அறிவியல் ஆயிரம்:கனிம வளங்களின் முக்கியத்துவம்
அரிதான கனிம வளங்களின் தேவை உலக நாடுகளிடம் அதிகரித்துள்ளது. ஆனால் அதன் வளங்கள் குறைவு. இவற்றில் காப்பர் (எரிசக்தி கட்டமைப்பு, கட்டுமான பயன்), லித்தியம் (எரிசக்தி சேமிப்பு), கோபால்ட் (காற்றாலை விசிறிகளுக்கு பயன்), கிராபைட் (எரிபொருள் செல்கள், பேட்டரிகள், அணுசக்திக்கு பயன்) ஆகியவை முக்கியமானவை.
தவிர அலுமினியம், ஹீலியமும் இதில் உள்ளன. கனிம வளங்கள் இருப்பில் 'டாப் -5'ல் சீனா, பிரேசில், இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளன. ஆனால் இதன் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா, மியான்மர், தாய்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை 'டாப் -5'ல் உள்ளன.
தகவல் சுரங்கம்:ரிசர்வ் வங்கி வரலாறு
இந்திய ரிசர்வ் வங்கி சட்ட விதி 1935ன் படி, ரிசர்வ் வங்கி1935 ஏப்.1ல் தொடங்கப்பட்டது. 1949 ஜன.1ல் தேசியமயமாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. டில்லி, கோல்கட்டா, மும்பை, சென்னையில் மண்டல அலுவலகம் உள்ளது.
ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, தேசிய நிதிக்கொள்கை உருவாக்குதல், வட்டி விகிதத்தை நிர்ணயித்தல் உள்ளிட்டவை இதன் பணி. இதற்கு ஒரு கவர்னர், 4 துணை கவர்னர்கள், 21 மத்திய உறுப்பினர்கள் உள்ளனர். இதுவரை 26 பேர் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்துள்ளனர். தற்போதைய கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா பதவி வகிக்கிறார்.