
தொண்ணூற்று ஒன்பது
* உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
எட்டுத்தொகை - 8 பத்துப்பாட்டு - 10 சீவகசிந்தாமணி - 1 சிலப்பதிகாரம் - 1 மணிமேகலை
- 1 புராணங்கள் - 12 உலா - 9 கோவை - 6 தூது - 6 வெண்பா நூல்கள் - 13 அந்தாதி - 3
பரணி - 2 மும்மணிக்கோவை - 2 இரட்டைமணிமாலை - 2 பிற பிரபந்தங்கள் - 4

துணைப்பாடம்: கடைசிவரை நம்பிக்கை
* கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய டென்
லிட்டில் பிங்கர்ஸ் என்ற தொகுப்பில் உள்ளது.
* சடகோ சகாகி, 11 வயது ஜப்பான் நாட்டுச் சிறுமி.
* ஜப்பானில் ஹிரோமிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.
* அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீசின் காரணமாக
சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
* சடகோவின் தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட
கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். இது நம்
நாட்டு நம்பிக்கை என்று கூறினாள்.
* ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.
* காகிதத்தால் உருவங்கள் செய்யும் ஜப்பானியர் ஒரிகாமி என்று கூறுவர்.
* 1955 அக்டோபர் 25ல் நல்ல சடகோ இறந்தாள்.
* மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.
* சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள்
செய்து எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின்
விருப்பத்தை நிறைவு செய்தனர்.
* சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம்
நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள்
சடகோவிற்கு சிலை எழுப்பினர்.
* அதன் பெயர் குழந்தைகள் அமைதி நினைவாலயம்.
* நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்!
இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!

Professor k. kumar

unread,
Oct 23, 2014, 6:30:03 AM10/23/14
to brail...@googlegroups.com
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-பொதுத் தமிழ் 2
ஆறாம் வகுப்பு: 2
இலக்கணமும் மொழித்திறனும்
* நாம் பேசும் மொழி மற்றும் எழுதும் மொழியை முறையாகப்
புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது - இலக்கணம்.
* அ - எழுத்து குறிப்பது மனிதனை.
* |- என்ற முதுகுக்கோடு குறிப்பது - பழங்காலத்திலவேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில்
சுமந்த அம்புக்கூட்டை குறிக்கிறது.
* மனிதர்களை போன்று இனமும் நட்பும் கொண்டது - எழுத்துக்கள்.
* ங் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து க. எ.கா: சிங்கம்,
தங்கை.
* ஞ் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து ச. எ.கா: மஞ்சள்,
அஞ்சாதே
* ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் எழுத்துகள் பெரும்பாலும் சேர்ந்தே வரும். எசகா:
பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.
* நட்பு எழுத்துக்களை இன எழுத்துகள் என இலக்கணம் கூறுகிறது.
* க், ச்,த், ப் ஆகிய மெய்யெழுத்துக்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும்.
எ.கா: பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.
* தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்து - ர், ழ்.
எ.கா: சார்பு, வாழ்க்கை
* முயற்சி திருவினை ஆக்கும் எனக் கூறியவர் - திருவள்ளுவர்.
* கவலையை மறக்க உரிய வழி - ஏதாவதொரு வேலையில் ஈடுபடுவது.
* எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார்.
முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.
* முயற்சிக்கு நோய் தடை இல்லை. நாலடியார் சொற்பொருள்:
* அணியார் = நெருங்கி இருப்பவர்
* என்னாம் = என்ன பயன்?
* சேய் = தூரம்
* செய் = வயல்
* அனையர் = போன்றோர்
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நாலடியார்
* நானூறு பாடல்களைக் கொண்டது - நாலடியார்.
* அறக்கருத்துக்களைக் கூறுவது - நாலடியார்.
* நாலடி நானூறு என்ற சிறப்பு பெயர் உடையது - நாலடியார்.
* சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் - நாலடியார்.

பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்:
* சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்,
பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக
மொத்தம் பதினொட்டு நூல்கள்.
* இவற்றை மேல்கணக்கு நூல்கள் எனக்
கூறுவர்.
* சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு -
பதினெண்கீழ்க்கணக்கு
* பதினெண் என்பது - பதினெட்டு என்று பொருள்.
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்களே.
* கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறப்படும் நூல் -
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.

* நன்மை செய்வோர் வாய்க்காலைப் போன்றவர்.

பாரத தேசம் சொற்பொருள்:
* வண்மை = கொடை (வன்மை = கொடுமை)
* உழுபடை = விவசாய கருவிகள்
* தமிழ்மகள் = ஒளவையார்.
* கோணி - சாக்கு
* தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்
* ஞாலம் - உலகம்
* உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்
* நெறியினின்று - அறநெறியில் நின்று
* சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.
* தமிழ்மகள் எனபடுபவர் - ஒளவையார்.
* தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் - பாட்டுக்கொரு புலவன் பாரதியார்.
* காலம்: 11.12.1882 - 11.09.1921
* பாட்டுக்கொரு புலவன் பாரதி என்றவர் கவிமணி.

உரைநடை: பறவைகள் பலவிதம்
* திருவெல்வேலி மாவட்டம் கூத்தனகுளத்தில் மக்கள்
பட்டாசு வெடிப்பதில்லை, ஏனென்றால் அங்கு கூடும் பறவைகள்
பயந்து விடாமல் இருக்கவே.
* உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும்
இடத்திற்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்.
* அதிக பணி அல்லது அதிக வெயிலின் காரணமாக புறவைகள்
ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது - வலசை போதல்
* பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.
* ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன்
காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள்
காரணமாகின்றன.
* வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்,
வண்டுகளை தின்று விவசாயிகளுக்கு உதவுகின்றன. பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர். 1.
தென்னை குடித்து வாழும் பறவைகள் 2. பழத்தை உண்டு வாழும் பறவைகள் 3. பூச்சியை தின்று
வாழும் பறவைகள் 4. வேட்டையாடி உண்ணும் பறவைகள் 5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.
* பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்
வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.
* சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்: மஞ்சள் சிட்டு, செங்காகம்,
கடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.
* நீர்நிலையில் வாழும் சில பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி,
ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன்,
ஊசிவால் வாத்து.
* மலைகளில் வாழும் சில பறவைகள்: இருவாச்சி, செந்தாலைப் பூங்குருவி,
மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு,
மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவரான், இராசாளிப் பருந்து,
பூமன் ஆந்தை.
* தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13
* பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்
* உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.
* நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.
* பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என
அழைப்பர்.
* வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம்
என அழைப்பர்.
* அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.
* அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.
* நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர்
கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.
* தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்: 1. வேடந்தாங்கல் 2. கரிக்கிளி(காஞ்சிபுரம்
மாவட்டம்), 3. கஞ்சிரால்குளம் 4. சித்திரஸ்குடி 5. மேலக் செல்வனூர் (இராமநாதபுரம்
மாவட்டம்) 6. பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்) 7. உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர்
மாவட்டம்) 8. வடுவூர் (தஞ்சை மாவட்டம்) 9. கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்) 10.
வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்), 11. வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்) 12. கூந்தன்குளம்
(திருவெல்வேலி மாவட்டம்) 13. கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்)

* தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
கூந்தன் குளம்.
துணைப்பாடம்: பாம்புகள்
* பாம்புகள் ஊர்வன வகையை சார்ந்தவை.
* சில பாம்புகள் குட்டிபோடும், பெரும்பாலானவை குஞ்சி பொரிப்பன.
* பாம்பின் உலகில் மனித இனம்
தோன்றுவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
* உலகம் முழுவதும் 2750 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 244
வகை பாம்புகள் உள்ளன.
* 52 வகை பாம்புகளில் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை.
* பாம்பு பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில்
உள்ள நீர்ச்சத்தே அதற்கு போதும்.
* பாம்பானது, தான் பிடிக்கும் இரையை கொள்ளவும், செரிமானத்திற்காகவும்
தான் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்துள்ளது.
* பாம்புகளுக்கு காது கேட்காது. அவை தரையில் ஏற்படும்
அடிருகளை உணர்ந்து செயல்படும்.
* வயலிலுள்ள எலிகளை பாம்பு அழிப்பதால், பாம்புகளை விவசாயிகளின்
நண்பன் என்று அழைக்கப்படும்.
* பாம்புக்கு காற்றில் வரும் ஓசைகளை கேட்க இயலாது. தரையில் ஏற்படும்
அதிர்வுகளை உணர்ந்து, அதன்மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக
இருக்கிறது.
* பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்து, கட்டுபோட்டு,
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
* இந்தியாவில் உள்ள இராஜநாகம் தான் உலகிலேயே மிக நீளமான பாம்பு. 15
அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இது. இராஜநாகம்
மற்ற பாம்புகளையும் உணவாக்கி கொள்ளும்.
* ஒரு பாம்பை கொன்றால், அதன் இணைபாம்பு பழி வாங்கும்
என்று சொல்வதுண்டு. இது உண்மையன்று, கொள்ளப்பட்ட ஒருவகை வாசனைத்
திரவியம் மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது.
பழிவாங்க, பாம்புகள் வருவதில்லை.
* பாம்பு தன் நாக்கை அடிகடி வெளியே நீட்டும். அவ்வாறு செய்வதால்
சுற்றுபுரத்தின் வாசனையை அறிந்து கொள்ளத் தான் அவ்வாறு செய்கிறது.

* நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின் (Cobrozincobrozin) எனும் வலி நீக்கும்
மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
* இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, தோலுக்காகப்
பாம்புகள் கொள்ளபடுவதைத் தடுக்க சட்டம் நிறைவேற்றி உள்ளது.
* பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும். இரையைப் பிடித்தால்
தப்பவிடாது. பாம்புகள் இரையை மென்று தின்பதில்லை,
அப்படியே விழுங்குகின்றன.
இலக்கணமும் மொழித்திறனும்
* தமிழில் உள்ள முதல் எழுத்துகள் மொத்தம் - முப்பது.

அவை:
* உயிர் எழுத்துக்கள் - பன்னிரண்டு
* மெய் எழுத்துக்கள் - பதினெட்டு
* உயிரும் மெய்யும் சேர்ந்து 216 உயிர்மெய்
எழுத்துகள்ளை உருவாக்குகின்றன.

* அன்றாடப் பேச்சில் பயன்படும் உயிர்மெய் எழுத்துகள் - கி, சி, பி, டி, தி, மி
* அ, இ, உ, எ, ஒ - ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்களும் மெய்
எழுத்துக்களோடு சேரும்போது உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள்
உண்டாகின்றன.
* ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள - ஆகிய நெடில் எழுத்துக்கள் மெய்
எழுத்துக்களோடு சேரும்போது உயிர்மெய்நெடில் எழுத்துக்கள்
உண்டாகின்றன.
* வண்மை - கொடைத் தன்மை
* வன்மை - கொடுமை
* மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தந்தம்
* ஆறுகள் மாசு அடையக் காரணம் - தொழிற்சாலைக் கழுவு
* மழை குறையக் காரணம் - காடுகள் அழிப்பு
* உலகம் வெப்பமடையக் காரணம் - வண்டிகளின் புகை நான்மணிக்கடிகை

சொற்பொருள்
* மடவாள் - பெண்
* தகைசால் - பண்பில் சிறந்த
* உணர்வு - நல்லெண்ணம்
* புகழ்சால் - புகழைத் தரும்
* காதல் புதல்வர் - அன்பு மக்கள்
* மனக்கினிய - மனத்துக்கு இனிய
* ஓதின் - எதுவென்று சொல்லும்போது

நூல்குறிப்பு:
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நான்மணிக்கடிகை.
* கடிகை என்றால் அணுகலன்(நகை)
* நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
* ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.

ஆசிரியர் குறிப்பு: * பெயர்: விளம்பிநாகனார்.
* விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.

உரைநடை: ஆராரோ ஆராரோ
* தாளில் எழுதாமல் பிறர் பாடுவதை கேட்டு பாடுவது நாட்டுப்புற பாடல்
* எழுதப்படாத வாய்வழியாக பரவுகிற கதைகள் வாய்மொழி இலக்கியம் என்பர்.
* கானாப் பாடல், கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும்
நாட்டுப்புற பாடலே.
* நாட்டுப்புற பாடலை பல வகைகளாக பிரிப்பர்.
* தாலாட்டு பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப்
பாடல்கள், கொண்டாடப் பாடல்கள், வழிப்பாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்.

துணைப்பாடம்: வீரச்சிறுவன்
* ஜானகிமணாளன் எழுதிய அறிவை வளர்க்கும் அற்புத கதைகள் என்னும்
நூலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகதை இது.
* பதினான்கு வயதுள்ள சிறுவன் குதிரையை அடக்கினான். அச்சிறுவன்
விவேகானந்தர்.
* விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரதத்.
* புரட்சி துறவி - வள்ளலார்.
* வீரத் துறவி - விவேகானந்தர்
இலக்கணமும் மொழித்திறனும்
* தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும். அவை: பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல், உரிச்சொல். இவற்றில் முதன்மையானவை பெயர்ச்சொல்லும்
வினைச்சொல்லும்.

Professor k. kumar

unread,
Oct 23, 2014, 8:11:12 AM10/23/14
to brail...@googlegroups.com
நல்லனவற்றை இகழாது ஏற்றுக் கொள்ள வேண்டும் - வினவுக்கு விளக்கம்
8
விவரங்கள்
எழுத்தாளர்: சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 20 அக்டோபர் 2014
சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு சார்பாக2014 அக்டோபா் ஐந்தாம் நாள்
திருச்சியில் நடைபெற்ற ” சாதி மறுப்புத் திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்பு
மாநாடு” குறித்து 2014 அக்டோபா் 16-ஆம் நாள் வினவு இணையதளத்தில் பெண்கள் விடுதலை
முன்னணி சார்பாக வெளிவந்த விமா்சனத்திற்கு, சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கத்தின்
விளக்கத்தை முன்வைக்கிறோம்
.............................................................................................................................................
திருச்சி மாநாட்டில் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாகத் தோழா்கள் கலந்து கொண்டதற்கு
முதலில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
1.வினவு விமா்சனம் -----
”சாதி மறுப்பை ஆதரித்து நடந்த இந்தக் கூட்டத்தில் இராமதாசு போன்றவா்களை
அம்பலப்படுத்தியோ, அவரின் கூட்டணியைக் கலைப்பது பற்றியோ, அவா் கேள்விக்குப் பதில்
அளிக்கவோ, அவரை முறியடிக்க வேண்டிய தேவை பற்றியோ பேசப் படவில்லை. ஆதிக்க
சாதிவெறியைத் தமிழகத்தில் பரப்பிவிடும் குறிப்பான கட்சிகளை, தலைவா்களை
அம்பலப்படுத்தாமல், பொதுவில் பேசுவதால் என்ன பயன்? திவ்யா-இளவரசன் காதல் திருமணம் செய்து
கொண்டதற்கு எதிராக இரண்டு ஊா்களையே கொளுத்தும் இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலை
எதிர்கொள்ளாமல், சாதி மறுப்புக் காதல் திருமணம் சாத்தியமா என்பதைப் பற்றியெல்லாம்
மாநாட்டில் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை”.
கூட்டியக்கத்தின் விளக்கம்
திவ்யா-இளவரசன் காதல் திருமணத்தையொட்டி நடந்த சாதிவெறிக் கலவரத்திற்கு எதிராகத்தான்
சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு எனும் அமைப்பே உருவாகியது. தா்மபுரி
வன்முறைக்கு எதிராக, சாதி மறுப்பு சனநாயக சக்திகளின் வலிமையான எதிர்ப்பை
வெளிப்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று ஈரோட்டில் இக்கூட்டியக்கம் சார்பாக
“சாதிமறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாடு”ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், காவல்துறை
அம்மாநாட்டிற்குத் தடை விதித்தது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அத்தடையைத்
தகா்த்தெறிந்து, அம்மாநாடு ஒருநாள் முழுவதும் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் வெற்றிகரமாக
நடைபெற்றது. மாநாடு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வழக்குமன்ற ஆணை
கிடைத்தும் கூட, ஏறத்தாழ 3000-க்கும் மேற்பட்டோர் அம்மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தனா்.
இாமதாசு போன்ற சாதிவெறிச் சக்திகளை அம்பலப்படுத்துவதற்காகவே அம்மாநாடு ஏற்பாடு
செய்யப்பட்டது. தவிரவும், “குறுகிய சுயநல அரசியல் இலாபத்திற்காகக் காதல் சாதி
மறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் பா.ம.க. உள்ளிட்ட சாதி அரசியல் கட்சிகளையும்,
சாதிச்சங்கங்களையும் புறக்கணிக்குமாறு தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது” எனத்
தீா்மானமும் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. பா.ம.க. போன்ற சாதி அரசியல் கட்சிகளை
வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்பதில் கூட்டியக்கம் உறுதியாகவும்,
தெளிவாகவும் உள்ளது. அதனால்தான், “ஈரோடு மாநாட்டின் மொத்தக்குரலும் ராமதாசுக்கு
எதிராக இருந்தது. அதுவே இப்போது சாதியம் பேசும் ஆதிக்கவாதிகளுக்கு எதிராகத்
திரும்பியிருப்பது என்னவோ உண்மை” எனக் குமுதம் ரிப்போட்டா் 16.10.2014 இதழ் சரியாகக்
குறிப்பிட்டிருந்தது.
திருச்சி மாநாட்டில் பேசிய சிலதோழா்கள் இராமதாசின் பெயரைக் குறிப்பிட்டே கடுமையாக
விமா்சித்தனா். ஆனால், பேசிய தோழா்கள் ஒவ்வொருவரும் அதேபோல் இராமதாசின் பெயரைக்
குறிப்பிடாவிட்டடாலும், சாதி ஆதிக்கவாதிகளை எதிர்த்துப் போராட வேண்டியதன் தேவை
குறித்து வலியுறுத்திப் பேசினா். அனைத்துத் தோழா்களின் பேச்சையும் முழுமையாகக்
கவனித்துக் கேட்டிருந்தால், இதைப் புரிந்து கொண்டிருக்க முடியும். சாதி ஆதிக்கவாதிகளை
எதிர் கொள்ளாமல், காதல் மறுப்புத் திருமணம் சாத்தியமில்லை என்பதை அனைவரும் அறிவா். அந்தப்
புரிதல், கூட்டியக்கத்திற்கும் உண்டு.
( 2 ) வினவு விமா்சனம் ----
“பெண் உரிமை பற்றிப் பேசும் மாநாட்டில், விரல் விட்டு எண்ணும் அளவில் பெண்கள் இருக்க என்ன
காரணம்?” எனும் வழக்குரைஞா் அங்கயற்கண்ணியின் குமுறலுக்கு என்ன பதில்?எப்படிச் சரி
செய்வது என்பதற்கு விடை இல்லை.
கூட்டமைப்பின் விளக்கம்
வினவு சுட்டிக்காட்டும் குறைபாட்டினைச் சுயவிமா்சனத்துடன் ஏற்றுக் கொள்கிறோம். எதிர்வரும்
நாள்களில் இதைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெளிவு
படுத்துகிறோம்.
( 3 ) வினவு விமா்சனம் ------
“அவரவா் தமது ஆதங்கத்தைக் கொட்டிச் செல்லும் களமாகவே மாநாடு அமைந்தது. இதில்
பார்வையாளா்கள் அதை எடுத்துக் கொள்வது, எப்படிச் சாதி மறுப்பு என்ற உயரிய நோக்கத்தை
நிறைவேற்றுவது, இதில் ஏற்படும் இடையூறுகள் சிக்கல்களை எப்படித் தீா்ப்பது என்பதற்கெல்லாம்
விடை இல்லை.”
கூட்டமைப்பின் விளக்கம்
ஒரு கூட்டியக்கத்தின் மாநாட்டில் கருத்துரையாற்றும் தோழா்கள், குறிப்பிட்ட சிக்கல் குறித்து
ஓரே மாதிரியாகத்தான் பேசுவார்கள் என எதிர்பார்க்கக்க முடியாது. அவரவா் தத்தம் நோக்கில்
சிக்கலை அணுகுவதையும் தவிர்க்க இயலாது. ஆனால், சாராம்சத்தில், அடிப்படை நிலைப்பாட்டில்
ஒன்றுபட்டு நிற்கிறார்களா என்பதுதான் முக்கியம். பங்கேற்ற அமைப்புக்கள் ஒரே மேடையில்
கூடிச் சாதி மறுப்பிற்கும், சாதி ஆதிக்க எதிர்ப்புக்கும் தங்களது ஒன்றுபட்ட ஆதரவைத்
தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். சாதி வெறியா்கள்
ஒன்றுபட்டு நிற்கும் இன்றைய சூழலில், சாதி எதிர்ப்புச் சனநாயக சக்திகளின் ஐக்கியமும்,
அதன் வெளிப்பாடும் மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் பல்வேறு சாதி எதிர்ப்ப்பு
அமைப்புக்களின் இத்தகைய ஒற்றுமை, சாதி வெறியா்களுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று
நாங்கள் நம்புகிறோம்.
மேலும் சாதி மறுப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைவழிகள் குறித்துத் தீா்மானங்கள்
குறிப்பிடுகின்றன. எனவே, “சாதி மறுப்பு என்ற உயா்ந்த நோக்கத்தை நிறைவேற்றுவது, இதில்
ஏற்படும் இடையூறுகள், சிக்கல்களை எப்படித் தீா்ப்பது என்பதற்கெல்லாம் விடை இல்லை”எனும்
விமா்சனம் ஏற்புடையது அல்ல!
( 4 ) வினவு விமா்சனம் --------
”இந்தச் சமூக அமைப்பிற்குள்ளேயே மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இந்தக் கூட்டமைப்பினரின்
விருப்பமாக உள்ளது. சட்டம், கடுமையாக்கப்பட வேண்டும், புதிய சட்டங்கள் தேவை என்ற
வகையில்தான் மாநாட்டின் பேச்சும், தீா்மானமும் அமைந்துள்ளது.”
கூட்டமைப்பின் விளக்கம்
இந்தச் சமூக அமைப்பிற்குள்ளேயே முழுமையான மாற்றம் ஏற்பட்டு விடும் எனும் பாமரத்தனமான
நம்பிக்கை கூட்டமைப்பிற்கு இல்லை. தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவி நிற்கும் நிலவுடைமைச்
சிந்தனை பற்றியும், ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யத் துடிதுடிக்கும் தரகா்கள்
குறித்தும் எமக்குத் தகுந்த புரிதல் உண்டு. இந்தப் பிற்போக்கு அரசியலமைப்பில் சட்டத்தின்
ஆட்சி குறிப்பிட்ட எல்லலைக்குள் மட்டுமே செலாவணியாகும். எனவே, சட்டத்தீா்வே ஒற்றை வழி
எனும் மாயையும் இவ்வமைப்பிற்கு இல்லை.
அதே சமயத்தில், சட்ட வழியில் சில உடனடித் தற்காலிகத் தீா்வுகளைப் பெற முடியும். கடந்த
காலத்தில் மக்களுக்கு ஆதரவான சில சட்டங்களையும் நாம்பெற்றிருக்கிறோம். ஆனால், அத்தகைய
சட்டங்கள் ஏதோ ஆளும்வா்க்கத்தின தயவினால் கிடைத்தவை அல்ல. தொய்வுறா மக்கள் போராட்டத்தால்
பறித்தெடுக்கப்பட்ட வெற்றிகள் அவை.
சட்டவழியே ஒற்றைத் தீாவு என்பதும் தவறு. சட்டவழிப் போராட்டங்களே தேவையில்லை என்பதும்
தவறு. சட்ட வழிப் போராட்டங்களும் மக்கள்திரள் போராட்டங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பதே
எமது நிலைப்பாடாகும்.
எமது முயற்சிகளை“சட்டவாதம்” என நக்கலடித்து இணையதளத்தில் தொடா்ந்து
எழுதிக்கொண்டிருக்கும் சிலரை நாங்கள் நன்கறிவோம். சிறு துரும்பைக்கூடத்
துாக்கியெறியாமல்,வீட்டிற்குள் சுகமாக உட்கார்ந்து கொண்டு, செயல்படுபவா்களைக் கண்டு
பொறாமையால் “இணையப்புரட்சி”செய்யும் உதிரிகள் என அவா்களை நாங்கள் அமைதியாகக் கடந்து
செல்கிறோம். ஆனால், பெண்கள் விடுதலை முன்னணி அத்தகைய அலைவரிசையில் சிந்திக்கவில்லை
எனவும் நாங்கள் அறிவோம். அதனால்தான் எங்களது நிலைப்பாட்டைத் தெளிவாக்கத் தோழமையுடன்
விளக்கங்களைத் தருகிறோம். அதே தோழமையைத் தோழா்களிடமும் எதிர்பார்க்கிறோம்.
”எங்களது பெண்கள் விடுதலை முன்னணியில் உள்ள பலரும் சாதிமறுப்புத் திருமணம்
செய்துகொண்டவா்கள். சாதி மறுப்புத் திருமணத்திற்குப் பிறகும், மக்கள் மத்தியில்
சாதிமறுப்பாளா்களாகவே வாழ்ந்து வருகிறோம். எங்களது பிள்ளைகளைச் சாதி மறுப்பாளா்கள்
என்றே பள்ளியில் பதிவு செய்து வருகிறோம். சாதி வெறியா்களின் அநீதிக்கு எதிராகக் குரல்
கொடுத்து வருகிறோம்” என நீங்கள்குறிப்பிட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி.உங்களைப்
போலவேதான் இக்கூட்டமைப்பிலுள்ள பல தோழா்கள் தங்களது வாழ்க்கையை அமைத்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதோடு, பல்வேறு கடுமையான எதிர்பார்ப்புகளுக்கிடையில
சாதிமறுப்புத் திருமணங்களைத் தொடா்ந்து நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். இதன் காரணமாகத்
தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
”எதிரிகளை வீழ்த்தி, சாதி வெறியை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறையினாலேதான் நாங்கள்
மாநாட்டைப் பற்றிய எமது கருத்தைத் தெரிவித்துள்ளோம்” என நீங்கள் குறிப்பிட்டுள்ளது
குறித்து மகிழ்ச்சி. ஆனால், அடுத்த வரியிலேயே “கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாகவே
இம்மாநாட்டைப் பார்க்க முடிந்தது” என ஏகடியம் பேசுவது எத்தகைய தோழமை எனப் புரியாது
திகைக்கிறோம். இருப்பினும், “ஒருவா் பொறை (பொறுமை)இருவா் நட்பு” எனும் அனுபவமொழியைக்
கருத்தில் கொண்டு எமது விளக்கத்தை அளித்துள்ளோம்.
“கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயினும் நல்லுரையை”
எனும் பழமொழி நானுாற்றுப்பாடலை இறுதியாக உங்களின் மேலான பார்வைக்குச் சமா்ப்பிக்கிறோம்.
(காகம் கரைவதை விருந்தினா்கள் வருகையின் அறிகுறி என்று கருதி, அதனை அனைவரும்
வரவேற்பா். ஆகவே யாராக இருந்தாலும், அவா்கள் செயலில் நல்லனவற்றை இகழாது ஏற்றுக் கொள்ள
வேண்டும்.)
தோழமை மிக்க,
சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு

Professor k. kumar

unread,
Oct 23, 2014, 8:20:21 AM10/23/14
to brail...@googlegroups.com
நீதி உணர்ச்சியா? ஜாதி உணர்ச்சியா?
8
விவரங்கள்
எழுத்தாளர்: கோகுலகண்ணன்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 20 அக்டோபர் 2014
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சில நாட்களுக்கு முன்பு (12-10-2014) என் சொந்த ஊருக்குச்
(சேலம் மாவட்டம்; வீரபாண்டி ஒன்றியம்; முருங்கப்பட்டி) சென்றிருந்தேன். முருங்கப்பட்டி
ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கூட்டமாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அதைக்
கடந்து சிறிது தூரம் சென்றதும் சாலை ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்த சில நண்பர்கள்
என்னை நிறுத்தினார்கள். ஒரு பிரச்சனை என்று ஒரு சம்பவத்தை சொன்னார்கள்...
சொல்லப்பட்ட சம்பவம்:
people
முருங்கப்பட்டி மேல் நிலைப்பள்ளி அருகே இருவருக்குள் தகராறு நடந்திருக்கிறது. ஒருவர்
பெயர் மணிகண்டன், அதே பகுதியைச் சார்ந்தவர்; மற்றொருவர் பக்கத்து ஊரைச் சார்ந்த ஓட்டுநர்.
அந்த ஓட்டுநர் ஓர் ஆம்னி காரில் அந்தப் பக்கம் வந்திருக்கிறார்; சாலையின் நடுவே வழி
விடாமல் மணிகண்டன் நின்று கொண்டிருந்திருக்கிறார் (மணிகண்டன் போதையில் இருந்ததாக
சொல்லப்படுகிறது). வழிவிட முடியாது என்று சட்டையைப் பிடித்து அடித்திருக்கிறார்.
ஓட்டுநர் காவல் துறைக்கு தகவல் கொடுத்து அடிவாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
இதற்கிடையில் மணிகண்டன் வீசிய கல் அந்த வழியாக சென்ற இரமேஷ் என்பவரின் டூ வீலரில் பட்டு,
கண்ணாடி உடைந்து விட்டது. மணிகண்டனிடம் இரமேஷ் நியாயம் கேட்டுக்கொண்டிருக்க காவல் துறை
வந்துள்ளது. அங்கிருந்தவர்கள் இரும்பாலை காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
தான் எதிர்காலத்தில் அரசுப் பணிக்கு செல்லவேண்டும்; எனவே என் மீது புகார் கொடுக்காதீர்கள்
என்ற மணிகண்டன் இரமேஸிடமும், ஓட்டுநரிடமும் கெஞ்சிக் கேட்டுள்ளார். இரமேஸ் புகார் ஏதும்
கொடுக்காமல் வீடு திரும்பிவிட்டார். ஓட்டுநர் புகார் கொடுக்க மணிகண்டன் சேலம் மத்திய
சிறையில் அடைக்கப்பட்டார்.
அடுத்த பிரச்சனை:
பஞ்சாயத்து கூட்டி, தீர்மானம் போட்டு, காலனியை காலி செய்யப் போகிறோம் என்றார் ஒருவர்.
பறையனுங்களுக்கு பயங்கர‌ திமிரு; அதனால தான் தருமபுரியில் வீடுகளை எரிச்சாங்க என்று
மற்றொருவர். என்னப்பா பிரச்சனை என்று நான் கேட்க, அடுத்தப் பிரச்சனையை சொன்னார்கள்.
சிறையில் இருக்கும் மணிகண்டனின் பெரியப்பா மாரியப்பன் என்பவர், இரமேஸ், ஓட்டுநர் உள்ளிட்ட
நான்கு பேர் மீது, மணிகண்டனைத் தாக்கியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய்ப் புகார்
கொடுத்துவிட்டார். இவனுங்க அட்டூழியங்கள் தாங்க முடியல; இன்னைக்கு ஒரு நாளு
வீடுகளையாவது காலி செய்தாகனும் என்பதற்குத்தான் பஞ்சாயத்து.
அனைத்தையும் கேட்டுவிட்டு வீட்டிற்குச் சென்ற நான், பஞ்சாயத்திற்குச் சென்ற இரமேஸ் உள்ளிட்ட
எனது நண்பர்கள் நான்கு பேரை தனியாக வருமாறு அழைத்துப் பேசினேன்.
இரமேசிடம் நான் கேட்ட கேள்விகளும் பதில்களும்:
கேள்வி : ஒருவர் செய்த தவருக்காக அவர் குடியிருக்கும் பகுதியையே எதிர்க்கவேண்டிய
அவசியம் என்ன?
பதில் : அங்கு இன்னும் சில இளைஞர்கள் சாலையில் போவோரை கிண்டல் செய்கிறார்கள் அதனால் தான்.
கேள்வி : (அருகில் இருக்கும் நன்பர் மாறனைக் காண்பித்து) இவர் ஒரு தவறு செய்தால் இவர்
குடியிருக்கும் ஊரையே எதிர்ப்பீர்களா? அதற்காக பஞ்சாயத்து கூட்டப்படுமா?
பதில் : முடியாது.
கேள்வி : மாறன் தவறு செய்தால் மாறனின் ஜாதியைச் சார்ந்த அனைவரையும் எதிர்க்காத நீங்கள்,
காலனியில் இருக்கும் நான்கு பேர் தவறு செய்ததாக வைத்துக்கொண்டால் கூட, அந்தச் சாதியைச்
சார்ந்த அனைவரையும் எதிர்ப்பது ஏன்?
பதில் : பொய்க் கேசு கொடுத்ததனாலே.
கேள்வி : பொய்க் கேசு என்றே வைத்துக்கொண்டாலும் ஒருவர் தானே புகார் கொடுத்தார்; நீ ஒரு
அடி கூட அடிக்கவில்லையா?
பதில் : ஒரு அடி மட்டும் அடித்தேன்.
கேள்வி : ஆக பொய்க் கேசு இல்லைதானே?
பதில் : வன்கொடுமை தடுப்புச் சட்டத்துல கேசு கொடுத்துவிட்டார்களே.
கேள்வி : (பக்கத்து ஊரின் பெயரைச் சொல்லி) அங்கு இருவருக்குள் தகராறு ஏற்பட்டு அந்த
வழியாகச் செல்லும் உன் மீது கல் வீசப்பட்டால் அவர்களிடம் உன்னால் கேள்வியாவது கேட்க முடியுமா?
பதில் : முடியாது.
கேள்வி : அங்கு கேட்கவே முடியாத நீ, இங்கு ஒரு அடி அடிக்க முடிகிறது என்றால் அது
ஆதிக்க ஜாதி மனப்பான்மை இல்லையா?
(பதில் ஏதும் பேசவில்லை.)
கேள்வி : தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மணிகண்டனை சிறையில் அடைத்த காவல் துறை உன்னை
வெளியே விட்டுருக்கிறதே. இங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட
வில்லையே; சரி காவல் துறை உன்னை விசாரிக்க அழைத்ததா?
பதில் : இல்லை
கேள்வி : புகார் கொடுத்த தகவல் உனக்கு எப்படித் தெரியும்?
பதில் : பா.ம.க.வைச் சார்ந்த பிரமுகர்கள் சொன்னார்கள்.
பெரும்பாலான பிரச்சனைகளில் இரு தரப்பினருமே காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது
வழக்கம். (பாதிக்கப்பட்டோருக்கு எதிராக, குற்றவாளிகளை புகார் செய்ய காவல் துறையே
அறிவுரை வழங்குவது கூட உண்டு) யார் புகார் கொடுத்தாலும் அதை வாங்க வேண்டியது காவல்
துறையின் விதிமுறை. பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவரே சிறை செல்லும் நிலை கூட
ஏற்படுகிறது. அப்படி இருக்கும் போது, உன்னை காவல் துறை தண்டிக்கவில்லை; புகார்
கொடுத்தார் என்பதும் உறுதியான தகவல் அல்ல; பொய்ப் புகாரும் அல்ல; இதற்கு இவ்வளவு பிரச்சனையா?
மேலே சொன்ன எந்த பிரச்சனைக்காகவும் கூட்டப்படாத பஞ்சாயத்து, இப்போது கூட்டப்படுவது நீதி
வேண்டும் என்பதற்காகவா? நம் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவைகள் எல்லாம் உங்களுக்கு
நியாபகம் இருக்கின்றதா? என்று ஒரு நிகழ்வை நினைவூட்டினேன்.
நான் நினைவூட்டிய நிகழ்வு:
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து ஊரைச் சார்ந்தவர்களும்
பெத்தாம்பட்டி என்ற ஊரின் பெயரைக் கேட்டாலே அச்சப்படுவார்கள். (இந்த முருங்கப்பட்டி
ஊராட்சியில் ஒரு எட்டு குக்கிராமங்கள் உள்ளன. பெரும்பான்மையாக வன்னியர்களும்,
அடுத்தப்படியாக நாடார்கள், கவுண்டர்கள், பறையர்கள், சக்கிலியர்கள், மிகக் குறைவான
எண்ணிக்கையில் வண்ணார் மற்றும் நாவிதர்கள்). இது வரை ஜாதிச் சண்டையெல்லாம் வந்ததில்லை.
ஆனால் தவறு செய்தவராக இருந்தால் கூட பெத்தாம்பட்டியைச் சார்ந்த ஒருவரைத் திட்டினாலோ,
அடித்துவிட்டாலோ, சில நிமிடங்களில் பெத்தாம்பட்டியைச் சார்ந்த ஒரு முப்பது நாற்பது
இளைஞர்கள் விரைந்து வருவார்கள்; எங்க ஊருக்காரன் மேலயே கை வைக்கிறீங்களா ? என்று கேட்டு
அடித்து நொறுக்கிவிடுவார்கள்.
பெத்தாம்பட்டியைச் சார்ந்தவர்கள் அனைத்து ஊருக்கும் வருவார்கள்; ஆனால் மற்ற ஏழு ஊர்க்
காரர்களும் பெத்தாம்பட்டி செல்ல பயப்படுவார்கள். எங்க ஊரில் இருந்து 1 கி.மீ தூரம் வந்து
தான் பேருந்து ஏற முடியும். பெத்தாம்பட்டி, நாய்க்கன்பட்டி, முருங்கப்பட்டி ஆகிய மூன்று
பேருந்து நிறுத்தங்கள் இருந்தும், எங்க ஊரைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் நமக்கேன் வம்பு
என்று பொத்தாம்பட்டிக்கு பேருந்து ஏறக் கூட செல்லமாட்டார்கள்.
2004 ஆம் ஆண்டில் நான் பெத்தாம்பட்டிக்கு வேலைக்கு செல்கிறேன். பெரியார் கொள்கையில்
பற்றுள்ள நான், அப்போது தான் பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து சில மாதங்கள்
ஆகியிருக்கும். சுமார் 8 கி.மீ தொலைவில் இருக்கும் இளம்பிள்ளையில், கழகத்தின் சார்பாக
விநாயகர் சதுர்த்தி தொடர்பாக, பெரியார் கருத்துகள் அடங்கிய துண்டறிக்கை அச்சிட்டு
பரப்பிக்கொண்டிருந்தோம்.
பெத்தாம்பட்டியில் என்னுடைய நண்பர்கள் சிலருக்கு அந்த துண்டறிக்கையை வழங்கினேன். எங்க ஊரில்
நீ துண்டறிக்கை வழங்கக் கூடாது என்று சிலர் என்னை மிரட்டினார்கள். நானும் இதே ஊர் தான்;
கொஞ்சம் தூரம் தள்ளியிருக்கிறேன்; பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட சில இடங்கள் எல்லோருக்கும்
பொதுவானது; இதை நீங்கள் சொந்தம் கொண்டாடக் கூடாது; உங்க வீட்டிற்கு வேண்டுமானால்
வரக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நான் முறையிட்ட காரண‌த்தால்
என்னை லேசாக அடித்து விட்டார்கள்.
எனக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் இவர்களுக்கு இருக்கும் ஊர் வெறி (ஜாதிவெறி,
மதவெறி போல) தவறு என்று உணர்த்தவேண்டும் என்பதால் காவல் நிலையம் சென்று முறையிட்டு,
அவர்களிடம் “இனி நாங்கள் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தடுக்க மாட்டோம்” என்று எழுதி
வாங்கி, ஒரு வாரம் கழித்து அதே ஊரில் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டோம்.
(கூட்டம் நடக்கும் முன் தினம் வரை மற்ற ஊரைச் சார்ந்த பலரும் ‘உனக்கேன் வம்பு, அவங்களாம்
மோசமானவங்க, கூட்டம் போட்டா மேலும் பிரச்சனை செய்வாங்க’ என்று என்னை தடுக்க
முயற்சித்தார்கள்) சில எதிர்ப்புகளையும் மீறி வெற்றிகரமாக கூட்டம் நடந்தது. இது மற்ற ஏழு
ஊர்க்காரர்களாலும் பெருமையாகப் பேசப்பட்டது. இதனால் சில இளைஞர்களின் நட்பு கிடைத்து,
அதே ஊரில் கழக கொடி ஏற்றப்பட்டு இன்று வரை பராமரிக்கப்படுகிறது.
அதன் பின்னர் நடந்த ஊராட்சிமன்றத் தேர்தலில் வழக்கம் போல் பெத்தாம்பட்டியைச் சார்ந்த வேட்பாளர்
தோற்றுப் போனார். (ஒவ்வொரு தேர்தல் முடிவின் போதும், ஒரு மூன்று நாட்களுக்கு இந்த ஊரில்
பக்கத்து ஊர்காரர்கள் மாட்டினால் கதை கந்தல் தான்) வழக்கம் போல் இந்த ஆண்டும் ஊரில் உள்ள
அனைத்து தண்ணீர்க் குழாய்கள், பள்ளி சுற்றுச் சுவர், வீதி விளக்குகள் அனைத்தும் அடித்து
நொறுக்கப்படுகிறது; பிளாஸ்டிக் மினி டேங்குகள் தீயிட்டு எரிக்கப்படுகிறது, யாரும்
தட்டிக் கேட்க முன்வரவில்லை.
அந்த ஆண்டும் சிலருக்கு உதை விழுந்தது. அன்று இரவு நான் திருச்சியில் ஒரு
பொதுக்கூட்டத்தில் இருந்தேன். அதே ஊரான பெத்தாம்பட்டியைச் சார்ந்த எனது நண்பர்
தொலைபேசியில் “பக்கத்து ஊரைச் சார்ந்த எனது நண்பர் ஒருவரை எங்க ஊர்க்காரனுங்க
அடிச்சிட்டானுங்க; ஓவரா அட்டூழியம் பண்றானுங்க; காவல் துறைக்கு சிலர் போன் செய்தும் கூட
நடவடிக்கை இல்லை” என்று சொன்னார்.
அடுத்த நாள் ஊருக்குப் போன பிறகு பாதிக்கப்பட்ட அந்த நண்பரை காவல் துறையில் புகார்
கொடுக்கச் சொன்னேன். சில தினங்கள் காவல் நிலையம் நடந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அப்போது நக்கீரன் வார இதழின் செய்தியாளரை வரவழைத்து இங்குள்ள பிரச்சனைகள் குறித்து ஒரு
செய்தியாக்கி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்த பிறகு, பலரை காவல்
துறை அழைத்து எச்சரித்தது. அதன் பின்னர் அந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்
திருந்தினார்கள்.
ஆக கடந்த காலங்களில் அநியாயத்திற்கு எதிராக ஒன்றுதிரளாத மக்கள் – அநியாயத்திற்கு
எதிராக நின்ற என்னைப் போன்ற சிலரையும் வேண்டாம், வேண்டாம் என்று தடுத்த மக்கள் இன்று ஒன்று
கூடுவது எதனால்? இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் உணர்ச்சி, நீதி உணர்ச்சியா? ஜாதி
உணர்ச்சியா?
தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் தான் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் சிலரின்
அரசியல் ஆதாயத்திற்காகத் தூண்டப்படும் ஜாதிவெறி என்ற சதிவலையில் இளைஞர்கள் அகப்பட்டுவிடக்
கூடாது.
இறுதியாக, என் கருத்தைக் கேட்ட நண்பர்கள் பஞ்சாயத்திற்கு செல்லவில்லை; நேரடியாக மோத
முடியாமல், துடிப்பான இளைஞர்களிடம் ஜாதி வெறித் தீயை மூட்டி குளிர் காய நினைத்த
சுயநல சக்திகள் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டன‌.
- கோகுலகண்ணன்

