அறிவியல் ஆயிரம் : ஆராய்ச்சியில் நிலவு மண்
ஆராய்ச்சியில் நிலவு மண்
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் நிலவில் லேண்டரை தரையிறக்கி சாதித்துள்ளன. இதில் அமெரிக்கா, ரஷ்யாவுக்குப்பின் மூன்றாவதாக 2020ல் சீனாவின் 'சாங்கி - 5' விண்கலம் நிலவில் மண், பாறை துகள் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் ஆராய்ச்சிக்காக இதன் ஒரு பகுதியை அமெரிக்காவின் 'நாசா' நிதியுதவியில் செயல்படும் புரவுன் பல்கலை, நியூயார்க் பல்கலைக்கு கடனாக வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. இதற்கிடையே 2026ல் 'சாங்கி - 7', 'சாங்கி - 8' விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
தகவல் சுரங்கம் : சுகாதாரமான பணியிடம்
சுகாதாரமான பணியிடம்
விவசாயம், கட்டடம், துப்புரவு, சாலை, மின்சாரம், குடிநீர் வாரியம், சுரங்கம், அலுவலகம் உட்பட பல துறைகளிலும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவ்வாறு பணியிடங்களில் அவர்களது சுகாதாரம், பாதுகாப்பை வலியுறுத்தி உலக தொழிலாளர் அமைப்பு ஏப். 28ம் தேதியை உலக பணியிட சுகாதாரம், பாதுகாப்பு தினமாக அறிவித்தது. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்து, நோய்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். 'ஆரோக்கியம், பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்துதல்; ஏ.ஐ., டிஜிட்டல் துறையின் பங்கு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.