அறிவியல் ஆயிரம் : துருவ பகுதிகளின் விசித்திரம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Apr 8, 2026, 9:11:07 PMApr 8
to valluvanpaarvai, inaiathendral, brailleacl

அறிவியல் ஆயிரம் : துருவ பகுதிகளின் விசித்திரம்
 பூமி, சூரியனை சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகிறது. இந்நிலையில் உலகின் வட, தென் துருவ பகுதிகளில் உள்ள சில நாடுகளில் நள்ளிரவிலும் சூரியன் தெரிகிறது. சூரியனை, பூமி ஒருமுறை சுற்றி வருகையில், அதன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்திருப்பதே இந்த விசித்திரத்துக்கு காரணம். கனடாவின் சில பகுதிகள், அமெரிக்காவின் அலாஸ்கா மகாணம், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, ரஷ்யா, சுவீடன் ஆகிய நாடுகளில் ஜூன் - ஆகஸ்டில் (இடத்தை பொறுத்து) நள்ளிரவிலும் சூரியனை பார்க்க முடியும். இது சில வாரம் அல்லது மாதக்கணக்கில் இருக்கலாம்.

 தகவல் சுரங்கம் : எங்கு அதிக தொகுதிகள்

 தமிழகத்தில் 38 மாவட்டங்களில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 46 தனி தொகுதிகள் (44 எஸ்.சி., 2 எஸ்.டி., (ஏற்காடு, சேந்தமங்கலம்)) உள்ளன. மொத்த தொகுதிகளில் அதிகமாக சென்னை மாவட்டத்தில் 16, சேலம் 11, திருவள்ளூர், கோவை, மதுரையில் தலா 10 உள்ளன. குறைவாக பெரம்பலுார், அரியலுாரில் தலா 2 தொகுதி உள்ளன. தமிழகத்தில் (சென்னை மாகாணம் உட்பட) 1952 முதல் 2021 வரை 16 முறை சட்டசபை தேர்தல் நடந்தது. அதிகபட்சமாக திருச்செந்துார் தொகுதியில் 1983, 2019 இடைத்தேர்தல் உட்பட மொத்தம் 18 தேர்தல் நடந்துள்ளது.
Reply all
Reply to author
Forward
0 new messages