அறிவியல் ஆயிரம்:முதல் தனியார் விண்வெளி மையம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Feb 22, 2026, 8:01:13 PMFeb 22
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்:முதல் தனியார் விண்வெளி மையம்
 உலகின் முதல் தனியார் விண்வெளி மையம் (ஹெவன் 1), 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட்டில்2027ல் விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தற்போது செயல்பாட்டில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐ.எஸ்.எஸ்.,) பதிலாக இது செயல்பட உள்ளது. அமெரிக்காவின் 'வாஸ்ட்' நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது.

ஐ.எஸ்.எஸ்., போல விண்வெளியில் மிதந்தபடி பூமியை சுற்றி வரும். ஐ.எஸ்.எஸ்.,ல் இருந்து 'ஹெவன் 1' தனித்துவமாக நவீன மேம்பட்ட வசதிகளுடன் உருவாக்கப்

பட்டுள்ளது. இதன் விட்டம் 14.7 அடி. உயரம் 33 அடி.

 தகவல் சுரங்கம்:உலக அமைதி, புரிதல் தினம்

 அமைதியான உலகை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தை, ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வது முக்கிய பங்கு வகிக்கிறது.
யுனெஸ்கோ சார்பில் பிப்.23ல் உலக அமைதி, புரிதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அமைதிப்பணியை ஐ.நா., மேற்கொண்டது.

மேலும் உலகின் பெரிய தொண்டு நிறுவனமான ரோட்டரி சங்கம் துவக்கப்பட்ட தினத்தை அங்கீரிக்கும் விதமாக ஐ.நா.,வின் யுனெஸ்கோ சார்பில் பிப்.23ல் உலக அமைதி, புரிதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 1948ல் இருந்து இதுவரை போர், உள்நாட்டு சண்டை நடந்த 70 இடங்களில் அமைதிப்பணியை ஐ.நா., மேற்கொண்டது.

ரோட்டரி சங்கம் 1905 பிப்.23ல் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. இதில் உலகளவில் 14 லட்சம் தன்னார்வலர்கள் உள்ளனர்.


Reply all
Reply to author
Forward
0 new messages