அறிவியல் ஆயிரம் : தீவை உருவாக்கும் எரிமலை

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jun 3, 2026, 9:20:16 PM (7 days ago) Jun 3
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : தீவை உருவாக்கும் எரிமலை
 
 
தீவை உருவாக்கும் எரிமலை

மே மாத தொடக்கத்தில் நீருக்கடியில் வெடிக்கத் தொடங்கிய எரிமலையால் பசிபிக் தீவில், ஒரு தீவு உருவாகக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பப்புவா நியூகினியா வடக்கில் பிஸ்மார்க் கடல் பகுதியில் எரிமலை ஒன்று வெடித்தது. இதிலிருந்து வெளியான சாம்பல் புகை, கடல் நீர்மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரம் பரவியுள்ளது. மேலும் இது 'பியூமிஸ்' எனும் எரிமலை பாறையை வெளியிடுகிறது, அது கடலுக்குள் மிதந்து செல்கிறது. செயற்கைக்கோள் படங்களில் அரிதாகவே காணப்படும் ஒரு புவியியல் நிகழ்வான இது, புதிய தீவு உருவாக வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்.
 தகவல் சுரங்கம் : குழந்தைகள் பாதுகாப்பு தினம்
 
 
போர்களால் பாதிக்கப்படும் அப்பாவி குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஜூன் 4ல் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. துவக்கத்தில் 1982 லெபனான் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது கவனம் செலுத்தியது. பின் ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறையால் உடல், மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 2023ஐ விட, 2024ல் ஏற்பட்ட போர்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 25சதவீதம் அதிகம் என ஐ.நா., தெரிவித்துள்ளது.
Reply all
Reply to author
Forward
0 new messages