அறிவியல் ஆயிரம்:கொசுக்கள் கடிப்பதன் வரலாறு
உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் பெரியதாக இருக்கிறது. மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது.
மலேரியாவால் மட்டும் ஆண்டுக்கு 6 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். கொசுக்களில் 3500க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்நிலையில் மனிதர்களை, கொசுக்கள் கடிப்பது என்பது 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அதுவும் தெற்கு ஆசியாவில் தான் இது ஆரம்பித்தது என விஞ் தொடங்கியது. அதுவும் தெற்கு ஆசியாவில் தான் இது ஆரம்பித்தது என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்:தேசிய பாதுகாப்பு தினம்
இந்தியாவில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் 1966 மார்ச் 4ல் உருவாக்கப்பட்டது. இதன் நினைவாக 1972ல் இத்தினம் தொடங்கப்பட்டது. ராணுவம், துணை ராணுவம், போலீஸ் உட்பட நாட்டை பாதுகாக்கும், பாதுகாப்பு படைகளின் தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக இத்தினம் கடை பிடிக்கப்படுகிறது.
'பாதுகாப்பை மேம்படுத்த மக்களை ஈடுபடுத்துங்கள், கல்வி கற்பிக்கவும், அதிகாரம் அளிக்கவும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பணியிடங்களில் நிதி, வருவாய் இழப்பு, சுகாதார பிரச்னை உட்பட பல பிரச்னைகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றியும் இத்தினம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.