அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பொn
பூமியில் மனித இனம் தோன்றுவதற்கு முன் கடலில் பெரிய பாம்பு இனம் வாழ்ந்துள்ளது. இது 5.6 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்தவை. இதன் நீளம் 26 முதல் 40 அடி. தற்போதைய பாம்புகளின் வகைகளில், எதுவுமே இந்தளவு நீளத்தில் இல்லை. இது சுறா மீன்களையே கடித்து சாப்பிடும் அளவு வலிமையாக இருந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவை வட ஆப்ரிக்காபகுதியில் வாழ்ந்தன. அக்காலத்தில் இப்பகுதியின் வெப்பநிலை, தற்போதைய வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது. மேலும் அப்பகுதி தற்போது பாலைவனப் பகுதியாக இருக்கிறது.
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு உள்ளிட்டவற்றால் பென்குயின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜன.20ல் உலக பென்குயின் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பென்குயின் ஒரு பறக்காத பறவை. மணிக்கு 25 கி.மீ., வேகத்தில் நீந்தும்.
வாழ்நாளில் 75 சதவீதத்தை நீருக்கடியில் உணவு தேடுவதற்கே செலவழிக்கிறது. இது நீந்துவதே பறப்பதைபோல தோன்றும். அண்டார்டிகா உட்பட கடும் குளிர், பனிப்பாறைகள் நிறைந்த, ஆள் நடமாட்டமே இல்லாத தீவுப் பகுதிகள் இவை வாழ்வதற்கு ஏற்ற இடங்கள்.