அறிவியல் ஆயிரம் : பூமியை நோக்கி விண்கலம்
பூமியை நோக்கி விண்கலம்
சூரியனில் இருந்து இரண்டாவதாக உள்ள வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 1972 மார்ச் 31ல் சோவியத் யூனியன் 'காஸ்மாஸ் 482' விண்கலத்தை அனுப்பியது. இது வெள்ளியின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைய வில்லை. 'விண்வெளி குப்பையாக' பூமியின் சுற்றுவட்டப் பாதையை சுற்றியது. 53 ஆண்டுக்குப்பின், மே., 8 - மே 11ல் இதை பூமியில் விழ வைக்க ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். 3.2 அடி அகலம், 495 கிலோ எடை மிக்க இந்த விண்கலம், பூமியின் வளிமண்டல ஈர்ப்பை விட்டு விலகிய பின் மணிக்கு 242 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வரும். பெரும்பாலும் கடலில் விழ வாய்ப்புள்ளது.
தகவல் சுரங்கம் : உலக தொழிலாளர் தினம்
உலக தொழிலாளர் தினம்
உலகின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உலக தொழிலாளர் அமைப்பு சார்பில் மே 1ல் உலக தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு '8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர துாக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது 19ம் நுாற்றாண்டில் வளர்ந்த நாடுகளில் 12 - 18 மணி நேரம் கட்டாய வேலை என இருந்தது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தியாவில் 1923ல் இத்தினம் தொடங்கப்பட்டது.