அறிவியல் ஆயிரம் : நிறம் மாறும் மலர்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Apr 27, 2026, 11:36:24 PM (2 days ago) Apr 27
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : நிறம் மாறும் மலர்

 அல்லி செடி வகையை சேர்ந்தது 'விக்டோரியா அமேசானிகா'. இதன் இலைகள், 10 அடி விட்டம் வளரக் கூடியவை. வட்டவடிவிலான இதன் இலையின் ஓரங்கள் மடங்கி, பெரிய தட்டு போல இருக்கும். இலைகளைத் தாங்கும் தண்டு உறுதியானது. இதனால் இது 40 கிலோ எடையை தாங்கும். இதன் மலர் 40 செ.மீ., நீளம் இருக்கும். இரவில் நறுமணத்துடன் பூக்கும். இரண்டு நாட்களில் வாடிவிடும். முதல் நாள் வெள்ளை நிறத்தில் இருக்கும். வண்டுகளால் மகரந்தச் சேர்க்கை முடிந்த அடுத்த நாளில் இளஞ்சிவப்பாக மாறிவிடும். இத்தாவரத்தை செக்குடியரசின் டாடியாஸ் ஹீன்கி 1801ல் கண்டறிந்தார்.
  தகவல் சுரங்கம்: உலக வடிவமைப்பு தினம்

 தினசரி வாழ்க்கையில் வடிவமைப்பு பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நம் வாழ்க்கையை மிக அழகாக மாற்றுகிறது. ஓவியம், ஆடைகள், வீடுகள், கட்டடங்கள், சாலைகள், நாற்காலி என ஒவ்வொரு பொருளுக்கும் வடிவமைப்பு முக்கியம். இதில் பல வகைகள் உள்ளன. உலக வடிவமைப்பு கவுன்சில் 1963 ஏப். 27ல் உருவாக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஏப். 27ல் சர்வதேச வடிவமைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வடிவமைப்புகளின் பயன்கள், வடிவமைப்பாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages