அறிவியல் ஆயிரம்: சிலிகான் எங்கு அதிகம்
சிலிகான் எங்கு அதிகம்
எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைந்துவிடும் சிலிக்கானை 1823ல் சுவீடன் வேதியியலாளர் ஜான்ஸ் ஜேகப் பெர்ஸேலியஸ் முதன்முதலில் துாய்மையான வடிவத்தில் உற்பத்தி செய்தார். இதன் அணு எண் 14. வாகன உதிரிப்பாகங்களுக்கான அலுமினிய வார்ப்பு, எக்கு சுத்திகரிப்பு, வேதியியல் தொழிற்சாலைகள், கட்டுமான துறை, செராமிக் போன்றவற்றில் சிலிக்கான் பயன்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்கள் தயாரிப்புக்கு உதவுகிறது. சிலிகான்உற்பத்தியில் 'டாப்-5' இடங்களில் சீனா, ரஷ்யா, பிரேசில், நார்வே, அமெரிக்கா உள்ளன.
தகவல் சுரங்கம்: உலக கல்லீரல் தினம்
PUBLISHED ON :
உலக கல்லீரல் தினம்
உடல் உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது. இது உடலில் தேவையற்ற நச்சுக்களை நீக்குதல், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருத்தல், வைட்டமின், ஊட்டச்சத்துகளை சேமித்து வைத்தல், பித்த உற்பத்தி சமன் உட்பட பல பணிகளை மேற்கொள்கிறது. துரித உணவு, உடற்பயிற்சியின்மை, மது, புகைப்பிடித்தல் காரணமாக கல்லீரல் பாதிக்கிறது. இதன் முக்கியத்துவம்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்.19ல் உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உணவே மருந்து' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 150 கோடி பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.