Professor k. kumar

unread,
Oct 23, 2014, 1:29:11 PM10/23/14
to brail...@googlegroups.com
பீகார் முதல்வருக்கு பார்ப்பனர்களின் அவமதிப்பு
8
விவரங்கள்
எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்
தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம்
பிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2014
C வெளியிடப்பட்டது: 20 அக்டோபர் 2014
நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு பதவி விலகிய பீகார் முன்னாள் முதல்வர்
நிதிஷ்குமார், தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஜித்தன்
ராம் மஞ்சி அவர்களை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.
பீகார் ஆட்சி, இந்தியாவிலேயே தொழில்பொருளியல் வளர்ச்சியில் முதல் மாநிலமாக
முன்னேறியிருப்பதை அண்மையில் வெளிவந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டின. பீகார் தலைநகர்
பாட்னாவிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பர்மேஸ்வரிஸ்தான் மாவட்டத்திலுள்ள
கோயிலுக்கு முதல்வர் வழிபடச் சென்றார்.
அவர் வழிபட்டுவிட்டு திரும்பியவுடன் ‘சாமி’ தீட்டாகிவிட்டது என்று கூறி, பார்ப்பன
புரோகிதர்கள் கோயிலையும் கோயில் உள்ள சிலைகளையும் ‘சுத்தம்’ செய்து தீட்டுக்
கழித்துள்ளனர். இது குறித்து முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி கூறுகையில், “மக்கள் தான் என்னை
அந்த கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து நான் கிளம்பிய பிறகு, ‘சிலைகள்’
சுத்தம் செய்யப் பட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இந்தச் செயலைச் செய்தவர்களை நான்
கண்டிக்க மாட் டேன். இது குறித்து புகார்அளிக்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார். ஒரு
முதலமைச்சராக இருப்பவருக்கே இதுதான் நிலை என்ற கேவலம், பீகார் போன்ற மாநிலங்களில்
தலைவிரித்தாடுகிறது.
இதே பீகாரில்தான் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்
சார்ந்த பாபுஜெகஜீவன்ராம், சம்பூரணானந்தா என்ற சமஸ்கிருதப் பண்டிதர் சிலையை திறந்து வைத்த
போது, சிலை தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி, பார்ப்பனர்கள் கங்கை நீரைக் கொண்டு வந்து,
சிலையை கழுவி தூய்மைப்படுத்தினார்.
உ.பி.யில் தாழ்த்தப்பட்ட நீதிபதி ஒருவர், பதவி ஓய்வு பெற்றப் பிறகு, அவரது அலுவலகத்தில்
பொறுப்பேற்க வந்த பார்ப்பன நீதிபதி, தலித் நீதிபதியின் அறையில் தீட்டுப் பிடித்துவிட்டதாகக்
கருதி, தூய்மைச் சடங்குகளை செய்தார். திருவையாறு ‘தியாராயர்’ சங்கீத விழாவில்
‘சூத்திரர்’ தண்டபாணி தேசிகர் பாடியதால் மேடை தீட்டாகிவிட்டது என்று பார்ப்பனர்கள் தீட்டுக்
கழித்த சம்பவம் ஒரு வரலாறாக பதிந்து நிற்கிறது. மகத் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுடன்
தண்ணீர் எடுக்கும் உரிமைப் போராட்டத்தை புரட்சியாளர் அம்பேத்கர் நடத்தியபோது, குளம்
தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி, பார்ப்பனர்கள் ‘பசு மாட்டுச் சாணம் மூத்திரத்தைக்’ கொட்டிக்
குளத்தைச் சுத்தப்படுத்தி னார்கள். பார்ப்பனர்களைத் தவிர, வேறு சாதியார் அர்ச்சகர் ஆனால்
சாமி சிலை தீட்டாகிவிடும் என்று பார்ப்பனர்கள் கூறுவதை இன்று வரை உச்சநீதி மன்றமும்
ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சமூக இழிவை பார்ப்பன மேலாதிக்கத்தைக் கண்டிக்கவோ
விவாதத்துக்குள்ளாக்கவோ எந்த புரட்சிகர அமைப்புகளோ சமூக மாற்றம் பேசும் இயக்கங் களோ
ஊடகங்களோ முன்வரவில்லை. இந்த ‘அமைதி’க்குள்தான் பார்ப்பனியத்தின் வெற்றியே அடங்கிக்
கிடக்கிறது.
மத அடையாளம்: உயர்நீதிமன்றம் தந்த தீர்ப்பு
அரசு ஆவணங்களிலோ, விண்ணப்பங்களிலோ எவர் ஒருவரும் தனது மதத்தை அறிவிக்க வேண்டும் என்று
கட்டாயமில்லை என்று பம்பாய் உயர்நீதி மன்றம் வரவேற்கத்தக்க ஒரு தீர்ப்பை செப்.24, 2014 அன்று
வழங்கியிருக்கிறது. மதத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்றும்
அந்தத் தீர்ப்பு கூறுகிறது. டாக்டர் ரஞ்சித் மொகைத், கிஷோர் நசரே மற்றும் சுபாஷ் ரானாவேர்
ஆகிய மூவரும் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இது. தங்களுக்கு ஏசுநாதர்
மீது நம்பிக்கை உண்டு. அதற்காக கிறிஸ்தவ மதத்தையோ, வேறு மதத்தையோ நம்பவில்லை. கடவுளை
மட்டுமே நம்புகிறோம். மதத்தை நம்பாதவர்கள் என்று கூறி, தங்களை ‘மதமற்றவர்கள்’ என்று
அரசிதழில் பதிவு செய்ய முன் வந்தார்கள். மகராஷ்டிரா அரசு இதை ஏற்க மறுத்தது. அதைத்
தொடர்ந்து பம்பாய் உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கை தொடர்ந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். தீர்ப்பில் நீதிபதிகள் வெளியிட்ட
கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
“எனக்கு எந்த மதமும் இல்லை; எந்த மதத்தையும் பின்பற்றவோ, பரப்பவோ மாட்டேன் என்று
அறிவித்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு. இந்தியா, மதச்சார்பற்ற
ஜனநாயகக் குடியரசு நாடு என்பதால் அரசுக்கு மதம் கிடையாது எனவே, எந்த அரசு
அதிகாரமுள்ள அமைப்பும் அரசியல் சட்டம் 25ஆவது பிரிவு வழங்கியுள்ள, அடிப்படை உரிமையில்
குறுக்கிட முடியாது.
25ஆவது பிரிவு மனசாட்சி சுதந்திரத்தையும், விரும்பும் மதத்தைப் பின்பற்றிப் பரப்பும்
உரிமையையும் வழங்கியிருக் கிறது. மதத்தை ஏற்பதற்கும் ஏற்க மறுப்பதற்கும் இந்த சட்டப்
பிரிவு உரிமை அளித்துள்ளது. ஒருவர் மதத்தை நம்பாதவராக இருக்கலாம். ஒரு மதத்தை நம்பி
ஏற்றுக் கொண்டிருந்தவர், பிறகு அதில் நம்பிக்கையில்லை என்றால், தனக்கு எந்த மதமும்
கிடையாது என்று அறிவிக்கலாம். ஒரு குடிமகனோ அல்லது தனி நபரோ ஏதேனும் ஒரு மதத்தில்
இருந்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடிய எந்த சட்டமும் இல்லை.
சட்டத்தின் 25ஆவது பிரிவு வழங்கியுள்ள ‘மனசாட்சி சுதந்திரம்’ எந்த மதத்திலும் நம்பிக்கை
கிடையாது என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கிய தாகும்.
ஒரு குடிமகனின் பெற்றோர்கள், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றியிருந்தாலும்
அவர்களுக்குப் பிறந்தவர்கள் மனசாட்சி சுதந்திரப்படி மதமற்றவர்கள் என்று அறிவிக்கவும்,
மதத்தைப் பின்பற்றாமல் இருப்பதற்கும் உரிமை உண்டு” என்று தீர்ப்பில் கூறிய நீதிபதிகள், மத
அடையாளத்தை அரசு கேட்டால், தனக்கு மத அடையாளம் கிடையாது என்று கூறலாம் என்று
திட்டவட்டமாக கூறி யுள்ளனர். இந்தியா இந்துக்களின் தேசம்; இந்துக் கலாச்சாரமே இந்தியாவின்
தேசிய கலாச்சாரம் என்று கூறிக் கொண்டு அரசு எந்திரத்தை இந்துமய மாக்கும் பா.ஜ.க.,
ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு பம்பாய் உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சரியான பதிலடியாகும்.
சத்தீஸ்கரில் - இப்படி நடக்கிறது
சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் மண்டலத்தில் இந்து மதப் பிரச்சாரம் மட்டுமே நடத்த முடியும்.
இந்து மதத்தைத் தவிர கிறிஸ்தவம் உள்பட ஏனைய மதப் பிரச்சாரங்கள் செய்வதற்கோ, கிறிஸ்தவ
நிறுவனங்கள் செயல்படுவதற்கோ தடை செய்து, 50 கிராம பஞ்சாயத்துகள் ஆணைகள் பிறப்பித்துள்ளன.
சட்டீஸ்கர் ‘பஞ்சாயத்து ஆட்சி’ சட்டத்தின் 129(ஜி) பிரிவின் கீழ் இந்த பஞ்சாயத்துகள் இந்த
ஆணைகளை பிறப்பித்துள்ளன. அரசியல் சட்டம் அனைத்து மதத்துக்கும் வழங்கியுள்ள அடிப்படை
உரிமைகளுக்கு எதிரான இந்த உத்தரவு பிறப்பிக்கக் காரணம், ‘விசுவ இந்து பரிஷத்’ அமைப்புதான்.
இதை எதிர்த்து கிறிஸ்தவ மத அமைப்புகள் பிலாஸ்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதி மன்றம் சத்தீஸ்கர் அரசுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது
பிறப்பித்துள்ளது. கிறிஸ்தவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் என்.எல். சோனி,
“இந்திய நாட்டுக்குள் இந்தியர்கள் நுழைவதற்கே எப்படி தடை போட முடியும்?” என்ற அடிப்படை
யில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பஸ்தார் மாவட்ட விசுவ இந்து பரிஷத் தலைவர் சுரேஷ் யாதவ் கூறுகையில், “கிராம பஞ்சாயத்து
எடுத்துள்ள முடிவு இது. இந்த முடிவுக்குக் கட்டுப் பட்டே தீரவேண்டும்” என்று மதவெறியோடு
கூறி யுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் 10 பஞ்சாயத்துகள் இதே போன்று ஆணைகள்
பிறப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மோடி ஆட்சி வந்த பிறகு இந்து மத வெறி அமைப்புகள்
நாட்டை இந்து மயமாக்க அதிகாரத்தை முறை கேடாகப் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டி
செயல்படுகின்றன.
பக்தியின் பெயரால் பெற்ற மகளுக்கு ‘சமாதி’
‘கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி’ என்று பெரியாரியல்வாதிகள் கூறுவதால் மனம்
புண்படுகிறது என்று புலம்பும் போலி பக்தர்களுக்கு கீழ்க்கண்ட செய்தியை சமர்ப்பிக்கிறோம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கும்ஹர் எனும்
கிராமம். இந்த கிராமத்தில் தங்களது இரண்டரை வயது மகளை குழி தோண்டி உயிரோடு
புதைத்து, சமாதி எழுப்பியுள்ளனர், அந்தப் பெண்ணின் பெற்றோர். அந்தப் பெண் ‘கடவுள்’
ஆகவிட்டதாகக் கூறினாராம். கிராமமே கூடி, இந்த காட்டு மிராண்டித்தனத்தைக் கண்டிக்காமல்,
சமாதிக்கு பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஊடகங்களும் ‘கடவுள் சமாதி’யைப் படம் பிடிக்க
திரண்டு விட்டன. அந்தப் பெண்ணின் பெயர் குஷ்பூ.
சமாதியைத் தோண்டி எடுத்து சவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அந்த சிறுமி கடுமையான
வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. செப். 18, 2014இல் இந்த சம்பவம்
நடந்தது. சிறுமியின் தாயார் சிறீபதி, தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய
மகள் விருப்பப்படி ‘சமாதி’க்குள் புதைத்ததாகவும், அவள் ‘கடவுள்’ ஆகிவிட்டதாக தங்களிடம்
கூறியதாகவும் தெரிவித்தார். தந்தை வினோத், இதே போன்ற கதையை முதலில் கூறினாலும்,
பிறகு, தனது மகளுக்கு நோய் இருந்ததாலும், ‘மருத்துவர்கள், மாந்திரீகர்கள்’ என்று
பலரையும் அணுகிய பிறகும் நோய் தீரவில்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறினார்.
இவர்கள் ‘நாட்’ என்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்கள். குழந்தைகளை உயிரோடு
‘சமாதி’க்குள் அனுப்பும் வழக்கம் இந்தப் பகுதியில் பரவலாக இருந்து வருகிறதாம்.
பார்ப்பன ‘எச்சில் இலை’ உருளுவதற்கு தடை
பார்ப்பனப் புரோகிதர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலைகள்மீது உருண்டு புரளும் ‘அங்கப்
பிரதட்சம்’ கருநாடக மாநிலத்தில் ஒருகோயிலில் பின்பற்றப்பட்டு வந்தது. கருநாடக மாநில
அரசு தோல் வியாதியைப் பரப்பும் இந்த அநாகரீக பழக்கத்துக்கு தடை விதித்தது. ‘அங்கப்
பிரதட்சம்’ செய்ய விரும்பும் பக்தர்கள், கோயில் பிரசாதத்தில் வேண்டுமானால் செய்து
கொள்ளட்டும்; பார்ப் பனர்களின் எச்சில் இலை மீது உருள வேண்டாம் என்று கருநாடக அரசு
விதித்த தடையை எதிர்த்து பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள்.
உச்சநீதிமன்றம், கருநாடக அரசு ஆணை பிறப்பித்தது சரியே என்று தீர்ப்பளித்து விட்டது.

Ashoak P

unread,
Oct 24, 2014, 1:52:23 AM10/24/14
to brailleacl
கடந்த மாதம் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான
பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற
’அசுரர் வாரம்’ என்ற விழாவினைப் பற்றிய செய்தி வினவில் வந்தது. அங்கே
படித்து கொண்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் இவ்விழா
தொடர்பாகவும், அதன் பின்னான வழக்குத் தொடர்பாகவும் விளக்கி எழுதியுள்ள
பதிவை வெளியிடுகிறோம்.
’அசுரர் வாரம்’: பார்ப்பனியப் பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்த கலாச்சார விழா.
இந்தியாவில் உயர் கல்வி என்பது சுதந்திரமான, பாரபட்சமற்ற, நடுநிலைமையான
ஆய்வுகளுக்கான வெளி என்று பொதுவாக நம்ப வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால்
பொதுப் புத்தியில் உறைந்திருக்கின்ற இந்த கருத்தாக்கம் பார்ப்பனிய
செயல்பாட்டின் நுண்ணிய வடிவம் தான் என்பதை உயர்கல்வி நிறுவனங்களின்
தற்போதைய நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. சாதிய, பொருளாதார
ஏற்றுத் தாழ்வுகளை எல்லாம் கடந்ததாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற
இந்திய உயர்கல்வி, தன் செயல்பாட்டு முறைமைகளில் பார்ப்பனியத்தின்
விழுமியங்களை மிகத் துல்லியமாக நடைமுறைப்படுத்தும் சேவகன் தான் என்பதை
அண்மையில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான
பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற
’அசுரர் வாரம்’ (Asura Week) என்னும் விழாவும், அது சார்ந்த நிகழ்வுகளும்
உறுதிப்படுத்துகின்றன.
’அசுரர் வாரமும்’ அடையாள மீட்டுருவாக்கமும்
ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகளுக்கான
பல்கலைக்கழகத்தில்(English and Foreign Languages University)
நிர்வாகத்தின் துணையுடன் இந்துமதவெறி மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி (ABVP)
யினால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு, எப்போதும்
போலவே மாணவர்களின் கடுமையான எதிர்ப்பயையும் மீறி நிர்வாகத்தின்
பாதுகாப்புடன் இவ்வாண்டும் கொண்டாடப்பட்டது.
அதை எதிர்க்கும் வண்ணமாகவும், திரிக்கப்பட்ட வரலாற்றினை மீட்டெடுக்கும்
விதமாகவும் பல்கலைக் கழகத்தில் உள்ள முற்போக்குச் சிந்தனை உடைய மாணவர்கள்
தாங்களாகவே இணைந்து, பார்ப்பனியப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி,
திராவிடக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் அசுரர் வாரம் (Asura Week)
எனும் எதிர் கலாச்சார (Counter Cultural) விழாவினைக் கொண்டாடுவதென முடிவு
செய்தனர்.
இந்துக்களின் பண்டிகைகளாக இந்தியாவில் கொண்டாடப்படுகின்ற விநாயகர்
சதுர்த்தி, தீபாவளி, ஓணம், சரசுவதி பூஜை போன்ற பண்டிகைகள் வெறுமனே பக்தி
சார்ந்த பண்டிகைகள் மட்டுமல்ல, மாறாக இப்பண்டிகைகள் மிகவும் விசமத்தனமான
உள்ளடக்கங்களைக் கொண்டவை. இவை இந்த மண்ணின் மைந்தர்களையும், நமது
மூதாதையர்களான திராவிட மக்களையும் அசுரர்கள், அரக்கர்கள் மற்றும்
கொடூரமானவர்கள் எனச் சித்தரித்தும், வந்தேறிகளான ஆரியர்கள்
மேம்பட்டவர்களென கதை கட்டியும், ’இக்கொடிய’ அசுரர்களை, ’புனித’ ஆரியக்
கடவுள்கள் கொல்லும் நிகழ்வுதான் இது போன்ற விழாக்கள் என்றும் மக்களை நம்ப
வைத்திருக்கின்றனர். பல நூறாண்டு காலமாக பார்ப்பனியத்தின் கொடூரக்
கரங்களால் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஒடுக்கப்பட்ட இம்மண்ணின் உழைக்கும்
மக்களை பார்ப்பனியப் பண்பாட்டுக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற
நோக்கத்தில் தான் இது போன்ற விழாக்கள் ஊக்குவிக்கப்பட்டு அரசின் ஆதரவோடு
சங்கப் பரிவாரங்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
இவ்வாறான கட்டுக் கதைகளின் மூலம் திராவிட மக்களை பார்ப்பனப் பண்பாட்டு
மேலாதிக்கத்திற்கு அடிமைகளாக்கி, அவர்களது கலாச்சார வரலாறுகளை அழித்து,
அவர்களே அவர்களது பண்பாட்டு வீழ்ச்சியினைக் கொண்டாடும்படி செய்கின்ற,
அதாவது திராவிட மக்களின் இறப்பை திராவிட மக்களே கொண்டாடும்படி
செய்வதுதான் இது போன்ற விழாக்களின் உள்நோக்கம். தீபாவளி, ஓணம், துர்கா
பூஜை போன்ற பண்டிகைகள் முறையே நரகாசூரன், மஹாபலி மற்றும் மகிசாசூரன் ஆகிய
திராவிட மன்னர்களின் இறப்பைக் கொண்டாடுவதுதான் என்பதை நினைவில் கொள்க.
இவை போன்ற கட்டுக் கதைகள் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில்
புனையப்பட்டு பார்ப்பனியப் பண்பாட்டை மக்களின் அன்றாட வாழ்க்கையில்
புகுத்தி, அதன் வழி பார்ப்பனிய மேலாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டு
வந்துள்ளது. இந்த முறைமையில்தான், விநாயகர் சதுர்த்தி என்ற
பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படாத விழாவானது சுதந்திரப் போராட்ட
காலத்தில் இந்து தேசியக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக, ’திலகர்’ என்ற
இந்துமத வெறியரால் இந்தியா முழுவதும் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக
மாற்றப்பட்டது. ’இந்து’ என்ற பட்டியில் சட்ட ரீதியாக அடைத்து
வைக்கப்பட்டுள்ள இம்மண்ணின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களும்,
இவ்விழாக்களின் பின்னுள்ள அரசியல் பற்றி ஏதும் அறியாமல் இவை போன்ற
விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். மேலும் தற்பொழுது விநாயகர் சதுர்த்தி
என்பது சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராக
கலவரத்தைத் தூண்டுவதற்கு இந்துமத வெறியர்களின் கைகளில் ஆயுதமாகப்
பயன்படுகிறது.
இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து
’அசுரர் வாரம்’ கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை தெலுங்கானா மாணவர்கள்
கூட்டமைப்பு (TSA), தலித், ஆதிவாசி, சிறுபானமையின, பகுஜன் மாணவர்கள்
கூட்டமைப்பு (DAMBSA), முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கம் (PDSU) ஆகிய
மாணவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
’அசுரர்வார’ விழாவின் அடிப்படைகள் :
• இந்து மதப் புராணங்களை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் பார்ப்பனியப்
பண்பாட்டு அரசியலின் முகத் திரையைக் கிழித்து அதன் ஒரு சார்புத் தன்மையை
அம்பலப்படுத்தி, அசுரர்களாகவும், தீய செயல்களைச் செய்யும்
அரக்கர்களாகவும், கொடூரமானவர்களாகவும், சித்தரிக்கப்படும் இம்மண்ணின்
மைந்தர்களைப் பற்றிய புராணக் கட்டுக் கதைகளைக் கட்டுடைத்து எதிர்
கதையாடல்களை (Counter Narratives) உருவாக்குதல். (பார்ப்பனியத்தை
எதிர்த்து போராடிய இம்மண்ணின் மைந்தர்களது உண்மையான கதைகளை கொண்டாடுதல் –
வினவு)
• திராவிட, பார்ப்பனிய எதிர்ப்புக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதன்
வழியாக மறக்கடிக்கப்பட்ட திராவிட மக்களின் பண்பாட்டு அடையாளங்களை
மீட்டெடுத்தல் .
• கொலையைக் கொண்டாடுவதும், பகுத்தறிவுக்கு விரோதமானதாகவும்,
மூடநம்பிக்கைகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதுமான பார்ப்பன இந்து மதப்
பண்டிகைகளைப் புறக்கணித்து, உழைக்கும் மக்களிடையே பார்ப்பனிய எதிர்ப்பு
மரபைக் கட்டமைத்தல்.
• நமது அன்றாட வாழ்க்கையில் நுட்பமாகக் கலந்து நம்மையும் அறியாமல் நம்மை
ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனிய விழுமியங்களைத் துடைத்தெறிதல்.
அறிவுசார் கல்விப் புலத்தில் திணிக்கப்படுகின்ற பார்ப்பனிய விழுமியங்களை
எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு கல்வி நிறுவனங்களில், குறிப்பாக
தில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக் கழகம், ஐதராபாத்
உஸ்மானியப் பல்கலைக் கழகம் போன்ற இடங்களில் வேறுபட்ட போராட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. சான்றாக, மஹிசாசூர விழா, நரகாசூர
விழா, சரசுவதி சிலையை உடைத்தல், மாட்டுக் கறித் திருவிழா (Beef Festival)
முதலான விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. இந்த மரபின்
தொடர்ச்சியாக ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக் கழகத்தில்
அசுரர் வாரம் (EFLU Asura Week) செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி
செப்டம்பர் 13 வரை நடைபெற்றது. ஆனால் இவ்விழா ஏற்படுத்திய அதிர்வுகளும்,
அது சார்ந்த சிந்தனைகளும் இன்னும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.
’அசுரர் வாரம்’ விழா நிகழ்வுகள் :
• முதல் நாள்: ராவணன் தினம்
• இரண்டாம் நாள்: சூர்ப்பனகை தினம்
• மூன்றாம் நாள்: மகிசாசூரன் தினம்
• நான்காவது நாள்: தாடகை தினம்
• ஐந்தாவது நாள்: “இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல், பல்கலைக்கழக
வளாகங்களில் மதச்சார்பின்மையை மறுவரையறை செய்தல்” என்ற
தலைப்பில்கருத்தரங்கம்.
இராவணன தினத்தில், இராமாயணத்தைக் கட்டுடைக்கும் எதிர் கதையாடலின்
வடிவமாக, மூர்க்கமாகவும் கொடூர அரக்கத் தன்மையுடன் சித்தரிக்கப்பட்ட
திராவிட மன்னனான இராவணனின் உருவத்தை முக ஓவியங்களாக வரையும் போட்டி
நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் கலந்து கொண்டு மாவீரன் இராவணனின் உருவம்
வரையப்பட்ட முகத்தோடும், இவர்களுடன் மற்ற மாணவர்களுமாக சுமார் 35-க்கும்
மேற்பட்டோர் தங்கள் கைகளில் ‘அய்யனார்’, ’மதுரை வீரன்’ போன்ற நாட்டுப்புற
கடவுள்களின் உருவங்களையொத்த படங்களைக் கொண்ட பதாகைகளுடன்
ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
திராவிடக் கலாச்சாரம் ஓங்குக! ஆரியக் கலாச்சாரம் ஒடுங்குக!
அசுரர்குல வீரர்களுக்கு வீர வணக்கம்!
அசுரர் கலாச்சாரம் ஓங்குக!
அம்பேத்கர், பெரியாரின், பூலே சாதி மறுப்புக் கருத்துகள் ஓங்குக!
என்று முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே பல்கலைகழக வளாகத்தினுள் பேரணியாக வலம் வந்தனர்.
இராவணன் தின பேரணி
ravana-4
ravana-3
ravana-1
ravana-2

