அறிவியல் ஆயிரம்:வெள்ளியில் வெப்பம் ஏன்

0 views
Skip to first unread message

Mohan

unread,
Mar 10, 2026, 8:52:32 PMMar 10
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl
அறிவியல் ஆயிரம்:வெள்ளியில் வெப்பம் ஏன்
 சூரியனில் இருந்து புதனுக்கு அடுத்து இரண்டாவதாக வெள்ளி கோள் உள்ளது.
சூரியன் - வெள்ளி இடையிலான துாரம் 10.8 கோடி கி.மீ. இது சூரியனை ஒருமுறை
சுற்றி வர 225 நாட்கள் ஆகிறது. சூரிய குடும்பத்தில் வெப்பமான கோள் என அழைக்கப்படுகிறது.

 சூரியனுக்கு அருகில் புதன் இருந்தாலும், வெள்ளி தான் வெப்பமான கோள்.
ஏனெனில் இது ஒரு தடிமனான, அடர்த்தியான வளிமண்டலத்தை கொண்டுள்ளது. பூமியை
விட 90 மடங்கு அடர்த்தியானது. மற்ற கோள்கள், சூரியனை மேற்கில் இருந்து
கிழக்காகவும், வெள்ளி மட்டும் கிழக்கில் இருந்து மேற்கு திசையில் சுற்றுகிறது.
 தகவல் சுரங்கம்:சர்வதேச எரிசக்தி அமைப்பு

 பல்வேறு துறைகளிலும் எரிசக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து
நாடுகளுக்கும் இது அவசியம். உலகில் 1973ல் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி
காரணமாக 1974ல் சர்வதேச எரிசக்தி அமைப்பு தொடங்கப்பட்டது.
 இதன் தலைமை அலுவலகம் பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ளது. இது சர்வதேச
எரிசக்தி துறையில் கொள்கை பரிந்துரைகள், பகுப்பாய்வு, தரவு ஆகிய பணிகளை
மேற்கொள்கிறது. இதில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 32 நாடுகள்
உறுப்பினராக உள்ளன. மேலும் இந்தியா, சீனா, சிங்கப்பூர் உட்பட 13 நாடுகள்,
இணை உறுப்பினராக உள்ளன.

Reply all
Reply to author
Forward
0 new messages