அறிவியல் ஆயிரம்:வியாழனை பார்க்க வாய்ப்பு
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் பெரியது வியாழன். இது சூரியனை ஒருமுறை சுற்றி வர 11.86 ஆண்டுகள் ஆகிறது. பூமியில் இருந்து 63 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. இந்நிலையில் வியாழன் கிரகத்தை பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
2026 ஜன. 10ல் வியாழன் - சூரியன் இடையே பூமி கடந்து செல்கிறது. அப்போது முன்பை விட, பூமிக்கு அருகில் வியாழன் வரும். சூரிய மறைவுக்குப்பின் கிழக்கு திசையில் வியாழன் கோளை, எவ்வித உபகரணங்கள் இன்றி வெறும் கண்ணால் பார்க்கலாம். இதற்கடுத்து 2027 பிப். 10ல் இதுபோல பூமியில் இருந்து வியாழனை காணலாம்.
தகவல் சுரங்கம்:தேசிய பறவைகள் தினம்
பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. பறவைகள், தான் உண்ணும் தானியம், பழங்களை தன் எச்சத்தின் வாயிலாக மண்ணில் வளரச் செய்து பசுமைப் போர்வையை உருவாக்குகிறது.
தாவரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பூச்சியினங்களை இரையாக்கி கட்டுப்படுத்தி பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுகிறது. பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஜன. 5ல் தேசிய பறவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 30 ஆண்டுகளில் 60 சதவீத பறவைகள் அழிவை சந்தித்துள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.