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
திரண்ட பெருமுழக்கமாக பல்கலைக்கழக வாயிலை அடைந்த மாணவர்கள், சாலையில்
செல்லும் பொதுமக்களுக்கு பார்ப்பனியத்தின் நச்சு முகங்களை தோலுரிக்கும்
விதமாகவும், திராவிடப் பண்பாட்டைப் போற்றும் விதமாகவும்
முழக்கங்களிட்டனர். வாகனங்களில் சென்று கொண்டு இருந்தவர்கள்
முழக்கங்களையும், முகஓவியங்கள் மற்றும் பதாகைகளையும் கவனமாகப் பார்த்துச்
சென்றார்கள்.
அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், “ஏன் ஜெய் ராவாணா என்று
முழக்கமிடுகிறார்கள்” என்று ஆர்வமுடன் கேட்டார். ”இவர்களெல்லாம் திராவிட
குலத்தைச் சார்ந்தவர்கள்; நமது மூதாதையர்கள். ஆரியர்களின் ஒடுக்கு
முறைக்கு எதிராகப் போரடியவர்கள். இவர்கள் தான் நமது
வணக்கத்துக்குரியவர்கள்; ராமர், விநாயகர் போன்றோரெல்லாம் நமது தெய்வங்கள்
இல்லை” என்று ஒரு மாணவர் விளக்கினார்.
சூர்ப்பனகையின் மூக்கு
சூர்ப்பனகையின் மூக்கு
சூர்ப்பனகையின் மூக்கு
சூர்ப்பனைகை தினத்தன்று, பெண்ணென்றும் பாராமல் சூர்ப்பனகையின் மூக்கை
அறுத்து, கடவுள் அவதாரத்தின் தனயனாகவும், மாவீரனாகவும் புராணத்தால்
போற்றப்படும் இலக்குமணின் கையாலாகாத தனத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும்,
சூர்ப்பனகையை போற்றும் விதத்திலும், ஆணாதிக்க எதிர்ப்பின் சின்னமாகவும்
அறுபட்ட சூர்ப்பனகையின் மூக்கு உருவாக்கப்பட்டு, மாணவர்கள் கூடுகின்ற
’சாகர் சதுக்கத்தில் வைக்கப்பட்டது.
சூர்ப்பனகை
சூர்ப்பனகை
மகிசாசூரன் தினத்தன்று ”ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வை வெளிப்படுத்துதல்”
என்ற தலைப்பில் திரைச்சீலை ஓவியம் (Canvas Painting) வரைதல் நிகழ்ச்சி
நடைபெற்றது. இந்நிகழ்வில்,
• ‘சமணர்கள் கழுவேற்றப்படுதல்’
• ‘மகாபலி மன்னன் பார்ப்பன விஷ்ணுவைக் கொல்லுதல்’
• ‘பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தும் விதமான ஓவியங்கள்’,
• ‘சாதிய ஆதிக்கம்’
போன்ற பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் ‘இரணியன் நரசிம்மாவைக்
கொல்வது’ என்ற ஓவியம் ஏ.பி.வி.பிக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்கியது.
ஏற்கனவே அசுரர் விழாவினால் கொதிப்படைந்திருந்த இந்துத்துவ ஆதரவு
நிர்வாகமும், ஏ.பி.வி.பியும் விழாவை நிறுத்த ஏதாவதொரு ’போலியான’ காரணத்தை
எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நரசிம்ம ஓவியம் அதற்கான வாய்ப்பாக
அமைந்தது.
இலக்குவன் -சூர்ப்பனகை
ஆணாக்க வெறியன் இலக்குவனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகையின் ஓவியம்
இரணியன் - நரசிம்மன்
ஏ.பி.வி.பிக்கு வெறுப்பை உண்டாக்கிய இரணியன் நரசிம்மனைக் கொல்லும் ஒவியம்
இந்நிலையில், ஏ.பி.வி.பி யின் தூண்டுதலின் பேரில் 15 -க்கும் மேற்பட்ட
மாணவர்கள் ஓவிய நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து ’இரணியன்
நரசிம்மனைக் கொல்வது’ என்ற ஓவியத்தை நீக்கி விடும்படியும்,
துயிலுரிக்கப்பட்டு மூக்கறுபட்ட நிலையில் அபலையாய் நின்ற சூர்ப்பனகையின்
ஓவியத்தை சீதாவின் நிர்வாண ஓவியம் என்று புரிந்து கொண்டு, அது அவர்களது
மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் முறையிட்டனர். அது மட்டுமில்லாமல்,
அவர்கள் விழா ஏற்பாடு செய்த மாணவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதத்தின் முடிவில் ஓவியத்தை நீக்கமுடியாது என்றும், இதில் புதிதாக
யாரையும் புண்படுத்தவில்லை என்றும், நூறாண்டுகளுக்கும் மேலாக சமூகத்தின்
பல்வேறு தளங்களில் பெரியார், அம்பேத்கர், பூலே போன்ற தலைவர்கள்
வெளிப்படுத்திய கருத்துக்களைத்தான் நாங்கள் ஓவியமாக வரைந்திருக்கிறோம்
என்றும் பதில்அளிக்கப்பட்டது. ஒன்றும் மறுமொழி சொல்லமுடியாமல் அவர்கள்
அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில், வளாகத்தில் சுயமாக இயங்கும் திராணியற்று எதையுமே திரை
மறைவில் ஆதிக்க, இந்துத்துவ ஆதரவு நிர்வாகத்தின் கைகோர்ப்போடு
செயல்படுத்தும் ஏ.பி.வி.பி, அதன் ஆதரவுப் பேராசிரியர்கள் மூலம்
நிர்வாகத்தில் புகார் செய்தனர். நிர்வாகத்தினரும் விழாவை ஏற்பாடு செய்த
மாணவர்களிடம் இது பற்றி ஏதும் விசாரிக்காமல் உடனடியாக உஸ்மானியப்
பல்கலைக் கழக காவல் நிலையத்தில் வாய்மொழியாகப் புகார் அளித்தனர்.
அன்று மாலையே காவல் துறையினர் பல்கலைக் கழக வளாகத்தினுள் நுழைந்து அசுரர்
தினவிழா ஏற்பாடு செய்த மாணவர்களை அழைத்து “நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன்
மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார்
அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால்
உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்” என்று ‘அன்பாக’
எச்சரித்துச் சென்றனர்.
காவல் துறையினருக்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர விநாயகர் சிலை
மதச்சார்பினமையின் அடையாளமாகவும், பிற மதத்தவரின் மத உணர்வை ஒரு சிறிதும்
புண்படுத்தாத, புண்ணியம் தருகின்ற ‘கடவுளா’கத் தெரிந்தது போலும்!
உச்சமன்ற நீதிபதிகளே ஆர்.எஸ்.எஸ் இன் கொ.ப.செவாக செயல்படும் போது
பார்ப்பனிய அரசமைப்பின் ஏவல் அடிமைகளாகச் செயல்படும் காக்கிகளிடம் எப்படி
மதச் சார்பின்மையை எதிர்பார்க்க முடியும்?
இந்த நிகழ்வுகளுக்குப் பின் ’அசுரர் வாரம் ’ விழாவைப் பற்றிய செய்திகள்
அனைத்து செய்தித் தாள்களிலும் வரத் தொடங்கின. பெரும்பாலான செய்தித்
தாள்கள் நிர்வாகம் சொன்னதைத்தான் அப்படியே வாந்தி எடுத்தன. சில
நாளிதழ்கள் விழா ஏற்பாடு செய்த மாணவர்களின் தரப்புக் கருத்துக்களையும்
செய்திகளாக வெளியிட்டன. நிர்வாகம், ஏ.பி.வி.பி மற்றும் காவல்துறை என
பல்முனைகளில் இருந்து வந்த தாக்குதல்களையும் பொருட்படுத்தாது
திட்டமிட்டிருந்தபடியே நிகழ்ச்சிகள் வெற்றிகரமாகத் தொடர்ந்து
நடத்தப்பட்டன.
தொடர்ந்து வந்த தாடகை தினத்தன்று ”ஆதிக்கத்தை எதிர்த்தல், கலாச்சார
எதிர்ப்பை வெளிப்படுத்துதல்” என்ற தலைப்பில் விவாத அமர்வு ஏற்பாடு
செய்யப்பட்டு பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பின் வழி உருவாக்கப்பட்ட ஏற்றுத்
தாழ்வுள்ள சமூகத் தன்மைகள் விவாதிக்கப்பட்டன.
அசுர வார விழா நிறைவாக ”இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல்,
பல்கலைக்கழக வளாகங்களில் மதச் சார்பின்மையை மறுவரையறை செய்தல்”
என்றதலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் “துண்டி(Dhundi)”
என்றநாவலை எழுதியதற்காகக் கைது செய்யப்பட்ட கன்னட எழுத்தாளர் யோகஷ்
மாஸ்டர் கலந்துகொண்டு அவர் எழுதிய நாவலைப் பற்றி விளக்கிப் பேசினார்.
இந்நாவல் எப்படி கணத்தின் (குழு) தலைவனான கணபதி இப்பொழுதுள்ள விநாயகன்
ஆக்கப்பட்டான் என்பது பற்றி ஆராய்ந்து எழுதப்பட்டதாகும்.
’விக்நாயக்’ (Vighnanayak) என்றால் தடைகளை உருவாக்குபவன் என்று பொருள்.
புராணங்களிலும் கூட விநாயகன் தீமைசெய்யும் கடவுளாகத்தான்
சித்தரிக்கப்பட்டிருக்கிறான் என்ற உண்மையைக் கூறியதற்காக, இந்நாவல்
வெளியான கர்நாடகாவில், இந்து மதவெறி அமைப்பான ஸ்ரீராம்சேனா போன்ற
இந்துத்துவ அமைப்புகள், இந்நாவல் இந்து மக்களின் கடவுளான விநாயகனைக்
கொச்சையாகச் சித்தரிக்கிறது என்றும், நாவலைத் தடை செய்ய வேண்டும் என்றும்
வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். இதனால் நாவல் விற்பனை தடை
செய்யப்பட்டதோடு, நாவலை எழுதிய யோகேஷ் மாஸ்டர் கைதும் செய்யப்பட்டார்.
பிணையில் வெளி வந்த அவர், கருத்தரங்கத்தில் இந்நாவலைப் பற்றியும், நாவல்
வெளியான பிறகு தான் சந்தித்த அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
பேராசிரியர் வி.பி.தாரகேஸ்வரும், உஸ்மானியாப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த
பேராசிரியர்.ஏ.சத்தியநாராயணாவும், ஆய்வு மாணவரும், களப்போராளியுமான
சுதர்சனும் மதச்சார்பின்மை, விநாயகர் சதுர்த்தியின் வரலாறு, பார்ப்பனிய
மேலாக்க எதிர்ப்பு ஆகியன பற்றிப்பேசினர். பெரும்பான்மையான மாணவர்கள்
இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
விழாவை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது பிணையில் வெளி வர முடியாத
பிரிவுகளில் வழக்குப் பதிவு :
அசுரர் வார விழா முடிவடைந்து சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் அக்டோபர்
3-ம்தேதி அசுரர் வாரம் கொண்டாடியதற்காக அதை ஏற்பாடு செய்த மாணவர்கள் ஆறு
பேர் மீது ‘மதவுணர்வைப் புண்படுத்துதல்’ என்ற அடிப்படையில் பிணையில்
வெளிவர இயலாத 153 A என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆறு
மாணவர்களுக்கும் விளக்கம் கேட்டு அறிவிக்கை (Notice) அனுப்பப்பட்டது.
விழா ஏற்பாடு செய்த மாணவர்களிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் நேரடியாக
நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்தது. இப்படி நிர்வாகம் அடாவடியாக
நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்
என்பதால், பார்ப்பனரைத் துறைத் தலைவராகக் கொண்ட ஜெர்மன் மொழிப் பிரிவு
மாணவரை தேர்ச்சியற்றவராக்கி கல்வியில் தொடர முடியாமல் செய்தது,
இந்துத்துவ ஆதரவு நிர்வாகத்தின் துன்புறுத்தலால் முதாஸிர் (Mutassir)
என்ற காஷ்மீரத்து இஸ்லாமிய மாணவன் விடுதி அறையிலேயே தூக்கு மாட்டித்
தற்கொலை செய்து கொண்டது ஆகிய நிகழ்வுகளிலெல்லாம் நிர்வாகம் நேரடியான
மாணவர் விரோதப் போக்கையே கடைப் பிடித்திருக்கிறது.
விளக்கம் அளிக்கும் பொருட்டு, தாங்கள் மீதுள்ள குற்றம் என்னெவென்றும்,
குற்றம் சாட்டியவர்கள் யார் என்றும், காவல் துறையினரிடம் கேட்டபொழுது
அவர்கள் ஒரு புகார் கடிதத்தை காண்பித்தார்கள். அதில் பெயர், கையொப்பம்
முதலிய தகவல்கள் எதுவுமே தெளிவாக இல்லை. பின்னர் அதுபற்றி வளாகத்தில்
விசாரித்த போது, ஏ.பி.வி.பியின் தூண்டுதலின் பேரில் சில மாணவர்கள்
விழாவின் மூன்றாம் நாளன்றே காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்
என்றும், அதன் பேரிலும், நிர்வாகத்தின் தூண்டுதலாலும் தான் காவல் துறை
வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிய வந்தது.
நிர்வாகத்திற்கும், பார்ப்பனிய மேலாண்மைக்கும் தலை சாய்க்காத
மாணவர்கள்யாரேனும் காவல் துறையிடம் புகார் அளிக்கச் சென்றால், அவர்களது
பெயர், துறை, விடுதி அறை எண் ஆகியவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வதோடு
மட்டுமல்லாமல், அவர்களது அடையாள அட்டையை நுணுகிப் பரிசோதிக்கவும் அவர்கள்
தவறுவதில்லை. மாறாக அசுரர் வாரம் விழாவைப் பற்றிய புகாரில் மேற்சொன்ன
எதையுமே காவ ஞநல்துறை பின்பற்றவில்லை. இது நிர்வாகமும், காவல் துறையும்
எவ்வளவு நேர்மையாக(?) செயல்படுகிறது என்பதைக் காட்டுகின்றது.
கடந்த அக்டோபர் 11-ம் தேதி TSA, DAMBSA, PDSU ஆகிய மாணவர் அமைப்புகளின்
எதிர்ப்பையும் மீறி பல்கலைக்கழக நூலகத்தில் நூலக அதிகாரியின் ஆதரவுடன்
துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதனை எதிர்த்து காவல் துறையிடம்
அளிக்கப்பட்ட புகாருக்கு ’’துர்கா பூஜை பெரும்பான்மையினரால்
கொண்டாடப்படும் பண்டிகை என்றும் அதையெல்லாம் தடுக்க முடியாது.’’ என்றும்
அல்ட்சியமாகக் கூறி விட்டனர்.
துர்கா பூஜை போன்ற மத விழாக்கள் கொண்டாடுவதில் அதிகமாக அக்கறை காட்டாத
உழைக்கும் மக்களையும் வலுக்கடாயமாக இந்தப் பெரும்பான்மையில் சேர்த்துக்
கொள்கிறார்கள். இந்தப் பெரும்பான்மை என்னும் குதிரையின் மீதுதான் இந்து
மத வெறியர்கள் வெகு சுலபமாகப் பயணிக்கிறார்கள்.
மதவுணர்வு என்பது இந்துக்களுக்கு (பெரும்பானமையான உழைக்கும் மக்கள்
இந்துக்கள் இல்லை என்ற போதிலும்) மட்டுமே என்பதாகத்தான் காவல் துறை,
கல்வி நிறுவனங்கள், பத்திரிக்கை, நீதிமன்றம் போன்ற அமைப்புகள் புரிந்து
கொள்கின்றன. பாரபட்சமற்று நடந்து கொள்வதாகவும், ’சமூக நீதியை’க் காக்கும்
காவலர்கள் என்றும் மார்தட்டிக் கொண்டே இந்நிறுவனங்கள் இவ்வாறு ஒரு
சார்புத்தன்மையுடன் தான் நடந்து கொள்கின்றன. பிற மதத்தவர்களுக்கு
மதவுணர்வே இல்லையென்பது போலவும், பிறப்பால் ஒரு கிறிஸ்தவராகவோ, ஒரு
இஸ்லாமியராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மதத்தவராகவோ இருந்தாலும், அவர்கள்
இந்துவாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸின் கூற்றைத் தான்
இதுபோன்ற நிறுவனங்கள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக(!?) நாடான இந்தியாவினுடைய
மதச்சார்பின்மையின்(?) யோக்கியதை இதுதான்.
பாசிசமயமாகி வரும் பல்கலைக்கழக நிர்வாகம்
அசுரர் வார விழா கொண்டாடுவதை எதிர்த்து புகார் அளித்தவுடன் பாய்ந்து
நடவடிக்கை எடுத்த நிர்வாகம், வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
நடத்திய போது பெரும் கூச்சல் எழுப்பி, தொந்தரவு செய்ததாக வளாகத்தில்
தங்கியிருக்கும் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத
பணியாளர்கள் புகார் செய்தும் கூட விநாயகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள்
மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
அசுரர் வார விழாவினை எதிர்த்து ’பின் வழியில்’ சில ஏ.பி.வி.பி மாணவர்கள்
அளித்த புகாரைக் கொண்டு உடனே காவல்துறைக்குத் தெரிவித்த நிர்வாகம்,
அசுரர் வார விழாவினை ஏற்பாடு செய்த மாணவர் இயக்கங்களை ஒரு பேச்சுக்குக்
கூட அழைத்து எந்தவித விளக்கமும் கேட்க முயலவில்லை. இதைப் பற்றி
பல்கலைக்கழகத்தின் துணை ஒழுங்குநரிடம் (Deputy
Proctor)பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நமது அறிவைக் கொண்டு
அந்த மாணவர்களைத் திருப்திப் படுத்த முடியாது” என்று திமிராகப்
பதிலளித்திருக்கிறார்.
ஒழுக்கம், பாதுகாப்பு என்ற பல காரணங்களைக் கூறி வளாகம் முழுவதும் CCTV
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் நிர்வாகம் வெளியிட்ட
சுற்றறிக்கையில் பல்கலைக்கழகத்தில் பணியில் உள்ள பாதுகாவலர்கள்
(Securities), வளாகத்தில் கவனத்தை ஈர்க்கும் எந்த நிகழ்வையும், யாருடைய
முன் அனுமதியுமின்றி பதிவு செய்யலாம் என்றும், அவற்றிற்கெதிரான எந்தவித
நிகழ்வும் கடமையாற்ற விடாமல் தடுத்த குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியது
என்றும் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்கலைக்கழக மாணவர் விரோதப்
போக்குக்கு எதிரான எந்தவித நியாயமான குரல்களையும் ஒடுக்கி, அவற்றைக்
கிரிமினல் குற்றங்களாக சித்தரித்து, அச்சுறுத்தி, மாணவர்களின் எதிர்ப்பை
முற்றாக நசுக்குவதுதான் நிர்வாகத்தின் எண்ணம்.
சமீபத்தில் நடந்த ஆண்கள் விடுதி உணவகத்தின் செயற்குழுவிற்கான தேர்தலில்
எந்தவித முன்னறிவிப்புமின்றி ஆறு பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அந்த ஆறு பேரும் ஏ.பி.வி.பியைச் சார்ந்தவர்கள் என்பது தற்செயலானதல்ல.
பின்னர், அது தொடர்பாக பதிவாளரிடம் புகார் அளித்துக் கேள்வி
எழுப்பியவுடனே வேறு வழியின்றி அந்தத் தேர்தலை பதிவாளர் ரத்து செய்தார்.
மேலும், வருகின்ற அக்டோபர் 29-ம் தேதி பல்கலைக்கழக மாணவர் அவைக்கான
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விதிமுறைகள் தொடர்பான
பல்கலைக்கழக அரசியலமைப்பில், மாணவர் அவை (Student’s Council) யின்
சுயசார்பினைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வகையில் மாணவர்களின் அனுமதியின்றி
நிர்வாகம் பல திருத்தங்களை செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் தனது பல தீர்ப்புகளில் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும்,
காவல் துறைக்குமான உறவுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
“மாணவர்களின் ஒழுக்கமின்மையோ, துர்நடத்தையோ அவர்கள் சார்ந்த கல்வி
நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக்
குழுவால் தீர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வில் ஆசிரியர் எவரேனும்
ஈடுபட்டால், நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினை அமைத்து நடவடிக்கை
எடுக்க வேண்டும். நிர்வாகத்தினால் ஒழுங்கு நிலையை சரி செய்ய முடியாத
பட்சத்தில் மட்டுமே காவல் துறையின் உதவியை நாடவேண்டும். கற்பதற்காக கல்வி
நிலையம் செல்லும் மாணவர்கள் எவ்விதத்திலும் காவல் துறையாலோ, சிறைச்சாலை
பயத்தாலோ, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவோ மனம் உடைந்து போவதான நிலையினை
உருவாக்கக் கூடாது. (Supreme Court of India, 4th May 2001; Equivalent
Citations: AIR 2001 SC 2814, 2001 (3) SCALE 503, (2001) 6 SCC 577).”
இந்நிலைக்கு மாறாக, எவ்வித நிகழ்வாயினும், பல்கலைக்கழக நிர்வாகம் காவல்
துறையின் உதவியினை நாடுவதும், இந்த உறவின் மூலம் சீருடையணிந்த அணிந்த
காவலர்கள் அடிக்கடி வளாகத்தினுள் வலம் வருவதும், விசாரணை என்ற பெயரில்
மாணவர்கள் காவல் நிலையத்திற்கு இழுக்கப்படுவதும் இங்கு யதார்த்தமாகி
விட்டது.
இந்திய அரசின் சட்டங்களில் பெரும்பாலானவைகள் சாதி ஏற்றத் தாழ்வு, இந்துமத
வெறி ஆகியவற்றை நியாயப்படுத்துபவையாகத் தான் இருக்கின்றன. கொட்டை
எழுத்தில் மதச்சார்பற்ற, இறையாண்மையுள்ள, சோசலிச ஜனநாயகக் குடியரசு என்று
போட்டுக் கொண்ட இந்திய அரசாங்கத்திடமும் அதன் நிறுவனங்களிடமும்
மதச்சார்பின்மை பற்றி பேசினால் மதச்சார்பின்மையா? கிலோ என்ன விலை? என்று
கேட்கும் நிலைதான் உள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கொஞ்ச நஞ்ச உரிமையைப்
பயன்படுத்துவதற்கும் இது போன்ற பல்கலைக்கழக நிர்வாகங்களும், காவல்
துறையும் தடையாக உள்ளன.சட்டத்தை மதிக்காத இவர்கள் தான் சட்ட ஒழுங்கு
பற்றியும், ஒழுக்கம் பற்றியும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்.
பகுத்தறிவுக்கு விரோதமான, மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதவிழாக்களையும்,
நுகர்வுக் கலாச்சாரத்தை வளர்க்கும் கேளிக்கை விழாக்களையும் அனுமதிக்கும்
நிர்வாகம்,’சமத்துவம்’, ’மதச்சார்பின்மை’ ஆகியவற்றை வலியுறுத்தும்
’அசுரர் வாரம்’ போன்ற கலாச்சார விழாக்களுக்கு அனுமதி தருவதில்லை. ஏனெனில்
’எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளுங்கள்;ஆனால் நிர்வாகத்தின்
செயல்பாடுகளையும், அதன் அதிகாரத்தையும் கேள்வி கேட்காதீர்கள்’ எனபது தான்
ஐ.ஐ.டி முதல் ஜவகர்லால் நேரு போன்ற மதிப்பு மிக்க பல்கலைக் கழகங்களிலும்
உள்ள நடைமுறை யதார்த்தம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல்
மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages
University) மட்டும் இருப்பதல்ல. மாறாக இந்தியாவில் உள்ள அடிப்படைக்
கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரையான அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும்
நீக்கமற நிறைந்துள்ளன. காலத்திற்க்கிற்கேற்ப வெவ்வேறு வடிவங்களை
எடுக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்த பெரியாரையும்,
அம்பேத்கரையும் போன்ற பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகளின் கருத்துகள்
முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது அதிகமாகத் தேவையாக உள்ளன.
பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும்
வண்ணம் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று வளாகத்தின்
ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் உள்ள உணவகங்களில் (Mess) பெரியாரின்
உருவப் படம் நிறுவப்பட்டது. ஏற்கனவே உணவகத்தில் அம்பேத்கர், பூலே
அவர்களின் படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி நிறுவனங்களில் ஆழமாக வேரூன்றி உள்ள பார்ப்பனியத்தைக் களையெடுக்க
’அசுரர் வாரம்’ போன்ற விழாக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அதன்
வழியாக ஒரு வீரியமான எதிர்கதையாடல் மரபினை உருவாக்க வேண்டிய கட்டாயம்
உள்ளது.
பார்ப்பனிய பண்பாட்டு ஒடுக்குமுறைய எதிர்கொள்வோம்! முறியடிப்போம்!
_______________________________
- முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்,
ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகம்
(English and Foreign Languages University),
ஐதராபாத்.
பெரியார் பிறந்த நாளன்று ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் உள்ள
உண்வகங்களில் பெரியாரின் உருவப்படம் நிறுவும் போது எடுக்கப்பட்ட படங்கள்
:
periyar-1
periyar-2
periyar-3

periyar-4
கடந்த மாதம் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான
பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற
’அசுரர் வாரம்’ என்ற விழாவினைப் பற்றிய செய்தி வினவில் வந்தது. அங்கே
படித்து கொண்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் இவ்விழா
தொடர்பாகவும், அதன் பின்னான வழக்குத் தொடர்பாகவும் விளக்கி எழுதியுள்ள
பதிவை வெளியிடுகிறோம்.
’அசுரர் வாரம்’: பார்ப்பனியப் பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்த கலாச்சார விழா.
இந்தியாவில் உயர் கல்வி என்பது சுதந்திரமான, பாரபட்சமற்ற, நடுநிலைமையான
ஆய்வுகளுக்கான வெளி என்று பொதுவாக நம்ப வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால்
பொதுப் புத்தியில் உறைந்திருக்கின்ற இந்த கருத்தாக்கம் பார்ப்பனிய
செயல்பாட்டின் நுண்ணிய வடிவம் தான் என்பதை உயர்கல்வி நிறுவனங்களின்
தற்போதைய நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. சாதிய, பொருளாதார
ஏற்றுத் தாழ்வுகளை எல்லாம் கடந்ததாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற
இந்திய உயர்கல்வி, தன் செயல்பாட்டு முறைமைகளில் பார்ப்பனியத்தின்
விழுமியங்களை மிகத் துல்லியமாக நடைமுறைப்படுத்தும் சேவகன் தான் என்பதை
அண்மையில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான
பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற
’அசுரர் வாரம்’ (Asura Week) என்னும் விழாவும், அது சார்ந்த நிகழ்வுகளும்
உறுதிப்படுத்துகின்றன.
’அசுரர் வாரமும்’ அடையாள மீட்டுருவாக்கமும்
ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகளுக்கான
பல்கலைக்கழகத்தில்(English and Foreign Languages University)
நிர்வாகத்தின் துணையுடன் இந்துமதவெறி மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி (ABVP)
யினால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு, எப்போதும்
போலவே மாணவர்களின் கடுமையான எதிர்ப்பயையும் மீறி நிர்வாகத்தின்
பாதுகாப்புடன் இவ்வாண்டும் கொண்டாடப்பட்டது.
அதை எதிர்க்கும் வண்ணமாகவும், திரிக்கப்பட்ட வரலாற்றினை மீட்டெடுக்கும்
விதமாகவும் பல்கலைக் கழகத்தில் உள்ள முற்போக்குச் சிந்தனை உடைய மாணவர்கள்
தாங்களாகவே இணைந்து, பார்ப்பனியப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி,
திராவிடக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் அசுரர் வாரம் (Asura Week)
எனும் எதிர் கலாச்சார (Counter Cultural) விழாவினைக் கொண்டாடுவதென முடிவு
செய்தனர்.
இந்துக்களின் பண்டிகைகளாக இந்தியாவில் கொண்டாடப்படுகின்ற விநாயகர்
சதுர்த்தி, தீபாவளி, ஓணம், சரசுவதி பூஜை போன்ற பண்டிகைகள் வெறுமனே பக்தி
சார்ந்த பண்டிகைகள் மட்டுமல்ல, மாறாக இப்பண்டிகைகள் மிகவும் விசமத்தனமான
உள்ளடக்கங்களைக் கொண்டவை. இவை இந்த மண்ணின் மைந்தர்களையும், நமது
மூதாதையர்களான திராவிட மக்களையும் அசுரர்கள், அரக்கர்கள் மற்றும்
கொடூரமானவர்கள் எனச் சித்தரித்தும், வந்தேறிகளான ஆரியர்கள்
மேம்பட்டவர்களென கதை கட்டியும், ’இக்கொடிய’ அசுரர்களை, ’புனித’ ஆரியக்
கடவுள்கள் கொல்லும் நிகழ்வுதான் இது போன்ற விழாக்கள் என்றும் மக்களை நம்ப
வைத்திருக்கின்றனர். பல நூறாண்டு காலமாக பார்ப்பனியத்தின் கொடூரக்
கரங்களால் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஒடுக்கப்பட்ட இம்மண்ணின் உழைக்கும்
மக்களை பார்ப்பனியப் பண்பாட்டுக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற
நோக்கத்தில் தான் இது போன்ற விழாக்கள் ஊக்குவிக்கப்பட்டு அரசின் ஆதரவோடு
சங்கப் பரிவாரங்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
இவ்வாறான கட்டுக் கதைகளின் மூலம் திராவிட மக்களை பார்ப்பனப் பண்பாட்டு
மேலாதிக்கத்திற்கு அடிமைகளாக்கி, அவர்களது கலாச்சார வரலாறுகளை அழித்து,
அவர்களே அவர்களது பண்பாட்டு வீழ்ச்சியினைக் கொண்டாடும்படி செய்கின்ற,
அதாவது திராவிட மக்களின் இறப்பை திராவிட மக்களே கொண்டாடும்படி
செய்வதுதான் இது போன்ற விழாக்களின் உள்நோக்கம். தீபாவளி, ஓணம், துர்கா
பூஜை போன்ற பண்டிகைகள் முறையே நரகாசூரன், மஹாபலி மற்றும் மகிசாசூரன் ஆகிய
திராவிட மன்னர்களின் இறப்பைக் கொண்டாடுவதுதான் என்பதை நினைவில் கொள்க.
இவை போன்ற கட்டுக் கதைகள் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில்
புனையப்பட்டு பார்ப்பனியப் பண்பாட்டை மக்களின் அன்றாட வாழ்க்கையில்
புகுத்தி, அதன் வழி பார்ப்பனிய மேலாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டு
வந்துள்ளது. இந்த முறைமையில்தான், விநாயகர் சதுர்த்தி என்ற
பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படாத விழாவானது சுதந்திரப் போராட்ட
காலத்தில் இந்து தேசியக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக, ’திலகர்’ என்ற
இந்துமத வெறியரால் இந்தியா முழுவதும் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக
மாற்றப்பட்டது. ’இந்து’ என்ற பட்டியில் சட்ட ரீதியாக அடைத்து
வைக்கப்பட்டுள்ள இம்மண்ணின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களும்,
இவ்விழாக்களின் பின்னுள்ள அரசியல் பற்றி ஏதும் அறியாமல் இவை போன்ற
விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். மேலும் தற்பொழுது விநாயகர் சதுர்த்தி
என்பது சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராக
கலவரத்தைத் தூண்டுவதற்கு இந்துமத வெறியர்களின் கைகளில் ஆயுதமாகப்
பயன்படுகிறது.
இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து
’அசுரர் வாரம்’ கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை தெலுங்கானா மாணவர்கள்
கூட்டமைப்பு (TSA), தலித், ஆதிவாசி, சிறுபானமையின, பகுஜன் மாணவர்கள்
கூட்டமைப்பு (DAMBSA), முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கம் (PDSU) ஆகிய
மாணவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
’அசுரர்வார’ விழாவின் அடிப்படைகள் :
• இந்து மதப் புராணங்களை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் பார்ப்பனியப்
பண்பாட்டு அரசியலின் முகத் திரையைக் கிழித்து அதன் ஒரு சார்புத் தன்மையை
அம்பலப்படுத்தி, அசுரர்களாகவும், தீய செயல்களைச் செய்யும்
அரக்கர்களாகவும், கொடூரமானவர்களாகவும், சித்தரிக்கப்படும் இம்மண்ணின்
மைந்தர்களைப் பற்றிய புராணக் கட்டுக் கதைகளைக் கட்டுடைத்து எதிர்
கதையாடல்களை (Counter Narratives) உருவாக்குதல். (பார்ப்பனியத்தை
எதிர்த்து போராடிய இம்மண்ணின் மைந்தர்களது உண்மையான கதைகளை கொண்டாடுதல் –
வினவு)
• திராவிட, பார்ப்பனிய எதிர்ப்புக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதன்
வழியாக மறக்கடிக்கப்பட்ட திராவிட மக்களின் பண்பாட்டு அடையாளங்களை
மீட்டெடுத்தல் .
• கொலையைக் கொண்டாடுவதும், பகுத்தறிவுக்கு விரோதமானதாகவும்,
மூடநம்பிக்கைகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதுமான பார்ப்பன இந்து மதப்
பண்டிகைகளைப் புறக்கணித்து, உழைக்கும் மக்களிடையே பார்ப்பனிய எதிர்ப்பு
மரபைக் கட்டமைத்தல்.
• நமது அன்றாட வாழ்க்கையில் நுட்பமாகக் கலந்து நம்மையும் அறியாமல் நம்மை
ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனிய விழுமியங்களைத் துடைத்தெறிதல்.
அறிவுசார் கல்விப் புலத்தில் திணிக்கப்படுகின்ற பார்ப்பனிய விழுமியங்களை
எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு கல்வி நிறுவனங்களில், குறிப்பாக
தில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக் கழகம், ஐதராபாத்
உஸ்மானியப் பல்கலைக் கழகம் போன்ற இடங்களில் வேறுபட்ட போராட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. சான்றாக, மஹிசாசூர விழா, நரகாசூர
விழா, சரசுவதி சிலையை உடைத்தல், மாட்டுக் கறித் திருவிழா (Beef Festival)
முதலான விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. இந்த மரபின்
தொடர்ச்சியாக ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக் கழகத்தில்
அசுரர் வாரம் (EFLU Asura Week) செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி
செப்டம்பர் 13 வரை நடைபெற்றது. ஆனால் இவ்விழா ஏற்படுத்திய அதிர்வுகளும்,
அது சார்ந்த சிந்தனைகளும் இன்னும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.
’அசுரர் வாரம்’ விழா நிகழ்வுகள் :
• முதல் நாள்: ராவணன் தினம்
• இரண்டாம் நாள்: சூர்ப்பனகை தினம்
• மூன்றாம் நாள்: மகிசாசூரன் தினம்
• நான்காவது நாள்: தாடகை தினம்
• ஐந்தாவது நாள்: “இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல், பல்கலைக்கழக
வளாகங்களில் மதச்சார்பின்மையை மறுவரையறை செய்தல்” என்ற
தலைப்பில்கருத்தரங்கம்.
இராவணன தினத்தில், இராமாயணத்தைக் கட்டுடைக்கும் எதிர் கதையாடலின்
வடிவமாக, மூர்க்கமாகவும் கொடூர அரக்கத் தன்மையுடன் சித்தரிக்கப்பட்ட
திராவிட மன்னனான இராவணனின் உருவத்தை முக ஓவியங்களாக வரையும் போட்டி
நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் கலந்து கொண்டு மாவீரன் இராவணனின் உருவம்
வரையப்பட்ட முகத்தோடும், இவர்களுடன் மற்ற மாணவர்களுமாக சுமார் 35-க்கும்
மேற்பட்டோர் தங்கள் கைகளில் ‘அய்யனார்’, ’மதுரை வீரன்’ போன்ற நாட்டுப்புற
கடவுள்களின் உருவங்களையொத்த படங்களைக் கொண்ட பதாகைகளுடன்
ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
திராவிடக் கலாச்சாரம் ஓங்குக! ஆரியக் கலாச்சாரம் ஒடுங்குக!
அசுரர்குல வீரர்களுக்கு வீர வணக்கம்!
அசுரர் கலாச்சாரம் ஓங்குக!
அம்பேத்கர், பெரியாரின், பூலே சாதி மறுப்புக் கருத்துகள் ஓங்குக!
என்று முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே பல்கலைகழக வளாகத்தினுள் பேரணியாக வலம் வந்தனர்.
இராவணன் தின பேரணி
ravana-4
ravana-3
ravana-1
ravana-2

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
திரண்ட பெருமுழக்கமாக பல்கலைக்கழக வாயிலை அடைந்த மாணவர்கள், சாலையில்
செல்லும் பொதுமக்களுக்கு பார்ப்பனியத்தின் நச்சு முகங்களை தோலுரிக்கும்
விதமாகவும், திராவிடப் பண்பாட்டைப் போற்றும் விதமாகவும்
முழக்கங்களிட்டனர். வாகனங்களில் சென்று கொண்டு இருந்தவர்கள்
முழக்கங்களையும், முகஓவியங்கள் மற்றும் பதாகைகளையும் கவனமாகப் பார்த்துச்
சென்றார்கள்.
அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், “ஏன் ஜெய் ராவாணா என்று
முழக்கமிடுகிறார்கள்” என்று ஆர்வமுடன் கேட்டார். ”இவர்களெல்லாம் திராவிட
குலத்தைச் சார்ந்தவர்கள்; நமது மூதாதையர்கள். ஆரியர்களின் ஒடுக்கு
முறைக்கு எதிராகப் போரடியவர்கள். இவர்கள் தான் நமது
வணக்கத்துக்குரியவர்கள்; ராமர், விநாயகர் போன்றோரெல்லாம் நமது தெய்வங்கள்
இல்லை” என்று ஒரு மாணவர் விளக்கினார்.
சூர்ப்பனகையின் மூக்கு
சூர்ப்பனகையின் மூக்கு
சூர்ப்பனகையின் மூக்கு
சூர்ப்பனைகை தினத்தன்று, பெண்ணென்றும் பாராமல் சூர்ப்பனகையின் மூக்கை
அறுத்து, கடவுள் அவதாரத்தின் தனயனாகவும், மாவீரனாகவும் புராணத்தால்
போற்றப்படும் இலக்குமணின் கையாலாகாத தனத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும்,
சூர்ப்பனகையை போற்றும் விதத்திலும், ஆணாதிக்க எதிர்ப்பின் சின்னமாகவும்
அறுபட்ட சூர்ப்பனகையின் மூக்கு உருவாக்கப்பட்டு, மாணவர்கள் கூடுகின்ற
’சாகர் சதுக்கத்தில் வைக்கப்பட்டது.
சூர்ப்பனகை
சூர்ப்பனகை
மகிசாசூரன் தினத்தன்று ”ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வை வெளிப்படுத்துதல்”
என்ற தலைப்பில் திரைச்சீலை ஓவியம் (Canvas Painting) வரைதல் நிகழ்ச்சி
நடைபெற்றது. இந்நிகழ்வில்,
• ‘சமணர்கள் கழுவேற்றப்படுதல்’
• ‘மகாபலி மன்னன் பார்ப்பன விஷ்ணுவைக் கொல்லுதல்’
• ‘பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தும் விதமான ஓவியங்கள்’,
• ‘சாதிய ஆதிக்கம்’
போன்ற பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் ‘இரணியன் நரசிம்மாவைக்
கொல்வது’ என்ற ஓவியம் ஏ.பி.வி.பிக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்கியது.
ஏற்கனவே அசுரர் விழாவினால் கொதிப்படைந்திருந்த இந்துத்துவ ஆதரவு
நிர்வாகமும், ஏ.பி.வி.பியும் விழாவை நிறுத்த ஏதாவதொரு ’போலியான’ காரணத்தை
எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நரசிம்ம ஓவியம் அதற்கான வாய்ப்பாக
அமைந்தது.
இலக்குவன் -சூர்ப்பனகை
ஆணாக்க வெறியன் இலக்குவனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகையின் ஓவியம்
இரணியன் - நரசிம்மன்
ஏ.பி.வி.பிக்கு வெறுப்பை உண்டாக்கிய இரணியன் நரசிம்மனைக் கொல்லும் ஒவியம்
இந்நிலையில், ஏ.பி.வி.பி யின் தூண்டுதலின் பேரில் 15 -க்கும் மேற்பட்ட
மாணவர்கள் ஓவிய நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து ’இரணியன்
நரசிம்மனைக் கொல்வது’ என்ற ஓவியத்தை நீக்கி விடும்படியும்,
துயிலுரிக்கப்பட்டு மூக்கறுபட்ட நிலையில் அபலையாய் நின்ற சூர்ப்பனகையின்
ஓவியத்தை சீதாவின் நிர்வாண ஓவியம் என்று புரிந்து கொண்டு, அது அவர்களது
மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் முறையிட்டனர். அது மட்டுமில்லாமல்,
அவர்கள் விழா ஏற்பாடு செய்த மாணவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதத்தின் முடிவில் ஓவியத்தை நீக்கமுடியாது என்றும், இதில் புதிதாக
யாரையும் புண்படுத்தவில்லை என்றும், நூறாண்டுகளுக்கும் மேலாக சமூகத்தின்
பல்வேறு தளங்களில் பெரியார், அம்பேத்கர், பூலே போன்ற தலைவர்கள்
வெளிப்படுத்திய கருத்துக்களைத்தான் நாங்கள் ஓவியமாக வரைந்திருக்கிறோம்
என்றும் பதில்அளிக்கப்பட்டது. ஒன்றும் மறுமொழி சொல்லமுடியாமல் அவர்கள்
அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில், வளாகத்தில் சுயமாக இயங்கும் திராணியற்று எதையுமே திரை
மறைவில் ஆதிக்க, இந்துத்துவ ஆதரவு நிர்வாகத்தின் கைகோர்ப்போடு
செயல்படுத்தும் ஏ.பி.வி.பி, அதன் ஆதரவுப் பேராசிரியர்கள் மூலம்
நிர்வாகத்தில் புகார் செய்தனர். நிர்வாகத்தினரும் விழாவை ஏற்பாடு செய்த
மாணவர்களிடம் இது பற்றி ஏதும் விசாரிக்காமல் உடனடியாக உஸ்மானியப்
பல்கலைக் கழக காவல் நிலையத்தில் வாய்மொழியாகப் புகார் அளித்தனர்.
அன்று மாலையே காவல் துறையினர் பல்கலைக் கழக வளாகத்தினுள் நுழைந்து அசுரர்
தினவிழா ஏற்பாடு செய்த மாணவர்களை அழைத்து “நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன்
மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார்
அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால்
உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்” என்று ‘அன்பாக’
எச்சரித்துச் சென்றனர்.
காவல் துறையினருக்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர விநாயகர் சிலை
மதச்சார்பினமையின் அடையாளமாகவும், பிற மதத்தவரின் மத உணர்வை ஒரு சிறிதும்
புண்படுத்தாத, புண்ணியம் தருகின்ற ‘கடவுளா’கத் தெரிந்தது போலும்!
உச்சமன்ற நீதிபதிகளே ஆர்.எஸ்.எஸ் இன் கொ.ப.செவாக செயல்படும் போது
பார்ப்பனிய அரசமைப்பின் ஏவல் அடிமைகளாகச் செயல்படும் காக்கிகளிடம் எப்படி
மதச் சார்பின்மையை எதிர்பார்க்க முடியும்?
இந்த நிகழ்வுகளுக்குப் பின் ’அசுரர் வாரம் ’ விழாவைப் பற்றிய செய்திகள்
அனைத்து செய்தித் தாள்களிலும் வரத் தொடங்கின. பெரும்பாலான செய்தித்
தாள்கள் நிர்வாகம் சொன்னதைத்தான் அப்படியே வாந்தி எடுத்தன. சில
நாளிதழ்கள் விழா ஏற்பாடு செய்த மாணவர்களின் தரப்புக் கருத்துக்களையும்
செய்திகளாக வெளியிட்டன. நிர்வாகம், ஏ.பி.வி.பி மற்றும் காவல்துறை என
பல்முனைகளில் இருந்து வந்த தாக்குதல்களையும் பொருட்படுத்தாது
திட்டமிட்டிருந்தபடியே நிகழ்ச்சிகள் வெற்றிகரமாகத் தொடர்ந்து
நடத்தப்பட்டன.
தொடர்ந்து வந்த தாடகை தினத்தன்று ”ஆதிக்கத்தை எதிர்த்தல், கலாச்சார
எதிர்ப்பை வெளிப்படுத்துதல்” என்ற தலைப்பில் விவாத அமர்வு ஏற்பாடு
செய்யப்பட்டு பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பின் வழி உருவாக்கப்பட்ட ஏற்றுத்
தாழ்வுள்ள சமூகத் தன்மைகள் விவாதிக்கப்பட்டன.
அசுர வார விழா நிறைவாக ”இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல்,
பல்கலைக்கழக வளாகங்களில் மதச் சார்பின்மையை மறுவரையறை செய்தல்”
என்றதலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் “துண்டி(Dhundi)”
என்றநாவலை எழுதியதற்காகக் கைது செய்யப்பட்ட கன்னட எழுத்தாளர் யோகஷ்
மாஸ்டர் கலந்துகொண்டு அவர் எழுதிய நாவலைப் பற்றி விளக்கிப் பேசினார்.
இந்நாவல் எப்படி கணத்தின் (குழு) தலைவனான கணபதி இப்பொழுதுள்ள விநாயகன்
ஆக்கப்பட்டான் என்பது பற்றி ஆராய்ந்து எழுதப்பட்டதாகும்.
’விக்நாயக்’ (Vighnanayak) என்றால் தடைகளை உருவாக்குபவன் என்று பொருள்.
புராணங்களிலும் கூட விநாயகன் தீமைசெய்யும் கடவுளாகத்தான்
சித்தரிக்கப்பட்டிருக்கிறான் என்ற உண்மையைக் கூறியதற்காக, இந்நாவல்
வெளியான கர்நாடகாவில், இந்து மதவெறி அமைப்பான ஸ்ரீராம்சேனா போன்ற
இந்துத்துவ அமைப்புகள், இந்நாவல் இந்து மக்களின் கடவுளான விநாயகனைக்
கொச்சையாகச் சித்தரிக்கிறது என்றும், நாவலைத் தடை செய்ய வேண்டும் என்றும்
வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். இதனால் நாவல் விற்பனை தடை
செய்யப்பட்டதோடு, நாவலை எழுதிய யோகேஷ் மாஸ்டர் கைதும் செய்யப்பட்டார்.
பிணையில் வெளி வந்த அவர், கருத்தரங்கத்தில் இந்நாவலைப் பற்றியும், நாவல்
வெளியான பிறகு தான் சந்தித்த அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
பேராசிரியர் வி.பி.தாரகேஸ்வரும், உஸ்மானியாப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த
பேராசிரியர்.ஏ.சத்தியநாராயணாவும், ஆய்வு மாணவரும், களப்போராளியுமான
சுதர்சனும் மதச்சார்பின்மை, விநாயகர் சதுர்த்தியின் வரலாறு, பார்ப்பனிய
மேலாக்க எதிர்ப்பு ஆகியன பற்றிப்பேசினர். பெரும்பான்மையான மாணவர்கள்
இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
விழாவை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது பிணையில் வெளி வர முடியாத
பிரிவுகளில் வழக்குப் பதிவு :
அசுரர் வார விழா முடிவடைந்து சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் அக்டோபர்
3-ம்தேதி அசுரர் வாரம் கொண்டாடியதற்காக அதை ஏற்பாடு செய்த மாணவர்கள் ஆறு
பேர் மீது ‘மதவுணர்வைப் புண்படுத்துதல்’ என்ற அடிப்படையில் பிணையில்
வெளிவர இயலாத 153 A என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆறு
மாணவர்களுக்கும் விளக்கம் கேட்டு அறிவிக்கை (Notice) அனுப்பப்பட்டது.
விழா ஏற்பாடு செய்த மாணவர்களிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் நேரடியாக
நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்தது. இப்படி நிர்வாகம் அடாவடியாக
நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்
என்பதால், பார்ப்பனரைத் துறைத் தலைவராகக் கொண்ட ஜெர்மன் மொழிப் பிரிவு
மாணவரை தேர்ச்சியற்றவராக்கி கல்வியில் தொடர முடியாமல் செய்தது,
இந்துத்துவ ஆதரவு நிர்வாகத்தின் துன்புறுத்தலால் முதாஸிர் (Mutassir)
என்ற காஷ்மீரத்து இஸ்லாமிய மாணவன் விடுதி அறையிலேயே தூக்கு மாட்டித்
தற்கொலை செய்து கொண்டது ஆகிய நிகழ்வுகளிலெல்லாம் நிர்வாகம் நேரடியான
மாணவர் விரோதப் போக்கையே கடைப் பிடித்திருக்கிறது.
விளக்கம் அளிக்கும் பொருட்டு, தாங்கள் மீதுள்ள குற்றம் என்னெவென்றும்,
குற்றம் சாட்டியவர்கள் யார் என்றும், காவல் துறையினரிடம் கேட்டபொழுது
அவர்கள் ஒரு புகார் கடிதத்தை காண்பித்தார்கள். அதில் பெயர், கையொப்பம்
முதலிய தகவல்கள் எதுவுமே தெளிவாக இல்லை. பின்னர் அதுபற்றி வளாகத்தில்
விசாரித்த போது, ஏ.பி.வி.பியின் தூண்டுதலின் பேரில் சில மாணவர்கள்
விழாவின் மூன்றாம் நாளன்றே காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்
என்றும், அதன் பேரிலும், நிர்வாகத்தின் தூண்டுதலாலும் தான் காவல் துறை
வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிய வந்தது.
நிர்வாகத்திற்கும், பார்ப்பனிய மேலாண்மைக்கும் தலை சாய்க்காத
மாணவர்கள்யாரேனும் காவல் துறையிடம் புகார் அளிக்கச் சென்றால், அவர்களது
பெயர், துறை, விடுதி அறை எண் ஆகியவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வதோடு
மட்டுமல்லாமல், அவர்களது அடையாள அட்டையை நுணுகிப் பரிசோதிக்கவும் அவர்கள்
தவறுவதில்லை. மாறாக அசுரர் வாரம் விழாவைப் பற்றிய புகாரில் மேற்சொன்ன
எதையுமே காவ ஞநல்துறை பின்பற்றவில்லை. இது நிர்வாகமும், காவல் துறையும்
எவ்வளவு நேர்மையாக(?) செயல்படுகிறது என்பதைக் காட்டுகின்றது.
கடந்த அக்டோபர் 11-ம் தேதி TSA, DAMBSA, PDSU ஆகிய மாணவர் அமைப்புகளின்
எதிர்ப்பையும் மீறி பல்கலைக்கழக நூலகத்தில் நூலக அதிகாரியின் ஆதரவுடன்
துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதனை எதிர்த்து காவல் துறையிடம்
அளிக்கப்பட்ட புகாருக்கு ’’துர்கா பூஜை பெரும்பான்மையினரால்
கொண்டாடப்படும் பண்டிகை என்றும் அதையெல்லாம் தடுக்க முடியாது.’’ என்றும்
அல்ட்சியமாகக் கூறி விட்டனர்.
துர்கா பூஜை போன்ற மத விழாக்கள் கொண்டாடுவதில் அதிகமாக அக்கறை காட்டாத
உழைக்கும் மக்களையும் வலுக்கடாயமாக இந்தப் பெரும்பான்மையில் சேர்த்துக்
கொள்கிறார்கள். இந்தப் பெரும்பான்மை என்னும் குதிரையின் மீதுதான் இந்து
மத வெறியர்கள் வெகு சுலபமாகப் பயணிக்கிறார்கள்.
மதவுணர்வு என்பது இந்துக்களுக்கு (பெரும்பானமையான உழைக்கும் மக்கள்
இந்துக்கள் இல்லை என்ற போதிலும்) மட்டுமே என்பதாகத்தான் காவல் துறை,
கல்வி நிறுவனங்கள், பத்திரிக்கை, நீதிமன்றம் போன்ற அமைப்புகள் புரிந்து
கொள்கின்றன. பாரபட்சமற்று நடந்து கொள்வதாகவும், ’சமூக நீதியை’க் காக்கும்
காவலர்கள் என்றும் மார்தட்டிக் கொண்டே இந்நிறுவனங்கள் இவ்வாறு ஒரு
சார்புத்தன்மையுடன் தான் நடந்து கொள்கின்றன. பிற மதத்தவர்களுக்கு
மதவுணர்வே இல்லையென்பது போலவும், பிறப்பால் ஒரு கிறிஸ்தவராகவோ, ஒரு
இஸ்லாமியராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மதத்தவராகவோ இருந்தாலும், அவர்கள்
இந்துவாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸின் கூற்றைத் தான்
இதுபோன்ற நிறுவனங்கள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக(!?) நாடான இந்தியாவினுடைய
மதச்சார்பின்மையின்(?) யோக்கியதை இதுதான்.
பாசிசமயமாகி வரும் பல்கலைக்கழக நிர்வாகம்
அசுரர் வார விழா கொண்டாடுவதை எதிர்த்து புகார் அளித்தவுடன் பாய்ந்து
நடவடிக்கை எடுத்த நிர்வாகம், வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
நடத்திய போது பெரும் கூச்சல் எழுப்பி, தொந்தரவு செய்ததாக வளாகத்தில்
தங்கியிருக்கும் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத
பணியாளர்கள் புகார் செய்தும் கூட விநாயகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள்
மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
அசுரர் வார விழாவினை எதிர்த்து ’பின் வழியில்’ சில ஏ.பி.வி.பி மாணவர்கள்
அளித்த புகாரைக் கொண்டு உடனே காவல்துறைக்குத் தெரிவித்த நிர்வாகம்,
அசுரர் வார விழாவினை ஏற்பாடு செய்த மாணவர் இயக்கங்களை ஒரு பேச்சுக்குக்
கூட அழைத்து எந்தவித விளக்கமும் கேட்க முயலவில்லை. இதைப் பற்றி
பல்கலைக்கழகத்தின் துணை ஒழுங்குநரிடம் (Deputy
Proctor)பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நமது அறிவைக் கொண்டு
அந்த மாணவர்களைத் திருப்திப் படுத்த முடியாது” என்று திமிராகப்
பதிலளித்திருக்கிறார்.
ஒழுக்கம், பாதுகாப்பு என்ற பல காரணங்களைக் கூறி வளாகம் முழுவதும் CCTV
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் நிர்வாகம் வெளியிட்ட
சுற்றறிக்கையில் பல்கலைக்கழகத்தில் பணியில் உள்ள பாதுகாவலர்கள்
(Securities), வளாகத்தில் கவனத்தை ஈர்க்கும் எந்த நிகழ்வையும், யாருடைய
முன் அனுமதியுமின்றி பதிவு செய்யலாம் என்றும், அவற்றிற்கெதிரான எந்தவித
நிகழ்வும் கடமையாற்ற விடாமல் தடுத்த குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியது
என்றும் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்கலைக்கழக மாணவர் விரோதப்
போக்குக்கு எதிரான எந்தவித நியாயமான குரல்களையும் ஒடுக்கி, அவற்றைக்
கிரிமினல் குற்றங்களாக சித்தரித்து, அச்சுறுத்தி, மாணவர்களின் எதிர்ப்பை
முற்றாக நசுக்குவதுதான் நிர்வாகத்தின் எண்ணம்.
சமீபத்தில் நடந்த ஆண்கள் விடுதி உணவகத்தின் செயற்குழுவிற்கான தேர்தலில்
எந்தவித முன்னறிவிப்புமின்றி ஆறு பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அந்த ஆறு பேரும் ஏ.பி.வி.பியைச் சார்ந்தவர்கள் என்பது தற்செயலானதல்ல.
பின்னர், அது தொடர்பாக பதிவாளரிடம் புகார் அளித்துக் கேள்வி
எழுப்பியவுடனே வேறு வழியின்றி அந்தத் தேர்தலை பதிவாளர் ரத்து செய்தார்.
மேலும், வருகின்ற அக்டோபர் 29-ம் தேதி பல்கலைக்கழக மாணவர் அவைக்கான
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விதிமுறைகள் தொடர்பான
பல்கலைக்கழக அரசியலமைப்பில், மாணவர் அவை (Student’s Council) யின்
சுயசார்பினைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வகையில் மாணவர்களின் அனுமதியின்றி
நிர்வாகம் பல திருத்தங்களை செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் தனது பல தீர்ப்புகளில் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும்,
காவல் துறைக்குமான உறவுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
“மாணவர்களின் ஒழுக்கமின்மையோ, துர்நடத்தையோ அவர்கள் சார்ந்த கல்வி
நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக்
குழுவால் தீர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வில் ஆசிரியர் எவரேனும்
ஈடுபட்டால், நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினை அமைத்து நடவடிக்கை
எடுக்க வேண்டும். நிர்வாகத்தினால் ஒழுங்கு நிலையை சரி செய்ய முடியாத
பட்சத்தில் மட்டுமே காவல் துறையின் உதவியை நாடவேண்டும். கற்பதற்காக கல்வி
நிலையம் செல்லும் மாணவர்கள் எவ்விதத்திலும் காவல் துறையாலோ, சிறைச்சாலை
பயத்தாலோ, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவோ மனம் உடைந்து போவதான நிலையினை
உருவாக்கக் கூடாது. (Supreme Court of India, 4th May 2001; Equivalent
Citations: AIR 2001 SC 2814, 2001 (3) SCALE 503, (2001) 6 SCC 577).”
இந்நிலைக்கு மாறாக, எவ்வித நிகழ்வாயினும், பல்கலைக்கழக நிர்வாகம் காவல்
துறையின் உதவியினை நாடுவதும், இந்த உறவின் மூலம் சீருடையணிந்த அணிந்த
காவலர்கள் அடிக்கடி வளாகத்தினுள் வலம் வருவதும், விசாரணை என்ற பெயரில்
மாணவர்கள் காவல் நிலையத்திற்கு இழுக்கப்படுவதும் இங்கு யதார்த்தமாகி
விட்டது.
இந்திய அரசின் சட்டங்களில் பெரும்பாலானவைகள் சாதி ஏற்றத் தாழ்வு, இந்துமத
வெறி ஆகியவற்றை நியாயப்படுத்துபவையாகத் தான் இருக்கின்றன. கொட்டை
எழுத்தில் மதச்சார்பற்ற, இறையாண்மையுள்ள, சோசலிச ஜனநாயகக் குடியரசு என்று
போட்டுக் கொண்ட இந்திய அரசாங்கத்திடமும் அதன் நிறுவனங்களிடமும்
மதச்சார்பின்மை பற்றி பேசினால் மதச்சார்பின்மையா? கிலோ என்ன விலை? என்று
கேட்கும் நிலைதான் உள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கொஞ்ச நஞ்ச உரிமையைப்
பயன்படுத்துவதற்கும் இது போன்ற பல்கலைக்கழக நிர்வாகங்களும், காவல்
துறையும் தடையாக உள்ளன.சட்டத்தை மதிக்காத இவர்கள் தான் சட்ட ஒழுங்கு
பற்றியும், ஒழுக்கம் பற்றியும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்.
பகுத்தறிவுக்கு விரோதமான, மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதவிழாக்களையும்,
நுகர்வுக் கலாச்சாரத்தை வளர்க்கும் கேளிக்கை விழாக்களையும் அனுமதிக்கும்
நிர்வாகம்,’சமத்துவம்’, ’மதச்சார்பின்மை’ ஆகியவற்றை வலியுறுத்தும்
’அசுரர் வாரம்’ போன்ற கலாச்சார விழாக்களுக்கு அனுமதி தருவதில்லை. ஏனெனில்
’எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளுங்கள்;ஆனால் நிர்வாகத்தின்
செயல்பாடுகளையும், அதன் அதிகாரத்தையும் கேள்வி கேட்காதீர்கள்’ எனபது தான்
ஐ.ஐ.டி முதல் ஜவகர்லால் நேரு போன்ற மதிப்பு மிக்க பல்கலைக் கழகங்களிலும்
உள்ள நடைமுறை யதார்த்தம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல்
மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages
University) மட்டும் இருப்பதல்ல. மாறாக இந்தியாவில் உள்ள அடிப்படைக்
கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரையான அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும்
நீக்கமற நிறைந்துள்ளன. காலத்திற்க்கிற்கேற்ப வெவ்வேறு வடிவங்களை
எடுக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்த பெரியாரையும்,
அம்பேத்கரையும் போன்ற பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகளின் கருத்துகள்
முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது அதிகமாகத் தேவையாக உள்ளன.
பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும்
வண்ணம் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று வளாகத்தின்
ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் உள்ள உணவகங்களில் (Mess) பெரியாரின்
உருவப் படம் நிறுவப்பட்டது. ஏற்கனவே உணவகத்தில் அம்பேத்கர், பூலே
அவர்களின் படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி நிறுவனங்களில் ஆழமாக வேரூன்றி உள்ள பார்ப்பனியத்தைக் களையெடுக்க
’அசுரர் வாரம்’ போன்ற விழாக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அதன்
வழியாக ஒரு வீரியமான எதிர்கதையாடல் மரபினை உருவாக்க வேண்டிய கட்டாயம்
உள்ளது.
பார்ப்பனிய பண்பாட்டு ஒடுக்குமுறைய எதிர்கொள்வோம்! முறியடிப்போம்!
_______________________________
- முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்,
ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகம்
(English and Foreign Languages University),
ஐதராபாத்.
பெரியார் பிறந்த நாளன்று ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் உள்ள
உண்வகங்களில் பெரியாரின் உருவப்படம் நிறுவும் போது எடுக்கப்பட்ட படங்கள்
:
periyar-1
periyar-2
periyar-3

