தகவல் சுரங்கம்

0 views
Skip to first unread message

Mohan

unread,
Mar 13, 2026, 8:45:00 PMMar 13
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl
தகவல் சுரங்கம்

  கணிதத்தின் முக்கியம்




கணிதத்தில் 'பை' முக்கியமானது. 1706ல் கணித அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் 'பை'
என்ற எண்ணுக்கு குறியீடை (p) வடிவமைத்தவர். எங்கெல்லாம் வட்ட வடிவம்
தோன்றுகிறதோ அங்கெல்லாம் 'பை' என்ற


 ்கெல்லாம் 'பை' என்ற

மிக முக்கிய எண் தோன்றுகிறது. யுனெஸ்கோ சார்பில் மார்ச் 14ல் உலக 'பை'
தினம் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம் 'பை'யின் மதிப்பான '3.14' என்ற
எண்ணை, மார்ச் 14 (அமெரிக்க முறையில் தேதி) குறிப்பதுதான். அறிவியல் மேதை
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இத்தினத்தில் பிறந்தவர். 1988ல் அமெரிக்க இயற்பியல்
அறிஞர் லேரி ஷா இத்தினத்தை உருவாக்கினார்.




Dhivisha dhivi

unread,
Mar 22, 2026, 8:56:28 PM (11 days ago) Mar 22
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 22, 2026 12:00 AM

 உலக தண்ணீர் தினம்
 
உலகில் 210 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். 2030க்குள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பற்ற குடிநீர், சுத்தமின்மையால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் தினமும் 1000 பேர் உயிரிழக்கின்றனர். தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் அவசியம். இது இயற்கை வளங்களில் ஒன்று.
 தண்ணீரை சேமித்தல், பாதுகாப்பான தண்ணீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'தண்ணீர் & பாலினம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.தகவல் சுரங்கம்

Dhivisha dhivi

unread,
Mar 24, 2026, 9:11:56 PM (9 days ago) Mar 24
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
தகவல் சுரங்கம்

  ஐ.நா., ஊழியர்களுக்கு பாதுகாப்பு


 
சர்வதேச நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா., சபையின் பணியாளர்களை பாதுகாக்கும் விதமாக மார்ச் 25ல் ஐ.நா., சார்பில் கைது செய்யப்பட்ட காணாமல் போன ஊழியர்களுடன் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1945ல் ஐ.நா., சபை தொடங்கிய பின் நுாற்றுக்கணக்கான ஆண், பெண் ஊழியர்கள் பணியில் இருந்த போது உயிரை இழந்துள்ளனர். 1990களில் ஐ.நா., அமைதிப்படையில் பணியாற்றிய வீரர்கள் பலர் பலியாகினர். இதையடுத்து ஐ.நா., ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தினம் உருவாக்கப்பட்டது.

Dhivisha dhivi

unread,
Mar 30, 2026, 9:23:07 PM (3 days ago) Mar 30
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
தகவல் சுரங்கம்

 'ஈபிள் டவர்' தினம்

 
 
உலக அதிசயங்களில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 'ஈபிள் டவர்'. இதன் உயரம் 1083 அடி. தரைப்பகுதியில் அகலம் 410 அடி. இதில் நான்கு மாடிகள் உள்ளன. 300 படிகள் உள்ளன. 5 லிப்ட் வசதியும் உள்ளது. 7300 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது.
 7 ஆண்டுக்கு ஒருமுறை வண்ணம் தீட்டப்படுகிறது. இதை வடிவமைத்தவர் கஸ்டேவ் ஈபிள். இதன் கட்டுமானப்பணி 1887 ஜன. 28ல் தொடங்கப்பட்டது. 22 மாதங்களுக்குப்பின் 1889 மார்ச் 31ல் முடிக்கப்

பட்டது. இத்தினத்தை நினைவுபடுத்தும் விதமாக மார்ச் 31ல் 'ஈபிள் டவர்' தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Dhivisha dhivi

unread,
Apr 2, 2026, 11:58:30 PM (6 hours ago) Apr 2
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
தகவல் சுரங்கம்

'234' ஆன கதை
 1952ல் நடந்த மெட்ராஸ் மாகாண (ஆந்திரா, கேரளாவின் சில பகுதிகள் உட்பட) தேர்தலில் 375 தொகுதிகள் இருந்தன.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபின் 1957ல் மெட்ராஸ் மாநில தேர்தலில் 205, 1962ல் 206 ஆனது. 1963ல் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி லோக்சபா தொகுதி 39 ஆனது. ஒரு லோக்சபாவுக்கு 6 சட்டசபை என 234 தொகுதிகளாக மாற்றம் செய்யப் பட்டது. 1967ல் இருந்து 234 தொகுதிகளானது. மாநிலத்தின் பெயர் 1969 ஜன.14ல் தமிழ்நாடு ஆனது. 1971ல் முதன்முதலாக தமிழ்நாடு பெயரில் தேர்தல் நடந்தது.

 
 
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages