அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் அறிவியல் ஆயிரம்:பிரியும் ஆப்ரிக்கா... உருவாகும் கடல்
பூமியின் மேலோடு, 15 - 20 நிலத்தட்டுகளால் ஆனவை. இவை பூமிக்கு அடியில் உருகிய 'மாக்மா'வில் மிதக்கிறது.
இந்நிலையில் ஆப்ரிக்கா கண்டம் பிளவுபட்டு கடல் உருவாகும் வாய்ப்புள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. ஆப்ரிக்காவின் நுபியன் நிலத்தட்டு, கிழக்கு நிலத்தட்டு ஆகியவை ஆண்டுக்கு சில மி.மீ., என்ற அளவில் பிரிய தொடங்கியுள்ளது. இவை இரண்டும் வடக்கில் அரேபியன் நிலத்தட்டில் இருந்து விலகுகிறது. இவை மூன்றும் எத்தியோப்பியாவின் 'ஆபர்' பகுதியில் சந்திக்கின்றன. இது 'ஒய்' வடிவ பிளவு அமைப்பை உருவாக்குகிறது. இதில் புதிய இதில் புதிய கடல் உருவாகும் என தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம்:துாய்மை எரிசக்தி, சுங்கத்துறை தினம்
சோலார், காற்றாலை உட்பட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜன. 26ல் உலக துாய்மையான எரிசக்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* உலக சுங்கத்துறை கழகம் 1952 ஜன. 26ல் தொடங்கப்பட்டது. இதில் 183 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தலைமை அலுவலகம் பெல்ஜியம் பிரஸ்செல்ஸ் நகரில் உள்ளது. போதைப்பொருள், தங்கம் உட்பட சட்ட விரோத கடத்தலை தடுப்பது உள்ளிட்டவை இவர்களது பணி. இதை பாராட்டும் விதமாக ஜன. 26ல் உலக சுங்கத்துறை தினம் கடைபிடிக்கப்படுகிறது.