அறிவியல் ஆயிரம்:இரவில் வரும் வானவில்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Mar 16, 2026, 9:07:51 PMMar 16
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்:இரவில் வரும் வானவில்
 மழைபெய்யும் முன், பின் அல்லது காலை, மாலையில் சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் ஏழு வண்ணங்களில் வானவில் தோன்றும். பகலை போல இரவிலும் நிலா ஒளியில் வானவில் தோன்றும். இதை வெள்ளை வானவில் என அழைப்பர்.
  இரவில் விழும் மழைத்துளி நிலா ஒளியில் வண்ணங்களாக பிரிந்து நிலவின் எதிர் திசையில் வானவில்லாக தோன்றும். ஆனால் இவை பகல் வானவில்லைப் போல கண்கவர் வண்ணங்களில் பளிச்சென்று தெரியாது. ஏனென்றால் நிலவின் ஒளி, சூரிய ஒளி போல் பிரகாசமாக இருப்பதில்லை. அதனால் சாம்பல், வெள்ளை நிறத்தில் வானவில் காணப்படும்.
 தகவல் சுரங்கம்:எடைமிக்க பறவை

 'கோரி பஸ்டர்டு' என்ற பறவை, உலகில் மிக எடைமிக்க பறக்கும் பறவை என அழைக்கப்படுகிறது. இதன் எடை 11 - 20 கிலோ வரை இருக்கும். இதில் பெண் பறவையை விட, ஆண் பறவை நீளமாக இருக்கும்.
 இதன் நீளம் 3.5 அடி - 4.5 அடி. இதன் இறக்கையின் நீளம் 9 அடி இருக்கும். இதன் உயரம் 4.5 அடி. ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியாவில் காணப்படுகின்றன. சாம்பல், பழுப்பு நிறத்தில் காணப்படும். இவற்றில் நான்கு வகைகள் உள்ளன. இவை பூச்சிகள், பல்லி, விதைகளை உணவாக உட்கொள்கின்றன. மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறனுடையது.
Reply all
Reply to author
Forward
0 new messages