periyar-4
periyar-5

[periyar-5

[

Ashoak P

unread,
Oct 24, 2014, 1:59:06 AM10/24/14
to brailleacl
---------- Forwarded message ----------
From: Ashoak P <youth...@gmail.com>
Date: Fri, 24 Oct 2014 11:22:21 +0530
Subject: [Braille Acl]
To: brailleacl <brail...@googlegroups.com>

Professor k. kumar

unread,
Oct 24, 2014, 11:27:15 AM10/24/14
to brail...@googlegroups.com
எழுத்தாளர் பிரியா பாபுவுடன் காலைநேரக் கலந்துரையாடல்
8
விவரங்கள்
எழுத்தாளர்: இரா.உமா
தாய்ப் பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர்
பிரிவு: மார்ச்1_2013
C வெளியிடப்பட்டது: 05 மார்ச் 2013
மார்ச் 8 - பெண்கள் நாள்
தனக்கென ஓர் அடையாளம், ஓர் ஏற்பிசைவு(அங்கீகாரம்), உரிமை இல்லாமல், எந்த ஒரு மனித
உயிரும் இப்பூமிப்பந்தில், தன்மதிப்புடன் வாழ முடியாது. குறைந்தது, மனிதருள் தான் ஒரு
பெண் அல்லது ஆண் என்கின்ற ‘பால் அடையாள உரிமை’யாவது வேண்டும். ஆனால் இப்படி எந்த
உரிமையும் இன்றி ஒரு சமூகம் - மாற்றுப்பாலினத்தவர் எனப்படும் திருநங்கையர் நம்மிடையே
வாழ்ந்து வருகின்றனர்.
priyababu_370
உலகின் போக்கில் நிகழ்ந்து வருகின்ற பெரும்பாலான மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்ற மனித
சமூகம், இயற்கையாக உடற்கூறில் நிகழும் சிறு மாற்றத்தின் விளைவான மாற்றுப்பாலினத்தவரை
மட்டும் இன்றுவரை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது. மண்ணைக் கீறி வெளிவரும் விதைகளைப் போல,
வலிகளைக் கீறி எழுந்து, பல துறைகளிலும் வெற்றிவாகைசூடி வருபவர்களுள்
குறிப்பிடத்தக்கவர் திருநங்கை பிரியாபாபு.
ஒரு காலைப் பொழுதில் அவருடைய வீட்டில் சந்தித்து உரையாடியபோது, தான் எதிர்கொண்ட
வாழ்க்கைப் போராட்டங்களையும், தன்னுடைய சமூகத்திற்குத் தான் செய்து வரும் பணிகளையும்,
மாற்றுப்பாலினத்தவர் குறித்தும் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.
பிரியா தன்னை ஓர் எழுத்தாளர் என்று அடையாளப் படுத்திக் கொள்ளவே விரும்புவதாகக்
கூறுகிறார். மும்பையில் வாழ்ந்தபோது, கடைகேட்கச் சென்ற இடத்தில், மும்பை தினபூமி
நிருபர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவரின் ஊக்கப் படுத்துதலில், ‘விடியலை நோக்கி
அலிகள்’ என்ற தொடரை தினபூமியில் எழுதியதாகவும், அதில் பல செய்திகளை வெளிப் படையாக
எழுதியதால், திருநங்கையர் சமூகத்தில் இருந்தே தான் வெளியேற்றப்பட்டதாகப் பிரியா
கூறும்போதே, அவருடைய சிந்தனை ஓட்டம் எப்படி இருந்திருக்கும் என்பது, அவருடைய
அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசியபோது புரிந்தது.
‘முக்தாம்பர் டிரஸ்ட்’ நடத்திவந்த ஜி.ஆர்.கேர்னரின் அறிமுகம் தன்னை அடுத்த கட்டத்திற்கு
நகர்த்தியதாக நன்றியோடு நினைவுகூர்கிறார். அந்த டிரஸ்ட்டில் வேலை செய்த போதுதான், கள
ஆய்வு, அலுவலக நிர்வாகம் பற்றிய பயிற்சி தனக்குக் கிடைத்தது என்றார். தன்னைப் பற்றி
அங்குள்ள பத்திரிகைகளில் செய்திகள் வந்தபிறகு, பல திருநங்கைகள் இதுபோன்று வேலை செய்ய
முன்வந்ததைக் குறிப்பிட்டார்.
பிறகு, ஒத்த கருத்துடைய திருநங்கைகளை ஒருங்கி ணைத்து, Dai welfare society என்ற
அமைப்பையும் நடத்தி யிருக்கிறார். அதோடு, Mumbai district Aids control society
உடன் இணைந்து, எய்ட்ஸ் உள்ளிட்டப் பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறார்.
‘பாலின அடையாளம் தவிர்த்து வேறு என்ன மாதிரியான புறக்கணிப்புகளைச் சந்திக்க
நேர்கிறது’ என்று கேட்டபோது, சென்னையிலும், திருச்சியிலும் எச்.ஐ.வி தொடர்பான சமூகப்
பணிகளைச் செய்தபோதுதான், சாதி வேறுபாடு என்னும், சமூகத்தின் மற்றொரு கொடுமையான
பக்கத்தை உணர்ந்ததாகக் கூறுகிறார். இவற்றையயல்லாம் பார்த்தபோது, தான் செய்ய வேண்டிய
வேலைகளின் எல்லைப் பரப்பு அதிகம் என்பதை உணர்ந்து, அதற்காக ஓர் அமைப்பை உருவாக்கிப்
பதிவு செய்யச் சென்றபோது, இன்னொரு புதிய சிக்கலையும் எதிர்கொள்கிறார். பதிவாளர்,
அடையாளச் சான்று இருந்தால்தான் பதிவு செய்ய முடியும் என்று கூறிவிடுகிறார். ‘அடையாளம்
ஏதுமற்று நின்ற அந்த நிமிடம், நெருப்பின் மீது நிற்பது போன்று தன்னைச் சுட்டெரித்ததாக’
சொன்னார்.
‘அடையாளச் சான்றுச் சிக்கலை எப்படி எதிர்கொண்டீர்கள்?’ என்று கேட்டோம்.
‘வழக்கறிஞர் ரஜினியின் அறிமுகம் கிடைத்தது. அடையாளச் சான்று சிக்கலைப் பற்றி அவரிடம்
சொன்னோம். அப்போது 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டைக்கான
எங்களின் கோரிக்கையை முன்வைக்க இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்தோம்.
2003, மார்ச் 6 ஆம் தேதி நானும், வழக்கறிஞர் ரஜினியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு
வழக்குத் தாக்கல் செய்தோம். அதில் திருநங்கைகளுக்கு வாக்குரிமை வேண்டும் என்று
கேட்டிருந்தோம். நீதிபதி சுபான் ரெட்டி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இப்படி
ஒரு நிலை இருப்பது இதுவரை தனக்குத் தெரியாது. இது புது செய்தியாக உள்ளது. எனவே
உலககெங்கும் இருக்கின்ற இது தொடர்பான செய்திகளைத் திரட்டித் தனக்குத் தந்தால்தான், சரியாக
வழக்கு விசாரணையை நடத்த முடியும் என்றார். நாங்களும் கொடுத்தோம். தீர்ப்பு நாங்கள்
விரும்பியபடியே கிடைத்தது. “திருநங்கைகள் தாங்கள் விரும்பும் பாலினத்தைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” என்று சுபான் ரெட்டி தீர்ப்பளித்தார்”. இது சட்டத்தின் துணையோடு
நாங்கள் அடைந்த முதல் வெற்றி’ ‘தீர்ப்புக்குப் பிறகு உங்கள் அனைவருக்கும் அடையாளச் சான்று
கிடைத்ததா?’ என்று கேட்டபோது, ‘அனைவருக்கும் என்று சொல்ல முடியாது. ஆங்காங்கே ரேன்
அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் பலருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிலும் பாலின
அடையாளத்தைக் குறிப்பதில் குழப்பம்தான் ஏற்பட்டுள்ளது. காரணம் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க
வரும் அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு கொடுக்க வில்லை.
எங்கள் போராட்டமும் ஓயவில்லை’ என்றார்.
‘சரி, சாதாரண மக்களோடு கலந்து பழகுவதில், அவர்களுக்கு நடுவில் வாழ்வதில் என்ன
மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிறது’ என்ற போது, முன்னைக்கு இப்போது கொஞ்சம்
நல்ல மாற்றம் தெரிவதாகச் சொன்னார்.
‘எங்களுக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். அதற்காகக்
கண்ணாடிக் கலைக்குழு என்ற நாடகக் குழுவை நடத்தி வருகிறோம். இந்தியாவின் முதல்
திருநங்கைகள் நாடகக் குழு இதுதான். எங்களோடு அ.மங்கை, மீனா சுவாமிநாதன், சிவகாமி
ஐ.ஏ.எஸ். மற்றும் பல ஊடகத் துறை நண்பர்கள் எப்போதும் இணைந்திருக்கின்றனர்.’
இந்தச் சமூகம் கொடுத்த ஒவ்வொரு அடியும், பல அடிகள் அவருடைய செயல்பாடுகளை முன்னே
உந்தித் தள்ளியிருக்கிறது.
முக்கியமாகக் குடும்பங்களின் புறக்கணிப்புத் தங்களின் வேதனையைப் பன்மடங்கு அதிகரிப்பதாகச்
சொல்கிறார். அதிலும் உடன்பிறந்த ஆண்களும், தந்தையும்தான் மிகக் கடுமையாக
நடந்துகொள்கின்றனர் என்று தெரிவிக்கிறார். தன்னுடைய அண்ணன்கள் இன்றுவரை தன்னை
ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அக்காவும், அவருடைய வீட்டினரும் நல்ல தொடர்பில் இருப்பதாகவும்
வேதனையோடும் மகிழ்ச்சியோடும் பகிர்ந்து கொள்கிறார். தன்னுடைய அம்மா எப்போதும் தனக்கு
ஆதரவாகத் தன்னுடனே இருப்பதால்தான், தன்னால் போராடி வெற்றி பெற முடிந்தது. இதுபோன்ற
ஆதரவு கிடைத்தால், ஒவ்வொரு திருநங்கையும் வெற்றியாளராக முடியும் என்பது அவருடைய
எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பிரியாபாபு தனக்கு ஆன்மிக நம்பிக்கை உண்டென்றாலும், பெரியாரின் மனித நேயக் கொள்கைகள்
தன்னை மிகவும் ஈர்த்திருக்கின்றன என்று சொல்கிறார். தன்னுடைய சமூகத்தின்
முன்னேற்றத்திற்காகவும், விடியலுக்காகவும் தன் வாழ்நாளை செலவழித்துக் கொண்டிருக்கும்
பிரியாவின் படைப்புகள், திருநங்கைகளின் வரலாற்று ஆவணங்களாக இருக்கின்றன.
2008இல் அரவாணிகள் சமூக வரைவியல், 2009இல் மூன்றாம் பாலின் முகம், 2012இல் தமிழகத்தில்
திருநங்கையரின் சமூக வரலாறு என்னும் நூல்களை எழுதியிருக்கிறார். மேலும், ‘தமிழகத்தில்
திருநங்கையர் வழக்காறுகள்’, ‘திருநங்கைகள் வாழ்க்கையும் அவர்களின் வழிபாடும்’ ஆகிய
தலைப்புகளில் ஆவணப் படங்களையும் எடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், ‘க.சமுத்திரம் விளிம்புநிலை மக்கள்
இலக்கிய விருது’ உள்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவரின் தன்னலமற்ற சமூக
சிந்தனைக்குச் சிகரம் வைத்ததுபோல, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், ‘பெரியார்
விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. பெரியார் விருது பெற்ற முதல் திருநங்கை என்ற
பெருமைக்குரியவர் இவர்.
அவருக்கு வாழ்த்துகளையும், என்றென் றைக்குமான நம்முடைய ஆதரவினையும் தெரிவித்துக் கொண்டு
விடைபெற்றுப் புறப் படும்போது, அவரும், அவருடைய பெருமைக் குரிய அம்மாவும், மானு
உள்ளிட்ட இன்னும் சில திருநங்கையர் தோழிகளும் அன்போடு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.
நம்புங்கள் மனிதர்களே அவர்களும் மனிதர்கள்தான்!

--
--

Professor k. kumar

unread,
Oct 25, 2014, 1:24:34 AM10/25/14
to brail...@googlegroups.com
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-பொதுத் தமிழ் 3
இசையமுது
சொல்பொருள்
* வானப்புனல் - மழைநீர்
* வையத்து அமுது - உலகின் அமுதம்
* வையம் - உலகம்
* தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
* புனல் - நீர்
* பொடி - மகரந்தப் பொடி
* தழை - செடி
* தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையா வெப்பம்
* தழைத்தல் - கூடுதல், குறைதல்
* தழைக்கவும் - குறையவும்.

* புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் - பாரதிதாசன்.
* இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
* பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய
பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
* காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
* பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
* திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
* படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப
விளக்கு.
* கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
* கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
* இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
* பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.

பழமொழி நானூறு சொல்பொருள்:
* ஆற்றவும் - நிறைவாக
* நாற்றிசை - நான்கு + திசை
* ஆற்றுணா - ஆறு + உணா
* வழிநடை உணவு - இதனை கட்டுச்சோறு என இக்காலத்தில் கூறுவர்.
* பழமொழி நானூறு ஆசிரியர் - முன்றுறை அரையனார்.
* முன்றுறை என்பது ஊர்ப்பெயர்
* அரையன் - அரசனைக் குறிக்கும் சொல்
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - பழமொழி நானூறு.
* பழமொழியில் உள்ள பாடல்கள் - 400
* ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
.

பொருள்: * ஆற்றுணா வேண்டுவது இல் - "கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்"
* ஆற்றுணா - வழிநடை உணவு(கட்டுச்சோறு)
* குறிப்பு: ஆறு - ஒர் எண்(6), ஆறு - நதி, ஆறு - வழி.


உரைநடை: மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்
* நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால்
நேரு
* நேருவின் துணைவியார் பெயர் - கமலா
* தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன்
என்னுமிடத்தில் உள்ளது.
* நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம்
எழுதியுள்ளார்.
* பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும்
போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.
* நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
உள்ளது.
* நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.
* போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்
* அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.
* இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.
* தழை என்பதன் பொருள் - செடிகொடி. குறிப்பு:
* சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.
* மில்டன் - ஆங்கில கவிஞர்.
* பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.
* காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).
* டால்ஸ்டாய் - இரஷ்ய நாட்டு எழுத்தாளர் (போரும் அமைதியும் நாவல் -
உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.
* பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர். * பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர்,
கல்வியாளர்(நேருவுக்கு மிகவும்பிடித்த கல்விச் சிந்தனையாளர்).
* கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.
* நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.

* ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை. அதனைப் புரிந்துகொள்ளவும்,
முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர் - நேரு எவ்வளவு துன்பமான
நேரத்திலும், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கைவிடக்
கூடாது என்று கடிதத்தின் மூலம் வாழ்க்கைப் பண்பை தெரிவித்தவர் - நேரு

குறிப்பு: உலகம் - ஞாலம், புவி - பூமி. முகில் - எழில், கொண்டல் - மேகம், மன்னன் -
வேந்தன், கொற்றவன் -அரசன்.

இலக்கணம்: * ஓளியை உணர்த்தும் சொற்கள்இரண்டு இரண்டாக சேர்த்து வருவது,
பிரித்தால் பொருள் தராது. எ.கா: கண கண, சள சள, தணதண, பட பட, குடுகுடு, வளவள,
பளபள.
இதனை இரட்டைக்கிளவி என்பர்.

செய்யுள்: சித்தர் பாடல்
* சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில்
வாழ்ந்தவர்கள்

* "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச்
சித்தர்.
* உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் -
கடுவெளிச் சித்தர்.
* சித்து - அறிவு
* கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.
* நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் -
கடுவெளிச் சித்தர்.
* பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் -
இவை காரணப்பெயர்கள்.
* வேம்பு - கசப்பான சொற்கள்.
* வீறாப்பு - இறுமாப்பு
* கடம் - உடம்பு.
* சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.
* வெய்யவினை - துன்பம் தரும் செயல்
* சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
* பலரில் - பலர் + இல்(வீடுகள்)


கவிதை: தாகம்
* யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால்
கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது.
* கவிஞர் அப்துல் ரகுமானின் "ஆலா பனை" என்னும் நூல் சாகித்ய
அகாடமி விருது பெற்றது.
* இவரின் பிற படைப்புகள்- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
* புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் - கவிக்கோ அப்துல்ரகுமான்.
* தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது -பாலவீதி

உரைநடை: இளமையில் பெரியார் கேட்ட வினா

* இயற்பெயர்: இராமசாமி
* பெற்றோர்: வேங்கடப்பர், சின்னத்தாயம்மாள்.
* பிறந்த ஊர்: ஈரோடு.
* தோற்றுவித்தவை: பகுத்தறிவாளர் சங்கம், சுயமரியாதை இயக்கம்
.* போராட்டம்: கேரளாவில் வைக்கம் என்ற ஊரில்தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடி
வெற்றிபெற்றதால் வைக்கம் வீரர்என அழைக்கப்பட்டார்.

* தன்னைத் தானே மதிப்பதும், தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்வதும் -
சுயமரியாதை.
* பெரியாரின் காலம்: 17.09.1879 முதல் 24.12.1973
* சமூக சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகளின் சபையின்
யுனெஸ்கோ விருது 1970 ஆம் ஆண்டு பெரியாருக்கு வழங்கப்பட்டது.
* மத்திய அரசு 1978 ஆம் ஆண்டு பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
* பெரியார் - பெண் விடுதலை மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர்.
* பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில்
எத்தனை நாட்களை செலவு செய்தார் - 8600 நாட்கள்.
* பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம்
செய்தார் - 13,12,000 கி.மீ
* பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணி நேரம்
உரையாற்றினார் - 10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்.

பெரியார் பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை;
அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.

செய்யுள்: புறநானூறு: * புறநானூறு = புறம் + நான்கு + நூறு.

* தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல்.
* இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
* அரிய நெல்லிக்கனியை அதியமானின் பெற்றவர், நண்பர் - ஔவையார்.
* சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார்.
* நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார். சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல்
பாடியவர் - இவரும்ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர்.
* ஔவை என்பதன் பொருள் - தாய்.

