அறிவியல் ஆயிரம்:உயரும் வெப்பநிலை

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Mar 14, 2026, 7:53:29 PMMar 14
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்:உயரும் வெப்பநிலை
உலக வெப்பமயமாதல் கடந்த பத்தாண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது என ஜெர்மனியின் போட்ஸ்டாம் பருவநிலை மாற்றத்துக்கான பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

  இதே வேகத்தில் சென்றால், தொழில்புரட்சிக்கு பிந்தைய உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ்குள் கட்டுப்படுத்தும் திட்டம் 2030லேயே தாண்டி விடும் என எச்சரித்துள்ளனர்.

1970 - 2015 வரை சராசரி வெப்பநிலை உயர்வு 0.2 டிகிரி செல்சியசாக இருந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் சராசரி வெப்பநிலை உயர்வு 0.35 டிகிரி செல்சியஸ் என அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
 தகவல் சுரங்கம்:உலக நுகர்வோர் தினம்
  நுகர்வோர் தேவை, உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 15ல் உலக நுகர்வோர் உரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960ல் உருவாக்கப்பட்டது. இதில் 120 நாடுகளின் 250 அமைப்புகள் உறுப்பினராக உள்ளன.
 1962ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதலில் வலியுறுத்தினார். 'பாதுகாப்பான பொருட்கள், நம்பிக்கையான நுகர்வோர்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

தடைசெய்யப்பட்ட, திரும்பபெறப்பட்ட பொருட்களில் 87%, இன்னும் ஆன்லைனில் கிடைக்கின்றன என நுகர்வோர் அமைப்பு எச்சரித்துள்ளது.
Reply all
Reply to author
Forward
0 new messages