அறிவியல் ஆயிரம்: அண்டார்டிகாவில் காடுகள்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Feb 1, 2026, 9:54:09 AMFeb 1
to valluvanpaarvai, brailleacl, inaiathendral

அறிவியல் ஆயிரம்: அண்டார்டிகாவில் காடுகள்

பனிப்பிரதேசமான அண்டார்டிகா, 9 லட்சம் கோடி ஆண்டுக்கு முன் பசுமையாக இருந்தது என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. தென்முனைக்கு அருகே உள்ள மேற்கு அண்டார்டிகா பகுதி கடலுக்கு அடியில் புதைபடிவ மண், வேர், நுண்ணுயிரிகளில் நடத்திய ஆய்வில், அப்பகுதியில் வெப்பமண்டல காடுகள் இருந்தன என கண்டறிந்தனர். அது பூமியில் டைனோசர் வாழ்ந்த காலம். கார்பன் டை ஆக்சைடு அளவு, தற்போது விட அதிகமாக இருந்தது. அப்பகுதியின் ஆண்டு சராசரி வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ். கோடையில் இது 20 டிகிரி செல்சியசாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம் : சர்வதேச வரிக்குதிரை தினம்

குதிரை இனத்தை சேர்ந்த விலங்கு வரிக்குதிரை. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜன. 31ல் சர்வதேச வரிக்குதிரை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாலுாட்டி வகையை சேர்ந்த இவை கூட்டமாக வாழும். இதில் மூன்று வகைகள் உள்ளன. நின்றுகொண்டே துாங்கும். இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின் மீது ஒன்று, கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுக்கும். இதன் உயரம் 3 -- 7 அடி. நீளம் 7 -- 10 அடி. மணிக்கு 68 கி.மீ., வேகத்தில் ஓடும். எடை 250 -- 500 கிலோ. ஆயுட்காலம் 20 -- 30 ஆண்டுகள். ஒரு வரிக்குதிரையின் வரி, மற்றவையிடம் இருந்து வேறுபட்டிருக்கும்.

Reply all
Reply to author
Forward
0 new messages