பாடல் வரிகள்:
* எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார்

பொருள்:
* அவல் - பள்ளம்
* மிசை - மேடு,
* நல்லை - நன்றாக இருப்பாய்

Professor k. kumar

unread,
Oct 25, 2014, 2:47:52 AM10/25/14
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
சமகாலச் சிறுபத்திரிகைகளின் மீதான உரையாடல்
ச.பச்சைநிலா
உதவிப் பேராசிரியர்
பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி
பெரம்பலூர்
வல்லிக்கண்ணனின் தமிழில் சிறுபத்திரிகைகள் என்கிற சிறுபத்திரிகைகள் பற்றிய நூல் தொகுப்பு
தந்த புரிதலும், சமீபத்தில் கங்கு வரிசையில் வெளிவந்த பேரா. வீ.அரசுவின் சிறுபத்திரிகை
அரசியல் என்கிற குறுநூல் கொடுத்த சிந்தனை கணமும் என்னை மேலும் சிறுபத்திரிகைகள்
குறித்த வாசிக்கவும் பேசவும் செய்தன. அந்தவகையில் தமிழில் பன்முகப்பட்ட சிந்தனை ஓட்டங்களை
வாசக மனங்களில் விதைத்து, அவ்விதைப்பின் ஆகப் பயனாக அறிவார்ந்த சமூகத்தைக்
கட்டியெழுப்பிய சாதனை தமிழில் சிறுபத்திரிகை வழி சாத்தியமாகிறது. மேலும் சமூக
வெளியின் இன்றாம் இயங்குகின்ற செயல்பாடுகளை (தனிமனித செயல்பாடுகள் உள்ளிட்ட) கூர்ந்து
அவதானித்து அதில் அறத்தின் பாற்பட்ட வாதங்களை அழுத்தமாகப் பதிவுசெய்தலைச்
சிறுபத்திரிகைகளும் அதன் வெளியீட்டாளர்களும் மிகுந்த சுரணையோடு செய்தனர். இத்தகைய
சுரணையின் தொடக்கப் புள்ளிகளை மணிக்கொடி (1930), சூறாவளி (1939), சக்தி (1939),
சரஸ்வதி (1954), எழுத்து (1959) முதலான இதழ்களின் செயல்பாட்டின்வழி வெகுவாக உள்வாங்க
முடியும்.
மேற்கத்திய சிந்தனைகளை அப்படியே பிரதிபலிக்கும் விமர்சன முறை, தமிழின் வளமான கவிதை
மரபு தந்த எழுச்சி, இடதுசாரி பார்யோடு அணுகும் போக்கு, நவீன சிந்தனைகளை
மரபிலக்கியத்தோடு பொருத்திப் பார்க்கும் முயற்சி எனச் சிறுபத்திரிகை சூழலோடு இணைந்த
நிலையில் தமிழின் கலை இலக்கிய முயற்சிகள் விரிந்த தளத்தில் நடைபெற்று வந்துள்ளன.
இத்தகைய செழுமையான போக்குகளை உள்வாங்கியவர்களாகவும் அவற்றின் வெளியீட்டு வரலாற்றை
நன்கறிந்தவர்களாகவும் திகழ்கின்ற சமகால சிறுபத்திரிகையாளர் குறித்தும், அவர்களின்
முயற்சியில் இயங்கும் சிறு பத்திரிகைகளின் நேர்மை குறித்தும் சில உரையாடல்களை
இக்கட்டுரை நிகழ்த்த விருக்கிறது. சமகாலம் என்று ஒரு வசதிக்காக 1980களுக்குப் பிறகான
காலக்கட்டத்தை எடுத்துக்கொள்வோம். மேலும் சமகாலம் என்று 80களுக்குப் பிறகான காலக்கட்டத்தை
முன்னிறுத்துவதற்கு காரணம், மானிட அற ஒழுக்கத்தின் மீதான சில சிந்தனை முன்னெடுப்புகள்
இக்காலச் சூழலில்தான் வெகுவாகப் பேசப்பட்டன. அந்தவகையில் சமூக இயங்கியலுக்குள் பெண்
இருப்பின் அவசியம் குறித்தும், பெண்ணிய சொல்லாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம்
குறித்தும் காத்திரமான விவாதங்கள் இக்காலச் சூழலில் தான் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக
விளிம்புநிலை மக்களான தலித்துகளைப் பற்றிய வாழ்வியல் பாதிப்புகளும், பெருங்கதையாடலாக
முன்னிறுத்தப்பட்டன.
மேற்குறிப்பிட்ட பொருண்மைகள் சார்ந்த முதன்முதலில் தமிழ்ச் சூழலில் படிகள் (1983) இதழும்
நிறப்பிரிகை (1983) இதழுமே நேர்மையான, அதே நேரத்தில் சமூக அக்கறையோடும் தன்
பங்களிப்பை செய்தன. அந்தவகையில் படிகள் இதழில் தமிழவன் எழுப்பிய தமிழில் தலித் இலக்கியம்
தோன்றுமா? என்கிற கேள்வியும், தொடர்ந்து அவ்விதழ்களின் வேறு வேறு வெளியீடுகளில்
எழுதப்பட்ட தலித் இலக்கிய விவாதங்களும், 1983 இல் இந்திரன் மொழிபெயர்த்த அறைக்குள் வந்த
ஆப்பிரிக்க வானம் கவிதை தொகுப்பு தந்த உத்வேகமும் தமிழில் தலித் இலக்கியச் சொல்லாடல்கள்
தோன்றுவதற்கு முன் முயற்சிகளாக அமைந்தன. தலித் இலக்கியத்தின் ஒட்டுமொத்த எழுச்சியை
1990களுக்குப் பிறகு நடந்த அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாட்டங்களிலே வெகுவாகக்
காணமுடிந்தது. இதன் வளர்ச்சியில் நிறப்பிரிகை சிற்றிதழின் செயல்பாடுகள் என்பவை
அபாரமானவையாகும்.
மேலும் தலித் என்பவர் யார்? தலித் இலக்கியத்திற்கான கோட்பாடுகள் எவை? என்பதான
விளக்குமுறை பதிவுகள் இவ்விதழின் வழியே முன்னெடுக்கப்பட்டன. பின்னளில் இந்தியாடுடே
(1995) போன்ற வெகுசன இதழ்களிலும் தலித், தலித் இலக்கியம் குறித்த உரையாடல்கள் கவனம்
பெற்றன. எனினும் பெரிய அளவில் வெகுசன இதழ்களில் தலித்தியம், பெண்ணியம் குறித்து
விவாதிக்கப்படவில்லை. அதோடு வெகுமக்கள் தளத்திலும் இச்சிந்தனைகள் குறித்த பார்வை
கிஞ்சித்தும் இல்லாமல் இருப்பதையும் உள்வாங்க முடிகிறது. மாறாகச் சிறுபத்திரிகை
தளத்திலும், அறிவுஜீவிகள் தளத்திலும் மட்டுமே இச்சிந்தனைகள் சிரத்தையாகப் பேசப்பட்டன.
வெகுசன பத்திரிகைகளிலிருந்தும் வேறுபடும் சிறுபத்திரிகையின் செயல்பாடு குறித்து
வீ.அரசுவின் கருத்தைப் பதிவுசெய்வது அவசியமாகும்.
சமூகத்தில் கட்டப்படும் நம்பிக்கை சார்ந்த சடங்குகள் அவைகளின் மூலமாக உருப்பெரும்
விழுமியங்களாகிய பிறவற்றை வெகுசனப் பண்பாடு கேள்விகளின்றி ஏற்றுக் கொள்ளும் மாறாகச்
சிறுபத்திரிக்கைப் பண்பாடு இதனைக் கேள்விக்குள்ளாக்கும் என்கிறார்.
இனி 1980களுக்குப் பிறகு வெளிவந்த சிற்றிதழ்களைக் குறித்தும், அவற்றின் வெளியீட்டு
பொருண்மை சார்ந்தும் சில விவாதங்களை முன்வைப்போம். அந்த வகையில் காலச்சுவடு (1988),
உயிர்மை (2003), தீராநதி (2005), தமிழினி (2006), புதுவிசை (2007),
உயிர்எழுத்து (2008) முதலான இதழ்கள் கலை இலக்கிய வெளி சார்ந்தும் புதிய காலசாரம்,
புதிய ஜனநாயகம், புதிய பார்வை முதலான இதழ்கள் அரசியல் வெளிசார்ந்தும் தலித் (சில
இதழ்கள்), தலித் முரசு (1997), புதிய கோடாங்கி (2005), கவிதாசரண், போதி (2005)
(சில இதழ்கள்) முதலான இதழ்கள் தலித்திய வெளிசார்ந்தும், பனிக்டம் (2006), அணங்கு
(2006) முதலான இதழ்கள் பெண் வெளி சார்ந்தும் ஆகப்பெரும் பான்மையோடு வெளிவந்து
கொண்டிருக்கின்றன.
சுந்தரராமசாமியின் தீராத கலை இலக்கியத்தேடலின் வெளியீடாகக் காலச்சுவடு சிற்றிதழ்
உருப்பெற்றது. தொடக்கத்தில் கவிதை, புனைவு, இலக்கிய விமர்சனம் என விரிந்த அவரின்
சிறுபத்திரிகை அவதாரம், மெல்ல மெல்ல தலித்தியம், பெண்ணியம் சார்ந்த உரையாடல்களையும்,
அவை தனித்து இயங்க வேண்டியதன் பின்புலத்தையும் சுட்டிக்காட்டி பல இளம்படைப்பாளர்க்ளைக்
காலச்சுவடின் வழி எழுதத் தூண்டினர். இருப்பினும் பெரிய அளவில் அம்முயற்சிகளைக்
காலச்சுவட்டில் மேற்கொண்டார் எனவும் சொல்ல முடியாது. வெறுமனே சார்பு நிலையில் மட்டுமே
அவ்விவாதங்களை முன்னெடுத்தார். பின்னாளில் அவர் மறைவுக்குப் பிறகு அவரின் மகன் (கண்ணன்)
கலை இலக்கிய அரசியல் நோக்கி சில ஆக்கப்பூர்வமான கருத்தாடல்களை ஓரளவு முன்னெடுத்தார்
என்று சொல்லலாம். அந்த வகையில் பெரியார் 125, சிறப்பிதழ் (2004), உ.வே.சா. சிறப்பிதழ்
(2005), பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி சிறப்பிதழ் (2006), தமிழர் உணவு
வகைகள் சிறப்பிதழ் (2006), தலித் சிறப்பிதழ் (2008) எனப் பரந்துப்பட்ட தளத்தில்
காலச்சுவடு இதழின் செயல்பாட்டை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். காலச்சவடு இதழின் வழி
கூட்டிணைந்து செயல்பட்ட மனுஷ்யபுத்ரன் அதிலிருந்து வெளியேறி 2003இல் உயிர்மை என்கிற
இதழைக் காலச்சுவட்டின் மாதிரி வடிவமாகவே அவ்விதழை அவர் வெளிகொண்டு வந்தார். ணூலை
இலக்கிய அரசியல், சினிமா குறித்து பேச தனக்கென ஒரு எழுத்தாளர் கூட்டத்தை விரித்துக்
கொண்டு, பின்னாளில் உயிர்மை பதிப்பகம் ஒன்றையும் ஏற்படுத்தினார். பத்திரிகைகளின் வழி
பதிப்பகம் உருப்பெறுதல் என்பது சி.ச.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகை தோன்றிய காலத்திலே
இம்முயற்சி நடந்தது என்பதனைப் புரிந்துகொள்ளலாம். ஒரு வகையில் காலச்சுவடு, உயிர்மை
என்கிற இவ்விரண்டு சிற்றிதழ்களும் தனிமனித அடையாளத்தைப் பேணுவதாகவே உள்ளது.
இதன் நீட்சியைச் சமகாலச் சிற்றிதழ்கள் வரை பார்க்கமுடிகிறது. மேலும் இவ்விரு
சிற்றிதழ்களின் இன்றைய நோக்கம் என்பது, இதழ்களில் தொடர்ந்து வருகின்ற கட்டுரைகள்,
கவிதைகள், சிறுகதைகள், தலையங்கங்கள், பத்திகள் முதலானவற்றைத் தொகுத்து அவற்றைப்
புத்தகங்களாக அச்சடித்து தன் பதிப்பகக் கணக்கில் புத்தகங்களின் எண்ணிக்கையைப்
பெருக்குவதிரேயே குறியாக இருக்கின்றன. இப்பணியை வெகுஜோராகவும் அவை (அவர்கள்) செய்து
வருகின்றன(ர்). கடந்த மூன்றாண்டுகளில் நடைபெறும் கொத்து கொத்தான நூல் வெளியீடுகள்
இதற்குச் சாட்சியங்களாத் திகழ்கின்றன.
காலச்சுவடு சிற்றிதழ் முன்னெடுத்த தலித்திய, பெண்ணிய விளிம்புநிலை கருத்தாடல்களை
உயிர்மை சிற்றிதழ் கிஞ்சித்தும் முன்னெடுக்கவில்லை. அதற்கு மனுஷ்ய புத்திரன் சொல்லும்
காரணம் தன்னுடைய பத்திரிகை ஒரு இடைநிலை பத்திரிகை என்பதாகும். இடைநிலையோ
கடைநிலையோ சமகாலச் சூழலில் பரவலாக விவாதிக்கப்படும் ஒரு கருத்தியல் பற்றிச் சிறிதும்
பேசாத ஒரு பத்திரிகையைச் சிறுபத்திரிகை வரலாற்றின் ஒரு சாபக்கேடு என்றே சொல்லத்
துணிகிறது. இருப்பினும் இவ்விரு (காலச்சுவடு, உயிர்மை) இதழ்களின் தோற்றத்தின் மூலம்
சிறுபத்திரிகைக்கான வாசகப் பரப்பு என்பது கணிசமான அளவில் கூடியுள்ளது என்பதனை
மறுப்பதற்கில்லை. இத்தகைய சிற்றிதழ் வாசிப்பானது மாணவர்கள் மத்தியில் கல்வித் துறை சார்ந்த
நிலையிலேயே பெருமளவு நிகழ்ந்து வருகிறது. எனக்கும் (2005-2009) இப்படியான
அனுபவமே சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறை சார்ந்து ஏற்பட்டது.
குமுதம் என்கிற வெகுசன இதழின் மாற்றான கலை இலக்கியச் சிற்றிதழ் தீராநதி (2005).
இவ்விதழின் ஒட்டுமொத்த பங்களிப்பு என்பது நவீன வாசகர்களுக்கு ஆறுதல் ஏற்படும் வண்ணம்
திகழ்கிறது. மேலும் எவ்வித அரசியலுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத வண்ணம் நேர்கோட்டு தளத்தில்
கவனிக்கத்தக்கதாக உள்ளது. தமிழினி பதிப்பகத்தின் சிறந்த நூல்களின் வெளியீட்டு
முயற்சிகளின் ஊடாகக் காலம் கடந்து வெளிவரும் சிற்றிதழ் தமிழினி என்பதாகும். பதிப்பகங்கள்
தனியாகச் சிறுபத்திரிகை ஒன்றை வெளியிட்டு தன் பங்கிற்குக் கலை இலக்கியம் சார்ந்து
எத்தனிக்க முயற்சிக்கின்றன. அந்த வரிசையில் தமிழினி பதிப்பகத்தால் தமிழினி சிற்றிதழ்
தோற்றுவிக்கப்பட்டதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. இதனைக் காலம் கடந்த நூற்றாண்டு பத்திரிகை
என்று அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். அதன் அட்டைப்படம் அவர்களை அப்படிச் சொல்லச்
செய்கிறது. மாறாகப் பெரிய வாசக அதிர்வை ஏற்படுத்தியது என்று சொல்ல முடியாது.
கலை இலக்கிய விவாதங்களை முற்றாகத் தவிர்த்த நிலையில் அரசியல் களத்தில் அரசியல்வாதிகளின்
மூர்க்கத்தனங்களையும், நரித்தனங்களையும் யார்மீதும் பாரபட்சமின்றி தோளுரித்துக் காட்டுதல்
என்கிற புரிதலோடு மார்க்சிய, இடதுசாரி சார்புடைய பார்வைகள் 1970களிலே தமிழ்ச்
சூழலில் புகுந்துவிட்டன. இதில் தொடக்கக் கால மனிதன், புதிய மனிதன் இதழ்களின்
பங்களிப்பைக் கொண்டு தனித்து சுட்டலாம். இதன் நீட்சியில் சமகாலத்தில் புதிய கலாசாரம்,
புதிய ஜனநாயகம் இதழ்களும் தோன்றி அரசியல் குறித்த எதிர்பார்வையை வாசகர்களுக்கு வழங்கி
வருகிறது. இதற்கான வாசகர் கூட்டம் என்பதும் இப்பத்திரிகைகள் ஆட்களைத் தேடி விற்கப்படும்
முறை என்பதும் சமகாலத்தில் அவலமான போக்கையே காட்டுகிறது. தோழர் வீராசாமி என்பவரிடம்
இப்பத்திரிகைகளை வாங்கிப் படித்த அனுபவம் எனக்கு உண்டு.
தமிழ் சிறுபத்திரிகை மரபில் தலித்திய உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்ட முறை குறித்தும்,
அவை விவாதிக்கப்பட்ட போக்குகள் குறித்தும், தனித்த நிலையில் சுட்ட வேண்டும். அந்த வகையில்
நிறப்பிரிகை தொடங்கி வைத்த இவ்விவாதங்கள் 1990களுக்குப் பிறகு தனித்த நிலையில்
(அவற்றின் தலைப்பு உட்பட) சில சிற்றிதழ்கள் தோற்றுவிக்கப்பட்டன. தலித் முரசு (1997),
தலித், போதி, புதிய கோடங்கி, கவிதாசரண் இதழ்களின் ஊடான தலித்துகளின் பிரச்சனைகளும்,
சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு உள்ளான அவர்களின் வாழ்வியல் அவலங்களும் காத்திரமாகப்
பதிவுசெய்யப்பட்டு வெளிவந்தன. இதில் தலித் முரசு இதழ் தலித்துகளின் அவல வாழ்க்கையைக்
காட்டுப்படுத்துதல், அவை குறித்த எதிர்வினையைப் பதிவுசெய்தல் என்கிற குறுகிய தளத்திலே
இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது. மாறாக, தலித், தலித் இலக்கியக் கோட்பாடுகள்,
தலித்திய விவாதங்கள் சார்ந்து பெருமளவில் இக்கறை கொண்டதாகச் சொல்ல முடியாது. புதிய
கோடாங்கி இதழும் இப்போக்கையே கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் தலித், போதி
(வெளிவந்த சில இதழ்கள்) சிற்றிதழ்கள், மேற்சுட்டிய கோட்பாடுகளுக்கும், விவாதங்களுக்கும்
அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தது என்பது தனித்து பார்க்க வேண்டியதாகும். இதோடு
கவிதாசரண், புதுவிசையின் சமீபத்திய முயற்சிகள் ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதாக
வெளிவருகிறது.
சிறுபத்திரிகை செயல்பாட்டின் நீட்சியாக இன்று தலித் படைப்புகள் பல வீரியமாக வெளிவந்து
கொண்டிருக்கின்றன. இதில் பாமா, சிவகாமி, இமையம், அழகிய பெரியவன் போன்றோரின்
படைப்புகள் குறிப்பிடத்தக்க கவனிப்பைப் பெற்றுள்ளன.
1980களில் கட்டி எழுப்பப்பட்ட பெண்ணிய சொல்லாடல்கள், விவாதங்கள் அன்றையச் சூழலில் ஒரு சில
பெண் படைப்பாளர்கள் (அம்மை, சிவாகமி, ராஜம் கிருஷ்ணன்) மட்டத்திலேயே எழுந்து, அது
பற்றிய சில நூல்கள் எழுதி வெளியிடல் என்பதாக அமைந்ததே தவிர தனித்த நிலையில்
சிறுபத்திரிகைகளில் விவாதிக்கப்படவோ, பேசப்படவோ இல்லை. இந்த அவலம் 90கள் வரை
தொடர்ந்தது. 90களுக்குப் பிறகு தலித்திய விவாதங்களினூடே தலித் பெண்ணியம் என்பதாக
ஓரளவு பேசப்பட்டது. படைப்பு என்கிற தளத்தில் கவிதையில் மட்டுமே பெண்களின் முயற்சி
கணிசமான அளவு வெளிப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று வரை நீள்கிறது. பொதுவாகப்
பெண்களின் படைப்பு முயற்சி என்பது பெருமளவு கவிதையில் தொடங்கிக் கவிதையிலே முடிவதாக
இருக்கிறது. பிற இலக்கிய வகைகளில் (புனைவு, சிறுகதை, விமர்சனம்) விரல்விட்டு
எண்ணும்படியான படைப்புகளே வெளிவந்துள்ளது. இது ஏன்? என்பது புரியாத புதிராகவே
இருக்கிறது. இப்புதிரை உடைத்து பெண்ணிய வெளி என்பது பல பரிமாணங்களில் ஊடாடிச்
செல்லுவதாக வெளிப்படல் வேண்டும்.
அந்தவகையில் பெண் வெளி குறித்த தேடலை, அவ்வெழுத்துக்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டியதன்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பனிக்குடம், அணங்கு என்ற இவ்விரு இதழ்கள் எழுச்சி
கொண்டன. பெண் உடல் எழுத்துக்களின் மீதான அரசியலும், தலித் பெண்ணிய அரசியலும் காத்திரமான
நிலையில் விவாதிக்கப்பட்டன. இருப்பினும் இவ்விரு இதழ்களில் மட்டுமே வெளிப்படும்
பெண்வெளியின் போதாமையை நவீனத் தமிழ்ச் சமூகம் புரிந்துகொண்டு பல மாற்று இதழ்களின்
தோற்றத்திற்கும் வழிவகுக்க வேண்டும்.
78 ஆண்டுகாலச் சிறுபத்திரிகைச் சூழலில் கலை இலக்கியம் சார்ந்த பொருண்மையின் விவாதங்களின்
ஊடே, நூல்களில் அறிமுகம் (அ) விமர்சனம் என்கிற சிற்றிதழ்களின் பக்க அளவின் போதாமையை
உணர்ந்து சமகாலத்தில் சிற்றிதழ்களின் மொத்த வெளியீட்டையும் நூல் விமர்சனப் பகுதிக்கு
மாற்றுதல் என்கிற போக்கில் புதிய புத்தகம் பேசுது (2007), உங்கள் நூலகம் முதலான
சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சமீபகாலமாகச் சிற்றிதழ்களின் வெளியீட்டு முறையும், அதன் செயல்பாடுகளும் வாசகர் மத்தியில்
வாசிப்பு நிலையில் மந்தமான போக்கு நிகழ்வதைக் கவனிக்க முடிகிறது. அதற்கு இரண்டு
காரணங்களைச் சொல்லலாம். ஒன்று எல்லா சிற்றிதழ்களின் பொருண்மையும் ஒரே தரத்திலே
விளங்குவதாகும். மற்றொரு காரணம் இச்சிற்றிதழ்கிள்ல எழுதுகின்ற படைப்பாளர்கள் இன்று
வெகுசன இதழ்களில் (ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம்,ஜூனியர் விகடன்) தன் எழுத்துக்களை
எழுதுவதில் பெருவிருப்பு கொண்டவர்களாகத் திகழ்வதுமாகும். வெகுசன சினிமாவை நோக்கிய
இவர்களின் செயல்பாட்டையும் இச்சூழலிலேயே புரிந்துகொள்ள வேண்டும். ஒருவகையில் வெகுசன
இதழ்களில் எழுதுதல் என்பது வெகுமக்களையும் தீவிர இலக்கிய வாசிப்புக்குத் தூண்டுதல் என்கிற
முயற்சியாகவும் இதனைப் புரிந்துகொள்ளலாம். மாறாகத் தன் சுய வாழ்க்கையை உயர்த்தலுக்குத்
தேவையான பொருளீட்டலுக்குத்தான் அவர்களின் பயணம் என்றால் சிறு பத்திரிகை வரலாற்றில்
அவலமும் சோகமும் ஏற்படும் என்பது மறுப்பதற்கில்லை.
2008க்குப் பிறகு தமிழ்ப் பேராசிரியர்கள் தான் வேலை செய்கின்ற கல்வித்துறையோடு சேர்ந்த
நிலையில் சிறுபத்திரிகையை வெளியிடுதல் என்பது, இயல்பாக அவர்களுக்குள் இருக்கும் கலை,
இலக்கிய வரலாற்றுப் புரிதலை மேலும் தமிழ்ச் சூழலில் தன் பங்கிற்கு உரையாடி விட்டு
செல்லுதல் என்பதாகவே சிறுபத்திரிகைகளை வெளியிடுகின்றனர். அந்த வகையில் 2008, மற்றும்
2009 முதல் வெளிவருகின்ற நோக்கு, பனுவல் மற்றும் மாற்றுவெளி சிற்றிதழ்களின் தற்கால
முயற்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் இலக்கிய இலக்கண ஆய்வுகளை மீள்வாசிப்பு செய்தல்
என்கிற தளத்தில் நோக்கு பனுவல் (இணைய வழி ஆய்விதழ்) இதழ்கள் செயல்பட்டுக்
கொண்டிருக்கின்றன. இதிலிருந்து வேறான தளத்தில் மாற்றுவெளி இதழ் பரிமளிக்கிறது.
மாற்றுவெளி இதழின் தனித்து சிறப்பு என்னவென்றால் இளம் ஆய்வுமாணவர்களின் சிந்தனைக்கு வழி
வகுப்பதாகவும், அவர்களின் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அடையாளம் கொண்டுள்ளது.
புதுப்புனல் வழங்கும் காலாண்டிதழாக வெளிவந்த பன்முகம் (2002-2006) புனைவின் வழி
வாசகப் பரப்பை தனித்த நிலையில் முன்னெடுத்தது. இன்று (செப்டம்பர் 2009 முதல்)
புதுப்புனல் என்கிற புது வடிவெடுத்து வாசக அங்கீகாரத்தைக் கோரி நிற்கிறது. புதுப்புனல்
வெளியீட்டு முயற்சியில் நவீனச் சிந்தனைகளும், அச்சிந்தனைகளின் மீதான உரையாடல்களும்
நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றில் புதுப்புனல் தனது இடத்தை
முழுமையான அளவில் நிரப்பும் என்பது திண்ணம். இன்றும் மாணவர்கள் மத்தியில் கையெழுத்து
பிரதிகளாவும் குறைந்த பக்கங்கள் கொண்ட பத்திரிகைகளாகவும் சிற்றிதழ்கள் வெளிவந்து
கொண்டுதான் இருக்கின்றன. சிற்றிதழ்களின் இத்தகைய செயல்பாடுகள் அவற்றின் மீது நம்பகத்தன்மையை
ஏற்படுத்துவதோடு அவற்றின் முக்கியத்துவத்தையும் நவீன வாசகனுக்குக் காலச்சூழல் ஓட்டத்தின்
ஊடே விளக்கிச் சொல்லும் என்பது நிதர்சனமாகும்.
————-
Print Friendly
Previous Topic: ரோஜர் எபர்ட் – ஒரு சினிமா விமர்சகனின் பயணம்.
Next Topic: வடிவம் மரபு: பத்துப்பாட்டு
One Comment for “சமகாலச் சிறுபத்திரிகைகளின் மீதான உரையாடல்”
கவிஞர் இராய. செல்லப்பா says:
May 11, 2013 at 2:28 am
‘சிற்றிதழ்’ என்ற வரையறையைக் கட்டுரையாளர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று
கருதுகிறேன். ஒன்று, சிறிய எண்ணிக்கையில் விற்பனையாவது, இரண்டு, பொருளாதாரப்
பின்புலம் இல்லாமல் நடத்தப்படுவது – என்னும் இரண்டு நிபந்தனைகளுமே பூர்த்தி செய்யப்பட்டால்
தான் ஓர் இதழைச் சிற்றிதழாகக் கொள்ளமுடியும். எனவே, ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’, மற்றும்
சர்வ வல்லமை பொருந்திய குமுதம் குடும்பத்திலிருந்து வெளியாகும் ‘தீராநதி’ ஆகிய
மூன்றும் சிற்றிதழ் என்ற வரையறையிலிருந்து வெளியேறிவிடுவதை மறக்க வேண்டாம். இந்த
மூன்றையும் சிற்றிதழ்களாகக் கருதித்தான் ஆக வேண்டுமென்றால், கலைமகள், அமுதசுரபி
இரண்டையும் கூட நாம் சிற்றிதழ்களாகத்தான் பார்க்கவேண்டும். அவைகளும் குறைவாக
விற்பனையாகும் இதழ்களே! – நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

Professor k. kumar

unread,
Oct 25, 2014, 5:58:28 AM10/25/14
to brail...@googlegroups.com
2042
கதையாசிரியர்: விமல் தியாகராஜன்
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 5,064





rating-54700735-5
Rate this (8 Votes)
View More
+1
1
Tweet
0
Share

Like
25
அன்று காலை வெகு சீக்கிரமே எழுந்து புறப்பட வேண்டியிருந்த்து. என் கைக்கடிகாரத்தைப்
பார்த்தேன். அதில் நேரம் காலை 8:40 எனவும், நாள் 14/06/2042 எனவும்
காட்டிக்கொண்டிருந்தது. 10மணிக்கு, மருத்துவரிடம் எனக்கு அப்பாயின்மெண்ட். அந்த
க்ளீனிக்கிற்குப் பயணம் செய்ய 32வது மாடியிலிருந்த என் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழே
இறங்கி, சாலையை அடைந்தேன். “இந்த 2042 ஆம் ஆண்டு ஆரம்பித்த நாளிலிருந்தே, நமக்கு ஒரே
அலைச்சல் தான், வெயில் வேறு கொல்லுகிறது” என்று புலம்பிக்கொண்டே பேருந்து நிறுத்ததிற்கு
வந்தேன்.
நகரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், பேருந்து நிறுத்தங்கள், மற்றும் ரயில் நிலையங்களில்
உள்ள பெட்டிக் கடைகள், தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகள் என எங்கு நோக்கினும், சுத்தமானக்
காற்றை பணத்திற்கு விற்றுக் கொண்டிருந்தனர். ஆம், சுத்தமான ஆக்ஸிஜன் விதவிதமான சைஸ்
டப்பாக்களில் (CONTAINERS), அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.
தனி நபர்களாய் வருபவர்கள், சிறிய டப்பாக்களை வாங்குகின்றனர். நான்கைந்து நண்பர்களாகவும்,
குடும்பமாக வருபவர்களும், பெரிய டப்பாக்களை வாங்கி பின் சிறிய டப்பாக்களில்
பிரித்துக்கொள்கின்றனர்.
பணம் கொடுத்து வாங்க கூடிய சூழ்நிலை உள்ளவர்கள் மட்டும் காற்றை வாங்கிக்கொள்ள, அவ்வாறு
வாங்க இயலாதவர்கள், இருமிக் கொண்டும், முகத்தை மூடிக்கொண்டும் நடந்துச் செல்கின்றனர்.
காற்றை வாங்கியவர்கள், இந்த டப்பாக்களை தங்களுடன் இடுப்பிலோ, முதுகிலோ
பொருத்திக்கொள்கின்றனர். அந்த டப்பாக்களில் இருந்து அவர்களது மூக்கிற்கு மேல்
பொருத்தப்பட்டுள்ள ஃபில்டருக்குள் காற்று செல்ல ஏதுவாக டியுபுகள் உள்ளன.
அந்த நகரமே பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. எங்கும் தூசு, புகை. காற்று மிக
மோசமாக மாசடைந்து இருக்கிறது. எங்கு நோக்கினும் 40, 50 மாடி கட்டிடங்கள், மணிக்கு
120 கிலோமீட்டருக்கு மேல் சீறிப் பாயும் வாகனங்கள், அதற்கு ஏற்றார் போல், பளபள என்று
மின்னும் சாலைகள். சுருக்கமாக சொன்னால், அது ஒரு ஸ்மார்ட் சிட்டி (SMART CITY).
மனிதர்களைத் தவிர மற்ற நகர உயிரினங்களான காக்கை, குருவி, பூனை, நாய், போன்றவைகளின்
சுவடுகளே இல்லை. இயற்கை மிக மோசமாக மாசுபட்டு இருந்ததினால், அந்த இனங்களே அழிந்து
போயிருந்தன.
தெருவோரம் இருக்கும் கடைக்குச் சென்று ஒரு சிறிய டப்பா காற்று தாருங்கள் எனக் கேட்டு,
2000 ரூபாயினை தந்தேன். அதற்கு கடைக்காரர், “என்னங்க, நேற்று இரவிலிருந்து விலை 200
ரூபாய் ஏறிவிட்டது, உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்கவும், நான் “ஓ, அப்படியா?
எனக்குத் தெரியாதே, என்று என் பர்ஸை பார்க்க, பர்ஸில் பல கிரெடிட் கார்டுகளும், ஸ்மார்ட்
கார்டுகளும் மட்டுமே இருக்கிறது. வேறு பணம் இல்லை. ஏடிம் மெஷினோ (ATM MACHINE) ஒரு
ஐந்து நிமிட தொலைவில் இருக்கிறது. என் கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் நேரம் காலை 8:45
எனவும், நாள் 14/06/2042 எனவும் காட்டிக்கொண்டிருந்தது. பேருந்து இன்னும் 3
நிமிடங்களில் வரும் என்று டிஜிட்டல் போர்ட் (DIGITAL BOARD), அருகே சிரித்துக்
கொண்டிருந்தது.


அப்போது இந்த நிகழ்வுகளை எல்லாம் என் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த, 25 வயதுள்ள
ஒரு வாலிபர், “என்னங்க, சில்லரை இல்லையா? நான் தருகிறேன்” என்று உங்களிடம் அந்த 200
ரூபாயினைக் கொடுக்க, நானும் கடையில் காற்றை வாங்கிவிட்டு, வாலிபரிடம் அந்த மூன்று
நிமிடங்கள் உரையாடினேன்.
நான்: “ரொம்ப நன்றி தம்பி, நான் கொஞ்சம் அவசரமாக க்ளீனிக்கிற்குப் போக வேண்டும், நீங்கள்
இல்லையென்றால் இன்றைக்கு என்னால் காற்றை வாங்கிருக்க முடியாது, என் பேருந்தை
தவரவிட்டிருப்பேன். அந்த மருத்துவரிடம் ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பாயின்மெண்ட் வாங்கி
வச்சிருந்தேன். இந்த காற்றை வாங்காமல் அத்தனை தூரம் பயணம் செய்துவிட்டு வந்தால், அவ்வளவு
தான், அடுத்த பத்து நாள் மருத்துவமணையில் தான் இருக்க வேண்டும்”
வாலிபர்: “பரவாயில்லைங்க, அதனாலென்ன, இன்றைய காலத்தில் 200ரூபாய் எல்லாம் பெரிய விஷயமா?”
நான்: “அது சரி தம்பி, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”
வாலிபர்: “நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப் புரிகிறேன். இன்று சனிக்கிழமை என்பதால்,
எங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை. எனது நண்பர்கள் பத்து பேர் குழுவாக இருக்கிறோம். சனி
மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாங்கள் அனைவரும், சுற்றுப்புறம் இன்னும் மாசடையாமல்
இருக்க, பொது மக்கள் அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நல்ல முகாம்களை
நடத்துகிறோம். சுற்றுப்புற சூழலை பாதுகாக்க, மரங்கள் வளர்ப்பது, தண்ணீரை சேமிப்பது,
இயற்கையைப் பாதுக்காப்பது போன்ற பல செயல்களை மக்களுடன் சேர்ந்து செய்கிறோம். எங்களுக்கு
அடுத்து வரும் தலைமுறைக்கு இது தான் நாங்கள் செய்யும் முக்கிய கடமையாக எண்ணுகிறோம்.”
நான்: “மிக அருமையான முயற்சி தம்பி, எங்கள் தலைமுறையில் உள்ள அனைவரும் உங்கள் வயது
இருக்கும்போது, இந்த மாதிரி சமூக உணர்வோடு, சுற்றுப்புற சூழல் குறித்த சிந்திருந்தால்,
இன்று நிலைமை இத்தனை மோசமாக இருந்திருக்காது. எனக்கு உங்கள் வயது இருக்கும்போது,
நாங்கள் தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கினோம், இப்போதோ, காற்றையும் விலைக் கொடுத்து
வாங்குகிறோம். 50, 60 வருடங்களுக்கு முன் தண்ணீரையே விலைக் கொடுத்து வாங்கவேண்டிய
சூழ்நிலை ஒருநாளில் வரும் என்று என் முன்னோர்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
என் வயது ஆட்கள் நிறைய பேர் தவறு செய்துவிட்டோம், எங்களை மன்னித்துவிடுங்கள். இப்போது
எனக்கு 55 வயதிற்கு மேலாகிவிட்டது, என் வயது ஆட்களை பார்த்தால் நான் இந்தத் தவறை
கூறிதான் வருத்தப்படுகிறேன்.”
வாலிபர்: “அதெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க போவதையாவது, நல்ல முறையில்
வைத்துக்கொள்வோம். இன்னும் 20வருடத்தில் பெரும்நகரங்களில், வசிக்கவே முடியாது என்ற
சூழ்நிலை வரும் என்று காலையில் தான் செய்திததாளில் படித்தேன். நல்ல வேலை, இந்த
நகரமயமாக்கள், இன்னும் சென்றடையாத, ஆபத்தான தொழிற்சாலைகள் இல்லாத சில கிராமங்களில்
காற்று ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது. அங்கே காற்றை இன்னும் பணம் கொடுத்து வாங்கும் நிலை
வரவில்லை. ஆனால் அதுவும் கொஞ்சம் வருடங்கள் தான், அதற்கு முன், எந்தளவு எங்களால்
முடியுமோ அந்தளவு செய்யப்போகிறோம். வேலை நிறைய உள்ளது, நான் வருகிறேன்” என்றுக் கூறி
வேகமாக கிளம்பிவிட்டார்.
நான் இருப்பது ஸ்மார்ட் சிட்டி என்பதால், பேருந்து நிறுத்தத்தில் நான்கு அல்லது ஐந்து
வரிசை (QUEUE) இருக்கும். யார் முதலில் பேருந்து நிறுத்தத்திற்கு வருகின்றனறோ, அவரே
வரிசையில் முதலில் சென்று நிற்பார். அவருக்கு அடுத்து வருபவர்கள் எல்லோரும் அவருக்கு
பின்னே வரிசையில் நிற்பார்கள். ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் பேருந்தில் ஏற நடத்துனர்
அனுமதிக்கமாட்டார். கூட்டத்திற்கு ஏற்ப பேருந்துகள் துள்ளியமாக வரும்.
அன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால், ஒவ்வொரு வரிசையிலும் ஆட்கள் நான்கு ஐந்து எனக்
குறைவாகவே இருந்தனர். அந்த வாலிபர் என்னிடம் பேசிமுடித்துக் கிளம்பியவுடன், என்
பேருந்து வரும் வரிசையில் சென்று நின்றேன். ஸ்மார்ட் சிட்டியின் சமிபத்து விதியின்படி
முடிந்தளவு ஹாரன் ஒலியை ஓட்டுனர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை என்றால்
தான், ஹாரன் ஒலி எழுப்ப வேண்டும் என ஓட்டுனர்களுக்கு அரசு கட்டளையிட்டுள்ளது.
“இந்த முப்பது வருடங்களில் தான் எத்தனை மாறிவிட்டது? இன்றைய இளைங்கர்களுக்கு தான்
சமூகத்தின் மீது எத்தனை அக்கறை?” அந்த வாலிபருடன் நடந்த உரையாடலையும், இப்போதுள்ள
விதிகளை பற்றியும் நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் பேருந்து வந்துவிட்டது.
நாங்கள் ஒவ்வொருவராக பேருந்திற்குள் ஏறி அமரவும், பேருந்து கிளம்புகிறது. ஜன்னலோரும்
கிடைத்த சீட்டில் அமர்ந்தப்படி, ஜன்னல் சற்று சாய்த்தப்படி கண்களை மூடி யோசித்தேன்.
Diwali Carnival 2014
Hiranandani™ Presents a Week-Long Celebration at Egattur.Register Now

houseofhiranandani.com/chennai


லேசாக தூக்க நிலைக்கு நான் செல்ல, ஒரு திருப்பத்தில் பேருந்து பலமாக பிரேக் போட,
வேகமாக ஹாரன் ஒலி எழுப்பப்பட்டது. “ஸ்மார்ட் சிட்டியில் தான் ஹாரன் ஒலி
அடிக்கமாட்டார்களே, எதாவது விபரீதம் நடந்திருக்குமோ” என்று பதட்டத்துடன் தூக்கம் கலைந்து,
கண் விழித்துப் பார்த்தேன்.
என் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு எதிரே தொங்கிக் கொண்டிருந்த
காலண்டர், இன்றைய நாள் 14/06/2014 எனக் காட்டவும், அந்த ஏசிக் காற்றிலும் எனக்கு
குப்பென்று வியர்க்க ஆரம்பிக்கிறது.

Professor k. kumar

unread,
Oct 26, 2014, 11:17:50 AM10/26/14
to brail...@googlegroups.com
"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"
Home
Sunday, October 26, 2008
index Submit to Tamilmanam

லைப்ரரி சேர் காட்டிய "ராஜம் கிருஷ்ணன்" இன்னும் பலர்
library

வேலைக்குப் போவதற்காக ரயிலில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணித்தியாலத்துக்குக் குறைவில்லாத
பயணம். அந்த நேரம் காதுகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு கண்களுக்கு மட்டும் தீனி
தேடவேண்டும். எனவே வழக்கம் போல் வாரப்பத்திரிகைகள் வாங்கும் கடைக்குப் போகின்றேன். அங்கே
"அவள் விகடன்" சஞ்சிகையின் பதினோராவது ஆண்டு மலர் இருந்தது. புரட்டிப் பார்த்து விட்டு
அதையும் எடுத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் நாஞ்சில் நாடனின் தொடர் கட்டுரையைத் தவிர ஆனந்த
விகடனில் உருப்படியாக ஒன்றும் வருவதில்லை என்பது என் பல ஆண்டு விகடன் வாசிப்பில் நான்
எடுத்த அனுமானம். அதனால் தான் அவள் விகடனில் ஆவது ஏதாவது சமாச்சாரங்கள் கிட்டுமே அதை
வாங்கிக் கொண்டேன். அடுத்த நாள் ரயில் பயணத்தில் பிரிக்கின்றேன் அதன் பக்கங்களை. அதில் வந்த
முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை வாசித்ததும் மனம் கனக்கின்றது. மெல்ல
என் மடியில் புத்தகத்தை வைத்து விட்டு பழைய நினைவுகளுக்கு என் மனம் தாவுகின்றது.

"பிரபாகர்! புதுப் புத்தகங்கள் கொஞ்சம் வந்திருக்கு, புக் ரெஜிஸ்டரில் போட்டு விட்டேன்,
வந்து பாரும்" எமது கல்லூரி நூலகத்தைக் கடக்கும் என்னைக் கூப்பிடுகின்றது தனபாலசிங்கம்
சேரின் அழைப்பு. எங்கள் கல்லூரி நூலகத்துக்கு அவர் வந்து கொஞ்ச நாளுக்குள்ளேயே என்னை
நட்புப் பாராட்டியவர். அதற்குக் காரணமும் இருந்தது. என் பள்ளிப் பிராயத்தில் "கடலைச் சரைப்
பேப்பரைக் கூட உவன் விடமாட்டான்" என்று என் மீது ஒரு விமர்சனம் இருந்தது. நடந்து போகும்
போது றோட்டில் ஏதாவது பேப்பர் இருந்தாலோ அல்லது கச்சான் கடலையைப் பொதி பண்ணும் பேப்பர்
சரை இருந்தாலோ அதைப் பிரித்து அதில் என்ன சமாச்சாரம் இருக்கு என்று library7

ஆர்வக் கோளாறோடு படித்த காலமது. கல்லூரி நூலகத்தை மட்டும் விடுவேனா? பாட
இடைவேளைக்கும் கூட அங்கேயே தஞ்சமாகிப் போன காலம் அது.எங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி
நூலகம் மிகவும் பழமையானது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் இருக்குமாற் போல பல அரிய
நூல்களைச் சேமித்து வைத்த அறிவுக் களஞ்சியம் அது.

செங்கை ஆழியானின் கதைகளை ஒரு வெறியோடு படித்துக் கொண்டிருந்த என்னை இன்னும் ஒரு உலகம்
இருக்கு என்று காட்டியவர் எங்கள் நூலகத்துக்கு வந்த தனபால சிங்கம் என்ற நூலகர். அவரை
லைப்ரரி சேர் என்று தான் அழைப்போம். தொடர்ந்த என் வாசிப்பு ஆர்வத்தையும், குறித்த
நாளுக்குள் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும் பண்பையும் சத்தமில்லாமல்
அவதானித்திருக்கிறார் இந்த லைப்ரரி சேர் போலும்.

"பிரபாகர்! செங்கை ஆழியானின் புத்தகங்கள் எங்கட பிரதேசத்துக்குரிய வாழ்க்கையை மட்டுமே
காட்டும், அதோட மட்டும் நிக்கக் கூடாது, வாசிப்பை விசாலப்படுத்தோணும், இந்தாரும் இதைக்
கொண்டு போய் வாசியும்" ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் நாவலைத் தானாகவே எடுத்து
வந்து என் பெயரை ரிஜிஸ்டரில் போட்டு விட்டுக் கொடுக்கின்றார்.

பிறகு மு.வரதராசனின் "கரித்துண்டு", அகிலனின் "சித்திரப் பாவை", "பால்மரக்
காட்டினிலே", "வேங்கையின் மைந்தன்", ஜெயகாந்தனின் " பிரம்மோபதேசம்"
அ.செ.முருகானந்தனின் "மனித மாடுகள்", பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முதல் தொகுதி
தமிழ்மாணவர்கள் அறுபதுகளில் எழுதிய "விண்ணும் மண்ணும்" சிறுகதைத் தொகுதி என்று அவர்
எனக்காக அறிமுகப்படுத்தும் library6

பட்டியல் தொடர்கின்றது. இன்றுவரை என் ஞாபகக் கூட்டில் எஞ்சியிருக்கும் நூல்களில் ஒரு சில
தான் அவை.

சஞ்சிகைகளில் அப்போதெல்லாம் கோகுலமும் அம்புலிமாமாவுமாக இருந்த என்னை, யதார்த்த
உலகுக்கு கைபிடித்து அழைத்துச் சென்றார் சுபமங்களா, க்ரோதாயுகம், துளிர் போன்ற
சஞ்சிகைகளைக் காட்டியதன் மூலம்.

ஐம்பது வருஷத்துக்கு முற்பட்ட சஞ்சிகைகள், குறிப்பாக "விவேகி" போன்றவை உசாத்துணைப்
பட்டியலில் மிகுந்த பாதுகாப்போடு பூட்டுப் போடப்பட்டு வைக்கப்பட்டிருந்தவை.
அவற்றை மெல்ல எடுத்து வந்து "வாசிச்சிட்டு தாரும்" என்று இரகசியமாகக் கையில்
திணிப்பார். அந்த சஞ்சிகையைத் திறந்தாலே அப்பளம் போல நொருங்கிப் போய்விடும் அளவுக்கு
பழசானது.

"கலாநிதி நா,சுப்ரமணியனின் "ஈழத்துச் சிறுகதை வரலாறு" என்ற ஆராய்ச்சி நூல்
வந்திருக்கு, இதையும் கொண்டுபோய் வாசியும்" வெறும் நாவல் என்ற வட்டத்துக்குள் நின்று
விடாது என்னுடைய வாசிப்பினை இன்னும் இன்னும் எல்லை கடக்கச் செய்யவேண்டும் என்ற முனைப்பு
அவரிடம் இருந்தது. அதே நேரம் என் வாசிப்பு திசை திரும்பி படிக்ககூடாத சமாச்சாரங்களில்
இருந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் இவராகவே எனக்கான புத்தகங்களைத்
தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்குமோ என்ற உணர்வு இப்போது எனக்குள் வருகின்றது.

ஒருமுறை லைப்ரரி சேருக்கு என் மீது ஏனோ மனஸ்தாபம், ஏசி விடுகின்றார். நான் அந்தப் பக்கம்
கொஞ்ச நாள் போகவில்லை. ஆனால் என் வகுப்புக்குப் போவதென்றால் நூலகத்தைக் கடந்து தான்
போகவேண்டும்.

"சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமி நாதன் யாழ்ப்பாணம் வந்திருக்கிறார், நாளைக்கு நாவலர்
மண்டபத்தில் அவரின் பேச்சு இருக்கு நீரும் வரோணும்" என்று கதவுப் பக்கமாக நின்ற அவர்
அன்புக் கட்டளை போடுகின்றார் லைப்ரரி சேர்."ஒகே சேர்" என்று விட்டு அடுத்த நாள்
விழாவுக்குப் போகின்றேன். இலக்கிய ஆர்வலர்கள், பெருந்தலைகள் என்று நிரம்பி வழிந்த
கூட்டத்தின் காற்சட்டைப் பையனாக நானும் ஒரு ஓரத்தில். ஈழத்து மொழி வழக்கை தமிழக
வாசகர்கள் புரிந்து கொள்வதன் கஷ்டத்தை "சாரம்" என்ற உதாரணத்தின் மூலம் பேச்சில் காட்டிக்
கொண்டு போகிறார் கோமல். ஈழத்தில் சாரம் என்றால் தமிழகத்தில் அது லுங்கி என்று
பேசப்படுகின்றது, அது போல தமிழகத்தில் சாரம் என்று அழைப்பது கட்டிடங்கள் கட்டும் போது
பிணைச்சலாகப் போடுவது என்று பேசிக் கொண்டே போகின்றார் கோமல். அவரின் உரை முடிந்ததும்
கேள்வி நேரம். கோமலை பலரும் கேள்வி கேட்க மேடையில் ஏறுகின்றார்கள். மேடைக்குப் நின்ற
லைப்ரரி சேர் மறுகரையில் நின்ற என்னைக் கண்டு
"ஏறும் ஏறும்" என்று கண்களாலேயே ஜாடை சொல்லி என்னை மேடைக்கு அனுப்புகின்றார்.
ஏதோ ஒரு துணிவில் மேடையில் ஏறி கோமலைக் கேட்கின்றேன். "திரைப்படங்கள் சமூக
நாடகங்களுக்கு சாபக்கேடு என்றீர்கள், நீங்கள் கூட "ஒரு இந்தியக் கனவு", "தண்ணீர் தண்ணீர்"
கதாசிரியர், நீங்கள் எதிர்பார்க்கும் சினிமாவை நீங்களே தொடர்ந்து செய்யலாமே" என்று ஏதோ
ஒரு வேகத்தில் மேடையில் ஏறிய நான் கேட்கின்றேன். அவரின் பதிலோடு மேடையில் இருந்து
இறங்கிய என்னைத் தட்டிக் கொடுக்கின்றார் லைப்ரரி சேர்.

இந்திய இராணுவப் பிரச்சனை முடிந்து எமது கல்லூரிக்குப் போன முதல் நாள் கண்ட காட்சிகள்
அவலமானவை. அகதி முகாமாக்கப்பட்டு அது நாள் வரை இருந்த முழுக் கல்லூரியே விதவைக்
கோலத்தில் இருந்தது. நூலகத்துக்குப் போகின்றேன். எல்லா புத்தக அலுமாரிகளும் உடைக்கப்பட்டு
புத்தகங்கள் திசைக்கொன்றாய் இருக்கின்றன. நூலகத்தின் கதவுப் புறங்களில் ஷெல்லடித்து உடைந்த
ஓடுகளின் ஊடாக வரும் மழை வெள்ளத்தைத் தடுக்க புத்தகங்களே தடுப்பாகப்
போடப்பட்டிருக்கின்றன. பல அரிய நூல் தண்ணீரில் தொப்பமாக நனைந்து அகதிகளாகி அழுது
கொண்டே இருக்கின்றன. லைப்ரரி சேரைப் பார்க்கின்றேன், ஷெல் வீச்சில் இறந்த குழந்தையின் தந்தை
போல இடிந்து போய் இருக்கின்றார். மெதுவாக ஒவ்வொரு புத்தகமாகக் கையில் எடுத்துத்
துடைத்துக் கொண்டு வருகின்றார்.

கல்லூரி வாழ்வு கழிந்து இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து ஆண்டு பல ஓடிவிட்ட பின்னர்
ஊருக்குப் போன போது தாவடியில் இருக்கும் என் மாமி வீடு போகின்றேன். மச்சாள் எங்கள்
கல்லூரியில் தான் படிப்பிக்கின்றார்.
ஆர்வமாக "லைப்ரரி சேர் இன்னும் அங்கே இருக்கிறாரா" என்று கேட்கிறேன்.
"இல்லை பிரபு! அவர் இப்ப ரிடயர்ட் ஆகிட்டார்" பக்கத்திலை தான் சுதுமலையில் இருக்கிறார்
இது மாமி மகள்.
"அவரை ஒருக்கால் நான் பார்க்கோணும்" என்ற என்னை மச்சாள் புருஷன் தன் மோட்டார் சைக்கிளில்
இருத்திக் கொண்டு போகின்றார்.
லைப்ரரி சேரின் வீட்டுக்கு முன்னால் வந்து வண்டி நிற்கின்றது. பூக்கன்றுகளுக்கு நீர்
பாய்ச்சிக் கொண்டிருந்த அவர் என்னைக் கண்டும் தெரியாத பாவனையில் உற்றுப் பார்க்கின்றார்.
"சேர்! நான் பிரபாகர், ஞாபகம் இருக்கா?"
"ஓ அப்படியா கனகாலத்துக்கு முந்தி இருக்கும் என்ன?" என்று மீண்டும் என்னை ஐயமுறப்
பார்க்கின்றார்.
"முந்தி நீங்கள் தான் சேர் எனக்கு நிறையப் புத்தகம் எல்லாம் தாறனீங்கள்" என்று மீண்டும்
ஆசையாகச் சொல்கிறேன்.
libary3

"இஞ்சையப்பா! எங்கட ஸ்கூல் பிள்ளை வந்திருக்கு, இஞ்சை வாரும்" என்று வீட்டுக்குள் இருந்த தன்
மனைவியை அழைக்கிறார் லைப்ரரி சேர். அப்போதும் பிரபாகர் என்ற என்னை மறந்து விட்டார் என்று
தொண்டைக்குள் எச்சிலை மிண்டுகின்றேன்.
தன்னுடைய மனைவி சந்திரா தனபாலசிங்கம் எழுதிய நூலை எனக்குத் தருகிறார். லைப்ரரி சேரை
ஒரு போட்டோ எடுத்து விட்டு மச்சாளின் புருஷனின் மோட்டார் சைக்கிளில் அமர மீண்டும்
தாவடிக்குப் போகின்றது. எதிர்த் திசையில் அலையும் காற்று முகத்தில் குப்பென்று அடிக்கின்றது.

லைப்ரரி சேருக்கு பிள்ளைகள் இல்லை, அந்தப் புத்தகங்கள் தான் அவரின் குழந்தைகள். அந்தப்
புத்தகக் குழந்தைகளோடு நேசம் கொண்டு வருபவர்களை எந்தத் தந்தைக்குத் தான் பிடிக்காது?
எனக்குப் பிறகு நிறைய பிரபாகர்கள் அந்த நூலகத்துக்கு வந்திருப்பினம். அந்தந்தக்
காலகட்டத்தில் அவரின் புத்தகக் குழந்தைகளை நேசித்தவர்களை அவரும் நேசித்திருக்கின்றார்
அவ்வளவு தான். ஆனாலும் லைப்ரரி சேரை நான் மறக்க மாட்டேன்.

இனி என் ஞாபகத்தைக் கிளறிய அவள் விகடனில் வந்த "ராஜம் கிருஷ்ணனின்" பேட்டியை அவள்
விகடனுக்கு நன்றியுடன் அப்படியே தருகின்றேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
P26b
சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர்
மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.
'வேருக்கு நீர்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
இதுபோல எண்ணற்ற விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த எண்பத்தி இரண்டு வயதான ராஜம்
கிருஷ்ணன் இன்று இருப்பதோ பாலவாக்கம் விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில்!
library9

குடும்ப உறவுகளின் உன்னதம் குறித்து எவ்வளவோ எழுதியவர், இன்று ஒற்றைப் பறவையாய்
ஒதுங்கியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.
மெலிந்த தேகம்.. தொடை எலும்பு முறிவால் கையில் 'வாக்கர்'.. என்று முதுமையின் வாட்டம்
தெரிந்தாலும் பேச்சின் கம்பீரம் என்னவோ அப்படியே இருக்கிறது.
''என்னை எதுக்குப் பார்க்க வந்திருக்கீங்க? ஐ'ம் ஜஸ்ட் எ டஸ்ட்'' என்றவரை ஆசுவாசப்படுத்திப்
பேச்சுக் கொடுத்தோம்..
''அன்னிக்கு என் பேச்சைக் கேக்க ஆயிரம் பேர் இருந்தாங்க. இன்னிக்குப் பேச்சுத் துணைக்குக்கூட
ஆளில்லை'' என்றபடியே பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தார்.
''1925-ல முசிறியில பிறந்தேன். சின்ன வயசுலயே எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை.
ஆனா, என் பெற்றோர் என்னை ஸ்கூலுக்கு அனுப்பலை. அந்தக் காலத்துல பெண்கள் வயசுக்கு
வர்றதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்க. எனக்கும் பதினைந்து வயதில் பால்ய
விவாகம் நடந்தது.

ஒன்பது நாத்தனார், மாமியார், மாமனார்னு நான் வாழ்க்கைப்பட்டது பெரிய குடும்பம். ரொம்பவே
கஷ்டப்பட்டோம். என் கணவர் கிருஷ்ணன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். வீட்டில் நிறைய புத்தகங்கள்
வாங்கிப் போடுவார். லைப்ரரிக்குப் போயும் நிறையப் படிப்பேன்.
பதினாறு வயசுல கதைகள் எழுத ஆரம்பிச்சேன். அதெல்லாம் தொடர்ந்து பத்திரிகைகளில்
பிரசுரமாகி, எழுத்தாளர்கள் வரிசையில் எனக்கு ஒரு தனி இடம் கிடைச்சது'' என்றவர்
முகத்தில் மெலிதான பூரிப்பு. தொடர்ந்த ராஜம் கிருஷ்ணன்,
''தாம்பரத்துல மூணு கிரவுண்ட்ல வீடு வாங்கினோம். நிம்மதிக்குக் குறைவில்லை. நான் கதை
எழுதும்போதெல்லாம் என் கணவர் பேனாவுக்கு மை போட்டுத் தருவார். என் துணிமணிகளை அயர்ன்
பண்ணித் தருவதும் அவர்தான். என் கதைகளைப் படிக்கக்கூட அவருக்கு நேரம் இருக்காது.
ஆனாலும், நான் எழுத அவ்வளவு ஊக்கம் கொடுத்தார்..'' என்று நெகிழ்ச்சியோடு சொன்னவர், தன்
எழுத்து அனுபவங்களின் பக்கமாகப் பேச்சைத் திருப்பினார்.
lirabry8

''1970-ல் தூத்துக்குடி உப்பளத்துக்குப் போய் அங்கு வாழும் மீனவர்களை நேரடியாக
சந்தித்தேன். அவர்களுக்குக் குடிக்கக்கூடத் தண்ணீர் கிடையாது. மருந்து, மாத்திரைகளை
சாப்பிட்டே வாழ வேண்டிய நிலை. பரிதாபத்துக்குரிய அந்த மனிதர்களின் அவல நிலையை
'கரிப்பு மணிகள்' என்ற நாவலாக எழுதினேன். அதற்கு இரண்டு விருதுகள் கிடைத்தன.
1972-ல் பீகாரில் கொள்ளையர்கள் அராஜகம் செய்து கொண்டிருந்த சமயம். அப்போ அந்த
கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து பல மாதங்கள் அவர்களுடனே இருந்து
பார்த்தவற்றை 'முள்ளும் மலரும்' என்ற தலைப்பில் எழுதினேன்.
பெண் சிசுக் கொலை, கோவா விடுதலை, சோவியத் நாடுகள் பற்றிய கட்டுரைத் தொடர்கள் என நான்
எழுதாத விஷயங்களே இல்லை. பாரதியார் பற்றி நிறையப் புத்தகங்கள் வந்திருக்கு. ஆனால்,
'முற்போக்குவாதியான பாரதியின் இறப்புக்குப் பின் செல்லம்மாளுக்கு மொட்டை அடித்தது ஏன்?'
என்ற விவகாரத்தை ஆராய்ந்து 670 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டேன்.
இப்படி என்னுடைய 80-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழ்ப் புத்தகாலயம்
வெளியிட்டிருக்கிறது'' என்று நிறுத்தியவர், எதையோ நினைவுக்குக் கொண்டு வந்தவர் போல
மேலே பேசினார்.
''ஒரு கட்டத்தில் என் கணவருக்குப் பக்கவாதம் தாக்கி நடமாட முடியாமப் போச்சு. தன்னோட
தொண்ணூறாவது வயசுவரைக்கும் எனக்குத் துணையாவும் தூணாவும் இருந்தார். எங்களுக்குக்
குழந்தைகளும் இல்லை. அவர் மறைவுக்குப் பின் 'என் ஒருத்திக்கு எதுக்கு இவ்வளவு பெரிய
வீடு?'னு உறவுகளும், நட்புகளும் கேட்டதால வீட்டை வித்துட்டேன். நான் எழுதிய அத்தனை
படைப்புகளையும் எடுத்துச் செல்ல இடம் இல்லாததால் எல்லாத்தையும் தீ வெச்சுக் கொளுத்தினேன்.
libary4
கையில் இருந்த லட்சக்கணக்கான பணத்தை யார் யாரோ பகிர்ந்துக்கிட்டாங்க. பாங்க்ல இருந்த பணமும்
என்னாச்சுன்னு தெரியலை. பங்களாவில் வாழ்ந்த நான் சகலத்தையும் இழந்து சென்னையில் ஒரு
குடிசைப் பகுதியில வாடகைக்குக் குடிபோனேன். அங்க இருந்தப்போ, வரதட்சணை கேட்டுப்
பொண்டாட்டியைக் கொடுமைப்படுத்தறவன்.. தினமும் குடிச்சிட்டு மனைவியை அடிச்சு
உதைக்கிறவன்.. இப்படிப்பட்ட ஆட்களையெல்லாம் பார்த்தப்போ இன்னும்கூட பெண்களுக்கு முன்னேற்றம்
கிடைக்கலையோன்னு தோணுச்சு'' என்றவரின் குரலில் பெரும் துயர்.
''எட்டு மாசத்துக்கு முன்னால ஒரு ஆக்சிடென்ட்ல எனக்குக் கால் எலும்பு முறிஞ்சு போச்சு.
ஆபரேஷன் நடந்து அஞ்சு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். என் தோழியான திலகவதி ஐ.பி.எஸ்.,
பாரதி சந்துரு இருவரும் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்து விட்டாங்க. என்னால இப்ப நடக்க
முடியலை. இந்த வாக்கர் உதவியா இருக்கு. எத்தனையோ பேருக்கு ஒரு கஷ்டம்னா ஓடிப்போய்
உதவி பண்ணினேன். இப்போ எனக்கு உதவத்தான் யாருமில்லை. பார்ப்போம்..''
கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி அந்த இரும்பு மனுஷி நமக்கு விடை கொடுக்க, சமூகத்துக்காக
எவ்வளவோ அக்கறையோடு யோசித்த ஒரு மனுஷிக்கு இந்த சமூகம் செய்திருக்கும் மரியாதையைப்
பார்க்க பயமாகத்தான் இருந்தது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை படித்ததும் மனது கனத்தது. தனது நாவல்கள் மூலம் இரு
காலகட்டத்தில் சமுதாயத்திற்கு வெளிச்சம் காட்டியவர் இன்று இருளில். எமது சிட்னி தமிழ்
அறிவகத்துக்குப் போய் ஆசையாய் அவரின் ஒவ்வொரு புத்தகத்தையும் தொட்டுப் பார்த்து
புகைப்படமும் எடுத்துவிட்டு "முள்ளும் மலர்ந்தது" என்ற அவரின் நாவலை எடுத்து வைத்தேன்.
இந்த வாரம் ரயிலில் வைத்து வாசிக்க வேணும்.
Posted by கானா பிரபா at 2:17 AM

Professor k. kumar

unread,
Oct 26, 2014, 12:02:09 PM10/26/14
to brail...@googlegroups.com
ஒற்றை முள்
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 963





rating-81851485-5
Rate this
View More
+1
0
Tweet
0
Share

Like
0
கண் முன்னே அந்த இசைத்தட்டு கீழே விழுந்து உடைந்துபோனது. ஷைலுதான் அதைத்
தவறவிட்டுவிட்டாள். வேண்டும் என்றே அதை அவள் கீழே போட்டு உடைக்கவில்லை. ஏதோ ஒரு
பொம்மையை எடுக்கப் போனவள், விளையாட்டாக இசைத்தட்டை கவரில் இருந்து வெளியே எடுத்துப்
பார்த்திருக்கிறாள். திரும்ப வைக்கும்போது, கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது.
அப்பா அதனை எதிர்பார்த்திருக்கவில்லை. சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து ஓடி வந்தவர்,
பதற்றத்துடன் தரையில் உடைந்துகிடந்த அரக்கு இசைத்தட்டையே வெறித்துப் பார்த்தார்.
ஒற்றை முள்
அவருக்குள் கோபமும் வருத்தமும் ஒருசேர நிரம்பி இருந்ததை அவரது கண்கள் காட்டிக்கொடுத்தன.
அப்பா தனது ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தியபடி, ”இதை யாரு எடுக்கச் சொன்னா?” என்று
அழுத்தமான குரலில் கேட்டார்.
ஷைலு பயந்து நின்றிருந்தாள். தாத்தா இப்படி முறைத்துப் பார்ப்பது அவளுக்கு என்னவோ
செய்தது. அவள் கைகள் நடுங்க, அழும் குரலில் ‘மம்மி…’ என சத்தமிட்டாள். சமையல் அறையில்
இருந்து வெளிப்பட்ட நளினி உடைந்த இசைத்தட்டைப் பார்த்தபடியே, ”ஷைலு ஓரமா வந்து நில்லு…
கால்ல குத்திடப்போகுது” என்றாள்.
அப்பா மருமகளைப் பார்த்து முறைத்தபடியே, ”இதை யாரு இங்கே கொண்டுவந்து வெச்சது; உன்
வேலைதானா?” என்று கேட்டார்.
நளினிதான் அதை அப்பாவின் பையில் இருந்து வெளியே எடுத்து அலமாரியில் வைத்தாள். இரண்டு
நாட்களுக்கு முன்பாக வீட்டில் எலி செத்துப்போன துர்நாற்றம் வீசவே, ஓர் ஆளை வைத்து எங்காவது
எலி செத்துக்கிடக்கிறதா எனத் தேடினார்கள். வேலையாள், கட்டிலுக்கு அடியில் தேடும்போது
அப்பாவின் லெதர் பேக் இடையூறாக இருக்கிறது என்று படுக்கையின் மேல் வைத்துவிட்டுத்
தேடினான். ஒரு சுண்டெலி, செருப்பு வைக்கும் ரேக்குக்குள் செத்துக்கிடந்தது கண்டுபிடித்து
எடுக்கப்பட்டது. அப்பாவின் லெதர் பையை மறுபடி அவரது கட்டிலுக்குக் கீழே வைக்கும்போதுதான்
நளினி அந்த இசைத்தட்டை வெளியே எடுத்துப் பார்த்தாள். தரை துடைக்கும்போது தண்ணீர்
பட்டுவிடுமே என நினைத்து அதை ஷெல்ஃபில் கொண்டுபோய் வைத்துவிட்டாள்.
அது ஒரு பெரிய எல்.பி. இசைத்தட்டு. முகப்பு அட்டையில் பிஸ்மில்லா கான், ஷெனாய்
வாசித்துக்கொண்டிருக்கும் படம். அதன் அடியில் சிவப்பு மசியில், ‘எனது அன்பளிப்பு,
பி.வி.’ எனக் கையெழுத்து. அப்பா இந்த இசைத்தட்டை 40 வருஷமாக வைத்திருக்கிறார். வீடு
மாறும் சமயங்களில் எல்லாம் அதைப் பாதுகாப்பாக தானே எடுத்துக்கொண்டு வருவார்.
அம்மா இறந்த பிறகு, அப்பா கிராமத்து வீட்டில் இருந்து எங்களுடன் வசிப்பதற்காக நகரத்துக்கு
வந்து சேர்ந்தார். அப்போது அவரது பையில் இந்த இசைத்தட்டு இருந்தது. அப்பாவிடம் இசை
கேட்கும் ரிக்கார்ட் ப்ளேயர் கிடையாது. பின்பு எதற்காக இந்த ஒற்றை இசைத்தட்டை
வைத்திருந்தார் என்பது யாருக்கும் புரியாத புதிர்.
அப்பா, இசை கேட்பதில் ஆர்வம் கொண்டவர் இல்லை. கச்சேரிகளுக்குப் போயோ, ரேடியோவில் இசை
கேட்டோ நான் பார்த்ததே இல்லை. யாராவது பாட்டு கேட்டுக்கொண்டிருந்தால்கூட, ‘என்ன
எந்நேரமும் பாட்டு?’ என்று திட்டுவார். இப்படி இசையே பிடிக்காத அவருக்கு யார் அந்த
இசைத்தட்டைப் பரிசாகத் தந்தார்கள் என்று தெரியவில்லை.
‘யார் பி.வி.?’ என்று ஒருமுறை அம்மாவிடம் கேட்டபோது, ‘எனக்கு எப்படித் தெரியும்?’
என்றாள். அப்பாவிடம் விசித்திரமான சில பழக்கங்கள் இருந்தன. நண்பர்கள் யாரையும் வீட்டுக்கு
அழைத்துவரக் கூடாது. இரவில் ஒன்பது மணிக்கு விளக்கை அணைத்துவிட வேண்டும். காலையில்
எல்லோரும் பச்சைத் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும். காசு கொடுத்து புத்தகம், நாளிதழ்
எதுவும் வாங்கக் கூடாது. சாப்பிடும்போது பேசுவதோ, சிரிப்பதோ கூடவே கூடாது. இப்படி
அவரது கட்டுப்பாடுகள் வீட்டை நரகமாக மாற்றிவைத்திருந்தன.
அப்பாவின் நண்பர்கள் யார் என்றே எங்களுக்குத் தெரியாது. எந்த நண்பரையும் வீட்டுக்கு
அழைத்துவர மாட்டார். அவரைப் போலவே நாங்களும் நடந்துகொள்ள வேண்டும் என்பார்.
ஒருமுறை, சாந்தி அவளுடன் கல்லூரியில் படிக்கும் பெண் ஒருத்தியை ஹாஸ்டல் லீவு என்று
வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள். அந்தப் பெண் எங்கள் வீட்டுக்கு வந்த இரவே அப்பா அவளிடம்,
‘இங்கே ஒரு நாளைக்கு மேல் தங்க முடியாது. நீ ஊருக்குக் கிளம்பு!’ என்று முகத்துக்கு
நேராகச் சொல்லிவிட்டார். இதற்காக சாந்தி கேவிக்கேவி அழுதாள்.
அப்பா, தன் வீட்டு மனிதர்கள் எவர் அழுவதையும் ஒருபோதும் பொருட்படுத்தியதே இல்லை. அவரும்
எதற்கும் அழ மாட்டார். அவரிடமிருந்து கண்ணீரைக் காண்பது அபூர்வம். அம்மா இறந்தபோதுகூட
முகம் வருத்தமாக மட்டுமே இருந்தது. கண்களில் நீர்ப் பொங்கி வரவில்லை. மணி மாமாதான்
சொல்வார். ‘உங்கப்பா மனசு கல்லுடா, அதுல ஈரத்தைப் பார்க்கவே முடியாது. நீ
பிறக்குறதுக்கு முன்னாடி ஓர் ஆம்பளைப் பையன் பிறந்தான். அவன் பிறந்த ரெண்டு நாள்ல
செத்துப்போயிட்டான். தலைப்பிள்ளை செத்துப்போச்சேனு வீடே அழுதுட்டு இருந்துச்சி. ஆனா,
உங்கப்பா கலங்கவே இல்லை. ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்கனு சொல்லி வேலை பார்க்கப்
போயிட்டார். விநோதமான ஜென்மம் உங்கப்பா. பாவம் உங்கம்மா; இவர்கூட 32 வருஷம் ஒண்ணா
வாழ்ந்திருக்கா. எத்தனை நாள் எவ்வளவு அழுதுருப்பா? யார்கிட்டயும் உங்கம்மா ஒரு புகார்கூட
சொன்னது கிடையாது. வைராக்கியமான பொண்ணு!’
அப்பா அப்படித்தான். அவருக்கு மென் உணர்வுகள் கிடையாது. தேர்ந்த ரசனை எதுவும்
கிடையாது. முகத்துக்கு நேராக ஏசிவிடுவார். மூக்குக்கு மேல் கோபம் இருக்கும். மழை
பெய்யும் இரவில்கூட அம்மாவை துவையல் அரைக்கச் சொல்லிக் கத்துவார். மழையின் ஊடே
நனைந்தபடியே அம்மா முதுகு நனைய, முகத்தில் மழை தண்ணீர் வழிய அம்மிக் கல்லில் துவையல்
அரைத்துத் தருவாள். ‘ஈரத் தலையைத் துவட்டிக்கொள்’ என்று ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டார் அப்பா.
இப்படி ரசனையே இல்லாத மனிதர் எதற்காக ஓர் இசைத்தட்டை இத்தனை வருடங்கள் தூக்கிக்கொண்டு
அலைகிறார் என்று எனக்கே ஆத்திரமாக இருக்கும்.
முன்பு எப்போதோ ஒருமுறை மரச் சாமான்கள் விற்கும் கடைக்குப் போயிருந்தபோது, அழகான
ரிக்கார்ட் ப்ளேயர் ஒன்றைப் பார்த்தேன். வாங்கி பாட்டு கேட்கலாம் என்று நினைத்து அப்பாவிடம்
சொன்னேன்.
”அதெல்லாம் வீண் செலவு. இப்போ யாரு ரிக்கார்டுல பாட்டு கேட்குறா? அதான் சி.டி.
வந்துருச்சே!” என்றார்.
”பின்னே, நீங்க மட்டும் எதுக்கு ஒரு ரிக்கார்டை கூடவே வெச்சிக்கிட்டு இருக்கீங்க?” என்று
கேட்டேன்.
”இது வெறும் ரிக்கார்டு இல்லே. உசந்த ஒரு ஆளோட பரிசு. அதைத் தொலைச்சிட்டா நான்
உயிரோட இருந்து பிரயோஜனமே இல்லை” என்றார்.
ஒற்றை முள்2
அப்பா அதைச் சொன்னபோது, அவரது கண்கள் நெகிழ்ந்துபோயிருந்தன. இதயத்தின் ஆழத்திலிருந்து
அதைச் சொல்கிறார் என்பதை, அவரது குரல் காட்டித்தந்தது.
ஒருமுறை, ‘உங்க அப்பா ரிக்கார்டை எடுத்துக் கொண்டுபோய் தேரடித் தெருவில் இருந்த சலூன்
ப்ளேயரில் போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார்’ என்று கல்யாண வீட்டில் வைத்து ரங்கசாமி
பெரியப்பா சொன்னது மனதில் இருக்கிறது.
இசை கேட்பதை ஏன் ரகசியமாகச் செய்ய வேண்டும்? ஒருவேளை இந்த இசைத்தட்டைத் தந்தது யாராவது
ரகசியக் காதலியாக இருக்கலாமா? என்றும் யோசித்திருக்கிறேன். அப்பாவுக்கு பெண்களுடன்
பேசுவதே பிடிக்காது. இதில் எப்படி அவருக்கு ரகசியக் காதல் இருந்திருக்கப் போகிறது?
வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று மனதைத் தேற்றியிருக்கிறேன்.
aclk sa=L&ai=CGJgyMRlNVMPOG5Sh…

அப்பா உடைந்துபோன அந்த இசைத்தட்டை தானே கையில் அள்ளி எடுத்து குப்பைக்கூடையில்
போட்டுவந்தார். இசைத்தட்டின் கவரை கையில் வைத்துப் பார்த்தபடியே மௌனமாக
உட்கார்ந்திருந்தார். அவரது முகம் இறுகிப்போய் இருந்தது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு
உட்கார்ந்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தது.
”சின்னப்பிள்ளை… ஏதோ விளையாட்டா செஞ்சிருச்சி… விடுங்கப்பா!” என்றேன்.
”எதுல விளையாடுறதுன்னு தெரிய வேணாமா?” என்று முறைத்தபடியே கேட்டார்.
அதைக் கேட்டதும் நளினிக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது.
”உங்க ரிக்கார்டை வேணும்னு ஒண்ணும் உடைக்கலை” என்றாள்.
”எப்படியோ உடைச்சிப் போட்டுட்டீங்கள்ல… இனிமே பேசி என்ன ஆகப்போகுது?” என்று கடிந்த
குரலில் சொன்னார்.
”அந்த ரிக்கார்டை நீங்க கேட்குறதுகூட இல்லே. பழைய ரிக்கார்டுதானப்பா, அதுக்குப் போய் ஏன்
இப்படிப் பேசுறீங்க?” என்று கேட்டேன்.
”அது வெறும் ரிக்கார்டு இல்ல, என்னையும் மதிச்சிக் கொடுத்த பரிசுடா. இத்தனை வருஷமா
அதைப் பாதுகாக்க எவ்வளவு அரும்பாடுபட்டிருக்கேன் தெரியுமா? ஒரு நிமிஷத்துல
உடைச்சிப்புட்டீங்களே!” என்று ஆற்றாமையுடன் சொன்னார்.
”குழந்தைக்கு அது எப்படிப்பா தெரியும்?” என நானும் கடுமையான குரலில் கேட்டேன்.
”அப்படி பிள்ளைகளை லட்சணமா வளர்த்து வெச்சிருக்கீங்க” என்று கடுகடுத்த குரலில் சொன்னார்.
”நீங்க எங்களை வளர்த்ததைவிட நல்லாத்தான் வளர்த்துக்கிட்டு வர்றோம்” என்றேன்.
”ஆமாப்பா… நான் என் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமத்தான் வளர்த்தேன். நான் கோட்டிக்காரன்தான்.
நீயும் உன் பொண்டாட்டியும் என்னைவிட படிச்சவங்க; கை நிறைய சம்பாதிக்கிறவங்க. அதான் ரொம்பப்
பொறுப்பா பிள்ளையை வளர்க்குறீங்க…” என்றார்.
”சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதீங்க. மனுச மக்க யாருமே வேணாம்னு நினைக்குற ஆளு நீங்க.
நம்ம வீட்ல யாராவது ஒருத்தர் மேல உங்களுக்கு பாசம் இருக்கா? பெத்த பிள்ளைகக்கிட்டயே
குடுத்த காசுக்கு வட்டி கேட்குற ஆள் நீங்க…” என்றேன்.
”ஆமா, நான் அப்படித்தான். நீங்க எல்லாம் பெருந்தன்மையா, கொடை வள்ளலா வாழுங்க. உங்களை
யாரும் தடுக்கலை. ஆனா, இப்படி குருவி சேக்குற மாதிரி சேத்த காசுலதான் உங்களைப்
படிக்கவெச்சி உண்டாக்கி விட்டிருக்கேன். பெத்த பிள்ளைக மேல எனக்குப் பாசம் இல்லாமப்
போயிருந்தா, நீங்க தெருவுலதான் திரிஞ்சிருக்கணும்” என்றார்.
”என்னை ரொம்பப் பேச வெக்காதீங்க. எத்தனை நாள் வீட்ல அரிசி வாங்க காசு இல்லாம பிரகாசம்
சார் வீட்ல போயி அஞ்சு, பத்து கடன் வாங்கிட்டு வரச்சொல்லி அம்மா என்னை அனுப்பிருக்கும்
தெரியுமா? பிரகாசம் சார் மகன் என்கூடப் படிக்கிறவன். அவன் வீட்டு வாசல்ல போயி நிக்கக்
கூச்சமா இருக்கும். 10 ரூபா கடன் கொடுக்குறதுக்கு முன்னால பிரகாசம் சார் கேவலமா
என்னைப் பாப்பார். அந்தக் கடனை எல்லாம் நீங்க ஒண்ணும் அடைக்கலைப்பா. அம்மாதான் வீட்ல ஊதுவத்தி
உருட்டி அடைச்சா. இதுல ‘அடுத்த வீட்ல போயி ஏன்டி கடன் வாங்குற?’னு அம்மாவை எத்தனை நாள்
அடிச்சிருக்கீங்க? அவ இல்லேன்னா, நாங்க எப்பவோ அநாதைகள் ஆகியிருப்போம்பா” என சொன்னேன்.
”ஆமா, நான் வேண்டாதவன்தான். உங்கம்மா அப்படி பிள்ளைக மனசுல விஷத்தை ஊத்திவெச்சிட்டா.
நான் ஒருத்தருக்கும் பிரயோஜனம் இல்லாம வாழ்ந்துட்டேன். அப்படியே செத்தும் போயிட்டா, உங்க
எல்லாருக்கு நிம்மதியா இருக்கும்” என்றார்.
”நிச்சயமா நீங்க செத்துப்போனா, எங்க யாருக்கும் ஒரு சொட்டுக் கண்ணீர் வராது” என்றேன்.
அப்பா அமைதியாகக் கேட்டபடியே சொன்னார்… ”அது எனக்குத் தெரியும். நான் அதுக்காக ஒண்ணும்
கவலைப்படலை. நான் அப்படித்தான். நான் உன் அப்பன். எனக்கு அந்த உரிமை எப்பவும் இருக்கும்.”
ஒற்றை முள்3
”ஏம்ப்பா புரிஞ்சிக்கிடவே மாட்றீங்க?” என்று ஆதங்கமான குரலில் கேட்டேன்.
”நான் யாரு உங்களைப் புரிஞ்சிக் கிடுறதுக்கு? படிச்சிட்டா, பிள்ளைக அப்பனைவிட பெரிய
ஆள் ஆகிட்டதா நினைக்குறீங்க” என்றார்.
”உங்ககூட பேசுறதே வேஸ்ட்ப்பா” என்றேன்.
Chennai Virtual Offices
Business Calls & Mail Handling. Over 2000 Global Location Available

regus.co.in/Virtual_Office_Solution


அப்பா, இசைத்தட்டின் கவரை எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.
அன்றைய பகல் முழுவதும் ஷைலு பயந்துபோயிருந்தாள். நளினிக்கு, அப்பா மீது ஏகப்பட்ட கோபம்.
வார்த்தைக்கு வார்த்தை அவரைத் திட்டிக்கொண்டு இருந்தாள். அப்பா மதிய சாப்பாட்டுக்குக்கூட
கதவைத் திறக்கவில்லை.
இரவு ஒன்பது மணியிருக்கும்போது கதவைத் திறந்து வெளியே வந்தார். தனது லெதர் பையை
எடுத்துக்கொண்டு கிளம்பும்போது நளினியிடம் சொன்னார்…
”ஷைலுகிட்ட குடுத்து இதையும் கிழிச்சிப்போடச் சொல்லு. இனிமே இதைவெச்சி என்ன
செய்யப்போறேன்?” என காலியான இசைத்தட்டின் கவரை நீட்டினார்.
நளினி ரௌத்திரம் வந்தவளைப் போல வாசலில் வைத்து அப்பாவைக் கண்டபடி பேசினாள். அப்பா
அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, இசைத் தட்டின் கவரை வாசற்படியிலேயே
போட்டுவிட்டுக் கிளம்பிப் போனார்.
இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அப்பா உடல்நலமில்லாமல் ஊரில் இறந்துவிட்டதாகத்
தகவல் வந்தது. அப்பாவின் சாவுக்காக பிள்ளைகள் ஒன்றுகூடியபோதும் எல்லோரும் அப்பாவின்
பிடிவாதத்தை, கோபத்தை, முரட்டுத்தனத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்.
அப்பாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வந்திருந்த சலூன் கருப்பையா என்னைத் தனியே
அழைத்துச் சொன்னார்…
”உங்கப்பா ஒரு ரிக்கார்டைக் கொண்டுவந்து கடையில போட்டு, ஆசை ஆசையாக் கேட்பார்.
அற்புதமான இசை. நான்கூட கேட்டிருக்கேன். அதைக் கேட்கும்போது மனசு என்னமோ மாதிரி
ஆகிரும். தொண்டையில வலிக்கும். நம்மை மீறிக்கிட்டு அழுகை வர்ற மாதிரி இருக்கும். பல
நாள் ராத்திரி சலூனை மூடும்போது உங்கப்பா வந்து ரிக்கார்டைக் குடுத்துப் போடச்சொல்லுவார்.
நாங்க ரெண்டே பேர். ஒரு குண்டு பல்பு எரியும். அதுக்குக் கீழே உக்காந்து மாறிமாறி அதே
ரிக்கார்டைப் போட்டுக் கேட்போம். அந்த நேரம் உங்கப்பா முகத்துல அபூர்வமான சாந்தம் இருக்கும்.
அவர் தன்னை மீறி அழுது பார்த்துருக்கேன்.
ஒரு நா, ‘இந்த ரிக்கார்டுல ‘பி.வி.’னு பேர் போட்டிருக்கே, அது யாருய்யா?’னு கேட்டேன்.
‘அது என் பொண்டாட்டி பங்கஜவல்லி. சுருக்கமா ‘பி.வி.’னு போட்டுருக்கா. இந்த ரிக்கார்டு,
எங்களோட முதல் வருஷக் கல்யாண நாளுக்கு அவ கொடுத்த கிஃப்ட். நான் ஒரு முட்டாப் பய. இதோட
அருமை தெரியாம, ‘இதை வாங்குறதுக்கு உனக்கு ஏதுடி காசு? வீட்ல திருடினயா, இல்லே ஊர்
மேயப்போனியா?’னு கேட்டுட்டேன். பதிலுக்கு அவ ஒரு வார்த்தை பதில் பேசல.
அவளுக்கு சின்ன வயசுல இருந்தே பாட்டு கேட்குறதுன்னா ரொம்ப இஷ்டம். அந்த ஆசையில இந்த
எல்பி ரிக்கார்டை எனக்கு வாங்கிக் குடுத்துருக்கா. ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து இசை
கேட்கணும்னு அவளுக்கு ஆசை. ஆனா, நான் அதைப் புரிஞ்சிக்கிடவேயில்லை.

Ashoak P

unread,
Oct 27, 2014, 9:29:08 AM10/27/14
to brailleacl
லண்டனின், ஹீத்ரூ விமான நிலையத்தில், தரையிறங்கிய விமானத்தில் இருந்து
கீழே விழுந்து ஒருவர் பலியானார். லண்டன், ஹீத்ரூ விமான நிலையம் அருகே
உள்ள, மோர்ட் லேக் பகுதியில், போர்ட்மேன் அவென்யூ குடியிருப்பில்,
கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில், நேற்று
முன்தினம் காலை, திடீரென சத்தம் கேட்டது.

அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, 30 வயது மதிக்கத் தக்க நபர்,
காரின் மீது படுகாயங்களுடன் விழுந்து கிடந்தார். இது குறித்து
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு
விரைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து, இந்த வாலிபர்
கீழே விழுந்தது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விமானத்தில்
அவர், கட்டணம் இல்லாமல், திருட்டுத்தனமாக பயணித்ததாக கூறப்படுகிறது.
விமானத்தின் ஒரு பகுதியில் அவர் ஒளிந்து இருந்திருக்கலாம் என்றும்,
போலீசார் தெரிவித்தனர்.
T

Ashoak P

unread,
Oct 27, 2014, 10:50:09 AM10/27/14
to brailleacl
---------- Forwarded message ----------
From: Ashoak P <youth...@gmail.com>
Date: Mon, 27 Oct 2014 18:59:06 +0530
Subject: [Braille Acl]
To: brailleacl <brail...@googlegroups.com>

Dr. S. DIVAKAR

unread,
Oct 27, 2014, 12:24:40 PM10/27/14
to brail...@googlegroups.com
இது எப்படி சாத்தியமோ தெரியலையே!

நன்றி!

கடுங்காற்றும் மழைகாட்டும்,
கடும் நட்பும் பகை காட்டும்

வலைப்பக்க முகவரி: http://kadhirvemban.wordpress.com
அலைபேசி: 9444143645
Skype ID: divakar.sekar2
தனி மின்னஞ்சல்: nagad...@gmail.com

Professor k. kumar

unread,
Oct 28, 2014, 1:01:00 PM10/28/14
to brail...@googlegroups.com
டி.செல்வராஜ் எழுதிய தோல் நாவல்
8
விவரங்கள்
எழுத்தாளர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தாய்ப் பிரிவு: செம்மலர்
பிரிவு: ஜூலை2011
C வெளியிடப்பட்டது: 25 ஜூலை 2011
முற்போக்கு இலக்கிய முகாமின் முகமாகத் திகழ்கிற நாவலாசிரியர் டி.செல்வராஜ், தனது
முதல் நாவலாக ‘மலரும் சருகும்’ தந்தார். இன்றைக்கு வாசிக்கிற வாசகருக்கும் புதிய
அனுவபத்தையும், வசீகரத்தை யும் வழங்கத்தக்க கலைத்தரமிக்க வீர்யமான படைப்பாகும் அது.
தமிழிலக்கியத்தின் முதல் தலித் நாவல் என்ற வரலாற்றுச் சிறப்பு, கல்வெட்டு ஓவியத்தைப்போல
நிலைத்த பேருண்மை.
தேநீர், மூலதனம், அக்கினிக் குண்டம், ஜீவா என்ற படைப் பிலக்கிய நூல்கள் வழியாக பயணப்பட்ட
படைப்பாளி, இப்போது தோல் என்ற 695 பக்க நாவலாக வெளிப்பட் டிருக்கிறார்.
நாவலுக்கு ஆழமும் அடர்த் தியுமான விரிவுமிக்க ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். வர்க்க
அரசியல் போராட்டத் தில் முழுமையாக தீவிரப்பட்ட கம்யூனிஸ இயக்கம், சாதிய எதிர்ப்பு
உள்ளிட்ட சமூக நீதிக் கான அரசியல் போராட்டம் நடத்தாமல் விலகி நின்று
துரோகமிழைத்திருக்கின்றது என்று உள்நோக்கத்துடன் இலக் கிய அறிவு ஜீவிகளால் கூறப் பட்டு
வருகிற அவதூறுக் கான ஆற்றல் மிகு - நேர்மைமிகு பதி லுரையாக அமைந்திருக்கிறது, அந்த
முன்னுரை.
கதையின் களங்கள் முற்றி லும் தனித்துவமிக்கது. தோல் ஷாப் என்னும் கொதிக்கும் சுண்ணாம்புக்
குழிக்குள் தோல் களை முக்கி நனைத்தெடுக்கிற மனிதர்கள். கொதிக்கும் சுண்ணாம்புக்குள் வெந்து
மடிய வேண்டிய கொடூரமான பணி கள். மூட்டை கட்டி புழுக்கமான தோல்களின் நாற்றம். அதில்
இணுக்குகளாகத் தொங்குகிற சதைத்துளிகளின் நெடி. உதிர்ந்து மலையெனக் குவிந்துகிடக்கும்.
ரோமங்களை கூட்டியள்ளி ஒதுக்குகிற பெண்கள். மணிக் கணக்கோ-இரவு பகல் கணக் கோ
பார்க்காமல்கொத்தடிமைக் கூலிகளாக உழைக்கிற பணியாட் கள். நோய்களும் சாவுகளும் மலிந்த தோல்
பதனிடும் தொழிற்சாலைகள். ஆயிரத்துக் கும் ஐநூறுக்கும் பாண்டுப் பத்தி ரத்தில் கைநாட்டு
போட்டு விட்டு, தங்கள் உடலையும் உரிமைகளையும் தாரை வார்த்து விட்டு, எல்லாவிதக் கொடுமை
களுக்கும் உடன்பட்டவர்கள். கொத்தடிமைகளாக மிதியுண்டு, எல்லா வகைச் சுரண்டல் களுக் கும்
மௌனமாகப் பலி யாகின்ற வர்கள்.
இவையெல்லாம் விவரணை விவரிப்புகளாக வரவில்லை. எழுத்தோவியமாக நிகழ்த்தப் படுகிற சம்பவச்
சித்தரிப்புகளின் களங்களாகவும், பின்புலங்களா வும் வருகின்றன.
தோல் ஷாப்பில் சகலரின் பிரியத்துக்கும் உரிய - நேற்று சடங்கான அழகான இளமஞ்சள் குமரி
சின்னக்கிளி. அவளை தோல்ஷாப் மேற்பார்வை யாளன் முஸ்தபா, மிருகத்தன மாகவும் மூர்க்கமாகவும்
பகிரங் கமாக சீரழித்து சிதைத்துக் குதறி யெடுக்கிறான். கதறிக் கதறி மரணமடைகிற
சின்னக்கிளிக் காக எல்லோரும் இரக்கப்பட்டு கலங்கினாலும், தடுக்க முன்வரத் தைரியமில்லை.
அடிமைகளில் ஒருவனான ஓசேப்பு பயச் சுமை யை உதறியெறிந்து விட்டு ஆவே சத்தில்
முஸ்தபாவை அடித்துச் சாய்க்கிறான்.
சின்னக்கிளியின் இசைவோடு தன்னைத் திறந்து கொள்கிற நாவல், நம்மை விரல் பற்றி தோழமையுடன்
ஒரு நீள் பயணத் தில் அழைத்துச் செல்கிறது.
உடல் கிழிந்து மரணமடைந்த சின்னக்கிளியைப் பார்த்து காலனியே கதறியழுகிறது. எரிப்
பதற்காகக் கண்ணீரும் கம்பலை யுமாக சுடுகாட்டுக்குக் கொண்டு போக விடாமல், பாதையை மறிக்கிறது!
ஊர்ச்சாதியினர். கம்புக்கத்தியு மாக நிற்கிற அவர்கள். சேரி மக்களின் உரிமைக்காக வாதாடு
கிற சுந்தரேச அய்யர், தமது இளம் வக்கீல் மகன் சங்கரனை அனுப்ப... சேரிப் பெண் பிணத்தைத்
தூக்குவதற்கு ஒரு பிராமணன் போனதால் ஆசாரமே கெட்டு விட்டதாக முறுக்கித் திமிறுகிற
சனாதனி கள். சனாதனத் தடை தாண்டி, சப் கலெக்டர் ஆதரவுடன் பாடை யைத் தொட்டுத் தூக்குகிற
சங்கரன். உயர்சாதியினரான தாசில்தார், போலீஸார் எல் லாம் பொறுமுகின்றனர்.
நாவலின் துவக்கமே வர்க்கச் சுரண்டலும், சாதிய ஆதிக்கமும் இரண்டறப் பின்னிப் பிணைந்து
கிடக்கிற சமூகச் சித்தரிப்புடன் துவங்குகிறது.
நாவலின் பிரதானம் எது? தொழிற்சாலைகளின் வளர்ச்சி வரலாறா? தொழிலாளர்களின் மனமும்,
செயல்பாடும் இயங்கு திசையின் வரலாறா? தொழிற் சங்க இயக்க வரலாறா? சுதந்திரப் போராட்ட
வரலாறா? அனைத்துச்சாதி முதலாளிகளும் ஒன்றிணைந்து, காவல்துறையை ஏவல் துறையாக்குகிற
வரலா றா? இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது தொழிற் சங்க அரசியலின் செயல்பாட்டு தனித்
துவ வரலாறா? தோல் ஷாப் முதலாளிகளும் பிற செல்வந்தர் களும் தாறுமாறாக ஊதிப் பெருத்த
வரலாறா? கம்யூனிஸ இயக்கம் சேரியிலும் ஷாப்களி லும் அரும்பி மலர்வுற்ற வரலா றா?
அடிமைப் பட்டுக் கிடந்த மக்கள் ஆர்ப்பரித்து, அமைப் பாக திரளுகிறபோது, நகரையே
மாற்றியமைக்கிற ஆற்றல் பெறு கிற சமூக வர்க்க அரசியல் வரலா றா? சாதி கடந்த காதல்களின்
வரலாறா? பாண்டிச்சேரிப் பறையர்களுக்கும் பாண்டி நாட்டுப் பறையர்களுக்குமான உள்
முரண்பாட்டு வரலாறா? பறைச் சாதித் தொழிலாளி களுக்கும், அருந்ததித் தொழி லாளிகளுக்கு
மிடையிலான பேத உணர்ச்சியும், ஒற்றுமை உணர்வுமான வரலாறா?
இவற்றில் எதிலிருந்தும் எதை யும் பிரித்தெடுத்துவிட முடியாத அளவுக்கு ஒன்றுக்குள்
ஒன்றாக உள்பிணைப்புற்று பின்னிக் கிடக் கிற சகல கேள்விகளின் சங்கம வரலாறே இந்த நாவல்.
நாவலில் ஓர் இதிகாசப் பண்பு இருக்கிறது. ஒரு குறிப் பிட்ட நகரத்தின் ஒரு குறிப்பிட்ட
காலப்பகுதியின் வாழ்க்கையை யும், மனிதர்களையும், நிகழ்வு களையும், உள் முரண்பாட்டு வளர்
நிலையையும் காட்சிப் படுத்தி உணர்த்திக் கொண்டே பயணப்படுகிற நாவல், முஸ்த பாவை அடித்துச்
சாய்க்கிற ஓசேப்பு என்ற அடிமை, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பித்தோட முயன்று, முடியா
மல் முதலாளிகளின் அடியாள் கழுவத்தேவனிடம் சிக்கிக் கொண்டு, சித்திரவதைப் படு கிறான்.
உடல் கிழிபடுகிற அந்த ஓசேப்பு இடையில் எப்படி யெப்படியோ மாற்றம் பெற்று, இறுதியில்
என்னவாக பரிணமிக் கிறான் என்பது சமூகவியல் அரசி யலின் பேராச்சரியம்.
சனாதனத் தடை தாண்டுகிற இளம் வக்கீல் சங்கரனின் மனத்துணிவையும் உயர் மானுடப் பண்பையும்
கண்டு உடன் வந்து, பின் தொடர்கிற வேலாயுதம் பின்னாளில் என்ன வாக பரிணமிக்கிறார் என்பது
வும் பேராச்சரியமான அதிசயம்.
சங்கரனைக் கொல்ல வந்த சந்தனத்தேவன் மன உலகம். அகவாழ்வின் உள் அவமானம். நம்பிக்கிடக்கிற
தாயின் அவல ஓலம். தொழிற்சங்கத்தின்- மக்க ளின் காவல் தெய்வமாக உயர் கிற சந்தனத்தேவன். இம்
மாதிரி பரிணாமம் கொண் டெழுகிற சாகாத பாத்திரங்கள் நாவல் நெடுகிலும் உயிர் வாழ்கின்ற
னர். இதுவும் இதிகாசக் கூறு தான். நாதியற்ற தாயம்மா... ஆசீர்வாதத்துக்கு நாதியாகி,
ஓசேப்பின் வளர்ப்புத் தாயாகிற வளர்நிலை. கந்துவட்டிக்கார னால், நடுத்தெருவில் அம்மண
மாக்கப்படுகிற வீராயியின் அவலம், அவளே பின்னாளில் ஒரு போர்ப் படைக்கே தலை மை தாங்குகிற
வீராங்கனை யாகிற பரிணமிப்பு, ஒரு நாயக்க ருக்கு வைப்பாட்டியாக வாழ் கிற மானமிகு
சிட்டம்மா, முஸ் தாபாவைக் கொன்று தீர்க்கிற தீரமும், நாயக்கரையும் காவலதி காரியையும்
மீறிக் கொண்டு தானே கொன்றதாக நீதிமன்றத் தில் உண்மை பேசி, தொழிற் சங்க நல்லவர்களைக்
காப்பாற்று கிற நேர்மை.
பார்த்த பெண்களையெல் லாம் சூறையாடிச் சுவைப்பதில் வெற்றி பெறுகிற முஸ்தபாவை அடித்துச்
சாய்த்து, அவமானப் படுத்தித் தோற்கடிக்கிற மான மிகு வீரப்பெண் மாடத்தி...
ஒசேப்புக்கும், அருக்காணிக் கும் இடையில் பூக்கிற காதல் - அவர்கள் இருவருக்கும் லபிக் கும்
வாழ்க்கை - அதையும் பாண்டிச்சேரி பறையர், பாண்டியப் பறையர் என்ற பேதத்தையும் தாண்டி உயிர்
பெறுகிற தாம்பத்யமும் காத லும் தனித்துவ உயிர்ச் சிற்பம். பொட்டுக் கட்டி, தாசி குலமான
வடிவாம்பாளுக்கும், தோழர் சங்கரனுக்குமிடையில் பூக்கிற அறிவார்ந்த காதலும், அவற் றுக்கு
நேர்கிற சனாதனத் தடை களும், அதைக் கடந்து ஜீவத் துடிப்புடன் நிஜமாகிற திரு மணம் தனிச்
சிறப்பான கல் லெழுத்துக் காவியம். பிராமணச் சனாதனியான அம்புஜத்தம் மாளின் மன மாற்றம்
மிகுந்த இயல்புத் தன்மையுடன் இருக் கிறது.
பரமசிவ அய்யர் ஒத்துழைப் புடன் சுந்தரேச அய்யர் வால்மீகி ராமாயணம் உள்ளிட்டு பிற மொழி
ராமாயணங்களை யும் உள்வாங்கி, அலசி ஆய்ந்து, ஆங்கிலத்தில் எழுதப்படுகிற ஆராய்ச்சி நூல்கூட
ஒரு பாத்திர மாகிறது. ராமபக்தரை மாற்று கிறது. ராமாயணம் குறித்த புதிய கோணம்
தருகிறது.
‘வர்ஷிக்கிற’-’திரஸ்கரிக்கிற’ போன்ற பழமையாகிவிட்ட சொற்பிரயோகங்களைத் தவிர்த்திருக்கலாம்.
இந்நாவல், இந்தக் காலத் தில் முக்கியத்துவம் பெறுகிறது. மார்க்ஸிய இயக்கம் மீதான
அவதூறுகளுக்குப் பதில் சொல்கிறது.
அழகாக அச்சிட்டு அழகாக வடிவமைத்த என்.சி.பி.எச். பதிப்பகம், அட்டைப்பட ஓவி யம் தந்த
ஸ்ரீரசா பாராட்டத்தக்க வர்கள். இயக்கத்தின் இதயமாக நின்று துடிக்கிற இந்த நாவலைப் படைத்ததன்
மூலம், டி.செல் வராஜ், சோசலிச யதார்த்தவாத மார்க்ஸீய அழகியல் கோட்பாட்டின் உறுதி
வாய்ந்த-தெளிவு மிக்க முன்னோடிப் படைப்பாளி என்று நிரூபித்திருக்கிறார்.
- மேலாண்மை பொன்னுச்சாமி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-600098
பக்கங்கள்: 695, விலை - ரூ 375

Professor k. kumar

unread,
Oct 28, 2014, 1:07:09 PM10/28/14
to brail...@googlegroups.com
தலித்துகளும் மற்ற மக்களும் இணைந்து...
8
விவரங்கள்
எழுத்தாளர்: அ.குமரேசன்
தாய்ப் பிரிவு: செம்மலர்
பிரிவு: டிசம்பர்2010
C வெளியிடப்பட்டது: 23 டிசம்பர் 2010
டி.செல்வராஜ் எழுதிய ‘தோல்’ நாவல் வெளியீட்டு விழா
எல்லாப் புத்தகங்களோடு இதுவும் ஒரு புத்தகமல்ல; எல்லா நாவல்களோடு இதுவும் ஒரு நாவலல்ல.
இதைப் படித்தால் வரலாறு புரியும், புதிய வரலாறு படைக்கிற பாதை புலப்படும். தணியாத
இலக்கியப் படைப் பார்வம், மக்கள் மீது நேசம், அவர்களுக்காகப் பணியாற்றும் தோழமை, வரலாற்று
அறிவு, அரசியல் தெளிவு இவற்றோடு ‘தோல்’ நாவலைப் படைத்தளித்திருக்கிறார் தமுஎகச
அமைப்பை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவரான டி. செல்வராஜ்.
கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து ஆண்டுகளாக இவரிடமிருந்து புதிய படைப்பு எதுவும்
வரவில்லையே என்ற கேள்வி பலருக்கு இருந்திருக்கக்கூடும். காந்திகிராம கிராமியப்
பல்கலைக்கழகப் பேராசிரியர் பா. ஆனந்த குமார் கூறியது போல், “கால்நூற்றாண்டு கால
எழுத்து தவத்தில், அடைகாத்துப் பிரசவமாகியிருக்கிறது” இந்த நாவல். கடந்த நவம்பர் 13
அன்று சென்னையில், தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், பங்கேற்றவர்களின் தோலில் உணர்ச்சித்
துடிப்பை ஏற்படுத்துவதாக நடந்தது ‘தோல்’ வெளியீடு. அதில் வரவேற்றுப் பேசியதோடு
நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கவும் செய்தார் ஆனந்தகுமார்.
தோல் பதனிடும் தொழிலோடு இணைந்த தலித் மக்களின் வாழ்க்கை, அவர்ளைக் கசக்கிப் பிழிந்த
முதலாளி களின் அரசியல், தட்டிக் கேட்கப் புறப்பட்ட செங்கொடி இயக்கத்தின் தத்துவம் என
திண்டுக்கல் வட்டாரம் சார்ந்து எழுதப்பட்டிருந்தாலும் தமிழக உழைக்கும் வர்க்க இயக்க
வரலாற்றின் ஒரு கூறாகவே இந்த நாவல் உருவாகியிருக்கிறது. இந்த 600 பக்கப் புத்தகத்தைத்
தயாரித்து வெளியிட்டிருப்பது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம். அதன் இயக்குநரும் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவருமான ஆர். நல்லகண்ணு புத்தகத்தை
வெளியிட, முதல் படியைப் பெற்றுக்கொண்டவர் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)
பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான அ.
சவுந்தரராசன். இலக்கியத்தில் மட்டுமல்ல, இந்திய சமுதாயத்திலும் வர்க்கம், வர்ணம் ஆகிய
நுட்பமான சிக்கல்களை மார்க்சிய இயக்கத்தினர் எவ்வளவு தெளிவாகவும் கூர்மையாகவும் ஆழ்ந்த
ஈடுபாட்டோடும் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதன் வெளியீடாகவும் அமைந்தது நிகழ்ச்சி.
தலைமை தாங்கிய வழக்கறிஞர், தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன்,
இந்த உறவின் முற்காலத் தொடக்கம் ஒன்றை வெளிப்படுத்தினார். “சென்னையில் அக்காலத்தில்
தி.க.சிவசங்கரன் தங்கியிருந்த அறையில்தான் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். அவர் சிபிஐ,
செல்வராஜ் சிபிஎம். இருவரையும் பார்க்க வருகிறவர்களோ சிபிஐ-எம்எல் கட்சியைச்
சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அப்போது நான் மக்கள் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி
நடத்திக்கொண்டிருந்தேன். அதன் பணிகளுக்கு எவ்வித தயக்கமும் இல்லா மல் ஆலோசனைகளை
வழங்கியவர்களாக, வெளியே தெரியாத தூண்களாகச் செயல்பட்டார்கள் தி.க.சி., டி.செல்வராஜ்
இருவரும்,” என்றார் அவர்.
படைப்பாளியின் களப்போரை விவரித்த செந்தில்நாதன், “பல தலித்திய எழுத்துகள் மனித நேயக்
கண்ணோட்டத்துடன் வருகின்றன என்பது உண்மை. சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித் மக்களை
வர்க்க உணர்வு பெற்ற போராளிகளாகவும் மாற்றுவதில் செல்வராஜ் வெற்றிபெற்றிருக்கிறார்.
வர்க்கப்போராட்டத்துடன் இணைந்ததே தலித் விடுதலைப் போராட்டம் என்று இவர் சொன்னதை அன்று
அவர்கள் ஏற்கவில்லை. இந்தப் போராட்டங்கள் இணையாவிட்டால் சோர்வும் விரக்தியுமே மிஞ்சும்.
அடங்க மறு, அத்துமீறு என்றெல்லாம் வீர முழக்கமிட்டவர்கள் இறுதியில் எப்படி வர்க்க சமரசத்தில்
போய் முடிந்தார்கள் என்பதைப் பார்க்கவே செய்கி றோம். செல்வராஜின் சிந்தனையிலும் எழுத்திலும்
அப்படிப்பட்ட சமரசங்கள் எதுவும் கிடையாது. ஒரு நாவல், தொழிற்சங்க இயக்க வரலாறு,
பொதுவுடைமை இயக்க வரலாறு மூன்றும் பின்னிப் பிணைந்த முக்கனி இந்தப் புத்தகம்,” என்றார்.
தமிழ் நாவல் படைப்பில் ஒரு புதிய போக்கை உருவாக்கியவர்களில் ஒருவரான செல்வராஜ்,
சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லையோ என்ற ஆதங்கம் தமக்கு இருப்பதையும் பதிவு செய்த
செந்தில்நாதன், “படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே அங்கீகரிக்கிற பண்பு வளர வேண்டும்,”
என்று கூறியது, அவரவர் குழுக் களாகப் பிரிந்து நிற்பவர்களுக்கும் விடுக்கப்பட்ட
வேண்டுகோளாகவும் ஒலித்தது.
“படைப்பின் வெற்றி அது எந்த மக்களின் பக்கம் நின்று வாதாடுகிறது என்பதைப் பொறுத்தே
இருக்கிறது,” என்றார் கருத்துரை வழங்கிய கவிஞர் இரா.தெ. முத்து. தமுஎகச மாநிலப்
பொருளாளருமான அவர், “யதார்த்தவாத இலக்கியம் காலாவதியாகிவிட்டது, சோசலிச யதார்த்த
வாதம் முடிந்துவிட்டது என்று பேசியவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
மனிதரின் வாழ்க்கைப் போராட்டம் தொடர்கிற வரையில் அதை வெளிப்படுத்துகிற சோசலிச
யதார்த்தவாதம் தொடரும்” என்றார்.
தலித் இயக்கத் தலைவர்களின் நிலை வருத்தம் தருகிறது என்று கூறியவர், “கக்கனுக்கு மாநில
அளவில் விழா எடுக்க காங்கிரஸ் கட்சி தயாராக இல்லையே,” என்ற அரசியல் விமர்சனத்தையும்
முன்வைத்தார். அரசியலை இலக்கியமாக்குவதில் ‘தோல்’ பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது
என்றும் குறிப்பிட்டார்.
“இதற்கு ‘தோல்’ என்று பெயரிட்டிருப்பதை விட, முற்போக்கு இலக்கியத்துக்கும் சமுதாயப்
போராட்ட இயக்கத்திற்கும் தோள் கொடுத்திருக்கிற படைப்புக்கு ‘தோள்’ என்றே தலைப்புக்
கொடுத்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றியது.” -புத்தகத்தில் மூழ்கி எழுந்து வந்த உணர்வை
இப்படி வெளிப்படுத்தினார் தொலைக்காட்சி அரசியல் விமர்சகர் திரு. வீரபாண்டியன்.
“எழுதிக்கொண்டே இருக்கிறாரே, இவர் வழக்கறிஞர் தொழிலைச் செய்கிறாரா இல்லையா என்று நான்
நினைத்துக்கொள்வது உண்டு. நாவலைப் படிக்கப்படிக்க, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீதிக்களத்தில்
மட்டுமல்ல படைப்புக் களத்திலும் வாதாடுகிற வழக்கறிஞர்தான் இவர் என்பது தெளிவானது,”
என்றார் அவர். வழக்கறிஞரைப் பற்றிப் பேசியதால், தனது இந்த முடிவுக்கான ஆதாரம் ஒன்றையும்
மன்றத்தில் முன்வைத்தார்: “ஒரு தலித் பெண் தொழிலாளி, ஏசுநாதர் படத்தைப் பார்க்கிறாள்.
உடலெல் லாம் சாட்டையடித் தழும்போடும் ரத்தத்தோடும் சிலுவை யில் தொங்குகிறவரைப் பார்க்கிற
அவள், ‘ஏசுவும் பறப்பயலா இருந்திருப்பாரோ, இப்படி அடிவாங்கி யிருக்காரே’ என்று
எண்ணுவதாக நாவலில் வருகிறது.”
அ. சவுந்தரராசன் தமது வாழ்த்துரையில், “அன்னா கரீனா, போரும் அமைதியும் போல தமிழ் நாவல்
உலகில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தப்போகிற படைப்பு,” என்று கூறினார். அது வெறும்
சம்பிரதாயப் பாராட்டு அல்ல என்பதற்குச் சான்றாக, நாவலில் வருகிற பல முக்கிய
கதாபாத்திரங்களையும் அவற்றின் அனுபவங்களையும் எடுத்துக்காட்டினார். “நூற்றுக்கணக்கான
கதாபாத்திரங் கள் வருகின்றன. யாரையுமே மறக்க முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு
கதாபாத்திரத்தின் வாழ்க்கையையும் மனநிலையையும் நுட்பமாக உணர்த்தியிருக்கிறார் செல்வராஜ்.”
ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்கிறது அரசு. அந்த ராஜராஜ சோழன் பலி கொடுப்பதற்காக
ஆயிரம் பஞ்சமர்களை விரட்டி வேட்டையாடிய வரலாறும் புத்தகத் தில் பதிவாகியிருக்கிறது.
விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை என ஒரு பகுதியினருக்கு முத்திரையிடப் பட்ட
வரலாறு, தலித் வரலாறு, தொழிற்சங்க இயக்க வரலாறு, மார்க்சிய இயக்க வரலாறு என ஒரு
பரிணாமத் தொடர்ச்சியோடு முழுமையானதொரு வரலாற்றுப் பதிவாகவும் ‘தோல்’ சிலிர்க்கச்
சொன்னார் சவுந்தரராசன்.
“திண்டுக்கல்லில் அன்று தோல் தொழிலாளர் கள் தொழிற்சங்க உரிமைக் காகப் போராடினார்கள்.
இன்று, சிறப்புப் பொருளா தார மண்டலங்களில் பன்னாட்டு நிறுவனங் களின் தொழிலாளர்கள் அதே
போராட்டத்தை நடத்திக் கொண்டிருக் கிறார்கள்,” என்றார் அவர். இப்படிப்பட்ட நாவலைப் படிக்கிற
இன்றைய இளம் தொழிலாளர்கள் அன்றைய போராட்ட வரலாற்றிலிருந்து நம்பிக்கையும் சரியான
வழிகாட்டலையும் பெறுவார்கள் என்பதை சொல்லாமலே உணர்த்துவது போலிருந்தது இந்தப் பதிவு.
தொழிற்சங்கத் தலைவர் என்பதால், தொழிற்சங்க இயக்கம் பற்றி எழுதியிருப்பதாலேயே
பாராட்டுகிறாரோ என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால், இலக்கிய நேர்மைக்கான புரிதலோடு
அவர் இப்படிச்சொன்னார்: “தொழிற்சங்க இயக்கம் பற்றி கதை எழுதுகிறபோது செயற்கையான வில்லன்,
காக்க வந்த கர்த்தனாக கதாநாயகன் என்றெல்லாம் ஒரு செயற்கைத்தனம் வந்துவிடும். இதில் ஒவ்வொரு
மனிதரின் பரிணாம வளர்ச்சி வெகு இயல்பாக, உண்மையாக இருக்கிறது.”
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு “கெட்டவார்த்தைகள்” ஒரு ஆயுதமாகப்
பயன்படுவதை நாவல் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டது, சமுதாயம் பற்றிய
உள்வாங்கலாகவும் இருந்தது.
வீரபாண்டியன் பேசியபோது, “கதையில் வருகிற வேலாயுதம் என்ற தொழிலாளர் தலைவர்
கைதுசெய்யப் படுகிறார், அவருக்குக் கைவிலங்கு போடப்படுகிறது. இப் போது, சவுந்தரராசன்
கைது செய்யப்பட்டபோது அவருக்கு விலங்கு போடப்பட்டதா இல்லையா என்பதே சர்ச்சை
யாகியிருக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்,” என்று
‘இழுத்துவிட்டிருந்தார்’. அதற்கு இப்படி பதிலளித்தார் சிஐடியு பொதுச்செயலாளர்: “தொழி
லாளிகளைப் போராடத் தூண்டியதற்காக வேலாயுதம் கைது செய்யப்பட்டு கையில் விலங்குடனும்
காலில் சங்கிலியுடனும் கொண்டுசெல்லப்படுகிறான். நீதிமன்றத் திற்குள் நுழைவதற்கு முன்
அவற்றை அகற்ற முயல் கிறார்கள் காவலர்கள். அவனோ கழற்ற விடமாட்டேன் என்று பிடிவாதமாக
மறுக்கிறான். விலங்குடனேயே அவனை நீதிமன்றத்தில் காவலர்கள் நிறுத்த, “வாட் இஸ் திஸ்
நான்சென்ஸ்” என்று அவர்களைப் பார்த்துக் கடுமை யாகக் கேட்கிறார் நீதிபதி. இந்த நாவலை நான்
முதலிலேயே படித்திருந்தால், எனக்கு விலங்கு போடப்பட்ட பிரச்சனையை வேறுமாதிரியாகத்
தீர்த்திருப்பேன்.” அப் போது எழுந்த சிரிப்பும் கைதட்டல் ஒலியும் குளிரரங்கச் சுவரைத்
தாண்டி அண்ணாசாலையில் கேட்டிருக்கும்.
நாவலில் கற்பனைப் பெயர்களோடு வருகிற பல உண்மை மனிதர்களோடு தாம் நெருங்கிப்
பழகியிருப்பது பற்றிய சிந்தனையில் மூழ்கினார் நல்லகண்ணு. முதன் முதலாக சிறை சென்ற
கம்யூனிஸ்ட் பெண் அக்னிஸ் மேரி உள்ளிட்டவர்கள் நாவலில் நடமாடுவதை நெகிழ்ச்சியோடு
குறிப்பிட்டார்.
“தத்துவார்த்த அரசியல் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் படைப்பாக
பதிலளித்திருக்கிற பாங்கு சிறப்பானது. வர்க்கப் போராட்டம் என்பது முடிவெடுத்து
நடப்பதல்ல. ஆளும் வர்க்கத்தினரின் கொடுமைகளை இனியும் பொறுக்க முடியாது என உழைக்கும்
மக்கள் கொந்தளிப்பதில் தொடங்கி, படிப்படியாகவே வர்க்க உணர்வு வளரும். இந்தப் பரிணாம
வளர்ச்சியை அற்புத மான இலக்கிய நடையில் கதையாகச் சொல்கிறது புத்தகம். சங்கமாகச்
சேர்ந்தபோது தலித் பெண்களுக்கு முதலில் ஏற்பட்ட உணர்வு, இனி முதலாளியின் ஆட்கள் அடிக்க
மாட்டார்கள், பெண்களைச் சூறையாட மாட்டார்கள் என்பதுதான். பெண் விடுதலையை இணைத்துக்கொண்டே
வருவதுதான் கம்யூனிஸ்ட் இயக்கம்,” என்று அங்கே ஒரு சமூகவியல் பாடமே நடத்தினார் நல்லகண்ணு.
“கற்பு பற்றி அடிக்கடி பேசப்படுவதுண்டு. இதில், ஒரு தொழிற்சங்கத் தலைவனைக்
காவலர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகத் தனது பாயிலேயே படுக்கவைக் கிறாள் ஒரு பெண்
தொழிலாளி. காவலர்கள் கேட்கிறபோது, அவன் தன் கணவன் என்று தயங்காமல் சொல்கிறாள்.
அப்பழுக்கற்ற பாலினத் தோழமை உறவு உழைக்கும் வர்க்க இயக்கத்தில்தான் சாத்தியம்,” என்று அவர்
கூறியதும் அப்படியொரு பாடமாகவே இருந்தது.
“அரிசனப் பிரச்சனை, அக்ரஹாரப் பிரச்சனை, ஆணாதிக்கப் பிரச்சனை, பெண்விடுதலைப் பிரச்சனை,
இந்து-முஸ்லிம்-கிறிஸ்துவப் பிரச்சனை என்று சமுதாயத் தில் முட்டிக்கொண்டிருக்கிற
முரண்பாடுகளையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் இந்தத் தோல் உணர்ச்சி யோடு
இருக்கிறது,” என்று தேர்ந்த இலக்கிய-சமூக-அரசியல் ஆய்வாளராகச் சொன்னார் அவர்,
“சமுதாய யதார்த் தத்தை எழுதுவது அதை மாற்றுவது எப்படி என்பதற் காகத்தான்,” என்று தம்
ஏற்புரையைத் தொடங் கினார் படைப்பாளி. சுத்த இலக்கியவாதிகளின் புறக்கணிப்புகள் பற்றிய
கவலை கொஞ்சமும் இல்லாதவராக, “வர்க்க உணர்வூட்டுவது முக்கி யம். என்னைப் பொறுத்த வரையில்
ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காகப் போராட வேண்டும் என்பதற் காகவே வழக்கறிஞராகக் கறுப்பு
அங்கி அணியத் தொடங்கினேன். இலக்கியத்திலும் அதையே செய்கிறேன்,” என்றார்.
“அங்கீகாரங்கள் பற்றி நான் கொஞ்சமும் கவலைப் படவில்லை. அங்கீகாரத்திற்காக நான் சங்கர
மடங்களின் காலில் விழத் தயாராக இல்லை,” என்று அவர் சொன்ன போது அப்படிக் காலில்
விழத்தயாராக இருப்போர் பற்றிய எண்ணம் ஏற்படவே செய்ததது.
“தொழிலாளி வர்க்கத்திற்கு விடுதலை கிடைக்கிற போதுதான் சமுதாயத்துக்கு முழு விடுதலை
கிடைக்கும். இந்தச் செய்தியின் பிரதிநிதிகளாகவே இந்த நாவலில் சங்கரன், வடிவாம்பாள்
கதாபாத்திரங்கள் வருகின்றன,” என்று தன் படைப்பு பற்றிய ஒரு திறனாய்வையும் முன் வைத்தார்
செல்வராஜ்.
“முன்பு என் நாவலில் ஒரு தலித் சாதியைப் பெயர் குறிப்பிட்டு எழுதியபோது அதற்கு
எதிர்ப்புத் தெரிவித்தார்கள். சாதி இழிவு இங்கே இருக்கிறவரையில் சாதியைப் பெயர்
சொல்லித்தான் எழுதுவேன் என்று நான் சொன்னேன். இன்றைக்கு அவர்களே தங்களுடைய சாதிப்பெயரை
இலக்கியத்தில் மட்டுமல்லாமல் சமூகப் போராட்டத்திலும் குறிப்பிடுகிற நிலை வந்திருக்கிறது.
ஆனால் அவர்கள் அவலங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறார்கள். தலித்துகள் மற்ற மக்களோடு
இணைந்து போராடியாக வேண்டும். மற்றவர்களும் தலித்துகளோடு இணைந்து போராடியாக வேண்டும்.
வீரமும் தன்மானமும் கொண்ட, வர்க்க உணர்வோடு சமுதாயத்தை வழிநடத்துகிறவர்களாக தலித்
தொழிலாளிகளை சித்தரித்திருக்கிறேன்.” நாவலாசிரியர் இப்படிக் கூறியதன் மூலம் ஒரு
ஆரோக்கியமான, அவசியமான வர்க்க-வர்ண-இலக்கிய விவாதத்திற்கு வழிவகுத்திருப்பதாகவே
எனக்குப் பட்டது.
வாழ்த்துரை வழங்கிய தமுஎகச தென் சென்னை மாவட்டச் செயலாளர் கி. அன்பரசன், வட சென்னை
மாவட்டச் செயலாளர் நா.வே. அருள், நன்றி நவின்ற புத்தக நிறுவன செயல் இயக்குநர் ஜி.
துரைராஜ், நிகழ்ச்சி முடிந்த பின்னும் நெடுநேரம் படைப்பாளியோடு கைகுலுக்கிப்
பேசிக்கொண்டிருந்த பார்வையாளர்கள் அனைவரது சொற் களிலும் இதே போன்ற சிந்தனை வெளிப்பட்டது.

Professor k. kumar

unread,
Oct 28, 2014, 1:12:27 PM10/28/14
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
நேர்காணல்: விருது கிடைக்கும் என்று நினைக்கவில்லை!
Author: ந.ஜீவா
•First Published: Apr 22, 2012 12:00 AM
•Last Updated: Sep 20, 2012 4:16 AM
தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர் டி.செல்வராஜ். அவருடைய "மலரும்
சருகும்', "தேநீர்' நாவல்கள் வாசகர் மனதில் என்றும் கமழ்பவை. "தேநீர்' நல்ல திரைப்பட
முயற்சி. அண்மையில் அவர் எழுதிய "தோல்' நாவல
தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர் டி.செல்வராஜ். அவருடைய "மலரும்
சருகும்', "தேநீர்' நாவல்கள் வாசகர் மனதில் என்றும் கமழ்பவை. "தேநீர்' நல்ல திரைப்பட
முயற்சி. அண்மையில் அவர் எழுதிய "தோல்' நாவலுக்குத் தமிழக அரசின் விருது
கிடைத்துள்ளது. மனித வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைக் கலையழகுடன் சித்திரிக்கும்
படைப்பாளியான அவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் கூட. தமிழக அரசின் விருது
பெறுவதற்காகச் சென்னைக்கு வந்திருந்த
அவரிடம் பேசியதிலிருந்து...
நான் தமிழில் எழுதுவேன் என்று என் சிறு வயதில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஏனென்றால்
நான் பள்ளியில் படிக்கும்போது முழுக்க முழுக்க ஆங்கிலக் கல்வி. தேவிகுளம் பீர்மேடு
பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் என் தாத்தா, அப்பா, சித்தப்பா எல்லாரும் கங்காணிகள்.
இப்போது கண்ணன் தேவன் டீ என்ற பெயரில் உள்ள எஸ்டேட் அப்போது ஜேம்ஸ் ஃபின்லே என்ற பெயரில்
இருந்தது. டீ எஸ்டேட்டை நடத்திய வெள்ளைக்காரன் எஸ்டேட்டில் வேலை செய்த ஸ்டாப்களின்,
கங்காணிகளின் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் நடத்தினான். அதில் ஆங்கிலத்தில்தான் எல்லாப் படிப்பும்.
கல்லூரியில் படிப்பதற்காக திருநெல்வேலி இந்துக் கல்லூரிக்கு வந்தேன். கல்லூரியில் அப்போது
பிரின்ஸ்பாலாக இருந்தவர் அலெக்ஸôண்டர் ஞானமுத்து. ஷேக்ஸ்பியர் இலக்கியங்களில் கரை கண்டவர்.
அவர் எனக்கு ஆங்கில இலக்கியங்களை அறிமுகப்படுத்தினார். நானே விரும்பி பிரெஞ்சு
இலக்கியத்தில் மாபாசானைப் படிக்கத் தொடங்கினேன். அப்போது திருநெல்வேலியில் எனக்கு
தி.க.சி., என்.வானமாமலை, சிதம்பர ரகுநாதன் போன்றவர்கள் பழக்கமானார்கள். அவர்கள் "நெல்லை
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை' நடத்தி வந்தார்கள். அவர்களுடைய தொடர்பின் காரணமாக நான்
தமிழில் வெளிவந்த கதைகளை - குறிப்பாக புதுமைப்பித்தன் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.
ரஷ்ய இலக்கியங்களிலும் அளவுக்கதிகமான ஈடுபாடு ஏற்பட்டது. வெளிநாட்டு படைப்பிலக்கியங்கள்
போலத் தமிழிலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறுகதைகளை தமிழில் எழுத ஆரம்பித்தேன்.
அப்போது ஜனசக்தி வார மலரில் எனது கதைகள் வெளிவந்தன. சந்தால் ஆயுதப் போராட்டம்,
ஆசிரியர்கள் போராட்டம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சிறுகதைகள் எழுதியிருந்தேன்.
சிதம்பர ரகுநாதனின் "சாந்தி' இதழிலும் எனது கதைகள் வெளிவந்தன. அப்போதுதான்
சுந்தரராமசாமியும் அதில் எழுத ஆரம்பித்திருந்தார். எனது சிறுகதைகள் "நோன்பு',
"நிழல்யுத்தம்', "செல்வராஜ் கதைகள்' என்ற பெயரில் நூல்களாக வெளிவந்தன.
மக்களுக்கு நேரடியான காட்சி அனுபவத்தைத் தரும் - அவர்களிடம் உடனடியாகச் சென்று சேரும்
நாடகங்களை எழுத நினைத்தேன். "பாட்டு முடியும் முன்னே' என்ற நாடகம் எழுதினேன். அதற்குப்
பட்டுகோட்டைக் கல்யாணசுந்தரம் பாடல் எழுதினார். எனக்கு மிகவும் நெருக்கமானவராகவும்
ஆனார். டி.கே.பாலசந்திரன் தனது "மக்கள் நாடக மன்றம்' மூலம் தமிழ்நாடு முழுக்க அந்த
நாடகத்தைக் கொண்டு சென்றார். அப்புறம் "யுக சங்கமம்' என்ற நாடகத்தை எழுதினேன். அது
புத்தக வடிவிலும் பின்னர் வெளிவந்தது.
எனது தாத்தா காலத்திலேயே தேயிலைத் தோட்ட வேலைகளுக்குச் சென்றுவிட்டாலும், எங்களுடைய
சொந்த கிராமமான திருநெல்வேலி மாவட்டம் தென்கலம் கிராமத்துடன் தொடர்பு இருந்து வந்தது.
நெல்லை மாவட்டத்தில் அப்போது விவசாயிகள் முத்திரை மரக்கால் போராட்டம் நடத்தி வந்தார்கள்.
அந்தப் போராட்டங்களை எல்லாம் நேரில் பார்த்ததாலும், அந்தப் போராட்டங்களில் எனக்கு ஆர்வம்
இருந்ததாலும் அதை மையப்படுத்தி "மலரும் சருகும்' என்ற நாவலை எழுதினேன்.
என் இளமைப் பருவத்தில் தேவிகுளம் பீர்மேடு பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் மிகவும்
துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களிடம் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் அவர்கள் படும் துயரங்களைக் கண்டிருக்கிறேன். அந்த அனுபவங்கள்தாம் பின்னாளில்
நான் தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்வைச் சித்திரிக்கும் "தேநீர்' நாவல் எழுதக் காரணமாக
இருந்தது. பின்னர் அதைத் திரைப்படமாகவும் எடுத்தார்கள்.
நெல்லையில் படித்து முடித்த பின்பு, சென்னையில் சட்டம் படிக்க வந்தேன். அதற்குப் பிறகு
திண்டுக்கல்லில் வழக்கறிஞர். திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்கள் பலருடன் நேரில்
பழகியிருக்கிறேன். அவர்களுடைய வாழ்க்கைக் கதையைப் பல வருடங்களாக குறிப்பெடுத்து
வைத்திருந்தேன். அந்தத் தொழிலாளர்களுக்கான பல வழக்குகளையும் நடத்தியிருக்கிறேன்.
தோல் பதனிடும் தொழிலாளர் வாழ்க்கையை நரக வாழ்க்கை என்று சொல்லலாம். அந்த வேலை செய்யும்
தொழிலாளர்களின் விரல் நகங்கள் கறுத்துவிடும். தொழுநோய் வந்தவர்களின் விரல்கள் போல
ஆகிவிடும். 50 ஆண்டுகள் அவர்கள் உயிர் வாழ்ந்தால் பெரிய விஷயம். அவற்றையெல்லாம் நேரில்
பார்த்து மனம் உருகியிருக்கிறேன். அவர்களுடைய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்திய
ஏ.பாலசுப்ரமணியம் போன்ற தலைவர்களுடனும் பழகியிருக்கிறேன். இவற்றையெல்லாம் வைத்துத்தான்
"தோல்' நாவலை எழுதினேன்.
எனது எழுத்துகளில் பழைய இலக்கியங்களின் சாராம்சம் இருக்கும். நிகழ்கால மனிதர்களின்
வாழ்க்கை இருக்கும். இவ்விரண்டையும் இணைத்துத்தான் எழுதுகிறேன். அதுபோல ஒரு குறிப்பிட்ட
கதாபாத்திரம் என்பது ஒரு தனிநபரின் சித்திரிப்பாக இருக்காது. உதாரணமாக, தோல் நாவலில்
வரும் தொழிற்சங்கத் தலைவர் கதாபாத்திரம் அப்போதும், அதற்கு முன்பும் தமிழ்நாட்டில் வாழ்ந்த
பல மக்கள் தலைவர்களின் கூட்டுக் கலவையான ஒரு கதாபாத்திரமே.
"தோல்' நாவலுக்கு தமிழக அரசு விருது கொடுத்திருக்கிறது என்ற தகவலை எனக்குத் தொலை
பேசி மூலம் சொன்னார்கள். நான் நம்பவில்லை. சரியாகப் பார்த்தீர்களா? என்று பலமுறை கேட்டு
உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான் நம்பிக்கை வந்தது. ஏனென்றால் எனது படைப்புகளுக்கு
விருது எல்லாம் கிடைக்கும் என்று எந்தக் காலத்திலும் நான் நினைத்ததுமில்லை;
எதிர்பார்த்ததுமில்லை'' என்றார்.
Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.

Professor k. kumar

unread,
Oct 28, 2014, 1:17:53 PM10/28/14
to brail...@googlegroups.com
எழுத்தாளர் டி. செல்வராஜ் நேர்காணல்
......................................
சுப. வீரபாண்டியனுக்கு உறுதிமொழி தரவே வந்தேன்! - கலைஞர் பேச்சு!
......................................
Advertisement
01-06-2012
Print | E-mail : Email this Article



தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளில் ஒருவர் டி. செல்வராஜ். முற்போக்கு
எழுத்தாளர்களின் படைப்புகளில் பிரச்சாரம்தான் இருக்கிறது; கலைத்தன்மை இல்லை' என்ற
குற்றச்சாட்டுக்கு அவருடைய படைப்புகள் விதிவிலக்கு.

விவசாயிகளின் போராட்ட வாழ்க்கையைச் சித்தரிக்கும் "மலரும் சருகும்', தேயிலைத் தோட்டத்
தொழிலாளர்களின் வாழ்க்கையின் பிரதிபலிலிப்பான "தேநீர்', தோல் பதனிடும் தொழிலாளர்களின்
துன்ப வாழ்வைச் சொல்லும் அவருடைய சமீபத்திய படைப்பான "தோல்' ஆகிய நாவல்கள் தமிழின்
தலைசிறந்த படைப்புகளின் வரிசையில் நிற்பவை. "தோல்' நாவலுக்கு தமிழக அரசின் விருது
கிடைத்துள்ளது.

டி. செல்வராஜ் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞரும் கூட. மக்களின் போராட்ட
வாழ்க்கைக்கு உறுதுணையாக வழக்கறிஞராகவும், படைப்பாளியாகவும் செயல்படும் அவரை "இனிய
உதய'த்துக்காக சந்தித்துப் பேசினோம்.

எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

""நான் எழுத்தாளன் ஆனதே எதிர்பாராத ஒன்று. ஏனெனில் நான் வளர்ந்த சூழ்நிலை
அப்படிப்பட்டது. ஜேம்ஸ் பின்லே என்கிற ஆங்கிலக் கம்பெனி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்
கோட்டயம் ஜில்லா தேவிகுளம் தாலுகா முழுவதையும் தொண்ணூற்று ஒன்பது வருடக் குத்தகைக்கு
எடுத்து, கண்ணன் தேவன் தேயிலைக் கூட்டு எஸ்டேட் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான நிலத்தில்
தேயிலை பயிர் செய்து கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருந்தது. சுமார் முப்பத்தாறு
எஸ்டேட்டுகள். தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்வதற்காக திருநெல்வேலிலி, ராமநாதபுரம்,
மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கங்காணிகளால் (கண்காணிப்பாளர்) கூட்டி
வரப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் கொத்தடிமைகளாக வேலை செய்துகொண்டு இருந்தனர்.
பெரும்பான்மையானவர்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள்.

அது ஒரு குட்டி சமஸ்தானம் மாதிரி. கம்பெனியின் அனுமதி இல்லாமல் எஸ்டேட்டுகளுக்குள்
வெளியார் யாரும் பிரவேசித்து விட முடியாது. ஒவ்வொரு எஸ்டேட் வாயிலிலிலும்'
கேட்டுகள்போடப்பட்டு "சொந்தப் பாதை- பொதுப்பாதையல்ல' என்கிற விளம்பரப் பலகையுடன்
காவலாளிகளும் நியமிக்கப் பட்டிருப் பார்கள்.

தேவிகுளம் எஸ்டேட்டுகளுக்கு அப்பால் நடைபெறும் எந்த ஓர் இயக்கமும் தேவிகுளம் தாலுகாவில்
தலைகாட்டவிடாமல் பார்த்துக் கொண்டனர். நாட்டுக்குச் சுதந்திரம் வந்த விவரம்கூட தேவிகுளம்
மக்களுக்குத் தெரியாது. அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம் என்பதுதான் மக்கள்
நிலை.

கம்பெனியின் எஸ்டேட்டுகளின் வயல்வெளிகளைக் கண்காணிப் பதற்கும், ஆபிசுகளில் வேலை
செய்வதற்கும், தேயிலை ஆலைகளைக் கண்காணிப்பதற்கும் ஆங்கிலம் தெரிந்த மத்தியதர வர்க்கப்
படிப்பாளிகள் தேவை என்பதால், கம்பெனி நிர்வாகமே கம்பெனியின் தலைமையகம் அமைந்திருந்த
மூணாறு நகரத்தில் ஓர் ஆங்கில உயர்நிலைப் பள்ளியை நிறுவி நடத்தி வந்தது. எஸ்டேட் மேனேஜர்
கள் அத்தனை பேரும் ஆங்கிலேயர்கள் என்பதால், அவர்களுடன் பேசுவதற்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள்
தேவைப்பட்டார்கள்.

மூணாறு உயர்நிலைப் பள்ளியில், எஸ்டேட்டுகளில் உள்ள உத்தியோகஸ்தர், கங்காணிகளின் பிள்ளைகள்
மட்டும்தான் படித்தார்கள்.

மாணவர்களைப் பொறுத்தமட்டில், நடத்தப்படும் பாடங்கள் அல்லாமல் பொது அறிவை
வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு ஏதும் கிடையாது. பள்ளிக்கூடத்துக்கென நூல் நிலையம்கூட
கிடையாது. பள்ளிப் படிப்பு விட்டால் விளையாட்டு. பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஒவ்வொரு
மாணாக்கனுடைய கனவும் எஸ்டேட் உத்தியோகத்தில் அமர்வது என்பது மட்டும்தான். படிப்பை
முடித்துவிட்டு மேல் படிப்புக்குப் போனவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

என்னை ஒரு பட்டதாரியாகப் பார்க்க வேண்டும் என்பது என் பெற்றோரின் கனவு. எனவே நான் பத்தாம்
வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற பின்பு, மேல்படிப்புக்காகக் கீழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டேன்.
எங்கள் பூர்வீகம் திருநெல்வேலிலி மாவட்டம் என்பதால், நெல்லைச் சந்திப்பில் உள்ள ம.தி.தா.
இந்துக் கல்லூரியில் மாணவனாகச் சேர்க்கப்பட்டேன்.

கல்லூரியின் மேல்மாடியில் இருந்த பிரம்மாண்டமான நூல் நிலையம் எனக்கு வியப்புத் தருவதாக
இருந்தது.

எனக்கு டிக்கன்ஸ் எழுதிய ஆலிலிவர் டுவிஸ்டும், ஷேக்ஸ்பியரின் கிங் லியரும் பாடமாக
இருந்தன. ஆங்கிலப் பேராசிரியர்கள் பாடம் நடத்தும் போதே பல ஆங்கில எழுத்தாளர்கள், கவிஞர்
களைப் பற்றியெல்லாம் சொல்லும் போது, அவர் களின் படைப்புகளையும் படிக்க வேண்டும் என்கிற
ஆர்வம் ஏற்பட்டது.

கல்லூரி நூலகர் மிகவும் நல்லவர். மாணவனது சுவை அறிந்து படிப்பதற்கான நூல்களை அவரே
தேர்வு செய்து கொடுப்பார்.

அவர் மூலம் டிக்கன்ஸ், தாமஸ் ஹார்டி போன்றவர்களின் நாவல்களையும் மாப்பசானின் கதைத்
தொகுப்பையும் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது சக மாணவர்களான திருவரங்கன், சேதுராமன் ஆகியவர்களுடன்
நட்பு ஏற்பட்டது. திருவரங்கன் நல்ல கவிஞர். (இப்போது அவர் ஆங்கில ஆசிரியர்
பணியிலிருந்து ஓய்வு பெற்று நெல்லையில் இருக்கிறார்). சேதுராமன் புதுமைப்பித்தனின் பரம
ரசிகன். அசப்பில் பார்த்தால் புதுமைப் பித்தன் சாயல் அவரிடம் தென்படும்.

திருவரங்கனைப் பின்பற்றி நானும் கவிதைகள் எழுதினேன். (பின்னாளில் தி.க. சிவசங்கரன்
அவர்கள் யோசனைப்படி கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்). சேதுராமனின் ஆலோசனைப்படி
ரா.ஸ்ரீ. தேசிகனின் முன்னுரையுடன் கூடிய புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு, மாக்ஸிம்
கார்க்கியின் "அன்னை' (பின்னாளில் தொ.மு.சி.யால் "தாய்' என்ற பெயரில் மொழியாக்கம்
செய்யப்பட்டது) ஆகிய படைப்புகளைப் படித்தேன்.

திருவரங்கன் மூலம் அவருடைய உறவினரான ஓவியர் இசக்கி யின் நட்பும் எனக்கு ஏற்பட்டது.
இவர்கள் வாயிலாக சிறந்த தேச பக்தரும் நெல்லை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், மொழிபெயர்ப்
பாளரும், நெல்லை புக் ஹவுஸ் அதிபருமான அண்ணாச்சி சண்முகம் பிள்ளை அவர்களைச் சந்திக்கும்
வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

அப்போது தோழர்கள் தி.க. சிவசங்கரன், தொ.மு.சி. ரகுநாதன், பேராசிரியர் வானமாமலை,
அண்ணாச்சி சண்முகம் பிள்ளை ஆகியவர்கள் நெல்லை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அமைத்து
தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். நானும் நெல்லை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்
உறுப்பினரானேன். இந்தத் தலைவர்களின் ஆலோசனையின்பேரில் முன்ஷி, பிரேம்சந்த், கிருஷ்ணசந்தர்,
தாகூர்- கார்க்கி உட்பட பல சோவியத் எழுத்தாளர் கள் மற்றும் தொ.மு.சி. ரகுநாதன்,
கு.அழகிரிசாமி, விந்தன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

இவர்களில் அண்ணாச்சி சண்முகம் பிள்ளை அல்லாமல் மற்ற மூவரும், வேறு சில படிப்பாளிகளுடன்
நெல்லை சந்திப்பில் உள்ள சுலோச்சன முதலிலியார் பாலத்துக்கடியில், தாமிரபரணி ஆற்று
மணலிலில் அமர்ந்து கடுமையான இலக்கியச் சர்ச்சைகளில் ஈடுபடுவார்கள். சில சமயம்
பாளையங்கோட்டையில் இருந்து வாத்தியார் ஜேக்கப் பும் கலந்து கொள்வார். (நெல்லை சதி வழக்கில்
தூக்குத் தண்டனை யிலிலிருந்து தப்பித்தவர். சிறந்த படைப்பாளி. அவர் எழுதிய "வாத்தியார்'
நாவல் தமிழில் வெளிவந்த சிறந்த படைப்புகளில் ஒன்று). இவர்கள் நடத்தும் இலக்கிய சர்ச்சையில்
மாணவனாகிய நான் பார்வை யாளனாக மட்டும் கலந்து கொள்வேன்.

சிலசமயம் சுந்தர ராமசாமியின் அழைப்பின் பேரில் அண்ணாச்சி உட்பட நால்வரும் நாகர்கோவில்
போய், சுந்தர ராமசாமியுடன் கன்னியாகுமரிக்குச் சென்று கடல்பரப்பில் நிலவொளியில் அமர்ந்து
விடிய விடிய இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவார்கள். இந்தக் கூட்டங்களுக்கு மறக்காமல்
என்னையும் கூட்டிச் செல்வார்கள்.

அப்போது சுந்தர ராமசாமி பேபி ஹாஸ்டின்-7 கார் வைத்திருந்தார். சுந்தர ராமசாமியின்
குடும்பத்தாரின் விருந்தோம்பல் மறக்க முடியாத ஒன்று. இந்த சர்ச்சைகளின் மூலமும், படிப்பின்
வாயிலாகவும் ஏற்பட்ட அனுபவம் என்னுள் எழுத்து ஆர்வத்தை ஊக்குவித்து வளர்த்தெடுத்தது.''

முதல் சிறுகதை எந்த இதழில் வெளிவந்தது?

""எனது முதல் சிறுகதைகள் இரண்டும் "ஜனசக்தி' வார இதழில் வெளிவந்தன. முதல் கதை
வங்காளத்தில் சந்தால் இன மக்கள் இன்டிகோ தோட்டங்களில் நடத்திய போராட்டம் சம்பந்தமானது.
இரண்டாவது கதை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டது. துரதிர்ஷ்ட வசமாக இரண்டு கதைகளும் இப்போது
கிடைக்கவில்லை.''

உங்களுடைய சமகால எழுத்தாளர்கள் யார்?

""சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஜெயகாந்தன், இலங்கை யிலிருந்து டொமினிக் ஜீவா,
டானியேல், கணேசலிலிங்கன் ஆகியவர்கள்.''

நீங்கள் எழுதிய "மலரும் சருகும்' நாவல் விவசாயிகள் போராட்டத்தை அடிப்படை யாகக் கொண்டது.
அவர்களுடைய போராட் டத்துக்கும் உங்களுக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது? அந்தப்
போராட்டங்களில் ஈடுபட்ட தலைவர்கள் பற்றிய உங்களுடைய நினைவுகள்?

""நெல்லையில் நடந்த முத்திரை மரக்கால் போராட்டத்துக்கும் எனக்கும் நேரடித் தொடர்பு எதுவும்
கிடையாது. நான் நெல்லையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற
விவசாயிகள் போராட்டம் கொந்தளிப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. எனது
பாட்டனாரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டத்தில் தாழையூத்தை (இப்போதைய சங்கர் நகர்) அடுத்த
தென்கலம் கிராமம். அந்தக் கிராமத்தில் எங்களுக்குப் புஞ்சை, நஞ்சை நிலங்கள் உள்ளன. அந்தக்
கிராமம் சிறு விவசாயிகள் நிறைந்த கிராமம். பள்ளி விடுமுறை நாட்களில் ஊருக்கு
வரும்போது அம்மக்களுடன் இரண்டறக் கலந்து அவர்கள் வாழ்க்கையையும் வாழ்க்கைச் சுமையையும்
போராட்டத்தையும் அறிய முடிந்தது. எனது தாய்வழிப் பாட்டனாரே ஒரு சிறு விவசாயிதான்.

நெல்லையில் பட்டப்படிப்பை முடித்து சென்னையில் சட்டப் படிப்புப் படிக்கும் காலத்தில்தான்
"மலரும் சருகும்' நாவல் எழுதப் பட்டது. சிறு விவசாயிகளுடனான உறவையும்,
அனுபவத்தையும், முத்திரை மரக்கால் போராட்டத்தையும் இணைத்து அந்த நாவல் படைக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், இந்த இடைப்பட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஏற்பட்ட உறவு,
விவசாயிகள் வாழ்வு பற்றிய வாசிப்பு, இயக்கம் சம்பந்தமான எனது அறிவு
விசாலப்பட்டிருந்தது. முத்திரை மரக்கால் போராட்டம் நடைபெற்ற காலத்தில் நான் மாணவன். எனவே
அந்தத் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்படவில்லை.''

உங்களுடைய "தேநீர்' நாவலிலில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை
சித்தரிக்கப்பட்டுள்ளது. அது எப்படி உங்களுக்குச் சாத்தியமானது? தேயிலைத் தோட்டத்
தொழிலாளர்களுடனான அனுபவங்கள் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை எவை?

""நானே தேயிலைத் தோட்டத்தின் உருவாக்கம் என்று சொன் னால் மிகையாகாது. எங்கள் குடும்பம்
தேவிகுளம் தாலுகா தேயிலை எஸ்டேட்களில் உள்ள பிரபல கங்காணிகள் குடும்பங்களில் ஒன்று. என்
பாட்டனார் ஆறுமுகம் கங்காணி. என் தகப்பனார், சிறிய தகப்பனார் இருவர் ஆகிய அனைவரும்
கங்காணிகள். ஒரு கட்டத்தில் இரண்டு தேயிலை எஸ்டேட்களில் எங்கள் குடும்பத்தின் கங்காணித்
தனத்தின் கீழ் சுமார் 800 ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றினர்.

எனது இளமைக்காலம் முழுவதும் தேயிலைத் தோட்டத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மத்தியில்
கழிந்தது. எனவே தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை எனது இரத்தத்தில் ஊறிப் போன ஒன்று.

இன்றும் எங்கள் குடும்பத்தினர் தேயிலைத் தோட்டங்களில் உத்தியோகஸ்தர்களாகப் பணி
செய்துகொண்டிருக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர் எவ்விதமான கஷ்ட, நஷ்டங்களையும் தாங்கிக்கொள்ளக் கூடியவர்கள். வஞ்சகமற்ற
பாசமும் நேசமும் கொண்ட மக்கள் என்பதே எனக்கு ஏற்பட்ட அனுபவம்.

அண்மையில் தமிழக அரசு விருது பெற்ற "தோல்' நாவலிலில், தோல் பதனிடும் தொழிலாளர்கள்
சங்கம் அமைத்துப் போராடியதை சித்தரித்துள்ளீர்கள். அதில் வரும் சங்கத் தலைவர்கள் உண்மையான
தலைவர்களின் சித்தரிப்பா? இல்லை உங்கள் கற்பனையா?

"தோல்' நாவலிலில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை கலந்த எதார்த்தவகைப்பட்டவை.
டால்ஸ்டாய் எழுதிய "போரும் சமாதானமும்' என்ற நாவலில் வரும் கதாபாத்திரங்களை ஹோமர்
காலத்துக் கற்பனையையும் நெப்போலியன் காலத்து எதார்த்தத்தையும் இணைத்து உருவாக்கியுள்ளார்
என்று விமர்சகர்கள் சொல்வார்கள். அது போன்ற கற்பனை கலந்த கதாபாத்திரங்களே "தோல்'
நாவலிலில் வரும் தலைவர்களும் மக்களும்.

1930-ஆம் ஆண்டு முதல் 1958 வரையிலான ஆண்டுகளில் தமிழகத்தில், கம்யூனிஸ்ட்களின்
தலைமையில் தொழிலாளர்களும், விவசாயிகளும் மகத்தான போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்தப்
போராட்டங்கள் பற்றிய பதிவுகள் இல்லை. எனவே இந்தப் போராட்டங்களை நடத்திய தலைவர்களின்
வாழ்க்கை வரலாறுகள் அத்தனையையும் படித்தேன். தோழர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நூல்கள்
எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. எனவே நாவலிலில் வரும் தலைவர்கள் இவர்களின் கூட்டுப்
படைப்பு. சொல்லப்போனால் பஹ்ல்ண்ஸ்ரீஹப்ண்ஸ்ரீஹப் ஈட்ஹழ்ஹஸ்ரீற்ங்ழ் ண்ள் பஹ்ல்ண்ஸ்ரீஹப் ஈண்ழ்ஸ்ரீன்ம்ள்ற்ஹய்ஸ்ரீங்
என்கிற வகையிலான படைப்புகள்.

அல்லாமலும் வர்க்கப் போராட்டத்தையும், ஜாதி ஒழிப்பையும் இணைத்து நடத்தப்பட்டவை அந்தப்
போராட்டங்கள். தாழ்த்தப் பட்ட அடிமை- தீண்டப்படாத தொழிலாளியை மனிதன் என்று உணர வைத்தன.
அதன் பிரதிபலிலிப்புத்தான் தஞ்சை மண்ணில் சாணிப்பால் புகட்டலையும், சாட்டை அடியையும்,
இரட்டைக் குவளை முறையையும் எதிர்த்து நடைபெற்ற போராட்டம்.

அப்படிப்பட்ட போராட்டங்களின் களமே நான் தேர்ந்தெடுத்த களம். கதாபாத்திரங்கள்
தீண்டப்படாதவர்களான தோல் பதனிடும் தொழிலாளர்கள், நகரசுத்தித் தொழிலாளர்கள்.''

உங்களுடைய படைப்புகள் அனைத்தும் உழைக்கும் மக்களின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்
கின்றன. போராட்டத்தைத் தவிர வாழ்க்கையில் ஏதும் இல்லையா?

"""மூலதனம்' என்கிற என்னுடைய நாவலிலில் மத்தியதர வர்க்கக் கூட்டுக் குடும்ப வாழ்வின்
சிதைவையும், இழ்ஹண்ய் க்ழ்ஹண்ய்-ஐயும் கருப் பொருளாகக் கொண்டு நாவலைப் படைத்துள்ளேன்.
அவசரகால அவலங்களும் நாவலிலில் இடம் பெற்றுள்ளன.

"அக்னி குண்டம்' என்கிற நாவலிலில் நான் பணியாற்றுகின்ற நீதித்துறையின் கீழ்மையும்-
நீதிமன்றங்களின் சீர்குலைவையும், சீரழிவினையும் சித்தரித்துள்ளேன். "பொய்க்கால் குதிரை'
என்கிற குறுநாவலில் அப்பாவி ஒருவன் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறான் என்று
சித்தரிக்கப்பட்டுள்ளது.

என்னுடைய படைப்புகளில் சமுதாயத்தின் முரண்பாடுகள் துல்லிலியமாகச்
சித்தரிக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடியும்.

போராட்டமே வாழ்க்கையல்ல. பாட்டாளி வர்க்கம் எப்போதும் போராட்டத்தை விரும்புவதில்லை. அவர்கள்
தங்கள்மீது சுமத்தப் படும் அடக்குமுறையை எதிர்ப்பதற்கும் தங்களது நியாயமான கோரிக்கைகளை
வென்றெடுப்பதற்குமான கடைசி ஆயுதம்தான் போராட்டம். சொல்லப்போனால் எதிரி வர்க்கத்தால்
போராட்டத் துக்குத் தொழிலாளர் வர்க்கம் தள்ளப்படும்போதுதான் போராட்டம் நடைபெறுகிறது.
அப்படிப்பட்ட எச்சரிக்கையுடன்தான் என் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவேதான் என்
படைப்புகள் பிரசார வாடை வீசுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு அப்பாற் பட்டவையாக உள்ளன.''

உங்கள் படைப்புகளில் சித்தரிக்கப்படும் போராட்ட வாழ்க்கையெல்லாம் சுமார் 60 - 70
ஆண்டுகளுக்கு முற்பட்டவை யாக இருக்கின்றன. உழைக்கும் மக்களின் இன்றைய போராட் டங்களை
வைத்து எதுவுமே படைக்கவில்லையே ஏன்? போர்க்குணமிக்க போராட்டங்கள் எதுவும்
நடைபெறவில்லையா? அல்லது படைப்பில் சித்தரிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவையா?

""எனது படைப்புகளை இப்படிப் பார்ப்பது ஒருதலைப்பட்சமான பார்வையாகும். ஒருவேளை எனது
ஒரு படைப்புக்கும் மறு படைப்புக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருப்பதால் இப்படிப்பட்ட
விமர்சனத்துக்கு எனது படைப்புகள் உள்ளாகி யுள்ளன. எனது சமகால வாழ்க்கைதான் "மலரும்
சருகும்'. நான் நெல்லையில் மாணவனாக இருந்த காலத்தில் நடைபெற்ற விவசாய மக்களின்
போராட்டம் பற்றியது. "தேநீர்' நாவல் நான் பிறந்து வளர்ந்த தேயிலைத் தோட்ட மக்கள்
வாழ்க்கையைப் பற்றியது மட்டுமல்ல; நான் பங்குபெற்ற இயக்க அனுபவங்களும் நாவலிலில்
இடம்பெற்றது. "மூலதனம்' நம் கண்முன்னே நடைபெறும் கூட்டுக் குடும்பச் சிதைவு, அவசரகால
அவஸ்தை, அடக்குமுறை பற்றியது.

"அக்னிகுண்டம்' நீதித்துறையின் சமகால வாழ்க்கையைப் பற்றியது. வரவிருக்கும் அக்னி
குண்டத்தின் இரண்டாம் பாகம், நீதித்துறை மீதான விமர்சனமாக மட்டுமின்றி சமூக அரசியல்
பொருளாதார விமர்சனமாகவும் இருக்கும். எனவே எனது படைப்புகள் சமகால வாழ்க்கையைச்
சித்தரிக்க வில்லை என்று கூறுவது ஒருதலைப் பட்சமான விமர்சனமாகும்.

அதேபோன்று போர்க்குணம் மிக்க போராட் டங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று சொல்ல முடியாது.
சதா மாற்றங்கள் நிகழ்ந்தவண்ண மிருக்கின்றன. மாற்றங்களைக் கண்டறிந்து படைப்பை உருவாக்குவது
படைப்பாளியின் கடமை.

முற்போக்கு எழுத்தாளர்கள் போராட்டங்களை மட்டுமே சித்தரிப்பவர்கள் என்பது கொச்சையான
பார்வையாகும். கலை கலைக்காகவே என்கிற ரசனைவாதிகள் முற்போக்கு எழுத்தாளர்கள் மீது
சுமத்தும் அவதூறாகும்.''

கொஞ்சம் வயதாகிவிட்டாலே சிலர் தங்களுடைய பழைய நாட்களை எண்ணிப் புலம்புகிறார்கள். இன்று
எதுவுமே சரியில்லை என்பதுபோல் பேசுகிறார்கள். நீங்கள் இன்றைய வாழ்க்கை முன்பிருந்த
வாழ்க்கையைவிட மேம்பட்டதாகக் கருதுகிறீர்களா? இன்றைய நாளில் எல்லாமே கெட்டுப் போய்விட்டது
என்று நினைக்கிறீர்களா?

""எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று சொல்லும் சூனியவாதி யல்ல நான். மனிதப் பூண்டின்
வளர்ச்சியில் நம்பிக்கை வைத்திருப் பவன். காடுகளில் மிருகத்தோடு மிருகமாகச் சுற்றி வந்த
மனித இனம் இன்று பிரபஞ்சத்தையே வலம் வரும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

ஆதிப் பொதுவுடைமை சமூகம், அடிமைச் சமூகம், நிலமானிய அமைப்பு என்று பரிணாமம் பெற்று
இன்று முதலாளித்துவச் சமூகமாக பரிணமித்துள்ளது.

இன்றைய முதலாளித்துவ அமைப்பு உருவாக்கிவிட்டிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார
பண்பாட்டுச் சீரழிவுகளை முறியடித்துக்கொண்டு "உடையாரும் இல்லை; இல்லாரும் இல்லை' என்ற
உன்னதமான சமூக அமைப்பை நோக்கி மனித குலம் முன்னேறும் என்று நம்புகிறவன் நான்.

இன்றைய சமூக அமைப்பில் முற்போக்கு சக்திகளுக்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் இடையில்
நேரடியாகவும், மறை முகமாகவும் சதா போராட்டம் நடந்துகொண்டிருக்கும். முற்போக்கு
சக்திகளுக்கு தற்காலிலிகமாகப் பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால் முற்போக்கு சக்திகள்
தற்காலிலிகமாக ஏற்படும் பின்னடைவினின்றும் மீண்டு பிற்போக்கு சக்திகளை முறியடித்து
மானிட வர்க்கத்தை மகா உன்னதமான சமூக அமைப்பை நோக்கி இட்டுச் செல்லும்.

உதாரணமாக, சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, "மார்க்சியம் தோற்றுப் போய்விட்டது,
சோசலிலிச சமூக அமைப்பு உருவாவதற்கே வாய்ப்பில்லை' என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஆனால் சின்னஞ்சிறு கியூபா மகா வல்லரசான அமெரிக்காவின் சதிகளையும் வெற்றிகண்டு
சோசலிலிச அமைப்பைக் கட்டிக் காக்கிறது. நவ சீனத்திலும், வியட்நாமிலும், தென்னமெரிக்க
நாடுகளிலும் சோசலிலிச அமைப்பின் வெற்றியையும் உருவாக்கத்தையும் பார்க்க முடிகிறது.''

தமிழில் பலவிதமான இலக்கியப் போக்குகள் உள்ளன.

ஆனால் உங்களுடைய படைப்புகள் எதார்த்த வகைப்பட்டதாக உள்ளன. நீங்கள் ஏன் பிற இலக்கியப்
போக்குகளைக் கையாளவில்லை?

""நீங்கள் சொல்லும் பலவிதமான இலக்கியப் போக்குகள் அனைத் தும் முதல் உலக யுத்தத்துக்குப்
பிறகும் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும் நம்பிக்கை வறட்சியில் உருவானவை. இந்த
இலக்கியப் போக்குகள் நம்பிக்கையின்மையையும், வக்கிரத்தையும் சித்தரிப்பவை. எதார்த்தவாத
இலக்கியப் போக்கினை எதிர்த்து உருவாக்கப்பட்ட இலக்கியப் போக்குகள் புற்றீசல்கள் போன்று தோன்றி
மறைந்துபோய்விடுகின்றன. எதார்த்தவாத இலக்கியப் போக்கு இவற்றையெல்லாம் முறியடித்து
முன்னேறிக் கொண்டிருக்கும் இலக்கியப் போக்காகும்.''

நீங்கள் எழுத ஆரம்பித்த காலத்துக்கும் இன்றைக்கும் உள்ள இடதுசாரி எழுத்தாளர்களின் தன்மை எந்த
வகையில் வேறுபடு கிறது? வரும் காலத்தில் இடதுசாரி எழுத்துகள் எந்தத் திசை வழியைக்
கைக் கொள்ள வேண்டும்? தலிலித்தியம், பெண்ணிய எழுத்துகளை இடதுசாரி எழுத்துகள் என்று
சொல்லலாமா?

""நாங்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் ஒருபக்கம் கலை கலைக்காகவே என்கிற இலக்கியக்
கோட்பாட்டையும், மறுபக்கம் திராவிட இனவாத இலக்கியப் போக்கையும் எதிர்த்துப் போராட
வேண்டியிருந்தது. இன்றைய முற்போக்குப் படைப்பாளிகள் நவீனத்துவம், பின்நவீனத் துவம் ஆகிய
மனித விரோதக் கோட்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய இடதுசாரி எழுத்துகள்
நாங்கள் கைக்கொண்ட எதார்த்தவாதப் போக்கின் நீட்சியாக உள்ளது என்றுதான் கொள்ள வேண்டும்.
வேறுபட்டது என்று சொல்ல முடியாது.

இடதுசாரிப் படைப்பாளிகள் சமூக முரண்பாடு களைக் கண்டறிந்து எதார்த்தவாதம் முதல்
சோசலிலிச எதார்த்தவாத இலக்கியப் போக்கு வகையிலான இலக்கியங் களை உருவாக்க வேண்டும்.

தலிலித்தியம், பெண்ணிய எழுத்துகளை இடதுசாரி படைப்புகள் என்று மொட்டையாகச் சொல்லிவிட
முடியாது. ஒவ்வொரு படைப்பின் தன்மையைப் பொறுத்தே சொல்ல முடியும். தலித்திய, பெண்ணிய
படைப்புகள் மார்க்சியத்தின் நீட்சியே என்று பேராசிரியர் பஞ்சாங்கம் செல்வது பகுதி உண்மை
மட்டுமே.

ஒரு பகுதி தலித்திய படைப்பாளிகள் தலிலித்தியப் படைப்பை ஒரு தலிலித்தால் மட்டுமே
படைக்க முடியும் என்று வாதிடுகின்றனர். இவ்வாறான இலக்கியக் கோட்பாடானது இந்திய
சமூகத்தில் மூன்றில் ஒரு பகுதியினரை ஏனைய மக்கள் பகுதியினின்றும் பிரித்து வைக்கும்
ஆபத்தான கோட்பாடாகும்.

தலிலித்துகளும் பெண்களும் சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத பகுதிகளாகும்.''

இன்றைய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எவை? அவற்றுக்கு எப்படித் தீர்வு காண முடியும்?

""இது ஒரு சிக்கலான கேள்வி. அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக பதில் சொல்ல வேண்டிய
ஒன்று. படைப்பாளி என்று பார்க்கையில் ஒரு பக்கம் இந்துத்துவா; மறுபக்கம் உலகமயமாக்கல்
மூலம் உலக முதலாளித்துவம் உருவாக்க முயலும் பிற்போக்கான ஒற்றைக் கலாச்சாரப் போக்கு.

ஆனால் இன்றைய உலக முதலாளித்துவம் 1930-களில் ஏற்பட் டது போன்ற கடுமையான நெருக்கடியில்
சிக்கி மீள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

உலகமயமாக்கல் மூலம் உலக முதலாளித்துவம் பரப்பிவரும் ஒற்றைக் கலாச்சாரப் போக்கும்,
இந்துத்துவா சக்திகள் பரப்ப முயலும் இந்துத்துவா போக்கும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.
இத்தகு பிற்போக்குக் கலாச்சாரத்தால் மத்தியதர வர்க்கம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

உலக முதலாளித்துவமும், இந்திய ஆளும் வர்க்கமும் உருவாக்கிவிட்டிருக்கும் சிக்கல்களை
எதிர்த்து நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முற்போக்கு சக்திகளும் கடுமையாகப் போராடிக்கொண்டு
இருக்கின்றன. போராடும் சக்திகளுடைய போராட்டங்களுக்கு ஆதரவாக நிற்பதுடன், போராட்டங்களை
இலக்கியங்களாக வகுத்து எடுப்பது ஒரு முற்போக்கு இலக்கியவாதியின் கடமையாக இருக்கும்.

1930-களில் முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கிக்கொண்ட போது, பாசிசத்தையும்
நாசிசத்தையும் பிற்போக்கையும் எதிர்த்து மாக்ஸிம் கார்க்கி, ஹெமிங்வே, ஸ்டீன்பர்க் போன்ற
படைப்பாளிகள் உலகத்தரம் வாய்ந்த படைப்புகளை எழுதியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் மேலே
சொல்லப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளை வாசிப்பது, முற்போக்குப் படைப்பாளிகளுக்கு
உதவிகரமாகவே இருக்கும்.''

தங்களின் வழக்குரைஞர் பணி எந்த அளவுக்கு உங்கள் படைப்பாக்கத்துக்கு உதவுகிறது?

""வழக்குரைஞர் தொழில் மக்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்
பணியாகும். தொழிலில் கட்சிக்காரர் களின் வழக்குகளை மட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட
நபர்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே ஒரு வழக்கறிஞர் பிரச்சினைகளை மட்டுமல்லாது,
பிரச்சினைகளோடு வரும் மக்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே கதைகளுக்கான கரு
மட்டுமல்லாது, கதாபாத்திரங்களையும் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்படுகிறது. எனவே
படைப்பாளியான எழுத்தாளனுக்கு வழக்கறிஞர் தொழில் மறைமுகமாக உதவி செய்கிறது என்றுதான்
சொல்ல வேண்டும்.''

உங்களுடைய குடும்பத்தினரைப் பற்றி? குடும்ப வாழ்க்கை, பொதுவாழ்க்கை இரண்டையும் எப்படிச்
சமாளிக்கிறீர்கள்?

""எனது துணைவியார் பாரதபுத்ரி அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாய், தந்தை
இருவருமே சுதந்திரப் போராட்ட வீரர்கள். பின்னாளில் கம்யூனிஸ்ட்கள். எனது துணைவியார்-
அவரது தாயார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது
சிறையில் பிறந்தவர். அதனால்தான் பாரதபுத்ரி என்று பெயர் சூட்டப்பட்டது.

மூத்த மகன் சித்தார்த்தன் பிரபு கம்ப்யூட்டர் என்ஜினியர். சென்னையில் இன்போஸிஸ் கம்பெனி யில்
பணியாற்றுகிறார். நிறைய இலக்கியப் படைப்பு களை- நூல்களைப் படிப்பவர். எனவே எனக்கு
வேண்டிய ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வசதியாக உள்ளது. அவருடைய மனைவியும்
கம்ப்யூட்டர் படிப்புப் படித்தவர். பிள்ளை களை கவனிப்பதற்காக வேண்டி வேலைகளை விட்டு விட்டார்.

அவரது தகப்பனார் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி.

இரண்டாவது மகன் சார்வாகன் பிரபு வழக்குரைஞர். என்னுடன் இணைந்து திண்டுக்கல் மாவட்ட
நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதி மன்றக் கிளையிலும் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார்.
மகன் வழக்கறிஞராகப் பணியாற்றுவதால் நேரம் ஒதுக்கி இலக்கியப் பணி செய்வதற்கு வசதியாக உள்ளது.

மகள் வேதஞான லெட்சுமி ஒரு டாக்டர். தூத்துக்குடி மாவட் டத்தில் மருத்துவராகப்
பணியாற்றுகிறார்.

குடும்பத்தில் எல்லாருமே அரசியல் தெளிவு உள்ளவர்கள் என்ப தால், எனது பொதுவாழ்க்கைக்குக்
குடும்ப வாழ்க்கை இடையூறாக இருந்ததில்லை.''

சந்திப்பு: எழில்முத்து

Professor k. kumar

unread,
Oct 28, 2014, 1:18:12 PM10/28/14
to brail...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages